ஈராயிரப்படி –அவதாரிகை –
அங்கு சொல்லுவது எல்லாம் சொல்லி -(18-உந்து -புருஷகாரம் )
இவளைப் பற்றி எழுப்பி –
அவன் உணர விட்டவாறே
அவன் தனக்கு உரியனோ –
(ந தே ரூபம் –பக்தானாம் -நான் எனக்கே சொல்ல கூடாது நாம் -சொல்ல மாட்டான் அவன் –
நான் உங்களுக்கு -நாங்கள் உனக்கே நாம் சொல்ல வேண்டும் )
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ -என்று
நப்பின்னை பிராட்டியோடே அர்த்திக்கிறார்கள்-
(உன் மணாளனை-இப்போதே எம்மை நீராட்டேலோ-இருவருக்கும் அவளே -ஸ்ரீ ஆறு வ்யுத்பத்தி -உண்டே –
உன் மணாளன் எம்மை ரமமாணா -சீதா -பெருமாள் -இளைய பெருமாள் போல் )
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-
பதவுரை
முப்பத்து மூவர் அமரர்க்கு–முப்பத்து முக் கோடி தேவர்கட்கு
முன் சென்று–(துன்பம் வருவதற்கு) முன்னமே எழுந்தருளி-காலம் முன் இடம் முன்
கப்பம்–(அவர்களுடைய) நடுக்கத்தை-கம்பம் மறுவி -வலித்து -மெல்லினம் வல்லினமாகி
தவிர்க்கும்–நீக்கி யருள வல்ல
கலியே–மிடுக்கை யுடைய கண்ண பிரானே!
வெப்பம்-(பயமாகிற) ஜ்வரத்தை
கொடுக்கும்–கொடுக்க வல்ல
விமலா–பரி சுத்த ஸ்வபாவனே!-கர்மாதீனமாக செய்வதால் குற்றமில்லையே -ஆகவே விமலன் –
துயில் எழாய்-படுக்கையினின்றும் எழுந்தருள்
’செப்பு அன்ன –பொற் கலசம் போன்ற
மென் முலை–விரஹம் பொறாத முலைகளையும்
செம் வாய்-சிவந்த வாயையும்
சிறு மருங்குல்-நுண்ணிதான இடையையுமுடைய
நப்பின்னை நங்காய்-நப்பின்னைப் பிராட்டியே!
திருவே-ஸ்ரீ மஹா லக்ஷ்மியே!-ஒத்தவளே -நீளா தேவி -சாஷாத் க்ஷமாம் –
’துயில் எழாய்–படுக்கையினின்றும் எழுந்தருள்
செப்பம் உடையாய்-(ஆஸ்ரித ரக்ஷணத்தில்) ருஜுவாயிருக்குந் தமையை யுடையவனே
திறல் உடையாய்-ஆஸ்ரித பகைவர் மண்ணுன்னும் படியான வலிமை யுடையவனே!
செற்றார்க்கு–சத்துருக்களுக்கு
(துயிலெழுந்த பின்பு.)
உக்கமும்–(நோன்புக்கு உபகரணமான) ஆலவட்டத்தையும் (விசிறியையும்)
தட்டொளியும்–கண்ணாடியையும்
உன் மணாளனை-உனக்கு வல்லபனான கண்ணபிரானையும்
தந்து-கொடுத்து
எம்மை-(விரஹத்தால் மெலிந்த) எங்களை
இப்போதே-இந்த க்ஷணத்திலேயே
நீராட்டு–நீராட்டக் கடவாய்’
ஏல் ஓர் எம் பாவாய்-.
முன் -இடத்தாலும் காலத்தாலும் முன்
கீழே 18-19-துயில் எழாய் சப்தங்களே இல்லை –
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்-நங்கையாகிய திருவே -நங்கைக்கு திருவே துயில் எழாய்
நங்கையாகிய திருவே-சாஷாத் ஷமா -கருணையால் ஸ்ரீ மஹா லஷ்மிக்கு சாம்யம்
செப்பம் -ஆர்ஜவம் -கலந்து பேச தகுந்தபடி அமைத்துக் கொண்டு இருக்கும் படி
விமலா -ஸமோஹம் சர்வ பூதாநாம் -நைர்கருண்யம் -பக்ஷ பாதம் இல்லாத ஸூத்தி
உக்கமும் தட்டொளியும் தந்து-நோன்புக்கு உபகரணம் -மாலே -விவரணம்
நீராட்டேலோ-இவள் அனுக்ரஹத்தாலே தான் கிருஷ்ண அனுபவம் -நீராடப் போதுவீர்-முதல் பாட்டு –
முப்பத்து மூவர் –
ரஷிக்கைக்கு சங்க்யா நியதி யுண்டோ –
அமரர்க்கு –
கொன்றாலும் சாவாதார்க்கோ உதவலாவது
முன் சென்று
நோவு வருவதற்கு முன்னே ரஷிக்க வேண்டாவோ –
சென்று
சென்று உதவக் கடவ நீ
வாசலிலே வந்த எங்களுக்கு உதவினால் ஆகாதோ
(தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு எழுதும் என்னும் இது மிகை யன்றோ -9-3-9-
ஸூ ஆராதன் -அரியன் அன்று ஆராதனைக்கு –
பத்ரம் புஷ்ப்பம் பலம் தோயம் -இத்யாதி )
கப்பம் தவிர்க்கும்
இறை தவிர்க்கை -என்றுமாம்
துக்க நிவ்ருத்தியை ஆசைப்பட்டார்க்கோ உதவலாவது
(ஸூக பிராப்தி இஷ்டம் பிரார்த்திக்கும் எங்களுக்கு உதவலாகாதோ
அநிஷ்ட நிவ்ருத்தி மட்டும் அன்றோ அவர்கள் பிரார்த்தனை )
கலியே துயில் எழாய்
மிடுக்கை யுடையவன் துயில் எழாய்
எங்களுக்குக் குடியிருப்பும் ஜீவனமும் உணரும்படி காண்கை
(ஆத்ம ஸ்வரூப லாபமே எங்களுக்கு குடி இருப்பு
உனது ப்ரீதிக்காக உனக்கு கைங்கர்யமே எங்களுக்கும் ஜீவனம் )
செப்பமுடையாய் திறல் உடையாய்
பராபி பவந சாமர்த்தியம் எங்களுக்கு அணுக ஒண்ணாதபடி யாயிற்றே –
(ஹிரண்யனை சீறி -அதே சமயம் ப்ரஹ்லாதணக்கு அருளிய ஸிம்ஹம் போல் இருக்க வேண்டாவோ
நீயும் யாதவ ஸிம்ஹம் தானே )
செற்றார்க்கு-வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்-
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி நெடும் காலம் தேடின குணம் எல்லாம் இழக்கப் புகுகிறாய் என்கை-
வெப்பம் கொடுக்கை அனுகூலர் பாடே யாயிற்றோ என்கை (self-goal-கூடாதே )
அம்பு எய்ய வேண்டா -எழுந்திருந்து நோக்காய் –
(செற்றார் -11 -பாசுரம் அங்கு கோபர்கள் இவனது விரோதிகள் -இங்கு அவன் இவர்கள் விரோதி )
இங்கு கிடையாது ஒழிய நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்
செப்பன்ன மென்முலைச்
இவனை முகம் காட்டாமைக்கு ஹேது இவள் -என்கை –
இவள் சந்நிவேசம் அவன் ஜீவனம்
நிதியிட்டு வைக்கும் செப்பு (ஸ்ரீ ய ஸ்ரீ )
சீரிய சிங்கம் வர்த்திக்கும் தாழ்வரை –
செவ்வாய்ச்
அங்குள்ள கனியை நுகருமா போலே
(சாரு -ராமன் சீதா மந்தஸ்மிதம்
கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் )
சிறு மருங்குல்
மலையின் நுனியில் இருப்பார் விழுகிறோம் என்று பயப்படுமா போலே
இம் மலையை புஜிக்கிறவனுக்கு பய ஸ்தானமாய் இருக்கை-
மேலையும் கீழையும் கொண்டு இடையுண்டு என்று அறியும் அத்தனை –
(பொய்யோ எனும் இடையாளுடன் இளையானுடன் போனான் -ஸூ மத்யமா )
நப்பின்னை நங்காய் –
அநுக்த சவுந்தர்ய சமுச்சயம்
(சொல்லப்படாத அழகு -ஒரே சொல்லில் நங்காய் )
திருவே துயில் எழாய்-
எங்கள் சத்தையை உண்டாக்காய்
(நஷ்டம் ப்ராக் -இத்யாதி )
செய்ய வேண்டுவது என் -என்ன
உக்கமும் தட்டொளியும் –
ஆல வட்டமும் -கண்ணாடியும்
தந்து உன் மணாளனை –
உன்னோட்டைக் கூட்டுகிறது எங்களுக்கு உறுப்பு என்று இருந்தோம்
இப்போதே –
குருஷ்மமாம் வை தர்ம்யம் நேஹ வித்யதே -என்று மற்றைப் போதைக்கு இரோம் என்கை
(கைங்கர்ய பரனாக கைக்கொண்டு அருள வேண்டும் -இது அதர்மமானது இல்லை -இளைய பெருமாள்
நாங்கள் வேறே சமயம் கொடுப்போம் என்று இரோம் -சீதா பிராட்டி போல் ஒருமாதம் பிரிந்து இருக்கப் பொறோம்
பிராட்டி பெருமாளை உக்கம் போல் இப்போதே கொடுப்பதே தர்மம் )
எம்மை –
எல்லார்க்கும் உபாயம் ஒத்து இருக்குமா போலே
உபேயமும் ஒன்றாகை-
எம்மை –
ஏஹி பஸ்ய சரீராணி (ஆரண்யம் -6-14)
(விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள் )
எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-
எங்களையும் அவனையும் கூட முழுக்காட்ட வேணும்
(மணாளனைத் தந்து -அவனையும் எங்களையும் –
சோஸ் னுதே-சர்வான் காமான் ஸஹ ப்ரஹ்மணான் –
அவன் உடன் கூடியே குண அனுபவம் அங்கும் )
நீராட்டு –
தாரா பித்ரு க்ருதா இதி -என்று ஐயர் பண்ணிய விவாஹம் என்று உகப்பது-
அப்படியே இவள் தந்த கிருஷ்ணனும் –
(ததவ் குசித புத்ராயா -கொடுத்தார் அன்றோ பொருளைப் போல் கரிய செம்மலை –
அவருக்கே பவ்யமாய் இருந்தவன் இவளுக்கு சொல்ல வேணுமோ )
——————————–
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –
இப்பாட்டில்
மீளவும் எம்பெருமானை எழுப்பி
அங்கு மறுமாற்றம் பிறவாமையாலே
நப்பின்னை பிராட்டியை எழுப்பி
வந்த கார்யத்தை அறிவிக்கிறார்கள் —
முப்பத்து மூவர்-
அபரிமித சங்க்யாகரான -இத்தால் துர்லபத்வம் சொல்லுகிறது –
(அளவிறந்த -என்று இல்லை துர்லபத்வம் சொன்னவாறு-வாழாட் பட்டு நின்றீர் உள்ளீரேல் )
அமரர்க்கு –
ஜ்ஞான சங்கோசம் இல்லாதவர்களுக்கு –
(ஆத்மா நித்யம் -அஞ்ஞானம் இல்லாதவர்-சந்தமேனம்-இத்யாதி )
முன் சென்று-
அவர்களுக்கு பிரகிருதி சம்சர்க்கத்தாலே ஜ்ஞான சங்கோசம் வருவதற்கு முன்பே
ரஷகனான தான் அவதரித்து நின்று –
கப்பம் தவிர்க்கும் –
அவர்களுக்கு ஜ்ஞான சங்கோசம் நிபந்தனமாய் வரும் பீதியைப் போக்கடிக்கிற –
கலியே –
சாமர்த்தியத்தை உடையவனே –
துயில் எழாய்-
நீ நித்ரையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –
செப்பமுடையாய் –
ஆஸ்ரிதர் தன்னை அனுபவிக்கும்படி தான் பாங்காய் இருக்குமவனே –
திறல் உடையாய் –
அநாஸ்ரிதர்க்கு கிட்ட ஒண்ணாதவனே –
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா –
பாகவத விரோதிகளுக்கு நடுக்கத்தைக் கொடுக்கும் சுத்தி யோகத்தை உடையவனே –
இத்தால்
பய நிவ்ருத்தி மாத்ரம் அன்றிக்கே பய ஹேது நிவ்ருத்தியும் ரஷக கார்யம் -என்றது ஆய்த்து –
துயில் எழாய்-
நித்ரா பிரதமான படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –
அங்கு மறுமாற்றம் பிறவாமையாலே அவனை எழுப்புகைக்காக- நப்பின்னை பிராட்டியை எழுப்புகிறார்கள்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்-
செப்பன்ன மென்முலை-
விஷய க்ராஹகமாய்- விஷய விரஹ அசஹிஷ்ணு வாய் -பகவத் விஷய பக்தியையும்
செவ்வாய்-
அவனுக்கு மிகவும் போக்யமான பரம பக்தியையும் -பக்தி பழுத்து கனி போன்ற வாய்
சிறு மருங்குல்-
விஷயாந்தர வைராக்யத்தையும் உடையையாய்-
நப்பின்னை நங்காய் திருவே
நப்பின்னை என்கிற திரு நாமத்தை உடையையாய்
நங்காய்
பிராப்யத்வ
புருஷகாரத்வோப யுக்த
கல்யாணகுண பூர்னையான பெரிய பிராட்டியாரே
நீ படுக்கையில் நின்றும் எழுந்திருக்க வேணும் –
நான் எழுந்திருந்து உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன –
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-
உக்கம் -ஆலவட்டம்
தட்டொளி -கண்ணாடி
ஸ்வா பதேசத்தில்
உக்கம்-கைங்கர்யத்தில் அஹங்கார மமகார நிவ்ருத்தியும்
தட்டொளி-யதாவஸ்தித ஸ்வரூப ஜ்ஞானமும் (ததீய பர்யந்தம் -சேஷத்வ பாரதந்தர்ய ஸ்வரூப ஞானம் )
இவ்விரண்டையும் கொடுத்து –
உனக்கு பவ்யனான
ஈஸ்வரனை இந்த ஷணத்திலே
பிற்றை ஷணத்துக்கு பிழையாத எங்களை சம்ஸ்லேஷிப்பி -என்கிறார்கள் –
உன் மணாளனையும் தந்து நீராட்டு என்கிறார்கள் -ஆகவுமாம் –
இந்த யோஜனையில்
பிராட்டிக்கு எம்பெருமான் அத்யந்த விதேயன் என்னும் இடம் தோற்றுகிறது –
—————————————————————–
(நீராடக் போதுவீர் போதுமினோ உபக்ரமத்தில் -ஆசை ஒன்றுமே வேண்டும் –
பிராட்டி தானே நீராட்ட வேண்டும்
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-பட்டபாடு அநாதி அதிகம் -உடனே செய்து அருள வேண்டும் என்கிறார்கள்)
நாலாயிரப்படி –அவதாரிகை –
அங்கு சொல்லுவது எல்லாம் சொல்லி -இவளைப் பற்றி எழுப்பி –(18-உந்து -புருஷகாரம் )
அவன் உணர விட்டவாறே((19-குத்து )
அவன் தனக்கு உரியனோ –
(ந தே ரூபம் –பக்தானாம் -நான் எனக்கே சொல்ல கூடாது நாம் -சொல்ல மாட்டான் அவன் –
நான் உங்களுக்கு -நாங்கள் உனக்கே நாம் சொல்ல வேண்டும்-ஜீவர் போல் ஞான ஆகாரம் பரதந்த்ரம்
இரண்டும் இவனுக்கும் -இது மேல் படி அறிவு அன்றோ )
அவனுக்கும் எங்களுக்கும் அடியான நீ எங்களை நீராட்டுவீ -என்று
நப்பின்னை பிராட்டியோடே அநு வர்த்திக்கிறார்கள்-(அர்த்திக்கிறார்கள்-)
(அவனைத் தூண்டவும் நம்மை ஆஸ்ரயிக்கப் பண்ணுவதும் -உன் மணாளனை-இப்போதே எம்மை நீராட்டேலோ-
இருவருக்கும் அவளே -ஸ்ரீ ஆறு வ்யுத்பத்தி -உண்டே —
உன் மணாளன் எம்மை ரமமாணா -சீதா -பெருமாள் -இளைய பெருமாள் போல் )
முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே துயில் எழாய்
செப்பமுடையாய் திறல் உடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்-
முப்பத்து மூவர் –
ரஷிக்கைக்கு சங்க்யா நியதி யுண்டோ –
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களுமாய் அபலைகளுமாய்
அநந்ய ப்ரயோஜனைகளுமாய் ஆனாலாகாதோ -என்கிறார்கள்
அமரர்க்கு –
கொன்றாலும் சாவாதார்க்கோ உதவலாவது
உன் நோக்குப் பெறா விடில் சாம் (சாவோம்) எங்களுக்கு உதவலாகாதோ
முன்
நோவு படாதார்க்கோ உதவலாவது –
(கிருஷ்ண விரஹமாகிய )நோவு பட்டார்க்கு உதவலாகாதோ
சென்று
உன்னுடைய முறைமை இருக்கிறபடி என்
சென்று
நீயே சென்று செய்து இறே வருவது
யாம் வந்தோம்-(21-ஏற்ற கலங்கள் ) -உன் வாசலிலே வந்தார்க்கு உதவலாகாதோ -என்கை –
நாங்கள் வர இருக்கை குற்றமோ -என்கிறார்கள்
கப்பம் தவிர்க்கும்
தேவா ஸ்வர்க்கம் பரித்யஜ்ய -(ஹிரண்யன் அட்டகாசத்தால் மானுஷ உருவம் கொண்டு இங்கே உலாவினார்கள் )
கம்பம் வலித்து கப்பம் -என்றாய் நடுக்கம் -அத்தைத் தவிர்க்கும் -என்றபடி
அதவா
கப்பம் தவிர்க்கை யாவது -இறை தவிர்க்கை -என்றுமாம்-
கூசி நடுங்கி (6-1)-எங்களை நடுங்கப் பண்ணாதே கொள்ளாய்
ஏர் மலர் பூம் குழல் ஆயர் மாதர் எனை பலர் உள்ள இவ் ஊரில் உன் தன்
மார்வு தழு வதற்கு ஆசை இன்மை அறிந்து அறிந்தே உன் தன் பொய்யை கேட்டு
கூர் மழை போல் பனி கூதல் எய்தி கூசி நடுங்கி யமுனை ஆற்றில்
வார் மணல் குன்றில் புலர நின்றேன் வாசுதேவா ! வுன் தன வரவு பார்த்தே—பெருமாள் திருமொழி -6-1-
(வேத அபஹார -குரு பாதக -தைத்ய பீடாதி )துக்க நிவ்ருத்தியை ஆசைப்பட்டார்க்கோ உதவலாவது
நீ உணரும்படி காண ஆசைப்பட்டார்க்கு உதவலாகாதோ(நீ உணர்ந்தாலே நடுக்கமும் போய் இன்பமும் பெறுவோம் )
கலியே துயில் எழாய்
மிடுக்கை யுடையவன் துயில் எழாய்-
அபலைகளுக்கு பகவான் தேட்டமாம் இறே
துயில் எழாய்
எங்களுக்குக் குடியிருப்பும் ஜீவனமும் நீ உணரும்படி காண்கை-
செப்பமுடையாய் திறல் உடையாய்
ஆஸ்ரிதரோடு செவ்வை அழியாமே நிற்கும் ஆர்ஜவ குணம் -(அருகே இருக்கும் நேர்மை )
எங்களுக்கு இங்கனே செவ்வையாக இருக்க வேண்டாவோ
செப்பம் -ரக்ஷை என்றுமாம்
(ஓடும் புள்ளேறி சூடும் தண் துழாய்
நீடு நின்றவை ஆடும் அம்மானே –1-8-1-)
(செலக் காண்கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பிலானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான் நான்
அலப்பாய் ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவனே.–5-8-4-ஆனைக்கு குதிரை வைப்பாரைப் போல் )
திறலுடையாய்
அபலைகளுக்கு எங்கனே உதவிற்று உன் பலம் –
பராபி பவந சாமர்த்தியம் என்றுமாம்
எங்களுக்கு அணுக ஒண்ணாதபடி யாயிற்றே -என்றுமாம்
செப்பமுடையாய் திறல் உடையாய்
பாண்டவர்களுக்குச் செவ்வியனாய் துர்யோத நாதிகளுக்கு அநபி பவநீ யனானவனே
செற்றார்க்கு-வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய்-
ஆஸ்ரித விரோதிகளைப் போக்கி நெடும் காலம் தேடின குணம் எல்லாம் இழக்கப் புகுகிறாய் என்கை-
வெப்பம் கொடுக்கை அனுகூலர் பாடே யாயிற்றோ என்கை
விமலா
செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள் செய்குந்தா
(வைகுந்தா மணி வண்ணனே என் பொல்லாத் திருக் குறளா என்னுள் மன்னி
வைகும் வைகல் தோறும் அமுதாய வானேறே
செய்குந்தா வரும் தீமை யுன்னடியார்க்குத் தீர்த்து அசுரர்க்குத் தீமைகள்
செய்குந்தா உன்னை நான் பிடித்தேன் கொள் சிக்கெனவே –2-6-1-)
துயில் எழாய்
அம்பு எய்ய வேண்டா -எழுந்திருந்து நோக்காய் –
அங்கு கிடையாது ஒழிய நப்பின்னைப் பிராட்டியை எழுப்புகிறார்கள்
செப்பன்ன மென்முலைச்
இவனை முகம் காட்டாமைக்கு ஹேது இவள் -என்கை –
இவள் சந்நிவேசம் அவன் ஜீவனம் -கிடக்குமிடம் -மலராள் தனத்துள்ளான்
நிதியிட்டு வைக்கும் செப்பு
விரஹ சஹம் இன்றிக்கே இருக்கையாலே மென் முலை என்கிறது
சீரிய சிங்கம் வர்த்திக்கும் தாழ்வரை -(நீளா துங்க ஸ்தன கிரி தடீம் ஸுப்த முத்போத்ய கிருஷ்ணம் )
(மனத்துள்ளான் மா கடல் நீருள்ளான் மலராள்
தனத்துள்ளான் தண் துழாய் மார்வன் சினத்துச்
செரு நருகச் செற்று உகந்த தேங்கோத வண்ணன்
வரு நரகம் தீர்க்கும் மருந்து ——மூன்றாம் திருவந்தாதி –3-)
செவ்வாய்ச்
அவனுடைய போக்யம்–
அங்குள்ள கனியை நுகருமா போலே
(கோவை வாயாள் பொருட்டு ஏற்றின் எருத்தம் இறுத்தாய்-4-3-1-ஸ்வா பாவிக சிவப்புக்கும் மேல் இடு சிவப்பும் இட்டு இருந்தாளாம் )
சிறு மருங்குல்
மலையின் நுனியில் இருப்பார் விழுகிறோம் என்று பயப்படுமா போலே
இம் மலையை புஜிக்கிறவனுக்கு பய ஸ்தானமாய் இருக்கை-
மேலையும் கீழையும் கொண்டு இடையுண்டு என்று அறியும் அத்தனை -(ஸூ மத்யமாம் -)
நப்பின்னை நங்காய் திருவே
அநுக்த சவுந்தர்ய சமுச்சயம்
செப்பென்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல் நப்பின்னை நங்காய் திருவே துயில் எழாய்-
அவன் அகப்படும் சுழிகள்
திருவே துயில் எழாய்
ஒசிந்த ஒண் மலராள் –
சம்ஸ் லேஷத்தால் வந்த துவட்சிக்கு அவளோடு ஒத்தால் நீர்மை அங்கும் அவளோடு ஓக்க வேண்டாவோ
அவள் ஆஸ்ரிதருக்காக வலிய சிறை புகுந்து இருந்தது அறியாயோ
(ஒசிந்த நுண்ணிடை மேல் கையை வைத்து நொந்து நொந்து
கசிந்த நெஞ்சினளாய்க் கண்ண நீர் துளும்பச் செல்லுங்கொல்?
ஒசிந்த ஒண் மலராள் கொழுநன் திருக்கோளூர்க்கே
கசிந்த நெஞ்சினளாய் எம்மை நீத்த எம் காரிகையே.-6-7-9)
துயில் எழாய்
எங்கள் சத்தையை உண்டாக்காய்
செய்ய வேண்டுவது என் -என்ன
உக்கமும் தட்டொளியும்
ஆல வட்டமும் -கண்ணாடியும் –
பறை என்றுமாம்
தந்து உன் மணாளனை
உன்னோட்டைக் கூட்டுகிறது எங்களுக்கு உறுப்பு என்று இருந்தோம்– அன்றாய்த்தோ
உக்கத்தோ பாதி அவனையும் தர வேணும் என்கை
(ததவ் குசித புத்ராயா கொடுத்தார் -அனுப்பி வைத்தார் என்று சொல்ல வில்லையே)
இப்போதே
வை தர்ம்யம் நேஹ வித்யதே -(தர்மம் இல்லாதது இல்லை கூட்டிப்போ இளைய பெருமாள் பெருமாள் இடம் )என்று மற்றைப் போதைக்கு இரோம் என்கை
எம்மை
பேய்ப் பெண்ணே-7- என்றும்
நாயகப் பெண் பிள்ளாய்-7- என்றும் தங்களில் தங்கள் சொல்லும் அத்தனை
பேற்றில் வந்தால் எல்லாரும் ஒத்து இருப்பார்கள்
எல்லார்க்கும் உபாயம் ஒத்து இருக்குமா போலே உபேயமும் ஒன்றாகை-
எம்மை
ஏஹி பஸ்ய சரீராணி -என்று விரஹம் தின்ற உடம்பைக் காட்டுகிறார்கள்
எம்மை நீராட்டேலோ ரெம்பாவாய்
எங்களையும் அவனையும் கூட நீராட்ட வேணும் –
இவன் முழுக்கூட்டுகைக்காக நிற்கில் முழுக்க அஞ்சுவோம் என்பார்கள் –
கையைப் பிடித்துக் கூட முழுகும்
நீராட்டு
கடியார் இத்யாதி(பெரியாழ்வார் -3-3-4)
(காடுகளூடு போய் கன்றுகள் மேய்த்து மறியோடிக் கார்க்கோடற்பூச்
சூடி வருகின்ற தாமோதரா கற்றுத் தூளி காண் உன்னுடம்பு
பேடை மயில் சாயல் பின்னை மணாளா நீராட்டம் அமைத்து வைத்தேன்
ஆடி அமுது செய் அப்பனும் உண்டிலன் உன்னோடு உடனே உண்பான் -3 3-3 –
கடியார் பொழில் அணி வேம்கடவா கரும் போரேறே நீ உகக்கும்
குடையும் செருப்பும் குழலும் தருவிக்க கொள்ளாதே போனாய் மாலே
கடிய வெம் காநிடை கன்றின் பின் போன சிருக் குட்ட செம் கமல
வடியும் வெதும்பி உன் கண்கள் சிவந்தாய் அசைந்திட்டாய் நீ எம்பிரான் -3 3-4 –)
நீராட்டு
தாரா பித்ரு க்ருதா இதி -என்று பெருமாள் பிராட்டியுடைய சவுந்தர்யாதிகள் கிடக்க பிராட்டியை உகப்பது
ஐயர் பண்ணிய விவாஹம் என்று ஆய்த்து –
அப்படியே இவள் தந்த கிருஷ்ணன் என்று இவர்களும் உகப்பார்கள் ஆயிற்று –
————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ ஆய் ஜனன்யாச்சார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.