ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி -திரு நாராயண புரத்து ஆய் ஸ்வாமிகள் -என்னும் ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

பஞ்சுத்திருவடியால் நடக்க வைத்தோமோ -என்று பல்லாண்டு –
திருக்கால் ஆண்ட பல அபதானங்களை அனுசந்தித்து பொங்கும் பிரிவால் மங்களா சாசனம் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ –
பாரதந்த்ர நிஷ்டை -பரதாழ்வான் போல் –
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன்

ஈராயிரப்படி -அவதாரிகை –

நப்பின்னைப் பிராட்டியோடே கூடி திவ்ய ஸிம்ஹாஸனத்திலே இருந்த இருப்பிலே
சாத்தி அருளின அத்தவாளந்தலை மேலே பறக்க
திருவடிகளைக் கண்டு
அத்திருவடிகளைத் திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
உன் சேவடி செவ்வி திருக் காப்பு –
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறார்கள் –

(நப்பின்னை உடனே கூடியே -மிதுனத்தில் கைங்கர்யம்
திருக் கை பிடித்த திருக்கோலம் மதுராந்தகம் சேவை
ஷத்ரிய ஸிம்ஹம் -கோப்புடைய சீரிய ஸிம்ஹாசனம் )

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்-

பதவுரை

அன்று–(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் கலிவு பட்ட)
அன்று அக்காலத்தில்
இ உலகம்–இந்த லோகங்களை
அளந்தாய்–(இரண்டடியால்) அளந்தருளினவனே!
அடி-(உன்னுடைய அத்) திருவடிகள்
போற்றி–பல்லாண்டு பல்லாண்டு வாழ்க’
அங்கு–பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்
கன்று–கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,)
குணிலா–எறி தடியாக் (கொண்டு)
எறிந்தாய்–(கபித்தாஸுரன் மீது எறிந்தருளினவனே
கழல்–(உன்னுடைய) திருவடிகள் போற்றி!-’
குன்று–கோவர்த்தன கிரியை
குடையா–குடையாக
எடுத்தாய்–தூக்கினவனே;
குணம்–(உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள்
போற்றி!-’
வென்று–(பகைவரை) ஜபித்து
பகை–த்வேஷத்தை
சென்று–எழுந்தருளி
தென் இலங்கை-(அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை
செற்றாய்–அழித்தருளினவனே!
திறல்–(உன்னுடைய) மிடுக்கு
போற்றி-பல்லாண்டு வாழ்க’
சகடம் பொன்ற-சகடாஸுரன் முடியும்படி
உதைத்தாய்–(அச்சகடத்தை) உதைத் தருளினவனே!
புகழ்-(உன்னுடைய) கீர்த்தியானது போற்றி!-
கெடுக்கும்-அழிக்கின்ற
நின் கையில் வேல் போற்றி–உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’
என்று என்று–என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
உன் சேவகமே–உன்னுடைய வீர்யங்களையே
ஏத்தி–புகழ்ந்து கொண்டு
யாம்’–அடியோம்
இன்று–இப்போது
பறை கொள்வான் வந்தோம்–பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம்
இரங்கு–கிருபை பண்ணி யருள்’
ஏல் ஓர் எம் பாவாய்-.

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-ஏழு உலகங்களையும் இரண்டு அடிகளால் அளந்து அருளினவனே –
புஷ்ப்ப ஹாஸ திருவடிகளால் காடும் மோடும் அளந்த அசைவு-
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-க்ருத யுகத்தில் நின்ற இடத்தில் இருந்து அளந்தமை கீழ் –
த்ரேத யுகத்தில் நீண்ட பிரயாணம் இது –
அழகிய -தெற்கு இலங்கை –
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-த்வாபர யுகத்தில் -ஏழே திங்களில் -சகடம் அழியும் படி திருக்கல்லாண்டு ஆண்ட புகழ்
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி-இரண்டு அசுரர்கள் -விளாம்பழம் -கன்றுக்குட்டி ரூபங்களில் -சங்கீதம் செய்து வர –
குஞ்சித பாதம் -மடக்கிய திருவடி –குணில் -எறியும் தடி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி-அனுகூலரான இந்திரன் -ஏழு நாள்கள் கோவர்தனம் தாங்கி –
குடையாக கவிழ்த்து -பசி கோபத்தால் செய்தான் -ஊனைப் பறித்தோம் உயிரைப் பறிக்க வேணுமோ -அழிக்காத -குணம்
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி-கீழே சொன்ன ஆபதானங்களுக்கு திருஷ்ட்டி வராமல் இருக்க —
வேல் செய்த க்ருத்யங்கள் -இடம் மாற்றி அருளிச் செய்கிறார் –
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்-வீர்யங்களுக்கு போற்றி போற்றி என்று ஆறு -அறுசுவை உணவு
கைங்கர்யம் பெறுவதற்கு -இதுவே ப்ராப்யம்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்-இரக்கம் தான் உபாயம் –
இன்று யாம் வந்தோம்-ஆற்றாமையால் வந்தோம் -தூது மடல் அநுகாரம் போல் ப்ராப்யத்தில் அந்வயம் –
ஆத்ம ஸ்வரூப ஞானத்தால் வந்தோம்
இரங்கு -இரக்கமே உபாயம் –
என்று என்று ஏற்றி பறை கொள்வான் -பாடுவது ஆத்ம ஸ்வரூபம் -பறை தருவது அவன் ஸ்வரூபம் –

அங்கும் இங்கும் வானவர் தானவர் யாவரும்
எங்கும் இனையை என்று உன்னை அறியகிலா அலற்றி
அங்கம்சேரும் பூ மகள் மண் மகள் ஆய் மகளாய்
சங்கு சக்கரக் கை யவன் என்பர் சரணமே –மங்களாசானம் பண்ணாமல் ஸ்ரீயபதியை
சரணம் பற்றுகிறார்களே ரக்ஷணத்துக்கு உறுப்பாக –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-
இவ்வழகிய திருவடிகளைக் கொண்டே காடும் மலையும் அளந்து கொண்டது
மலர்மகள் பிடிக்கும் மெல்லடி -(9-2-10 )இறே

அடி போற்றி
உன் சேவடி செவ்வி திருக் காப்பு
(திருப்பல்லாண்டில் -திருவடிகளுக்கே பிரதம மங்களா சாசனம் –
அடி -2- பாசுரம் தொடங்கி பலகாலாலும் -இங்கும் -29-இறுதியிலும் )

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
அழகுக்கு இலக்காகாதவரை அன்புக்கு இலக்கு ஆக்கின படி
கீழ் நமுசி பிரக்ருதிகள் இறே இருந்தது -பிராட்டியைப் பிரித்த ராவணன் இருந்த இடத்தே நடந்து கொல்லுவதே-
புலி இருந்த தூற்றிலே சென்று கொல்லுமா போலே
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு (திருப்பல்லாண்டு-3 )-என்றவர் மகள் இறே

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
ஒருத்தரோடும் விசாரியாதே முடித்த படி
மாரீசனைப் போலே குற்றுயிராக்கி மேலே அனர்த்தத்தை விளைக்க வையாதே முடித்த படி
(பங்குனி ரோகிணி -பிறந்த ஏழு திங்களில் -மாச திரு நக்ஷத்ரம் -உதைத்ததும் மொத்தமாக முடித்த படி )

புகழ் போற்றி
ஸ்ரீ பிருந்தா வனத்தில் முளைத்த பூண்டு அகப்பட ராக்ஷஸராகை
(எழும் புல் பூண்டு எல்லாம் அசுராவேசம் அன்றோ இங்கு
செடி கொடிகள் ராமனை பிரிந்து அழும் -கண்டு அகால காலத்திலும் பூக்குமே அங்கு
மங்களா சாஸனம் காவல் -கதே ஜலம் சேது பந்தனம் )
தாய் ரஷிக்காத திசையிலும் திருவடி அவனை ரக்ஷித்ததே புகழ்

கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
சத்ருவை இட்டு சத்ருவை நிரசித்தால் அவர்கள் இருவரும் சங்கேதித்தால் என் செய்வோம்
தெய்வாதீனம் -எந்த தெய்வம் –
குணில் எறி கருவி -கன்று –

குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
கீழ் நாலும் வியக்த விரோதிகள்
இங்கு அனுகூலம் –
இந்திரனும் பகையானபடி
அனுகூலர் பிரதிகூலமானால் தலை அறுக்க ஒண்ணாதே
ஆன்ரு சம்சயத்தால் மலை எடுத்தது –
ஆந்ரு சம்சய குணத்துக்குப் பல்லாண்டு

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
ஒரு வியக்தியிலே எல்லா ஆபதானங்களையும் சொன்னால் த்ருஷ்ட்டி தோஷமாம் என்று
பிடித்த வேலுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்
சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே கூர் வேல் கொடும் தொழிலன் மகன் இறே –
பசுக்களின் பின் பேச திரியா நின்றால் ஸிம்ஹம் வாரா நின்றாலும்
வேலாலே குத்திப் பொகட்டுப் போம் அத்தனை

நின் கையில் வேல் போற்றி
வெறும் புறமே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்க அவ்வழகுக்கு மேல் வில்லைப் பிடித்த அழகு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

என்று என்றும்
பிரயோஜனம் பெறும் அளவும் சொல்லி -பின்னை
தேஹி மே ததாமி தே -என்னுமவர்கள் அன்று –
இது தானே பிரயோஜனமாய் இருக்கும்
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவர்கள் -அவன் பக்கலிலும் கொள்ளுவர்கள்
இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்
ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து –ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை
(பாடுவதே-என்றுய் என்று ஏத்துவதே பறை –ஏத்தி பாடி பறை கொள்ள மாட்டார்களே
கொடுத்துக் கொள்ளாதே -கொண்டத்துக்குக் கைக்கூலி கொடுத்து மேலும் கொடுப்பவர்கள் அன்றோ
எழுவார் விடை கொள்வார் ஈன் துழாயானை தொழுது வழு விலா அடிமை கொள்வார் -)

உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால்
சுவர் வழி எழுதிக் கொண்டேன் -என்னுமவர் மகள் இறே
(போகத்தில் வழுவாத விஷ்ணு சித்தன் மூலம் பெற்ற தனம் –
இவள் அதனாலே என்று என்று ஏத்துமவள் )

இன்று
இசைவு பிறந்த இன்று
நீ உறங்க நாங்கள் உறங்காதே இருந்த இன்று
வ்ருத்தைகள் உறங்க நாங்கள் வந்தோம்
நென்னேற்று வந்தோமோ –
ஊரார் இசைந்த இன்று வந்தோம் -என்றுமாம் –
(அன்று நான் பிறந்திலேன்-இசைவித்து உன் தாளிணைக் கீழ் இருத்தும் அம்மானே –
இனி நான் மறந்திலேன் )

யாம்
பந்துக்களாலே நெடும் காலம் நலிவு பட்ட நாங்கள்

யாம் வந்தோம்
நீ வர ப்ராப்தமாய் இருக்க எங்கள் ஆற்றாமையால் வந்தோம் என்றுமாம்

வந்தோம்
எங்கள் ஆற்றாமையால் வந்த இழவு எல்லாம் தீர வந்தோம்

இரங்கேலோ ரெம்பாவாய்-
எல்லாம் பட்டு வந்தாலும் அவன் இரங்கி அல்லது கார்யமாகாது
வ்யபிசாரம் இல்லாத உபாயம் இதுவே என்கை

இத்தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம்
அவனுக்கு என் வருகிறதோ என்று இரங்குகை இத்தலைக்கு ஸ்வரூபம் –

(இரக்கப்பட்டால் இழவு போகுமே -இரக்கமே -உபாயம் -இனிமை உபேயம் -இசைவே வேண்டுவது )

———————————-

(பஞ்சுத் திருவடியால் நடக்க வைத்தோமோ -என்று பல்லாண்டு –
திருக்கால் ஆண்ட பல அபதானங்களை அனுசந்தித்து பொங்கும் பிரிவால் மங்களா சாசனம் –
பெரியாழ்வார் பெண் பிள்ளை அன்றோ –
பாரதந்த்ர நிஷ்டை -பரதாழ்வான் போல் –
அன்று நான் பிறந்திலேன் -பிறந்த பின் மறந்திலேன்-விஞ்சி நிற்கும் தன்மையாள் -அன்றோ இவள்
ஒரே பாசுரத்தால் ஆறு முறை பல்லாண்டு -ஷட் ரஸம் -ஆத்ம லாபத்துக்கு –
தேனும் பாலும் கன்னலும் அமுதமும் ஓத்தே எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம் –
அன்று -முன் காலம் -ஆங்கு முன் தேசம் -இழந்தே போனோம் –
இரக்கமே உபாயம் -இனிமையே புருஷார்த்தம் ப்ராப்யம் –இச்சையே அதிகாரம்
மூன்று அவதாரங்கள் – அன்று -அக்காலம் பல்லாண்டு பாடாத குறைக்கு இன்று பாடுகிறம்
நாம் நமக்கே பிறர் நன் பொருளை அபஹரித்த அன்று-
மூன்று வாங்கி இரண்டை மட்டும் உபயோகத்து -ஒன்றை மிச்சம் -வைத்தான்
மகா பலி கொடுத்தது இரண்டே அடிக்கு கண்டது -இவள் மூன்று தடவை உலகு அளந்த வ்ருத்தாந்தம் –
இருந்த இடத்தில் இருந்தே அளந்து -அடி போற்றி–நடந்து போன பெருமாள் -திறல் போற்றி-
பிறந்து ஏழே மாதத்தில் பால் வரவு தாமதம் திருக் கால் உதைக்க சகடாசுரனை புகழ் போற்றி- -கழல் போற்றி- குணம் போற்றி இவனுக்கு)

நாலாயிரப்படி-அவதாரிகை –

அவனைக் காணும் அளவு தானே அது வேண்டும் இது வேண்டும் என்பது
கண்ட பின்பு பரிவதே இவர்கள் கர்தவ்

நப்பின்னைப் பிராட்டியோடே கூடி திவ்ய ஸிம்ஹாஸனத்திலே இருந்த இருப்பிலே
சாத்தி அருளின அத்தவாளந்தலை மேலே பறக்க-சடகோபனைக் கோத்துக் கொண்டு -(சமாக்ய பத்ததியில் சடகோபர் ஸ்ரீ பாதுகா தேவி )
(திருவடிகளைக் கொண்டு) அத் திருவடிகளைத் திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
உன் சேவடி செவ்வி திருக் காப்பு –
நின் வல மார்பினில் வாழ்கின்ற மங்கையும் பல்லாண்டு -என்கிறார்கள் -(நப்பின்னை கூட வருகிறாள் அன்றோ இங்கும் )

இங்கனே போர வேணும் என்ன நடந்த திருவடிகளுக்குப் பல்லாண்டு-மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் என்றுமாம்

(நடக்க பிரார்த்தனை கீழ் – இதில் போற்றி -நடுவில் நடந்த வ்ருத்தாந்தம் ஆச்சார்யர்கள் காட்ட நாம் அனுபவிக்கிறோம்)

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்-

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-
இவ் வழகிய திருவடிகளைக் கொண்டே காடும் மலையும் அளந்து கொண்டது

பிராட்டிமார்களும் பூ தொடுமாறு போல் கூசிப் பிடிக்கும் படி இருக்கும் திருவடிகளைக் கொண்டு
கூச அறியாத -இவ் உலகம் -காடும் மேடும் மலையும் அளந்து கொண்டது
மலர்மகள் பிடிக்கும் மெல்லடி (9-2-10)இறே

(வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–ஈஸ்வரோஹம் -இதுவே வன்மை )

(கொடு வினைப் படைகள் வல்லையாய் அமரர்க்கிடர் கெட வசுரர்கட்கிடர் செய்
கடு வினை நஞ்சே என்னுடை யமுதே கலி வயல் திருப் புளிங்குடியாய்
வடி விணை யில்லா மலர்மகள் மற்றை நிலமகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ யொருநாள் கூவுதல் வருதல் செய்யாயே–9-2-10-)

அடி போற்றி
உன் சேவடி செவ்வி திருக் காப்பு

(திருப்பல்லாண்டில் -திருவடிகளுக்கே பிரதம மங்களா சாசனம் –
அடி -2- பாசுரம் தொடங்கி பலகாலாலும் -இங்கும் -29-இறுதியிலும் )

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
அழகுக்கு இலக்காகாதவரை அன்புக்கு இலக்கு ஆக்கின படி
கீழ் நமுசி பிரக்ருதிகள் இறே இருந்தது -பிராட்டியைப் பிரித்த ராவணன் இருந்த இடத்தே நடந்து கொல்லுவதே-

கொடுமையில் கடு விசை அரக்கன் –
கால் நடை நடப்பித்த கைகேயியை நோக்கினார்கள்
புலி இருந்த தூற்றிலே சென்று கொல்லுமா போலே
தென்னிலங்கை யரண் சிதறி அவுணன் மாளச் சென்று-திருநெடும் தாண்டகம் -28-
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்குப் பல்லாண்டு -என்றவர் மகள் இறே

சென்று
வழிப் போக்கில் கர கபந்தம் விராதன் அடைய மணல் கொட்டகம் இடருமா போல் இடறிக்கொண்டு போய்
தேர் ஒழிந்து மா ஒழிந்து களிறு ஒழிந்து –
ராவணனை கால் நடையாக நின்று பொருவதே

திறல் போற்றி
என்ன குடிப்பிறப்பு -மங்களா ஸாஸன -பொங்கும் பரிவு -நித்யம் -காதாசித்கம் அல்லவே
இன்றும் அரையர் கைத் தலச் சேவை நித்யம் பல்லாண்டு
அஸ்தானே பய சங்கை -பய நிவர்த்தகங்களுக்கு பயப்படுகை –
மதிளுக்கு மதிள் இடுகிறார்கள்
திறல் -இதுக்கும் போற்றி –

ஐந்து குடிக்கு ஒரு சந்ததி அன்றோ
இலங்கை ஆள் பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு என்றவர் மக்கள் இறே-தென் இலங்கை -ஆரியர் இகழ்ந்த தேசம்

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
ஒருத்தரோடும் விசாரியாதே முடித்த படி-ராவணனைப் போல் -நினையாமல்
அங்கு பருவம் மிக்கு -38 திரு நக்ஷத்ரம் லீலா ரசம் -விளையாட்டாக
இங்கு கண்ணன் விளையாட -சண்டையாகி விட்டது –
லீலையில் நுழையும் பருவம் அன்றே
மாரீசனைப் போலே குற்றுயிராக்கி மேலே அனர்த்தத்தை விளைக்க வையாதே முடித்த படி

(பங்குனி ரோகிணி -பிறந்த ஏழு திங்களில் -மாச திரு நக்ஷத்ரம் -உதைத்ததும் மொத்தமாக முடித்த படி )

புகழ் போற்றி(தாய் ரஷிக்காத திசையிலும் திருவடி அவனை ரக்ஷித்ததே புகழ்)
ஸ்ரீ பிருந்தா வனத்தில் முளைத்த பூண்டு அகப்பட ராக்ஷஸராகை

(எழும் புல் பூண்டு எல்லாம் அசுராவேசம் அன்றோ இங்கு
செடி கொடிகள் ராமனை பிரிந்து அழும் -கண்டு அகால காலத்திலும் பூக்குமே அங்கு
மங்களா சாஸனம் காவல் -கதே ஜலம் சேது பந்தனம் )

புகழ் போற்றி
ராமாவதாரத்தில் பிதா தசரதன் -சம்பராந்தகன் -அயோத்தி ஊர்-அபராஜிதா வெல்ல முடியாதது – -தம்பிமார் கல் மதிள்
மந்திரவாதிகள் வசிஷ்டாதிகள் -அஷ்ட மந்திரவாதிகள்- த்ரஷ்டா ரிஷி -கண்டு கொண்டு கொடுத்தவர்கள்
சுமந்த்ராதிகள் மந்திரிகள் -நாடு அடைய காவல் -இச்சா மஹா என்னும் படி கிழவன் ஓடு -குணம் உடையவன் அஞ்ச வேண்டாம்
இங்கு -மாதா பிதாக்கள் இடையர்கள் -சாது -இடைச்சேரி ஊர் -புத்தி சொல்லும் மந்திரிகளும் இடையர் -சம்சாரிகள்
கறவை மாடு வழி காட்டப் போகுமவர்கள் –
கம்சாதிகள் எதிரிகள் -பிருந்தாவனத்தில் எழுந்த பூண்டுகள் அனைத்தும் அஸூரா வேஷ ராக்ஷசர்கள்
நம்பி மூத்த பிரான் -தமையன் தீர்த்த யாத்திரை போனார்
ஒரு க்ஷணம் கூட இல்லா அன்று பாம்பின் வாயில் விழுவான் -காளிய -வாயில் விழும் தீம்பால்
பூதநாதிகள் -வந்த அபாயம் இருக்க மங்களா சாசனம் ஒன்றே காவல்
தாயும் உதவாத தசையில் திருவடி உதவினதே புகழ் ஆவது

செய்ய பாதம் ஒன்றால் செய்த நின் சிறுச் சேவகமும் -பிறந்தவாறும் பதிகம்
காலை நிமிர்த்த கன்னிப்போர் என்பதால் பல்லாண்டு பாடுகிறார்-கன்னி சேஷ்டித்ததுக்கு பல்லாண்டு பாடுகிறார்கள் –

பெய்யும் பூங்குழல் பேய்முலை யுண்டபிள்ளைத் தேற்றமும் பேர்ந்தொர் சாடிறச்
செய்ய பாதமொன்றால் செய்த நின்சிறுச் சேவகமும்
நெய்யுண் வார்த்தையுள் அன்னை கோல்கொள நீயுன் தாமரைக் கண்கள் நீர்மல்கப்
பையவே நிலையும்வந்து என்நெஞ்சை உருக்குங்களே.–5-10-3-

கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
சத்ருவை இட்டு சத்ருவை நிரசித்தால் அவர்கள் இருவரும் சங்கேதித்தால் என் செய்வோம்
தெய்வாதீனம் -எந்த தெய்வம் –

அடி போற்றி -கீழ்-மேல் உள்ள கறுத்த கழல் போற்றி -குஞ்சித பாதம் -உள் சிவந்த திருவடி
குணிலா –எறி தடி

குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
கீழ் நாலும் வியக்த விரோதிகள்-(இந்திரனுக்கு விரோதிகள்-மகாபலி இடம் மீட்டதும் ராவணன் இந்திரஜித் அழித்ததும் )
இங்கு அனுகூலம் –
இப்போது இந்திரனும் பகையானபடி
அனுகூலர் பிரதிகூலமானால் தலை அறுக்க ஒண்ணாதே
ஆன்ரு சம்சயத்தால் மலை எடுத்தது –
ஆந்ரு சம்சய குணத்துக்குப் பல்லாண்டு

பெரும் பசியால் அவனை நலிந்தோம்- கை நொந்து போகும் வரையில் வர்ஷிக்கிறான் –
ஆன்ரு சம்சய குணத்துக்கு மங்களா ஸாஸனம்
சபலைக் குழந்தை தன்னைக் கிள்ளப் புக்கால்-கை நொந்தால் விடும் என்று உடம்பைக் கொடுத்து இருக்கும் தாய் போல்

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
ஒரு வியக்தியிலே எல்லா அபதானங்களையும் சொன்னால் த்ருஷ்ட்டி தோஷமாம் என்று
பிடித்த வேலுக்கு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள்
சக்ரவர்த்தி வில் பிடிக்க பிள்ளைகள் வில் பிடித்தால் போலே கூர் வேல் கொடும் தொழிலன் மகன் இறே –
பசுக்களின் பின் பேச திரியா நின்றால் ஸிம்ஹம் வாரா நின்றாலும் வேலாலே குத்திப் பொகட்டுப் போம் அத்தனை

(வேள் முதலா வென்றானூர் -திரு நெடும் தாண்டகம்)

நின் கையில் வேல் போற்றி
வெறும் புறமே ஆலத்தி வழிக்க வேண்டியிருக்க அவ்வழகுக்கு மேல் வில்லைப் பிடித்த அழகு
வடிவார் சோதி வலத்துறையும் சுடராழியும் பல்லாண்டு

என்று என்றும்
பிரயோஜனம் பெறும் அளவும் சொல்லி -பின்னை
தேஹி மே ததாமி தே -என்னுமவர்கள் அன்று -இது தானே பிரயோஜனமாய் இருக்கும்
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவர்கள் -அவன் பக்கலிலும் கொள்ளுவர்கள்
இவள் புறம்பும் கொள்ளாள்-இவன் பக்கலிலும் கொள்ளாள்
ஓன்று நூறு ஆயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் —
ஆந்தனையும் கை காட்டி புறம்புத்தைக்கும் தானே கொடுக்கும் அத்தனை-
(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டுபவர்கள் அன்றோ )

(அம்பரீஷன் இடம் பெருமாளே இந்திர வேஷம் கொண்டு வந்த வ்ருத்தாந்தம்)

உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் என்னுடைய நெஞ்சகம் பால் சுவர்
வழி எழுதிக் கொண்டேன் -என்னுமவர் மகள் இறே(போகத்தில் வழுவாத புதுவையர் கோன் )

இன்று
இசைவு பிறந்த இன்று
நீ உறங்க நாங்கள் உறங்காதே இருந்த இன்று
வ்ருத்தைகள் உறங்க நாங்கள் வந்தோம்
நென்னேற்று வந்தோமோ -ஊரார் இசைந்த இன்று வந்தோம் -என்றுமாம் –

யாம்
பந்துக்களாலே நெடும் காலம் நலிவு பட்ட நாங்கள்

யாம் வந்தோம்
நீ வர ப்ராப்தமாய் இருக்க எங்கள் ஆற்றாமையால் வந்தோம் என்றுமாம்

வந்தோம்
எங்கள் ஆற்றாமையால் வந்த இழவு எல்லாம் தீர வந்தோம்

இரங்கேலோ ரெம்பாவாய்-
எல்லாம் பட்டு வந்தாலும் அவன் இரங்கி அல்லது கார்யமாகாது
வ்யபிசாரம் இல்லாத உபாயம் இதுவே என்கை

இத் தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம்
அவனுக்கு என் வருகிறதோ என்று இரங்குகை இத் தலைக்கு ஸ்வரூபம் –

———————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading