முந்நீர் ஞாலம் பிரவேசம் –
இப்படி ஸ்வா பாவிகமான சேஷத்வத்துக்கு பிரதிசம்பந்தியான சேஷியினுடைய திவ்ய சவ்ந்தர்யாதிகளை அனுபவிக்கப் ப்ராப்தமாய் இருக்க
அது ஸித்தியாது ஒழிகிறது தத் விரோதியான சரீர சம்பந்தாதிகள் அடியாக என்று அனுசந்தித்து -தந் நிவ்ருத்தியில் அபேக்ஷையாலே
1–அது அவன் தனக்கு விதேயமாம் படியான ஸ்ரஷ்ட்ருத்வத்தையும்
2–ஸ்ருஷ்டமான ஜகத்தை அநந்யார்ஹம் ஆக்கின அபதானத்தையும்
3–ஆஸ்ரித விரோதி நிராசன ஸ்வ பாவத்தையும்
4—ஆஸ்ரித சம்ரக்ஷண அர்த்தமான வ்யாப்தியையும்
5–அனுபவித்து அல்லது நிற்க ஒண்ணாத விலக்ஷண விக்ரஹ யோகத்தையும்
6— ஸமஸ்த சேதனரும் ஸ்வ அதீனராம் படியான பாரம்யத்தையும்
7– வ்யாப்தியிலும் கார்ய காரமான சவ்லப்யத்தையும்
8—அந்த சவ்லப்யம் அடியாக வந்த குண விக்ரஹ உஜ்வல்யத்தையும்
9–ஞான அஞ்ஞான விபாகம் இல்லாத படியான ௭உபகாரகத்வத்தையும்
10—அதுக்கு பிரகாசகமான சகல வேத வேத்யத்வத்தையும் —
அனுசந்தித்துச் சொல்லிக் கூப்பிட்டு -ஸ்வ சந்நிதியாலே ஆர்த்தி சமிப்பித்த ஈஸ்வரனை அபரோக்ஷித்து ப்ரதிஷ்டிதராகிறார்-
———————————————
அவதாரிகை –
சகல ஜகத் ஸ்ரஷ்டாவான நீ ஆச்ரயண அர்த்தமாகத் தந்த சரீரத்தின் வழியே அலமருகிற நான்
தத் ஹேதுக்களைப் போக்கி உன்னை ப்ராப்பிப்பது என்றோ
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –3-2-1-
முந்நீர் ஞாலம் படைத்த எம் முகில் வண்ணனே–மூன்று வகைப்பட்ட நீரையுடைய ஜகாத்தை ஸ்ருஷ்டித்து –
அத்தாலே-ஜல ஸ்தல விபாகம் இல்லாத மேகத்தின் ஸ்வபாவத்தை உடையனாய்க் கொண்டு எனக்கு உபகாரகனானவனே
அந்நாள் நீ தந்த ஆக்கையின் வழி உழல்வேன்-அந்த ஸ்ருஷ்ட்டி காலத்திலே தயமான மநாவாய்க் கொண்டு நீ ஆஸ்ரயண அர்த்தமாகத் தந்த
சரீரத்தினுடைய -பந்தகத்வ-மார்க்கத்திலே போய் -கர்ப்ப நரகாதிகளிலே போய் அலமருகிற நான்
வெந்நாள் நோய் வீய வினைகளை வேர் அறப் பாய்ந்து-ஞானம் பிறந்த பின்பு பரிதாப ஹேதுவான நாளிலே
அஹங்கார அர்த்த காமாதி ரூபமான வியாதிகள் நசிக்கும் படி -தத் ஹேதுவான கர்மங்களை சவாசனமாக கொத்தி எடுத்துப் பொகட்டு
எந்நாள் யான் உன்னை இனி வந்து கூடுவேன் –-அநு கூலிக்கத் தந்த கரணங்களை பிரதி கூலிகைக்கு உறுப்பாக்கின நான் –
பிரதம உபகாரகனான உன்னை இப்படி க்ருதக்நனான பின்பு -இந்நிலையை விட்டு வந்து கூடுவது எந்நாளாய் இருக்கிறது –
நாள் அறுதியிடிலும் தரிக்கலாம் இ றே என்று கருத்து –
————————————-
அவதாரிகை –
அநந்தரம் அர்த்தியாய் வந்து ஜகத்தை அநந்யார்ஹம் ஆக்கின உன் ஸ்லாக்யமான திருவடிகளைச் சேருவது என்றோ – என்கிறார் –
வன் மா வையம் அளந்த எம் வாமனா நின்
பன் மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –3-2-2–
வன் மா வையம் அளந்த எம் வாமனா -காடின்யத்தாலே சிக்கென்ற பெரிய ப்ருதிவியை ஸூ குமாரமான திருவடிகளாலே அளந்து
அத்தாலே என்னை அநந்யார்ஹம் ஆக்கின வாமனனே
நின் பன் -உனக்கு லீலோ உபகரணமாய் –குண பேதத்தாலும் கார்ய பேதத்தாலும் பலவகையாய் –
மா மாயப் பல் பிறவியில் படிகின்ற யான்–துரத்யையான மாயையாகிய ப்ரக்ருதி அடியான தேவாதி பஹு வித ஜன்மத்திலே பொருந்தி வர்த்திக்கிற நான்
தொன் மா வல்வினைத் தொடர்களை முதல் அரிந்து-அநாதியாய் அபரிச்சேதயமாய் விடுவிக்க அரிதான பாபங்களினுடைய அனுபந்தங்களை ச மூலமாக அறுத்து
நின் மா தாள் சேர்ந்து நிற்பது எஞ்ஞான்று கொலோ –ப்ராப்தனான உன்னுடைய பெறுதற்கு அரிய பெருமையை யுடைத்தான திருவடிகளை சேர்ந்து–
கதாகதம் -பண்ணாதே நிற்பது எக்காலமாய் இருக்கிறதோ –
—————————————————-
அவதாரிகை –
அநந்தரம் ஆஸ்ரித விரோதி நிரசன சீலனான உன்னை நான் கிட்டுகைக்கு ஒரு விரகு அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –
கொல்லா மாக்கோல் கொலை செய்து பாரதப் போர்
யெல்லாச் சேனையும் இரு நிலத்து அவித்த எந்தாய்
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –3-2-3-
கொல்லா மாக்கோல் கொலை செய்து -கொல்லுகைக்குக் கருவி யன்றியே -குதிரையை நடத்துவதான முட் கோல் கருவியாக
மயை வைதே நிஹதா -என்று சங்கல்ப மாத்ரத்தாலே கொலையை செய்து
பாரதப் போர் யெல்லாச் சேனையும் –பாரத யுத்தத்திலே சத்ரு சேனையோடு பாண்டவ சேனையோடு வாசியற பூ பாரமான ஸமஸ்த சேனையையும் –
இரு நிலத்து அவித்த எந்தாய்–தர்ம க்ஷேத்ரமான பெரிய பூமியிலே நசிப்பித்த என்னுடைய ஸ்வாமியே
பொல்லா வாக்கையின் புணர்வினை யறுக்கலறா-அநர்த்த ஹேதுவான சரீரத்தோடு உண்டான சம்பந்தத்தை அறுக்க உத்யோகித்தாலும் என்னால் அறுக்கலாம் படி அல்ல –
சொல்லாய் யான் உன்னைச் சார்வதோர் சூழ்ச்சியே –இதிலே அகப்பட்ட நான் விரோதியை அழித்துக் கொடுக்க வல்ல உன்னை
கிட்டலாம்படி அத்விதீயமாய் இருபத்தொரு நல் விரகு -அர்ஜுனனுக்கு சொன்னால் போலே சொல்ல வேணும் –
——————————————————————
அவதாரிகை
அநந்தரம் -ரக்ஷண அர்த்தமான வ்யாப்தியை யுடைய உன் திருவடிகளை நான் கிட்டும் பிரகாரம்
என்முன்னே வந்து முகம் தோன்ற நின்று அருளிச் செய்ய வேணும் -என்கிறார் –
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –3-2-4-
சூழ்ச்சி ஞானச் சுடர் ஒளியாகி என்றும்-எல்லாவற்றையும் சூழ்ந்து இருக்கிற ஞான பிரபையை யுடைத்தான ஸ்வயம் பிரகாச ஸ்வரூபனாய் -சர்வ காலத்திலும்
ஏழ்ச்சிக் கேடு இன்றி எங்கணும் நிறைந்த வெந்தாய்–விகாசமும் சங்கோசமும் இன்றிக்கே சர்வ பிரதேசத்திலும் பரிபூர்ணமாக வியாபித்து
ஊரை வளைத்து ஒருவனைப் பிடிக்குமா போலே என்னை அங்கீ கரித்த ஸ்வாமியே
தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து நின் தாளிணைக் கீழ்-உன்னை ஒழிந்த ஸமஸ்த விஷயங்களிலும் கால் தாழ்கை தவிர்ந்து
ப்ராப்தனான உன்னுடைய போக்யமான திருவடிகள் இரண்டின் கீழே பரதந்த்ரனாய் வாழும் வாழ்க்கையை
வாழ்ச்சி யான் சேரும் வகையருளாய் வந்தே –இதுக்கு முன் அன்வயித்து அறியாத நான் பிராபிக்கும் பிரகாரத்தை –
அவதார முகத்தாலே என் முன்னே வந்து நின்று அருளிச் செய்ய வேணும்
வ்யாப்தமான ஸ்வரூபத்தால் போராது என்று கருத்து –
———————————————–
அவதாரிகை –
அநந்தரம் விலக்ஷண விக்ரஹ யுக்தனான நீ வந்து என் நெஞ்சை தரிப்பியாகில் உன் அழகை நான் இழக்கும் அத்தனை இறே என்கிறார்
வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–3-2-5-
வந்தாய் போலே வந்து மென் மனத்தினை நீ–ப்ரஹ்லாத கஜேந்த்ரர்களுக்கு வந்தால் போலே -ஒரு ப்ராதுர்பாவம் பண்ணி வந்தாகிலும்
உன்னைக் கிட்ட ஆசைப்பட்ட என்னுடைய நெஞ்சை ஆபத்தில் உதவின நீ
சிந்தாமல் செய்யா யிதுவே யிதுவாகில்-விரோத் யநுசந்தானத்தாலே சிதிலமாகாத படி பண்ணுகிறிலை-
உதவாமையாகிற இதுவே ஸ்வ பாவம் என்னும் இதுவாய் நடக்குமாகில்
கொந்தார் காயாவின் கொழு மலர்த் திரு நிறத்த-கொத்துக்களாலே நிறைந்த காயாவினுடைய செவ்விப் பூவின் நிறத்தை யுடையனாய் –
எந்தாய் யானுன்னை எங்கு வந்து அணுகிற்பனே–அவ் வழகைக் காட்டி என்னை அடிமை கண்ட ஸ்வாமியே -உன் அழகு ஒழியச் செல்லாத நான்
இவ் வழகைக் காட்டின உன்னை எங்கே வந்து கிட்ட வல்லேனாவது –
——————————————————————
அவதாரிகை –
அநந்தரம் -அநாதிகாலம் விஷய ப்ரவணனாய் அகன்ற நான் எல்லாவற்றையும் நினைத்த படி செய்யவல்ல
நிரவதிக சக்தி யுக்தனான உன்னைக் கிட்டுவது என்று -என்கிறார்
கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா நின்
நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –3-2-6-
கிற்பன் கில்லேன் என்றிலன் முன நாளால்-முற்காலம் எல்லாம் -குர்யாத் என்று -நன்மை செய்ய அடுக்கும் என்றால் வல்லேன் என்று இசைந்திலேன்
ந குர்யாத் -என்று தீமை செய்யலாகாது என்றால் மாட்டேன் என்று தவிர்ந்திலன்
இப்படி விதி நிஷேதங்களுக்கு அவிஷய பூதனாய்க் கொண்டு
அற்ப சாரங்கள் அவை சுவைத்து அகன்று ஒழிந்தேன்-அத்யல்பமான பசையை யுடைத்தான நாநாவித துர்விஷயங்களை –
பசையுண்டாக பிரமித்து எதிர்ப்பசை கொடுத்து புஜித்து அடியாக தூரஸ்தனாய் விட்டேன்
பற்பல்லாயிரம் உயிர் செய்த பரமா —நாநா விதமாய் அஸந்க்யாதமான பிராணி ஜாதங்களை நினைத்தபடி உண்டாக்க வல்ல சக்தி பாரம்யத்தை யுடையவனே
நின் நற் பொற் சோதித் தாள் நணுகுவது எஞ்ஞான்றே –வகுத்த ஸ்வாமியான உன்னுடைய அப்ராக்ருதமாய் அதி ரமணீயமாய்
தேஜோ மயமான திருவடிகளைக் கிட்டுவது எக்காலம்
சக்திமானான நீ கிட்டுவிக்குமது ஒழிய என்னைப் பார்த்தால் கிட்ட விரகு இல்லை என்று கருத்து –
——————————————————–
அவதாரிகை –
அநந்தரம் -வியாப்தனானவன் ஸூலபனானான் என்றால் பிராப்தி சாதனம் இல்லாதார் புக்குக் கிட்டப் போமோ -என்கிறார்-
எஞ்ஞான்று நாம் இருந்து இருந்து இரங்கி நெஞ்சே
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –3-2-7-
எஞ்ஞான்று இருந்து இருந்து இரங்கி நெஞ்சே–நெஞ்சே -எப்போதும் இருந்து இருந்து ப்ராப்ய ஆகாங்ஷையாலே துக்கித்து
மெய்ஞ்ஞானம் இன்றி வினையியல் பிறப்பு அழுந்தி–தத் சாதனமான தத்வ ஞானம் இன்றியே -தத் விரோதியான பாபத்தாலே ப்ரவ்ருத்தமான ஜன்மங்களிலே அழுந்தி
நாம் -இதுவே யாத்ரையான நாம்
எஞ்ஞான்றும் எங்கும் ஒழிவற நிறைந்து நின்ற-என்றும் ஓக்க எல்லா வஸ்துக்களிலும் ஒன்றும் சோராத படி பரிபூர்ணமாக வியாபித்து நின்ற
மெய்ஞ்ஞானச் சோதிக் கண்ணனை மேவுதுமே –நித்ய ஞானமான தேஜஸ்ஸை யுடையனாய்
ஆஸ்ரித சவ்லப்ய அர்த்தமாக வந்து அவதரித்த கிருஷ்ணனை எக்காலம் கூடக் கடவோம்-
—————————————————————-
அவதாரிகை –
அநந்தரம் -சவ்லப்ய காரிதமான குண விக்ரஹ உஜ்வல்யத்தை அனுசந்தித்து நிஸ் சாதனான நான் எங்கே காணக் கூப்பிடுவது -என்கிறார் –
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –3-2-8-
மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்–அவிநா பூத துக்கத்தை யுடைத்தான பாபங்களை தந் நிவர்த்தகமான
தபோ ஞான சமாதிகளாலே போக்குவதும் செய்திலேன்
ஓவுதல் இன்றி யுன் கழல் வணங்கிற்றிலேன்-நிரந்தரமாக ப்ராப்தனான உன் திருவடிகளை -வணக்குடைத் தவ நெறியால் வணங்குவதும் செய்திலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா வென் பரஞ்சுடரே–எங்கும் ஓக்கப் பரம்பி-ஸ்வா பாவிகமான ரக்ஷணை காந்த குணங்களை யுடைய கிருஷ்ணனாய்
எனக்கு ஆசா ஜனகமான நிரவாதிக தேஜோ ரூபனானவனே
கூவிகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே –-காண வேணும் என்று சாதனா அனுஷ்டானம் பண்ணி
இழந்தார் கூப்பிடுமா போலே அழைத்துக் கூப்பிடா நின்றேன் -எங்கே கிட்டுவதாக கூப்பிடுவேன் –
——————————————————–
அவதாரிகை
அநந்தரம் அறிவில்லாதாரோடு அறிவுடையாரோடு வாசியறும் படி அபகரித்த உபகாரத்துக்குத் தப்பின நான் கிட்டுவது எங்கே -என்கிறார்
கூவிக் கூவிக் கொடு வினைத் தூற்றுள் நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்
தாவிய வம்மானை எங்கினித் தலைப் பெய்வனே –3-2-9-
கொடு வினைத் தூற்றுள் நின்று-குரூரமான பாபங்களுக்கு ஆகரமாய்-புக்கால் புறப்பட ஒண்ணாத சம்சாரமாகிற தூற்றிலே அகப்பட்டு நின்று
பாவியேன் பல காலம் வழி திகைத்து அலமர்கின்றேன்-அநேக காலம் புறப்பட வழி அறியாதே பிரமித்து அதுக்குள்ளே அலமரா நிற்கிற மஹா பாபியான நான்
மேவி அன்று ஆ நிரை காத்தவன் உலகம் எல்லாம்-கோப வ்ருத்தர்கள் பசு மேய்க்கக் கோலைக் கொடுத்த அன்று –
காரியப்பாடாக இன்றியே நெஞ்சு பொருந்தி பசுக்களை ரஷித்தவனாய்-இப்படி ப்ராதேசிகம் இன்றியே சர்வ லோக விஷயமான
தாவிய வம்மானை – கூவிக் கூவிக்- எங்கினித் தலைப் பெய்வனே –த்ரைவிக்ரம அபதானத்தை யுடைய சர்வ ஸ்வாமியை அன்றைக்கு தப்பின பின்பு
ஆர்த்தியாலே பலகாலும் கூப்பிட்டுக் க்ளூப்பிட்டு எங்கே கிட்டுவேன்-
————————————————-
அவதாரிகை –
அநந்தரம் -எங்கு இனித் தலைப் பெய்வன் -என்கிற நைராஸ்யத்தைக் கண்ட கிருஷ்ணன் தான் பிற்பாடர்க்கு உதவும்படி
பிராமண ஸித்தமான ஆசத்தியை பிரகாசிப்பிக்க அத்தாலே கிலேச நிவ்ருத்த பிறந்து ஸந்துஷ்டாராகிறார் –
தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–3-2-10-
தலைப்பெய் காலம் நமன் தமர் பாசம் விட்டால்–நமன் தமர் தலைப் படும் காலம் பாசத்தை வீசினால்
அலைப்பூண் உண்ணும் அவ் வல்லல் எல்லாம்-அவர்களால் அலைக்கப் படுகையை அனுபவிக்குமா போலே அந்த துக்கம் எல்லாம் விட்டுப் போம்படியாக
அகலக் கலைப்பல் ஞானத்து என் கண்ணனைக் கண்டுகொண்டு-பலவகைப்பட்ட வேதங்களாலே அறியப்பட்டு எனக்கு ஸூலபனான கிருஷ்ணனை கண்டு கொண்டு
நிலைப்பெற்று என்னெஞ்சம் பெற்றது நீடுஉயிரே.–சிதிலமான என் நெஞ்சு ஸ்தைர்யத்தைப் பெற்று ஆர்த்தியாலே முடியப் புக்க ஆத்மாவும் நித்யதையை பெற்றது –
———————————————-
வதாரிகை –
அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக தாம் அபேக்ஷித்த சரீர சம்பந்த நிவ்ருத்தியை அருளிச் செய்கிறார் –
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–3-2-11-
உயிர்கள் எல்லா உலகமும் உடையவனைக்–எல்லா உயிர்களையும் எல்லா லோகங்களையும் உடையவனை
குயில்கொள் சோலைத் தென்குருகூர்ச் சடகோபன்-குயில்களே யுடைத்தான சோலைகளை யுடைய அழகிய திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார் அருளிச் செய்த
செயிர்இல்சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தும்-லக்ஷணக் குறை அற்ற சொல்லை யுடைத்தாய் இசையோடும் கூடின தொடையை யுடைத்தான ஆயிரத்தில் இப்பத்தும்
உயிரின்மேல் ஆக்கை ஊனிடை ஒழிவிக்குமே.–ஆத்மாவுக்கு வந்தேறியாய் பந்தகமான மாம்ஸாதி மய சரீரத்தினிடை நின்றும் கழியும்படி பண்ணும் –
செயிர் -குற்றம்
இது கலிவிருத்தம்
—————————————————————-
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply