ஒழிவு இல் காலம் எல்லாம்-பிரவேசம் –
இவர் சேஷத்வ விரோதியான தேஹ சம்பந்தாதிகளை நிவர்த்திப்பிக்க வேணும் என்று அபேக்ஷிக்க -நிவ்ருத்த விரோதிகரைக் கொள்ளும்
சேஷ வ்ருத்தியைக் கொள்ளுகைக்கு அன்றோ நாம் சந்நிஹிதராயிற்று என்று பெரிய திருமலையில் நிற்கிற நிலையை பிரகாசிப்பித்த ஈஸ்வரனுக்கு
சர்வ பிரகார சேஷ விருத்தியும் பண்ணுகையே சேஷ பூதனுக்கு ஸ்வரூபம் என்று அறுதியிட்டு அதிலே உத்யோகத்தைப் பண்ணுவதாக –
1–கைங்கர்ய பிரதிசம்பந்தியினுடைய சர்வாதிக சேஷித்வத்தையும்
2–சேஷியினுடைய குண விக்ரஹாதி வைலக்ஷண்யத்தையும்
3–சர்வ பிரகார விலஷணனுடைய ஸூரி சேவ்யத்வத்தையும்
4-இப்படி சர்வாதிகனுடைய சீலாதிசயத்தையும்
5–ஸீலவானுடைய போக்யதையையும்
6–போகார்த்தமான ஆஸ்ரயண சவ்கர்யத்தையும்
7–அவன் நிற்கிற திருமலை தானே பரம சாம்யப்ரதம் என்னும் இடத்தையும்
8–அது தன்னை அனுபவிக்கவே பிரதிபந்தகம் ஸ்வயமேவ நிவ்ருத்தமாம் என்னுமத்தையும்
9–அந்த தேச ஸம்பந்தத்தாலே தேசிகனான ஈஸ்வரனும் அநிஷ்ட நிவர்த்தகனானான் என்னுமத்தையும்
10–அவன் தேசமான திருமலை தானே பரம ப்ராப்யம் என்னும் இடத்தையும்
அருளிச் செய்து -ஏவம் வித தேச வர்த்தியான ஈஸ்வரன் பக்கல் கைங்கர்யமே ஸ்வரூப அனுரூப புருஷார்த்தம் என்று உத்யுக்தராகிறார் –
——————————————
அவதாரிகை –
முதல் பாட்டில் -சர்வாதிக சேஷியான திருவேங்கடமுடையானுக்கு சர்வ பிரகார விசிஷ்டமான சேஷ வ்ருத்தியைப் பண்ண வேணும் என்று
ஸ்வ சம்பந்தி ஜனங்களோடே ஒருப்பட்டுப் பாரிக்கிறார்
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–3-3-1-
தெழி குரல் அருவித் திருவேங் கடத்து–மஹா த்வனியாம்படி சப்திக்கிற அருவியையுடைய திருவேங்கடமாகிற திருமலையிலே நிலையாலே
எழில் கொள் சோதி எந்தை தந்தை தந்தைக்கே.–அழகை யுடைத்தான தேஜோ மய விக்ரஹத்தை யுடையனான நம்முடைய குலக்ரமா கதனான நாதனுக்கு
நாம் -அசாதாரண சேஷ பூதரான நாம்
ஒழிவு இல் காலம் எல்லாம் உடனாய் மன்னி–ஒழிவில்லாத காலம் எல்லாம் -சர்வ தேசத்திலும் உடனாய் -சர்வ அவஸ்தையிலும் மன்னி பிரியாது நின்று
வழு இலா அடிமை செய்ய வேண்டும் நாம்-ஒன்றும் நழுவாத படி சர்வ சேஷ வ்ருத்திகளையும் பண்ண வேணும்
சேஷ வ்ருத்தியில் நித்ய அபேக்ஷையே சேதனனுக்கு ஸ்வரூபம் என்று கருத்து
எழில் கொள் சோதி -என்று அப்ரமேயம் ஹி தத்தேஜோ யஸ்ய சா ஜனகாத்மஜா என்கிறபடியே சவ்ந்தர்யா ரூபையான
ஸ்ரீ லஷ்மீயோட்டை சம்பந்தத்தை சொல்லுவாரும் உளர்
தெழித்தல்–முழங்குதல்
————————————————————-
அவதாரிகை –
அநந்தரம் இப்படி சர்வாதிக சேஷியினுடைய குண விக்ரஹாதி வை லக்ஷண்யத்தை அருளிச் செய்கிறார்
எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்
முந்தை வானவர் வானவர் கோனொடும்
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–3-3-2-
எந்தை தந்தை தந்தைதந்தை தந்தைக்கும்-முந்தை -நமக்கு உத்பாதக பாரம்பர்யத்திலே பிரதம உத்பாதகனான பந்தத்தை யுடையவன்
வானவர் வானவர் கோனொடும்-பரமபத வாசிகள் தங்களுக்கு நிர்வாஹகரான சேனை முதலியாரோடே
சிந்து பூமகிழும் திரு வேங்கடத்து-தூவின விடு பூக்கள் ஸ்வ ஸ்பர்சத்தாலே விகசிதமாம்படியான திருமலையில் வாசத்தாலே
அந்தம் இல்புகழ்க் கார்எழில் அண்ணலே.–முடிவில்லாத குண பிரதையை யுடையனாய் -ஸ்யாமமான வடிவு அழகை யுடைய சர்வாதிகன்
குணத்தாலும் அழகாலும் சர்வாதிகன் என்று கருத்து
கார் -மேகமுமாம் –
——————————————————-
அவதாரிகை –
அநந்தரம்-இப்படி விக்ரஹாதி வை லக்ஷண்யத்தை யுடையவன் நித்ய ஸூரி சேவ்யன்-என்கிறார் –
அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்
கண்ணன் செங்கனி வாய்க்கரு மாணிக்கம்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –3-3-3-
அண்ணல் -வடிவு தன்னிலே ஸ்வாமி என்று தோற்றும் படியாய்
மாயன் -தத் அநு ரூபமான ஆச்சர்ய குண விபூதி யுக்தனாய்
அணிகொள்செந் தாமரைக் கண்ணன்-அந்த ஐஸ்வர்யா ஸூசகமான அழகை உடைய புண்டரீகாக்ஷனாய்
அப்பார்வைக்குத் தோற்றாரை சாந்த்வனம் பண்ணுகைக்கு உறுப்பாய்
செங்கனி வாய்க்கரு மாணிக்கம்–சிவந்த கனி போன்ற திருப் பவளத்தை யுடையனாய் -இவ்வயவ சோபையிலே அகப்பட்டாரை அனுபவிப்பிக்கைக்கு
நீல ரத்னம் போலே உஜ்ஜவலமான விக்ரஹத்தை யுடையவன்
தெண்ணிறை சுனை நீர்த்திரு வேங்கடத்து–அவன் தன நிறம் போலே தெளிந்து -பிரகாசமான நிறத்தை யுடைய சுனை நீரை யுடைத்தான திருமலையில் நிற்கையாலே
எண் இல் தொல்புகழ் வானவர் ஈசனே. –எண்ணிறந்து ஸ்வாபாவிகமான குண பிரதையை யுடையனாய் -அப் புகழை அனுபவிக்க வந்த
பரமபத வாசிகளுக்கு போக பிரதானம் பண்ணி நிற்கிற ஏற்றத்தையுடைய ஸ்வாமியானவன்
அண்ணல் -குறிஞ்சி நிலத்துத் தலைவனாகவுமாம் –
————————————————————-
அவதாரிகை –
அநந்தரம் -நித்ய ஸூரி சேவ்யத்வமாகிற ஆதிக்யம் என்னை அங்கீ கரித்த அஸ் சீலத்தை யுடையவனுக்குத் தேஜஸ்ஸோ-என்கிறார் –
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் அது
தேசமோ திரு வேங்கடத் தானுக்கு?
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் என்கண்
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே.–3-3-4-
ஈசன் வானவர்க்கு என்பன் என்றால் –நித்ய ஸூரிகளுக்கு நிர்வாஹகன் என்று சொல்லா நிற்பன்–இப்படி சொன்னால்
நீசனேன் நிறைவு ஒன்றுமிலேன் –ஹேய குணங்களால் பூர்ணன் ஆகையால் தண்ணியனாய் -சத் குணங்களால் வரும் பூர்த்தி ஒன்றும் இன்றியே இருக்கையாலே
என்கண்-தன்னுடைய ஹேய ப்ரத்ய நீக கல்யாணை கதாநத்வத்துக்கு பிரதிபட ஸ்வ பாவனான என் பக்கலிலே
பாசம் வைத்த பரஞ்சுடர்ச் சோதிக்கே–நிரவதிக சங்கத்தை வைத்து -அத்தாலே-நிரதிசய உஜ்ஜ்வல்ய விசிஷ்டமான தேஜோ மய திவ்ய விக்ரஹ யுக்தனாய்
திரு வேங்கடத் தானுக்கு- -இந்த நீர்மைக்குச் சிரமம் செய்த திருமலையில் நிலையை யுடையவனானவனுக்கு –
அது–தேசமோ– வானவர்க்கு ஈசன் என்ற அது -தேஜஸ்ஸோ –
——————————————————————
அவதாரிகை –
அநந்தரம் -ஸீலவான் என்கிற இவ்வளவோ -அந்த சீலத்தோடே நிரதிசய போக்ய பூதனானவனுக்கு –
சர்வேஸ்வரன்என்றால் பெருமையோ -என்கிறார்
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ,
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்
தீது இல் சீர்த் திரு வேங்கடத் தானையே?–3-3-5-
வேதியர் முழு வேதத்து அமுதத்தைத்–வைதிகருடைய -ஸமஸ்த வேதங்களிலும் ஆனந்தோ ப்ரஹ்ம–/ ரஸோ வை ச -என்று
ப்ரதிபாதிக்கப் பட்ட போக்யத அதிசயத்தை யுடையனாய்
தீது இல்–-போக்தாக்களுடைய யோக்யதையைப் பார்த்து அனுபவிப்பிக்கை யாகிற தீது இன்றியே
சீர்த் –கானமும் வானரமும் வேடுமான தாழ்ந்தாரை அனுபவிப்பிக்கும் குணத்தை யுடையனான
திரு வேங்கடத் தானையே–திரு வேங்கடமுடையானை
சோதி ஆகி,எல்லா உலகும் தொழும்–உஜ்ஜ்வல விக்ரஹ விசிஷ்டனாய்க் கொண்டு -உத்கர்ஷ அபகர்ஷ விபாகமற எல்லாரும் ஆஸ்ரயிக்கும் படியாய்
ஆதி மூர்த்தி என்றால்அளவு ஆகுமோ–ஸமஸ்த காரண பூதனான சர்வேஸ்வரன் என்றால் பெருமையோ
மேன்மையும் ஆஸ்ரயணீயத்வமும்-நீர்மையோடே கூடின போக்யதைக்குத் தகுதி யல்ல -என்று கருத்து –
அளவு -பெருமை
——————————————————–
அவதாரிகை –
அநந்தரம் -அநிஷ்ட நிவ்ருத்தி பூர்வகமான பகவத் அனுபவ போகத்துக்கு உறுப்பான ஆஸ்ரயண சவ்கர்யத்தை அருளிச் செய்கிறார் –
வேங் கடங்கள் மெய் மேல்வினை முற்றவும்,
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,
வேங்கடத்து உறைவார்க்கு நம என்னல்
ஆம் கடமை அது சுமந் தார்கட்கே.–3-3-6—
வேங்கடத்து உறைவார்க்கு -திருமலையில் சர்வ ஸமாச்ரயணீயனாம் படி வந்து நித்ய வாசம் பண்ணுகிற ஸ்வாமிக்கு -அநந்யார்ஹமாம் படி
நம என்னல்-ஆம் -ஸ்வ ஸ்வா தந்தர்ய நிவ்ருத்தி யுக்தமான அத்யந்த பாரதந்தர்ய ஸூ சகமாய் -ஸூ லபமாய் -ஸ்வரூப ப்ராப்தமான நமோ வாசகமாகிற
அது -பூயிஷ்டாம் தே நம உக்திம் விதேம-என்று ஸ்ருதி ஸித்தமான-அந்த
கடமை அது சுமந் தார்கட்கே.–வியாபாரத்தை -அதிகார விசேஷத் யோதகமாம் படி தங்கள் தலையிலே சுமந்தவர்களுக்கு
கடங்கள்-அனுபவ விநாஸ்யமாம் படி ருண ரூபமான பூர்வாஜித பாபங்கள்
மேல்வினை முற்றவும், வேம்–ஆஸ்ரயண அனந்தர பாவியான உத்தராகங்கள் –தீயினில் தூசாகும் என்கிறபடியே தக்தங்களாம்
மெய் -இது நிர்த்தோஷ வேதாந்த ஸித்தமாகையாலே-சத்யம் -இப்படி அநிஷ்டம் ஸ்வயமேவ நிவ்ருத்தமாதலால்
தாங்கள் தங்கட்கு நல்லனவே செய்வார்,-ஆஸ்ரிதரான தங்கள் -தங்கள் ஸ்வரூபத்துக்கு இனிமையையே விளைப்பதான
பகவத் ஸ்வரூபாத் யநுபவத்தையே செய்வார்கள் –
கடம் -என்று ருண த்ரயத்தையும் / மெய்ம்மேல் வினை -என்று தேஹ அனுபந்தி கர்மங்களையும் சொல்லுவர் –
உத்தராகத்தை வேம் என்றது பல ப்ரரோஹம் இல்லாத ஸாம்யத்தாலே
சுமந்தார் -என்றது -அஞ்சலி பரம் என்னுமா போலே ஈஸ்வர ஹ்ருதயத்தாலே கனத்து இருக்கை-
————————————————————-
அவதாரிகை –
அநந்தரம்-ப்ரஸ்துதமான ஆஸ்ரயணத்தினுடைய காஷ்ட ஸூசந அர்த்தமாக
அவன் நின்று அருளின திருமலை தானே பரம சாம்யாபத்தியைத் தரும் -என்கிறார் –
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.
அமர்ந்து வானவர் வானவர் கோனொடும்
நமன்று எழும்திரு வேங்கடம் நங்கட்குச்
சமன் கொள் வீடு தரும்தடங் குன்றமே.–3-3-7-
சுமந்து மாமலர் நீர்சுடர் தூபம்கொண்டு.–ஸ்லாக்கியமான புஷ்ப்பங்களையும்-நன்றான ஜலத்தையும் -விலக்ஷணமான தீபத்தையும் –
அகரு தூபத்தையும் சாதாரமாக வஹித்துக் கொண்டு
அமர்ந்து–ப்ரயோஜனாந்தரங்களிலே பரகு பரகு அற்று -அநந்ய ப்ரயோஜனராய் அமர்ந்து –
வானவர் வானவர் கோனொடும்–நித்ய ஸூரீகள் தங்களுக்கு நிர்வாஹகரான சேனை முதலியாரோடே கூட
நமன்று -அத்யந்த பாரதந்தர்ய பிரகாசகமான நமனத்தைப் பண்ணி
எழும்-ஸ்வரூப லாபம் பெற்று க்ருதார்த்தராம் படியாய்
திரு வேங்கடம் –திரு வேங்கடம் என்று திரு நாமத்தை யுடைத்தாய்
தடங் குன்றம் -ஸ்ரீ லஷ்மீ ஸஹாயனான சர்வேஸ்வரன் ஸ்வைரா விஹாரம் பண்ணும்படி ஸூ விஸ்தீர்ணமான திருமலை
நங்கட்குச்-சமன் கொள் வீடு தரும்தமே.–ப்ராப்ய ருசியையுடைய நமக்கு பரம சாம்யா பத்தியை உடைத்தான மோக்ஷ ஆனந்தத்தைத் தரும்
பகவச் சேஷதைக ரசமான ஸ்வ சாம்யத்தை மோக்ஷரூப பலமாகத் தரும் -என்றுமாம் –
நமன்று-வணங்கி
வானவர் வானவர் கோனோடும் -என்று ப்ரஹ்மாதிகளோடு கூடின தேவர்கள் என்றும் சொல்லுவர்–
—————————————————
அவதாரிகை –
அநந்தரம் -ஏவம் பூதமான திருமலையை அனுபவிக்க பிராப்தி பிரதிபந்தகங்கள் ஸ்வயமேவ நசிக்கும் -என்கிறார் –
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–3-3-8-
குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன்,–கல்மாரியாலே கோப கோபீ ஜனங்கள் ஈடுபட்ட அன்று ஒரு மலையை சுமந்து காத்தவனாய்
அன்று ஞாலம் அளந்த பிரான்,பரன்-மஹா பலியாலே அபஹ்ருதமான அன்று பூமியை அளந்து வியாபரித்து –
அநந்யார்ஹம் ஆக்கிக் கொண்ட உபகாரகனான பரம சேஷியானவன்
சென்று சேர்திரு வேங்கட மாமலை-சென்று சேர்ந்த திருவேங்கடமாகிற பெரிய திருமலை –
ஒன்றுமே தொழ நம்வினை ஓயுமே.–ஒன்றையுமே -தேசிகன் அளவும் செல்ல வேணும் என்கிற நிர்பந்தம் அற்று அனுபவிக்க
நம்முடைய தேசிக அனுபவ பிரதிபந்தக பாபங்கள் தன்னடையே கழலும்-
———————————————–
அவதாரிகை –
அநந்தரம் -தேசிகனான திருவேங்கடமுடையானுக்கும் விரோதி நிவர்த்தகத்வம் தேச ஸம்பந்தத்தாலே-என்கிறார் –
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து
ஆயன் நாள்மலராம் அடித் தாமரை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–3-3-9-
நாள்மலராம் அடித் தாமரை–நாள் பூ மலர்ந்தது எண்ணலாம் படி ஸூ குமாரமான திருவடித் தாமரைகளை
வாயுளும் மனத்துள்ளும் வைப்பார்கட்கே.–-வாக்குள்ளும் நெஞ்சினுள்ளும் வைக்குமவர்களுக்கு –
ஓயும் மூப்புப் பிறப்பு இறப்புப் பிணி–பல ஹானியைப் பிறப்பிக்ககே கடவ மூப்பு -அந்த சரீரத்துக்கு அடியான பிறப்பு –
இறப்பாகிய அதின் விநாசம் -மூப்பொடு பிணைந்து வருகிற வியாதிகள் -இவற்றை
வீயுமாறு செய்வான் திரு வேங்கடத்து-ஆயன் –நசிக்கும் படி பண்ணுமவன் திருமலையிலே வர்த்திக்கிற கிருஷ்ணன் –
———————————————–
அவதாரிகை –
அநந்தரம் -நிரதிசய போக்யமான திருமலையைப் ப்ராப்யமாகப் பற்றுங்கோள் என்று ஸ்வ ஜனத்தைகே குறித்து உபதேசிக்கிறார்
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் சென்று,
எய்த்து, இளைப்பதன் முன்னம் அடைமினோ
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–3-3-10-
பைத்த பாம்பணையான் திரு வேங்கடம்–விரித்த பணங்களையுடைய அநந்தனை அணையாக யுடையனான சர்வேஸ்வரன் –
தத் சா ரூப்யத்தாலே ஆதரிக்கிற திருமலையில்
மொய்த்த சோலை மொய் பூந்தடந் தாள்வரை.–செறிந்த சோலையினுடைய அழகிய பூக்களை யுடைத்தானா இடமுடைய திருத் தாழ்வரையை
வைத்த நாள்வரை எல்லை குறுகிச் ,-உங்களுக்கு சங்கல்பித்து வைத்த நாளினுடைய அவதியான முதல் எல்லையானது உங்களைக் கிட்டி –
எய்த்து, இளைப்பதன் முன்னம் -கரணங்களுக்கு பல ஹானி பிறந்து அடியாக நெஞ்சு இளைப்பதற்கு முன்னே –
சென்று- அடைமினோ—-போங்குமரர் உள்ளீர் புரிந்து –நான்முகன் -44-என்கிறபடியே பிராபியுங்கோள்
தாழ்வர்–தாழ்வரை / மொய் -செறிவும் அழகும் –
—————————————————
அவதாரிகை –
அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக கைங்கர்ய ஐஸ்வர்ய லாபத்தை அருளிச் செய்கிறார் –
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–3-3-11-
தாள் பரப்பி மண் தாவிய ஈசனை–படிக்கு அளவாக திருவடிகளை பரப்பி பூமியை அளந்து கொண்ட சர்வேஸ்வரனை
நீள் பொழிற் குருகூர்ச் சடகோபன் சொல்-உயர்ந்த பொழிலை யுடைத்தான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
கேழ்இல் ஆயிரத்து இப்பத்தும் வல்லவர்-ஒப்பு இல்லாத ஆயிரத்து இப்பத்தையும் அர்த்த அனுசந்தத்தோடே அப்யஸிக்க வல்லார்கள்
வாழ்வர் வாழ்வு எய்தி ஞாலம் புகழவே.–இவர் பிரார்த்தித்த கைங்கர்ய சாம்ராஜ்யத்தை பெற்று
லோகம் அடங்க கொண்டாடும்படி அடிமை செய்து வாழப் பெறுவர்
இது கலி விருத்தம் –
———————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply