இப்பேறு
எனக்கும்
என் சுற்றத்தாருக்கும்
என்றும்
வாய்க்க வேண்டும்
என்கிறார்-
————————————————————————————————————————————————–
வாய்க்க தமியேற்கு ஊழி தோறு ஊழிஊழி
மாகாயாம்
பூக்கொள் மேனி நான்கு தோள்
பொன்னாழிக்கை என்னம்மான்
நீக்கமில்லா வடியார்தம்
அடியார் அடியார் அடியார் எம்கோக்கள்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும்
நல்ல கோட்பாடே
—————————————————————————————————————————————————-
வாய்க்க தமியேற்கு-
தமியேற்கு வாய்க்க
புருஷார்தத்தின் எல்லையிலே மூழ்குதலாலே
உபமானம் இல்லாதவனான எனக்கு
இப்பேறே வாய்க்க வேண்டும் –
ஊழி தோறு ஊழிஊழி-
காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் இடைவிடாதே
உயிர் உள்ள வரையிலும்
இதுவே புருஷார்த்தம் -என்கை –
மாகாயாம் பூக்கொள் மேனி நான்கு தோள் பொன்னாழிக்கை என்னம்மான் –
அழகிய காயாம்பூ போலே இருக்கிற திருமேனியையும்
கற்பகத் தரு பணைத்தால் போலே இருக்கிற திருத் தோள்களையும்
கற்பகம் பூத்தாப் போலே இருக்கிற திரு ஆழியையும்
காட்டி
என்னை
தனக்கே அடிமை ஆக்கினவன் –
நீக்கமில்லா வடியார்தம் அடியார் அடியார் அடியார் எம்கோக்கள் –
பிரிய நினைக்கில்
என்னை அடிமை கொள்ள வேண்டும் -என்ன வேண்டும்படி –
குருஷ்வம் மாம் அநுசரம் வை தர்ம்யம் ந இஹ வித்யதே
க்ருதார்த்த அஹம் பவிஷ்யாமி தவ சார்த்த பிரகல்பதே -அயோத்யா -31-22-
பிரிய மாட்டாதவர்களில் எல்லை நிலம் ஆனவர்கள்
என் ஸ்வாமிகள்-
தமர்கள் தமர்கள் தமர்களாம் – என்று முடித்த எல்லையை
முதலாகத் தொடங்குகிறார்
சயமே அடிமை தலை நின்றார் ஆகிறார் -ஸ்ரீ பரத ஆழ்வான் போல்வார் –
சயமே -ஸுயம் பிரயோஜனமாக -கைப்பட்ட ராஜ்யத்தை பொகட்டவர்
கோதில் அடியார் ஆகிறார் -ஸ்ரீ சத்ருகன ஆழ்வார் போல்வார் –
ஸ்ரீ ராம பக்தி என்னும் கோது இல்லாமையாலே
நீக்க மில்லா அடியார் ஆகிறார் -இளைய பெருமாள் போல்வார் –
அவர்க்கே குடிகளாய்ச் –
இரு கரையராய் இராதே –
வேண்டும் பலன்களை தருவதில் மிக உயர்ந்த
ராமானுஜ -என்னும் நான்கு எழுத்து உள்ள மந்த்ரமாவது இல்லை யாயின்
என்னைப் போன்ற உயிர் கள் எத்தனை கொடிய நிலையை
அடைவார்களோ -அறியேன் –
ஆச்சர்யம் -என்று இருக்கை போலே காணும் அடுப்பது –
நசேத் ராமானுஜேதி ஏஷா சதுரா சதுரஷரீ
காம் அவஸ்த்தாம் ப்ரபத்யந்தே ஜந்தவ ஹந்த மாத்ருஷ -கூரத் ஆழ்வான்
அவர்க்கே குடிகளாய்ச் செல்லும் நல்ல கோட்பாடு
அவர்களுக்கே என் குடி முழுவதும்
அடிமைப் பட்டவர்களாய்ச் செல்லும்
நல்ல கட்டளை –
வாய்க்க தமியேற்கு
கோட்பாடு -கட்டளைப் பாடு –
இப் பிராப்யம் -எல்லை நிலை
எனக்கும்
என் சம்பந்திகளுக்கும்
வாய்க்க வேண்டும்
நல்ல கோட்பாடு கொள்கை
நீக்க மில்லா அடியார் –அடியார் -வாய்க்க தமியேற்கு
கால தத்வம் உள்ள அளவும் நிலைத்து இருக்க
காயம் பூக்கள் மேனி
நான்கு திரு தோள்கள்
அவனை பிரியாதவர்
அவன் நெஞ்சை விட்டு விரியாதவர்கள்
இடைவிடாமல் யாவதாத்மாபாவி
அழகிய திருமேனி ‘
கல்பக
நீக்க மில்லா -ஜலம் விட்ட மீன்
குருஸ்வமாம் அநு ஷணம்
சரம அவதி
என் சுவாமிகள்
முடிந்த நிலையை முதலாக கொண்டு
சயமே அடியார் பரத ஆல்வான் -சுயம் பிரயோஜனமாக கொண்டான்
எம்பெருமான் திரு உள்ளம் பின் சென்று செய்ததால் –
சந்தோஷத்துடன் தேரில் ஏறி திரும்பினான் -அவன் திரு உள்ளம் பின் செல்லும் பேறு கிட்டியதே
கோதில் சத்ருக்ன ஆழ்வான் -ராம பக்தி யாகிய குற்றம் இல்லை -அனககா -பாபமே இல்லாதவன் அயோத்தியில் இவநோருவன்
உத்தேச்ய விரோதி பாப சப்தம் -பரத ஆழ்வான் மேல் கண்ணை செலுத்த –
நீக்க மில்லா இளைய பெருமாள் -போல்வார்
ஸ்ரீ கூரத் ஆழ்வான் பணிக்கும் இப்படி –
இரு கரையராய் இல்லாமல்
ரகுவம்சம் காளிதாசன் –
பிரவாகம் இரு கரையும் தொட்டுக் கொண்டு போவது போலே
மாறி மாறி நீந்து இங்கும் அங்கும் சென்று வெள்ளத்தில் கிட்டி –
எம்பெருமான் பாகவதர்
ஆழ்வான் ஆண்டான் இருவரையும் வடுக நம்பி
சதுரா சதுர அஷரீ
ராமா னுச இதி சாதுர்யம்
இல்லையாகில் நாம் என்ன செய்வது ஹந்த -என்ன அவஸ்தை அடைந்து இருப்போம் –
யேவகாரம்-அவர்க்கே -என்று இருப்பது அடுப்பது
நல்ல கோட்பாடு வாய்க்க
—————————————————————————————————————————————————————-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.