முந்நீர் ஞாலம் பிரவேசம் –
இப்படி சாஷாத் க்ருதனான எம்பெருமாண்டு தம்முடைய ப்ரக்ருதி சம்பந்தத்தால் யதா மநோ ரதம் ஸம்ஸ்லேஷிக்கப் பெறாமே
நிர்மர்யாத வ்யசந சாகர அந்தர் நிமக்நராய்க் கொண்டு காப்பிடுகிறார் –
——————————
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-
சம்சார யாத்மாக்கள் எல்லார் பக்கலிலும் சென்று வெள்ளம் கொள்ளும் படி கரை புரண்டு பெருகுகிற உன்னுடைய நிரவதிக காருண்ய வெள்ளத்தாலே
உன் திருவடிகளைச் சேர்கைக்கு உபாயமாக காரண களேபராத் யுபகரணங்களை சர்வாத்மாக்களுக்கும் கொடுத்து அருளினவனே
அன்று நீ எனக்குத் தந்து அருளின அந்த உபகரணத்தைக் கொண்டு உன் திருவடிகளைச் சேர மாட்டாதே பின்னையும் சம்சார சமுத்ரத்திலே போய் வீழ்ந்தேன்
இப்படி உன்னைப் பிரிந்து இருக்கிற இந்தக் காலமாகிய கால அக்நி சத்ருசமான நோய் விடும்படி உன்னைப் பிரிந்து இருக்கைக்கு
ஹேதுவான என்னுடைய வினைகளை வேர் அறப் பாய்ந்து என்று நான் உன்னை வந்து கூடுவது -என்கிறார்
—————————————————–
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–
இப்படி நீ தந்த உபகரணத்தைக் கொண்டு பின்னையும் நான் சம்சார சமுத்ரத்திலே போய் விழும் அளவில்
என்னை எடுத்து அருளுகைக்காக இங்கே புகுந்து அருளினாய்
பின்னையும் உனக்கு எட்டாததொரு படி நான் அந்த சம்சாரமாகிற கடலின் உள்ளே போய் அழுந்த நின்றேன்
இப்படி இக்கடலிலே அழுந்துகைக்கு ஹேதுவாய் அநாதி ஸித்தமாய் மஹா பலமாய் இருந்த என்னுடைய பாப பரம்பரைகளை
முதலரிந்து உன்னுடைய நிரவாதிக போக்யமான திருவடிகளை நான் சேர்ந்து பின்னை ஒருகாலமும் பிரியாதே நிற்பது என்றோ -என்கிறார் –
——————————————-
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-
இப்படி ஸ்ரீ வாமனனாய் வந்து புகுந்து அருளின அதுவும் எனக்குக் கார்யகரம் இன்றியே ஒழிந்தவாறே -பின்னையும் என் பக்கலுள்ள அபி நிவேசத்தாலே
ஸ்ரீ வ ஸூ தேவர் திரு மகனாய் வந்து பிறந்து அருளி சர்வ வஸீ கரணமாய் நிரதிசய ஆச்சர்யமான திவ்ய சேஷ்டிதங்களைப் பண்ணி அருளா நின்று கொண்டு
சர்வ ஸூலபனாய் நின்று அருளின அன்றும் உன் திருவடிகளைச் சேரப் பெற்றிலேன் -இப்படி அநர்த்த கரமாய் உன்னால் அல்லது அறுக்க முடியாது இருக்கிற
இந்த ப்ரக்ருதி சம்பந்தத்தை நீயே அறுத்து நான் உன்னைச் சேருவதொரு விரகு பார்த்து அருளாய் -என்கிறார் –
———————————————————
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-
சர்வ ஆத்மாக்களையும் உன் கருத்தில் வர்த்திப்பிக்க வற்றாய்–நித்ய ஸித்தமாய் -சர்வகதமாய் இருந்த உன்னுடைய
திவ்ய ஞானமும் எனக்குக் கார்யகரம் இன்றியே ஒழிந்தது
இப்படி உன்னுடைய ஜகத் ஸ்ருஷ்ட்டி திவ்ய அவதார சேஷ்டித திவ்ய ஞானாதிகளை எனக்குக் கார்யகரமாகாமே பிரதிபந்திக்கிற
ஸமஸ்த பிராகிருத விஷய ப்ராவண்யத்தையும் தவிர்ந்து -நின் தாளிணைக் கீழ் வாழ்ச்சி யான் சேரும் படி
சக்ரவர்த்தி திருமகனாயும் ஸ்ரீ வ ஸூ தேவர் திருமகனாயும் வந்து பிறந்து அருளினால் போலே
இன்னமும் வந்து பிறந்து அருளியே செய்து அருள வேணும் -என்கிறார் –
—————————————-
வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-
அப்படி வருகை திருவுள்ளம் அன்றாகில் ஸ்ரீ கஜேந்திர ஆழ்வானுக்கு வந்தால் போலே யாகிலும் வந்து என் மனத்தினை நீ சிந்தாமல் செய்கிறிலை
நீ செய்யாது ஒழிந்தால் நான் என்னுடைய யத்னத்தால் உன்னை வந்து சேருகை என்ற ஒரு பொருள் இல்லை
இனி உன்னுடைய அழகைக் காணப் பெறாதே இழந்து போம் இத்தனை யாகாதே நான் -என்கிறார் –
——————————————————-
கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-
இதுக்கு முன்புள்ள காலம் எல்லாம் உன் திருவடிகளைச் சேருகைக்கு ஈடாய் இருப்பதொரு ஸூக்ருதத்தைச் செய்வோம் என்று செய்தல் –
அதுக்கு விரோதியான துஷ்க்ருதத்தைத் தவிருவோம் என்று தவிர்த்தல் செய்திலேன் -எடுத்தபடி செய்து திரிந்தேன் –
இப்படிச் செய்து திரிந்து அதி ஷூத்ரமான விஷய ரசத்தை புஜித்து உன் திருவடிகளைச் சேருகைக்கு அர்ஹன் இன்றிக்கே அகன்று போனேன் -என்று
நசை அற்றுப் போய்த் துவளப் புக்கவாறே பின்னையும் அவனுடைய சர்வாத்ம நிர்மாண அநுகுண நிரதிசய சக்தி யோகத்தை அனுசந்தித்துப் போய் உஜ்ஜீவித்து
இந்த அபர்யந்தமான ஆத்மாக்கள் எல்லாரையும் ஸ்ருஷ்டித்து அருளின உனக்கு என்னை ஒருவனையும்
உன் திருவடிகளுக்கு ஈடாம்படி பண்ணி யருளுகை ஒரு பொருளோ -ஆனபின்பு உன் திருவடிகளை என்று நான் சேர்வது -என்கிறார் –
——————————————————————-
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-
பகவத் பிராப்தி உபாயமான தத் ஸ்வரூப ரூப குண விபூதி விஷய–யாதாம்யா ஞான ஹீனராய் –
தத் பிராப்தி விரோதி சம்சாரத்திலே பிரவணருமாய் இருப்பது
சர்வஞ்ஞனாகையாலே நம்முடைய இந்த அநர்ஹதையை அவன் அறிவது
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து அவனைக் காண வேணும் என்று வியசனப்படுகை –
அவனைக் காண்கைக்கு நமக்கு எங்கே உபகரணம் -என்கிறார் –
————————————————–
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-
கர்ம யோகமாதல் பக்தி யோகமாதல் ஞான யோகமாதல் ஒன்றும் செய்கிறிலேன் -செய்யாது இருந்து வைத்து
சவ்ஸீல்ய வாத்சல்ய காருண்யாதி அஸந்கயேய திவ்ய ஆத்ம குணங்களாலும்
நிரதிசய உஜ்வல்ய சவ்ந்தர்ய சவ்கந்த்யாதி அஸந்கயேய திவ்ய ரூப குணங்களாலும் பரிபூர்ணனாய் இருந்த உன்னைக் காண வேணும்
என்று என்று கூப்பிடா நின்றேன் -இப்படி கூப்பீடு உன்னைக் காண்கைக்கு எங்கே கார்யகரமாகிறது -என்கிறார் –
—————————————————————-
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-
அஸக்ய நிஷ் க்ர்மணமாய்-நிரதிசய துக்காஸ் பதமாய் இருந்த கொடு வினைத் தூற்றுள்ளே நின்று பாவியேன் பலகாலமும்
கூவிக் கூவி எம்பெருமான் திருவடிகளில் சென்று சேர் வழி அறியாதே திகைத்து அலமருகின்றேன் –
திருவாய்ப்பாடியிலே சர்வ ஸூலபனாய்க் கொண்டு வர்த்தித்து அருளினவன் திருவடிகளைச் சேர மாட்டிற்று இலேன்
அன்று ஒரு தேச விசேஷத்திலே வர்த்திக்கையாலே சேரப் பெறாது ஒழியவும் சம்பவிக்கும் அன்றோ என்னில்
சர்வ தேச வர்த்திகளான சர்வாத்மாக்களுக்கும் தன திருவடிகளின் உள்ளே அகப்படும்படி உலகம் எல்லாம் தாவி அருளின அன்று உன் திருவடிகளைச் சேரப் பெற்றிலேன்
அன்று சேரப் பெறாத நான் என்று சேர இருக்கிறேன் -சேராது ஒழி யில் இவ்வாத்மா முடிகை நிச்சிதம்
இனி அவனுடைய ஈச்வரத்வம் விகலமாக வாகாதே புகுகிறது –
இனி ஆத்மாவதிகமாக அவன் திருவடிகளைச் சேருகை என்ற ஒரு பொருள் இல்லை என்று நசை அற்றுக் கூப்பிடுகிறார் –
—————————————————-
தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-
உத்க்ராந்தி வ்யஸனம் போலே அதி கோரமாய் அதி துஸ் சஹமாய் இருந்த என்னுடைய அந்த பகவத் விஸ்லேஷ ஜெனித நிரவதிக வ்யசனமும்
அவனுடைய சர்வேஸ்வரத்வத்துக்கு வைகல்யம் வருகிறது -என்றுள்ள மஹா பயமும் நிஸ் சேஷமாக எல்லாமும் போய்
என் நெஞ்சும் நிலை நின்று என்னுடைய ஆத்மாவும் நித்யமாம் படி
சாஸ்த்ர ஏக சமைதி கமயனான எம்பெருமானைத் திருமலையிலே கண்ணாலே காணப் பெற்றேன் -என்கிறார் –
——————————————————-
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-
இப்படி ஆழ்வார் உளராகையாலே எம்பெருமானுடைய சர்வேஸ்வரத்வமும் அவிகலமாய்–திரு நகரியும் அடங்க
சம்ருத்தமாயிற்று -என்கிறது -உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்-குயில்கொள் சோலைத் தென்குருகூர்-என்கிற இடம் –
இனி மேல் இத்திருவாய் மொழி பகவத் அனுபவ விரோதியான ப்ரக்ருதி சம்பந்தத்தைப் போக்கும் -என்கிறது
————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply