அன்போடு அழகிய மணவாளச் சீயர் அருளிச் செய்த பன்னீராயிரப்படி -3-4-

புகழும் -பிரவேசம்
நாலாம் திருவாய் மொழியில் -கீழ் ப்ரஸ்துதமான கைங்கர்யத்துக்கு பிரதிசம்பந்தி சகல சேதன அசேதன விசிஷ்டனான நாராயணன் ஆகையாலே-
அவனுடைய சர்வ பிரகார விசிஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
1-பூத பவ்திகாத்மக சகல பிரகாரத்வத்தையும்
2-பூத கார்ய விசேஷ பிரகாரத்வத்தையும்
3-அசாதாரண விக்ரஹ யோகத்தையும்
4-ரத்நாதி வி லக்ஷண பதார்த்த பிரகாரத்வத்தையும்
5-சரசமான போக்ய வஸ்து பிரகாரத்வத்தையும்
6-வேத வைதிக ரூபமான காந பர்யந்த சப்த ராசி பிரகாரத்வத்தையும்
7-போக மோக்ஷ ரூபமான புருஷார்த்த பிரகாரத்வத்தையும்
8-லோக பிரதானரான ப்ரஹ்மாதி சரீரகத்வத்தையும்
9-இப்படி ஸமஸ்த சேதன அசேதன பிரகாரத்வத்தையும்
10-தத் கத தோஷைர சம்ஸ்ப்ருஷ்டத்வத்தையும் அனுசந்தித்து
பிரகார வாசக சப்தங்களாலே பிரகாரியான தன்னைச் சொல்லும்படியான அவிநா பாவத்தை பிரகாசிப்பிக்கையாலே
அவனுக்கு பிரகார தயா சேஷ பூதராய் இருக்கிற இவர்
பிரகார வாசக சப்தங்களும் அசாதாரண திவ்ய நாமங்களோ பாதி அங்குத்தைக்கு வாசகமாகையாலே தத் தத் சப்தங்களாலே
தம்முடைய ஸ்வரூப அனுரூபமான வாசிக கைங்கர்யம் பண்ணுகிறார் –

——————————————————————

அவதாரிகை –முதல் பாட்டில் –பூத பவ்திக சகல பிரகாரத்வத்தை ஸங்க்ரஹேண அருளிச் செய்கிறார் –

புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—

கண்ணனைக் கூவு மாறே.—சர்வாத்ம பாவ ப்ரகாசகனான கிருஷ்ணனை சொல்லும் பிரகாரம்
புகழும் நல் ஒருவன் என்கோ!–வேதங்களாலும் வைதிக புருஷர்களாலும் புகழப் பட்ட விலக்ஷண குண விக்ரஹ விபூதி யுக்தனான அத்விதீயன் என்பேனோ
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!–ஒப்பு இல்லாத தாரகதவாதி குண பூர்த்தியையுடைய பூமி என்கோ
திகழும் தண் பரவை என்கோ-பிரசன்ன தையாலே உஜ்ஜவலமாய் சீதள ஸ்வ பாவமான ஜல ராசி என்கோ
தீ என்கோ! –ஜாட்ய நிவர்த்தகமான அக்னி என்கோ
வாயு என்கோ!-பிராணனாதி ஹேதுவான வாயு என்கோ
நிகழும் ஆகாசம் என்கோ!–ஸ்வ கார்ய வஸ்துக்களை ஆவரித்து சந்நிஹிதமான ஆகாசம் என்கோ
நீள் சுடர் இரண்டும் என்கோ!–கிரண த்வாரத்தாலே எங்கும் போய் பிரகாசகமான சந்த்ர ஆதித்யர்கள் ஆகிற இரண்டு தேஜஸ் ஸூம் என்கோ
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!-ஓன்று ஒழியாமல் இவை எல்லாம் என்கோ

இகழ்வில் -என்றது த்யஜிக்கப் படாத –உபாதேயம் -என்றுமாம்-

——————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -யுக்தமான மஹா பூதங்களினுடைய கார்ய விசேஷத்தை அருளிச் செய்கிறார் –

கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-

குன்றங்கள் அனைத்தும் என்கோ!–காடின்யத்தாலே பூமி கார்யமான எல்லாப் பர்வதங்கள் -என்று சொல்வேனோ-
மேவு சீர் மாரி என்கோ!–சகல ஜீவனத்வ ரூப குணோந் மேஷத்தை யுடையதாய் ஜல கார்ய விசேஷமான வர்ஷம் என்று சொல்வேனோ-
விளங்கு தாரகைகள் என்கோ!-உஜ்ஜ்வல்யத்தாலே தேஜஸ் கார்யமான நக்ஷத்ராதிகள் என்று சொல்வேனோ-
நாவியல் கலைகள் என்கோ!-வாயு கார்யமான நாவில் இயற்றியை யுடைத்தான வித்யா ஸ்தானங்கள் என்று சொல்வேனோ-
ஞான நல் ஆவி என்கோ!-அர்த்த ஞானத்துக்கு சரீரமாய் ஆகாச கார்யமான சப்த விசேஷங்கள் -என்று சொல்வேனோ
பாவு சீர்க் கண்ணன் -பரந்த குண விபூதிகளை யுடையனாய் -எனக்கு ஸூலபனாய்
பங்கயக் கண்ணன் எம்மானையே.–பங்கயம் போன்ற கண் அழகாலே என்னைத் தோற்பித்துக் கொண்ட ஸ்வாமியை
கூவுமாறு அறிய மாட்டேன்,–சொல்லும் பிரகாரம் அறிய மாட்டு கிறிலேன்-

நல்லாவி என்றது –ஞானத்துக்கு அவ்யவதாநேந உத்பாதகமாகை-

—————————————————

அவதாரிகை –
அநந்தரம் -இந்த பிரகாரங்களினுடைய ஆநுரூப்ய ஸூசந அர்த்தமாக மத்யே அசாதாரண விக்ரஹத்தை அனுசந்திக்கிறார் –

பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-

சாதி மாணிக்கத்தையே!–ஆகரஜமான மாணிக்கம் போலே அது உஜ்ஜவலமான விக்ரஹத்தை யுடையவனை
பங்கயக் கண்ணன் என்கோ!-பங்கயம் போலும் கண்ணை யுடையவன் என்று சொல்லுவேனோ
பவளச் செவ் வாயன் என்கோ!–பவளம் போலும் சிவந்த வாயன் -என்று சொல்லுவேனோ
அங் கதிர் அடியன் என்கோ!-தர்ச நீயமாய் ஒளி விடுகிற திருவடிகளை யுடையவன் -என்று சொல்லுவேனோ
அஞ்சன வண்ணன் என்கோ!–அஞ்சனம் போலும் niraththai யுடையவன் -என்று சொல்லுவேனோ
செங் கதிர் முடியன் என்கோ!-சிவந்த பிரபையை யுடைத்தான திரு அபிஷேகத்தை யுடையவன் -என்று சொல்லுவேனோ
திரு மறு மார்பன் என்கோ!-ஸ்ரீ லஷ்மீ ஸ்தானமான ஸ்ரீ வத்ஸத்தாலே சிஹ்னிதமான திரு மார்பை யுடையவன் -என்று சொல்லுவேனோ
சங்கு சக்கரத்தின் என்கோ-அந்தப்புரத்துக்கு காவல் என்னலாம் படியான ஆயுத பூர்த்தியை யுடையவன் -என்று சொல்லுவேனோ

————————————

அவதாரிகை –
அநந்தரம் -உஜ்ஜவலமான ரத்நாதி பிரகாரத்வத்தை அருளிச் செய்கிறார் –

சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-

ஆதும் இல் காலத்து எந்தை–ஒன்றும் இல்லாத ஸம்ஹ்ருதி காலத்தில்
நிருபாதிக சம்பந்தம் அடியாக அவிபக்த நாம ரூப சித் அசித் சரீரியாய்
அச்சுதன் அமலனையே.–ஸ்வ ஸ்வரூபாதிகளுக்கு பிரச்யுதி இன்றியே -சரீர பூத சித் அசித் தோஷம் தட்டாத ஹேய ப்ரத்ய நீகனை
சாதி மாணிக்கம் என்கோ!–ஆக்ரோத்பத்தி வை லக்ஷண்யத்தை யுடைய மாணிக்கம் என்று சொல்வேனோ
சவி கொள் பொன் முத்தம் என்கோ!–ஒளியை யுடைய போன் முத்துக்கள் -என்று சொல்வேனோ
சாதி நல் வயிரம் என்கோ!-ஆகரஜமாய் ரத்நாந்தர வி லக்ஷணமான வயிரம் என்று சொல்வேனோ
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!-விநாச ரஹிதமாய் பிரகாச குண விசிஷ்டமான தீபம்-என்று சொல்வேனோ
ஆதி அம் சோதி என்கோ!–பிரதமபாவியாய் சவ்ந் தர்ய குண யுக்தமான தேஜோ மய திவ்ய விக்ரஹ விசிஷ்டன் என்று சொல்வேனோ
ஆதி அம் புருடன் என்கோ!–பிரதான பூதனாய் ஆனந்தாதி குண விசிஷ்டனான பரம புருஷன் என்று சொல்வேனோ

ஆதி விக்ரஹம் என்றது பரம பாத நிலய விக்ரஹத்தை
ஆதி புருஷன் -என்றது திவ்யாத்ம ஸ்வரூபத்தை
இவற்றினுடைய உஜ்வல்யத்தோ பாதி உஜ்வல்ய ரத்நாதிகளும் அசாதாரண பிரகாரம் என்று கருத்து
சவி -ஒளி / தவிர்வு-வி நாசம் /விளக்கம் -ப்ரகாஸகாத்வம் ஆகவுமாம்-

————————————————————-

அவதாரிகை –
அநந்தரம் விலக்ஷண ரஸவத் பதார்த்த விபூதித்வத்தை அருளிச் செய்கிறார் –

அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—

அச்சுதன் அமலன் என்கோ!–போக்தாக்களை நழுவ விடாத இனிமையை யுடையவன்–தன் பேறாக அனுபவிப்பிக்கும்
நைர்மால்யத்தை யுடையவன் என்று சொல்லுவேனோ
அடியவர் வினை கெடுக்கும்–உறவுடையாரை போக அலாப கிலேசத்தை போக்குமதாய்–
நச்சு மா மருந்தம் என்கோ!–சாரஸ்யத்தாலே நச்சப் படுவதான பசு மருந்து -விக்ரஹம் என்று சொல்வேனோ –
மருந்து என்கிறது கிலேச நாச கரத்வத்தாலே / கடைய வேண்டாத கடலில் கிடந்த அம்ருதம் என்றுமாம்
நலம்கடல் அமுதம் என்கோ!-ஷீராத்மகதையால் வந்த வை லக்ஷண்யத்தை யுடைத்தாய் -பகவத் ஸம்பந்தத்தாலே தர்ச நீயமான
கடலிலே அவன் கடைந்து எடுத்த அம்ருதம் என்று சொல்வேனோ
அச்சுவைக் கட்டி என்கோ!–அந்த அம்ருதத்தினுடைய ரசத்தை யுடைத்தான கருப்புக் கட்டி என்று சொல்வேனோ
அறுசுவை அடிசில் என்கோ!-மதுர அம்ல லவண கடு கஷாய திக்தாத்மக ஷட் ரஸா யுக்தமான அடிசில் என்று சொல்வேனோ
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!–நெய்யின் சுவையை யுடைத்தான மது என்று சொல்வேனோ /
அன்ரிக்கே நெய்த்தலையும் சுவையையும் யுடைத்தான தேறல் என்றுமாம்
கனி என்கோ! பால்என் கேனோ!–பக்வமாய் புஜித்து அல்லது நிற்க ஒண்ணாத கனி -ஸ்வாபாவிக ரசவத்தான பால் என்று சொல்லுவேனோ –

———————————————–

அவதாரிகை –
அநந்தரம் -வேத வைதிகாத் மகமாய்-காந பர்யந்தமான சப்த ராசி பிரகாரத்வத்தை அருளிச் செய்கிறார் –

பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6-

வானவர் ஆதி யையே.–ஸமஸ்த தேவர்களுக்கும் சத்தாதி ஹேது பூதனானவனை
பால் என்கோ! -சாகாதி விபாகங்கள் என்று சொல்லுவேனோ –பால் என்று பகுதியாய் -சாகாதி விபாகம் என்றவாறு
நான்கு வேதப்-பயன் என்கோ!–ததாவித சதுர்வித வேதங்களின் பிரயோஜனம் என்று சொல்லுவேனோ
சமய நீதி நூல் என்கோ!–அர்த்த வியவஸ்தாபகமான நியாயத்துக்கு ப்ரதிபாதகமாயுள்ள மீமாம்ச சாஸ்திரம் என்று சொல்லுவேனோ
நுடங்கு கேள்வி இசை என்கோ!-ஸ்ரோத்தாக்களை ஈடுபடுத்தும் கேள்வியை யுடைத்தான கீதம் என்பேனோ
இவற்றுள் நல்ல மேல் என்கோ! -யுக்தமான இவற்றுக்குள்ளே நல்ல விலக்ஷணமாய் ணவத்திகா அதிசயமான போக்யம் என்று சொல்லுவேனோ
வினையின் மிக்க-பயன் என்கோ!-சாதனத்தின் அளவன்றியே அதிசயிதமான பலன் என்று சொல்லுவேனோ
கண்ணன் என்கோ!–அந்த பல ரூபனாய் ஆனந்தாத்மகனான கிருஷ்ணன் என்று சொல்லுவேனோ
மால் என்கோ! -தன்னை புஜிக்குமவர்களை வ்யாமுக்தனாய் புஜிக்குமவன் என்று சொல்லுவேனோ
மாயன் என்கோ–தத் அனுரூபமான ஆச்சர்ய சேஷ்டிதாதி யுக்தன் என்பேனோ –

———————————————————-

அவதாரிகை –
அநந்தரம் -போக மோக்ஷ விபூதித்வத்தை அருளிச் செய்கிறார்

வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-

ஒளிமணி வண்ண னையே!–உஜ்ஜவலமான மாணிக்கம் போலே இருக்கிற வடிவை யுடையவனை
வானவர் ஆதி என்கோ!-போக சக்தரான தேவர்களுக்கு உத்பாதகன் என்பேனோ
வானவர் தெய்வம் என்கோ!-அவர்களுக்கு ஆராத்யா தைவதம் என்பேனோ
வானவர் போகம் என்கோ!-அவர்களுக்கு ஆராதனை பலமான போகம் என்பேனோ
வானவர் முற்றும் என்கோ!-அவர்களுடைய சர்வவித்த ரக்ஷணம் என்பேனோ
ஊனம்இல் செல்வம் என்கோ!-அநஸ் வரமான ஐஸ்வர்யம் என்பேனோ
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!-ஆகல்ப அவசானஸ் தாயியான ஸ்வர்க்க ஸ்தானம் என்பேனோ
ஊனம்இல் மோக்கம் என்கோ-இப்போகத்துக்கு அவ்வருகு பட்ட-கைவல்யம் போல் இன்றியே அங்குசிதமான மோஷானந்தம் என்பேனோ

வானவர் -என்ற இடம் நித்ய ஸூரிகளைச் -சொல்லுகிறது என்பாரும் உளர்

—————————————————

அவதாரிகை –
அநந்தரம் -லோக பிரதான காரண ஈஸ்வர விபூதித்வத்தை அருளிச் செய்கிறார் –

ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-

அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்-படைத்து அவை ஏத்த நின்ற–ரக்ஷண உபகார நிமித்தமான உகப்பை யுடையனாய்க் கொண்டு
ஸமஸ்த லோகங்களையும் ஸ்ருஷ்டித்து -உபகார ஸ்ம்ருதியாலே அவை ஸ்தோத்ரம் பண்ண -பாத்தாலே க்ருதக்ருதனாய் நிற்பானாய்
களி மலர்த் துளவன் எம்மான்-கண்ணனை மாயனையே.–மதுஸ் யந்தியாய் விகசித புஷ்பமான திருத் துழாய் மாலை அழகாலே என்னை அநந்யார்ஹன் ஆக்கின
நவநீத சவ்ர்யாத்ய ஆச்சர்ய சேஷ்டித்த யுக்தனான கிருஷ்ணனை -ஆயர் கொழுந்தாய் அவரால் புடை யுண்ணும்
மாயப் பிரானை என் மாணிக்கச் சோதியை -என்கிறபடி -அவர்கள் கட்டி அடிக்க
ஒளி மணி வண்ணன் என்கோ!–சாணையிலேயிட்ட மாணிக்கம் போலே ஒளி பெற்று ஸ்லாக்யமான வர்ணத்தை யுடையவன் என்பேனோ
ஒருவன் என்று ஏத்த நின்ற–ஏக ஏவ ருத்ர -என்கிறபடியே ஸ்வ ஆஸ்ரிதன் ஒருவன் என்று ஸ்துதிக்கும் படி நிற்குமவனாய் –
நளிர் மதிச் சடையன் என்கோ!–குளிர்ந்த சந்த்ர கலா தாரணத்தாலும்-ஜடா தரத்வத்தாலும்-போக தபஸ் பரனான ருத்ரன் –
நான் முகக் கடவுள் என்கோ!–தேவதா வர்க்கம் கையெடுக்கும் படி சதுர்முகனான தைவம் என்பேனோ –

—————————————————

அவதாரிகை –
அநந்தரம் -யுக்த விபூதி மாத்ரமன்றியே சகல சேதன அசேதனங்களும் தானேயானவனைப் பரிச்சேதிக்கும் பிரகாரம் அறியேன் -என்கிறார்-

கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-

யாவையும் எவரும் தானே.––எல்லா வகைப்பட்ட அசேதனமும் -எல்லா வகைப்பட்ட சேதனரும் தானேயாய் வைத்து –
கண்ணனை மாயன் றன்னைக்–ஆஸ்ரித ஸூலபனாய் ஆச்சார்யாவஹமான குண சேஷ்டித நிருபணீயனாய்
அர்வா சி ந ப்ரயோஜனார்த்திகளுக்கும்
கடல் கடைந்து அமுதம் கொண்ட-அண்ணலை அச்சு தன்னை–கடலைக் கடைந்தும் கார்யம் செய்யும் சர்வ ஸ்வாமியாய் -ஆஸ்ரிதரை நழுவ விடாதவனாய்
அனந்தனை — அபரிச்சின்ன ஸ்வரூபாதி வைபவத்தை யுடையனாய் –
அனந்தன் றன்மேல்-நண்ணி நன்கு உறைகின்றானை–அத்தனையும் தனக்குள்ளே அடங்கும்படியான திருவனந்த ஆழ்வான் மேலே –
பொருந்தி உகந்து கண் வளரா நிற்குமவனாய் –
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை-ரஷ்யத்துக்கு ஆபத்து வந்தால் வயிற்றிலே வைத்து நோக்குவது -வெளிநாடு காட்டுவதான
வாத்சல்யத்தை யுடையனானவனை
எண்ணுமாறு அறிய மாட்டேன்-பரிச்சேதித்து நினைக்கும் படி அறிகிறிலேன்-

—————————————-

அவதாரிகை –
அநந்தரம் -இப்படி பிரகார பூத சித் அசித்துக்களின் படி அவன் தனக்குத் தட்டாத படியை அனுசந்திக்கிறார் –

யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-

யாவையும் எவரும் தானாய்–எல்லாச் அசேதனமும் -எல்லாச் சேதனரும் தானேயாய்
அவர் அவர் சமயந் தோறும்–அந்த அந்தச் சேதனருடைய அசித் சம்சர்க்க நிபந்தமான -தேவாதி வ்யவஸ்தைகளில்
தோய்வு இலன்– அவர்களை போலே தனக்கு சங்கம் இல்லாதவனாய்
புலன் ஐந்துக்கும்–சொலப்படான்; –இந்திரிய பஞ்சகத்துக்கும் விஷயமாகச் சொல்லப் படாதவனாய்
உணர்வின் மூர்த்தி;–ஸ்வயம் பிரகாச ஞான ஸ்வரூபனாய் இருக்கும் -ஆதலால் –
ஆவி சேர் உயிரின் உள்-பிராண ஆச்ரயமான சரீரத்தோடு சேர்ந்த ஆத்மாவினுடைய ஸ்வரூபத்தில் –
ஆதும் ஓர் பற்று இலாத–சரீர கதமான ஜடாதவ பரிணாமித்வாதி ஸ்வ பாவங்கள் ஒன்றிலும் தொற்று இல்லாத
பாவனை அதனைக் கூடில்,–பிரதிபத்தியானது அந்த ஸ்வரூபத்தை கிட்டுமாகில்
ஆதும் ஓர் பற்று இலாத-ஸமஸ்த சேதன அசேதன ஸ்வ பாவங்களிலும் ஒரு தொற்று இல்லை என்கிற பிரதிபத்தி
அவனையும் கூட லாமே.–கீழ்ச் சொன்ன ஸ்வயம் பிரகாச ஞான ஸ்வரூபனான ஈஸ்வரனையும் சேரலாம்
ஏ-விச்சிதம் –

——————————————————

அவதாரிகை –
அநந்தரம் -இத்திருவாய் மொழிக்குப் பலமாக அவிச்சின்ன பகவத் அனுபவத்தை அருளிச் செய்கிறார் –

கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-

கூடிவண்டு அறையும் தண்தார்க்–வண்டுகள் கூடி மதுபான ப்ரீதியாலே சப்திக்கிற குளிர்ந்த திருமலையை யுடையவனாய்
கொண்டல்போல் வண்ணன் றன்னை-காளமேகம் போலே இருக்கிற நிறத்தை யுடையவனாய்
மாடுஅலர் பொழில் குருகூர்-வண்சட கோபன் சொன்ன–சுற்றும் அலர்ந்த சோலைகளை யுடைத்தான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
பாடல்ஓர் ஆயி ரத்துள்-இவையும்ஓர் பத்தும் வல்லார்–இசையோடு கூடின அத்விதீயமான ஆயிரத்துக்குள்ளும் அத்விதீயமான –
அசாதாரண விக்ரஹத்தோ பாதியாக அகில விபூதி பிரகாரத்வத்தை ப்ரதிபாதித்த இப்பத்தையும் அப்யஸிக்க வல்லவர்கள்
வீடுஇல போகம் எய்தி-விரும்புவர் அமரர் மொய்த்தே.–-அவிச்சின்னமான பகவத் அனுபவத்தை பெற்று நித்ய ஸூரீகல் மொய்த்துக் கொண்டு விரும்பும் படியாவர்கள்

இது அறுசீர் ஆசிரிய விருத்தம் –

———————————————-

ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading