ஸ்ரீ திருப்பாவை – -ஈராயிரப்படி நாலாயிரப்படி -கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா-ஸ்ரீ திரு நாராயண புரத்து ஸ்ரீ ஆய் ஸ்வாமிகள் -என்னும் ஸ்ரீ ஜனன்யாச்சார்யார் ஸ்வாமிகள் -வியாக்யானங்கள்-

ஸ்ரீ வைகுண்டம் -நித்ய விபூதி- ஸ்வயம் வியக்தம்-ஸ்வயம் பிரகாசம் –
தத் விஷ்ணோ பரமம் பதம் – -ஸ்திரம் அநந்தம் ஆனந்த மயம் –
ஸ்வேந ரூபேண ஸ்வரூப ஆவிர்பாவம் -அபஹத பாப்மா இத்யாதி அஷ்ட குணங்களில் சாம்யம் –

மரம் சரீரம்-இரண்டு பறவைகள் -சமானம் வ்ருக்ஷம் -ஞான ஆனந்தத்தால் சாம்யம் –
ஓன்று கர்ம அனுபவம் புஜித்து மழுங்கி -ஓன்று அகர்ம வஸ்யனாய் ஆனந்தமே வடிவு
அனுபவம் பொது -சாம்யம் இல்லையே இங்கு –
அங்கு தான் ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபச்சிதா –

கூடி இருந்து அனைத்துக் கல்யாண குணங்களை – அனுபவித்து குளிரலாம் –
ஸாயுஜ்யம் -ஸ யோகம் -கூடி -ஸமான பாவனை -ஆனந்த அனுபவம் –
நோன்புக்கு உண்டான சம்மானங்களைப் பிரார்த்திக்கிறாள் இதில் –
ப்ரஹ்மம் வேறே ஜீவர்கள் வேறே -ஸஹ -கூடவே என்றாலே -தர்சனம் பேவ ஏவச –
ஐக்யா பத்தி இல்லையே -கூடினதாகவே இருக்குமே –

பாஷாண கல்பம் இல்லையே -அநிஷ்ட நிவ்ருத்தி மட்டும் போராதே -இஷ்ட பிராப்தியும் உண்டே –
கூடிற்றாகில் நல் உறைப்பு -அது அதுவே -அவர் அவராக நான் நானாக –
சேஷி ஸ்வாமி சர்வ நியாந்தா சர்வ தார்யமாய் அவன் -சேஷமாய் சொத்தாய் நியமிக்கப்பட்டு தங்கப்பட்டு நாம் –
தானும் யானும் எல்லாம் தானாய் கலந்து ஒழிந்தோம் -தேனும் பாலும் அமுதமும் கன்னலும் போல்
கூடி இருந்து –அந்தமில் பேர் இன்பத்தோடு அடியாரோடு இருந்தமை –

ஈராயிரப்படி -அவதாரிகை –

கீழில்-
தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று –
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –

(அங்கே தான் நாம் நாமாக ஸ்வரூப ஆவிர்பாவம் -மூடிய அழுக்கு நீங்கப் பட்டு –
புண்ய பாப விதூய -நிரஞ்சன பரமம் சாம்யம் உபைதி -ஸ்வேந ரூபேண -இயற்கை ஸ்வரூபம் அடைகிறோம் –
வி குண்டம் குறைவே இல்லாமல் அன்றோ அங்கு – –அர்ச்சிராதி –12 -லோகங்கள் தாண்டி –
விரஜா நீராடி ஸூஷ்ம சரீரம் போக்கி -ஸ்வரூப ஆவிர்பாவம் -சுத்த ஸத்வ திரு மேனி பெற்று -ப்ரஹ்ம அலங்காரம் -)

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

கூடாரை–தன் அடி பணியாதவர்களை
வெல்லும் சீர்–வெல்லுகின்ற குணங்களை யுடைய
கோவிந்தா–கண்ண பிரானே!
உன் தன்னை–உன்னை
படி-(வாயாரப்)பாடி
பறை கொண்டு–(உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் கைங்கர்யத்தைப் பெற்று
யாம் பெறு சம்மானம்–(பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது
நாடு புகழும் பரிசினால்–நாட்டார் புகழும்படியாக
சூடகம்–(கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும்
தோள் வளை–தோள் வளைகளும்
தோடு–(காதுக்கிடும் ஆபரணமான) தோடும்
செவிப் பூ–கர்ணப் பூவும்
பாடகம்–பாதகடகமும்
என்றனையப் பல் கலனும்–என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும்
(உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட்ட யாம் நன்றாக அணிவோம்–,
ஆடை–சேலைகளை
உடுப்போம்–(நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;
அதன் பின்னே–அதற்குப் பின்பு
பால் சோறு–பாற் சோறானது (க்ஷிராந்நம்)
மூட–மறையும் படியாக
நெய் பெய்து–நெய் பரிமாறி
முழங்கை வழி–முழங்கையால் வழியும் படியாக (உண்டு)
கூடி–(நீயும் நாங்களுமாகக்) கூடி யிருந்து
குளிர்ந்து–குளிர வேணும்:
ஏல் ஓர் எம் பாவாய்–.

கூடாரை -தனது திருவடிகளை கூடாதாரை
வெல்லும் சீர் கோவிந்தா -சீர் -கல்யாண குணங்கள்
மூன்று பாட்டுக்கள் சேர்ந்து கோவிந்தா அனுபவம் இது முதல்
கூடுவோம் என்று இருந்தால் தான் தோற்று வெல்லுவான்
ஜிதந்தே புண்டரீகாஷா நமஸ்தே விஸ்வ பாவன
தோற்றோம் மட நெஞ்சே

வுன்தன்னைப் பாடிப் பறை கொண்டு -கைங்கர்யம் -பரம புருஷார்த்தம் பறை
யாம் பெரும் சம்மானம்-கீழே நோன்புக்கு உபகரணங்கள் பிரார்த்தனை -இதில் சம்மானங்கள் பிரார்த்தனை
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்-ஊரார் புகழும் படி ஆறு விஷயங்கள் -ஐந்து சொல்லி -விட்டதை எல்லாம் அனைய பல்கலனும்
கீழேயும் ஆறு பார்த்தோம் -ஷட்பதம் த்வயம் -கறவைகள் இதன் பொருள் விளக்கமே -ஆறு ஆறு பதங்களை பட்டியல் இட்டு விளக்கம்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே-ஐந்து சொல்லி
பாடகமே -பாத கடகம்
என்றனைய பல்கலனும் -சொல்லிச் சொல்லாத அனைத்தும் -சீர் பாடலில் சொல்வது போல் –

பராபர குருக்கள் பூட்டும் ஆத்ம பூஷணங்கள் -ப்ரஹ்ம அலங்காரம் –
யாம் அணிவோம் ஆடையுடுப்போம்-உன்னாலும் நப்பின்னைப்பிராட்டியாலும் அணிவிக்கப்பட்ட நாங்கள் அணிவோம்
சூடிக் களைந்த ஆடை உடுப்போம்
அதன் பின்னே பாற்சோறு-அணிகலன் ஆடை ஆகாரம் மூன்றுமே வேண்டுமே
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்-வாய் அக்கார அடிசிலான அவனையே உண்ண -உன்னற்கு உண்ண வேண்டாவே
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்–அடியார்கள் உடன் கூடி ப்ரஹ்ம அனுபவம் –

கூடாரை வெல்லும்
எங்களைத் தோற்பித்த நீ யாரை வெல்ல மாட்டாய் -என்கிறார்கள்
அதாவது –
நாங்கள் முன்னே வந்து நின்று –
வார்த்தை சொல்லும்படி பண்ணினாயே-
ஆந்தனையும் பார்த்தால் கூடாரை வெல்லும் அத்தனை –
கூடினால் தான் தோற்கும் அத்தனை

(ப்ரபன்னர் பரம ஏகாந்தி -உபாய அத்யாவசாயம் போக்கி -அழகும் குணங்களையும் காட்டி –
ப்ராப்ய த்வரை வெல்லும் படி பண்ணி அருளினாய்
மடல் எடுத்தல் -காமன் சாமன் காலில் விழுதல் -செய்யப் பண்ணுவான் )

சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தால்
அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும்
சர்வஞ்ஞரை – எத்திறம் -என்னப் பண்ணும்
சத்யேந லோகான் ஜயதி-இத்யாதி வத்

(சத்தியமே பேசி உலகங்கள் வென்று -ஜடாயு மோக்ஷம் இதனாலே -மனித பாவனையால் –
தீனர்களை தானம் அருளி -குருக்களை அனுகூலம் பண்ணி- சத்ருக்களை வீரத்தால் -வெல்லுமவன் )

கோவிந்தா –
பசுக்களுக்கும் தோற்குமவனே –

வுன்தன்னைப் பாடிப் –
விலக்கினது பெற்ற படி –
ஹிரண்யாய என்கை தவிர்ந்து உன்னைச் சொல்லப் பெறுவதே என்கை –
(அத்யந்த பரதந்த்ரராய் இருக்க வேண்டுமே
அத்வேஷம் ஒன்றாயே பற்றாசாக கைக் கொண்டு மேலே மேலே இட்டுச் செல்லுமவன்
பஞ்ச லக்ஷம் பெண்களை கிருஷ்ணனை விலக்கி வைத்ததே ஹிரண்யா நம
சொல்வது போல் அன்றோ இவர்களுக்கு )

பாடி யுன் தன்னை
பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் என்கை
பாடுகையே பிரயோஜனம் என்றுமாம்
(வல்லபாச்சார்யர் புஷ்டி மார்க்கம் -பெரியாழ்வார் போல் பிள்ளைத்தமிழ் கீர்த்தனைகளை
விடாமல் துவாரகையில் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் )

சீர்
சீலவத்தையின் மிகுதியே என்னவுமாம்

பறை கொண்டு
ப்ராப்யத்தில் ப்ராபக வ்யவஹாரம் –
ஊருக்குப் பறை என்கிறது

கீழேயும் ஏற்றிப் பறை -ஏற்றுதலே பறை –
ஆலினிலையாய் அருள் -இவனை உபாயமாக வேறே கேட்டது போல் மருட்சி –
அவனே பறை -அவனுக்கு கைங்கர்யமே பறை )

யாம் பெரும் சம்மானம்
தங்கள் பேறு-அநாதிகாலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும் படி
அவள் கொண்டாடும்படி சொல்கிறது –
(நங்கள் வரிவளை ஆயங்காலோ நம்முடை ஏதலர் முன்பு நாணி
நுங்கட்க்கு உரைக்கும் மாற்றம் -போல் கேலி பரிபவம் மறக்கும் படி வர வேண்டும் )

நாடு புகழும் பரிசினால்
பாரோர் புகழ -1-என்னும்படியே –
ஒருவர் கொடுக்கும்படியே –
சிலர் பெறும்படியே-என்று கொண்டாட வேணும் –

நன்றாகச்
நாடு சிரிக்கும் படி அன்றிக்கே
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் யஸ்ய துஷ்டாசி பாமிநி-என்று இந்திரன் வரக் காட்டின ஹாரத்தை
கையிலே பிடித்துப் பிராட்டியும் தானும் திருவடியை அலங்கரித்தால் போலே
(தேஜஸ் தைர்யம் இத்யாதி நிரம்பி -அதுக்கு மேல் நீர் அபிமானித்த திருவடிக்கு அருள வேண்டும் )

நன்றாக
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -போலே
(பஞ்ச சதான் அப்சரஸ் சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சனம் ஹஸ்தா
சதம் சூர்ணம் ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா )

சூடகமே
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -(10-3-5-)-என்னுமா போலே
அவன் சொல்லி
மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம்
கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி
வைத்த -முந்துறக் காணும் இடம்

(சூடாமணியை நெஞ்சில் வைத்து புலம்பினார் பெருமாள்
அது போல் என்கை கையை முதலில் நெஞ்சிலும் தலையிலும் வைத்துக் கொள்வான்
பாணி கிரஹணம் முதலில் )

தோள் வளையே
அத்தலையில் ஸ்பர்சம் அணைக்க வேண்டி இருக்கையாலே
அணைத்த தோளுக்குத் தோள் வளையும் -என்கை

தோடே
அணைத்தாலும் உறுத்துமவை –
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்–22–என்னுமா போலே

(கைவளை -ஆத்ம தத்வம்
மேகலையும் காணேன் -ஐஸ்வர்யமும் விட்டேன்
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்)

செவிப் பூவே
ஆக்ராணம்-பண்ணும் இடம் -(ரஹஸ்யம் சொல்வான்)
கண்ணாகவுமாம்
(தாமரைக் கண்களை சொன்னதாகவுமாம் )

பாடகமே
அணைத்தால் துவண்டு விழுமிடம்

என்றனைய பல்கலனும்
பருப் பெருத்தன சில சொன்ன இத்தனை –
நீ அறியுமவை எல்லாம் என்கை –
பல பலவே ஆபரணம்-( 2-5-) இத்யாதி இத்தசையிலே எண்ணப் போமோ –

யாம் அணிவோம்
மலரிட்டு நாம் முடியோம் -2-என்ற இவர்கள் அனுமதி பண்ண அமையும் என்கை

(நோன்பு முடியப் போகிறதே
நாமாக அணியோம் -நீ சூட்ட விலக்க மாட்டோம்
அனுமதி உபாயம் இல்லை -ஸ்வரூப கதம் தானே
நம் பேற்றுக்கு நம் அனுமதி ஹேது ஆகாதே -கிருபையே காரணம்
நம் இழவுக்கு கர்மம் காரணம் -அவன் அனுமதி காரணம் இல்லையே )

ஆடை யுடுப்போம்
பண்டு உடார்களோ என்னில் –
அவன் உடுத்தது உடை –
உடைத்தது உடை அன்று என்கை
அதாவது கூறை மாறுகை
புனை இழை இத்யாதி – அப்பன் திருவருள் மூழ்கினள்–(8-9-5-)என்கிறபடியே

புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட் கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-

அவனோட்டை சம்பந்தமே இவர்கள் நன்மைக்கு எல்லாம் அடி என்கை
புதுக் கணிப்பும் -அவன் உகப்பு ஒழிய தங்கள் உகப்பு பொகட்ட படி

அதன் பின்னே பாற்சோறு-மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
பகவத் சம்பந்தம் உண்டான திருவாய்ப்பாடியிலே ஸம்ருத்திகள் எல்லாம்
இவளுக்கு பிரியமாய் இருக்கிறபடி-
(அவன் உகந்தவை எல்லாமே நமக்கு உத்தேச்யம் )

கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-
புஜிக்கக் கடவது அன்று
பிரிந்து பட்ட கிலேசம் தீர-
கூடித் தொட்டுக் கொண்டு இருக்கை பிரயோஜனம் (நெருக்கு உகக்குமவனைப் போல் )
அஹம் அன்னம் -இத்யாதிப் படியே
ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை

குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சங்கள் வவ்வலிடும்படி –

———————————–

(காத்யாயினி அர்ச்சனை விரதம் -த்வாபர யுகத்தில் ஆய்ப்பாடியில் -கோபிகள்
கலி யுகத்தில் ஸ்ரீ வில்லிபுத்தூரில் அநு காரம் -இடை முடியும் இடைப்பேச்சும் முடை நாற்றமும் -அநுபவ பரிவாஹமே சங்கத்தமிழ் மாலை
அனுஷ்டிக்காத அநு கரிக்காத அனுஷ்டானம் மாத்திரம் நாம் –
கோதை தமிழ் ஐ ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பதும் வம்பு )

(உந்து புளியோதரை
கறவைகள் -தயிர் சாதம்
நாயகனாய் சக்கரைப் பொங்கல்
இன்று பால் சோறு –
நேற்று சாம்யா பத்தி மோக்ஷம்-அஷ்ட குண சாம்யம் -உபகரண பிரார்த்தனை –
இன்று சாயுஜ்யம் மோக்ஷம்-ஸோஸ்நுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா – கூடி இருந்து -தமிழ் படுத்தி இங்கு
பக்தைர்ஸ் பாகவத ஸஹ -அனுபவம்-நோன்புக்கு ஸம்மானம் )

(நெய் உண்ணோம் -விரதம் ஆரம்பிக்க -இங்கு முடியும் பொழுது அனைத்தும் வேண்டுமே)

(நூறு தடா அக்கார அடிசில் -நிறைய நாள் வைத்து அனுபவிக்கும் படி இன்றும் திருமாலிருஞ்சோலையில் உண்டே)

——————

நாலாயிரப்படி-அவதாரிகை –

கீழில்-
தன் ஸ்வரூப சித்தி சொல்லிற்று -(ஸ்வேந ரூபேண அபி நிஷ்பத்யதே )
இப்பொழுது அவர்களை அலங்கரித்த படி சொல்லுகிறது –

(விரஜையில் நீராடி அமானவன் கர ஸ்பர்சம் சதா மாலா ஹஸ்தா -இத்யாதி அலங்காரம் உண்டே)

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன் தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன் பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-

கூடாரை வெல்லும் –
தங்கள் பட்ட இடரை அறிவித்து அத்தலையை தோற்பிக்க நினைத்தார்கள்
அவன் தன் தோல்வியைக் காட்டி அவர்களைத் தோற்பித்த படியைச் சொல்லுகிறது
எங்களைத் தோற்பித்த நீ யாரை வெல்ல மாட்டாய் -என்கிறார்கள்
அதாவது –
நாங்கள் வந்து -உன்  முன்னே  நின்று -வார்த்தை சொல்லும்படி -பண்ணினாயே
ஆந்தனையும் பார்த்தால் –
ந நமேயம்(வணங்கலில் அரக்கன் )-என்று கூடாரை வெல்லும் அத்தனை –
கூடினால் தான் தோற்கும் அத்தனை

சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தாலே –
கூடுவாரை சீலத்தாலே வெல்லும் –
கூடாதாரை ஸூ வீர்யத்தாலே வெல்லும் –
அழகுக்கும் அம்புக்கும் இலக்காகும்(சூர்ப்பணகை ராவணன் )

அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும்
சர்வஞ்ஞரை – எத்திறம் -என்னப் பண்ணும்(மூவாறு மாசம் மோஹித்தார் ஆழ்வார் )
சத்யேந லோகான் ஜயதி-இத்யாதி வத்

(சத்தியமே பேசி உலகங்கள் வென்று -ஜடாயு மோக்ஷம் இதனாலே -மனித பாவனையால் –
தீனர்களை தானம் அருளி -குருக்களை அனுகூலம் பண்ணி- சத்ருக்களை வீரத்தால் -வெல்லுமவன் )

அம்பு வாய் மருந்தூட்டித் தீர்க்கலாம் –
இதுக்கு பரிஹாரம் இல்லை -நீர் கொன்றால் போலே
நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து(9-6) -என்னக் கடவது இறே

(நீர்மையால் நெஞ்சம் வஞ்சித்துப் புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராய் என் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலைத் தென் காட் கரை என் அப்பன்
கார் முகில் வண்ணன் தன் கள்வம் அறிகிலன்–9-6-3-)

சத்ருக்களை வில்லைக் காட்டிக் கொல்லும் அத்தனை –

ச சால சாபம் ச முமோச வீர -என்று
வில் பிடித்த பிடியைக் கண்டு வில்லை ராவணன் பொகட்டான்
பின்னை வில் எடாதே ஒழிந்தான் ஆகில் பெருமாளை வென்றே போகலாயிற்று
வில் கை வீரன் பெருமாள் –
வெறும் கை வீரன் ராவணன் என்றான் வால்மீகி  ருஷி(அஞ்சலிம் பரமாம் முத்ரை )

கோவிந்தா –
பசுக்களுக்கும் தோற்குமவனே
கூடுவோம் என்னும் அபி சந்தி இல்லாதாரையும் (தடுக்காதவரை -அத்வேஷம் மாத்ரம் )ரஷித்த படி –

(இது முதல் மூன்று பாசுரங்களில் கோவிந்தா -ஸ்ரீ ரெங்கத்திலும் தேர் இழுக்கும் பொழுதும் கோவிந்தா என்றே சொல்லுவோம் அன்றோ)

வுன் தன்னைப் பாடிப்
விலக்கினது பெற்ற படி –
ஹிரண்யாய என்கை தவிர்ந்து (ஓம் நமோ நாராயணாய என்று )உன்னைச் சொல்லப் பெறுவதே என்கை –

பாடி யுன் தன்னை
பெண்கள் புணர்ப்பே தாரகமாகப் பாடித் திரியும் உன்னைப்
பாடுகையே பிரயோஜனம் என்றுமாம்

சீர்
சீலவத்தையின் மிகுதியே என்னவுமாம்(கல்யாண குணங்களையே சீர் என்கிறது _

பறை கொண்டு
ப்ராப்யத்தில் ப்ராபக வ்யவஹாரம் -ஊருக்குப் பறை என்கிறது(பாடுவதே பறை -ஸ்வயம் பிரயோஜனம் -பாடிப் பறை உபாயம் சப்தம் )

யாம் பெரும் சம்மானம்
தங்கள் பேறு-
இவ்வளவில் வெளித் திரு முற்றத்தில் நின்றும் பிரசாதம் கொண்டு ஒருவன் வர
இது யாம் பெறு சம்மானம் வந்தது -என்று பட்டர் அருளிச் செய்தார்

பதி சம்மாநிதா சீதா -என்று தோளில் மாலையை வாங்கியிட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்
பட்டர் -பிரணயித்வத்தாலே காலைப் பிடித்து நில் என்றார் என்பர்
தாம் ஸ்ரீரிதி த்வதுப சம்ஸ்ரயணாந் நிராஹூ (ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம் )-என்று கொடுத்தால் தட்டென் என்கை

யஸ்யா கடாக்ஷணம் அநு க்ஷணம் ஈஸ்வராணாம்
ஐஸ்வர்ய ஹேதுரிதி சார்வ ஜநீநம் ஏதத்
தாம் ஸ்ரீ ரிதி த்வத் உபஸம்ஸ்ரியணாத் நிராஹு
த்வாம் ஹி ஸ்ரியஸ் ஸ்ரியம் உதாஹு உதார வாச –(ஸ்ரீ வைகுண்ட ஸ்தவம்-29-)

யாவளொரு பிராட்டியின் கடாக்ஷமானது இந்திராதி தேவர்களுக்கும் அடிக்கடி ஐஸ்வர்ய ஹேதுவாகிறது என்பது
சர்வ ஜன சம்மதம் ஆனதோ -அந்தப் பிராட்டியை தேவரீர் இடத்தில் ஆஸ்ரயித்து இருப்பது காரணமாகவே
ஸ்ரீ என்று நிருத்தி கூறுகின்றார்கள்
உதார வாக்குகளான திருமங்கை ஆழ்வார் போல்வாரும் தேவரீரை அன்றோ திருவுக்கும் திருவாகிய செல்வன் என்கிறார்கள் )

(சுமந்திரன் செய்தி சொல்ல பெருமாள் பிராட்டிக்கு சம்மாநம் செய்து அருளிச் சென்றதுக்கு இரண்டு நிர்வாஹங்கள்)

யாம் பெறு சம்மானம்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும் படி அவள் கொண்டாடும்படி சொல்கிறது –

நாடு புகழும் பரிசினால்
பாரோர் புகழ -1-என்னும்படியே -ஒருவர் கொடுக்கும்படியே –
சிலர் பெறும்படியே-என்று கொண்டாட வேணும் –
சஞ்சயனும் ஸூக சாரணர்களும் இவனுடைய ஆஸ்ரித பக்ஷபாதத்தை புகழ்ந்து பேசினால் போலே

(சஞ்சயன் அர்ஜுனனும் திரௌபதியும் கண்ணனும் சத்யபாமையும் சேர்ந்து இருந்த பொழுது உள்ளே வரவிட்டு
ஆஸ்ரித பக்ஷ பாதி-அஸூயை இல்லாத சஞ்சயன் -யத்ர யோகேஷ்வர: க்ருஷ்ணோ
யத்ர பார்தோ தனுர்-தர: தத்ர ஷ்ரீர் விஜயோ பூதிர் த்ருவா நீதிர் மதிர் மம

சுக சாரணர்கள் ராவண தூதர்கள் -கண்டு உன்னால் வெல்ல முடியாது -என்று சொன்னார்கள் அன்றோ
விரோதிகளும் புகழும் படி ஆஸ்ரித பக்ஷ பாதம்)

நன்றாகச்
நாடு சிரிக்கும் படி –
காலன் கொண்ட பொன்னையிட்டு ஆபரணம் பூண்கை அன்றிக்கே
ப்ரதேஹி ஸூபகே ஹாரம் யஸ்ய துஷ்டாசி பாமிநி-என்று இந்திரன்
வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுக்க
அத்தை ஒரு கையிலே பிடித்து பெருமாளை ஒரு கண்ணாலும்
இத்தை இவனுக்குக் கொடுப்பது என்று திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க
பெருமாள் அத்தை அறிந்து அருளி –
ஆஸ்ரிதரை அறிவாய் நீ யன்றோ கொடுக்கலாகாதோ என்று அருளிச் செய்யக் கொடுத்தால் போலே
இருவரும் கூடிக் கொடுக்கும் ஆபரணம் -என்கை –

நன்றாக
தம் ப்ரஹ்ம அலங்காரேண அலங்குர்வந்தி -(கௌஷீகிதி )என்று
விரஜைக்கு அக்கரைப் பட்டாரை-எம்பெருமான் தன்னை ஒப்பிப்பாரை இட்டு ஒப்பிக்கக் கடவது
இங்கு அங்கன் இன்றிக்கே தானும் பிராட்டியும் கூட ஒப்பித்த தன்னேற்றம் சொல்லுகிறது

(பஞ்ச சதான் அப்சரஸ் சதம் மாலா ஹஸ்தா சதம் அஞ்சனம் ஹஸ்தா
சதம் சூர்ணம் ஹஸ்தா சதம் வாசோ ஹஸ்தா )

நன்றாக
ஆபரணத்தைப் பூண்டு அவர் வரவு பார்த்து இராது ஒழிகை என்றுமாம் –

சூடகமே
வெள்ளி வளைக் கைப் பற்ற -என்கிறபடியே
அநன்யார்ஹைகளாகப் பிடித்த கைகளிலே இறே முதல் ஆபரணம் பூட்டுவது
அடிச்சியோம் தலைமிசை நீ யணியாய் -என்னுமா போலே
அவன் சொல்லி மார்விலும் தலையிலும் வைத்துக் கொள்ளூம் கைக்கு இடும் சூடகம்
தம் மணிம் ஹ்ருதயே க்ருத்வா -இத்யாதி வைத்த -முந்துறக் காணும் இடம்
முந்துறத் தான் உறவு பண்ணும் இடம்
கைத்தலம் பற்ற –

(கை -தோள் —-பாடகமே –ஆரோகணம் அவரோகணம் இல்லாமல்
கைத்தலம் பற்ற கானாக்கண்டேன்
வெள்ளி வளைக் கைப்பற்ற அநந்யார்ஹத்வம் பாணிக்ரஹணம் -சூடகம் -முதல் ஆபரணம்)

கள்வன்கொல்? யான் அறியேன்-கரியான் ஒரு காளை வந்து
வள்ளி மருங்குல் என்-தன் மட மானினைப் போத என்று
வெள்ளி வளைக் கைப் பற்ற பெற்ற தாயரை விட்டு அகன்று
அள்ளல் அம் பூங் கழனி அணி ஆலி புகுவர்கொலோ?

தோள் வளையே
அத்தலையில் ஸ்பர்சம் அணைக்க வேண்டி இருக்கையாலே
அணைத்த தோளுக்குத் தோள் வளையும் -என்கை

தோடே
அணைத்தாலும் உறுத்துமவை -ப்ரியாவதம் ஸோத்பல –
கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்னுமா போலே

நைவளம் ஒன்று ஆராயா நம்மை நோக்கா* நாணினார் போல் இறையே நயங்கள் பின்னும்*
செய்வு அளவில் என் மனமும் கண்ணும் ஓடி எம் பெருமான் திருவடிக்கீழ் அணைய* இப்பால்-
கைவளையும் மேகலையும் காணேன்* கண்டேன்- கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்*
எவ்வளவு உண்டு எம் பெருமான் கோயில்? என்றேற்கு* இது அன்றோ எழில் ஆலி? என்றார் தாமே

செவிப் பூவே
ஆக்ராணம்-பண்ணும் இடம் -(மேல் காதுக்கு -மேல் தோன்றிப்பூ ஆழ்வார் )
கண்ணாகவுமாம்

பாடகமே
அணைத்தால் துவண்டு விழுமிடம் –
அஸி தேஷணை ஆகையாலே- ஜிதந்தே புண்டரீ காக்ஷ -என்று அவன் தோற்று விழும் இடம்

என்றனைய பல்கலனும்
பருப் பெருத்தன சில சொன்ன இத்தனை -நீ அறியுமவை எல்லாம் என்கை –
பல பலவே ஆபரணம் இத்யாதி –இத்தசையிலே எண்ணப் போமோ –

பல பலவே யாபரணம் பேரும் பல பலவே,
பல பலவே சோதி வடிவு பண்பெண்ணில்,
பல பல கண்டுண்டு கேட்டுற்று மோந்தின்பம்,
பல பலவே ஞானமும் பாம்பணை மேலாற்கேயோ-2-5-6-

யாம் அணிவோம்
மலரிட்டு நாம் முடியோம் -2-என்ற இவர்கள் அனுமதி பண்ண அமையும் என்கை

ஆடையுடுப்போம்
பண்டு உடார்களோ என்னில் —

கோவிந்தா உன்தன்னைப் பாடி ஆடை யுடுப்போம்
ஒருத்திக்குப் புடவை கொடுத்தது இவர்களுக்குச் செய்யச் சொல்ல வேணுமோ –
அவன் உடுத்துக் கொடுத்தது உடை -உடுத்துக் கொடுக்காத உடை அன்று என்கை
அதாவது கூறை மாறுகை -மாறாடுகை
புனை இழைகள் அணியும் ஆடையுடையும் புதுக்கணிப்பும் நினையும் நீர்மையதன்று இத்யாதி –
அப்பன் திருவருள் மூழ்கினள்-என்கிறபடியே –

புனை யிழைகள் அணிவும் ஆடை யுடையும் புது கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட் கிது நின்று நினைக்கப் புக்கால்
சுனையினுள் தடந்தாமரை மலரும் தண் திருப் புலியூர்
முனைவன் மூவுல காளி அப்பன் திருவருள் மூழ்கினளே–8-9-5-குட்ட நாட்டுத் திருப்புலியூர் அப்பனோட்டை சம்பந்தமே இவளுக்கு புதுக்கணிப்பு

அவனோட்டை சம்பந்தமே இவர்கள் நன்மைக்கு எல்லாம் அடி என்கை
புதுக் கணிப்பும் –
அவன் உகப்பு ஒழிய தங்கள் உகப்பு பொகட்ட படி
நோன்பு முடிக்கையாலே நல்ல புரியட்டம் உடுக்க என்றுமாம்
உடுத்துக் களைந்த  நின் பீதகவாடை -என்னுமவர்கள் இறே

(அலங்காராசனத்துக்குப் பின் போஜ்யாசனம் தானே)

அதன் பின்னே பாற்சோறு-மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்(ஓங்கு பெரும் செந்நெல் கீழ் )
பகவத் சம்பந்தம் உண்டான திருவாய்ப்பாடியிலே ஸம்ருத்திகள் எல்லாம் இவளுக்கு பிரியமாய் இருக்கிறபடி-
நம்பி திருவழுதி வளநாடு தாசர் -நெய் வாயில் படாதோ என்ன
ஓரவல் (ஓர் அவில் -ஒரே அரிசி மணியாவது )வாயில் தொங்கில் அன்றோ நெய் வாயில் படுவது -என்று பட்டர் அருளிச் செய்தார்
கிருஷ்ண சந்நிதியாலே த்ருபத்தைகளாய் இருக்கிறார்கள்
பால் தொங்கில் அன்றோ நெய் தொங்குவது
நெய் யுண்ணோம் பாலுண்ணோம் -2-என்றது தனியாகை –

(எழ பிரார்த்தனை – கடாக்ஷம் பிரார்த்தனை – நடை அழகைப் பிரார்த்தகித்து மங்களா சாசனம் பண்ணி
அவன் இடம் அவனையே பிரார்த்தித்து -நோன்புக்கு உபகரணங்களை பிரார்த்தித்து -கீழ் எல்லாம்
இங்கு தானே அவன் சந்நிதி கிட்டிற்று)

கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-
தனியே புஜிக்கக் கடவது அன்று –
உண்கை உத்தேச்யம் அன்று-
பிரிந்து பட்ட கிலேசம் தீரத் தீர கூடித் தொட்டுக் கொண்டு இருக்கை பிரயோஜனம்
நம்பெருமாள் திரு நாள் என்று ஒரு பேரை இட்டு ஸ்ரீ வைஷ்ணவர்களை யடையத் திரட்டிக் காணுமா போலே
ஸோஸ்னுதே ஸர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணா விபஸ்ஸிதா-
அஹம் அன்னம் -இத்யாதிப் படியே ஒருவருக்கு ஒருவர் போக்யம் என்கை

(உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்
அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அன்னம் அஹம் அந்நாத அஹம் அந்நாத அஹம் அந்நாத
படியாய்க் கிடந்து உன் பவள வாய்க் காண்பேனே)

குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சங்கள் வவ்வலிடும்படி –

————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading