திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து-திரு நாராயண புரத்து ஆய் -என்னும் ஜனன்யாச்சார்யார்-வியாக்யானங்கள்-

ஈராயிரப்படி -அவதாரிகை –

எம்மா வீட்டில் -2-9-ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறது –

(தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே -கவிழ்ந்து தலை இட்டு அங்கு –
இங்கு உனக்கே நாம் ஆட் செய்வோம் -நேராக பிரார்த்தனை –
ஒழிவில் காலம் ப்ராப்ய பிரார்த்தனை –
அதுவும் இங்கு உண்டே )

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-

பதவுரை

கோவிந்தா–கண்ண பிரானே!
சிற்றம் சிறுகாலை–விடி காலத்திலே
வந்து–(இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து–உன்னைத் தெண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–உனது அழகிய திருவடித் தாமரைகளை
மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய்–கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ–பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ
எங்களை–எங்களிடத்தில்
குற்றேவல்–அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது–திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண்–இன்று (கொடுக்கப்படுகிற இப் பறையைப்
பெற்றுக் கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும்–காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–(உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்
உன் தன்னோடு–உன்னோடு
உற்றோமே ஆவோம்–உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே–உனக்கு மாத்திரமே
நாம்–நாங்கள்
ஆள் செய்வோம்–அடிமை செய்யக் கடவோம்;
எம்–எங்களுடைய
மற்றை காமங்கள்–இதர விஷய விருப்பங்களை
மாற்று–தவிர்க்கருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

சிற்றம் சிறுகாலே -காலை -சிறு காலை -சிற்றம் சிறு காலை -ப்ராப்ய த்வரை
பொற்றாமரை அடியே -அடியில் தொடங்கி அடியில் முடித்து-பொன் -பாவானத்வம் -தாமரை -போக்யத்வம் –
போற்றும் பொருள் கேளாய்-போற்றுவதே பொருள் -ப்ராப்ய அந்தர்கதம் -ஏற்றிப் பறை -ஏற்றுவதே பறை போல்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ-உண்ணாதவன் -அகர்மவஸ்யன் –
இந்திரியங்கள் கொண்டு கார்யம் கொள்பவன் அல்லன் -ஆசையுடன் இங்கே தேடி
குற்றேவல் -அந்தரங்க கைங்கர்யம்
எங்களைக் கொள்ளாமல் போகாதே-திரு உள்ளம் பற்றால் அல்லது ஒண்ணாது –
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-பேரி வாத்யம் தேட்டம் அல்லவே –
யதா ஸ்ருத க்ருஹணம் -தாத்பர்யம் அறியாமல்
எற்றைக்கும் -காலதத்வம் உள்ளதனையும்
ஏழு ஏழு பிறவிக்கும் -ஆத்மா உள்ளதனையும் -காலமும் ஆத்மாவும் நித்யம்
உன் தன்னோடு உற்றோமே யாவோம் -உற்றார்கள் -உறவுடையவர்கள் -ஆவோம்
உனக்கே நாம் ஆட்செய்வோம்-உனக்கும் உனது பரிகரங்களுக்கும் கைங்கர்யம் –
அப்ருதக் சித்த விசேஷணங்கள் -சர்வ மங்கள விக்ராஹாய -ஸமஸ்த –
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-இதர விஷய -பிரபல தம விரோதி
ஸூ போக்த்ருத்வ புத்தி மாற்றி அருள வேண்டும்

சிற்றம் சிறுகாலே
ப்ராஹ்மே முஹுர்த்தே ச உத்தாய – (ஹரி வியாகரேத் -பராசரர் )
காலை நல் ஞானம் (திருவிருத்தம் -93-)-இத்யாதிகள்

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பாவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் வன்மைப்படியே – – -93 –

முன்பு ஒரு போகியாக உறக்கம் –
பின்பு ஒரு போகியாக உணர்ச்சி –
நடுவில் காலம் இறே சிற்றம் சிறு காலை யாவது
பெண்களாகையாலே சிற்றம் சிறு காலம் என்றபடி
யோகிகளும் உணர்வதற்கு முன்னே சிறு பெண்களான நாங்கள் உணர்ந்த இத் தர்ம ஹானியைப் பாராய்
என்னில் முன்னம் பாரித்து -9-6–என்று நீ உணரும் காலத்திலே நாங்கள் உணர்ந்து வந்தோம் -என்கை –
(யோகிகள் தங்கள் ப்ரயத்னத்தால் அடைவார்கள் சிறு காலையில் எழுவார்கள்
நீ அன்றோ சிற்றம் சிறு காலை எழுந்து வந்து இருக்க வேண்டும் )

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

வந்து –
இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்-
ஸ்வரூபம் நிலையிட்டவர்கள் இறே
(நாராயணனே நமக்கே -அதிகாரி ஸ்வரூப நிர்ணயம்
ஸ்வரூபம் நிலையிட்டவர்களே ஸ்வரூபம் அழித்தோமே
வந்தது உபாயம் என்ற நினைவே கூடாதே )

பத்ப்யாம் அபிகமாச்சைவ -என்று சொல்லுகையாலே
அவன் இருந்த இடத்தே ஓர் அடி இட்டுச் செல்ல
இட்ட பதம் தோறும் நெஞ்சு உளுக்கும்-பொறுக்க மாட்டான் -என்கை

(ரிஷிகள் -தண்டகாரண்யம் -பெருமாள் வந்ததே ஆராதனம் –
ஸ்நேகத்துடன் -நாங்கள் அர்த்திக்கப் பட்டோம் என்றார்களே
நாம் செல்லும் ஒவ் ஒரு அடிக்கும் அவனுக்கு நெஞ்சு உளுக்குமாம்
கர்த்தாவும் அவன் காரயிதாவும் அவன் )

உன்னைச் சேவித்து –
அத்தலை இத்தலை யாயிற்று –
ஸேவ்யரான நாங்கள் சேவகரான படி –
ஸூக்ரீவம் நாதம் இச்சதி -தாமே இறே பார்த்து இருப்பார் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை முடி சூட்டுக்கைக்காக லங்கைக்கு நடந்தவன் அன்றோ –
(ஸ்ருஷ்ட்டி பலிப்பது சிலர் இடமே
பூர்ண காமாயா -பெருமாள் ஆசையை நிறைவேற்றிய பூர்த்தி பெரிய நம்பி
லோக நாதம் புரா பூத்வா -இவனை நாதனாக எதிர் பார்த்தது போல் இங்கே கோபிகள் –
க்ருதக்ருதா விஜ்வர ப்ரமோத -விபீஷண அங்கீகாரமே அவதார பிரயோஜனம் )

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-
ஆற்றாமையும் ஸ்வரூபம் ஆகையாலே அடைவு கெட மேலே விழுந்த படி –

அடியே போற்றும் பொருள் –
சூட வந்த பூவுக்கு விலையிடுவாரைப் போலே
உபாய உபேயங்கள் இரண்டும் தானே
ஸ்வீகார மாத்ரத்திலே நிற்கப் போகாமையாலே போற்றுகிற படி
ருசிக்கு அவ்வருகு பட்டால்
பலத்திலே மூளும் அத்தனை
கவிழ்ந்து நிற்கச் செய்தே விண்ணப்பம் செய்கிறது –

(பொன் அடியும் தானே தாமரை அடியும் தானே –
ஒன்றுக்கு ஓன்று ஒப்பு –
விலையும் அதுவே விலைக்கு கிடைக்கும் பொருளும் அவனே
நம்முடைய விதியின்மையால் -கருமுகை மாலையை சும்மாடு ஆக்குகிறோம்
ருசி ஜனக விபவ லாவண்யம் -பொற்றாமரை அடி
ருசி வளர்ந்து -கைங்கர்யத்தில் அந்வயம் ஆகுமே
உடையவர் -சரம காலத்தில் -ப்ராப்ய பாவத்தில் அநவரதம் கண் வைக்க வேண்டும்
போற்றுவதே பொருள் -உபாயமாக பாவனை தோன்றவே கவிழ்ந்து நின்று விண்ணப்பம்
தாமரை அடி பார்க்க கவிழ்ந்து -இடத்துக்குத் தக்க என்றும்
அவனைப் பார்க்க முடியாமல் கவிழ்ந்து என்றுமாம் -)

கேளாய்-
நாங்களும் முன்னே நிற்கில் வார்த்தை கேட்க ஒண்ணாதோ -என்கை –
(இவர்கள் அடியே போற்றா நிற்க தான் இவர்கள் காலைப் பிடிக்கக் கணிசியா நின்றான் என்கை
அவன் இவர்கள் திருவடிகளை பார்க்க –இது அன்றோ எழில் ஆலி என்னார் தாமே –
பஞ்ச லக்ஷம் பெண்களை கண்டு மயங்கி இருக்க தொடை தட்டி கேளாய் என்கிறார்கள் )

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
நீ யன்றோ முற்றீமை செய்தாய் –
என்றும் கேட்டே போகக் கடவதாய் இருக்கிற நீ வந்து –
இக்குலத்தே பிறந்து இட்டீடு கொண்டு எளியனானாய் -என்கை
நாங்கள் நீ இருந்த இடத்தே வந்து பிறந்தோமோ –
வசிஷ்டாதிகள் விலக்கும் இடத்தே வந்தோமோ –

(மூன்று தப்புக்கள் அவனுக்கு -1-அஹம் வோ பாந்தவோ ஜாதா –
2- உன் இடத்துக்கு நாங்கள் வரவில்லை
3-அயோத்தியை விட்டு துரத்தின வசிஷ்டாதிகள் இடம் வரவில்லையே
காடு பூ முடி சூடிற்று -அதே போல் மதுரையும் ஆனதே –தண்டகாரண்யமும் ப்ருந்தாவனமும் )

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
பெரும் பசியராய் இருப்பார் -சோற்றை வாங்கி எச்சில் படுத்திப்
பின்னை உண்ணாதே பொகட்டுப் போமா போலே
சப்தாதிகள் போக்யாதிகளாய் இருக்கிற எங்களை வடிவு அழகைக் காட்டி
உண்ணும் சோறு -முதலானவைகளை எல்லாம் நீ என்னப் பண்ணி
ஸ்வரூப அனுரூபமான அடிமை தாராதே இருக்கலாமோ -என்கை –
(ஐயப்பாடு அறுத்து -ஆதாரம் பெறுக வைத்து -உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் )

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் –
இவர்கள் நம்மை விடார்களே இனி -என்று
பறை எடுத்துக் கொடுக்க
ஒரு கையாலே கும்பிட்டு ஒரு கையாலே பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –
(தேஹி மே ததாதி தே -கூடாதே )

கோவிந்தா
பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஸ்ரோத்ரியராகப் போமோ
(யதார்த்த தாத்பர்யம் அறியாத -கோ வாக்கு பசு -அம்மா பசு மட்டுமே கேட்டு பழகினவனே தானே
யதா ஸ்ருதம் கிரஹணம் -பெருமாள் சீதாபிராட்டி -சகல அலங்கார சம்பன்னையாய் வர –
ஸ்நானம் ரோஷ ஜனகம் –
த்ரேதா யுகம் முதல் காத்து இருந்து பதிலுக்கு இங்கு -இவர்கள் )

ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
எற்றைக்கும்
ந காலஸ் தத்ரவை பிரபு-என்கிற பரமபதத்திலே யானாலும்
(காலம் பிரபு இல்லாத -காலமே நடையாடாத -அனவ்ரத நித்ய கிங்கரோ பவது -யாவதாத்மபாவி )

ஏழு ஏழு பிறவிக்கும்
இங்கே பிறந்தாலும் ஓக்கப் பிறக்க வேணும்
இளைய பெருமாள் காட்டிலும் படை வீட்டிலும் அடிமை செய்தால் போலே
தேவத்வே தேவ தே ஹேயம் -ஸ்ரீ விஷ்ணு புராணம் -இத்யாதிப் படியே யாக வேணும் -என்கிறார்கள்

உன் தன்னோடு-உற்றோமே யாவோம்
ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது
எல்லா உறவு முறையும் நீயே யாக வேணும் என்கை
மாதா பிதா ப்ராதா-ஸூ பால உபநிஷத் -இத்யாதியின் படியே
(எல்லா உறவின் காரியமும்-ஸகல கைங்கர்யமும் -பண்டை நாளில்
பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா யுறவின் காரியமும் -தண்டற நீ
செய்து அருள் என்றே இரந்த சீர் மாறன் தாளிணையே
உய் துணை என்று உள்ளமே ஓர் –திருவாய் மொழி –82- )

உனக்கே நாம் ஆட்செய்வோம்
உனக்கும் எங்களுக்கும் பொதுவான அடிமை அன்றிக்கே உனக்கே யாகக் கொள்ள வேணும்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போல் அன்று –
இளைய பெருமாளைப் போலே அடிமை செய்ய வேணும்

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-
பாவோ நான்யத்ர கச்சதி போலே பண்ண வேணும் –
(உகக்கும் நல்லவரோடும் -உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் –
ஸூவ போக்த்ருத்வம் தவிரும்படி அருள வேணும்
கைங்கர்யம் அவன் ஆனந்தத்துக்காகவே -படியாய்க் கிடந்தது உன் பவள வாய்க் காண்பேனே )

———————————–

உனக்கே நாம் ஆட்செய்வோம்–கைங்கர்யம் செய்யும் பொழுது ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்ந்து -ப்ரபல தர விரோதி -மற்றை நம் காமங்கள் மாற்று –
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள் வியக்க இன்புறுதும்
ப்ராப்தாவும் பிராபகமும் ப்ராப்திக்கு உகப்பானும் அவனே –
எனக்கும் பிறருக்கும் அல்ல எனக்கும் உனக்கும் அல்ல -உனக்கே –
மாம் -ஏகம் -என்னையே -ஸ்வீ காரத்தில் உபாய புத்தி தவிர்வது
இதே போல் ப்ராப்யத்தில் -அவன் ஆனந்தத்துக்காகவே -மேல் படி
போக்தாவாகவே இருக்க வேண்டும்
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ரங்கள் போக்யங்கள்
அஹம் அன்னம் நாமே போக்ய பதார்த்தம்
உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய் –

உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–ஸ்வீகாரம் செய்தல் -போற்றுதல் -அதுக்குப் பொருள் பிரயோஜனம் -மூன்று நிலைகள்
இங்கு தான் பறை -கைங்கர்யம் -23 பாசுரம் தொடங்கி -யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் பீடிகை வைத்து -விளக்கம்
ப்ராப்யத்தில் ஆறு பகுதிகள் இங்கு
சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து -த்வரை வெளியிட்டு அருளி
உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-உபாயத்தில் ப்ராப்யம் -ப்ராப்யத்தில் ப்ராபகம் கலக்கம் தொனிக்கும்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே-தடுத்தும் வளைத்தும்
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-ப்ராப்யாந்தர நிவ்ருத்தி தெரிவித்து
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்–கைங்கர்யத்தில் அளவிறந்த பாரிப்பு
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-ஸூவ ப்ரயோஜன நிவ்ருத்தி -ஸூவ போக்த்ருத்வ புத்தி தவிர்ந்து-களை அற்ற கைங்கர்யம்

————-

நாலாயிரப்படி-அவதாரிகை –

எம்மா வீட்டில் ப்ராப்யத்தை நிஷ்கர்ஷிக்கிறது –
திருவாய் மொழியிலே இப்பிரபந்தத்துக்கு வாசி –
முந்துற நெடுமாற்கு அடிமையை அர்த்தத்தை அனுபவித்துக் கொண்டு
அது நிலை நிற்கைக்காகவும்
அத்தைக் காத்தூட்டுகைக்காகவும்
பிற்பட எம்மா வீட்டில் அர்த்தத்தோடு தலைக் கட்டுகிறது-

(பகவத் விஷய கைங்கர்யம் எம்மா வீட்டில் 2-9
நெடுமாற்கு அடிமை -பாகவத கைங்கர்யம் -8-10-
பாகவத கைங்கரியமே வேண்டுவது -அத்தை நிலை நிற்க -காத்தூட்டவே -இங்கு அவன் இடம்
பாகவதர் குழாம் இழந்து -ஆடி ஆடி -நரசிங்கப்பெருமாள் இடம் பிரார்த்தித்தார் அன்றோ ஆழ்வார்)

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-

சிற்றம் சிறுகாலே
ப்ராஹ்மே முஹுர்த்தே ச உத்தாய சிந்தயேதாத்மநோ ஹிதம் என்றும்
காலை நல் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நன்நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே (திரு விருத்தம் )-என்றும் சொல்லுகிறபடியே இவர்கள் அனுஷ்டிக்கிறார்கள் –

காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – திரு விருத்த– -93 –

காலையாவது-
ஆத்மாவுக்கு வெளிச் செறிக்கும் காலம் -என்றுமாம்
இக்கண்ணுக்கு இவ்வாதித்யன் வெளிச் செறிப்பு பண்ணுமா போலே
அகவாயில் கண்ணுக்கும் வெளிச் செறிப்புப் பண்ணக் கடவ ஆதித்யன் ஸ்ரீ யபதி-
பாஸ்கரேண ப்ரபா யதா –
ஞானம் ஆகிறது
ஒண் தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -(முதல்திருவந்தாதி )என்கிறபடியே
ஸ்ரீ யபதியே தனக்கு விஷயமாக யுடைய ஞானம்
நல் ஞானம் ஆகிறது
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் -சஹா யாந்த்ர நிரபேஷமாக-அம் மிதுனமே நமக்குப் பலம் தரக் கடவது என்று அத்யவசாயம்-
துறை படிந்து ஆடுகை யாவது
குரு பரம்பரையில் சொல்லுகிற க்ரமத்தாலே எம்பெருமானைப் பற்றுகை –

பெயரும் கருங்கடல் நோக்கும் ஆறு ஒண் பூ
உயரும் கதிரவன் நோக்கும் -உயிரும்
தருமனையே நோக்கும் ஒண் தாமரையாள் கேள்வன்
ஒருவனையே நோக்கும் உணர்வு –(முதல்திருவந்தாதி-67-)

பகல் பரஹிம்ஸை பண்ணி இரவு எல்லாம் மறந்து கிடந்து உறங்கி விடிந்தால் பர ஹிம்ஸையிலே புகும்
நடுவே அல்பகாலம் சத்வம் தலை எடுத்து வெளிச் செறிப்புள்ள காலம்
மனஸ்ஸூ ஸ்திரமாம் காலம் –
முன்பு தான் தனக்குக் கடவனாய் இருக்கும் -பின்பு எம்பெருமானுக்கு பரமாய் இருக்கும் –
நடுவில் உணர்ச்சி இறே இக்காலம்

(பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் கனவில்
மிகக் கண்டேன் மீண்டவனை மெய்யே -மிகக் கண்டேன்
ஊன் திகழும் நேமி யொளி திகழும் சேவடியான்
வான் திகழும் சோதி வடிவு -81-)

மாறனேர் நம்பி சரம தசையில் கலக்கம் கண்டு பயப்பட்ட பெரிய நம்பிக்கு எம்பெருமானார் பயம் தீர
அருளிச் செய்த ஸ்லோகங்கள் இவை
ஸ்திதே மநசி -இத்யாதி -இவை எங்கனே என்னில் –
ஸ்ரீ வராஹ எம்பெருமான் ஸ்ரீ பூமிப் பிராட்டிக்கு அருளிச் செய்தார் என்றார்
ஸ்ரீ வராஹ எம்பெருமான் உம்மைப் போலே ஆஸ்ரித பஷபாதி –
அவன் வார்த்தை ஒழிய என் போல்வார் மத்தியஸ்தர் வார்த்தை யுண்டாகில் சொல்லும் என்ன
நமே பக்த ப்ரணஸ் யதி(ஸ்ரீ கீதை -9-31) -இத்யாதிகள் அடைய உம்மைப் போல்வார் வார்த்தையாய் இரா நின்றது என்ன
இந்த ஞானம் உடையவனுக்கு புநர் ஜென்மம் இல்லை என்னும் இடத்துக்கு பிரமாணம் உண்டோ என்ன
த்யக்த்வா தேகம் புநர் ஜென்ம நைதி மாமேதி ஸோர் ஜூந -என்று உண்டு என்று அருளிச் செய்தார்
இவற்றைக் கொண்டு பெரிய நம்பி ப்ரீதரானார் –

(ஸ்திதே மனஸி ஸூஸ் வதே சரீரே சதி யோ நர தாது சாம்யே ஸ்திதே ஸ்மர்த்தா
விஸ்வ ரூபஞ்ச மா மஜம் ததஸ்தம் ம்ரியமாணம் து காஷ்ட பாஷாண சந்நிபம்
அஹம் ஸ்மராமி மத்பக்தம் நயாமி பரமாம் கதி-தேசிகன் -ரஹஸ்ய சிகாமணி இதன் விளக்கம்)

(பெண் பித்தன் வராஹ நாயனார் -எக்குற்றம் இத்யாதி உம்மைப்போலே)

(க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா ஸஸ்வச் சாந்திம் நிகச்சதி.–
கௌந்தேய ப்ரதிஜாநீஹி ந மே பக்த ப்ரணஸ்யதி—৷৷9.31৷৷

என் விஷயமான ஸ்வயம் பிரயோஜன பக்தியைச் செய்பவன் துராசாரம் உள்ளவனாயினும் விரைவிலேயே
தடை நீங்கப் பெற்ற பக்தி யோகத்திலேயே ஈடுபட்ட நெஞ்சை உடையவன் ஆகிறான் –
நிலையான துராசார நிவ்ருத்தியை நன்கு அடைகிறான் –
குந்தீ புத்திரனே -என்னுடைய பக்தன் அழிய மாட்டான் என்னும் இந்த அர்த்தத்தை நீயே ப்ரதிஜ்ஜை செய்வாய் –)

அந்திம ஸ்ம்ருதி இல்லை என்று அஞ்ச வேண்டா –
புநர் ஜென்மம் உண்டு என்று அஞ்ச வேண்டா –இந்த ஞானம் உடையவனுக்கு-
ஆளவந்தார் கோஷ்டியிலே-சம்சாரிக்கு எம்பெருமான் சந்நிதியில் விண்ணப்பம் செய்ய அடுப்பது என் என்ன –
சில முதலிகள்
முடோயம் அல்ப மதி இத்யாதி -க்ஷத்ர பந்துவின் ஸ்லோகத்தை விண்ணப்பம் செய்கை அழகிது என்ன
ஆளவந்தார் -அதிலே பெரும் தேவை யுண்டு –
நமக்காவது ஸோஹம்தே-என்கிற காளியன் ஸ்லோகமே -என்று அருளிச் செய்தார்

(ப்ரணத -பதம் உண்டே அதில் -சரணாகதன் சொல்லவும் சக்தன் அல்லன்
அர்ச்சனை ஸ்தோத்ரம் பண்ண வராதே -தேவர் கிருபை மாத்திரமே
ஏழை ஏதலன் கீழ் மகன் என்னாது இருப்பார்க்கும் இரங்கும் அவன் அன்றோ)

பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் -என்னுடைய ஆதித்யன் உதித்தான் -அஸ்தமியாத ஆதித்யனையும் கண்டேன் –
உறங்காத என்னையும் கண்டேன்
முன்பு ஒரு போகியாக உறக்கம் -பின்பு ஒரு போகியாக உணர்ச்சி –
நடுவில் காலம் இறே சிற்றம் சிறு காலை யாவது
பெண்களாகையாலே சிற்றம் சிறு காலம் என்றபடி -வெட்ட வெடியலே என்னுமா போலே –
யோகிகளும் உணர்வதற்கு முன்னே சிறு பெண்களான நாங்கள் உறங்கக் கடவ போதிலே –
உணரக் கடவ – இத்தர்ம ஹானியைப் பாராய்
என்னில் முன்னம் பாரித்து -என்று நீ உணரும் காலத்திலே நாங்கள் உணர்ந்து வந்தோம் -என்கை –

(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-)

வந்து –
இரண்டு ஸ்வரூபத்தையும் அழித்தோம்-ஸ்வரூபம் நிலையிட்டவர்கள் இறே(நாராயணனே நமக்கே பறை தருவான் என்றார்களே )
பத்ப்யாம் அபிகமாச்சைவ ஸ்நேஹ சந்தர்ச நேந ச -என்று சொல்லுகையாலே
அவன் இருந்த இடத்தே நாலு அடி இட்டுச் செல்ல
இட்ட இட்ட பதம் தோறும் நெஞ்சு உளுக்கும்-பொறுக்க மாட்டான் -என்கை

வந்து உன்னைச் சேவித்து –
உன்னை (ப்ராப்யமாக )வேண்டாதே சாதன காலத்திலே ரசிக்கிற உன்னைச் சேவித்து
ஸூ ஸூகம் கர்த்தும் அவ்யயம் -அதுக்கு மேலே ஒரு அஞ்சலி உண்டு அறுக்க மாட்டாத உன்னைச் சேவித்து

(ராஜ வித்யா ராஜ குஹ்யம் பவித்ரம் இதம் உத்தமம்
ப்ரத்யக்ஷ அவாகமம் தர்ம்யம் ஸூஸூகம் கர்த்தும் அவ்யயம் –9-2-)

உன்னைச் சேவித்து –
அத்தலை இத்தலை யாயிற்று -ஸேவ்யரான நாங்கள் சேவகரான படி –
லோக நாதம் புரா பூத்வா -ஸூக்ரீவம் நாதம் இச்சதி -தாமே இறே காலம் பார்த்து இருப்பார் –
ஸ்ரீ விபீஷண ஆழ்வானை முடி சூட்டுக்கைக்காக லங்கைக்கு நடந்து காலம் பார்த்து இருந்தவன் அன்றோ –

உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்-
ஆற்றாமையும் ஸ்வரூபம் ஆகையாலே அடைவு கெட மேலே விழுந்த படி –

(பாவானத்வம் பொன்னடி போக்யத்வம் தாமரை அடி)

அடியே போற்றும் பொருள் –
சூட வந்த பூவுக்கு விலையிடுவாரைப் போலே -உனது பால் என்றுமாம்(அடி -ஸ்வாமி உன்னையே என்றவாறு )
உபாய உபேயங்கள் இரண்டும் தானே
ஸ்வீகார மாத்ரத்திலே நிற்கப் போகாமையாலே போற்றுகிற படி
ருசிக்கு அவ்வருகு பட்டால்
பலத்திலே மூளும் அத்தனை
கவிழ்ந்து நிற்கச் செய்தே விண்ணப்பம் செய்கிறது -(முகத்தின் அழகைப்பார்த்தால் கைங்கர்யத்துக்குப் போக ஓட்டாதே )

(வந்து உன்னைச் சேவித்து ஸ் வீகாரம் -மேல் உன் பொற்றாமரை அடியே போற்றி -அதுக்குப் பிரயோஜனம் பொருள் இவ்வாறு மூன்றும்)

கேளாய்-
இவர்கள் அடியே போற்றா நிற்க தான் இவர்கள் காலைப் பிடிக்கக் கணிசியா நின்றான் என்கை
நாங்களும் முன்னே நிற்கில் வார்த்தை கேட்க ஒண்ணாதோ -என்கை –

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ
கேட்கப் புகா நின்றதோ என்ன
நீ யன்றோ முற்றீமை செய்தாய் (வலி வழக்கு உறவு மூன்று தீமைகள் )-என்ன
எங்கனே -என்ன
என்றும் கேட்டே போகக் கடவதாய் இருக்கிற நீ –
வந்து –
இக்குலத்தே பிறந்து இட்டீடு கொண்டு எளியனானாய்-என்கை(ஆகதோ மதுராம் புரிம் )
நாங்கள் நீ இருந்த இடத்தே வந்து பிறந்தோமோ –
வசிஷ்டாதிகள் வில்க்கும் இடத்தே வந்தோமோ –

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
பெரும் பசியராய் இருப்பார் -உண்ணப் புக்கு கலத்திலே கேச லேஸம் கண்டால்
பின்னை உண்ணாதே பொகட்டுப் போமா போலே
சப்தாதிகள் போக்யாதிகளாய் இருக்கிற எங்களை வடிவு அழகைக் காட்டி
உண்ணும் சோறு -முதலானவைகளை எல்லாம் நீ என்னப் பண்ணி-
ஸ்வரூப அனுரூபமான அடிமை தாராதே போகைக்கு உன் தரமோ- என்கை
உண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-
நீர் விளாவி வைத்தோ போகப் பார்த்தது
நிவேத யத மாம் க்ஷிப்ரம் -(சீக்கிரம் போய் சொல்லுங்கோள் )
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத –

(எனக்கு ஆரா அமுதாய் எனதாவியை இன் உயிரை
மனக்காராமை மன்னி யுண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்
புனக் காயா நிறத்த புண்டரீகக் கண் செம் கனி வாய்
உனக்கு ஏற்கும் கோல மலர்ப் பாவைக்கு அன்பா ! என் அன்பேயோ ! –10-10-6)

எங்களை
வை தர்ம்யம் நேஹ வித்யதே(குருஷமோ மாம் அநு சரம் -ஏவிப்பணி கொள்ள வேண்டும் இதில் விதர்மம் இல்லை )

போகாது
உன் தரமோ நாங்கள் -நீ தான் உனக்கு உரியையோ
என்னை நெகிழக்கிலும் -இத்யாதி
நப்பின்னை பிராட்டி பரிகரம் –
ஆணை இட்டவர்கள் பெண் பிள்ளை அன்றோ –

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் –
இவர்கள் சொல்லிற்று கேட்டு -இவர்கள் நம்மை விடார்களாய் இருந்தார்கள் –
நம்மைத் தடுத்தும் வளைத்தும் கொள்வர்கள்-என்று –
பறையை எடுத்துக் கொள்ளுங்கோள்-என்ன
தேஹி மே ததாமி தே -என்று
ஒரு கையாலே கும்பிட்டு ஒரு கையாலே பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –

கோவிந்தா
யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் –
கெடுவாய் நாங்கள் இற்றைப் பறை கொள்வான் அன்று காண்-என்று பட்டர் அருளிச் செய்த வார்த்தை –
இடையனாகையாலே அபிதாந வ்ருத்தி போமித்தனை -தாத்பர்ய வ்ருத்தி போகாது என்கை
போகு நம்பி (6-2) என்று சொல்ல வர நிற்குமவன் அல்லையோ என்கை
பசுக்களின் பின்னே திரிவார்க்குப் பெண்கள் ஸ்ரோத்ரியராகப் போமோ(ஸ்தோத்ரியம் ப்ரஹ்ம நிஷ்டம் )

ஆனால் செய்ய வேண்டுவது என் என்ன
எற்றைக்கும்
ந காலஸ் தத்ரவை -என்கிற பரமபதத்திலே யானாலும்

(அங்கும் பர பக்தி பர ஞானம் பரம பக்தி நித்தியமாக வேண்டும் என்று கத்யத்தில் பிரார்த்தித்தார் -ஸ்வயம் பிரயோஜனம்)

ஏழு ஏழு பிறவிக்கும்
இங்கே பிறந்தாலும் ஓக்கப் பிறக்க வேணும்
கிருஷ்ணனும் பெண்களுமாய் புறப்படில் அமையும்
அவனும் எதிர் சூழல் என்று இவர்களைப் பெற வேணும் என்று முற்கோலிப் பிறவா நிற்கும் என்றுமாம்
இளைய பெருமாள் காட்டிலும் படை வீட்டிலும் அடிமை செய்தால் போலே
தேவத்வே தேவ தே ஹேயம் -மனுஷ்யத்வே ச மாநுஷீ (ஸ்ரீ விஷ்ணு புராணம் )-ஆக வேணும் என்கிறார்கள்-

உன் தன்னோடு-உற்றோமே யாவோம்
ஒரு உறவைக் குறித்து அதுவாக வேணும் என்னாது ஒழிந்தது எல்லா உறவு முறையும் நீயே யாக வேணும் என்கை
மாதா பிதா ப்ராதா-நிவாஸஸ் சரணம் ஸூஹ்ருத் கதிர் நாராயண -என்றும்
கிருஷ்ண ஆஸ்ரயா கிருஷ்ண பலா கிருஷ்ண நாதாஸ் ச பாண்டவா-என்றும்
சேலேய் கண்ணியரும்-இத்யாதிப் படியே –

உற்றோமே யாவோம்-
உதிரத் தெறிப்பு யுண்டாக வேணும் –
நாராயண ஸ்தவம் –
பக்தாநாத்ம சரீரவத் –
இளைய பெருமாள் வேலேற்ற போது நீ பட்டால் போலே உனக்கு ஓன்று வந்தால்
நாங்கள் முடியும் பிரக்ருதிகளாக வேணும்

உனக்கே நாம் ஆட்செய்வோம்
உனக்கும் எங்களுக்கும் பொதுவான அடிமை அன்றிக்கே உனக்கே யாகக் கொள்ள வேணும் –
எனக்கே ஆட்செய் என்னுமா போலே ஆள் செய்ய வேணும்
ஸ்ரீ பரத ஆழ்வானைப் போல் கிட என்ற இடத்திலே கிடக்குமவர்கள் அன்று —
இளைய பெருமாளைப் போலே -அஹம் சர்வம் கரிஷ்யாமி என்று
அடிமை செய்து உஜ்ஜீவிக்க வேணும் -என்கை –

(எனக்கே யாட்செய் எக்காலத்தும் என்று என்
மனக்கே வந்து இடைவீடின்றி மன்னி
தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே
எனக்கே கண்ணனை யான் கொள் சிறப்பே –2-9-4-)

மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-
கையும் திருவாழியுமாய் நாங்கள் தொழ-மேன்மை காட்டி இருக்க ஒண்ணாது –
நீ -பெண்காள்-என்ன -நாங்கள் -கிருஷ்ணனே -என்று ஊடினார் சிறு முற்றத்திலே உன்னை ஒரு பாச்சல் பாய வேணும்
பாவோ நான்யத்ர கச்சதி -என்றவனை இசைவித்தார் யுண்டோ
எங்கள் வாசனையாலும் உன் தோள் தடிப்பாலும் ஆக வேண்டா-
உன் தரம் ஆகாமல் இருக்கிற இருப்பைத் தவிர்க்க வேணும்

(விஷயாந்தர அனுபவம் -ப்ராப்யாந்தர நிவ்ருத்தி -ஸ்ரீ வைகுண்ட அனுபவமும் வேண்டாம் -உன் தரம் -போக்த்ருத்வம் தவிர்த்து அருள வேண்டும்)

—————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading