Archive for November, 2013

ஸ்ரீ திருப்பாவை – கூடாரை வெல்லும் சீர் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி –

November 3, 2013

அவதாரிகை –

நோற்றால்
அவன் பக்கல் பெறக் கடவ பேறு
சொல்லுகிறார்கள் –

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா வுன்தன்னைப்
பாடிப் பறை கொண்டு யாம் பெரும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச்
சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே
பாடகமே என்றனைய பல் கலனும் யாம் அணிவோம்
ஆடை யுடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

கூடாரை–தன் அடி பணியாதவர்களை
வெல்லும் சீர்–வெல்லுகின்ற குணங்களை யுடைய
கோவிந்தா–கண்ண பிரானே!
ஊன் தன்னை–உன்னை
படி-(வாயாரப்)பாடி
பறை கொண்டு–(உன்னிடத்து யாம் வேண்டுகின்ற) பறையைப் பெற்று
யாம் பெறு சம்மானம்–(பின்னும்) நங்கள் பெறும் படியான ஸம்மாநமாவது
நாடு புகழும் பரிசினால்–நாட்டார் புகழும்படியாக
சூடகம்–(கையிலணியும் ஆபரணமான) சூடகங்களும்
தோள் வளை–தோள் வளைகளும்
தோடு–(காதுக்கிடும் ஆபரணமான) தோடும்
செவிப் பூ–கர்ணப் பூவும்
பாடகம்–பாதகடகமும்
என்றனையப் பல் கலனும்–என்று சொல்லப்படும் இவ்வாபரணங்கள் போன்ற மற்றும் பல ஆபரணங்களும்
(உன்னாலும் நப்பின்னைப் பிராட்டியினாலும் பூட்டப்பட்ட யாம் நன்றாக அணிவோம்–,
ஆடை–சேலைகளை
உடுப்போம்–(நீ உடுத்த) உடுத்துக் கொள்வோம்;
அதன் பின்னே–அதற்குப் பின்பு
பால் சோறு–பாற் சோறானது (க்ஷிராந்நம்)
மூட–மறையும் படியாக
நெய் பெய்து–நெய் பரிமாறி
முழங்கை வழி–முழங்கையால் வழியும் படியாக (உண்டு)
கூடி–(நீயும் நாங்களுமாகக்) கூடி யிருந்து
குளிர்ந்து–குளிர வேணும்:
ஏல் ஓர் எம் பாவாய்–

வியாக்யானம் —

கூடாரை வெல்லும் –
ஆந்தனையும் பார்த்தால் –
ந நமேயம் -என்பாரை வெல்லும் இத்தனை –
அவர்களை வெல்லுமா போலே கூடினார்க்கு தான் தோற்கும் இத்தனை –

சீர் –
எல்லாரையும் வெல்லுவது குணத்தாலே –
வில் பிடித்த பிடியைக் காட்டி விரோதிகளைத் தோற்பிக்கும் –
அனுகூலரை அழகாலும் சீலத்தாலும் -நீர்மையாலும் -தோற்பிக்கும் –
சர்வஞ்ஞரை -எத்திறம் -எண்ணப் பண்ணும் குணம் இறே-
அம்புவாய் -மருந்தூட்ட தீர்க்கலாம்
நீர் கொன்றாப் போலே இதுக்கு பரிகாரம் இல்லை –

கோவிந்தா –
கூடுவோம் அல்லோம் என்னும் அபிசந்தி இல்லாத
மாத்ரத்திலே ரஷித்த படி –

வுன் தன்னைப் பாடிப் –
ஹிரண்யாய நம -என்கை தவிர்ந்து
வகுத்த உன்னுடைய பேரை
ஸுயம் பிரயோஜனமாகச் சொல்லப் பெறுவதே -என்கை –
கோபீ ஜன வல்லபனான உன்னை பாடுகையே எங்களுக்கு பிரயோஜனம் போரும் -என்னவுமாம் –

பறை கொண்டு –
பிராப்யத்திலே
பிரபாக வ்யவஹாரம் –
ஊருக்கு -பறை -என்கிறது -தங்களுக்கு பிராப்யம்-

யாம் பெரும் சம்மானம் –
தோளில் மாலையை வாங்கி இடுகை -இவருக்கு பெறாப் பேறு -என்கை
பெருமாள் தோளில் மாலையை வாங்கி இட்டார் -என்று ஆழ்வான் பணிக்கும்
பட்டரும் பணிக்கும்
அநாதி காலம் எல்லாராலும் பட்ட பரிபவம் மறக்கும்படி கொண்டாடுகை –

நாடு புகழும் பரிசினால் –
ஒருவன் கொடுக்கும்படியே
சிலர் பெறும்படியே-
என்று நாட்டார் கொண்டாட வேணும் –

நன்றாகச் –
இந்த்ரன் வரக் காட்டின ஹாரத்தை
பெருமாளும் பிராட்டியும் கூட இருந்து
திருவடிக்கு பூட்டினாப் போலே பூண வேணும் –
சிலரை இட்டு ஒப்பிக்கை அன்றிக்கே
தானும் பிராட்டியும் கூட இருந்து ஒப்பித்த தன்னேற்றம் –
ஆபரணத்தைப் பூண்டு அவன் வரவு பார்த்து இராது ஒழிகை -என்றுமாம்

சூடகமே-
பிரதமத்தில் ஸ்பர்சிக்கும் கைக்கிடும் ஆபரணம்
பரம பிரணயி ஆகையாலே தன தலையிலே வைத்துக் கொள்ளும் கை –
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் -என்று
இவர்களுக்கு அவன் சொல்லுமா போலே சொல்லி
மார்பிலும் தலையிலும் வைத்துக் கொள்ளும் கை இடும் சூடகம் –

தோள் வளையே –
அந்த ஸ்பர்சத்தாலே
அணைக்க வேண்டும் தோளுக்கு இடும் ஆபரணம் –

தோடே –
பொற்றோடு பெய்து -என்று
பண்டே தோடு இட்டாலும்
அவன் இட்டாப் போலே இராது இறே –

செவிப் பூவே –
அணைத்த திருக் கையில் உறுத்தும் ஆபரணங்கள் போல் அன்றிக்கே
அணைத்த அநந்தரம் ஆக்ராணத்துக்கு விஷயமான இடம் –

பாடகமே –
அணைத்தால் தோற்றுப் பிடிக்கும் காலுக்கு இடும் ஆபரணம் –

என்றனைய பல்கலனும்-
பருப்பருத்தன சில சொன்னோம் இத்தனை –
நீ அறியும் அவை எல்லாம் என்கை –
பல பலவே யாபரணம் இறே –

யாம் அணிவோம் –
வ்யதிரேகத்திலே-மலரிட்டு நாம் முடியோம் -என்கிறவர்கள்
பூண்போம் -என்கிறார்கள்
அவனுக்கு இவர்கள் அனுமதி பண்ணுகையே அமையும் -என்கை-

ஆடை யுடுப்போம்-
பண்டு உடுத்தார்களோ -என்னில்
அவன் உடுத்து உடாதது உடை அன்று இறே என்று இருப்பது –
அவன் திருப் பரியட்டம் இவர்கள் அறையிலே யாம்படி கூறை
மாற வேணும் -என்றுமாம் –
நோன்பை முடிக்கையாலே நல்ல பரிவட்டம் உடுக்க -என்றுமாம் –
உடுத்துக் களைந்த -என்னுமவர்கள் இறே இவர்கள்
ஸ்வேத கந்த உக்தமாய் அவன் உடுத்து முசிந்த ஆடை -என்றுமாம் –

அதன் பின்னே பாற் சோறு மூட நெய் பெய்து –
அதுக்கு மேலே பாற்சோறு மூடும்படியாக நெய் பெய்து –
இத்தால்
பகவத் சம்பந்தமுள்ள திருவாய்ப்பாடியிலே
சம்ருத்தி எல்லாம் பிரியமாய் இருக்கும்படி –

முழங்கை வழி வாரக்
நம்பி திரு வழுதி வளநாடு தாசர் -நெய் படாதோ -என்ன
கிருஷ்ண சன்னதியாலே த்ருப்தைகளாய் இருந்தவர்களுக்கு
சோறு வாயில் தொங்கில் அன்றோ
நெய் வாயில் தொங்குவது -என்று பட்டர் அருளிச் செய்தார் –

வ்யதிரேகத்தில் நெய் உண்ணோம் பால் உண்ணோம் -என்று
சொன்னவர்கள் இன்று ஆசைப் படுகிறார்கள் –

கூடி இருந்து –
பிரிந்து பட்ட கிலேசம் தீரக்
கூடி தொட்டுக் கொண்டு இருக்கையே பிரயோஜனம் –
புஜிக்கை பிரயோஜனம் அன்று –

குளிர்ந்து –
பிரிந்து கமர் பிளந்த நெஞ்சுகள் குளிரும்படி –
நம்பெருமாள் திருநாள் -என்று ஒரு பேரை இட்டு
ஸ்ரீ வைஷ்ணவர்களைத் திரட்டிக் காணுமா போலே
ஒருவருக்கு ஒருவர் போக்கியம் இறே
ஸ்ருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது —

——————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – மாலே மணி வண்ணா -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

November 3, 2013

(வேதம் அனைத்துக்கும் வித்து
பரமம் ஸாம்யம் உபைதி -ஸஹ ப்ரஹ்மண-குண அனுபவமும் கைங்கரியமும் மோக்ஷம் -அந்தமில் பேரின்பம் –
துன்பம் தீருவதே மோஷம் பாஷாண கல்பமே முக்தி -ஜீவன் முக்தி -பக்ஷங்கள் நிரஸனம்
வித்வான் புண்ய பாப விதூய -நிரஞ்சன -குற்றங்கள் அற்று பரமம் சாம்யம்
அபஹத பாப்மத்வாதி -விஜூர ஸத்ய காம ஸத்ய சங்கல்ப அஷ்ட குண சாம்யம்
ப்ரஹ்மத்துடன் கூடி ப்ரஹ்மத்தின் குணங்களை அனுபவிக்கிறான்
ஸாயுஜ்யம் -சேர்ந்து அனுபவம் கடைசி நிலை
சாம்யா பத்தி அடைந்தாள் தான் இந்த அனுபவம் கிட்டும்
அடியார்கள் உடன் கூடி அனுபவமும் கைங்கர்யமும் -இறுதி நிலை
மாலே -சாம்யாபத்தி -அவன் இடம் உள்ளவை எல்லாம் -கேட்டு அஷ்ட குண ஸாம்யம்
கூடாரை -ஸாயுஜ்யம்)

(மா மாயன் மாதவன் வைகுந்தன் கீழே-ஸுலப்யம் -ஸ்ரீ யபதித்தவம் -பரத்வம் கலந்த பசும்கூட்டம் பார்த்தோம்)

(பரத்வம் ஸுலப்யம் ஸுந்தர்யம் -மூன்றும் சேர்ந்த பசும்கூட்டம் மாலே மணி வண்ணா ஆலின் இலையாய்)

(வந்த கார்யம் ஆராய்ந்து என்றும் இரங்கு என்றும் சொல்லி வந்து இப்பாசுரத்திலும் வந்த கார்யம் அருளிச் செய்ய வில்லை
சிற்றம் சிறு காலையில் வைத்து அருளுகிறாள்)

(ஸ்ரீ வில்லிபுத்தூரில் நீராட்ட உத்சவம் -வடபத்ரசாயி அனைத்தையும் அருளுவார் -பிரியாவிடை ஸேவை அட்புதம் -யாம் பெரும் ஸம்மானம் -ப்ரத்யக்ஷமாக ஸேவிக்கிறோம்
ஆழ்வார் திருவடி தொழ அனைத்தையும் தந்து தான் மாலை கூட இல்லாமல் ஸேவை ஸாதிப்பார்
பாசுரங்கள் படியே உத்சவங்களை நடத்தி ராமானுஜர் திவ்ய ஆஜ்ஜைப்படி நடக்கிறதே)

(இதுவரை பரத்வம் கொண்டாடி அருளிச் செய்தார்கள்
இவன் திரு முகத்தைக் கண்டவுடன் -அவன் வ்யமோஹம் கண்டு மாலே -என்கிறாள்
அவன் பாரிப்பு கடல் போல் என்றும் இவர்கள் பறிப்பு குளப்படி என்றும் உணர்ந்தார்கள்
சரணாகதி ரக்ஷணம் பெருமாள் இடமும் ஆஸ்ரித பாரதந்தர்யம்-வ்யாமோஹம் கண்ணன் இடம் அசாதாரணம் அன்றோ

வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை ஒழிய என்னில் முன்னம்
பாரித்துத் தான் என்னை முற்றப் பருகினான்
கார் ஒக்கும் காட் கரை அப்பன் கடியனே–9-6-10-

அஷ்டபதி -ஜெயதேவர் -ராதை பாதங்களைத் தலையில் கொண்ட கண்ணனைப் பாட
திருவேங்கடமுடையான் அனந்தாழ்வான் திருப்பாத தூளி தரித்து இன்றும் சேவை உண்டே)

(ஸ்ரீ பாஷ்ய ஸ்ரீ ஸூக்திகள்
யதா–நிகில ஹேய ப்ரத்ய நீக –கல்யாணை கதான–
ஜகஜ் ஜன்மாதிகாரணம் -சமஸ்த வஸ்து விலஷணம் — சர்வஜ்ஞ– சத்யசங்கல்ப –ஆஸ்ரித வாத்சல்யை கஜலதி–
நிரஸ்த சமாப்யதிக –சம்பாவன பரம காருணிக –பர ப்ரஹ்ம அபிதான –பரம புருஷ
நச பரமபுருஷ சத்யசங்கல்ப அத்யர்த்த ப்ரியம் ஜஞாநினம் லப்த்வா கதாசிதாவர்த்தயிஷ்யதி–சேதன லாபம் எம்பெருமானுக்கு பரமபுருஷார்தம் அன்றோ)

அவதாரிகை –

இப்பாட்டில்
பகவத் சம்ஸ்லேஷத்துக்கு வேண்டும்
உபகரணங்களை வேண்டிக் கொள்கிறார்கள் –

(நோன்பு நீராட்டம் என்றாலே பகவத் சம்ஸ்லேஷம் தானே)

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்

பதவுரை

மாலே–(அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணிவண்ணா–நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய்–(ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான்–மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார்–உத்தம புருஷர்கள்
செய்வனகள்–அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன–வேண்டியவற்றை
கேட்டி ஏல்–கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
ஞாலத்தை எல்லாம்-பூமி யடங்கலும்
நடுங்க–நடுங்கும்படி
முரல்வன–ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன-பால் போன்ற நிறமுடையதான
உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள்–சங்கங்களையும்
போய் பாடு உடையன–மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு-மிகவும் பெரியனவுமான
பறை–பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார்–திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு–மங்கள தீபங்களையும்
கொடி–த்வஜங்களையும்
விதானம்–மேற்கட்டிகளையும்
அருள்–ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

வியாக்யானம் –

மாலே மணி வண்ணா –
சர்வாதிகனாய்
சர்வ சுலபன் ஆனவனே -என்னுதல் –
ஆஸ்ரித வ்யாமோஹமே ஸ்வரூபமாய்
அதி மநோஹரமான விக்ரஹத்தை
உடையவனே -என்னுதல் –

இப்படி சம்போதித்தவாறே -நீங்கள் வந்த கார்யம் என் -என்ன –
மார்கழி நீராடுவான்-
மார்கழி மாசத்தில் நோன்புக்கு அங்கமாக குளிக்கை –

இந் நோன்பு தான்
காம்யார்த்திகளுக்கு சாதகமாயும்
நிஷ் காமருக்கு நித்தியமாயும்
பிரபன்ன அதிகாரிகளுக்கு பகவத் கைங்கர்யமாயும் -இருக்கும்

ஆகையாலே
பிரபன்ன அதிகாரிகளுக்கு சொல்லுகிற கர்ம த்யாகம்
சாஸ்த்ரோக்தமான ஆகாரத்தாலே அனுஷ்டியாது ஒழிகை ஒழிய
கேவலம் அனநுஷ்ட ரூப த்யாகமாகும் அன்று என்றது ஆய்த்து

(சாதன புத்தியைத் தான் பரித்யஜ்ய என்கிறது -பகவத் முக உல்லாசத்துக்காக கைங்கர்ய ரூபமாகப் பண்ண வேண்டும்)

அதில் பிரமாணம் என் என்ன –
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
பிரமாணங்களில் தலையான
சிஷ்டாசார்யம் -என்ன
அதுக்கு வேண்டுவது என் என்ன

கேட்டியேல்–பராக்கில்லாமல் கேட்டாயாகில் சொல்லுகிறோம் -என்ன
ஆகில் -இதுவும் உங்கள் பேச்சு அன்றோ -கேட்கிறேன் -சொல்லுங்கோள் என்ன
சொல்லுகிறார்கள் –

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன பாலன்ன வண்ணத்து-பாஞ்ச சன்னியமே போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே-
பூமிப் பரப்பில் உள்ள அஹங்கார சேதனரடைய நடுங்கும்படி த்வநிக்குமதாய் –
அதுக்குத் தக்க குடைகையை உடைத்தாய் -(சுரி சங்கு வலம்புரி சங்கு )
அதி போக்யமாய்
அதி பரிசுத்தமாய்
உன் திருக் கையில் ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கிற
பல சங்கங்கள் வேணும்

இத்தால் –
அனன்யார்ஹ சேஷத்வ ஜ்ஞானம் வேணும் -என்கிறது –
சங்க த்வனி ஓங்காரம் என்று ஜகத்திலே பிரசித்தமாய் இருக்கையாலே
ஓங்கார அர்த்தம் அனன்யார்ஹ சேஷத்வம் ஆகையாலே
லஷண்யா சேஷத்வ ஞானத்தை சொல்லுகிறது   –

போய்ப் பாடுடையனவே-சாலப் பெரும் பறையே –
மிகவும் த்வநிக்கிற மத்யத்திலே இருக்கிற பறை -என்கையாலே
பகவத் அனன்யார்ஹ சேஷத்வ விரோதியான
ஸ்வ ஸ்வா தந்த்ரியத்தையும்
சேஷத்வ சிஹ்னமான கைங்கர்யத்தில் ஸ்வ அதீன கர்த்ருத்வ
போக்த்ருத்வங்களையும்
நிவர்ப்பிக்குமதாய்
மத்யே இருக்கிற நமஸ் சப்த அர்த்தமான பாரதந்த்ர்ய ஞானமும்
உண்டாக வேணும் என்னும் இடம் சொல்லுகிறது –

(அந்நியரில் அந்நிய தமர் தானே என்று உணர வேண்டுமே
தானே தனக்கு ரக்ஷகன் என்பது காதுகன் கையிலே தனது குழந்தையைக் கொடுப்பது போல் ஆகும்)

(ஓம் விட நமஸ் உயர்ந்தது
சேஷத்வ போக்த்ருத்வங்கள் போல் அன்றே பாரதந்த்ய போக்யங்கள் -ஆகவே சாலப் பெரும் பாறை -பெரிய த்வனி இதுக்கு)

(மந்திர ப்ரஹ்மணி மத்யமேன நமஸா பும்ஸ ஸ்வரூபம் கதிர்
கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத
ஸ்வா தந்த்ர்யம் நிஜரக்ஷணம்  சமுசித வ்ர்த்திச்ச நாநியோசித
தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத—ஸ்ரீ பராசுர பட்டர் அருளிய அஷ்ட ஸ்லோகி -ஸ்லோகம் -2–

மந்திர ப்ரஹ்மணி மத்யமேன –
மிகச் சிறந்த மந்த்ரம் ஆகிய திரு அஷ்டாஷரத்தில் இடையில் யுள்ளதாய்

நமஸா –
நமஸ் ஆனது

பும்ஸ ஸ்வரூபம் –
ஜீவாத்மாவின் ஸ்வரூபமானது

கதிர்கம்யம் சிக்ஷிதமீ க்ஷிதேன புரத பச்சாதபி ஸ்தானத-
சிஷிதம் -நன்றாக சிஷிக்கப் பட்டது –

புரத ஈஷிதேன நமஸா –
முன்னே யுள்ள பிரணவத்தை நோக்கி அத்தோடு சேர்ந்த தான நமஸ்சினால்-

ஸ்தானத   ஈஷிதேன நமஸா-
ஸ்வ ஸ்தானத்திலேயே ஆவ்ருத்தி பெற்ற நமஸ்சினால் –

கதிர் சிஷிதா –
உபாயம் சிஷிக்கப் பட்டது –

பச்சாத் அபி ஈஷிதேன நமஸா –
பின்னே யுள்ள நாராயண பதத்தோடு சேர்ந்த நமஸ்சினால் –

கம்யம் சிஷிதம் –
உபேயம்-பலன் -சிஷிப்பப் படுகிறது –

இத்தால் தேறின பொருள்கள் என் என்னில்

ஸ்வா தந்த்ர்யம்
நிஜரக்ஷணம் -ஸ்வ ரஷணம்
சமுசித வ்ர்த்திச்ச -சேஷத்வத்துக்கு இணங்கின கைங்கர்ய வருத்தி –

நாநியோசித-
அன்யோசித   ந -மற்றையோர்க்கு யுரியவர் அல்ல –

தச்யைவேதி ஹரேர் விவிச்ய கதிதம் ச்வாச்யபி நார்ஹம் தத
தஸ்ய ஹரே ஏவ -அந்த எம்பெருமானுக்கே உரியவை
இதி -இவ்வண்ணமாக
விவிச்ய கதிதம் –
வகுத்துக் கூறப் பட்டதாயிற்று
தத -ஆதலால்
ஸ்வஸ்ய அபி அர்ஹம் ந –
கீழ்ச் சொன்ன மூன்றும் அந்யருள் அந்ய தமனான தனக்கும் சேர்ந்தவை அல்ல -எனபது தேறிற்று –
நமஸ் -பிரித்து -சகண்ட நமஸ் -ந -ம் -எனக்கு நான் உரியேன் அல்லேன்
பிரிக்காமல் அகண்ட நமஸ் -ஸ்வரூப உபாய புருஷார்த்த விரோதி
ஓம் நம -நம நம -நாராயண நம –)

பல்லாண்டிசைப்பாரே-
சத் சஹ வாசம் வேணும் –

கோல விளக்கே –
பகவத் அனன்யார்ஹ சேஷத்வத்தை அவனுக்கு
அத்யந்தம் மனோஹரம் ஆக்குகிற
பாகவத சேஷத்வ ஞானமும் வேணும் –

(ஒலியும் ஒளியும் வேண்டுமே -ஒளிக்கு ஏற்றம் உண்டே)

(அடியார்க்கு என்னை ஆட்படுத்த விமலன் -அல்லிக் கமலக் கண்ணனாய் இருப்பான் அன்றோ பாகவத சேஷத்வம் உணர்ந்தவன் இடம்)

கொடியே –
கீழ் சொன்ன சேஷத்வ லஷணமான
கைங்கர்யமும் வேணும் –

(ஆய -பிரார்த்தனாய சதுர்த்தி அர்த்தம்)

விதானமே-
அக் கைங்கர்யத்தில் போக்த்ருத்வ நிவ்ருத்தியும் வேணும்

(ப்ரபல தர விரோதி அன்றோ இது-சாலப் பெரும் பறை பாரதந்தர்ய ஞானம் வேணும் என்றது
ஸூவ போக்த்ருத்வ புத்தியும் வேண்டுமே )

இல்லாததை உண்டாக்கவோ -என்ன
ஆலினிலையாய் –
முன்பு இல்லாததை உண்டாக்கினவன் இல்லையோ –

அருள்
கிருபை உண்டாகில்
செய்யத் தட்டில்லை –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – மாலே மணி வண்ணா -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி –

November 3, 2013

அவதாரிகை –

உங்களுக்கு அபேஷிதம் என் -என்ன
நோன்புக்கு வேண்டும் உப கரணங்களையும் அபேஷிக்கிறார்கள் –

கிருஷ்ண சம்ஸ்லேஷ ரச உத்சாகரான இவர்கள்
இவற்றை அபேஷிக்கைக்கு அடி -என் என்னில்

அந்த சம்ஸ்லேஷத்துக்கு ஏகாந்தமான நோன்பை பிரஸ்தாவிக்கையாலும்
கிருஷ்ணன் முகத்தை வெளியிலே காண்கைக்கு ஹேதுவாகையாலும் –
அவனுடைய திரு நாமங்களை வாயாரச் சொல்லுகைக்கு ஹேதுவாகையாலும்
இடையர் பக்கல் உபகார ஸ்ம்ருதியாலும்
நோன்புக்கு அங்கங்களை வேண்டிக் கொள்கிறார்கள்-

மாலே மணி வண்ணா மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்து பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண்டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய் அருளேலோ ரெம்பாவாய்

பதவுரை

மாலே–(அடியார் பக்கலில்) வியாமோஹ முடையவனே!
மணிவண்ணா–நீல மணி போன்ற வடிவை உடையவனே!
ஆலின் இலையாய்–(ப்ரளய காலத்தில்) ஆலந்தளிரில் பள்ளி கொள்பவனே!
மார்கழி நீராடுவனான்–மார்கழி நீராட்டத்திற்காக
மேலையார்–உத்தம புருஷர்கள்
செய்வனகள்–அநுட்டிக்கும் முறைமைகளில்
வேண்டுவன–வேண்டியவற்றை
கேட்டி ஏல்–கேட்கிறாயாகில்; (அவற்றைச் சொல்லுகிறோம்)
ஞாலத்தை எல்லாம்-பூமியடங்கலும்
நடுங்க–நடுங்கும்படி
முரல்வன–ஒலி செய்யக் கடவனவும்
பால் அன்ன வண்ணத்து உன்பாஞ்ச சன்னியமே போல்வன-பால் போன்ற நிறமுடையதான
உன்னுடைய ஸ்ரீபாஞ்ச ஜந்யத்தை ஒத்திருப்பனவுமான
சங்கங்கள்–சங்கங்களையும்
போய் பாடு உடையன–மிகவும் இடமுடையனவும்
சாலப் பெரு-மிகவும் பெரியனவுமான
பறை–பறைகளையும்
பல்லாண்டு இசைப்பார்–திருப்பல்லாண்டு பாடுமவர்களையும்
கோலம் விளக்கு–மங்கள தீபங்களையும்
கொடி–த்வஜங்களையும்
விதானம்–மேற்கட்டிகளையும்
அருள்–ப்ரஸாதித்தருள வேணும்;
ஏல் ஓர் எம் பாவாய்-.

மாலே-

முன்பு -நாராயணனே நமக்கே பறை தருவான் -என்று
அபரிச்சேத்யமான மேன்மையையும் நினைத்து இருந்தார்கள் –
இப்போது இத்தலைக்கு -வாத்சல்யமே ஸ்வரூபம் என்று நிலை இட்டார்கள் –
சரணாகத வத்சல -என்று ஸ்ரீ ராமாயணத்துக்கு உள்ளீடான பிரதான குணத்தை பிராட்டி நிலை இட்டாள்
மகா பாரதத்துக்கு உள்ளீடான வ்யாமோஹ குணத்தை –
மாலே -என்கிற சம்போதனத்தாலே இவர்கள் நிலை இட்டார்கள் –
இவர்கள் பேச்சை கேட்ட பின்பு முந்தியிலும் பெரும் பித்தனானபடி —

மணி வண்ணா –
அபரிச்சேத்யனாய் இருக்கச் செய்தேயும்
முந்தானையிலே முடிந்து ஆளலாம் படி இருக்கை –
கீழ்ச் சொன்ன வ்யாமோஹம் வடிவிலே நிழல் இடுகை –
இந் நீர்மை இன்றிக்கே
காதுகனானாலும் விட ஒண்ணாத வடிவு அழகு –
பெண்கள் பிச்சுக்கு நிதானமான வடிவு -என்னவுமாம் –
மாலாய்ப் பிறந்த நம்பியை மாலே செய்யும் மணாளனை -என்னக் கடவது இறே-
நீங்கள் வந்தது என் -என்ன
வந்த கார்யத்தைச் சொல்லுகிறார்கள் –

மார்கழி நீராடுவான் –
மார்கழி நீராடுகைக்கு உப கரணங்கள் வேண்டி வந்தோம்-
ஆஸ்திக்யாதிரேகத்தாலே -அங்கி கைப்படத் இருக்கச் செய்தேயும் –
அங்கத்தை விடாது ஒழிகிறார்கள் –
மார்கழி நீராட்டமாவது என் -என்ன –
இது பிரசித்தம் அன்றோ -என்ன –

மேலையார் செய்வனகள் –
பிரசித்த தமம் காண் இது –
ஸ்ருதி ஸ்ம்ருதிகளிலும் சிஷ்டாசாரம் இறே பிரசித்த பிரமாணம் –
ஆகில் வேண்டுவது சொல்லுங்கோள் என்ன –

வேண்டுவன கேட்டியேல் –
கேட்புதியாகில் -என்கிறது
அந்ய பரதையாலே –
அந்ய பரதை என் -என்னில்
பஞ்ச லஷம் குடியில் பெண்களும் முன்னே நிற்கையாலே
இவர்கள் முலையிலும் இடையிலும் கண்ணிலும் முகத்திலும்
துவக்குண்டு ஆனைக்குப்பு ஆடுவாரைப் போலே இருக்கையாலே
தட்டி எழுப்புகிறார்கள் –

இத்தால் -ஸ்வாபதேசத்தில்
ஜ்ஞான பக்தி வைராக்யங்களைச் சொல்லுகிறது –
இவை இறே ஒரு அதிகாரிக்கு அழகு ஆகிறது –
காண்கைக்கு ஹேது வாகையாலே கண் -என்று ஜ்ஞானத்தைச் சொல்கிறது –
போக உபகரணம் ஆகையாலே முலை -என்று பக்தியைச் சொல்லுகிறது –
கார்ச்யத்தாலே இடை என்று வைராக்யத்தைச் சொல்லுகிறது –

கார்ச்யத்தாலே -வைராக்கியம் தோற்றுமோ -என்னில்
கர்ச்யத்தாலே விரக்தியைச் சொல்லிற்றாய்
அத்தால்
விஷயாந்தர ஸ்பர்ச ராஹித்யத்தை சொல்லுகிறது –

உங்கள் வடிவு கண்ணுக்கு போக்யமோபாதி
உங்கள் வார்த்தை செவிக்கு போக்கியம் அன்றோ
சொல்லுங்கோள் என்ன -சொல்லுகிறார்கள்

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன
ஜகத்தை எல்லாம் வாழும்படிக்கு
த்வநிக்கைக்கு இடமுடைத்தானவை –
பூங்கொள் திரு முகத்து மடுத்தூதிய சங்கொலி இறே தாரகம் –
அப்படியே நாடெல்லாம் இந்த-த்வனி கேட்டு வாழ வேணும் –
இவர்கள் தாங்களும் -வலம்புரி போல் நின்று அதிர வேணும் -என்று இறே சொல்லிற்று –

பாலன்ன –
பாலைத் திரட்டினாப் போலே இருக்கை —இப்படி இருப்பன பல சங்கு வேணும் –

போய்ப்பாடு –
பேரிடமாய் இருக்கை –
இடம் உண்டாகில் இறே த்வனி முழங்கி இருப்பது –
புகழ் என்றுமாம் –
ருக்மிணி பிராட்டி போல்வாருக்கு உதவினான் என்கிற புகழ் –

பின்னையோ வென்ன –
சாலப் பெரும் பறையே –
ஒரு மன்றில் த்வநிக்கை அன்றிக்கே
எங்கும் ஒக்க த்வநிப்பது ஒரு பறை வேணும் –

பின்னையோ வென்ன
பல்லாண்டு இசைப்பாரே –
திருப் பல்லாண்டு பாடிக் கொண்டு போருவார் வேணும் –

பின்னையோ வென்ன –
கோல விளக்கே
அழகிய விளக்கு -அதாவது மங்கள தீபம் –

கொடி
திருக் கொடியாட வேண்டும் –

விதானம் –
மேல் கட்டி வேணும் –
என்று இவற்றை அபேஷிகக –

சங்கும் பல கிடையாது–
ஸ்ரீ பாஞ்ச ஜன்யத்தை கொள்ளுங்கோள்-என்றான்
தன்னைப் போலே இருப்பார் சில உண்டாகில் இறே
புறம்பு–ஸ்ரீ பாஞ்ச ஜன்யம் போலே இருக்கும் சங்கு உண்டாவது –

பறைக்கு பாரோர்கள் எல்லாம் மகிழ–
பறை கறங்க கூத்தாடின போது
திரு வரையில் கட்டின பறையையும்
திருப் பல்லாண்டு பாடுகைக்கு -பெரியாழ்வாரையும்
விளக்குக்கு -நப்பின்னைப் பிராட்டியையும் –
கொடிக்கு -பெரிய திருவடியையும்
மேல் கட்டிக்கு -அத்த வாளத்தையும்-கொள்ளுங்கோள் என்றான் –

விதானத்துக்கு திருவவதரித்த அன்று
பணத்தை இட்டுக் கவித்துக் கொண்டு போந்த-திரு வநந்த வாழ்வானைக் கொடாது ஒழிவான் என் என்னில்
எல்லாரையும் போகச் சொன்னாலும் தன்னை ஒழிய-ஓரடி இட மாட்டாதவன் ஆகையாலே –
அத்த வாளத்தைக் கொடுத்தான் –
பெருமான் அறையில் பீதக வண்ண வாடை கொண்டு இறே வாட்டம் தணிய சொல்லிற்று –

ஓர் ஓன்று போராது –
இப்படி இருப்பன பல வேண்டும் -என்ன

இல்லாததை தேடப் போமோ -என்ன
உனக்கு அரியது உண்டோ -என்ன–எனக்கு எளியதாய் இருந்ததோ -என்ன

ஆலினிலையாய் –
சிறியதொரு வடிவைக் கொண்டு–சர்வ லோகத்தையும் திரு வயிற்றிலே வைத்து–
பவனாய் இருந்ததொரு ஆலம் தளிரிலே
கண் வளர்ந்த உனக்கு முடியாதது உண்டோ —
லோகத்தில் இல்லாததும் எங்களுக்காக உண்டாக்க வல்லை என்று கருத்து –

அருள்–
வேண்டாது ஒழியில்-செய்யலாவது இல்லை —
சக்தி இல்லாமை இல்லை
இத் தலையில் பேற்றுக்கு எல்லாம் ஹேது அவன் பிரசாதம் என்கை –

மாலே மணி வண்ணா -என்கிற இத்தால் –மாம் -சௌலப்யத்தை சொல்லிற்று
ஆலினிலையாய் -அஹம் -என்கிற இடத்தில்–சஹாயாந்தர நிரபேஷமான உபாய வேஷத்தை சொல்லிற்று
ஸ்ருதி அர்த்தம் இப்பாட்டில் சொல்கிறது-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -ஒருத்தி மகனாய் பிறந்து -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

November 3, 2013

(அவதார ரஹஸ்ய ஞானத்துடன் பக்தி செய்பவனுக்கு அதுவே இறுதி பிறவி
ஜென்மம் கர்மம் மே திவ்யம் -எனக்கும் பிறந்தவாறும் வளர்ந்தவாறும் திவ்யமாக இருக்குமே
யோ வேத்தி தத்வத -உண்மையாக -நம் பிறவி தழையை வெட்டவே -நாம் மீண்டும் பால் குடிக்காமல் இருக்கவே – அவதாரம் என்று அறிய வேண்டுமே
வருத்தமும் தீர்ந்து -அநிஷ்டங்கள் கழிந்து -மகிழ்வோம் -பகவத் ஜெனித ப்ரீதி கார்ய கைங்கர்யமும் பெறுவோம்
உன்னை அர்த்தித்து வந்தோம் -உன்னிடம் எதையும் கேட்க்காமல் -உன்னையே அர்த்தித்து வந்தோம் –
தருதியாகில் என்பதால் அர்த்தித்தது உபாயமாகாத் -உணவின் உள்ளே இருத்தினேன் அதுவும் அவனது இன்னருளே
பேற்றுக்கு நினைவு -உன் மனத்தினால் என் நினைந்து இருந்தாய்)

(யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள்
இரங்கு
உன்னை அர்த்தித்து வந்தோம்
போஷித்து பின்பு சிற்றம் சிறுகாலையில் அறிவிப்பார்கள்)

அவதாரிகை —

இப்பாட்டில் –
கீழ்ப் பாட்டில் -ஏற்றிப் பறை கொள்வான் -இன்று யாம் வந்தோம் -இரங்கு -என்று
இவர்கள் அபேஷிக்கையாலே
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன –

நெடுமாலே -நீ புருஷார்த்தத்தை கொடுத்தாயாகில் –
நாமும்
உன்னையும் உன் குணங்களையும்
ப்ரீதிக்கு போக்கு வீடாகப் பாடி
பட்ட வ்யசனம் எல்லாம் தீர்ந்து
மகிழக் கடவோம் –
என்கிறார்கள் –

(அத்புதம் பாலகம் -அவதரித்த திவ்ய மங்கள விக்ரஹத்தையும் உடனே ஒளித்தார்
சரித்திரமும் சொல்லி பின்பு மறக்கவும் பண்ணினார் அன்றோ –
ரூபம் குணம் பரத்வம் அனைத்தையும் ஒளித்தார் அன்றோ
ஸ்வரூபம் மறைக்க முடியாதே
வேண்டித் தேவர் இரக்க –காண்டல் இன்றி வளர்ந்து-ப்ரீதி -அன்பு -வெளிப்பாடாகப் பாட துக்கம் தீர அதனால் -மகிழ்ந்து -இரண்டு நிலைகள் )

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

ஒருத்தி–தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய்–பிள்ளையாய்
பிறந்து–அவதரித்து
ஓர் இரவில்–(அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),
ஒருத்தி–யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய
மகன் ஆய்–பிள்ளையாக
ஒளித்து வளர–ஏகாந்தமாக வளருங் காலத்தில்
தான்–தான் (கம்ஸன்)
தரிக்கிலான் ஆகி–(அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்
தீங்கு நினைந்த–(இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த
கஞ்சன்–கம்ஸனுடைய
கருத்தை–எண்ணத்தை
பிழைப்பித்து–வீணாக்கி
வயிற்றில்–(அக் கஞ்சனுடைய) வயிற்றில்;
நெருப்பு என்ன நின்ற–‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடு மாலே–ஸர்வாதிகனான எம்பெருமானே!
உன்னை–உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம்–(புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில்–எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்
திருத் தக்க செல்வமும்–பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும்
சேவகமும்–வீர்யத்தையும்
யாம் பாடி–நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து–(உன்னைப் பிரிந்து பாடுகிற துயரம் நீங்கி
மகிழ்ந்து–மகிழ்ந்திடுவோம்;
ஏல் ஓர் எம் பாவாய்–.

வியாக்யானம்

ஒருத்தி மகனாய் பிறந்து –
அஷ்டாஷரீ பிரதிபாத்யனாய்க்-
குண விக்ரஹ விபூதி விசிஷ்டனாய்
அவதரித்து –

(பெறப் பெறாத பேறாக தாய் தந்தை பெற்றதால் மகிழ்ந்து சிரிக்க அந்த ஒளியாலே கண்டார்கள்)

(ம து ரா -இங்கும் த்ரயம் -அகாரம் -நாராயணன் -நார சப்தத்தில் குணங்கள் விபூதி விக்ரஹம் அடங்குமே)

ஓர் இரவில் ஒருத்தி மகனாய் –
லௌகிகர் அறியாத அத்விதீய காலத்தில்
வாசுதேவ த்வாதச அஷரீ பிரதிபாத்யனாய் –

(ஸ்வரூப ரூப குண சேஹ்டிதங்கள் அனைத்தயும் வியக்தம் அஷ்டாக்ஷர மந்திரத்தில் மட்டும் தானே
ஸ்வரூபம் மட்டும் வியக்தம் துவாதச அக்ஷர மந்திரத்தில்)

பகவந் மந்த்ரங்கள் தான் அநேகங்கள் –ஸ்ரீ முமுஷுப்படி-சூரணை-8-
அவை தான-வ்யாபகங்கள் என்றும் அவ்யாபகங்கள் என்றும் இரண்டு வர்க்கம் –சூரணை -9
அவ்யாபகங்களில் மூன்றும் ஸ்ரேஷ்டங்கள் –சூரணை -10
இவை மூன்றிலும் வைத்து கொண்டு பெரிய திரு மந்த்ரம் பிரதானம்-சூரணை -11-

இந்த வியாபக மந்திர த்ரயமும் தன்னில் ஒக்குமோ என்ன –
அதாவது
அவ்யாபகங்களில் காட்டில் ஸ்ரேஷ்டமாய் இருந்துள்ள இவ் வியாபக மந்த்ரங்கள்
மூன்றிலும் வைத்து கொண்டு
நாராயணாய வித்மஹே என்று பிரதமோபாத்தம் ஆகையாலும் –
அர்த்த பூர்த்தி யாதிகளாலும் –
நாஸ்தி சாஷ்டாஸ்ராத்பர , ந மந்த்ரோஷ்டாஷராத் பர -என்னும்படியான பெருமை உடைய பெரிய திரு மந்த்ரம்
பிரதானமாய் இருக்கும் என்கை –
மற்றவை இரண்டுக்கும் அசிஷ்ட பரிக்ரஹமும் அபூர்த்தியும் உண்டு –சூரணை -12

மற்ற வியாபக த்வயத்துக்கும் தாழ்வு என்ன –
அதாவது
வாஸூதேவ விஷ்ணு சப்தங்களான மற்றை வியாபக மந்த்ரங்கள் இரண்டுக்கும்
நாராயண சப்தம் போலே
ஸ்வரூப ரூப குணாதிகளை எல்லாம் பிரதிபாதியாதே –
ஸ்வரூப மாத்ரத்தை பிரதி பாதிக்கையாலே –
நிர் விசேஷ சிந்மாத்ரா வஸ்து வாதிகளான குத்ருஷ்டிகள் மிகவும் ஆதரித்துப் போருகையாகிற
அசிஷ்ட பரிக்ரஹமும் –
வியாப்ய அத்ய ஆகாராதிச அபேஷதை ஆகிற அபூர்த்தியும் உண்டு என்கை –

(ஆதி சப்தம் விபூதிகளைச் சொல்லுகிறது
குத்ருஷ்டிகள் -சங்கராதிகள்-நிர்விசேஷ சின் மாத்ர வஸ்து வாதிகள் )

ஷட் அஷரி -வியாப்ய பதார்த்தங்களையும் -வியாபன பிரகாரத்தையும் -வியாப்தி பலத்தையும் -வியாபகனுடைய குணங்களையும்
சொல்லாதே -வியாப்தி மாத்திர பிரகாசம் ஆகையாலே -அபூர்ணம் –

வியாபன பிரகாரத்தைச் சொல்லா நிற்கச் செய்தேயும் -வியாப்ய பதார்த்தங்களுக்கு வாசக சப்தம் இல்லாமையாலும் –
சர்வம் வசதி-என்ற அர்த்த பலத்தாலே சர்வ சப்தம் புகுந்தாலும் –
அதில் குணம் அன்வயியாமையாலும் இனி குண சித்திக்காகா பகவந் சப்தத்தை கூட்டிக் கொள்ள வேண்டுகையாலும் –
வியாப்தி பலத்தை சொல்லாமையாலும் -திரு த்வாதச அஷரியும் அபூர்ணம்
ஷட் அஷரி ஓம் நமோ விஷ்ணவே என்பது
திரு துவாதச அஷரி -ரெங்கநாதனுக்கு ஆராதன மந்த்ரம் -ஸர்வத்ர வசதீதி வாஸூ தேவ)

இம் மந்த்ரம் அவை போலே அன்றி –
வியாப்ய பதார்த்தங்களோடு
வியாபன பிரகாரத்தோடு
வியாபன பலத்தோடு
வியாபனுடைய குணங்களோடு
வாசி அற சாப்தமாக காட்டுகையாலே -அவற்றில் காட்டில் இதுக்கு அர்த்த
பௌஷ்கல்ய நிபந்தனமான ஆதிக்யம் உண்டு –
பரந்த ரகசியம் -என்று மற்ற வியாபக மந்த்ரங்கள் இரண்டினுடைய அபூர்தியையும்
திருமந்த்ரத்தின் உடைய அர்த்த பூர்த்தியையும் ஸூ ஸ்பஷ்டமாக ஸ்ரீ ஆச்சான் பிள்ளை அருளிச் செய்தார் இறே)

ஒளித்து வளரத்-
குண விக்ரஹ விபூதி களாலே
சங்குசித்து
ஸ்வரூப மாத்ரேண வளரா நிற்க –

(அஹம் வோ பாந்தவ ஜாத என்று பரத்வத்தை மறைத்து அந்தோ வளர்ந்தான்)

தரிக்கிலானாகித்
ஸ்வரூப மாத்ரேண-ஈஸ்வர சத்தையையும் பொறாதவனாய் –

தான் தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற நெடுமாலே –
அநவரதம் மங்களா சாசனம் பண்ணக் கடவ விஷயத்திலே
அவனால் ஒரு உபத்ரவம் உண்டாய்
பொல்லாமையை நினைக்கை அன்றிக்கே –
தானே
த்வேஷத்தை நினைந்த அபிப்ராயத்தை வ்யர்த்தமாக்கி
அஹங்காரத்தின் உடைய வயிற்றிலே
நெருப்பைக் கொளுத்தினாப் போலே ஜ்வலித்து
அவன் அருகே நின்ற ஸ்வ சேஷ பூத சேதன விஷய
வ்யாமோஹ அதிசயத்தை உடையவனே –

(நெருப்பன்ன நின்ற நெடுமாலே –சீரிய ஸிம்ஹமாயும் பூவைப் பூ வண்ணனாயும் ஒரே சமயத்தில் இருக்கமா போல்)

யுன்னை அருத்தித்து வந்தோம்
உன்னை அபேஷித்து வந்தோம்

பறை தருதியாகில்-
நீ புருஷார்த்தத்தை கொடுப்பாயாகில்

திருத் தக்க செல்வமும் சேவகமும் –
பெரிய பிராட்டியாருக்கு தகுதியான
ஸ்வரூப ரூப குண விக்ரஹ விபூதி -விசிஷ்டனாய்
இருக்கிற செல்வத்தையும் வீர சரிதையையும் –

யாம் பாடி-
அதுவே தாரகமான நாம் பாடி –

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்-
உன்னைப் பிரிந்து பட்ட வ்யசனம் எல்லாம்
நிஸ் சேஷமாக தீர்ந்து
ஆனந்திக்கக் கடவோம் –

———————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – ஒருத்தி மகனாய் பிறந்து -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –மூவாயிரப்படி –

November 2, 2013

அவதாரிகை –

உங்களுக்கு வேண்டுவது என் -என்ன
ஏதேனும் பிரதி பந்தகம் உண்டே யாகிலும் நீயே போக்கி
எங்கள் துக்கம் எல்லாம் கெட
விஷயீ கரிக்க வேணும் -என்கிறார்கள்

ஒருத்தி மகனாய் பிறந்து ஓர் இரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான் தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பன்ன நின்ற நெடுமாலே யுன்னை
அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்
திருத் தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

ஒருத்தி–தேவகிப் பிராட்டியாகிற ஒருத்திக்கு
மகன் ஆய்–பிள்ளையாய்
பிறந்து–அவதரித்து
ஓர் இரவில்–(அவதார காலமாகிய அந்த) ஒரு ராத்திரியில் (திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் வந்து சேர்ந்து),
ஒருத்தி–யசோதைப் பிராட்டியாகிற ஒருத்தி யினுடைய
மகன் ஆய்–பிள்ளையாக
ஒளித்து வளர–ஏகாந்தமாக வளருங் காலத்தில்
தான்–தான் (கம்ஸன்)
தரிக்கிலான் ஆகி–(அங்ஙனம் வளர்வதைப்) பொறாதவனாய்
தீங்கு நினைந்த–(இவனை எப்படியாகிலும் கொல்ல வேணும் என்று) தீங்கை நினைத்த
கஞ்சன்–கம்ஸனுடைய
கருத்தை–எண்ணத்தை
பிழைப்பித்து–வீணாக்கி
வயிற்றில்–(அக் கஞ்சனுடைய) வயிற்றில்;
நெருப்பு என்ன நின்ற–‘நெருப்பு’ என்னும்படி நின்ற
நெடு மாலே–ஸர்வாதிகனான எம்பெருமானே!
உன்னை–உன்னிடத்தில்
அருத்தித்து வந்தோம்–(புருஷார்த்தத்தை) யாசியா நின்று கொண்டு வந்தோம்;
பறை தருதி ஆகில்–எங்களுடைய மநோ ரதத்தை நிறைவேற்றித் தருவாயாகில்
திரு தக்க செல்வமும்–பிராட்டி விரும்பத் தக்க ஸம்பத்தையும்
சேவகமும்–வீர்யத்தையும்
யாம் பாடி–நாங்கள் பாடி
வருத்தமும் தீர்ந்து–(உன்னைப் பிரிந்து பாடுகிற துயரம் நீங்கி
மகிழ்ந்து–மகிழ்ந்திடுவோம்;
ஏல் ஓர் எம் பாவாய்–.

ஒருத்தி –
சர்வ லோகங்களையும் நியாமகன் ஆனவனையும் கூட
நியமிக்குமவள் ஆகையாலே
நாட்டில் தனக்கு ஒப்பற்று இருக்குமவள்-

ஒருத்தி மகனாய்-
சர்வ லோகங்களுக்கும் பிதாவானவன்
ஒருத்தி மகனாய் ஆவதே –
சக்கரவர்த்தி தபஸ் ஸூபண்ணி மாணிக்கம் போலே நாலு பிள்ளைகளைப் பெற்றாப் போலே
நால்வரும் கூடி தபஸ் ஸூ பண்ணி
ஒரு மகனைப் பெற்றபடி –

மகனாய் பிறந்து –
பிறந்த போதே
சொல்லிற்று செய்கை –
சக்கரவர்த்தி திருமகன் பக்வனான பின்பு பித்ரு வசன பரிபாலனம் பண்ணினான் –
இவன் பிறந்த போதே
ஆழ்வார்களையும் தோள்களையும் மறைத்தான் இறே –

பிறந்து –
ஆவிர்பவிக்க லாகாதோ –
பத்து மாசம் வயிற்றிலே இருப்பார்கள் ஆகில் பன்னிரண்டு மாசம் வயிற்றிலே இருந்து பிறக்க வேணுமோ –
பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்டவிறே –

பிறந்தான் -என்கை அவத்யம் -என்று பரிஹரித்தான் ரிஷி
அது தான் அவத்யம் என்று பிறந்தான் என்கிறார்கள்

நம்முடைய கர்மம் நம்மோடு அவனை சஜாதீயன் ஆக்கும்
அவனுடைய கிருபை நம்மை அவனோடு சஜாதீயன் ஆக்கும் –

அவன் பிறவி நமக்கு என்று கோல –
நம் பிறவி அவன் மாதா பிதாக்கள் காலில் விலங்கு பட்டது படும் –

நம் பிறவி -நம்மையும் அவனையும் அகற்றுகைக்கு உடலாய் இருக்கும்
அவன் பிறவி இருவரையும் அணுகுகைக்கு உடலாய் இருக்கும் –

ஓர் இரவில் –
அவ்விரவிலே யசோதை பிராட்டிக்கும் பிள்ளையாக வேண்டுகையாலே
திருவாய்ப்பாடியிலே புக்கு –
நாய்க் குடலுக்கு நறு நெய் தொங்காதாப் போலே
கம்சாதிகள் தன்மை ஸூதிகா கிருஹத்திலே
ஓர் இராத் தங்க ஒட்டிற்றிலை -என்கை –

ஓர் இரவு –
அவ் விரவை ஒக்கும் இரவு முன்பும் இல்லை பின்பும் இல்லை –

ஓர் இரவில் –
கால க்ருத பரிணாமம் இல்லாத தேசத்தில் வஸ்து
கால அதீனமான தேசத்தில் பிறப்பதே –
அவர்கள் தங்களோபாதியும் பெற்றிலன் -என்கை –

ஒருத்தி மகனாய் –
ஒருத்தி -இவனை மகனாய் பெற வேணும் -என்று ஆஸ்ரயிக்க
அவளுக்கு அவதார ரசத்தைக் கொடுத்து
இவளுக்கு லீலா ரசத்தை அனுபவிப்பித்த படி –
ஓர் அவதாரத்திலே யாதவ சஜாதீயனுமாய்
கோப சஜாதீயனுமாய் -ஆனபடி –

மகனாய்
பிறப்பில் புரை இல்லாதாப் போலே
இவள் மகனான இடத்திலும் புரை அற்று இருக்கை –

ஒளித்து வளரத் –
கம்சனுடைய விஷ திருஷ்டி படாமே வளர்ந்தபடி-

நாட்டார் செய்வான செய்யப் பெறாதே
கள்ளர் பட்டது படுவதே
திரு அவதரித்து இருக்கச் செய்தே அந்தர்யாமி பட்டது படுவதே –
உள்ளே இருக்கச் செய்தேயும் இவனில்லை என்று எழுத்திடுமவன்
முகம் காண சம்மதிக்குமோ -என்கை –
அந்தர்யாமியாய் மறைய நிற்கிறது -பிச்சேறின பிரஜை தாய் முன்னே நிற்கில் தாயைக் கொல்லும் –
அவள் பேர நிற்கில் தன்னை முடித்துக் கொள்ளும்-
அதுக்காக முகம் தோற்றாதே நின்று இரண்டு தலையையும் நோக்கும் மாதாவைப் போலே
இசைந்து அம்மே -என்றால் ஏன் என்கைக்கு கிட்டே விருக்கிறபடி -என்றுமாம் –
பேர் சொல்லாதே ஒருத்தி -என்றது
அத்தத்தின் பத்தா நாள் -என்றவள் மகள் ஆகையாலே
பயத்தாலே ஒளிக்கிறாள் –
அபிசரிக்கிலும் அதுவோ இதுவோ என்று சந்தேஹிக்கைக்காக –

தரிக்கிலானாகித் –
கிருஷ்ணன் வலரா நின்றான் -என்று கேட்ட பின்பு அவன் தரிக்க மாட்டிற்று இலன் –
ஈஸ்வர சத்தையையும் பொறாத ஆஸ்ரயம் இறே –

தான் தீங்கு நினைந்த –
பயத்தாலே பரிந்து மங்களா சாசனம் பண்ணும் விஷயத்தில் தீங்கு நினைத்தது –
துஷ் பிரகிருதி யாகையாலே

தான்
உத்தர ஷணத்திலே படப் புகுகிற பாடு அறியாத தான் –

தீங்கு நினைந்த –
தங்கள் வாயாலே சொல்ல மாட்டாமையாலே -தீங்கு என்கிறார்கள்
அதாவது
பூதனை உள்ளிட்டாரை வரக் காட்டியும்
வில் விழவுக்கு என்று அழைத்து நலியத் தேடின படி –

கருத்தைப் பிழைப்பித்துக் –
பூதனை முதலானோர் நலிவுகளைப் பண்ணப் புக –
அத்தைத் தப்பி தன்னை நமக்குத் தந்தபடி –
அவன் நினைவை அவன் தன்னோடு போம்படி பண்ணி -என்றுமாம் –

கஞ்சன் வயிற்றில் நெருப்பன்ன நின்ற –
கம்சன் அநாதி காலம் சஞ்சிதமான பாபம் இத்தனையும்
கண்ட காட்சியிலே அனுபவித்து அறும்படி நின்றவன்
ஆஸ்ரிதர் வயிற்றில் நெருப்பை கம்சன் வயிற்றில் கொளுத்தினவன் என்கை
அதாவது பாகனி கொளுத்துகை –

நெடுமாலே –
இது எல்லாம் பட வேண்டிற்று –
ஆஸ்ரிதர் பக்கல் வ்யாமோகத்தால் -என்கை –
அப்போது ஸ்ரீ வசுதேவர் பக்கலிலும் ஸ்ரீ தேவகியார் பக்கலிலும்
திரு உள்ளம் மண்டின படி என்றுமாம் –

உன்னை –
அர்தித்வத்தில் நிரபேஷனான உன்னை –
ஸ்ரீ வைகுண்டத்தில் நின்றும் இரப்பாளனாய் இவ்வளவும் வந்தது ஆர் அபேஷித்து –
நெடுமாலே உன்னை அர்தித்து வந்தோம் –
பண்டே வ்யாமுக்தனான உன்னை அர்த்திக்கையாலே
பிச்சின் மேலே பிச்சேற்ற வந்தோம் –
அர்த்தித்தின் அளவு எங்கள் வடிவைப் பார்க்க அமையும் –

பறை தருதியாகில் –
எங்களுக்கு உத்தேச்யம் செய்குதியாகில்

ஆகில் -என்றது
நம்முடைய அர்த்தித்வாதிகள் அப்ரயோஜகம் –
அவன் நினைவாலே பலம் என்கை –
உன் அழகாலே பிழைப்பியாதே செய்தருளப் பார்ப்பாயாகில் -என்னவுமாம் –

திருத் தக்க செல்வமும் –
ஸ்ரீய பதித்வத்தால் வந்த சம்பத்தையும் –
பிராட்டி ஆசைப் படும் சம்பத் -என்னவுமாம்

சேவகமும் –
அத்தை காத்தூட்ட வல்ல வீரியமும்

யாம் பாடி –
உன் பேர் சொல்லப் பெறாத நாங்கள்
உகப்போடே அத்தைச் சொல்லி –

வருத்தமும் தீர்ந்து –
உன்னைப் பிரிந்து படும் துக்கமும் தீர்ந்து
பிரிந்தார் படும் பாடறிய
உன்னை நீ பிரிந்து அறியாயே –

மகிழ்ந்து –
கைவல்யம் போலே துக்க நிவ்ருத்தி மாத்ரமே அன்றி
ப்ரீதிக்கு போக்கு விடும்படி யாகவேணும்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -அன்று இவ் வுலகம் அளந்தாய் -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

November 2, 2013

(மங்களா ஸாஸனம் செய்யப் பெற்ற திவ்ய தேசங்கள்
பொங்கும் பரிவால் -பெற்றார் பெரியாழ்வார் என்னும் பெயர் -ப்ரேமத்தால் ரஷ்ய ரக்ஷக பாவம் தட்டு மாறிக் கிடக்குமே
இன்றும் நித்ய கைத்தல சேவையில் பெரியாழ்வார் தாளம் இசைத்து பல்லாண்டு சேவை உண்டே
ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல்கள் வாழி என்பதே நமது கர்தவ்யம்
ஆழ்வார்கள் தம் செயலில் விஞ்சி நிற்கும் தன்மையளாய் -அஞ்சும் குடிக்கு ஓர் ஸந்ததியாய் அன்றோ நம் நாச்சியார்
ஞானம் வைராக்யம் பக்தி மங்களா ஸாஸனத்தில் விஞ்சி இருப்பவள் அன்றோ)

*அன்று நான் பிறந்திலேன் பிறந்த பின்பு மறந்திலேன் -அன்று பல்லாண்டு பாடாக குறை தீர இன்று நாம் வந்தோம் இரங்கு
இரக்கமே உபாயம் -இனிமை பல்லாண்டு பாடுவதே புருஷார்த்தம் -இச்சை அதிகாரம் தெரிவிக்கிறார்கள்)

(இருந்த இடத்தில் இருந்து அளந்த திருவடிக்கும்
எவ்வாறு நடந்தாய் எம் இராமாவோ -என்ற திருவடிக்கும்
குழந்தையாய் சகடம் உதைத்த திருவடிகளுக்கும்
கன்றை எறிந்த போது காட்டி அருளிய குஞ்சித பாதங்களுக்கும்
இந்திரனை ரஷித்த குணத்துக்கும்
இவை உன்னது செயல்கள் அல்ல உனது திருக்கையில் ஆயுதங்கள் செய்தன -அவற்றுக்குப் பல்லாண்டு என்று என்று
பல தடவை நாவுக்கு இடும் ஷட் ரசம்-பல்லாண்டு பாடுவதே பறை)

அவதாரிகை –

இப்பாட்டில் –
இவர்கள் பிரார்த்தித்த படியே அவன்
திருப் பள்ளி அறையில் நின்றும்
திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு எழுந்து அருள
அந்நடை அழகிலே ஈடுபட்டு
வந்த கார்யத்தை மறந்து
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

(யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருள் -என்றார்கள் அன்றோ கீழ் -அத்தை மறந்தார்கள் -)

அன்று இவ் வுலகம்  அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்
அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி-

பதவுரை

அன்று–(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் கலிவு பட்ட) அன்று அக் காலத்தில்
இ உலகம்–இந்த லோகங்களை
அளந்தாய்–(இரண்டடியால்) அளந்தருளினவனே!
அடி-(உன்னுடைய அத்) திருவடிகள்
போற்றி–பல்லாண்டு பல்லாண்டு வாழ்க’
அங்கு–பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்
கன்று–கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,)
குணிலா–எறி தடியாக் (கொண்டு)
எறிந்தாய்–(கபித்தாஸுரன் மீது எறிந்தருளினவனே
கழல்–(உன்னுடைய) திருவடிகள் போற்றி!-’
குன்று–கோவர்த்தன கிரியை
குடையா–குடையாக
எடுத்தாய்–தூக்கினவனே;
குணம்–(உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள்
போற்றி!-’-பல்லாண்டு வாழ்க’
வென்று–(பகைவரை) ஜபித்து
பகை–த்வேஷத்தை
சென்று–எழுந்தருளி
தென் இலங்கை-(அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை
செற்றாய்–அழித்தருளினவனே!
திறல்–(உன்னுடைய) மிடுக்கு
போற்றி-பல்லாண்டு வாழ்க’
சகடம் பொன்ற-சகடாஸுரன் முடியும்படி
உதைத்தாய்–(அச்சகடத்தை) உதைத் தருளினவனே!
புகழ்-(உன்னுடைய) கீர்த்தியானது போற்றி!-
கெடுக்கும்-அழிக்கின்ற
நின் கையில் வேல் போற்றி–உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’
என்று என்று–என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
உன் சேவகமே–உன்னுடைய வீர்யங்களையே
ஏத்தி–புகழ்ந்து கொண்டு
யாம்’–அடியோம்
இன்று–இப்போது
பறை கொள்வான் வந்தோம்–பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம்
இரங்கு–கிருபை பண்ணி யருள்’
ஏல் ஓர் எம் பாவாய்-.

வியாக்யானம்

அன்று இவ் வுலகம்  அளந்தாய் யடி போற்றி

பிரகிருதி சம்பந்த நிபந்தனமான அஹங்காரம்
ஜகத்தை ஆக்ரமித்த அன்று –
அஹங்கார க்ரஸ்தமான இந்த லோகத்தை
அஹங்காரத்தின் நின்றும் மீட்டு
தன் திருவடிகளாலே அளந்து
தனக்காக்கிக் கொண்டவனே –
உன் திருவடிகளுக்கு மங்களா சாசனம் –

(இங்கு அஹங்காரம் குணம் -மேல் அஹங்காரம் 24 தத்வங்களில் ஓன்று -மஹான் விகாரம் அடைந்த அஹங்காரம் -இதுவே இலங்கை)

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி-
இந்த லோகத்தை அஹங்காரத்தின் நின்றும் மீட்ட அளவு அன்றிக்கே
அந்த அஹங்காரத்துக்கு பிறப்பிடமான இடத்தே சென்று –
தர்ச நீயமான பிரகிருதி சம்பந்த நிர்வாஹகமான
அஹங்காரத்தை அழித்தவனே-
உன்னுடைய பராவி பவன சாமர்த்தியத்துக்கு பல்லாண்டு –

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-
காம குரோதங்களை-ஸ்வரூபேண நசிக்கும்படி -உன் திருவடிகளாலே உதைத்தவனே –
உன்னுடைய யசஸ் ஸுக்கு பல்லாண்டு –

சகடம் ஒருமை -காம க்ரோதங்கள் இரண்டும் ஒன்றாகவே கொள்ளலாம் -காமமே க்ரோதமாக மாறும்)

கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி-
லோபத்தை எறிதடியாக எறிந்து மோஹத்தை நசிப்பித்தவனே –
உன்னுடைய குஞ்சிதமான திருவடிகளுக்கு பல்லாண்டு –

(லோபத்தை எறிதடியாக எறிந்து-மால் பால் மனம் சுழிப்ப -மோஹத்தை நசிப்பித்தவனே –மங்கையர் தோள் கைவிட்டு)

இவ்வளவில் பிரதிகூலர் விஷயத்தில் செய்யும் அம்சத்தைச் சொல்லிற்று –
இனி அனுகூலர் (ப்ரபந்ந ஜனகர்-ப்ரயோஜனாந்த பரராக இருந்தாலும் )பிரதி கூலித்தால் செய்யும் அம்சத்தைச் சொல்லுகிறது –

குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி-
இந்த்ரன் சிலா வர்ஷம் வர்ஷித்த போது
பர்வதத்தை குடையாக கொண்டு
கோ கோப ரஷணம் பண்ணினாப் போலே –

அஞ்ஞான கார்யமான அஹங்காரம்
இவ் வதிகாரிக்கு விஷய ப்ராவண்யத்தை உண்டாக்குவதற்கு
பிரதி கிரியையாக வைதிகமாய் கைங்கர்ய ரூபமான
விஷய ப்ராவண்யத்தை உண்டாக்கி
ஸ்வ பிரபன்ன ஜன ரஷகனாம்படியைச் சொல்லுகிறது –

ஆக இப்படி ஆஸ்ரித ரஷகன் ஆனவனே
உன்னுடைய சீல குணத்துக்கு பல்லாண்டு –

(கல் மழைக்கு கல் எடுத்து ரஷித்தது போல்
அஞ்ஞானம் -பொய் நின்ற ஞான கார்யமான அஹங்காரம் மூலமாக விஷயாந்தர ப்ராவண்யம் -தான் கல் வர்ஷம்
ஆத்மாவுக்கு இதுவே ஆபத்து
ஆகவே அந்த ப்ராவண்யத்தை மாற்றி தமது விஷயத்தில் -கைங்கர்யமாக விதித்து
ஐம் புலன்களுக்கும் அவனையே விஷயமாக்கி -இது குன்று போல் -இது ஸ்திரம் அநந்தம்
அவை கல் போல் அல்பம் அஸ்திரம்)

(குணம் -பொதுவாகச் சொன்னாலே சீலம் -குணவான் பெருமாளுக்கும் பார்க்கிறோம்)

வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி-
அஹங்காரத்தை ஜெயித்து
தத் விஷய வைமுக்யத்தை மாற்றும்
நின் திருக் கையில் திரு வாழி யாழ்வானுக்கு-பல்லாண்டு –

(அனைத்து திவ்ய ஆயுதங்களும் திரு வாழி ஆழ்வானது அம்சமே–சுக்கிரன் கண்ணைத் துரும்பால் கிளறிய சக்கரக் கையனே-)

என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இப்படி பல்லாண்டு பாடுகையே யாத்ரையாய் உன் உடைய
வீர சரிதத்தையே ஏத்தி
புருஷார்த்தத்தை லபிக்கைக்காக
சத்வம் தலை எடுத்த இன்று
உன் கை பார்த்து இருக்கும் நாங்கள்
வந்தோம்
நீ கிருபை செய்து அருள வேணும் –

ஏத்திப் பறை கொள்வான் -என்கிற இடத்தில்
யேத்துகைக்கு அநந்தரம் புருஷார்த்தம் லாபம் ஆகையாலும்
ஏத்தாத போது புருஷார்த்த லாபம் இல்லாமையாலும்
யேத்துகையே புருஷார்த்தம் -என்கிறது –

இரங்கு -என்று
கிருபையே சாதனம் என்கையாலே
வந்தோம் -என்று
ருசி காரித்தைச் சொல்லுகிறது –

———————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – அன்று இவ் வுலகம் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் -மூவாயிரப்படி –

November 2, 2013

அவதாரிகை –

தங்கள் அபேஷித்த படியே செய்தருளக் கண்டு
வந்த கார்யத்தை மறந்து
அத் திருப்பள்ளி யறையில் நின்றும்
திவ்ய சிம்ஹாசனத்தளவும் நடக்கிற போதை
நடை அழகுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –

காணும் அளவு இ றே -அது வேணும் இது வேணும் -என்பது
கண்டால் அவனுக்கு பரியும் இத்தனை இறே-

அன்று இவ் வுலகம்  அளந்தாய் யடி போற்றி
சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி
கன்று குணிலா வெறிந்தாய் கழல் போற்றி
குன்று குடையா வெடுத்தாய் குணம் போற்றி
வென்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி
என்று என்றும் உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான்
இன்று யாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்

பதவுரை

அன்று–(இந்திரன் முதலானவர்கள் மஹாபலியால் கலிவு பட்ட)
அன்று அக்காலத்தில்
இ உலகம்–இந்த லோகங்களை
அளந்தாய்–(இரண்டடியால்) அளந்தருளினவனே!
அடி-(உன்னுடைய அத்) திருவடிகள்
போற்றி–பல்லாண்டு பல்லாண்டு வாழ்க’
அங்கு–பிராட்டியைக் களவு கண்ட இராவணனிருக்குமிடத்தில்
கன்று–கன்றாய் நின்ற ஒரு அஸுரனை (வத்ஸாஸுரனை,)
குணிலா–எறி தடியாக் (கொண்டு)
எறிந்தாய்–(கபித்தாஸுரன் மீது எறிந்தருளினவனே
கழல்–(உன்னுடைய) திருவடிகள் போற்றி!-’
குன்று–கோவர்த்தன கிரியை
குடையா–குடையாக
எடுத்தாய்–தூக்கினவனே;
குணம்–(உன்னுடைய ஸௌசீல்ய ஸௌலப்யாதி) குணங்கள்
போற்றி!-’
வென்று–(பகைவரை) ஜபித்து
பகை–த்வேஷத்தை
சென்று–எழுந்தருளி
தென் இலங்கை-(அவனுடைய பட்டணமாகிய) அழகிய லங்காபுரியை
செற்றாய்–அழித்தருளினவனே!
திறல்–(உன்னுடைய) மிடுக்கு
போற்றி-பல்லாண்டு வாழ்க’
சகடம் பொன்ற-சகடாஸுரன் முடியும்படி
உதைத்தாய்–(அச்சகடத்தை) உதைத் தருளினவனே!
புகழ்-(உன்னுடைய) கீர்த்தியானது போற்றி!-
கெடுக்கும்-அழிக்கின்ற
நின் கையில் வேல் போற்றி–உனது திருக் கையிலுள்ள வேல் வாழ்க’
என்று என்று–என்றிப்படிப் பலவாறாக மங்களாசாஸநம் பண்ணிக் கொண்டு
உன் சேவகமே–உன்னுடைய வீர்யங்களையே
ஏத்தி–புகழ்ந்து கொண்டு
யாம்’–அடியோம்
இன்று–இப்போது
பறை கொள்வான் வந்தோம்–பறை கொள்வதற்காக (உன்னிடம்) வினை கொண்டோம்
இரங்கு–கிருபை பண்ணி யருள்’
ஏல் ஓர் எம் பாவாய்-.

வியாக்யானம்  –

அன்று இவ் வுலகம் அளந்தாய் யடி போற்றி —
அன்று –
தன் விபூதியை மகாபலி அபஹரிக்க நோவு பட்டு இருக்கிற அன்று-
தன்னைப் பிரிந்து நாங்கள் ஆர்த்தியால் நோவு பட்ட இன்று –
ஜகத்தை மகா பலி யினுடைய அபிமானத்தின் நின்றும் மீட்ட அன்று-
எங்களுடைய ஸ்த்ரீத்வ அபிமானத்தின் நின்றும் மீட்ட இன்று –
நாட்டுக்கு எல்லாம் தன் திருவடிகளை தூளிதானம் பண்ணின அன்று-
அழகையும் சீலத்தையும் எங்களுக்கு தூளிதானம் பண்ணின இன்று-
இது இறே ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் வாமனனுக்கும் சாம்யம்

இவ் வுலகம் அளந்தாய்-
பிராட்டிமார் பூ தொடுமா போலே கூசிப் பிடிக்கும்
திருவடிகளைக் கொண்டு-காடும் ஓடையும் அகப்பட அளப்பதே -என்கை –
அன்று எல்லை நடந்து மகாபலி பக்கல் நின்றும்-பூமியை மீட்டுக் கொண்டால் போலே
நடை அழகைக் காட்டி விஸ்லேஷத்தின் நின்றும்-மீட்டுக் கொண்டான் -என்கை –

யடி போற்றி-
தாங்கள் சொல்லும் அளவில் புறப்பட்டு
சுகுமாரமான திருவடிகளைக் கொண்டு
உலாவி அருளின படி –
திரு உலகு அளந்து அருளின ஆயாசம் போரும் என்று மங்களா சாசனம்
பண்ணுகிறார்கள்

திரு உலகு அளந்து அருளின போது இரண்டடி இறே இட்டது –
இப்போது எங்களுக்காக பத்து எட்டு அடி இடுவதே –

திரு உலகு அளந்து அருளின அன்று
இந்த்ரன் பிரயோஜனத்தை கொண்டு போனான்
மகா பலி ஔதார்யம் பெற்றுப் போனான்
தாங்கள் அன்று உதவப் பெறாத இழவு தீர
திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் என்றுமாம் –

அடி போற்றி –
உன் சேவடி செவ்வி திருக் காப்பு -என்னுமவர்கள் இறே-

சென்று அங்குத் தென்னிலங்கை செற்றாய் திறல் போற்றி
அழகுக்கு இலக்கு ஆகாதாரை
அம்புக்கு இலக்கு ஆக்கின படி –

சென்றங்கு –
புலி கிடந்த தூற்றிலே செல்லுமா போலே
பிராட்டியைப் பிரித்த பையல் இடத்தே செல்லுவதே –

சென்று –
வழிப் போக்கிலே -கர கபந்த விராதாதிகளை
அழியச் செய்தபடி -என்றுமாம் –

அங்கு –
நின்ற விடத்தே நின்று
பூ அலர்ந்தாப் போலே அனாயாசேன அளந்த
அளவன்றிக்கே
கானகம்படி உலாவி உலாவி -என்னுமா போலே
கொடிய காட்டிலே அந்த திருவடிகளைக் கொண்டு நடப்பதே -என்கை
எவ்வாறு நடந்தனை -என்று வயிறு பிடிக்கை
இவர்களுக்கு குடிப் பிறப்பு –

தென்னிலங்கை
அழகியதான கோட்டையையும் அரணையும் உடைத்தாய்
குழவிக் கூடு கொண்டாப் போலே

ஹிம்சிகர் சேர்ந்த தேசம் –

செற்றாய் –
ஆஸ்ரித விரோதிகள் தனக்கு சத்ருக்கள் -என்கை

திறல் போற்றி
மதிளுக்கு மதிள் இடுமா போலே
மிடுக்கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள்
மல்லாண்ட திண் தோள் மணி வண்ணா -என்னும்
அவர்கள் ஆகையாலே
குடிப் பிறப்பாலே வந்தது –
இலங்கை பாழாளாக படை பொருதானுக்கு பல்லாண்டு கூறுதும் -என்னுமவர்கள் இறே-

பொன்றச் சகடம் உதைத்தாய் புகழ் போற்றி-
ராவணனைப் போலே -விரோதி என்று –இறாய்க்க ஒண்ணாத அபாயம்-

பொன்ற
மாரீசனைப் போலே குற்று உயிர் ஆக்கி மேல்
அநர்த்தம் விளைக்க வையாதே -முடிக்கப் பெற்ற படி –

புகழ் போற்றி –
தாயும் கூட உதவாத தசையிலே
அனாயாசேன திருவடிகளாலே சகடாசுரனை அழித்த புகழ் –

போற்றி –
ராமாவதாரத்தில் காட்டில் மங்களா சாசனம் பண்ண வேண்டி இருக்கை –
ராமாவதாரத்துக்கு
பிதா -சம்பராந்தகன் –
ஊர் -திரு அயோத்யை
புரோஹிதர் -மந்த்ரவாதிகளான வசிஷ்டாதிகள் –
பிள்ளைகள் -ஆண் திறல் மீளி மொய்ம்பில் அரக்கன் குலத்தைத் தடிந்தவர்கள் –
குணவான்களும் பிள்ளைகள் –

இங்கு
மாதாபிதாக்கள் -சாது இடையர்
ஊர் இடைச்சேரி
கம்சாதிகள் எதிரிகள்
ஸ்ரீ பிருந்தாவனத்திலே முளைத்து எழும் பூண்டுகள் அடைய ராஷசர்கள்
தமையன் ஒரு ஷணம் தப்பில் பாம்பின் வாயிலே விழும் தீம்பன் –
பூதனாதிகளாலே பிறந்த அபாயங்களுக்கு ஒரு அவதி இல்லை
ஆன பின்பு இனி மங்களா சாசனம் ஒழிய காவல் இல்லை –

கன்று -இத்யாதி –
சத்ருவை இட்டு சத்ருவை எறிந்தால்
சங்கேதித்து வந்து இருவரும் இருவரும் ஒக்க மேல் விழுந்தார்கள் ஆகில் என் செய்யக் கடவோம்-
என்று வயிறு பிடிக்கிறார்கள் –
குஞ்சித்த-மடித்த – திருவடிகளுக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
கன்று குணிலா –
கன்றை எறிதடியாக
குணில் -எறிதடி
கரம் போற்றி என்னாமல் அடி விடாதவர்கள் ஆகையாலே கழல் போற்றி என்கிறார்கள் –

குன்று இத்யாதி –
இதுக்கு முன்பு இந்தரனுக்காக செய்த செயல் –
இப்போது அவன் தான் பகையானபடி –
மலையைக் குடையாக எடுத்து
பசுக்களுக்கும் இடையருக்கும் வந்த ஆபத்தைப் போக்கின்படி –
அனுகூலன் பிரதி கூலித்தால் செய்யலாவது இல்லை இ றே-

குணம் போற்றி –

பசிக்ராஹத்தாலே கை ஓயும் தனையும் வர்ஷிக்க
மலை எடுத்துக் கொண்டு நின்ற ஆன்ரு சம்சய குணத்துக்கு
மங்களா சாசனம் பண்ணுகிறார்கள் –

வென்று பகை கெடுக்கும் இத்யாதி –
இவன் பக்கல் பரிவாலே -இவன் மிடுக்கைக் கண்டு கண் எச்சில் படுவார் என்று பயப்பட்டு
அத்தை விட்டு -இவ் வேல் அன்றோ இவ் வியாபாரம் எல்லாம் பண்ணிற்று -என்கிறார்கள் –
மிடுக்கு இல்லாமையால் நான் மெலிந்தேன் -என்று இறே இவர்கள் படி –
சக்கரவர்த்தி வில் பிடிக்க பெருமாளும் வில் பிடித்தால் போலே
கூர் வேல் கொடும் தொழிலன் -என்னுமவர் மகன் ஆகையாலே
வேலே ஆயுதம் –

வென்று பகை கெடுக்கும் –
ஆஸ்ரித விரோதிகளான பிரதி பஷத்தை அறச் செய்து மாயக்கை –

நின் கையில் வேல் போற்றி –
வெறும் புறத்திலே ஆலத்தி வழிக்க வேண்டி இருக்க
அதுக்கு மேலே வேலைப் பிடிப்பதே -என்று
திரு வேல் பிடித்த திருக் கைக்கு திருப் பல்லாண்டு பாடுகிறார்கள் –
வடிவார் சோதி வலத்துறையும் சுடர் ஆழியும் பல்லாண்டு -என்று
திவ்ய ஆயுதங்களுக்கும் மங்களா சாசனம் பண்ணினார் இறே தமப்பனாரும்-
தேஜஸே சேது பந்தம் -தமப்பனாருக்கும் மகளுக்கும் பணி –
என்று சீயர் அருளிச் செய்வர் –

என்று என்று –
இது தானே பிரயோஜனம் என்கை –
சம்சாரிகள் புறம்பும் கொள்ளுவார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளுவார்கள் –
இவர்கள் புறம்பும் கொள்ளார்கள் -இவன் பக்கலிலும் கொள்ளார்கள்
ஓன்று நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் ஆளும் செய்வன் -என்று
அவனுக்கும் தான் கொடுத்து
ஆந்தனையும் கை காட்டி -என்று புறம்பும் தானே கொடுக்கும் என்கை –

உன் சேவகமே ஏத்திப் பறை கொள்வான் –
உன்னுடைய வீர சரித்ரமே ஏத்தி -உன்னை அனுபவிக்கைக்காக –
உன்னுடைய விக்கிரமம் ஓன்று ஒழியாமல் எல்லாம்
என்னுடைய நெஞ்சகம் பால் சுவர் வழி எழுதிக் கொண்டேன் –
என்னுமவர்கள் இறே –

இன்று –
இசைவு பிறந்த இன்று -என்னுதல்-
நீ உறங்க -நாங்கள் உறங்காத இன்று -என்னுதல்
நென்நேற்று வந்தோமோ –
ஊராக இசைந்த இன்று -என்றுமாம் –

யாம் –
பந்துக்களாலே நெடும் காலம் நலிவு பட்ட நாங்கள் –

வந்தோம் –
வ்ருத்தைகள் உறங்க -நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம்
எங்கள் இழவுகள் எல்லாம் உன்னாலே தீரும் –

யாம் வந்தோம் –
எங்கள் வரவு உனக்கு புண்ணாய் இருக்க
நாங்கள் ஆற்றாமையாலே வந்தோம் –

இரங்கு –
எல்லாம் பட்டாலும் அவன் இரங்கினால் அல்லது கார்ய கரம் ஆகாமை –
அத்தலைக்கு இரங்குகை ஸ்வரூபம் –
அவனுக்கு என் வருகிறதோ என்று இருக்கை-இத்தலைக்கு ஸ்வரூபம்
தாங்கள் பண்ணின மங்களா சாசனம் சாதனம் அன்று -என்று இருக்கிறார்கள்-

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – மாரி மலை முழஞ்சில் -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

November 2, 2013

(நடை அழகு காண ஆசைப்படுகிறார்கள் -இவை எல்லாம் நம் பெருமாள் பக்கலிலே இன்றும் காணலாம்
நர ஸிம்ஹம் ராகவ ஸிம்ஹம் யாதவ ஸிம்ஹம் ரெங்கேந்திர ஸிம்ஹம்-தேஜஸ் காட்டி —
நடத்தை -அழகு -வந்த காரியத்தை=ப்ரீதி காரித கைங்கர்யம் -சிற்றம் சிறு காலையில் தானே அருளிச் செய்வார்கள் )

அவதாரிகை –

இப்பாட்டில்
வஸதா சாந்த இத்யேகம்  லோசனாம் என்னுமா போல் -பெண்காள் -என் செய்தி கோள் -என் பட்டி கோள்
பெண்களை எழுப்புவது
கோயில் காப்பான் முதலானாரை எழுப்புவது
நப்பின்னை பிராட்டியை எழுப்புவது
நம்மை எழுப்புவதாக
பஹு ஸ்ரமப் பட்டி கோளே
உங்களுக்கு நான் செய்ய வேண்டுவது என் -என்ன –

பேரோலக்கமாய்
சிம்ஹாசனத்தில் இருந்து
கேட்டருள வேணும் –
என்கிறார்கள் –

(நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் -ஆசைப்படா இருப்பார்கள் அன்றோ)

(1-அறிவுற்றுத்
2-தீ விழித்து
3-வேரி மயிர் பொங்க
4-வெப்பாடும் பேர்ந்துதறி
5-மூரி
6-நிமிர்ந்து
7-முழங்கிப்
8-புறப்பட்டு
9-போதருமா போலே
நவ செயல்கள் -நவ நரஸிம்ஹர் அஹோபிலத்தில் ஸேவை)

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்

பதவுரை

மாரி–மழைக் காலத்தில்
மலை முழஞ்சில்–மலையிலுள்ள குஹைகளில்
மன்னிக் கிடந்து–(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும்–உறங்கா நின்ற
சீரிய சிங்கம்–(வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று–உணர்ந்தெழுந்து
தீ விழித்து–நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர்–(ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளை மயிர்களானவை
பொங்க–சிலும்பும்படி
எப்பாடும்–நாற் புறங்களிலும்
பேர்ந்து–புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி–(சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து–சோம்பல் முறித்து
முழங்கி–கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே–வெளிப் புறப்பட்டு வருவது போல,
பூவை பூ வண்ணா–காயம் பூப்போன்ற நிறத்தை யுடைய பிரானே!
நீ–நீ
உன் கோயில் நின்று–உன்னுடைய திருக் கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி–இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று
கோப்பு உடைய–அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய–லோகோத்தரமான
சிங்காசனத்து-எழுந்தருளி யிருந்து
யாம் வந்த காரியம்-நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து–விசாரித்து
அருள்–கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய்

வியாக்யானம் –

மாரி மலை இத்யாதி –
வர்ஷா காலத்தில் -பர்வத குகையிலே -பர்வத சிகரம் என்னலாம் படி
தன் பேடையோடே ஏக த்ரவ்யம் என்னலாம் படி
கிடந்து உறங்கும் அத்தசை தன்னிலும்
சூத்திர மிருகங்கள் முழுக்காயாய் அவியலாம்படி
பராபி பவன் சாமர்த்தியத்தை உடைய சிம்ஹமானது

காலம் உணர்த்த உணர்ந்து
பிரதம கடாஷத்திலே தன் பேடைக்கும் அணுக ஒண்ணாதபடி
க்ரூரமாக விழித்து
ஜாதி உசித கந்தம் -மயிர்க்கால் தோறும் -அபிவிருத்தமாக –
நாலு பர்ஸ்வத்திலும்
துல்யமாக எழுந்திருந்து அவயவங்களை தனித் தனியே உதிர்த்து
முன்னும் பின்னும் ஏக ரீதியாய் நீண்ட முதுகு உயரும்படி

நிமிர்ந்து
கர்ஜித்து குகையில் நின்றும் வெளிப்பட்டு வருமா போலே
நீயும் தம பிரசுரமான காலத்திலே வேதாந்தங்களில் அதில்
ஏக தேசம் என்னலாம் படி கிடந்து –
பிராட்டியோடு ஏகவஸ்து என்னலாம்படி கிடந்து என்னவுமாம் –

யோக நித்தரை பண்ணா நிற்கிற அளவிலும்
தமோ வித்வம்சன சக்தியை உடைய நீ –
காலம் உணர்த்த உணர்ந்து பிராட்டிக்கும் அணுக ஒண்ணாதபடி
தீயதாகக் கடாஷித்து
தன்னுடைய கந்தம் திருமேனியில் மயிர்க் கால் வழியே
எங்கும் பரிமளிக்கும் படி

ஜகத் சிருஷ்டியில் உத்யோகித்து
தன்னோடு அவிபக்த நாம ரூபங்களாய்
ஸ்வா வயங்களான சேதனாசேதனங்களை
விபக்த நாம ரூபங்கள் ஆம்படி பண்ணி
இப்படி ஸ்வா வயவ விசிஷ்டனான தான் தண்டாகாரமாய் நீண்டு
பிண்டாகாரமாய் நிமிர்ந்து
மகா சம் ப்ரமத்துடனே
மகதாதி ரூபேண பிரகிருதியில் நின்றும் வேறு பட்டு வருமா போலே

பூவைப் பூ வண்ணா -நீ
உன் கோயில் நின்று -இத்யாதி –
உன்னுடைய திவ்ய அந்தப்புரத்தின் நின்றும்
திவ்ய ஆஸ்தான மண்டபத்துக்கு
எழுந்தருளி –

கோப்புடைய இத்யாதி
ஏழு உலகும் தொழிலாக வகுப்புண்டதாய்
நினைப்பிட்ட கார்யம் தலைக் கட்டும் படியான சீர்மையை
உடைய சிம்ஹாசனத்திலே
எழுந்தருளி இருந்து உனக்கு அனன்யார்ஹ சேஷ பூதரான
நாங்கள் வந்த
கார்யத்தை விசாரித்து அருள வேணும்-

சஞ்சரண யோக்யம் அல்லாத ராத்திரி காலத்திலே
அரண்மனையிலே திவ்ய அந்தபுரத்திலே
நப்பின்னை பிராட்டி யாரோடு ஏக தத்வம்
என்னலாம் படி படுக்கையிலே சாய்ந்து உறங்கும்
அவ்விருப்பிலே தானே

சத்ருக்கள் மண் உண்ணும்படி வீர ஸ்ரீ யை உடையவனாய்
காலம் உணர்த்த உணர்ந்திருந்து அருகிருந்த
நப்பின்னை பிராட்டிக்கும் அணுக ஒண்ணாதபடி
க்ரூரமாக திருக் கண்களை விழித்து
திருமேனி கந்தம் மயிர்க்கால் வழியே பரிமளிக்க
நாலு பாடும் ஒக்க எழுந்திருந்து
அவயவங்களைத் தனித் தனியே உதறி
நீண்டு நிமிர்ந்து சிம்ஹ நாதத்தைப் பண்ணி

பூவைப் பூ வண்ணா
நீ இத்யாதி ஆகவுமாம் –

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -மாரி மலை முழஞ்சில் -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –மூவாயிரப்படி –

November 2, 2013

ஸ அபராதரைப் போலே சாந்த் வனம்-நல்ல வார்த்தை – பண்ணுமவன் ஆகையாலே
பெண்களை சாந்த் வனம் பண்ணி அருளினான் –

அவ்வளவிலே நாங்கள் வந்த கார்யத்தை கேட்டு அருள வேணும் என்கிறார்கள் –

ஸ்ரீ விபீஷண ஆழ்வானை —
தம் குற்றம் என்று நினைத்து -மதுர பாஷணங்களாலே-சந்தோஷிப்பித்தாப் போலே

மாரி மலை முழஞ்சில் மன்னிக் கிடந்து உறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீ விழித்து
வேரி மயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு
போதருமா போலே நீ பூவைப் பூ வண்ணா வுன்
கோயில் நின்று இங்கனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்காசனத்து இருந்து யாம் வந்த
கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்

பதவுரை

மாரி–மழைகாலத்தில்
மலை முழஞ்சில்–மலையிலுள்ள குஹைகளில்
மன்னி கிடந்து–(பேடையும் தானும் ஒரு வஸ்து என்னலாம்படி) ஒட்டிக் கொண்டு கிடந்து
உறங்கும்–உறங்கா நின்ற
சீரிய சிங்கம்–(வீர்யமாகிற) சீர்மையை யுடைய சிங்கமானது
அறிவுற்று–உணர்ந்தெழுந்து
தீ விழித்து–நெருப்புப் பொறி பறக்கும்படி கண்களை விழித்து
வேரி மயிர்–(ஜாதிக்கு உரிய) பரிமள முள்ள உளைமயிர்களானவை
பொங்க–சிலும்பும்படி
எப்பாடும்–நாற் புறங்களிலும்
பேர்ந்து–புடை பெயர்ந்து (அசைந்து)
உதறி–(சரிரத்தை) உதறி
மூரி நிமிர்ந்து–சோம்பல் முறித்து
முழங்கி–கர்ஜனை பண்ணி
புறப்பட்டு போதரும் ஆ போலே–வெளிப் புறப்பட்டு வருவது போல,
பூவை பூ வண்ணா–காயம் பூப்போன்ற உறத்தை யுடைய பிரானே!
நீ–நீ
உன் கோயில் நின்று–உன்னுடைய திருக்கோயிலினின்றும்
இங்ஙனே போந்தருளி–இவ்விடத்தேற (ஆஸ்தாநத்தில்) எழுந்தருளி
உன் கோயில் நின்று
கோப்பு உடைய–அழகிய ஸந்நிவேசத்தை யுடைய
சீரிய–லோகோத்தரமான
சிங்காசனத்து-எழுந்தருளியிருந்து
யாம் வந்த காரியம்-நாங்கள் (மநோரதித்துக் கொண்டு) வந்த காரியத்தை
ஆராய்ந்து–விசாரித்து
அருள்–கிருபை செய்ய வேணும்’
ஏல் ஓர் எம் பாவாய்

மாரி மலை முழஞ்சில்-
வர்ஷா காலம் ராஜாக்கள் படை வீடு விட்டு
புறப்படதாப் போலே
சிம்ஹமும் வர்ஷாகாலம் முழைஞ்சு விட்டுப் புறப்படாது –

பெருமாள் வர்ஷா காலம் மால்யவானில் எழுந்தருளினாப் போலே –
விஸ்லேஷித்தார் கூடும் காலமுமாய்
கூடி இருந்தார் போக ரசமும் அனுபவிக்கும் காலமுமாய் இருக்க
நாங்கள் உன் வாசலிலே நின்று துவளக் கடவமோ -என்கை –

மன்னிக் கிடந்து –
மிடுக்காலே ஒருவருக்கும் அஞ்ச வேண்டாமையாலே
குவடு போலே பொருந்தி
வீசுவில் விட்டு எழுப்பினாலும்
எழுப்பப் போகாது இருக்கை –

மன்னிக் கிடந்து -உறங்கும் –
தன் பேடையோடே ஏக வஸ்து என்னலாம்படி
பொருந்திக் கிடக்கிற -என்னவுமாம் –

இங்கு
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா -என்று
நப்பின்னைப் பிராட்டிக்கு ஒரு ஆபரணம் என்னலாம் படி இறே
முலையோடே பொருந்திக் கிடக்கிற படி –

உறங்கும் –
சம்சாரிகள் உறக்கம் போலே
தமோபிபூதியால் அன்றே இவன் உறக்கம் –
வ்யதிரேகத்தில் ஆற்றாதார் வரும் அளவும்
ஆகையால் -அவ் உறக்கத்திற்கு ஸ்மாரகமாய் இருக்கை –

சீரிய சிங்கம் –
உறக்கத்திலும் சூத்திர மிருகங்கள் மண் உண்ணும்படி
வீர ஸ்ரீ யை உடைத்தாய் இருக்கை –
ஸ்மாரகமாய் இருக்கை –

அறிவுற்றுத் –
பூ அலர்ந்தாப் போலே காலம் உணர்த்த உணருகை –
சம்சாரிகள் காலம் உணர்த்த உணருவர்கள்
இவன் ஆஸ்ரிதர் ஆர்த்தி உணர்த்த உணரும் –

தீ விழித்து-
பிரதம கடாஷ சன்னி பாதத்திலே
பேடைக்கும் அருகு நிற்க ஒண்ணாது இருக்கை –
ஐஸ்வர்யமான தேஜஸ் முன் ஒருவர்க்கும் நிற்க ஒண்ணாது இருக்கை –

வேரி மயிர் பொங்க –
வேரி -பரிமளம்
ஜாதி உசிதமான கந்தம் -உளை மயிர் பொங்க -சிலும்ப
ஸ்மா ரகமாய் இருக்கை –

எப்பாடும் பேர்ந்துதறி –
ஒரு கார்யப் பாடு இல்லாமையாலே
நாலுபாடும் போருகிறபடி –

உதறி –
அவயவங்களைத் தனித் தனியே உதறின படி –

மூரி நிமிர்ந்து –
உடல் ஒன்றாக நிமிர்ந்தபடி –

முழங்கிப் –
ஸ்வ வ்யதிரிக்த மிருகங்கள் முழுக் காயாக அவிந்து கிடக்கும் படி –
பெண்காள் வந்தி கோளோ-வென்கை-

மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டு போதருமா போலே நீ போதர வேணும்
சிம்ஹமோ நமக்குத் திருஷ்டாந்தம் என்ன

நீ பூவைப் பூ வண்ணா –
காம்பீர்யத்துக்கு திருஷ்டாந்தமாக ஒன்றைச் சொன்னோம் அத்தனை –
வடிவு அழகையும் நிறத்தையும் உன்னைப் போலே பண்ணப் போமோ –
பூவைப் பூவின் நிறம் உனக்கு திருடாந்தமான வன்று இறே
சிம்ஹம் உனக்கு த்ர்ஷ்டாந்தம் ஆவது -என்னவுமாம் –

வுன் கோயில் நின்று இங்கனே போந்தருளிக்

பிராட்டி மங்களா சாசனம் பண்ண சுமந்த்ரனோடே-புறப்பட்டாப் போலே காண வேணும் –
போந்தருளி-
சதுர்க்கதி இறே
நடையிலே
ரிஷபத்தின் உடைய வீறும்
மத்த கஜத்தின் உடைய மதிப்பும்
புலியினுடைய சிவிட்கும்
சிம்ஹத்தின் உடைய பராபிபவன சாமர்த்தியமும்-தோற்றி இருக்கை

நமக்கு இவை எல்லாம்
நம்பெருமாள் நடை அழகிலே காணலாம் –

இங்கனே போந்தருளி –
படுக்கையில் வார்த்தையாய்ப் போகாமே
தனி மண்டபத்திலே வார்த்தை யாக வேணும் –

கோப்புடைய –
சராசரங்களை அடைய தொழிலாக வகுப்புண்டிருக்கை –
உபய விபூதியும் தொழிலாக வகுப்புண்டிருக்கை -என்னவுமாம்
தர்ம ஜ்ஞானாதிகளாலும்
அதர்ம அஜ்ஞானாதிகளாலும்
கோப்புடைய சிம்ஹாசனம் -என்றுமாம் –

சீரிய சிங்காசனத்து –
இந்த சிம்ஹாசனத்தில் இருந்து நினைப்பிட்டது என்றால்
அறுதியாய் இருக்கை –
கடல் கரையில் வார்த்தை என்னுமா போலேயும்
தேர்த் தட்டில் வார்த்தை என்னுமா போலேயும்
பெண்களும் கிருஷ்ணனுமாய் இருந்து சொல்லிலும்
அமோகமாய் இருக்கை –

அணுவாகிலும் கிருஷ்ணனோடு ஒத்த வரிசையைக் கொடுக்க வற்றான
சிம்ஹாசனம் என்றுமாம் –

இருந்து –
நடை அழகு போலே
இருப்பில் வேண்டற்ப்பாட்டையும் காண வேணும் -என்கை –

கண்ணினைக் குளிரப் புது மல ராகத்தைப் பருக -இருந்திடாய் -என்னுமா போலே
உன்னைக் காண விடாய்த்த கண்களின் விடாய் கெட்டு அனுபவிக்கலாம் படி இருந்து –

யாம் வந்த கார்யம் ஆராய்ந்து அருளேலோ ரெம்பாவாய்
அநந்ய பிரயோஜனைகளான நாங்கள்
வந்த கார்யம் ஆராய்ந்து அருள வேணும் –

தண்ட காரன்யத்தில் ரிஷிகளின் உடைய துக்க நிவ்ருத்திக்கு
நாம் முற்பாடராக
பெற்றிலோமே என்று வெறுத்தாப் போலே
பெண்கள் நோவு பட பார்த்து இருந்தோம் ஆகாதே -என்று வெறுத்து –
அவர்களை அழைத்து
உங்களுக்கு செய்ய வேண்டுவது என் -என்ன

இங்கனே சொல்ல ஒண்ணாது
பேர் ஓலக்கமாய் இருந்து கேட்டருள வேணும் -என்கிறார்கள் –

நப்பின்னைப் பிராட்டி பரிகிரமாய் இருக்க-
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம் -என்று
அநந்ய கதிகளாக சொல்லுவதே -என்று பொருது இலள்

அழகர் கிடாம்பி ஆச்சானை அருள் பாடிட்டு
ஓன்று சொல்லிக் காண் என்ன –
நம் இராமானுசனை உடையையாய் இருந்து வைத்து
அகதிம்-என்னப் பெறாய் -என்று அருளிச் செய்தார் –

ஆகையால் இருப்பில் வேண்டற்பாட்டையும் காண வேணும் –
வந்த கார்யத்தை -சிற்றம் சிறு காலைக்கு-வைக்கிறார் –
இப்போது சொல்லாதே -அதுக்கு அடி என் என்னில் –
அவசரத்தில் சொல்ல வேணும் என்று நினைத்து –

அதாவது –
அவர்களோடு ஆர்த்தியையும் காட்டி திருவடிகளிலே சென்று விழ
இரங்குவர் காண் என்று நினைத்து வந்த ஸ்ரீ பரத ஆழ்வானுக்கும்
அவன் நினைத்து வந்ததுக்கு அங்கு அவசரம் இல்லாமையாலே
அனபியவ நீயர் ஆனார்
ஆனால் அவசரத்திலே சொல்லக் கடவோம் என்று இருந்தார்கள் –

ஆராய்ந்து அருள் –
நீங்கள் என் பட்டி கோள்-
என் செய்தி கோள் -என்கை

அதாவது
பெண்களை எழுப்புவது –
வாசல் காப்பானை எழுப்புவது –
ஸ்ரீ நந்த கோபர் உள்ளிட்டாரை எழுப்புவது –
நம்மை எழுப்புவதாய்
போர வ்யசனப்பட்டி கோள் ஆகாதே -என்கை –

எதிர் சூழல் புக்குத் திரியுமவனுக்கு
இவை எல்லாம் தன் குறையாகத் தோற்றும் இறே –

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை -அங்கண் மா ஞாலத்து -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

November 2, 2013

சத்வ நிதானம் இருள் தரும் வென்னும் ஜன்மம் ஜாயமான கால கடாஷங்கள்-
அசத்வ நிதானம் அமலங்களாக வென்னும் ஜாயமான கால கடாஷங்கள்–ஆச்சார்ய ஹிருதயம்-சூர்ணிகை-7

அதாவது
சத்வ இதரங்களான ரஜஸ் தமஸ்களுக்கு நிதானம்
இருள் தரும் மா ஞாலத்தில் இனி பிறவி நான் வேண்டேன் –வாட்டாற்றான் அடி வணங்கே-என்கிற
அஜ்ஞான அவஹமான சம்சாரத்தில் ஜன்மம் –
அவிவேக தின்முகம் -துக்க வர்ஷினி –சம்சாரம் –ஸ்ரீ ஆளவந்தார்

சத்வத்துக்கு நிதானம் –
ஜாயமானம் ஹி புருஷம் யாம் பச்யேத் மது ஸூதன சாத்விகஸ் சது விஞாயேஸ் ச வை மோஷார்த்த சிந்தக-மோக்ஷ தர்மம்-
என்கிற படியே ஜாயமான காலத்திலேயே –அவன் கண்களால் –கமலக்கண்ணன்–அமங்கலங்களாக விளிக்கும் -திருவாய்-1-9-9–என்கிற
நிரமலத்வகரமான பகவத் கடாஷம் என்கை-
இந்த ஸ்லோகத்தில் நான்கு படிகளும் உண்டே -கடாக்ஷம் தொடங்கி மோக்ஷ அர்த்த சிந்தக –
அங்கண் மா ஞாலம் பாசுரம் அர்த்தம் -த்யான ஸ்லோகம் இதுவே
பூதாத்தி ரகு நந்தன -பூதராக்கின நெடு நோக்கு -அசுத்தி போக்கினை கடாக்ஷங்கள்

ஜாயமான கடாக்ஷம் -கருவிலே திரு -உபாசகனும் தாமரைக் கண்ணையே உபாசித்து

(அஹல்யைக்கு சாப நிவர்தனம் திருப்  பாத தூளி -ருத்ரனுக்கு திரு மார்பு வியர்வை -சபரி ரிஷி பத்னிகளை  முதலானோரை பூதராக்கியது இவனது நெடு நோக்கு)

(விழியாவோ–வருத்தமோ கோபமோ பிரார்தனையோ அல்ல -ஆற்றாமையை வெளியிட்டவாறு
கதிர் மதியம் போல் திங்களும் ஆதித்யனும் இங்கு -)

அவதாரிகை –

கீழ் பாட்டில்
தங்கள் அபிமான ஸூன்யதையைச் சொல்லி
இப் பாட்டில் –
தங்கள் அனன்யார்ஹ சேஷத்வத்தைச் சொல்லுகிறார்கள்-

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்
எங்கள் மேல் சாபம் இழிந்தேலோ ரெம்பாவாய்-

(கீழ் வலி தொலைந்து –ஆற்றாது வந்து அடி பணிந்து -வலிமை தொலைந்தது நோக்கம்
அபிமானம் தொலைந்தால் மட்டும் பெருமான் இடம் பிடிமானம் வந்து விடாதே-தனக்கேயாக எனைக் கொள்ளுமீதே வேண்டுவது
இங்கு நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்-அநந்யார்ஹராய் -பிரியாமல் இருப்பதில் நோக்கம்)

பதவுரை

அம் கண் மா ஞாலத்து அரசர்–அழகியதாய் விசாலமாய்ப் பெரிதாயுள்ள பூமியில் (அரசாட்சி செய்த ராஜாக்கள்)
அபிமான பங்கம் ஆய் வந்து–(தங்களுடைய) அஹங்காரமடங்கி வந்து
நின் பள்ளிக் கட்டில் கீழே–உன் சிங்காசனத்தின் கீழ்
சங்கம் இருப்பார் போல்–திரள் திரளாக இருப்பது போலே
வந்து–நாங்களும் உன் இருப்பிடத்தேற) விடை கொண்டு
தலைப் பெய்தோம்–கிட்டினோம்’-எங்கேயோ திரிந்து இருந்த நாங்களும் வந்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த–கிண்கிணியின் வாய்ப் போலிரா நின்ற (பாதி விகஸிதமான)
தாமரைப் பூ போலே–செந்தாமரைப் பூப் போன்ற
செம் கண்–சிவந்த திருக் கண்கள்
சிறுச்சிறிது–கொஞ்சங்கொஞ்சமாக
எம் மேல்–எங்கள் மேலே
விழியாவோ-விழிக்க மாட்டாவோ?
திங்களும்–சந்திரனும்
ஆதித்யனும்–ஸுர்யனும்
எழுந்தால் போல்–உதித்தாற் போல
அம் கண் இரண்டும் கொண்டு-அழகிய திருக் கண்களிரண்டினாலும்
எங்கள் மேல் நோக்குதிஏல்–எங்களைக் கடாக்ஷித்தருள் வாயாகில்
எங்கள் மேல் சாபம்–எங்கள் பக்கலிலுள்ள பாபம்
இழிந்து–கழிந்துவிடும்’
ஏல் ஓர் எம் பாவாய்

அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான பங்கமாய் வந்து நின் பள்ளிக் கட்டில் கீழே சங்கம் இருப்பார் போல் வந்து தலைப் பெய்தோம்-
அழகியதான இடங்களை உடைய
மகா ப்ருதிவியை தன்னது என்று
அபிமானித்து இருக்கிற ராஜாக்கள்
அந்த அபிமானம் போய் –வந்து
உன் திருப் பள்ளிக் கட்டில் கீழே
சங்கம் சங்கமாக இருப்பாரைப் போலே

(சங்கத் தமிழ் மாலை நிகமனத்தில் கூட்டமாக)

நாங்களும்
பக்ன அபிமாநிகளாய்க் கொண்டு
ஒருபடிப் பட வந்து கிட்டப் பெற்றோம்

கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூ போலே செங்கண் சிறுச் சிறிதே எம் மேல் விழியாவோ-
திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போல்-
அறைவடத்தில் கிண்கிணி போலே
அர்த்த விகசிகதமான தாமரைப் புஷ்பம் போலே இருக்கிற-சிவந்த திருக் கண் மலர்களை பொறுக்கப் பொறுக்க
உன் கடாஷம் பெறாதே உறாவிக் கிடக்கிற நம் மேல் விழியாவோ –

அதாவது
1-தேகாத்ம அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
2-ஸ்வ ஸ்வா தந்த்ரிய அபிமானத்தை நீக்கி -அதுக்கு இசைந்தவாறே
3-சேஷத்வத்தை அறிவித்து -அதுக்கு இசைந்தவாறே –
4-அந்ய சேஷத்வ நிவ்ருதியை உண்டாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே
5-ஜ்ஞாத்ருத்வ பிரயுக்தமான ஸ்வ ஸ்மிந் ஸ்வ சேஷத்வ நிவ்ருத்தியை உண்டாக்கி -அதுக்கு இசைந்தவாறே
6-ஸ்வ ரஷண ஸ்வாந் வயத்தை நிவர்த்திப்பித்து – அதுக்கு இசைந்தவாறே –
7-உபாயாந்தரங்களை விடுவித்து -அதுக்கு இசைந்தவாறே
8-தத் ஏக உபாயனாம்படி பண்ணி -அதுக்கு இசைந்தவாறே –
9-ஸ்வ வியாபாரத்தில் ஸ்வாதீன கர்த்ருத்வ நிவ்ருத்தியைப் பண்ணுவித்து -அதுக்கு இசைந்தவாறே
10-பாரதந்த்ரிய பிரதிபத்தியைப் பிறப்பித்து அதுக்கு இசைந்தவாறே
11-சமஸ்த கல்யாண குண பரிபூர்ணனான தன்னை அனுபவிப்பித்து –
12-அனுபவ ஜனித ப்ரீதி காரித கைங்கர்யத்தை உண்டாக்கி
13-அக் கைங்கர்யத்தில் ஸ்வ போக்த்ருத்வ புத்தியை தவிர்ப்பிக்கை –

தேக ஆசக்த ஆத்மபுத்திர் யதி பவதி பதம் சாது வித்யாத் த்ருதீயம்
ஸ்வாதந்த்ர்ய அந்தோ யதி ஸ்யாத் ப்ரதம மிதர சேஷத்வதீச் சேத த்வதீயம்
ஆத்மத்ராண உந்முகச் சேத நம இதி ச பதம் பாந்தவா பாசலோலா
சப்தம் நாரயணாக்க்யம் விஷய சபலதீச் சேத சதுர்தீம் ப்ரபன்ன–அஷ்ட ஶ்லோகீ–ஸ்லோகம் -4-

தேஹ ஆஸக்த ஆத்ம புத்திஸ் பவதி யதி – தேஹத்திலே யூன்றின ஆத்ம புத்தியை யுடையவனாகில் [தேஹாத்ம ப்ரமமுடையவனாகில்],
த்ருதீயம் பதம் ஸாது வித்யாத் – ப்ரணவத்தில் மூன்றாவது பதமான மகாரத்தை நன்கு நோக்கக் கடவன்;
ஸ்வாதந்த்ர்ய அந்தஸ் ஸ்யாத் யதி – ஸ்வத்ந்த்ராத்ம ப்ரமமுடையவனாகில்,
ப்ரதமம் பதம் வித்யாத் – முதல் பதமான (லுப்த சதுர்த்தியோடு கூடின) அகாரத்தை நோக்கக் கடவன்;
இதர ஶேஷத்வதீஸ் சேத் – அந்ய சேஷத்வ ஜ்ஞானமுடையவனாகில்,
த்விதீயம் பதம் வித்யாத் – இரண்டவது பதமான உகாரத்தை நோக்கக் கடவன்;
ஆத்ம த்ராண உந்முகஸ் சேத் – ஸ்வ ரக்ஷணத்தில் ஊக்கமுடையவனாகில்,
நமஸ் இதி பதம் வித்யாத் – நமஸ் என்கிற நடுப் பதத்தை நோக்கக் கடவன்;
பாந்தவாபாஸ லோலஸ் – ஆபாஸ பந்துக்களிடத்தில் ஆஸக்தி யுடையவன்,
நாராயணாக்க்யம் சப்தம் வித்யாத் – நாராயண பதத்தை நோக்கக் கடவன்;
விஷய சபலதீஸ் சேத் – சப்தாதி விஷயங்களில் ஊன்றின புத்தியை யுடையவனாகில்,
சதுர்த்தீம் வித்யாத் – நாராயண பதத்தின் மேலுள்ள வ்யக்த சதுர்த்தியை நோக்கக் கடவன்.
(இப்படி யெல்லாம் நோக்க வேண்டிய அதிகாரி யாவனென்னில்)
ப்ரபந்நঃ – ப்ரபந்நாதிகாரி.

முழு நோக்கு பெறும் அளவானவாறே -என்றது-
இவ்வளவான பாகம் பிறந்தவாறே -என்றபடி –
இப்படி அல்லது
தேகாத்ம அபிமானனுக்கு-பரம பக்தி உண்டாக்கிலும் உண்டாகாது இறே

அங்கண் இரண்டும் கொண்டு –
சந்திர ஸூர்யர்கள் இருவரும் உச்சிப் பட்டால் போலே இருக்கிற
அழகிய திருக் கண்கள் இரண்டையும் கொண்டு –
இவ்வளவான பாகம் பிறந்த எங்களை கடாஷித்தாய் ஆகில் –
அதாவது
பரம பக்தியை உண்டாக்குகை-

(கீழ் 13 படிகளும் அவன் கடாக்ஷம் அடியாகவே பெறுகிறோம்)

அத்தால்

எங்கள் மேல் சாபம் இழிந்து –
மேல்
அவசியம் அனுபாவ்யமாய் இருக்கிற
விஸ்லேஷ வியசனம் தீரும் –
ஆகையால்-உக்த ரீத்யா கடாஷிக்க வேணும் என்று கருத்து –

திங்களும் ஆதித்யனும் எழுந்தால் போலே -என்றது அவன் கடாஷம்
ஸூக ரூபமாயும்
அஞ்ஞான நிவர்தகமாயும்
இருக்கையாலே –

(அடி பணிந்து அநந்யார்ஹரானவர்களுக்கு அவன் தானே அடியனாகி பரதந்த்ரனாகி செய்ய வேண்டியவை என்ன என்பானே
இது முதல் இவ்வாறு விழிக்க வேண்டும் -மேல் நடை அழகு காட்டி அருள வேண்டும் என்று பட்டியல் இடுவார்கள்)

(ப்ரமேய சேகரம்–பகவத் கடாஷம் அடியாக அஜ்ஞாத ஸூக்ருதம்  யுண்டாம் –
அதடியாக அத்வேஷம் யுண்டாம் –
அதடியாக பகவத் பாகவத விஷயங்களில் ஆபிமுக்யம் யுண்டாம் –
ஆபிமுக்யம் யுண்டானவாறே -த்யாஜ்ய உபாதேய விபாக ஜ்ஞானத்தில் கௌதுகம் யுண்டாம் –
அத்தாலே சாத்விக சம்பாஷணம் யுண்டாம் –
அத்தாலே சதாசார்ய சமாஸ்ரயணம் யுண்டாம் –
அது யுண்டானவாறே த்யாஜ்ய உபாதேய நிச்சயம் யுண்டாம் –
அது யுண்டானவாறே -ப்ராப்யாந்தரத்தில் வைராக்யமும் -பரம பிராப்யத்தில் அபி நிவேசமும் யுண்டாம் —
அநந்தரம்-ப்ராப்யாந்தர நிவ்ருத்திக்கும் -பரம ப்ராப்ய சித்திக்கும் அடியான சித்த உபாய ச்வீகாரம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் ப்ராப்தியிலே த்வரை யுண்டாம்
அநந்தரம் -அஹம் ஸ்மராமி -என்கிறபடியே -ஈஸ்வர ஸ்ம்ருதிக்கு விஷய பூதானாம்
அநந்தரம் பூத ஸூ ஷ்ம சரீர பரிஷ்வங்கம் யுண்டாம் –
அநந்தரம் -பரமார்த்த சம்சர்க்கம் யுண்டாம்
பின்பு ஹாரத்த  மார்க்க விசேஷ பிரகாசம் யுண்டாம் –
பின்பு ஹ்ருதய குஹா நிர்க்கமனம் யுண்டாம் –
அநந்தரம் -மூர்த்தன்ய நாடீ நிஷ்க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -அர்ச்சிராதி மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ஆதிவாஹிக சத்காரம் யுண்டாம் –
அநந்தரம் -ஆவரணாதி க்ரமணம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரக்ருத் யதி லங்கனம் யுண்டாம் –
அநந்தரம் விரஜா ஸ்நானம் யுண்டாம் –
அநந்தரம் -ஸூ ஷ்ம சரீர விச்லேஷம் யுண்டாம் —
அநந்தரம் -அபஹத பாப்மத்வாதி குணகண ப்ராதுர்பாவம் யுண்டாம் –
அநந்தரம் -அமா நவ கர ஸ்பர்சம் யுண்டாம் –
அநந்தரம் -பகவத் சங்கல்ப கல்பிதமான திவ்ய தேக ப்ராப்தி யுண்டாம் —
அநந்தரம் அகால கால்ய திவ்ய தேச ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் -அரம்ஹ்ரத தட ஸ்நானம் யுண்டாம் –
பின்பு திவ்ய அலங்காரம் யுண்டாம் –
பின்பு திவ்ய விமான ஆரோஹணம் யுண்டாம் –
பின்பு திவ்ய காந்தார பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் திவ்ய அப்சரஸ் சத்காரம் யுண்டாம்
அநந்தரம் -திவ்ய கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் ப்ரஹ்ம கந்த பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் அப்ராக்ருத கோபுர ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய நகர ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் ஸூ ரி பரிஷத் பிரத்யுத் கமனம் யுண்டாம் —
அநந்தரம் -ராஜ மார்க்க கமனம் யுண்டாம் –
அநந்தரம் -ப்ரஹ்ம தேஜ பிரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய கோபுர பிராப்தி யுண்டாம்
அநந்தரம் ப்ரஹ்ம வேச்மப்ரவேசம் யுண்டாம் –
அநந்தரம் -திவ்ய மண்டப ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் திவ்ய பரிஷித் ப்ராப்தி யுண்டாம் –
அநந்தரம் – ஸபத் நீக சர்வேஸ்வர தர்சனம் யுண்டாம் –
அநந்தரம் -ஸ்துதி ப்ரணாம அஞ்ஜலிபிரமுக சம்ப்ரம அனுவர்த்தனம் யுண்டாம்
அநந்தரம் பரமாத்மா சமீப ப்ராப்தி யுண்டாம்
அநந்தரம் பாத பீட பர்யங்கா ரோஹணம்  யுண்டாம்
அநந்தரம் -பகவத் உத்சங்களங்கம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலோக நாலா பாத்ய நுபவம் யுண்டாம் –
அநந்தரம் -ஆலிங்க நாத்ய அனுபவம் யுண்டாம் —
அநந்தரம் -ஸ்வ ரூப ரூப குண விக்ரஹாத்ய நுபவம் யுண்டாம் —
அநந்தரம் -அநுபவ ஜனித ப்ரீதி பிரகர்ஷம் யுண்டாம்
அநந்தரம் -நாநாவித விக்ரஹ பரிக்ரஹம் யுண்டாம் –
அநந்தரம் -சர்வ தேச சர்வ கால சர்வ அவஸ்த உசிதமான  சர்வ பிரகார கைங்கர்யம் யுண்டாம் —)

——————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.