Archive for January, 2017

ஸ்ரீ திருப்பாவை –வங்கக் கடல் கடைந்த –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 17, 2017

(1-வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை திங்கள் திருமுகத்து சேயிழையார்
சென்று இறைஞ்சி அங்கு அப்பறை கொண்ட வாற்றை —

2-யணி புதுவை பைங்கமலத் தண் தெரியல் பட்டர்பிரான் கோதை சொன்ன

3-சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே இங்கு இப்பரிசு உரைப்பார்

4-ஈரிரண்டு மால் வரைத் தோள் செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்

இப்படி நான்கு பகுதிகள்
பிற்பட்ட காலத்திலே அந்த பாவ விருத்தியோடே
வடபெரும் கோயிலுடையானை அபேக்ஷித்து சமகால ரசமாக நடத்தின ஆண்டாள் –

நம்முடைய பாவ விருத்தி இல்லையேயாகிலும்-
இப் பிரபந்தத்தினுடைய பாட தாரணத்தாலே நாம் பெற்ற பேறு பெறுவார்கள் என்று நிகமிக்கிறாள்-

சம காலத்தில் அனுஷ்ட்டித்தாரோபாதியும்
அனந்தர காலத்தில் அநு கரித்தாளோபாதியும்-
பிற்பட்ட காலத்தில் கற்றார்க்கும் பலிக்கும் என்கை –

திருவாய்ப் பாடியிலே பெண்களுக்கு சம காலம் ஆகையால் சாஷாத்காரம் யுண்டாய்த்து
ஆண்டாள் அநுகார பிரகாரத்தாலே பெற்றாள் –
இவர்களுக்கு யுக்தி மாத்திரமே அமையும் -)

1-காலத்தையும் -அதிகரிக்கிற மனிசரையும் விஷய பூதனாய் நின்று
கார்யம் தலைக் கட்டுகிற -கிருஷ்ணனையும் கொண்டாடிக் கொண்டு
சங்கல்ப பூர்வகமாக நோன்பிலே உத்யோகித்து –

2-நோன்புக்கு அங்கமாகச் செய்ய வேண்டுவனவும் தவிர வேண்டுவனவும் இன்னவென்று
கர்த்தவ்ய அகர்தவ்ய விவேகம் பண்ணி

3-நாம் நமக்கு இனிதாக நோற்க இதுக்கு அனுமதி பண்ணி ப்ரீதராய் இருக்கிற நாட்டாருக்கு
ஆனு ஷங்கிகமாக அபிமத சித்தி யுண்டாம் என்று சொல்லி

4-த்ருஷ்ட பலன்களுக்கு ஹேது வ்ருஷடியாகையாலே வர்ஷார்த்தமாக தேவதையை அழைத்து நியமித்து –
அத்தால் தாங்கள் கொள்ளும் பிரயோஜனமும் சொல்லி –

5-தாங்கள் உபக்ரமிக்கிற நோன்புக்கு பிரதிபந்தகமான துஷ்கர்மம் இதிலே
உபக்ரமிக்கவே வசிக்கும் என்று பூர்ண மநோ ரதைகளாய்ப் புறப்பட்டு

பிராதி கூல்ய நிவ்ருத்தி தொடங்கி
பாகவத சகவாசம் ஒழியச் செல்லாத தன்மை யுடையவரான அளவும் செல்ல
நடுவு பட்டார் அடையக் கூட்டிக் கொள்ள வேண்டுகையாலே –

6-அனுபவ ரசத்தில் அபிநவையாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்பி

7-ரசத்தை அறிந்து வைத்தே இவர்கள் பேச்சில் இனிமையாலே வித்யையாய்
பார வசியத்தாலே காற்க் கடைக் கொண்டு கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்பி

8-எல்லாரும் திரண்டு தன் வாசலிலே வர வேண்டும் படி கிருஷ்ணனால் யுண்டான கொண்டாடத்தாலே
சால வேண்டப்பட்டு உடையாளாய் இருப்பாள் ஒருத்தியை எழுப்பி

9-குண வித்யையாய் கிடக்கச் செய்தேயும் ரசாந்தரங்கள் செல்லலாம் படியான முறையை யுடையாள் ஒருத்தியை எழுப்பி

10-கிருஷ்ண அனுபவத்தில் எப்போதும் இச்சை நடக்கும் படி எல்லாரிலும் அவன் நோக்கு உடையாள் ஒருத்தியை எழுப்பி

11-ஊர் ஒரு தட்டும் தான் ஒரு தட்டுமாம் படியான ஆபி ஜாத்யம் யுடையாள் ஒருத்தியை எழுப்பி

12-கிருஷ்ணனைப் பிரியாமையால் யுண்டான சம்பத்தை யுடையான் ஒருவனோடு சம்பந்தம் யுடையாள் ஒருத்தியை எழுப்பி

13-தன் அவயவ சோபையை அனுசந்தித்துக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்பி

14-தான் எல்லாரையும் எழுப்புவதாக சொல்லி வைத்து ப்ரதிஞ்ஜையைப் பண்ணி மறந்து கலங்கிக் கிடக்கிறாள் ஒருத்தியை எழுப்பி

15-பின்பு எல்லாருடையவும் திரள் காண வேண்டி இருப்பாள் ஒருத்தியை எழுப்பி

16-எல்லாரும் திரண்டு திருவாசல் காக்கும் முதலிய எழுப்பி

17-ஸ்ரீ நந்த கோபர் யசோதை பிராட்டி நம்பி மூத்தபிரான் இவர்களை சொல்லும் க்ரமங்கள் குறையாமல் சொல்லி எழுப்பி

18-19-20-நப்பின்னைப் பிராட்டி யுடைய செருக்கையும்
லீலா ரசங்களையும் –
போக வைபவத்தையும் –
ஸுகுமார்யத்தையும்
ரூப ஸுந்தர்யத்தையும்
பர்த்ரு வால்லப்பயத்தையும்
புருஷகார வைபவத்தையும் சொல்லி எழுப்பி

21-கிருஷ்ணனுடைய ஆபி ஜாத்யாதி குணங்களைச் சொல்லிக் கொண்டு

22-தாங்கள் குண ஜிதைகளாய் வந்த படியையும்
பஃன அபிமானிகளாய் கடாக்ஷ ஏக தாரகைகளாய் வந்த படியையும் அறிவித்து

23-எங்களுக்காகப் புறப்பட்டு ஓர் இருப்பு இருக்க வேணும் என்று

புறப்பட்டு இருந்த அனந்தரம்
24-அவ்விருப்புக்கு மங்களா சாசனம் பண்ணி போந்து

என் என்று அவன் கேட்க
25-உன் பக்கலிலே அர்த்திகளாய் வந்தோம் என்ன –

அபேக்ஷிதம் ஏது என்ன
26-நோன்புக்கு உபகரணங்களை வேண்டிக் கொண்டு –

27-நோற்றால் பெறும் சம்மானங்களையும் அபேக்ஷித்து

28-தங்கள் நினைவில் உள்ளவையும் பலிக்கும் படி
தங்கள் சிறுமையையும்
அவன் பெருமையையும்
அவனோடு உள்ள உறவையும் சொல்லிக் கொண்டு
தப்புகளுக்கு பொறை கொண்டு

29-தங்கள் நினைவையும் இன்னது என்று க்ரமப்பட வெளியிட்டு அபேக்ஷிக்க

அவனும் அப்படியே செய்கிறோம் என்று தலை குலுக்கப் பெற்று
க்ருதார்த்தைகளாய் விட்ட க்ரமத்தை

பிற்பட்ட காலத்திலே அந்த பாவ விருத்தியோடே
வடபெரும் கோயிலுடையானை அபேக்ஷித்து சமகால ரசமாக நடத்தின ஆண்டாள் –

நம்முடைய பாவ விருத்தி இல்லையேயாகிலும்-
இப் பிரபந்தத்தினுடைய பாட தாரணத்தாலே
நாம் பெற்ற பேறு பெறுவார்கள் என்று நிகமிக்கிறாள்-

சம காலத்தில் அனுஷ்ட்டித்தாரோபாதியும்
அனந்தர காலத்தில் அநு கரித்தாளோபாதியும்-
பிற்பட்ட காலத்தில் கற்றார்க்கும் பலிக்கும் என்கை –

கன்று இழந்த தலை நாகு-தோல் கன்றை மடுக்க-அதுக்கு இயங்குமா போலே –
ஸ்நேஹிகள் சொன்ன இப் பாசுரம் கொண்டு புகவே
அது இல்லாத நமக்கும் பலிக்கும் என்று பட்டர்-

ஸ்ரீ கோபிமாருடைய ஆஸ்ரயணீய விஷயம்
கிருஷ்ணனாய் –
அந்த ஆஸ்ரயணம் பல பர்யந்தமாவது
பிராட்டி சம்பந்தத்தாலேயாய்
அவள் தன்னைப் பெறுகைக்கு அவன் வியாபாரித்த வியாபாரம்
அம்ருத மதனம் ஆகையால்
அத்தைச் சொல்லுகிறார்கள் –

(த்வயம் சொல்லி முடித்தார் கீழே
பிராட்டியாலே தானே பேறு
ஆகவே இங்கு அம்ருத மதனம் -மதில் வரும் பெண்ணமுதம் பெற்ற செயல்
ஊர்க்கார்யம் என்ற பெயராய் தனது கார்யம்
அதே போல் இங்கும் கோபிகள் ஊருக்கு மழை என்று
இவர்களையும் தன்னைப் பெற வைத்து அருளுகிறார் அன்றோ )

வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை
திங்கள் திருமுகத்து சேயிழையார் சென்று இறைஞ்சி
அங்கு அப்பறை கொண்ட வாற்றை யணி புதுவை
பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே
இங்கு இப்பரிசு உரைப்பார் ஈரிரண்டு மால் வரைத் தோள்
செங்கண் திரு முகத்து செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்-

பதவுரை

வங்கம் கடல்–கப்பல்களை யுடைய (திருப்பாற்) கடலை
கடைந்த–(தேவர்களுக்காகக்) கடைந்த ஸ்ரீ ய:பதியான
கேசவனை–கண்ண பிரானை
திங்கள் திரு முகத்து சே இழையார்–சந்திரன் போன்ற அழகிய முகத்தையும் செவ்விய ஆபரணங்களையுமுடைய ஆய்ச்சிகள்
சென்று–அடைந்து
இறைஞ்சி–வணங்கி
அங்கு–அத் திருவாய்ப் பாடியில்
பறை கொண்ட ஆ ஆற்றை–(தங்கள்)புருஷார்த்தத்தைப் பெற்ற அந்த விருத்தாந்தத்தை.
அணி புதுவை–அழகிய ஸ்ரீவில்லிபுத்தூரில் (திரு வவதரித்த)
பை கமலம் தண் தெரியல் பட்டர் பிரான்–பசுமை பொருந்திய தாமரை மலர்களினாலான
குளிர்ந்த மாலையை யுடைய பெரியாழ்வாருடைய (திருமகளான)
கோதை–ஆண்டாள்
சொன்ன–அருளிச் செய்த
சங்கம் தமிழ் மாலை முப்பதும்-திரள் திரளாக அநுபவிக்க வேண்டிய தமிழ் மாலையாகிய இம் முப்பது பாசுரங்களையும்
தப்பாமே–தப்பாமல்
இங்கு–இந் நிலத்தில்
இ பரிசு–இவ் வண்ணமே
உரைப்பார்–ஓதுமவர்கள்
ஈர் இரண்டு மால் வரை தோள்–பெரிய மலை போன்ற நான்கு திருத் தோள்களை யுடையவனும்,
செம்கண் திருமுகத்து-சிவந்த திருக் கண்களை யுடைய திரு முகத்தை யுடையவனும்
செல்வம்–ஐஸ்வர்யத்தை யுடையனும்
திருமாலால்–ஸ்ரீ ய:பதியுமான எம்பெருமானாலே
எங்கும்–எவ்விடத்தும்
திருஅருள் பெற்று-(அவனுடைய) க்ருபையைப் பெற்று
இன்புறுவர்-ப்ரஹ்ம ஆனந்த சாலிகளாக
ஏல் ஓர் எம் பாவாய்–.

வங்கக் கடல் கடைந்த
தேவ கார்யம் என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
பெரிய பிராட்டியார் ஆகிற பெண்ணமுதை பெற்று
அப்போது உகப்போடே இருந்தால் போலே
ஊரார் காரியத்தை வியாஜ்யமாக்கி-
பெண்களைப் பெற்ற ஹர்ஷத்தோடே கிருஷ்ணன் இருக்கிற இருப்பைக் கண்டவாறே
அன்யார்த்தமான செயலில் அபிமதம் இவனுக்கு இன்றாக வருகிறதோ என்கிறார்கள் –

வங்கக் கடல் கடைந்த
பாற் கடலைக் கடைந்து பிராட்டியைப் பெற்றால் போலே
இங்குத் தயிர் கடைய என்று ஒரு வியாஜ்யமாய்
கன்னிகைகளை பெறக் கடவனாய் இறே இருப்பது

ஒல்லை நானும் கடைவன் என்று (பெருமாள் திருமொழி )
திரு மஞ்சனம் செய்து திவ்ய மால்யாம்பரதரையாய்
பூஷண பூஷிதையாய்
சகல தேவதைகளும் பார்த்துக் கொண்டு நிற்க
மார்பிலே சென்று அணைந்த போதைச் செவ்வி
(திகழ்கின்ற திருமார்பில் ஏறி அமர்ந்து )

மார்கழி நீராடி
ஆடை யுடுத்து சம்மா நிதைகளாய் –
பல் கலனும் அணிந்து –
பெண்கள் கூடி இருந்த போது பிரகாசிக்கும் படி இருக்கையாலே
அத்தைச் சொல்லுகிறார்கள்

வங்கக் கடல் கடைந்த
விண்ணவர் அமுதுண்ண என்று
ப்ரயோஜனாந்தர பரருக்கும் அகப்பட உடம்பு நோவக் கடல் கடைந்து
அபேக்ஷித சம்விதானம் பண்ணும் படி சீலவானனான கிருஷ்ணன்
அநந்ய பிரயோஜனம் கார்யம் செய்யச் சொல்ல வேணுமோ

அமரர்க்கு அமுதீந்த்த ஆயர் கொழுந்தை (திருவாய் -1-7 )-என்கிற படியே
கிருஷ்ணன் இறே தேவர்களுக்கு அமுதம் இட்டவன் –
ஷீராப்தி நாதன் கடையில் கடல் தான் அம்ருதம் சுரவாதே –
கண்ணன் கையால் மலக்குண்கையாலே இறே சுரந்தது
(பாலைக் கறந்து பழகினவன் அன்றோ இவன்
வங்கக்கடல் -கப்பலாக ஷீராப்தி நாதன் இருக்க கண்ணன் அன்றோ கடைந்தான் )

வங்கக் கடல் கடைந்த
கீழில் அமிருதம் எல்லாம் மேலே கிளறும்படி
படு திரை விசும்பிடைப் படரும் படி கடையா நிற்க -(பெரிய திருமொழி -5-7 )
மரக் கலம் அசலாத படி கடைந்த நேர்ப்பம் சொல்லுகிறது

வங்கக் கடல்
கடைந்த போது சுழல மலை திரிக்கையாலே கடல் அடங்கலும் மரக்கலமாய் நின்ற படி
வங்கம் விட்டுலவும் கடல் இறே ஷீராப்தி –
வைகுந்தன் என்பதோர் தோணி சேர்ந்த இடம் என்று (பெரியாழ்வார் )
(விஷ்ணு போதம் )
ஆழ் கடலைப் பேணாதே கடைந்தான்

பாற் கடலில் பையத் துயின்ற (2)-என்று
ஷீரார்ணவ சயனத்தைத் தொடங்கி
அதனுடைய மதனத்தைச் சொல்லி நிகமிக்கிறார்கள் –
அதில் கிடந்து முன் கடைந்த -(திருச்சந்த )

கடல் கடைந்த மாதவனை
சாதன அனுஷ்டானம் பண்ணினால் சாத்திய சித்தி யுண்டாம் இறே –
அமுதம் கொண்ட பெருமான் திரு மார்பன் (பெரிய திருமொழி -6-10 )என்று –
அம்ருத லாபம் என்று வியாஜ்யமாய் –
அமுதில் வரும் பெண்ணமுதை இறே கிருஷ்ணன் பெற்றது –

மாதவனை
ஆஸ்ரயணீய வஸ்து லஷ்மீ ஸஹிதனுமாய்
ஆஸ்ரயணம் தானும் லஷ்மீ ச நாதனமுமாய் இறே இருப்பது –

ஆஸ்ரிதர் குற்றம் பொறுப்பித்து
அபேக்ஷிதங்களை செய்விப்பார் அருகே யுண்டாக வேணும் இறே

மாதாவின் முன்பு பிரஜைகள் செய்த குற்றம் பிதாவுக்கு தோற்றதால் போலே
பிராட்டி சந்நிதி யுண்டானால்
சேதனருடைய அபராதங்கள் அவனுக்குத் தோற்றாது என்கை

பிராட்டி புருஷகாரமாகப் பற்றினவர்களுக்கு அரியன செய்து
அபேக்ஷிதங்களை தலைக் கட்டிக் கொடுக்கும் என்பதற்காக –
கடல் கடைந்த மாதவனை -என்கிறது –

கேசவனை
வாசம் செய் பூம் குழலாளான பெரிய பிராட்டியார் தான் ஆசைப் படும் படியான
ப்ரஸஸ்தமான மயிர் முடி கட்டி நெகிழ்ந்து அலையா நின்றாய்த்து கடல் கடைந்தது-

கடையய் புக்கார்க்கு எல்லாம் குழல் அலையும் இறே –
வாச நாறும் குழல் ஆய்ச்சியர் –வண்டமர் பூம் குழல் தாழ்ந்து உலாவ -என்று
அவனோடு பிறரோடு வாசி இல்லையே குழல் அலைய –

ஆமையான கேசவா -என்று சுமந்து நிற்கிற ஆமைக்கு உட்பட
குழல் அலையா நின்றால்
கடைகிறவனுக்கு சொல்ல வேண்டா விறே –

கேசவனை
பிராட்டியோட்டை கலவிக்கு விரோதிகளை –
பெண்களொட்டை கலவிக்கு விரோதியான கேசியைக் கொன்றால் போலே
போக்க வல்லவன் என்னவுமாம்

மா மாயன் மாதவன் என்றும் –
கேசவனைப் பாடவும் -என்றும் –
மா வாய் பிளந்தானை என்றும் சொன்னவற்றோடே தலைக் கட்ட வேணும் இறே

கேசவனை
அதனுள் கண்ணுதல் நஞ்சுண்ண கண்டவனே என்கிறபடியே
ப்ரஹ்ம ருத்ராதிகளுக்குக் கோது கொடுத்து தன் வைபவம் தோற்ற நின்ற
நிலையைச் சொல்லிற்று ஆகவுமாம் –

த்வயத்தில் பூர்வ கண்டத்தில் படியே ஆஸ்ரயணீய வஸ்துவைச் சொல்கிறது –
1-மாதவனை-என்று ஸ்ரீ மத் சப்தார்த்தமும்-
2-கடல் கடைந்த என்கிறதாலே ப்ரயோஜனாந்த பரருடைய தோஷம் பாராமல் வியாபரித்த வாத்சல்யமும் –
3-அண்ணல் செய்து -என்று ஸ்திரமாம் படி பண்ணப் பட்ட ஸ்வாமித்வமும்
4-அசுரர்களும் தானுமாய்-என்னும் படி நின்ற ஸுசீல்யமும் –
5-பெண்ணாகி அமுதூட்டின ஸுலப்யமும்-
6-ஆழ் கடலைக் கடைந்த துப்பன்-என்னும் படி வேண்டும் உப கரணங்களைத் தேடி வியாபாரித்த
ஞான சக்திகளும் தோற்றுகையாலே
நாராயண சப்தார்த்தம் ஸூசிதம்

7-கேசவனை என்று பிரசஸ்த கேசவத்தாலே விக்ரஹ யோகத்தை நினைத்து –
சரண சப்தத்தின் அர்த்தம் சொல்லிற்று ஆகிறது

சரண க்ரஹணத்தோடு
கேச க்ரஹணத்தோடு வாசி இல்லையே பிரணயிநி யாகையாலே –
கேசவனைக் கால் பிடிப்பாள் (பெரிய திருமொழி -2-6 )-என்று இறே நிரூபகம்-

பரமனைப் பாடி(2) என்று தொடங்கி
கேசவனை என்று தலைக் கட்டுகையாலே
பாதாதி கேசாந்தமாக கிருஷ்ணனை அனுபவித்தாள் யாய்த்து –

யசோதை முன் சொன்ன திருப் பாத கேசத்தை (பெரியாழ்வார் -1-2-21 )என்று
இடைச்சிகள் அனுபவம் பெரியாழ்வாருக்கு உண்டாகையாலே
அது இவளுக்கு தாய பிராப்தம் இறே –

இனி மேல் ஆஸ்ரயித்த அதிகாரிகள் வை லக்ஷண்யம் சொல்லுகிறது –
திங்கள் திரு முகத்து –
கிருஷ்ண சம்ஸ்லேஷத்தாலே குளிர்ந்து மலர்ந்து செவ்வி பெற்ற
முகத்தை யுடையரானார்கள்

கதிர் மதியம் போல் முகம் -என்று
பிரதாபமும் தண்ணளியும் கலந்த படியால் அநபிபவ நீயத்வம் யுண்டு
அவன் முகத்துக்கு –

இவர்கள் முகத்திலே குளிர்த்தியையே அமைகையாலே
அனுகூலமேயேயாய் இருக்கும்

வங்கக் கடல் கடைந்த என்ற
கடைந்த அமுதில் பிறந்தவள் முகத்தோடு சாதர்ம்யம் பெற்றாய்த்து
இவர்கள் முகம் இருப்பது –

அவள் -துவளும் வெண் மதி போல் திரு முகத்து அரிவை-(பெரிய திருமொழி -2-7)
இவர்கள் -மதி முக மடந்தையர் -(திருவாய் 10-9)

திங்கள் திரு முகம்
சகல கலா பூர்த்தி இவர்கள் முகத்தில் விழித்த போதே தோற்றுமாய்த்து-
ப்ரஹ்ம விதைவ ஸும்ய தே முகம் பாதி –
(கண்ணனையே உள்ளத்தில் கொண்டவர்கள் அன்றோ )

குழையும் வாண் (திருவாய் -6-5-5 ) மிகவும் சொல்லக் கடவது இறே –
முகத்தில் ஆனந்த பூர்த்தி கண்டவர்கள்
இவர்கள் எங்குத்தை மனிச்சர் என்று சந்தேகிக்கும் படி
உபய விபூதி வ்யாவ்ருத்தி தோற்ற இருப்பார்கள் இறே –

வெஞ்சிலை வண் முகத்தீர் (திருவிருத்தம் -75 )
திங்கள் திரு முகத்து
இவர்கள் முகத்தில் விழித்தவாறே
அஹம் மநோ த்பவமான -அழல் ஆறும்படி இருக்கை
(அகங்கார மமகார வெப்பம் போய் இவர்களைப் பார்த்ததுமே போகுமே )

திரு முகம்
உபமானமான சந்த்ர மண்டலம் உபமேயமான முகத்துக்கு நேர் நிற்க மாட்டாமையாலே
திரு முகம் என்கிறது –
முகக் கமலச் சோதி தன்னால் -திங்கள் முகம் பனி படைக்கும் (பெரிய திருமொழி -3-4 )இறே
(ஸூரியனும் கமலமும் சேர்ந்து வரும் உலகில்
சந்திரன் கமலம் சேர்ந்து இங்கு –
சந்த்ர வம்ச கண்ணைப் பார்த்து மலரும் இவர்கள் முகத் தாமாரை )

சேயிழையார்
ஸ்வா பாவிகமான அழகுக்கு மேலே
ஆபரணங்களால் வந்த அழகைச் சொல்லுகிறது –

சேயிழையார்
சூடகமே –பாடகமே –என்று தாங்கள் பிரார்த்தித்த படியே
கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டியும் கூட இருந்து பூட்டின ஆபரணத்தை யுடையவர்கள் –

சேயிழையார்
ஸ்வரூப குணங்களாலும்
ப்ரஹ்ம அலங்காரத்தாலும் குறைவற்றவர்கள் –

போதுவீர் போதுமினோ என்ற போதே நேரிழையீர் (1)ஆனார்கள் –
நீராடின அனந்தரம் –
திருவருள் மூழ்கின படியால் (திருவாய் -8-9 )
புனை இழைகள் அணிந்து -சேயிழையார் ஆனார்கள் –

(நேரிழையீர் அது நேர்மை -ஆஸ்ரயணீய தசை
சேயிழையீர் இது செம்மை -இது அனுபவ தசை )

சென்று
ஆஸ்ரயண விஷயத்தில் ருசி கார்யமான
த்வரையைச் சொல்கிறது –

சென்று
இவ் ஓப்பனையோடு நாமே போவோம் என்று
அவன் வரவைப் பார்த்து இருக்கும் அளவுள்ள வாய்த்து த்வரை

கிருஷ்ண விஷயீ கார யோக்யதையாலும்
விஷயீ காரத்தாலும் பிறந்த புகர்
நிறம் பெறும் படி சென்று

இறைஞ்சி
தூ மலர்கள் தூய்த் தொழுது வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து –
அடி போற்றி என்கிறபடியே போற்றிப் புகழ்ந்து –
சென்று சேவித்து கும்பிடுகை தொடக்கமான செய்வது எல்லாம் செய்து –

அங்கு
ஆஸ்ரயணீய ஸ்தலம் இருக்கிறபடி

அங்கு
திருவாய்ப்பாடியிலே
ஸ்ரீ நந்தகோபருடைய கோயிலிலே
நப்பின்னை பிராட்டி கட்டிலிலே
திவ்ய ஆஸ்தானத்திலே
திவ்ய சிம்ஹாசனத்திலே
இருந்த இருப்பில்

அப் பறை
நாட்டுக்குச் சொன்ன பறையைக் கழித்து –
எற்றைக்கும் என்ற பறையை –
அப் பரிமாற்றத்திலே நின்று அவனை
ஸர்வ ஸ்வமும் கொண்ட படியை

கொண்ட
நீ தாராய் என்கிறபடியே
அவன் தரப் பெற்ற படி

ஆற்றை –
கொண்ட பிரகாரத்தை –

தங்கள் வெறுமையையும்
அவன் பூர்த்தியையும்
பந்தத்தையும் முன்னிட்டுத்
தப்புக்கு பொறை கொண்டு
ருசியையும் த்வரையையும் காட்டி
வளைப்பிட்டு
அடிமையை அபேக்ஷித்துக் கொண்ட பிரகாரத்தை –

ஆஸ்ரயணீய பலமும்
பல சித்தி க்ரமும் சொன்ன படி –

யணி புதுவை-
கிருஷ்ணனுக்கு ஸ்ரீ நந்த கோபர் சம்பந்தம் ஏற்றமாய்
அவர் வர்த்திக்கிற வூர் என்று திருவாயர் பாடியை
சீர் மல்கும் ஆய்ப்பாடி என்று ஸ்லாகிக்குமா போலே

தனக்கு
பெரியாழ்வார் சம்பந்தம் உத்தேஸ்யமாய்
அவர் அபிமானித்த தேசம் என்று
ஸ்ரீ வில்லி புத்தூரைக் கொண்டாடுகிறார்கள் –

யணி புதுவை
நந்தகோபனுடைய கோயிலிலே கிருஷ்ணன் மாத்திரமே இறே –
இவ் வூரில் வட பெரும் கோயில் யுடையானும் –

அணி புதுவை
சம்சாரத்துக்கு ஆபரணமான ஸ்ரீ வில்லி புத்தூர் –

பிராட்டிக்கு
ஸ்ரீ மிதிலையும்
திரு அயோத்யையும் போலவும்

நப்பின்னைப் பிராட்டிக்கு
கும்ப குலமும்
திருவாய்ப்பாடியும் போலவும் அன்றிக்கே

ஆண்டாளுக்கு
பிறவியும்
புக்க இடமும் ஓரூரிலே யான ஏற்றம் இவ்வூருக்கே இறே உள்ளது –

பொன்னும் முத்தும் மாணிக்கமும் இட்டு செய்த ஆபரணம் போலே
நாய்ச்சிமாரும் பெரிய ஆழ்வாரும் வட பெரும் கோயில் யுடையானும் ஆகிற
அலங்காரம் உள்ள தேசம் இறே
(அகாரம் உகாரம் மகாரமும் என்றுமாம்
ரெங்க மன்னாரும் ஆண்டாளும் பெரிய திருவடி )

பைங்கமலத் தண் தெரியல்
ப்ராஹ்மணர்க்கு தாமரையை தாராக இறே சொல்வது –
திருவில் பொலி மறை வாணன் (பெரியாழ்வார் -4-3-10 ) என்னும் படி
ப்ராஹ்மண அக்ரேஸரான பெரியாழ்வாருக்கு தாமரை தாராகக் கடவது இறே

பைங்கமலத் தண் தெரியல்
பசுத்த கமலத்தினுடைய குளிர்ந்த மாலை –
தண்ணம் துழாய் அழல் போல் (திருவிருத்தம் -3 )-என்று
வட பெரும் கோயில் யுடையானுடைய மாலை போலே கொதித்துக் கிடவாதே
பெரியாழ்வார் கழுத்தில் மாலை –

பிரித்தவன் மாலை போல் அன்றே
சேர்ப்பார் மாலை –

குழற் கோவலர் மடப்பாவையும் மண் மகளும் திருவும்
நிழற் போல்வனர் கண்டு நிற்கும் கொல் மீளும் கொல் தண்ணம் துழாய்
அழற்போல் அடும் சக்கரத் தண்ணல் விண்ணோர் தொழக் கடவும்
தழற் போல் சினத்த அப்புள்ளின் பின் போன தனி நெஞ்சமே—-திரு விருத்தம்-3

பட்டர் பிரான்
ப்ராஹ்மணர்க்கு உபகாரகர் ஆனவர் –
வேதப் பயன் கொள்ள வல்லவர் (பெரியாழ்வார்- 2-8 )ஆகையால்
தாத்பர் யார்த்தத்தை சர்வர்க்கும் உபகரிக்குமவர்
பட்டர்களுக்கு வித்யா பிரதானம் பண்ணின உபகாரகர் –
மறை நான்கு முன்பு ஓதின பட்டனுக்கு கன்யகா தானம் பண்ணின உபகாரகர்

பட்டர் பிரான் கோதை
பாராசர்யனான வியாசன் என்று ஆப்திக்குச் சொன்னால் போலே
பெரியாழ்வார் வயிற்றில் பிறப்பு இவளுக்கு உத்கர்ஷ ஹேது

ஆற்றப் படைத்தான் மகனே -என்று இறே
ப்ரதிபாத்யனுக்கு ஏற்றம் –

ஆழ்வார் சம்பந்தம்
இவளுக்கு ஏற்றம்

விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்று
இவருக்கு தேவராய்
வட பெரும் கோயில் யுடையான் நிறம் பெற்றான் –

இவர் மகளாய்
ஆண்டாள் நிறம் பெற்றாள்-

ஒரு மகள் தன்னை யுடையேன் என்று இவள் சம்பந்தம் இறே
தமக்கு உதகர்ஷமாகச் சொல்லுவது –
(வியாசருக்கு ஸூக தாதம் என்று வந்த ஏற்றம் போலே )

சொன்ன
ஆண்டாள் அநுகாரத்தாலே அனுபவித்தது
புற வெள்ளம் விட்டபடி

கோதை சொன்ன
ஸ்ரீ கோபிமார் தசையைப் பிராபித்து-
அணி குருகூர்ச் சடகோபன் சொன்ன -என்று
பும்ஸத்வம் மேலிடும்படியான குற்றம் அற்று இருக்கை

சொன்ன
ஸ்ருதி சத சிரஸ் சித்தமான அர்த்தம்
சர்வ உஜ்ஜீவியமாம் படி சொன்ன

மேகம் பெருகின சமுத்ராம்பு போலே இவர் வாயன திரிந்தன (72 )-என்கிறபடியே
இவளுடைய வாக்கின் ஸ்பர்சத்தாலே காணும்
அதிலும் அவா பெற்றது

மேகம் பருகின சமுத்ராம்பு போலே நூற் கடல் சொல் இவர் வாயான வாய்த் திருந்தின வாறே
சர்வதா சர்வோப ஜீவ்யம் ஆமே –
( ஸ்ரீ லஷ்மீ நாதாக்ய சிந்து -சடரி பு ஜலத-ப்ராப்த காருண்ய நீரம் மேகம் பருகின சமுத்ராம்பு )

சொன்ன
தான் தோன்றியான வேதம் போல் அல்ல –
பிறப்பால் யுண்டான ஏற்றமும் உண்டு –

ஷீராப்தி நாதனைப் பற்ற
ஒருத்தி மகனாய் பிறந்தவனுக்கு இறே வரும் ஏற்றம் உள்ளது –

சங்கத் தமிழ் மாலை
சங்கம் இருப்பார் போல் வந்து -என்று
பஞ்ச லக்ஷம் குடியிலே பெண்கள் திரளாக அனுபவித்த அனுபவத்துக்கு
ஆண்டாளும்
தன் திறத்தில் பெண்களுக்குத் திரள இருந்து சொன்ன பாசுரம் ஆகையால் –

குழாங்களாய் -என்னும் படி
திரள் திரளாக அனுபவிக்க வேண்டும் பிரபந்தம் –
சங்க முகத் தமிழ் மாலை (பெரிய திருமொழி -3-4 )-என்னக் கடவது இறே –

தமிழ் மாலை –
யாவர்க்கும் சிந்தைக்கும்-கோசாரம் அல்லாத வஸ்து –
பெற்றம் மேய்த்து உண்ணும் -இடைச் சேரியில் வந்து பிறந்து எளியனால் போலேயும்

உத்தம வர்ணத்தில் பிறப்புடைய ஆண்டாள்
ஆயர் சிறுமியர் திரளில் ஒருத்தியாய் அந்வயித்தால் போலேயும்

அருமறையின் பொருளான உபநிஷத் தமிழாய் வந்து
சர்வ ஸூலபமான படி –

பிரபந்தம் செய்தவளோடு
ப்ரதிபாத்யனோடு
ப்ரபந்தத்தோடு வாசி அறத்
தாழ நின்று நிறம் பெற்ற படி –

மாலை
பாவனமான அளவு அன்றிக்கே
போக போக்யமாய்
தலையால் சுமக்க வேண்டும் படியாய்
ஸீரோ பூஷணமுமாய் இருக்கை –

கோதை சொன்ன மாலை –
மாலை கட்டின மாலை –
மாலைக் கட்டின மாலை –

அடுத்த பத்தியோடு இரண்டு தலையும்
தாள் பூவும்
நடுவே நாயகமுமாய்
தொடுப்புண்ட மாலை

கோதை சொன்ன மாலை
செவிப் பூவே என்று
இவள் செவிக்கு ஒரு பூ இறே அவன் கொடுத்தது –
ஸ்லாக்யமான மாலை கொடுத்தாள் அவள்
9ஆச்சார்யர் ஒரு அர்த்தம் சொல்ல
சிஷ்யர் விரித்து மாலையாக விரிப்பது போல் )

ஸ்ரஜி நிகளிதம்-என்னும் படி
குழலில் மல்லிகை மாலையாலே விலங்கிட்டு
அவனை ஓதுவித்த மாலை இருக்கிற படி

முப்பதும்
திரு மந்த்ரமும்
திருப் பல்லாண்டும் போலே சுருங்கி இருத்தல் –
வேதமும்
திருவாய் மொழியும் போலே விரிந்து இருத்தல் செய்யாமையாலே
வேண்டுமவை எல்லாம் மிகுதிக் குறை யுண்டாய் இருக்கை யன்றிக்கே ஒழிகை

நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று சங்க்ரஹேண சொன்ன
ஸ்வரூப
உபாய
பலன்களை
ஓன்று பத்தாக சொன்ன அத்தனை இறே

முப்பதும் தப்பாமே
இதிலே ஒரு பாட்டும் நழுவாமே –
விலை இல்லாத ரத்னங்களாலே செய்த ஏகாவலியிலே ஒரு ரத்னம் குறைந்தாலும்
நெடும் பாடாய் இருக்கும் இறே
அப்படியே ஒரு பாட்டு குறையிலும் பேர் இழவாய் இருக்கும் –

1-பகவத் ஆபி முக்கியம் பிறக்கிற கால வைலக்ஷண்யம் அறியாது இருத்தல் –
2-தியாஜ்ய உபாதேயங்களில் நழுவ நிற்றல்
3-பர சம்ருத்ய ஏக பிரயோஜனம் இன்றியிலே ஒழிதல்
4-தேவதைகளையும் நியமிக்கும் படியான ஞானிகள் வைபவம் அறியாது ஒழிதல்
5-ஆஸ்ரயண காலத்திலே ஷீண பாபராம் ஏற்றம் அறிதல் செய்யாது ஒழிய ஒண்ணாது

6-பகவத் விஷயத்தில் முதலடி இட்டாரோடு
7-அவகாஹித்தே சிறிது குலைய நிற்பாரோடு
8-ஸ்லாகாப்ரதானராய் இருப்பாரோடு
9-த்யாஜ்யத்தில் அல்ப ஸ்பர்சம் நடையாடுவாரோடு
10-அனுபவமே நிரந்தரமாக நடப்பாரோடு

11-பாகவத குலத்திலே அந்வயித்தாரோடு
12-கைங்கர்ய நிஷ்டரோடே சம்பந்தம் உடையாரோடு
13-ஸ்வரூப ஞானம் யுடையரோடு
14-வை லக்ஷண்ய அனுசந்தானம் பண்ணி நிர்வ்யாபாரராய் இருப்பாரோடு
15-பக்தியால் கலங்கி நடப்பாரோடு
16-பாகவத பாரதந்தர்ய ஏக நிஷ்டரோடு

வாசி அற உத்தேச்யதா புத்தி குலையாமல் இருக்க வேணும் என்று அறிய வேணும் –

17-பகவத் சந்நிதியில் செல்லும் க்ரமங்கள் அறிய வேணும்
18-புருஷகாரத்தினுடைய ஸ்வரூப
19-ஸ்வபாவங்களும்
20-காரியமும் அறிய வேணும்
21-பகவத் குண வித்தராக வேணும்

22-கடாக்ஷ ஏக தாரகராம் படி பஃன அபிமானராக வேணும்
23-ஆபி முக்கிய பிரார்த்தனம் பண்ண வேணும்
24-மங்களா சாசன பரராக வேணும்
25-அர்த்தித்தவம் தோற்றப் பல் காட்ட வேணும்
26-முமுஷூ தசையில் அபேக்ஷிதம் –

27-முக்த தசையில் போகம் இவற்றில் வாஞ்சை நடக்க வேணும்
28-அதுக்குத் தாங்கள் உபாயாந்தர ஸூன்யத்தையை முன்னிட்டு வேணும்
29-நித்ய கைங்கர்யத்தில் நித்ய அபேக்ஷை நடக்க வேணும்
30-இத்தசை விளைந்தார் பாசுரமே போகமாக வேணும் –

ஆகையால்
இம் முப்பத்து பாட்டிலும் நழுவ விடலாவது
ஒரு பாட்டு இல்லை –

இங்கு
பிற்பட்ட காலத்திலே இப் பரிமாற்றத்துக்கு
மேட்டு மடையான இந் நிலத்திலே

இப் பரிசு
இப் பிரகாரம் தப்பாமல்

இப் பரிசு உரைப்பார்
இப் பாவ விருத்தியோடே இப் பாசுரங்களை சொல்லுமவர்கள் –
திருவாய்ப் பாடியிலே பெண்களுக்கு சம காலம் ஆகையால் சாஷாத்காரம் யுண்டாய்த்து
ஆண்டாள் அநுகார பிரகாரத்தாலே பெற்றாள் –
இவர்களுக்கு யுக்தி மாத்திரமே அமையும் –

இவர்கள் அளவு பாராதே பண்டு பாடினவர்களையும்
இச் சொல் வழியாலே நினைத்து கார்யம் செய்யும் விஷயத்தைச் சொல்லுகிறது மேல் –

ஈரிரண்டு மால் வரைத் தோள்-
பெண்களை அணைக்கப் புக்க பின்பு கிருஷ்ணனுக்கு திருத் தோள்கள் பணைத்த படி –
(பெரிய பிராட்டி ஸ்லோகம் கேட்டு அரங்கன் கவசம் வெடித்தது போல் )
வேய் இரும் தடம் தோளினாரோடு-அணைந்த தோள்கள் இறே

ஈரிரண்டு
உகவாதாற்கு இறே தோள் இரண்டாய்த் தோற்றுவது-
ஆசைப்பட்ட பெண்களுக்கு நாலாயத் தோற்றும் இறே
வங்கக் கடல் கடைந்த தோள்கள் நான்கையும் கண்டிடப் பெற்றார்கள் –

மால் வரைத் தோள்
மதுரக் கொழும் சாறு கொண்ட சுந்தரத் தோளாய் இராதே (நாச்சியார் -9-1 )
காத்தூட்ட வல்ல திண்மையைச் சொல்கிறது

மால் வரை
நீண்ட மலைகளும் (பெரிய திருமொழி 2-8 )-என்னும் படி இறே இருப்பது
பெரிய பிராட்டியாருக்கும் -கோபிமார்க்கும் க்ரீடாஸைலமான தோள்கள்

செங்கண் திரு முகத்து
பெண்களைக் கண்ட பின்பு அலப்ய லாபத்தாலே
திருக் கண்களும் செவ்வி பெற்று
திரு முகமும் குளிர்ந்த படி

இவர்களை பிரிந்த போது இறே
ஜல ஷயத்தில் பத்மம் போலே
முகமும்
விழியும் உறாவுவது

செங்கண் திரு முகம்
கண்ணன் கோள் இழை வாண் முகம் –
அதிலே நீரார் கமலம் போல் செங்கண்-
தோழிமார் பாரி கோள் என்று
ஒருவருக்கு ஒருவர் காட்டி அனுபவித்த
கடாக்ஷமும்
முகமும்

(வாசத்தடம் போல் வருவான் —
நிமிர்ந்து நின்றது போல் புண்டரீகத்தடாகம் )

செங்கண்
கதிர் மதியம் போல் முகத்தான் –
பங்கயக் கண்ணானை –
செங்கண் சிறுச் சிறிதே –
அங்கண் இரண்டும் கொண்டு என்று
முடிய இம் முகமும் கடாக்ஷமும் இறே இவர்கள் நெஞ்சிலே கிடந்தது –

திங்கள் திருமுகம் -என்று ஸ்ரீ கோபிமார் முகத்தையும்
அவர்கட்க்கு அனுபாவ்யனானவன் -செங்கண் திருமுகம் -முகத்தையும்
ஒரு முகப்பட அனுபவிக்கிறார்கள்

இச் செங்கண் திருமுகம் யுடையவன் தான் ஆர் என்னில்
செல்வத் திருமாலால்
என்கிறார்கள் –
கண்ணன் திருமால் திரு முகம் இறே இது

செல்வத் திருமாலால்
உபய விபூதி ஐஸ்வர்யத்தை யுடைய ஸ்ரீ யபதியாலே-

செல்வத் திருமாலால்
திருத் தக்க செல்வமும் -என்றபடி
செல்வத்துக்கு தகுதியானவள்

திருமால் –செல்வம்
திருவுக்கும் திருவாகிய –செல்வு -செல்வச் சிறுமியரைப் பெற்ற பின்பு சிறந்தது

இங்கு
உத்தர வாக்கியத்தில் ஸ்ரீ மத் சப்தார்த்தம் சொல்லுகிறது
ரகஸ்ய த்வயத்திலும் மறைந்து கிடந்த
லஷ்மீ சம்பந்தம்
வாக்ய த்வயத்தாலே வெளியாகிறது –

இப் பாட்டில் உப க்ரமத்திலும் முடிவிலும் பிராட்டி சம்பந்தத்தைச் சொல்லுகையாலே
த்வயத்தில் சொல்லுகிற படியை இங்குச் சொல்லிற்று யாய்த்து –

(மாதவன் -பூர்வ வாக்ய ஸ்ரீ மன்
செல்வத் திருமால் – உத்தர வாக்யம் ஸ்ரீ மதே)

எங்கும்
த்ருஷ்ட அத்ருஷ்டங்களிலும் –
இங்கு இருக்கும் நாளும்
பரம பதத்தில் போனாலும்

திருமாலால் எங்கும்
இங்கும்
அங்கும்
திருமால் என்று இருக்கை இறே அடுப்பது
(நேர் பட்டாள் இங்கும் அங்கும் திருமாலால்)

திருவருள் பெற்று
இப் பிரபந்தம் கற்றவர்கள் இருந்த இடத்திலே
தானும் பிராட்டியுமாய் நித்ய சந்நிஹிதமாம் படி ப்ரஸாதத்தைப் பெற்று

திருவருள் பெற்று
திருமாலால் அருளப் பட்ட (சடகோபன் இன்ப மாரி )
திரு மா மகளால் அருள் மாரி-என்று
இவளுடைய அருள் பெருக்கை இறே உத்தேச்யம் –
நின் திருவருளும் பங்கயத்தாள் திரு வருளும் கொண்டு(-திருவாய் 9-9 )

திருமால் -திருவருள் பெற்று
நிஸ் சம்சயம் சம்பத்ச்யதே -என்று
இவர்களை வாழ்த்தி கடாக்ஷித்தது பலித்த படி பாராய் -என்று
பெரிய பிராட்டியார் திருக் கையில் காட்டிக் கொடுக்க
பூ வளரும் திரு மகளால் அருள் பெற்று (பெரிய திருமொழி -11-6 )-என்கிறபடியே

அவன் அடியாக இவள் தன்னுடைய அருளை பெற்று
1-உபாய நிஷ்டையும் இவளாலே –
2-ப்ராப்ய விருத்தியும் இவளால் –

1-விரோதி நிவ்ருத்தியும் அவனாலே
2-பல பிராப்தியும் அவனாலே

இன்புறுவர்
ஆனந்த நிர்ப்பரராவார்

எங்கும் இன்புறுவர்
இங்கு இருக்கும் நாள் சம்சாரிகளில் வியாவருத்தராய்-
பிரபந்தத்தினுடையவும் –
ப்ரதிபாத்யனுடையவும் –
ஆண்டாளுடையவும்
சீர்மையையும்
சீலத்தையும்
பாவ விருத்தியையும் அனுசந்தித்து இனியராவார்கள்

அங்குப் போனால் நிரந்தர சம்ஸ்லேஷத்தாலே –
மிக வெல்லை நிகழ்ந்தனம் (திருவாய் 4-5-3)-என்னும் படி
பரம ஆனந்தத்தில் அந்வயிப்பார்கள்

திருமாலால் -இன்புறுவர்
இன்பம் பயக்க விறே அவர்கள் தான் இருப்பது -(திருவாய் 7-10-1)
அந்யோன்ய அனுபவ ஆனந்தம் போல் அன்றே மிதுன அனுபவ ஆனந்தம்
அடியேனுக்கு இன்பாவாய் பொன் பாவை கேள்வா -(நான்முகன் )

எப்படி இன்புறுவர்கள் என்னில்
எம்பாவாய்-இன்புறுவர்
எங்கள் சந்தஸாலே இன்புறுவர் –
நாங்கள் யாதொருபடி இன்புற்றோம் அப்படி இன்புறுவர்கள் –

மாதவனை –சேயிழையார் –சென்று இறைஞ்சி -பறை கொண்டவாற்றை —
கோதை சொன்ன -தமிழ் மாலை -உரைப்பார் -எம்பாவாய் –இன்புறுவர்

பெரிய பிராட்டியார் இன்புற்றால் போலே
இன்புற்றார் ஆவார்கள்
(பாவை பெரிய பிராட்டியார் )

ஸ்ரீ கோபிமார் பாவாய் இன்புற்றோம் நாங்கள் –
(கோபி மார் பா சொல் )

எங்கள் சொல்லை யுரைப்பார்
எங்கள் பாவாய் -இன்புறுவார்கள்
(எங்கள் பா -திருப்பாவை )

சமகாலத்தில் உள்ளாரை –
எம் பாவாய் –
நீராடப் போதுவீர் போதுமினோ -என்று கூட்டிக் கொண்டார்கள் –

பிற்பாடார்க்கும்
எம் பாவாய் பிரபந்த முகத்தால்
எம் பாவாய் இன்புறுவர் என்று தலைக் கட்டுகிறார்கள் –

(ஸ்ரீ கேசவ நம்பியையைக் கால் பிடித்து
இயம் கோதா –மம ஸூதா –பத்ரம் தே -ஸஹ தர்ம சரீதவ-ஜகத் ரக்ஷண தர்மம்
ஸ்ரீ பட்டருக்கு அபகரித்த ஸ்ரீ பட்டர் பிரான்
நம்பியைக் காண நங்கைக்கு ஆயிரம் நயனம் வேணும்
கொம்பினுக்கும் அஃதே
ஸ்ரீ ரெங்க மன்னார் -ஸ்ரீ ஆண்டாள் -தரணியே பாக்யம் -தவம் உடைத்து
பல்லாண்டு பல்லாண்டு என்று ஸ்ரீ ஆண்டாள் சமேத ஸ்ரீ ரெங்க மன்னாருக்குப் பாடிக் கொண்டே கால ஷேபம் செய்வோம் )

————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை –சிற்றம் சிறுகாலே வந்து –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 17, 2017

(திருப்பாவை ஆகிறது இப்பாட்டு
பாகவத வைபவம் எல்லே
பகவத் வைபவம் இதில்
த்வயார்த்தம் -சரணாகதி கீழ் -ப்ராப்ய நிஷ்கர்ஷம் இதில்
பிரபல தம விரோதி -களை அற்ற கைங்கர்யம் -ஸூய போக்த்ருத்வ புத்தி தவிர வேண்டுமே )

நமக்கே பறை தருவான் என்று சங்க்ரஹேண முதல் சொன்ன ப்ராப்ய பிராபகங்கள்
இரண்டையும் இந்த இரண்டு பட்டாலும் விவரிக்கிறார்களாய் –
பலம் தருகிற பிராபகத்தை நிர்ணயித்து ஸ்வீகரித்தார்கள் கீழில் பட்டாலே –

அதில் பறை என்று சொன்ன
ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து பிரார்த்திக்கிறார்கள் -இப்பாட்டில் –

பறை என்று ப்ராப்யத்தை முற்படச் சொல்லி
தருவான் என்று கொண்டு சாதன ரூபத்தை அனந்தரம் சொல்லிற்று
ப்ராப்ய ருசி அடியாக
ப்ராபக அன்வேஷணம் பண்ண (தேட ) வேண்டுகையாலே –
அவ் விடத்தில் ப்ராப்ய சித்தியில் ப்ராபக ஸ்வீகார சாபேஷத்தை யுண்டாகையாலே
உபய ஸ்வீகாரம் பண்ணி பல பிரார்த்தனம் பண்ணுகிறது –

இங்கே நமக்கே என்கிற அதிகார ஸ்வரூபம் இரண்டு பட்டாலும் விசதமாகிறது
அநந்ய போக்யத்வமும் –
அநந்ய உபாயத்வமும் –
அநந்யார்ஹத்வமும் -இறே ஸ்வரூபம்-
(நாராயணாயா -கைங்கர்யமே பிரதானம் என்பதால் அத்தை முதல் காட்டி அருளுகிறார் )

செல்வச் சிறுமீர்காள் –
வையத்து வாழ்வீர்காள் நாமும் –
நாங்கள் நம் பாவைக்கு –
நாங்களும் மார்கழி நீராட –
எம்மை நீராட்டு –
யாம் வந்தோம் –
யாம் பெறு ஸம்மானம்
புண்ணியம் நாமுடையோம் –
நாங்கள் என்பது
எங்களுடையது என்பதாய்
பாட்டுத் தோறும் தங்களை உறைத்து காட்டிற்று

ஸ்வரூபத்திலும்
உபாயத்திலும்
பலத்திலும்
தாங்கள் இருக்கும் இருப்பை வெளியிடா நின்று கொண்டு
நமக்கே என்ற பதத்தை விவரித்த படி இறே –

தூயோமாய் வந்து நாம் என்றும் (5)
தூயோமாய் வந்தோம் என்றும் (16_
இரண்டு சுத்தி உண்டு இறே கீழ்ச் சொல்லிற்று –

(இரண்டிலும் இரண்டு வகை வெளிப் பகை உள் பகை இரண்டும் உண்டே
அவற்றை விவரிக்கிறார்
பற்றின பற்றும் உபாயம் இல்லை
நமது ப்ரயோஜனத்துக்காகக் கைங்கர்யம் என்பதும் கூடாதே
இவையே உள் பகைகள் )

அதில் சித்த உபாய பரிக்ரஹம் பண்ணினவர்களுக்கு
சாத்திய உபாயத்தில் ருசி வாசனை யாதல் –
ஸ்வீகாரத்தில் உபாய புத்தி யாதல் –
ஸ்பர்சிக்கில் சவ ஸ்ப்ருஷ்டம் போலேயும்
நீச ஸ்பர்சம் போலேயும் இருப்பது ஓன்று இறே –

அவை இரண்டு அசுத்தியும் இல்லை என்னும் இடம்
கீழ்ப் பாட்டாலே வெளியிட்டார்கள் –

சாத்யத்திலும் வந்தால்
ப்ரயோஜனாந்தர சங்கம் நடப்புதல்-
அக வாயிலே போக்த்ருத்வ புத்தி நடப்புதல் செய்தால்-
விஜ போஜனம் போலேயும்
உச்சிஷ்ட அசனம் போலேயும் வருவதொரு அசத்தி உண்டு இறே –

அந்த எச்சில் அறுத்து போக சுத்தி பண்ணுகிறார்கள்
இப் பாட்டில் –

ஆசற்றார் மாசற்றார் (திருமாலை22) என்கிறது
இரண்டு தோஷமும் அற்றவர்களை இறே –

சர்வ தர்மான் –
சர்வ காமான்ச்ச-
தொழுமின் தூய மனத்தராய் -(திருவாய் 3-6 )

(கீழே ஆறு பகுதியாகப் பார்த்தோம்
இதிலும் ஆறு யாரையும் அறிந்தால் ஆறி இருக்கலாம் )

1-உபாய பரிக்ரஹத்தினுடைய அநந்தரத்திலே ருசி காரியமாய் வருவதொரு பேற்றிலே த்வரையும்-
(சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து)

2-சாத்தியத்திலே சாதனா புத்தி நடக்கும் படியான கலக்கமும் –
(உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்)

3-ஆர்த்தியை ஆவிஷ்கரித்து வளைக்கையும்–
(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)

4-ப்ராப்யாந்தர ஸ்ரத்தை குலைகையும்
(இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா)

5-புருஷார்த்தத்தில் அவிச்சின்னமான பாரிப்பும் –
(எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)

6-ப்ராப்யம் சபலமாம் படியான அபேக்ஷையும் –
(மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்)

இவை ஆறும் பரிக்ரஹித்த உபாய பலமாய் விளையும் இறே

(த்வரா கலக்கம் ஆர்த்தி உபேஷா அபேக்ஷை வைராக்யம் இந்த ஆறும் )

1-காலமே கண்ணுறங்காதே வந்து துவளும் படியான த்வரையும் –
2-போற்றுதற்குப் பொருள் தேடும்படியான கவக்கமும் –
3-தங்கள் வடிவைக் காட்டி வளைக்கும் படியான ஆர்த்தியும் –
4-நோன்பை வியாஜ்ஜியமாக்கி வேண்டினவற்றில் அபேக்ஷை அற்ற படியையும்-
5-பரிபூர்ணமாக கைங்கர்யத்தை அபேக்ஷிக்கிற படியையும் –
6-அதில் களை யறுத்துத் தர வேணும் என்று சொல்லும்படி பிரார்த்திக்கிற படியையும்
காட்டி
நாமுடையோம் என்கிற புண்ணியத்தினுடைய பலன்களை வெளியிடுகிறார்கள் –

கீழ்ச் சொன்ன உபாயத்துக்கு
வேறு ஒன்றை பலமாக்குகை யாவது
மாணிக்கத்தை இட்டு தவிடு கொள்ளுவரைப் போலே இறே –

அந்த உபாயத்துக்கு உபாயாந்தர நிவ்ருத்தி போலே
சகல பல சாதாரணம் என்று விரோதியான பலத்தை
அபேக்ஷிக்கலாகாது இறே –

ஸ்வரூப அனுரூபமான பலத்தில் தங்களுடைய அபிநிவேசத்தை அறிவிக்க வேணும் என்று
ஸ்ருதி சத சிரஸ் ஸித்தமாய் –
கருத்தறியும் மூதுவர் கைப் பட்டு கிடக்குமதாய்-
கரும் தறையில் வாசனையால் அவர்கள் பிறந்த இடத்தில் அபேக்ஷிக்குமதாய்
(எம்பெருமான் பொன் மலையிலே ஏதேனும் ஆவேனே )

அவர்களோடு ஒத்த பிராப்தியை யுணர்ந்தவர்கள் பாரிக்குமதாய்-
பகவத் அநந்யார்ஹ சேஷமான வேஷத்துக்கு அத்யந்தம் அனுரூபமாய்
ஈஸ்வரனுடைய முக விகாசத்துக்கு ஹேதுவாய் இருந்துள்ள பரம ப்ராப்யத்தை
பிரபந்த நிகமனம் பண்ணுகையாலே
எல்லாருக்கும் தெரியும்படி வெளியிட வேண்டுகையாலே

நாட்டார் இசைகைக்கு நோன்பு என்ற ஒன்றை வியாஜி கரித்துப் புகுந்தோம் அத்தனை –
எங்களுக்கு உத்தேச்யம் உன் திருவடிகளில் நித்ய கைங்கர்யம் என்று
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணுகிறார்கள் –
எம்மா வீட்டில் அர்த்தத்தோடு (2-9 )தலைக் கட்டுகிறது –

எம்மா வீட்டில் ப்ராப்யத்தை நிஷ்கர்ஷித்து (2-9 )-
ஒழிவில் காலத்திலே பிரார்த்தித்து (3-3 )
அது தன்னுடைய எல்லை நிலமான பாகவத அனுபவத்தை
நாளும் வாய்க்க நங்கட்கே-என்று
நெடுமாற்கு அடிமையிலே பிரார்த்தித்தார் -ஆழ்வார்-(8-10 )

தனி மாப் புகழே எஞ்ஞான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனி மாத தெய்வத் தளிர் அடிக் கீழ்ப் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மாக் கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே–8-10-7-

அவரைக் காட்டில் இவர்களுக்கு உள்ள வாசி –
நீராடப் போதுவீர் –
(இவள் எடுத்த எடுப்பிலே நீராடப் போதுவீர் )
எல்லாரும் போந்தாரோ என்று புருஷார்த்தத்தில் சரம அவதியில் முதலடியிலே நின்று
அது நிலை நிற்கைக்காக
ப்ராப்ய நிஷ்கர்ஷம் பண்ணி அர்த்திக்கிறார்கள்-
(பாகவத கைங்கர்யம் நிலை நிற்க பகவத் கைங்கர்யம் வேண்டுமே )

ஆவா வென்று ஆராய்ந்து அருள் –
எம்மேல் விழியாவோ -என்று பெண்கள் அக்ரூரன் மநோ ரதித்தால் போலே
மநோ ரதித்துக் கொண்டு வந்த படியே நாமும் பெரிய ஆதரத்தோடு புறப்பட்டு இருந்து
வந்த கார்யங்களை சொல்லுங்கோள் என்று கேட்டு
வேண்டுவனவும் கொடுக்க இசைந்து
பறை கொண்ட காலத்துக்கு பெறும் ஸம்மானம் பண்ணுவதாக இசைந்து
வந்த கார்யம் தலைக் கட்டி விட்டோம் –

திரிய
பறை தாராய் -என்று நின்றார்கள் –
பாடிப் பறை கொண்டு என்றதும் மேலேயும் ஒரு பறை யுண்டாய் இருந்தது –
நாமது அறிந்திலோம் –
நமக்கு இதுவே தெரிந்தது இல்லை –
மேல் விளையும் படி காண்கிறோம் என்று பேசாதே இருந்தான் –

எங்கள் த்வரையையும்-
தலை தடுமாறான பரிமாற்றத்தையும் கண்டு வைத்து
இதுக்கு ஹிருதயம் கேட்டில்லையீ –
எங்கள் நினைவைக் கேளாய் -என்று தொடை தட்டுகிறார்கள் –

கீழ்ப் பண்ணின ப்ராபக ஸ்வீகாரம் அசத் சமமாம் படியான ப்ராப்ய ருசியையும்
உன்னாலே பேறு -என்று அறுதி இட்டால்
நீ வரக் கண்டு இருக்க ஒண்ணாத படி இருக்கிற த்வரையையும்
எங்கள் ஆற்றாமையின் ஸ்வ பாவத்தையும்
கேளாய் என்கிறார்கள் –

சிற்றம் சிறுகாலே வந்து உன்னைச் சேவித்து உன்
பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே
இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு
உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்
மற்றை நம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்-

பதவுரை

கோவிந்தா–கண்ண பிரானே!வெறும் கோவிந்தா இதில் -கீழ் எல்லாம் அடை மொழி உண்டே
சிற்றம் சிறுகாலை–விடி காலத்திலே
வந்து–(இவ் விடத்தேற) வந்து
உன்னை சேவித்து–உன்னைத் தெண்டனிட்டு
உன் பொன் தாமரை அடி போற்றும் பொருள்–உனது அழகிய திருவடித் தாமரைகளை
மங்களாசாஸநம் பண்ணுவதற்குப் பிரயோஜனத்தை
கேளாய்–கேட்டருள வேணும்;
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ–பசுக்களை மேய்த்து உண்ணும் இடைக்குலத்தில் பிறந்த நீ
எங்களை–எங்களிடத்தில்
குற்றேவல்–அந்தரங்க கைங்கரியத்தை
கொள்ளாமல் போகாது–திருவுள்ளம் பற்றாதொழிய வொண்ணாது;
இற்றை பறை கொள்வான் அன்று காண்–இன்று (கொடுக்கப்படுகிற இப் பறையைப்
பெற்றுக்கொள்வதற்காக நாங்கள் வந்தோமல்லோம்;
எற்றைக்கும்–காலமுள்ளவளவும்
ஏழ் ஏழ் பிறவிக்கும்–(உன்னுடைய) எவ் வவதாரங்களிலும்
உன் தன்னோடு–உன்னோடு
உற்றோமே ஆவோம்–உறவு உடையவர்களாகக் கடவோம்;
உனக்கே–உனக்கு மாத்திரமே
நாம்–நாங்கள்
ஆள் செய்வோம்–அடிமை செய்யக் கடவோம்;
எம்–எங்களுடைய
மற்றை காமங்கள்–இதர விஷய விருப்பங்களை-எங்கள் ஆனந்தமாகிய கைங்கர்யங்களை
மாற்று–தவிர்த்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

சிற்றம் சிறுகாலே வந்து
சிறு பெண்கள் ஆகையால் குளிர் காலத்தில் புறப்பட மாட்டாத நாங்கள்
அறப் போதோடே புறப்பட்டு வரும் படி அன்றோ எங்கள் த்வரை இருந்த படி –
இவர்களுக்கு ஆபிமுக்யம் பிறந்த காலம் ஆத்ம ஹித சிந்தனத்துக்கு சத்வோத்தர காலமாக இருக்கும்
ப்ரஹ்ம முஹூர்த்தமாக வந்து விழுந்தது

மாசம் மார்கழி மாசமாய் –
பக்ஷம் பூர்வ பஷமாய்-
அதிலே பவுர்ணமியாய்-
அப்படியே ஒரு நன்னாள் வந்து பலித்தால் போலே
அத் திவசத்தில் முஹூர்த்தமும் ப்ரஹ்ம முஹூர்த்தமாய் வந்து விழுந்தது

(சுக்ல பக்ஷம் கிருஷ்ண பக்ஷம் இரண்டும் உண்டே –
பவுர்ணமி தொடங்கி பவுர்ணமியில் முடியும் படி அமைந்தது
முதல் பாட்டில் நேரம் இல்லை )

காலை –
சிறு காலை –
சிற்றம் சிறு காலை-

செங்கல் பொடிக் கூறை என்று தாமஸரும் உணரும் படி யான அளவு காலை யாவது

ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த -என்று இடைச்சிகள் உணர்ந்து
ஸ்வ க்ருத்யத்திலே அதிகரிக்கும் படியான அளவு சிறு காலை யாவது

ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்த -என்றது தான் விடிவுக்கு அடையாளமாகச் சொல்லும் படி –
அதற்கு முன்னே உணர்ந்தார்கள் இறே தாங்கள் –

இவர்களுக்கு ராத்திரி கழிந்து
பகல் வருவதற்கு முன்புத்தை
நடுவில் போதை இறே நினைக்கிறது

அஞ்ஞான தசை குலைந்து
பிராப்தி தசை புகுவதற்கு முன்புத்தை
ஞான தசையைச் சொன்ன படி
முனிவர்களும் யோகிகளும் உணரும் காலம்

சிற்றம் சிறு காலை யாவது –
சம்சாரியான நிலை குலைந்து
முக்தனாவதுக்கு முன்பு
முமுஷூத்வம் அங்குரித்த தசை இறே –

இருள் அகன்ற அளவாய்
வெளிச் செறிப்பு உள்ள அளவு எல்லாம் பிரகாசியாத அளவாய்த்து –

இதர விஷய ப்ராவண்யத்தால் வரும் அறிவு கேடு இன்றிக்கே
பகவத் விஷயத்தில் ஞானம் கொண்டு
நேரான பரிமாற்றமும் இன்றிக்கே இருக்கிற அளவைப் பிடித்த படி –

காலை நல் ஞானத் துறை படிந்தாடி (திரு விருத்தம் -93)-என்று
ஞான தீர்த்த அவகாஹனத்துக்கு யோக்கியமான காலம் பெற்ற படி –

தாமரையாள் கேள்வன் ஒருவனையே நோக்கும் உணர்வு -என்று
ஸ்ரீ யபதியை விஷயீ கரிக்குமது இறே நல் ஞானமாவது –

துறை படுகையாவது-
சதாசார்ய உபதேச மூலமாக
பிராட்டி புருஷகாரமாக –
பாகவதர்கள் உஸாத் துணையாக
எம்பெருமானைப் பற்றுமது-

உன் மணாளனை எம்மை நீராட்டு (20) என்று
துறை தப்பாமல் இழிந்தவர்கள் இறே இவர்கள்-

ஓயும் பொழுதின்றி -(திருவாய் -5-4 )
விடிவு காணாத படி நீண்ட சம்சார காள ராத்திரி கழிந்து –
பகல் கண்டேன் -என்று ஒரு பகல் முகம் செய்கிற சமயம் இறே

அந்தம் தம இவ ஞானம் இத்யாதி –
காலை மாலை (திருவாய் )என்று ஒரு நியதி இல்லை இறே –
அவன் தோற்றும் காலம் விடிவாம் அத்தனை இறே –

திருவாய்ப் பாடிக்கு நாட்டார் விடிவு அஸ்தமயமாய் –
சர்வ பூதங்களினுடைய அஸ்தமநம் விடிவாய் இறே நடப்பது –

ஆவிர்ப் பூதம் மஹாத்மனா -என்று
அபர ராத்ரம் விடிவாய் வந்து விழுந்தது இறே –

விரியும் கதிரே போல்வான் இறே(நாச்சியார் )

சிற்றம் சிறு காலே
சிறு காலே வரில் உன்னைக் காண ஒண்ணாது என்று சிற்றம் சிறு காலே வந்தோம் –
சிறுகாலே யூட்டி ஒருப்படுத்தேன் -என்று
மாத்ரு பரதந்த்ரனாய்
இளம் கன்று மேய்க்க வேணும் –

விடிந்த வாறே –
காலிப் பின்னே போம் –
எல்லியம் போதாக வரும் –
நீராட்ட அமைத்து வைக்கையாலே-ஆடி அமுது செய்யும் –
அல்லலுற்றான் வந்த பின்னை என்கிறபடியே
இருளிலே ஆள் பார்த்து ஊரிலே திரியும் –

அபிமதைகளை வேண்டின இடங்களிலே புணர்ந்து
இரா நாழிகை மூ வேழு சென்றவாறு இங்கே கிடை காட்ட வரும்
அக் காலம் அறிந்து வந்து கைக் கொண்டார்கள் –

நாள் தோறும் ஒரு விடிவு யுண்டாய் நடக்கிறது இறே –
ஸூப்ரபாதமாய்த்து இத் திவசம் ஒன்றுமாய்த்து –

அதுக்கடி என் என்றால்
வந்து
வந்த வருத்தத்தை –
வந்து தலைப் பெய்தோம் -என்று கீழே சொன்னார்கள் இறே

வந்து
சம்சார பதவியில் ஓடினவர்கள் மீண்டு வருவதிலும் வருத்தமுண்டு எங்கள் வரத்துக்கு –
தேஹாத்ம அபிமானம் பண்ணினாரை –
எதிர் சூழல் புக்குத் திரிகிறவனுடைய யத்தனத்தாலே வருவிக்கலாம் –
நிவ்ருத்தி சாத்தியம் என்று ஸ்வ ஸ்வரூபத்தை யுணர்ந்து வாராதாரை வருவிக்க அரிது இறே

உபாய ஸ்வீகாரத்தில் உபாய பிரதிபத்தி பண்ணாத படியான
நிலையிலே நிற்கிறவர்களை
க்ரியா ரூபமானத்தை ஏறிட்டுக் கொண்டு வரும் படி பண்ணுகை அரிது இறே

உவாச ச என்று
பெருமாள் திரு உள்ளத்தைப் புண் படுத்தினால் போலே சொல்லுகிறார்கள் —
வரவுக்கு நோவு படுகிறவனை வார்த்தையால் புண் படுத்தினான் –
தான் சரண்யராகப் பற்றி வந்தாரை யுண்டாக்கிக்
கார்யம் கொள்ள மாட்டிற்று இலன் என்றது இறே விபீஷணனை

அப்படியே நாலடி இட்ட நாங்களே வந்தோம் என்கிறார்கள் –
பத்ப்யாம் அபிகமாத்-என்று
தாம் வந்த தூரம் பாராதே வாசல் அளவும் புறப்பட்டது பொறுத்திலரே
(குகன் வந்ததை பெருமாள் வார்த்தை )

வந்து
இவ் வீதி போதுமாகில் (பெரியாழ்வார் – 3-4 )என்று வந்தால்
கார்யம் கொள்ள இருக்கும் நாங்கள் வரும்படி யன்றோ த்வரை இருந்தபடி

வந்து
பிறந்த இடத்தில் நின்றும் ஆயர் குலத்திலே வந்து
மழை கொலோ வருகிறது என்னும் படி வீதியோடே வந்து –
நம் தெருவின் நடுவே வந்து –
கதவின் புறமே வந்து –
முற்றம் புகுந்து –
நம் இல்லம் புகுந்து –
நீ மலர் அணை மேல் வைகி –
மாலை புகுர ப்ராப்தமாய் இருக்க –

படுக்கையை விட்டுப் படி கடந்து
காவலும் கடந்து –
உன் தோரண வாசலிலே வந்து –
உட் கட்டிலிலே புகுந்து –
பள்ளிக் கட்டில் கீழே –
சிற்றம் சிறு காலே வந்த வருத்தம் அறிய வேண்டாவோ –

கறவைகள் பின் சென்று என்று அந்த போக்கு நிகர்ஷமாக சொன்னால் போலே –
இவ் வார்த்தையும் தப்பு என்று இருக்கிறார்கள் –

ஸ்வரூபத்தை யுணராத போது அது ப்ராப்தமாய் இருக்கும் –
ஸ்வரூபத்தை உணர்ந்தால் இது ப்ராப்தமாய் இருக்கும்

உபாயாந்தரத்துக்கு நிவ்ருத்தி தோஷம் –
இவ் வதிகாரிக்கு பிரவ்ருத்தி குற்றம் –
ப்ராப்ய ப்ராவண்யம் ஸ்வரூபத்தை மறப்பித்தது –
பூமருவு கோல நம் பெண்மை சிந்தித்திராது போய் (பெரிய திருமொழி -11-2 )-என்னப் பண்ணும் இறே

நீங்கள் வந்து செய்த தப்பு என் என்ன

உன்னைச் சேவித்து
இது இறே நாங்கள் செய்த தப்பு என்கிறார்கள் –

எங்கள் ஸ்வரூபத்தை அறியா விட்டால்
உன் ஸ்வரூபத்தை தான் உணர்ந்தோமோ –

இத் தலையில் மித்ர பாவநையாய் இருக்கை –
இவனை விடில் தான் உளனாகாத படி இருக்குமவன் இறே –
வரவு தானே மிகையாய் இருக்கும் படி இருக்கிற யுன்னை –

அதுக்கு மேலே
துராராதர் பக்கல் செய்வது எல்லாம் செய்தோம்
பஞ்சாக்கினி வித்யையில் சொல்லுகிற பரிவ்ருத்தியை கரை ஏறி –
துஸ்ஸாதமாய் கை புகுந்தாலும் நிஸ்ஸாரமான விஷயங்களில் துவண்டு
அது தனக்கு உறுப்பாக இதர சேவையில் இழிந்து
அவர்கள் முகத்தில் விழித்து –
அவர்கள் முகத்தில் வெம்மை பொறுத்து
நீச பாஷணங்களைப் பண்ணித் திரிகை யாகிற ஸ்வ விருத்தியை அநாதி காலம் பண்ணிற்று

அத்தை தவிர்ந்து —
விஷயம் வகுத்ததாய்
ஸூசீலனாய்
ஸ்வாராதனாய்-
புலன் கொள் வடிவு படைத்தவனாய் (திருவாய் -8 )
தானே தன்னைத் தருவானாய்
தந்தால் பின்னை ஒரு காலமும் கை விடாதவனாய் இருந்தவனை
உசித தாஸ்யம் பண்ணுகை ப்ராப்தமாகச் சொல்லா நிற்க –

எதிரே இட்ட நாலடிக்கும் பொறாதே உபசாரம் சொல்லுமவன் கருத்து அறிகையால்
பின்னே தொடர்ந்து சேவித்ததை குற்றமாகச் சொல்லுகிறார்கள்

உன்னைச் சேவித்து
சோப்ய கச்சன்-என்று அபிகந்தாவான யுன்னை
அபிகமனம் பண்ணி
குசல பிரஸ்னத்திலே திருப்தனாம் உன்னை
நாங்கள் சேவிக்கை மிகை அன்றோ

சென்று
நாம் சேவித்தால் என்கிற
இரண்டும் மிகையுமாய் செய்தோம் இறே

பின்னே சென்று –
சூழவே நின்று -என்று
எங்களை தொடர்ந்து சேவிக்கிற யுன்னை

பேஜூர் முகுந்த பதவீம் -என்கிறபடியே
சுவடு பார்த்து திரிந்து
நாரணன் போம் இடம் எல்லாம் சோதித்து உழி தருகின்றாள் (பெரியாழ்வார் -3-7 )-என்னக் கடவது இறே –

சேவித்த அளவியோ -அதுக்கு மேலேயும் சில செய்திலோமோ-

உன்-பொற்றாமரை அடியே போற்றும்
சூட்டக் கண்ட பூவை விலை மதித்து விற்பாரைப் போலே
கண்டு அனுபவிக்கையே பிரயோஜனமாக இருக்கிற திருவடிகளைப் பெற்று வைத்து
வேறொரு பிரயோஜனம் தோற்றும் படியான செயல் செய்த செல்லாமை பாராய்

சேவித்து –போற்றவும்
தொடர்ந்து ஏத்தவும் (பெரிய திருமொழி -1-9 )என்கிற படியே

உன் அடி போற்றும்
ஸ்வரூப குணாதிகள் போற்றுகிறோம் அல்லோம்

அடியே –போற்றும்
அங்குத்தைக்கு மங்களா சாசனம் பண்ணி –
தனக்கும் ரக்ஷை தேடிக் கொள்ளுகை அன்றிக்கே
தன்னை அழிய மாறியும் அத் தலைக்கு நன்மைகளை ஆஸாஸிக்கை

புத்ர சிஷ்ய தாசாதிகள் தாங்களும் உண்டு உடுத்து
பித்ராதிகளுக்கும் சேஷமாய் இருக்குமா போல் அன்றிக்கே
அத் தலைக்கே சேஷமாய் இருக்கும் இருப்பு தனக்கு உஜ்ஜீவனமாய் இருக்கை

உன்னடியே போற்றும்
அடியானுக்கு அடியிலே இறே பிராப்தி –
அடிச்சியோம் என்கிறவர்கள் கூறாளும் துறப்புக் கூட்டில் போகார்கள் இறே
(திருமார்பை ஆசைப்படும் அத்திரு
திருவடியை ஆசைப்படும் இத்திரு )

உன் –பொன்–அடி
உலகம் அளந்த பொன்னடி போற்றுவர்களோ –
காடுறைந்த பொன்னடி போற்றுவர்களோ நாங்கள்
அவை –
உலகம் எலாம் தலை விளாக் கொள்ளுதல் —
வானவர் தம் சென்னி மலர் ஆவுதலாய் இறே அந்தப் பொன்னடிகள் இருப்பது –

இது
மாக மா நிலம் முழுதும் வந்து இறைஞ்சும் (பெரிய திருமொழி -5-8 )என்று இறே
இப் பொன்னடி இருப்பது –

உன் –பொன்னடி –
எல்லாருக்கும் பொதுவாய் இருக்கையும் -(பொது நின்ற பொன் அம் கழல் )
ஸ்ப்ருஹணீயமாய் இருக்கையும் –
கண்டால் விட ஒண்ணாது இருக்கையும் –
விட்டால் பிழைக்க ஒண்ணாது இருக்கையும் –
வெறும் பொன்னடியாய் இருக்கிறதோ –

பொற்றாமரை அடி அன்றோ –
சாதனத்வமும்
சாத்யத்வமும் பூர்ணமாய் இருக்கை –

பாவனத்வமும் போக்யத்வமும்
ப்ராப்யமாயும் ப்ராபகமாயும்
பொன்னும் தாமரையும்

தாமரை அன்ன பொன்னார் அடி இறே -(பெரிய திருமொழி 7-3)
தனம் மதீயம் தவ பாத பங்கஜம் -(ஸ்தோத்ர ரத்னம் )

உன் பொற்றாமரை அடியே
எங்களுக்குப் பொன்னும் பூவும் புறம்பே தேட வேணுமோ –

உன் பொற்றாமரை அடி
பெண்களுக்கு புறம்பு அந்நிய பரதைகள் யுண்டானால்
கிருஷ்ணன் அவற்றை குலைப்பதும் திருவடிகளாலே
அழித்தாய் உன் திருவடியால் –

கற்றினம் மேய்த்த எந்தை கழலிணை என்று
ஆசிரயணீயமும் இதுவே –

அவன் தாளிணைக் கீழ் புகும் காதல் -என்று
ஆசைப்படுவதும் இதுவே

ஆசானுகுணமாக
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே என்று (திருவாய் -10-4 )
இவர்கள் சென்னிக்கு கோலமாகச் சூடுவதும் இதுவே –

போற்றும்
பரமன் அடி பாடி –
அடி போற்றி –
கழல் போற்றி -என்று முடியச் சொல்லிக் கொண்டு போந்தார் இறே

கண்ணன் தாள் வாழ்த்துமது (பெரிய திருவந்தாதி )
ஸ்வரூப பிரயுத்தமாய் இருக்கும் இறே –

இதுக்கு மேல் ஓன்று நினைக்கும் படி இறே
ருசி காரியமாய் வந்த ஆற்றாமை இருந்த படி –

போற்றும் பொருள்
போற்றுகிற பிரயோஜனம் –
இவர்கள் போற்றும் பொருள் என்று பாரித்துக் கொண்டு
சொல்லத் தொடங்கினவாறே –

சிற்றம் சிறு காலை யுணர்ந்து வந்த அநந்தலாலே சிவந்த போதரிக் கண்களையும் –
இவர்கள் கோவை கனிவாயில் பழுப்பிலும்
பேச்சில் இனிமையிலும் –
வடிவு அழகிலும்
பாடகமும் சிலம்பும் த்வனிக்கிற இவர்கள் பொற்றாமரை அடியிலும் கண்ணை வைத்து
நாம் சொல்லுகிற இது இவன் பிரதிபத்தி பண்ணுகிறீலன் என்று தோற்றும் படி
அந்நிய பரனாய் இருந்தான் –

முன்பு இருக்கிறவனை
கேளாய்
என்கிறார்கள் –
இவர்கள் தாம் தங்களை அறிந்தால்
பின்னே நின்று வார்த்தை சொல்ல வேண்டாவோ –
வார்த்தை சொல்லா நிற்கச் செய்தே

கேளாய் –
என்னும் போது நடுவே அந்நிய பரனாக வேணும் இறே
(கேட்டியேல் மாலே பாசுரம் போல் )

கேளாய்
எங்கள் ப்ராப்யத்தை அழித்தோ நீ உன் ப்ராப்யம் பெறப் பார்ப்பது -என்று
அடியை விட்டுத் தொடையைத் தட்டுகிறார்கள் –

கேளாய்
அத்யா பயந்தி என்று ஓதுவிக்க இழிந்தவள் ஆகையால்
ஸ்ரூயதாம் என்று கேட்ப்பிக்க வேணும் இறே
இவன் தனக்கு சிஷ்யன் வாய்த்தால் போலே ஆக ஒண்ணாதே இவர்களுக்கு

கேளீரோ (2 )-என்று
பெண்களுக்கு முதலில் க்ருத்யாம்சம் சொன்னார்கள் –
இவனுக்கு க்ருத்யாமாம்சம் சொல்லுகிறார்கள் கேளாய் என்று

அழகிது -எனக்குத் தான் ஏதானால் நல்லது –
உங்கள் பேச்சே அமையாதா-
இது ஒரு பொருள் கேள்வியாய் இருந்தது
விடிவோறே வந்து கைக் கொண்டி கோள்-
நமக்கு உசித தர்மங்களையும் விட்டு –
புறம்பு உள்ள அந்நிய பரதைகளையும் தவிர்த்து
இற்றைக்கு இதுவே கேள்வியாக இருக்கிறோம் -சொல்லலாகாதோ என்றான் –

நீ கேளாய்
சீரிய சிங்கா சனத்திலே அன்றோ நீ இருக்கிறது –
தர்ம சாசனத்தில் இருப்பார்க்கு கேட்க வேண்டாவோ

நீ போற்றும் பொருள் கேளாய்
உனக்கு க்ரமத்திலே இவர்கள் கார்யம் செய்கிறோம் என்று ஆறி இருக்க ஒண்ணாது –
த்வரிக்க வேணும் காண் என்கிறார்கள் –

பேறு உங்களதாய் நீங்கள் த்வரியா நின்றி கோளே என்றான் –

பிறந்த நீ
இவ்வளவாய் த்வரித்தோம் நாங்கள் ஆகில் அன்றோ நாங்கள் மேலும் த்வரிப்பது-
எதிர் சூழல் புக்கு –
இவ்வளவாய் கிருஷி பண்ணின நீ
பல வேளையில் ஆறி இருக்கலாகாது காண் –
எங்கள் ருசி கார்யமான த்வரைக்கு முற்பாடனான நீயே பேற்றுக்கு முற்பாடானாக வேணும்
எத்தனை காரியத்தை இட்டு பிறப்போம் என்று தெரியாது –

இது என் –
என்பிது இது என்

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து நீ
இங்கு வந்து பிறந்தது ஏதுக்காக-ஆர்க்காகா -என்று விசாரிக்கலாகாதோ

பெற்றம் மேய்த்து உண்ணும்
நீ பிறப்பிலியாய் பிறவாதார் (நித்யர்( நடுவே இருந்து பிறவி அற்றார்க்கு (முக்தர்) முகம் கொடுக்கிற நிலத்திலே வந்தோமோ –
பிறவிக்கு போரப் பயப்பட்டு உன்னையே கால் காட்டுவார் உள்ள இடத்திலே வந்தோமோ –
பிறவா நிற்கச் செய்தே ஆஸார ப்ரதானர் புகுந்து நியமிக்கும் ராஜ குலத்தில் பிறவியிலே வந்தோமோ –
வாலால் உழக்குக்கு பசு மேய்க்க வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே
நீ என் செய்யப் பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ –

பெற்றம் மேய்த்து
தாழ்ந்தவர்களை ரக்ஷணம் பண்ணும் இக் குலத்திலே பிறக்கச் சொன்னார் யார் –
பர ரக்ஷணமும் பண்ணாமல்
ஸ்வ ரக்ஷணமும் பண்ணாதார் குலத்தில் உன்னை பிறக்கச் சொன்னார் ஆர் –

பிறந்த நீ
நீ ஆசைப்பட்டு பிறந்த பிறவி யன்றோ இது –
பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த
எங்கள் பெற்றத்து ஆயன் வட மதுரைப் பிறந்தான் (திருவாய் -9)-என்று
அல்ல இவர்கள் நினைத்து இருப்பது –

குலத்தில் பிறந்த
குலத்துக்கு தலைவரானவர் வயிற்றிலே பிறந்த படியால்
எல்லார்க்கும் சாதாரணம் இறே இப்பிறவி

நாம் உங்களில் வந்து பிறந்தோம் ஆகில்
நம்மைச் செய்யச் சொல்லுகிறது என் என்ன

அந்தரங்க வ்ருத்தி கொள்ளச் சொல்லுகிறோம் என்கிறார்கள் –

ஆரைத் தான் என்றான் –

எங்களை –
குலத்தில் பிறந்த நீ –
குலங்கெழு கோவியரான(பெரிய திருமொழி -3-3 ) -எங்களைக் கொள்ள வேண்டாவோ

நீளா குலேந ஸத்ருசீ –
எங்களில் ஒருத்தியை ஆசைப்பட்டு அன்றோ நீ இங்குப் பிறந்தது –

எங்களை
திரு மா மகள் மண் மகள்-என்கிற பிரதான மஹிஷிகள் உன்னைத் தேடி நிற்க
நீ ஆசைப்பட்டு மேல் விழும்படி உகைக்கைப் பாடி யான எங்களை
ஓசி செய் நுண்ணிடை இள யாய்ச்சியார் நீ உகக்கும் நல்லவர் (திருவாய் – 10-3-8 )என்று
நாங்கள் ஆதார விஷயம் என்று பிரசித்தம் அன்றோ –

பிறந்த நீ எங்களை
பிறவாதாரைப் பிறவாதார் ஏவிக் கொள்ளவும்
பிறந்தாரை பிறந்தார் ஏவிக் கொள்ளுகையும் பிராப்தம் அன்றோ

(அஜாயமானோ பஹு தா விஜாயதே இரண்டுமே நீயே தானே
அங்கு அவர்களை ஏவிக் கொள்ளவும்
இங்கு எங்களை ஏவிக் கொள்ளவும் பிராப்தம்)

இவ் வாய்க் குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த எங்களை விரும்பி அன்றோ -நீ ஆயனாய் பிறந்தது –
ஆயனாகி ஆயர் மங்கை வெய்ய தோள் விரும்பினாய்-(திருச்சந்த 41 )

எங்களை
பசுக்களுக்கு வேறு ரக்ஷகர் உண்டாகிலும் உன்னை ஒழிய வேறு ரஷிப்பார் இல்லாத எங்களை –
பசுக்கள் தானும் பறித்துத் தின்னும் –
பிறரும் ஐயோ என்னும் படி இருக்கும் –
இரண்டு ஆகாரமும் இல்லாத எங்களை

குற்றேவல்
அந்தரங்கமாக ஏவிக் கொள்ளுமது –
முகப்பே கூவிப் பணி கொள்ள வேணும் இறே -8-5
விடுத்த திசைக்கு கருமமும் இல்லை
கருதும் இடத்தில் வியாபாரமும் இல்லை –
அணுகின விருத்தியும் –
ஏவின விருத்தியாக வேணும்

திருத் திரைக்குள்ளில் விருத்தி –
உடை வாளும் அடுக்குருவும் எடுத்தல் –
கலசப் பானை பிடித்தல் –
படிக்கம் வைத்தல்
உமிழும் பொன் வட்டில் எடுத்தல் –
திருவடிகளை விளக்குதல்-
ஒலியன் (ஆலவட்டம் )பணி மாறுதல் –
சாமரம் இரட்டுதல் –
அடைக்காய் திருத்துதல் –
அடி வருடுதல்
முலைகள் இடர் தீர அணைத்தல்
இவை தொடக்கமானவை கோவிந்தர்க்குப் பண்ணும் குற்றேவல் ஆகிறது -(நாச்சியார் )

இவை எல்லாம் க்ரமத்திலே கொள்ளுகிறேன் என்றான்

எங்களைக்
தாஸ்யத்தில் சுவடு அறிந்து –
அதில் ருசியும் த்வரையும் விளைந்து
க்ரம பிராப்தி பொறுக்க மாட்டாத படி வந்து மேல் விழுகிற எங்களை

அனந்தர க்ஷணத்துக்கு நாங்கள் இருப்புத்தோம் என்று தோற்றி இருந்ததோ என்று
தங்கள் ஆற்றாமையை அணித்துக் காட்டுகிறார்கள்

சிறிது விட்டுப் பிடிக்க அறியாத எங்களை
ஒரு படுக்கையிலே ஓக்க இருக்க பிரிவதற்கு இரங்கும் எங்களை

குற்றேவல் கொள்ளாமல் போகாதே
உனக்கு விஹிதம்
பிறந்த நீ கொள்ளாமல் போகாது –

முன் தீம்பு செய்தார்க்கு வீண் போமோ –
புறம்புள்ள ஜீவனத்தை மாற்றினால் நீயும் இடது ஒழியவோ-
அன்ன பானாதிகள் தாரகமான நிலையைத் தவிர்ந்து
உன் வடிவு அழகைக் காட்டி –
எல்லாம் கண்ணன் -என்று
தாரகாதிகள் நீயேயாம் படி பண்ணினால்
ஸ்வரூப அனுரூபமான அடிமை கொள்ளாதே போகப் போமோ –

ஒருவனுக்கு இடுகின்ற சோற்றை விலக்கி பின்னை தானும் பொகட்டுப் போகவோ
நாங்கள் இசையாத அன்று தப்பினத்தைச் செய்யலாவது இல்லையே –
ஸ்வரூப ஞானம் யுண்டாய்
இசைவும் யுண்டான இன்று நழுவ விடுவுதோமோ

உண்டிட்டாய் இனி யுண்டு ஒழியாய்-
ஆசையை விளைத்த யுனக்கு அதின் கார்யம் செய்ய வேண்டாவோ

கொள்ளாமல் போகாது
நாங்கள் விட நினைத்தால் நீ தான் விட வில்லையோ –
திரு வாணை நின்னாணை கண்டாய் (திருவாய் -10-10 )-என்று ஆணை இட மாட்டார்கள் இறே
அபிப்ராயம் தோற்றச் சொல்லும் அத்தனை இறே –

வளைத்து வைத்தேன் இனி போகல் ஓட்டேன்-(பெரியாழ்வார் -5-3 )
தடுக்கையும் வளைக்கையும் ஆணை இடுகையும் பரிசு இறே –
கொள்ளாமல் போகாது என்று அடுகுவளம் (யானைக்கு கொடுக்கும் சோறு ) தடையான பின்பு
கேட்க என்று விடுகை இறே

கொள்ளாமல் போகாது -என்று மீள ஒண்ணாத படி நிர்பந்தித்தவாறே –
நாம் அந்தரங்கமாக வேண்டுமவை ஏவிக் கொள்ளுகிறோம் –

உங்களுக்கு நம் பக்கலிலும் சில கொள்ளாமல் போகாதே –
நீங்கள் நோன்புக்கு அங்கமாகச் சொன்னவற்றை
இப்போது கொண்டு போம் அத்தனை இறே –
நீங்கள் அனைவரும் அறிய வேண்டி வந்தத்தைக் கொண்டு போக வேணும் –

இப்போது –
பறை தருவான் -என்றும் –
பாடிப் பறை கொண்டு -என்றும் –
போற்றப் பறை தரும் என்றும் –
அறை பறை என்றும் –
இற்றைப் பறை கொள்வான் என்றும்
பறை தருதியாகில் -என்றும் –
சாலப் பெறும் பறை -என்றும் –
உன் தன்னைப் பாடிப் பறை கொண்டு -என்றும் –
நீ தாராய் பறை -என்றும் –
ஒருக்கால் சொன்னால் போலே ஒன்பதில் கால் சொன்ன பறையை
இற்றைக்கு கொள்ளுங்கோள் என்று
பெண்களுக்கு கொடுக்கும் படி -பறையை எடுத்துக் கொண்டு வாருங்கோள் என்றான்

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா-
இன்று ஒரு பிரயோஜனம் கொண்டு போமவர்களோ நாங்கள் –
உன்னை அங்கனே விடுவுதுமோ-

கெடுவாய்
யதா ஸ்ருத க்ராஹியாய் இருந்தாய் –
தாத்பர்ய ஞானம் பிள்ளையாய் இருந்ததீ –
அபிதான விருத்தி ஒழிய தாத்பர்யம் போகாதே இருந்ததீ
லோக சம்வாதத்துக்கு ஓன்று சொன்னோம் அத்தனை என்று இருக்க வேண்டாவோ –
அபிமத விஷயம் இருந்த இடத்தே சென்று தண்ணீர் என்றால் தண்ணீரை வார்ப்பார்களோ –
சொல்லுகிற வார்த்தையையும் எங்களையும் அறிந்து அன்றோ பரிமாறுவது –
நாங்கள் பறை என்றால் வேறு ஒன்றை த்வனிக்கிறது என்று அறிய வேண்டாவோ –

கொள்வான் அன்று காண்
எங்களை நீ கொள்ளுவான் அத்தனை ஒழிய
நாங்கள் உன் பக்கலிலே உன்னையும் ஒழியவும் கொள்வது ஓன்று உண்டு என்று இருந்தாயோ –

கோவிந்தா –
பசுக்களின் பின்னே திரிவார்க்கு பெண்களின் வார்த்தையின் கருத்து தெரியாது இறே –
பசுக்களின் பின்னே திரிவார்க்கு அவற்றுக்கு உள்ள ஞானம் இறே உள்ளது –
நாலு நாள் எங்களை விட்டுக் கெட்ட கேடு என் தான் –
நீ பசுக்களையே விரும்பி எம்மைத் துறந்தால் இதுவோ பலம்

(பெருமாள் ஆண்களுக்கு நடுவில் சீதாப்பிராட்டியை சொன்னதுக்கு
இங்கு இவர்கள் பதிலுக்கு அவனுக்கு இந்த வார்த்தை )

கோவிந்தா
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -என்று
ஞான பூர்வகமான உபாய ஸ்வீகாரம் பண்ணுகிற இடமாகையாலே
குண பூர்த்தி சொல்லக் குறை இல்லை அவ்விடத்திலே

ப்ராப்ய ருசியாலே
கண்ணாஞ்சுழலை இடுகையாலும்
பலாந்தரத்தைக் காட்டி நழுவத் தேடுகையாலும் யுண்டான ரோஷத்தாலும்
இவ்வளவும் சொல்ல வேணும் இறே இங்கு

கோவிந்தா
எங்களையும்
எங்கள் ப்ராப்யத்தையும் மறந்தால் போலே
உன்னையும்
உன் பிறவியையும் மறந்தாயீ

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த கோவிந்தா –
பூமியை எடுத்து நோக்கின மஹா வராஹமாக நினைக்கிறாயோ –
பூமியை நீர் ஏற்ற வாமனாக நினைக்கிறாயோ –
சப்த ராசியைப் பிரித்து எடுத்த ஹம்ஸ ரூபியாக நினைக்கிறாயோ –
அத்தைப் பிரகாசிப்பித்த ஹயக்ரீவ விஷமாக நினைக்கிறாயோ –
ஆதித்ய அந்தரவர்த்தியாக நினைக்கிறாயோ –

அறிவில்லாத பசுக்களுக்கு நிர்வாஹகானாய் வந்து பிறந்து
ஆயர் சிறுமியருக்கு உதவிற்று இல்லை என்றால்
பர வ்யூஹாதிகளையும்
யாதவ வம்சத்தையும் விட்டு
இடைச் சேரியில் ஸூலபனான யுன்னுடைய கிருஷியும் விபலமாகாதோ –

நீங்கள் சொன்ன வார்த்தைக்கு பலரும் அறியக் கருத்தாய் இருக்குமத்தை
நாமும் அறிந்து சொன்னோம் ஆகில்
நமக்குத் தாத்பர்ய ஞானம் இல்லை என்கிறது என் –
நீங்கள் குற்றேவல் என்கிறதிலே இரண்டு வகை அறிந்து சொல்லுங்கோள்
இற்றைப் பொழுதை உங்களோடு போக்குகிறோம் அங்கனேயாகில் என்றான்

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
இற்றை அளவிலே போகாது கண் –
இப் பிறவி அளவிலே போகாது காண்

எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும்
அகால கால்யமான-நலமந்த மில்லதோர் நாட்டிலே இருக்கவுமாம் –
ஆஸ்ரித சஜாதீயனாய்க் கொண்டு நிலை வரம்பில் பல பிறப்பாய்
சம்சார மண்டலத்தில் அநேக அவதாரம் பண்ணவுமாம்-
அதில் ஒரு நிர்பந்தம் இல்லை –

உன் தன்னோடு-
நீ பிறவாது இருக்கும் இடத்திலும்
பிறந்து திரியும் இடத்திலும்
கூடத் திரியும் அத்தனை

எற்றைக்கும்
தேவத்வே தேவே தேஹேயம் மனுஷ்யத்வே ச மானுஷீ-(ஸ்ரீ விஷ்ணு புராணம் )என்கிறபடியே
நாங்களும் ஒக்கப் பிறந்து விடாதே திரிய வேணும் –
இளைய பெருமாள் படை வீட்டிலும் காட்டிலும் ஓக்கத் திரிந்தால் போலே

உன் தன்னோடு
நீ சங்கு சக்ர கதா தரனாய் ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்கும் இடத்திலும்
எங்களோடு கண் கலந்த உன்னோடும் ஓக்கத் திரிய வேணும்

உன் தன்னோடு
அங்கே உருவார் சக்கரம் சங்கு சுமந்து உன்னோடு திரிகையும் –
செறி வில்லும் செண்டு கோலும் கைக் கொண்டு இங்கே திரியவும் பெறுவோமாக வேணும் –
இத்தை நினைத்து இறே
கச்சொடு பொற் சுரிகை அடியிலே இவர்கள் தான் அவனுக்கு வர விட்டது

(அவனியாள் -பூமா தேவி -இவளே தானே அப்போது கொடுத்து வைத்தாள்
நாங்கள் இப்பொழுது கொண்டு வர )

கோவிந்தா எற்றைக்கும் –
கோயில் கோள் தெய்வம் எல்லாம் தொழ வைகுந்தம் கோயில் கொண்டு -(திருவாய் 8-6-
நீ இருக்கும் இடத்திலும்

பின்னும் எம்மாண்பும் ஆனான் (திருவாய் -1-8 )-என்னும் படி
நீ பிறந்து திரியும் இடத்திலும் உன்னோடே திரிய வேணும் –

தேவும் தன்னையும் என்கிற (திருவாய் -2-7-4 )
இரண்டு அவஸ்தையும்
கோவிந்தனுக்கு இறே

உற்றோமே யாவோம்
சர்வ வித பாந்தவமும் உன்னோடே யாக வேணும் –
(பண்டை நாள் திருவாய் -எல்லா உறவின் காரியமும் நீயே )
ஒரு உறவைக் குறித்து -அது உண்டாக வேணும் என்னாது ஒழிந்தது
ஒன்றை விசேஷிக்கில் அல்லாதவை இல்லையாம் என்று
எல்லா உறவும் நீயேயாக வேணும்

உற்றோமே யாவோம்
நீ காட்டுக்குப் போக மூச்சடங்கும் உறவு உண்டாக வேணும்(சக்ரவர்த்தி)
அசலூரில் வளரப் போகப் பூண்டும் புலம்பும் உறவு உண்டாக வேணும்(தேவகி புலம்பினாள் )
நீ அபிமத விஷயங்களை விஞ்சி விநியோகம் கொண்டால் பொறாது ஒழியில் செய்வது என் என்று
வயிறு பிடித்துக் கொள்ளும் உறவு உண்டாக வேணும்(வெண்ணெய் உண்ட பொன் வயிறு என்னாகுமோ யசோதை )
நீ நில்லுங்கோள் என்றால் நீர் பிரிந்த ஜந்துக்களை போலே துடிக்கும் உறவு உண்டாக வேணும்
(அக் குளத்தில் மீன் போல் பிராட்டி இளைய பெருமாள் )
நீ பாம்பின் வாயில் விழுந்தாய் என்றால் பிணம் படும் படியான பாந்த்வம் வேணும்(கோகுல சராசரங்கள் )
கழிந்த பிழைகளுக்குக் காப்பிடும் உறவும் வேணும்
எங்கள் வீட்டில் இட்ட ஆசனத்தை ஊன்றிப் பார்க்கும் உறவும் வேணும்(விதுரர் மஹா மதி )
விட்டு அணைக்கத் தேடில் வெளுக்கும் உறவும் உண்டாக வேணும் -(பராங்குச நாயகி )

கோவிந்தா உன்தன்னோடு
மாதா பிதா பிராதா நிவாசஸ் சரணம் ஸூ ஹ்ருத் கதிர் நாராயண என்கிறபடி
அவரே இனி யாவார் என்று இருக்க ஒண்ணாது

பிராதா பர்த்தா ச பந்துச்சு பிதா ச மம ராகவா -என்கிறபடியே
அவர் உயிர் செகுத்த எம்மண்ணல் -என்று இருக்க ஒண்ணாது

(எம்பிரான் எந்தை இது போன்ற எல்லாம் சொல்ல மாட்டாளே
முதலிலே எல்லாம் )

அவை எல்லாம் உன்னோடே யாக வேணும் –
பெற்ற தாய் நீயே பிறப்பித்த தந்தை நீ மற்றை யாவாரும் நீ என்று இருக்க வேணும் –

உற்றோமே
சம்பந்தம் உண்டாய் இருக்கச் செய்தே
பத்து மாசம் பிரிந்து இருத்தல் -(சீதாபிராட்டி )
பதினாலாண்டு பிரிந்து இருத்தல் -(பரதன்)
பதினாறு ஆண்டு பிரிந்து இருத்தல் செய்ய ஒண்ணாது (நம்மாழ்வார்)
அத்தனையோ வேண்டுவது என்றான்

ஆட் செய்வோம்
அரசுக்குப் பட்டம் கட்டி அருகு இருக்க ஒண்ணாது –

ஆகிறது மற்று என் என்றான்

உனக்கு ஆட் செய்வோம்
ஆட் செய்யும் இடத்தில்
எங்களுக்கு உறவை அறிவித்து
அடிமை கொண்டு சாபேஷனாய் நிற்கிற யுனக்குச் செய்ய வேணும்

உனக்கு -ஆட் செய் வோம்
ஆட் கொள்ளத் தோன்றிய (ஆயர் தம் கோ -பெரியாழ்வார்-1-6)யுனக்குச் செய்ய வேண்டாவோ –
அத்தனையோ என்றான்

உனக்கே
உனக்கும் எங்களுக்குமாய் இருக்கிற இருப்பைத் தவிர்ந்து –
தனக்கே யாக -என்னுமா போலே கொள்ள வேணும் –

எங்கள் அபிநிவேசத்தாலே உன் அபிமதம் செய்ய ஒண்ணாது –
நீ உகந்ததாக வேணும் –

தேச கால அவஸ்தா பிரகார நியம சூன்யமாக அபிநிவேசத்தாலே பாரியா நிற்கச் செய்தேயும்
ருசிகரமான தேசத்தில் நியோகித்துக் கொள்ள வேணும் என்று
அவன் உகந்து ஏவினதைச் செய்யக் கடவராய் இறே இருப்பது
உன் தன் திரு உள்ளம் இடர் கெடும் தோறும் (திருவாய் -10-3 -காலைப் பூசல் )-என்னக் கடவது இறே
(பிரபல தர விரோதி அன்றோ )

நாம்
உனக்கு அபிமதம் ஆனத்தை எங்கள் நிர்பந்தம் ஒழிய
நீ ஏவ-( நாங்கள் ) -செய்த போது அன்றோ -எங்களுக்கு ஸ்வரூப சித்தி உண்டாயிற்று ஆவது

ஆட் செய்வோம்
உயர்ந்து உயர்ந்து அப்பாலவன்( திருவாய் -1-7)-என்கிறபடியே
உத்துங்க விஷயம் ஆகையால் –
ஆயர் சிறுமியரான தாங்கள் தாழ்ந்த மனிச்சராகையாலும்-
செய்வோம் என்று பிரார்த்திக்கிறார்கள்

கோவிந்தா உனக்கே நாம் ஆட் செய்வோம்
நீள் குடக் கூத்தனுக்கு ஆட் செய்வதே (திருவாய் – 4-10-10-)என்றபடி
உனக்கு ஆட் செய்யுமது அன்றோ ப்ராப்தமாய் இருக்கிறது –

அப்படி யாகிறது –
இனி என் என்றான்

காமம் மாற்று
வேறு ஒரு காமம் உண்டாய்ச் சொல்லுகிறது அல்ல விறே –
தேறேல் என்னை (திருவாய் -2-9 ) -என்று இருக்குமவர்கள் ஆகையால்
அடிமை செய்வாரையும் செறுமவை-
ப்ரக்ருதி வாசனையாலும்-
மனஸ்ஸூ அஸ்திரமாய் இருப்பது ஒன்றாகையாலும்
சம்பாவிதமாக சங்கித்து
சூடகமே என்று தொடங்கி நாட்டாருக்குச் சொன்னவை தொடருகிறதோ என்று
அது நடையாடாத படி வேணும் என்கிறது –

அத்தனையோ என்றான் –

அவ்வளவு போராது
மற்றை -காமம் -மாற்று
நீ ஸ்ரீ வைகுண்டத்தில் ஸூரிகளுக்கு முகம் கொடுத்து இருக்கும் இருப்பில்
க்ரமத்திலே பெறும் படி இருக்க ஒண்ணாது

நீயும் -பெண்காள் -என்று அழைக்க –
நாங்களும் கிருஷ்ணன் -என்று சொன்ன பரிமாற்றமே நடக்க வேணும்

ந காம கலுஷம் சித்தம் –
(சித்தம் திருவடிகளில் ஸ்ரீ விஷ்ணு பக்தியே வேண்டும் )

அவனுடைய ப்ராப்யத்தையும்
ப்ராபகத்வத்தையும்
சரண்யத்தையும்
இந்நிலத்தின் தண்மையையும்
அந்நிலம் உத்தேச்யம் என்னும் இடத்தையும் –
மநோ ரதம் தான் அமையும் என்னும் இடத்தையும்
சொன்ன வாறே

ஒரு அபேக்ஷை இன்றிக்கே
பலவற்றில் நெஞ்சு தாழா நின்றதே என்ன –

தேபாத் யோஸ்திதம் –மம சித்தம் –நகாம கலுஷம்
ப்ராப்யத்வம் ப்ராபகத்வம் சரண்யத்வம் -இவை எல்லாம் சொல்லிற்று நீ யாகையாலே –

இவ்விடம் த்யாஜ்யம் என்றது –
உன்னுடைய அனுபவத்துக்கு விரோதி யாகையாலே –
அவ்விடத்தில் உத்தேச்யதா புத்தி நடந்தது -அனுபவத்துக்கு ஏகாந்த ஸ்தலம் என்று –
அல்லாதவை உத்தேச்யம் அன்று என்று சொன்னது அல்லவே

உன் திருவடிகளில்
நிலை நின்றவர்கள் நெஞ்சு ஸ்ரீ வைகுண்டாதிகளாலே கலங்காது காண் என்றது இறே –
அப்படியே இவர்களும்
மற்றை –காமம் –
என்கிறார்கள் –

மாற்று -என்றது –
சிந்தை மற்று ஒன்றில் திறத்தில் அல்லா -(7-10- திருவாறன் விளை )
மற்று ஒன்றைக் காணா -(அமலனாதி பிரான் )
மற்று ஒன்றில் என்கிற இடங்களில் சொல்லுகிறத்தை

கோவிந்தா -மற்றை -காமம் -மாற்று –
கண்ணன் வைகுந்தனோடான நிலையைக் குலைக்க வேணும் -(திரு விருத்தம் -30)
(கண்ணன் கோவிந்தன் என்ற நிலையே நாங்கள் வேண்டுவது)
இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய் செய்யும் தவம் தான் என் -என்னுமவர்கள் இறே
நாங்கள் சிந்தையந்தி பட்டது படாமல் கிடாய் –
(பராங்குச நாயகி -தீர்க்க சிந்தையந்தி நிலை வேண்டுமே )

அத்தனையோ வேண்டுவது என்றான்

நங்காமம் –மாற்று
ஆட் கொள்ளும் இடத்திலே எங்களுக்கு ஒரு இந்திரிய சாபல்யம் நடக்கும் –
அந்த ஸுந்தர்ய ரூபமான அந்தராயத்தையும் பரிஹரிக்க வேணும் –
(நடை அழகைப் பார்க்காமல் கைங்கர்யம்
அப்பாஞ்ச ஜன்யம் )

அத்தனையோ என்றான்

காமங்கள்
என்கிறார்கள் -இருவர் கூடப் பரிமாறா நின்றால்
அத்தால் பிறக்கும் இனிமை இரண்டு தலைக்கும் ஒத்து இருக்கும் இறே

விஷய வைலக்ஷண்யத்தாலும்
ஆஸ்ரயத்தின் இனிமையாலும்
மிகவும் ப்ரீதி ரூபமாய் இறே பரிமாற்றம் இருப்பது –

(ரமதே -எங்கு நீ ஆனந்திப்பாயோ அங்கு பர்ணசாலை -சொன்னதும்
அழுதாரே இளைய பெருமாள் )

அதில் ஸ்வரூபத்துக்கு விரோதியான அஹங்கார கர்ப்பமான அடிமையும்
அபுருஷார்த்தம் இறே

நாங்கள் செய்கிற அடிமை கண்டு நீ உகந்தால்-
அவ் வுகப்பு கண்டு உகக்கமது ஒழிய
போக்த்ருத்வ பிரதிபத்தியும்
மதீயத்வ பிரதிபத்தியும்
போஜனத்துக்கு க்ரீமி கேசங்கள் போலே பொகட வேண்டும்படி
விரோதமாய் இறே இருப்பது –
அந்த விரோதிகளையும் தவிர்த்து தந்து அருள வேணும் என்கிறார்கள் –

(சேஷத்வத்தை விட பாரதந்தர்யம் ஏற்றம்
போக்த்ருதம் விட போக்ய புத்தி ஏற்றம் -ஆச்சார்ய ஹ்ருதயம் )

1-ஸ்வரூப விரோதியும் -(அஹங்காரம் )
2-சாதன விரோதியும் -(உபயாந்தரம் )
3-பிராப்தி விரோதியும் -(அநாதி கால பாபங்கள் )
4-ப்ராப்ய விரோதியும் -(ஸூவ போக்த்ருத்வ புத்தி )
என்று நாலு வகையாய் இறே விரோதிகள் இருப்பது-

அதில் சாதன விரோதியும்
பிராப்தி விரோதியும் கீழில் பாட்டிலே கழிந்தமை சொல்லிற்று –

மற்றை இரண்டையும் இப் பாட்டில் கழிகிறது

கறைவைகள் பின் சென்று –
உபாயாந்தரத்தில் அநந்வயம் சொல்லுகையாலும் –
பிராப்தி பிரதிபந்தகத்துக்கு அபராத ஷாபணம் பண்ணுகையாலும் இரண்டும் குலைந்தது இறே

ப்ராப்ய ருசியும் த்வரையும் ஆர்த்தியும் விளைந்து
பாஹ்யங்களிலே சங்கம் குலைந்த படி சொல்லுகையாலே
(இற்றைப் பற்றி கொள்வான் அன்று )
ஸ்வரூப விரோதி குலைந்த படி சொல்லிற்று –

இப் பாட்டில் முற்கூற்றாலே –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்கிறதாலே பல விரோதியைக் கழிக்கிறது –

கோவிந்தா உனக்கு என்று -அகாரார்த்தம்-தாதர்த்த சதுர்த்தி அர்த்தம் சொல்லிற்று
உனக்கே -என்று உகாரார்த்தம் சொல்லிற்று
நாம் என்று மகாரார்த்தம் சொல்லிற்று
உன்னோடே உற்றோமே யாவாம் -என்கிற இடத்தில் நாராயண பதத்தில் அர்த்தம் சொல்லிற்று
எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் என்கையாலே சதுர்த்யர்த்தம் சொல்லிற்று –
மற்றை நம் காமங்கள் மாற்று -என்று நமஸ்ஸில் அர்த்தம் சொல்லிற்று

நடுவே நமஸ்ஸூ கிடக்கிறது
ஸ்வரூப
உபாயங்கள் இரண்டிலும் கிடக்கிற விரோதி போக்குகைக்கு இறே

ப்ராப்ய ருசி கார்யமான த்வரையும்
அதின் பலமான கலக்கமும் –
விளைந்த ஆர்த்தியும் –
இது எல்லாவற்றுக்கும் அடியான ப்ராப்யாந்த்ர சங்க நிவ்ருத்தியும் –
பேற்றில் அளவிறந்த பாரிப்பும்
அதில் ஸ்வ பிரயோஜனத்வ நிவ்ருத்தியும் சொல்லா நின்று கொண்டு
பிரபந்த தாத்பர்யத்தையும் நிகமிக்கிறார்கள் –

1-சத்வ உத்தர காலத்தில் உணருகையும் -(சிற்றம் சிறு காலே)
2-பகவத் சந்நிதி ஏற வருகையும் (வந்து)
3-சேவிக்கையும் ( உன்னைச் சேவித்து)
4-விக்ரஹ அனுபவம் பண்ணுகையும் -(உன் பொற்றாமரை அடியே )
5-தத் சம்ருதியை ஆசாசிக்கையும் -(போற்றும் பொருள் )
6-தன் பக்கலிலே ஆபி முக்யம் பண்ணுவித்துக் கொள்ளுகையும்(கேளாய் )
6-அவதார பிரயோஜனங்களை விண்ணப்பம் செய்கையும் -(பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்த நீ )
7-ஆர்த்தியை பிரகாசிப்பிக்கையும் (நீ குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாதே)
8-திரு உள்ளம் அறிய பலாந்த்ர சங்க நிவ்ருத்தியைக் காட்டுகையும்(இற்றைப் பறை கொள்வான் அன்று)
9-ஸூரிகள் பரிமாற்றத்தை அபேக்ஷிக்கையும் (எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்)
10-ஸ்வரூப விரோதிகளை அறுத்துத் தர வேணும் என்று வேண்டிக் கொள்ளுகையும் (மற்றை நம் காமங்கள் மாற்றேலோ )
கைங்கர்ய ருசி யுடையாருக்கு ஸ்வரூபம் இறே –

இவை எல்லாம் நிழல் எழும்படி
கிருஷ்ணன் திரு முகத்தைப் பார்த்து விண்ணப்பம் செய்கிறார்கள் –

——————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை –கறவைகள் பின் சென்று–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 15, 2017

(மேம் பொருள் ஒரே பாசுரம்
உலகம் உண்ட பெரு வாயா ஒழி வில் காலம் எல்லாம் இரண்டு திருவாய் மொழி
போல் இங்கும் இப்பாசுரம் அடுத்த பாசுரம்
மந்த்ர ரத்னம் த்வயம் அர்த்தம் சொல்ல வந்தவை
ரஹஸ்ய த்வயத்தால் வியக்தம் இல்லாத
ஸ்ரீ சம்பந்தம் இதிலே தானே வியக்தம்
இரண்டு வாக்யத்திலும் ஸ்ரீ முன்னிடுவது உண்டே
முன் வாக்கியம் புருஷகாரமாக பிராட்டியைப் பற்றி சரணாகதி
பின் வாக்யத்தால் மிதுனத்தில் கைங்கர்ய பிரார்த்தனை
பிராட்டியாலே பேறு த்வயத்தாலே )

மார்கழி நீராடுவான் என்று நோன்பை பிரசங்கித்து –
அதுக்கு உபகரணங்களாக இருப்பன சங்கங்கள் முதலானவற்றையும்
சூடகமே தோள் வளையே என்று விரதம் தலைக் கட்டினால் அலங்கரிக்கைக்கும் –
உடுக்கைக்கும்
உண்கைக்கும்
வேண்டுவனவாய் இருப்பன சில உபகரணங்களையும் –
அவனுக்கும் தங்களுக்கும் அக வாயிலே சில நிழல் எழா நிற்க
நாட்டுக்கு மேல் எழுந்தன சில அபேக்ஷித்தார்களாய் நின்றார்கள் –
கீழ் இரண்டு பாட்டிலும் –

அணி யாய்ச்சியார் சிந்தையுள் குழகனார் (நாச்சியார் -4-10 )என்று
இவர்கள் நெஞ்சிலே கலக்குமவன் ஆகையால்
அவன் உங்கள் அபிசந்தி இவ்வளவு என்று தோற்றி இருந்தது இல்லை –
நீங்கள் சொன்னதையும்
இன்னம் மேலும் சொல்லுமவையும் யுண்டாகிலும்
நாம் தரும் இடத்தில்
நீங்கள் நின்ற நிலை தன்னை அறிந்து கொள்ள வேணும் –
பேறு உங்களதான பின்பு நீங்களும் சிறிது யத்னித்து வைக்க வேணும்
அதுக்கு உடலாக நீங்கள் அனுஷ்டித்த உபாயம் ஏதேனும் உண்டோ என்ன –

எங்கள் அளவு கண்டாய்க்கு சில சாதனங்கள் உண்டோ என்று
சொல்லும் படி இருந்ததோ -என்று
தங்கள் ஸ்வரூபம் இருந்த படியை அறிவித்து –
கேவலம் தயா விஷயம் என்னும் இடத்தை திரு உள்ளம் பற்றி
நீ எங்கள் கார்யம் செய்ய வேணும் என்று
தங்கள் உபாய ஸூந்யதையை விண்ணப்பம் செய்கிறார்கள் –
இப் பாட்டில் –

போற்றி யாம் வந்தோம் -(21)
எம் மேல் விழியாவோ -(22)
உன்னை அருத்தித்து வந்தோம் -(25 ) என்று தொடங்கி ப்ராப்ய ருசியை ஆவிஷ்கரித்தார்கள் கீழ்

அந்த ப்ராப்யத்தை பெறுகைக்கு உடலாக
தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும்
அவனுடைய உபாய பாவத்தையும் சொல்லுகிறார்கள் இதில் –

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் (23 ) என்றவாறே
வந்த வருத்தங்களை ஆராயாதே
அக வாயில் ஏதேனும் சில சாதனா அம்சங்கள் உண்டோ என்று ஆராய இழிந்தான்

நின் அருளே புரிந்து இருக்கிற எங்களுக்கு (பெரியாழ்வார் )எடுத்துக் கழிக்கலாம் படியும் சில உண்டு என்று இருந்தாயோ –
இரங்கு என்றும்
அருள் என்றும்
நாங்கள் அபேக்ஷித்த அருளுக்கு பிரதிபந்தமாய்க் கிடப்பன ஒன்றும் இல்லையே என்று
சர்வஞ்ஞன் அறிய
ஒன்றும் இல்லாமையை யாதார்த்தேன அறிவிக்கிறார்கள் –

1-சித்த உபாய சுவீகாரம் பண்ணும் அதிகாரிகளுக்கு பேற்றுக்குக்
கைம் முதலாய் இருபத்தொரு சத் கர்மம் இல்லை என்கையும்
(கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்)
மேலும்
2-யோக்யதை இல்லை என்கைக்கா தங்களுடைய நிஷ்கர்ஷ அனுசந்தானமும் –
(அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து)
3-மூல ஸூக்ருதமான ஈஸ்வரனுடைய குண பூர்த்தியை அனுசந்திக்கையும்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா
4-சம்பந்த ஞானமும் –
(உன் தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது)
5-பூர்வ அபராதங்களுக்கு ஷாமணம் பண்ணுகையும்
(அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச் சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே)
6-உபாய பூதனான ஈஸ்வரன் பக்கலிலே ப்ராப்யத்தை அபேக்ஷிக்கையும்
(இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-)
இவை ஆறும் அதிகாரங்கள் ஆகையால்

(இல்லை என்பதுக்கு ஏழு விதமாக அருளிச் செய்கிறார்
1-தர்ம நிஷ்டை இல்லை என்று சத் கர்ம ராஹித்யத்தை சொல்லுவார் –
2-நிகர்ஷம் சொல்லுவார் –
3-நிந்தித கர்ம பூயஸ்த்தை சொல்லி மேலும் யோக்யதை இல்லை என்பர் –
4-ஈஸ்வர குண பூர்த்தியை அனுசந்திப்பார்
5-சம்பந்த அனுசந்தானம் பண்ணுவார்
6-பூர்வ அபராதத்துக்கு ஷாமணம் பண்ணுவார்-
7-ப்ராப்யத்தை உபாய பூதனான நீயே தர வேணும் என்று அபேக்ஷிப்பாராய் இறே அதிகாரிகள் இருப்பது )

நோற்ற நோன்பு இலேன் -(திருவாய் )
குறி கோள் அந்தண்மை தன்னை ஒளித்திட்டேன்-(திருமாலை )
குலங்களாய ஈரிரண்டில் ஒன்றிலும் பிறந்திலேன் -(திருச்சந்த )
நலம் தான் ஒன்றும் இலேன் நல்லதோர் அறம் செய்திலேன் -(பெரிய திருமொழி-1-9)
தர்ம நிஷ்டை இல்லை என்று சத் கர்ம ராஹித்யத்தை சொல்லுவார் –

ராவணோ நாம –
ஜகத்திலே பேர் படைக்கும் படி பர ஹிம்ஸையிலே அதிர நடத்துவதொரு பேர் மாத்ரமாய்ப் போகாதே –
சர்வ விஷயமாக வழி கெட நடந்து பரஹிம்சையே யாத்ரையாய் இருபத்தொரு ஜென்மமாய் –
மேலும் திருத்த ஒண்ணாத படி நியாம்யன் அன்றிக்கே இருப்பான்
ஒரு தண்ணியனுக்கு சேஷ பூதனாய் –
அவனாலே தூஷிதமான யுதிரத்திலே சிரகாலம் வாசனை பண்ணிப் பிறந்து முறுகல் தனத்தில்
அவன் என்னைக் கொண்டு நடத்த அநீதிகளில் நடந்து –
அதில் அவனிலும் காட்டில் பிரகாசம் யுடையானாய் இருப்பான் ஒருவன் என்று நிகர்ஷம் சொல்லுவார் –

பொறுத்தேன் புன் சொல் நெஞ்சில் -என்றும் –
எப் பாவம் பலவும் இவையே செய்து என்றும் –
மனத்திலோர் தூய்மை இல்லை -என்றும்
நிந்தித கர்ம பூயஸ்த்தை சொல்லி மேலும் யோக்யதை இல்லை என்பர் –

அரவின் அணை அம்மானே -(திருவாய் )
நம்பி கடல் வண்ணா –
மாயனே எங்கள் மாதவன் (பெரிய திருமொழி-1-9-)–என்றும் –
சரண்யா (ஸ்தோத்ர ரத்னம் )-என்பராய்க் கொண்டும்
ஈஸ்வர குண பூர்த்தியை அனுசந்திப்பார்

உன் அடியனேனும் வந்து என்றும் –
புகல் ஒன்றும் இல்லா அடியேன் என்றும் -சம்பந்த அனுசந்தானம் பண்ணுவார்

நாயினேன் செய்த குற்றம் நற்றமாகக் கொள் என்றும் –
மத் வ்ருத்தம் அசிந்தையித்வா –ப்ரஸீதா -(ஸ்தோத்ர ரத்னம் )-என்றும்
சர்வான் அசேஷத க்ஷமஸ்வ (ஸ்தோத்ர ரத்னம் )என்றும் பூர்வ அபராதத்துக்கு ஷாமணம் பண்ணுவார்-

சன்மம் களையாய் —
உன்னடி சேர் வண்ணம் அருளாய் என்று ப்ராப்யத்தை
உபாய பூதனான நீயே தர வேணும் என்று அபேக்ஷிப்பாராய் இறே அதிகாரிகள் இருப்பது –

ஆகையால் இவர்களும்
1-தங்களுடைய ஆகிஞ்சன்யத்தையும்
2-அயோக்யதையையும் ஆவிஷ்கரித்து
3-உபாய பூர்த்தியையும்
4-தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு –
5-கீழ் சொன்னவற்று எல்லாம் அனுதபித்து க்ஷமை கொண்டு
6-எங்கள் ப்ராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று அபேக்ஷிக்கிறார்கள் –

கார்ய நிர்ணய வேளை யாகையாலும்
சர்வஞ்ஞன் சந்நிதி யாகையாலும்
உள்ள படி தீர விட்டுக் கொள்ளாத போது புரை அறாது இறே

நிதாநஞ்ஞனான பிஷக்கின் முன்பு வியாதி கிரஸ்தன் தான் பண்ணின அபத்யங்களை சொல்லி
அந்த வியாதியைத் தீர்த்துக் கொள்ளுமா போலே
ஸ்வ தோஷத்தை ஆவிஷ்கரித்து ஷாமணம் பண்ண வேண்டி இறே பிரபன்னர்க்கு இருப்பது –
(மறக்காமல் மறுக்காமல் மறைக்காமல் சொல்ல வேண்டுமே )

புறம்பு அந்த வியாதிக்கு
நிமித்தமும்
பரிஹாரமும்
பரிஹாரம் பண்ணும் பிஷக்கும்
பேஷஜமும்
பத்யமும்
வியாதி சமித்தால் புஜிக்கும் போகமும் பேதித்து இருக்கும் –

இங்கு வந்தால் அப்படி அன்று –

வேவாரா வேட்க்கை நோய் (திருவாய்-2-1)-என்று பிரேம வியாதிக்கு
நிமித்தமும் தானாய்

மாலே மணி வண்ணா என்று கிருஷ்ணன் தானே பரிஹாரம் பண்ணும்
மருத்துவமும் தானாய்

ஆயர் கொழுந்து மருந்தாம் (திருவாய்- 1-7)-என்று
பேஷஜமும் தானாய்

கொழுந்தில் கிழங்கு பத்யமுமாய் –

நோய் விட்டால் புஜிக்குமதுவும் -எங்கள் அமுது என்கிறபடியே
கிருஷ்ணன் தானாய் இறே இருப்பது –

மருந்தும் –அமுதமும் தானே என்று
அம்ருதம் ஒளஷதமாம் படி இருக்கிறது இறே

வியாதி க்ரஸ்தர் -மருந்து -என்று இருப்பார்கள் –
வியாதி ரஹிதர் அமுதம் என்று இருப்பார்கள் –

இங்குள்ளார் நோய்கள் அறுக்கும் மருந்து என்று இருப்பார்கள் –
அங்குள்ளார் போக மகிழ்ச்சிக்கு மருந்து என்று இருப்பார்கள்

நோய் இல்லாதான் ஒருவனும் (அவன் மட்டுமே)தன்னை மருந்து என்று அறியான் –
(நித்ய சம்சாரியும் அறியான் -சம்சாரம் வியாதி என்று எண்ணம் இல்லாதவன் )

தேனில் இனிய பிரானே அரு மருந்து ஆவது அறியாய் (பெரியாழ்வார் -2-7 )-என்னக் கடவது இறே

இப்படி பிரபலமாய் இருபத்தொரு ஒளஷதம் பெற்றால் கடுக பரிஹரித்துக் கொள்ள வேண்டும் என்கையால்
சுத்த பாவராய்
உன்னால் அல்லது செல்லாதாரைப் போலே
எங்களை நிரூபியாதே
திரு முன்பே நின்று சொன்ன வார்த்தையைப் பொறுத்து அருள வேணும்
என்று ஷாமணம் கொள்ளுகிறார்கள்

உபசார புத்தயா பண்ணும் அபசாரங்களையும் ஷமிப்பான் ஒருவன் ஆகையால் இறே
அபத்ய ஸஹ ஒளஷதம் என்றது –
நச்சு மா மருந்தும் (திருவாய்-3-4-நச்சி விரும்பி )இறே

இப்போதே எம்மை நீராட்டு என்று ஆசு கார்யமான ஒளஷதம் ஆகையால்
அப்போதே குளித்து உண்ணப் பண்ணும் இறே –

ஆகையால் கண் அழிவற்ற ப்ராபக ஸ்வீகாரம் பண்ணுகிறார்கள் –

ப்ராபக ஸ்வீகாரம் தான் –
தத் இதர சர்வ உபாய தியாக பூர்வகமாய்த்து இருப்பது –
அவை நின்ற நின்ற அளவுக்கும் ஈடாய் இருக்கும் –

அவற்றில் அதிகரிக்கைக்கு அசக்தனானவன் மாட்டேன் என்றும்
அதிகரித்தே அப் பிராப்தியை யுணர்ந்தவன் விட்டேன் என்றும் –
அறிந்து அதிகரியாதவன் அவை எனக்கு இல்லை என்றும்
அவை அறியாதவன் ருசி வாசனைகளும் இல்லாதவன் ஆகையால்
தான் பூர்ண அதிகாரி என்னும் இடத்தை காட்டினான் ஆகிறான்

ந ஸ ஸாமர்த்யவான் -என்பாரும் உண்டு –
ஸந்த்யஜ்ய என்பாரும் உண்டு –(விட்டேன்)
நோற்ற நோன்பு இலேன் என்பாரும் உண்டு –
மற்றேல் ஓன்று அறியேன் (பெரிய திருமொழி-1-9 )-என்பாரும் உண்டு –

ஆகையால் இறே உபாயம் சர்வாதிகாரம் ஆகிறது –

உபாயாந்தரம் யுடையவனுக்கு அவற்றை விட வேண்டுவான்
என் என்னில்-
பகவத் வியதிரிக்தமாய் இருபத்தொரு ஓன்று உபாயம் ஆக மாட்டாமையாலே-
அவை உண்டானாலும்
இவன் கை பார்த்து இருக்க வேணும் இறே

அவை அஸக்ய கிரியை என்று மீளுதல்
ஸ்வரூபத்தை உணர்ந்து மீளுதல் அத்தனை –

அவை உடையவர்கள் விடுவது
இல்லாதவர்கள் இல்லை என்று அறிவிக்கையுமாய் இறே இருப்பது –

அதில்
இவர்கள் தான்
எங்களுக்கு த்யாஜ்யாந்தரம் இல்லை என்கிறார்கள் –

மஞ்சனக் கொட்டும்
மேல் சங்கும்
போற்றவும் புகழவும்
பகல் விளக்கு பிடிக்கையும்
கொடி எடுக்கையும்
மேல் கட்டி கட்டுகையும்
ஆபரணங்கள் பூண்கையும்
உடுக்கை உடுக்கையும்
அடுகுவளம் எடுக்கையும் இவை எல்லாம் அதிசயித புண்யருடைய வரிசை இறே

ஷூத்ரமான ராஜ போகமன்றே நீங்கள் நினைக்கிறது –
வான் இள வரசு -நம்மோடு கூடி இருந்து
குளிர்ந்து
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் புஜிக்கும் போது
ஜன்மாந்தர சஹஸ்ரங்களிலே
தபோ ஞான சமாதிகளாலே விளைந்த புண்ய பலமாக வர வேணும் –
அப்படிக்கு நீங்கள் ஏதேனும் செய்தது உண்டோ -என்ன சொல்லுகிறார்கள் –

கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்து உண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆய்க்குலத்து உன் தன்னைப்
பிறவி பெறும்தனைப் புண்ணியம் யாம் உடையோம்
குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா உன் தன்னோடு
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேர் அழைத்தனவோம் சீறி அருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்-

பதவுரை

குறைவு ஒன்றும் இல்லாத கோவிந்தா!
யாம்-நாங்கள்
கறவைகள் பின் சென்று–பசுக்களின் பின்னே போய்
கானம் சேந்து–காடு சேர்ந்து
உண்போம்–சரீர போஷணமே பண்ணித் திரியு மவர்களாயும்,
அறிவு ஒன்றும் இல்லாத–சிறிதளவும் அறிவில்லாத
ஆய்க் குலத்து–இடைக் குலத்தில்
உன் தன்னை–உன்னை
பிறவி பெறும் தனை புண்ணியம் உடையோம்–(ஸஜாதீயனாகப்) பெறுவதற்குத் தக்க புண்ணியமுடையவர்களாயுமிரா நின்றோம்
இறைவா–ஸ்வாமியான கண்ண பிரானே
உன் தன்னோடு உறவு–உன்னோடு (எங்களுக்குண்டான) உறவானது
இங்கு தமக்கு ஒழிக்க ஒழியாது–இங்கு உன்னாலும் எம்மாலும் ஒழிக்க ஒழிய மாட்டாது
அறியாத பிள்ளைகளோம்–(லோக மரியாதை ஒன்றும்) அறியாத சிறு பெண்களான நாங்கள்
உன் தன்னை–உன்னை
அன்பினால்–ப்ரீதியினாலே
சிறு பேர் அழைத்தனவும்–சிறிய பேராலே (நாங்கள்) அழைத்ததைக் குறித்தும்
நீ-(ஆஸ்ரித வத்ஸலனான) நீ
சீறி அருளாதே–கோபித்தருளாமல்
பறை தாராய்–பறை தந்தருள வேணும்;
எல் ஓர் எம் பாவாய்

கறவைகள் பின் சென்று
1-சாங்க அத்யயனம் பண்ணி -‘
2-அர்த்த ஞானம் பிறந்து –
3-விஹித கர்மங்களை அனுஷ்ட்டித்து –
4-விரோதி பாப ஷயம் பிறந்து –
5-ஸூத்த பாவனாய்
6-ஜிதேந்திரனாய் விஷயங்களின் நின்றும் ப்ரத்யாஹ்ருதமான மனசை ஆத்ம ப்ரவணம் ஆக்கி
7-ஆத்ம யோகம் கை வந்து
8-அந்தர்யாமி அளவும் சென்று
9-அவனுடைய ஸ்வரூபாதிகளை ஸ்ரவண மனனங்கள் பண்ணி
10-அர்ச்சன ப்ரணாமாதி பூர்வகமான நிரந்தரமான தியானத்தை பண்ணி –
இப்படி திரண்ட ஸூஹ்ருதத்தாலே உன்னைப் பெறும் அந்த யோகத்தில் அந்வயிப்பதாக இறே
வேதாந்தங்களில் சொல்கிறது

1-இந்த தர்சன சாமாநாகாரமான நிரந்தர ஸ்ம்ருதிக்கு விஷயமான
2-பகவத் ஸ்வரூப ஞானத்துக்கு காரணமான
3-ஆத்ம அவலோகந ஹேதுவான
4-ஜிதேந்த்ரியத்துவத்துக்கு மூலமான
5-பாப க்ஷய ஹேதுவான
6-விஹித கர்ம அனுஷ்டானத்துக்கு நிமித்தமான –
7-அர்த்த ஞானத்துக்கு சாதனமான
8-சாங்க அத்யயனம்
9-குருகுல வாச சாபேஷமாய் இறே இருப்பது –

அதுக்கு அடியாக நாங்கள் குருகுல வாசம் பண்ணின படியைக்
கேட்டருளல் ஆகாதோ என்கிறார்கள்

கறவைகள் பின் சென்று
இவர்கள் சேவித்த ஆச்சார்யர்கள் இருக்கிறபடி-

அபிஜன வித்யா விருத்தங்கள் மூன்றும் அவதாதமாய் இருப்பாரை இறே ஸேவ்யராகச் சொல்லுகிறது –
திர்யக் ஜென்மம் ஆன படியால் பிறவியும் விபரீதமாய்
ஞான ஹீனரை பசு பிராயர் என்னும் படி ஞானமும் இன்றிக்கே
துராசாராரை ந்ரு பசுக்கள் என்னும் படியாகவும்
பசு சமர் என்னும் படியாகவும்
விருத்த ஹீனங்களும் ஆனவற்றை இறே நாங்கள் ஆச்சார்யர்களாக பிரபத்தி பண்ணுவது

பஹு ஸ்ருதராகையாலே ஞான விருத்தருமாய்
ஞான விருத்தர் பலர் நெடும் காலம் சேவிக்கைக்கும் வீத ராகர் ஆகைக்கும்
வயோ விருத்த ரூபமாய்
ஞான அனுரூபமான சீலத்தாலும் பழுத்து ப்ரஹ்ம வாதிகளாம் படி தத்வ தர்சிகளுமாய்
விபரீதம் சொல்லும் பாஹ்ய குத்ருஷ்டிகள் ஆகிற- பரரை -பிறரை- பிரமாண சரங்களாலே வென்று
பகவான் மனன பரராய்
கர்த்தவ்யங்கள் சோராமல் அனுஷ்ட்டித்து
ஒரு ப்ரஹ்ம நிஷ்டராய் இருப்பாரை ஆச்சார்ய அனுவர்த்தனத்தைச் சொல்லுகிற சாஸ்திரங்களில்
சொன்ன பிரணிபாத
அபிவாதன
பரப்ரஸ்ன சேவைகளில் ஒன்றும் குறையாத படி இன்றே அனுஷ்டித்துக் கொண்டு இறே அறிவுடையார் போருவது –

நாங்கள் கறவைகளை அனுவர்த்தித்தோம் –
அதுக்கு உறுப்பாக உண்ணும் நாளும் இன்றிக்கே உறக்கமும் இன்றிக்கே
பயாநாமபஹாரியை அண்டை கொண்டு அபயங்கதராய்
இளையவர் கலவியின் திறத்தை(பெரிய திருமொழி-1-6) நாணினவர்களை இறே அனுவர்த்தநீயராக சாஸ்திரம் சொல்வது –

ஆஹார
நித்ரா
பய
மைதுனங்களில் அநியதங்களாய் இருக்கும் பதார்த்தங்களை ஆச்சார்யர்களாக வரித்தோம்
இது எங்களுடைய வ்ருத்த சேவை இருந்த படி

கறவைகள் பின் சென்று
அறிவு கேட்டுக்குத் தலையான கன்று காலிகள் முன்னே போக
அவற்றின் பின்னே சென்றாய்த்து இத்தனை காலமும் திரிந்தது

எங்களை பார்த்தால்
பசுக்களும் வசிஷ்ட பராசராதிகள் கோடியிலே யாய்
எங்கள் இளிம்பு கண்டு சிரித்து
எங்கள் ஆர்ஜவத்தை அநுகரித்து அவை வழி காட்ட அவற்றின் பின்னே திரிந்தோம் சிலர்

காலிகள் பின் சென்று என்னாதே –
கறவைகள் பின் சென்று -என்றது
தர்ம புத்தயா ரஷித்தது அன்று –
பிரயோஜன புத்தயா செய்தது என்கைக்காக –
எருதுகள்
வறடுகள்
ஈற்று மறுத்தவை ரஷித்து அறியோம் –

பின் சென்று
ப்ராப்ய ருசி யுடையார் அது கை புகுரும் அளவும்
பெரு விடாயர் நீர் நசை யுள்ள இடம் எங்கும் தட்டித் திரியுமோ பாதி
ருசிக்கு வர்த்தகராய் இருப்பார் பின்னே
கலசம் பூர்ணமாதாய பிருஷ்டகோ அநு ஜகாமஹ -என்கிறபடியே
பூர்ண கலாசாதிகளையும் கொண்டு ஸமித் பாணிகளாய்த் திரிதல் –

பிராப்யம் கை புகுந்தால்
பிருஷ்டதஸ் து தநுஷ் பாணி -என்னும் படி
தாய் நாடும் கன்றே போல் பிரிவில் நாக்கு ஓட்டும் படி
வாளும் வில்லும் கொண்டு
பின் தொடர்ந்து அனுவர்த்தித்து திரியக் கடவதாய் இறே இருப்பது –

அதுக்கு உடலாக நாங்கள் உறியும் மழுவும் தடியும் கொண்டு
ஞான பிரதராகவும்
ப்ராப்ய வஸ்துவாகவும் நினைத்துப் பின் சென்றது பசுக்களை –

கறவைகள் பின் சென்று
பசுக்களை மேய்த்து பின்னே திரிந்தாலும்
போய்த் தங்குவது சத்துக்கள் இருக்கும் புண்ய ஷேத்ராதிகள் ஆகில் அழகியது இறே
கோவலூர் சாளக்ராமாதிகள் அயோத்தியை மதுரை கோயில் தொடக்கமான
யூர்கள் கிராமங்கள் ஆஸ்ரமங்கள் தொடக்கமான இவற்றில்
இராத் தங்கினாலும் அழகியது இறே என்ன

கானம் சேர்ந்து
என்கிறார்கள் -வஸ்து பூதர் வர்த்தித்தல்
நீ அபிமானித்தல் செய்யும் பிரதேசங்களிலும்
மழைக்கு ஒதுங்கி ஓர் இராத் தங்கியும் அறியோம்
ஒரு கோபாலர் அபிமானத்தில் மழைக்கு ஒதுங்கில் வாரிப் பிடியாக அகப்படும் இறே

கானம் சேர்ந்து
பசுக்களுக்குப் புல்லும் நீரும் உள்ள இடம் தேடி
அவ் விடத்தே நெருங்கிப் போந்தோம் இத்தனை

கானம்
காடுகளில் -தண்ட காரண்யம்-நைமி சாரண்யம் -பத்ரிகாஸ்ரமம் -தொடக்கமான வற்றிலே
நம்முடைய அபிமானம் யுண்டாய் –
சத்துக்களும் ஒதுங்கிப் போருவர்களே என்ன –

ஒரு விசேஷணம் இடாதே
வெறும்-கானம் என்கிறார்களே -இவர்கள் வர்த்திக்கும் காடு –
எவ்வுஞ்சிலை வேடர் காடு இறே -(பெரியாழ்வார் -3-2 )
அடி இடுவார் காலிலே அருவும் -பிருந்தாவனம் ஆகையால் சத்துக்கள் சேரும் இடம் அன்றே

(சேர்ந்து–பதம் – உள்ள அருளிச் செயல்களை காட்டி அருள்கிறார் மேல்)

சென்று சேர்ந்து
பரவிச் சென்மின்களே —
சென்று வணங்குமினோ -என்னும் இடங்களில் சென்று அறியோம் –

சேர்மினீரே-
மணி மாடம் சேர்மின்களே -என்கிற இடங்களில் சேர்ந்தும் அறியோம்

பரன் சென்று சேர் -என்று
உனக்கும் கந்தவ்யமாய் ப்ராப்யமுமாய் யன்றோ அவை இருப்பது
அவற்றில் சென்றும் அறியோம் –

சேர்ந்தும் அறியோம் –
சென்று -சேர்ந்து -என்கையாலே -அவற்றிலே பொருந்தி இருக்கை –
சத்துக்கள் அனுவர்த்தனமும்-
புண்ய க்ஷேத்ர வாசமும் பெற்றிலோம் என்கிற இழவும் இல்லை –

நீங்கள் வைசியர் ஆகையால் கோ ரக்ஷணத்தை வர்ண தர்மத்தில் சில எழுதலாம் –
காட்டில் தங்குகையை வான பிரஸ்தான ஆஸ்ரமத்திலே முதலிட்டு ஆஸ்ரம தர்மம் ஆக்கலாம் –
ஆச்ரய அர்த்தமாக பசுக்களை மேய்த்து காடுகளில் தங்குகையும் தர்மமாகச் சொல்ல நிற்கும் –
தபஸ் பரரான ரிஷிகளும் அரண்ய வாசம் பண்ணி அன்றோ தர்மார்ஜனம் பண்ணுவது –
ஆகையால் கர்ம யோகத்தில் அடைக்கலாய் இருபத்தொரு புடை யுண்டே
அவற்றுக்கு என்ன –

உண்போம் –
என்கிறார்கள் -வர்ண ஆஸ்ரமங்கள் நடத்துகைக்காகவும்-
ஆஸ்ரய அர்த்தமாகவும்
வீத ராகரைப் போலே அத்ருஷ்டார்த்தமாகவும் செய்தது அல்ல –
காய கிலேசத்தை பிறப்பித்து
அத்தாலே ஒரு புண்யம் உண்டாகைக்காக தர்ம புத்யாயா செய்தோம் அல்லோம் –
உதர போஷண பரராய்ச் செய்தோம் அத்தனை

உண்போம்
வயிறு வளர்க்கையே புருஷார்த்தம்

கானம் சேர்ந்து உண்போம்
காட்டில் போனால் புழுதியும் வேர்ப்பும் போகக் குளித்து உண்டு அறியோம் –
குளித்து உண்ணில்-ஸ்நாத்வா புஞ்சீத -என்கிற விதியை
அனுவர்த்தித்தார்கள் என்று அவன் தர்மம் ஏறிடுமே

உண்போம்
அருகிருந்தார் கையில் ஒரு பிடி இட்டு அறியோம் —
அப்போது ஆதித்யம் -அதிதி பூஜை –பண்ணினார்கள் என்று தர்மம் எழுதும்

கானம் சேர்ந்து உண்போம் –
ஒருவர் வாச பூமியிலே புக்கு உண்ணில் –
அங்கே தேவதைகள் இருக்கையாலே யஞ்ஞ சிஷ்டாசானம் பண்ணினி கோளே என்று பிடிக்கும்

பின் சென்று உண்போம்
பிராங்முகத்வாதி நியமம் இல்லை

சென்று உண்போம்
இருந்து உண்ண வேணும் என்கிற நிர்பந்தம் இல்லை

உண்போம்
பசுக்கள் அசையிடாது இருக்குகிலும் நாங்கள் புஜியாது இருப்பதில்லை

உண்போம்
உச்சிஷ்டம் -அபோஜ்யம் -பர்யுஜிதம் தொடக்கமான வற்றில் ஒரு வரம்பு இல்லை

இது எங்களுடைய கர்ம யோகத்தின் நிலை இருந்த படி என்கிறார்கள் –

நாம் காலிப் பின்னே போகிறிலோமோ-(பெரியாழ்வார் -3-3-1)
நாம் காடு வாழ் சாதி ஆகிறிலோமோ-
வேண்டி அடிசில் உண்ணும் போது ஈது என்று பசித்து இருந்து
சோறு பெற்றால் நின்றார் உகப்பும் சிறிதும் நினையாதே
ஆடி அமுது செய்(பெரியாழ்வார் 3-3 ) என்றாலும் குளியாதே-
மந்த்ர விதியில் பூசனைகளையும் விலக்கித் திரியா நின்றோம் -(பெரிய திருமொழி-2-3 )
நமக்கு ஏதேனும் தோஷம் உண்டாகா நின்றதோ என்ன –

உங்களுக்கு ஏச்சுக் கொலோ -என்று
நாங்கள் செவி புதைக்கும் படி நிந்திதமான வார்த்தையைச் சொன்னாயீ என்ன

ஆகில் தேஜோ விசேஷேண ப்ரத்யவாயோ ந வித்யதே -யன்றோ –
ஞானாதிகரான உங்களுக்கு இவை தோஷாவஹமாய் புகுகிறதோ என்ன

கேவலம் உதர போஷண பரராய் இருக்கிற எங்களை
ஞானம் யுடையவர்கள் அன்றோ என்னலாமோ என்கிறார்கள்

இப்போது இவை இல்லை யாகிலும்
ஜன்மாந்தரங்களிலே சத் கர்மங்கள் யுண்டாய் –
அத்தாலே பாப ஷயம் பிறந்து
மநோ நைர்மல்யம் யுண்டாய்
இப்போது ஞானம் பிறக்கவுமாகுமே –

உங்களைப் போலே கோ ரக்ஷணம் பண்ணுகையும் அன்றிக்கே
கோ வதம் பண்ணுகையை பிரயோஜனமாய் –
அது க்ரயித்து
ஜீவியா நிற்கச் செய்தே
தர்ம ஸந்தேஹ நிவர்த்தகனாய் இருந்தான் தர்ம வ்யாதன் அன்றோ –

உங்களை போலே அரண்ய வாசம் பண்ணாதே
நகர வாசம் பண்ணா நிற்கச் செய்தே
விதுரன் ஞானாதிகன் என்று பிரசித்தனாய் இருந்தான் –

யதேஷ்ட அன்ன பரனாய் திரியா நிற்கச் செய்தே –
ஆதி பரதன் அத்யாத்ம வித்வானாய் -உபதேஷ்டாவாய் இருந்தானே

இவர்கள் எல்லாம் கிடக்க
உங்களோட்டை பெண்டாட்டி தான் சிரமணி யன்றோ தர்ம நிபுணையாய் இரா நின்றாள்

கர்ம யோகம் இல்லையாகில் ஒழிகிறது –
மோக்ஷ ஹேது வான ஞான பக்தி யுண்டாகில் குறையில்லையே –
அவை வளர வளர
க்ஷிப்ரம் பவதி தர்மாத்மா என்கிறபடியே
அவை தன்னடையே குலைந்து விடும் –
பஹு மந்தவ்யைகளான உங்களை நாம் எளிதாக நினைத்து இராமே என்ன

அறிவொன்றும் இல்லாத –
என்கிறார்கள் -எங்களை அப்படியோ நினைத்து இருக்கிறது –
நீ நினைத்து இருக்கிற ஞானத்தில் பிரசங்கத்தில் பிரதி ஷேதமும் இல்லை காண்

1-அறிவில்லை
2-அறிவு ஓன்று இல்லை
3-அறிவு ஒன்றும் இல்லை

1-கர்ம யோகத்தில் உண்டான –
2-ஆத்ம யாதாம்யா ஞானம் இல்லை –
3-பக்தி யாகிறது ஞான விசேஷம் ஆகையால்
அந்த ஆத்ம ஞானம் அடியாக
யுன் பக்கல் ஞானம் பிறந்து
நீ உத்தேச்யன் என்று புத்தி பண்ணி
உன் பக்கலிலே யுண்டான அனவரத பாவன ரூபமாய் வரும்
பக்தி ரூபா பன்ன ஞானம் இல்லை –

இவை இரண்டுக்கும் அடியான பிரகிருத ஆத்ம விவேகாதிகள்
சம தமாதி சாதன சமபக்தி தொடக்கமானவை யுண்டாய்
முமுஷுவாகைக்கு யோக்யமாய் இருக்கும் அவற்றிலும் ஓர் அன்வயம் இல்லை –

கர்ம யோகம் தானும் ஜீவ பர யாதாம்ய ஞானக பூர்வகமாக இருப்பது அன்றோ என்னில்
தேஹாதிரிக்த ஆத்ம ஞானமும் ஈஸ்வர ஞானமும் கர்ம அங்கமாய் இருக்கும் –
இவ்வளவே அங்கு உள்ளது –

(சேஷ பூதன் என்ற அறிவால் ஞான யோகம் பிரதானம் ஆத்ம ஞானமே முக்கியம் ஸ்ம்ருதி ரூபம்
அவனை பிரதானம் பக்தி யோகம் இதுவும் ஸ்ம்ருதி ரூபம் )

இப்போது தனித்து உபாயமாய் நிற்கும் ஞான யோகத்தையும்
பக்தி யோகத்தையும் இல்லை என்று சொல்கிறது

அறிவு இல்லை என்கிறதும் ஓர் அறிவின் கார்யம் இறே –
பேற்றுக்கு உடலாக தங்கள் தலையால் வரும் அறிவை இவர்கள் இல்லை என்கிறது

அறிவு ஒன்றும் இல்லாத
ஞான தவ்யங்களாய் இருக்குமவை ஒன்றிலும் அறிவில்லை என்று
தந்த்ரேண உபாதானம் பண்ணுகிறார்கள்

உண்போம் அறிவொன்றும் இல்லாத
ஆஹார சுத்தி உண்டானால் அன்றோ ஞானம் பிறப்பது –
ஊணர்க்கும் உண்டோ அறிவு –
ஞானம் உண்டாய்க் கழிந்ததாகவும் கூடுமே –
மேல் உண்டாகைக்கும் யோக்யதை யுண்டே என்ன

ஆய்க் குலம்
அறிவில்லாமை ஜென்ம சித்தம் –
எங்கள் பிறப்புக் கண்டாய்க்கு கர்ம ஞான பக்திகள் யுண்டோ என்று கேட்க வேண்டி இருந்ததோ
கீழே இல்லை என்றவை உபேக்ஷையாய் வந்தது அன்று –
யோக்யதை இல்லாமையால் குலைந்தது என்கிறார்கள் –

ஆய்க்குலம்
ராவணன் துர் வ்ருத்தன் என்கைக்கு அடி என் என்ன –
ராக்ஷஸன் என்றால் போலே –
ஏழை ஏதலன் என்கைக்கு அடி என் என்ன –
கீழ் மகன் என்றால் போலே
அறிவில்லாமைக்கு -ஆய்க்குலம் என்கிறார்கள் –

ஒன்றும் அறிவு ஒன்றும் இல்லாத ஒருவரைக் கோபாலர் (பெரியாழ்வார் -3-8 )-என்னக் கடவது இறே –
வ்ருத்த ஹானியை யுணர்ந்து திரிய விடுவிக்க ஒண்ணாத படியாய்த்து இருப்பது ஜென்மம்

யஞ்ஞ தான தபஸ் ஸூக்களுடைய பரிகரங்களுக்கு
விபரீதங்களிலே நடந்த படியால் கர்ம யோகம் இல்லை என்றி கோள்

ஆத்ம ரதியாய் ஆத்ம திருப்தனாய்-இந்த்ரியங்களைத் தேடாமல்
ஆத்ம ஸந்துஷ்டனாய் க்ருதக்ருதனாய் இருக்குமவனுடைய ஞான யோகமும்

அநந்ய பக்தனுடைய பக்தியும் இல்லை என்றீர்கள்

ஆக இரு படியால் பேற்றுக்கு அடியாய் இருபத்தொரு புண்ணிய லேசமும் இல்லை என்றி கோள் –
உங்களுக்கு உள்ளது என் என்ன –

ஆய்க் குலத்துப் பிறவி பெறும் தனை புண்ணியம் யாமுடையோம்
எங்களை என் சொன்னாயே –
சாஷாத் புண்ணியத்துக்கு பாலும் சோறும் இட்டு அன்றோ வளர்க்கிறோம் –

ஆர்ஜித ஸூ ஹ்ருதம் இல்லை என்றோம் அத்தனை போக்கி
அயத்ன சித்த ஸூஹ்ருதம் இல்லை என்றோமோ

சாத்திய ஸூ ஹ்ருதம் இல்லை என்னும் காட்டில்
சித்த ஸூ ஹ்ருதம் இல்லை என்று இருந்தாயோ

உன்னால் ஸ்தாபிக்கப் படுகிற கர்மங்கள் இல்லை என்றோம் அத்தனை ஒழிய
தர்ம ஸ்தாபகனாய்
சாஷாத் தர்மமான யுன்னை இல்லை என்னலாமோ

ஆய்க் குலத்து உன் தன்னை
நீ எங்கள் குடியில் விரும்பி வந்து பிறக்கும் படி அன்றோ எங்கள் ஐஸ்வர்யம்

ஆய்க் குலத்து
நாங்கள் எத்தனையேனும் கை கழியச் செய்தேயும்
நீ அவ்வளவு எல்லாம் வந்து கிட்டின பின்பு
எங்களுக்கு அதிகாரத்தில் குறை யுண்டோ –

எங்கள் இடைக் குலத்தில் நீ வந்து பிறைக்கைக்கு அடியான புண்ணியத்தை நாங்கள் யுடையோம் –
எங்கள் பேற்றுக்கு உபாயமும் நீயே –
அதுக்கு அடியான ஸூஹ்ருதமும் நீயே யாகப் பெற்றோம்

ஆய்க் குலத்து உன் தன்னை
இதிலே நீக்கி முகக்கவோ நீ பிறந்தது –

இவ் வாய்க் குலத்தை வீடுய்யத் தோன்றிற்று உய்ய
இவ் வாயர் குலத்தினில் தோன்றிய ஒண் சுடர் ஆயர் கொழுந்தே -என்னக் கடவது இறே
(வம்ச குலங்களை உத்தரிக்க வந்த வராஹ கோபாலர் )

நீ ஸூ ஹ்ருதமாய் நின்று இக்குலத்தை எடுக்கைக்கு
ஆண்
பெண்
சட்டிப் பானை ஓன்று யுண்டோ –

உன் தன்னை
ஸூரிகள் அனுசஞ்சரங்களாய் தொடர்ந்து குற்றேவல் செய்கிற யுன்னை
கறைவைகள் பின் செல்லுகிற குலத்திலே பெற்றோம்

தடம் கடல் சேர்ந்த யுன்னை (திருவாய் -3-5 )
கானம் சேர்ந்த குலத்திலே பெற்றோம் –

ஆய்க் குலத்து உன் தன்னை
அநஸ்நன் -என்னும் படி ஓட்டறுத்து உண்ணாதே நிற்கும் உன்னை
உண்போம் என்கிற எங்கள் குலத்திலே பெற்றோம் –

திவ்ய ஞான உபபன்னருக்கு முகம் கொடுக்கிற உன்னை
அறிவு ஒன்றும் இல்லாத குலத்திலே பெற்றோம்

ஆய்க் குலத்து உன் தன்னை
இமையோர் தம் குல முதலான உன்னை(திருவாய் -1-5 ) ஆயர் தம் குல முதலாகப் பெற்றோம்

ஆய்க் குலத்து உன் தன்னை
வெங்கதிரோன் குலத்தில் காட்டில் இக்குலத்துக்கு உண்டான வாசி பாராய் –

நீ பகல் விளக்கான குலமும்
நீ அணி விளக்கான குலமும் ஒக்குமோ

பிறவி
சென்னாள் தோற்றி(பெரியாழ்வார் -வடமதுரையில்பிறந்த ) என்னும் படி
நீ ஆவிர்ப்பவித்த யாதவ குலமோ இது –
நந்தன் பெற்ற வானாயன்-என்னும் இடம் அன்றோ இது

பெறும் தனை புண்ணியம்
பெறுகைக்கு தக்க பாக்யம் -புண்ணியத்தை உன்னாலே தேடலாம் –
புண்யாம் நாம் அபி புண்யோசவ்-என்கிற
உன்னைப் பெறுகைக்கு தக்க புண்ணியம் வேணும் இறே

புறம்பு உண்டான புண்ணியங்களை உன்னாலே பெறலாம் –
உன்னைத் தர வல்லது உண்ணில் விஞ்சினது இல்லையே

கிருஷ்ணம் தர்மம் சனாதனம் என்கிற சனாதன தர்மம் நீயே இறே –
இத்தை புண்ணியம் என்றால் ஈது அன்று என்பார்(நான்முகன்-72) யார்
வேத வித்துக்கள் சொல்லவோ –
அத்யாத்ம வித்துக்கள் சொல்லவோ –
கர்ம பாக நிஷ்டரும் அன்று என்னார்கள்-
ஞான பாக நிஷ்டரும் அன்று என்னார்கள்-

(ஏஷ வேத விதோ விப்ர ஏஷ அத்யாத்ம வைத்தோ ஜன —
கிருஷ்ணன் தர்மம் சனாதானம் ஸ்லோகார்த்தம் )

பெறும் தனை புண்ணியம்
பறை தரும் புண்ணியனே இறே தன்னையும் தருவது –
பிறக்கைக்கு ஹேதுவே இறே தருகைக்கும் ஹேது
(சம்பவாமி ஆத்ம மாயயா)

வேண்டி வந்து பிறந்ததும் -(திருவாய் 6-4 )
நம்மைப் பெறும்படியான புண்ணியம் –
என்ன நோன்பு நோற்றாள் கொலோ -என்கிற யசோதையுடைய ஒருத்தியது அன்றோ என்ன

யாமுடையோம்
அவள் பெற்று (புண்ணியம்) உடையளானாள் –
நாங்கள் பிறந்து (புண்ணியம் )உடையோம் ஆனோம் –
அஹோ பாக்யம் அஹோ பாக்யம் நந்த கோப விரஜவ்கசாம் -என்று
ஊருக்காக பலித்தது இறே –

இருந்த ஊரில் இருக்கும் மானிடர் (பெரியாழ்வார் -4-4 )என்கிறபடியே
உங்கள் தபஸ் பலமாக பெற்றி கோள் ஆகிறி கோள் –
நாம் பிறந்த ஊரில் இருக்கைக்கு
புண்ணியம் பண்ணினி கோள் ஆகிறி கோள் என்றான்

உடையோம்
நாங்கள் ஓன்று செய்து ஆர்ஜித்தோம் அல்லோம் –
இந்த ஸூஹ்ருதம் சத்தா நிபந்தனம்

உடையோம்
நாங்கள் செய்ததும் அல்ல –
ஸ்வீகரித்ததும் அல்ல –

இப் புண்ணியத்துக்கு செய்யுமவையும்
ஸ்வீகரிக்குமவையும் பிரதிபந்தகங்கள் இறே
புறப் பகையும் கழிக்க வேண்டா-
உட்ப் பகையும் கழிக்க வேண்டா –

யாமுடையோம்
எங்கள் ஸூஹ்ருதத்தில் பாதக ஸ்பர்சமும் இல்லை –
மஹா பாதக ஸ்பர்சமும் இல்லை
(உபாயாந்தர சம்பந்த பாதகமும்
ஸூவ ப்ரயோஜன பிரபல விரோதியும் இல்லை )

புண்ணியம் நாமுடையோம்
நாட்டில் புண்ணியங்கள் அநேகங்களுமாய்
பிரதி நியதங்களுமாய் இருக்கும் –

எங்கள் புண்ணியம் ஒன்றாய்
அது எல்லார்க்கும் பொதுவாய் இருக்கும்
யாவர்க்கும் புண்ணியம் (திருவாய் -6-3 )என்னக் கடவது இறே

அறிவு ஒன்றும் இல்லை என்பது –
புண்ணியம் நாமுடையோம் என்பதாய்க் கொண்டு
வியாஹத பாஷாணம் பண்ணினி கோள் என்ன

ஓர் ஆஸ்ரயத்தில் யுண்மையும் இல்லாமையும் சொல்லில் அன்றோ வியாஹதி உள்ளது –
அப்ரயோஜனங்களை அன்றோ நாங்கள் இல்லை என்கிறது –
எங்களுடைய அபிமத சித்தி யாதொன்றால் அத்தை இல்லை என்றோமோ –

குறை ஒன்றும் இல்லாத
எங்களுக்கு அறிவு ஒன்றும் இல்லை என்றோம் அத்தனை போக்கி
எங்கள் புண்ணியத்துக்கு ஏதேனும் குறை சொல்லிற்று உண்டோ –

உண்டானாலும் கழுத்துக்கு கட்டியாம் அவற்றினுடைய இல்லாமை சொல்லுகை
உன்னுடைய அனுக்ரஹத்துக்கு ஹேதுவாம் அத்தனை அன்றோ

எங்கள் தலையால் வருமத்தை இல்லை என்றோம் அத்தனை போக்கி
உன் தலையால் வருமத்தை இல்லை என்றோமோ –

1-குறைவு இல்லை
2-குறை ஓன்று இல்லை
3-குறை ஒன்றும் இல்லை

1-எங்கள் புண்ணியம் சாபேஷமும் அன்று –
2-ஸாவதியும் அன்று –
3-பிரபல பாப நிவ்ருத்தமும் ஆகாது-

(1-எதையும் எதிர்பாராமல்
2-எல்லைக்கு உட்படாதது
3-பிரதிபந்தகங்களால் தடுக்க முடியாதே )

1-உத்பத்தியில் சேதனனை அபேக்ஷிக்கும் என்ன வேண்டா சாத்தியம் அல்லாமையாலே
2-பலம் கொடுத்தால் குறையும் என்ன ஒண்ணாது பரம சேதனன் ஆகையால்
3-பிரபல கர்மத்தால் தகைப் படும் என்ன ஒண்ணாது சர்வ சக்தி யாகையாலே

1-நிரபேஷனைப் பற்றாய் —
2-பூர்ணணைப் பற்றாய் –
3-பிரபல பாபங்களை நான் போக்குகிறேன் என்றது வெறுமனேயோ –

குறை ஒன்றும் இல்லாத
ராஜாக்கள் வழி போம் போது மேடு பள்ளம் ஓக்க விட்டு அன்றோ போவது –

பெருமாள் கடலைத் தூர்த்து வானர சேனையை நடத்தினால் போலே
உன் குறைவில்லாமையை எங்கள் குறைவிலே இட்டு நிரவி ஓக்க விட்டுக் கொள்ளும் அத்தனை
எங்கள் அறிவு ஒன்றும் இல்லாமை யாகிற பாழ்ந்தாறு நிரப்புகைக்கு வேண்டும் புஷ்கல்யம் போராதோ யுனக்கு

உன் குறைவில்லாமை எங்கள் அறிவு இல்லாமையை அபேக்ஷித்து அன்றோ இருப்பது –
குறைவாளரை ஒழிய நீ நிறைவாளனாம் படி எங்கனே
ஒரு மேட்டுக்கு ஒரு பள்ளம் நேர் அன்றோ –

(நிகர் இன்றி நீசன் நின் அருள் என் கண் அன்றி புகல் ஒன்றும் இல்லை —
பயன் இருவருக்கும் ஆன பின்பு )

ஆகில் ஒன்றும் இல்லை என்று சொன்ன இடம்
உங்களுக்கு ஸ்வரூப ஞானம் இல்லாமை இறே என்ன
(அதிகாரி விசேஷமும் இல்லையோ என்ன )

கோவிந்தா
நீயோ தான் சால அறிவுடையாய் இருக்கிறாய் –
உனக்கு ஸ்வரூப ஞானம் யுண்டாகில் ஸூரிகள் நடுவே இராயோ-
அவனுடைய அறியாமை இறே நமக்கு பற்றாசு –
நீ அயர்வறும் அமரர்கள் அதிபதி என்று உன்னை அறிந்தாய் யாகில் பசுக்களின் பின்னே போகப் பெறுவிதியோ –

அவன் தன்னை அறிந்தாலும் பெற விரகு இல்லை –
நம்மை அறிந்தாலும் விரகு இல்லை
அவன் ஸ்வா தந்தர்யத்தையும் மறந்து
நம்முடைய அபராதத்தையும் மறைக்கை இறே நமக்குத் பெறலாவது –

குறை ஒன்றும் இல்லா கோவிந்தா
இக் குறை ஒன்றும் இல்லாமை பரத்வத்தில் அன்று –
தாழ நின்ற நிலத்திலே சாம்யா பன்னர்க்கும்-
அவர்களில் சிறியவர்களுக்கும்
அவர்களோடு ஒத்தவர்களுக்கும் முகம் கொடுக்கும் என்கிற குறை அங்கு –

குறை யுண்டு என்னவும் அறியாதாரோடே பொருந்தித் திரிந்தவன் அன்றோ –
உனக்கு இற்றைக்கு விசேஷம் என் –
எங்கள் குறையால் எங்களுக்கு இழக்க வேண்டுவது
உன்னுடைய பூர்த்தியில் ஏதேனும் குறை யுண்டாகில் அன்றோ –

கன்றுகள் மேய்த்து கோவிந்த அபிஷேகம் பண்ணி
கோப குலத்திலே கலந்து பரிமாறி
காலிப் பின்னே வருகின்ற வேடத்தை எல்லார்க்கும் காட்டி –
ஏற்கவே அறிந்து
கோவர்த்தனத்தை எடுத்து ரஷித்து போருகையாலே
வாத்சல்யாதிகளாலும்
ஞான சக்த்யாதிகளாலும் பூர்ணன் ஆனவன் அன்றோ

எங்களுக்கு ஞான வ்ருத்தங்கள் கை புகுந்தது இல்லை –
உனக்கு ஞான சக்திகள் குறைந்தது இல்லை –

கோவிந்தா
மாமேகம் என்றவன் பாசுரம் அன்றோ –

கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும் –
கற்றுத் தூளியாலே தூசரிதமான திருக் குழலும்
மறித்துத் திரிகிற போது திருவடிகளில் கிடந்து ஆரவாரிக்கிற கழல்கள் சதங்கைகளும்
குளிர் முகத்தின் கோடாலமுமாய் நிற்கிற
உபாய வேஷத்தை
கோவிந்தா என்கிறார்கள் –
(நிறைவினால் குறையில்லா நெடும் பணைத்தோள் பின்னை —
கடை யாவும் கழி கோலும் கையிலே பிடித்த கண்ணிக் கயிறும்-திருவாய் )

பெண்காள் உங்கள் பேற்றுக்கு உடலாக நம் நைரபேஷ்யம் சொல்லா நின்றி கோள் –
குறைவாளர்க்கு நிறைவாளர் கொடுக்கக் கடவர்கள் என்று உண்டோ –
நிரபேஷராய் இருப்பார் ஸ்வதந்த்ரர் அன்றோ –
நீங்கள் சொன்னது தானே இழவுக்கு உடலாய் இருந்ததே
நாம் அல்லோம் என்ற போது கை விடுகைக்கு உடலாய் அன்றோ இருப்பது என்ன

உன் தன்னோடு உறவு
உன் பூர்த்தி குலையிலும் பந்தம் குலைய ஒட்டுதியோ-
நீ எங்களுக்கு உறவு அன்றோ –
நீ எங்கள் கார்யம் செய்ய வேண்டாவோ
குடல் துவக்கு உண்டான இடத்தில் ஸ்வா தந்தர்யம் ஜீவிக்குமோ –

(பிதா ச ரஷகஸ் சேஷீ பார்த்தா ஜ்ஞேயோ ரமாபதி
ஸ்வாம் யாதாரோ மமாத்மா ச போக்தா சாத்யம நூதித –என்கிறபடியே-
ஸ்ரீ பிள்ளை லோகாச்சார்யர் அருளிச் செய்த — ஸ்ரீ நவவித சம்பந்தம் —-
1-அகாரத்தாலே -பிதா புத்திர சம்பந்தம் சொல்லி –
2- அவ -ரஷணே-என்கிற தாதுவினாலே -ரஷ்ய ரஷக சம்பந்தம் சொல்லி –
3- லுப்த சதுர்த்தியாலே -சேஷ சேஷி சம்பந்தம் சொல்லி –
4- உகாரத்தாலே -பர்த்ரு பார்யா சம்பந்தம் சொல்லி –
5-மகாரத்தாலே ஜ்ஞாத்ரு ஜ்ஞேய சம்பந்தம் சொல்லி –
6- நமஸ் ஸாலே ஸ்வ ஸ்வாமி சம்பந்தம் சொல்லி –
7- நார பதத்தாலே -சரீர சரீரி சம்பந்தம் சொல்லி
8- அயன -பதத்தாலே ஆதார ஆதேய சம்பந்தம் சொல்லி –
9-ஆய -பதத்தாலே போக்த்ரு போகய சம்பந்தம் சொல்லி
ஆக திரு மந்த்ரத்தாலே நவவித சம்பந்தங்களைச் சொல்லித் தலைக் கட்டுகிறது –)

அது கொண்டோ –
ஆனால் அது ஒரு குட நீரோடு போகிறது என்றான்

உறவேல் ஒழிக்க ஒழியாது –
பிரகாரியை ஒழிய பிரகாரத்துக்கு ஸ்திதி உண்டோ –
ப்ருதக் ஸ்தித்யாதிகள் இல்லாத வஸ்துவை சக்திமான் என்னா உன்னால் பிரிக்கலாமோ

ஒழிக்க ஒழியாது
நான் உன்னை அன்றி இலேன் -நீ என்னை யன்றி இல்லை (நான்முகன் )-என்கிற பிரமாணம் கேட்டு அறியாயோ –
நீ எங்கள் கையில் தந்த மூல பிரமாணத்தில்
முதல் வரியில் முதல் எழுத்தை வெட்டுதல் –
எங்கள் கார்யம் தலைக் கட்டல் செய்ய வேண்டாவோ
(அவ ரக்ஷண தாது -அகாரம் இருந்தால் ரக்ஷிக்காமல் இருக்க முடியாதே )

இவை எல்லாம் அறிவு ஒன்றும் இல்லாத உங்களுக்கும் வார்த்தைகள் அல்ல —
உறவு சுற்றம் என்று ஓன்று இலா நமக்குத் தெரியாது என்றான் –

நமக்கு ஒழிக்க ஒழி யாது
உன்னுடைய ஞானவான்களுடைய பந்தம் அல்ல காண் நாங்கள் சொல்லுகிறது —
(நாராயண -உறவு இல்லையே நாங்கள் சொன்னது )
இடையிலே வந்த உறவு காண் எங்களது –
அறிவில்லாதார்க்கு மறக்கலாம் அந்த உறவு –
அறிவில்லாதவர் இட்டீடு கொள்ளும் உறவு காண் இவ் உறவு
நீ மைத்துனன் நம்பி -(நாச்சியார் )
நாங்கள் மாமியார் மக்கள் -எங்கனே ஒழிக்கும் படி –

இது என்ன அன்புது-
நமக்கு சிசுபாலன் மைத்துனன் அன்றோ என்றான்

உன்னுடைய கோவிந்தத்துவத்துக்கு பழிப்பு சொன்னவன் ஆகையால்
அவனை விடாய் –

கோவிந்த அபிஷேகம் பண்ணின வன்று
உன் காலிலே குனிந்த மைத்துனன் கார்யம் எல்லாம்
உன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு முன் நடந்து செய்திலையோ-அந்த யுறவு காண்

தாழ்ந்த தனஞ்சயர்க்காகி-(பெரியாழ்வார் )
பாலைப் பிராயத்தே பார்த்ததற்கு அருள் செய்த -என்னக் கடவது இறே –

யுத்தார்த்தமாக ஒரு நிமித்தம் கூட்டிக் கொண்டு
அந்த கார்யம் செய்த அநந்தரத்திலே விட்டிலோமோ அதுவும் என்றான்

இங்கு ஒழிக்க ஒழியாது
அங்கு ஒழிக்கலாம்
இங்கே ஒழிக்க ஒண்ணாது காண்-

ஸ்வ தந்த்ரன் தாழ்ந்த இடத்திலே பண்ணின உறவு போலேயோ
பரதந்த்ரரை தாழ நின்று
கையைக் காலைப் பிடித்துப் பண்ணின உறவு –

கோவிந்தா உன் தன்னோடு உறவேல் -இங்கு ஒழிக்க ஒழியாது
உன்னுடைய நாராயணத்தில் உறவு பழம் கிணற்றில் கண் வார வேணுமோ –
எங்களுக்கு இவ் வுறவு போராதோ –

1-அளிக்கின்ற ஆனாயன் ஆகையால் ரஷ்ய ரஷக பந்தமும் உன்னோடே –
2-குன்று குடையா எடுத்த அடிகள் என்று கோவிந்த அபிஷேகம் பண்ணுகையாலே சேஷ சேஷி பாவமும் உன்னோடே
3-ஏசும் படி அன்ன செய்யும் எம்மீசர் (திரு விருத்தம்-54 )ஆகையால் நியன்தரு நியாமிய பாவமும் உன்னோடே –
4-தம்மனை யானவனே -ஆனாயர் தாயவனே -என்று கார்ய காரண பந்தமும் உன்னோடே –
5-என்னுயிர்க் கண்ண பிரான் -என்று நீ உயிராய் நீ விட்டி அகன்ற பின் என்னுயிர் ஆற்ற மாட்டாது
6-நாங்கள் துடிக்கும் படி இருக்கையாலே தாரக தார்ய பந்தமும் உன்னோடே –
7-எண்ணத்துள் என்றும் இருந்து தித்திக்கும் என்று வியாப்பிய வியாபக சம்பந்தமும் உன்னோடே –
இப்படி உன்னோடே யுண்டான சம்பந்தத்துக்கு எல்லை யுண்டோ –

(விஷ்ணு நாராயணன் போன்று இல்லாமல்
கோவிந்தன் என்றே உள்ள பாசுரங்களைக் காட்டும் அழகு )

கோவிந்தா ஒழிக்க ஒழியாது
நீ கோவர்த்தனம் எடுத்த வாறே வேறு ஒருவனோ என்று சங்கிக்க –
நான் பந்துவாய்ப் பிறந்தேன் உங்களுக்கு வேறு ஓன்று நினையாதே கொள்ளுங்கோள்
என்ற வார்த்தை அமோகம் அன்றோ

ஒழிக்க ஒழியாது
உன்னால் விட ஒண்ணாது –
எங்களால் விட ஒண்ணாது –
உன்னுடைய பந்துக்களால் விடுவிக்க ஒண்ணாது –
எங்களுடைய பந்துக்களால் விடுவிடுவிக்க ஒண்ணாது –
ஊராக சங்கித்தாலும் விடுவிக்க ஒண்ணாது –

நீ துறந்து எம்மை விட்டு அகன்ற இடத்திலும் போய்த்த்தில்லை-(திருவாய் -10-3)
நாங்கள் புள்ளுவம் பேசாதே கழகம் ஏறேல் ( திருவாய் 6-2 ) என்ற இடத்திலும் குலைந்தது இல்லை –
ஊனமுடையன செய்யப் பெறாய் என்ற இடத்திலும் போய்த்த்தில்லை –
இவ்வூர் ஓன்று புணர்க்கின்றதே என்று திரள அவத்யம் சொன்ன இடத்திலும் ஒழிந்த தில்லை

அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு
குறைவு ஒன்றும் இல்லாத உறவு –
உன் தயா பூர்த்திக்கு
தயநீயதா பூர்த்தி யுண்டான உறவுக்கு அந்யதா சித்தி சொல்ல ஒண்ணாதே –

இப்படி நம்மோடு உறவு சொல்லா நின்றி கோள் –
உங்களை கோபிகைகள் ஆகவும்
நம்மை கோவிந்தனாகவும் சொல்லிற்று இப்போது அன்றோ
நம்மை அடியிலே மர்மத்திலே தொட்டு வைத்து –
மேலும் அதிலே நடந்து வைத்து –
கார்ய காலம் ஆனவாறே
வாலைக் குழைத்து கோவிந்தா என்னா நின்றி கோளே –
என்னாக்கி விடற்கு என்றான் –

நாங்கள் செய்த தப்பை பொறுக்கும் அத்தனை அன்றோ என்ன –

சொல்லுகைக்கு ஹேது சொல்லுங்கோள் பொறுக்கிறோம் என்றான் –

அறியாத பிள்ளைகளோம் –
என்கிறார்கள் -இவை எல்லாம் பொறுக்கைக்கு ஹேதுக்கள் இருக்கிற படி –
1-முதலில் அஞ்ஞர் செய்தது பொறுக்க வேணும் –
2-பாலர் செய்தது பொறுக்க வேணும் –
3-ஸ்நேஹிகள் செய்தது பொறுக்க வேணும் –

1-அநவதானத்தாலே (கவனக்குறைவாலே )சொல்லுவது அறிந்திலோம் –
2-பால்யத்தாலே சொல்லுவது அறிந்திலோம் –
3-ப்ரேமத்தால் வந்த விருட்சியாலே சொல்லுவது அறிந்திலோம் –

1-எங்களால் அறிவு கெட்டோம்-
2-பிறவியாலே அறிவு கெட்டோம் –
3-உன்னாலே அறிவு கெட்டோம் –

யாதும் ஒன்றும் அறியாத பிள்ளைகள் இறே நாங்கள் -(நாச்சியார் -2-7 )
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்திலே பிறக்கையாலே அறிவு கெட்டோம் –

அழகு கண்டு என் மக்கள் அயர்க்கின்றது –என்கிறபடியே
உன்னைக் கண்டு மதி கெட்டோம் –

அறிவு அழிந்தனர் ஆய்ப்பாடியர் என்கிறபடியே இடையூறை மதி கெடப் பண்ணுமது
பெண்களை மது கெடுக்கச் சொல்ல வேணுமோ –

பித்தர் சொல்லிற்றும் பேதையர் சொல்லிற்றும்
பத்தர் சொல்லிற்றும் பன்னப் பெறுவரோ-என்று பிரசித்தம் அன்றோ –
(கம்ப நாட்டாழ்வார் பாசுரம் -ஆகவே நாயனாருக்கு முன் காலத்தவர் )

அன்பினால்
ப்ரேமாந்தரை குற்றம் கொள்ளுகையாவது –
ஒரே படுக்கையிலே இருந்து கை தாக்கிற்று கால் தாக்கிற்று என்கை இறே

உன் தன்னை
கோவிந்த அபிஷேகம் பண்ணி இருக்கிற யுன்னை –
அநவதா நாதிகளும் அன்பு விளைக்கைக்கு நிமித்தமாய் இருக்கிற உன்னை
இளையோர் விளையாட்டோடு காதல் வெள்ளம் விளைத்த (பெரிய திருமொழி -3-8)-என்று தானே இறே அவற்றுக்கு அடி –

உன் தன்னைப் பிறவி பெறும் தனை
என்றதை போல் அன்று இந்த உன் தன்னை –
அவ்விடத்தில் பெருமை யுடையவன்
தாழ நின்று நீர்மை சம்பாதிக்க வந்த இடத்தில் மேன்மை சொல்லுகை குற்றம் இறே

சிறு பேர்
கோவிந்த அபிஷேகம் பண்ணின பின்பு
முதல் திரு நாமம் சொல்லுகை குற்றம் இறே –
முடி சூடினவனை தட்டியில் பேர் சொல்லுகைக்கு மேற்பட்ட உண்டோ குற்றம் –

இப்போது சிறு பேர் என்று நினைக்கிறது –
நாராயணன் -என்றத்தை –
தங்களுக்கு அசாதாரணனாய் இருக்கிறவனை சாதாரணன் என்று சொல்லுகை குற்றம் இறே –
ஊடினால் சொல்லுமத்தை படுக்கைத் தலத்தில் சொல்லலாமோ –
அந்தப்புர வாசலில் படுகாடு கிடப்பாரை
நாட்டுக்கு கடவன் என்கிறது பிரணயி அல்லன் என்கை இறே –

இவன் உபய விபூதிக்கும் முடி கவித்து ஸ்ரீ வைகுண்டத்தில் இருக்குமவன் என்று
சிறிது ஞானம் உண்டாய் இருக்கச் செய்தே இறே
இந்திரன் வந்து பசுக்களை மேய்த்தான் என்று முடி சூட்டிற்று-
(அவனுக்கு கொஞ்சம் ஞானமே ஆகவே அபசாரப்பட்டான்
பின்பு உணர்ந்து பட்டாபிஷேகம் பண்ணி வைத்தான்)

உபய விபூதிக்கும் முடி சூடினத்துக்கு அவ்வருகே ஒரு ஐஸ்வர்யம் இறே இது

நாராயணன் என்கிற பேர் நாராயண பரங்களான ப்ரமாணங்களாகச் சொல்லலாம் –
கோவிந்தா சக்தமான நெஞ்சுடையார்க்குச் சொல்லுகை குற்றம் –

சிறு பேர்
சஹஸ்ர அக்ஷரங்கள்
துவாதச அக்ஷரங்கள் தொடக்கமான பேர்கள் எல்லாம்
அவன் பெயர் எட்டு எழுத்தையும் கண்டவாறே(திருச்சந்த) சிறுகிற்று
அது தான் மூன்று எழுத்துடைய பேரைக்(திருமாலை) கண்ட வாறே சிறுகிற்று –

முழுகி மூக்கைப் புதைப்பார்க்கு யோக்கியமான பேர்
(சாதநாந்தர பரருக்கு தீர்த்தமாடி பிராணாயாமம் செய்வோர்க்கு நாராயண நாமம் )
தீட்டத்தோடே கத்திக் கையராய்த் திரிவார்க்கும்
யோக்கியமான பேரைக் கண்ட வாறே கழிப்பானாய்த்து-
(வேடரும் திருமலையில் கோவிந்தா என்பார்களே )

வாச்யன் சிறுக நின்று நிறம் பெற்றால்
வாசகமும் அப்படியே இறே

சிறு பேர் –
அஷ்டாக்ஷர மஹா மந்த்ரம் என்பார் கலங்கினவர்கள் –
தெளிவுடையார்களுக்கு சிறுத்துத் தோற்றும் இறே இது

மூல நாமமுமாய்
அதி குஹ்யமுமாய்
செவியில் சொல்ல வேண்டும்படி இறே இருப்பது –

பிறந்து பன்னிரண்டும் கழிந்த வாறே பேரிட்டுத் தாலாட்டினவாறே –
மன்னு நாரணன் நம்பி பிறந்தமை -என்றும்
நாராயணா அழேல் தாலேலோ என்றும்
அப்போது
செய்தலை நீல நிறத்து சிறு பிள்ளையாகையாலே சொல்லலாம் –
இப்போது பெறும் கண்ணன் இறே

அழைத்தன
அது தன்னை ஒருக்கால் சொல்லி விடாதே –
நாராயணனே என்றும் –
நாற்றத்த துழாய் முடி நாராயணன் என்றும் –
நாராயணன் மூர்த்தி -என்றும் பலகால் சொன்னார்கள் இறே

அழைத்தனவும்
எங்களில் நாங்கள் முதல் நாமத்தை சொல்லி விட்ட அளவு அன்றிக்கே
மூலக் கிழங்கிலே(காரணம் வேர் -பத்மநாபன் )
தட்டச் சொன்னவற்றையும் –
பாழியம் தோளுடை பற்ப நாபன் -என்றார்கள் இறே

உன் தன்னை –அழைத்தனவும்
எங்களை நாங்கள் பிரணயித்வத்தாலே –
பேய்ப் பெண்ணே —
ஊமையோ செவிடோ —
நாணாதாய் –
பண்டே உன் வாய் அறிதும் –
என்று தொடங்கிச் செய்தவற்றையும் பொறை கொள்ள நினைத்தார்கள் –

சர்வான் அசேஷத (கத்யத்ரயம் )-என்ன வேணும் இறே
த்ரிவித கரணங்களால் யுண்டான த்ரிவித அபசாரத்துக்கும் உப லக்ஷணம் –

புகு தருவான் நின்றவற்றில் புத்தி பூர்வகத்துக்கு க்ஷமை கொள்ளுகிறார்கள் –
பகவத் பாகவத விஷயங்களில் உபசார புத்தயா பண்ணும் அபசாரங்களுக்கு க்ஷமை கொண்டு விட வேணும்
ஸூலபனை பரன் என்கிறது தான் அபசாரம் ஆகிற தசை இறே –

குளிர்ந்த தண்ணீரை விநியோகம் கொள்ளுமவனுக்கு காய்ச்சின தண்ணீர் பகை இறே
கிருஷ்ணனுடைய ஆற்றலுக்கு ஈஸ்வரத்தால் வந்த அழல் பகை இறே –

பேற்றுக்கு பிரயோஜனம் ஆனது புறம்பே கிடக்க
அப்ரயோஜனங்களை கிடந்து ஆராய்கிறது என் என்று

சீறி அருளாதே
என்கிறார்கள் –

செய்வுதை எல்லாம் செய்து சீறி அருளாதே -என்ன அமையும் ஆகாதே காண் –
இத் தலையை ஆராயில் சீற வேண்டும்படியாய் இறே இருப்பது -என்ன

பூர்வ வருத்தம் ந ஷமாமிக்கு இலக்கு அல்லவே –
நப்பின்னை பிராட்டியை முன்னிட்டவர்கள் ஆகையால் –

ஸ்ரீ விஸ்வரூபம் கண்ட அர்ஜுனன் நீ என்னோடே மேல் விழுந்து கலசின படியால்
உன் வைபவம் ஒன்றும் அறிந்திலேன் –
அநவதாநத்தாலும்
பிரணயித்வத்தாலும்
விஹார சய்யா ஆசன போஜனங்களிலே பண்ணின
அஸத்காரங்களைப் பொறுத்து அருள வேணும் என்று பொறை கண்டான் அவன் –

ஸுலப்யத்தாலே பரிமாறின தப்புக்களை
பரத்வம் கண்டவாறே பொறை கொண்டான் அவன்

ஸுலப்யத்தைக் கண்டு
பரத்வ புத்திக்கு க்ஷமை கொள்ளுகிறார்கள் இவர்கள் –

பக்தியில் தலையாக நிற்கவுமாம்
அவன் தன்னைப் பற்றவுமாம் –
கிட்டினால் சொல்லுவது இது வாய்த்து

நம்மாலே பேறாம் படியான சம்பந்தம் நம்மோடே உண்டானாலும் –
குற்றத்தைப் பொறுக்க வேணும் என்றாலும்
பல போக்தாக்கள் நீங்களான பின்பு
உங்கள் தலையிலேயும் ஓன்று உண்டாக வேண்டாவோ –

இவர்கள் இன்னது செய்தார்கள்
அவன் இன்னது செய்தான் என்று நாட்டாருக்குச் சொல்லலாவது
ஒரு ஆலம்பனம் வேண்டாவோ என்ன

இறைவா
நீ தருவோம் என்ற வன்று விலக்குகைக்கு உரியார் உண்டோ –

இறைவா
உன் ஸ்வரூபத்தை உணராய் –
எங்கள் தலையிலே கிடந்து நாங்கள் பிரதிபத்தி பண்ணாமையாலே அழித்துக் கொண்ட
சேஷத்வம் போல் அன்றே
உன் தலையிலே கிடக்கையாலே அழிக்க ஒண்ணாத சேஷித்வம் –
அத்தை ஆராய்ந்து எங்களுடைய கார்யத்தைச் செய்யாய்
அத் தலையிலே குறை இன்றியிலே ஒழிய அமையும் இறே –

(அவனாலும் சேஷித்வத்தை அழிக்க முடியாதே
நாம் அநாதி காலம் யானே என்னை அறிகிலாதே
பண்டே பலகாலும் கழித்து அன்றோ உள்ளோம்)

பேற்றுக்கு அத்வேஷம் இறே இத்தலைக்கு வேண்டுவது
பேற்றின் கனத்துக்கு கீழ் விளைந்தது எல்லாம்
அத்வேஷம் மாத்ரமாய் இருக்கும் இறே

இறைவா
வானோர் இறையை நினைத்தன்று -(வள ஏழ் உலகு இறை வானோர் இறை )
ஆய்க் குலமாய் வந்து தோன்றின நம் இறை

கோவிந்தா –இறைவா –ஒழிக்க ஒழியாது –பறை தாராய்
உன்னைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை –
எங்களைப் பார்த்தாலும் கை விட விரகு இல்லை

நீ
நான் ரஷிக்கைக்கு நீங்கள் பண்ணின சாதன அனுஷ்டானம் என் என்று கேட்டால்
தேவர் எல்லையில் வர்த்திக்கிறதுக்கு குறை சொல்லப் போமோ என்கிறார்கள் –
அறிவுடையார் -அறிவு ஒன்றும் இல்லாத எங்களுக்கு- விஷய வாச மாத்திரமே அன்றிக்கே
குடல் துடக்கு உண்டானால் ரக்ஷிக்கச் சொல்ல வேணுமோ

குறை ஒன்றும் இல்லாத கோவிந்தா -இறைவா -பறை தாராய்
குண துங்க தயா தவ ரங்க பதே ப்ருசநிம் நமி மஞ்சன முன்னமய-யத பேஷ்யம் அபேஷ்ய
துரஸ்யஹி தத் பரிபூர்ண மீசி துரீச் வரதா (பராசர பட்டர் )-என்னக் கடவது இறே

நோ பே க்ஷணம் மம தாவோஸி தமீஸ்வரஸ்ய -(கூரத்தாழ்வான் )

உன்னுடைய சேஷித்வம் நிலை நிற்க வேணுமாகில் செய்கிறாய் –

சீறாமைக்கு ஹேது இது –
ப்ரேஷ் யஸ்ய ஷமித்வயம்மே (கிஷ்கிந்த)-என்னக் கடவது இறே-
செய்த குற்றம் நற்றமாகவே கொள் ஞால நாதனே (திருச்சந்த)

பறை தாராய்
சாது பரித்ராணாம் பண்ணுகைக்கு அன்றோ
இங்கு வந்து பண்ணி அருளிற்று –

பறை தாராய் என்றவாறே
கோபீ ஜனத்தினுடைய மிகுதி குறை ஆராய்வாய் நீ அன்றோ –
இவர்கள் சொல்லுகிறவற்றை ஆராய்ந்து கொடு என்றான்
அருகில் இருக்கிறவளை( நப்பின்னைப் பிராட்டியை)

நீ தாராய்
அவள் தருவது தந்தாள் –
நீ தரும் அத்தைத் தாராய் –
உபாய நிஷ்டை அன்றோ அவள் தருவது –
மேல் உள்ளது உன் பணி அன்றோ
(அஸ்து தே -உபாய அத்யாவசிய அவள் முன்பே கொடுத்தாளே)

அஸ்துதே என்று அவள் அது செய்தால் –
அஹம் மோக்ஷயிஷ்யாமி -என்னக் கடவ நீ பேசாது இருக்கவோ

(கோவிந்தா)ஸூலபனான நீ தாராய் –
(இறைவா) ஸ்வாமி யான நீ தாராய் –

சர்வ உபாய சாதாரணமான ருசியை உபாயத்தில் செலவு எழுதாதே
சைதன்ய கார்யமான ஸ்வீகாரத்தையும் உபாயத்தில் செலவிடாதே
எங்களால் சாத்தியம் இன்றிக்கே
சித்த ஸ்வரூபனான உன்னையே பார்த்து கார்யம் செய்து அருள வேணும் –

கறைவைகள் இத்யாதி
எங்களை பார்க்கிலும் நீ கார்யம் செய்ய வேணும் –
எங்களையும் உன்னையும் பார்க்கிலும் கார்யம் செய்ய வேணும்

உன்னைப் பாராதே எங்களை பார்த்தாய் யாகில் இழக்கிறோம் –
எங்களை பாராதே உன்னைப் பார்த்தாயாகில் பெறுகிறோம்

ஆன பின்பு எங்களுடைய ரக்ஷணம் உன்னாலே விடலாமா –
எங்களுக்கு வ்ருத்த ஞான ஜென்மங்களால் நன்மை இல்லை என்றோம் –

நீ நன்மைக்கு அடி என்றோம் –
பூர்ணன் என்றோம்
ஸூலபன் என்றோம் –
உன்னோடு எங்களுக்கு குலையாத சம்பந்தம் உண்டு என்றோம் –

எங்கள் தப்புக்கு அனுதபித்தோம் –
பொறை கொண்டோம்
எங்களுக்கு இனி செய்ய வேணும் அம்சம் இல்லை –
இனி உன்னை இழவாமல் கார்யம் செய்யப் பாராய் –

ததஹம் த்வத்ருத-இத்யாதி -(ஸ்தோத்ர ரத்னம்)
எங்களுக்கு பரித்யஜ்யத்வேன விஹிதங்களில் அன்வயம் இல்லை யாய்த்து –

ஸ்வீகாரத்வேன ஹித உபாயமான நீ
ஸ்வீகார நிரபேஷமாகக் கைப் புகா நின்றாய் –

உனக்கு ஞான சக்தியிலும் குறைவற்று இருந்தது –
ப்ராப்தியிலும் குறைவற்று இருந்தது
எங்களுக்கு அஞ்ஞாதிகள் பூர்ணமாக இருந்தது –

குற்றங்களை பார்த்து சீற ஒண்ணாத படி
ஸமஸ்த விரோதிகளையும் போக்குகிறேன் என்றவனாய் இருந்தாய் நீ –
ஆன பின்பு ப்ராப்ய லாப நிமித்தமாக சோகியாதே கொள் என்ற நீ
எங்கள் அபேக்ஷிதத்தை செய்யல் ஆகாதோ என்று
தங்கள் ஆகிஞ்சன்யத்தையும்
யோக்கியதையும் ஆவிஷ்கரித்து
உபாய பூர்த்தியையும்
தங்கள் ப்ராப்தியையும் முன்னிட்டு
பிராமாதிகமாக புகுந்த தப்புக்களுக்கு பொறை கொண்டு
எங்கள் பிராப்ய சித்திக்கு நீயே உபாயமாக வேணும் என்று
கிருஷ்ணனை உபேக்ஷிக்கிறார்கள் -(அபேக்ஷிக்கிறார்கள் பிரார்த்திக்கிறார்கள் )

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -கூடாரை வெல்லும் சீர்–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 13, 2017

(கீழே சம்யா பத்தி -உபகரணங்கள் பிரார்த்தனை
சா யுஜ்யம் -யுக -சேர்ந்து இருந்து கல்யாண குண அனுபவம் இதில்-
கூடி இருந்து குளிர்ந்து மகிழ்ந்து சாயுஜ்யம் -ஸம்மானம் பிரார்த்தனை
ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது -)

பெண்காள் நம்மோடு ஓத்தான் ஒருவன் ஈஸ்வரன் உண்டாகில் இறே
நம் பாஞ்ச சன்னியத்தோடு ஒத்த சங்கு உண்டாவது –
இனி தான் சங்கங்கள் பல வேணும் என்றி கோள்-
ஒன்றைத் தேடினோம் ஆகிலும் அத்தோடு ஒத்த பல சங்குகள் கிடையாதே –

1-நம் பாஞ்ச சன்னியத்தையும்
2-புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளி சங்கையையும்
3-ஆநிரை இனம் மீளப் பசு மேய்க்கும் போது குறிக்கும் சங்கையும் கொள்ளுங்கோள் –

பறை என்றீர்கள்
ஆகில் நாம் உலகு அளந்த போது
ஜாம்பவான் நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு –
அத்தை தரலாய்த்து –

பெரும் பறை என்றி கோளாகில்
நாம் லங்கையை அழித்த போது
நம் ஜெயம் சாற்றிற்று ஒரு பறை யுண்டு அத்தை தரலாய்த்து –

சாலப் பெரும் பறை -என்றி கோளாகில் –
அற விஞ்சின பறையாவது
பாரோர்கள் எல்லாம் மகிழ பறை கறங்கக் குடமாடுகிற போது –
நம் அரையில் கட்டி ஆடிற்று ஒரு பறை உண்டு அத்தைக் கொள்ளுங்கோள் –

பல்லாண்டு பாடுகைக்கு உங்களுக்கு பெரியாழ்வார் உண்டு –
அவரைப் போலே உங்களுக்கும் நமக்கும் சேரக் காப்பிடுகை அன்றிக்கே
உங்களுக்கே காப்பிடும் நம்மாழ்வாரையும் கொண்டு போங்கோள்

கோல விளக்குக்கு
உபய பிரகாசகையான நப்பின்னை நின்றாள் இறே

கொடிக்கு
கருளக்   கொடி ஒன்றுடையீர் (பெரிய திருமொழி -10-8 )என்று
நீங்கள் சொல்லும் பெரிய திருவடியை கொண்டு போரி கோளே

விதானத்துக்கு அன்றோ நாம் மதுரையில் நின்றும் இவ் வூருக்கு வருகிற போது
நம் மேல் மழைத் துளி படாத படி தொடுத்து
மேல் விதானமாய் வந்த நம் அநந்தனைக் கொண்டு போங்கோள் –

உங்களுக்கு செய்ய வேண்டியது இத்தனையே என்றான்

மார்கழி நீராடக் போம் போதைக்கு வேண்டுமவை இவை –
நோற்ற அனந்தரம் நாங்கள் உன் பக்கல் பெறக் கடவ இன்னம் சில
சத்கார விசேஷங்கள் உண்டு –
இவற்றிலும் அவை அந்தரங்கமாக இருப்பன சில
அவையும் நாங்கள் பெறுவோமாக ஆக வேணும் என்று வேண்டிக் கொள்கிறார்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம் அணிவோம்
ஆடையுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

கூடாரை–தன் அடி பணியாதவர்களை
வெல்லும் சீர்–வெல்லுகின்ற குணங்களை யுடைய
கோவிந்தா–கண்ண பிரானே!
உன் தன்னை–உன்னை
படி-(வாயாரப்)பாடி
பறை கொண்டு–(உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று-பாடுவதே பறை –
யாம் பெறு சம்மானம்–(பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது
நாடு புகழும் பரிசினால்–நாட்டார் புகழும்படியாக–பரிசு -விதம்
சூடகம்–(கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும்
தோள் வளை–தோள் வளைகளும்
தோடு–(காதுக்கிடும் ஆபரணமான) தோடும்
செவிப் பூ–கர்ணப் பூவும்-மேல் காதுப்பூ
பாடகம்–பாத கடகமும்
என்றனையப் பல் கலனும்–என்று சொல்லப்படும் இவ் வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும்
(உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப் பட்ட யாம் நன்றாக அணிவோம்–,
ஆடை––உடுத்திக் களைந்த -சேலைகளை
உடுப்போம்–(நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;
அதன் பின்னே–அதற்குப் பின்பு
பால் சோறு–பாற் சோறானது (க்ஷிராந்நம்)
மூட–மறையும் படியாக
நெய் பெய்து–நெய் பரிமாறி
முழங்கை வழி–முழங்கையால் வழியும் படியாக (உண்டு)
கூடி–(நீயும் நாங்களுமாகக்) கூடி யிருந்து
குளிர்ந்து–குளிர வேணும்:
ஏல் ஓர் எம் பாவாய்–.

பெண்காள் –
நம்மை எளிவரும் இயல்வினன் என்று
அழகிதாக வறிந்து கொண்டி கோள்
எங்கனே –
அபேக்ஷித்தது தருகிறோம் என்கிற அளவைக் கொண்டு
நம்மையும் நம்முடைய சர்வஸ் வத்தையும் உங்களதாக்கிக் கொண்டு
உங்களை வெல்ல இருந்த நம்மைத் தோற்பித்துக் கொண்டி கோள்
எங்கனே
ஜெய அபஜெயங்கள் நாம் நினைத்த படி இன்றிக்கே இருந்ததீ -என்ன

கூடாரை வெல்லும் சீர்
கூடும் என்பாரை வெல்லும் அத்தனை போக்கி
கூடுவோம் என்பாரை வெல்லலாமோ உன்னால்

கூடாரை வெல்லும்
பரசு ராமன் இருபத்தொரு படி கால் ஷத்ரியரை வென்ற உனக்கு
ஒரு ஷத்ரிய புத்ரன் எதிரோ -என்று பெருமாளை வெல்ல நினைத்து வந்து
தன் கையில் வில்லை அவர் கையிலே கொடுத்து
நான் ப்ராஹ்மணன் என்று நமஸ்கரித்துப் போந்தான் –
வில்லோடு நமஸ்கரித்தான் ஆகில் இவராய்த்து தோற்பது –

ராவணன் இந்த்ராதிகளை வென்ற எனக்கு ஒரு மனுஷ்யன் எதிரோ என்று இருக்க –
திருவடியை இட்டும்
அங்கதனை இட்டும் பின்பு
வில் பொகட்ட அளவில் -இன்று போய் நாளை வா -என்னும் இத்தனையும் சொன்ன இடத்தில் –
வணங்கலில் அரக்கனான பின்பு (9-8 )
ஆந்தனையும் பார்த்தோம் -என் செய்வோம் என்றாய்த்துக் கொன்றது

பின்பு வில்லை எடுத்திலன் ஆகில் பெருமாளை வென்றானாய் விடும் –
லோகம் பண்ணின பாக்யத்தாலே பின்பு வில் எடுத்தான்
பெருமாள் அவனுக்குத் தோற்க்கைக்கு பாக்யம் பண்ணிற்று இலர் –

கூடாரை வெல்லும் சீர்
சேராக் குலை கொண்ட ஈரந்தலையான்-என்று
ஒரு படியாலும் கூடேன் என்று அவனை இறே வென்றது –

கூடுவேன் என்ற விபீஷணனுக்கு வில்வெட்டி இறே செய்தது –
(வில்வெட்டி இறே செய்தது-அவன் சொன்னது எல்லாம் கேட்டான் )
ஸூக்ரீவ வசனம் ஹனுமான் வசனம் -என்று கூடினாருடைய
குற்றேவல் கொண்டு அபிஷேக பிரதானமும் பிராண ஹரணமும் பண்ணும் படி இறே தோற்ற படி –

அர்ஜுனனோடு உறவு பண்ணுவோம் -கிருஷ்ணன் காலிலே வணங்கோம் என்ற
துரியோதனனை வெல்ல வல்லனானான் –

நீ சொல்லிற்றுச் செய்வேன் என்ற பாண்டவர்களுக்கு –
எல்லிப் பகல் என்னாது எப்போதும் ( பெரிய திருவந்தாதி 19 )-சர்வ காலமும்
தூத்ய சாரத்யாதிகளைப் பண்ணித் திரிந்தான்

வெல்லும் சீர்
எல்லாரையும் வெல்வது குணத்தால் –
கூடுவாரை சீலத்தாலே வெல்லும் –
கூடாதாரை ஸுர்யத்தாலே வெல்லும்

சீர்
ஸுர்யம் அம்புக்கு இலக்காகும் —
சீலம் அழகுக்கு இலக்காகும் –
(ஏழையர் ஆவி உண்ணும் இணைக் கூற்றங்களோ அறியேன் )

அம்புக்கு இலக்கானார்க்கு மருந்து இட்டு ஆற்றலாம்
சீலமும்
அழகும் நின்று ஈரா நிற்கும்

ஈர்கின்ற கண்கள் -(திருவாய் -8-1 )
தாமரைக்கு கண்கள் கொண்டு ஈர்த்தியாலோ -(திருவாய் -10-3-1 )

அம்பு தோல் புரையே போம் –
அழகு உயிர்க் கொலை யாக்கும்

வெல்லும் சீர்
ஸ்வரூப அனுசந்தானம் பண்ணி வாரோம் -என்று இருப்பார்
ப்ரதிஞ்ஜையை அழித்து வர பண்ணிக் கொள்ளவற்றாய் –
ஸ்த்ரீத்வத்வ அபிமானத்தாலே வாசல் விட்டுப் புறப்படோம் என்று
இருப்பாருடைய அபிமானத்தை முறித்து
தன் வாசலிலே வரப் பண்ணின குணம் –
தேஹாத்ம அபிமானிகளை தலை சாய்ப்பிக்கச் சொல்ல வேணுமோ

நலமுடையவன் என்னா-
தொழுது எழு -என்றார் இறே குணங்களுடைய எடுப்புக் கண்டு

வெல்லும் சீர்
அஞ்ஞரை சர்வஞ்ஞராக்கும் –
சர்வஞ்ஞரை எத்திறம் என்னப் பண்ணும்

கோவிந்தா
கூடுவோம் அல்லோம் என்கிற அபிசந்தி இல்லாத மாத்திரத்தில்
கூடுவோம் என்ன அறியாதாரையும் ரக்ஷிக்குமவன் அன்றோ

கோவிந்தா
பொருந்தோம் என்னும் துர் அபிமானமும் இன்றிக்கே-
ரஷித்தாலும் உபகார ஸ்ம்ருதி இன்றிக்கே இருக்கும் பசுக்களோடு பொருந்துமவனே-

இட்டமான பசுக்களை –
நாலிரண்டு நாள் தீம்பிலே வளர்ந்து நடந்து பெண்களோடு கலந்து வந்தால்
மாதா பிதாக்கள் தாழ்த்து வந்தது என் என்றால்
பசு மேய்க்கப் போனேன் என்று கண்ணழிவு சொல்லலாம் படி ஒதுங்க நிழலாய் இருக்கை –

காமுகராய் இருப்பார் உகந்த விஷயங்களில் காட்டிலும் கடகரை இறே உகப்பது-
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி -(திருவாய் -10-3-10 )
கன்று மேய்த்து இனிது உகந்த –
காலி மேய்க்க வல்லாய் -(திருவாய் -6-2 )
கன்று மேய்த்து விளையாட வல்லானை -(பெரிய திருமொழி -2-5 )

சாமான்ய ரக்ஷணமும் –
விசேஷ ரக்ஷணமும் –

தன் வாயாலே பறித்து மேய்வாருடைய -(பசு-உபாயாந்தர பரர் )ரக்ஷணமும் –
தான் பறித்துக் கொடுப்பாருடைய (கன்று -பிரபன்னர் )ரக்ஷணமும்

கோவிந்தா
சேரோம் என்னும் அத்யாவசியம் இல்லாத திர்யக்குகளோடும் பொருந்தும் படியான
நீர்மையை யுடையவன் –

உன் தன்னைப் பாடி
ஹிரண்ய புரம் போலே இவன் பேர் சொல்ல ஓட்டுவார் இல்லை போலே காணும் பண்டு –
அநந்தரத்திலே இவர்கள் கோபிப்பார்கள் என்று தவிர்ந்த இழவு எல்லாம்
சந்நிதியில் பாடப் பெறுகையாலே தீரப் பெற்றது –

உன் தன்னைப் பாடி
வகுத்த உன்னுடைய பேரை ஸ்வயம் பிரயோஜனமாகப் பாடப் பெறுகையாலே –
வாயினால் பாடி( 5 )-என்று உபக்ரமித்தபடி
நா படைத்த பிரயோஜனம் கொள்ளப் பெற்றோம்

உன்னைப் பாடி என்னாதே
உன் தன்னைப் பாடி என்கிறது
அத் தலை இத் தலை யாவதே –
உன் பணியை நாங்கள் ஏறிட்டுக் கொள்வதே

கோவிந்தா உன் தன்னைப் பாடி
கோவிந்தன் குழல் கொடூதின போது -என்று நீ பாடும் போது –
கேயத் தீங்குழல் ஊதிற்றும்-என்னும் படி
பெண்கள் புணர்ப்பை குழலிலே இட்டுப் பாடி –
எங்களை தோற்ப்பிக்கை அன்றிக்கே
எங்கள் வாசல்களில் பாடி ஆவி காத்து இராதே (நாச்சியார் -8-3 )
உன் வாசலிலே வந்து கோவிந்தா என்று பாடும் படி ஆவதே

பறை கொண்டு
பாடிப் பறை கொண்டு என்று அடியில் சொன்ன படியே
ஊரார் இசைந்த பறையைக் கொண்டு –
ப்ராப்யத்தில் ப்ராபக வியவஹாரம் பண்ணுகிறார்கள் ஆற்றாமையால் -ஊருக்கு இறே
தங்களுக்கு ப்ராப்யம் இறே

(பாடுவதே இவர்களுக்கு ப்ராப்யம்
இத்தை உபாயமாக த்வனிக்க ஊராருக்காகப் பாடுகிறார்கள் இப்படி )

யாம்
தேவகீ புத்ர ரத்னமான உன் வாசி அறிந்து பற்றி உன்னை ஆச்ரயித்தார்க்கு
பேறு தப்பாது என்கிற வ்யவசாயம் யுடைய நாங்கள்

பெறும் ஸம்மானம்
வெறும் ஊரார் காரியமே யாக ஒண்ணாது –
எங்களுடைய அபிமதமும் பெற வேணும்

யாம் பெறும் ஸம்மானம்
பெருமாள் பிராட்டிக்கு பண்ணின ஸம்மானம் போலே –
ஆத்வாரம் தொடர்ந்து ஏத்தின பிராட்டிக்கு தன் தோளில் மாலையை வாங்கி
இட்டு
காலைப் பிடித்து நில் என்று போன ஸத்காரம் இறே
இவர்களுக்குப் பண்ணப் புகுகிறது

அவள் இவர் திருவடிகளைப் பிடிப்பது கைப் பிடித்த முறையால் –
இவர் அவள் காலைப் பிடிப்பது பிரணயித்தவத்தாலே

அவளுக்குச் சொல்லும் ஏற்றம் எல்லாம் ஸ்வரூப நிபந்தனம்-
இவனுக்கு சொல்லும் ஏற்றம் எல்லாம் பிரணயித்தவ நிபந்தனம்

அவனுடைய வியாபாரம் வைதம் –
இது ராக பிராப்தம் –
ஸ்வயம் ப்ரவ்ருத்தனாம் இடத்தில் விதி விஷயம் ஆக மாட்டாதே
அவ் விடத்தில் விதி நுழையுமாகில் போக மாட்டாதே

வெளித் திரு முற்றத்திலே -பிரசாதம் அவ்வளவில் வர
யாம் பெறும் ஸம்மானம் வந்தது என்பர் பட்டர்

நாடு புகழும் பரிசினால்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட அவமானம் மறக்கும் படியாக
ஒருவன் கொடுத்த படியே –
சிலர் பெறும் படியே என்று
நாட்டார் கொண்டாடும்படியாக வேணும் –
பாரோர் புகழ (1 )என்னும் படியே தலைக் கட்ட வேணும் —

கிருஷ்ணனும் சத்யபாமை பிராட்டியும் அர்ஜுனனும் திரௌபதியுமாக கால் மேல் கால் ஏறிட்டு கொண்டு இருக்க
சஞ்சயன் திருவாசலிலே வந்தான் என்று அறிவிக்க –
கிருஷ்ணன் அருளிச் செய்கிறான் -நம்முடைய இருப்புக் கண்டால் உகப்பானும் உகவாதார் மண் உண்ணும் படி
இவ் விருப்பைச் சொல்ல வல்லானும் ஒருவன் புகுர விடுங்கோள் என்ன
அவனும் புகுந்து -கண்டு -அப்படியே போய் –
துரியோதனனுக்கு கெடுவாய் –
அவர்கள் இருப்பு கண்டேனுக்கு உன் கார்யம் கெட்டது கிடாய் என்றான் இறே –

சுக சாரணர்கள் சென்று ராவணனுக்கு அவருடைய ஓலக்கத்தில் மதிப்பும்
அவருடைய வீரப்பாடும் கண்டோமுக்கு உனக்கு ஒரு குடி இருப்பு
தேடிக் கொள்ள வேண்டி இருந்தது –
ஊற்று மாறாதே நித்தியமாய் நடக்கிற ஐஸ்வர்யத்தை யுடையராய் உனக்கு வரம் தந்து
உன் கையாலே தகர்ப்புண்ணும் அவர்களை போல் அன்றிக்கே
உனக்கு முடி தந்தார்க்கும் முடி கொடுத்த ராஜா உன் தம்பிக்கு
லங்கையைக் கொடுத்தான் -வானரங்களும் ஆர்த்துக் கொண்டது –என்று சொன்னார்கள் இறே –

இப்படி தன்னை ஆஸ்ரயித்தாரை நாடு புகழும் படி இறே வாழ்விப்பது –
வாழ்வர் வாழ்வு எய்து ஞாலம் புகழ (திருவாய் -3-3-11 )-என்கிறபடியே –

நாடு புகழ என்று
யசஸ் பரராய்ச் சொல்லுகிறார்கள் அன்று –
புகழ்ந்து நாட்டார் உஜ்ஜீவிக்கை ஸ்வ லாபமாக நினைக்கையாலே
ஸூத்ரனை ஒளித்து வேண்டிப் பெறுமது இறே லோகம் இகழ்வது –
சர்வ ஸமாஸ்ரயணீயன் தானே
மேல் விழுந்து சத்கார பூர்வகமாகக் கொடுக்கிறது ஆகையால் புகழும் இறே

நன்றாக
இவனை ஒழிந்தாரைப் பாட வேண்டிப் பெறுமது பரிமித பலமாகையாலே –
படி வைக்க யுண்பார் பாடே பிச்சை புக்கு உண்ணும் மாத்ரம் –
காலன் கொண்ட பொன்னிட்டு ஆபரணம் பண்ணிப் பூண்பார் மாத்ரம் –
நாடும் புகழும் அளவன்றிக்கே அவன் தானும் சத்தை பெற்று நாமும் சத்தை பெற வேணும் –
இவர்களை ஒப்புவிக்கை அவனுக்கு ஸ்வரூபம் –
அவன் ஒப்பிக்க இசைகை இவர்களுக்கு ஸ்வரூபம் –

நன்றாக
இந்திரன் வரக் காட்டின ஹாரத்தைப் பெருமாள் பிராட்டிக்குக் கொடுத்து அருள –
திருக் கையிலே பிடித்துக் கொண்டு இருந்து
பெருமாளை ஒரு கண்ணாலும் திருவடியை ஒரு கண்ணாலும் பார்க்க –
பெருமாள் பிராட்டி திரு உள்ளத்தில் ஓடுகிறதை அறிந்து
அடியார் தரம் அறிந்து கொண்டாடும் வீறுடைமைக்கு பர்யவசான பூமியான நீ கொடு என்ன
திருவடியை ஒப்புவித்தால் போலே
கிருஷ்ணன் நப்பின்னை பிராட்டியை விடுவித்து ஒப்பிக்கை யாய்த்து
நன்றாக ஒப்பிக்கை யாவது –

இவர்கள் நோக்குதியேல் என்னப் பண்ணிற்று ஒரு பூர்ண கடாக்ஷம் உண்டு இறே –
அப் பார்வை பட்ட இடம் இருக்கும் படியை மேலே சொல்லுகிறார்கள் –

சூடகமே
அணி மிகு தாமரைக் கையை (பெரிய திருமொழி கள்வன் கொல் )-என்று
தன் கையை இவர்கள் ஆசைப் படுமா போலே –
இவர்கள் ஆபரணம் பூண்ட கையை
அவன் மார்பிலும் தோளிலும் தலையிலும் வைத்துக் கொள்ள இறே அவனும் ஆசைப்படுவது –
அக் கைக்கு இடக் கடவ ஆபரணம் சூடகம் –
வெள்ளி வளைக் கை பற்ற என்கிறபடியே –
அநன்யார்ஹைகளாய் பிடித்த கைகளை இறே முதல் ஆபரணம் பூட்டுவது –
(பாணி கிரஹணம் முதல் அன்றோ )

தோள் வளையே
கையைப் பிடித்த அனந்தரம் –
அணைக்கும் தோள்களில் கிடந்து அவன் கழுத்தில் உறுத்தும் ஆபரணம் –
அவன் நாண் தழும்பின் சரசரப்பு முலைகளுக்கு உத்தேசியமானவோபாதி-
இவர்களுடைய வளைத் தழும்பும் அவன் தோளுக்கு ஆசையாய் இருக்கும் இறே

வேய் இரும் தடம் தோளினார் (திருவாய் – 6-2 )-என்று
சுந்தரத் தோளுடையான்-தோற்கும் படி தோள் படைத்த தோளுக்கு இடம் ஆபரணம்
வேய் மரு தோளிணை (திருவாய்-10-3-1 )-மெலியும் காலத்தில் இறே வளை பொறாது ஒழிவது –
இப்போது அணைக்கிற காலம் இறே

தோடே
தங்கள் கைக்கும் தங்கள் தோளுக்கும் ஆபரணம் போல் அன்றே –
அவன் தோளுக்குப் பூணும் ஆபரணமும் பூண வேணும் –
இவர்களுடைய காதுப் பணியும் செவிப் பூவும் பட்ட விமர்த்தத்தாலே வந்த
சோபையைக் கோட் சொல்லும் இறே அவன் தோள்கள் –

கண்டேன் கன மகரக் குழை இரண்டும் நான்கு தோளும்-என்று
அவனுடைய கரண பூஷணம் அவன் தோள்களுக்கு ஆபரணம் ஆனால் போலே
இவர்களுக்கு காதுப் பணியும் செவிப்பூவும் தோள்களுக்கும் அலங்காரமாய் இறே இருப்பது –

தோடே
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடிட்டாலும் இவன் இட்டால் போலே இராதே

செவிப் பூவே
அணைத்த அனந்தரம் ஆக்ரணத்துக்கு (முகந்து பார்க்க )விஷயமான இடம்

பாடகம்
அணைத்துத் தோற்றவர்கள் விழுந்து பிடிக்கும் காலுக்கு ஆபரணம்

சூடகமே இத்யாதி
1-பிடித்த கைக்கும் –
2-அணைத்த தோள்களுக்கும்
3-அணைத்த இடத்தே உறுத்துமதுக்கும்
4-ஸ்பர்சத்துக்கும்
5-தோற்று விழும் துறைக்கும்

சூடகமே பாடகமே
கைத்தலம் பற்ற —
திருக்கையால் தாள் பற்ற –

கையைக்
காலைப் பிடித்து இறே
நடுவுள்ளது எல்லாம் நடத்துவது –

என்றனைய பல் கலனும்
இவ்வளவிலே இருந்தது எண்ணுமது அன்றே –
பருப் பெருத்தன சிலவற்றைச் சொன்னோம் –
நீ அறியுமவை எல்லாம் என்கிறார்கள்-
பல பலவே ஆபரணம் -என்னக் கடவது இறே அவன் தனக்கு உட்பட –

யாம் அணிவோம் –
ஆபரணங்களுக்கு அழகு கொடுக்க வல்ல அவயவங்களிலே கிடந்து தானும் நிறம் பெற்று –
பூட்டின தானும் நிறம் பெற்று போம்படி வடிவு படைத்த நாங்கள் –

இவ் வெல்லை வரும் வளவு இறே மலரிட்டு நாம் முடியோம் என்றது –
நாம் முடியோம் என்றால் பூட்ட மாட்டான்
அணிவோம் என்றால் பூட்டாது இருக்க மாட்டான் —
அவன் அலங்கரிக்கைக்கு இவர்கள் அனுமதியே அமையும்

யாம் அணிவோம்
ஒருவரை ஒருவர் மாறி மாறி ஒப்பிக்கக் கணிசிக்கிறார்கள் –

நாடு புகழும் பரிசினால் –யாம் அணிவோம்
நிறை புகழ் ஆய்ச்சியர் –(நாச்சியார் 4-11 )
அணி இழை யாய்ச்சியார் (திருவாய் 9-10-11 )-என்கிற இரண்டும் பெற வேணும் –

ஆடை யுடுப்போம்
புனை இழைகள் அணிவும் என்றால் ஆடையுடையும் என்று அடைவு -(திருவாய் 8-9 )
காறை பூணும் கண்ணாடி காணும் தன் கையில் வளை குலுங்கும் (பெரியாழ்வார் -3-9 )-என்றால்
பின்னை கூறை யுடுக்கை இறே அடைவு –

நாடு புகழும் பரிசினால் –ஆடை யுடுப்போம் –
கூறை யுடுக்கும் –அயர்க்கும்-(பெரியாழ்வார் -3-9 )-என்று
வசை சொல்லாத படி அரையிலே தொங்கும் படி உடுக்கை

கோவிந்தா உன் தன்னைப் பாடி –ஆடை யுடுப்போம் –
இவன் தூர வாசியான போது கோவிந்தன் -என்று புடவை பெறுகிறவள்
இவன் சந்நிதியில் சொன்னால் புடவை பெறக் கேட்க வேணுமோ

ஆடை யுடுப்போம்
முன்பு உடாதே இருந்து இப்போது உடுப்போம் என்கிறார்கள் அன்று –
அவன் உடுத்த உடுத்தும் இறே -உடையாவது –
இவர்கள் யுடுக்க உபக்ரமிக்க உடுத்தபடி பொல்லாது என்று
அவன் அழிக்கை இறே நன்றாக யுடுக்கை யாவது

நன்றாக –ஆடை யுடுப்போம்
அரையில் பீதக வண்ண வாடை கொண்டு(நாச்சியார் -13-1) -என்கிறபடியே
அவனைப் போலே வெளுப்போடே வாங்கி உடுத்தது அன்றிக்கே
உடுத்து முசித்து வேர்ப்பு மணத்தோடு கூடின கூறை மாறாடப் பட்ட உடையாய் இருக்கை

அணிவோம் –உடுப்போம்
பிரிந்து இருக்கில் இறே வரி
வளையால் குறைவிலமே–(திருவாய் -4-8 )
மேகலையால் குறைவிலமே -என்ன வேண்டுவது

பல் கலனும் யாம் அணிவோம் ஆடை யுடுப்போம்
எண்ணில் பல் கலன்களும் ஏலும் ஆடையும்(திருவாய் 4-3 ) -என்னக் கடவது இறே

அதன் பின்னே
பீதக வாடை யுடுத்தால் -கலத்தது உண்ணும் அத்தனை இறே

அதன் பின்னே
புறம்பே ஒன்றைப் பற்றினால்
அவையும் இல்லை –
அவனையும் கிடையாது –
அவனைப் பற்றினார்க்கு சர்வ லாபமும் உண்டு –

பாற் சோறு மூட நெய் பெய்து
நெய் உண்ணோம் பால் உண்ணோம் என்கிற விரதங்கள் ஸமாப்பித்து –
இவர்கள் வ்ரதத்துக்காகத் தவிர்ந்து இவர்கள் தவிருகையாலே
அவன் தவிர்ந்து ஊரில் நெய்க்கும் பாலுக்கும் போக்கில்லையே –

நெய் பெருமையாலும்
பால் பெருமையாலும் நீரிலே யாக்காதே
பாலில் யாக்கி
நெய்யை நிரம்ப விட்டு
நெய்யிடையிலே
சோறு உண்டோ என்று தடவி எடுக்க வேண்டும் படி இருக்கை

முழங்கை வழி வார
கிருஷ்ணன் சந்நிதியில் திருப்தைகளாய் இருக்கிறவர்களுக்கு
உள்ளுத் தொங்குகிறது அன்றே -கை வழியே வழிய

கூடி இருந்து
பசி கெட யுண்கிறார்கள் அன்றே –
எல்லாரும் கூட தொட்டுக் கொண்டே இருக்கை இறே உத்தேச்யம் –

கூடி –
பிரிந்த பட்ட வியாசனம் எல்லாம் தீரக் கூடி –
எனை நாள் வந்து கூடுவன்-(திருவாய் -10-10 )என்ற இழவும் தீர்ந்த படி

இருந்து
வாசல்கள் தோறும் அலமந்து எழுப்பிக் கொண்டு திரிந்த கிலேசம்
எல்லாம் தீர இருந்து –

குளிர்ந்து
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் வவ்வல் இடும்படி குளிர்ந்து –

கோவிந்தா உன் தன்னைப் பாடி கூடி இருந்து குளிர்ந்து
கோவிந்தன் குணம் பாடி ஆவி காத்து –
காமத் தீயுள் புகுந்து கதுவா நிற்க இராதே –
குளிர்ந்து உறைகின்ற கோவிந்தனோடு சாம்யாபன்னைகளாய் இருக்கை –

ஆக இரண்டு பட்டாலும்
சாம்யா பத்தியும்
குண அனுபவமும் ஆகிற இரண்டு அர்த்தமும் சொல்லப் பட்டது –

விராஜா ஸ்நானத்தில் உத்யுக்தனாய் போருமவனுக்கு
காளங்கள்-வலம் புரிகள் தூர்ய கோஷம் –(பெரியாழ்வார் -4-4 )
ஆண்மின்கள் வானகம்-(திருவாய்-10-9 )என்கிற மங்களா சாசனம் –
நிறை குட விளக்கம் –
கொடி அணி நெடு மதிள்-என்னும் படி கட்டின கொடியும் மேல் கட்டியுமாய்
ஆதி வாஹிகர் தொடக்கமான வர்கள் சத்கரிக்கப் போய்
விராஜா ஸ்நாநம் பண்ணின அனந்தரம்
ஸ்ரீ வைகுண்ட நாதனை ஒப்பிக்கக் கடவராய் இருக்கும்
திவ்ய அப்சரஸ் ஸூக்கள் பல ஹஸ்தைகளுமாய்
வாசோ ஹஸ்தைகளுமாய் வந்து
ப்ரஹ்ம அலங்காரம் பண்ணி ஸ்ரீ வைகுண்ட நாதனோடு கூட ஸூரிகளோடே சேர்ந்து இருந்து
சம்சார தாப ஸ்பர்சம் இன்றிக்கே நிரதிசய போக்யமாய் –

உண்ணும் சோறு -என்று சொல்லப் பட்ட போக்கிய விஷயத்தை –
பாலே போல் சீர் என்கிற குணங்களோடு
கை கழியப் போருகிற ஸ்நேஹத்தோடே புஜித்துக் களிக்கக் கடவ பரிமாற்றத்தை
ஒரு முகத்தால் ஸூசிப்பிக்கிறார்கள் –

முக்தரானவர்களுக்கு இஸ் ஸத்காரமும்
இவ் வனுபவமும் சித்திக்கிறது –
கோவிந்தன் தன் தனக்கு குடி குடியார் என்று இறே -(திருவாய் -10-9-8 )

கோவிந்தா உன் தன்னைப் பாடி
தேஹாந்த்ரே தேசாந்தரே பெறக் கடவ பேற்றை எங்களுக்கு
நீ சம்மானமாகப் பண்ணித் தர வேணும் என்று
சாம்யா புத்தியையும்
குண அனுபவத்தையும் அபேக்ஷித்தார்களாய் இருக்கிறது

திருவடி -திருவனந்த ஆழ்வான் -திவ்ய ஆயுத ஆழ்வார்கள் தொடக்கமான ஸூரி வர்க்கம்
திவ்ய மஹிஷிகள்
முமுஷுக்கள்
அசாதாரணமான நாடு ஈஸ்வரன் தானே எல்லாரும் சம்மானம் பண்ணும் படியான விஷயம்
முமுஷுவாய் முக்தனாம் என்கிற ஸ்ருதி யர்த்தம் ஸூசிதமாகிறது-

கூடி இருந்து குளிர்ந்து –பல் கலனும் யாம் அணிவோம்
பிரிந்த போது பர்யட்டங்களையும் ஆபரணங்களையும் கட்டி எங்கேனும் பொகட்டு
ராக்ஷஸிகள் நடுவு இருக்கிற எனக்கு என் செய்ய என்று
இருந்த பிராட்டியை போலே இருந்தார்கள் இவர்கள் –

ஸ்நாநமும் வஸ்த்ரங்களும் ஆபரணங்களும் பரதனை ஒழிய நமக்கு என் என்று இருந்த
பெருமாளை போலே இருந்தான் கிருஷ்ணன் –

நீராட்டம் அமைத்து குளிக்க அழைத்தாலும் வராதே
நப்பின்னை காணில் சிரிக்கும் என்றாலும் இசையாதே
குளியாது இருந்தமை அவர்களும் அறிகையால் இறே –
உன் தன் மணாளனை எம்மை நீராட்டு என்றது இவர்கள் (20)

இவர்களோடு கூடின பின்பு
விசோதித ஜடராய் (ஜடை முடி ஷவரம் பண்ணி)
ஸ்நாநம் பண்ணி
சித்ரமால்யா நுலேபநராய்
மஹார்ஹ வசனமும் யுடுத்து விளங்கி நின்றால் போலே

இவனும்
இவர்களோடு கூடிக் குளித்து
ஒப்பித்து விளங்க வேண்டுகையாலே
கூடி இருந்து இப்படிச் செய்யக் கடவோம் என்கிறார்கள்

கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே

நன்றாகக் கூடி இருந்து குளிர்ந்து
இனி விஸ் லேக்ஷம் கலசாமல் கூடி

நல்ல நாளிலே வருகிற கூட்டரவாக வேணும் நன்னாள் இறே வருகிற கூட்டரவு ஆகையால் நன்றாக கூட வேணும் இறே

உன் தன்னைப் பாடி -கூடி –குளிர்ந்து
வாய் பாட
உடம்பு கூட
நெஞ்சு குளிர
கூடி –குளிர்ந்து
குள்ளக் குளிர நீரிலே தோயாதே நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் –

(நீரிலே தோயாதே–உபாயாந்தரங்களிலே இழியாதே
நீர் வண்ணன் மார்வத்திலே தோய வேணும் -ப்ராப்யத்திலேயே ஆழ்ந்து இருக்க வேண்டும் )

—————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -மாலே மணி வண்ணா–ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 13, 2017

(சாம்யா பத்தி இதில் -அஷ்ட குணங்களில் ஸாம்யம் –
அபஹத பாப்மாதிகள் -தடங்கல் இல்லாமல் முழுமையாக நாம் பெறுவோம் அங்கே –
சாயுஜ்யம் அடுத்து -கைங்கர்யம் கொண்டு அவன் ஆனந்தம் -செய்து நாம் ஆனந்தம் –
சரணாகதியும் கைங்கர்ய பிரார்த்தனையும் மேல் இரண்டாலும்
நீராட்டம் உத்சவம் -உபகரணங்களைப் பெற்று ஏழு நாள்கள்
தை முதல் நாள் ஜீயர் படி உத்சவம்
பரத்வம்-ஆலின் சிலையாய்
சவுந்தர்யம் -மணி வண்ணன்
ஸுலப்யம் -மாலே
மூன்றும் விழிச் சொற்கள்)

பெண்காள்-உன்னை அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில் -என்று சொன்னி கோள்-
நம்முடைய சம்ஸ்லேஷ ரஸ உத்ஸாகம் உடையவர்கள்
வேறு ஒன்றை அபேக்ஷிக்கக் கூடாமையாலே அது என் சொன்னி கோள் என்று
அதிலே ஒரு சம்சயம் வர்த்தியா நின்றது –

(பறை)அதாகிறது ஏது-
அதுக்கு மூலம் ஏது –
அதுக்கு வேண்டுவன எவை –
அவற்றுக்கு ஸங்க்யை எத்தனை -அவற்றைச் சொல்லுங்கோள் என்ன –

உன் முகத்தை வெளியிலே கண்டு
உன் திரு நாமங்களை வாயாலே சொல்லுகைக்கு ஹேதுவாய் இருபத்தொரு நோன்பை
இடையர் பிரஸ்தாபிக்கையாலே
உன்னோட்டைக் கலவிக்கு அது அவிருத்தமாய் இருக்கிற படியைக் கண்டு
இடையர் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலே அந்நோன்பிலே இழிந்தோம்

அதுக்கு முன்பு உள்ளார் செய்து போருவது ஓன்று உண்டு –
அது தனக்கு வேண்டும் உபகரணங்களான அங்கங்களும் இவை
அவற்றையும் தந்து அருள வேணும் என்று வேண்டிக் கொண்டு  
அவனை ஆசைப் பட்டவர்களாகச் சொல்லிக் கொண்டார்கள் –

இதுக்கு முன்பு எல்லாம் தங்கள் பட்ட வியசனங்களைச் சொல்லி வந்தார்கள்

இப்போது அவனைக் கண்டவாறே
அவனுடைய வ்யாமோஹம் கடல் போலே எட்ட முடியாதபடி இருந்ததே
தங்களுடைய வ்யாமோஹம் குளப்படியாய்-
அத்வேஷ கோடியிலேயாய் என்னலாய் இருந்தது –
அவனுடைய பிச்சு வடிவு கொண்டால் போலே இருந்தது –

இது கொண்டு இத்தனை நாளும்
நாங்கள் வரும் தனையும் பாடு ஆற்றின படி தான் எங்கனே என்று
மாலே என்கிறார்கள் –

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்-

பதவுரை

மாலே–(அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணி வண்ணா–நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய்–(ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான்–மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார்–உத்தம புருஷர்கள்-முன்னோர்கள் –
செய்வனகள்–அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன–வேண்டியவற்றை
கேட்டி ஏல்–கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
பிச்சுப் பிடித்து கோபிகளை கூட்டம் பார்த்து திகைத்து இருக்கத் தட்டி எழுப்புகிறார்கள்
ஞாலத்தை எல்லாம்-பூமி யடங்கலும்
நடுங்க–நடுங்கும்படி
முரல்வன–ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே போல்வன-பால் போன்ற நிறமுடையதான
உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள்–சங்கங்களையும்
போய் பாடு உடையன–மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு-மிகவும் பெரியனவுமான
பறை–பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார்–திருப் பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு–மங்கள தீபங்களையும்
கொடி–த்வஜங்களையும்
விதானம்–மேற் கட்டிகளையும்
அருள்–ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

மாலே –
நாங்கள் தெளிந்து
நோன்பு நோற்க வாகிலும் வல்லோம் ஆனோம் –

நோற்கவும் ஷமன் அன்றிக்கே
நாங்கள் வந்து எழுப்பும் அளவும்
எழுந்து இருக்கவும் மாட்டாதே
வ்யாமோஹம் இருந்த படி என் –

மாலே
நாராயணன் —
பையத் துயின்ற பரமன் –
தேவாதி தேவன் -என்று முன்பு அபரிச்சேதயமான மேன்மை
யுனக்கு உள்ளது என்று இருந்தோம் –

இப்போது மேன்மை இடு சிவப்பு –
வாத்சல்யமே உனக்கு பிரகிருதி என்று நிலையிட்டோம் காண் –
உன்னைக் கண்ட வாறே –

பெருமாளுக்கு பிரதானமான குணத்தை –
சரணாகதர் வத்சலர் -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடாக நிலையிட்டாள் பிராட்டி –

அப்படியே
கிருஷ்ணனுக்கு பிரதான குணமாய்
மஹா பாரதத்துக்கு உள்ளீடான ஆஸ்ரித வியாமோஹத்தை
மாலே என்கிற சம்புத்தியாலே
வெளியிடுகிறார்கள் இடைப் பெண்கள்

ராவணன் பின்னே பிறந்த நம்மை
ரகு குலத்தில் பிறந்தார் கைக் கொள்ளுவார்களோ -என்று இருந்தான் விபீஷணன் –

ராவணன் பின்னே பிறந்தவனை ராவணனை ஆசைப்படுகிற நமக்கு
சித்திக்கப் புகுகிறதோ என்று இருந்தார் பெருமாள் –

இது இறே இரண்டு தலைக்கும் வாசி

இத் தலை ஒரு மாசம் ஜீவியேன் என்னில்
ஒரு க்ஷணம் ஜீவியேன் என்று இறே அத் தலை

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் -என்கிற அளவு இறே இவர்களது –
என்னில் முன்னம் பாரித்து பருகினான் இறே அவனது -(கார் ஒக்கும் காட்கரை அப்பன் )

(கோதண்ட ராமர் சந்நிதியில் பராங்குச பரகால யதிராஜர் முன்னே வர
நம்பெருமாள் பாய்ந்து முன்னே வர அவர்கள் பின்னே எழுந்து அருளி வியந்து இருக்க
இன்றும் இத்தை மணல் வெளியில் சேவிக்கிறோமே )

எனைத்தோர் பல நாள்,அழைத்தேன் இறே -இவர்களது –
என் தன் கருத்தை யுற வீற்று இருந்தான் இறே -அவனது –

அதனில் பெரிய என்னவா இறே -இவர்களது –
அவா அறச் சூழ்ந்தாயே இறே அவனது –

நாராயணனை நமக்கு கிடைக்குமா -என்பது பெண்கள் நினைவு
யது குலத்தில் பிறந்தார்க்குக் கிடைக்கப் புகுகிறதோ என்று அவன் நினைவு

ஒருத்தி மகனானத்தை விட்டு ஒருத்தி மகனாய்த்து இவர்களுக்கு இறே –
ஒளித்து வளர்ந்தது கம்சனுக்கு அன்றே –
பெண்களை பிரியாமைக்கு இறே

நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய்–(நாச்சியார் -3-9 )
நாம் அறிய ஆய்ப்பாடி வளர்ந்த –

மாலே
இவர்கள் பக்கல் பிச்சு இறே ஒரு பிறவியிலே இரு பிறவி யாய்த்து –
மாலாய் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை –
பிச்சாய்ப் பிறந்து பெண்களையும் பிச்சேற்றித் தன்னோடு ஒரு கோவையாக்கும் –
மன்றில் குரவை பிணைந்த மால் என்னை மால் செய்தான் -(நாச்சியார் -11-2)
(அங்கு அஷ்ட குண ஸாம்யம்
இங்கு மாலாவதற்கு ஸாம்யம் )

தெளிவுடையார் பெண்களை சந்தியில் வைப்பார்களா-

நம்முடைய வியாமோஹம் நீங்கள் அறிந்த படி என் என்ன –

அகவாயில் வியாமோஹம் வடிவிலே நிழல் இட்டுக் காட்டுகையாலே தெரிந்தது என்கிறார்கள்
(ரத்ன கர்ப்ப ஸாளக்ராமம் உண்டே )
மணி வண்ணா
பெண்கள் பிச்சுக்கு நிதானம் இருக்கிறபடி

மணி வண்ணா
தாமரையில் இருக்கிறவள் அத்தை விட்டு வருவது இவ் வடிவைக் கண்டு இறே –
பனி மலராள் வந்திருக்கும் மார்வன் நீல மேனி மணி வண்ணன் (பெரிய திருமொழி-2-2)

மணி வண்ணா
வியாமோஹன் அன்றிக்கே காதுகன் ஆனாலும் விட ஒண்ணாத வடிவு அழகு

மாலே மணி வண்ணா
இப்படி வடிவு படைத்தாரும் பிறரத்தை ஆசைப் படுவார்களோ
பிச்சர் கையில் மாணிக்கமாய் -உன்னுடம்பு உன்னதாமோ
(ந தே ரூபம் –பக்தாநாம் அன்றோ )

அன்றிக்கே –
மால் -என்று
பெரியோன் -என்றபடியாய்
சூட்டு நன் மாலைகள் எடுத்து ஸூரிகள் சேவிக்க இருக்கும் ஈஸ்வரத்வம் சொல்கிறது

மணி வண்ணா -என்று
வெண்ணெய் தொடு உண்ணப் போந்து -அபரிச் சேதியனாய் இருக்கச் செய்தே-
முந்தானையில் முடிந்து
பெண்களுக்கு அடக்கி ஆளலாம் படி இருக்கிற ஸுலப்யத்தை சொல்லுகிறது ஆகவுமாம்-

மணி வண்ணா -என்று மணியினுடைய ஸ்வபாவத்தைச் சொல்லுகிறது –
அதாவது –
1-உண்டு -என்ன உயிர் நிற்கையும்
2-உடையவன் காலில் சர்வரும் விழும்படியாய் இருக்கையும் –
3-இழந்தார் பிழையாது ஒழிகையும்
4-கைப் பட்டார்க்கு பூணலாய் இருக்கையும்-
5-பூணாதார்க்கு அழித்து உண்ணலாய் இருக்கையும் –
6-கிழிச் சீரையிலே அடக்கலாய் இருக்கையும் –
7-பிறர்க்கே யாய் இருக்கையும்
8-அளவு படாமல் உபகரிக்கையும் –
9-கொடுத்தோம் என்று நினைத்திராது ஒழிகையும்
10-வேறு ஒன்றில் கண் வைக்க ஒட்டாது ஒழிகையும் தொடக்கமான ஸ்வபாவங்கள் –

என்றும் எனக்கு இனியானை என் மணி வண்ணனை என்று
நம்மை ஆச்சி பல காலம் சொல்லும் –
தாய்க்கு மணி வண்ணன் அத்தனை அன்றோ
மணி மாமை குறைவில்லாதே -(4-8 )
அழகியார் இவ் வுலகம் மூன்றுக்கும் (6-2 )-என்கிற உங்களுக்கு ஏற யுடம்பு படைக்கப் போமோ
இத்தனை மிகை நம்மை சொல்லுகிறது என் –
போந்த காரியத்தை சொல்லுங்கோள் என்ன

மார்கழி நீராடுவான்
மகிழ்ந்து -மார்கழி நீராட -என்று ஊராக சங்கல்பித்த கார்யம் தலைக் கட்டுகைக்காக –

சாத்தியம் கைப் பட்டு இருக்கச் செய்தே
ஆன்ரு சம்சயத்தாலும்
ஆஸ்திக்ய அதிசயத்தாலும்
க்ருத்யாம்சம் விடார்கள் இறே
மார்கழி நீராடுகைக்கு உபகரணங்கள் வேண்டி வந்தோம்

இவர்கள் சொல்லுமது கேட்க்கைக்காக இத்தை ஷேபித்து
இது எங்கே உள்ளது என்று தான் என்றான்

இது இங்கனே அப்ரஸித்தமாய் இருந்ததோ -என்றார்கள் –

காமநாதிகாரிகளுடைய ஜ்யோஷ்டோமாதி விதி போலே ப்ரசித்தமோ என்ன –

அனன்ய பிரயோஜனைகளான எங்கள் முன்னே
பிரயோஜனாந்தர பரருடைய விதியைக் காட்டினாயே என்று இவர்கள் சொல்ல

முமுஷுக்களுடைய த்யான விதி போலே பிரசித்தமாய் இருந்ததோ என்று அவன் சொல்ல

நாஸ்திகரைப் போலே நீ சொல்லுகிறது என் –
ஆள் அறிந்து வார்த்தை சொல்லாய்
நாராயணனே நமக்கே பறை தருவான் என்பவருடைய அனுஷ்டானம்
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலே சொல்லுகிறவை போலே அல்ல காண் –
பிரபல பிரமாண சித்தம் காண் என்கிறார்கள் –

(ஸ்ருதி ஸ்ம்ருதி உணர்ந்த வைதிகர் அனுஷ்டானம் தான் பிரபல பிரமாணம்
வேதங்களும் பிரமாணம் மேலையார் செய்வனகள் )

மேலையார் செய்வனகள்
விதி ப்ரவ்ருத்தமானால் பல வ்யாப்தமாந்தனையும் சம்சயத்துக்கு விஷயம் உண்டு –
அனுஷ்ட்டித்து பல சித்தி உண்டானதுக்கு சம்சயம் இல்லையே –

விச்வாமித்ரன் சொன்னான்
கண்டு சொன்னான் என்றால் போலேயோ
கபோதம் அனுஷ்டித்தது -(புறா கதை )

மேலையார் செய்வனகள்
நிர்தோஷ பிராமண சாஸ்திரம் தானும்
வியாசன் சொன்னான்
மனு சொன்னான்
ப்ரஹ்மாவாதிகள் சொல்லுவார்கள்
யாதொரு படி அவர்கள் அவ்விடத்திலே வர்த்தித்தார்கள் அப்படி வர்த்தி என்று –
ஞானவான்களுடைய வசனத்தையும்
அனுஷ்டானத்தையும்
அன்றோ பிரமானமாகச் சொல்கிறது –

வேதங்களுக்கு முன்னே அன்றோ
தர்மஞ்ஞருடைய ப்ராமாண்யம் சொல்லப் படுகிறது

வேண்டுவன கேட்டியேல்
யாதொன்றை யாதொன்றை ஸ்ரேஷ்டர்கள் ஆசரித்தார்கள் –
யாதொரு அளவு செய்தார்கள் -அவ்வளவு லோகம் அனுவர்த்திக்கும் என்று
சிஷ்டாசாரமே ஸ்திர பிரமாணம் என்று
தேர்த் தட்டிலே நின்று சொன்ன நீ எங்களைக் கண்டவாறே மறந்தாயோ –

சாஸ்திரம் விதித்ததே யாகிலும்
சிரேஷ்டர் அனுஷ்டானம் இல்லாத இடத்தில் தவிரக் கண்டு அறியாயோ –

அஷ்டகையில் -பசு விசசநம் கர்த்தவ்யம் என்னும் இடம் பசு மேய்ப்பார்க்குத் தெரியாதே –

உன்னை பர தேவதை என்றும்
உனக்கு வாசக சப்தம் நாராயணன் என்றும்
நாங்கள் ஆதரிக்கிறது வேத சாஸ்த்ர சித்தம் என்று அன்று இறே
விட்டு சித்தர் தங்கள் தேவரை -என்றும்
விட்டு சித்தன் விரும்பிய சொல் -என்றும் அன்றோ –

வைதிக விதிகள் எல்லாம்
உன்னுடையாருடையான கம்பீரமான மனசை அனுவர்த்தித்து இறே பிரமாணம் ஆகிறது

ஒத்த ஓதா நிற்கச் செய்தே ஒரு மந்த்ரத்தை ஸ்வீகரித்து
இதர மந்த்ரங்களைக் கை விட்டது
சிஷ்ட அசிஷ்ட பரிக்ரஹங்கள் ஆகையால் இறே –

அப்படி பரிக்ரஹித்த மந்த்ரம் தன்னில்
மந்த்ர ரத்னத்துக்கு உத்கர்ஷம் ஆச்சார்ய ருசி பரிக்ருஹீதம் என்று இறே –
திருமால் திரு நாமம் நானும் சொன்னேன் நமரும் உரைமின்-என்னக் கடவது இறே

வேண்டுவன
லோக ஸங்க்ரஹத்தயா அனபேஷிதங்களும் செய்யா நிற்பர்கள் –
அவர்கள் செய்யுமா போலே அவை எல்லாம் செய்யப் போகாதே என்ன

வேண்டுவன
அவர்கள் செய்து போருமவற்றில் இப்போது அதிகரித்த காரியத்துக்கு அபேக்ஷிதமுமாய்
ஸ்வரூப விரோதமும் பிறவாதே இருக்குமவை-

இவர்கள்
மணி வண்ணா என்று அவன் வடிவிலே கண் வைத்துக் கொண்டு இருக்கிற மாத்ரம்-
அஞ்சு லக்ஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே அவர்கள்
கண்ணிலும் முலையிலும் இடையிலும் துவக்குண்டு அந்நிய பரனாய் இருந்தான் –
தட்டி யுணர்த்தி
கேட்டி
என்கிறார்கள் –

இவர்களாலும் புறம்புள்ள அந்நிய பரதை இறே தவிர்க்கலாவது-
தங்கள் பக்கல் அந்நிய பரதை தவிர்க்கப் போகாது இறே
ஊரார் இசையாத போது இறே -ஓடி அகம் புக வேண்டுவது –
இப்போது வைத்த கண் வாங்காதே அனுபவிக்கலாமே-
ஆகையால் பார்த்துக் கொண்டு இருந்தான் –

சிலர் பட்டினி கிடக்க சிலர் உண்டு ஸூகிக்குமா போலே
கெடுவாய் நீ என் செய்கிறாய்
கேட்க்கிறாயீ -என்கிறார்கள் –

உங்களுடைய ஞான பக்தி வைராக்யங்களினுடைய நிழலீடு ஆகையால்
கண்ணும் முலையும் இடையும் போக்யமாகையாலே
உங்கள் வடிவைப் பார்த்துக் கொண்டு இருந்தோம் –
உங்களுடைய மழறு தேன் மொழிகள் (6-2 )செவிக்கு போக்யமாம் படி கேட்க்கிறோம்-
திரு உள்ளமாகல் ஆகாதோ –
வேண்டுவது எல்லாம் -என்றான்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன–பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே-
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே-
என்கிறார்கள் –

ஜகத்து எல்லாம் அதிரும் படியான த்வனியை யுடைத்துமாய் –
இடைமுடைத்தாய் –
பாலைத் திரட்டினால் போலே அழகிய நிறத்தை யுடைத்தாய் –
பல சொல்லுகிறது என்
உன் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் அநேக சங்கங்கள் வேணும்

ஞாலத்தை எல்லாம் நடுங்க
பாரத சமரத்தில் முழக்கம் துர்யோத நாதிகளை நடுங்கப் பண்ணின அளவிலே
இச் சேர்த்திக்கு பிரதிகூலராய் இருப்பர் யாவர் சிலர் –
அவர்கள் எல்லாம் நடுங்க வேணும் –

பற்றார் நடுங்க -(பெரிய திருமொழி 3-3)
பூங்கொள் திரு முகத்து
சிலரை வாழ்விக்கும் –
சிலரைக் கெடுக்கும் –

வர்ஷார்த்தமாக பெண்கள் புறப்படும் போதை சங்க த்வனி கேட்டு
வலம் புரி போல் நின்று அதிர்ந்து -என்னும் படி
மேகங்களும் உட்பட முழங்கும் படி சப்திக்க வேணும்

பாலன்ன வண்ணம்
மணி வண்ணா என்று இவன் நிறம் உத்தேசியமானால்
இவனோடு ஸ்பர்சம் யுடையார் நிறமும் உத்தேச்யமாகச் சொல்ல வேணுமோ –

உன் பாஞ்ச சைன்யம்
தாமோதரன் கையில்(நாச்சியார்-7-5 ) என்கிறபடியே

போய்ப்பாடுடையன
பேரிடமாய் இருக்கை-இடமுண்டாகில் இறே த்வனி முழங்கி இருப்பது –
போய்ப்பாடு -என்று புகழுடைமை யாகவுமாம் –
அதாவது
ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினது அன்றிக்கே-
சங்கரய்யா யுன் செல்வம் -என்றும் –
பொதுவாக உண்பதனை -என்றும் –
நாய்ச்சிமாரும் கூட ஊடும் படியான வேண்டற்பாட்டை யுடையவன் ஆகையால் வந்த புகழ் –

அல்லாதவை வேண்டுவதுக்கு முன்னே பிரதானம் மங்கள சப்தம் ஆகையால் வேண்டுகிறார்கள்
உன் பாஞ்ச சன்னியம் என்கிறார்கள் –

இயல் அறிபவன் ஒருவன் ஆகையால் தானே அறியும் என்று –
தன்னுடைய பாஞ்ச சன்னியம் போலே இருக்கும் சங்கு இல்லையே
உன்னோடு உடனே (நாச்சியார் 7-5 )
அதுக்கு ஈடாக தான் உகக்கும் ஆகையால் (நாச்சியார் )
அது கூடாமைக்கு தானே கூட வருவான் என்று நினைத்து –

ஓன்று கண்டோம் –
பின்னையோ என்றான்

சாலப் பெரும் பறையே
எழுச்சிக்கு சங்கு ஊதினால் புறப்பாடுக்கு கொட்ட வேண்டாவோ –
பாஞ்ச ஜன்ய த்வனி ஓடின திக்கு எல்லாம்
முழங்க வல்ல மிகவும் பெருத்த தொரு பறை வேணும் –

பின்னையோ என்றான் –

பல்லாண்டிசைப்பாரே
கொட்டிக் கொண்டு புறப்படும் போதே எதிரே நின்று காப்பிடுவார் வேணும் –

பாடுவார் எங்கள் முகத்திலே விழித்து
நாங்கள் அவர்கள் முகத்தில் விழித்துக் கொண்டு போம்படி
தர்ச நீயமாய் இருபத்தொரு மங்கள தீபம் வேணும் –

கொடியே
கிட்டினார்க்கு விளக்கு பிரகாசிப்பது –
எங்களைக் கண்டு தூரத்திலே வாழும் படி முன்னே பிடித்துக் கொண்டு போம் படி ஒரு கொடி வேணும்-

விதானமே
புறப்படும் போதே பனி தலையில் விழாத படி ஒரு மேற் கட்டி வேணும் –

குளிக்கப் போம் போதைக்கு வேண்டும் அளவு இது என்கிறார்கள் –

பெண்காள் இப்படி இருப்பன தேடப் போமோ
துர்க்கடன்களை சொன்னி கோளே என்ன –

உனக்கு அரியது உண்டோ என்றார்கள் –

எனக்கு எளிதாய் இருந்ததோ என்றான்

ஆலினிலையாய்
உன்னுடைய சிறிய வயிற்றில் பெரிய லோகங்கள் எல்லாவற்றையும் வைத்து
ஒரு பவனான ஆலிலையில் கிடந்து அகடிதங்களை
செய்ய வல்ல உனக்கு அரியது யுண்டோ –
லோகத்தில் இல்லாதது எல்லாம் எங்களுக்காக யுண்டாக்க வல்லவன் அன்றோ –

ஆலினிலையாய
பாலன் தனதுருவாய்-(முதல் திருவந்தாதி -69 )
வட தள சாயியுடைய விருத்தாந்தம் கிருஷ்ணன் பக்கலிலே இறே காண்பது –
(சோலை சூழ் குன்று எடுத்தாய் சொல்லு -அப்பாசுரம் )
பண்டு ஒரு நாள் ஆலினிலை வளர்ந்த சிறுக்கன் அவன் இவன் -(1-4 )
வையம் ஏழும் கண்டாள்-
அன்புற்று நோக்கி அடித்தும் பிடித்தும் அனைவர்க்கும் காட்டிற்று இல்லையே –
(all in ilaiyaay )

மாலே மணி வண்ணா -என்கிற இடத்தில் ஸுலப்யம் சொல்லுகிறது –
ஆலினிலையாய் -என்ற இடத்தில் சர்வ சக்தி யோகத்தவம் சொல்லுகிறது –

அது மாமின் அர்த்தம் –
இது அஹம் -என்கிறத்தின் அர்த்தம் –
மாலாய் ஆலிலையில் வளர்ந்து(பெரிய திருமொழி – 5-7) -என்னக் கடவது இறே –

அருளேலோ ரெம்பாவாய்
சக்தி இராமை இல்லை –
வேண்டி இராது ஒழியில் செய்யலாவது இல்லை –
தரில் அரியது இல்லை –
தராது ஒழியில் வளைப்பிட ஒண்ணாது –

ஆலினிலையாய் அருள்
என்றும் உன் தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது-(நாச்சியார் -2-2 )என்னக் கடவது இறே –
இப்போது அகடிதம் இறே என்று கண் அழியாதே கிருபை பண்ண வேணும் –

ஆலினிலையாய் அருள்
அருளாது ஒழியுமே ஆலிலை மேல் அன்று தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான் (மூன்றாம் திருவந்தாதி -19) என்று
வட தள சாயி யருள் இறே பிரசித்தமாய் இருப்பது –

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை –ஒருத்தி மகனாய் பிறந்து –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 12, 2017

பெண்காள் உங்கள் பிறப்பால் நம் விஜயத்துக்கு மங்களா சாசனம் பண்ணுகை ஸ்வரூபம் இறே –
இக் குளிரில் உங்களைப் பேணாதே க்லேசித்து வந்திகோளே
உங்கள் நெஞ்சிலே ஓடுகிறது வெறும் பறையோ-
வேறு ஏதேனும் உண்டோ என்ன –

உன்னுடைய குண கீர்த்தனம் பண்ணிக் கொண்டு வருகையால்
ஒரு கிலேசங்களும் படாதே ஸூகமே வந்தோம் –
பறை என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு நாங்கள் உன்னை இறே அர்த்தித்து வந்தது என்கிறார்கள் –

பறை கொள்ள வந்தோம் இரங்கு என்று நம்மை வடிம்பிடா நின்றி கோளே –
நீங்கள் சொன்ன போதாகச் செய்யப் போமோ
பிரதிபந்தகங்கள் உண்டாய் இருக்குமே என்ன –

பிரதிபந்தகங்களைப் போக்கி அரியது செய்த உனக்கு எளியது செய்யத் தட்டுண்டோ-
எங்களோடு சஜாதீயரிலே சிலர் நோன்பு நோற்றுப் பெற்றது
எங்கள் நோன்பு பலித்த படி அன்றோ -என்கிறார்கள் –

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

ஒருத்தி–ஒப்பற்ற தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய்–பிள்ளையாய்
பிறந்து–அவதரித்து
ஓர் இரவில்–ஒப்பற்ற இரவில் (அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில்
(திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),
ஒருத்தி–ஒப்பற்ற யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய
மகன் ஆய்–பிள்ளையாக
ஒளித்து வளர–ஏகாந்தமாக வளருங் காலத்தில்
தான்–தான் (கம்ஸன்)
தரிக்கிலான் ஆகி–(அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்
தீங்கு நினைந்த–(இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த
கஞ்சன்–கம்ஸனுடைய
கருத்தை–எண்ணத்தை
பிழைப்பித்து–வீணாக்கி
வயிற்றில்–(அக் கஞ்சனுடைய) வயிற்றில்;
நெருப்பு என்ன நின்ற–‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடு மாலே–ஸர்வாதிகனான எம்பெருமானே!
உன்னை–உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம்–(புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில்–எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்
திரு தக்க செல்வமும்–பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும்
சேவகமும்–வீர்யத்தையும்
யாம் பாடி–நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து–(உன்னைப் பிரிந்து பாடுகிற துயரம் நீங்கி
மகிழ்ந்து–மகிழ்ந்திடுவோம்;மகிழ்வோம் வினை முற்றி இங்கு
ஏல் ஓர் எம் பாவாய்–.
வருத்தம் தீர்ந்து
வருத்தமும் தீர்ந்து
மகிழ்ந்து -மூன்றும் சொன்னபடி

ஒருத்தி மகனாய்–
ஒருவன் சாதன அனுஷ்டானம் பண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளை பெற்றால் போலே
நால்வரும் கூடி தபஸ்ஸூ பண்ணி -(ஒருவனைப் பெற்றதாலே )
பேறு ஒருத்தியது யாகையாலே -ஒருத்தி -என்கிறார்கள் –

ஊழி முதல்வன் ஒருவனே
என்கிற வஸ்துவை வயிற்றிலே அடக்கப் பெற்றாள் ஒருத்தி இறே

ஒருத்தி மகனாய்
சர்வ லோகங்களுக்கும் சர்வ பூதங்களுக்கும் முந்தைத் தாய் தந்தையாய் இருப்பான் ஒருவனைத் (5-7 )
தனக்குப் பிள்ளையாக பெறுகைக்கு நோன்பு நோற்க
ஜகத்துக்கு சேஷியுமாய்
சர்வ வியாபகனுமாய்
நித்யனுமாய் இருக்கிற
மகன் ஒருவனுக்கு அல்லாத மா மேனி மாயன் (மூன்றாம் )
சிலர் அபேக்ஷித்தத்துக்காக மகனானான் என்னும் அளவன்றிக்கே –
தேவகீ புத்ரன் என்றே தன்னை நினைக்கும் படி
அவ்வருகு தனக்கு ஒரு ஏற்றம் உண்டு என்று அறியாதபடி பிள்ளையானான் –

பிறந்து
சிலர் மகனாக வேணும் என்று ஆசைப்பட்டால்
தூணிலே தோன்றினாலே போலே ஆதல் –
ஆனைக்கு உதவினால் போலே யாதல் –
வந்து உதவ அமைந்து இருக்க
ஈஸ்வரனே வந்து பிறக்க வேணும் என்று நோற்ற படியால் பூர்வ வ்ருத்தாந்த அனுசந்தானம் இன்றியே
கர்ப்ப வாசம் பண்ணிப் பிறந்து
உம்முடைய வயிற்றின் நின்றும் நாம் பிறந்தோமே என்று சோபனம் சொல்லிக் கொண்டு வந்து பிறந்தான்

பிறந்து
கர்ம வஸ்யர் படுவது எல்லாம் கிருபா பரதந்த்ரனாய் படுவதே -என்று
தீமதாம் அக்ரேஸர் -பிறந்தவாறும் -என்று ஆழங்கால் படும்படி யாய்த்து பிறந்தது

ஆவிர்பவித்தான் என்கிறது
கர்ப்பத்தில் தோஷ ஸ்பர்சம் இல்லை என்கைக்கா

நித்ய ஸூரிகள் அதிபதியாய் இருக்கிறவன் சம்சாரத்தில் பிறந்த இக் குணம்
இழக்க ஒண்ணாது என்று ரிஷிகளை போலே ஆவிர்பவித்தான் என்று
அவத்யம் சொல்லாதே
நிறம் பெறும்படி பிறந்தான் என்பார்கள் ஆழ்வார்கள் –

மகனாய் பிறந்து –
மகனாகை யாவது மாதா பித்ரு பரதந்த்ரனாகை இறே –
பெருமாள் பக்வரான பின்பு மாதா பித்ரு வசன பரிபாலனம் பண்ணினார்
இவன் பிறந்த போதே
ஆழ்வார்களையும் திருத் தோள்களையும் மறைக்க வேணும் என்ன உப சம்ஹரித்தான் –

ஓர் இரவில்
பிறந்த இடத்தில் ஓர் இரவும் வசிக்கப் பெற்றது இல்லை இறே
சம்சாரிகள் கீழ் -நாய்க்குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே
சம்சாரிகள் தண்மை கர்ப்ப க்ருஹத்தில் ஓர் இராத் தங்க ஒட்டிற்று இல்லை –
சம்சாரிகள் பிறந்தால் பெறுவதுவும் பெறப் பெற்றது இல்லை –
நால்வர் இருவர் அறிந்து சோபனம் சொல்லி
தூரியம் கொட்டி
கண் கண்டு நெய்யாடல் போற்றப் (போத்தப்) பெற்றது இல்லை –

சர்வேஸ்வரன் இங்கே வந்தால் நம்முடைய கர்மம் நம்மோடே அவனுக்கு சாம்யத்தைக் கொடுக்கும் –
நாம் அங்கே சென்றால் அவனுடைய கிருபை அவனோடே பரம சாம்யத்தைத் தரும் –
இணைவனாம் எப்பொருட்க்கும் –(நாம் சமமாக ஆக்க இந்த பிரமாணம் )
தம்மையே ஓக்க அருள் செய்வர்–(அவன் சமமாக ஆக்க இந்த பிரமாணம் )

நம் பிறவி அவனை அகற்றும் –
அவன் பிறவி அணுகைக்கு உடலாம் –
அவன் பிறவி நமக்கு என்று கோல
நம் பிறவி அவனைப் பெற்றவர்கள் காலில் விலங்கு பட்டது படும் –

ஓர் இரவில்
கால க்ருத பரிமாணம் இல்லாத தேசத்திலே வஸ்து காலாதீனமான தேசத்திலே பிறந்து
ஓர் இரவில் பட்ட பாடு தான் என் –

வீங்கிருள் வாய் பூண்டு
இவ் விரவோடு ஒத்த இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை

ஒருத்தி மகனாய்
அங்கே பிறந்து
இங்கே வளர்ந்தானாய் இருக்கை அன்றிக்கே
இங்கே பிறந்தானாய் இருக்கிறபடி

ஓர் இரவில் ஒருத்தி மகனாய்
அவ் விரவிலே யசோதை பிராட்டிக்கு பிள்ளையாக வேண்டுகையாலே
ஒருத்திக்கு அவதார ரசத்தைக் கொடுத்து
ஒருத்திக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்தான்

ஒருத்தி மகனாய்
அவ் விடத்தில் முலைச் சுவடு அறியாமல் போந்த படியால்
அழுது முலைப் பால் குடித்த இடம் இறே பிறந்த இடமாவது –

திருப் பிரதிஷ்டை பண்ணினவர்களில் காட்டிலும்
ஜீரண உத்தாரணம் பண்ணினவர்களே முக்கியர்

யாதவத்தையும் கோபவத்தையும் ஏக காலத்திலேயே யாக்கினான் –

யது குல உத்பவன் என்ற ரிஷி தானே
கோபாலன் யாதவ குலத்தை எடுக்கக் கடவன் என்றான் இறே
(விஷ்ணு புராணம் ஸ்லோகம் கோபாலன் யது குளத்தை தூக்கி வைத்தான் என்று சொல்கிறது
வராக கோபாலர் பூமி ஜென்ம உத்தாரணம் -நாயனார் )

அவளுக்கு முலை சுரவா நின்றதாகில்
இவன் அழுது முலை உண்ணா நின்றான் ஆகில் உமக்குச் சேதம் என் என்று பட்டர் –

யசோதை பிராட்டியாக பூதனை பாவித்து
இவன் உண்ணாத போது முலை விரியும்படியான தசையை யுடையாளாய்
பிள்ளையாக கொண்டு எடுத்து முலை கொடுக்க அது பெறா விடில் வயிறு ஆராத படியாய்
இவனும் முலை உண்ண-இவனை பிள்ளை என்று
அவள் விசுவசிக்க ஒண்ணாதே துணுக் துணுக் என்னும் படி இவளாக பாவித்து அவள் பக்கல் பரிமாறுபவன்
இவள் பக்கல் பிள்ளைத் தனத்தில் தப்ப நில்லானே –
மகனாகக் கொண்டு எடுத்தாள் இத்யாதி (இரண்டாம் திருவந்தாதி )

ஒருத்தி மகனாய்
அவள் இங்கே ஏற நியமித்து போக விட்ட மாத்ரம் –
இவள் காடு ஏறப் போ என்னலாம் படி இருக்கை –
கன்றின் பின் எற்றுக்கு என் பிள்ளையைப் போக்கினேன் -(பெரியாழ்வார் -3-2 )
அசேஷ ஜகத்துக்கும் சாஸ்தா வான  வஸ்து
இவள் கட்டவும்
அடிக்கவும் படி நியமிக்கலாம் படியாய்த்து இருப்பது –

மகனாய்
அங்கு பிள்ளையாய் பெற்றவளுக்கு யாய்த்து இழவு உள்ளது –
நந்தன் -பெற்றனன்-யசோதை பிராட்டியைக் கைப் பிடித்த பாக்யாதிகர் பெற்றார் –
என்னைக் கைப் பிடித்த முஹூர்த்தத்தாலே ஸ்ரீ வஸூ தேவர் இழந்தார்

மருவு நின் திரு நெற்றி (பெருமாள் திருமொழி )-திருப் பவளத்தில் முலையைக் கொடுக்கப் புக்கவாறே
திரு நெற்றியில் சாத்தின சுட்டியில் அசைவையும் முறுவலையும் கண்டு
தமப்பனாரைக் கொண்டான் என்று அகவாய் பணைக்கும்-
அந்த ப்ரீதியாலே தனக்கும் வாசி தெரிக்க ஒண்ணாத விரலை வாயிலே இட்டுக் கொண்டு
ஒரு வார்த்தை சொல்லும் போது பெரிய தேற்றத்தோடே தொடங்கின மழலைச் சொல்லும்
பாஹ்ய ஹீனையான நான் இழந்தேன் –
பாக்யவதியான அவள் பெற்றுப் பூர்ணை யானாள்

ஒருத்தி மகனாய்
கம்சன் முடிந்து பழை நாள் பட்டு இருக்கச் செய்தேயும்
இந்நாள் என்னாதே மறைத்து போருகிறார்கள் பொல்லாங்கு விளையும் என்னும் அச்சத்தால் –
அத்தத்தின் பத்தா நாள் -என்னுமா போலே

ஒருத்தி
என்ன நோன்பு நோற்றாள் கொலோ இவனைப் பெற்ற வயிறு உடையாள் –
ஞாலத்தில் புத்ரனைப் பெற்றார் நங்கைமீர் நானே மற்று ஆரும் இல்லை –

ஒளித்து வளரத்
பிறந்த இடத்தில் தோன்றப் பெறா விட்டால் –
போன இடத்தில் ஒளியாமல் தான் வளரப்பெற்றதோ
விஷ த்ருஷ்டிகளான பூதநாதிகள் கண் பட ஒண்ணாது என்று
நாட்டார் செய்வன செய்யப் பெறாதே நில வறைகளிலே இறே வளர்ந்தது –
வானிடைத் தெய்வங்கள் காண (பெரிய திருமொழி )-என்று
அனுகூலர் கண் உட்பட பட ஒட்டாதவள் பிரதிகூலர் கண் பட ஓட்டுவாளோ –
கன்றின் பின் போக்கில் என்று புறப்பட ஓட்டாள்

ஒளித்து வளர
உகப்பார் சதா தர்சனம் பண்ணி அனுபவிக்க கடவ வஸ்து
கண்ணுக்கு தோற்றாத படி மறைக்க வேண்டும் படி
கள்ளர் பட்டது படுவதே –
அவதரிக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது பட்டான்

ஒளித்து வளர
உள்ளே இருக்கச் செய்தேயும்
இவன் இல்லை என்று எழுதி எழுத்து இடுமவன் முகம் காட்ட சம்வதிக்குமோ-
பிச்சேறின பிரஜை முன்னே தாய் நிற்கிலும் கொல்லும்-
இவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொல்லும்
அப்படியே அவதரிக்கில் எதிர் இடுவார்கள் –
பரம பதத்தில் இருக்கில் அசத் கல்பர் ஆவார்கள்
அந்தர்யாமியாய் முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கி
தெளிவு பிறந்து அம்மே என்றால் ஏன் என்கைக்கு பதிக்கிடைக் கிடக்கிறபடி –

ஒளித்து வளரத் தரிக்கிலானாகித்-தான்
நாரதாதிகள் சென்று உன்னுடைய சத்ரு திருவாய்ப் பாடியிலே வளரா நின்றான் -என்று
சொல்லக் கேட்ட மாத்திரத்தில்
நம் கண் வட்டத்தில் இல்லையாகில் அவன் என் செய்யில் என் என்று இராதே
சதுரங்க பல உபேதனாய் ஐஸ்வர்யத்துக்கு ஹானி இன்றிக்கே இருந்தோம் ஆகில்
வந்த அன்று பொருகிறோம் என்று ஆறி இராதே தரிக்க மாட்டிற்று இலன்

அஸஹ்ய அபசாரமாவது
பகவத் பாகவத விஷயமாக அவர்கள் சத்தையும் பொறாது ஒழிகை இறே
கம்ச வதத்து அளவும் அனுசந்திக்கிறவர்கள் ஆகையால்
மேலே படப் புகுகிற பாட்டை அனுசந்தித்து ஸூத்ரனான பையில்
தானே சிம்ஹத்தோடே நரி எதிர் இடுமா போலே எதிர் இட்டவன் சிறுமையைச் சொல்கிறார்கள்

தீங்கு
பரிய வேண்டும் விஷயத்தில் பொல்லாங்கை நினைப்பதே –
என்ன துஷ் ப்ரக்ருதி தான்
இன்னது என்று தன் வாயால் சொல்ல மாட்ட்டாமையாலே தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும் –
வில் விழவுக்கு என்று அழைத்ததும்
நலியத் தேடின எல்லா வற்றையும் நினைத்து –

நினைந்த
இதுக்கு மனஸ் சஹகாரம் உண்டாவதே –
சிந்தையினால் இகழ்ந்த -என்கிறபடி
யுக்தி மாத்ரமான அளவில் நலியாதே
நெஞ்சில் பொல்லாங்கு சோதித்தால் யாய்த்து கை விடுவது –
கைக் கொள்ளும் இடத்தில் கழுத்துக்கு மேலும் அமையும் –
கை விடும் இடத்தில் அகவாயில் உண்டு என்று அறிந்தால் அல்லது விடான்

தீங்கு நினைந்த
தீய புந்திக் கஞ்சன் இறே-

கருத்தைப்
அம்மானாய் –
கண்ண நீர் விழ விட்டு இருக்க –
நினைத்த அபிப்ராயத்தை –

பிழைப்பித்துக் –
அவன் நினைவை
அவன் தன்னோடே போம் படி பண்ணி

கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற
கிருஷ்ணன் என்றால் வயிறு எரிதலோடே இருக்கக் கடவ பெண்களுடைய பயத்தை
எல்லாம் அவன் வயிற்றிலே யாக்கின படி

கஞ்சன் வயிற்றில்
கம்சனுடைய தப்புக்களை நினைத்து –
என் செய்ய என்னை வயிறு மறுக்கினாய் –(பெரியாழ்வார் -3-3 )
வாழ கில்லேன் வாசுதேவா –
ஊடுற என்னுடைய ஆவி வேமால் -என்கிற
ஆஸ்ரிதருடைய பயாதிகளை எல்லாம் கம்சன் வயிற்றிலே கொளுத்தினான்

கஞ்சன் வயிற்றில்
தேவகி வயிற்றில் பிள்ளை –
கம்சன் வயிற்றில் நெருப்பு

நெருப்பன்ன
கஞ்சன் நாள் கவர் கரு முகில் எந்தாய் -(பெருமாள் -7-10 )
தேவகியார் வயிற்றில் நீரைச் சொரிகிறவன் காணும்
கம்சன் வயிற்றில் நெருப்பைச் சொரிகிறான்

நெருப்பன்ன நின்ற
கஞ்சனைக் காய்ந்த காள மேகத் திரு உருவன்-

நெருப்பென்ன நின்ற
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்
கண்ட காட்சியில் அனுபவித்து அறும் படி நின்ற நிலை

நெடுமாலே
இது எல்லாம் பட வேண்டிற்று ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோஹத்தாலே

நெடுமாலே
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும் திரு உள்ளம் மண்டி –
ஒன்றும் கண்டிடப் பெற்றிலேன் –காணுமாறு இனி யுண்டு எனில் அருளே
என்று அவள் பட்ட இழவுகள் எல்லாம் தீர
முலைப் பால் திரு மேனியில் பாய
அவளுக்கு நின்று பால சேஷ்டிதங்களைக் காட்டின வ்யாமோஹத்தை
அவள் தான் காண்பதற்கு முன்னே மஞ்சங்களில் பெண்கள் கண்டு வாழும் படி
வ்யாமோஹ அதிசயத்தை நெடுமாலே என்கிறது –
(மாலும் நெடுமாலும் -தாய் மார் இடமும் கோபிகள் இடமும்
அடுத்த பாசுரம் மாலே )

கஞ்சனை அஞ்ச முன் கால் விசைத்த காளையர் ஆவர் அச்சோ ஒருவர் அழகிய வா (பாசுரம் -6)-என்று
இறே பெண்கள் பார்த்துக் கொடு நின்றது –

நாம் அவ்விடத்தில் அப்படி செய்த செய்த தீமை யுண்டு –
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் என்ன

யுன்னை அருத்தித்து
எங்களுக்கு பிறந்து காட்டவும் வேண்டாம் –
யார் வளர்ந்து காட்டவும் வேண்டாம் –
கொன்று காட்டவும் வேண்டாம் –
உன்னைக் காட்ட அமையும் –

உன்னை அருத்தித்து
உன் பக்கலிலே ஓன்று வேண்டி வந்தோம் அல்லோம் –
உன்னையே வேண்டி வந்தோம்

உன்னை அருத்தித்து
என்னை ஆக்கிக் கொண்டு எனக்கே தன்னைத் தந்த கற்பகம் (2-7-11)-என்று
அர்த்தித்தவ நிரபேஷமாக அர்த்திகளையும் யுண்டாக்கி
உன்னையும் கொடுப்புதி இறே
உன்னுடைய உதார குணம் எல்லாம் அசத் கல்பமாக்கி
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாக வந்தது –
யார் அபேக்ஷித்து
(வேண்டித் தேவர் இரக்க நீயே அன்றோ உன்னைப் பிரார்த்தித்து வேண்டி வந்தாய் )

நெடுமாலே உன்னை அருத்தித்து
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே
பெரும் பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –

வந்தோம்
எங்கள் மிகைச் செயல் கண்டாயே –
உன் வ்யாமோஹம் எல்லாம் அத்வேஷம் என்னும் படிக்கு ஈடாய் நாங்கள் வந்தது

வந்தோம்
எதிர் சூழல் புக்கு –
ஆள் பார்த்து உழி தருகின்றாய் –
ஆயர் குலத்தினில் வந்து தோன்றின உன் வியாமோஹம் எல்லாம்
நாலடி இட்டு அசத் கல்பம் ஆக்கினோம்

பறை கொள்வான் இன்று யாம் வந்தோம் -என்று சொல்வது –
உன்னை அருத்தித்து வந்தோம் -என்பதாய்
வியாஹதமாக வார்த்தை சொன்னி கோளே என்ன

பறை தருதியாகில்
எங்களுக்கு உத்தேச்யம் செய்ய நினைவாகில்
(ஆகில் -கொடுக்க நீ திரு உள்ளம் பற்ற வேண்டுமே
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் )

தருதியாகில்
அவர்கள் அர்த்தித்தவம் அப்ரயோஜம் –
அவன் நினைவாலேயே பலம் என்கைக்காக
ஆகில் என்கிறது

இவன் எல்லாம் செய்தாலும்
அவன் அல்லேன் என்றவாறே
ஸ்வ தந்த்ரனை வளைப்பிட ஒண்ணாதே
இவர்கள் அர்த்தித்தவம் அவன் ஸ்வாதந்தர்யத்தை போக்க மாட்டாதே –
ஆகையால் தருதியாகில் என்கிறார்கள்

எத்தனையேனும் மேலானவர்களை எத்தனையேனும் தாழ்ந்தவர்கள்
திரு உள்ளம் ஆகில் செய்து அருள வேணும் என்று இறே சொல்வது

ஆகிறது நினைவு சுருக்கம் ஒழிய அறிந்தோம் –
வந்தபடி தான் என் –
வருகிற போது கிலேசித்தி கோளே என்ன

ஒரு கிலேசம் இன்றியிலே உகப்போடே வந்தோம் –

பிரிந்து இருக்கிற நீங்கள் உகப்போடே வந்த படி என் என்ன

திருத் தக்க செல்வமும்
ஸ்ரீ யபதித்தவத்தால் வந்த சம்பத்தையும் –
பிராட்டியை எனக்கு என்னும் பெருமை யுண்டாம் போது அவள் ஆசைப்பட்டு
மேல் விழும்படி அதுக்கு ஈடான சம்பத் உண்டாக வேணும் இறே –

திருத் தக்க செல்வமும்
செல்வச் சிறுமியரான இவர்களுக்கு செல்வம் தக்காப் போலே
போதமர் செல்வக் கொழுந்தான -பெரிய பிராட்டியாருக்கு தகுதியாய்
இருக்கும் செல்வத்தினால் வளர் பிள்ளையுடைய செல்வம்

சேவகமும்
அவ் வைஸ்யர்வத்தைத் காத்தூட்ட வல்ல ஆண் பிள்ளைத் தனமும் –
பிராட்டியுடைய விரோதிகளை பெண்களுடைய விரோதிகளை போக்கி
உபய விபூதி ஐஸ்வர்யத்தையும் காத்தூட்ட வல்ல வீர்யம் –
என்று என்றும் உன் சேவகமே ஏத்தி (24 )என்கிற இடத்தில் இரண்டும் உண்டு இறே

செல்வமும் சேவகமும்
ஆற்றப் படைத்தான் மகனே(செல்வமும்) என்றதுவும் –
கப்பம் தவிர்க்கும் கலியே-(சேவகமும்)என்றதுவும்

யாம் பாடி
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உன் பேர் சொல்ல ஒட்டாதார் முன்னே உகப்போடே பாடி –
புள்ளின் வாய் கீண்டானை (கீர்த்திமைப்பாடி )என்று ஊர் எல்லாம் பாடிக் கொண்டு திரிகிறார்கள் இறே

வருத்தமும் தீர்ந்து
உன்னைப் பிரிந்து நெடு நாள் பட்ட கிலேசம் எல்லாம் தீர்ந்து –
கேவலரைப் போலே துக்க நிவ்ருத்த மாத்திரமே அன்றி இவர்களுக்கு பிரயோஜனம்
பாடுகிற போது ப்ரீதிக்கு போக்கு வீடாகை யாலே
அனுபவ காலத்தில் அநந்தம் போலே அனுசந்தான சமயத்தில் ஹர்ஷம் கனக்க யுடையோமாய்

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
நினைந்து இருந்தே சிரமம் தீர்ந்தேன் –(பெரியாழ்வார் 5-4 )
உகந்தே உன்னை உள்ளும் என்னுள்ளம் (திருவாய் -9-4-7 )-என்கிறபடி
அனுசந்தான காலத்தில் அனுபவ காலம் போலே இறே இருப்பது
தூய வமுதை பருகி பருகி (திருவாய் – 1-7 )-கிருஷ்ண அனுசந்தானம் தித்திக்கும் இறே –
(மருந்து சாப்பிட்டு விருந்து இல்லாமல்
விருந்தேயாக பிறவி போக்கவும் அனுபவத்துக்கும் )

வருத்தம் தீருகைக்கு சேவகம் பாடினார்கள் –
மகிழ்ச்சி பிறக்கைக்கு செல்வம் பாடினார்கள் –

ஸுர்ய வீர்யாதிகள் கிலேச நிவ்ருத்திக்கு உடல் –
ஐஸ்வர்யம் ஆனந்த ஹேது

பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து
இசை மாலைகளில் ஏத்தி மேவப் பெற்றேன் (திருவாய் 4-5-2)
வெய்ய நோய்கள் முழுதும் வியன் ஞாலத்து வீய –(திருவாய் 4-5-3)
வீவில் இன்பம் மிக வெல்லை நிகழ்ந்தனம்-

(ராஜகுமாரனுக்கு முடி சூட்டி பின்பு சிறையில் இருந்து விடுவிக்குமா போல் )

விரோதி நிவ்ருத்தியும் யாய்த்து –
அபிமத சித்தியும் யுண்டாய்த்து —
பாடி வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து தருதியாகில் உன்னை அருத்தித்து வந்தோம் –

—————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை —-அன்று இவ் வுலகம் –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 12, 2017

ஒரு நாள் அர்ஜுனன் உபய சேனைக்கும் நடுவே தேரை நிறுத்து என்று சொல்ல –
அப்படியே செய்தவன் –
இத்தனை பெண்களும் திரண்டு
இங்கனே போந்து அருள் என்றால்
அது செய்யாது இருக்க மாட்டான் இறே –

தாங்கள் அபேக்ஷித்தபடியே
திருப் பள்ளி அறையின் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்து அளவும் நடந்து போரத் தொடங்கினான் –

பிராட்டி கட்டு வாசல் அளவும் தொடர்ந்து மங்களா சாசனம் பண்ணினால் போலே
நப்பின்னைப் பிராட்டியும் தொடர்ந்து ஏத்தும் இறே –

அவனைக் காணும் அளவும் இறே
இங்கனே போர வேணும்
எழுந்து அருளி இருக்க வேணும் –
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும்
அது வேணும்
இது வேணும் என்று பல தேவைகளை சொல்லி அலைக்கலாவது

தண்ட காரண்யத்தில் ரிஷிகள் கண்டவாறே
ராக்ஷஸ பரிபவங்களை மறந்து
மங்களா சாசனத்தில் மண்டினார்கள் இறே

அப்படியே
இவர்களும் பெரியாழ்வார் படியாய் யாய்த்து –

இங்கனே போந்து அருளுகிற போது
பின்னே நின்று
நடந்த நடை அழகைக் கண்டு
மாறி இட்ட அடி தோறும் மங்களா சாசனம் பண்ணிக் கொண்டு
வந்து திவ்ய சிம்ஹாசனத்திலே இருந்த
அனந்தரம்

பறை -என்று ஒரு வியாஜ்யத்தை இட்டு
இங்குத்தை மங்களங்களை ஆஸாஸித்து மங்களா சாசனம் பரம பிரயோஜனமாக
வந்தவர்கள் அன்றோ நாங்கள் -என்கிறார்கள் –

இங்கனே போந்து அருளி என்று தாங்கள் சொல்ல
தங்களுக்காக நப்பின்னை பிராட்டியோடே சீரிய சிங்காசனத்தில்
இருந்த அளவிலே

ஆல வட்டக் காற்றிலே அத்தவாளந்தலை மேல் பறக்க
பாத பீடத்தில் நீட்டி அருளின திருவடிகளையும்
மடித்து இட்ட திருவடிகளையும் கண்டு
திரு முலைத் தடங்களிலும் திருக் கண்களிலும் ஒற்றிக் கொண்டு
தங்கள் கர ஸ்பர்சம் பொறாதே கன்றும்படியான மார்த்தவத்தைக் கண்டு
இப்படி ஸூகுமாரமான திருவடிகளைக் கொண்டு இங்கனே நடக்கச் சொல்லுவோமே

திருவடிகளை வாங்கி இடுகிற போது
திரு யுலகு அளந்து அருளின படிக்கு ஸ்மாரகமாய் இருந்தது
அன்று அளக்கப் பண்ணினவர்களோடு ஓத்தோம் இறே இன்று நடக்கப் பண்ணின நாங்களும்

நடந்த கால்கள் நொந்தவோ (திருச்சந்த )-என்று பிடித்து
நாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு உலாவி அருளின படி
திரு யுலகு அளந்து அருளின ஆயாசத்தோ பாதி போருமே என்று
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-என்கிறார்கள் –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்-

பதவுரை

அன்று–(இந்திரன் முதலானவர்கள் மஹா பலியால் நலிவு பட்ட)
அன்று அக் காலத்தில்
இ உலகம்–இந்த லோகங்களை
அளந்தாய்–(இரண்டடியால்) அளந்தருளினவனே!
அடி-(உன்னுடைய அத்) திருவடிகள்
போற்றி–பல்லாண்டு பல்லாண்டு வாழ்க’
அங்கு–பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்
சென்று–எழுந்தருளி
தென் இலங்கை-(அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை
செற்றாய்–அழித்தருளினவனே!
திறல்–(உன்னுடைய) மிடுக்கு
போற்றி-பல்லாண்டு வாழ்க’
சகடம் பொன்ற-சகடாஸுரன் முடியும்படி
உதைத்தாய்–(அச்சகடத்தை) உதைத் தருளினவனே!
புகழ்-(உன்னுடைய) கீர்த்தியானது போற்றி!-
கன்று–கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,)
குணிலா–எறி தடியாக் (கொண்டு)
எறிந்தாய்–(கபித்தாஸுரன் மீது எறிந்தருளினவனே
கழல்–(உன்னுடைய) திருவடிகள் போற்றி!-’
குன்று–கோவர்த்தன கிரியை
குடையா–குடையாக
எடுத்தாய்–தூக்கினவனே;
குணம்–(உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள்
போற்றி!-’
வென்று–(பகைவரை) ஜபித்து
பகை–த்வேஷத்தை
கெடுக்கும்-அழிக்கின்ற
நின் கையில் வேல் போற்றி–உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’
சக்ரத்தாழ்வாராகவே கொள்ளலாம் -அனைத்தும் திரு வாழி அம்சமே
என்று என்று–என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
உன் சேவகமே–உன்னுடைய வீர்யங்களையே
ஏத்தி–புகழ்ந்து கொண்டு
யாம்’–அடியோம்
இன்று–இப்போது
பறை கொள்வான் வந்தோம்–பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம்
இரங்கு–கிருபை பண்ணி யருள்’
ஏல் ஓர் எம் பாவாய்-.

அன்று இவ்வுலகம் அளந்தாய் –இன்று யாம் வந்தோம்
அன்றும் இன்றும் காணும் இவர்களுக்கு வயிறு எரிச்சல் –
இவர்களுக்கு இரண்டு காலமும் ஒரே காலமாய் தோற்றுகையாலே-
அன்று -இன்று -என்கிறார்கள்

அன்று
ஆர் நோன்பு நோற்கத் தான் இச் செயல் செய்தது –
நோற்றுக் கூடுவாரையும் விலக்குமவர்கள் தலையிலே இறே திருவடிகளை வைக்கிறது

அன்று
தன்னதான விபூதியை அஸூரனான மஹாபலி நெருக்கி தன்னைத் தாக்க
(இந்திரன்)நோவு பட்ட அன்று
அவன் அபிமானத்தில் நின்றும் மீட்டு
தன் கால் கீழ் இட்டுக் கொண்ட அன்று –

எங்கள் பந்துக்களும் எங்களை உன்னோடே சேர்க்க ஒட்டாதே –
நாங்களும் ஆர்த்தைகளாய்
அபிமானம் கால் கட்டி வாராது இருக்க
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தையும் பஃனமாக்கி உன் கால் கீழ் இட்டு கொண்டு
உன் வடிவு அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளி தானம் பண்ணின அன்று

இவ் வுலகம்
திருவடிகளின் மார்த்வத்தையும்
காடு மோடையுமான பூமியினுடைய காடின்யத்தையும்
இங்கு வர்த்திக்கிறவர்களுடைய வன்மையையும் அனுசந்தித்து இவ்வுலகம் என்கிறார்கள் –

சீல வயோ வ்ருத்தாதிகளால் துல்யர் என்று கவி பாட்டுண்டார் கடக்க நிற்க வேண்டும் படி
வடிவுக்கு இணை இல்லாத பெரிய பிராட்டியாரும்
எடுத்துக் கழிக்கைக்கும் ஒப்பு இல்லாத ஸ்ரீ பூமிப பிராட்டியும்
நாம் பிடுக்கை சாஹசம் என்னும் படியாய் பூத் தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
மெல்லடிகளைக் கொண்டு இவ்வெவ்விய நிலத்திலே வியாபாரிப்பதே

அளந்தாய்
பிரமாணித்தார் பெற்ற பேறு-என்று உபகார சுருதி பண்ணாத அளவு அன்றிக்கே
யுகக்கவும் அறியாத பூமியை திருவடிகளின் கீழே இட்டுக் கொள்வதே

அடி போற்றி
அக் காலத்திலே சிலர் இழவோடே போனார்கள் –
சிலர் அப்பன் அறிந்திலேன் என்று ஆணை இடத் தொடங்கினார்கள்
சிலர் பிரயோஜனம் கொண்டு போனார்கள் –
அப்போது பரிந்து காப்பிட்டார் இல்லை என்கிற இழவு தீருகிறார்கள்

அடி போற்றி
திசை வாழி எழ -என்கிற அப்போதே பல்லாண்டு இசைக்கை –
போற்றி என்று ஏற்றி எழுவாரைப் போலே( 9-1 )ப்ரயோஜனாந்தர பரர்கள்
அநந்ய ப்ரயோஜனர் அன்றோ நாங்கள்

அடி போற்றி
மன்னன் தேவிமார் கூத்து கண்டு மகிழ்ந்து போனார்கள் -(பெரியாழ்வார் -2-5-9-)
கோட்டங்கை வாமனனாய் செய்த கூத்துக்கள் அன்றோ
(மாயக்கூத்து என்று மகிழ்ந்து போனார்கள் 8-5 )
செவ்வடி செவ்வித் திருக் காப்பு என்னும் குடிப் பிறப்பால் அடி போற்றி என்கிறார்கள்

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-
திரு வுலகு அளந்து அருளின இடத்தில் சிவந்த தன் கை அனைத்துமார
சென்னி மேல் ஏறக் கழுவினான் என்று ப்ரஹ்ம ருத்ராதிகள்
அனுவர்த்திக்கும் படி ஐஸ்வர்யமான செயல்களை செய்த அவதாரம் ஆகையாலும்

அங்கே நின்று (திருவாய் -5-10-9 )-
(ஒரு கால் நிற்ப -திருநெடும் தாண்டகம் )என்னும் படி
நின்று இரண்டாம் அடியிலே தாவடி இட்டு
வருத்தம் அற செய்ததாகையாலும்
அத்தனை வயிறு எரிதல் இல்லை இறே –

ராமாவதாரத்தில் தேவத்வம் கலசாத படி
ப்ரஹ்ம ருத்ரர்கள் நாராயணன் என்றாலும் மனிச்சுக்கு இசையும் இடம் ஆகையாலும் –
(கீழே தேவனாகவே அவதாரம் )
கானமருங் கல்லதர் போய் என்னும் படி (அங்கு போல் நின்று அல்ல இங்கு போய் )
துஷ்ட சத்வ பூயிஷ்டமான வெங்கானத்தூடே சஸ்த்ர அஸ்திரங்கள் பட வியாபரித்த இடமாகையாலும்
ராமாவதாரத்தில் செய்த செயலுக்கு வயிறு எரிகிறார்கள்

சென்று
இசையவோர் மூவடி வேண்டிச் சென்ற -என்று ஒரு செல்லுகை உண்டு இறே –
அவ்விடம் அழகால் நெஞ்சு உருக்கலாம் இறே
அழகுக்கு இலக்காகாத தீ மனத்து அரக்கரை
அம்புக்கு இலக்காக்கின பராபிபவன சாமர்த்யத்துக்கு பரிகிறார்கள்

சென்று அங்குத்
அங்கே சென்று –
நின்ற இடத்திலே நின்று பூ அலர்ந்தால் போலே இரண்டு அடியாக இட மாட்டாது –
கொடிய காட்டிலே
பரல் பாய மெல்லடிகள் குருதி சோர நடப்பதே(பெருமாள் திருமொழி ) என்று வயிறு பிடிக்கிறார்கள்
எவ்வாறு நடந்தனை எம்மிராமா ஓ என்று சக்கரவர்த்தி உள் பட நின்று கூப்பிட்டான் -(பெருமாள் திருமொழி )

சென்று அங்கு
புலி கிடந்த தூற்றிலே சென்று தட்டி எழுப்பிக் கொல்லுவாரைப் போலே
லங்கைக்கு அரணாக வைத்த கர தூஷண கபந்த விரரதாதிகள்
ஜல துர்க்கமாக வைத்த கடல் காடுகள் மலைகள் தொடக்கமானவை எல்லாம்
நடவா நிற்கச் செய்தே
மணல் கொட்டகம் போலே
கால் கீழே அழித்துக் கொண்டு நடந்த படியை நினைத்து –
அங்கு சென்று -என்கிறார்கள்

தென்னிலங்கை செற்றாய்
எல்லாவற்றிலும் ஊர் அரண் விஞ்சின படியால்
இலங்கை செற்றவனே-என்கிறது –

திறல்
அரண்கள் ஒன்றும் வேண்டாத படி எத்தனையேனும் தரமுடைய தேவ ஜாதி
தம்தாமுடைய வருத்தங்களாலே சாதித்த அஸ்திரங்களை எல்லாம்
ஒரு மிடறாக நின்று ஒருக்காலே ஓர் இலக்காக விட்டால்
அவர்களுக்கு தப்ப ஒண்ணாது என்று விட
நாலடி பிற்காலித்து விடாதே
நெஞ்சு கலங்காதே
நிலையும் பேராதே
மஹிஷிகளும் தானும் கூட ஜலக்ரீடை பண்ணும் போது
அவர்கள் பூவை இட்டு தன் மேல் எறிந்தால் பிறக்கும் விகாரம் பிறவாதபடி இருக்குமவன்
நான் கடவேன் என்று நோக்குமவனூராய்-
அழகிதான அரணை யுடைத்தாய் குளவிக் கூடு கொண்டால் போலே
ஹிம்ஸிகர் அடையத் திரண்ட நிலமாய் இருந்த லங்கையை

அரண் சிதற அடை மதிள் படுத்தி
சதுரங்க பலத்தையும் துவள வென்று –
சேனைத் தொகையைச் சாடி (பெரிய திருமொழி -6-5)
ப்ராத்ரு புத்ராதிகளை தலை அழித்து
தான் சிலரை ஆஸ்ரயித்து கதிர் பெறுக்கி (பொருக்கி) கூடினவை அல்லாத அம்புகளைக் கொண்டு
இடி ஏறு உண்டிடச் சுற்றும் வேமா போலே
பையலைப் பக்க வேர் அறுத்து
நெஞ்சு அழிந்து
நிலை தள்ளும்படி பண்ணி
சத்தை அழிந்து
பட்டு விழும் போதும்
வில் பிடித்த பிடி நெகிழாதே விழக் கடவ அவனை

எதிரி வீரம் அறியாதே கோழையாய்ப பட்டான் என்று தரக் கேடான் ஆகாதே
வீரன் என்று விருது பிடிக்கும் படி வில்லைப் பொகடுவித்து
(சசால சாபஞ்ச விமோச வீர -வில்லை க்கைவிட்ட வீரன் )
ஸ்த்ரீ பிராயனாக்கிக் கொன்று வென்றி கொண்ட
பராபி பவன சாமர்த்தியத்தை எல்லாம் நினைத்து –
திறல் -என்கிறார்கள் –

திறல் போற்றி
தீ மனத்து அரக்கர் திறல் அழித்தவனே -என்று
இம் மிடுக்கு தங்கள் துக்க நிவ்ருத்திக்கு உடல் இன்றிக்கே
அரணுக்கு அரண் இடுவாரைப் போலே திறலுக்குப் பரிகிறார்கள் –
இலங்கை பாழாளாகப் படை பொருதானுக்கு-என்று பரியுமது ஜென்ம சித்தம் இறே –

உலகு அளந்த பொன்னடிக்கு காப்பிட்டவோபாதி
காடுறைந்த பொன்னடிக்கு காப்பிடத் தேடுகிறவர்களுக்கு
அஞ்சாமைக்கு திறலைக் காட்டினான்

அத் திறல் தனக்கு
அஞ்சத் தொடங்கினார்கள் –
தோளில் அழகுக்கு காப்பிடப் புக
மல்லடர்த்த திண்மையைக் காட்ட
அது தனக்கு வயிறு எரிந்தால் போலே
(மல்லாண்ட திண் தோள் காட்ட அதுக்கும் பல்லாண்டு பாடினார் அன்றோ )

திறல் போற்றி
கல்லாதவர் இலங்கை கட்டழித்த–(நான்முகன் )
தேவனே தேவன் ஆவான் (திருமாலை )-என்று
மண்டோதரி உள்ளிட்டாரைப் போலே தத்வ நிர்ணயம் பண்ணுதல் –

தன் வில் அங்கை வைத்தான் -(முதல் -59)
என் தன் தனிச் சரண் -3-10-
கூர் அம்பன் அல்லால் –(நான்முகன் )
மற்றிலேன் தஞ்சமாகவே (2-6 )-என்று ரக்ஷகத்வ புத்தி நடத்தல் –

தென்னிலங்கை ஈடழித்த தேவர்க்கு –(11-3)
என்னையும் உளள் என்மின்களே– -என்று
போக்யதா புத்தி நடையாடி இழவு சொல்லி விடுதல் செய்யாதே
தங்கள் ரக்ஷகராக பரிவார்கள்

சக்கரவர்த்தி திருமகன் தசரதனிலும் விஞ்சும் படி
பால்ய அவஸ்தையில் ஆயுத சிரமம் பண்ணி –
விச்வாமித்திராதிகளோடே சஸ்த்ர அஸ்திர மந்த்ரங்கள் சிஷித்து
சமைய வளர்ந்த பின்பு செய்த செயல் இறே
லங்கையை அழியச் செய்த செயல் –

பிறந்த ஏழு திங்களில் என்கிறபடியே
பிறந்து
மறு பத்துக் கழிந்த அளவிலே
எதிரிகள் உண்டு என்று அறிகைக்கு உடலான ஞானமும் இன்றிக்கே
ஆயுதமும் பிடிக்கவும் அறியாத தொட்டில் பருவத்திலே செய்த செயல் இறே
சகட பங்கம் –

ராவணன் நேரே சத்ருவாய் தோற்றான் இறே
அப்படி அன்றிக்கே
பிரசன்ன (மறைந்த) சத்ரு வாகையாலே –
கள்ளச் சகடம் என்றத்தை
அறிந்து முற்பட்ட படிக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள்

பொன்றச் சகடம் உதைத்தாய்
சகடம் பொன்ற –
முடிய –
சூர்ப்பணகையும் மாரீசனையும் போலே குற்றுயிரோடே விட்ட பின்பு
அனர்த்தம் விளையும் படி இளிம்பு படாதே
தோற்ற அரவிலே சகடாசூரனை முடித்து விட்ட படி

உதைத்தாய்-
முலை வரவு தாழ்த்து தொட்டிலை உதைத்த திருவடிகளுக்கு
இலக்காய் முடியும் படி பண்ணின அனாயாசம்

உதைத்தாய்-
பெருமாள் கைக்கு வில் பிடித்த தழும்பு போலே
கிருஷ்ணன் திரு வடிகளுக்கு சாடுதைத்த தழும்பு –
தழும்பு இருந்த -இத்யாதி-

தழும்பிருந்த சார்ங்க நாண் தோய்ந்த மங்கை,
தழும்பிருந்த தாள் சகடம் சாடி, – தழும்பிருந்த
பூங்கோதையாள் வெருவப் பொன் பெயரோன் மார்ப்பிடந்த,
வீங்கோத வண்ணர் விரல்.

புகழ்-
பெற்ற தாயும் கூட உதவாத சமயத்தில் பெரும் படையாண்டு செய்த செயல்களை
கால் கூறாக்கி விட்ட படி –
திருக் காலாண்ட பெருமானே -என்கிறபடியே

புகழ் போற்றி-
நின் சிறுச் சேவகமும் (திருவாய் 5-10 )-என்று
காரை மூரிருகிக் (மூரி திருகினக்) கன்னிப் போருக்கு காப்பிட வேணும் இறே –

அருளின் பெரு நசையால் -என்று ஆண் பிள்ளை என்று ஆசைப்படுவர்
என்னை நிறை கொண்டான் (திருவாய் 5-3 )-என்று அடக்கம் கெட்டு மடல் எடுக்கத் தேடுவர் –
உறக்கில் நிமிர்த்தீர் (பெரிய திருமொழி 10-8 )-என்று ஊடுதலாய்ப் போனார்கள் பெண்கள்
இவர்கள் செயலுக்கு வயிறு எரிந்து பரிகிறார்கள் –

பசலைத் தனத்தில் செய்த செயல் என்று விடலாம் அது –
பருவம் நிரம்பி செய்த செயலோ தான்
கணக்கு வழக்கு பட்டு இருக்கிறது என்று அதுக்கு வயிறு எரிகிறார்கள்
கன்று குணிலா வெறிந்தாய் –
சகடாசூர நிராசனம் பண்ணின வயிறு எரிதல் அல்ல கிடாய் –
கன்றாய் நின்ற அசுரனை கொன்ற தீம்பு பூமி எல்லாம்
பிரகாசிக்கும் படி செய்தாய் என்று வயிறு எறியும் செயல் இறே

வழக்கு அன்று கண்டாய் வலி சகடம் செற்றாய் –
குழக் கன்று தீ விளவின் காய்க்கு எறிந்த தீமை
திருமாலே பார் விளங்கச் செய்தாய் பழி

மார்பில் இருக்கிறவர்களோடு (திருமாலே விளங்க)
மண்ணில் கிடக்கிறவர்களோடு (பார் விளங்க)
வாசியற
பழி கேடன் என்று சொல்லும் படி இறே

செய்த தீம்பும் (பெரிய திருமொழி 8-6 )-சகடாசூர பங்கம் பண்ணிச் செய்த தீம்பு –
திரி கால் சகடம் சினம் அழித்து கன்றால் விளங்காய் எறிந்தான் –

ஓர் அசுரன் விளாவாய் நிற்க ஒரு அசுரன் கன்றாய் நிற்க
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால் சங்கேதித்து இருவரும் ஓக்க
மேல் விழுந்தார்கள் ஆகில் என் படக் கட வோம் என்று வயிறு பிடிக்கிறார்கள்

என்றும் என் பிள்ளைக்கு தீமைகள் செய்வார்கள் அங்கனம் ஆவார்கள் -என்று
தாயார் உட்பட வயிறு பிடிக்குமது இறே

குணில் -எறி கருவி
குணிலா எறிந்தாய்-
எதிரிகளை இட்டு எதிரிகளை முடித்த படி

கழல் போற்றி
விளாவை இலக்காகக் குறித்துக் கன்றை எறி கருவியாகக் கொண்டு
எறிவதாக இச்சித்து நடந்த போதைக்
குஞ்சித்த திருவடிகளில் வீரக் கழலுக்கும்
அக வாயில் சிகப்பையும் கண்டு காப்பிடுகிறார்கள்

கழல் போற்றி
கன்றினால் வீழ்த்தவனே என்று பக்தி பண்ணுதல் –
காயுதிர்த்தாய் தாள் பணிந்தோம் என்று விரோதி நிவர்த்தகமாகப் பற்றுதல்
கனை கழல் காண்பதற்கு என்று யம வஸ்யத்தைக்கு நிவர்த்தகம் என்று இருத்தல் செய்யாதே
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

அடி போற்றி -கழல் போற்றி
நீட்டின திருவடிகளுக்கும் குஞ்சித்த திருவடிகளுக்கும்
சூழ்ந்து இருந்து பரிவாரைப் போலே பரிகிறார்கள் –

விரோதி நிரசனம் பண்ணித் தன்னை நோக்குகைக்கு அடைவு கெட்டு இருந்தால்
அனுகூலர் விரோதிகளாக ஆஸ்ரித ரக்ஷணம் பண்ணுமதோ சால அடைவுண்டாய் இருக்கிறது
என்று அதுக்குப் பரிகிறார்கள்
(விஷ்ணு பக்தி உள்ளார் தேவர் -அனுகூலர் )

குன்று குடையா வெடுத்தாய்
விரோதிகளுக்கு கன்று எடுத்த மாத்ரம் போலே காணும் கன்று நோக்குகைக்கு குன்று எடுத்தது –
கன்று கொண்டு விளங்கனி எறிந்து ஆ நிரைக்கு அழிவு என்று
மா மழை நின்று காத்து உகந்தான் (பெரிய திருமொழி -9-10-)-என்னக் கடவது இறே

கீழ் எல்லாம் இந்திரனுக்கு சத்ருவானவர்கள் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிந்தார்கள்-
இப்போது அவன் தான் நலிந்த நலிவு பரிஹரித்த படிக்கு வயிறு எரிகிறார்கள் –

அசூரர்களோடு தேவர்களோடு வாசி இல்லை இறே
பகவத் சேஷமான வஸ்துவை தங்களதாக நினைத்து இருக்கைக்கு –

சர்வ யஞ்ஞ போக்தாவாக தன்னை அருளிச் செய்தானே
(சர்வ யஞ்ஞ போக்தா ச பிரபுரேவ ச கீதை )
தனக்கு இட்ட சோற்றை அமுது செய்தால் ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி பண்டு புஜித்த இடம் உள்பட
ஆத்ம அபஹாரத்தோடு ஒவ்வா நிற்க
ததீய புத்தி பண்ணாதே ஸ்வ தந்த்ர புத்தி பண்ணி நலியத் தேட
மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தை பரிஹரித்த படி

குணம்
அனுகூலனானவனுக்கு பிராமாதிகமாகப் புகுந்தது அன்றோ –
அநந்தரத்திலே வந்து கோவிந்த அபிஷேகம் பண்ண வன்றோ புகுகிறான் –

பெரும் பசியால் வந்த கோபத்தால் வர்ஷித்தான் ஆகில்
கை நொந்தவாறே விடுகிறான் –

பெரும் பசியாலே இவனை நலிந்தால்
நாமே யுண்பது கொண்டார் உயிர் கொண்டு தலையை அறுக்கவோ

அவன் கை சலிக்கும் தனையும் கடக்கிட்டுக் காப்போம் என்று
அவனை தலை அழியாதே
மலையை எடுத்து ரஷித்தது ஆன்ரு சம்சயத்தாலே –
அந்த குணத்துக்குப் போற்றி –

(கடக்கிட்டுக் காப்போம்-கையாலே குடை பிடித்து
நமது கை கொண்டு கார்யம் செய்யும் தனையும் ரக்ஷிக்காமல்
அஞ்சலி செய்யவே ரக்ஷிப்பானே )

பாயும் பனி மறுத்த பண்பாளா –
சீர் கற்பன் வைகல் -என்று
அறிவுடையார் நாள் தோறும் கற்பதொரு குணம் இறே
(பண்பு சீர் அங்கு குணம் இங்கு )

குணம் போற்றி
கொடி ஏறு செந்தாமரைக் கை விரல்கள் கோலம் அழிந்ததோ வாடிற்றோ(3-5 ) என்று பார்த்துப்
பரியத் தேட
அவ்வளவு போக ஒட்டிற்று இல்லை மழை எடுத்த குணம் தான்

(அடி போற்றி கழல் போற்றி அங்கு பரிந்தது போல்
விரல் போற்றி இல்லையே –
குணம் தடுத்து பாடப் பண்ணிற்று )

குணம் போற்றி
என் தனக்கொரு துணையாளான் ஆகாயே-என்று
நொய்ய தொரு மலையைப் பொகடுவித்து (தூக்காமல் இருந்தாய் ஆகில் )
கனவிது இரண்டு மலையைக் கையிலே கொடாதே (பொன் முலைகள் பொன் அரும்ப )
மலையை எடுத்த ஷமா குணத்துக்குக் காப்பிடுகிறார்கள் –

(வாளாய கண் பணிப்ப–பொன் முலைகள் பொன் அரும்ப –நின் நினைந்து நைவேற்கு –
ஓ மண் அளந்த எடுத்த தாளாளா -வரை எடுத்த தோளாளா
அளந்து எடுத்து காட்ட வேண்டா -தாள் தோள் காற்றா அமையும் தோடு இட்ட காது எடுத்தாலும் தெரியுமே
என் தனக்கு ஓர் துணையாளன் ஆகாதே
துணையாளன் ஆனமை காட்டிய குணம் )

வர்ஷம் விட்டவாறே மலையைப் பொகட்டு வேலை பிடிக்கும் அத்தனை இறே –
கிருஷ்ணன் பசுக்களின் பின்னே திரியா நின்றால்
ஸிம்ஹம் வந்தாலும் வேலாலே குத்தி எடுத்துப் போக்கும் அத்தனை இறே –
அதுக்கு எடுத்த வேலுக்கு பரிகிறார்கள்

எல்லா குணங்களையும் ஒரு வியக்தியில் சொன்னால் கண் ஏறாம் என்று
வேலிலே அசலிட்டுச் சொல்கிறார்கள் வெற்றியை –

வென்று பகை கெடுக்கும்
சத்ருக்களை வென்று ஓட்டக் கடவதாய் இருக்கும்

நின் கையில் வேல் போற்றி
சக்கரவர்த்தியும் வில் பிடித்து
பரிகரமும் வில் பிடித்து
பிள்ளைகளும் வில் பிடித்தால் போலே
ஸ்ரீ நந்த கோபரும்
இடையரும்
பிள்ளைகளும் வேல் பிடித்தாய்த்து திரிவது –
கூர் வேல் கொடும் தொழிலன் –
வேலைப் பிடித்து என்னைமார்கள் (நாச்சியார் )

நின் கையில் வேல்
வெறும் புறத்தில் ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க
அவ் வழகுக்கு மேலே வேலைப் பிடித்த அழகு

கையில் வேல்
எதிரிகள் மேல் பட வேண்டா —
பிடித்த பிடியில் யுகவாதாரை முடிக்கும்

நின் கையில் வேல்
தன்னை உணராதே அசத்திய ப்ரதிஞ்ஞனாய் சீறின போது காணும்
ஜன்மாந்தரம் மேல் இட்டு திரு வாழியை எடுப்பது –

(வேல் எப்போதும் கையில் உண்டு –
திருவாழி எப்போதாவாது எடுப்பார் -இந்த அவதாரத்தில் )

வேல் போற்றி
ஈஸ்வரனைக் காணில் இறே ஆழியும் பல்லாண்டு என்பது
பெருமாளைக் காணில் இறே சார்ங்கம் என்னும் வில்லாண்டான் தன்னை பல்லாண்டு என்பது

நின் கையில் வேல் போற்றி
வெற்புடைய நெடும் கடலுள் தனி வேல் உய்த்த வேள் முதலாக வென்றவன் கையில் வேல் இறே -(திரு நெடும் தாண்டகம் -7)
ஆகையால் பரிகிறார்கள்

என்று என்றும்
பிரயோஜனம் பெரும் அளவும் சொல்லி பின்னை அது மாறுகிறது அன்றே –
பிரயோஜனத்துக்கு பிரயோஜனம் வேணுமோ -என்று
இது தானே பலமாக இருக்குமவர்கள் இறே –

என்று என்று
பல்லாண்டு என்றால் பின்னையும் பல்லாண்டு என்னும் அத்தனை இறே –
போற்றி என்று ப்ரேமம் அடியாக வந்த கலக்கத்துக்குத் தெளிவு யுண்டாகில் இறே
இச் சொல்லு மாறுவது –

அங்கு போனாலும் சூழ்ந்து இருந்து இறே –
வெம்மா பிளந்தான் தன்னை போற்றி (திருவாய் 4-5-வீற்று இருந்து ) என்னக் கடவது இறே –

அடி போற்றி –
திறல் போற்றி
புகழ் போற்றி
கழல் போற்றி –
குணம் போற்றி –
வேல் போற்றி -என்று இவர்கள் நாக்குக்கு இடும் ஷட்ரசம் இருக்கிறபடி –

உன் சேவகமே
வீர குணத்துக்கு போலே காணும் இவர்கள் தோற்பது –
பந்து நிரோதத்தால் தளர்ந்த அபலைகளுக்கு அவனுடைய விஜயம் இறே பல ஹேது

என்று என்றும் உன் சேவகமே
உன்னுடைய விக்ரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம் -என்னும் படியே

உன் சேவகமே ஏத்திப்
வேறு ஒருவருடைய சேவகம் கலந்து ஓதோம்-
திரு விக்ரமனையும் பெருமாளையும் கலந்து அன்றோ ஏத்திற்று
அது அவதாராந்த்ரத்தின் செயல் என்று இருக்கிறார்கள் –
இவன் பால்யத்தில் செய்ததோபாதி பூர்வ அவஸ்தையும் என்று இருப்பார்கள்

சிலை ஓன்று இறுத்தாய் திரு விக்ரமா திரு வாயர்பாடிப் பிரானே -என்றும் –
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே -காகுத்த நம்பீ வருக இங்கே -என்று
தாயார் உட்பட கிருஷ்ணனை அழைப்பது -இப்படியே இறே

இவனுக்கு நாள் ஸ்ரீ வாமனன் பிறந்த நாள் ஆக்கினாள் -(திருவோணத்தான் உலகு ஆளும் என்பர்களே )
எட்டு மாசம் வயிற்றிலே இருந்த இவனை பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட -என்றாள்-
என் மகன் பால்யத்தை மஹாபலி பக்கலிலே சென்று கேட்டுக் கொள் என்கிறாள் –
சார்ங்க பாணி தளர் நடை நடவானோ -என்றாள்
மாணிக் குறளனே தாலேலோ வையம் அளந்தானே என்று தாலாட்டினாள்-

இவர்கள் ஓங்கி உலகளந்த என்கிறார்கள் -(திருப்பாவை -3)
சார்ங்கம் உதைத்த (திருப்பாவை -4)என்கிறார்கள் –
அனந்தரம்
ஆயர் குலத்தினில் தோன்றும் (திருப்பாவை 5 ) என்றார்கள் –
போற்றப் பறை தரும் புண்ணியன் (திருப்பாவை )என்றார்கள்
எழுப்புகிற போது உலகு அளந்த உம்பர் கோமானே (திருப்பாவை )-என்றார்கள் –

அவன் தான் பிறந்த போதே மூன்று பிறவி யுண்டே –
உங்களுக்கு பிறக்கிறது என் என்றான்
வில் பிடித்தாரில் சக்கரவர்த்தி பிள்ளை நான் என்றான் -(கீதை -10 )
ஆகையால் அவதாராந்தரம் என்று இருப்பார் ஒருவரும் இல்லை

ஏத்திப் பறை கொள்வான்
எங்கள் பலம் முன்னாக –(ஏத்துதலே எங்கள் பலம் )
நாட்டார் பலம் பெறுவதாக –பலம் ஏத்துகை-
பின்பு அபிமதம் ஊரார் ஸம்ருத்தி –
உத்தேச்ய பலமும் ஆனு ஷங்கிக பலமும்

இன்று
இசைவு பிறந்த இன்று –
நென்னேற்று வந்தோமோ –
நாளைக்கு இங்கே நிற்க ஓட்டுவார்களோ –

யாம்
பெரு மிடுக்கரான வ்ருத்தைகள் எல்லாம் கிடந்து உறங்க
குளிர் பொறாத பாலைகளான நாங்கள்

வந்தோம்
நீ வர ப்ராப்தமாய் இருக்க
விரஹ துர்பலயத்தாலே ஆற்றாமை இழுக்க வந்தோம்

யாம் வந்தோம்
நாங்களும் எங்களை அறியாமல் செய்தோம் –
நீயும் உன்னை அறியாமல் செய்வது உண்டாய்த்து இறே

இரங்கேலோ ரெம்பாவாய்
எல்லா வியசனங்களையும் பட்டாலும் கீழ் பிரவர்தித்தித்தது எல்லாம் பேற்றுக்கு உடல் அன்று –
அவன் இரக்கமே கார்ய கரமாவது
அவனுக்கு என் வருகிறதோ என்று இரங்கி மங்களா சாசனம் பண்ணுகை இவர்களுக்கு ஸ்வரூபம் –
இத் தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம்

வந்தோம் இரங்கு
இரங்காமைக்கு வேண்டுவது செய்தோமே யாகிலும் இரங்க வேணும் –
இத் தலையில் பர பக்தியும் பேற்றுக்கு உடல் அன்று
அவனுடைய இரக்கமே அவ்யவஹித உபாயம் என்று இருக்கிறார்கள் –

அன்று இவ்வுலகம் அளந்தாய் -இன்று யாம் வந்தோம்
நீ எங்களைத் தேடி எல்லா உலகும் தட வந்தாய் -அன்று –
இன்று உன்னைத் தேடி நாங்கள் வந்தோம் –

யாம் வந்தோம் –
வையம் தாய மலர் அடிக் கீழ் முந்தி வந்து நீ நிற்க நாங்கள் பெற்றோம் -(திருவாய் 8-5 )

அளந்தாய் –
தென்னிலங்கை செற்றாய் –
சகடம் உதைத்தாய்-
யாம் வந்தோம்

மண் அளந்த கண் பெரிய செவ்வாய் என் கார் ஏறு வாரானால் -(திருவாய் -5-4 )
காகுத்தன் வாரானால் -கண்ணனும் வாரானால் -என்று
இருந்த உன்னுடைய பிரதான மஹிஷிகளில் (பராங்குச நாயகி )
எங்களுக்கு உண்டான வாசி பாராய்

அன்று இவ்வுலகம் அளந்தாய் இரங்கு
உவந்த உள்ளத்தனாய் எங்களோடு அணைந்திலை யாகிலும்
சத்தா ப்ரயுக்தமான கிருபையை யாகிலும் பண்ணு

அளந்தாய் -இரங்கு
நீர் ஏற்று அளந்த நெடிய பிரான் அருளா விடுமே என்று அன்றோ நாங்கள் இருப்பது

தென்னிலங்கை செற்றாய் –இரங்கு
சிறிது தாழ்க்கில் இரக்கம் எழீர்-என்று உன்னை வசை பாடுவார்கள் கிடாய் என்று
தாய்கள் சொல்லும் அளவேயோ (ஆழி எழ தாயார் பதிகம் )
இரக்கம் ஒன்றும் இலாதாய் (நாச்சியார் )-என்று நாங்கள் தான் சொல்லோமோ

சகடமுதைத்தாய் -இரங்கு
உருளும் சகடம் உதைத்த பெருமானார் அருளின் பெரு நசையால் அன்றோ நாங்கள் வந்தது -(திருவாய் 2-1 )

குன்று குடையாய் எடுத்தாய் –இரங்கு
குன்று குடையாக ஆ காத்த கோவலனார் ஒன்றும் இரங்கார் என்னாம் இரங்கு -(பெரிய திருவந்தாதி )

———————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை —-மாரி மலை முழஞ்சில் –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 11, 2017

சங்கம் இருப்பார் போல் -என்று கீழே பெண்கள் சொன்ன வார்த்தையைக் கேட்டு –
அநந்ய கதிகளாய் வந்தோம் என்று சொல்லுவதே
நப்பின்னை பிராட்டி பரிகரமாய் இருந்து வைத்து என்று
திரு உள்ளத்திலே போரப் புண் பட்டு –

பின்னை நெடும் பணை தோள் மகிழ் பீடுடை (1-7 ) என்று
அவளுடைய சம்பந்தமே நமக்கு ஏற்றமாக நமக்கு நல்லோர்கள் சொல்லா நிற்கச் செய்தே-
அவளோடு ஒரு கோவையாய் இருந்து வைத்து
நம் முன்னே இப்படிச் சொல்லுவதே –
நாம் ஆரானோம் -என்று தன்னை நொந்து கொண்டு

பரம ரிஷிகள் ஆர்த்தராய் வர
தன் காவல் சோர்வை நினைந்து சாபராதர் செய்தவற்றை
நிரபேஷரான பூர்ணர் பொறுக்கும் அத்தனை அன்றோ
கர்ப்ப பூதர் என்று நினைத்து இருக்க
உங்களால் வந்த தன்றே -உங்கள் வியசனத்தை காண்கையாலும்
அதுக்கு அடி நம் குற்றம் ஆகையாலும்
உங்கள் அளவல்ல நமக்கு லஜ்ஜை –

முதலிலே ரக்ஷகன் ஆனவனுக்கு சென்று ரஷிக்க வேணும்
அதிலே ஆர்த்தரை ஐயோ என்று வினவ வேணும் –

இப்படி இருக்க
நோவு படுகிறி கோளும்-
அது வந்து அறிவிப்பு கோளும் நீங்களாம் படி பிற்பாடார் ஆனோமே –
அத்தை நீங்கள் பொறுக்க வேணும் என்று ஷமிப்பித்துக் கொண்டால் போலேயும்

ஸ்ரீ விபீஷண ஆழ்வான் ராவணன் பின்னே பிறந்த என்னை ஆராயாதே அருள் பாடிடுவதே -என்று
தரையைப் பார்த்து கவிழ்ந்து நிற்க
அவன் இலங்கையில் பட்ட நெருக்கும்
முதலிகளால் வந்த சிலுகும் எல்லாம் நம்மாலே வந்தது அன்றோ –
நீர் இருந்த இடத்திலே வந்து கொண்டு போராதது
நம் குறை யன்றோ என்று சாபராதரரைப் போலே சாந்தனவம் பண்ணினால் போலேயும் –

ஆண்கள் விஷயத்தில் அகப்பட இப்படி இருக்கக் கடவ நாம்
பெண்கள் வந்து எழுப்பப் பார்த்து இருப்போமே-என்று பெண்களுக்கு இனிதாகச் சொல்லி
உங்கள் கார்யம் அழகிதாகச் செய்து தரக் கடவோம் –
செய்ய வேண்டுவது என் சொல்லுங்கோள் என்ன-

இங்கண் குன்னங்குறிச்சியாகக் கேட்டு அருள ஒண்ணாது –
பேர் ஓலக்கமாக இருந்து கேட்டருள வேணும் என்று
ஆஸ்தானத்திலே புறப்பாடு
இருக்கும் க்ரமத்தை
பாசுர பரப்பு அறக் கையோலை செய்து கொடுக்கிறார்கள்-

(கிடாம்பி)ஆச்சான் -அகதிம் சரணாகதம் -என்று விண்ணப்பம் செய்ய
நம் இராமானுசனை யுடையாய் இருந்து வைத்து நம் முன்னே இப்படி சொல்லப் பெறாய்-என்றார் அழகர் –

அபராத ஸஹஸ்ர பாஜநம் பதிதம் பீமபவார்ணவோதரே |
அகதிம் ஶரணாகதம் ஹரே! க்ருபயா கேவலமாத்ஸமாத் குரு ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் —-48

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-

பதவுரை

மாரி–மழைக் காலத்தில்
மலை முழஞ்சில்–மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து–(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும்–உறங்கா நின்ற
சீரிய சிங்கம்–(வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று–உணர்ந்தெழுந்து
தீ விழித்து–நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர்–(ஜாதிக்கு உரிய) பரிமளமுள்ள உளை மயிர்களானவை
பொங்க–சிலும்பும்படி
எப்பாடும்–நாற் புறங்களிலும்
பேர்ந்து–புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி–(சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து–சோம்பல் முறித்து
முழங்கி–கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே–வெளிப் புறப்பட்டு வருவது போல,
பூவைப் பூ வண்ணா–காயம் பூப் போன்ற நிறத்தை யுடைய பிரானே!
நீ–நீ
உன் கோயில் நின்று–உன்னுடைய திருக் கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி–இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று
கோப்பு உடைய–அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய–லோகோத்தரமான-மேன்மை பெற்ற
சிங்காசனத்து-எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம்-நாங்கள் (மநோ ரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து–விசாரித்து
அருள்–கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய்

மாரி
வைரம் கொள்ளும் மார்க்கங்களும்-
சலிலே நஸமீக்ருதா-என்னும் படி
தேசம் அடைய ஒரு நீர்க் கோப்பாக வர்ஷம் பெய்து
வழிகள் எல்லாம் தூறு எழுந்து சஞ்சார யோக்யதை இன்றியிலே ஒழிகையாலே

ராஜாக்களும் தம் தாம் சத்ருக்கள் பக்கல் த்வேஷங்களையும் மறந்து
எடுத்து விடுகையும் தவிர்ந்து
கை கழியப் போனவர்களும் வர்ஷாவாகப் புகா நின்றது என்று
தம் தாம் வீடுகளைக் குறித்து வந்து நின்று
நாலு மாசமும் உகந்த விஷயங்களோடு கூடி இருக்கும் படியாய் இறே இருப்பது

மஹாராஜரும் தாரை யுடைய ஸ்தநோஷ்மாவைப் பற்றிக் கிடந்து
பெருமாளோடே பண்ணின சமயத்தையும் மறந்த படியால் பெருமாளும் சீறி –
ச பாந்தவமாக அறுக்கக் கடவோம் என்று இளைய பெருமாளுக்கு அருளிச் செய்து விட

அவரும் கிஷ்கிந்தை வாசலிலே சீரிய நாண் எரிய
நின்ற திருவடியைப் பார்த்து போக்கடி சொல் என்ன –
அவனும் தீரக் கழிய அபராதம் பண்ணின உனக்கு ஓர் அஞ்சலி நேராமல் போகாது என்ன

தான் சாபராதன் ஆகையால் நேர் கொடு நேர் புறப்பட மாட்டாமையாலே
தாரையைப் புறப்பட விட

அவளும் உமக்கு கோபம் காரணம் என் –
உமக்கு கோபத்துக்கு போரு வாரும் உண்டோ என்று பொறுப்பித்துக் கொள்ளும் படி
பண்ணும் காலம் இறே வர்ஷா வாகிறது

பெருமாள் தானும் மால்ய வானிலே எழுந்து இருந்து

சலீலாதி பாரத்தை வஹித்துக் கொண்டு ரண உத்யு க்த்ங்களான யானைகள் போலே கிளம்பி
நீர்க் கனத்தாலே மலைக் கொடு முடிகளில் படிந்து

சோபன பங்க்திகள் படுத்தால் போலே கிடக்கிற கிடையைக் கண்டு

அர்ச்சிராதி கதியாலே பரம பததத்துக்கு ஏறுவாரைப் போலே
இவற்றிலே அடி இட்டு ஆகாசத்தில் ஏறி பறித்துக் கொள்ள வேண்டாத படி
நினைத்த படி அள்ளிப் பரிமாறலாம் படி இருக்கிற
இக் காலத்துக்கு அடைத்த பூக்களைக் கொண்டு

ஆதித்ய அந்தர விருத்தியான
பெரிய பெருமாளை சமாராதனம் பண்ணலாய் இருந்தது –

எடுத்துக் கை நீட்டுவார் இல்லை யாயிற்றே என்கிற
இழவோடே வர்ஷா காலத்தில் இருக்கும் படிகள் எல்லாம் அருளிச் செய்தார் இறே

மாரி
பிரிந்தார் கூடும் காலம் –
கூடினார் போக ரசம் அனுபவிக்கும் காலம் –
புஜிக்கிறவர்கள் கை நெகிழில் உடம்பு வெளுத்து அணையும் காலம்

மாரி
பெண்களோடு மேகம் அறையிடும் காலம் –
பிரிந்தார் கொடுமை குழறும் காலம் –
கலந்தார் வர எதிர் கொள்ளும் காலம் -(திருவிருத்தம் )
பெண் நீர்மை ஈடு அழிக்கும் காலம் (நாச்சியார் -8- )

மாரி
சிம்ஹங்களும் எதிரிகளான யானைகளின் வாசலில் நின்று பிளிறவும்-
அது செவிப் படாதே தனக்கு ஒரு விரோதி இல்லை என்று
பர்வத குகைகளில் பற்றிக் கிடந்து உறங்கும் காலம்

இனி இவர்களுக்கு ஊராரும் இசைந்து
அவர்கள் ஒரோ இடங்களிலே அடங்கவும் பெற்று
இவர்களுக்கு பலம் கொடுக்கிற கிருஷ்ணனும் நப்பின்னை பிராட்டி கட்டிலிலே உறங்கி
இவர்கள் சென்று எழுப்ப வேண்டும் படியான காலம் இறே

மலை முழஞ்சில்
ஸிம்ஹம் தான் மலைக்கு ஆபரணமாய் இறே இருப்பது –
இவனும் நப்பின்னையினுடைய துங்க ஸ்தன கிரிதடியில் ஸ்தன ஆபரணம் போலே தங்குகிறான் இறே

மன்னிக் கிடந்து-
மிடுக்காலே ஒருவர்க்கு அஞ்ச வேண்டாமையாலே
மலைக் குவடு போலே பொருந்தி வீசு வில் இட்டு எழுப்பினாலும் கிளப்பப் போகாத படி
ஒட்டிக் கொண்டு கிடக்கை –
அன்றிக்கே –
தன் பெடையோடே ஏக வஸ்து என்னலாம் படி பொருந்திக் கிடக்கும் என்றுமாம் –

வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்னும் படி இறே கிடக்கிறது –
அடங்க வஞ்சிறை கோலி என்னுமா போலே

கிடந்து உறங்கும்
ஸ்பர்ச ஸூகம் மயக்கின படி ஒழிய
தமோ குண அபீபூதமாய் உறங்குகிறது அன்றே இவன் உறக்கம்

தன்னால் அல்லது செல்லாதே வியதிரேகத்தில்
ஆற்றாதார் வரும் அளவும் குறு விழி கொள்ளுகை இறே –

உறங்கும் சீரிய சிங்கம்
உறங்கா நிற்கச் செய்தே கிட்ட மாட்டாதே
ஷூத்ர மிருகங்கள் கண்ட காட்சியில் மண் உண்ணும் படி வீர ஸ்ரீ யை யுடைத்தான ஸிம்ஹம்

ஸூக ஸூப்தி பண்ணா நிற்கச் செய்தே எதிரிகள் தப்பிக்கும் படி கிடக்கையாலே
உணர்த்தி கொள்ளும் காலத்திலும் உறக்கமே நன்றாய் இருக்க
ஏன் யுணர்த்தினோம் என்னும் படி
மடி கொடுத்தார் துடிக்கும் படி இறே இவன் உறக்கம் இருப்பது

சீரிய சிங்கம்
ம்ருகேந்த்ரன் என்றும்
மிருக ராஜன் என்றும்
ஒருத்தர் முடி சூட்ட வேண்டாதே பிறப்பே நிரங்குசமான வைபவம் யுண்டாகை

சீரிய சிங்கம்
நர ஸிம்ஹம் போலே கலந்து கட்டியாய் சீர்மை கெட்டு இராதே
சிற்றாயர் சிங்கத்துக்கு(பெரியாழ்வார் – 3-3)

அறிவுற்றுத்
மேலிட வல்லது ஓன்று இல்லை –
கிட்டி எழுப்புவார் இல்லை –
காலம் உணர்த்த உணரும் அத்தனை இறே –

அறிவுற்று
அறிவு இல்லாத தொரு பதார்த்தத்துக்கு அறிவு புகுந்து நடை யாடினால் போலே இருக்கை –
ஆஸ்ரித அர்த்தமாக உணர்ந்த போது இறே இவன் அறிவுடையவன் ஆவது –
பூ அலர்ந்தால் போலே காலம் உணர்த்த உணர்ந்த படி –

தீ விழித்து
நம் எல்லைக்குள் புகுந்தார் ஆர் என்னுமா போலே
பார்க்கும் பார்வையில் உள்ள வெம்மை –
பிரதம கடாக்ஷ சந்நிபாதத்தில்
சர்வ காலமும் அணையும் பேடைக்கும் குட்டிகளுக்கும் அணைய ஒண்ணாது இருக்கை –

பூங்கோதையாள் வெருவ —
வானோர் கலங்கி ஓட (பெரிய திருமொழி -1-7 )-என்னும் படி இறே
கோபித்து விழித்தால் எரி வட்டக் கண்களாலே (நான்முகன் )
ஐஸ்வர்யமான தேஜஸ்ஸூ பிரவஹிக்கும் படி –

இவையா பிலவாய் திறந்து எரி கான்ற
இவையா வெரிவட்டக் கண்கள் -இவையா
வெரி பொங்கிக் காட்டும் இமையோர் பெருமான்
அரி பொங்கிக் காட்டும் அழகு–(நான்முகன்-21)

ஐந்தலைப் பாம்போடு விளையாடுகிறவனார்
பாண்டவ சாரதி க்ருத்தனானால் பிழைக்கிறவனார் என்று
சிவக்கப் பார்த்தால்
ப்ரஹ்ம ருத்ராதிகளாலும் நோக்க ஒண்ணாத படியாய் இறே இருப்பது

தீ விழித்து
இவனைக் கொண்டு வேறு ஒரு பிரயோஜனம் கொள்ளுமவர்கள் அன்றிக்கே
இவன் இருந்த படியே உத்தேச்யம் என்று இருக்குமவர்கள் ஆகையாலும்
கொண்ட சீற்றம் -என்று
ஆஸ்ரித அர்த்தமான சீற்றைத்தை நிதி யுண்டு என்று நினைத்து இருக்குமவர்கள் ஆகையாலும்
ஏதேனுமாக இவன் செய்கை இவர்களை நைவிக்கையாலும் –

சீரிய சிங்கம் என்றதோடு –
அறிவுற்று என்றதோடு –
தீ விழித்து -என்றதோடு –
வாசி அற
இவை எல்லாம் போக்யமாய் இருக்கிறபடி –

இவையா இவையா என்று
தனித் தனியே ஆகர்ஷகம் இறே

வேரி மயிர் பொங்க
பரிமளத்தை யுடைத்தான உளை மயிர்களானவை சிலும்ப

வேரி மயிர்
சிம்மத்துக்கு ஜாதி உசிதமான கந்தம் –
சர்வ கந்த என்கிற விஷயம் ஆகையால்
உபமேயத்தில் உள்ளது எல்லாம் உபமானத்திலே இட்டுச் சொல்லக் கடவது இறே –
தண் துழாய் விரை நாறக் கடவது இறே

வெப்பாடும் பேர்ந்து
அறிவு கலந்து நடையாடச் செய்தேயும்
நித்ர பாரவசயத்தாலே வந்த கலக்கத்தாலே ஒரு கார்யப் பாடு அற நாலு பாடும் பேருகிற படி

உதறி
உறங்கும் போது அவயவங்களை சேர இட்டுக் கிடைக்கையாலே வந்த
திமிர்ப்பு போம்படி அவயவங்களைத் தனித் தனியே உதறி

மூரி நிமிர்ந்து
உலாவுகைக்கு சரீரம் விதேயமாகைக்காக அவயவியான உடலை ஒன்றாக நிமிர்த்து

முழங்கி
இதர துஷ்ட மிருகங்கள் கிடந்த இடத்திலே முழுக்காயாக அவிந்து கிடக்கும் படி

முழங்கி
மேகம் போன்ற கிருஷ்ணனுடைய முழக்கம் எதிரிகளை மண் உண்ணும் படி பண்ணி
பெண்கள் வந்து எதிர் கொள்ளக் கடவதாய் இருக்கும் –

புறப்பட்டு-போதருமா போலே
கிரி குஹரத்தில் நின்றும் இப்படிப் பட்டதொரு ஸிம்ஹம் புறப்பட்டு
ஸ்வைர சஞ்சாரம் பண்ணுமா போலே
இங்கனே போர வேணும் என்கிறார்கள்

பெண்காள் -நம்மை ஸிம்ஹம் புறப்படுமா போலே புறப்படவோ சொல்லுகிறது –
ராகவ ஸிம்ஹமாய் புறப்படவோ
நர ஸிம்ஹமாய் புறப்படவோ -என்ன –

உன்னுடைய மேன்மை அந்யாயத்தம் அன்று என்கைக்காகவும்-
ஸ்வா பாவிகமான
ஸுர்யத்துக்கும்
காம்பீர்யத்துக்கும்
சிம்மத்தை த்ருஷ்டாந்தமாகச் சொன்னோம் அத்தனை அல்லது
ஸிம்ஹம் போலே என்றோமோ என்ன
ஹிரண்ய ராவணாதிகள் முன்னே நிற்குமா போலே நிற்கவோ தேடுகிறது பிரானே

நீ பூவைப் பூ வண்ணா
உன்னை நீ அறிய வேண்டாவோ –
எதிரிகளான சிசுபாலாதிகள் முன்னே நிற்கிலும் இவ் வழகு குலையாமே நிற்குமவன் அல்லையோ நீ

சிம்ஹத்தால் உன்னுடைய
வடிவு அழகையும்
குளிர்த்தியையும்
ஸுகுமார்யத்தையும் ஏறிட்டுக் கொள்ளப் போமோ

உன் வடிவுக்குப் பூவை பூவை ஓர் ஆகாரத்துக்கு த்ருஷ்டாந்தம் இடுகிற மாத்ரம்
ஸுர்யாதிகளுக்கு ஒரு போலி சொன்னோம் அத்தனை அன்றோ
பிரிந்தார்க்குப் பிழைக்க ஒண்ணாத படி வடிவு படைத்ததோ அது –

பூவைப் பூ வண்ணா
வண்டு அறாப் பூவை தான் கண்ணனார் வடிவுக்கு ஸ்மாரகமாய் இறே இருப்பது -(பெரிய திருவந்தாதி 49)

கொண்டல் தான் மால் வரை தான் மா கடல் தான் கூரிருள் தான்
வண்டு அறாப் பூவை தான் மற்றுத் தான் -கண்ட நாள்
காருருவம் காண்டோறும் நெஞ்சு ஓடும் கண்ணனார்
பேருருவம் என்று எம்மைப் பிரிந்து –49-

வடிவைக் கொண்டாட நின்றி கோள்
உங்களுக்கு அனுபவிக்க ஆசையாகில் உள்ளே புகுருங்கோள் என்றான்

வுன்-கோயில் நின்று இங்கனே
எங்களை உள்ளே அழையாதே நீ தான் உள்ளில் நின்றும் புறப்பட்டாலோ –
படுக்கைத் தலையிலே எடுத்துக் கை நீட்டுவித்துக் கொள்ளும் அளவன்று
எங்களை அழகு ஓலக்கத்தே அடிமை கொண்டு அருள வேணும் –

பூவைப் பூ வண்ணா நின் கோயில் நின்று
இவ் வடிவு அழகை எல்லாம் இட்டளத்தில் வெள்ளம் ஆக்குகிறது என்

உன் கோயில்
நந்தகோபனுடைய கோயில் -என்றார்கள் கீழ் –
இங்கே உன் கோயில் என்கிறார்கள் –
வாச பூமி ஒன்றாய் -அது இருவருக்கும் பொதுவாய்த்து இருப்பது –
இவன் வர்த்திக்கும் கோயிலுக்கு சேஷ சேஷிகளுடைய ப்ராதான்யம் கொள்ளக் கடவது இறே –
பிரணவம் போலவும் –
ஹ்ருதயக் கமலம் போலவும்
திருவரங்கம் நம்மூர் -(திருநெடும் தாண்டகம் )
எம்பெருமான் கோயில் என்றேற்க்கு இது வென்றோ எழில் ஆலி-(திருநெடும் தாண்டகம் )-என்னக் கடவது இறே –

(உபய பிரதானம்
அர்ஜுனன் தேர் தட்டு
ராச மண்டலம்
ஆழ்வார் தேவநாதன் தேவஸ்தானம் போல் )

இங்கனே போந்து அருளி-
பெருமாள் திரு மாளிகையில் நின்றும் ஸூமந்த்ரனைக் கையைப் பிடித்துக் கொண்டு
பிராட்டி பின் தொடரப் புறப்பட்டால் போலே –
ஞாலத்தூடே நடக்க ஒண்ணாது (திருவாய் -6-9-3 )

என்கொல் அம்மான் திருஅருள்கள்?* உலகும் உயிரும் தானேயாய்*
நன்கு என் உடலம் கைவிடான்* ஞாலத்தூடே நடந்து உழக்கி*
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற* திருமாலிருஞ்சோலை*
நங்கள் குன்றம் கைவிடான்* நண்ணா அசுரர் நலியவே.

இங்கனே –
எங்கள் முன்னே நடக்க வேணும் –
எங்களுக்குத் தனியே சில நிர்பந்தம் உண்டு காண் –
கண் வளர்ந்து அருளின படி கண்டு வாழ்ந்தோம்
இனி நடை அழகு கண்டு வாழ வேணும் –
நடைச் சக்கரவத்து பிடிக்கலாம் படி இறே இந்நாலு அடியும் இருப்பது

கிருஷ்ணனுடைய லளித கதியை அநு கரித்து தரிக்கத் தேடுகிறவர்கள்
தாங்கள் உட்பட
கண்ணுடையார் அடங்கலும் கண்டு வாழுங்கோள் என்னும் படி இறே இருப்பது –

கானகம் படி யுலாவி யுலாவி (பெரிய திருமொழி 3-6)-என்று
கிருஷ்ணன் நடக்கும் போது ஆடல் பாடல் மறக்கக் கடவது இறே (பெரியாழ்வார் 3-3 )
அப்சரஸ்ஸூக்கள் உட்பட ஆடுமது கண்டு
கை தொழ வீதி வருவான் -காலும் நடையும் கண்டு கை எடுப்பார் மடல் எடுப்பார் அவர்கள் இறே பெண்கள் –

போந்தருளி
சதுர்க்கதி இறே –
ரிஷபத்தினுடைய செருக்கும் –
மத்த கஜத்தினுடைய திமிர்ப்பால் வந்த பிசுகுதலும்-
புலியினுடைய சிவிடகுடைமையால் வந்த உறட்டுதலும் –
ஸிம்ஹத்தினுடைய மேனானிப்பால் வந்த பராபிபவனமும் –

(ராகவ ஸிம்ஹம்
யாதவ ஸிம்ஹம்
ரெங்கேந்திர ஸிம்ஹம்
கர்ப்ப க்ருஹம் எழுந்து அருளும் பொழுது நம்பெருமாள் இடம் ஸர்ப்ப கதியும் உண்டே )

ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் கார் ஏறு –(நாச்சியார் )
வாரணம் -(1-8) பைய நின்று
சிற்றாயர் சிங்கம் (பெரியாழ்வார் 1-3 )-என்கிற கிருஷ்ணனுக்குச் சொல்ல வேணுமோ

புருஷ ரிஷப –
ராம சார்த்தூலம் –
மத்த மாதங்க காமி நம் —
பத்மதள பத்ராக்ஷம் -சிம்ம விக்ராந்தகாமி நம் -என்று சக்கரவர்த்தி பிள்ளை உட்பட விருது பிடியா நிற்க –
(இங்கும் இரண்டும் உண்டே )
இவை எல்லாம் நமக்கு நம் பெருமாள் நடை அழகிலே காணலாம்

போந்து கேட்க்கும் அத்தனை அன்றோ கார்யம் வேண்டுவது என்றான்

கோப்புடைய சீரிய சிங்காசனத்து இருந்து
படுக்கையில் வார்த்தையாக ஒண்ணாது

கோப்புடைய
உபய விபூதியில் உண்டான சராசர பதார்த்தங்களை அடங்கலும் தொழிலாக வகுப்புண்டு இருக்கை

சீரிய சிங்காசனம்
சீரிய சிங்கத்துக்கு சத்ருசமான ஆசனம்

சீரிய
பெண்களுக்கு பொய் குறிக்கும் கிருஷ்ணனே யாகிலும்
இவ்வாசனத்திலே இருந்தால் பொய் சொல்ல ஒண்ணாதே –
சொன்னது அமோகமாய் இருக்கை –

ஆசனத்துக்கு சீர்மையாவது –
கடல் கரை வெளியிலே வானர சஹாசத்திலே வார்த்தை போலேயும் –
பூசல் களரியிலே தேர்த் தட்டில் வார்த்தை போலேயும்
பெண்கள் திரளில் திவ்ய சிம்ஹாசனத்தில் இருந்து பொய் நம்பியான கிருஷ்ணன் சொன்னதே யாகிலும்
ஆசன விசேஷத்தாலே பழுது போகாத படி யாய் இருக்கும் –

தர்ம ஆசனத்தில் இருந்தால் தோற்றிற்றுச் சொல்ல ஒண்ணாது இறே –
இது தான் தர்மாதி பீடம் இ றே –
ராஜாக்கள் மெய்க்காட்டுக்கு இன்ன மண்டபத்திலே இன்ன ஆசனத்தில் இருந்து நினைப்பிட்டது
என்றால் தப்பாதால் போலே

உன் கோயில் நின்று இத்யாதி
நம்பெருமாள் கோயில் ஆழ்வாரில் நின்றும் புறப்பட்டு அருளி
பெரிய திரு மண்டபத்திலே சேர பாண்டியனிலே (முத்துப் பத்துப்பந்தலின் கீழே )
நாய்ச்சிமாரோடு கூடி இருந்து நினைப்பிட்டது என்றால் தப்பாதால் போலே

சீரிய சிங்காசனம்
ஓர் அணு சென்று அடியிடிலும்
கிருஷ்ணனோடு ஸாம்யா பத்தியைக் கொடுக்கும் ஆசனம் –

இருந்தால் சிங்காசனமாம் -என்கிற
ஆசனத்தில் ஏறல் இறே தங்களுக்கு கணிசம்

கண் வளருகிற போதை அழகும் –
உலாவுகிற போதை அழகும் –
கண்டால் -இருக்கும் போதை அழகும் காண வேணும் இறே

இருந்தமை காட்டினீர் (திருவாய் 6-5-5 )-என்று இறே உத்தேச்யம்

குழையும் வாள் முகத்து ஏழையைத்* தொலைவில்லிமங்கலம் கொண்டுபுக்கு,*
இழை கொள் சோதிச் செந்தாமரைக் கண்பிரான்* இருந்தமை காட்டினீர்,*
மழை பெய்தால் ஒக்கும் கண்ண நீரினொடு* அன்று தொட்டும் மையாந்து,* இவள்
நுழையும் சிந்தையள் அன்னைமீர்!* தொழும் அத் திசை உற்று நோக்கியே.

தடம் கொள் தாமரைக் கண் விழித்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ உலகும் தொழ இருந்து அருளாய் திருப் புளிங்குடி கிடந்தானே-

கிடந்தமை கண்டாலும்
நடந்தமை கண்டாலும்
கண்களின் விடாய் கெட்டு குளிராது –
கண்ணிணை குளிர புது மலர் ராகத்தைப் பருக இருந்திடாய்-

சீரிய சிங்காசனத்து இருந்து
நாங்கள் சுற்றும் ஓலக்கம் இருக்க நீ சிம்ஹாசனத்தில் இருந்தால் அன்றோ –
பல்லாயிரம் பெரும் தேவிமாருடனே –எல்லாரும் சூழ
சிங்காசனத்தே இருந்தானைக் கண்டவர்கள் உண்டு என்கிற பிரசித்தி உனக்கு படைத்தாலாவது

இருந்து
காவலும் கட்டுமாய் நில் என்பார் இன்றிக்கே
நினைத்தபடி அனுபவிக்கலாம் படி இருந்த இருப்பு இறே

யாம் வந்த
எங்களை அறிவுதி இறே –
நீ வர இருக்குமவர்கள் அன்றோ நாங்கள்

வந்த
விரஹ துர்பல்யத்தாலே கால் நடை தாராத நாங்கள் அன்றோ வந்தோம்

கார்யம்
கார்யம் இன்னது என்னா விடுகிறது -அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –
ஸ்ரீ பரத ஆழ்வான் தம்மோடு ஒத்த ஆர்த்தரானார் எல்லாரையும் திரட்டிக் கொண்டு சென்று
திருவடிகளில் விழ இரங்குவர் என்று வர
அவன் நினைத்து வந்தததுக்கு அவசரம் இல்லாமையால்
அணுக ஒண்ணாத படி இருந்து திருவடி நிலைகளைக் கொடுத்து விடும் ஸ்வ தந்த்ரன் ஆகையால்
இப்போது சொல்லுவோம் அல்லோம் –

இன்னம் இரண்டு அடி புகுர நின்ற வாறே –
உற்றோமே யாவோம் -என்கிறோம் என்று
கார்யம் இன்னது என்னும் இடத்தை
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்-சிற்றம் சிறு காலைக்கு வைக்கிறார்கள்

(சரணாகதி கறவை யிலும்
அதற்குப் பின்பே கார்யம் கைங்கர்ய பிராப்தி )

காரியம்
ஸ்வ ஸ்வரூபா பத்தி அளவும் இறே விதிக்கு விஷயம் உள்ளது –
அவ்வருகு பரிமாற்றத்தால் வருமவை எல்லாம் பிரமாண விஷயமாய்
பேச்சுக்கு நிலமாய் இராதே
அது தானும் காரிய வறுதி பிறந்தால் இறே சொல்லுவது

ஆராய்ந்து அருள்
நாம் போம் இடம் தேடிக் காலம் பார்த்து எதிர் சூழல் புக்கு புருஷகாரமாகப் பற்றி
நாம் படுவது எல்லாம் நீங்கள் படுவதே
நீங்கள் என் செய்திகோள்-
என் பட்டி கோள் -என்று ஆராய வேணும் –

பெண்காள் –
ஒருவரை ஒருவர் எழுப்பி –
எல்லாரும் திரண்டு
நம் வாசல் காக்குமவனை எழுப்பி –
ஐயரை எழுப்பி
ஆய்ச்சியை எழுப்பி
நம்மை எழுப்பி
அண்ணரை எழுப்பி
மீளவும் நம்மை எழுப்பி போர வியசனப் பட்டி கோளே-என்று
திரு உள்ளம் பற்றி கிருபை பண்ணி அருள வேணும் –

(வடநாட்டு ஹிந்துஸ்தான் வித்வான் -வந்து பாடி –
அரையர் சம்பாவனை பிரார்த்திக்க –
திருக் கைத்தலை சேவை மூன்று அர்ச்சகர்கள் சேர்ந்து –
நடந்து சேவை சாதித்து 700 காதம் நடந்த அவனுக்கு ஏழு அடி நடந்த ஐதிக்யம் உண்டே

ஒருநாள் புறப்பாடு காணா விடில் மாய்ந்தே போவார்கள் பூர்வர்கள் – )

———————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை —-அங்கண் மா ஞாலத்து –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 11, 2017

மாற்றார் உனக்கு வலி தொலைந்து -என்று போக்கற்று வந்த படி இறே சொன்னார்கள் –
இன்னமும் இவர்கள் வாய் அறியக் கடவோம் என்று கிடந்தான் கிருஷ்ணன்

இப்படியே எங்களை நீ நினைத்து இருக்கிற படி –
இங்கேயே புகல் இன்றியே ஒழிந்தாலும் வேறு போக்கிடம் இல்லாத படி
அநந்யார்ஹைகளுமாய்
எங்களுக்கும்
பிறருக்கும் ஆகாத படியாய் வந்தோம் –
இனி கடாக்ஷித்து அருள வேணும் என்கிறார்கள் –

பரித்யக்தா –
புத்ராம்ச தாராம் ச -என்று
அனுகூலராய் இருக்கச் செய்தேயும்
இவர்களிலும் அண்ணி யராக-(நெருங்கியவராக ) இருந்தபடி இது வன்றோ என்று
இவர்களும் அப்படியே யாகக் கூடும் என்று –

ராவண சம்பந்தம் உள்ளதடங்கலும் விட்டு
பகவத் கதம் என்று ஓர் இடத்திலே பாரதந்தர்யம் கிடவாத போது எல்லாம் பெற்றாலும்
பலவாய்த் தண்ணிய வற்றை தின்று தேட வேணுமோ என்று பொகட்டுப் போந்தேன்-

அநுஜோ ராவணஸ்யாஹம் தேந சாப்யவமாநித: ।
பவந்தம் ஸர்வபூதாநாம் ஸரண்யம் ஸரணாகத: ॥

பரித்யக்தா மயா லங்கா மித்ராணி ச தநாநி வை ।
பவத்கதம் மே ராஜ்யம் ச ஜீவிதம் ச ஸுகாநி ச ॥

தேவர் அங்கீ காரம் பெற்றிலேன் ஆகிலும்
விட்டுப் போந்த இடத்துக்கு ஆகாத படி வந்தேன் என்று விபீஷணன்
விண்ணப்பம் செய்தால் போலே

பிறந்தகத்துக்கும் ஆகாதபடி வந்தோம் என்று
தங்கள் அநந்யார்ஹத்வம் தோற்ற விண்ணப்பம் செய்கிறார்கள் –

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

அம் கண் மா ஞாலத்து அரசர்–அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து–(தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே–உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல்–திரள் திரளாக இருப்பது போலே
வந்து–நாங்களும் உன் இருப்பிடத்தேற) விடை கொண்டு
தலைப் பெய்தோம்–கிட்டினோம்’
கிங்கிணி வாய்ச் செய்த–கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதிவிக ஸிதமான)
செய்த உவமை உறுப்பில் போன்ற என்ற அர்த்தம்
தாமரைப் பூ போலே–செந்தாமரைப் பூப்போன்ற
செம் கண்–சிவந்த திருக் கண்கள்
சிறுச்சிறிது–கொஞ்சங்கொஞ்சமாக
எம் மேல்–எங்கள் மேலே
விழியாவோ-விழிக்க மாட்டாவோ?-பிரார்த்தனை இல்லை மநோ ரதம்
திங்களும்–சந்திரனும்
ஆதித்யனும்–ஸுர்யனும்
எழுந்தால் போல்–உதித்தாற் போல
அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய திருக் கண்களிரண்டினாலும்
எங்கள் மேல் நோக்குதியேல்–எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில்
எங்கள் மேல் சாபம்–எங்கள் பக்கலிலுள்ள பாபம்-
சாபம் -அனுபவித்தே தீர்க்க வேண்டிய பாபம்
இழிந்து–கழிந்துவிடும்’
ஏல் ஓர் எம் பாவாய்

அங்கண் மா ஞாலத்து அரசர்
இங்கு வந்தார் உன்னில் குறைந்தார் உண்டோ –
ஈஸ்வரஸ் சர்வ பூதா நாம் (கீதை )என்று நீ இருக்குமா போலே –
நாங்களும் ஈஸ்வரோஹம் என்று
தனித் தனியே இருக்குமவர்கள் அன்றோ –
உன்னில் ஒரு சுற்றுக் குறைய நின்ற இடம் உண்டோ –

இத்தால்
ஈரரசு தவிர்ந்து வந்த படி பார்த்திலையோ –
ஸ்வத்தவ ஸ்வாமித்வங்கள் இரண்டு தலைக்கும் வியவஸ்திதம் ஆனால்
ஸ்வாமித்வம் உள்ள இடத்தில் ஸ்வாதந்தர்யமும்
ஸ்வத்வம் உள்ள இடத்திலே பாரதந்தர்யமும் கிடவாத போது
ஸ்த்ரீக்கு மோவாய் எழுந்தால் போலேயும் புருஷனுக்கு முலை எழுந்தால் போலேயும் இறே இருப்பது
இப்படி ஸ்வரூப விருத்தமான அபிமானத்தை கழித்து அன்றோ நாங்கள் வந்தது –

அம் கண் ஞாலத்து அரசர்
அம் -என்று அழகு –
கண் -என்று இடம் –
அழகிய ஸ்தான விசேஷங்களை யுடைத்தாய் இருந்துள்ள
மஹா பிருத்வியை தங்களது என்று அபிமானம் பண்ணி இருக்கிற ராஜாக்கள் –

அங்கண்
என்ற இடத்தால் -போக்ய போக உபகரண போக ஸ்தானங்களை
ப்ரஹ்மாதி பீபீலிக அந்தமாக தம் தாம் அளவிலே அபிமானம் பண்ணி இருப்பது

இனி ப்ரஹ்மா அஹம் என்றால் அவன் அளவில் நிற்குமா போலே
சிற்று எறும்பு அஹம் என்றால் அது தன் அளவிலே நிற்கும்
அவன் நான் என்றத்தோடு
இது நான் என்றத்தோடு வாசி இல்லை –

தத் வியதிரீக்தக்கள் அடைய நான் என்றால் ஆக்கனுமாய்-
அத்தனையும் துக்க ஹேதுவுமாய் இருக்கும் –

யாவது குருதே ஐந்து சம்பந்தான் மனச ப்ரியான் தாவன் தோஸ்ய நிகந்த்யந்தே
ஹ்ருதயே சோக சங்கவ-என்று சொல்லிற்று இறே

வேதாந்தங்களிலே ப்ரஹ்மாதிகளும் கூட ஏழு ஜென்மம் ஜனித்து
அரிய சாதன அனுஷ்டானங்களைப் பண்ணி
பின்பு பகவத் பிராப்தி ரூப புருஷார்த்தம் பெற்றவர்களாக சொல்லா நின்றது இறே

இவ் வருகே எத்தனை யேனும் கீழாய் இருப்பார் சிலர்
சரீர அவசான காலத்திலேயே மோக்ஷம் கிடைக்கும் என்று
பொதி சோறு கட்டிக் கொண்டு இரா நின்றார்கள் –
இவை இரண்டும் சேர விழுந்தபடி எங்கனே என்று பட்டரைக் கேட்க –
ஒரு குறை இல்லை என்று அருளிச் செய்தார் –

அவன் தன் விபூதி அளவும் செல்ல பச்சை இட்டுப் பெறக் கடவன் என்று கோலக் கடவன் –
யதோ உபாசனம் பலமாகையாலே
தத் க்ரது ந்யாயத்தாலே அப்படியேயாய் இருக்கும் அவனுக்கு –
இவன் தன் பக்கல் ஒன்றும் இல்லாமையை அனுசந்தித்து
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து நீயே எனக்கு கடவையாக வேணும் என்று காலிலே விழும் –
அவனும் அப்படியே தன் தலையிலே ஏறிட்டுக் கொண்டு
இவனைப் பார்த்து இருக்க வேண்டாத படி தலைக் கட்டிக் கொடுக்கும்
அவனுக்குத் தான் கோலின பரப்பு அடங்கலும் விட வேணும் –
இவனுக்கு இவ்வளவு இறே விட வேண்டுவது
அவன் அனுஷ்ட்டிக்க கடவை எல்லாம் அனுஷ்ட்டித்து பின்பு பலம் தரப் பார்த்து இருக்கும் –
ஈஸ்வரனை இறே இவன் முதலிலே பற்றிற்று

மா ஞாலத்து அரசர் அபிமான
மஹா பிருத்வியில் பரப்பு எல்லாம் என்னது என்று அபிமானம் பண்ணுகை —
பதிம் விஸ்வஸ்ய -என்று ஓதப்படுகிற ஈஸ்வரனை அநு கரிக்கிறார்கள் இறே இவர்கள் –
யாவரும் யாவையும் தானாம் அமையுடை நாரணன் -என்கிற பதத்தை
அநு கரித்த பவுண்டரீக வாஸூ தேவனைப் போலே

அபிமான பங்கமாய்
ராஜ்யங்களை இழந்து எளிவரவு பட்டு அபிமான ஸூன்யராய்-
ராஜ்யன் நாம மஹா வியாதி -அசிகித்சோ விநாசந-தச வேஸ்யா சமோன் ரூப –
ஒரு நாயகமாய் ஓட உலகுடன் ஆண்டவர் (4-1-1)-என்று
ராஜ்யத்தில் அபிமானம் அநர்த்தாவஹம் என்று இறே ஞானாதிகருடைய பிரதிபத்தி

வந்து –
கானகம் போய் என்று காடு பாய்ந்து திரியாதே (4-1-2)
உஜ்ஜீவன ஹேதுவான இடத்தில் வந்து

நின் பள்ளிக் கட்டில் கீழே
அந்த ராஜாக்கள் தோற்று தங்கள் சத்ருக்கள் கட்டில் கீழே என்ன வேண்டாவோ –

நின் பள்ளிக் கட்டில் கீழ் -என்பான் என் என்னில்
உபமேய வஸ்து இவன் அல்லது இல்லை என்னும் ப்ரஸித்தியாலும் –
யத் யத் விபூதி மத் சத்வம் (கீதை ) என்று சொல்லப் படுகிற
விபூதி பூதர்க்கு விபூதிமான் வாசல் புகலாகையாலும்-
பஃன அபிமானர் புகும் வாசல் ஆகையாலும்
சர்வ லோக சரண்யன் வாசலே புகல் என்னும் தங்கள் வாசனையால் சொல்லுகிறார்கள்

நின்
எங்கேனும் வழி பறி யுண்டாலும் ராஜாவின் வாசலிலே கூப்பிடுமா போலே –
ராஜாதி ராஜஸ் ஸர்வேஷாம் –
என்ற பிரமாணம் சொல்லப் படுகிற உடையவன் இருந்த இடத்திலே வர வேணும் இறே

(உனது அழகால் எங்களது ஸர்வத்தையும் வழி பறித்தாய் நீயே அன்றோ
ஆடி ஆடி இத்யாதி -அடியார்கள் உடன் சேரப் பெறாமையால் நரசிங்கா என்று கூப்பிட்டாள் பராங்குச நாயகி )

கோவாகி மா நிலம் காத்த (பூதத்தாழ்வார் )
இவனோடு சம்பந்தி சம்பந்தம் உடையாரை பற்றினவர்கள் இறே ராஜாக்கள் ஆகிறார்கள் –
(முடியுடை மன்னரைக் காணில் திருமால் அம்சம் என்பார் பராங்குசர் )

சங்கம் இருப்பார் போல்
அந்த ராஜ்யங்களைக் கொடுத்து போங்கோள் என்றாலும்
பழைய எளிவரவை நினைத்து அவை வேண்டா வென்று
உன் சிம்ஹாசனத்தின் கீழே திரள் திரளாக வந்து ஓலக்கமாக இருப்பவர்களை போலே –

(தாழ்ச்சி மற்று எங்கும் தவிர்ந்து உன் தாளிணைக் கீழே தானே வாழ்ச்சி
எங்குப் போய் உய்வேன் உன் இணை அடி அல்லால் )

பள்ளிக் கட்டில் கீழே
வெளியிலே வேளாளராய்த் திரியில் தலையிலே முடியை வைப்பார்கள் என்று
ராஜ்ஜியம் பண்ணுகைக்கு முசித்து (வருந்தி )
அந்தரங்கமான ஓலக்கத்திலே சேவிக்கிற படி –

பஃன அபிமானர் ஆனாலும்
அரதிர் ஜன சம்சதி (கீதை )-என்கிறபடியே
ஆளற்ற இடத்தில் விவிக்த சேவை பண்ணினால்
ஸ்ரீ பரத ஆழ்வான் தனி இருக்கையிலே ராஜன் என்பார்-
வஞ்சித்தாச் சாபி தே வயம்-என்பார் -(குகன் அதிசங்கை )
கச்சின்ன துஷ்டோ வ்ரஜஸி-என்பாராய்க் கொண்டு (பரத்வாஜர் அதிசங்கை )
கண்டார் அலைக்க
அவர்களுக்கு சூழ்த்துக் கொடுத்து
தன் பக்கல் அபிமான தோஷம் இல்லாமையை வெளியிட வேண்டிற்று இறே

இளைய பெருமாள் படுக்கைத் தலையில் பிரியாமையாலே
அவை ஒன்றும் கேட்க வேண்டிற்று இல்லை இறே

போல் வந்து தலைப் பெய்தோம்
இந்த ராஜாக்கள் க்ரம ப்ராப்தமான ராஜ்யாதிகளையும்-
தங்களுடைய அபிமானங்களையும் விட்டு
உன் பள்ளிக் கட்டில் கீழே படு காடு கிடக்குமா போலே

நாங்களும் ஒரு ப்ரஹ்ம அபிமானத்தோ பாதியும் போந்து இருக்கிற ஸ்த்ரீத்வ அபிமானத்தையும்
பந்துக்களுடைய நிரோதத்தாலே கிருகங்களை விட்டுப்
புறப்பட ஒண்ணாத அருமையையும் வேறு உண்டான போகங்களையும் விட்டு
அம்புக்கு தோற்றாரோ பாதி
உன் அழகுக்குத் தோற்று வந்து புகுந்தோம் –

வந்து தலைப் பெய்தோம்
அந்த ராஜாக்களை போலே நாங்களும் அநாதி காலம் பண்ணிப் போந்த
தேகாத்ம அபிமானத்தாலே இந்த சம்பந்தத்தை இழந்து போந்த நாங்கள்
நிர்ஹேதுகமாக கிட்டப் பெற்றோம் என்று
யாதிருச்சிக சங்கதியைச் சொல்லிற்று ஆகவுமாம்

நாங்கள் அகன்ற தூரம் வந்த அருமையையும் பாராய் –

த்ரவ்யமாய் இருக்கச் செய்தேயும் குண ஜாதிகள் போலே பகவத் பிரகார பூதனாய்
ப்ருதக் ஸ்திதி யாதல்
ப்ருதக் உபலம்பமாதம் ஆதல் உடையன் அன்றிக்கே
கௌஸ்து பத்தோ பாதி அத்தலைக்கு அதிசயத்தை விளைத்து
ஸ்வரூப லாபமாகக் கடவ சேதனன்

அநாதி கர்மம் அடியாக அத்தை இழந்து –
அசித் ஸம்ஸ்ருஷ்டனாய் தனக்கு பிரகாரமான சரீரத்தை
தேவோஹம் மனுஷியோஹம்-என்று தானாக புத்தி பண்ணி –
சரீர சம்பந்த நிபந்தமான ஸூக துக்கங்களுக்கு போக்தாவாய்
ஸ்தாவரங்களோடு ஓக்க அசித் சமனாய் –
ஷிபாமி -என்று ஈஸ்வரனும் வெறுக்கும் படி -கை கழிய அகன்ற இவன்

யாதிருச்சிகமாக பிறப்பதொரு ஸூஹ்ருதம் அடியாக பகவத் கடாக்ஷத்துக்கு யோக்யனாய்
அனந்தரம்
தேஹாத்மாக்கள் உடைய ஸ்வரூபத்தை விவேகித்து –
தேஹாத்ம அபிமானத்தை விட்டு
ஆத்மாவின் பக்கல் ஸ்வாதந்தர்யத்தையும் விட்டு
ஈஸ்வரனுக்கு சேஷம் என்றும் –
புருஷார்த்தம் அவன் என்றும் –
ருசி விளைந்து –
அது பெறுகைக்கு அடியான உபாயமாகவும் –
அவன் தன்னைப் பற்ற விளம்பம் பொறாத படி த்வரை விளைந்து
திருவடிகளில் வந்து கிடக்கும் அளவாய் விட்டது இறே

ப்ராஹ்மண பிரஜை வேடருடைய கிருஹத்திலே பால்யத்திலே அகப்பட்டு
புத்தி வ்ருத்திகள் அவர்கள் படியாய் நடந்து செல்லா நிற்க
ஸூஹ்ருத விசேஷத்தாலே மாதா பிதாக்கள் முன்னே வந்து நிற்குமா போலே

வந்து தலைப் பெய்தோம்
மாறி மாறி அந்தாதியாக -அநாதியாக -பல பிறப்பும் பிறந்து
அதுவே திருவடிகளை அடைகைக்கு ஹேதுவாய்
சிரா யமே கூல மிவாசி லப்த–(ஸ்தோத்ர ரத்னம் -24-)
மன்யே ப்ராப்தாஸ் மதம் தேசம் பரத்வா ஜோயம் அப்ரவீத் –
வாநராணாம் நராணாம் ச –
தேவ்யே வம்ச மஜாயதே –
நணுகினம் நாமே –
வித்ருசமான விது சங்கதமாகப் பெறுவதே

நிமஜ்ஜதோ’நந்த பவார்ணவாந்த:
சிராய மே கூலமிவாஸி லப்த: |
த்வயாபி லப்தம் பவகவந்நிதாநீம்
அநுத்தமம் பாத்ரமிதம் தயாயா: ||(ஸ்தோத்ர ரத்னம் -24-)

தேச கால வஸ்துக்களினால் எல்லையிலாத ஸ்வாமியே! இந்த ஸம்ஸாரக் கடலில் பல காலமாக மூழ்கியிருக்கும் எனக்கு
நீ கரையைப் போலே வந்தாய்; பகவானே! உன்னுடைய கருணைக்கு நானே தகுந்த பாத்திரம்.

இலனது வுடையனி தென நினை வரியவன்
நிலனிடை விசும்பிடை உருவினன் அருவினன்
புலனொடு புலனலன் , ஒழிவிலன், பரந்த அந்
நலனுடை யொருவனை நணுகினம் நாமே.

வந்து தலைப் பெய்தோம்
வந்து எங்கும் தலைப் பெய்வன் (7-6)-என்கிற இழவுகள் தீர்ந்து
எல்லாரையும் எழுப்பிப் பட்ட வியசனம் எல்லாம் தீர
ஒரு படி வந்து கிட்டப் பெறுவதே

பெண்காள்-எல்லாம் சபலம் ஆயிற்றே –
இனி ஒரு குறைகளும் இல்லையே என்ன –

பிராப்தி பலம் பெற வேண்டாவோ என்கிறார்கள்

கிங்கிணி வாய்ச் செய்த
அலரவும் மாட்டாதே மொட்டிக்கவும் மாட்டாதே திருக் கண்கள் இருந்த படிக்கு
த்ருஷ்டாந்தம் சொல்லுகிறார்கள் –

கிண்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
ஸ்வாதந்தர்யம் செம்பிளிப்பியா நின்றது –
நப்பின்னை பிராட்டையோட்டை ஸ்பர்சம் அலரப் பண்ணா நின்றது –

இத் தலையில் அபராதம் மொட்டிக்கப் பண்ணும்
அவனுடைய அபராத சஹத்வம் அலரப் பண்ணும் –

கர்ம பாரதந்தர்யம் மொட்டிக்க பண்ணும்
ஆஸ்ரித பாரதந்தர்யம் அலரப் பண்ணும்-

காலத்தின் இளமை மொட்டிக்கப் பண்ணா நின்றது
ஆர்த்த த்வனி விகசிக்கப் பண்ணா நின்றது –

ஆதித்யனைக் கண்டால் அலரக் கடவ தாமரைப் பூ போலே
இவர்கள் ஆற்றாமை கண்டால் அலருமவை யாயிற்று

செங்கண்
உபமானம் நேர் இல்லாமையால் உபமேயம் தன்னை விசேஷிக்கிறது
பட்டுரையாய் புற்கென்றே காட்டுமால் –
உபமானத்தோடே சொல்ல நினைக்கை யாவது அழுக்கு ஆக்குகை இறே
தாமரைக்கு இவன் கொடுத்த நிறம் சிவப்புக்கு ஒப்பாம் அத்தனை அல்லது
வாத்சல்யத்தாலே வந்த குதறுதல் இல்லையே அதுக்கு –

சிறுச் சிறிதே
குளப் படியில் கடலை மடுக்க ஒண்ணாது இறே –
பொறுக்க பொறுக்க கடாக்ஷிக்க வேணும் –
(அருகில் ஓக்கலையில் –உச்சியில் வந்தானே –
சாத் மிக்க சாத் மிக்க –
பொலிந்து நின்ற பிரான் திரு முடி சேவை பிரசித்தம் )

சிறுச் சிறிதே
பிரதம பரிஸ்பந்தமே பிடித்து அலரும் போதை அளவுகள் எல்லாம்
காண ஆசைப் படுகிறார்கள் ஆகவுமாம்

எம் மேல் விழியாவோ
கோடையோடின பயிரிலே ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ என்னுமா போலே

எம் மேல்
சாதகம் மேக ஜலம் பார்த்து இருக்குமா போலே
கடாக்ஷமே தாரகமான எங்கள் மேலே
இள வாய்ச்சியர் கண்ணினுள் என்று விழிப்பது அங்கே அன்றோ –

அதுக்கு வந்தது என் என்ன

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே
கதிர் மதியம் போல் முகத்தான் என்று ஆசைப்பட்ட படி பேறாக வேணும் என்கிறார்கள்

திங்களும் ஆதித்யனும்
சந்த்ர ஸூர்யர்களுடைய தண்ணளியையும் பிரதாபத்தையும் யுடைய திருக் கண்கள் –
பிரதி கூலர்க்கு அணுக ஒண்ணாது இருக்கையும்
அநு கூலர்க்கு அணுகி அனுபவிக்கலாய் இருக்கையும் –
தத்ர கோவிந்த ஆஸீனம் பிரசன்ன ஆதித்ய வர்ச்சசம் –

திங்களும் ஆதித்யனும்
1-விரஹ தாபம் போக்குகைக்கும்
2-கிடையாது ஒழி கிறதோ என்னும் பயத்தாலே வந்த
அஞ்ஞான அந்தகாரம் போகைக்கும்

அங்கண்
திருக் கண்களுக்கு அவர்களும் உபமானம் ஆகப் போராது இருந்த படி –
சந்த்ரமா மனசோ ஜாத சஷோ ஸூர்ய அஜாயத -என்று
சந்த்ர ஸூர்யர்களுக்கு பிரசாத உஷ்ணங்கள் இவனுடைய சம்பந்தத்தால் இறே –
பல காலும் ராஹு கேதுக்களாலே அபிபூதராய்
க்ஷய வ்ருத்திகளையும் களங்கத்தையும் யுடையரான
அவ்யய சந்திரனும் கார் கால ஆதித்யனும் அன்றே
அதீவ ப்ரிய தர்சனம் என்கிறவனுடைய பார்வைக்கு ஒப்பு –

(ஆகவே அம் கண் என்று விசேஷணம் இட்டு அவற்றையே சொல்கிறார் )

இரண்டும் கொண்டு
முழு நோக்கு பொறுக்கும் அளவானவாறே –
இரண்டும் -என்று சொல்கிறார்கள்

எங்கண் மேல் நோக்குதியேல்
உன் நோக்குப் பெறாதே ஒரு நீர்ச் சாவியாய் உறாவின எங்கள் பக்கலிலே

எங்கள் மேல்
அவை இரண்டு கண்ணுக்கும் தங்கள் பக்கலிலே விஷயம் உண்டு –
1-சேர ஒட்டாதார் பக்கலிலே பிரதாபமும்
2-தங்கள் பக்கலிலே தண்ணளியும்

சீற்றத்தோடு அருள் பெற்றவன்(3-6)
ஹிரண்யன் பக்கல் சீற்றம் செல்லா நிற்க
பிரகலாதனுக்கு அனுகூலமாய் இருந்தது இறே கண்ணில் வாத்சல்யம் இருந்த படி

தோற்றக் கேடு அவை இல்ல வன்உடை யான்அ வன் ஒரு மூர்த்தியாய்ச்
சீற்றத் தோடு அருள் பெற்ற வன் அடிக் கீழ்ப் புக நின்ற செங்கண்மால்
நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற எம் வானவர்
ஏற்றையே அன்றி மற்றொருவரை யான் இலேன் எழுமைக்குமே.(திருவாய்மொழி 3-6-6 )

ஸிம்ஹம் ஆனையோடே பொரா நின்றாலும் குட்டிக்கு முலை கொடுக்குமா போலே -என்று பட்டர்
குழவி இடை கால் இட்டு எதிர்ந்து பொரும் -(பெரியாழ்வார்-3-5 )

வழு ஒன்றும் இல்லா செய்கை வானவர் கோன் வலிப்பட்டு முனிந்து விடுக்கப்பட்ட
மழை வந்து ஏழு நாள் பெய்து மாத்தடைப்ப மது சூதன் எடுத்து மறித்த மலை
இழவு தரியாதது ஓர் ஈற்றுப்பிடி இளம் சீயம் தொடர்ந்து முடுகுதலும்
குழவி இடைக் கால் இட்டு எதிர்ந்து பொரும் கோவர்த்தனம் என்னும் கொற்றக் குடையே -(திருவாய்மொழி-3 -5 -2-)

விழியாவோ -என்று தங்கள் மநோ ரதம் –
நோக்குதியேல் -என்ற இடம் முன்னிலை

நோக்குதியேல்
தங்கள் தலையால் கிட்டுமது அன்றே நோக்குத் தான்

எங்கள் மேல் சாபம் இழிந்து
யாதநா சரீரம் போலேயும்
சாப உபஹதரைப் போலேயும்
உன்னைப் பெறாதே வியசனப் படுகிற துக்கம்

எங்கள் மேல் சாபம்
பிறருடைய சாபம் உன் கடாக்ஷத்தாலே தீரும் –
எங்களுடைய சாபம் நீ போக்குதல் அனுபவித்து விடுதல் செய்யும் அத்தனை
விஸ்லேஷ வியசனம் அனுபவித்தே விட வேண்டுகையாலே சாபம் என்கிறது –

1-ப்ரஹ்ம சாபம் மார்பிலே வேர்ப்பாலே போக்கலாம் –
2-துர்வாசாவினுடைய சாபம் மார்பில் இருக்கிறவர்களுடைய கடாக்ஷத்தாலே போக்கலாம்
3-கௌதம சாபம் காலில் பொடியால் போக்கலாம் –
4-தக்ஷ சாபம் ஒரு தடாகத்தில் முழுக்கிட்டு போக்கலாம்

எங்கள் சாபம் போக்குகைக்கு இத்தனையும் வேணும் –
1-வேர்த்து நின்று விளையாடக் காண வேணும்(நாச்சியார் )
2-எங்கள் மேல் நோக்க வேணும்
3-பொடி தான் கொணர்ந்து பூச வேணும் (நாச்சியார் 13)
4-இப்போதே எம்மை நீராட்ட வேணும்

(நான்குக்கும் அழகாக பிரமாணங்கள் காட்டி அருளும் அழகு )

சாபம் இழிந்து நோக்குதியேல் –
வந்து தலைப் பெய்தோம்
எம் மேல் விழியாவோ –

———————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை —-ஏற்ற கலங்கள் –ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் வியாக்யானம் – ஆறாயிரப்படி —

January 10, 2017

புருஷகார பூதையான நப்பின்னை பிராட்டியை எழுப்ப –

அவள் உணர்ந்து எழுந்திருந்து நான் உங்களில் ஒருத்தி அன்றோ
உங்கள் கார்யங்கள் எல்லாம் மகிழதாகச் செய்து தருகிறோம் –
நம்மைப் பற்றினார்க்கு ஒரு குறைகள் உண்டோ
நாம் எல்லாரும் கூடி கிருஷ்ணனை எழுப்பி அர்த்திக்க வாருங்கோள் என்ன –

அவன் குணங்களில் தோற்றார் தோற்ற படியே சொல்லி
யுகாவாதார் அம்புக்குத் தோற்று வந்து விழுமா போலே
அஹமஸ்ய அவரோ ப்ராதா குணைர் தாஸ்யம் உபாகத -என்ற இளைய பெருமாளை போலே
குணங்களுக்குத் தோற்று வந்தோம் என்று சொல்லி
கிருஷ்ணனை எழுப்புகிறார்கள்

யுகாவாதார் உன் வீரத்துக்குத் தோற்றால் போலே
உகந்த நாங்கள் உன் நீர்மைக்குத் தோற்றபடி-

ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீதளிப்ப
மாற்றாதே பால் சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில் எழாய்
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசல் கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றியாம் யாம் வந்தோம் புகழ்ந்தேலோ ரெம்பாவாய்-

பதவுரை

ஏற்ற கலங்கள்-(கரந்த பாலை) ஏற்றுக் கொண்ட கலங்களானவை
எதிர் பொங்கி-எதிரே பொங்கி
மீது அளிப்ப-மேலே வழியும்படியாக
மாற்றாத-இடை விடாமல்
பால் சொரியும்–பாலைச் சுரக்கின்ற
வள்ளல்-(பெண்களும் பேதைகளும் அணைத்துக் கொள்ளும்படி) நற்சீலத்தை யுடைய
பெரு பசுக்கள்-பெரிய பசுக்களை
ஆற்ற படைத்தான் மகனே–விசேஷமாகப் படைத்துள்ள நந்த கோபர்க்குப் பிள்ளை யானவனே!
அறிவுறாய்-திருப் பள்ளி யுணர வேணும்’
ஊற்றம் உடையாய்-(அடியாரைக் காப்பதில் ஸ்ரத்தை யுடையவனே!-திருட பிராமண சித்தன்
பெரியாய்–பெருமை பொருந்தியவனே!-வேதங்களாலும் சொல்லி முடிக்க ஒண்ணாத பெருமை
உலகினில்-(இவ்) வுலகத்திலே
தோற்றம் ஆய் நின்ற-ஆவிர்பவித்த-சகல மனுஜ நயன விஷயாங்கதனே
சுடரே-தேஜோ ரூபியானவனே!
ஸுலப்யமும் பரத்வமும்
துயில் எழாய்-’
மாற்றார்–சத்ருக்கள்
உனக்கு வலி தொலைந்து–உன் விஷயத்தில் (தங்களுடைய) வலி மாண்டு (உபயோகமற்ற வலிவை யுடையராய்.)
உன் வாசல் கண்-உன் மாளிகை வாசலில்
ஆற்றாது வந்து-கதி யற்று வந்து
உன் அடி பணியும் ஆ போலே–உன் திருவடிகளில் சரணாகதி பண்ணிக் கிடப்பது போல்
யாம்–நாங்கள்
புகழ்ந்து–மற்ற ஆழ்வார்களைப் போல் (உன்னைத்) துதித்து
போற்றி-பெரியாழ்வாரைப் போல் (உனக்கு) மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
வந்தோம்-(உன் திரு மாளிகை வாசலில்) வந்து சேர்ந்தோம்’
ஏல் ஓர் எம் பாவாய்-.

ஏற்ற கலங்கள்
உன்னை ஆராய் நினைத்து உறங்குகிறாய் –
உன்னை உணராய் –
ஷீராப்தி சாயி யாகவாதல் –
சக்கரவர்த்தி பிள்ளையாக வாதல் நினையா நின்றாய்

ஸ்ரீ நந்தகோபர் மகனாய் நினைக்கிறாய் இல்லையே உன்னை –
ஸ்ரீ நந்தகோபர் ஆர்ஜித்த ஐஸ்வர்யத்தை சொல்லுகிறார்கள்
ஸ்ரீ நந்த கோபருடைய ஸுர்ய வீர்யங்களும் (நாயகன் )
தார்மிகத்வமும் -(அம்பரமே )
புஜ பலமும் (ஓடாத தோள் வலியன் )
இறே கீழ்ச் சொல்லிற்று –

ஏற்ற கலங்கள்
இட்ட இட்ட கலங்கள் எல்லாம் எதிரே நிரம்பி வழியும் படி அனுசந்ததமாக
பால் சொரியக் கடவனாய் இருக்கும் பசுக்கள்

ஏற்ற கலங்கள்
கலமிடுவார் தாழ்வே –
இட்ட கலம் நிறையாதது இல்லை –
நாலாயிரம் இரண்டு ஆயிரம் என்ற ஒரு ஸங்க்யை இல்லை

ஏற்ற கலங்கள்
கலத்தில் சிறுமை பெருமை இல்லை –
கடலை மடுக்கிலும் நிறைக்கும் அத்தனை –
ஏலாத கலங்கள் நிறையாது ஒழி கிறது பாலின் குற்றம் அன்று இறே
கொடுப்பார்க்கு ஒரு கொள்வார் தேட்டமாய் இறே இருப்பது –

(கடாயில் பாயாசம் குருவாயூரில் யானைக்காலால் தேய்க்க வேண்டும் படி பெரியதாக இருக்கும் –
அவ்வளவு பெரிதாய் இருந்தாலும் சொரிந்து வழியுமே )

இவையும் கிருஷ்ணன் படியாய்த்து இருப்பது –
அர்த்தியார் குற்றமேயாய் அவன் பக்கல் குறை இல்லையாய் இருக்குமா போலே
உதார -என்று அர்த்தித்த பாத்திரங்களை கொண்டாடி இறே இவன் உபகரிப்பது-

அர்த்தித்தவம் தான் உபாயம் ஆகாதோ என்னில்
இவனுடைய தாதர்த்யம் ஸ்வரூபத்தில் புகுமா போலே
இதுவும் (அர்த்தித்தவமும் ) ஸ்வரூபத்தில் புகும் அத்தனை –உபாயத்தில் புகாது
(லுப்த சதுர்த்தி அர்த்தம் -அநந்யார்ஹ சேஷ பூதன் –
அவன் பிரயோஜனத்துக்காகவே இருப்பது
இது ஸ்வரூபத்தில் சேரும் -அதே போல் இங்கும் )

அங்கனே யாகில்
அர்த்தித்தவம் தான் வேணுமோ என்னில்
முக்தன் ஆனாலும் ( அர்த்தித்தவம் )இல்லை யாகில் போகம் தான் ப்ராப்யம் ஆக மாட்டாது

(அங்கும் அர்த்தித்தவம் உண்டே -அங்கே உபாய பாவம் வேண்டாமே –
ஸ்வரூபம் தானே -அதே போல் இங்கும்
கைங்கர்யத்துக்கு-பிரார்த்தனை – அங்கு தொடரும் )

சம்சாரத்தில் போகம் சாவதி யாகையாலே அர்த்தித்தவமும் அவ்வளவில் பர்யவசிக்கும் –
அங்கு நித்யமாகையாலே அது உருவச் செல்லும்

நித்ய அநபாய யானவளும் இறையும் அகலகில்லேன் என்று இறே
அங்கு இருப்பது
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான் –

மருந்தே நங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கருந்தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தருந்தேவனை சோரேல் கண்டாய் மனமே–திருவாய்மொழி -9-3-4-

சதா பஸ்யந்தி இறே அவ்விடம்-
(பத்தாஞ்சலி புடா ஹ்ருஷ்டா) நம இத்யேவ வாதின -என்றது இறே –
அவதரித்த இடத்திலும் இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற -என்னக் கடவது இறே

தத் விஷ்ணோ பரமம் பதம் -இதி விஷ்ணோ -பரஸ்ய ப்ரஹ்மண-பரமம் பதம் -சதா பஸ்யந்தி ..

பரதனும் தம்பி சத்ருக்கனனும் இலக்குமனோடு மைதிலியும்
இரவு நன் பகலும் துதி செய்ய நின்ற இராவணாந்தகனை யெம்மானை
குரவமே கமழும் குளிர் பொழிலூடு குயிலொடு மயில்கள் நின்றால
இரவியின் கதிர்கள் நுழைதல் செய்தறியாத் திருவல்லிக்கேணிக் கண்டேனே—2-3-7–

எதிர் பொங்கி மீதளிப்ப
முலைக் கண்ணின் பெருமையால் ஒருக்கால் தொட்டு விட்டாலும் ஒரு பீறிலே கலத்தை நிறைத்து
வழிந்து போகா நின்றாலும் முலைக் கடுப்பாலே மேலே மேலே சொரியும் –

மாற்றாதே பால் சொரியும்-
இட்ட கலம் நிரம்பிற்று –
கலம் இடுவார் இல்லை என்னாக் கண் அடையாது –
ஊற்று மாறாதே பால் சொரியும் அத்தனை

பூய ஏவ மஹா பாஹோ -என்றும்
ப்ரஹ்ருஷ்டோ வாக்யமப்ரவீத் இதஞ்ச ச ச்ருணு மைத்ரேய -என்று
சொல்லக் கடவது இறே

பூய ஏவ மஹா பாஹோ ஸ்ருணு மே பரமம் வச–
யத் தேஹம் ப்ரீயமாணாய வக்ஷ்யாமி ஹித காம்யயா —- ৷৷10.1৷৷

ஸ்ரீ மைத்ரேய பகவான் கேளாது இருக்கச் செய்தே நல்ல வர்த்தம் இவன் இழக்க ஒண்ணாது என்று
நித்யைவேஷா ஜெகன் மாதா -என்று ரிஷி தான் சொன்னான் இறே

வள்ளல் பெரும் பசுக்கள்
சிலருக்கு உபகரித்ததாய் இருக்கை அன்றிக்கே
தன் கார்யம் செய்ததாக உபகரிக்கும் படி உதார ஸ்வபாவமாய் இருக்கை –

வேண்டிற்று எல்லாம் தரும் கோதில் என் வள்ளல் (3-9)-என்கிற
கிருஷ்ணனைப் போலே –
இத்தை நினைத்து இறே –
உதாரா சந்தர்ச்யன் -என்று ஆளவந்தார் –

கொள்ளும் பயன்இல்லை, குப்பை கிளர்த்தன்ன செல்வத்தை
வள்ளல் புகழ்ந்து,நும் வாய்மை இழக்கும் புலவீர்காள்!
கொள்ளக் குறைவிலன் வேண்டிற்றுஎல் லாம்தரும் கோதுஇல்என்
வள்ளல் மணிவண்ணன் தன்னைக் கவிசொல்ல வம்மினோ.–திருவாய்மொழி -3-9-5-

தத்வேந யஶ்சிதசிதீஶ்வர தத் ஸ்வபாவ
போகாபவர்க்க ததுபாய கதீருதார: |
ஸந்தர்ஶயந் நிரமிமீத புராணரத்நம்
தஸ்மை நமோ முநிவராய பராஶராய ||-ஸ்ரீ ஸ்தோத்ர ரத்னம் –4 –

சிலர் அர்த்தியாய இருக்கச் செய்யாதே
வீடுமின் முற்றவும் என்று அருளிச் செய்தது

அத்தை நினைத்து இறே ஸ்ரீ மதுர கவிகள் –
அருள் கண்டீர் இவ்வுலகினில் மிக்கதே -என்றது

(இன்ப மாரியான )வண் சடகோபரான இவரைப் போலவே
அருள் மாரியாகையாலே திரு மங்கை ஆழ்வாரும்
முந்துற யுரைக்கேன் (9-8)-
சொல்லுகேன் வம்மின் –
நமரும் உரைமின் -என்று அருளிச் செய்தார்

வள்ளல்
கிருஷ்ணனைப் போலவே பெண்ணுக்கும் பேதைக்கும் அணையலாம் படி
தன்னைத் தாழ விட்டுக் கொடுத்துக் கொண்டு நிற்கும் பவ்யதையை சொல்லுகிறது

பெரும் பசுக்கள்
கிருஷ்ண ஸ்பர்சத்தாலே வளருமவை ஆகையால்
அவன் தன்னோடு ஓக்கப் பெருத்து இருக்கை –

பெரும் கண்ணன் -(திருவாய்மொழி -9-5-9)
மஹாத்மன –
பேரோதும் பெரியோர்-(பெரிய திருமொழி -7-4-4 )

வள்ளல் பெரும் பசுக்கள்
சிறு மா மனிசர் என்னுமா போலே

ஆற்றப் படைத்தான்
மிகவும் படைத்தான் –

குணா நாம ஆகரோ மஹான் –
குணா நாம யயுதைகமம்சம் –
யதா ரத்நா நிஜலதேர் அசங்கயே யானி புத்ரக-
ஈறில வண் புகழ் –
ஸமஸ்த கல்யாண குணாம் அம்ருதோததி-
அகில ஹேய ப்ரத்ய நீக-
அபரிமித குண கண ஓக மஹார்ணவ –
வர்ஷா யுதைர்யஸ்ய குணா ந சக்யா -என்று கிருஷ்ண குணங்களுக்கு எல்லை காணுதல் –

கண்ண பிரான் கற்ற கல்வி என்று
கிருஷ்ணன் தீம்புக்கு எல்லை யுண்டாதல்

அமர்யாத ஷூத்ரா-என்று
சம்சாரிகள் அனாத்மா குணங்களுக்கு ஸங்க்யை யுண்டாதல்

திரு நறையூரில் திரு வீதிகளில் முத்துக்களை எண் உண்டாதல் செய்யில் யாய்த்து
திருவாய்ப்பாடியில் பசுக்களுக்கு எண் உண்டாவது
கழி ஆருங்கன சங்கம்(பெரிய திருமொழி 6-9-2 )-கர்ப்பிணிகளை போலே

கழியாரும் கனசங்கம் கலந்தெங்கும் நிறைந்தேறி
வழியார முத்தீன்று வளம் கொடுக்கும் திரு நறையூர்
பழியாரும் விறல் அரக்கன் பரு முடிகள் அவை சிதற
அழலாரும் சரம் துரந்தான் அடி இணையே அடை நெஞ்சே–6-9-2-

கலந்து எங்கும் நிறைந்து ஏறி –
பெரிய திரு நாளிலே சர்வோதிகமாக வந்து ஏறுமா போலே

வழி யார முத்தீன்று –
சிலர் தார்மிகர் மனுஷ்யருக்கு சஞ்சரிக்கைக்கு உறுப்பாக
குறும் தெருவும் நெடும் தெருவும் கண்டு வைப்பார்கள் ஆனால்
இவை வழி போக ஒண்ணாத படி முத்தாலே நிரப்பி வைக்கும்

ஆற்றப் படைத்தான் மகனே அறிவுறாய்
ஸ்ரீ நந்தகோபர்க்கு சம்பத்து ஸ்வயம் ஆர்ஜிதம் ஆகையால் தான் தோன்றியாய் இருக்கும் –
இவர் பிறந்து படைத்தது ஆகையால் அடியுடைய ஐஸ்வர்யம் –

பதிம் விசுவஸ்ய -என்கிற ஐஸ்வர்யத்தில் காட்டிலும்
ஸ்ரீ நந்தகோபர் ஐஸ்வர்யத்துக்கு இட்டுப் பிறந்தவனே

பரம பதம் போலேயும்
நாராயணத்வம் போலேயும் ஸ்வதஸ் சித்தம் அன்று இறே
கோப குலமும் கோபாலத்வமும்-
நந்தன் பெற்ற ஆனாயனுக்கு அல்லது சித்தியாதே
(அந்த இரண்டுக்கும் இந்த இரண்டு
அவை இருந்த சொத்து இவை பிறந்து பெற்ற சொத்து )

மகனே அறிவுறாய்
உன் ஐஸ்வர்யம் இருந்த படியால் எங்களை நினைக்கைக்கு விரகு இல்லை –
ஐஸ்வர்ய செருக்கால் ஆர்த்தவ த்வனி செவிப்பட்டது இல்லை யாகிலும்
உன் பிறவியை புத்தி பண்ணி எங்களுக்காக உணராய்

உனக்கும் எங்களுக்கும் உண்டான சம்பந்தத்தால் பெறில் பெறும் அத்தனை என்று
உன் தன்னைப் பிறவி பெறும் தனை -என்று அருளிச் செய்தாள் இறே

மகனே அறிவுறாய்
பரம பதத்தில் வந்தோமோ –
வசிஷ்டாதிகள் நியமிக்கும் வாசலிலே வந்தோமோ

அறிவுறாய்
இவனுக்கு உணர்த்தி யுண்டானாலும் பலத்தில் விளம்பம் இல்லை –
வ்யபிசாரமும் இல்லை என்று இருக்கிறார்கள்

அறியாத போது இறே இத்தலைக்கு இழவும் வியசனமும் –

அறிவித்தால் கார்யம் செய்யாத போது இழவும் அவத்யமும் அவனதாம் அத்தனை இறே

அறிவுடையார் கார்யம் ஒரு பரம சேதனன் கையது இறே

(சேதனனுக்கு அறிவின் பயன் தான் பாத்திரம் என்று இசைந்து அறிவித்தலே
பரம சேதனனுக்கு அறிவின் பயன் அறிவித்த சேதனனை ரஷித்தல் )

அறிவுறாய்
சர்வஞ்ஞனையும் உணர்த்த வேண்டும் படி இறே உள்ளுச் செல்லுகிறபடி –

கைப்பட்ட பெண்களை சரக்கிலே வாங்கி
கைப்படாதவர்களைக் கைப் படுத்துகைக்காக உண்டான
உபாய அந்நிய பரதையாலே எழுப்புகிறார்கள்

(உபாய அந்நிய பரதை-கண்ணன் தானே உபாயம் –
அவனது வேறு சிந்தனை இன்னும் கைப்படாதவர்களை கைக்கொள்ளுவதிலே நோக்கம் )

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள் –
ஊருக்காக இல்லையோ -நாம் பிறந்து படைத்தோமாகச் சொன்னார்கள் –
இது ஒரு ஏற்றமோ என்று பேசாதே கிடந்தான் –
இனி அவ்வருகு இல்லை என்னும் படியான உத்கர்ஷங்களை சொல்லி எழுப்புகிறார்கள்

ஊற்றமுடையாய்
பிராமண தார்டயத்தால் வந்த
ப்ரேமயத்தினுடைய ஸ்தைரியத்தைச் சொல்லுகிறது –

புருஷ புத்தி ப்ரபாவங்களால் ஆனவற்றால் அன்றிக்கே –
அபவ்ருஷேயமாய்
நித்ய நிர்தோஷமான வேதத்தால் ப்ரதிபாதிக்கப் படுக்கையாலே
திருட பிராமண சித்தனாய் இருக்கை –

அப்ரமாணம் என்னுதல்
அனுமான பிரமாணம் என்னுதல் செய்ய ஒண்ணாது –

வசன ஆபாசங்களாலும்
உக்த் ஆபாசங்களாலும் அழிக்க ஒண்ணாது இருக்கை –

சர்வே வேதா யத் பதமாமநந்தி சர்வே வேதா யத்ரைகம் பவந்தி –
நதாஸ்ம வசசாம் பிரதிஷ்டா –
வசசாம் வாஸ்யம் உத்தமம் -(ஜிதந்தே )
நாராயண பரோ வேத –
உளன் சுடர் மிகு ஸ்ருதியுள்-
வேத முதல்வன் (3-5 )
நான் மறைகள் தேடி ஓடும் செல்வன் –
நம்முடை நாயகனே என்று யசோதை பிராட்டி சீராட்டுகிற கிருஷ்ணன் இறே

பெரியாய்
அந்த பிரமாணங்கள் எல்லாம் சொன்னாலும்
தன்னுடைய அவதி காண ஒண்ணாத படி
அவ்வருகு பட்டு இருக்கிறவன்

யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ –
யஸ்ய அமதம் தஸ்ய மதம் –
அவ்விஞ்ஞாதம் விஜாநதாம் என்றும்
பிரமாணங்களுக்கு-இவ்வளவு என்ன ஒண்ணாத படி இருக்கை –

உலகினில் தோற்றமாய் நின்ற
மேன்மைக்கு எல்லை காண ஒண்ணாத படி இருக்கும் என்று
ஓலைப் புறத்திலே கேட்டுப் போகை அன்றிக்கே
எத்தனையேனும் தண்ணிய சம்சாரிகளுக்கும்
உபேஷா விஷயமான லோகத்தில் அஜஹத் ஸ்வபாவனாய்க் கொண்டு
சாது பரித்ராணத்துக்காக-சம்பவாமி -என்று சொன்னபடியே அவதரித்து
எல்லாரும் காணலாம் படி சகல மனுஜ நயன விஷய தாங்கதன் ஆனவனே –

தோற்றமாய் –
ஆவிர்ப்பூதம் என்கிறபடியே

சுடரே
அல்லாதார் கர்ம அனுகுணமாக பிறக்கையாலே பிறக்கப் பிறக்க மழுங்குவர்கள் சம்சாரிகள் –
அவனுக்கு அனுக்ரஹ கார்யம் ஆகையால் பிறக்க பிறக்க ஒளி மிகா நிற்கும்

ஜென்ம சம்பந்தத்தால் கறை ஏறுகை அன்றிக்கே
சாணையில் இட்ட மாணிக்கம் போலே அத்யுஜ்ஜ்வலமாகை
ச உஸ் ஸ்ரேயான் பவதி ஜாயமான –
மானுஷீம் தனும் ஆஸ்ரிதம் -பரம்பாவ மஜா நந்த -என்னும்படியான மனுஷ்யத்வே பரத்வம் சொல்கிறது
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே-என்னக் கடவது இறே

மேவு துன்ப வினைகளை விடுத்துமிலேன்
ஓவுதல் இன்றி உன் கழல் வணங்கிற்றிலேன்
பாவு தொல் சீர்க் கண்ணா என் பரஞ்சுடரே
கூவுகின்றேன் காண்பான் எங்கு எய்தக் கூவுவனே? ( 3-2 )

(பரம் சுடரே அழுக்கு உடம்பாய் -6-3)

அன்றிக்கே –

ஊற்றமுடையாய்
மஹா ராஜர் -வத்யதாம்-என்றால் –
நத்யஜேயம் கதஞ்சன-என்றும் –
தாமரையாள் ஆகிலும் சித குரைத்தாலும் -என்னடியார் அது செய்யார் என்றும்
ஆஸ்ரித விஷயத்தில் பண்ணின ப்ரதிஞ்ஜையை –
அப்யஹம் ஜீவிதம் ஜஹ்யாம் -என்கிறபடியே
தன்னையும் தன் விபூதியையும் அழிய மாறியும் விடாதே நின்று தலைக் கட்டுகைக்கு ஈடான
ஆதாரத்தோடு நிற்கும் ஊற்றத்தைச் சொல்கிறது

பெரியாய்
ஆஸ்ரித விஷயத்தில் எல்லாம் செய்தாலும் ஒன்றும் செய்யப் பெற்றிலோம் என்று இருக்கையும்
அது தான் தன் பேறாய் இருக்கையும் –
செய்யுமன்று தன் பெருமைக்கு ஈடாக இருக்கையும்
விரோதித்த மஹா ராஜர் தாமும் கூட கிமத்ர சித்ரம் -என்று கொண்டாடும்படியான பெருமை
விலக்கும் அளவு அன்றிக்கே
ஒழிந்தால் பின்னை கொண்டாடும் அத்தனை இறே

(கிமத்ர சித்ரம் வியப்பு இல்லை தர்மஞ்ஞ லோக நாதர் –
இதுவே உமது ஸ்வ பாவம் என்று கொண்டாடினான் )

(கிமத்ரசித்ரம் தர்மஞ்ஞா லோக நாத ஸூகாவஹ
யத் த்வம் ஆர்யம் ப்ரபாஷேதா சத்த்வ வாந் சத்பதே ஸ்த்தித -18-36-

கிமத்ரசித்ரம்
எங்களைப் போலிகள் இப் பாசுரத்தைச் சொல்லில் அன்றோ ஆச்சர்யமாவது-
தேவரீர் இப்படி அருளிச் செய்த இடத்தில் ஆச்சர்யம் உண்டோ
ஸ்வ பாவம் என்று இருக்கும் அத்தனை அன்றோ

தர்மஞ்ஞா
பணையோடு பணை தத்தித் திரிந்த எங்களால்
தேவரீர் திரு உள்ளம் பற்றி இருக்கும் தர்மங்கள் எல்லாம் அறியப் போமோ
ஸூஷ்ம பரம துர்ஜ்ஜேய சதாம் தர்ம பிலவங்கம் -18-36-என்று
அருளிச் செய்த தேவரீருக்கு அன்றோ உண்மை தெரிவது

லோக நாத
உடைமை அழியாதபடி ரஷிக்கை உடையவனுக்கு ஏற்றம் அல்லாமையாலே-
சரணாகதனுக்கு அச்சம் தவிர்த்து ரஷித்தீர் –
எங்களை அபசாரம் தவிர்த்து ரஷித்தீர்

ஸூகாவஹ
ஸ்ரீ விபீஷண ஆழ்வான் தேவரீருக்கு அடிமை செய்யப் பெற –
நாங்களும் அவனுக்கு அடிமை செய்யப் பெற –
இரண்டு வர்க்கத்தையும் க்ருதார்த்தர் ஆக்கினீர்

சத்த்வ வாந்
இதற்கு முன் கண்டு அறியாத சரணாகதன் பக்கல் ஒரு தலையாக
பரிவர் சொன்ன உபபத்திகளுக்கும் நிர்பந்தங்களுக்கும்
இளையாத வ்யவசாயத்தில் திண்மை இருந்த படி என்

சத்பதே ஸ்த்தித –
ப்ருஹஸ்பதி சிபி ரகு வானர கபோத வசிஷ்ட விச்வாமித்திராதிகள் முதலான சத்துக்கள் நடந்த நல்வழியான
சரணாகத பரித்ராண தர்மத்தில் தேவரீர் நின்ற நிலை ஒரு கோடி சரணாகதராலும்
கலக்க ஒண்ணாதபடியாய் இருந்தது

யத் த்வம் ஆர்யம் ப்ரபாஷேதா
தேவரீர் அருளிச் செய்த பாசுரத்தில் நிழலிலே ஒதுங்கி
புலியும் புல்வாயும் ஒரு துறையிலே நீர் உண்ணும்படியாய் இருந்தது )

உலகினில் தோற்றமாய் நின்ற
கீழ்ச் சொன்ன ஆஸ்ரித பக்ஷபாதம் உலகிலே பிரசித்தமாம் படி நிற்கை –
துரியோதனன் சிசுபாலன் உதங்கன் இவர்கள்
உட்பட சொல்லும் படி லோகத்தில் பிரசித்தமாம் படி இருக்கை –

களவு கண்டாய் -கட்டுண்டாய் என்பது
வ்ருஷள போஜனம் பண்ணினாய் என்று இகழ்வது
துரியோத நாதிகளை பொடி படித்தினாய் –
அர்ஜூனாதிகளை வாழ்வித்தாய் என்னும் படி பிரசித்தம் இறே

சுடரே
ஆஸ்ரித பாரதந்தர்யத்தால் வந்த ஓவ்ஜ்ஜ்வல்யம்
இன்னார் தூதன் என நின்றான்

நின்ற சுடரே
ஐவருக்கு அருள் செய்து நின்று பார் மல்கு சேனை அவித்த பரஞ்சுடர் -என்னக் கடவது இறே

துயில் எழாய்
நீ இப்போது எழுந்திராமையாலே நீ பிறந்து படைத்த சம்பத்தும்
நீ ஆர்ஜித்த குணங்களும் மழுங்கக் கிடாய் புகுகிறது
நீ அவை சம்பாதிக்கப் பட்ட அருமை அறிவுதியே-
அவை நிறம் பெறும் படி திருப் பள்ளி யுணர்ந்து அருளாய்

ஆகிறது நாம் எழுந்து இருக்கிறோம் –
நீங்கள் வந்தபடி சொல்லுங்கோள் என்ன –

தாங்கள் வந்த செயல் அறுதி இருந்தபடிக்கு
த்ருஷ்டாந்த பூர்வகமாகச் சொல்லுகிறார்கள் –

மாற்றார் உனக்கு
உனக்கு சத்ருக்கள் ஆனவர்கள் உன் மிடுக்குத் தோற்று போக்கடி இல்லாமையால்
வந்து விழுமா போலே

மாற்றார் உனக்கு
சத்ருக்களை த்ருஷ்டாந்தமாகச் சொல்லுகிறது என் என்னில் –
சர்வஞ்ஞனாலும் நோக்க ஒண்ணாத படி அநாதி காலம் கை கழிந்த படி சொல்லுகிறது
நாஸ்திக புரா–
யானே என் தனதே என்று இருந்தேன் –

மாற்றார் உனக்கு
நாராயணன் ஆகையால் சம்பந்தம் எல்லோரோடும் ஒத்து இருக்க
சேஷமாய் இருக்கிற ஆத்மாக்களில் சில சத்ருக்கள் உண்டோ என்னில்

பிராதி கூல்ய பரம்பரைகள் பண்ணி இடக்கை புரி முருக்கி விரோதித்து போருமவர்களை –
தானஹம் த்விஷத-என்னுமது
என்னுடைய ஆஞ்ஞா பரிபாலனம் பண்ணாதார் எனக்கு த்ரோஹிகள் என்பது –
பாகவத த்வேஷம் பண்ணுவாரை த்விஷத்துக்கள் என்பது
அவர்களை நிந்தை பண்ணுவாரை பொறேன்-என்பது ஆகா நின்றான் இறே

எங்களை அறியாயோ
நாங்கள் வருபவர்களோ
ஹிரண்ய ராவணாதிகள் போல் அன்றோ வந்தோம் நாங்கள்

மாற்றார் வலி தொலைந்து
வலி தொலைகையாவது –
ந நமேயம் -என்கிற பிரதிஞ்ஜை தவிர்க்கை

உன் வாசல் கண்
மிடுக்கு அழிந்து எளிமைப் பட்டு –
கச்ச என்ற இடத்திலும் அங்குப் புகுராதே தன் கோட்டில் ஏறப் போனான் இறே ராவணன் –
அப்படி அன்றிக்கே

உன் வாசல் கண் ஆற்றாது வந்து –
ப்ரஹ்மாஸ்திரம் விட வேண்டும் படி பிராட்டி பக்கலிலே அபராதத்தைப் பண்ணி
த்ரீன் லோகான் சாம் பரிக்ரமய-என்னும் படி அலமந்து
சபித்ரா ச பரித்யக்த -என்னும் படி
ஓர் இடத்திலே புகல் அற்று –
தமேவம் சரணம் கத -என்று பெருமாள் திருவடிகளில்
விழுந்த காகம் போலே உன் வாசலிலே வந்து உன் காலில் கீழே விழுந்தோம் –

அம்புக்குத் தோற்றாரோ பாதி
நாங்களும்
குணங்களுக்குத் தோற்று வந்தோம் –

ஆற்றாது வந்து
அம்பு பிடரி தள்ளாத தள்ள வருவாரைப் போலே
ஸுந்தர்ய குண பலாக்ருதைகளாய் வந்தோம்

அம்பு நற் கொலையாகக் கொள்ளும் –
குணம் உயிர்க் கொலையாகக் கொல்லும்-
வல் வினையேனை ஈர்கின்ற குணங்கள்

யாம் வந்தோம்
சத்ருக்கள் துர் அபிமானத்தாலே
ந நமேயம் என்று இருக்குமா போலே
தத் தஸ்ய சத்ருசம் என்று இருக்கும் நாங்கள்
எங்கள் செல்லாமையாலே வந்தோம் அத்தனை –

ஸ்வரூப ஞானம் வர ஒட்டாது –
ஆற்றாமை இருந்த இடத்தில் இருக்க ஒட்டாது

போற்றி
தோற்றார் -போற்றி -என்னும் அத்தனை இறே –

போற்றுகை யாவது –
செவ்வடி செவ்வி திருக்காப்பு -என்று திருப் பல்லாண்டு பாடுகை-

அல்லாதார் பாடுவது தம் தாம் பிரயோஜனத்துக்காக இறே –
நாங்கள் உன் சம்ருத்தியை ஆசாசிக்கும் படி அன்றோ வந்தது –

புகழ்ந்து
சத்ரோ ப்ரக்யாத வீரஸ்ய-என்று
மாற்றாரும் தங்களைத் தோற்பித்த வீர்யத்தை சொல்லி புகழ்வார்கள்
இவர்களும் தங்களை நலிந்த நலிவை சொல்லிப் புகழும் அத்தனை இறே –

எங்களைத் தோற்பித்த குணங்களை சொல்லிப் புகழ்ந்து
அழித்தாய் யுன் திருவடியால் (6-2) -நின் தன்னால் நலிவே படுவோம் -என்று வருகை இறே யுள்ளது

போற்றி –புகழ்ந்து –வந்தோம்
பெரியாழ்வாரைப் போலேயும் வந்தோம் –
அல்லாதாரைப் போலேயும் வந்தோம் –

நாங்கள் செய்வது எல்லாம் செய்தோம்
நீ பெறிலும் பெறு
இழக்கிலும் இழ –

(அறிவித்தோம்
போற்றினோம்
புகழ்ந்தோம்
இதுவே சேதனனானதுக்கு பிரயோஜனம்

ப்ராப்தாவும்
பிராபகமும்
ப்ராப்திக்கு உகப்பானும் நீயே )

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.