Archive for October, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 25, 2013

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே

——————————————————————————————————————————————-

நிகமத்தில்
இப்பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய
பிறவிக்கு திட்டி விடம் –
சன்மம் தேய்ந்து அற-கண்கள் சிவந்து நோக்கும் -விடம்
நோக்கும் விடம் -திட்டி விடம்
கண்ணில் விடமுடைய தொரு பாம்பு போலே
திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே -கம்பர் கும்பகர்ண வதைப் படலம் -60

சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை –
இப்பத்தும் கற்றார்க்கு
பிறவி அறுகை அன்றோ பலமாக சொல்லுகிறது
அதனால் சென்று அனுபவிக்கும் பேற்றினைச் சொல்லுகிறது –
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வநந்த ஆழ்வான் மடியிலே
பெரிய பிராட்டியார் உடன் எழுந்தருளி இருக்கக் கண்டு அனுபவிக்கை அன்றோ
முக்தனாலே அடையப் படுகின்ற இன்பம் தான் –

அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் –
திருவடிகளில் சேருகையே தமக்கு ஸ்வாபாவமாக உடைய ஆழ்வார் –
அன்றிக்கே –
அடிச்சேர் வகை முடிப்பான் -என்றுமாம் –
ஞான ஆநந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம்
அடிமையே ஆயிற்று

முடிப்பான் சொன்ன வாயிரத்து –
சம்சார சம்பந்தத்தை அறுக்கைக்காக சொன்ன ஆயிரத்து –

இப்பத்தும் சன்மம் விட தேய்ந்தற நோக்கும் –
பிறவியானது விட்டுப் போம்படியாக நோக்கும்
அது செய்யும் இடத்தில்
தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் –
அதாவது
இப்பிறவிக்கு இப்பத்தும் திட்டி விடம் -என்கை-என்றது
இப்பத்துக்கும் பிறவிக்கும் ஒரே இடத்தில் இருக்கக் கூடிய
தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி –

நிகமத்தில்
சம்சாரத்துக்கு -நெருப்பாக பார்த்து
சன்மம் போக்க நோக்கும்
முடிப்பான் சொன்ன -சம்சாரம் முடிக்க
கண் சிவக்க உற்று பார்த்து நோக்கும்
சன்மம் நீங்கி பர்யங்க வித்யை அருளுவது போலே
திரு அநந்த ஆழ்வான் மேலே
சுடர் பாம்பணை நம் பரனை திரு மாலை
திரு அடிகளை சேர்வதே நிரூபகம்
செஷத்வமே ஆழ்வாருக்கு அடையாளம்
முடிப்பான் -சம்சாரம் அறவே முடிக்க
அடி சேர் வகை முடிப்பான்
விட்டு போம்படியாக
கண்கள் சிவந்து நோக்கும்
திருஷ்டி விஷம் ;போலே
பார்த்தாலே போகும்
இப்பத்து உள்ள இடம் சன்மம் இல்லை
சேதன சமாதியால் சொல்கிறார்
வேதம் -வேத புருஷன் போலே
திராவிட வேத புருஷன் கடாஷிக்க சம்சாரம் வெந்து போம்

————————————————————————————————————————————————————–

இருந்தவன் தான் வந்து இங்கி வர எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு-

சாரம்
இருந்தவன் தான் வந்து
இவர் எண்ணம் எல்லாம் திருந்த
இவர் தம் திறத்தே
பொருந்த கலந்து
இனியனாய் இருக்க
கலந்த நெறியை
ஆழ்வார் கண்டு
கட்டு உரைத்தாய்

 

—————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 25, 2013

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-

————————————————————————————————————————————————

இப்படி அவன் அங்கீகரித் ததற்கு நீர் செய்தது என் என்னில் –
அனுமதி மாத்ரம் செய்தேன் இத்தனை -என்கிறார் —

வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் –
தாயானவள் குழந்தையை வயிற்றில் வைத்து நோக்குமாறு போலே
உலகத்தைப் பாதுகாக்கும் அரசர்கள் முதலாயினார்களையும் –

யவரும் –
இந்த அரசர்கள் தங்களையும் நோக்கிக் கொண்டு போருகிற
அந்தணர் முதலாயினார்களையும் –

வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் –
அந்தணர் முதலாயினார்களையும் -அரசர் முதலாயினார்களையும் -தன்னுள்ளே கொண்டு இருந்துள்ள
மூன்று உலகங்களையும் –

தம் வயிற்றில் கொண்டு –
தம்முடைய நினைவில் ஆயிரத்தில் ஒரு கூற்றாலே நடத்திக் கொண்டு என்னுதல் –
அன்றிக்கே –
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரையும் யாவரையும்
தம் வயிற்றில் கொண்டு
நின்ற ஒரு மூவுலகையும் தம் வயிற்றில் கொண்டு –
என்று பிரித்துச் சொல்லுதல் –

நின்ற வண்ணம் நின்ற மாலை –
இவற்றை அடைய தன் வயிற்றில் கொண்ட இடத்திலும்
ஒரு விகாரம் இன்றிக்கே நின்ற சர்வேஸ்வரனை –

வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் –
உலகத்தை உடையனான சர்வேஸ்வரனை
என்னுடைய மனத்திலே பேராதபடி வைத்தேன் –

மதியாலே –
இதற்கு -இவன் படியை அறிந்து கொண்டேன் -என்கிறார் என்று அம்மாள் பணிப்பர்
அன்றிக்கே
மதி -அனுமதி -என்று ஆக்கி
அனுமதி மாத்ரத்திலே -என்பர் பட்டர் -என்றது
அவன் புகுகிற இடத்தில் விலக்கு அற்றிலன் -என்றபடி
மதியால் இசைந்தோம் என்னும் அனுமதி இச்சைகள் இருத்துவம்
என்னாத என்னை இசைவித்த என் இசைவினது -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ சூக்தி-

அனுமதி மாதரம் வைத்தேன்
வைத்தேன் மதியாலே முக்கியமான கருத்து
அனுமதி இச்சைகளால்
பிரஜை -காக்கும் அரசர் தாய் போலே –
அவர்களை ரஷிக்கும் பிரம்மாதி தேவதைகள் தாய் போலே
அவர்களையும் வயிற்றில் வைத்து ரஷிக்கும் -இவன் போலே இல்லை தாயாயகவே ரஷிக்கிறான் –
சங்கல்ப சகஸ்ர ஏக தேசத்தில் நடத்திக் கொண்டு நின்ற வண்ணன் நின்ற மாலை –
இருக்கிற படியே இருக்கிறவன்
விகாரம் இல்லாமல்
ச விபூதிகனான சர்வேஸ்வரனை
என்னுடைய ஹிருதயத்தில் மன்ன வைத்தேன்
மதியாலே
இவன் படியை அறிந்து கொண்டேன் அம்மங்கி அம்மாள் பணிக்கும்
மதி -அனுமதி என்றாக்கி -பிரகரணம் -ஞானம் விட அனுமதி -வெறிதே கீழே சொல்ல
அதுக்கு சேர பட்டர்
மதி -உபசர்க்கம் போட்டு அர்த்தம் சொல்லும் வழக்கம் உண்டே
புகுகிற இடத்தில் விலக்க வில்லை
அதுவே பற்றாசாக கொண்டு வந்து புகுந்து ஸ்மிதம் தோற்ற வீற்று இருந்தான்

———————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 25, 2013

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே

————————————————————————————————————————

அவன் தம்மோடு வந்து கலக்கைக்கு அடி
அவனுடைய திருவருள் காரணம்
என்கிறார்

அறியேன் மற்றருள் –
மற்று அருள் அறியேன்
வேறு ஒரு அருளும் அறியேன் –

என்னை யாளும் பிரானார் –
என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகர் ஆனவர் –

வெறிதே யருள் செய்வர் –
நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –

யாருக்கு என்னில் –
செய்வார்கட்குகந்து –
செய்வார்கட்கு –
எவனைப் பரம்பொருள் விரும்புகிறானோ –
யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு
தாம் தாம் ஓன்று செய்வார்க்கு -என்னில்
வெறிதே -என்னக் கூடாதே அன்றோ –
ஆயினும் ஒரு காரணம் வேண்டாவோ அருள் செய்வதற்கு -என்னில் –
ஈஸ்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம் –
விரும்பப் படுவான் அன்றோ பற்றப் படுவான் -ஆகிறான் என்னக் கடவது அன்றோ –
பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்
ருசி உண்டானாலும் இவன் சேதனனான வாசிக்கு அறிவின் காரணமான
தன்மை என்று அதனைக் கொள்ளலாம் அத்தனை அல்லது
பேற்றுக்கு சாதனமாக சொல்ல ஒண்ணாதே அன்றோ –

காரணம் இல்லாமலே செய்யப்படும் அருளை -நிர்ஹெதுக கிருபையை –
இப்படி வேறு எங்கு கண்டீர் -என்ன
புறம்பு தேடித் போக வேணுமோ –

சிறியேனுடைச் சிந்தையுள் –
மிகச் சிறியேனான என்னுடைய மனத்துக்குள்ளே –

மூவுலகும் தன நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே
மூன்று உலகும் தம் வயிற்றில்
நெறியாகக் கொண்டு
நின்று ஒழிந்தார்
உடையவன் உடைமையை நோக்குவது முறையாலேயாய்
இருக்கும் அன்றோ –
தம்மாலே பாது காக்கப் படுகின்ற பொருளை முறையாலே நோக்குகிறவர்
என்னுடைய மனத்திலே பொருந்தி முறை கெட பரிமாறா நின்றார்
தம்மை சிறுமைக்கு எல்லையாக நினைத்த படியாலே
முறை கேடாக தோற்றா நின்றதாயிற்று இது
அவன் இதுவரை மூவுலகுக்கும் அவ்வருகாகா நினைத்திரா நின்றான்
இவர் தம்மை மூவுலகுக்கும் இவ்வருகாக நினைத்திரா நின்றார்-

அவன் நிர் ஹேதுக கிருபை அடியாக வந்து கலந்தான்
காரணம் விசேஷம் இன்னது என்று அறிய முடியாத காரண விசேஷம் நிர்ஹெதுகம் -தேசிகன்
என்னை ஆளும் பிரானார் -அடிமை கொள்ளும் உபகாரகர்
வெறிதே -வெறுமனே -அருள் செய்வார்
செய்வார்கட்கு -அருள் செய்ய நினைப்பார்க்கு –
தாம் விஷயீ கரிக்க நினைப்பார்க்கு
ஏஷகா வ்ருண்தே வரிப்பவர்க்கு
ப்ரீதி உடன் செய்வார்
சி றியேனுடை சிந்தையுள்
மூ வுலகும் –
செய்வார்கட்கு -சாதனம் செய்வாருக்கு என்று கொண்டால்
நிற்ஹெதுக கிருபை ஒத்து கொள்வார் சொல்லும் அர்த்தம் கூடாதே
வெறிதே சொல்ல முடியாதே –
பொருந்தாதே
தாம் தாம் ஓன்று செய்வர்கட்கு -கூடாதே
ஆனாலும் ஹேது வேண்டாவோ என்னில் –
உகப்பாயிற்று ஹேது
அவன் சந்தோஷமே ஹேது என்கிறார்
ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார்
எம் ஏஷ ஏவ வ்ரு n தே -அவனே விரும்புகிறானோ
ப்ரீதிக்கு யார் இலக்காவான்
துஷ்டனும் சிஷ்டனும்
துஷ்டனாக இலக்கு ஆவது கஷ்டம்
ருசி உண்டானாலும்
பேற்றுக்கு சாதனம் இல்லை
ராக பிராப்தம் –ஸ்வரூப பிரயுக்தம் -விலக்காமை காட்ட சர்வ முக்தி பிரசங்க -வாராமல் இருக்க
உத்தியோகம் -யோக்யதை -வைக்க –
சாதனம் -படிப்பா -ஒருவரை எடுத்துக் கொள்ள -காரணம் –
இவன் இடம் அவர்கள் கொண்ட திருப்தி -இதுவே சாதனம் –
நியமிக்கும் அதிகாரி திரு உள்ளம் எண்ணமே காரணம்
ஏரி வெட்ட மழை சாதனம் இல்லை
கிருபை தக்க வைக்க இவை உபயோகம் போலே
நிர் ஹேதுக கிருபா பிரபாவம் வெறிதே -அருள் செய்வார்
சைதன்யம் -ருசி இருக்க வேண்டும் ஸ்வரூப நிஷ்டம் -சாதனம் இல்லை
அத்யல்பனாய் இருக்கிற என்னுடைய ஹிருதயம்
இங்கு தான் எம்பெருமானுக்கு ஜுரம்
நைச்ச்ய அனுசந்தானம்
பயந்து ஆழ்வாருக்கு ஆத்மா கௌஸ்துபம் போலே என்று மேலே உபதேசிக்க போகிறான் அடுத்த திருவாய் மொழி
உடையவன் உடைமையே நோக்குவது முறையாலே
முறை கெட பரிமாறுகிறான்
என்னை வயிற்றில் கொள்ளாமல் -அவன் நெஞ்சில் புகுந்தானே
அவன் இவரை மூ வுலகுக்கும் அவ்வருகாய் நினைக்க
தம்மை சிறுமைக்கு எல்லையாய் நினைத்து இருக்க
வஸ்துவான எனக்குள் வந்து இருக்கிறான்
முறை கெட பரிமாறா நின்றான்

 

—————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 25, 2013

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு
எவ்வாய்ச் சுடரும் தம்மில் முன் வளாய்க்கொள்ள
செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த
அவ்வாயன்றி யானறியேன் மற்றருளே

————————————————————————————————————————

அவன் தம்மோடு கலந்த கலவியினாலே உவகையனாய்
அது தன் பேறாக முறுவல் செய்த திருப் பவளத்தை
அனுபவித்துப் ப்ரீதர் ஆகிறார் –

செவ்வாய் யுந்தி வெண் பல் சுடர்க் குழை தம்மோடு –
சிவந்த திரு அதரம்
திரு உந்தி
வெளுத்த திரு முத்து
புகரை உடைத்தான திரு மகரக்குழை
இவற்றோடே கூட –

எவ்வாய்ச் சுடரும் –
மற்ற எல்லா இடத்திலுமுண்டான
ஒளியும் –
வாய் -இடம் –

தம்மில் முன் வளாய்க்கொள்ள –
ஒன்றுக்கு ஓன்று நான் நான் என்று
தம்மில் தாம் முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள –
அதாவது
நான் நான் என்பதற்காக முற்பட்டு ஆழ்வாரை வளைத்துக் கொள்ள -என்னுதல்
அன்றிக்கே
முற்பட்டு என்னை வளைத்து கொள்ள -என்னுதல் –

செவ்வாய் முறுவலோடு எனதுள்ளத்திருந்த –
அவாகீ -அநாதர -என்று இருக்கக் கூடிய பரம்பொருள்
இவரைப் பெற்று இது தன் பேறு என்று தோற்ற
முறுவல் செய்தபடி
பூ அலரும் பொது எங்கும் ஒக்க செவ்வி பிறக்குமாறு போலே
திவ்ய அவயவங்கள் தோறும் ஒரு வேறுபாடு பிறக்கும்படி யாயிற்று புன் முறுவல் பூத்தது –

அவ்வாயன்றி –
அவ்விடம் அன்றி -என்றது
புன் முறுவல் செய்து கொண்டு இருந்த இருப்பு அல்லது -என்றபடி –
புன் சிரிப்பை உடையவளான சீதை -என்று பிராட்டியின் இயற்கையைச் சொல்லி
சிரித்துக் கொண்டு -என்றதே அன்றோ -அப்போதை உவகையால் உண்டான வேறுபாடு என்னும் இடம் தோற்ற –
அஸ்மின் மயா ஸார்த்தம் உதார சீலா
சிலாதலே பூர்வம் உபோபவிஷ்டா
காந்த ஸ்மீதா லஷ்மண ஜாதஹாசா
த்வாம் ஆஹ சீதா பஹூவாக்யஜாதம் -ஆரண்ய -63-12-
செவ்வாய் -இயல்பு
செவ்வாய் முறுவல் -ப்ரீதியாலே புன் முறுவல் -என்றபடி

யானறியேன் மற்றருளே –
மற்று அருள் யான் அறியேன் –
மற்று உண்டான அருளை யான் அறியேன்
இதுவே அமையும்
மற்று ஓன்று வேண்டா -என்கை-

கலவியாலே அவன் ஹிருஷ்டனாய்
முறுவலுடன் செவ்வாய் அனுபவித்து
ஆழ்வார் ப்ரீதராய்
செவ்வாய்
உந்தி
வெண் பல்
சுடர் குழை
இவற்றோடு எவ்வாய் சுடரும் -மற்றை சொல்லாத இடத்து சுடரும்
வாய் =இடம் –
-எல்லா இடத்திலும் தேஜஸ்
தம்மில் நான் முந்தி நீ முந்தி ஆழ்வாரை வளைத்து கொண்டாலும் -அஹம் அஹம் -முன்னுக்கு வந்து
ஆழ்வார்
செவ்வாய் முறுவலுடன் உள்ளத்து இருந்த அவ்வாய் அன்றி வேறு ஒன்றை அறியேன்
அவாஹி அநாதர -தத்வம் இவரை பெற்று இப்படி இருப்பதே –
ஆழ்வாரை பெற்ற ஹர்ஷத்தால்
பூ அலறும் பொழுது எங்கும் ஒக்க செவ்வி பிறக்குமா போலே
ஸ்மிதம் செய்யும் பொழுது
திவ்ய அவயவங்கள் தோறும் விகசிக்க
செவ்வாய் ஆகிய அவ்வாய் அல்லது நான் அறியேன்
மற்றும் உண்டான அருளை நான் அறியேன்
இதுவே போதும் வேறு ஒன்றும் வேண்டேன்
காந்த்ஸ் ஸ்மிதா -பிராட்டி பிரிந்து சகரவத்தி திருமகன்
நீச்சல் போட்டி சித்ர கூடம் -12 வருஷம் முன்பு
லஷ்மண ஜாதஹாச -ஆரண்ய காண்டம்
வென்ற வேறுபாடு தோற்ற புன்முறுவல் இந்த கல்லில்
அஸ்மின் மயா சார்த்தம் ஸ்திலா உபாபவிஷ்டா
ஆண்புலிகள் -உங்களை வெல்ல முடியாதாம்
பிரிவி காலத்திலும் பெருமாளுக்கு இந்த நினைவு
ஹர்ஷத்தால் உண்டான விக்ரத்தி -இங்கும் அப்படியே –

———————————————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 25, 2013

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே

——————————————————————————————————————————————

எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றனைத் தந்து விட்டால்
புறம்பு தன்னை வேறு ஒருவர் கொள்வார் இல்லாமை எனக்குத் தந்தானோ
என் பக்கலிலே காதலால் தந்து அருளினான் -என்கிறார்

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் –
பேறுகளில் வேறே கனத்தது ஒரு பேற்றினை
எனக்கு தந்து விட்டால்

பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் –
பின்னை இப்பொருள் கடிதாக கை கொள்வார் உளரோ
என் -கைக் கொள்வார் இலரோ -என்னில் –
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே –
என்றது
இவ் வேப்பங்குடி நீரை புறம்பு பருகுவார் உளரோ -என்றபடி
கரு மாணிக்க குன்றம் -திரு மேனிக்கு திருஷ்டாந்தம்
தாமரை போல் -அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம்
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி எழுந்து அருளி இருக்க்கிற திரு மார்வு
கால் -அச் சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்
கண் -திருவடிகளில் விழுந்தாரை குளிர நோக்கும் கண்
கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை
செவ்வாய் -இன்சொற்களைச் சொல்லும் திரு அதரம்
உந்தி -அனுபவிக்கத் தக்க திரு உந்தி –
உந்தி மேலதன்றோ –அமலனாதி -3-என்னக் கடவது அன்றோ

எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றைக் கொடுத்து அகலாமல்
அபிநிவேசத்தால் தன்னையே தந்து அருளினான்
வேறு பிரயோஜனம் கொடுத்து இருந்தான் ஆனால்
பின்னை யாருக்கு கொடுக்கும்
நாடாக அமரர்கள் இருக்க
கொடுத்தவன் ஆள் இல்லாதவன் இல்லை
அயர்வறும் அமரர்கள் அதிபதி தானே இவருக்கு மயர்வற மதி நலம் அருளி
அதே அர்த்தம் இங்கும்
அவன் அருளை பெற பலர் இருக்க
என்னுடன் ஈடுபட்டு அபிநிவேசத்தால் வந்து புகுந்தான்
கரு மாணிக்க குன்றத்து தாமரை போலே அவயவங்கள்
அவன் பெருமை அறிந்து அவனை அடைய ஆசைப் படுகிறேன்
எனக்கு தரா விடில் யாருக்கு கொடுப்பான்
இப்படி சொன்னால் ஆழ்வார் பெருமை சொல்வதாகும்
பிரகரணம் அப்படி இல்லை
அவனுக்குஎல்லாரும் இருக்கச் செய்தேயும் கிடீர்
என்னுள் புகுந்தான் –
வேப்பங்குடி நீரை பின்னை கொள்வார் உண்டோ
எதிர்மறை அர்த்தம்
கொள்ள அனைவரும் மேல் விழுவார்
கரு மாணிக்க குன்றம் -திரு மேனி
ஆஸ்ரயத்துக்கு திருஷ்டாந்தம்
மேலே ஆறு அவயவங்கள் தாமரை -திருஷ்டாந்தம்
திரு மார்பு -புருஷகாரம் செய்ய பிராட்டி வாசஸ் ஸ்தானம்
கால் -தோற்று விழ
கண் -விழுந்தாரை கடாஷிக்க
கை -அணைத்து கொள்ள
செவ்வாய் -ஸ்மிதம் சொல்ல
உந்தி -அனுபாவ்யம் வஸ்து –

————————————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 25, 2013

திகழும் தன் திருவருள் செய்து உலகத்தார்
புகழும் புகழ் தானது காட்டித் தந்து என்னுள்
திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே

———————————————————————————————————————————

ஒருவர் பெரும் பேறே என்று உலகம் அடங்க கொண்டாடும்படி
என் உள்ளே வந்து நின்று அருளினான்
அதனால் வந்த புகழை அல்லது
இவனுடைய மற்று உள்ள புகழையும் ஒன்றாக மதியேன் -என்கிறார்-

திகழும் தன் திருவருள் செய்து –
பிறர் உடைய அளவுக்கு உட்பட்ட அருள் போலே அன்றிக்கே
இரண்டு தலைக்கும் நிறமாம்படியான
தன் திருவருளை என் பக்கலிலே செய்து –

உலகத்தார் புகழும் புகழ் தானது காட்டித் தந்து –
உலகத்தார் புகழும் தான் புகழ் அது காட்டித் தந்து –
நான் பெற்ற பேற்றினைக் குறித்து
உலகத்தார் செய்யும் தோத்திரத்தை தான் காட்டித் தந்தான் -என்றது
பாலேய் தமிழர் இசைகாரர் பத்தர் பரவும் ஆயிரம் -1-5-11-என்று
உலகமாகக் கொண்டாடும்படி செய்கையைக் காட்டித் தந்தான்
என்றபடி-
இமௌ முனீ பார்த்திவ லஷணா ன்விதௌ
குசலீவௌ சாபி மகா தபஸ்வி நௌ
மமாபி தத் பூதிகரம் ப்ரவஷ்யதே
மகாநுபாவம் சரிதம் நிபோதாதா -பால -4-32-
இவர்கள் முநிவேடம் தரித்தவர்கள் ஆயினும்
இராஜ சின்னங்களோடு கூடி உள்ளார்கள்
பாடகர்கள் ஆனாலும் பெரும் தவம் உடையவர்களாய் இருக்கிறார்கள் -என்றாப் போலே
உலகம் முழுவதும் புகழா நின்றது -என்றபடி –

என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒன்றே ஒத்து நின்றான்
என் உள்ளே வந்து புகுந்து
பெறாப் பேறு பெற்றவனாய்
நிலை பெற்று புகர் உடையானாய்-கால் வாங்கிப் போக மாட்டாதே
விளங்கா நின்றுள்ள ஒரு ரத்ன மலை போலே நின்றான் –

புகழும் புகழ் மற்று எனக்கும் ஓர் பொருளே –
–
என் உள்ளே நின்ற இம் மகா குணத்தை அல்லது
மற்று உள்ள புகழை ஒரு புகழாக மதியேன் –
நான் இந்த்ரியங்கட்கு கட்டுப் பட்டு நிற்கும் நிலையைப் போக்கினான்
என்று நான் சொன்னதை ஒரு சரக்காக நினையேன் -என்றபடி-

ஒருவர் பெரும் பேறே-என்று இத்தை லோகத்தார் புகழ்வதை
கொல்வான் -மற்றவை புகழ் இல்லை
இதற்க்கு சமமாக
என்னுள் திகழும் மணிக்குன்றம் ஒத்து –
திகழும் தன் -திருவருள் -இரண்டு தலைக்கும் நிரமாம்படி
அபரிச்சின்னம் இல்லாமல்
தேசம் காலம் அவஸ்தை மூலம் மற்றவை அளவு பட்டும் இருக்கும்
அவரவர் -இறையவர் -லபதே தாதா காமா -கொடுப்பார் –
அந்தவது -பலம் தேசாம் -முடிவு உள்ளவை -கீதையில் -அல்பமே அவை
மேதா ஞானம் -மேதாவி
அல்பமான ஞானம் உடையவர் -அல்ப புத்தி -அல்ப பலன்களுக்கு அல்ப தேவதை ஆஸ்ரயிப்பார்
சங்கரர் -பாஷ்யம்
இரண்டுக்கும் ஒரே சரமம்
என்னை ஆஸ்ரயித்து-பெறாமல் ஐயோ பாவம் -என்கிறார்
அந்தவது து –
நாராயணன் பர தேவதை அவரும் சொல்லு
சமானம் ஆராதனம் தப்பாக சொல்லி
ஆழ்வார் அருளிச் செயல்
இவன் சுலப ஆராதனை உரியவன் அவரும் உணர வில்லை
உலகத்தார் புகழுள் புகழ் அது காட்டித் தந்து –
வந்த பின்பு தேஜஸ் அடைந்து தனது பேறு என்று தோற்றும் படி –
சர்வேஸ்வரன் ஒருவனே அழியாதவன்
அதனால் அவன் அருளும் அபரிச்சின்னம்
இரண்டு தலைக்கும் நிறமாம் தரிக்க பண்ணும்
எம்பெருமான் எப்படி கடாஷித்து இருக்கிறான்
பாலே ய் தமிழர் இசை காரர் பத்தர் பரவும் –
தமிழும் இசையையும் பண்ணார் பாடல் –
பகவத் பக்தர்
நானாவிதவாரும் புகழும் படி
இமௌ முனி-பார்த்திவ ளஷனம் பொருந்தி -நாடாக புகழா நின்றது
மமாபி தத் மகானுபாவம் -பால காண்டம் –
குசலவர் வைபவம்
மகா தபச்விகள் -இவர்களே புகழ் பெற்றார்கள்
நாடு முழுவதும் ஸ்ரீ இராமாயண பாராயணம் செய்து நன்மை பெற
சக்கரவர்த்தி திருமகனும் ஆசை கொண்டு நல்லது பெற ஸ்ரீ ராமாயணம் பராயணம் திரு மாளிகையில் நடக்க
நல்லதும் பெற்றாரே
அது போலே ஆழ்வாருக்கு பெருமை ஏற்படும்படி
நாடாக புகழா நின்றது
என்னுள்ளே வந்து புகுந்து
திகழும் மணிக் குன்றம்
கால் வாங்கி போக மாட்டாதே
நின்றான் நிலைத்து நின்றான்
இந்த மகா குணம் அல்லது வேறு ஒன்றை புகலாக மதியேன்
கீழே சொன்ன இந்த்ரிய வஸ்தை சரக்காக கொள்ள மாட்டேன்
என்னுள் திகழும் இதுவே புகழ்
லோகத்தார் புகழும் புகழும் புகழ் இல்லை என்கிறார்-

————————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 25, 2013

மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-

—————————————————————————————————————————-

அவன் என்னை மயங்கச் செய்தான் அல்லன்
என் உள்ளே கலந்து அருளினானே
இதிலே ஓர் ஐயம் இல்லை -என்கிறார்

மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து –
என்னை வஞ்சித்து-மாய மயக்கு மயக்கான்-
அடியார் அல்லாதாரான துரியோதனாதியர்களைக் குறித்து
ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தும் –
பகலை இரவாக்கியும்
வஞ்சித்தான் இத்தனை அல்லது
பாண்டவர்கள் விஷயத்தில் அதனைச் செய்தானோ
ஆகையாலே தனக்கே பரமான என்னை வஞ்சித்து
ஆச்சர்யமான மயக்கத்துக்கு உரிய சாதனங்களாலே
மயங்கச் செய்யான் –
காரணம் -என் -என்ன –
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் –
நித்ய சூரிகளுக்கு அவ்வருகான ஏற்றத்தை உடையனாய் வைத்து
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
என்னுடைய அடிமையை நிர்வகித்த
பரம ஆப்தன் -என்னை வஞ்சித்து மாய மயக்கு மயக்கான் –
ஆனால் இப் பேறு வந்தபடி தான் என் என்ன –

தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான் தேசந்திகழும் தன் திருவருள் செய்தே
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்-
உலகு எல்லாம் அறியும்படி
என் பக்கலிலே காரணம் இல்லாமலே திருவருள் செய்து
குற்றங்கட்கு எல்லாம் எதிர்தட்டாய்
வேறுபட்ட சிறப்பினை உடைய ஒளி உருவமாய்
சுத்த சத்வ மயமாய்
தனக்கே உரியதான வடிவை என்னுள் வைத்தான்
புறம்பு ஒருவருக்கு இன்றிக்கே
தனக்கே உரியதான அருள் ஆதலின்
தன் திரு வருள் -என்கிறார் –
தான் வேறு ஒரு சாதனத்தைக் கொண்டு சாதித்துக் கொள்ளப் படாதவன் –
என்னும்படியைக் கொண்டு என் உள்ளே பிரகாசிப்பித்தான்
ஆதலின் -என்னுள் வைத்தான் -என்கிறார்
யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம்-கட உபநிஷத் -2-என்கிறபடியே
பரமாத்மா எவனை விரும்புகிறானோ அவனாலேயே அடையத் தக்கவன்
அவனுக்கு இந்த பரமாத்மா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான் -என்றபடி-

அவன் பிரமித்தான் அல்லன்
கலந்து அருளினானே
மாய மயக்கு மாக்கான் -என்னை வஞ்சித்து
ஆயன்
அமரர்க்கு அரி ஏறு
பிராப்தியும் உண்டே
தேசம் திகழும் -தேஜஸ் -உலகம் பிரசித்தமான அருள்
அநாஸ்ரிதர் துரியோதனாதிகள் விஷயம் -ஆயுதம் எடேன் -பகலை இரவாக்கி
பாண்டவர்களுக்கு செய்ய வில்லையே

ஆயனாக்கி வந்ததே
அடியார்களுக்கு இட்ட வழக்காகி இருக்க
அது மட்டும் இல்லை
அம்மான்-சேஷத்த்வம் உணர்த்திய உபகாரகன் –
பிராப்தன் -சுவாமி சொத்தை மயக்க மாட்டானே
பேறு வந்த படி என் என்ன
தேசம் திகழும்
தேசம் அறியும்படி
தன் திரு வருள் – பண்ணி
தூய சுடர் சோதி -ஹேய பிரத்ய நீக்க -விளஷன சுத்த சத்வமயம்
திவ்ய மங்கள விப்ரகம் என்னுள் வைத்தான்
தூய சுடர் சோதி -பிராப்யம்
தேசம் திழல் தன் அருள் செய்து -பிராபகம் –
நாயமாத்மா சுருதி வாக்கியம் –
தஸ்ய ஏவ எவன் ஒருவனை அவன் விரும்புகிறானோ அவனுக்கு காட்டிக் கொடுப்பான்
அநந்ய சாத்யன் -என்னும் நிலையைக் காட்டிக் கொடுத்தான் –
கேவலம் சுயாச்சை –அஹம் -வேத புருஷன் மட்டும் இல்லை -அவனே அருளி
கிருபையால் ஆழ்வாரை கடாஷித்தான்

————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

October 25, 2013

அருள் தான் இனி யான் அறியேன் அவன் என்னுள்
இருள் தானற வீற்றிருந்தான் இதுவல்லால்
பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல
மருள் தானீதோ மாய மயக்கு மயக்கே

—————————————————————————————————————————————–

எல்லாவற்றாலும் நிறைவுற்றவனாக இருக்கின்றவனான சர்வேஸ்வரன்
தம் பக்கல் இப்படி காதலைச் செலுத்துவது கூடாதது ஓன்று என்று
ஐயம் கொண்டு
இவ்வனுபவம் மயக்கம் முதலானவைகளாலே பிறந்ததோ -என்கிறார்-

அருள் தான் இனி யான் அறியேன் –
நான் இந்த்ரியங்களுக்குக் கட்டுப்பட்டு இருத்தலைத்
தவிர்த்த இது தன்னையும் இப்போது ஒன்றாக நினைத்திரேன்
எதனைப் பற்ற என்னில் –

அவன் என்னுள் இருள் தானற வீற்றிருந்தான் –
அவன் என் மனத்திலே அறிவின்மை யாகிற இருள் எல்லாம் புகும்படி
பெறாப் பேறு பெற்றானாய்-அவ்வேறுபாடு தோற்ற இரா நின்றான்
இனி எனக்கு வேறு ஓன்று தோற்றுமோ-

இதுவல்லால் பொருள் தான் எனில் மூ வுலகும் பொருள் அல்ல –
இதற்கு திருமலை ஆண்டான் பணிக்கும் படி –
உலகத்தார் செல்வங்களில் தலையாக சொல்லுவது
மூன்று உலகத்து செல்வதை அன்றோ –
அதுவும் எனக்கு ஒரு சரக்கு அன்று -என்கிறார் -எனபது
அங்கன் அன்றிக்கே
என்னுடைய மனத்திலே புகுந்து எழுந்து அருளி இருக்கிற இருப்பு ஒழிய
வீற்றிருந்து ஏழு உலகும் தனிக் கோல் செல்ல இருக்கும் இருப்பும்
தனக்கு ஒரு ஐஸ்வர்யமாக நினைத்து இருக்குமோ என்று பார்த்தால்
அதுவும் ஒரு சரக்காக நினைத்து இருக்கின்றிலன் எம்பெருமான் –
என்று எம்பெருமான் அருளிச் செய்வர் –
இதுவே -சர்வேஸ்வரனின் காதலின் பெருக்கைக் கூறும் -இடத்துக்கு பொருந்துவது –

மருள் தானீதோ –
ஒரு சம்சாரி சேதனனை பெற்று சர்வேஸ்வரன் இப்படி இருந்தான் என்னுமது கூடுவது ஓன்று அன்று
இது என் அறிவு கேட்டால் சொல்லுகிறேனோ –

மாய மயக்கு மயக்கே –
அன்றிக்கே
அவன் தன்னுடைய ஆச்சர்யமான மயக்கத்துக்கு சாதனங்களாய் இருப்பவற்றைக் கொண்டு மயங்கச் செய்தானோ
நெடுநாள் இந்த சரீரத்தைக் கொடுத்து அறிவு கொடுத்தான் –
இப்போது தன்னுடைய காதலாலே என்னை மயங்கச் செய்தான் –

அவாப்த சமஸ்த காமன்
எனக்கு இப்படி செய்தானா
சங்கை
மருளா
மாய மயக்கோ என்கிறார் இதில்
அடுத்த பாசுரம் சங்கை இல்லை -மெய் தான் என்கிறார்
இது கொண்டே பிரவேசத்தில் அருளி காட்டினார்-

இது பிரம சொபனாதிகளோ -சங்கை கொள்கிறார் இதில்
அனுக்ரகம்
என்னுள் ருள் போகும் படி வீற்று இருக்க
இது மருளா மாய மாயக்கா
இந்த்ரிய வஸ்தை தவிரிந்த அதுவும் உபகாரம் இல்லை
என் உள்ளத்தில் புகுந்ததை நினைத்தால் -இதுவே பெரிய
பாரமாய பழ வினை பற்று அறுத்து -வாரமாக்கி -வைத்தான் -வைத்த தன்றி என்னுள் புகுந்தான் –
அவன் ஹிருதயத்தில் அஞ்ஞானம் அந்த காரம் போகும் படி
அவாப்த சமஸ்த காமன்
என்னுள் தன பேறாக
பெருமை உடன் வேறுபாடு தோற்ற இரா நின்றான்
இது அல்லால் மூ வுலகும் பொருள் அல்ல
திருமாலை ஆண்டான் -மூன்று உலகும் பொருள் அல்ல -ஆழ்வார் நினைவாக ஆளவந்தார் அருளிச் செய்ததாக –
திருமாலை ஆண்டான் பணிக்கும் படி –
நாட்டார் ஐஸ்வர் யமாக மதிப்பார்
எம்பெருமானார் -நிர்வாகம்
பிரகரணம் சேராதே
ஆழ்வாரை எல்லாமாக கொண்டு –
ஹிருதயம்புக தானே அர்த்தியாக வந்தான்
ஜகத் வியாபாரம் பொருள் அல்ல -என்கிறார் அவனுக்கு
அதுவும் ஒரு சரக்கு இல்லை -மூ வுலகும் பொருள் அல்ல எம்பெருமானுக்கு –
வீவில் சீர் ஆற்றல் மிக்க அம்மான் -இதையே பெறாப் பேறாக கொள்வான்
ஆழ்வார் என்றுமே த்ரை லோக்யம் ஐஸ்வர் யமாக நினைத்து இருக்க வில்லையே
முன் பின் பாசுரம் பார்த்து பிரகரணம் படி எம்பெருமானார் அருளிச் செய்தார் –
மருள் தான் ஏதோ
சம்சாரி செதனனைப் பெற்று சர்வேஸ்வரன் இப்படி இருந்தான் எனபது கூடுமோ
நான் அறிவு கேட்டால்
அவன் என்னை பிரமிக்கப் பட்டானா
நெடு நாள் பிரகிருதி இட்டு அறிவு கெடுத்தான்
இப்பொழுது அபரிமித போகம் கொடுத்து அறிவு கெடுக்கிறான்-

—————————————————————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ திருப்பாவை – கனைத்திளம் கற்று எருமை -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

October 25, 2013

கீழ் ஆஞ்ஞா கைங்கர்ய நிஷ்டர் -ஸாஸ்த்ர விதி மீறாமல் செய்பவன்
இதில் அனுக்ஞ்ஞா கைங்கர்ய நிஷ்டர் -ஆசை ராகத்துடன் செய்பவன்

எம்பெருமானார் போல் இவள் -உயிர்கள் உடையவன் நாராயணனே என்று அனைத்து இல்லத்தாரும் அறிந்தது போல்
இவளைப் பற்றி அனைவரும் அறிவர்-ஒரு கையால் ஒருவன் தன் தோள் ஊன்றி கண்ணனுக்கு கைங்கர்யம் செய்பவன்

அவதாரிகை –
இப் பாடலில்-பாகவத அபிமான நிஷ்டரை-எழுப்புகிறார்கள்

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

இள கன்று எருமை-இளங்கன்றுகளை யுடைய எருமைகளானவை
கனைத்து–(பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு
கன்றுக்கு இரங்கி–(தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து–(கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர-முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப்பெருக்கினால்)
இல்லம்-வீட்டை
நனைத்து – (முழுவதும்) ஈரமாக்கி
சேறு ஆக்கும் நல் செல்வன்-சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய
தங்காய்-தங்கையானவளே!
பனி-பனியானது
தலை வீழ-எங்கள் தலையிலே விழும்படி
நின் வாசல் கடை பற்றி-உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு,
சினத்தினால்-(பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்
தென் இலங்கை கோமானை-தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை
செற்ற-கொன்றொழித்தவனும்
மனத்துக்கு இனியானை–சிந்தனை இனியனுமான இராம பிரானை
பாடவும்-(நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்
நீ-நீ
வாய் திறவாய்-வாய்திறந்து பேசுகிறாயில்லை,
இனித் தான்-எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்
எழுந்திராய்-எழுந்திரு;
ஈது என்ன பேர் உறக்கம்-இஃது என்ன ஓயாத தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும்-(இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும்
அறிந்து-(நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று:

(கடாக்ஷ வெள்ளம் -ஆலம்பனத்துக்கு திருமணத்தூண்கள் -மால் வெள்ளம் -பால் வெள்ளம் -பனி வெள்ளம் -அனைத்தும் கலந்து

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைப்ப-திருமாலை-இங்கும் சினத்தினால் தென்னிலங்கை செற்றான்– சினத்தினால் மனத்துக்கு இனியானை)

(உறக்கம் -பேர் உறக்கம்–அனந்தல் ஆற்ற அனந்தல்–அரவம் பேர் அரவம்)

கனைத்து –
ஸ்வாசார்யன் தனக்கும்
ஸ்வ சந்தானத்துக்கும்
பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று-வியசனப் பட்டு –

(ஸ்வ ஆச்சார்யன் நித்ய வாசம் பண்ணும் இடத்தில் இல்லாமலும் -அவர் திரு நாட்டை அலங்கரிக்கப் பெறலாமே -இந்த வியஸனம்)

இளம் கற்று எருமை –
பால சந்தானமுடைய சிஷ்யர் –

(அஸ்மத் குருப்யோ நம அஸ்மத் பரம குருப்யோ நம -அஸ்மத் ஸர்வ குருப்யோ நம -மூவரையும் சொல்கிறோமே)

கன்றுக்கிரங்கி-
ஸ்வ சந்தானத்திலே தயை பண்ணி –

நினைத்து –
ஸ்வா சார்யன் தன்னை அதிஷ்டித்துக் கொண்டு
ஸ்வ சந்தானத்துக்கு பகவத் குணாநுபவம்
பண்ணுவித்து அருளுகிறான் -என்று நினைத்து –

(என் வாய் முதல் அப்பன் தானாகாத் தன்னைப் பாடி போல் ஸ்வ ஆச்சார்யனை அதிஷ்டானம் பண்ணி உபதேசிக்க வேண்டுமே)

முலை வழியே நின்று பால் சோர-
பாவன பிரகர்ஷத்தாலே
ஸ்வா சாரய அபிமானம் ஈடாக
பகவத் குணங்கள் சுரக்க –

(நினைவு –பாவனை இருந்தால் தானே உபதேசம்
முலை வழியே -ஆச்சார்ய அபிமானம் தான் ஊற்று வாய்
பால் -பகவத் கல்யாண குணங்கள்
நின்று சோர -குழந்தை முட்ட தாய் பால் தருவதற்கும் மேல் அன்றோ இது – -நான்குக்கும் வியாக்யானம்
த்வயார்த்த உபதேசம் உனது ஸ்வரூப லாபத்துக்கும் தனது ஸ்வரூப லாபத்துக்கும்
பிரதியுபகாரம் -உபய விபூதி கொடுத்தாலும் ஸத்ருசம் அல்லவே)

நனைத்தில்லம் சேறாக்கும்-
ஸ்ரோத்தாக்கள் உடைய ஹிருதயத்தை
சம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிரப் பண்ணி –
குணானுபத்தாலே களிக்கும்படி பண்ணுகிற –

நற் செல்வன் –
ஸ்லாக்கியமான சம்பத்தை உடைய பாகவதன் உடைய

தங்காய்-
சோதரியானவளே –

பனித் தலை வீழ –
பனியானது தலை மேல் சொரிய-
அதாவது-
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற
ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம் –

நின் வாசற் கடை பற்றிச்-
கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும்-
பகவத் குணானுபவ (ஞான பாவம் )பிரவாஹம் என்ன –
மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய
அருளிச் செயலால் வரும் குணானுபவ (ப்ரேம பாவம் )பிரவாஹம் என்ன –
நடுவே பாகவத குணானுபவ (போதயந்த பரஸ்பரம் )பிரவாஹம் என்ன –

இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம்
உனக்கு பிரதிபாதகமான நமஸிலே
த்வார வர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி
கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற
நகாரத்தைப் பற்றி என்றபடி –

(அல்லேன் எனக்கு -முன் நகாரம் இருக்க வேண்டுமே -கண்டேன் ஸீதையை போல்)

சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் –
கோபத்தினாலே
யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான
அஹங்காரத்தை நசிப்பித்து
அத ஏவ மனத்துக்கு இனியானை –
சக்கரவர்த்தி திருமகனை –

(கோபத்தினாலே யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான-தெற்கு இலங்கை –
அஹங்காரத்தை நசிப்பித்து-கோமானை -ராவணனை -அநாத்மனி ஆத்ம புத்தி -என்னது அல்லாததை என்னது என்பது மமகாராம்)

பாடவும் நீ வாய் திறவாய்-இனித் தான் எழுந்திராய் –
எங்கள் ஆற்றாமை காண வேண்டும் என்று இருந்தாயாகில்
கண்ட பின்பும் உறங்கும் இத்தனையோ –
எழுந்து இராய் –

யீதென்ன பேருறக்கம்-
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் நித்தரை போலும் அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் ஆர்த்தி உணர உணரும் ஈஸ்வரன் உடைய உறக்கம் போல் அன்றிக்கே
உபய விலஷணமான இம் மகா நித்தரை ஏது –
சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே
சத்த்வதோரமான காலத்தில் தீருபடியாய் இருக்கும் –
ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷணசிந்தா ரூபம்
ஆகையாலே
பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும் –

அனைத்தில்லத்தாரும் அறிந்து –
நாங்கள் உன்னை எழுப்பு கிறது எல்லாரும் அறிய வேண்டும்
என்று இருந்தாய் ஆகில்
அது எல்லாரும் அறிந்தார்கள் -எழுந்திராய் என்கிறார்கள்
பகவத் விஷயம் ரகஸ்யம் என்று இருந்தாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தமாய்த்து -எழுந்திராய் -என்கிறார்கள் –

(அநு வர்த்தன ப்ரஸன்னாச்சார்யார் முன்புள்ள முதலிகள் -க்ருபா மாத்ர ப்ரஸன்னாச்சார்யார் ராமானுஜருக்கு பின்புள்ளார் அன்றோ)

கீழ் பாட்டில் -கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து -என்று
ஸ்வ வர்ண உசித தர்ம அனுஷ்டானத்தைச் சொல்லி
இப் பாட்டில் சொல்லாமையாலே
அனுஜ்ஞா கைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஞ்ஞா கைங்கர்ய ஹானி
ஸ்வரூப விரோதம் அன்று என்கிறது

இவன் எருமை கறவாமைக்கு
இளைய பெருமாளை திருஷ்டாந்தமாக அருளிச் செய்து
உபாயாந்தர த்யாகத்துக்கு பிரமாணமாக
ஐஸ்வர்ய கைவல்ய லாபங்களில் அபேஷை இல்லாதார்க்கு
தத் சாதன அனுஷ்டானத்தில்
அபேஷை பிறவாது என்னும் அபிப்ராயத்தாலே-

ந தேவ லோகம் -ந அமரத்வம் -வேண்டேன் என்றான் இளையபெருமாள்
த்வனி ப்ராப்யாந்தர பரித்யாகம் இருந்தாலும் உபாயாந்தர பரித்யாகத்துக்குப் பிரமாணமாக காட்டுவதற்கு ஹேது சாதிக்கிறார்

(இங்கு சரம பரகத ஸ்வீ காரம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்றதாயிற்று)

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீதிருப்பாவை – கனைத்திளம் கற்று எருமை -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் வியாக்யானம் –

October 25, 2013

அவதாரிகை
ஸ்ரீ கிருஷ்ணனைப் பிரியாமல்-இளைய பெருமாளைப் போலே இருப்பான் ஒருவன்
தங்கை யாகையாலே ஸ்லாக்யையாய்-இருப்பாள் ஒருத்தியை எழுப்புகிறார்கள்-

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

இள கன்று எருமை-இளங்கன்றுகளையுடைய எருமைகளானவை
கனைத்து–(பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு
கன்றுக்கு இரங்கி–(தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து–(கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர-முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப்பெருக்கினால்)
இல்லம்-வீட்டை
நனைத்து – (முழுவதும்) ஈரமாக்கி
சேறு ஆக்கும் நல் செல்வன்-சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய
தங்காய்-தங்கையானவளே!
பனி-பனியானது
தலை வீழ-எங்கள் தலையிலே விழும்படி
நின் வாசல் கடை பற்றி-உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு,
சினத்தினால்-(பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்
தென் இலங்கை கோமானை-தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை
செற்ற-கொன்றொழித்தவனும்
மனத்துக்கு இனியானை–சிந்தனை இனியனுமான இராம பிரானை
பாடவும்-(நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்
நீ-நீ
வாய் திறவாய்-வாய்திறந்து பேசுகிறாயில்லை,
இனித் தான்-எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்
எழுந்திராய்-எழுந்திரு;
ஈது என்ன பேர் உறக்கம்-இஃது என்ன ஓயாத தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும்-(இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும்
அறிந்து-(நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று:

வியாக்யானம் –
கனைத்து-
கறப்பார் இல்லாமையாலே-முலை கடுத்து கதறுகை –

இளம் கற்று எருமை-
இளம் கன்றாகையாலே-பாடாற்றாமை –

கன்றுக்கிரங்கி –
தன் முலைக் கடுப்பு கிடக்க -கன்று என் படுகிறதோ -என்று இரங்கி –
எம்பெருமான் ஆஸ்ரித விஷயத்தில் இருக்கும் படிக்கு நிதர்சனம் இறே
இத்தால் -சொல்லிற்று ஆய்த்து –
அவன் எருமைகள் கறவா விட்டால்-அவை படும் பாட்டை-
நாங்கள் உன்னாலே படா நின்றோம் -என்கை

நினைத்து முலை வழியே நின்று பால் சோர –
கன்றை நினைத்து-பாவன பிரகர்ஷத்தாலே முலையிலே-வாய் வைத்ததாகக் கொண்டு பால் சொரியா நிற்கும்-
முலை வழியே –
கை வழி தவிர –
நின்று பால் சோர -நினைவு பாராமையாலே-திருமலையிலே திரு அருவிகள் போலே
பால் மாறாதே சொரிகை

இவன் எருமை கறவாமை ஒழிவது என் என்னில்
இளைய பெருமாள் ஷத்ரிய தர்மமான அக்னி கார்யத்துக்கு-உறுப்பாம் அன்று இறே
இவன் எருமைகளை விட்டுக் கறப்பது
அது என் என்னில்
கிருஷ்ணனைப் பிரிய ஷமன் அல்லாமையாலே-
பிராப்ய விரோதிகளில் நசை அற்ற படி யாகவுமாம்-

நனைத்தில்லம் சேறாக்கும் –
பாலின் மிகுதியாலே அகம் வெள்ளம் இடும் -அத்தாலே துகை உண்டு சேறாகும்
இத்தால்-
சேறாகையாலே புகுர ஒண்கிறது இல்லை -என்கை

நற்செல்வன் –
தோற்றி மாயும் சம்பத் அன்றிக்கே-நிலை நின்ற சம்பத்து –
அதாகிறது –
கிருஷ்ணன் திருவடிகளில் நிரந்தர சேவை-
லஷ்மணா லஷ்மி சம்பன்ன போலே-
கைங்கர்ய லஷ்மி இறே இவ்வாத்மாவுக்கு நிலை நின்ற சம்பத்து –

லஷ்மி சம்பன்ன -என்றது
ஊரும் நாடும் உலகமும் தன்னைப் போலே என்கிறபடி
தன் வைஷ்ணவ ஸ்ரீ யாலே ஜகத்துக்கு அடைய-வைஷ்ணத்வம் உண்டாம்படி இருக்கை –

தங்காய்-
குணத்துக்கு தமையனில்-தன்னேற்றமுடையவள் -என்கை –

பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்-
மேல் வர்ஷம் வெள்ளம் இட –
கீழ் பால் வெள்ளம் இட –
நடுவு மால் வெள்ளம் இட
நின்ற நிலை யாகையாலே
தெப்பம் பற்றுவாரைப் போலே நின் வாசல் கடையில்
தண்டியத்தைப் பற்றிக் கிடக்கிற இந்த தர்மஹாநி அறிகிறிலை –

இப்படி சொன்ன இடத்திலும் இவர்கள் படும் அலமாப்பு காண்போம்
என்று பேசாதே கிடக்க

சினத்தினால் –
பெண்களை தீராமாற்றாக நெஞ்சாரல் பண்ணும் கிருஷ்ணனை ஒழிய
பெண் பிறந்தாருக்கு தஞ்சமான சக்கரவர்த்தி திரு மகனை சொல்லுவோம்
இவள் எழுந்திருக்கைக்காக-என்று ராம வ்ருத்தாந்தத்தை
சொல்லுகிறார்கள் –

சினத்தினால் –
தண்ணீர் போலே இருக்கும் சக்கரவர்த்தி திருமகனுக்கு சினம் உண்டோ என்னில் –
ஆஸ்ரித சத்ருக்கள் இவருக்கும் சத்ருக்கள் இறே
மகா ராஜருக்கு சீற்றம் பிறந்த போது வாலியை எய்தார்
அவர் அழுத போது கூட அழுதார் இறே –

தென்னிலங்கை கோமானைச்
திருவடி மதித்த ஐஸ்வர்யத்தை உடையவனை –

செற்ற –
ஓர் அம்பால் தலையை தள்ளி விடாதே
படையைக் கொன்று
தேரை அழித்து
ஆயுதங்களை முறித்து
தான் போலும் -இத்யாதி -கோன் போலும் என்று எழுந்து
கிளர்ந்து வந்த
மானத்தை அழித்து
நெஞ்சாரல் பண்ணிக் கொன்ற படி –

மனத்துக் கினியானைப் –
வேம்பேயாக வளர்த்தால் -என்னும்படியாக
பெண்களை படுகுலை யடிக்கும் கிருஷ்ணனை போலே அன்றிக்கே
ஏகதார வ்ரதனாய் இருக்கை –

பெண்களை ஓடி எறிந்து துடிக்க விட்டு வைத்து
பின் இரக்கமும் இன்றிக்கே இருக்கும்
கிருஷ்ணனை ஒழிய
சத்ருக்களுக்கும் கண்ண நீர் பாயுமவனை என்றுமாம் –

பாடவும் -நீ வாய் திறவாய்
கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர் -என்று
நம்மை நலியும் கிருஷ்ணனுடைய பேரை காற்கடைக் கொண்டு
கிருஷ்ண விரஹத்தாலே கமர் பிளந்த நெஞ்சு
பதம் செய்யும்படியான சக்கரவர்த்தி திருமகனைப் பாடச் செய்தேயும்

நீ வாய் திறவாய் –
நீ வாய் திறக்கிறது இல்லை -ப்ரீதிக்கு போக்கு விட வேண்டாவோ –

இனித் தான் எழுந்திராய் –
எங்கள் ஆற்றாமை அறிவித்த பின்பும் உறங்கக் கடவையோ –
எழுந்திராய் –

யீதென்ன பேருறக்கம் –
பிறர் ஆர்த்திக்கு த்வரித்து உணருமவனுடன் பழகி வைத்து
இங்கனே உறங்குவதே -என்கிறார்கள் –
ஆபன்னர்க்காக உணருமவன் படியும் அன்றிக்கே
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் படியும் அன்றிக்கே
இருப்பதே உன்னுறக்கம் –

அனைத்தில்லத்தாரும் அறிந்து
பெண்கள் எல்லாரும் வந்து உன் வாசலிலே அழைக்கிறமை ஊராக அறிய வேணும் என்று இருந்தாய் ஆகில்
எல்லாரும் அறிந்தது –

இனி எழுந்திராய்
பகவத் விஷயம் ரகஸ்யமாக அனுபவிக்கும் இத்தனை –
புறம்பு இதுக்கு ஆளுண்டோ என்று கிடக்கிறாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தம் என்றுமாம் –

எம்பெருமானார் திரு அவதரித்தாப் போலே காணும் இப் பெண் பிள்ளையும்0

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.