புகழும் -பிரவேசம்
இப்படி திருவேங்கடமுடையானை புஜிக்க வாருங்கோள் என்று தம்முடைய திரு உள்ளத்தையும் -திரு உள்ளம் போலே
பகவத் கைங்கர்ய ஏக ரதிகளாய் இருப்பாரையும் அழைத்து -அவனை புஜிக்கையிலே ப்ரவ்ருத்தராய்ச் செல்லா நிற்க –
நடுவே திருமலையினுடைய போக்யதையைக் கண்டு திருமலையை அனுபவித்து பின்னையும் திருவேங்கடமுடையானுடைய
சர்வவஸ்து சரீரித்வத்தையும் -சர்வவஸ்து கதா சேஷ தோஷை ரசம் ஸ்ப்ருஷ்டத்வத்தையும்
திவ்ய ரூப பூஷண ஆயுத மஹிஷஹீ பரிஜநா ஸ்தாந விசிஷ்டாத்வத்தையும் சொல்லி புஜிக்கிறார்–
—————————————-
புகழும் நல் ஒருவன் என்கோ!
பொரு இல் சீர்ப் பூமி என்கோ!
திகழும் தண் பரவை என்கோ
தீ என்கோ! வாயு என்கோ!
நிகழும் ஆகாசம் என்கோ!
நீள் சுடர் இரண்டும் என்கோ!
இகழ்வு இல் இவ் வனைத்தும் என்கோ!
கண்ணனைக் கூவு மாறே.—————–3-4-1—
சர்வைஸ் சம்ஸ் தூயமாநனாய் -சகல கல்யாண குண விசிஷ்டானாய் நிரூபமானாய் இருந்தவன் என்று சொல்லுவேனோ
க்ஷமாதி குண யுக்தமான ப்ருதிவ்யாதி பூதங்களுக்கு அந்தராத்மா பூதன் என்று சொல்லுவேனோ
ப்ரக்ருஷ்ட தேஜோ விசிஷ்டரான சந்த்ர ஸூர் யாதிகளுக்கு அந்தராத்மா பூதன் என்று சொல்லுவேனோ
அன்றியே
ஓன்று ஒழியாமே இந்த சர்வ பதார்த்தங்களும் அந்தராத்மா பூதன் என்று சொல்லுவேனோ
இவனை எங்கனே சொல்லுவேன் -என்கிறார் –
————————————-
கூவுமாறு அறிய மாட்டேன்,
குன்றங்கள் அனைத்தும் என்கோ!
மேவு சீர் மாரி என்கோ!
விளங்கு தாரகைகள் என்கோ!
நாவியல் கலைகள் என்கோ!
ஞான நல் ஆவி என்கோ!
பாவு சீர்க் கண்ணன் எம்மான்
பங்கயக் கண்ண னையே.–3-4-2-
மஹீதர வர்ஷ நக்ஷத்ர ஸ்ருதி ஸ்ம்ருதி இதிஹாச புராணாதி ரூப சப்த தஜ் ஜன்ய ஞானாதிகளுக்கு ஆத்மபூதன் -என்கிறது
————————————————–
பங்கயக் கண்ணன் என்கோ!
பவளச் செவ் வாயன் என்கோ!
அங் கதிர் அடியன் என்கோ!
அஞ்சன வண்ணன் என்கோ!
செங் கதிர் முடியன் என்கோ!
திரு மறு மார்பன் என்கோ!
சங்கு சக்கரத்தின் என்கோ
சாதி மாணிக்கத்தையே!–3-4-3-
அசேஷ தோஷ ப்ரத்ய நீக்கமாய் -கல்யாணைகதநமாய் –நிரதிசய தேஜோ மயமாய்–நிரதிசய தீப்தி யுக்த திவ்ய
பூஷண ஆயுத விசிஷ்டமான திவ்ய ரூபத்தை யுடையவன் என்று சொல்லுகிறது –
——————————————
சாதி மாணிக்கம் என்கோ!
சவி கொள் பொன் முத்தம் என்கோ!
சாதி நல் வயிரம் என்கோ!
தவிவு இல் சீர் விளக்கம் என்கோ!
ஆதி அம் சோதி என்கோ!
ஆதி அம் புருடன் என்கோ!
ஆதும் இல் காலத்து எந்தை
அச்சுதன் அமலனையே.–3-4-4-
ஏவம்வித திவ்ய ரூபத்தை யுடையனாய்க் கொண்டு திரு நாட்டிலே எழுந்து அருளி இருக்கும் -என்கிறது –
———————————-
அச்சுதன் அமலன் என்கோ!
அடியவர் வினை கெடுக்கும்
நச்சு மா மருந்தம் என்கோ!
நலம்கடல் அமுதம் என்கோ!
அச்சுவைக் கட்டி என்கோ!
அறுசுவை அடிசில் என்கோ!
நெய்ச்சுவைத் தேறல் என்கோ!
கனி என்கோ! பால்என் கேனோ!–3-4-5—
அசேஷ தோஷ ப்ரத்ய நீகனாய்– ஆஸ்ரிதரோடு நித்ய சம்ச்லேஷ ஸ்வபாவனாய் —
ஆஸ்ரித ஜன ஸமஸ்த துக்க நிரசன ஸ்வ பாவனாய்– பரம போக்யனாய் இருக்கும் -என்கிறது –
——————————————-
பால் என்கோ! நான்கு வேதப்
பயன் என்கோ! சமய நீதி
நூல் என்கோ! நுடங்கு கேள்வி
இசை என்கோ! இவற்றுள் நல்ல
மேல் என்கோ! வினையின் மிக்க
பயன் என்கோ! கண்ணன் என்கோ!
மால் என்கோ! மாயன் என்கோ
வானவர் ஆதி யையே.–3-4-6-
பால் என்று சொல்லுவேனோ -சர்வ வேதங்களாலும் சர்வ வேதார்த்த நிர்ணயகமாய் ஹேது மத்தாய் இருந்த ப்ரஹ்ம ஸூத்ர பதங்களாலும் –
பரம புருஷார்த்த தயா ப்ரதிபாத்யமானன் என்று சொல்லுவேனோ –
போக்யதையால் அவன் நுடங்கு கேள்வி இசை என்று சொல்லுவேனோ இங்குச் சொல்லப்பட்ட போக்ய பதார்த்தங்கள் எல்லாவற்றிலும்
மேற்பட்ட போக்யம் என்று சொல்லுவேனோ -சகல புண்ய பலம் என்று சொல்லுவேனோ -ஆஸ்ரித ஸூலபன் என்று சொல்லுவேனோ –
ஆஸ்ரித வத்சலன் என்று சொல்லுவேனோ -ஆச்சர்ய பூதன் என்று சொல்லுவேனோ -வானவராத்தியை எங்கனே சொல்லுவேன் -என்கிறார் –
—————————————————
வானவர் ஆதி என்கோ!
வானவர் தெய்வம் என்கோ!
வானவர் போகம் என்கோ!
வானவர் முற்றும் என்கோ!
ஊனம்இல் செல்வம் என்கோ!
ஊனம்இல் சுவர்க்கம் என்கோ!
ஊனம்இல் மோக்கம் என்கோ
ஒளிமணி வண்ண னையே!–3-4-7-
வானவருடைய தாரகம் என்று சொல்லுவேனோ -அவருடைய தேவம் என்று சொல்லுவேனோ -அவர்களுடைய போகம் என்று சொல்லுவேனோ
அவர்களுடைய சர்வஸ்மம் என்று சொல்லுவேனோ –
ஐஹிகமான பூர்ண சம்பத்துக்கு ஆத்மபூதன் என்று சொல்லுவேனோ -பூர்ண ஸ்வர்க்க புருஷார்த்தத்துக்கு ஆத்மபூதன் என்று சொல்லுவேனோ –
பரம புருஷார்த்த லக்ஷண மோக்ஷத்துக்கு ஆத்மபூதன் என்று சொல்லுவேனோ –
இவனை எங்கனே சொன்னால் பூர்ணமாகச் சொல்லிற்று ஆவது -என்கிறார்
—————————————————-
ஒளி மணி வண்ணன் என்கோ!
ஒருவன் என்று ஏத்த நின்ற
நளிர் மதிச் சடையன் என்கோ!
நான் முகக் கடவுள் என்கோ!
அளி மகிழ்ந்து உலகம் எல்லாம்
படைத்து அவை ஏத்த நின்ற
களி மலர்த் துளவன் எம்மான்
கண்ணனை மாயனையே.–3-4-8-
சர்வ லோக சம்ரக்ஷண ஏக போகனாய் -சர்வ ஜகத் ஸ்ரஷ்டாவாய் -சதுர்முகாதி சர்வ ஜனைஸ் சம்ஸ்தூயமாநனாய் இருக்கும்
களி மலர்த் துளவன் எம்மான்-கண்ணனை மாயனை-நிரவதிக சவ்ந்தர்ய மஹோ ததி என்று சொல்லுவேனோ –
லோகம் எல்லாம் ஐஸ்வர்யத்தினாலே அத்விதீயன் என்று சொல்லி ஏத்தும் படி ருத்ரனுக்கு ஐஸ்வர்யத்தைக் கொடுத்து
அவனுக்கு ஆத்ம பூதனானவன் என்று சொல்லுவேனோ –
சதுர்முக அந்தராத்ம பூதன் என்று சொல்லுவேனோ -எங்கனே சொல்லுவேன் -என்கிறார் –
———————————————————————-
கண்ணனை மாயன் றன்னைக்
கடல் கடைந்து அமுதம் கொண்ட
அண்ணலை அச்சு தன்னை
அனந்தனை அனந்தன் றன்மேல்
நண்ணி நன்கு உறைகின்றானை
ஞாலம் உண்டு உமிழ்ந்த மாலை
எண்ணுமாறு அறிய மாட்டேன்
யாவையும் எவரும் தானே.–3-4-9-
ஆஸ்ரித ஸூலபத் வார்த்தமாக தத் சஜாதீய தயா அவத்தீர்ணனாய் ஆச்சர்யாதி மநோ ஹாரா திவ்ய சேஷ்டிதங்களை யுடையனாய் =
ஆஸ்ரிதரைக் கைவிடாத ஸ்வ பாவனாய் அநந்த கல்யாண குண விசிஷ்டானாய் -அநந்த கல்யாண குண மஹோததியான திருவனந்த ஆழ்வானை
திவ்ய சய்யா ஆசநாதி களாக யுடையனாய் சர்வ லோக பரிபாலகனாய் சர்வ அந்தராத்ம பூதனான எம்பெருமானை
இங்கனே சொல்லுவேன் என்று அறிகிலேன் -என்கிறார் –
————————————
யாவையும் எவரும் தானாய்
அவர் அவர் சமயந் தோறும்
தோய்வு இலன்; புலன் ஐந்துக்கும்
சொலப்படான்; உணர்வின் மூர்த்தி;
ஆவி சேர் உயிரின் உள்ளால்
ஆதும் ஓர் பற்று இலாத
பாவனை அதனைக் கூடில்,
அவனையும் கூட லாமே.–3-4-10-
இப்படி சர்வ வஸ்துக்களோடும் ஆத்மதயா சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே ஹேய ப்ரத்ய நீக தயா-ஸ்வ இதர ஸமஸ்த வஸ்து விசஜாதீயனாய் –
ஞான ஸ்வரூபனாய் இருக்கையாலே ஸ்வ சரீர பூத ஸமஸ்த வஸ்துகத சர்வ தோஷை -அசம்ஸ்ப் ப்ருஷ்டனாய் இருக்கும் -இது கூடுமோ என்னில் –
இந்த சரீரத்தில் வர்த்திக்கிற இந்த பிரத்யகாத்மாவுக்கு இந்த சரீர கத தோஷங்களினால் அசம்ஸ்ப்ருஷ்டனாய் இருக்கை யாகிற
இஸ் ஸ்வ பாவம் கூடுமாகில் எம்பெருமானுக்கு இது கூடும் -என்கிறார் –
——————————————————
கூடிவண்டு அறையும் தண்தார்க்
கொண்டல்போல் வண்ணன் றன்னை
மாடுஅலர் பொழில் குருகூர்
வண்சட கோபன் சொன்ன
பாடல்ஓர் ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார்
வீடுஇல போகம் எய்தி
விரும்புவர் அமரர் மொய்த்தே.–3-4-11-
இத்திருவாய் மொழி வல்லார் சர்வ காலமும் பகவத் கைங்கர்யத்தைப் பெற்று -அயர்வறும் அமரர்களுக்குப் பரம போக்யராவர் -என்கிறார் –
—————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply