ஸூம்ய ஜமாத்ரு யோகீந்த்ர பாத ரேகாமயம் சதா
ததாயத் தாத்ம சத்தாதிம் ராமானுஜ முனிம் பஜே —
———
ஸ்ரீ திருப்பாவை முதலிட்டு ஐஞ்சு பாட்டுக்களாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –
—————
மேல் பத்து பட்டாலும்
பிரபத் தவ்யனுடைய திருநாம சங்கீர்த்தனம் ப்ரபன்னனுக்கு கால ஷேபம் ஆகையால்
அந்த சங்கீர்த்தனத்துக்கு அதிகாரிகள் ஆனவர்களை எழுப்பிக் கூட்டிக் கொள்ளும் படியை சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
(பெரியாழ்வார் ஐஸ்வர்யார்த்தி கைவல்யார்த்திகளையும் கூட்டிக் கொண்டு மங்களா சாசனம் பண்ணினார் அன்றோ)
முதல் பாட்டாலே
பரிசுத்தரராய் வ்ருத்ய அப்யாஸத்தை யுடையவர்கள் உடைய சத்வ பிரமாணத்தை முன்னிட்டு –
சத்வ குண நிஷ்டரை சாத்விக சமாசார நிதர்சன பூர்வக
பகவன் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –
(பரிசுத்தரராய் —வெள்ளை விளி சங்கின்
வ்ருத்ய அப்யாஸத்தை யுடையவர்கள் உடைய சத்வ பிரமாணத்தை முன்னிட்டு –சிலம்பின-பேரரவம்
சத்வ குண நிஷ்டரை சாத்விக சமாசார நிதர்சன பூர்வக பகவன் நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –உள்ளத்துக் கொண்டு முனிவர்களும்
யோகிகளும் மெள்ள எழுந்து அரி என்ற பேரரவம்-அனுஷ்டானம் பார்த்து நாம் பின்பற்ற வேண்டுமே)
———–
இரண்டாம் பாட்டில் –
பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை
விவேகித்து தரிப்பார் படியைக் காட்டி சத்வ பிரதானரை விரோதி நிரசன சமர்த்தனுடைய
திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –
(பகவத் அபிமத க்ரியா கலாபங்களாலே பகவத் போக்யமான வஸ்துவை
விவேகித்து தரிப்பார் -வெண்ணெயை எடுத்து -தேகத்தில் இருந்து ஆத்மாவைப் பிரித்து -இதுவே அவனுக்கு கௌஸ்துபம் ஸ்தானம்
படியைக் காட்டி சத்வ பிரதானரை -நாயகப் பெண் பிள்ளாய்
விரோதி நிரசன சமர்த்தனுடைய
திரு நாம சங்கீர்த்தனத்திலே ஸமாஹிதர் ஆக்கும் படி சொல்கிறது –கேசவனைப் பாடவும் கேட்டே கிடத்தியோ
தேசமுடையாய் திறவேலோ ரெம்பாவாய்)
————
மூன்றாம் பாட்டில் –
சங்கீர்த்தனத்துக்கு அடுத்த (பொருத்தமான)சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு சத்துக்களால் குதூகலிக்கப் படும் விஷயரானவர்களை
சகல விரோதி நிவாரகனுடைய சங்கீர்த்தனத்திலே சங்கதராக்கி ஸமாஹிதர் ஆகும் படி சொல்கிறது
(சங்கீர்த்தனத்துக்கு அடுத்த (பொருத்தமான)சத்வ உத்தர காலத்தை முன்னிட்டு -கீழ்வானம் வெள்ளென்று
சத்துக்களால் குதூகலிக்கப் படும் விஷயரானவர்களை-கோதுகலமுடைய பாவாய்
சகல விரோதி நிவாரகனுடைய சங்கீர்த்தனத்திலே -மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய தேவாதி தேவனை
சங்கதராக்கி ஸமாஹிதர் ஆகும் படி சொல்கிறது -சென்று நாம் சேவித்தால்)
———-
நாலாம் பாட்டில்
ஞான தீப பிரகாசராய் அத்தாலே உத்துங்கமான பதத்தில் இருக்கும்படியான சம்பந்தம் உடையவர்களையும்
அவனுடைய சர்வ நாம சங்கீர்த்தனத்திலே சங்கதரானார் படி சம்பவித்தானாம் பண்ணும் படி சொல்கிறது
ஞான தீப பிரகாசராய் -தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய
அத்தாலே உத்துங்கமான பதத்தில் இருக்கும்படியான சம்பந்தம் உடையவர்களையும்-மாமான் மகளே
அவனுடைய சர்வ நாம சங்கீர்த்தனத்திலே -மா மாயன் மாதவன் வைகுந்தன் என்று என்றே
சங்கதரானார் படி சம்பவித்தானாம் பண்ணும் படி சொல்கிறது
———-
அஞ்சாம் பாட்டில்
பகவத் குண வித்தரான பாசுரம் கேட்க்கையிலே அபேக்ஷிக்கும் படி சொல்கிறது –
மாற்றமும் தாராரோ
——–
ஆறாம் பாட்டில் –
அபிஜாதமும் ஆஹ்வாத கரமுமான திரு நாம சங்கீர்த்தனத்திலே அந்வயிக்கும் படி சொல்கிறது –
வெளி வெப்பம் முகிலால் – தாபத்த்ரயம்–முகில் வண்ணன் -திரு நாம சங்கீர்த்தனம் -முகில் வண்ணன் பேர் பாட
—–
ஏழாம் பாட்டில் –
பகவத் ப்ரத்யாஸன்னரோடு ஆசத்தி யுடையாரையும் மநோ ராபிமான திரு நாம சங்கீர்த்தனத்திலே
சமர்த்தராய் ததுக்கி பரராம் படி சொல்லுகிறது
நற் செல்வன் தங்காய் –மனத்துக்கு இனியானைப் பாட —
——–
எட்டாம் பாட்டில்
பகவத் குண ஞான நிஷ்டரையும் இதிஹாச யுக்தமான குண நாம சங்கீர்த்தனத்திலே
பிரவணர் ஆக்கும் படி சொல்லுகிறது –
போதரிக் கண்ணினாய்
புள்ளின் வாய் கீண்டானை -பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானைப்பாட =இதிஹாஸ புராணப்படி திருநாம சங்கீர்த்தனம்
குள்ளக் குளிர்ந்து -ராமாயணம் ஸ்ரீ மத் பாகவத அனுபவம்
————-
ஒன்பதாம் பாட்டில் –
ஸுகந்திய சாரஸ்ய யுக்தர் விகாசத்தையும் சத்வ உத்ரிக்த்தர் சமாராதன சம்விதான தத் பரர் ஆகிற படியையும் காட்டி
பரிபூர்ண ஞானரையும் புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன தத் பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும் படி சொல்லுகிறது –
ஸுகந்திய சாரஸ்ய யுக்தர் விகாசத்தையும் -செங்கழுநீர் வாய் நெகிழ்ந்து
சத்வ உத்ரிக்த்தர் -வெண் பல் தவத்தர்
சமாராதன சம்விதான தத் பரர் ஆகிற படியையும் காட்டி-தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
பரிபூர்ண ஞானரையும் -நங்காய்
புண்டரீகாக்ஷ நாம சங்கீர்த்தன தத் பரராக்கிச் சேர்த்துக் கொள்ளும் படி சொல்லுகிறது –சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோ ரெம்பாவாய்
———–
பத்தாம் பாட்டில் –
வாக் பணிதி யுடையாராயும் ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகமான சர்வேஸ்வர திரு நாம சங்கீர்த்தனத்திலே
சஹகாரிகள் ஆக்கிக் கொண்ட படியைச் சொல்லுகிறது –
வாக் பணிதி யுடையாராயும் -எல்லே இளங்கிளியே
ஸமஸ்த பிரதிபந்தக நிவர்த்தகமான -வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க வல்லானை
சர்வேஸ்வர திரு நாம சங்கீர்த்தனத்திலே-மாயனைப் பாடேலோ ரெம்பாவாய்
————–
ஏவம் வித திரு நாம சங்கீர்த்தனத்தாலே அவனுக்கு அறுதியாகையும் –
அவனையும் எழுப்பி ஸ்வ அபேக்ஷிதங்களையும் விண்ணப்பம் செய்து
அடிமை செய்யும் படியையும் -அவன் அடிமை கொள்ளும் படியையும் அவனுக்கு அறிவித்து
தலைக் கட்டுகிறது-மற்று எல்லா பாசுரங்களாலும் –(16-29)
ஸ்வ அபேக்ஷிதங்களையும் விண்ணப்பம் செய்து-கடாக்ஷம் நடை அழகு பிரார்த்தித்து பல்லாண்டு பாடி
அடிமை செய்யும் படியையும் -உன் தன்னோடு உற்றோமே ஆவோம்
அவன் அடிமை கொள்ளும் படியையும் -நாங்கள் கொள்வான் அன்று-நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது
அவனுக்கு அறிவித்துதலைக் கட்டுகிறது-மற்று எல்லா பாசுரங்களாலும் –மற்றவை அப்ராதான்யம் -இந்த பத்து பாடல்களே ப்ராதான்யம் என்கிறார்
———–
திருப்பாவை அடியிட்ட அஞ்சு பட்டாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமமும்-
பிரபத்தவ்யன் அதி ஸூலபனாமாம் படிக்கு அடியான –
அவனுடைய அவதாரத்தின் அடிப்பாடும் சொல்லுகிறது –
திருப்பாவை அடியிட்ட அஞ்சு பட்டாலும் –
பிரபன்ன நிஷ்டா க்ரமமும்-நாராயணனே தருவான் பறை தருவான்
பிரபத்தவ்யன் அதி ஸூலபனாமாம் படிக்கு அடியான –அவதார ஸ்கந்தம் வ்யூஹம்
அவனுடைய அவதாரத்தின் அடிப்பாடும் சொல்லுகிறது –
————
அஸ்மத் குருப்யோ நம:
எனக்கு பஞ்சஸம்ஸ்காரங்களைச் செய்து வைஷ்ணவனாக்கிய எனது ஆசார்யனை வணங்குகிறேன்
அஸ்மத் பரமகுருப்யோ நம:
எனது ஆச்சார்யனின் ஆசார்யனையும் அவர் சமகாலத்து ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
அஸ்மத் ஸர்வ குருப்யோ நம:
எனது எல்லா ஆச்சார்யர்களையும் வணங்குகிறேன்
ஸ்ரீமதே ராமாநுஜாய நம:
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயையும் திருவரங்கச் செல்வத்தையுமுடைய எம்பெருமானாரை வணங்குகிறேன்
ஸ்ரீ பராங்குச தாஸாய நம:
ஆச்சார்ய அபிமானம் ஆகிற செல்வமுடைய பெரியநம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீமத் யாமுந முநயே நம:
வேதாந்த சித்தாந்தமாகிற செல்வமுடைய ஆளவந்தாரை வணங்குகிறேன்
ஸ்ரீ ராமமிஸ்ராய நம:
ஆச்சார்ய கைங்கர்யம் ஆகிற செல்வரான மணக்கால் நம்பியை வணங்குகிறேன்
ஸ்ரீ புண்டரீகாக்ஷாய நம:
ஆச்சார்ய அனுக்ரஹம் ஆகிற செல்வமுடைய உய்யக்கொண்டாரை வணங்குகிறேன்
ஸ்ரீமந் நாதமுநயே நம:
ஸ்ரீவைஷ்ணவ குலபதியும், ப்ரபந்ந குலத்துக்கு முதல்வரும், பரமாச்சார்யரான நம்மாழ்வாரிடம்
அருளிச் செயல் செல்வம் பெற்றவரான ஸ்ரீமந் நாதமுநிகளை வணங்குகிறேன்
ஸ்ரீமதே சடகோபாய நம:
மயர்வற மதிநலம் அருளப்பெற்ற ஸ்ரீவைஷ்ணவஸ்ரீயை உடையவரான நம்மாழ்வாரை வணங்குகிறேன்
ஸ்ரீமதே விஷ்வக்ஸேநாய நம:
பெரிய பிராட்டியாரிடம் ரஹஸ்யத்ரய உபதேசம் பெற்ற மிக்க செல்வரான சேனை முதலியாரை(முதல்வர்) வணங்குகிறேன்
ஸ்ரீயை நம:
தேவதேவ திவ்ய மஹிஷியாய் எம்பெருமானுக்கு வல்லபையாய் புருஷகாரம் மிக்க செல்வமுடையவளை வணங்குகிறேன்
ஸ்ரீதராய நம:
திருவுக்கும் திருவாகிய செல்வனான எம்பெருமானை வணங்குகிறேன்.
வாக்ய குரு பரம்பரையில் முதல் மூன்று வாக்யங்கள் வேத வாக்யங்கள்
மற்றவை ஸ்ரீ கூரத்தாழ்வான் அருளிச் செய்தது ஆகும்
—————
மேலிட்டுப் பத்துப் பாட்டும் ப்ரபத்திக்கும் பூர்வ பாவியான
வாக்ய குரு பரம்பரையினுடைய க்ரமம் சொல்லி
பகவத் விஷயத்தில் உத்யுக்தரானவர்களோடு (பிள்ளாய்)போர அவகாஹித்தரோடு (இளங்கிளியே)வாசி அற
உத்தேச்யர் என்னும் இடம் சொல்லுகிறது –
அது எங்கனே என்னில் –
பிள்ளாய் எழுந்திராய் -என்கையாலே
அபி நவமாக மூட்டும் அஸ்மத் குருப்யோ நம -என்னும் படி சொல்லுகிறது –
அனந்தரம் -நாயகப் பெண் பிள்ளாய் -என்கையாலே
ஸ்வ ஆச்சார்யனுக்கும் கௌரவன் ஆகையால் அஸ்மத் பரம குருப்யோ -என்னும் படியைச் சொல்லுகிறது –
கோதுகலமுடைய பாவாய் -என்று
சர்வராலும் கொண்டாடும்படியாய் இருக்கையாலே -அஸ்மத் சர்வ குருப்யோ என்கிற அர்த்தத்தைச் சொல்லுகிறது –
மாமான் மகளே-என்கையாலே
ஓளி புதுவை நகர் வாழும் பேர்கள் தாயான ஆண்டாளுக்கு அண்ணரான
ஸ்ரீ மத் ராமாநுஜாயா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
இதுவும் ஆழ்வான் அளவும் அனுசந்தேயம் –
(பெரிய திருமலை நம்பி உடையவருக்கு மாதுலர் மாமான் -நமக்கு உடையவரே மாதுலர் மாமான்)
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் என்கையாலே
சித்த உபாயத்தாலே ப்ராப்ய வைலஷ்ண்ய ஞானத்தை யுடையராய் –
அத்தாலே உடையவருக்கும் கௌரவராய் இருக்கும் ஸ்ரீ பராங்குச தாசாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –(பெரிய நம்பிகள் )
கமலாபதி கல்யாண குணாம்ருத நிஷேவயா
பூர்ண காமாய ஸததம் பூர்ணாய மஹதே நம:-பெரிய நம்பிகள் தனியன்
கோவலர் தம் பொற் கொடி -என்கையாலே –
ஸ்ரீ கிருஷ்ண ப்ரீதி உக்தரான -ஸ்ரீ நாதமுனி வம்ச உக்தராய் –
ஸ்ரீ மத் யாமுன முனயே நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
நற் செல்வன் தங்காய்-என்கையாலே
திருக் குமாரத்தியார் திருவடிகளில் சேறு படாமல் சேற்றில் படியாய் கிடந்து அனு சரணம் பண்ணியும்
மனத்துக்கு இனியானைப் பாடவும் -என்கையாலும் -ஸ்ரீ ராம மிஸ்ராய நம என்னும் அர்த்தம் சொல்லுகிறது –(மணக்கால் நம்பி )
போதரிக் கண்ணினாய் -பங்கயக் கண்ணானைப் பாட -என்கையாலே –
ஸ்ரீ புண்டரீகாஷா நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –(நம் அனைவரையும் உய்யக் கொண்டவர் அன்றோ-திருவெள்ளறை திருவவதாரம் )
நா உடையாய் என்கையாலே
தமிழ் மறையை இயலிசை யாக்கின நா வீறு உடைமையாலே
ஸ்ரீ மன் நாத முனயே -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
எல்லே இளங்கிளியே -என்கையாலே –
ஸுக முகாத் அம்ருத த்ரவ ஸம்யுத்தம் -என்னும் படி
திருவருள் கமுகு ஒண் பழத்ததான ஆழ்வார் திருப் பவளத்தில்-
நின் கீர்த்திக் கனி என்னும் கவிகள் (3-8)மொழி பாட்டோடும் கவி யமுதமாய் திருவாய் மொழி பிரவஹிக்க -அத்தாலே
அணி மழலைக் கிளி மொழியானை (9-7-11)-அநு சரிக்கையாலே –
ஸ்ரீ மதே சடகோபாய நம -என்னும் அர்த்தம் சொல்லுகிறது –
(நிகம கல்பதோர் களிதம் பலம் ஸுகமுகா தம்ருத த்ரவ ஸம்யுதம்
பிபத பாகவதம் ரஸமாலயம் முஹுரஹோ ரஸிகா புவிபாவுகா:
திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் கண்ண பிரான்
திருவருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த உள
திருவருள் அருளால் அவன் சென்று சேர் தண் திருப் புலியூர்
திருவருள் கமுகு ஒண் பழத்தது மெல்லியல் செவ்விதழே–8-9-6-
செவிகளால் ஆர நின் கீர்த்திக் கனியெனும்
கவிகளே காலப்பண் தேன்உறைப் பத்துற்றுப்
புவியின்மேல் பொன்நெடுஞ் சக்கரத்து உன்னையே
அவிவுஇன்றி ஆதரிக் கும்எனது ஆவியே.
ஒழிவின்றித் திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா அணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வண் குருகூர்ச் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவு இல்லா ஆயிரத்து இப்பத்தும் நோய் அறுக்குமே–9-7-11-)
————
நாயகனாய் என்று தொடங்கி –
மேல் ஐந்து பாட்டாலே –
ஸ்ரீ மத் விஷ்வக் சேனாயா நம —(16-17–நாயகனாய் அம்பரமே -பாசுரங்கள்)
ஸ்ரீ யை நம —(18-19-20-பாசுரங்கள்-உந்து குத்து முப்பத்து மூவர் -நப்பின்னைப் பிராட்டி சாயாம் இவ )
ஸ்ரீ தராய நம -( ஏற்ற 21-பாசுரம் )என்னும் அர்த்தங்களையும்
அச் சேர்த்தியிலே
இவரும் புருஷகார பூர்வகமாக ஆஸ்ரயிக்கச் செய்த பெருமை ஏற்றங்களை சொல்லுகிறது –
—————————————————
எட்டு எழுத்தின் இணைப் பொருளும்
இரண்டு தனில் பொருளும்
இயல் வலித்தோர் அருச்சுனனுக்கு இறைவன் தம்மை தொட்டுரைத்த முறை யறுதிப் பொருளை
எல்லாம் தோன்றும் வகை –இத்யாதி படியே
இப் பிரபந்தம் ரகஸ்யார்த்தத்தை ப்ரதிபாதிக்கக் கடவதாய் இருக்கும் –
அதில் த்வய யோஜனையும் மேலே யோஜிக்கப்பட்டது –
(குரு பரம்பரை முன்னிட்டே த்வயம் அனுசந்திக்க வேண்டும்
ஆகவே அஸ்மாத் குருப்யோ தொடங்கி -ஸ்ரீயை நம ஸ்ரீ தராய நம
குரு பரம்பரை முன்னிடாமல் த்வயம் அனுசந்தித்தால் அவை மற்ற மந்த்ரங்களுடனே ஒக்கும்
ஜப்த்தவ்யம் குருபரம்பரையும் த்வயமும்
இவற்றையே கீழே பார்த்தோம்)
———–———–
அநந்தரம்(22-30-பாசுரங்கள்)
பாட்டுக்கள் எல்லாவற்றாலும் ப்ரதிபாதிக்கிற படியே விசேஷ கடாக்ஷ லஷ்யமாம் படியை அபேக்ஷிக்கிற படியையும் –(அங்கண்-22 பாசுரம் )
வீற்று இருந்து ஏழ் உலகில் படியே திவ்ய சிம்ஹாசனத்திலே பேர் ஓலக்கமாய் இருக்கிறபடியையும்-(மாரி மலை முழைஞ்சில் 23-பாசுரம் )
போற்றி என்று சேர்த்திக்கு மங்களா சாசனம் பண்ணும் படியையும்–(அன்று இவ்வுலகம் அளந்தான் அடி போற்றி–24 பாசுரம் )
தங்கள் அர்த்தித்தவத்தையும் -(ஒருத்தி மகனாய்-25 பாசுரம்-புருஷனால் அபர்த்தித்துப் பெறுவதே புருஷார்த்தம் -வேறே ஒன்றும் அர்த்திக்காமல் )
கைங்கர்ய உபகரணங்களை அர்த்தித்து இருக்கும் படியையும்-(மாலே மணி வண்ணா -26 பாசுரம் )
எல்லாரும் அவனோடே கூடி இருந்து குளிரும் படியையும்–(கூடி இருந்து-27 பாசுரம் )
பலத்துக்கு அநு குணமாக சாதனங்கள் தங்கள் கையது அன்றிக்கே அவன் கையதாய் இருக்கும் படியையும்-(கறைவைகள் பின் சென்று 28 பாசுரம் )
கைங்கர்ய வேஷத்தையும் –(சிற்றம் சிறுகாலை 29 பாசுரம் )
மாதர்களை எழுப்பும் படியையும்(சேயிழையார் சென்று இறைஞ்சி -30 பாசுரம் )
கைங்கர்ய பிரதிசம்பந்தியான ஸ்ரீ யபதி கடாக்ஷத்தாலே அந்த கைங்கர்யத்தை பெற்று
வாழும் படியையும் -(30 பாசுரம் )சொல்லித் தலைக் கட்டுகிறது –
—–
ஆகையால் குரு பரம்பரா விவரண பூர்வகமாக த்வய விவரணமான இப்பிரபந்தமே
பிரபன்னனுக்கு அநு வரதம் அநு சந்தேயம் என்றதாயிற்று –
ஜப் தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் என்னக் கடவது இறே –
இது குரு பரம்பரா விவரணம் –
—————-
த்வயத்துக்கு சங்க்ரஹமான திருமந்திர யோஜனை காட்டப் படுகிறது –
இப் பிரபந்தத்தாலே —
நமோ நாராயணா என்பாரே-என்று இறே இவர் தாமே அருளிச் செய்தது –
(நம -நாராயண பாதங்களின் விவரணம் த்வயம்)
(நமோ நாராயணா என்பாரே-பிரணவம் இல்லாமல் -நாச்சியார் திருமொழி -5-11)
(விண்ணுற நீண்டடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி
கண்ணுற வென் கடல் வண்ணனைக் கூவு கரும் குயிலே என்ற மாற்றம்
பண்ணு நான் மறையோர் புதுவை மன்னன் பட்டர் பிரான் கோதை சொன்ன
நண்ணுற வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே–——5-11-)
இப் பிரபந்தத்திலே –
ஊழி முதல்வன் (4)-பற்ப நாபன் -என்று -சேஷத்வ பிரதிசம்பந்தியான சேஷித்வத்தையும் –
உனக்கே (29)-என்கையாலே -உகாரத்தில் அநந்யார்ஹ சேஷத்வத்தையும் –
நாம்-(5)என்றும் –
யாம் (இன்று யாம் வந்தோம் -போற்றி)-என்றும் –
மகார வாச்யனான ப்ரக்ருதே பரனாய் பகவத் சேஷ பூதனாய் இருக்கிற
ஆத்மாவின் ஸ்வரூபத்தையும் சொல்லுகையாலே
ப்ரணவார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –
(ஊழி முதல்வன்-என்று ஸமஷ்டி ஸ்ருஷ்டியும்
பற்ப நாபன்-என்று வியஷ்ட்டி ஸ்ருஷ்ட்டியையும் சொன்னவாறு)
(காரணம் சொல்லி சேஷித்வம் ஸித்தம் -அகர முதல எழுத்து –ஆதி பகவான் -)
தூயோமாய் வந்து நாம் –
தூயோமாய் வந்தோம் –
அபிமான பங்கமாய் –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே நமஸ்ஸில் அர்த்தமும் –
கதிர் மதியம் போல் முகத்தான் நாராயணன் -என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் -என்றும் -சொல்லுகையாலே நாராயண சப்தார்த்தமும்-
உலகை ஈரடியால் நடந்த நம்பி நாமம் சொல்லில் நமோ நாராயணமே(பெரிய திருமொழி 6-10-1)-என்னக் கடவது இறே
(ஸ்வரூபம் ரூபம் குணம் சேஷ்டிதம் -இவற்றுக்கு பிரமாணங்கள்)
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது -என்கையாலே
அதிலே சர்வ வித பந்துத்வமும்
எற்றைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்கையாலே
சதுர்த்யர்த்தமும் சங்க்ரஹீதம் ஆயிற்று –
(தாதர்த்த சதுர்த்திக்கும்
பிரார்த்தனா சதுர்த்திக்கும் இரண்டு பிரமாணங்கள்)
ஆக இது திருமந்திர விவரணம் என்றதாயிற்று –
————————–
கறவைகள் பின் சென்று -இத்யாதிகளாலும் –
செய்யாதன செய்யோம் –
உன்னை அருத்தித்து வந்தோம் –
சிற்றம் சிறு காலை வந்து உன்னைச் சேவித்து -என்றும் –
நாராயணன் -என்றும் –(மாம் -நாற்றத்துழாய் முடி நாராயணன் )
புண்ணியம் நாமுடையோம் என்றும் –
(இது வரை ஸர்வ தர்மான் பரித்யஜ்ய மாம் ஏகம் வ்ரஜ -அர்த்தம்
மேல் அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸூச-அர்த்தம்)
மாயனை மன்னு வடமதுரை மைந்தனை -என்று தொடங்கி -தீயினில் தூசாகும் என்றும்
எங்கள் மேல் சாபம் இழிந்து என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும் சொல்லுகையாலே
சரம ஸ்லோகார்த்தம் சங்க்ரஹீதம் ஆயிற்று –
(அவன் திரு உள்ளத்தில் கோபமும் ப்ரீதியும் தானே பாபமும் புண்யமும்
தூசாக்க வேண்டாம் -தூசாகும் -தன்னடையே போகுமே)
ஐந்து தீயோடு நின்று தவம் செய்ய வேண்டா (பெரிய திருமொழி–3-2-2)
திருமார்பனைச் சிந்தையுள் வைத்தும் என்றீர் –
ஐந்து நெருப்பிடையே நிற்கவும் நீர் வேண்டா –(மூன்றாம் திருவந்தாதி )
நகரமருள் புரிந்து இத்யாதி-
பெயரினையே புந்தியால் சிந்தியாது ஓதி உரு வெண்ணும் காந்தியால் ஆம் பயன் அங்கு என் -என்னச் சொல்லக் கடவது இறே –
திருப்பாவையால் –
நாராயணன் -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீரார்ணவ நிகேதன நாக பர்யங்கம் உத்ஸ்ருஜ்ய ஹயாகதோ மதுராம் புரீம் -என்கிறபடியே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்துக்கு அடியான அடிப்பாட்டை அடைவே சொல்லி –
(பரத்வ வ்யூஹ முன் அவதாரங்களை சொல்லி மாம் என்று தொ ட்டுரைத்த சொல்)
ஏவம் விதமானவன்
மாயனை மன்னு இத்யாதிப்படியே ஸ்ரீ கிருஷ்ணனாய் வந்து திருவவதரித்து –
ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில் ஒருத்தி மகனாய் ஒளித்து வளருகிற இடத்தே
பேய் முலை நஞ்சுண்டு -கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி -என்று பூதனை சகட நிராகரணம் சொல்லி –
அதுக்கு மேலே
தாமோதரன் -என்று வெண்ணெய் களவு காண்கையாலே கட்டவும் அடிக்கவும் எளியனாம் இருந்தபடி சொல்லி
மதுரையிலே மல்லரை மாட்டி வல்லானை கொன்றபடியைச் சொல்லி
அநந்தரம் தான் தீங்கு நினைத்த கருத்தைப் பிழைப்பித்து
கஞ்சன் வயிற்றில் நெருப்பாய்-அவனைப் போக்கின அளவும் அருளிச் செய்தார் இறே –
இது சரம ஸ்லோக விவரணம் –
மாமின் அஹமின் அர்த்தங்கள் இவை தானே (திருப்பாவை ஸ்ரீ ஸூக்திகளைக் கொண்டே ஸ்ரீ மத் பாகவத சுருக்கம்)
———————————
திருப்பாவையில் -அத்யந்த பக்தி உக்தரானவர்கள் –
பகவத் விரஹ பரிதாப ஹரமாக ஸஹ காரிகளுடன் பகவத் விஷய அவகாஹனம் பண்ண ஒருப்பட்டு –
ஸ்வ அபேக்ஷிதங்களை அத்தலையால் பெற்று வாழும் படியையும் சொல்லுகிறது-
தாம் தாம் ப்ரீதி விஷயங்களைப் பிரிந்தார்களுக்கு எல்லாம் இப்படி இறே பிரேம ஸ்வபாவம் இருப்பது –
(நீராடப்போய் அப்பறை பெற்ற வாற்றை அன்றோ திருப்பாவை முழுவதும் சொல்லிற்று)
(பக்தனுக்கு கிருஷ்ண விரஹம் போல் சம்சாரிகளுக்கு அபிமத விஷய விஸ்லேஷம் போல் தானே
ஸர்வமும் பக்தனுக்கு அவனே -இவர்களும் எல்லாமாகக் கொண்ட பெண்டிர் அன்றோ)
ஸ்ரீ யபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -சர்வ ஸ்மாத் பரனாய் -இருந்துள்ள சர்வேஸ்வரன் –
ஆஸ்ரித ரக்ஷண அர்த்தமாக –
ஸ்வ விபூதியில் சக்கரவர்த்தி திருமகனாய் வந்து அவதரித்துப் போந்து –
பிராட்டியைப் பிரிந்து-மெல்லியல் தோள் தோய்ந்து –
அநந்தரம் இப்படி அதி விலக்ஷணையாய்-
அத்யந்த அபிமதையான தத் விஷயத்தை லோக ரக்ஷண அர்த்தமாக விஸ்லேஷித்து-
உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடறுத்து (11-7)-என்னும்படி
பரி தப்த்தனாய-அந்த விரஹ தாபம் மாற்றலாமோ என்கிற அலமாப்பாலே
அரணவத்திலே அவகாஹிக்க நினைப்பது ஆனால் போலேயும் –
அவனைப் பின் தொடர்ந்து போந்த பரிவரான தம்பி பரதனும்
தயரதன் பெற்ற மரகத மணித் தடத்தைப் பிரிந்து –
கூடேக்நி ரிவபாதபம் -என்னும் படி பரிதபித்து
சரயு ஆற்றிலே அவகாஹித்து ஒருப்பட்டு இருந்தால் போலேயும்
பின்னையும் மா மாயன் மாதவன் வைகுந்தன் வான் இளவரசு வைகுந்தக் குட்டன்
வாஸூ தேவன் மதுரை மன்னன் நந்த கோபன் இளவரசு
கோவலர் குட்டன் -சூட்டு நன் மாலை தொடக்கமான -அங்குத்தை போகத்தை அநாதரித்து
அடலாயர் தம் கொம்பினுக்காக இங்கே போந்தால் போலே –
ஆண்டாளும் அந்த வைகுண்ட வான் போகம் தன்னை இகழ்ந்து இங்கே ஏற
வேயர் தங்கள் குலத்திலே விஷ்ணு சித்தன் வியன் கோதையாய் வந்து அவதரித்து –
ஆயர் சிறுமியர் படியை அடைந்து –
ஆயர் குலத்தில் தோன்றினவனை மனத்துக்கு இனிதாகப் பாடி கூடி இருந்த படியை
செய்ய வெண்ணப் போந்தவளாய் –
அப்பால் முதலாய் நின்ற அளப்பரிய ஆரமுது தொடக்கமான விஷயங்களை பிரிந்த தளர்த்தியாலே
இனவேல் நெடும் கண்கள் இமை பொருந்தாதே –(5-4)
அவனில் எண் மடங்கான காமத் தீ யுள் புகுந்து கதுவ-
அந்த விரஹ தாபம் ஆகிற பெரு நெருப்பை ஆற்றுகைக்கு ஆதரம் பெருத்து பெரும் புறக் கடல்(7-10)
இப் புறத்திலே திருப் பாற் கடலாய் பொங்கி எங்கும் பரந்து
வெள்ளக் கால்களாய் பரந்து சுழித்துப் பெரு நீராக மதுர ஆறாகப் பெருகுகிற அம்ருதத்திலே
குள்ளக் குளிர குடைந்து நீராட ஒருப்பட்டு
பெருக்காற்றிலே இழிவார் துறை தப்பாமே துறை அறிந்த நிலவரோடே கூட இறங்க நிலைக்குமா போலே
இறங்க நினைக்கதாய் இருக்கும் இங்கும் –
அது எங்கனே என்னில் –
ஸ்ரீயபதியாய்-ஸ்ரீ வைகுண்ட நிகேதனாய் -நித்ய முக்த அநு பாவ்யனாய்-
சர்வ ஸ்மாத் பரனாய் இருந்துள்ள -சர்வேஸ்வரன் –
நாராயணனே -என்று அவன் பெரும் புறக் கடலாய் இருக்கிறபடியும் –
அநந்தரம் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்று பாற் கடல் போலேயான வ்யூஹத்தையும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்று அது கால்களாய்ப் புறப்பட்டுப் பரந்து
பற்ப நாபன் -என்று சுழித்து –
தூய பெரு நீர் யமுனைத் துறைவன் -என்று பெருக்காறு போல விபவத்தையும் –
நாற்றத் துழாய் முடி நாராயணன் என்று
உள்ளே ஊற்று ஜலம் போலே அந்தர்யாமியாய் இருக்கும் படியையும்
புள்ளரையன் கோயில் -என்று நித்தியமான நீர்மையால் –
அதிலே தேங்கின மடுக்கள் -என்னலாம் படி ருசி ஜனக விபவ லாவண்யத்தோடே
எப்போதும் ஆஸ்ரயிக்கலாம் படி அர்ச்சாவதாரத்தையும் –
அத்யபி நிவேசத்தோடே இங்கே காண இப்பிறப்பே அநு பவிக்கக் கோலி-(8-5-11)
அது அப்போதே அனுபவிக்கப் பெறாமையாலே –
வைகுந்தன் என்பதோர் தோனி பெறாதே உழல்கின்றேன் -என்றும்
பொங்கிய பாற் கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என் கொங்கை கிளர்ந்து
குமைந்து குதூகலித்து ஆவியை ஆகுலம் செய்யும் -(5-7)என்றும்
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேல் கண் மடந்தை விரும்பி (5-11)-என்றும்
பாஞ்ச சன்னியத்தை பற்ப நாபனோடு வாய்ந்த பெரும் சுற்றமாக்கிய (7–10)-என்றும்
கொம்மை முலைகள் இடர் தீரக் கோவிந்தற்கோர் குற்றேவல் இம்மைப் பிறவி செய்யாதே இனிப்பு போய்ச் செய்யும் தவம் தான் என் -என்றும்
(திருப்பாவையில் போல் நாச்சியார் திருமொழியில் இதே பரத்வாதி பஞ்சகத்துக்குப் பிரமாணங்கள்)
ஆவல் அன்புடையார் தம் மனத்து அன்றி மேவலன் -என்றும்
உலங்குண்ட விளங்கனி போல் உள் மெலியப் புகுந்து என்னை நலம் கொண்ட நாரணன் (4-8)-என்றும்
பெண் கொடியை வதம் செய்தான் (8-9)-என்றும் –
காமத் தீயுள் புகுந்து கதுவ -என்றும்
தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர் ஆ முகத்தை நோக்காரேல்-என்றும் சொல்லுகிறபடியே
பரத்வாதி பஞ்ச அவஸ்தா வஸ்திதனாய்-
பஹு குணனாய் -தேச கால விப்ரகர்ஷ்யாதி உபாதியாலே
ஆஸ்ரயிப்பார்க்கு அசன்னிஹிதத் வாதிகளாலும்
ஆலோக ஆலபாத்ய அநனுபாவிகத்வத்தாலும்
எம்பெருமான் அரியனாய் இருக்கிற படியை தர்சித்து-
முற் காலத்தில் ஸ்ரீ கோபிமார் -கோபீ பரி வ்ருதோ ராத்ரிம் -என்று பூர்வ பக்ஷத்தில் பூர்வ ராத்திரியில் (வளர்பிறை பவ்ர்ணமியில்)
அணி யாய்ச்சியர் சிந்தையுள் குழகனான கிருஷ்ணனோடு கழகமாக கூடி இருந்து –
ஒரு கார்யப் பாட்டிலே பிரிந்து போந்து அவனை விட்டு அகன்று
உயிர் ஆற்ற கில்லாதாப் போலே
யமுனை ஆற்றிலே மார்கழி நீராட -என்ற ஒரு வியாஜத்தாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவ குதூஹலத்தை யுடையராய்
அபர ராத்திரியிலே உணர்ந்து முற்பட்டார் பிற்பட்டாரை எழுப்பி –
எல்லாரும் திரண்டு நப்பின்னை பிராட்டி புருஷகாரமாக
கிருஷ்ணனை எழுப்பி
ஸ்வ லாபங்களை அர்த்தித்துப் பெற்று அனுபவித்தால் போலேயும்
வங்கக் கடல் கடைந்து –அங்கு அப்பறை கொண்ட ஆறு இதுவரை-மேல் அணி புதுவை –இத்யாதி )
சீர் மல்கும் ஆய்ப்பாடிக்கு சத்ருசமான ஸ்ரீ வில்லி புத்தூரிலும் –
ஸ்ரீ வைஷ்ணவ சந்தான ப்ரஸூதையான-ஆழ்வார் திரு மகளாரான ஆண்டாள்
ஸ்ரீ கிருஷ்ண அநு காரிகளான அவர்களை அநு கரித்து –
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமான் திருப் பாதம் பணிந்து என்கிறபடியே –
வேதப் பயன் கொள்ள வல்ல விஷ்ணு சித்தன் (2-8-10)சம்பந்தத்தாலே-
வேதம் அனைத்தைக்கும் வித்தான அர்த்தத்தைக் கொண்டு
பகவத் ருசி யுடையாரைக் கொண்டு –
பத்துப் பெண்களை எழுப்புகிற முகேன -பிரபன்ன ஜன கூடஸ்தரான பதின்மரை முன்னிட்டு
வேதப் பொருளாய் – யமுனைத் துறைவன் -என்று
பேர் பெற்ற எம்பெருமான் திருவடிகளை பற்றும் அளவும் சொல்லுகிறார்கள் –
புள்ளும் தொடங்கி -எல்லே அளவும் –
தசமாந்த மாயே -என்றார் இறே தேசிகரும் –(6-15 பாசுரங்கள் ஒரு பதிகம் தானே)
இவர்கள் கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்-
பிராட்டியோடே சாம்ய குண ஷட்கத்தை யுடையவர் ஆகையாலும்
இவ் வனுபவத்துக்கு இவர்களைக் கூட்டிக் கொள்ளுகிறது –
இன்னமும் பகவத் விஷயத்தில் முற்பட்டார் பிற்பட்டாரையும் கூட்டிக் கொண்டு போக வேண்டும் –
பர ஸம்ருத்தியாலும் எழுப்புகிறார்கள் –
புஷ்ப்ப ராத்ரிஸ்து தத்ரைவ கங்கா கூலே ச ராகவ(ரகுகுல பரதனைச் சொன்னவாறு-நடுவில் பிள்ளை )
ப்ராத கால யமுதாய சத்ருக்நமித மப்ரவீத் –
சத்ருக்ந உத்திஷ்ட கிம் சேஷ நிஷாதாதிபதிம் குஹம்
சீக்ரமா நய பத்ரந்தே தார யிஷ்யதி வாஹி நீம் –
ஜாகர்மி நாஹம் ஸ்வபிமி தமேவார்யம் விசிந்தயன்-என்னக் கடவது இறே –
இங்கும் அப்படியே யாயிற்று –
ப்ரத்யக்ஷ அனுபவத்தால் அல்லது தரியாதார்
குண அனுபவத்தால் தரித்து இருப்பாரை த்வரித்து எழுப்புகிற படி
———————————
இதில் முதல் பாட்டில்(6)
பிள்ளாய் எழுந்திராய் -என்று பிள்ளைப் பெண் என்கிறது பொய்கை ஆழ்வாரை –
அது எங்கனே என்னில் –
அரவம் அடல் வேழம்-இத்யாதியாலே
ஸ்ரீ கிருஷ்ண அனுபவத்துக்கு தேசிகர் ஆகையாலும்
(அரவம் அடல் வேழம் ஆன் குருந்தம் புள்வாய்
குரவை குட முலை மற் குன்றம் கரவின்றி
விட்டு இறுத்து மேய்த்து ஒசித்துக் கீண்டு கோத்து ஆடி உண்டு
அட்டு எடுத்த செங்கண் அவன் –54–)
சூடிக் கொடுத்த வடிவுக்கு –
வையம் தக்ளி இத்யாதி –
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல் மாலை -என்றும்
மாலும் கரும் கடலே என்நோற்றாய் இத்யாதியாலே –
அவனுடைய அங்க சங்கத்தை ஆதரித்துப் பேசியும்
(வையம் தகளியா வார் கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக -செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொன்மாலை
இடர் ஆழி நீங்குகவே யென்று -1-
மாலும் கருங்கடலே என்நோற்றாய் வையகமுண்
டாலி னிலைத் துயின்ற வாழியான் கோலக்
கருமேனிச் செங்கண் மால் கண் படையுள் என்றும்
திருமேனி நீ தீண்டப் பெற்று –19-)
மணமருவ மால் விடை ஏழ் செற்று-என்று
நப்பின்னை பிராட்டியை பெறுகைக்கு எருதுகளின் மேல் வியாபாரித்த படியைப் பேசுகையாலும்
(புணர் மருதி நூடு போய்ப் பூங்குருந்தம் சாய்த்து
மண மருவ மால் விடை யேழ் செற்று கணம் வெருவ
ஏழுலகத் தாயினவு மெண்டிசையும் போயினவும்
சூழரவப் பொன் கணையான் தோள் ——-62-)
இதில்
பேய் முலை நஞ்சுண்டு -என்றத்தை –
பேய் முலை நஞ்சூணாக யுண்டான் -என்றும்
(வாய் அவனை அல்லது வாழ்த்தாது கை யுலகம்
தாயவனை அல்லது தாந்தொழ பேய் முலை நஞ்
சூணாக வுண்டான் உருவோடு பேர் அல்லால்
காணாக் கண் கேளா செவி —11-)
கள்ளச் சகடம் கலக்கழிய காலோச்சி -என்று
கன்னிப் போரான சிறுச் சேவகத்தை -ஓரடியும் சாடுதைத்த -என்றும் –
வெள்ளத் தரவில் துயில் அமர்ந்த வித்தினை -என்றத்தை
வெள்ளத்தில் உள்ளானும் இத்யாதியால் பேசியும்
(உளன் கண்டாய் நன்னெஞ்சே உத்தமன் என்றும்
உளன் கண்டாய் உள்ளுவார் உள்ளத்து உளன் கண்டாய்
வெள்ளத்தில் உள்ளானும் வேங்கடத்து மேயானும்
உள்ளத்தில் உள்ளான் என்று ஓர் -99-)
ஒன்றும் அதனை உணரேன் நான் -என்றும் –
முந்துற முன்னம் பகவத் விஷயத்திலே இழிந்தவர் ஆகையாலும்
பிள்ளைப் பெண் என்கிறது -பொய்கை ஆழ்வாரை —
(என்று கடல் கடைந்தது எவ்வுலகம் நீர் ஏற்றது
ஒன்றும் அதனை யுணரேன் நான் -அன்று அது
அடைத்து உடைத்துக் கண் படுத்த வாழி இது நீ
படைத்து இடந்து உண்டு உமிழ்ந்த பார் ——-2-)
பிள்ளை -மௌக்த்யம்-என்றவாறு
————————————–
இரண்டாம் பாட்டில் –
பேய்ப் பெண் -என்கிறது –
பேயாழ்வாரை -அது எங்கனே என்னில்
திருக் கண்டேன் இத்யாதியாலே நாயகனுடைய வைபவத்தை தர்சிப்பிக்கையாலும்(கீசு கீசு –நாயகப்பெண்பிள்ளையாய்)
(திருக்கண்டேன்! பொன்மேனி கண்டேன்! திகழும்
அருக்கன் அணி நிறமும் கண்டேன்! – செருக்கிளரும்
பொன்னாழி கண்டேன்! புரிசங்கம் கைக்கண்டேன்!
என்னாழி வண்ணன்பால் இன்று!!)
மற்றும் ஸ்த்ரீத்வாபத்தியால் -வெற்பு என்று வேங்கடம் என்று தொடங்கி
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான் பூண்ட நாள் எல்லாம் புகும் என்கையாலும்
(வெற்பு என்று வேங்கடம் பாடினேன் வீடாக்கி
நிற்கின்றேன் நின்று நினைக்கின்றேன் -கற்கின்ற
நூல்வலையில் பட்டிருந்த நூலாட்டி கேள்வனார்
கால்வலையில் பட்டிருந்தேன் காண்-40-)
(வெற்பு என்று வேங்கடம் பாடும் வியன் துழாய்
கற்பு என்று சூடும் கருங்குழல் மேல் -மற்பொன்ற
நீண்ட தோள் மால் கிடந்த நீள் கடல் நீராடுவான்
பூண்ட நாள் எல்லாம் புகும் —–69-)
கோவலனாய் ஆ நிரைகள் மேய்த்துக் குழலூதி -என்று கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசுகையாலும்
(கோவலனாய் ஆநிரைகள் மேய்த்துக் குழலூதி
மாவலனாய்க் கீண்ட மணி வண்ணன் -மேவி
அரியுருவமாகி இரணியனதாகம்
தெரியுகிரால் கீண்டான் சினம் —-42–)
பின்னைக்காய் எற்று உயிரை அட்டான்-என்று நப்பின்னைப் பிராட்டிக்காக
அவன் எருதுகளின் மேல் வியாபாரித்த படியை பேசுகையாலும்
(செற்றதுவும் சேரா இரணியனைச் சென்றேற்றுப்
பெற்றதுவும் மா நிலம் பின்னைக்காய் -முற்றல்
முரியேற்றின் முன்னின்று மொய்ம் பொழித்தாய் மூரிச்
சுரியேறு சங்கினாய் சூழ்ந்து —-49-)
கவியினார் கை புனைந்து கண்ணார் கழல் போய்ச்
செவியினர் கேள்வியராய்ச் சேர்ந்தார் புவியினார்
போற்றி யுரைக்கப் பொலியுமே பின்னைக்காக
ஏற்று யிரை யட்டான் எழில் —–85-
பேய்ப் பெண்ணே -என்றது பேய் ஆழ்வாரை -என்றபடி –
—————————————————————-
மூன்றாம் பாட்டில் –
கோதுகலமுடைய பாவாய் -என்கிறது பூதத் தாழ்வாரை –
அது எங்கனே என்னில் –
ஸ்த்ரீத்வாபத்திக்கு உடலாக -அன்பே தகளியாக -இத்யாதியாலே பக்தியைப் பேசி –
(அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்புருகு சிந்தை இடு திரியா -நன்புருகி
ஞானச் சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத் தமிழ் புரிந்தேன் நான்-1-)
பெரும் தமிழன் அல்லேன் பெரிது என்ற
அநந்தரம்
பெருகு மத வேழம் -என்று
அவனுடைய அதி மானுஷ சேஷ்டிதத்தையும் ஜாதி யுசித தர்மத்தையும் பேசியும்
(யானே தவம் செய்தேன் ஏழ் பிறப்பும் எப்பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் -யானே
இரும் தமிழ் நன்மாலை இணை யடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் அல்லேன் பெரிது-74-)
(பெருகு மத வேழம் மாப்பிடிக்கு முன்னின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி -அருகிருந்த
தேன் கலந்து நீட்டும் திருவேங்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை-75-)
ஏறின் பெருத்த எருத்தம் கோடு ஓசியப் பெண் நசையின் பின் போய் எறுத்து இருத்த நல்லாயர் ஏறு – என்று
நப்பின்னைப் பிராட்டியைப் பெறுகைக்கு எருதுகளின் மேலே அவன் வியாபாரித்த வியாபாரத்தைப் பேசியும்
(பேறு ஓன்று முன்னறியேன் பெற்றறியேன் பேதமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் –ஏறின்
பெருத்த எருத்தம் கோடோசிய பெண் நசையின் பின் போய்
எருத்து இறுத்த நல் ஆயர் ஏறு–62-)
இதில் தேவாதி தேவன் என்னப்படுவான்
முன்னொரு நாள் மாவாய் பிளந்த மகன் –என்றும்
(மனத்துள்ளான் வேங்கடத்தான் மா கடலான் மற்றும்
நினைப்பரிய நீள் அரங்கதுள்ளான்-எனைப்பலரும்
தேவாதி தேவன் எனப்படுவான் முன்னொரு நாள்
மாவாய் பிளந்த மகன் ————-28-)
மாலே நெடியோனே கண்ணனே விண்ணவர்க்கு மேலா வியான் துழாய்க் கண்ணியனே மேலா விளவின் காய் கன்றினால்
வீழ்த்தவனே என் தன் அளவன்றால் யானுடைய அன்பு -என்றும் அருளிச் செய்கையாலும்
(மாலே நெடியானே கண்ணனே விண்ணவர்க்கு
மேலா வியன் துழாய்க் கண்ணியனே -மேலாய்
விளவின் காய் கன்றினால் வீழ்த்தவனே என்தன்
அளவன்றால் யானுடைய வன்பு –100-)
கோதுகலமுடையாய் பாவாய் என்றது பூதத் ஆழ்வாரை -என்றபடி –
மாதவன் பூதம்- என்கிறது -கோதுகலமிறே –
ஆகையாலும் மாதவன் பேர் சொல்லுவதே ஒத்தின் சுருக்கு -என்றவர் இறே –
(கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண் மேல்
பண் தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின்றனவே.–5-2-2-)
(ஒத்தின் பொருள் முடிவும் இத்தனையே உத்தமன் பேர்
ஏத்தும் திறம் அறிமின் ஏழைகாள் -ஒத்ததனை
வல்லீரேல் நன்றதனை மாட்டீரேல் மாதவன் பேர்
சொல்லுவதே ஒத்தின் சுருக்கு —39–)
ஆக மூவரும் –
ஞான -தர்சன-ப்ராப்த்திய அவஸ்தைகளோடே கூடி யாயிற்று இருப்பது –
———————————————
நாலாம் பாட்டில் –
இவர்களுக்கு அநந்தரத்திலானவரை-திரு மழிசை ஆழ்வாரை
மாமன் மகளே -என்கிறது -அது எங்கனே என்னில் –
தாத்ரா துலிதா லகுர் மஹீ -(பிரமனால் நிறுத்து எடுக்கப்பட்டாள்)என்றும் –
உலகு தன்னை வைத்து எடுத்த பக்கத்தும் மா நீர் மழிசையே வைத்து எடுத்த பக்கம் வலிது-என்னும்படி
மஹீ சார க்ஷேத்ரமான திரு மழிசையில் –
பார்க்கவோ தீர்க்க சத்ரேண வாஸூ தேவம் ஸநாதனம் அபி பூஜ்ய யதா நியாயம் –என்கிறபடியே
ஸ்ரீ ஜெகந்நாதனை உத்தேசித்து யஜித்துக் கொண்டு இருக்கிற காலத்தில் –
பார்க்கவனுடைய பத்னி கர்ப்பிணியாய்
திரு மழிசைப் பிரானை திரு வயிறு வாய்த்ததாலே –
பார்க்க விலோக ஜநநீ-என்னும்படியான பிராட்டியோடே உடன் பிறந்த பார்க்க புத்திரர் ஆகையாலும்
(ஒரு பிறவியிலே இரு பிறவி யானார் -இவரும் கண்ணனும்)
காட்டில் வேங்கடம் இத்யாதி கூடுமாகில் நீ கூடிடு கூடிலே-என்கிறபடியே –
அழைப்பன் திரு வேங்கடத்தானைக் காண இழைப்பன்
திருக் கூடல் கூட -என்று ஸ்த்ரீத்வ பாவனையாகப் பேசுகையாலும் –
(காட்டில் வேங்கடம் கண்ண புரநகர்
வாட்ட மின்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்ட ராவந்தென் கைப்பற்றி தன்னோடும்
கூட்டு மாகில் நீ கூடிடு கூடலே!)
(அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண
இழைப்பன் திருக் கூடல் கூட –மழைப்பேர்
அருவி மணி வரண்டி வந்திழிய ஆனை
வெருவி அரவு ஒடுங்கும் வெற்பு –39-)
தூ மணி மாடத்து சுற்றும் விளக்கு எரிய-என்கிற ஞான தீப பிரகாசத்தை –
என் மதிக்கு விண் எல்லாம் உண்டோ விலை-என்றும்
ஞானமாகி நாயிறாகி-என்றும் பேசுகையாலும் —
(எனக்கு ஆவார் ஆர் ஒருவரே எம்பெருமான்
தனக்காவான் தானே மற்று அல்லால் -புனக்காயா
வண்ணனே யுன்னைப் பிறர் அறியார் என் மதிக்கு
விண்ணெல்லாம் உண்டோ விலை –51-)
(ஈனமாய எட்டும் நீக்கி ஏதமின்றி மீது போய்
வானமாள வல்லையேல் வணங்கி வாழ்த்து என்னெஞ்சமே
ஞானமாகி நாயிறாகி ஞாலம் முற்றும் ஓர் எயிற்றில்
ஏனமாய் இடந்த மூர்த்தி யெந்தை பாதம் எண்ணியே -114-)
ஆயன் துவரைக் கோனாய் நின்ற மாயன் 71-என்றும்
அடிச்சகடம் சாடி இத்யாதி வடிப்ப வளவாய்ப் பின்னை தோளிக்காய் வல் ஏற்று எருத்து இறுத்து -என்றும் –
ஆயனாகி ஆயர் மங்கை வேயர் தோள் விரும்பினாய் – என்றும்
பின்னை கேள்வ நின்னோடும் பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கேல் -99-என்றும்
ஸ்ரீ கிருஷ்ண சேஷ்டிதங்களையும் நப்பின்னை பிராட்டி புருஷகார வைபவத்தையும் சொல்லி
(சேயன் அணியன் சிறியன் மிகப் பெரியன்
ஆயன் துவரைக் கோனாய் நின்ற -மாயன் அன்று
ஓதிய வாக்கதனை கல்லார் உலகத்தில்
ஏதிலாராய் மெய்ஞ்ஞானம் இல்-71-)
(அடிச் சகடம் சாடி அரவாட்டி ஆணை
பிடுத்து ஒசிதுப் பேய் முலை நஞ்சுண்டு –வடிப்பவள
வாய்பின்னைத் தோளிக்கா வல்லேற்று எருத்து இறுத்து
கோப்பின்னும் ஆனான் குறிப்பு-33-)
(ஆயனாகி ஆயர்மங்கை வேய தோள் விரும்பினாய்
ஆய நின்னை யாவர் வல்லர் அம்பரத்தோடு இம்பராய்
மாய மாய மாயை கொல் அதன்றி நீ வகுத்தலும்
மாய மாய மாக்கினாய் யுன் மாயம் முற்றும் மாயமே –41-)
(காட்டி நான் செய் வல் வினைப் பயன்தனால் மனம் தனை
நாட்டி வைத்து நல்ல வல்ல செய்ய எண்ணினார் எனக்
கேட்டதன்றி என்னதாவி பின்னை கேள்வ நின்னொடும்
பூட்டி வைத்த வென்னை நின்னுள் நீக்கல் பூவை வண்ணனே -99-)
இதில் மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றதை –
மாதவனை –என்றும் -வைகுந்தச் செல்வனார் –75-என்றும் -பேசுகையாலே –
(சூதாவது என்னெஞ்சத்து எண்ணினேன் சொன்மாலை
மாதாய மாலவனை மாதவனை –யாதானும்
வல்லவா சிந்தித்து இருப்பேற்கு வைகுந்தத்து
இல்லையோ சொல்லீர் இடம்–65-)
(நாக்கொண்டு மானிடம் பாடேன் நலமாகத்
தீக்கொண்ட செஞ்சடையான் பின் சென்று -என்றும் பூக் கொண்டு
வல்லவாறு ஏத்த மகிழாத வைகுந்தச்
செல்வனார் சேவடி மேல் பாட்டு -75-—)
மாமன் மகளே என்கிறது திரு மழிசை பிரானை -என்றபடி –
பார்க்கவனும் பார்க்கவியும் பிருகுவுக்கு கியாதீயின் இடத்திலே ஸஹோதரராக சம்பவிக்கையாலும் –
லோக மாதாவுடன் பிறந்தவன் லோகத்துக்கு மாமனாக தட்டில்லை இறே-
அந்த பார்க்கவ புத்ரன் ஆகையால் இவரை மாமன் மகள் என்னைக் குறை இல்லை –
அன்றிக்கே
யசோதைப் பிராட்டிக்கு பின் பிறந்த ஸ்ரீ கும்பர் குமாரத்தியான நப்பின்னை பிராட்டி தரத்தை யுடையார்
ஒருவர் ஆகையால் மாமன் மகள் என்று சொல்லுகிறது ஆகவுமாம்
—————————————————–
அஞ்சாம் பாட்டில்
அம்மனாய் என்கிறது -குலசேகர பெருமாளை-அது எங்கனே என்னில் –
குல சேகரன் ஆகையாலும்
எல்லையில் அடிமைத் திறத்தினில் என்றும் மேவும் மனத்தனன் ஆகையாலும் –
(அல்லி மா மலர் மங்கை நாதன் அரங்கன் மெய் அடியார்கள் தம்
எல்லையில் அடிமை திறத்தினில் என்றும் மேவு மனத்தானாம்
கொல்லி காவலன் கூடல் நாயகன் கோழி கோன் குலசேகரன்
சொல்லின் இன் தமிழ் மாலை வல்லவர் தொண்டர் தொண்டர்கள் ஆவரே 2-10-)
அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து
இள யாய்ச்சியார்கள் எல்லிப் பொழுதினில் ஏமத்தூடி எள்கி யுரைத்த யுரையதனை ஸ்த்ரீத்வ பாவனயா பேசுகையாலும்
(அல்லி மலர் திரு மங்கை கேள்வன் தன்னை நயந்து இள ஆய்ச்சிமார்கள்
எல்லி பொழுதினில் ஏமத்தூடி எள்கி வுரைத்த வுரையதனை
கொல்லி நகர்க்கு இறை கூடல் கோமான் குலசேகரன் இன் இசையில் மேவி
சொல்லிய இன் தமிழ் மாலை பத்தும் சொல்ல வல்லார்க்கு இல்லை துன்பம் தானே–6-10-)
ஏறு அடர்த்ததும் -என்றும்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமைத் திறம் அல்லால் -என்று நப்பின்னை விஷயமாக வியாபாரித்த
வியாபாரத்தில் தோற்று-அடிமை அல்லது -என்கையாலும் –
(ஏறு அடர்த்ததும் ஏனமாய் நிலம் கீண்டதும் முன்னி ராமனாய்
மாறு அடர்ததும் மண் அளந்ததும் சொல்லி பாடி வண் பொன்னி பேர்
ஆறு போல் வரும் கண்ண நீர் கொண்டு அரங்கன் கோவில் திரு முற்றம்
சேறு செய் தொண்டர் சேவடி செழும் சேறு என் சென்னிக்கு அணிவனே -2-3-)
(ஊனேறு செல்வத்து உடன் பிறவி யான் வேண்டேன்
ஆன் ஏறு ஏழ் வென்றான் அடிமை திறம் அல்லாமல்
கூனேறு சங்கம் இடத்தான் தன் வேங்கடத்து
கோனேரி வாழும் குருகாய் பிறப்பேனே –4-1-)
ஆலை நீர் கரும்பன்னவன் -என்று தொடங்கி –
மல்லை மா நகருக்கு இறையவன் தன்னை வான் செலுத்தி என்னும் அளவும்
கிருஷ்ண சேஷ்டிதங்களைப் பேசி அனுபவிக்கையாலும் –
(ஆலை நீள் கரும்பு அன்னவன் தாலோ அம்புயத் தடம் கண்ணினன் தாலோ
வேலை நீர் நிறத் தன்னவன் தாலோ வேழ போதக மன்னவன் தாலோ
ஏலவார் குழல் என் மகன் தாலோ என்று என்று உன்னை என் வாய் இடை நிறைய
தால் ஒலித்திடும் திரு வினை இல்லாத தாயிற் கடை யாயின தாயே –7-1-
மல்லை மா நகர்க்கு இறையவன் தன்னை வான் செலுத்தி வந்து ஈங்கு அணை மாயத்து
எல்லையில் பிள்ளை செய்வன காணாத் தெய்வ தேவகி புலம்பிய புலம்பல்
கொல்லி காவலன் மாலடி முடி மேல் கோலமாம் குலசேகரன் சொன்ன
நல் இசை தமிழ் மாலை வல்லார்கள் நண்ணுவார் ஒல்லை நாரணன் உலகே– 7-11-)
இதிலே நாற்றத் துழாய் முடி நாராயணன் என்றதை –
வண்டு கிண்டு நறும் துழாய் மாலை உற்றவரை பெரும் திரு மார்வனை என்றும் –
(மாலை யுற்ற கடல் கிடந்தவன் வண்டு கிண்டு நறும் துழாய்
மாலை யுற்ற வரை பெரும் திரு மார்வனை மலர் கண்ணனை
மாலை உற்றுஎழுந்து ஆடி பாடி திரிந்து அரங்கன் எம்மானுக்கே
மாலை உற்றிடும் தொண்டர் வாழ்வுக்கு மாலை யுற்றது என் நெஞ்சமே– 2-8-)
அந் நாரணனை-நலம் திகழ் நாரணன் –என்று பேசுகையாலும்
(தில்லை நகர் திரு சித்ர கூடம் தன்னுள் திறல் விளங்கு மாருதியோடு அமர்ந்தான் தன்னை
எல்லையில் சீர் தயரதன் தான் மகனாய் தோன்றிற்று அது முதலா தன் உலகம் புக்கது
கொல் இயலும் படை தானை கொற்ற ஒள் வாள் கோழியூர் கோன் குடை குலசேகரன் சொல் செய்த
நல் இயல் இன் தமிழ் மாலை பத்தும் வல்லார் நலம் திகழ் நாரணன் அடி கீழ் நண்னுவாரே–10-11–)
இவருக்கு அசல் உணர்த்தி அனுபவம் போலே
ஸ்ரீ ரெங்க யாத்திரையில் அனுபவம் நடந்து செல்லுகையாலே
(குஹ்யதே யஸ்ய நகரே ரங்க யாத்ரே திநே திநே தமஹம் சிரஸா வந்தே ராஜா நாம் குல சேகரம்-)
பிரபன்ன குல சேகரரான குலசேகர பெருமாளை –
நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய் -என்கிறது என்கை –
————————————————————————–
ஆறாம் பாட்டில் –
கோவலர் தம் பொற் கொடியே-என்கிறது
பெரியாழ்வாரை -எங்கனே என்னில் –
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியான இவளை போல கோவலப் பட்டம் தவிக்கும் படி
கோப ஜென்மத்தை ஆஸ்தானம் பண்ணினவர் ஆகையாலும்
(அண்டத்து அமரர் பெருமான் ஆழியான் இன்று என் மகளைப்
பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிடும் கொலோ
கொண்டு குடி வாழ்க்கை வாழ்ந்து கோவலர் பட்டம் கவித்துப்
பண்டை மணாட்டிமார் முன்னே பாது காவல் வைக்கும் கொலோ – 3-8- 7-)
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை -என்னும் படி –
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில் என்று தொடங்கி –
பண்டு அவன் செய்த க்ரீடை எல்லாம் என்கிறபடி
ஸ்ரீ கிருஷ்ண குண சேஷ்டிதம் பேசி அனுபவிக்கையாலும்
(வண்ண மாடங்கள் சூழ்திருக் கோட்டியூர்
கண்ணன் கேசவன் நம்பி பிறந்தினில்
எண்ணெய் சுண்ணம் எதிரெதிர் தூவிடக்
கண்ணன் முற்றம் கலந்துஅள ராயிற்றே.–1-1-1-)
(வண்டுகளித்திரைக்கும் பொழில் சூழ் வரு புனல் காவிரித் தென்ன ரங்கன்
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான் விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன் அடியார்களாகி
எண் திசைக்கும் விளக்காகி நிற்பார் இணை யடி என் தலை மேலனவே–2-9-11-)
நப்பின்னை தன் திறமா நல் விடை ஏழு அவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே -என்றும்
ஐய புழுதி (3-7)-நல்லதோர் தாமரை -(3-8)இவைகளில் திருத் தாயார் பேச்சாக பேசுகையாலும்
(துப்புடை யயார்கள் தம் சொல் வழுவாது ஒருகால் தூய கருங்குழல் நல் தோகை மயிலனைய
நப்பினை தன் திறமா நல் விடை யேழவிய நல்ல திறலுடைய நாதனும் ஆனவனே
தப்பின பிள்ளைகளைத் தன மிகு சோதி புகத் தனி யொரு தேர் கடவித் தாயொடு கூட்டிய என்
அப்ப எனக்கு ஒருகால் ஆடுக செங்கீரை ஆயர்கள் போரேறே ஆடுக ஆடுகவே–1-5-7-)
தழை களும் (3-4) இத்யாதி அளவாய் கன்னிமார்கள் காமுற்ற மாற்றத்தைப் பேசுகையாலும்
(விண்ணின் மீது அமரர்கள் விரும்பித் தொழ மிறைத்து ஆயர் பாடியில் வீதி யூடே
கண்ணங் காலிப் பின்னே எழுந்தருளக் கண்டு இளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டமர் பொழில் புதுவையர் கோன் விட்டு சித்தன் சொன்ன மாலை பத்தும்
பண்ணின்பம் வரப் பாடும் பத்தருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே–3-4-10-)
இதிலே முகில் வண்ணன் -என்றத்தை —
விட்டு சித்தன் மனத்தைக் கோயில் கொண்ட கோவலனை கொழும் குளிர் முகில் வண்ணனை -என்கையாலும்
(வேயர் தங்கள் குலத்துதித்த விட்டுசித்தன் மனத்தே
கோயில் கொண்ட கோவலனைக் கொழுங்குளிர் முகில் வண்ணனை
ஆயரேற்றை அமரர் கோவை அந்தணர் தமமுதத்தினை
சாயை போலப் பாட வல்லார் தாமும் அணுக்கர்களே–5-4-11-)
கோவலர் தம் பொற் கொடியே -என்கிறது பெரியாழ்வாரை –
————————————————————————–
ஏழாம் பாட்டில் –
நற் செல்வன் தங்காய் -என்கிறது
தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –
ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக -தம் பால் ஆதரம் பெருக வைத்த அழகன் -என்றும் –
உடல் எனக்கு உருகுமாலோ -என்றும் –
கண்ணனைக் கண்ட கண்கள் பனி யரும்பு உதிருமாலோ -என்றும் -தம்முடைய பக்தியைப் பேசுகையாலும் –
கற்றினம் மேய்த்த கழல் இணைக் கீழ் உற்ற திரு மாலைப் பாடுகையாலும் –
(சூதனாய்க் கள்வனாகித் தூர்தரோடு இசைந்த காலம்
மாதரார் கயல் கண் என்னும் வலையுள் பட்டு அழுந்துவேனை
போதரே என்று சொல்லிப் புந்தியுள் புகுந்து தம் பால்
ஆதரம் பெருக வைத்தான் அழகனூர் அரங்கம் அன்றே–16-)
(குட திசை முடியை வைத்து குண திசை பாதம் நீட்டி
வட திசை பின்பு காட்டி தென் திசை இலங்கை நோக்கிக்
கடல் நிறக் கடவுள் எந்தை அரவணைத் துயிலுமா கண்டு
உடல் எனக்கு உருகுமாலோ என் செய்கேன் உலகத்தீரே–-19-)
(இனித் திரைத் திவலை மோத வெறியும் தண் பரவை மீதே
தனிக்கிடந்து அரசு செய்யும் தாமரைக் கண்ணன் எம்மான்
கனி இருந்தனைய செவ்வாய்க் கண்ணனைக் கண்ட கண்கள்
பனியரும்புதிரு மாலோ வென் செய்கேன் பாவியேனே-18-)
(மற்றுமோர் தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள்
உற்ற போது அன்றி நீங்கள் ஒருவன் என்று உணர மாட்டீர்
அற்றமேல் ஓன்று அறியீர் அவனை அல்லால் தெய்வம் இல்லை
கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை பணிமின் நீரே–-9-)
மழைக்கு அன்று வரை முன் ஏந்தும் மைந்தனே -என்று குன்று குடையாக எடுத்த படியைப் பேசுகையாலும்
(மழைக்கன்று வரை முன் ஏந்தும் மைந்தனே மதுரவாறே
உழைக்கன்றே போல நோக்கம் உடையவர் வலையில் பட்டு
உழைக்கின்றேற்கு என்னை நோக்காது ஒழிவதே யுன்னை என்னே
அழைக்கின்றேன் ஆதி மூர்த்தி அரங்க மா நகர் உளானே –36-)
கவள மால் யானை கொன்ற கண்ணனை என்கையாலும்
(வள வெழும் தவள மாட மதுரை மா நகரம் தன்னுள்
கவளமால் யானை கொன்ற கண்ணனை யரங்கமாலைத்
துளவத் தொண்டைய தொல் சீர்த் தொண்டர் அடிப் பொடி சொல்
இளைய புன் கவிதை ஏலும் எம்பிராற்கு இனியவாறே-45)
ஸ்ரீ மாலாகாரரைப் போலே செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சி எண்பகர் பூவும் கொணர்ந்து சாற்ற-
அத்தால் வந்த கைங்கர்ய ஸ்ரீ யை யுடைய -பெரியாழ்வாருக்கு பிற்பாடராய்
அவர் கைங்கர்ய ஸ்ரீ யை அநு விதானம் பண்ணுகையாலே
அவருக்கு அநுஜர் (நற் செல்வன் தங்காய்) என்னும் படியாய் –
திருப் பள்ளி உணர்த்துவதிலும் வந்தால் விஷ்ணு சித்த துளஸீ ப்ருத்யர் -என்று ஸஹ படிதர் ஆகையாலும்
நற் செல்வன் தங்காய் என்கிறது ஸ்ரீ தொண்டர் அடிப் பொடி ஆழ்வாரை -என்கை –
(இன்னமும் ஆழ்வாருடைய வைபவத்துக்கு உறுப்பாக சாமான்யேன பாகவத வைபவத்தை பல உதாஹரணங்களாலும் பிரகாசிப்பியா நின்று கொண்டு
இவ் ஆகாரங்கள் அறிவார்க்கு இறே- ஜென்மத்தில் உத்கர்ஷம் அபகர்ஷம் தெரிவது என்கிறார் மேல் ஒரு சூரணையாலே..
1-ம்லேச்சனும் பக்தன் ஆனால் சதுர் வேதிகள் அனுவர்த்திக்க அறிவு கொடுத்து -குல தெய்வத்தோடு ஒக்க பூஜை கொண்டு –
பாவன தீர்த்த பிரசாதனாம் என்கிற திரு முகப் படியும் –
2-விச்வாமித்ர ,விஷ்ணு சித்த ,துளஸீ பிரித்யரோடே உள் கலந்து -தொழு குலமானவன் ,
நிலையார் பாடலாலே , ப்ராஹ்மண வேள்வி குறை முடித்தமையும்-சூரணை -ஆச்சார்ய ஹிருதயம் 85-
(துளஸீ ப்ருத்யர் -துளவத் தொண்டு செய்த தொண்டர் அடிப் பொடி ஆழ்வார் – தொழு குலமானவர்-நம்பாடுவான் / ப்ராஹ்மணன் -ஸோம சர்மா )
இவரும்-இதிலே -சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக்கு இனியானை -என்றத்தை –
இலங்கையர் குலத்தை வாட்டிய வரி சிலை வானவர் ஏறே-என்றும்
செருவிலே அரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார் -என்றும் -அருளிச் செய்தார் இறே –
(மேட்டு இள மேதிகள் தளை விடும் ஆயர்கள் வேயம் குழல் ஓசையும் விடை மணி குரலும்
ஈட்டிய இசை திசை பரந்தன வயலுள் இரிந்தன சுரும்பினம் இலங்கையர் குலத்தை
வாட்டிய வரி சிலை வானவர் ஏறே மாமுனி வேள்வியை காத்து அவபிரதம்
ஆட்டிய அடு திறல் அயோத்தி எம் அரசே! அரங்கத்தம்மா! பள்ளி எழுந்து அருளாயே–-4-)
(ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைத்து உலகங்கள் உய்யச்
செருவிலே யரக்கர் கோனைச் செற்ற நம் சேவகனார்
மருவிய பெரிய கோயில் மதிள் திருவரங்கம் என்னா
கருவிலே திரு விலாதீர் காலத்தைக் கழிக்கின்றீரே–11-)
——————————————————————
எட்டாம் பாட்டிலே –
போதரிக் கண்ணினாய் -என்கிறது
திருப் பாண் ஆழ்வாரை -அது எங்கனே என்னில் –
தொண்டர் அடிப் பொடியாரோபாதி –
அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -என்றும் –
எண் கண்ணின் உள்ளன -என்றும் –
கொண்டல் வண்ணன் கோவலனாய் என்று தொடங்கி -என் அமுதினைக் கண்ட கண்கள் என்கையாலே
போதரிக் கண்ணினாய் -என்கிறது திருப் பாண் ஆழ்வாரை –
(அமலனாதிபிரான் அடியார்க்கு என்னை ஆட்படுத்த
விமலன் விண்ணவர் கோன் விரையார் பொழில் வேங்கடவன்
நிமலன் நின்மலன் நீதி வானவன் நீண் மதிள் அரங்கத்தம்மான் திருக்
கமல பாதம் வந்து என் கண்ணினுள்ளன ஒக்கின்றதே ——1-)
கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணெய்
உண்டவாயன் என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக்
கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே— 10–)
(திருவில் ஆரம்பித்து திருவில் முடித்தார் பேயாழ்வார்
திருவடி யில் ஆரம்பித்து திருவடியில் முடித்தார் ஆண்டாள்
கண்ணில் ஆரம்பித்து கண்ணில் முடித்தார் -திருப்பாண் ஆழ்வார்)
மெய்ம்மையை மிக உணர்ந்து -என்று ததீய சேஷத்வ பர்யந்தமான ஞானம் இறே ஞானமாவது
ததீயருக்கு உகப்பாகப் பண்ணும் பகவத் அனுபவம் இறே இவரது –
ஸ்த்ரீத்வ பாவனையில் யுண்டான பக்தி பத்தும் பத்தாக
அடி தொடங்கி முடி அளவுமாய் மேலாய் இருக்கும் –
இப் பாட்டில்
பொல்லா அரக்கனைக் கிள்ளிக் களைந்தானை -என்றத்தை –
இவரும் -சதிர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து உத்திர ஓட்டியோர் வெங்கணை உய்த்தவன் -என்றார் இறே –
(சதுர மா மதிள் சூழ் இலங்கைக்கு இறைவன் தலை பத்து
உதிர வோட்டி ஓர் வெங்கணை வுய்த்தவன் ஓத வண்ணன்
மதுர மா வண்டு பாட மா மயிலாட அரங்கத்தம்மான் திரு வயிற்று
உதர பந்தம் என்னுள்ளத்துள் நின்றுலாகின்றதே —-4-)
————————————————————————–
ஒன்பதாம் பாட்டில் –
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் நங்காய் -என்கிறது
நம்மாழ்வாரை -அது எங்கனே என்னில் –
(யத் கோ ஸஹரஸ்ர மபஹந்தி தமாம்ஸி பும்ஸாம்
நாராயணோ வஸதி யத்ர ஸசங்க சக்ர: |
யந் மண்டலம் ஸ்ருதி கதம் ப்ரணமந்தி விப்ரா:
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய ||–(ஸ்ரீ பராங்குச அஷ்டகம் ஸ்லோகம் 4)
சூர்யனுடைய ஆயிரம் கிரணங்கள் வெளி இருளைப் போக்குவது போலே யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் உடைய
ஆயிரம் பாசுரங்கள் சகல சேதனர்களுடையவும் அகவிருளைத் தொலைக்கின்றனவோ,
சூர்யன் இடத்தில் ஸ்ரீ நாராயணன் சங்கு சக்கரங்களோடு கூடி விளங்குவது போல்
அப்பெருமான் யாவர் ஒரு ஸ்ரீ ஆழ்வார் இடத்தில் அவ்விதமாகவே உறைகின்றானோ,
வேத ப்ரதிபாத்யமான ஸூர்ய மண்டலத்தை அந்தணர்கள் வணங்குவது போலே யாவரொரு
ஸ்ரீ ஆழ்வார் யுடைய திவ்ய ஸ்தலம் செவிப்பட்ட யுடனே பரம பாகவதர்கள் கை கூப்பி வணங்குவார்களோ –
அப்படிப்பட்ட ஸ்ரீ நம்மாழ்வார் ஆகிற ஸூர்யனை வணங்குவோமாக!)
திருமாலுக்கு உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் (6-9-11)என்னும் படியான சேஷத்வ பூர்த்தியை யுடையவராய் –
அவன் அடியராய் நனிமாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே -என்னும்படி
பாகவத ஸம்ருத்தியைக் காண்கையிலே-அபிவ்ருத்த மநோ ரதத்தை யுடையராய் –
அனயாப தேசத்திலும் -அடிச்சியோம் என்கையாலும் –
பின்னை கொல்-என்கிற ஒப்பனையாலும் –
(தெரிதல் நினைதல் எண்ண லாகாத் திருமாலுக்கு
உரிய தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன்
தெரியச் சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்
உரிய தொண்ட ராக்கும் உலகம் உண்டாற்கே.–6-9-11-)
(தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத் தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-)
(பின்னை கொல் நிலா மா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட்டாள்
என்ன மாயம் கொலோ இவள் நெடுமால் என்றே நின்று கூவுமால்
முன்னி வந்தவன் நின்று இருந்து உறையும் தொலை வில்லி மங்கலம்
சென்னியால் வணங்கும் அவ் ஊர் திரு நாமம் கேட்பது சிந்தையே –6-5-10-)
சூட்டு நன் மாலைகள் -என்று தொடங்கி –
அடலாயர் தம் கொம்பினுக்கே -என்று நப்பின்னைப் பிராட்டிக்காக அவன் விடை யடர்த்த வியாபாரத்தை பேசியும் –
(சூட்டு நன் மாலைகள் தூயன ஏந்தி வானோர்கள் நன்னீர்
ஆட்டி அம் தூபம் தரா நிற்கவே அங்கு ஓர் மாயையினால்
ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ண போந்தி மிலேற்றுவன் கூன்
கூட்டிடை ஆடின கூத்து அடல் ஆயர் தம் கொம்பினுக்கே –21-)
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலான -என்றும்
என்னை நெகிழ்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் -என்றும் –
வேயின் மலி யுரை தோளி பின்னைக்கு மணாளனை(3-9-8) -இத்யாதியாலும் –
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன் தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேன் –(10-4-3)
ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் -என்றும் –
எருது ஏழ் தழி -(4-2-5)-என்றும் -கறையினார் (4-8-4)-என்றும் -இத்யாதியாலே
பல படியாக அவள் புருஷகார வைபவத்தை ஆதரித்து –
(என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8-)
(வேயின் மலிபுரை தோளி பின்னைக்கு மணாளனை
ஆய பெரும்புகழ் எல்லை இலாதன பாடிப்போய்க்
காயம் கழித்து,அவன் தாளிணைக் கீழ்ப்புகும் காதலன்,
மாய மனிசரை என்சொல வல்லேன் என்வாய் கொண்டே?–3-9-8-)
(ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறை உடையம்
மீள்கின்றதில்லை பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப்பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே–10-4-3-)
(நிறையினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
(தோளி சேர் பின்னை பொருட்டு எருது ஏழ் தழீஇக்
கோளியார், கோவலனார்,குடக் கூத்தனார்
தாள் இணை மேல் அணி தண் அம் துழாய் என்றே
நாளும் நாள் நைகின்றதால் என்றன் மாதரே.–4-2-5—)
பொறையினால் முலை யணைவான் பொரு விடை ஏழு அடர்த்த உகந்த
கறையினார் துவர் உடுக்கைக் கடையாவின் கழி கோல் கை
சறையினார் கவராத தளிர் நிறத்தால் குறைவிலமே –4-8-4-)
மற்றும் எத்திறம் என்று பிறந்த வாற்றிலே கிருஷ்ண சேஷ்டிதங்களிலே ஈடுபட்டு
(பத்துடை யடியவர்க்கு எளியவன் பிறர்களுக்கு அரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும் நம் அரும் பெறல் அடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவே –1-3-1-)
(பிறந்த வாறும் வளர்ந்த வாறும் பெரிய பாரதம் கை செய்து ஐவர்க்குத்
திறங்கள் காட்டி யிட்டுச் செய்து போன மாயங்களும்
நிறந்த னூடு புக்கென தாவியை நின்று நின்று ருக்கி உண்கின்ற இச்
சிறந்த வான் சுடரே! உனை என்று கொல் சேர்வதுவே?–5-10-1-)
குரவை ஆய்ச்சியரிலே நண்ணி வணங்கி அனுபவித்தும்
(குரவை ஆய்ச்சியரோடு கோத்ததும் குன்றம் ஒன்று ஏந்தியதும்
உரவுநீர்ப் பொய்கை நாகங் காய்ந்ததும் உள்பட மற்றும் பல
அரவில் பள்ளிப் பிரான் தன் மாய வினைகளையே அலற்றி
இரவும் நன்பகலும் தவிர்கிலன் என்ன குறைவு எனக்கே.–6-4-1-)
(மண் மிசைப் பெரும்பாரம் நீங்க ஓர் பாரத மா பெரும் போர்
பண்ணி மாயங்கள் செய்து சேனையைப் பாழ்பட நூற் றிட்டுப் போய்
விண் மிசைத் தன தாமமே புக மேவிய சோதி தன் தாள்
நண்ணி நான் வணங்கப் பெற்றேன் எனக்கார் பிறர் நாயகரே-6-4-10-)
எல்லாம் கண்ணன் -என்றும் –
(உண்ணுஞ் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையு மெல்லாம்
கண்ணன் எம் பெருமான் என்றென்றே கண்கள் நீர்மல்கி
மண்ணினுள் அவன் சீர் வளம் மிக்கவன் ஊர் வினவித்
திண்ணம் என் இளமான் புகுமுர் திருக் கோளூரே.–6-7-1-)
நீராடப் போதுவீர்-என்றத்தை -கண்ணன் கழலிணை நண்ணும் மனமுடையீர் -என்கையாலும் –
(கண்ணன் கழலிணை-நண்ணும் மனம் உடையீர்
எண்ணும் திருநாமம்-திண்ணம் நாரணமே–10-5-1-)
மந்தாதிகாரிகளை -என் நெஞ்சால் நோக்கிக் காணீர்-என்று உணர்த்தியும் –
(என் நெஞ்சினால் நோக்கிக் காணீர் என்னை முனியாதே
தென்னன் சோலைத் திருக் குறுங்குடி நம்பியை நான் கண்ட பின்
மின்னு நூலும் குண்டலமும் மார்பில் திரு மறுவும்
மன்னு பூணும் நான்கு தோளும் வந்தெங்கும் நின்றிடுமே.–5-5-2-)
சகோதரிகளை உயிராகத் தேடி -இசைமின் (திரு விருத்தம்-30)என்று போதிக்கையாலும்-
(அன்னம் செல்வீரும் வண்டானம் செல்வீரும் தொழுது இரந்தேன்
முன்னம் செல்வீர்கள் மறவேல்மினோ,கண்ணன் வைகுந்தனோடு
என் நெஞ்சினாரைக் கண்டால் என்னை சொல்லி அவர் இடை நீர்
இன்னும் செல்லீரோ இதுவோ தகவு என்று இசைமின்களே –30-)
நீராட -என்றத்தை -காலை நன் ஞானத் துறை படிந்தாடி -(திரு விருத்தம்-93 )என்றும் –
அப்பன் திருவருள் மூழ்கினன் -என்கையாலும் –
(காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –)
(புனையிழைகள் அணிவும் ஆடையுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மையதன்று இவட்கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-)
இதில் நாணாதாய் என்றத்தை -நாணும் நிறைவும் எனக்கு இங்கு இல்லை -என்றும்
நா உடையாய் என்றத்தை -என் நா முதல் வந்து புகுந்து -என்றும் –
வலக்கை ஆழி இடக்கை சங்கம் இவை யுடை மால் வண்ணனை மலக்குடை நாவுடையேன் -(6-4-9)என்கையாலே
எங்களை முன்னம் எழுப்புவான் வாய் பேசும் -என்கிறது நம்மாழ்வாரை –
(ஆ முதல்வன் இவன் என்று தன் தேற்றி என்
நா முதல் வந்து புகுந்து நல் இன்கவி
தூ முதல் பத்தர்க்குத் தான் தன்னைச் சொன்ன என்
வாய் முதல் அப்பனை என்று மறப்பனோ!–7-9-3-)
(கலக்க ஏழ்கடல் ஏழ்மலை உலகேழும் கழியக் கடாய்
உலக்கத் தேர் கொடு சென்ற மாயமும் உட்பட மற்றும்பல
வலக்கை ஆழி இடக்கைச் சங்கம் இவை யுடை மால் வண்ணனை
மலக்கு நாவுடையேற்கு மாறுளதோ இம் மண்ணின் மிசையே?–6-4-9-)
இப்பாட்டில் –
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக் கையன் பங்கயக் கண்ணானைப் பாட -என்றதையே
பங்கயக் கண்ணனையே -என்றும்-பங்கயக் கண்ணன் என்கோ-(3-4-2) என்றும்
வீவில் சீரன் மலர்க கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை வீவில் காலம் இசை மாலைகள் ஏத்தி -என்றும் பேசினார் இறே –
(கூவுமாறு அறிய மாட்டேன், குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ! விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ! ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான் பங்கயக் கண்ண னையே.–3-4-2-)
(பங்கயக் கண்ணன் என்கோ! பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ! அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ! திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ சாதி மாணிக்கத்தையே!–3-4-3-)
(வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்த நம் அச்சுதன்
வீவு இல் சீரன் மலர்க் கண்ணன் விண்ணோர் பெருமான் தன்னை
வீவு இல் காலம் இசை மாலைகள் ஏத்தி மேவப் பெற்றேன்;
வீவு இல் இன்பம் மிக எல்லை நிகழ்ந்தனன் மேவியே.–4-5-3-)
—————————————————–
பத்தாம் பாட்டில் –
எல்லே இளங்கிளியே என்கிறது –
திரு மங்கை ஆழ்வாரை-அது எங்கனே என்னில் –
முளைக்கதிரை
மென் கீழ் போல் மிக மிழற்றும் என் பேடையே
அடிகள் அடியே நினையும் அடியவர்கள் தாம் அடியான் (2-6)என்று சேஷத்வத்தின் எல்லை நிலத்தில் நிற்கையாலும்
(கடி கமழு நெடு மறுகில் கடல் மல்லைத் தல சயனத்து
அடிகளடியேநினையும் அடியவர்கள் தம்மடியான்
வடி கொள் நெடு வேல் வலவன்கலிகன்றி யொலி வல்லார்
முடி கொள் நெடுமன்னர் தம் முதல்வர் முதலாவாரே—2-6-10-)
ஸ்த்ரீத்வத்வ அநு குணமாக பேராளன் பேரோதும் பெண்ணை என்றும்–
கடி மா மலர்ப் பாவை ஒப்பாள் என்றும்3(-7-9)
லஷ்மீ சாம்யத்தை யுடையராய் இருக்கும் இருப்பை பேசுகையாலும்
(தேராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன் மலங்கச் செந்தீ யொல்கிப்
போராளன் ஆயிரம் தோள் வாணன் மாளப் பொரு கடலை யரண் கடந்து புக்கு மிக்க
பாராளன் பாரிடந்து பாரையுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன் பேரோதும் பெண்ணை மண் மேல் பெரும் தவத்தள் என்றல்லால் பேசலாமே -20-)
(காவியங்கண்ணி எண்ணில் கடி மா மலர்ப்பாவை யொப்பாள்
பாவியேன் பெற்றமையால் பணைத் தோளி பரக்கழிந்து
தூவி சேர் அன்னம் அன்ன நடையாள் நெடுமாலொடும் போய்
வாவி யந்தண் பணை சூழ் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-9-)
பேராளன் பேரோதும் பெரியோரை ஒரு காலும் பிரிகிலேனே (7-4)-என்றும் –
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு–இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -என்றும்
தத் அனுபவ தத் பரராய் தத் ப்ரீதி ஹேதுவாக –
(தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-)
(பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இதுகாணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6-)
ஆயர் பூம் கொடிக்கு இனவிடை பொருதவன் -என்றும் –
பின்னை பெறும் தம் கோலம் பெற்றார் -என்றும் –
பின்னை மணாளர் தம் திறத்தும் (11-2)என்றும் –
அன்றாயர் குல மகளுக்கு அரையன் தன்னை -என்றும் –
நப்பின்னை பிராட்டி புருஷகாரத்தை அடியே தொடங்கி முடிய நடத்தியும் –
(ஆங்கு மாவலி வேள்வியில் இரந்து சென்று அகலிடம் அளந்து
ஆயர் பூங்கொடிக்கு இனவிடை பொருதவனிடம் பொன் மலர் திகழ் வேங்கை
கொங்கு செண்பகக் கொம்பினில் குதி கொடு குரக்கினம் இரைத்தோடி
தேன் கலந்த தண் பலங்கனி நுகர் தரு திருவயிந்திரபுரமே–3-1-5-)
(செறும் திண் திமில் ஏறு உடைய பின்னை
பெறும் தண் கோலம் பெற்றாரூர் போல்
நறும் தண் தீம் தேனுண்ட வண்டு
குறிஞ்சி பாடும் கூடலூரே—5-2-2-)
(அன்றாயர் குலமகளுக் கரையன் றன்னை அலைகடலைக் கடைந்தடைத்த அம்மான் றன்னை,
குன்றாத வலியரக்கர் கோனை மாளக் கொடுஞ்சிலைவாய்ச் சரந்துரந்து குலங்க ளைந்து
வென்றானை, குன்றெடுத்த தோளி னானை விரிதிரைநீர் விண்ணகரம் மருவி நாளும்
நின்றானை, தண்குடந்தைக் கிடந்த மாலை நெடியானை அடிநாயேன் நினைந்திட் டேனே.)
நீராடப் போதுவீர் -என்றத்தை –
பொற்றாமரைக் கயம் நீராடப் போனாள் (19)என்றும் –
(முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,
பொற்றாம ரைக் கயம் நீ ராடப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.)
சந்த மலர்க குழல் (10-4)–பூம் கோதை (10-5)–
எங்கானும் (10-6)-மானமுடைத்து-(10-7)இத்யாதிகளிலே -கிருஷ்ண குண சேஷ்டிதங்களை மண்டி அநு பவித்து –
பண்டிவன் ஆயன் நங்காய் (3-7)-என்று தொடங்கி –
அவன் பின் கெண்டை ஒண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து -என்றும்
மென் கிளி போல் மிக மிழற்றும் (15)-என்கையாலும் –
இளம் கிளியே -என்கிறது திரு மங்கை ஆழ்வாரை –
(பண்டு இவன் ஆயன் நங்காய் ! படிறன் புகுந்து என் மகள் தன்
தொண்டை யஞ் செங்கனிவாய் நுகர்ந்தானை உகந்து அவன் பின்
கெண்டை யொண் கண் மிளிரக் கிளி போல் மிழற்றி நடந்து
வண்டமர் கானல் மல்கும் வயலாலி புகுவர் கொலோ ?–3-7-2-)
(கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.)
(வல்லே யுன் கட்டுரைகள் பண்டே உன் வாய் அறிதும் -என்னும் அது உண்டு இவருக்கும் )
இப் பாட்டில்
வல்லானை கொன்றானை என்கிற வித்தை
ஆவரிவை செய்து அறிவார் (3-3)இத்யாதியாலும்
கரி முனைந்த கைத்தலமும்-(25)என்றும் அருளிச் செய்தார் –
(ஆவர் இவை செய்தறியார் அஞ்சன மா மலை போலே
மேவு சினத்து அடல் வேழம் வீழ முனிந்து அழகாய
காவி மலர் நெடும் கண்ணார் கை தொழ வீதி வருவான்
தேவர் வணங்கு தண் தில்லைத் சித்திர கூடத்துள்ளானே–3-3-7-)
(மின்னிலங்கு திருவுருவும் பெரிய தோளும் கரிமுனிந்த கைத்தலமும் கண்ணும் வாயும்,
தன்னலர்ந்த நறுந்துழாய் மலரின் கீழே தாழ்ந்திலங்கும் மகரம்சேர் குழையும் காட்டி
என்னலனும் என்னிறையும் எஞ்சிந் தையும் என்வளையும் கொண்டென்னை யாளுங் கொண்டு,
பொன்னலர்ந்த நறுஞ்செருந்திப் பொழிலி னூடே புனலரங்க மூரென்று போயி னாரே.)
—————————————————-
இப்படி யாயிற்று இப் பத்து பாட்டுக்கும்
குண சாம்யத்தாலும்-கௌரவ்யதையாலும்-பத்துப் பெண்களை எழுப்புகிற முகத்தால்
ஆழ்வார்கள் பதின்மரையும் கூட்டிக் கொண்டு
ஆழ்வார் திரு மகளார் அனுசந்திக்கிறதாக அறுதி இட்டார்கள் –
இப்படி பக்தராய் முக்தராய் இருப்பார் ஆழ்வார்கள் –
அநந்தரம்
நித்ய கைங்கர்ய நிரதரான நித்யரையும் –
நித்ய அநபாயினியான பிராட்டியையும் உணர்த்தி-
இவர்களை முன்னிட்டு
நித்ய முக்த அநு பாவ்யானான எம்பெருமானைப் பற்றும் படி சொல்லுகிறது –
நாயகன் -தொடங்கி -அஞ்சு பாட்டாலே –
(ஜனபத சரித் அந்தரீப புஷ்யத் புர பரிபாலந நித்ய ஜாக ரூகாந்
ப்ரஹரண பரிவார வாஹந ஆட்யாந் குமுத முகாந் கண நாயகாந் நமாமி –ஸ்ரீ ரெங்க ராஜ ஸ்தவம்–பூர்வ சதகம்–32-என்றும்
குமுதாதி கண நாதர்கள்–ஆயுதங்கள் பரிவாரங்கள் -வாஹனங்கள் உடன் ரக்ஷணத்தில் மும்முரமாக உள்ளனர் –)
ஸ்மேர ஆநந அஷி கமலை நமத புநா நாந் தம்ஷ்ரா கதா ப்ருகுடிபிர் த்விஷத துநாநாத்
சண்ட ப்ரசண்ட முகத ப்ரணமாமி ரங்க த்வார ஆவளீஷு சதஸ்ருஷு அதிகார பாஜ –37–என்றும் –
கோரைப் பற்களாலும் புருவ நெறிப்பாலும் அடியார் விரோதிகளை அச்சம் கொள்ளச் செய்கின்றனர்
தெற்கு வாசல் –பத்ரன் -ஸூ பத்ரன் –வடக்கு வாசல் -தாத்ரு –விதாத்ரு –மேற்கு வாசல் -ஜெயன் விஜயன் –கிழக்கு வாசல் -சண்டன் -ப்ரசண்டன்)
ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிஸ் ரியாம -என்றும் –
ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம் யம்பாம் -என்றும்
(ஸ்ரீ ரெங்க சந்த்ர மசம் இந்திரியா விஹர்த்தும் விந் யஸ்ய விஸ்வ சித் அசித் நயன அதிகாரம்
ய நிர்வஹதி அநிசம் அங்குளி முத்ரயா ஏவ ஸேநாந்யம் அந்ய விமுகா தம் அசிஸ் ரியாம -50—ஸ்ரீ விஷ்வக் சேனரை ஸ்துதிக்கிறார்
ஸைன்ய துரீண ப்ராண ஸஹாயம் ஸூத்ரவதீம் ஆஸீஸ்ரியம்
ஸ்ரீ பத லாஷா லாஞ்ச்சித சேவா ப்ரோத லசத்தோர் வல்லி விலாசம் –51—ஸூத்ரவதி தேவியை ஸ்துதிக்கிறார்)
(ஓம் நமோ கஜவக்த்ராத்யை பாரிஷத்யை ப்ரசாஸதே
ஸ்ரீ ரங்கராஜ ஸேநான்யே ஸூத்ரவத்யா ஸமே யுஷே–ஸ்ரீ விஷ்வக் சேனர் ஸ்துதி–பகவத் குண தர்ப்பணம் )
நம ஸ்ரீ ரெங்கே நாயக்யை யத் ப்ரு விப்ரம பேதத ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்னோன்னதமிதம் ஜகத் என்றும்
ஸ்ரீ பெரிய பிராட்டியார் (பங்குனி உத்தரம்)
நம: ஸ்ரீரங்க நாயக்யை யத் ப்ரோ விப்ரம பேதத: |
ஈசேசிதவ்ய வைஷம்ய நிம்நோந்நதம் இதம் ஜகத் ||
எவளது புருவ நெறிப்பு ஜீவர்களின் நிலையைப் பாமரன் என்றோ பண்டிதன் என்றோ,
செல்வன் என்றோ தரித்ரன் என்றோ நிர்ணயிக்கிறதோ அந்த ஸ்ரீ ரங்க நாச்சியாரை வணங்குகிறேன்.
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜஸ் ஸ்ரீ ரெங்கேசயம் ஆஸ்ரயே சிந்தாமணி மிவோத் பாந்த முத் சங்கே நந்த போகின -என்றும் சொல்லுகிறபடி
(ஸ்ரீ பெரிய பெருமாள் (பங்குனி ரேவதி)
ஸ்ரீ ஸ்தநாபரணம் தேஜ: ஸ்ரீரங்கேசயம் ஆச்ரயே |
சிந்தாமணிம் இவோத்வாந்தம் உத்ஸங்கே அநந்தபோகிந: ||
ஸ்வயம் ப்ரகாசமானவனும், ஸ்ரீ மஹாலக்ஷ்மித் தாயாரின் திருமார்பில் ஒளிரும் அணிகலன் போன்றவனும்,
ஸ்ரீ ஆதிசேஷன் உமிழ்ந்த மணி போல் ஜ்வலிப்பவனுமான ஸ்ரீரங்க விராமனான
ஸ்ரீரங்கநாதனை அடியேன் சரண் அடைகிறேன்.)
வைகுந்தத்து அமரரான கோயில் கொள் தெய்வங்களையும்–
வானவர்களையும்
தேவியர்களையும்
அயர்வறும் அமரர்கள் அதிபதியை
ஆயிரம் முகத்தினால் காப்பாருடை யவதாரமானவரையும் –
அவர்களையும் அதி சங்கை பண்ணி நெருங்க அனைத்துக் கொண்டு
கிடக்குமவர்களையும் எழுப்பி
அவர்களுடனே எம்பெருமான் திருவடிகளில் சென்று கிட்டி அபேக்ஷிதங்களை அர்த்திக்கும் படி சொல்லுகிறது
(வைகுந்தம் புகுதலும் வாசலில் வானவர்
வைகுந்தன் தமர் எமர் எமது இடம் புகுது என்று
வைகுந்தத்து அமரரும் முனிவரும் வியந்தனர்
வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே–10-9-9-)
(கோயில் கொண்டான் தன் திருக் கடித் தானத்தை
கோயில் கொண்டான் அதனோடும் என் நெஞ்சம்
கோயில் கொள் தெய்வமெல்லாம் தொழ
வைகுந்தம் கோயில் கொண்ட குடக் கூத்த வம்மானே–8-6-5-)
ஸ்ரீ யை நம –
ஸ்ரீ தராய நம -என்று இறே க்ரமம் இருப்பது –
உள்ளத்துக்கு கொண்டு முனிவர்களும் யோகிகளும் -என்றதிலே
முமுஷுக்களாய் முக்தரோடு சாம்யம் பெற்ற (விண்ணுள்ளாரிலும் சீரியரான )
நாத முனிகள்
யாமுன யோகி(முனிகளும் -அவர் குண அனுபவ நிஷ்டர் யோகிகளும் -இவர் கைங்கர்ய நிஷ்டர் )
யதி வராதிகளும் ஸூசித்தர் –
இது குரு பரம்பரையின் அடைவு –
ஆறாயிரப்படியில் -நாயனார் –(17 பாசுர அவதாரிகையில் )
பெறுகைக்குப் புறப்படுகிற திரளை
பெற்று அனுபவிக்கிற ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமானவரை எழுப்புகிறார்கள் –
அவர்கள் முன்னாக கிருஷ்ணனைப் பெற வேண்டுகையாலே –
அதாவது
வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் பெருமானை திருப் பாதம் பணிகை இறே –
(வேதம் வல்லார்களைக் கொண்டு* விண்ணோர் பெருமான் திருப்-
பாதம் பணிந்து,* இவள் நோய்* இது தீர்த்துக் கொள்ளாது போய்*
ஏதம் பறைந்து அல்ல செய்து* கள் ஊடு கலாய்த் தூய்,*
கீதம் முழவு இட்டு* நீர் அணங்கு ஆடுதல் கீழ்மையே. )
(வேதம் வல்லார்களைக் கொண்டு–பாசுரங்கள் 6-15 விண்ணோர் –பாசுரங்கள் -16-20
பெருமானை திருப் பாதம் பணிகை இறே–பாசுரங்கள் 21-29-)
நல் ஞானத் துறை படிந்தாடி -(திரு விருத்தம் -93)என்னுமா போலே –
நல் ஞானம் ஆகிறது -ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் அவனே என்று இருக்கை-
விஞ்ஞானம் யதீதம் பிராப்தம் –என்னுமா போலே —
துறையாவது முறை தப்பாமல் குரு பரம்பரை வழியே பற்றுகை –
த்வய நிஷ்டருக்கு குரு பரம்பரையே பிரதானமாகக் கடவது –
துறை தப்பாதார் ஸ்ரீ விபீஷண ஆழ்வான் போல்வார் –
(காலை வெய்யோற்கு முன்னோட்டுக் கொடுத்த கங்குல் குறும்பர்
மாலை வெய்யோன் பட வையகம் பரவுவர் அன்ன கண்டும்
காலை நன் ஞானத் துறை படிந்தாடிக் கண் போது செய்து
மாலை நல் நாவில் கொள்ளார் நினையார் அவன் மைப்படியே – – -93 –)
வேதம் வல்லார்கள் என்றவிடத்து
குரு பரம்பரையை நினைத்து –
கீழ் பத்துப் பட்டாலும் அனுஷ்ட்டித்தார்கள் –
விண்ணோர் பெருமானில்-விண்ணோர் என்கிறது –
த்வார பாலர்கள் தொடக்கமான திவ்ய மஹிஷிகளாய் உள்ளவர்கள் -என்றபடி –
இந்த யோஜனைகள் எல்லாம் –
விஷ்ணு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே -என்று அருளிச் செய்யும்
ஆச்சார்ய அபிமான நிஷ்டையான ஆழ்வார் திரு மகளார் படிக்கு சேரும் இறே –
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் என்கிற இடத்து1-5-11
குண சாம்யத்தாலே யோஜித்த படியாகக் கடவது இங்கும் –
(வாக்ய குரு பரம்பரை விஷயமாக வியாக்யானம் இங்கும் குண ஸாம்யத்தாலே –என்றவாறு)
(நல்ல வென் தோழீ நாகணை மிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறு மானிடவர் நாம் செய்வது என்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே–10-10-)
(மாலே ! மாயப் பெருமானே! மா மாயவனே ! என்று என்று
மாலே ஏறி மால் அருளால் மன்னு குருகூர்ச் சடகோபன்
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரத்தின்
பாலே பட்ட இவை பத்தும் வல்லார்க்கு இல்லை பரிவதே–1-5-11-)
———————————————————————
இனி த்வய யோஜகையில்-
அர்த்த விஷயமாக மெய்ப்பொருளை இறே விசதம் ஆக்கிற்று –
இரண்டு அர்த்தத்தையும் புலம் ஐந்து மேயும் -என்று உபதேசிக்கக் கேட்டவர்கள்-
அனுஷ்டானமாக திருப்பாவையில் –
தாயே தந்தையிலும் –(1-9)
ஸ்தோத்ர கத்யங்களிலும் (ஸ்தோத்ர ரத்னத்திலும் கத்ய த்ரயத்திலும் )த்வயத்தின் அடைவு காணும் படி எங்கனே என்னில் –
(புலன் ஐந்து மேயும் பொறி ஐந்தும் நீங்கி
நலம் அந்தம் இல்லது ஓர் நாடு புகுவீர்
அலமந்து வீய அசுரரைச் செற்றான்
பலம் முந்து சீரில் படிமின் ஒவாதே)
முதல் பாட்டில் –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்ற
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டையும்-
கறவைகள் பின் சென்றிலும்-
சிற்றம் சிறு காலையிலும் க்ரமத்திலே வெளியிடுகிறது –
(முதலில் உபதேச வேளை
இறுதியில் அனுஷ்டான வேளை)
நடுவடைய யுண்டானவை இரண்டு அர்த்தத்துக்கும் உபபாதங்களாய் இருக்கும் ஆகையால்
த்வயத்தின் அடைவு க்ரமமாகக் காணலாம் என்றபடி –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
திரு மந்திரத்தில் பத த்ரயத்திலும் ப்ரதிபாதிக்கிற
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும்
ஒவ் ஒன்றே பத்துப் பாட்டாய் பரவும் படி திருப்பாவை முப்பது பாட்டாக பாடி அருளிற்று –
திருமந்திரத்தில் ஸ்வரூப அனுரூபமாக நிஷ் கர்ஷித்த
ப்ராப்ய ப்ராபகங்கள் இறே த்வயத்தில் விசதமாக அனுசந்திக்கிறது –
அந்த க்ரமத்திலே யாயிற்று இங்கும் அனுசந்திக்கிறது –
————
(நேத்ருத்வம் நித்யயோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபல தர விரோதி ப்ரஹாணம் தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-ஸ்ரீ பராசுர பட்டர் அருளிய அஷ்ட ஸ்லோகி –5-
நேத்ருத்வம் நித்ய யோகம் சமுசித குணஜாதம் தநுக்யாப நம் ச
நேத்ருத்வம் – புருஷகாரத்வத்தையும்
நித்ய யோகம்- ஒரு நொடிப் பொழுதும் விட்டுப் பிரியாத நித்ய சம்ச்லேஷத்தையும்
சமுசித குணஜாதம் – இன்றியமையாத திருக் குணங்களின் திரளையும்
தநுக்யாப நம் ச- திரு மேனியைக் காட்டுதலையும் –
உபாயம் கர்த்தவ்யபாகம் த்வத மிதுநபரம் ப்ராப்யமேவம் ப்ரசித்தம்-
உபாயம் –உபாயத்தையும் –
கர்த்தவ்யபாகம் – சேதனன் செய்ய வேண்டிய தான அத்யாவசாயத்தையும்
த்வத மிதுந பரம் ப்ராப்யம் – இருவருமான சேர்த்தியை விஷயீ கரித்ததான கைங்கர்யத்தையும்
மேவம் ப்ரசித்தம்- இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-)
ஸ்வாமித்வம் ப்ரார்த்த நாஞ்ச பிரபலதர விரோதி ப்ரஹாணம் தசைதான்
ஸ்வாமித்வம் – சர்வ சேஷித்வத்தையும்
ப்ரார்த்த நாஞ்ச – கைங்கர்ய பிரார்த்தனையையும் –
பிரபலதர விரோதி ப்ரஹாணம் – மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்
தசைதான்
மந்தாரம் த்ராயதே சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட-
மந்தாரம் – மனனம் செய்கிற உத்தம அதிகாரியை
த்ராயதே இதி-காப்பாற்றுகின்றது என்று
சேத்ய திகைத நிகமஷ் ஷட்பதோயம் த்விகண்ட
அயம்-அந்த த்வயம் மந்த்ரமானது
ஏதான் தச-இந்த பத்து அர்த்தங்களையும்
அதிகத நிகம–வேத ப்ரதீதமாயும்–த்வீ கண்ட–இரண்டு கண்டங்களை யுடையதாயும் –ஷட்பத -ஆறு பதங்களை யுடையதாயும்-
த்ராயதே இதி-காப்பாற்றுகின்றது என்று
ஏவம் ப்ரசித்தம்- இங்கனம் பிரசித்தமாய் இரா நின்றது-
(1-ஸ்ரீ –நேத்ருத்வம் -ஸ்ரீயதே -ஸ்ரேயதே -ச்ருணோதி -ச்ராவயதி -ஸ்ருணாதி -ச்ரீணாதி
2- மத்-நித்ய யோகத்வம்
3- நாராயண -வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌசீல்யம் ஜ்ஞானம் சக்தி-சமுசித குணஜாதம்
4- சரனௌ-திவ்ய மங்கள விக்ரஹம் -த நுக்யாபனம் –
5-சரணம் -உபாயம் இஷ்ட பிராப்திக்கும் அநிஷ்ட நிவ்ருத்திக்கும்
6-பிரபத்யே -கர்த்தவ்யபாகம் -வாசிக காயிக மானசீகங்கள் -கர்த்தவ்யம் புத்யர்த்தம்
7-ஸ்ரீ மதே-மிதுன பரம் பிராப்யம் -கைங்கர்ய பிரதி சம்பந்த தத்வேன அன்வயம்
8-நாராயண -ஸ்வாமித்வம்
9-ஆய -ப்ரார்த்த நாஞ்ச -கைங்கர்ய பிரார்த்தனையையும் –
10-நம-பிரபலதர விரோதி ப்ரஹாணம் -மிகவும் பிரபலமான உபேய விரோதியை கழிக்கைக்கும்-
கடகவல்லி நிகமத்தில் வேதபாகத்தில் உள்ளதே -அதிகத நிகம-)
இனி மேல் குரு பரம்பரா பூர்வகமாக த்வயத்தின் அடைவு சொல்லுகிறது –
நப்பின்னை நங்காய் திருவே -என்கையாலே -ஸ்ரீ சப்தார்த்தமும் –
உன் மணாளனை என்கையாலே -ஸ்ரிங் சேவாயாம் -என்கிற தாத்வர்த்தமும்-
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர்மார்பா -என்றும் –(அலர் மேல் மங்கை உறை மார்பன் இறையும் பிரிவில்லாமல் )
நீ உன் மணாளனை எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண் எத்தனையேலும் பிரிவாற்ற கில்லாயால் -என்கையால் –
வாத்சல்யாதி குண பிரகாசகமான நாராயண பதத்தில் அர்த்தமும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் அடி என்றும் –
ஓங்கி உலகளந்த -அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகு அளந்த -அன்று இவ்வுலகம் அளந்தாய் -என்றும் –
லோக விக்ராந்த சரணங்களாய்
நாராயணன் த்ரிவிக்ரமன் அடியான உலகு அளந்த மெல்லடியை -உன் பொற்றாமரை அடி -என்றும் –
சரண -சப்தார்த்தமும் –
கார் மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான் –
ஊழி முதல்வன் உருவம் போல் –முகில் வண்ணன் -சங்கோடு சக்கரம் ஏந்தும்
தடக் கையன் பங்கயக் கண்ணன் -என்றதில் விக்ரஹ யோகத்தையும்
(திருவடியைச் சொன்னது திவ்ய மங்கள விக்ரஹத்துக்கும் உப லக்ஷணம்
கண்கள்
உருவம்
தடக்கை
இவற்றுக்கும் பாசுரங்கள் உண்டே)
முத்துத் திரைக் கடல் சேர்ப்பன் -என்னும் படி சம்சாரி திரிந்த இடத்தில் வந்து கிடக்கிற
பாற் கடல் பையத் துயின்ற பரமன் என்கையாலே ஸ்வாமித்வமும்
(சித்தர குத்தன் எழுத்தால் தென் புலக் கோன் பொறி ஒற்றி
வைத்த இலச்சினை மாற்றி தூதுவரோடி ஒளித்தார்
முத்துத் திரை கடல் சேர்ப்பன் மூதறிவாளர் முதல்வன்
பத்தர்க்கு அமுதன் அடியேன் பண்டு அன்று பட்டினம் காப்பே –5- 2-2 –)
(கீழ் வாத்சல்யம் சொல்லி இங்கு ஸ்வாமித்வம்-ஸ்வாமி சொத்தைத் தேடுமா போல் -கடலில் சயனித்து முத்து கிடைக்குமா என்று முக்தர்களைத் தேடிக் கிடக்கிறான் )
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்கையாலே எல்லார் தலையிலும் திருவடிகளை வைத்த ஸுலப்யமும்-
(அதமன் -மத்யமன் -வ்யாவ்ருத்தம்(
மாயனை என்று தொடங்கி தாமோதரன் அளவும் -கட்டவும் அடிக்கவும் ஆம்படியான ஸுசீல்யமும் –
(ஆஸ்ரயண சவ்கர்ய ஆபாத குணங்கள் -பூர்வ வாக்ய நாராயண அர்த்தங்கள் இந்த நான்கும்)
குறை ஒன்றும் இல்லா கோவிந்தா என்று கல்யாண குண விசிஷ்ட வஸ்துவான உபாய பூர்த்தியையும்
அறிவு ஒன்றும் இல்லா ஆய்க்குலம் -அறியாத பிள்ளைகளோம்-என்கையாலே அதிகாரி ஸ்வரூபமான ஆகிஞ்சன்யமும் –
(புகல் ஒன்றும் இல்லா -த்வயத்தில் வாக்கியம் இல்லை -ஆழ்வார் இவற்றையும் வியக்தமாய் காட்டி அருளியது போல் இங்கும்)
தூயோமாய் வந்து நாம் தூய் மலர்கள் தூவித் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப் போய பிழையும்
புகு தருவான் நின்றனவும் தீயினில் தூசாகும் -என்றும் –
வந்து தலைப் பெய்தோம் -என்றும் –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்றும் -அநிஷ்ட நிவ்ருத்திக்கும் இஷ்ட ப்ராப்திக்கும்
தப்பாத உபாயமாக ஸ்வீகரிக்கும் உபாய வரணத்தையும் –
(உனது திருவடிகளை உபாயமாகப் பற்றினோம்
முக்கரணங்களாலும் -இங்கு உண்டே)
ஆவாவென்று ஆராய்ந்து அருள் –
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல் –
இறைவா நீ தாராய் பறை -என்று
அவனுடைய பரகத ஸ்வீகாரத்தின் ஏற்றத்தையும் –
(ப்ரபத்யே -பற்றும் பற்றுதலும் உபாயம் அல்லவே
விடுவித்து பற்றுவிக்கும் அவனே -உபாயம்
துடிப்பால் வந்து நின்றோம்)
(இது வரை பூர்வ வாக்ய அர்த்தம்
மேல் உத்தர வாக்ய அர்த்தங்கள்
இடைவிடாமல் இரண்டும் வேண்டுமே -அவனுக்கு நாம் சொல்லும் மாஸூச அன்றோ இது)
குத்து விளக்கு எரியக் கோட்டுக் கால் காட்டில் மேல் -இத்யாதியிலே பர்யங்க வித்யையில் படியே இருவருமாய்
எழுந்து அருளி இருக்கிற சேர்த்தியான வேஷத்தை –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்கையாலும் –
தேவாதி தேவன் என்கையாலும் -உம்பர் கோமானே -என்கையாலும்
இறைவா நீ -என்கையாலும் -உத்தர வாக்ய நாராயண பதத்தில் ப்ரதிபாதிக்கிற சேஷித்வமும் –
(தட்டொளியும் தந்து உன் மணாளனை -என்கையாலும் –
இப்போதே எம்மை நீராட்டு -என்கையாலும் –
பூ வளரும் திருமகளால் அருள் பெற்று வரும் படியும் –
தேவரையும் அசுரர்களையும் திசைகளையும் கடல்களையும் மற்றும் முற்றும்
யாவரையும் ஒழியாமே எம்பெருமான் உண்டு உமிழ்ந்தது அறிந்து சொன்ன
காவளரும் பொழில் மங்கைக் கலி கன்றி யொலி மாலை கற்று வல்லார்
பூவளரும் திரு மகளால் அருள் பெற்றுப் பொன்னுலகில் பொலிவர் தாமே -11-6-10-)-
(அவள் ஏவ மிதுனத்தில் கைங்கர்யம் -அந்தப்புர கைங்கர்ய பரராய் இருப்பதில் ஏற்றம் உண்டே )
(மேல் ஆய நம -அர்த்தங்கள்
கைங்கர்ய பிரார்த்தனை
கைங்கர்ய உபகரணங்கள்
எவ்வித கைங்கர்யங்கள்
அவன் ஆனந்தத்துக்காகவே
இவ்வாறு நான்குக்கும் பாசுரங்கள் இங்கே உண்டே)
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து -என்றும் –
பள்ளிக் கட்டில் கீழே -என்றும்
சீரிய சிங்காசனத்து இருந்து -என்றும் –
அன்று இவ்வுலகம் அளந்தாய் அடி போற்றி -என்றும் –
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து -என்றும்
மாலே ஆலினிலையாய் அருளாய் -என்றும் –
கூடி இருந்து குளிர்ந்து என்றும் –
நீ தாராய் பறை -என்றும்
சிற்றம் சிறு காலே வந்துன்னைச் சேவித்து -என்று தொடங்கி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் மற்றை நம் காமங்கள் மாற்று -என்கையாலே
உத்தர சதுர்த்தியில்
கைங்கர்ய உபகரண ஸஹிதமான பல அனுபவ கைங்கர்ய பரம்பரைகளையும் –
கைங்கர்ய பிரார்த்தனையும் –
அவற்றில் களை அறுப்பையையும் –
செல்வத் திருமாலால் எங்கும் திருவருள் பெற்று -என்கையால்
த்வயத்தில் பெரிய பிராட்டியாராலே என்றமதும் சொல்லித் தலைக் கட்டிற்று –
மாதவன் என்று த்வயம் ஆக்கினால் போலே –
மா மாயன் மாதவன் வைகுந்தன் (9)என்றும் –
மாதவனை (30)என்றும் இறே -இங்கு இரட்டித்து இருப்பது –
(மாதவன் என்று என்று ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா ஏதம் சாரவே–10-5-7-)-என்று என்று-இரட்டித்து இருப்பது
(மாதவன் என்று என்று-இரட்டித்து சொன்னது-த்வயத்தில் ஸ்ரீ சம்பந்தம் இரண்டு வாக்யத்திலும் உண்டே என்பதால் —
எண் பெருக்கில் எண்ணும் திரு நாமத்தின் சப்தார்தங்களைச் சுருக்கி மாதவன் என்று த்வ்யமாக்கி -ஆச்சார்ய ஹிருதய ஸ்ரீ ஸூக்தி பிரகரணம் -4-சூர்ணிகை -10)
செல்வத் திருமாலால் -என்றும் –
பட்டர் பிரான் கோதை சொன்ன -என்கையாலே இவ்வர்த்தம்
ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் -என்னும் இடம் சொல்லிற்று –
(சாஸ்திரம் சரீரத்தால் பேறு
திருமந்த்ரத்தால் ஆத்மாவால் பேறு
த்வயத்தால் பிராட்டியால் பேறு
சரம ஸ்லோகத்தால் ஈஸ்வரனே பேறு
த்வயம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம்)
(ந வேதாந்தாத் சாஸ்திரம் -வேதம் ஒன்றே சாஸ்திரம் –
ந மது மதநாத் தத்வம் அகிலம் -அஜிதன் பாற்கடல் கடைந்தவன் -ஹரி கஜேந்திர மோக்ஷம் ப்ரதன் –
தத்வ த்ரயம் -மூன்றும் நித்யம் சத்யம் -மற்றவை அவனுக்கு அதீனம் -அவர தத்வங்கள் -இவன் ஒருவனே பர தத்வம்
ந தேவம் கேஸவாத் பரம் -பரம் திறம் அன்று பல்லுலகீர் மற்ற தெய்வம் இல்லை -சர்வம் சரீரம் பிரகாரம் –
ந ஸத்வாத் ஆரோக்யம் -சத்வ குணம் -சாத்விக ஆகாரம்
நாயகனாய் வெல்லம் போட்ட சக்கரை பொங்கல்
கூடாரை அக்கார வடிசில் பாலால்
கற்று -தத்யோனம்
ந த்வய வசனம் ஷேம கரம்
வேத பாகங்கள் தேகத்தால் பேறு -இத்யர்த்த கர்தவ்யம் –
ஆத்மாவால் பேறு -ஸாம்யம் புத்தி -திருமந்திரம் சொல்லும்
ஈஸ்வரனால் பேறு -சரம ஸ்லோகம் சொல்லும்
பிராட்டியாலே பேறு த்வயம் –)
(சேர்க்கும் திருமகள் சேர்த்தியில் மன்னுதல் சீர்ப் பெரியோருக்கு
ஏற்கும் குணங்கள் இலக்காம் வடிவில் இணை யடிகள்
பார்க்கும் சரண் அதில் பற்றுதல் நம் நிலை நாம் பெரும்பேறு
ஏற்கின்ற வெல்லைகள் எல்லாக் களையற வெண்ணினமே –-திரு த்வயச் சுருக்கு -ஸ்ரீ வேதாந்த தேசிகாசார்யர் ஸ்வாமிகள்–12-
இலக்காம் வடிவில் இணை யடிகள் -ஆஸ்ரிதர்கள் தியானிக்க இலக்காகும் திரு மேனியில் ஒரு பாகமாகிய இரண்டு திருவடிகளும்
பார்க்கும் சரண் -சேதனர்கள் பிரதானமாக கருதும் உபாயமான ஸ்ரீ மன் நாராயணனும்
நாம் பெரும் பேறு ஏற்கின்ற வெல்லைகள் -நாம் அடையும் பிரதான பலனான ஸ்ரீ மன் நாராயணனும்
கைக்கொள்ளும் சரம புருஷார்த்தமான பகவத் பாகவத கைங்கர்யங்கள் முதலியன –
1-சேர்க்கும் திருமகள்-ஸ்ரீ சப்தார்த்தம்
2-சேர்த்தியில் மன்னுதல் -மதுப்பின் அர்த்தம்
3-சீர்ப் பெரியோருக்கு ஏற்கும் குணங்கள்-நாராயண சப்தார்த்தம்
4-இலக்காம் வடிவில் இணை யடிகள் -சரண பதார்த்தம்
5-பார்க்கும் சரண் -சரணம் பதார்த்தம்
6-அதில் பற்றுதல் -பிரபத்யே யார்த்தம்
7-நம் நிலை -அகிஞ்சனர் அநந்ய கதிகள் ஆகிய நம் நிலை
8-நாம் பெரும் பேறு -ஸ்ரீ மன் நாராயண பதார்த்தம்
9-ஏற்கின்ற வெல்லைகள் -ஆய சப்தார்த்தம்
10-எல்லாக் களையற-நம சப்தார்த்தம்
வெண்ணினமே–ஆக இந்த பத்து அர்த்தங்களையும் அருளும் ஸ்ரீ த்வய அனுசந்தானம் செய்வதே காலஷேபம் -என்றவாறு –)
இப்படி குரு பரம்பரா பூர்வகமான த்வயத்தாலே
பேறாக ப்ரதிபாதிக்கிறதாய் இறே திருப்பாவை தான் இருப்பது –
(ஜப்த்தவ்யம் குரு பரம்பரையும் த்வயமும் என்று அருளிச் செய்ததற்கு அடியும் இதுவே)
ஆக விறே இதுக்கு வர்த்தகரான உடையவரும்
இத்தை நாள் தோறும் ஆதரித்திக் கொண்டு போந்து அருளிற்று –
ஆகையால் இது ஆண்டாள் அடியாராக யாவர்க்கும் நித்ய அனுசந்தேயமாக நடந்து போருகிறது-
கோப ஸ்த்ரீ குலமதி கோதாய உபதிஷ்ட்டம் க்ருஷ்ணாக்யம் பிரணவம் இவ அதிகாரி ஜப்யம்
தம் த்ரிம்சத் பரி மித பத்ய மார்க்க சீர்ஷ ப்ராப்த உத்ஸவ சமயோசிதம் பிரசித்தம் –
(கோப ஸ்த்ரீ குலமதி கோதாய உபதிஷ்ட்டம் -கோபிகள் பாவம் ஆஸ்தானம் பண்ணி
க்ருஷ்ணாக்யம் பிரணவம் தம் த்ரிம்சத் -ஸ்ரீ கிருஷ்ணன் மேல் ப்ராவண்யம் காட்டி அருளி அருளிச் செய்த இந்த முப்பதும் தப்பாத ஸ்ரீ ஸூக்திகள்
இவ அதிகாரி ஜப்யம்–அதிகாரிகளுக்கு நித்ய அனுசந்தானாம் ஆகும் அன்றோ
பரி மித பத்ய மார்க்க சீர்ஷ ப்ராப்த உத்ஸவ சமயோசிதம் பிரசித்தம் –இதுவே ஸ்ரேஷ்டமான மார்க்கமான ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் ஆகுமே)
(இதில் ரஹஸ்ய த்ரய சாரங்களும் உள்ளன என்பதற்குத் தமிழ் பாசுரம் அடுத்து)
எட்டு எழுத்தின் இணைப் பொருளும் இரண்டதனில் பொருளும் இயல் வலித் தேர் அர்ச்சுனனுக்கு இறைவர் தம்மை
தொட்டு உரைத்த மறை அறுதிப் பொருளும் எல்லாம் தோன்றும் வகைப் புகழ் வரை துடர் வளைந்து பாட
மட்டவிழும் பொழில் புடை சூழ் முடும்பை வேந்தன் மணாளன் தணவாத மாயன்
கட்டுரையே புதுவையர் கோன் கோதை சொன்ன கவி பாடல் பொருள் தெரியக் காட்டினானே
———————————————————————
திருப்பாவை முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாய் இருக்கும் –
எங்கனே என்னில் –
ஸ்ரீ பாஷ்யம் ஒன்பதினாயிரம் கிரந்தத்துக்கும் முதல் ஸ்லோகம் சங்க்ரஹமானால் போலேயும்
ஸ்ரீ ராமாயணம் 24000 ஸ்லோகங்களும் முதல் சர்க்கம் சங்க்ஷேப ராமாயணம் -சங்க்ரஹமானால் போலேயும்-
ஸ்ரீ மஹா பாராதம் -125000–கிரந்தத்துக்கும் முதல் அத்யாயம் சங்க்ரஹமானால் போலேயும்
திருவாய் மொழிக்கு முதல் திருவாய்மொழி சங்க்ரஹமானால் போலேயும்
முதல் திருவாய் மொழிக்கு முதல் பாட்டு சங்க்ரஹமானால் போலேயும்
மந்த்ர சேஷத்துக்கு பிரணவம் சங்க்ரஹமானால் போலேயும்
முப்பது பாட்டுக்கும் முதல் பாட்டு சங்க்ரஹமாயே இருக்கும் –
———
அகில புவன ஜன்ம ஸ்தேம பங்காதி லீலே
விநத விவித பூதவ்ராத ரஷைக தீஷை
ஸ்ருதி சிரஸி விதீப்தே ப்ரஹ்மணி ஸ்ரீ நிவாசே
பவது மம பரஸ்மின் சேமூஷீ பக்தி ரூபா
முதல் அத்யாயம் -சமன்வய அத்யாயம் -இரண்டாவது அதிகரணம் -ஜன்மாத்யதிகரணம் -ஜன்ம ஸ்தேம பங்க –லீலை -அவிரோதாத்யாயம்
முதல் பாதம் கடைசி அதிகரணம் -பிரயோஜனவத்வாதிகரணம் -லோகவத்து லீலா கைவல்யம் -ஸூத்ரம்
மூன்றாம் அத்யாயம் சாதனாத்யாயம் -விநத பதத்தால் ஸூசிப்பிக்கிறார்
ரஷா பதம் -கைங்கர்ய சாம்ராஜ்யம் அருளுவதை -நான்காம் அத்யாய சுருக்கம் அருளுகிறார்
ஜகத் காரண த்வ மோஷ பிரதத்வங்கள் -சத்ர சாமரங்கள் போலே பர ப்ரஹ்மத்துக்கு அசாதாரண சின்னங்கள்
ஸ்ருதி ஸிரசி -பிரமாணம் காட்டி அருளி-விதீப்தே -விசேஷண தீப்தத்வம் -பூர்வ பாகம் தேவாதி ரூபமாகவும் -ஸுவயம் நிரதிசய ஆனந்த மயன்
ப்ரஹ்மணி -சத் ப்ரஹ்மாதி சப்தங்களை குறிக்கும்-ஸ்ரீநிவாசே -விசேஷ பதம் -நாராயண ஆதி சப்தங்களை குறிக்கும்
——
உயர்வற உயர்நலம் உடையவன் யவன்அவன்
மயர்வற மதிநலம் அருளினன் யவன்அவன்
அயர்வறும் அமரர்கள் அதிபதி யவன்அவன்
துயரறு சுடரடி தொழுதுஎழுஎன் மனனே.
உயர்வற உயர்நலம் உடையவன், அயர்வறும் அமரர்கள் அதிபதி’ என்கையாலே பிராப்பிய வேஷம் சொல்லிற்று;
‘மயர்வற’ என்கையாலே விரோதி போனபடி சொல்லிற்று;
‘அருளினன்’ என்கையாலே அவனே சாதனம் என்றது;
‘தொழுது எழு’ என்கையாலே பிராப்தி பலமான கைங்கரியத்தைச் சொல்லிற்று; ‘
என் மனனே’ என்கையாலே பரிசுத்தமான அந்தக் கரணத்தையுடையவனே, அதிகாரி என்னுமிடம் சொல்லிற்று.
————-
சங்க்ரஹமான படி எங்கனே என்னில்
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் -என்ற இடத்தால்
முதல் ஐஞ்சு பாட்டுக்கள் சங்க்ரஹம் சொல்லிற்று –
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர் சீர் மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள் -என்கிற இடத்தில்
பத்துப் பெண்களை எழுப்புகிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
கூர் வேல் கொடும் தொழிலன் -என்று –
கோயில் காப்பானே -என்கிற இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
நந்த கோபன் என்று –
நாயகனாய் நின்ற நந்தகோபன் -என்றும் –
ஓடாத தோள் வலியன் நந்த கோபாலன் என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
குமரன் -என்றதால் –
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெறும் பசுக்கள் ஆற்றப் படைத்தான் மகனே -என்கிற
இடத்துக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
கார் மேனி -என்று
முகில் வண்ணன் -என்றும் –
பூவைப் பூ வண்ணா -என்றும் –
மாயன் மணி வண்ணன் -என்றும்
மாலே மணி வண்ணா -என்றும் இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
செங்கண் -என்று
கிண்கிணி வாய்ச செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறிச் சிறிதே எம்மேல் விழியாவோ என்றும்
அங்கண் இரண்டும் கொண்டு -என்றும் –
பங்கயக் கண்ணன் -என்றும்
செங்கண் திருமுகம் -என்கிற இடங்களுக்கு சங்க்ரஹம் சொல்லிற்று –
கதிர் மதியம் போல் முகத்தான் -என்று –
திங்களும் ஆதித்யனும் சேர்ந்தால் போல் என்றும் –
உலகினில் தோற்றமாய் நின்ற சுடரே -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹமாகச் சொல்லிற்று –
நாராயணன் -என்று –
நாராயணன் மூர்த்தி கேசவன் -என்றும் –
நாற்றத் துழாய் முடி நாராயணன் -என்றும்
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும் –
மா மாயன் மாதவன் வைகுந்தன் -என்றும் –
முகில் வண்ணன் பேர் பாட -என்றும்
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே -என்றும் –
வங்கக் கடல் கடைந்த மாதவன் -என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்
நமக்கே பறை தருவான் -என்பதால் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
நம்மால் போற்றப் பறை தரும் என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும் –
அறை பறை -என்றும் –
சாலப் பெரும் பறை -என்றும் –
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்றும் –
இறைவா நீ தாராய் பறை என்றும் –
அங்கு அப்பறை கொண்ட வாற்றை என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம்
பாரோர் புகழ -என்று –
நாடு புகழும் -எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் என்னும் இடங்களுக்கு சங்க்ரஹம் –
ஏலோர் எம்பாவாய் -என்று
முப்பது பாட்டிலும் சொல்லும் ஏலோர் எம்பாவாய்க்கு சங்க்ரஹம் –
இப்பாட்டில் காலத்தைக் கொண்டாட நின்று கொண்டு பிரபந்த தாத்பர்யமான
ப்ராப்ய ப்ராபகங்களை சொல்லுகிறது –
—————————————
அதிகாரி ஸ்வாபதேசம் –
இந்த ஸ்வாபதேசத்தில் –
முதல் ஐஞ்சு பட்டாலும் –
பிரபந்த நிஷ்டா க்ரமங்களையும் –
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் பேசுகிறது –
அதில் முதல் பாட்டில்
பிரபன்ன அதிகாரிக்கு -ச ஏஷ தேச கால -என்கிறபடியே
தேச காலம் எல்லாம் அவனுடைய கடாக்ஷத்தாலே ப்ராப்யம் என்னுமத்தையும் –
கர்மாந்தர பரித்யாகத்தையும் –
பகவத் விஷயங்களில் ருசி விசுவாசங்களினுடைய பிரதான்யத்தையும் –
ப்ராப்ய ப்ராபகங்கள் இரண்டும் சர்வ ஸ்வாமியான நாராயணனே என்றத்தையும்
ஏவ காரத்தால் தேவதாந்த்ர ராஹித்யத்தையும் –
பிரயோஜனாந்தர ராஹித்யத்தையும் –
அநந்ய பிரயோஜனத்தையும் –
த்ரிபாத் விபூதி நாயகனான சர்வேஸ்வரன் தங்களுக்கு அபேக்ஷிதா விதானம் பண்ணுவான் என்று
நிரபரத்வ அனுசந்தானத்தையும்
சர்வ ஜன ஸூ ஹ்ருதத்வத்தையும் –
இப்படி நிஷ்டா க்ரமங்களையும் பிரபத்தி வாசகமான திரு நாமத்தையும் சொல்லுகையாலே
அதிகாரி ஸ்வரூபம் சொல்லிற்று யாயிற்று –
நாராயணனே நமக்கே பறை தருவான் -என்கையாலே
திருமந்திரத்தில் பத த்ரயத்தாலும் பிரதிபாதிக்கிற –
ஸ்வரூப
உபாய
புருஷார்த்தங்கள் மூன்றும் சொல்லுகிறது –
ஆகையால் இப்பாட்டு
திருமந்த்ரத்துக்கு சங்க்ரஹம் என்றதாயிற்று –
இப் பாட்டில் பரத்வம் ஸூசிப்பிக்கிறது –
———
இரண்டாம் பாட்டில்
நோன்புக்கு பெண்கள் தங்கள் செய்யக் கடவ க்ருத்யத்தை நியமிக்கிற முகத்தாலே-
இவ்விஷயத்தில் இழிவாருடைய விரக்தியையும்
சம்பாவித ஸ்வபாவத்தையும் சொல்லுகிறது
என்ற ஒரு ஸ்வாபதேசம் –
இப் பாட்டில்
இந்த பிரபன்ன அதிகாரிக்கு சம்பாவிதமான நிஷ்டா க்ரமங்களையும்
பிரபத்தி வாசகமான திரு நாம வைபவத்தையும் சொல்லுகிறது —
எங்கனே என்னில் –
ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
தேயே சதம் இத்யனுக்ரமாத் -என்று
யாதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ -என்கிறபடியே –(ஆனந்தவல்லி நூறு நூறாக பெருக்கிக் கொடு திரும்பியதே)
ஆஸ்ரிதர்கள் வந்து ஒரு விண்ணப்பம் செய்வதற்கு அங்கு அவசரம் இல்லாமையால் –
ஒரு பயணம் எடுத்து ஷீர சாகரத்தில் திரு வனந்த ஆழ்வான் மேலே
ஜகத் ரக்ஷண சிந்தனையாலே சாய்ந்து அருளி –
ஆஸ்ரிதற்கு யாராலே யாருக்கு என்ன தீங்கு வருகிறதோ என்று அந்த யுரைக்கு செவி கொடுத்து
கண் வளருகிறதாக நினைத்து இருக்கையும் –(ஏஷ நாராயண ஸ்ரீ மான் ஷீராப்தி நிகேதன் என்கிறபடி கூப்பீடு கேட்க்கும் இடம் )
சகல சேதன உஜ்ஜீவனமான த்வயத்தை பெரிய பிராட்டியாருக்கு உபதேசம் பண்ணுகிற
ஷீராப்தி நாதனுடைய திருவடிகளை வாயாலே சங்கீர்த்தனம் சதா பண்ணுகையும் –(பாற்கடலுள் பையத்துயின்ற பரமன் அடி பாடி )
ஆகையால் பிரபன்னனுக்கு த்வய அனுசந்தானம் சதா பண்ண வேணும் என்று தாத்பர்யம் –
அந்த ரசானுபவம் பண்ணுகிறவரைக்கும் இதர விஷயங்களில்
தவாம்ருதஸ் யந்தினி பாத பங்கஜே நிவேசி தாத்மாக தமன்ய திச்சதி-என்கிறபடி –
போக்யமான மது சக்கர ஷீரா ததி க்ருதாதிகளிலும் நைரபேஷயத்தையும்-
(தவாம்ருதஸ்யந்திநி பாத பங்கஜே
நிவேஶிதாத்மா கதம் அந்யதிச்சதி? |
ஸ்திதே’ரவிந்தே மகரந்தநிர்ப்பரே
மதுவ்ரதோ நேக்ஷுரகம் ஹி வீக்ஷதே ||-ஶ்லோகம் 27 –
ஆளவந்தார் “அநந்ய கதித்வத்தினால் மட்டுமா நான் உன்னைப் பிரியாமல் இருக்கிறேன்?
உன்னுடைய போக்யமான தன்மையில் என் மனம் மூழ்கியிருப்பதால், நான் வேறு விஷயங்களை விரும்ப மாட்டேன்” என்கிறார்.
அதிகமான தேனைப் பெருக்கும் உன்னுடைய திருவடிகளில், உன்னுடைய க்ருபையினால் பதிந்திருக்கும் என் மனம்,
வேறு விஷயங்களை எப்படி ஆசைப்படும்?
தேன் நிறைந்த சிவந்த தாமரை இருக்கும்பொழுது, ஒரு வண்டானது முள்ளிப்பூவை விரும்பாதன்றோ?
த்ரிவிக்ரமத் வச் சரணாம் புஜ த்வயம் மதீய மூர்த்தாந மலங்கரிஷ்யதி–என்கிறபடியே
அவன் திருவடிகளை சர்வ அலங்காரமாகப் பற்றுகையும்
(கதா புநஶ் ஶங்க ரதாங்க கல்பக
த்வஜாரவிந்தாங்குஶ வஜ்ரலாஞ்சநம் |
த்ரிவிக்ரம! த்வச் சரணாம்புஜ த்வயம்
மதீய மூர்த்தாநம் அலங்கரிஷ்யதி ||ஶ்லோகம் 31 –
இதில், ஆளவந்தார் “உன்னுடைய திருவடிகளைக் கண்டால் போதாது, அவை என்னுடைய தலையை அலங்கரிக்க வேண்டும்”
என்று ஆழ்வார் திருவாய்மொழி 9.2.2இல் “படிக்களவாக நிமிர்த்த நின் பாத பங்கயமே தலைக்கணியாய்”
(இவ்வுலகத்தின் அளவுக்கு நீட்டிய திருவடித் தாமரைகளை என் தலைக்கு அணியாக ஆக்க வேண்டும்) என்றும்
திருவாய்மொழி 4.3.6இல் “கோலமாம் என் சென்னிக்கு உன் கமலம் அன்ன குரை கழலே”
(என்னுடைய தலைக்கு உன்னுடைய தாமரை போன்ற திருவடிகளே அலங்காரமாகும்) என்றும் கேட்டபடி அருளிச் செய்கிறார்.
த்ரிவிக்ரமனாக அவதரித்த என் ஸ்வாமியே! சங்கம், சக்ரம், கற்பக மரம், கொடி, தாமரை, அங்குசம், வஜ்ராயுதம்
ஆகிய அடையாளங்கள் பொருந்திய உன்னுடைய திருவடிகள் எப்பொழுது என்னுடை தலையை அலங்கரிக்கும்)
அது ஒழிய ஸ்ரக் சந்தன வஸ்த்ராத்யா பரணங்களை நிஷேதித்தமையும்-
அவனுக்கு சேஷமாய் இருக்கிற சகல வஸ்து விஷயங்களில்
ஜாதி பேதத்தாலே அபோக்யமாய் இருக்கச் செய்தேயும் பரம போக்யத்தால் ஸ்வீகரிக்கையும்-
யதா சக்தி பாகவதருக்கு நித்ய ததீயாராதனம் பண்ணி பகவத் அனுபவம் பண்ணுவித்து –
ஒன்றும் செய்யப் பெற்றிலோம் -என்று இருக்கையும்(ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி )
இப்படி அதிகாரி நிஷ்டா க்ரமம் சொல்லுகிறது –
இரண்டாம் பாட்டில் வ்யூஹம் சொல்லுகிறது –
———
மூன்றாம் பாட்டில்
நோன்பில் இழியவே-தாத் பலமான சம்ருதிகள் அடைய உண்டாம் -என்கிறார்கள் –
இத்தால்
பகவத் ஸமாச்ரயண பலமான கைங்கர்யம் ஒழிய
வேறே -ஆயுராசாஸ்தே -என்கிறபடியே
ஐஹிக பலங்களும் ஆனு ஷங்கிக சித்தமாய்க் கொண்டு சித்திக்கும் என்கிறது –
—————
நாலாம் பாட்டில் –
வர்ஷ தேவதையைக் குறித்து வர்ஷிக்கும் படியை நியமிக்கிறார்கள்-
இத்தால்
அநந்ய பிரயோஜனராய் பகவத் ஸமாச்ரயணம் பண்ணுமவர்க்கு
இந்திராதி தேவதைகளும் நியாமியர் ஆவார்கள் என்று இவ்வதிகாரியினுடைய உத்கர்ஷம் சொல்லுகிறது –
சர்வேஸ்மை தேவா பலிமா வஹந்தி-என்னக் கடவது இறே
————-
அஞ்சாம் பாட்டில் –
ஸ்ரேயாம் சி பஹூ விக்நானி -என்கிறபடி
நோன்புக்கு விக்னங்கள் சம்பவியாதோ என்னில் –
மநோ வாக் காயங்களாலே கிருஷ்ணனையே அனுசந்திக்க அவை போம் -என்கிறார்கள் –
இத்தால்
பகவத் குண அனுபவம் பண்ணுமவனுக்கு
உத்தர பூர்வாக யோரச் லேக்ஷ விநாசவ்-என்கிறபடியே
பகவத் அனுபவ மஹாத்ம்யத்தாலே சகல துரிதங்களும் போம் என்கிறது –
————–
ஆக இவ் வைந்து பட்டாலும் –
நாராயணனே -என்றும் –
பாற் கடலுள் பையத் துயின்ற பரமன் -என்றும் –
ஓங்கி உலகு அளந்த உத்தமன் -என்றும்
மாயனை வடமதுரை மைந்தனை -என்றும் சொல்லுகையாலே கிருஷ்ணனுடைய அடிப்பாடு சொல்லுகிறது –
இதுக்கு மேல் பத்துப் பாட்டும்
முற்பட்டவர்கள் பிற்பட்டவர்களை எழுப்பிச் செல்லுகிறது –
இத்தால்
பகவத் விஷயம் அபரிச்சின்னமாய் –
தனி அனுபவிக்க ஒண்ணாமையாலே பெருக்காற்றிலே இழிவார் துணை கொண்டு இழியுமா போலேயும்
ஏக ஸ்வாது நபுஞ்சீத-என்று தனி அனுபவிக்க மாட்டாத சாபல்யத்தாலும் பகவத் அனுபவம் பண்ணுவார்க்கு
தொண்டீர் எல்லீரும் வாரீர் -என்கிறபடி
துணை தேட்டமாய் இருக்கும் என்னும் இவ்வர்த்தத்தைச் சொல்லுகிறது –
(கண்டோம் கண்டோம் கண்டோம் கண்ணுக்கு இனியன கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர் தொழுது தொழுது நின்று ஆர்த்தும்
வண்டார் தண்ணம் துழாயான் மாதவன் பூதங்கள் மண்மேல்
பண்தாம் பாடி நின்று ஆடிப் பரந்து திரிகின் றனவே.–5-2-2-)
————-
இதில் முதல் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தில் புதியளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறாள் –
இத்தால்
பகவத் ஏக போக்யரான ஸ்ரீ வைஷ்ணவர்கள் அநந்ய பிரயோஜனராய்
இவ் விஷயத்தில் தேசிகர் அன்றிக்கே இருப்பாரை அவர்கள் பக்கல்
பரிவாலே தேசிகர் ஆக்குகை தங்களுக்கு கிருத்யம் என்று இருக்கை ஸ்ரீ வைஷ்ணத்வம்
என்கிற ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –
(எது தான் அறிந்த ஸ்ரீ வைஷ்ணத்வம் என்று பாசுரம் தோறும் உண்டே)
———
இரண்டாம் பாட்டில் –
கிருஷ்ண அனுபவத்தை தேசிகையாய் -இவ் வனுபவத்தை ஸ்மரித்துக் கிடக்கிறாள் ஒருத்தி எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயத்தில் ஞாதமான அர்த்தம் ஒருவனுக்கு விஸ்ம்ருதமானால் தங்கள் பரிவாலே
போதயந்த பரஸ்பரம் -என்கிறபடி அறிவிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர் ஆனார்க்கு ஸ்வரூபம் என்கிறது –
(போதயந்த: பரஸ்பரம்– கதயந்தச் ச மாம் நித்யம் துஷ்யந்தி ச ரமந்தி ச)
————-
மூன்றாம் பாட்டில் –
கிருஷ்ணனால் கொண்டாடப்படும் ஏற்றம் உடையவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் அனுபவத்தில் ப்ரத்யாசன்னராய் இருப்பார் இடத்தில் சா பேஷாராய் இருக்கையும் –
அவர்களை முன்னிட்டு ஈஸ்வரனை கிட்டுக்கையும்
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிறது –
———-
நாலாம் பாட்டில் –
கிருஷ்ணன் வந்த போது வருகிறான் -என்று நிர்ப்பரரையாய்க் கொண்டு கிடக்கும் அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
தத் தஸ்ய சத்ருசம் பவேத் – என்று
பூர்வார்த்த நிஷ்டராய் இருப்பாரை பகவத் பிரேமாதிசயத்தாலே
தத் ஏக போகராய் இருக்குமவர்கள் போகார்த்தமாக ப்ரேரிக்கை
ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வரூபம் என்கிற அர்த்தம் சொல்லுகிறது –
(சரைஸ்து சங்குலாம் க்ருத்வா லங்காம் பரபலார்த்தந: மாம் நயேத் யதி காகுத்ஸ்த: தத் தஸ்ய சத்ருசம் பவேத்”-சுந். 39:30)
————–
அஞ்சாம் பாட்டில் –
பெண்கள் எல்லாம் -கிருஷ்ணன் -என்றால் படும் பாட்டை –
அவன் தான் தண்ணீர் தண்ணீர் என்னும் படியாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
ஞானீத் வாத்மைவ மே மதம் –
அஹம் ச சம ப்ரிய -என்றும் அவன் பக்ஷத்தில் இருப்பார் திறத்தில்
ஸ்ரீ வைஷ்ணவர்கள் நித்ய சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்னும் இவ்வர்த்தம் சொல்லுகிறது –
(என்னது உன்னதாவியில் அறிவாராத்மா என்று அவன் மதம் தோன்றும். )
————-
ஆறாம் பாட்டில் –
அபிஜாதையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –(கோவலர் தம் பொற் கொடி )
இத்தால்
பகவத் சம்பந்தம் விச்சேதியாதே போந்த ஆச்சார்ய சந்தான ப்ரஸூதர் நமக்கு உத்தேச்யர் என்றும் –
அவர்கள் அடியாக பகவத் ஸமாச்ரயணம் பண்ணுகையும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு ஸ்வபாவம் என்கிறது –
———–
ஏழாம் பாட்டில் –
இளைய பெருமாளை போலே கிருஷ்ணனைப் பிரியாதே இருப்பான் ஒருவன் தங்கையை எழுப்புகிறார்கள் (நற் செல்வன் தங்காய் )
இத்தால்
பகவத் விஸ்லேஷம் அஸஹ்யமாம் படி அவகாஹித்தார் தங்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு
உத்தேச்யராம் அளவன்றிக்கே-
தத் சம்பந்த சம்பந்திகளும் உத்தேச்யர் என்று இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
—————-
எட்டாம் பாட்டில் –
நம் கண் அழகு உண்டாகில் தானே வருகிறான் -என்று அவயவ சோபையை மதித்து கிடக்கிறாள்
ஒருத்தியை எழுப்புகிறார்கள் –(போதரிக் கண்ணினாய் -பரிபூர்ண ஞானம் உபாயம் அபாயம் அறிந்து )
இத்தால்
பகவத் அனுபவ பரிகரமான ஞான பக்தி வைராக்யங்களால் பூர்ணராய் இருக்குமவர் நிறத்திலும்
ததர்தமாக ஸ்ரீ வைஷ்ணவர்கள் சா பேஷராய் இருக்கை ஸ்வரூபம் என்கிறது –
————–
ஒன்பதாம் பாட்டில்
எல்லார்க்கும் தானே நிர்வாஹகையாய் -எல்லாரையும் தானே எழுப்பக் கடவளாய் சொல்லி விஸ்மரித்து
கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயத்தில் மூட்டுகையாலே அதிகரித்த
நிர்வாஹகர் முன்னாக பகவத் அனுபவம் பண்ணுகை ஸ்வரூபம் என்கிறது –
—————
பத்தாம் பாட்டில் –
எல்லாருடைய திரட்சியும் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள் –
இத்தால் ஸ்ரீ வைஷ்ணவ சமாஜ தர்சனம்
அபிமதமாய் இருக்குமவர்களைக் கண்டால் அந்த ஸமூஹமாக அவர்களை உகக்கை ஸ்வரூபம் என்கிறது –
———–
ஆக இப் பதினைந்து பட்டாலும் எழுப்பப் பட்டவர்கள் எல்லாரும் கூட வந்து –
மேல் பதினாறாம் பாட்டால்
ஸ்ரீ நந்தகோபர் திரு மாளிகையில் சென்று
கோயில் காப்பானையும் ஸ்ரீ வாசல் காப்பானையும் எழுப்புகிறார்கள் –
(ஆயர் சிறியோம் -அனைவரும் ஒரே பேரால் நாம ரூப விபாகம் அற்று கடலிலே நதிகள் சேருமா போல்)
———–
பதினேழாம் பாட்டில் –
இவர்கள் திருக் காப்பு நீக்கி -உள்ளே புக விட
ஸ்ரீ நந்தகோபர் தொடக்கமான உள் உள்ளாரை அடைய எழுப்புகிறார்கள் –
இவ் விரண்டு பாட்டிலும்
பகவத் விஷயத்தை கிட்டுவார் தத் ப்ரத்யாஸன்னரை புருஷகாரமாகக் கொண்டு புகுருகை ஸ்வரூபம் என்கிறது –
—————
பதினெட்டாம் பாட்டில் –
இப்படி எழுப்பின இடத்திலும் எழுந்து இராமையாலே தங்களுக்கு புருஷகாரமாக நப்பின்னையை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பகவத் விஷயீ காரம் பிராட்டி புருஷகார சாபேஷை என்கிறது –
(புருஷ சாபேஷமாயும் புருஷகார சா பேக்ஷமாயுமாய் இருக்குமே பேறு பெறுவதற்கு)
————–
பத்தொன்பதாம் பாட்டில் –
இவள் திறக்கப் புக -நம்முடையாருக்கு இவள் முற்பட்டாளாக ஒண்ணாது -என்று இவளைத் திறக்க ஒட்டாதே
கட்டிக் கொண்டு கிடக்கிற கிருஷ்ணனை எழுப்பி –(மலர் மார்பா வாய் திறவாய் )
மறுமாற்றம் கொள்ளாமையாலே மீளவும் அவனை உணர்த்துகைக்காக அவளை எழுப்புகிறார்கள் –
இத்தால்
பிராட்டியை புருஷகாரமாக வரித்தால் அவனும் இவளும் இசலி இசலிப் பரியும் பரிவைச் சொல்லுகிறது –
————–
இருபதாம் பாட்டில் –
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ -என்று
கிருஷ்ணனையும் நப்பின்னை பிராட்டியும் கூட எழுப்புகிறார்கள்
இத்தால்
அடிமை செய்யும் இடத்தில் இருவரும் சேர்ந்த சேர்த்தியிலே அடிமை செய்வதே முறை என்கிறது –
(கமலா -நமக்கும் அவனுக்குமாக இருப்பவள் -)
—————-
இருபத்தோராம் பாட்டில் –
நப்பின்னைப் பிராட்டியும் -நானும் உங்களில் ஒருத்தி அன்றோ –
நாம் எல்லாரும் கூட கிருஷ்ணனை அர்த்திக்க வாருங்கோள்-என்ன
அவன் குணங்களில் தோற்றார் தோற்றபடி சொல்லி எழுப்புகிறார்கள் –
இத்தால்
பிரபுத்தனாய் (விழித்து எழுந்தவனாய் )தங்கள் கார்யம் செய்கைக்கு
ஏத்த ஏழு உலகம் கொண்ட -என்கிறபடியே
ஆஸ்ரிதரானவர் களுக்கு நிர்மமராய்க் கொண்டு அவன் குண கீர்த்தனம் பண்ணுகை கர்த்தவ்யம் என்கிறது –
(ஏத்த ஏழுலகும் கொண்ட கோலக்
கூத்தனைக் குருகூர்ச் சடகோபன் சொல்
வாய்த்த ஆயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லைஓர் ஊனமே.–2-2-11-)
(ஏழு உலகுக்கும் அதிபதி அவன் -ஏற்ற பாடுவது அவன் சம்பந்தம் உணர்ந்து பாடுவது –நானும் உனக்கு பழ அடியேன் என்று உணர வேண்டுமே)
—————-
இருபத்து இரண்டாம் பாட்டில்
கீழ்ப் பாட்டில் தங்கள் அபிமான ஸூ ன்யத்தையைச் சொல்லி
இப்பாட்டில் அநந்யார்ஹ சேஷத்வம் சொல்லுகிறது –
இத்தால்
அவனுடைய விசேஷ கடாக்ஷத்துக்கு தங்கள் அநந்யார்ஹ சேஷத்வம் அனுசந்தேயம் என்கிறது –
—————-
இருபத்து மூன்றாம் பாட்டில் –
உபஸ்தேயைர் உபஸ்தித -என்று
ஸ்ரீ தண்ட காரண்யத்தில் ரிஷிகளினுடைய துக்க நிவ்ருத்திக்கு
நாம் முற்பாடராக பெற்றிலோம் என்று வெறுத்தால் போலே
இவர்கள் நோவு படப் பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று இன்னாதாய் –
அவர்களை அழைத்து செய்ய வேண்டுவது என் என்ன –
(உறாமையோடே உற்றேன் ஆக்காமல் -அதிகாரம் வளர்க்கவே)
இங்கனே சொல்ல ஒண்ணாது -பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்கிறார்கள் –
இத்தால் –
கர்ம பரதந்த்ரராய் இருந்துள்ள பிரயோஜனாந்தர பரரைக் காட்டிலும்
அநந்ய பிரயோஜனராய் சாதனாந்தர நிஷ்டராய் இருக்குமவர்களைக் காட்டிலும் -சித்த சாதனம் பண்ணினார்க்கு
தம் தாம் கையில் கைம் முதல் இல்லாமையால் ஈஸ்வரனே பிரபுத்தனாய்க் கொண்டு அபேக்ஷித சம் விதானம் பண்ண வேணும்
என்று இவ் வதிகாரத்தில் வியாவ்ருத்தி சொல்லுகிறது –
(யாம் வந்த கார்யம் ஆராய வேண்டிய பொறுப்பு உன்னடையதே -ரிஷிகளுக்கே உனது பொறுப்பு என்று இருந்தாய் அன்றோ)
————-
இருபத்து நாலாம் பாட்டில் –
அப்படியே செய்கிறோம் என்று பிரதிஞ்ஜை பண்ணின படியைக் கண்டு –
தங்கள் வந்த காரியத்தை மறந்து
தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –
(தற் காலீகமான அழகிலே ஈடுபட்டு-பஞ்ச லக்ஷம் பெண்களை ஒரு சேரப் பார்த்த அழகு -யார் உயிர் பட்டது எனது உயிர் பட்டது போல் அவனுக்கு இங்கு)
இத்தால்
அர்த்திகளாகச் சென்றால் தம் தாமுடைய
புருஷார்த்தத்தை விஸ்மரித்து மங்களா சாசனம் பண்ண வேண்டும்படியான விஷய வை லக்ஷண்யம் சொல்லுகிறது –
————-
இருபத்தஞ்சாம் பாட்டில் –
ஏதேனும் இப் பிரவ்ருத்திக்கு ஒரு பிரதிபந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள் –
இத்தால்
ஸ்வரூப லாபம் அத் தலைக்கே கூறானவோபாதி-துக்க நிவ்ருத்தியும்
அத் தலைக்கே பரம் என்னும் இவ் வர்த்தம் சொல்லுகிறது –
(தான் தீங்கு நினைத்த கம்சனைப் போக்கி-வருத்தமும் தீர்த்து மகிழ வைக்க வேண்டுமே)
———
(வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று ஆர்வுற்ற என்னை ஒழிய -இதுவரை
மேல்
என்னில் முன்னம் பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான் கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-
அவனது பாரிப்பு கடல் போல் -நமது பாரிப்பு குளப்படி போல்
அவா அறச் சூழ்ந்தது போல் இங்கும்
அத்தைக் கண்டு மாலே என்று தொடங்கும் இறுதி ஐந்து பாசுரங்கள் )
இருபத்து ஆறாம் பாட்டில் –
மற்ற அபேக்ஷிதம் என் என்ன நோன்புக்கு வேண்டும் உபகரணங்களை தர வேணும் என்கிறார்கள் –
இத்தால்
துக்க நிவ்ருத்தியோபாதி போக உபகரண சித்தியும் அவனாலே என்கிறது –
—————
இருபத்து ஏழாம் பாட்டில் –
நோற்றால் பெறக் கடவ பேறு சொல்கிறது –
இத்தால்
ப்ரஹ்ம அலங்காரரேன அலங்குர்வந்தி-
என்று அலங்காராதிகளும் பகவத் பிரசாதாயத்தாம் என்கிறது
————-
இருபத்து எட்டாம் பாட்டில் –
நாட்டார் இசைகைக்காக நோன்பு என்று ஒரு வியாஜத்தை இட்டு புகுந்தோம் அத்தனை
எங்களுக்கு அது உத்தேச்யம் அன்று –
உன் திருவடிகளில் கைங்கர்யம் என்று தங்களுக்கு உத்தேசியமான புருஷார்த்த சித்திக்கு
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும் ப்ராப்தியையும் முன்னிட்டு –
அவனே உபாயமாக வேணும் என்று அபேக்ஷித்து ஷாமணம் பண்ணிக் கொண்டு
ப்ராப்ய பிரார்த்தனம் பண்ணித் தலைக் கட்டுகிறது –
இதுக்கு கீழ் அடங்க ஒரு அதிகாரிக்கு சம்பவிக்கும் ஸ்வபாவங்களை சொல்லிற்று யாயிற்று
இப் பாட்டில்
அதிகாரி ஸ்வரூபமான உபாய ஸ்வீகாரத்தை ஸ ப்ரகாரமாகச் சொல்லுகிறது
—————
இருபத்து ஒன்பதாம் பாட்டில் –
தங்களுக்கு உத்தேச்யமானது கைங்கர்யம் -என்று பிரபந்த தாத்பர்யம் சொல்லி முடிக்கிறார்கள்
இத்தால்
ஸ்வீக்ருத உபாயத்துக்கு பலமான புருஷார்த்த ஸ்வரூபம் சொல்லுகிறது –
(இறைவா நீ தாராய் பறை -பிரார்த்தனை
உனக்கே நாம் ஆட் செய்வோம் –மற்றை நம் காமங்கள் மாற்று –புருஷார்த்த ஸ்வரூபம்)
————
முப்பதாம் பாட்டில் –
இப் பிரபந்தம் கற்றார் -நாய்ச்சியாராலும் ஈஸ்வரனாலும் சர்வ காலமும் உண்டான விசேஷ கடாக்ஷத்தைப் பெற்று
நித்ய ஸூகிகளாகப் பெறுவர் –
இத்தால்
யுக்தமான அனுஷ்டானம் இல்லாதார்க்கும் அவர்களுடைய பாசுரமே அவர்கள்
பெற்ற பேற்றைத் தரும் -என்று
இப் பாசுரத்தில் ஏற்றத்தைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –
———–
ஆக
திருப்பாவையால் சொல்லிற்று யாயிற்று வேதார்த்தம் –
அதாவது
அவதாரமே சர்வ ஸமாஸ்ரயணீயம் என்றும்
அவதீர்ணனாவனுடைய வடிவு அழகே ருசி ஜனகம் என்றும்
ருசி யுடையார் ப்ராப்ய த்வரையாலே-அவனை மேல் விழுந்து அபேக்ஷிக்கை பிராப்தம் -என்றும்
இவ் விஷயத்தில் இழிவார்க்கு ருசி யுடையார் அடங்க உத்தேச்யர் என்றும்
ப்ராப்யம் ஆகிறது -அனுபவ ஜனித ப்ரீதி காரியமாய் யாவதாத்மா பாவியான கைங்கர்யம் என்றும்
தத் சாதனமும் அவன் திருவருளே என்றும் சொல்லிற்று யாயிற்று –
(இரக்கம் ப்ராப்யம் -உபாயம்
இனிமை ப்ராபகம் -உபேயம்
இச்சையே அதிகாரம்)
(இயம் ஸீதா மம ஸுதா ஸஹ த4ர்ம சரீதவ| ப்ரதீச்ச2 சைநாம் ப4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||
இயம் கோதா ஸஹ த4ர்ம சரீதவ| ப்ரதீச்ச2 சைநாம் ப4த்3ரம்தே பாணிம் க்3ருஹ்ணீஷ்வ பாணிநா ||
நாளை வதுவை –கனாக் கண்டேன் தோழீ நான் -கேசவ நம்பியைக் கால் பிடித்து மிதுனமாக நமக்கு நித்ய அநுக்ரஹம் செய்து கொண்டுள்ளார்கள்)
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஸ்ரீமத் வானமா மலை ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.