பிரவேசம் –
கீழ் இரண்டு பத்தாலும் –
ப்ராப்யமான ப்ரஹ்ம ஸ்வரூபத்தினுடைய சேஷித்வ ஸித்தமான-ரக்ஷகத்வ போக்யத்வங்கள் சொல்லிற்றாய்
அநந்தரம்-முன்றாம் பத்தாலும் நாலாம் பத்தாலும்
ப்ராப்தாவான ப்ரத்யகாத்ம ஸ்வரூபத்தினுடைய பகவத் ஏக சேஷத்வ ஸித்தமான தத் ஏக அநு பவத்வமும்-
தத் ஏக ப்ரியத்வமும்-சொல்லுகிறது –
அதில் தத் ஏக அனுபவத்வ பரமான இம்மூன்றாம் பத்தில் –
1-பகவச் சேஷித்வ பாரம்ய ஸித்தமான ஆத்ம சேஷத்வத்தினுடைய ஸ்வாபாவிகத்வத்தையும்
2-அதுக்கு விரோதியான தேஹ சம்பந்தாதி நிவர்த்த நீயம் என்னும் இடத்தையும்
3-நிவ்ருத்த விரோதிகனுக்கு சேஷ வ்ருத்தி பிரகாரம் பரார்த்த நீயம் என்னும் இடத்தையும்
4-சேஷியினுடைய சர்வாத்ம பாவ ப்ரயுக்தமான சேதனனுடைய அப்ருதக் சித்த பிரகாரத்வம் -சேஷத்வ வேஷம் என்னும் இடத்தையும்
5-ஏவம் வித சேஷத்வ ரசத்தால் வந்த ப்ரேம விகாரத்தையும்
6-சேஷத்வ பிரதிசம்பந்தி அர்ச்சாவதார பர்யந்தம் என்னும் இடத்தையும்
7-தச் சேஷத்வாபி வ்ருத்தி ரூபமான ததீய சேஷத்வ காஷ்டயையும்
8-ததீயா பாரதந்தர்ய நிதானமான தத் அனுபவ அபி நிவேசத்தையும்
9-அனுபவ விசேஷமான வாசிக்க அனுபவ வை லக்ஷண்யத்தையும்
10-சர்வ பிரகார அனுபவ ஸித்தமான ஸமஸ்த விருத்தி நிவ்ருத்தியையும்
அருளிச் செய்து -இச் சேதனனுடைய பகவத் ஏக அனுபவத்தை ப்ரதிபாதிக்கிறார் –
தில் முதல் திருவாய் மொழியில்
சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்துக்கு மூலமான சேஷியினுடைய சர்வ பிரகார பாரம்யத்தை ப்ரதிபாதிப்பதாக
தெற்குத் திருமலையில் கைங்கர்ய பிரதிசம்பந்தி தயா சந்நிஹிதரான அழகருடைய திவ்ய சவ்ந் த்ர்யத்தை அபரோக்ஷித்து
1-ஆபரண அவயவ சோபையினுடைய ஸூ கடிதத்வத்தையும் –
2-உஜ்ஜ்வலமான சவ்ந்தர்யத்தினுடைய உபமான ராஹித்யத்தையும்
3-சர்வ பிரகார உஜ்வல்யத்தால் உண்டான ஸர்வேஸ்வரத்வத்தையும்
4-அந்த பாரம்யத்தினுடைய போக்யதாதிசயத்தையும்
5-இந்த வை லக்ஷண்யத்தினுடைய வாசா மகோசர மாஹாத்ம்யத்தையும்
6-ஸமஸ்த வேதங்களாலும் சாகல்ய யுக்தி பண்ண ஒண்ணாமையும்
7-அதிசயித ஞானரான ப்ரஹ்ம ருத்ராதி தேவதா வர்க்கமும் சொல்ல நினைத்தாலும் அவ் உஜ்வல்யத்துக்கு மாலிந்யாவஹம் என்னும் இடத்தையும்
8-அபூர்வனாய் அதிசயித ஞானனாய் இருப்பான் ஒரு ப்ரஹ்மா தலைப் படிலும் அதேஜஸ் கரம் என்னும் இடத்தையும்
9-ஆச்ரித வாத்சல்ய அதிசயத்துக்கு சங்கல்ப முகத்தாலே பண்ணும் ஸம்ஸ்ரித ரக்ஷண பாராம்யமும் திரஸ்கார கரம் என்னும் இடத்தையும்
10ஏவம் விதமான பாரம்யத்தை அறிந்து ஈஸ்வர அபிமானிகளும் ஆஸ்ரயிக்கை ஏற்றம் அல்ல என்னும் இடத்தையும்
அருளிச் செய்து பரம சேஷியான ஈஸ்வரன் சந்நிதியில் தச் சேஷத்வத்தினுடைய ஸ்வா பாவிகத்வத்தையும் உபபாதித்து அருளுகிறார் –
—————————————
அவதாரிகை –
அழகருடைய திவ்ய அவயவங்களுக்கும் திரு அணிகலன்களுக்கும் உண்டான ஸூ கடிதத்வத்தைக் கண்டு விஸ்மிதராகிறார்
முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்
கடிச்சோதி கலந்ததுவோ திருமாலே கட்டுரையே –3-1-1-
முடிச் சோதி யாயுனது முகச் சோதி மலர்ந்ததுவோ
உன்னுடைய திருமுகத்தின் ஒளி முடிச் சோதியாய் விகசிதமாயிற்றோ
அடிச்சோதி நீ நின்ற தாமரையாய் யலர்ந்ததுவோ
திருவடிகளின் அழகு ஆசன பத்மமாய்க் கண்டு விகசிதமாயிற்றோ
படிச்சோதி ஆடையொடும் பல்கலனாய் நின் பைம்பொன்-கடிச்சோதி கலந்ததுவோ –
உன்னுடைய கடி பிரதேசத்தின் விலக்ஷணமான ஒளி ஸ்வா பாவிகமான அழகை யுடைத்தான திருப் பீதாம்பரமாயும்-
மற்றும் உள்ள திரு அணிகலன்களாயும் திருமேனியிலே கலந்ததோ
திருமாலே கட்டுரையே –
பிராட்டியும் நீயும் கூட எனக்கு அருளிச் செய்ய வேணும் –
————————————————
அவதாரிகை
அநந்தரம்-யுக்தமான வடிவழகினுடைய உபமான ராஹித்யத்தை அருளிச் செய்கிறார்
கட்டுரைக்கில் தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஒட்டுரைத்து இவ்வுலகு உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்
பட்டுரையாய்ப் புற்கென்றே காட்டுமால் பரஞ்சோதி –3-1-2-
பரஞ்சோதி –பரஞ்சோதி யானவனே
கட்டுரைக்கில் -நிர்ணயித்துச் சொல்லில்
தாமரை நின் கண் பாதம் கை யொவ்வா–தாமரையானது உன்னுடைய திருகே கண்கள் திருவடிகள் திருக் கைகளை ஒவ்வா–
சுட்டுரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது
ஓடவைத்து ஒப்பமிட்ட நல்ல பொன்னானது உன்னுடைய அப்ராக்ருதமான திருமேனியின் சமுதாய சோபையை ஒவ்வாது
ஆகையாலே
ஒட்டுரைத்து இவ்வுலகு -இந்த லோகம் உவமைச் செறிவை சொல்லி
உன்னைப் புகழ்வெல்லாம் பெரும்பாலும்-உன்னைப் புகழுமது எல்லாம் ப்ராயேண –
பட்டுரையாய்ப்-தோற்றிற்றுச் சொல்லிற்றாய்
தார்ஷ்டாந்திகமான வாக்கியத்தை
புற்கென்றே காட்டுமால் -புல்லியதாகவே காட்டா நிற்கும்
புற்கு -புன்மை / ஒட்டு -உவமைச் செறிவு /
தாமரையும் பொன்னும் ஓவ்வாமை -ஆகந்துக வைலக்ஷண்ய யுக்தமானவை ஸ்வபாவதோ வி லக்ஷண வஸ்துவுக்கு தகுதி இல்லாமையாலே
பெரும்பாலும் -மிகவும் -என்றுமாம் –
——————————————-
அவதாரிகை –
அநந்தரம் சர்வ பிரகார உஜ்வல்ய அதிசயத்தை யுடைய உன் ஸ்வபாவம் எனக்குச் சொல்ல முடியாது -என்கிறார் –
பரஞ்சோதி நீ பரமாய் நின்னிகழ்ந்து பின் மற்றோர்
பரஞ்சோதி யின்மையில் படியோவி நிழல்கின்ற
பரஞ்சோதி நின்னுள்ளே படருலகம் படைத்த எம்
பரஞ்சோதி கோவிந்தா பண்புரைக்க மாட்டேனே –3-1-3-
பரமாய் -சர்வ ஸ்மாத் பரனாய்க் கொண்டு
பரஞ்சோதி நீ நின்னிகழ்ந்து -நிரதிசய தேஜோ ரூபன் -நீ -உன்னை ஒழிந்து
பின் மற்றோர்-பரஞ்சோதி யின்மையில் –வேறு ஒரு பாரமாய் இருப்பதரு உஜ்வல்ய வஸ்து இல்லாமையாலே
படியோவி நிழல்கின்ற-உபமானம் இல்லாதபடி வர்த்தியா நிற்கிற
பரஞ்சோதி நின்னுள்ளே -பரஞ்சோதி சப்த வாச்யனான உன் சங௭கல்பத்துக்குள்ளே
படருலகம் படைத்த -விஸ்தீர்ணமான கத்தை ஸ்ருஷ்டித்து
எம் பரஞ்சோதி -ஸ்ருஷ்டமான லோகத்தினுடைய ஸ்வ பாவம் உனக்குத் தட்டாதபடி நிற்கிற நிரதிசய உஜ்வல்யத்தை எனக்கு பிரகாசிப்பித்தவனாய்
கோவிந்தா -அந்தப் பரத்வத்திலும் காட்டிலும் கோபால நாதி சீல உஜ்வல்யத்தை யுடையவனே
பண்புரைக்க மாட்டேனே –1-உன்னுடைய விலக்ஷண விக்ரஹ பாரம்யத்தாலும் -2–உபமான ராஹித்யத்ய அதிசயத்தாலும் –
-3-ஜகத் காரணத்வ பாரம்யத்தாலும் -4-சீலாதி அதிசயத்தாலும் உன்னுடைய உஜ்வல்ய ஸ்வபாவத்தை பாசுரமிட்டு சொல்ல சக்தன் அல்லேன்-
—————————————–
அவதாரிகை
இந்த வைலக்ஷண்யத்தினுடைய போக்யத்தையிலே நீ அந்நிய பரனானால் அறிவில்லாத ஜகத்து க்லேசியாதோ என்கிறார் –
மாட்டாதே யாகிலும் மலர்தலை மா ஞாலம் நின்
மாட்டாய மலர்புரையும் திருவுருவம் மனம் வைக்க
மாட்டாதே பல சமய மதி கொடுத்தாய் மலர்த்துழாய்
மாட்டே நீ மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –3-1-4-
மாட்டாதே யாகிலும்
மலர்–திரு நாபீ கமலத்தை
தலை –தனக்குத் தலையாக யுடைய
இ மா ஞாலம் நின்-இந்த பெரிய ஜகத்தானது ப்ராப்தனான உன்னுடைய
மாட்டாய -ஸ்வரூபத்திலேயாய்
மலர்புரையும் திருவுருவம் -புஷ்பம் போலே ஸூ குமாரமான திருமேனியாய்
மனம் வைக்க-நெஞ்சிலே வைக்கைக்கு
மாட்டாதே -யாகிலும் — அநாதியாக மாட்டாதே இருக்கச் செய்தேயும்
மாட்டாத -விக்ரஹ அனுசந்தானத்துக்கு யோக்யம் அல்லாத
பல சமய மதி கொடுத்தாய் -பல சமய ஞானங்களை கடுத்தாய்
நீ மலர்த்துழாய்-மாட்டே -நீ தான் விகசிதமான திருத் துழாயினிடத்தில்
மனம் வைத்தாய் மா ஞாலம் வருந்தாதே –நெஞ்சை வைத்து போக ப்ரசக்தனானால் இந்த மஹா லோகம் அந்நிய பரமாய் க்லேசியாதோ
க்லேசித்தே விடும் என்று கருத்து
மாடு -இடம் /மலர்தலை -மலர் மேல் என்றுமாம் –
———————————————
அவதாரிகை –
அநந்தரம் -ஏவம் வித வை லக்ஷண்ய யுக்தனான உன் குணங்களை எங்கனே முடியச் சொல்லுவேன் -என்கிறார்
வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் உலகை
ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -3-1-5-
வருந்தாதே வருந்தவத்த மலர்கதிரின் சுடருடம்பாய்–யத்ன ஸாத்யம் அன்றியிலே-பெறுதற்கு அறிய தபஸ்ஸினுடைய பலம் என்னலாம் படி
விகசிதமான பிரபையை யுடைத்தான தேஜஸ் தத்துவத்தை வடிவாக உடையவனாய்
வருந்தாத ஞானமாய் வரம்பின்றி முழுதியன்றாய்-யத்ன சித்தம் அன்றியே ஸ்வா பாவிகமான ஞானத்தை உடையையாய்க் கொண்டு
பரிச்சேதம் இல்லாத படி சர்வ பதார்த்தத்திலும் வர்த்திப்பானாய்
வரும் காலம் நிகழ்காலம் கழிகாலமாய் — கால த்ரயத்திலும் ஸந்நிஹிதனாய்
உலகை-ஒருங்காக வளிப்பாய் சீரெங்குலக்க வோதுவனே -லோகத்தை ஒருபடிப்பட ரக்ஷிக்குமவனே –1-உன்னுடைய ஸ்வரூப உஜ்வல்யத்தாலும் —
2-ஞான உஜ்வல்யத்தாலும் –3-வ்யாப்தியாலும் -4-ரஷணத்தாலும்-உள்ள குணங்களை
எங்கே முடிய சொல்லுவேன் -முடியச் சொல்ல முடியாது என்று கருத்து /-உலக்க — முடிய –
——————————————————-
அவதாரிகை
அநந்தரம் சர்வ வேதங்களும் கூடிச் சொல்லப் புக்காலும் முழுக்கச் சொல்ல ஒண்ணாத உன்னை என்ன பாசுரமிட்டுச் சொல்லுவேன் -என்கிறார்-
ஓதுவார் ஒத்து எல்லாம் எவ்வுலகத்து எவ்வெவையும்
சாதுவாய் நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் பூவின் மேல்
மாது வாழ் மார்பினாய் என் சொல்லி நான் வாழ்த்துவனே -3-1-6-
ஓதுவார் ஒத்து எல்லாம் –நியதி சாகரான அதிகாரிகளுக்கு சத்யேதவ்யமாய் -ருக் யஜுஸ் சமாதி பேதத்தை உடைத்தான வேதங்கள் எல்லாம்
எவ்வுலகத்து எவ்வெவையும்–எல்லா லோகங்களிலும் யுண்டான சாகா பேதங்கள் எல்லாவற்றையும் யுடைத்தாய்
சாதுவாய் -யாதாவதர்த்த போதகத்வம் ஆகிற நன்மையை யுடைத்ததாய்க் கொண்டு
நின் புகழின் தகையல்லால் பிறிதில்லை-உனது குண கணங்களினுடைய பிரகார அன்வய மாத்திரத்திலே பர்யவசிக்கும் அது ஒழிய –
முழுக்கச் செல்லுதல் புறம்பு போதல் செய்கை இல்லை
போது வாழ் புனந்துழாய் முடியினாய் –பூவை யுடைத்தான தன்னிலத்தில் செவ்வித் துழாயாலே அலங்க்ருதமான திரு அபிஷேகத்தை யுடையையாய்
பூவின் மேல் மாது வாழ் மார்பினாய்- அவ் ஒப்பனை அழகை அனுபவிக்கைக்கு -தாமரை பித்த மேலே நித்ய வாசம் பண்ணுகிற
ஸ்ரீ லஷ்மீயானவள் அத்தை விட்டு உக்காந்து நித்ய வாசம் பண்ணுகிற திரு மார்பையுடையவனே
என் சொல்லி நான் வாழ்த்துவனே -போக்யதைக்கு பாசுரமிட்டுச் சொல்வேனோ -பிரணயித்தவத்துக்கு பாசுரமிட்டுச் சொல்வேனோ
எத்தைச் சொல்லி யான் வாழ்த்துவது –
சாதுவாய் -நன்றாக / தகை -பிரகாரம் /
—————————————
அவதாரிகை –
அதிசயித ஞானரான ருத்ராதிகள் எல்லாம் திரண்டு பிரயோஜகத்திலே சொல்லப் பார்த்தாலும்
உன்னுடைய ஸ்வா பாவிக குணங்களுக்கு மாலிந்யாவஹம்-என்கிறார்
வாழ்த்துவார் பலராக நின்னுள்ளே நான்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் படை என்று முதல் படைத்தாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –3-1-7-
ஸ்தவப் பிரியனாகையாலே
வாழ்த்துவார் பலராக -உன்னை வாழ்த்துவார் பலர் உண்டாகைக்காக
நின்னுள்ளே நான்முகனை-உனது சங்கல்ப ஸ்வரூபத்துக்கு உள்ளே சதுர்முகனை
மூழ்த்த நீருல்லெல்லாம் –காரண ஜலமான ஏகார்ணவத்துக்குள்ளே ஸமஸ்த லோகத்தையும்
படை என்று முதல் படைத்தாய்-ஸ்ருஷ்ட்டி என்று பிரதமனாக படைத்தவனே
அவனாலே ஸ்ருஷ்டமாய்
கேழ்த்த சீரரன் முதலாக் கிளர் தெய்வமாய்க் கிளர்ந்து–கெழுமின ஞானாதி குணங்களை யுடைய ருத்ரன் முதலாக
கிளர்ந்த திவ்ய சக்தி உக்தராய்க் கொண்டு நித்யத்வ விசிஷ்டரான தேவர்கள் யாவதாயுஷம் உத்யுக்தராய்
சூழ்த்தமரர் துதித்தால் உன் தொல் புகழ் மாசூணாதே –ப்ரயோஜகங்களாலே குணங்களை வளைத்து ஸ்தோத்ரம் பண்ணினால்
உன்னுடைய ஸ்வா பாவிகமான குண உஜ்வல்யம் மாசு ஏறாதோ-
மூழ்த்த -நிரம்பின / கேழ்த்த-செறிந்த
————————————-
அவதாரிகை –
அநந்தரம் -அதிசயித ஞானனாய்க் கொண்டு ஒரு ப்ரஹ்மா திருந்தி அவன்
ஸ்துத்யாதி களிலே தலைப் பட்டாலும் உன் உஜ்வல்யம் மழுங்காதோ -என்கிறார் –
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது
மாசூணா ஞானமாய் முழுதுமாய் முழுதியன்றாய்
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–3-1-8-
மாசூணாச் சுடருடம்பாய் மலராது குவியாது–அவத்ய ஸ்பர்ஸம் இன்றியிலே தேஜோ ரூபமாய் -வடிவை யுடையையாய் -சங்கோச விகாஸ ரஹிதமாய்
மாசூணா ஞானமாய் -சம்சய விபர்யாதி ஹேய கந்த ரஹிதமான ஞானத்தை ஸ்வபாவமாலை உடையையாய்
முழுதுமாய் -ஸமஸ்த குண விபத்திகளையும் பிரகாரமாக உடையையாய்க் கொண்டு
முழுதியன்றாய்-அவை எல்லாம் உன் பக்கலிலே வர்த்திக்கும் படி ஆஸ்ரயமானவனே
மாசூணா வான் கோலத்தமரர் கோன் வழிப்பட்டால்-மாலிந்ய ரஹிதமான விலக்ஷண ஞானாதி பூஷணனாய் யுள்ள
தேவ சேவ்யனான ப்ரஹ்மாவானவன் ஸ்தோத்ர ரூப பரிசர்யையிலே ஒறுப்பட்டால்
மாசூணா வுனபாதம் மலர்ச்சோதி மழுங்காதே–ஹேய பிரதிபடமாய் இருக்கிற உனது திருவடித் தாமரைகளுடைய தேஜஸ்ஸானது மஸ்ருணம் ஆகாதோ –
ஸ்வா பாவிக உஜ்வல்யத்தை யுடைய திருவடிகளுக்கு ஆக்கனான ப்ரஹ்மா கிட்டுகை அதேஜஸ் கரம் என்று கருத்து –
—————————————————-
அவதாரிகை –
அநந்தரம் உன்னுடைய ஆஸ்ரித வாத்சல்ய அதிசயத்துக்கு சங்கல்ப மாத்ரத்தாலே
ஸமாஸ்ரித ரக்ஷணம் பண்ணுகை யாகிற மேன்மை திரஸ்கார ஹேது -என்கிறார் –
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்
தொழும் பாயர்க்கு அளித்தால் உன் சுடர்ச் சோதி மறையாதே –3-1-9-
மழுங்காத வைந் நுதிய சக்கர நல் வலத்தையாய்-மழுங்குதல் இல்லாத கூர்மையை யுடைத்தான -வாயை யுடைய –
திருவாழியை தர்ச நீயமான வலத்திலே யுடையையாய்
தொழும் காதல் களிறு அளிப்பான் புள்ளூர்ந்து தோன்றினையே–பரிசர்யை பண்ணுகையாலே அபி நிவேசத்தை யுடைய
ஆனையை ரஷிக்கைக்காக பெரிய திருவடியை அதி த்வரையோடே நடத்தி அதின் முன்னே வந்து தோன்றினாயே
இப்படி இருக்க
மழுங்காத ஞானமே படையாக மலருலகில்-அமோகமான சங்கல்ப ரூப ஞானமே பரிகாரமாக விகசிதமான லோகத்திலே
தொழும் பாயர்க்கு அளித்தால் –உனக்குத் தொழும்பானார்க்கு உபகரித்தால் –
ஆர்த்த ரக்ஷணம் பண்ணுகைக்கு மடுவின் கரையிலே த்வரித்து வந்தாய் -என்கிற
உன் சுடர்ச் சோதி மறையாதே –உன்னுடைய அதி உஜ்வலமான தேஜஸ்ஸூ திரஸ்க்ருதமாகாதோ –
———————————————
அவதாரிகை –
அநந்தரம் -ஈஸ்வர அபிமானிகளும் உன் சேஷித்வத்தை அறிந்து ஆஸ்ரயிக்கிற இருப்பு ப்ராப்தமாகையால் ஆச்சர்யம் அல்ல -என்கிறார்
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்
இறையாதல் அறிந்து ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே –3-1-10-
மறையாய நால் வேதத்துள் நின்ற மலர்ச் சுடரே–ரஜஸ் தமஸ் பிரசுரர்க்கு ஸ்வ அர்த்தத்தை மறைப்பதாய்
-சத்வ ப்ரக்ருதிகளுக்கு அர்த்த ப்ரகாசகமான ருகாதி சாதுர்வித யத்தை உடைத்தான் வேதங்களுக்கு ஆந்தரமான தாத்பர்யமாய் நின்ற
விகாசத்தை யுடைய ஜ்யோதிஸ் ரூபனாய்
முறையால் இவ்வுலகெல்லாம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்தாய்-பர்யாயம் தோறும் இந்த லோகங்களை எல்லாம்
ஸ்ருஷ்டித்து பிரளயத்தில் புக்கு இடந்து எடுத்து / முறையால் என்று -உடையவனாகையாலே -என்றுமாம்
மஹா பிரளயத்தில் உண்டு உமிழ்ந்து அந்நிய அபிமானம் கழியும்படி அளந்து போந்தவனே
இறையாதல் அறிந்து –-இப்படி வேதைக வேத்யதையாலும் ஜகத் ஸ்ருஷ்டியாதி வ்யாபாரங்களாலும் சேஷியாக உன்னை அறிந்து
பிறையேறு சடையானும் நான்முகனும் இந்த்ரனும்–சந்திரகலா தாரணத்தாலும் -ஜடா தாரணத்தாலும்-பக்க தபஸ்ஸூ க்களிலே தத் பரனான ருத்ரனும்
சர்வதோமுக ஸ்ருஷ்டியாதி சக்தியையுடைய ப்ரஹ்மாவும் -த்ரைலோக்ய ஈஸ்வரனான இந்த்ரனும்
ஏத்த வீற்று இருத்தல் இது வியப்பே-ஸ்துத் யாதி முகத்தாலே ஆஸ்ரயிக்க -ஆஸ்ரயணீயத்வ ஆகாரத்தாலே வ்யாவருத்தனாய் இருக்கிற இந்த இருப்பு ஆச்சர்யமோ –
பிராமண உபபத்தி ஸித்தமான இது பிராப்தம் என்று கருத்து
மலர் -மலர்த்தியாய் -விகாசம் –
———————————————————-
அவதாரிகை –
அநந்தரம் இத்திருவாய் மொழிக்குப் பலமாக சாம்சாரிக ஜென்ம ராஹித்யத்தை அருளிச் செய்கிறார் –
வியப்பாய வியப்பில்லா மெய்ஜ்ஞான வேதியனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -3-1-11-
வியப்பாய -ஏகதேச சம்பந்தத்தாலும் புறம்புள்ள இடத்தில் ஆச்சர்யாவஹமான குண சேஷ்டிதாதிகள்
வியப்பில்லா -ஸ்வ விஷயத்தில் ஆச்சர்யமாகை அன்றிக்கே-தன்னைப் பற்றி அவை தான் மினுங்கும்படியான
மெய்ஜ்ஞான வேதியனை-இந்த யாதாத்ம்ய ஞானத்தை ப்ரதிபாதிக்கிற வேதங்களால் வேத்யனானவனை
சயப்புகழார் பலர் வாழும் தடம் குருகூர் சடகோபன்–சம்சார ஜெயித்தால் வந்த ஞான வைராக்ய பரத்தையை யுடையரானார் பலரும் –
இவருடைய வை லக்ஷண்யத்தை அனுபவித்து வாழ்கிற பேரிடம் யுடைத்தான திரு நகரிக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
துயக்கின்று தொழுதுரைத்த வாயிரத்துள் இப்பத்தும்-சம்சய விபர்யயம் ரூபமான மனந்திரிவு அற்று
யதார்த்த ஞான கார்யமான சேஷ வ்ருத்தியோடே அருளிச் செய்த ஆயிரத்தில் இப்பத்தும்
உயக்கொண்டு பிறப்பு அறுக்கும் ஒலி முந்நீர் ஞாலத்தே -ஞான ப்ரதா நாதிகளாலே உஜ்ஜீவிப்பித்து ஜென்ம சம்பந்தத்தை அறுக்கும்
வியப்பு -ஆச்சர்யம் / துரைக்கு -மனந்திரிவு /
இது நாலடித் தாழிசை / கலிவிருத்தம் என்பாரும் உளர் –
———————————————————–
ஸ்ரீ கந்தாடை அப்பன் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ வடக்கு திருவீதி பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம்பிள்ளை திருவடிகளே சரணம்
ஸ்ரீ நம் ஜீயர் திருவடிகளே சரணம்
ஸ்ரீ திருக் குருகைப் பிரான் பிள்ளான் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்-
Leave a Reply