ஈராயிரப்படி -அவதாரிகை –
பெண்காள் நோன்பு ஒழிய உங்கள் நெஞ்சிலே ஓன்று உண்டு போலே என்ன
நாங்கள் உன்னை அர்த்தித்து வந்தோம் என்ன
என்னை அர்த்தித்துப் பெற்றார் உண்டோ என்ன
எங்களோட்டையார் பெற்றார் உண்டு -என்கிறார்கள் –
(எங்களோட்டை இடைச்சிகள் பெண்கள் சிறுமிகள் -அவனையே ப்ராப்யமாக கொண்ட –
நமக்கே -உபாய அத்வசயாம் கொண்டு ப்ராப்ய த்வரை உள்ளவர்கள்
யாம் பாடி -உபாயமும் ப்ராப்யமும் அவனே என்று இருப்பவர்கள் -மாதா பிதா –மத அன்வாயானாம் -ஆளவந்தார் –
உடையவர் சம்பந்தம் இருக்கவே ஆழ்வார் சம்பந்தம் கிட்டும் -எங்களோட்டை அங்கும் உண்டே )
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
பதவுரை
ஒருத்தி–தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய்–பிள்ளையாய்
பிறந்து–அவதரித்து
ஓர் இரவில்–(அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),
ஒருத்தி–யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய
மகன் ஆய்–பிள்ளையாக
ஒளித்து வளர–ஏகாந்தமாக வளருங் காலத்தில்
தான்–தான் (கம்ஸன்)
தரிக்கிலான் ஆகி–(அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்
தீங்கு நினைந்த–(இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த
கஞ்சன்–கம்ஸனுடைய
கருத்தை–எண்ணத்தை
பிழைப்பித்து–வீணாக்கி
வயிற்றில்–(அக் கஞ்சனுடைய) வயிற்றில்;
நெருப்பு என்ன நின்ற–‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடு மாலே–ஸர்வாதிகனான எம்பெருமானே!
உன்னை–உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம்–(புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில்–எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்
திரு தக்க செல்வமும்–பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும்
சேவகமும்–வீர்யத்தையும்
யாம் பாடி–நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து–(உன்னைப் பிரிந்து பாடுகிற துயரம் நீங்கி
மகிழ்ந்து–மகிழ்ந்திடுவோம்;
ஏல் ஓர் எம் பாவாய்–.
ஒருத்தி மகனாய் பிறந்து -தேவகி பிராட்டிக்கு அவதரித்து -ஆகாதா மதுரா புரீம் இத்யாதி
ஓர் இரவில்-அவதரித்த அந்த ஒப்பற்ற இரவிலேயே
ஒருத்தி மகனாய் -யசோதை பிராட்டிக்கு –
ஒளித்து வளரத்-வளரும் காலத்திலேயே
தரிக்கிலானாகித் தான் -கம்சனாகிய தான் -தாரணம் -தரித்தல் -பொறுக்க மாட்டாமல் –
தீங்கு நினைந்த-தீய செயலை நினைக்க -மன பூர்வோ வாக் உத்தர -வாயோடு மட்டும் இல்லாமல் தீங்கு நினைந்து பேசி செய்து
கருத்தைப் பிழைப்பித்துக் -எண்ணத்தை மாற்றி
கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற -வெப்பம் கொடுத்து -ஜாடராக்னி அனைவர் இடமும் -இங்கு அது இல்லை
நெடுமாலே -நீண்ட நாள் வ்யாமோஹம் -பெற்றவர்களை -கண்டு அனுபவிப்பிக்கும் -பித்தன் -சர்வாதிகன்
யுன்னை அருத்தித்து வந்தோம் -வேண்டியவற்றை யாசித்து வந்தோம் -பிரகார்ஷனேந அர்த்ததித்து – பிரார்த்தித்து
பறை தருதியாகில்-என்ன பிரார்த்தனை என்ன பறை சொல்லாமல் -உன்னிடம் உன்னையே பிரார்த்தித்து வந்தோம்
உன்னிடத்தில் இல்லை உன்னையே பார்த்தித்து வந்தோம் –
இவை பண்ணுவதே புருஷார்த்தம் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-
என்னாலும் வேண்டேன் பிறராலும் வேண்டும் உன்னால் தான் முதல் படி
உன்னால் உன்னையே பெற வேண்டும் -உபாயமும் பரம பிரயோஜனமும் நீயே
திருத் தக்க செல்வமும்-பிராட்டியும் விரும்பும் கைங்கர்யமும்
சேவகமும் -வீர தீர செயல்களும்
யாம் பாடி-நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-வருத்தம் தீர்ந்து-வருத்தமும் தீர்ந்து –
பாஷாண கல்பம் போல் மட்டும் இல்லாமல் மகிழவும் வேணுமே -அநிஷ்டம் தொலைந்து -இஷ்டம் பிராப்தி
வருத்தம் தீர்த்தல் ஐஸ்வர்யம் இல்லாமல் -அசித் அனுபவம் இல்லாமல்
வருத்தமும் தீர்ந்து -கைவல்யம் இல்லாமல் -சித் அனுபவம் இல்லாமல்
பகவத் அனுபவ ப்ரீதி கார்ய கைங்கர்யம் பெற வேண்டுமே –
உன்னைப் பிரிந்து படும் துன்பமும் நீங்கி -உன்னை அடைந்து ப்ரீதி காரித கைங்கர்யம்
எம்மா வீட்டு செப்பம் -வீடு -ஐஸ்வர்யம் -மா வீடு -கைவல்யம் செப்பம் -எம் மா வீடு -ஸ்ரீ வைகுண்டம் செப்பம்
மூன்றும் வேண்டாம் -நின் செம் மா பாத பற்பு தலை சேர்த்து ஒல்லை -சேஷத்வத்துக்கு -அம்மா அடியேன் வேண்டுவது ஈதே
அங்கு வேண்டுவதே இங்கு அர்த்தித்து பிரார்த்தனையாக -சிற்றம் சிறு காலையில் வைத்து அருளுகிறாள் –
ஒருத்தி மகனாய் –
சர்வ லோகத்துக்கு பிதாவானவன் ஒருத்தி மகனாகப் பெறுவதே
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் -(பேயாழ்வார் -92-) இறே
(அகில காரணம் நிஷ் காரணம் அத்புத காரணம்
த்வம் மாதா -பிதா லோகஸ்ய
எவ்வுயிர்க்கும் தாயாய் தந்தையாய்
உலகு எல்லாம் ஒரு பகல் தன் வயிற்றில் கொண்டவனை தன் வயிற்றில் வைத்தவள் )
ஸ்து தோஹம் யத் த்வயா பூர்வம் புத்ரார்த்திந்யா ததத்யதே சபலம் தேவி
சஞ்ஜாதம் ஜாதோ அஹம் யத்தவோ தராத்-ஸ்ரீ விஷ்ணு புராணம்
பித்ருவசன பரிபாலனம் போலே திரு வாய்ப்பாடிக்கு வருகை –
(ஸூதபா பிருஸ்னி – அதிதி கஸ்யபர் முன்பு இது மூன்றாம் தடவை -பிரார்த்தித்து பெற்றார்கள்
பிறந்த அன்றே தந்தை சொல் படி கேட்டு சங்கு சக்கரம் மறைத்த இவன் அன்றோ மகன் -புத்ரன் –
பெருமாள் 25 திருநக்ஷத்ரம் தண்டகாரண்யம் சென்று பித்ரு வசன பரிபாலனம்
ஸ்ரேயான் பவதி ஜாயமான -பல பிறப்பாய் ஒளி பெரும் -இன்னம் கார் வண்ணன் –
நானும் பிறந்து நீயும் பிறக்க வேண்டுமோ
தந்தை காலில் விலங்கற வந்து தோன்றிய தோன்றல் )
நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுக வைக்கைக்கு உடலாய் இருக்கும்
ஆதி யம் சோதி யுருவை அங்கு வைத்து இங்குப் பிறந்தவன் இறே
(அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன் -பகவத் ஸ்வரூபம் மறைக்குமே
தோற்றோம் மட நெஞ்சமே -இதன் வழி போகாமல் )
பிறந்து
தேவகி பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர் பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
(அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானு -தேவகியை கிழக்கு திக்கு -ஸூர்ய உதயம் போல் )
பிறந்தவாறும் –
(ஜென்ம கர்ம மே திவ்யம் கீதையை ஆழ்வார் பிறந்தவாறும் இத்யாதி )
ஓர் இரவில்
ஸம்ஸாரிகளின் பொல்லாங்கு ஓர் இராத் தங்க ஒட்டிற்று இல்லை என்கை-
அவ்விரவை ஒத்த இரவும் இல்லை –
மாதா பிதாக்கள் கை விட்ட அளவிலே காத்த ராத்திரி இறே –
(பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை வணங்கி -அவனையே ரஷித்த இரவு அன்றோ )
ஒருத்தி மகனாய்–
இருவரும் அவனைப் பெற வேணும் என்று அபேக்ஷித்தத்துக்கு
அவளுக்கு அவதார ரசத்தைக் கொடுத்து
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பிக்கிற படி
ஒளித்து வளர –
விஷ த்ருஷ்டிகள் படாமே –
நாட்டார் செய்வன செய்யப் பெறாதே –
கள்ளர் பட்டது படுவதே
அந்தர்யாமி பட்டது படுவதே
(அந்தர்யாமி -நியமிக்க -அந்தராத்மா சத்தைக்கு –
பரஞ்சோதி -அர்ச்சிஸ்-அர்ச்சிராதி கதிக்கு -வழி காட்ட -ஒளித்து நம்முள் )
ஒளித்து வளரத் தரிக்கிலானாகித்
ஈஸ்வர சத்தையும் பொறாது ஒழிகை
தான் தீங்கு நினைந்த
எத்திறம் என்று மோஹிக்க வேண்டும் விஷயத்திலே இறே தீங்கு நினைத்தது –
துஷ் ப்ரக்ருதி யாகையாலே –
(கம்சன் அசுரப்பிறவி இல்லையே -மனிதன் அசுரத்தன்மை கொண்டவன்
மூவாறு மாதம் மோஹித்து -பத்துடை எளியவர் -பிறந்தவாறும் -கண்கள் சிவந்து )
கருத்தைப் பிழைப்பித்துக்
அவன் நினைத்ததைப் பிழைக்கும் படி பண்ணி –
அவன் நினைவை அவனோடே போம்படி பண்ணினான்
(அவன் நினைத்த தீங்கை பிழை யாம்படி பண்ணி
கொல்ல வேண்டும் என்ற நினைவால் தான் கொலை யுண்டான்
செயற்கையாக அழ த்ரவ்யம் பூசி இவன் இருக்க
ஜராசந்தன் பெண்கள் இருவர் இவன் மனைவிமார் – அழும் படி பண்ணினான் )
(போஜன் ஸ்தாலி -கண்ணன் ஒளிந்து விளையாடிய இடங்கள் –
இவன் வாய் அமுதத்தால் நிறைந்த புஷ்கரணி
விஷ்ணு சித்தர் மனத்தைக் கோயிலாகக் கொண்டு பெரியாழ்வார் அஸ்தானே பயம் போக்கி அருளினான் )
கஞ்சன் வயிற்றில்-நெருப்பன்ன நின்ற
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றிலே புகும்படி பண்ணி
நெடுமாலே ‘
இது எல்லாம் பட வேண்டிற்று ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹ அதிசயத்தாலே என்கை
யுன்னை-அர்த்தித்து வந்தோம்
அர்த்தித்வாதி நிரபேஷனான உன்னை
பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் வந்தவன் இறே –
எங்கள் வடிவைப் பாராய்
பறை தருதியாகில்
உன் அழகாலே எங்களை மயக்காதே செய்து அருளப் பார்த்தாயாகில் –
செருக்கு அடியாதே செய்து அருளப் பார்த்தாயாகில்
(நெறி காட்டி நீக்குதியோ -கரு மேனி காட்டுதியோ
அழகைக் காட்டி மயக்கி கைங்கர்யம் கொடுக்காமல் –
ஸ்வா தந்தர்யத்தாலும் கைங்கர்யம் கொடுக்காமல் )
திருத் தக்க செல்வமும் –
யஸ்ய சா ஜனகாத்மஜா
சேவகமும்
இத்தைக் காத்தூட்ட வல்ல வீர்யம்
யாம் பாடி-வருத்தமும் தீர்ந்து
சொல்லப் பெறாத நம் வருத்தமும் தீர்ந்து
(உன்னைக் கண்ணாடி புறத்தில் பார்த்திலையோ
பிரிந்தார் படும் பாடு அறியாயோ )
மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் எல்லாம் ஏற்ற
கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி யன்று தேட்டம்
ப்ரீதிக்குப் போக்குவிட வேண்டும்படி யாகை-
(பகவத் அனுபவ ப்ரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம் )
—————————————-
(வடமதுரை என்னும் மதுரா-ஏஷ நாராயண ஸ்ரீ மான் நாக பர்யங்க உத்ஸ்ருஜ்ய ஆகாதோ மதுராம் புரிம்
ஜதவ் ஜெகந்நாத சாஷாத் விஷ்ணு ச நாதன
கோவர்த்தநோ –கூரத்தாழ்வான் பாக்யம் பண்ணின யமுனா தீரம் பிருந்தாவனம் மதுரா ச புரி
“மதுரா நாம நகரி புண்யா பாப ஹரி சுபா” என்னும் புராண ஸ்லோஹத்தின் படி
மதுரா நகரம் பாபங்களைத் தொலைத்து புண்ணியத்தை தரக் கூடியதாகவும்,மங்கலங்களுக்கு இருப்பிடமாகவும் உள்ள திவ்ய தேசம்
இந்நகரம் யுகம் தோரும் பாகவத சம்மந்தம் பெற்ற ஊர் என்கிறார்கள்.
க்ருத யுகத்தில் துருவன் யமுனைக்கரையில் தவம புரிந்து பகவானை தரிசித்தான்.
த்ரேதா யுகத்தில் இதே ஊரில் லவனாசுரன் என்ற அரக்கனைக் கொன்று சத்துருக்க்ணன் மதுரா எனப் பெயரிட்டு ஆண்டு வந்தான்
என குலசேகர ஆழ்வார் தனது பெருமாள் திருமொழியில் கூறுகிறார்.
ஏழு முக்தி தரும் ஷேத்திரங்களில்
அயோத்யா மதுரா மாயா காசி காஞ்சி அவந்திகா
புரித்வாரவதீ சைவ ஸப்ஸத்தா மோக்ஷதாயகா …… என்று ,கொண்டாடப்படும் ஊர் மதுரா நகரமாகும்.
வடதிசை மதுரை சாளக்கிராமம் வைகுந்தம் துவரை அயோத்தி
இடம் உடை வதரி இடவகை உடைய எம் புருடோத்தமன் இருக்கை
தடவரை அதிரத் தரணி விண்டு இடியத் தலைப்ற்றிக் கரைமரம் சாடி
கடலினைக் கலங்கக் கடுத்திழி கங்கைக் கண்டமென்னும் கடிநகரே.–பெரியாழ்வார், தனது திருமொழியில்
ஆண்டாள் தன்னுடைய நாச்சியார் திருமொழியில்,
மதுரையார் மன்னன் அடிநிலை தொட்டெங்கும்
அதிரப் புகுதக் கனாக்கண்டேன் தோழி நான்-என்று மதுரை மன்னனைப் பற்றி கூறுகிறார்.
மதுரையார் மன்னன் திருநாமத்தில் இவன் ஈடுபட்ட ஐதிக்யம்
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து மண்ணின் பாரம் நீக்குதற்கே வடமதுரை பிறந்தான்
திண்ணமா நும் உடைமை உண்டேல் அவன் அடி சேர்ந்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மது ஆதும் அவன் அன்றி மற்றில்லையே–நம்மாழ்வார் தன்னுடைய திருவாய்மொழியில்
மதன ஆதார பூமி அன்று, கடைவதற்கு ஆதாரமாக இருந்த பூமி, அதாவது
ப்ருது மகராஜன் இந்த இடத்தில் புமாதேவியிடம் இருந்து மக்கள் வாழ்வதற்கு வேண்டிய சிறந்த பொருட்களையெல்லாம் கடைந்து எடுத்தபடியால்
இந்த இடம் மதுரா என்று பெயர் பெற்றதாம்.
மதுராவில் வசித்தாலும், கண்ணன் இங்கு பிறந்தான் என்று நினைத்தாலும்,
வசுதேவரின் காலில் இருந்த விலங்குகள் உடைந்தால் போல் நம் பாவங்கள் விலகி போகுமாம்.)
பீதாம்பரம் சாந்த்ர பயோத லௌபகம் மஹார்ஹ வைடூர்ய கிரீட குண்டலத்விஷா
பரிஷ் வக்த சஹஸ்ர குந்தலம் உத்தாம காஞ்ச்யங்கத கங்கணாதிபிஹி விரோசமாநம் வசுதேவ ஜக்ஷத
( சங்கு, சக்கரம், கதை, பத்மம் தாங்கிய நான்கு திருக்கரங்கள் , திருமறு,கவுத்துவம், வனமாலை
தாங்கிய மார்பு, பீதகவாடை, மின்னும் முடி-குண்டலங்கள், மேகலையும் கங்கணமும். தாமரைக்கண்கள் கொண்ட அற்புத வடிவம்.
வசுதேவர் கண்ணிமைக்காமல் பார்த்தார்)
(அநிஷ்ட நிவாரண பூர்வகமாக இஷ்ட பிராப்தி யாகிய கைங்கர்யம் ஆகிய ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில் எம்மா வீடு-2-9- போல் –
ப்ராப்ய பிரார்த்தனை சிற்றம் சிறு காலையில் -ஒழிவில் காலம்-3-3- போல்
நப்பின்னை பிராட்டி வைபவம்-18-19-20- -நந்த கோபன் வைபவம் கீழ் பல பாசுரங்களில் -இரண்டு தாய்மார்கள் இதில் )
(ஒன்றுமே பிரார்த்திக்க வேண்டாம் என்றது புருஷார்த்தத்துக்குப் பொருந்தாதே –
புருஷனால் இறைஞ்சி வேண்டிப் பெறுவதே புருஷார்த்தம் ஆகும்
அனுபவ ஜெனித ப்ரீதி காரித கைங்கர்யம் பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷம்
திருத் தக்க செல்வம் -ஐஸ்வர்யம் -யோகஞ்ச நியமன சாமர்த்தியம் -கீதை போல் இங்கும்
அநிஷ்டம் -விரஹ தாபம்
வருத்தம் தீர்த்தல் ஐஸ்வர்யம் த்யாஜ்யம் -வருத்தமும் -கைவல்யம் த்யாஜ்யம் -மகிழ்ந்து 0புருஷார்த்தம்
ஒரு நாயகமாய் -(4-10-)-மூன்று பதிகங்கள் நம்மாழ்வாருக்கு -வருத்தமும் தீர்ந்து -மூன்றே பதங்கள் -விஞ்சி நிற்கும் தன்மையாள்)
——-
நாலாயிரப்படி அவதாரிகை
பெண்காள் நோன்பு ஒழிய உங்கள் நெஞ்சிலே ஓன்று உண்டு இறே என்ன
பறை என்று ஒரு பேர் நாங்கள் உன்னை அர்த்தித்து வந்தோம் -என்ன
என்னை அர்த்தித்துப் பெற்றார் உண்டோ என்ன
எங்களோட்டையார் பெற்றார் உண்டு -என்கிறார்கள் –
(எங்களோட்டை இடைச்சிகள் பெண்கள் சிறுமிகள் -அவனையே ப்ராப்யமாக கொண்ட –
நமக்கே -உபாய அத்வசயாம் கொண்டு ப்ராப்ய த்வரை உள்ளவர்கள்-நாயமாத்மா ஸ்ருதி சித்தம்
யாம் பாடி -உபாயமும் ப்ராப்யமும் அவனே என்று இருப்பவர்கள் -மாதா பிதா –மத அன்வாயானாம் -ஆளவந்தார் –
உடையவர் சம்பந்தம் இருக்கவே ஆழ்வார் சம்பந்தம் கிட்டும் -எங்களோட்டை அங்கும் உண்டே )
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
ஒருத்தி மகனாய் –
சர்வ லோகத்துக்கு பிதாவானவன் ஒருத்தி மகனாகப் பெறுவதே-(தேவ தேவோ ஹரி பிதா)
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன் இறே(மூன்றாம் திருவந்தாதி)
மகன் ஒருவர்க்கு அல்லாத மா மேனி மாயன்
மகனாம் அவன் மகன் தன் காதல் -மகனைச்
சிறை செய்த வாணன் தோள் செற்றான் கழலே
நிறை செய்தேன் நெஞ்சே நினை——-92-
(அகில காரணம் நிஷ் காரணம் அத்புத காரணம்
த்வம் மாதா -பிதா லோகஸ்ய
எவ்வுயிர்க்கும் தாயாய் தந்தையாய்
உலகு எல்லாம் ஒரு பகல் தன் வயிற்றில் கொண்டவனை தன் வயிற்றில் வைத்தவள் )
ஒருத்தி
அந்த ப்ரவிஷ்டஸ் சாஸ்தா ஜனாநாம் சர்வாத்மா -என்கிறபடியே
சர்வ லோகங்களுக்கும் நியாமகனானவனையும் கூட நியமிக்குமவள் என்கையாலே
நாட்டில் தனக்கு ஒப்பு இன்றிக்கே இருக்குமவன்
(ஆணும் அல்லன் பெண்ணும் அல்லன் அல்லா அலியும் அல்லன் )
மகனாய்
பிறந்த போதே சொல்லிற்றுச் செய்கை –
ஸ்துதோ ஹி யத் த்வயா பூர்வம் புத்தரார்த்திந்யா ததத்ய தே-சபலம் தேவி சஞ்ஜாதம் ஜாதோ அஹம் யத் தவோ தராத்-(ஸ்ரீ விஷ்ணு புராணம்)
(இருள் அன்ன மா மேனி -பிறந்ததும் இருளில் -சிரிக்க அந்த முத்துப்பல் ஒளியால் கண்டாள்
(ஸூதபா பிருஸ்னி – அதிதி கஸ்யபர் முன்பு இது மூன்றாம் தடவை -பிரார்த்தித்து பெற்றார்கள்- -பிரார்த்தனை சபலம் ஆயிற்று என்றான் )
சக்கரவர்த்தி திருமகன் வளர்ந்த பின்பு பித்ரு வசனம் பரிபாலனம் பண்ணினான்
இவன் பிறந்த போதே தோள்களை மறைத்துத் திருவாய்ப்பாடியிலே போகச் சொல்ல போனான் –
சோபனம் கூறுகைக்கும் வேறு ஆள் இல்லை –தானே(ஜன்ம கர்ம மே திவ்யம் -வண்ண மாடங்கள் பெரியாழ்வார் பின்னர் )
(ஆண்டு தோறும் ஸ்ரார்த்தம் -கயாவில் பிண்ட தானம் -இருக்கும் பொழுது சொன்ன சொல் படி நடப்பது –
தந்தை சொல் மிக்க மந்த்ரம் இல்லை
பிது நரகம் போக வேண்டாதபடி காப்பவன் புத்ரன்
பிறந்த பொழுதே சொன்னபடி -உப ஸம் ஹரதி -மறைத்துக் கொண்டானே
பெருமாள் 25 திரு நக்ஷத்திரத்தில் தண்டகாரண்யம் போனார்)
பிறந்து
கர்ம வஸ்யர் படுமவற்றை அகர்ம வஸ்யன் கிருபாவஸ்யனாய் பிறந்து படுவதே
உப சம்ஹார -இத்யாதி
அஜோபிஸந் நவ்யயாத்மா (அபிஸந்)பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.
கர்ம வஸ்யர் கூறான ஜென்மாதி தோஷங்கள் இன்றிக்கே இருக்கை
என் பிறவாமைக்குத் தட்டு வாராதபடியும் எனக்கு நிறம் உண்டாம்படியும் காண் நான் பிறப்பது
ச உ ஸ்ரேயான் பவதி ஜாயமான(பிறக்க பிறக்க தேஜஸ் மிக்கு இன்னும் கார் வண்ணனே -தோற்றமாய் நின்றசூடார் அன்றோ )
பூதா நாம் ஈஸ்வரோ அபி சன்(இன்னும் கார் வண்ணனே -கருமை தீராதே )
(குறைத்துக் கொள் என்றாலே விட்டுக் கொடுக்காமல் அவதாரம்
பிறப்பிலி விட்டுக் கொடுக்காமல் பிறக்கிறேன் அஜன் –
கர்மத்தால் பிறக்க வில்லை கிருபையால் அவதாரம்-அஜோபிஸந் நவ்யயாத்மா (அபிஸந்)பூதாநாம் ஈஸ்வரோபிஸந்.
நியந்தாவும் நானே -அனைவருக்கும் ஈஸ்வரன் நானே-அஜன் ஸ்தம்ப சம்பவாத் -இதர விஜாதீயன் -நரஸிம்ஹன் )
தேவகி பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர் பூதம் மஹாத்மநா -ஸ்ரீ விஷ்ணு புராணம் –
(அகில ஜகத் பத்ம போதாய அச்யுத பானு -தேவகியை கிழக்கு திக்கு -ஸூர்ய உதயம் போல் )
பிறக்கையும் பிறவாமையும் கிடக்கப் பிறக்கும் பிறப்பு நித்யர்க்கும் உண்டாகையாலே அவ்வளவே அல்ல
அல்லாதார் பிறப்பையும் நீக்க வல்ல ஸ்வதந்த்ரன் பிறப்பு அன்றோ என்கை –
சிறையர் சிறைக் கூட்டத்தில் பிணை உண்கைக்குப் புகும் -நியாமகன் சிறைக் கூட்டத்தை விடுவிக்கப் புகும்
புகுகையிலே இத்தனை நெடுவாசி உண்டு
அவன் பிறந்தால் இவன் பிறவி தனக்குத் தட்டாமை யல்ல
நம் பிறவியைப் போக்கி நம்மை தன் போலே யாக்க வல்லனாய் இருக்கும்
ஜென்ம கர்ம ச மே திவ்யம் இத்யாதி
(தந்தை கால் விலங்கு அற அன்றோ தோன்றினான் -ஸ்வ தந்த்ரன் அவதாரம் போல் அல்லவே பரதந்த்ரர் அவதாரம்
நித்யர்களை ஏவிப் பணி செய்து இங்கு வரவைக்கிறான்)
நம் பிறவி நம்மையும் அவனையும் உறவு அறுகைக்கு உடலாய் இருக்கும்(இத்தை அறிவதே யோ வேத்தி தத்வத )
இப்படி அல்லனாகைக்கு அடி சாவுதல் பிறத்தல் செய்ய வேண்டாத நித்தியமான உடம்பு உடையனாகை
ஆதி யம் சோதி உருவை அங்கு வைத்து இங்குப் பிறந்த –
யத்ர அவ தீர்ணம் கிருஷ்ணாக்யம் பரம் ப்ரஹ்ம நராக் ருதி-
அவனுக்கு பிறக்கை யாகிறது அத்தை நாம் பிறவாதபடி சஜாதீயமாக்கிக் கொண்டு தோன்றுகை
புன்னாம்நோ நரகாத் த்ராயத இதி புத்ர -என்கிறபடியே இவர்கள் தாளில் தளை கழலப் பிறந்தபடி)11-5)
என்றும் பிறவி நமக்கென்று கோல நம் பிறவியாக விலக்கப் படும்
அறுவர் தம் பிறவி அஞ்சிறையே (1-3-11)-
தந்தை தளை கழலத் தோன்றிப் போய் ஆய்ப்பாடி
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் காணேடீ
நந்தன் குல மதலையாய் வளர்ந்தான் நான் முகற்கு
தந்தை காண் எந்தை பெருமான் காண் சாழலே –11-5-2-
அமரர்கள் தொழுது எழு அலை கடல் கடைந்தவன் தன்னை
அமர் பொழில் வளம் குருகூர்ச் சடகோபன் குற்றேவல்கள்
அமர்சுவை யாயிரத்து அவற்றினுள் இவை பத்தும் வல்லார்
அமரரோடு உயர்வில் சென்று அறுவர் தம் பிறவி அஞ்சிறையே–1-3-11-
அவன் பிறப்பு கூட்டும் –
அவனை விட்டு நீங்கவே நம் பிறப்பு
பிரபத்தி யாவது இந்த ஞானமே -(பிரபத்தி இந்த பிரதிபத்யே )
நம்முடைய கர்மம் அவனை நம்மோடே சஜாதீயனாக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடே பரமம் சாம்யம் உபைதி -என்று சஜாதீயர் ஆக்கும்
பிறந்தவாறும்
பிறந்தவாறும் வளர்ந்தவாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டியிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்தனூடு புக்கெனதாவியை நின்று நின்று உருக்கி யுண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே உன்னை என்று கொல் சேர்வதுவே –5-10-1-
மகனாய் பிறந்து
பிறக்கை தவிராதாகில் தமப்பானானாலோ என்னில் தன்னுடைய பிறவி
விசஜாதீயத்துக்குப் போராத பின்பு ஆராய்ப் பிறக்கில் என் என்றுமாம்
ஒருத்தி
இன்னாள் என்னாதே-தங்கள் பயத்தால் மறைத்துச் சொல்லுகிறார்கள்
அத்தத்தில் பத்தா நாள் (1-2)-என்னுமவர்கள் இறே
மத்தக் களிற்று வசுதேவர் தம்முடை
சித்தம் பிரியாத தேவகி தன்வயிற்றில்
அத்தத்தின் பத்தா நாள் தோன்றிய அச்சுதன்
முத்த மிருந்தவா காணீரே முகிழ் நகையீர் வந்து காணீரே–பெரியாழ்வார்-1-2-6-
பிறந்து
ஆவிர்பவித்தால் ஆகாதோ –
பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ
தேவகீ பூர்வ ஸந்த்யாயாம் ஆவிர்ப்பூதம் மஹாத்மனா என்று -பிறந்தான் என்கை
அவத்யம் என்று பரிஹரித்தான் ருஷி
அது தான் அவத்யம் என்று -பிறந்தவாறும் -என்று பிறக்க வல்லன் என்று சொல்லுகிறார்கள்
ஓர் இரவில்
நாய்க்குடலுக்கு நறு நெய் வகுக்குமோ
சம்சாரிகள் பொல்லாங்கு அவனை ஓர் இராத் தங்கிப் போக ஒட்டிற்று இல்லை என்கை –
அவ்விரவோடு ஒக்கும் இரவும் இல்லை -பகலும் இல்லை
மாதா பிதாக்கள் கை விட்ட அளவிலே கை தந்த ராத்திரி-
பிறவா நின்றால் கண் காண வந்து பிறந்து தூர்யம் கொட்டப் பெறாது ஒழிவதே
(ஆனக துந்துபி -வாசுதேவர் பிறக்க ஆகாசம் முழுவதும் துந்துபி கொட்டிற்றே -அதனால் இந்தப்பெயர் அவருக்கு)
(பிள்ளை உறங்கா வல்லி தாசர் இருளை வணங்கி -அவனையே ரஷித்த இரவு அன்றோ )
இரவு
காலக்ருத பரிணாமம் இல்லாத தேசத்திலே வர்த்தித்த இவன்
காலக்ருத பரிணாமமான தேசத்திலே பிறந்தால் பெறுவதும் பெறாது ஒழிய வேணுமோ
ஒருத்தி மகனாய்–
இருவரும் (தேவகியும் யசோதையும் )அவனைப் பெற வேணும் என்று ஆஸ்ரயிக்க –
அவளுக்கு அவதார ரசத்தைக் காட்டிக் கொடுத்து
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பிக்கிற படி
அம்ச அவதாரோ ப்ரஹ்மர்ஷே யோ அயம் யது குலோத்பவ(ஸ்ரீ விஷ்ணு புராணம் )-என்ற ருஷி தானே
கோபாலா யாதவம் வம்சம் மக்ந மப் யுத்தரிஷ்யதி -என்றான்
அவள் கரும்பின் கோதைக் (கேளை -வேரை )கொண்டவோபாதி
இவளும் கரும்பின் நடுவைக் கொண்டால் போலே இருக்கிறது –
ஆப்புண்டு -10-6-1-
தீங்கரும்பு -2-5-1-
அங்கு ஈஸ்வர லக்ஷணத்தோடு பிறந்தது பிறப்பில் புரையற்றால் போலே –
இவள் மகனான வளவிலும் பிறப்பில் புரை அற்று இருக்கை
எங்கானும் ஈது ஒப்பதோர் மாயமுண்டே நர நாரணனாய் யுலகத் தற நூல்
சிங்காமை விரித்தவன் எம்பெருமான் அதுவன்றியும் செஞ்சுடரும் நிலனும்
பொங்கார் கடலும் பொருப்பும் நெருப்பும் நெருக்கிப் புகப் பொன் மிடறத்தனை போது
அங்காந்தவன் காண்மின் இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் யுண்டு ஆப்புண்டு இருந்தவனே-10-6-1-
பாராயதுண்டு உமிழ்ந்த பவளத் தூணைப் படு கடலில் அமுதத்தைப் பரிவாய் கீண்ட
சீரானை எம்மானைத் தொண்டர் தங்கள் சிந்தை யுள்ளே முளைத்து எழுந்த தீங்கரும்பினை
போரானைக் கொம்பொசித்த போர்ஏற்றினை புணர் மருதம் இற நடந்த பொற் குன்றினை
காரானை யிடர்கடிந்த கற்பகத்தைக் கண்டது நான் கடல் மல்லைத் தல சயனத்தே ————–2-5-1-
ஒளித்து வளர –
கம்சாதிகளுடைய விஷ த்ருஷ்டிகள் படாமே –
நாட்டார் செய்வன செய்யப் பெறாதே –
கள்ளர் பட்டது படுவதே
அந்தர்யாமி பட்டது படுவதே
உள்ளே இருக்கச் செய்தே இவனை இல்லை என்று எழுதி எழுத்திடுமவன் முகம் காண சம்மதிக்குமோ
பிச்சேறின பிரஜை தாய் முன்பே நிற்கில் தாயைக் கொல்லும்
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்
அதுக்காக முகம் தோற்றாதே நின்று (இரா மடம் ஊட்டுவாரைப் போலே உள்ளேயே கிடந்து )நோக்குமா போலே
இவனும் முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்குகிறான்
இசைந்து அம்மே என்றால் அடியேன் என்கைக்குக் கிட்டவே இருக்கிறான் –
(அந்தர்யாமி -நியமிக்க -அந்தராத்மா சத்தைக்கு –
பரஞ்சோதி -அர்ச்சிஸ்-அர்ச்சிராதி கதிக்கு -வழி காட்ட -ஒளித்து நம்முள் )
ஒளித்து வளரத் தரிக்கிலானாகித்
நாரதாதிகள் கிருஷ்ணன் வளரா நின்றான் என்று சொல்லக் கேட்ட பின்பு தரிக்க மாட்டிற்று இலன்
திண் கொள் அசுரரைத் தேய வளர்கின்றான்(பெரியாழ்வார் -1-2)
ஈஸ்வர சத்தையும் பொறாது ஒழிகை
விண் கொளமரர்கள் வேதனை தீர முன்
மண் கொள் வசுதேவர் தம் மக னாய் வந்து
திண் கொளசுரரைத் தேய வளர்கின்றான்
கண்கள் இருந்தவா காணீரே கன வளையீர் வந்து காணீரே–1-2-16-
தான் தீங்கு நினைந்த
எத்திறம் என்று அங்குத்தைக்கு பரிய –
மோஹிக்க வேண்டும் விஷயத்திலே இறே தீங்கு நினைத்தது -துஷ் ப்ரக்ருதி யாகையாலே –
(கம்சன் அசுரப்பிறவி இல்லையே -மனிதன் அசுரத்தன்மை கொண்டவன்
மூவாறு மாதம் மோஹித்து -பத்துடை எளியவர் -பிறந்தவாறும் -கண்கள் சிவந்து )
தான் தீங்கு நினைந்த
உத்தர ஷணத்திலே படப் புகுகிற தான் –
தீங்கு என்கிறது அப் பொல்லாங்கு தன் வாயால் சொல்ல மாட்டாமை
அஸ்மாந் ஹந்தும் ந சம்சய -(விபீஷணன் -நமக்கு எல்லாம் உயிரான பெருமாளை நம்மை அழிக்க வருகிறான் என்றாரே சுக்ரீவ மகா ராஜர் )
மாயத்த்தல் எண்ணி -(4-3)
தங்களை நலிந்ததாய் இருக்கை
பூதனை யுள்ளிட்டாரையும் வரக் காட்டியும் வில் விழவுக்கு என்று அழைத்தும் நலியத் தேடின படியும்
மாய்த்தல் எண்ணி ‘வாய்முலை தந்த மாயப் பேய்உயிர்
மாய்த்த ஆய மாயனே!வாஅ மனனே! மாதவா!
பூத்தண் மாலை கொண்டுஉன்னைப் போதால் வணங்கே னேலும்,நின்
பூத்தண் மாலை நெடுமுடிக்குப் புனையும் கண்ணி எனதுயிரே.—திருவாய் -4-3-4-
கருத்தைப் பிழைப்பித்துக்
அவன் நினைத்ததைப் பிழைக்கும் படி பண்ணி -அவன் நினைவை அவனோடே போம்படி பண்ணினான்
அவன் நினைத்த தீங்கை பிழை யாம்படி பண்ணி
கொல்ல வேண்டும் என்ற நினைவால் தான் கொலை யுண்டான்
செயற்கையாக அழ த்ரவ்யம் பூசி இவன் இருக்க
ஜராசந்தன் பெண்கள் இருவர் இவன் மனைவிமார் – அழும் படி பண்ணினான் )
(போஜன் ஸ்தாலி -கண்ணன் ஒளிந்து விளையாடிய இடங்கள் –
இவன் வாய் அமுதத்தால் நிறைந்த புஷ்கரணி
விஷ்ணு சித்தர் மனத்தைக் கோயிலாகக் கொண்டு பெரியாழ்வார் அஸ்தானே பயம் போக்கி அருளினான் )
கஞ்சன் வயிற்றில்-நெருப்பன்ன நின்ற
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றிலே புகும்படி பண்ணி
(திருவடி -பிராட்டி சோக நெருப்பை -வாயு புத்ரனாகையாலே கொண்டு இலங்கைக்கு வீசிய படி)
நெடுமாலே –
இது எல்லாம் பட வேண்டிற்று ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹ அதிசயத்தாலே என்கை
வஸூதேவ தேவகிப் பிராட்டிகள் பக்கல் திரு உள்ளமன்றே-தாயாருக்கும் தமப்பனார்க்கும் செய்தன இவை
அவர்களையும் ஒளித்துச் செய்யுமவர்கள் அன்றோ நாங்கள் என்கை
(காணுமாறு உண்டு எனில் அருளே என்றதும் அனைத்தையும் காட்டி அருளினானே –
அது மால் என்னும் படி இவர்கள் பக்கல் நெடுமால்)
யுன்னை-அர்த்தித்து வந்தோம்
அர்த்தித்வாதி நிரபேஷனான உன்னை-
பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் -(உபாய நிரபேஷன் -கைங்கர்ய பிரார்த்தனை -ஏவிப் பணி கொள்ள வேண்டுமே -)
உன்னைப் பெறவே இருக்கிறோம்
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தவன் இறே -(ஏஷ நாராயண ஸ்ரீ மான்–ஆகாதோ மதுராம் புரம் )
எங்கள் வடிவைப் பாராய்
மாசுடை யுடம்பு இத்யாதி(நாச்சியார் )
பறை தருதியாகில்
தாழ்ந்தார் உயர்ந்தாரை திரு உள்ளமாகில் செய் என்னுமா போலே
உன் அழகாலே எங்களை மயக்காதே –
செய்து அருளப் பார்த்தாயாகில் -செருக்கு அடியாதே செய்து அருளப் பார்த்தாயாகில்
(நெறி காட்டி நீக்குதியோ -கரு மேனி காட்டுதியோ
அழகைக் காட்டி மயக்கி கைங்கர்யம் கொடுக்காமல் –
ஸ்வா தந்தர்யத்தாலும் கைங்கர்யம் கொடுக்காமல் )
திருத் தக்க செல்வமும்
திருவுக்கு தக்க செல்வம்
யஸ்ய சா ஜனகாத்மஜா அப்ரமேயம் ஹி தத் தேஜ-என்கிற படியே
பிராட்டி ஆசைப்படும் சம்பத்து –
திருவுக்கும் திருவாகிய செல்வா தெய்வத்துக்கு அரசே –
ஸ்ரிய ஸ்ரியம் (ஆளவந்தார் )
சேவகமும்
இத்தைக் காத்தூட்ட வல்ல வீர்யம்
யாம் பாடி-வருத்தமும் தீர்ந்து
வருத்தம் உன்னை நீ கண்டு அறியாயே-பிரிந்தார் படும் பாடு பாராய் -என்கை
சொல்லப் பெறாத நம் வருத்தமும் தீர்ந்து
மகிழ்ந்தேலோ ரெம்பாவாய் எல்லாம் ஏற்ற
கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி யன்று தேட்டம்
ப்ரீதிக்குப் போக்கு விட வேண்டும்படி யாகை-(பாடுவதே ஆனந்தம் பரிவாஹமாய் கைங்கர்யம் )
பறை தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –
——————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply