ஈராயிரப்படி நாலாயிரப்படி-அவதாரிகை –
பெண்காள் உங்கள் கார்யம் அழகிதாகச் செய்து தருகிறோம் –
உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
இங்கனே குன்னங்குறிச்சியாகக் கேட்டருள ஒண்ணாது –
புறப்பட்டுக் கேட்டருள வேணும் -என்கிறார்கள்
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை அமரர் முழு முதலானே -(1-7-8-)
(என்னை நெகிழக்கிலும் நெஞ்சை அகல்விக்க கில்லான் -புருஷகார பலம் -நப்பின்னை பிராட்டியைப் பற்றிய பலம் )
மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
பதவுரை
மாரி–மழைகாலத்தில்
மலை முழஞ்சில்–மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து–(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும்–உறங்கா நின்ற
சீரிய சிங்கம்–(வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது(பையத்துயின்ற பரமன் போல் உறங்கும் ஸிம்ஹம் வீர்யம் )
அறிவுற்று–உணர்ந்தெழுந்து
தீ விழித்து–நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர்–(ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளை மயிர்களானவை
பொங்க–சிலும்பும்படி
எப்பாடும்–நாற் புறங்களிலும்
பேர்ந்து–புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி–(சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து–சோம்பல் முறித்து(தண்டாகாரம் பிண்டாகாரம் )
முழங்கி–கர்ஜனை பண்ணி(ஸ்ருஷ்டிக்கு ப்ரஹ்மம் சிலிர்த்து கர்ஜித்து சங்கல்பித்து செய்வதும் த்ருஷ்டாந்தம் இவை )
புறப்பட்டு போதரும் ஆ போலே–வெளிப் புறப்பட்டு வருவது போல,
பூவை பூ வண்ணா–காயம் பூப் போன்ற உறத்தை யுடைய பிரானே!(கடுமை தேஜஸ் வீர்யம் அது -இது அழகு மென்மை பரிமளம் )
நீ–நீ
உன் கோயில் நின்று–உன்னுடைய திருக்கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி–இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று
கோப்பு உடைய–அழகிய ஸந்நிவேசத்தை யுடைய(ஏற்கும் பெரும் புகழ் சடகோபன் போல் சத்ருசமான ஸிம்ஹாஸனம் )
சீரிய–லோகோத்தரமான
சிங்காசனத்து-எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம்-நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து–விசாரித்து
அருள்–கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய்
சீரிய சிங்கம்-சிற்றாயர் சிங்கம் -யாதவ ஸிம்ஹம் -ரெங்கேந்திர ஸிம்ஹம் -ராகவ சிம்மம் -ராஜ ஸிம்ஹம்
வேரி மயிர் பொங்க–பரிமளம் மிக்க பிடரி மயிர் சிலிர்த்து
மூரி நிமிர்ந்து-உடல் ஒன்றாகும் படி நிமிர்ந்து
பூவைப் பூ வண்ணா-காயாம்பூ வண்ணா -மென்மையான திருமேனி -சேராச் சேர்க்கை –
கதிர் மதியம் போல் -திங்களும் ஆதித்ய எழுந்ததால் போல் -கீழே பார்த்தோம் –
போந்தருளி-நடந்து அருளி -திருக் கைத்தலை சேவை -கார்த்திகை அன்று சேவை -உள்ளே எழுந்து அருளுவார்
கோப்பு -அழகு மேன்மை –
இருந்து -வீற்று இருந்து
வந்த
கார்யம் ஆராய்ந்து-மநோ ரதம் -சிற்றம் சிறு காலைக்கு வைத்து அருளுகிறாள்
கடாக்ஷம் பிரார்த்தனை கீழ் -அது படுக்கை அறையில் இருந்து கூடாது -இப்படி ஆக வேண்டும் -என்கிறாள் –
மாரி மலை முழஞ்சில் –
பெருமாள் மால்யவானிலே எழுந்து அருளி இருந்தாப் போலே வர்ஷம் பெய்து
வழிகள் எல்லாம் தூறு எழுந்து ராஜாக்கள் படை வீட்டிலே இருந்து
வினை யுண்டானாலும் புறப்படாதாப் போலே –
(கிஷ்கிந்தை -ப்ரஸ்ரவணா கிரி -துங்க பத்ரா நதி கரையில் -ரகுநாத மந்திர் –
சூடாமணி வாங்கிக் கொள்ளும் திருக்கோலம் -ஐந்து மலைகள் -அழகு ததும்பும் )
ஸிம்ஹங்கள் கிரி குஹைகளிலே கிடந்தது உறங்கும் காலம் –
விஸ்லேஷித்தார் கூடும் காலம் –
கூடியிருந்தார் சம்போகம் அனுபவிக்கும் காலம் –
நாங்கள் உன் வாசலிலே நிற்கும் காலம் –
மன்னிக்
யாருக்கு அஞ்சுமது-மலைக் குவடு போலே இருக்கை –
கிடந்து உறங்கும் சீரிய சிங்கம்
ஒருத்தர் முடி சூட்ட வேண்டாதே புறம்பே ம்ருகேந்த்ரனாகையும்-
நிரங்குச வைபவம் உண்டாகையும் –
ச மயா போதித ஸ்ரீ மான் –
ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும்படி இருக்கை
அபித பாவ கோபமம் -(ஆரண்ய -99-23 )
அனுகூலரான தம்பிக்கும் அகப்பட அணுக ஒண்ணாத படி இருக்கை
(மந்தாகினி நதிக்கரையில் -சிறு காக்கை முலை தீண்ட –
சயன திருக்கோலம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இன்றும் சேவிக்கிறோம் இத்தை நினைவூட்டவே
நெருப்பு போல் -பரதாழ்வானுக்கும் கிட்ட முடியாத படி பெருமாள் இருந்த கோலம் )
அறிவுற்றுத்
பூ அலர்ந்தால் போலே காலத்திலே உணருகை –
சம்சாரி உறங்கும் போது தமோ அபி பூதனாய் -உணர்ந்தால் பராக் அர்த்த அனுபவமாய் இருக்கும்
(பவ அடாவி வர்ணம் -சம்சார காடு ஆர்ணவம்
ப்ரத்யக் அர்த்தம் ஜீவ பர அனுபவம் -மற்றவை பராக் அனுபவம்
அறிவை தமோ குணம் மூட -மனஸ் மட்டும் -ஆழ் நிலை உறக்கம் மனஸ்ஸும் வேலை செய்யாதே –
அறிவுறுதல்-ப்ரஹ்ம ஞானம் )
இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்
(ஜகத் சிந்தனை -யோக நித்திரை -உறங்குவான் போல் யோகு செய்து )
தீ விழித்து
பிரதம அஷி சந்நிபாதத்திலே பேடைக்கும் அருகே நிற்க ஒண்ணாதது என்கை –
(பைங்கண்ணார் ஆளரியாய் வெருவ நோக்கி )
வேரி மயிர் பொங்க-
உளை மயிர் –
அவனுக்கு ஆகில் சர்வ கந்த (சர்வரஸ–ஸர்வ கந்த )
வெப்பாடும் பேர்ந்துதறி
ஒரு கார்யப் பாடு இல்லாமையாலே நாலு பாடும் பேருகிற படி
உதறி
அவயவங்களைத் தனித் தனியே உதறின படி
மூரி நிமிர்ந்து
உடம்பு ஒன்றாய் நிமிர்ந்த படி
(தண்டாகாரம் கால்களை அகற்றி -பிண்டாகாரம் -முதுகு வயிறு அசைந்து )
முழங்கிப்
மான் உள்ளிட்ட மிருகங்கள் முழுக் காயாகப் பினத்திக் கிடக்கும் படி –
முழங்கிப் புறப்பட்டு-போதருமா போலே
கிரி கஹ்வரத்தில் நின்றும் இப்படிப்பட்ட சிம்மம் புறப்பட்டுப் போமா போலே
போர வேணும் -என்ன
பெண்காள் நரஸிம்ஹம் போருமா போலே போர வேணுமோ -என்ன
நீ பூவைப் பூ வண்ணா –
காம்பீர்யத்துக்கு ஒன்றைச் சொன்னாமாகில் நீ போருமா போலே போர வேணும் -என்கை
வடிவையும் நிறத்தையும் உன்னைப் போலே பண்ண ஒண்ணுமோ என்கை –
இவனை ஸிம்ஹத்தைப் போலே பாவிக்கிறது நாச்சியார் விழி விழிக்கைக்காக
(ராஜாதி ராஜன் ஸர்வேஸ்வரேஸ்வரன் நம்பெருமாள் பக்கலில் நாம் இன்றும் பார்க்கிறோம் –
சிம்ம அவலோக நியாயம்
இல் பொருள் உவமை -தேஜஸ்ஸுக்கு ஸிம்ஹம் -மென்மைக்கு பூ –
தேவரீருக்கு உவமை சொல்லப் போகாதே -)
வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிக்
நப்பின்னைப் பிராட்டியை ஊன்றிக் கொடு திருப் பள்ளி அறையில் நின்றும்
பெரிய திரு மண்டபத்து ஏறப் புறப்பட்டு அருள வேணும்
(பெரிய பெருமாளை எழுந்து அருளி சேவை சாதிக்க ஆண்டாள் பிரார்த்திக்க
செய்து காட்டி அவளுக்கு அருளி இருப்பானே
அந்த சேவை ஸ்வாமி கண்டு அனுபவித்து வியாக்யானம் )
பூர்வாம் திஸம் (அயோத்யா 16 )
(இந்திரன் கிழக்கே – யமன் மேற்கே -வருணன் தெற்கே குபேரன் வடக்கே ரக்ஷிக்கட்டும் )
இத்யாதிப் படியே பிராட்டி மங்களா சாசனம் பண்ணப் புறப்பட்டு அருளினால் போலே
பர்வதாதிவ நிஷ்க்ரம்ய ஸிம்ஹோ கிரி குஹாசயா -லஷ்மணம் த்வாரி சோ அபஸ்யத்
ப்ரஹ் வாஞ்ஜலி புடம் ஸ்திதம் -என்னக் கடவது இறே
இங்கனே போந்தருளிக்
கண் வளர்ந்து அருளினை அழகு காணப் பெற்றோம்
இனி நடை அழகும் –
இருப்பின் அழகையும் கண்டு வாழ வேணும் என்கிறார்கள்
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து (9-2-3-)-இத்யாதி வத்
போந்தருளிக்
சதுர்க் கதி (ஸ்ரீ சஹஸ்ர நாமம் ) இறே
கஜ சிம்ஹ கதீ வீரவ்-இத்யாதிப் படி இறே
நடை அழகில் ருஷபத்தினுடைய செருக்கும் –
மத்த கஜத்தினுடைய திமிர்ப்பும் –
புலியினுடைய உறட்டும்-
சிம்மத்தினுடைய பராபி பாவனா சாமர்த்தியமும் தோன்றி இருக்கும்
இது எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம்
(ஸிம்ஹ ரிஷப வியாக்ர கஜ சர்ப்ப ஹம்ஸ கருட மஸ்தக -நடை அழகுகள் )
கோப்புடைய
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை
சீரிய சிங்காசனத்து இருந்து
ராஜாக்கள் இன்ன மண்டபத்திலே இன்ன ஸிம்ஹாஸனத்திலே இருந்தால் போலே
(நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் சேவிக்கப் பிரார்த்தனை )
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
இப்போது சொல்லார் –
சிற்றம் சிறு காலைக்கு -29-வைக்கிறார்கள்
ஆராய்ந்து அருள்
நீங்கள் என்பட்டீர்கள் என் செய்தீர்கள் என்கை –
——————————————-
(ஐந்து வித நடை அழகு நம்பெருமாள் புறப்பாட்டில் –
ஸிம்ஹம் -நர ஸிம்ஹம் -ராகவ ஸிம்ஹம் -யாதவ ஸிம்ஹம் -முன் யுகங்களில் –
பின்னானார் வணங்கும் சோதி ரெங்கேந்த்ர ஸிம்ஹம் -அர்ச்சா ப்ரதாநம் -வேர் பற்று -)
(கீழ் கடாக்ஷம் பிரார்த்தனை -வாய் பேசப்புக
படுக்கை அறை கடாக்ஷமும் பேச்சும் வேண்டாம் -சீரிய ஸிம்ஹாஸனம் வரை நடந்து அழகைக் காட்டப் பிரார்த்தனை
கிடந்ததோர் கிடக்கை மட்டும் போதாதே
ஸ்ரீ ரெங்கம் நடை அழகு காஞ்சி குடை அழகு -உத்சவங்கள் ஒலி ஓவா திவ்ய தேசங்கள்
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -கார்யம் சொல்லக் கூடாத சமயத்தில் சொல்லக் கூடாதே
அத்தை சிற்றம் சிறு காலைக்கு -29 பாசுரத்தில் வைத்தார்கள்)
நாலாயிரப்படி-அவதாரிகை –
பெண்காள் உங்கள் கார்யம் அழகிதாகச் செய்து தருகிறோம் -உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்னச்
செய்யும்படியை (பாசுரத்தை சுருங்க விட்டு-ஆராய்ந்து அருள் என்ற பதிலைசுருங்க விட்டு )உள் வரியிட்டு (விவரமாக )செய்து கொடுக்கிறார்கள்
சங்கம் இருப்பார் போல் -22-என்ற வார்த்தையைக் கேட்டு
நீங்கள் அநந்ய கதிகள் என்பதே நப்பின்னைப் பிராட்டி பரிக்ரஹமாய் இருந்து வைத்து
என்று திரு உள்ளம் புண்பட்டு – உங்களுக்குச் செய்ய வேண்டுவது என் என்ன
இங்கனே குன்னங்குறிச்சியாகக் (சிறுபிள்ளை வார்த்தை -அமுக்கியமாக )கேட்டருள ஒண்ணாது –
பேர் ஓலக்கமாய் இருந்து நீ கேட்டருளுமா போலே கேட்டருள வேணும் -என்கிறார்கள்
புருஷகாரம் –
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை அமரர் முழு முதலானே -1-7-8(புருஷகாரம் உண்டு என்பதுக்கு பிரமாணம் )
(என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சம் தன்னை அகல்விக்கத் தானும் கில்லான் இனி
பின்னை நெடும் பணைத் தோள் மகிழ் பீடுடை முன்னை யமரர் முழு முதலானே –1-7-8- -புருஷகார பலம் -நப்பின்னை பிராட்டியைப் பற்றிய பலம் ))
அழகர் கிடாம்பியாச்சானை அருளப் பாடிட்டு நீ ஓன்று சொல் என்ன –
அபராத சஹஸ்ர பாஜநம் என்று தொடங்கி -அகதிம் -என்ன
நம் இராமானுசனை யுடையையாய் இருந்து வைத்து அகதி என்னப் பெறாய் என்று அருளிச் செய்தாராம்
(இன்றும் அருளப்பாடு நம் ராமானுஜம் உடையார் என்றே உண்டே
ராமானுசனை நமக்கு உடையவராகக் கொடுத்து அருளிய பின்பு நாம் அகதி இல்லையே
இல்லை எனக்கு எதிர் இல்லை எனக்கு எதிர் என்று அன்றோ சொல்ல வேண்டும் )
(அபராத ஸஹஸ்ர பாஜநம்
பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே!
க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||–ஶ்லோகம் 48 –
துன்பங்களைப் போக்கி என்னை ரக்ஷிப்பவனே! கணக்கில்லாத அபராதங்களுக்கு இருப்பிடம் நான்;
இப்பொழுது இந்த ஸம்ஸாரம் என்கிற க்ரூரமான கடலில் முழுகியுள்ளேன்; எனக்கு வேறு புகல் இல்லை;
உன்னிடத்திலே சரணடைந்துள்ளேன்; உன்னுடைய கருணையினாலே என்னை உன்னுடையவனாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.)
அனந்தாழ்வான் -அமரியாத என்கிற ஸ்லோகத்தை ஆளவந்தார் அருளிச் செய்தார் என்னக் கேட்டு
எனக்கு அது சொல்ல வேண்டா என்றான் அவர் சம்பந்தத்தால் –
(அமர்யாத: க்ஷுத்ரஶ் சலமதிர் அஸூயா ப்ரஸவபூ:
க்ருதக்நோ துர்மாநீ ஸ்மரபரவஶோ வஞ்சநபர: |
ந்ருஶம்ஸ: பாபிஷ்ட: கதம் அஹமிதோ து:க்க ஜலதே:
அபாராதுத்தீர்ணஸ் தவ பரிசரேயம் சரணயோ: ||ஶ்லோகம் 62 –நாம் அனுசந்திக்க வேண்டி 10 விஷயங்கள் அருளிச் செய்து காட்டி அருளுகிறார்
நான் சாஸ்த்ர மர்யாதைகளை மதிக்காமல் கடந்தவன், தாழ்ந்த விஷயங்களில் ஆசை உள்ளவன்,
நிலை இல்லாத மனதை உடையவன், பொறாமையின் பிறப்பிடம், எனக்கு நன்மை செய்பவர்களுக்கும் தீங்கிழைப்பவன்,
கைவிடவேண்டிய கர்வத்தை உடையவன், காமத்துக்கு வசப்பட்டவன், ஏமாற்றுபவன், க்ரூரமான செயல்களில் ஈடுபட்டவன்
மற்றும் பாபங்களில் மூழ்கியுள்ளவன். நான் எப்படி இந்த எல்லையில்லாத பாபக் கடலின் கரையை அடைந்து
உன்னுடைய திருவடிகளுக்குத் தொண்டு செய்வேன்?)
வசசா சாந்த்வயித்வை நம் -என்று அருளி
சாபராதன் அன்றோ சாந்த்வனம் பண்ணுவான் -என்று அருளிச் செய்தால் போலே
நீங்கள் சொல்லிற்று எல்லாம் நம் குறையால் வந்தது -என்று அருளிச் செய்து
பெண்களை சாந்த்வனம் பண்ணி அருளினான் –
(அபய பிரதானம் -விபீஷணன் திரு உள்ளம் என்ன பாடு பட்டு இருக்கும் இவ்வளவு நேரம் காக்க வைத்ததுக்கு என்று
வாக்காலே ஆசுவாசம் படுத்தி கண்களால் நீரைப் பருகுவார் போல் பெருமாள் பருகினார் அன்றோ
அதே போல் பெண்காள் உங்களைக் காக்க வைத்தது எனது குறை என்றானாம் -)
மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
(சீரிய சிங்கம்-சிற்றாயர் சிங்கம் -யாதவ ஸிம்ஹம் -ரெங்கேந்திர ஸிம்ஹம் -ராகவ சிம்மம் -ராஜ ஸிம்ஹம்
வேரி மயிர் பொங்க–பரிமளம் மிக்க பிடரி மயிர் சிலிர்த்து
மூரி நிமிர்ந்து-உடல் ஒன்றாகும் படி நிமிர்ந்து
பூவைப் பூ வண்ணா-காயாம்பூ வண்ணா -மென்மையான திருமேனி -சேராச் சேர்க்கை –
கதிர் மதியம் போல் -திங்களும் ஆதித்ய எழுந்ததால் போல் -கீழே பார்த்தோம் –
போந்தருளி-நடந்து அருளி -திருக் கைத்தலை சேவை -கார்த்திகை அன்று சேவை -உள்ளே எழுந்து அருளுவார்
கோப்பு -அழகு மேன்மை –
இருந்து -வீற்று இருந்து
வந்த
கார்யம் ஆராய்ந்து-மநோ ரதம் -சிற்றம் சிறு காலைக்கு வைத்து அருளுகிறாள்
கடாக்ஷம் பிரார்த்தனை கீழ் -அது படுக்கை அறையில் இருந்து கூடாது -இப்படி ஆக வேண்டும் -என்கிறாள் -)
மாரி மலை முழஞ்சில் –
பெருமாள் மால்யவானிலே எழுந்து அருளி இருந்தாப் போலே
வர்ஷம் பெய்து வழிகள் எல்லாம் தூறு எழுந்து ராஜாக்கள் படை வீட்டிலே இருந்து
வினை யுண்டானாலும் புறப்படாதாப் போலே –
ஸிம்ஹங்கள் கிரி குஹைகளிலே கிடந்தது உறங்கும் காலம் –
விஸ்லேஷித்தார் கூடும் காலம் –
கூடியிருந்தார் சம்போகம் அனுபவிக்கும் காலம் -என்றுமாம் –
நீ எங்கள் வாசலிலே வர ப்ராப்தமாய் இருக்க நாங்கள் உன் வாசலிலே நிற்கும் காலம் -என்றுமாம் –
(கிஷ்கிந்தை -ப்ரஸ்ரவணா கிரி -துங்க பத்ரா நதி கரையில் -ரகுநாத மந்திர் –
சூடாமணி வாங்கிக் கொள்ளும் திருக்கோலம் -ஐந்து மலைகள் -அழகு ததும்பும் )
(ப்ராப்ய த்வரை மிக்கு -ஆகவே பெரியாழ்வாரை ஸ்ரீ ரெங்கம் கூட்டி வரச் சொல்லி
திருக்கல்யாணம் செய்து கொண்டான் அரங்கன்)
மன்னிக்
யாருக்கு அஞ்சுமது-மலைக் குவடு போலே இருக்கை –
தன் பேடையோடே ஏக வஸ்து என்னலாம் படி பொருந்திக் கிடக்கிறது -என்றுமாம்(சதேவ ஏக மேவ அத்விதீயம் -அன்றோ )
இங்கு -நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பன் இறே
ஹார விசேஷம் -(பெரிய பவள மாலை பார்த்தாலே நாச்சியார் திருக்கோலம் -ஹாரம் போல் அரங்கனுக்கு அவளுக்கு )
ஸ்ரீ ஸ்தந ஆபரணம் தேஜ -(பட்டர் )
இது முலை -அது மலை –
ஆஷாடே-(ஆடி மாதத்தில் )
கிடந்து உறங்கும் சீரிய சிங்கம்
ஒருத்தர் முடி சூட்ட வேண்டாதே பிறப்பே ம்ருகேந்த்ரனாகையும்-
நிரங்குச (அடங்குவார் இல்லா)வைபவம் உண்டாகையும்
ச மயா போதித ஸ்ரீ மான் பரந்தப -(கிடந்ததோர் கிடக்கை )
ஷூத்ர மிருகங்கள் மண் உண்ணும்படி இருக்கை
அபித பாவ கோபமம் (ஆரண்ய -99-23 )-அனுகூலரான தம்பிக்கும் அகப்பட அணுக ஒண்ணாத படி இருக்கை
(மந்தாகினி நதிக்கரையில் -சிறு காக்கை முலை தீண்ட –
சயன திருக்கோலம் ஸ்ரீ வில்லிபுத்தூரில் இன்றும் சேவிக்கிறோம் இத்தை நினைவூட்டவே
நெருப்பு போல் -பரதாழ்வானுக்கும் கிட்ட முடியாத படி பெருமாள் இருந்த கோலம் )
(சீரிய சிங்கம் இது சிற்றாயர் சிங்கம் இவன்)
அறிவுற்றுத்
பூ அலர்ந்தால் போலே காலத்திலே உணருகை –
சம்சாரி உறங்கும் போது தமோ அபி பூதனாய் -உணர்ந்தால் பராக் அர்த்த அனுபவமாய் இருக்கும்
இவன் உறக்கம் வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வருமளவும்(ஜகத் சிந்தனை -யோக நித்திரை -உறங்குவான் போல் யோகு செய்து )
(மன்னிக் கிடந்து உறங்கும் -பிரளயம் -அறிவுற்று -பஹஸ்யாம் சங்கல்பம் -உள் வரி இட்டுக் கொடுத்தல்)
(பவ அடாவி வர்ணம் -சம்சார காடு ஆர்ணவம்
ப்ரத்யக் அர்த்தம் ஜீவ பர அனுபவம் -மற்றவை பராக் அனுபவம்
அறிவை தமோ குணம் மூட -மனஸ் மட்டும் -ஆழ் நிலை உறக்கம் மனஸ்ஸும் வேலை செய்யாதே –
அறிவுறுதல்-ப்ரஹ்ம ஞானம் )
தீ விழித்து
பிரதம அஷி சந்நிபாதத்திலே (முதல் பார்வையிலேயே )பேடைக்கும் அருகே நிற்க ஒண்ணாதது என்கை -(பைங்கண்ணார் ஆளரியாய் வெருவ நோக்கி )
வேரி மயிர் பொங்க
உளை மயிர் சிலும்ப -வேரி-ஜாதி உசிதமான கந்தம் –
அவனுக்கு ஆகில் சர்வ கந்த
எப்பாடும் பேர்ந்துதறி
ஒரு கார்யப் பாடு இல்லாமையாலே நாலு பாடும் பேருகிற படி
(ஸ்ருஷ்ட்டி சங்கல்பத்தாலேயே ஆகுமே -காரியப்பாடு இல்லையே
ஆழ்வார் போல்வார் மடல் எடுக்க -கஜேந்திரன் கூப்பிட ஓடுவான்)
உதறி
அவயவங்களைத் தனித் தனியே உதறின படி(சிலிர்த்து -சேதன அர்த்தன ஸ்ருஷ்டிக்கு )
மூரி நிமிர்ந்து
உடம்பு ஒன்றாய் நிமிர்ந்த படி(தண்டாகாரம் கால்களை அகற்றி -பிண்டாகாரம் -முதுகு வயிறு அசைந்து )
முழங்கிப்
மான் உள்ளிட்ட மிருகங்கள் முழுக் காயாகப் அவிந்து கிடக்கும் படி -முழங்கி
முழங்கிப் புறப்பட்டு-போதருமா போலே
கிரி கஹ்வரத்தில் நின்றும் இப்படிப்பட்ட சிம்மம் புறப்பட்டுப் போமா போலே போர வேணும் -என்ன
பெண்காள் நரஸிம்ஹம் போருமா போலே போர வேணுமோ -என்ன
நீ பூவைப் பூ வண்ணா –
காம்பீர்யத்துக்கு ஒன்றைச் சொன்னாமாகில் நீ போருமா போலே போர வேணும் -என்கை
வடிவையும் நிறத்தையும் உன்னைப் போலே பண்ண ஒண்ணுமோ என்கை
இவனை ஸிம்ஹத்தைப் போலே வருகையாகிற இது நாச்சியார் விழி விழிக்கையாய் இருக்கை
(ராஜாதி ராஜன் ஸர்வேஸ்வரேஸ்வரன் நம்பெருமாள் பக்கலில் நாம் இன்றும் பார்க்கிறோம் –
சிம்ம அவலோக நியாயம்
இல் பொருள் உவமை -தேஜஸ்ஸுக்கு ஸிம்ஹம் -மென்மைக்கு பூ –
தேவரீருக்கு உவமை சொல்லப் போகாதே -)
வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிக்
பிராட்டியோடே இறே கண் வளர்ந்து அருளுவது –
அவள் எங்களைத் தனித் தனியே நோக்கி அருளும்படி
நப்பின்னைப் பிராட்டி திருக் கையை ஊன்றிக் கொடு திருப் பள்ளி அறையில் நின்றும்
பெரிய திரு மண்டபத்து ஏறப் புறப்பட்டு அருள வேணும்
(பெரிய பெருமாளை எழுந்து அருளி சேவை சாதிக்க ஆண்டாள் பிரார்த்திக்க
செய்து காட்டி அவளுக்கு அருளி இருப்பானே
அந்த சேவை ஸ்வாமி கண்டு அனுபவித்து வியாக்யானம் )
பூர்வாம் திஸம் (அயோத்யா 16 )
(இந்திரன் கிழக்கே – யமன் மேற்கே -வருணன் தெற்கே குபேரன் வடக்கே ரக்ஷிக்கட்டும் )
இத்யாதிப் படியே பிராட்டி மங்களா சாசனம் பண்ணப் புறப்பட்டு அருளினால் போலே
பர்வதாதிவ நிஷ்க்ரம்ய ஸிம்ஹோ கிரி குஹாசயா -லஷ்மணம் த்வாரி சோ அபஸ்யத்
ப்ரஹ் வாஞ்ஜலி புடம் ஸ்திதம் -என்னக் கடவது இறே
இங்கனே போந்தருளிக்
கண் வளர்ந்து அருளின அழகு காணப் பெற்றோம்
இனி நடை அழகும் –
இருப்பின் அழகையும் கண்டு வாழ வேணும் என்கிறார்கள்
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ எழுந்து அருளாய் (9-2-3-)-என்கிறார்கள் –
இப்படி இருந்து அருள வேணும்
(கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம் கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல்லடிமை வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய் திருப் புளிங்குடிக் கிடந்தானே–9-2-3-)
(புளிங்குடிக் கிடந்து வர குணமங்கை இருந்து வைகுந்தத்துள் நின்று
தெளிந்த என் சிந்தை அகம் கழியாதே என்னை ஆள்வாய் எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்பப்
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல் கனி வாய்சிவப்ப நீ காண வாராயே–9-2-4-)
(நின்ற வாறு மிருந்தவாறும் கிடந்த வாறும் நினைப்பரியன
ஒன்றலா உருவாய் அருவாயநின் மாயங்கள்
நின்றுநின்று நினைகின்றேன் உனைஎங்ஙனம் நினைகிற்பன்? பாவியேற்கு
ஒன்றுநன் குரையாய் உலகமுண்ட ஒண்சுடரே!-5-10-6)
(நின்றது எந்தை ஊரகத்து இருந்தது எந்தை பாடகத்து
அன்று வெஃகணைக் கிடந்தது என் இலாத முன்னெலாம்
அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின் மறந்திலேன்
நின்றதும் இருந்ததும் கிடந்ததும் என் நெஞ்சுளே )
போந்தருளிக்
சதுர்க் கதி (ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ர நாமம் )இறே
கஜ சிம்ஹ கதீ வீரவ்-சார் தூல வ்ருஷ போபமவ் -புண்டரீக விசாலாக்ஷவ் கட்க தூணீ தநுர் தரவ் -இத்யாதிப் படி இறே
நடை அழகில் ருஷபத்தினுடைய செருக்கும் –
மத்த கஜத்தினுடைய திமிர்ப்பும் –
புலியினுடைய உறட்டும்-
சிம்மத்தினுடைய பராபி பாவன சாமர்த்தியமும் தோன்றி இருக்கும்
இது எல்லாம் நம்பெருமாள் நடை அழகிலே காணலாம்(ஸிம்ஹ ரிஷப வியாக்ர கஜ சர்ப்ப ஹம்ஸ கருட மஸ்தக -நடை அழகுகள் )
(மஸ்தக கதி வைகுண்ட ஏகாதசியில் மணல் வெளியில் ஒய் சாவதானம் சொல்லி அனைவருக்கும் சேவை)
(மத்த மாதங்க காமினி ஹம்சா -தாயாருக்கு)
கோப்புடைய
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை
சீரிய சிங்காசனத்து இருந்து
ராஜாக்கள் இன்ன மண்டபத்திலே இன்ன ஸிம்ஹாஸனத்திலே இருந்தால் போலே
இங்கு கடற்கரையிலே வார்த்தையும்
திருத் தேர்த் தட்டில் வார்த்தையும் என்னுமா போலே
ஸிம்ஹாஸனத்திலே இருந்து நினைப்பிட்டது என்றால்
பெண்களுக்கு பொய் சொல்லும் கிருஷ்ணனே யாகிலும் அமோகமாய்த் தவிர ஒண்ணாது இருக்கை
தர்மாசனம் போலே தர்மாதி பீடம் இறே
சீரிய சிங்கத்துக்கு தகுதியான ஆசனம்
சீரிய சிங்காசனம் ஓர் அணுவாகிலும் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான
ஸிம்ஹாஸனம் என்றுமாம்
யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-
இப்போது சொல்லார் –
சிற்றம் சிறு காலைக்கு -29-வைக்கிறார்கள்
ஆராய்ந்து அருள்
நீங்கள் என்பட்டீர்கள் என் செய்தீர்கள் என்கை –
அதாகிறது
பெண்களை எழுப்புவது –
வாசல் காப்பானை எழுப்புவது –
ஸ்ரீ நந்தகோபர் உள்ளிட்டாரை எழுப்புவது –
நம்மை எழுப்புவதாய்ப்-
போர வ்யஸனப் பட்டு வந்திகோளாகாதே-என்கை –
பிரஜை கிணற்றில் விழுந்தால் தாய் அன்றோ நோக்காதே பரியவிட்டாள் என்பார்கள்
அவன் எதிர் சூழல் புக்குத் திரிந்தால்
இன்று இறே இவன் ஒழிவில் காலம் என்பது –
(இந்த வார்த்தை இவன் வாயில் வாங்க அவன் செய்த க்ருஷி -சம்பந்த நெருக்கம் சொல்லிற்று)
(வடக்கு திசையில் இருந்து வந்த வித்வானுக்கு கைத்தல சேவை -நடந்து காட்டி சம்மணம் செய்து அருளிய விருத்தாந்தம்)
———————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply