ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்-திரு நாராயண புரத்து ஆய் ஸ்வாமிகள் -என்னும் ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

அநன்ய சரண்யத்வம் -அநந்யார்ஹத்வ சேஷத்வம் -அநந்ய போக்யத்வம் –
நாராயண விஷ்ணு வாஸூ தேவ வியாபக மந்த்ரங்கள் –
திருமந்திரம் பிரதானம் -மந்த்ர ராஜ -மந்த்ராணாம் பரமம் -குஹ்யானாம் குஹ்ய தமம்–
இதன் விவரணம் த்வயமே -மந்த்ர ரத்னம் – த்வயார்த்தம் தீர்த்த சரணாகதி -சார ஸங்க்ரஹம் –
கற்றுக் கறவைகள் -த்வய பூர்வ வாக்கிய விளக்கம் -சரணாகதி பண்ணி –
சிற்றம் சிறு காலை -உத்தர வாக்ய விளக்கம் -புருஷார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை
ந வேதாந்தாத் சாஸ்திரம் -வேதம் ஒன்றே சாஸ்திரம் –
ந மது மதநாத் தத்வம் அகிலம் -அஜிதன் பாற்கடல் கடைந்தவன் -ஹரி கஜேந்திர மோக்ஷம் ப்ரதன் –
தத்வ த்ரயம் -மூன்றும் நித்யம் சத்யம் -மற்றவை அவனுக்கு அதீனம் -அவர தத்வங்கள் -இவன் ஒருவனே பர தத்வம்
ந தேவம் கேஸவாத் பரம் -பரம் திறம் அன்று பல்லுலகீர் மற்ற தெய்வம் இல்லை -சர்வம் சரீரம் பிரகாரம் –
ந ஸத்வாத் ஆரோக்யம் -சத்வ குணம் -சாத்விக ஆகாரம்
நாயகனாய் வெல்லம் போட்ட சக்கரை பொங்கல்
கூடாரை அக்கார வடிசில் பாலால்
கற்று -தத்யோனம்
ந த்வய வசனம் ஷேம கரம்

ஈராயிரப்படி -அவதாரிகை –

பெண்காள் -நீங்கள் சொன்னவற்றைத் தருகிறோம் —
நாடு உங்கள் பாடே –
(நாடு புகழும் பரிசு தந்தோம் -ஆனால் )
நாமும் சிறிது உங்கள் பாடே பெற்றோராக வேணும் –
அதுக்கு உங்களுக்கு உள்ளது என் என்ன –
(சிறிது -யார் அபிப்ராயம் -அவநதா -நம்மதா -ரிஷிகளதா -ஆழ்வார் அபிப்ராயத்தாலா –
எதுவுமே இல்லையே )
உனக்குத் தரலாவது ஒன்றும் இல்லையே –
பண்டு தப்பச் சொன்னது உண்டாகில் பொறுக்க வேணும் -என்று
க்ஷமை கொள்ளுகிறார்கள் –

(கீழ்ச் சொன்ன-ஏற்றிப் பறை கொள்வான் -உன்னை அர்த்தித்து வந்தோம்-பாடிப் பறை கொள்ள –
பரத்வ திருநாமங்களால் ஏதேனும் உண்டோ என்ற சங்கை இருந்தால்
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குல பிள்ளைகள் -அன்பினால் சொன்னோம்
சார்வே தவ நெறிக்கு தாமோதரன் தாள்கள் -ஸாத்ய உபாயம் பக்தி -ஸித்த பிரபத்தி
இரண்டு நிர்வாகங்கள் ஈட்டில் உண்டே )

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-

பதவுரை

குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!
யாம்-நாங்கள்
கறவைகள் பின் சென்று–பசுக்களின் பின்னே போய்
கானம் சேந்து–காடு சேர்ந்து
உண்போம்–சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,
அறிவு ஒன்றும் இல்லாத–சிறிதளவும் அறிவில்லாத
ஆண் குலத்து–இடைக் குலத்தில்
உன் தன்னை–உன்னை
பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம்–(ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா–ஸ்வாமியான கண்ண பிரானே
உன் தன்னோகி உறவு–உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது–இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம்–(லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை–உன்னை
அன்பினால்–ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும்–சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ-(ஆச்ரித வத்ஸலனான) நீ
சீறி அருளாதே–கோபித்தருளாமல்
பறை தாராய்–பறை தந்தருளவேணும்;
எல் ஓர் எம் பாவாய்

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா-அத்வேஷம் ஒன்றே பற்றாசாகக் கொண்டு பசுக்கள் பின்னே போனவன் கீழே பார்த்தோம் –
நாங்களோ குறைவாளர்கள் -சாம்யா பத்தி சாயுஜ்ஜியம் கீழே –இரண்டு பாசுரங்கள் –
இல்லை என்னும் சாம்யம் -குறை அவன் இடம் நிறை நம்மிடம் -நாம் சிறையர்கள் -அவன் அரையன் –
கிருபையால் நம்மை மீட்டு கைக் கொள்ள அன்றோ அவதாரம்
மேடும் பள்ளமும் சமமாக வேண்டுமே –
ந தர்ம நிஷ்டோமி ந ஆத்ம வேதி ந பக்திமான்
நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து
அறிவு இல்லை கர்ம யோகம் இல்லை
அறிவு ஒன்று இல்லை-ஞான யோகம் இல்லை
அறிவு ஒன்றும் இல்லை பக்தி யோகம் இல்லை
நின் கண் பக்தன் அல்லேன்
ஒன்றுமே இல்லை என்பதே சரணாகதிக்கு அதிகாரம் –
யாம் -இடைப்பெண்களான நாம்
கறவைகள் பின் சென்று -மார்க்க தர்ஷி -எங்களுக்கு கறவைகள்
கானம் சேர்ந்து -காட்டுக்கு சென்று
உண்போம்-
உன் தன்னைப்பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்-சாஷாத் தர்மம் -கிருஷ்ணன் தர்மம் சனாதனம் –
ராமோ விக்ரஹவான் தர்மம் -அன்றோ எங்களைத் தேடி உள்ளது –
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது-எங்களாலும் -உன்னாலும் -இயலாது -ஸர்வசக்தனாக இருந்தாலும்
ஒழிக்க ஒழியாத சம்பந்தம்
அறியாத பிள்ளைகளோம்
அறியா தனம்
இளமைத் தானம் –
அன்பினால் -ப்ரீதியாலே -மூன்றாலும்
உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவோம் -பரத்வ நாமங்களை அன்றோ இது காறும் சொல்லி வந்தோம் –
நீர் எங்களைத் தேடி வந்து இருக்க –
சீறி அருளாதே-ஆஸ்ரித வத்சலன் அன்றோ
அவனது சீற்றமே அருளாகவே தான் இருக்கும்
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்–நாராயணனே நமக்கே பறை தருவான் -முதலில் -இங்கு பிரார்த்தனை
இற்றை-இன்று பறை கொள்வான் அன்று -நாளைக்கு –
பேரி வாத்யம் வேண்டாம் –உற்றோமே ஆவோம் உனக்கு நாம் ஆட் செய்வோம் –
நாங்கள் விரும்பும் புருஷார்த்தம் தந்து அருள்வாய் –

கறவைகள் –
அறியாமைக்குக் கன்று காலி என்கை –
ஞாநேந ஹீந பஸூபிஸ் சமாந -இறே

பின் சென்று –
தங்கள் குருகுல வாசம் பண்ணுகிறபடி சொல்லுகிறார்கள் –

கானம் சேர்ந்து
விசிஷ்டர் இருந்த இடத்தே சென்று இக் கோயில் புகுவதே –
(விசிஷ்டர்-சிஷ்டாசாரம் -இக்கோயில் -என்று கானம் காட்டுகிறார்கள் )
உள்ளுள்ள காட்டிலே வர்த்திக்கும் அத்தனை –
ஊர் கண்டு அறியோம்

உண்போம்
ரிஷிகளைப் போலே தபஸ்ஸூக்கு அல்ல –
அங்கும் வயிறு வளர்க்க –
(தபோவனம் பிருந்தாவனம் போல் அல்ல -ஆகார தபஸ் ஒன்றே அறிவோம் –
ப்ரத்யாஹாரம் -ப்ரத் இல்லாமல் ஆகாரம் ஒன்றே )

சேர்ந்து உண்போம்
நடந்து உண்ணும் அத்தனை –
(உட்கார்ந்து உண்ணும் ஆசாரமும் இல்லை -கொடுத்து உண்பதும் இல்லை )
எங்களைப் பார்க்க பசுக்கள் வசிஷ்டாதி களோடு ஒக்கும் –
இத்தால் கர்மம் இல்லை என்கை –
(வர்ணாஸ்ரம தர்மம் செய்யவே ஞானம் உண்டாகும் -அத்யந்த பிரியன் ஆவோம் )

அறிவொன்றும் இல்லாத
ஞான பக்திகள் இல்லை என்கிறது –
பக்திஸ்ச ஞான விசேஷ -என்றார் இறே
முதல் தான் இல்லை –
இது உண்டாமோ -இவர்கள் அலமாப்பு பக்தி யன்றோ என்னில்
அது ஸ்வரூபமாகையாலே உபாயமாக நினையார்கள் –

(பேற்றுக்கு த்வரிக்கையும் உபாயம் ஆகாதே –அதிகாரி ஸ்வரூபமே
இரு கையும் விட்டேனோ திரௌபதியைப் போலெ
கஜேந்திர ஆழ்வான் 1000 தேவ மானங்களில் தனது பலத்தை நம்பி இழந்தானே
ஏழு திருவாய் மொழி திருத்தாயார் –உபாய கோடியில் எண்ணுவானோ என்றே பயந்தாள் திருத்தாயார்
நெறி காட்டி நீக்குதியோ
சேஷத்வம் பாரதந்தர்யம் ஸ்வரூபம் -கைங்கர்யம் பண்ணினால் தானே சேஷத்வம் சித்திக்கும்
எம்மா வீட்டில் ப்ராப்ய நிஷ்கர்ஷம் செய்து ஒழிவில் காலம் கைங்கர்ய பிரார்த்தனை –
புகழு நல் ஒருவன் என்கோ -வாசிக கைங்கர்யம் – )

ஆய்க்குலத்து
அதிகாரமும் இல்லை –

உன் தன்னைப்-பிறவி பெறும் தனைப் புண்ணியம் யாம் உடையோம்-
ஆனால் இப்புண்யம் இல்லாதார் இழக்கும் அத்தனை யன்றோ
என் சொன்னாய் –
எங்களுக்கு அன்றோ புண்யம் உள்ளது –
எங்கள் புண்யம்

முதல் இல்லாதார்க்கு முதலும்-
பலிசையும் கொடுக்கும் புண்யம் காண்-
ஸாத்ய தர்மத்தைப் பற்றினோமோ
ஸித்தமாய் வடிவுள்ளதொரு தர்மத்தைப் பற்றினோம் -இதுவோ எங்கள் குற்றம்

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றீர்களே என்ன

உன்னை இல்லை என்றோமோ -என்ன
(பிறப்பிலி -கர்மங்களால் பிறக்காமல் –
பஹுதா விஜாயதே -கிருபையால் -இச்சையால் -வந்துள்ளாய்
கட்கிலி காணுமாறு அருளாய்
கோவிந்த பட்டாபிஷேகம் செய்து அருளியதை நினைவு படுத்துகிறார்கள் இத்தால் )

உங்கள் வெறுமைக்கு நாம் செய்வது என் என்ன
ராஜாக்கள் வழி போம் போது மேடு பள்ளம் ஓக்க விடுமா போலே
உன் குறை இல்லாமை எங்கள் குறையிலே இட்டு நிரப்புவது –

உன் தன்னோடு-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்
நீ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
ஆன பின்பு இப் பிறவி -விதி நிர்மித ஏதத் அந்வயம் -ஸ்தோத்ர ரத்னம்
(கிருபைக்கு நான் இல்லா விடில் ஆள் இல்லை -விதி -உனது கிருபை தான் )
நாராயணன் அன்றோ –
(நாரங்களையும் அயனமும் சேர்ந்தே இருப்பதே உனது கிருபை அடியாகவே தானே )

எங்கள் அறிவு கண்டு கார்யம் உண்டோ –
உறவு உண்டாய் இருக்க துர்யோதனாதிகளை விட்டோமே என்ன
உனக்கு விட ஒண்ணாத பாண்டவர்களாகக் கொள்-எங்களை
எங்கள் வெறுமையும் உன் பூர்த்தியும் உணர்ந்து எங்களை விட ஒண்ணுமோ -என்கை

அறியாத – அநவதானம் ( கவனக்குறைவு )
பிள்ளைகளோம் – அஞ்ஞர்

அன்பினால் உன் தன்னைச்-சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
தவிர ஒண்ணாது ஆகையால் ப்ரக்ருதி உபாய புத்தியாகில் இறே தப்பாவது என்ன
(ஆசைப்பட்டால் தான் அடைய முடியும் -ஆனால் ஆசை உபாயம் இல்லை –
ஆசையாய் இருப்பது ப்ரக்ருதி ஸ்வரூபம் )

நாராயணன் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிற என்னை
சிறு பேர் சொன்னீர்கள் என்ன
நாராயணன் என்கை குற்றமோ என்னில் –
நீர்மை சம்பாதிக்கப் போந்த இடத்திலே மேன்மை சொல்லுகை குற்றம் அன்றோ –

இறைவா
உன் ஸ்வரூபம் பெற வேண்டாவோ

நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-
ஸ்வீ காரத்தால் செய்யும் அத்தனையும் நீ செய்து
அனுதாபமுமம் அத்தலையிலே யாக வேணும்
ஏகம்-என்றபடியே
செய்து அருளாய் -என்கை –
(மொத்த பொறுப்பும் அவன் தலையில் -இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்த வேண்டுமே )

ஒழிக்க ஒழியாது
நம்மை உண்டாகில் அன்றோ பழியிட்டு விடலாவது –

சீறி அருளாதே
உபாயம் என்று நினையாதே பிரகிருதி என்று கொள்ள வேணும் –
இத்தலையால் பற்றும் பற்று சீற்றத்துக்கு விஷயம் –
இத்தலைக்கு குறையும்
அத்தலைக்கு ரக்ஷையும் ஸ்வரூப ப்ரயுக்தம் –

நீ தாராய் பறை
விலக்குகைக்கு ஆள் இல்லை –
நீ தரும் அத்தனை –
(நாம் பற்ற பல தடைகள் -அவனே நம்மைக் கைக்கொள்ளும் போது
தூண்டிவிட ஆச்சார்யர்கள் பிராட்டி உண்டே )

————————————–

(வேத சார–திருமந்திரம்
ஓம் -சம்பந்தம் உறவு ஞானம் -அநந்யார்ஹ சேஷத்வம் -ஸ்வாமி சொத்து சேஷி சேஷ பூதன் –
அவன் பிரயோஜனத்துக்காகவே இருக்க வேண்டுமே -அற்றுத்தீர்ந்த நேர்பட்ட -ப்ராப்யத்தில் தெளிவு உண்டாகும்
அனுபவ ஜனித்த ப்ரீதி காரித கைங்கர்யம் பெற உபாயம் -அவனே என்றும் உணர வேண்டுமே
இதுவே நம-எனக்கு உரித்தவன் அல்லன் -உபாயம் அவனே விளக்கம் நம – நாராயணாயா -அவனுக்கே கைங்கர்யம் விஷயமான விளக்கம்
நம -அனுஷ்டானம் விவரணம் த்வயம் பூர்வ வாக்கியம்
நாராயணாயா விவரணம் த்வயம் உத்தர வாக்கியம்
ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் இருந்து வழு விலா கைங்கர்யம் செய்ய வேண்டுமே -உத்தர வாக்யார்த்தம்
இவற்றை விளக்கவே அருளிச் செயல்கள்
உலகமுண்ட பெரு வாயா -அகலகில்லேன் -அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே -பூர்வ வாக்யார்த்தம்
ஒழிக்க ஒழியாத ஒன்பது வித சம்பந்தம் உண்டே
மேம்பொருள் -தொண்டர் அடிப்பொடி -நாயக ரத்ன பாசுரம்
காம்பற தலை சிரைத்து -கைங்கர்ய பிரார்த்தனை
மேல் பூர்வ வாக்யார்த்தம்
முன்னும் பின்னுமாக இருவரும்
ஆண்டாள் இதில் நேராக -கறைவைகள் இன்று பூர்வ வாக்யார்த்தம்
சிற்றம் சிறுகாலை உத்தர வாக்யார்த்தம்
கீழ் சாம்யா பத்தி சாயுஜ்யம்
நெடுமாலே -மாலே -சம்பந்தம் 25-26-
கோவிந்தா -மூன்று பாசுரங்கள்
இப்படி கட்டுமானம் உண்டே -ரத பந்தனம் -ஸாஸ்த்ரார்த்த பரம்
ந வேதாந்தாத் த ஸாஸ்த்ரம் ந மதுமத்நாத் தத்வம் அகிலம் ந சத்வாத் ஆரோக்யம்-ந த்வய வசனம் ஷேம கரம்
த்வயம் -மந்த்ர ரத்னம்
அநன்ய சரண்யத்வம் -அநந்யார்ஹத்வ சேஷத்வம் -அநந்ய போக்யத்வம் –
நாராயண விஷ்ணு வாஸூ தேவ வியாபக மந்த்ரங்கள் –
திருமந்திரம் பிரதானம் -மந்த்ர ராஜ -மந்த்ராணாம் பரமம் -குஹ்யானாம் குஹ்ய தமம்–
இதன் விவரணம் த்வயமே -மந்த்ர ரத்னம் – த்வயார்த்தம் தீர்த்த சரணாகதி -சார ஸங்க்ரஹம் –
கற்றுக் கறவைகள் -த்வய பூர்வ வாக்கிய விளக்கம் -சரணாகதி பண்ணி –
சிற்றம் சிறு காலை -உத்தர வாக்ய விளக்கம் -புருஷார்த்தம் -கைங்கர்ய பிரார்த்தனை
ந வேதாந்தாத் சாஸ்திரம் -வேதம் ஒன்றே சாஸ்திரம் –
ந மது மதநாத் தத்வம் அகிலம் -அஜிதன் பாற்கடல் கடைந்தவன் -ஹரி கஜேந்திர மோக்ஷம் ப்ரதன் –
தத்வ த்ரயம் -மூன்றும் நித்யம் சத்யம் -மற்றவை அவனுக்கு அதீனம் -அவர தத்வங்கள் -இவன் ஒருவனே பர தத்வம்
ந தேவம் கேஸவாத் பரம் -பரம் திறம் அன்று பல்லுலகீர் மற்ற தெய்வம் இல்லை -சர்வம் சரீரம் பிரகாரம் –
ந ஸத்வாத் ஆரோக்யம் -சத்வ குணம் -சாத்விக ஆகாரம்
நாயகனாய் வெல்லம் போட்ட சக்கரை பொங்கல்
கூடாரை அக்கார வடிசில் பாலால்
கற்று -தத்யோனம்
ந த்வய வசனம் ஷேம கரம்
வேத பாகங்கள் தேகத்தால் பேறு -இத்யர்த்த கர்தவ்யம் –
ஆத்மாவால் பேறு -ஸாம்யம் புத்தி -திருமந்திரம் சொல்லும்
ஈஸ்வரனால் பேறு -சரம ஸ்லோகம் சொல்லும்
பிராட்டியாலே பேறு த்வயம் –
ரஹஸ்ய த்வயத்தால் வியக்தமாகாத பிராட்டி சம்பந்தம் வியக்தம் வாக்ய த்வயத்திலே
சாஸ்த்ர ருசி பரிக்ரஹீதம் திருமந்திரம்
ஈஸ்வர ருசி பரிக்ரஹீதம் சரம ஸ்லோகம்
ஆச்சார்ய ருசி பரிக்ரஹீதம் த்வயம்

இறைவா நீ தாராய் பறை -ப்ராப்ய பிரார்த்தனை -தாராய் -ப்ராபகம் -இதிலே தான் நோக்கம்
பறை விளக்கம் நாளை -ப்ராப்யத்தில் நோக்கம்

அறிவு ஒன்றும் இல்லாத-கர்ம ஞான பக்தி யோகங்கள் இல்லை –
பிறவி பெறும்தனை புண்ணியம் உடையோம் –எங்களைத் தேடி வரும் பாக்யம் படைத்தோம் –
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது-கண்ணநீர் பாய்ச்ச வேண்டாத உறவு அன்றோ -நித்யம் அன்றோ -அறியாமை தானே வந்தேறி
அறியாத பிள்ளைகளும் அன்பினால் -மூன்று தப்புக்கள் பண்ணினோம்

நாராயணனே நமக்கே பறை தருவான் ஆரம்பம்
இறைவா நீ தாராய் பறை -இங்கு
நாராயணனே இறைவன் -கோவிந்தன் எளியவன் -கொடுக்க சக்தனோ என்ற சங்கை இல்லாமல் இறைவா
தமேவ சரணம் கத கீதையில் சொன்னதும்-யாரோ எங்கயோ என்று பார்த்த அர்ஜுனனுக்கு மாம் அஹம் காட்டி அருளினான்

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்–முதல் பாகம் கைம்முதல் இல்லை -கர்மா ஞான பக்தி யோகங்கள் இல்லை -ஆகிஞ்சன்யம் சொல்லிற்று
நோற்ற நோன்பு ஆகிஞ்சன்யம் ஆராவமுது -அநந்ய கதித்வம் -உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து-இரண்டாம் பாகம் -மேல் கர்மாதி உபாயாந்தரங்கள் வரவும் யோக்யதை இல்லை
உன் தன்னைப் பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம் குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -ஸித்த உபாயம் எங்கள் இடம் உள்ளதே
உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது-சம்பந்தம் திடமாக -ஞானம்
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே-அபராத ஷாமணம்
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-ப்ராப்ய பிரார்த்தனை -அடுத்த பாசுரத்துக்கு முன்னுரை )

————–

நாலாயிரப்படி-அவதாரிகை –

பெண்காள் -நீங்கள் சொன்னவை நாட்டுக்கு –
உங்கள் அபி சந்தி இவ்வளவு என்று தோற்றி இருந்தது இல்லை –
நீங்கள் சொன்னவையும் இன்னும் மேல் சொல்லுமவையும் உண்டாகில்
நாம் தரும் இடத்தில்(சர்வ முக்தி பிரசங்கம் ஆகக் கூடாதே )
உங்கள் பாடே நாமும் சிறிது பெற்றோமாக வேணும் –
அதுக்கு உங்களுக்கு உள்ளது என் -என்ன
உனக்கு உதவுவதாவது எங்கள் பக்கல் ஒன்றும் இல்லை –
நாங்கள் பண்டு தப்பச் சொல்லிற்றின யுண்டாகில் பொறுக்க வேணும் -என்று க்ஷமை கொள்ளுகிறார்கள்
முதல் பாட்டில்,-நாராயணனே நமக்கே பறை தருவான் -1-என்று சங்க்ரஹேண சொன்ன
ப்ராப்ய ப்ராபகங்களை இந்த இரண்டு பாட்டாலே விவரிக்கிறது
இப்பாட்டு உபாய விவரணம்

ப்ராப்ய ப்ராபகங்களை-சொன்னதும் தப்பாக இது முதலில் சொன்ன ப்ராப்யம் என்று புத்தி பண்ணுவோம் என்று அத்தை நிரசிக்கிறார் உடனே

(உபாய பாவத்தில் கிஞ்சித்தும் இல்லை -ப்ராப்ய கைங்கர்யமாக பலவும் உண்டே –
நாம சங்கீர்த்தனம் போற்றுதல் புகழ்தல் போன்ற பலவும் உண்டே
உபாய அத்யவசாயம் உள்ளதோ என்று தேடுகிறான்)

(தருவான் பறை -பறை தருவான்
உபதேச காலம் வேறே -ப்ராப்யத்தின் ஏற்றம் சொல்லி பின்பு உபாயம் சொல்ல வேண்டுமே
அனுஷ்டான வேளையில் உபாயம் காட்டி பின்பு ப்ராப்யம்)

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-

கறவைகள் –
உங்கள் ஸ்வரூபம் ஏது என்ன -இன்னது என்கிறார்கள் –
பட்டர் அருளிச் செய்யும் பாட்டையும் இங்கே நினைப்பது

(ஸ்தோத்ர ரத்னத்தின் ஞான கிரியா அகிஞ்சன –
ந தர்ம நிஷ்டோஸ்மி போன்ற ஸ்லோகங்கள் இருக்கலாம்)

கறவைகள்
அறியாமைக்குக் கன்று காலி என்கை –
ஞாநேந ஹீந பஸூபிஸ் சமாந -இறே
அறிவில்லாதவரை பசுக்களோடு ஒப்பர் என்னக் கடவது -(மா முனிகள் விருத்தத்தில் பசு நர வபுஸ் -பசு பிராயர் )

பின் சென்று –
பின் என்று தங்கள் குருகுல வாசம் பண்ணுகிறபடி சொல்லுகிறார்கள்
ராவணோ நாம -பரஹிம்சையில் பேர் படைத்தவன்
துர்வ்ருத்த -பேர் மாத்ரமேயாய் சதாசார்யம் உண்டோ என்னில் அதிலும் புரை இல்லை
ராக்ஷஸ -ஜென்மத்தால் வரும் நன்மை யுண்டோ என்னில் அதுவும் இல்லை –
காட்டிலே புக்கு நோக்கினாலும் திருத்தப் போகாது
ராக்ஷஸாதிப -நியாம்யனோ என்னில் –
இவன் தனக்கு எல்லாரும் நியாம்யர்

கானம் சேர்ந்து
ஊர் கண்டு அறியோம்

உண்போம்
ரிஷிகளைப் போலே தபஸ்ஸூக்கு அல்ல -அங்கும் வயிறு வளர்க்க -(நைமிசாரண்யம் போல் அல்லவே-உண்ணும் நோன்பு எங்களது )

சேர்ந்து உண்போம்
நடந்து நடந்து உண்ணும் அத்தனை –
எங்களைப் பார்க்க பசுக்கள் வசிஷ்டாதி களோடு ஒக்கும் –
எங்கள் இளிம்பு கண்டால் சிரிப்பன பசுக்கள் ஆயிற்று
க்ருதா நுகாரா நிவ கோபிரார்ஜவே -ஸஹ ஜென்மம்
க்ருஹத்தில் வைக்க வேண்டிய பிரமத்தை காட்டில் வைப்போம் -என்று
பசுக்கள் அசுக் காட்டும் -கேலி பண்ணும் படியாக -ஆர்ஜவம் எங்கள் படி என்கை
இத்தால் கர்ம யோகத்தில் அதிகாரம் இல்லை என்றபடி –

அறிவொன்றும் இல்லாத
இஜ் ஜென்மத்தில் ஒரு ஸூக்ருதம் இல்லையாகிலும் ஜன்மாந்தரத்தில்
புண்யத்தைப் பண்ணி அத்தாலே விதுராதிகளைப் போலே
இஜ் ஜென்மத்தில் அறிவுண்டாம் -அது யுண்டோ என்னில் -அதுவும் இல்லை என்கிறார்கள்

ஒன்றும் இல்லாத
ஈஸ்வர ஞானத்துக்கு அடியான ஆத்ம ஞானம் இல்லை –
இத்தால் -ஞான பக்திகள் இல்லை என்கிறது –
பக்திஸ்ச ஞான விசேஷ -என்று பக்தியாவது ஒரு ஞான விசேஷம்

அதுவும் இல்லையாகையாவது –
கீழில் அவை யுண்டாக யுண்டாம் அது ஒன்றாகையாலே இது இல்லை என்னும் இடம் சொல்ல வேண்டா இறே
முதல் தான் இல்லை -இது உண்டாமோ -இவர்கள் அலமாப்பு பக்தி யன்றோ என்னில்
அது ஸ்வரூபமாகையாலே உபாயமாக நினையார்கள் –
இத்தால் கர்ம ஞான பக்திகள் இல்லை என்கை –

அஹம் அஸ்ம்யபராதாநாம் ஆலயோ அகிஞ்சனத்வமேவ உபாய பூத மே பவ இதி பிரார்த்தனா மதி பிரபத்தி -(அஹிர்புத்ய சம்ஹிதை )
நோற்ற நோன்பிலேன்
குளித்து மூன்று
ந தர்ம நிஷ்டோஸ்மி
இவை யன்றோ அறிவுடையார் வார்த்தை -அவர்களோடு ஓத்தி கோள் -என்ன

(கர்மாதிகள் இல்லை என்ற சொற்களே சொல்ல அறியாமல் இவ்வாறே சொல்லும்படி அன்றோ எங்கள் அறிவு)

ஆய்க்குலத்து
அதிகாரமே இல்லை –
எங்களைக் கண்டு வைத்து அறிவுண்டோ என்று கேட்க்கிற நீ அன்றோ அறிவு கேடன்-

முதல் இல்லாதவன் பலிசை இழக்கும் என்று சொல்லுகிற படியே
புண்யம் இல்லாதார் இழக்கும் அத்தனை அன்றோ என்ன
உன் தன்னைப்-பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்-
என் சொன்னாய் -எங்களுக்கோ புண்யம் இல்லாதது –
கிருஷ்ணம் தர்மம் சனாதனம் -என்று
எங்கள் புண்யத்துக்குப் பாலும் சோறும் இட்டு வளர்க்கிறோம் நாங்கள் அன்றோ
உபாய உபேயத்வே ராதிகா தவ தத்துவம் -என்னும்படியான உன்னை

(ஸ்ரீ ரெங்கராஜ ஸ்தவம் -கண்ணனே புண்யம் தர்மம் -புண்யம் உடையவன் தர்மம் செய்பவன் என்று இல்லையே)

பிறவி பெறுந்தனை
நாட்டார் ஆஸ்ரயணீயர் இருந்த இடத்தே போய் ஆஸ்ரயிப்பார்கள் –
நாங்கள் இருந்த இடத்தே எங்களோடு சஜாதீயனாய் ஆஸ்ரயணீயனான நீ வந்து
அர்த்திக்கும் படி அன்றோ எங்களுடைய ஏற்றம் –
எங்கள் புண்யம் முதல் இல்லாதார்க்கு முதலும் பலிசையும் கொடுக்கும் புண்யம் காண்

புண்ணியம் யாம் யுடையோம்
ஸாத்ய தர்மத்தைப் பற்றினோமோ
ஸித்தமாய் வடிவுள்ளதொரு தர்மத்தைப் பற்றினோம் -இதுவோ எங்கள் குற்றம் –

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா –
உங்களுக்கு ஒன்றும் இல்லை என்றீர்களே என்ன
உன்னை இல்லை என்றோமோ -என்ன
உங்கள் வெறுமைக்கு-பெருமைக்கு – நாம் செய்வது என் என்ன
ராஜாக்கள் வழி போம் போது மேடு பள்ளம் ஓக்க விடுமா போலே
உன் குறை இல்லாமை எங்கள் குறையிலே இட்டு நிரப்புவது –
பெருமாள் கடலைத் தூர்த்து வழி போனால் போலே

கோவிந்தா
அறிவில்லை என்றிகோளே-என்ன
நீயோ சால அறிவுடையாய் இருக்கிறாய் –
அவிஞ்ஞாதா அன்றோ
உன்னை உணரில் பிறக்க விரகுண்டா-(பிறந்தவாறும்)
கோல் கொண்டு பசுவின் பின்னே திரிய விரகுண்டோ-(வளர்ந்தவாறும் )

(அவிஞ்ஞாதா ஸஹஸ்ராம்ஸூ -அடியார் குற்றம் அறியாதவன் -ஒரே நன்மையை ஆயிரமாகக் கொள்ளுமவன்)

உன் தன்னோடு-உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
நாங்கள் அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலம்
நீ குறை ஒன்றும் இல்லாத கோவிந்தன்
ஆனபின்பு இப்பிறவி -விதி நிர்மித மேத தன்வயம் -என்கிறபடியே
மேடு படக் கண்டது பள்ளத்தை நிரப்ப அன்றோ

(பிரிந்தால் உன் தயை யார் இடம் காட்டுவாய்
நிகர் இன்றி –இருவருக்கும் பயன் ஆனபின்பு)

நாராயணத்வம் ஒழிய தயா பூர்த்திக்கு தயநீயதா பூர்த்தி யுண்டானபடியாகிற உறவு
எனக்கு அறிவுண்டு என்று கண்டால் உங்கள் அறியாமை போயிற்றோ என்னில்
எங்கள் அறிவு கண்டு கார்யம் உண்டோ உன்னோடு விட ஒண்ணாத குடல் துடக்கான உறவு யுண்டாய் இருக்க -என்ன –
உறவு உண்டாய் இருக்கச் செய்தே அன்றோ சிஸூ பாலன் – துர்யோதனாதிகளை விட்டோமே என்ன
உனக்கு விட ஒண்ணாத (மம ப்ராணா பாண்டவ )பாண்டவர்களாகக் கொள்-எங்களை
தங்கள் கர்மம் தாங்கள் செய்கிறோம் என்று இருப்பாரை அன்றோ உனக்கு விடலாவது
எங்கள் கர்மம் உன்னாலே என்று இருப்பாரை உன்னால் விட ஒண்ணாது –
அவர்கள் தங்களாலும் (உன்னையும் உனக்கு ப்ரீதி அர்த்தமாக கர்மங்களையும் )விட ஒண்ணாது என்கை
எங்கள் வெறுமையும் உன் பூர்த்தியும் உணர்ந்து எங்களை விட ஒண்ணுமோ -என்கை –

அறியாத – அநவதானம்(கவனக்குறைவு )
பிள்ளைகளோம் – அஞ்ஞர்

(விஸ்வரூபம் பார்த்த அர்ஜுனன் திகைத்து -ஷாமணம் பிரார்த்தித்து
அஜானதா பிரமாதாத் ப்ரணயே -மூன்றும் அங்கும் உண்டு
இப்பொழுது தான் நாராயணா அறிந்தேன் முன்பு சஹா அடே -)

அன்பினால் உன் தன்னைச்-சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
அன்பு தவிர ஒண்ணாது ஆகையால் ப்ரக்ருதி
பிரகிருதி உபாய புத்தியாகில் இறே தப்பாவது
இம் மூன்றும் குற்றமாக நினைக்க விரகில்லை

மயா ப்ரமாதாத் ப்ரணயேந வாபி –
அன்பினால் உன் தன்னைச்-சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
நாராயணன் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணிப் பூர்ணனாய் இருக்கிற என்னை சிறு பேர் சொன்னீர்கள் என்ன
நாராயணன் என்கை குற்றமோ என்னில்
நீர்மை சம்பாதிக்கப் போந்த இடத்திலே மேன்மை சொல்லுகை குற்றம் அன்றோ –
அர்ஜுனனைப் போலே பொறை கொள்ளுகிறார்கள்
ஒரு படுக்கையிலே இருந்து கால் தாக்கிற்று கை தாக்கிற்று என்று குற்றம் கொள்ளுவாரைப் போலே
அன்புடையாரைக் குற்றம் கொள்ளப் போமோ -பொறுத்து அருளாய் -என்கிறார்கள்

(அத்வேஷம் மாத்திரம் கீழ் கோவிந்தா
இதில் கோவிந்தா பட்டாபிஷேகம் -அஹம் வோ பாந்தவ ஜாத சொன்னவன் அன்றோ)

இறைவா
உன் ஸ்வரூபம் பெற வேண்டாவோ

நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-
ஸ்வீ காரத்தால் செய்யும் அத்தனையும் நீ செய்து அனுதாபமுமம் அத் தலையிலே யாக வேணும்
ஏகம்-என்றபடியே செய்து அருளாய் -என்கை –

(உபாயம் தன்னைப் பொறுக்கும்
உபாயாந்தரம் இருவரையும் பொறுக்கும்
இது ஒன்றையும் பொறுக்காதே)

ஒழிக்க ஒழியாது
நம்மை உண்டாகில் அன்றோ பழியிட்டு விடலாவது -(பல நீ காட்டிப் படுப்பாயோ நெறி காட்டி நீக்குதியோ)

சீறி அருளாதே
உபாயம் என்று நினையாதே பிரகிருதி வ்ருத்தி என்று கொள்ள வேணும்
இத் தலையால் பற்றும் பற்று சீற்றத்துக்கு விஷயம்
இத் தலைக்கு குறையும் அத் தலைக்கு ரக்ஷையும் ஸ்வரூப ப்ரயுக்தம்

இறைவா
தன் கை கால் தப்பச் செய்தது என்று பொடிவார் உண்டோ

நீ தாராய் பறை
விலக்குகைக்கு ஆள் இல்லை -நீ தரும் அத்தனை –

————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading