ஸ்ரீ திருப்பாவை – கனைத்திளம் கற்று எருமை -ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் அருளிச் செய்த ஸ்வாபதேச வியாக்யானம் –

கீழ் ஆஞ்ஞா கைங்கர்ய நிஷ்டர் -ஸாஸ்த்ர விதி மீறாமல் செய்பவன்
இதில் அனுக்ஞ்ஞா கைங்கர்ய நிஷ்டர் -ஆசை ராகத்துடன் செய்பவன்

எம்பெருமானார் போல் இவள் -உயிர்கள் உடையவன் நாராயணனே என்று அனைத்து இல்லத்தாரும் அறிந்தது போல்
இவளைப் பற்றி அனைவரும் அறிவர்-ஒரு கையால் ஒருவன் தன் தோள் ஊன்றி கண்ணனுக்கு கைங்கர்யம் செய்பவன்

அவதாரிகை –
இப் பாடலில்-பாகவத அபிமான நிஷ்டரை-எழுப்புகிறார்கள்

கனைத்திளம் கற்று எருமை கன்றுக்கிரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்
பனித்தலை வீழ நின் வாசற்கடை பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும் நீ வாய் திறவாய்
இனித் தான் எழுந்திராய் யீதென்ன பேருறக்கம்
அனைத்தில்லத்தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்

பதவுரை

இள கன்று எருமை-இளங்கன்றுகளை யுடைய எருமைகளானவை
கனைத்து–(பால் கறப்பார் இல்லாமை யாலே) கதறிக் கொண்டு
கன்றுக்கு இரங்கி–(தன்) கன்றின் மீது இரக்கமுற்று
நினைத்து–(கன்று ஊட்டுவதாக) நினைத்து (அந்நினைவினால்)
முலை வழியே நின்று பால் சோர-முலை வழியால் இடைவிடாமல் பால் பெருக, (அப்பெருக்கினால்)
இல்லம்-வீட்டை
நனைத்து – (முழுவதும்) ஈரமாக்கி
சேறு ஆக்கும் நல் செல்வன்-சேறாகப் பண்ணுகையாகிற சிறந்த செல்வத்தை யுடையவனுடைய
தங்காய்-தங்கையானவளே!
பனி-பனியானது
தலை வீழ-எங்கள் தலையிலே விழும்படி
நின் வாசல் கடை பற்றி-உனது மாளிகையின் வாசற் கடையை அவலம்பித்துக் கொண்டு,
சினத்தினால்-(பிராட்டியைப் பிரித்தான் என்னுஞ்) சீற்றத்தினால்
தென் இலங்கை கோமானை-தென் திசையிலுள்ள லங்காபுரிக்கு அரசனான இராவணனை
செற்ற-கொன்றொழித்தவனும்
மனத்துக்கு இனியானை–சிந்தனை இனியனுமான இராம பிரானை
பாடவும்-(நாங்கள் பாடா நிற்கச் செய்தேயும்
நீ-நீ
வாய் திறவாய்-வாய்திறந்து பேசுகிறாயில்லை,
இனித் தான்-எங்களாற்றாமையை அறிந்து கொண்ட பின்பாகிலும்
எழுந்திராய்-எழுந்திரு;
ஈது என்ன பேர் உறக்கம்-இஃது என்ன ஓயாத தூக்கம்?
அனைத்து இல்லத்தாரும்-(இச்சேரியிலுள்ள) எல்லா வீட்டுக் காரர்களாலும்
அறிந்து-(நாங்கள் உன் மாளிகை வாசலில் திரண்டு நிற்கிறவிது) அறியப்பட்டதாயிற்று:

(கடாக்ஷ வெள்ளம் -ஆலம்பனத்துக்கு திருமணத்தூண்கள் -மால் வெள்ளம் -பால் வெள்ளம் -பனி வெள்ளம் -அனைத்தும் கலந்து

ஒரு வில்லால் ஓங்கு முந்நீர் அடைப்ப-திருமாலை-இங்கும் சினத்தினால் தென்னிலங்கை செற்றான்– சினத்தினால் மனத்துக்கு இனியானை)

(உறக்கம் -பேர் உறக்கம்–அனந்தல் ஆற்ற அனந்தல்–அரவம் பேர் அரவம்)

கனைத்து –
ஸ்வாசார்யன் தனக்கும்
ஸ்வ சந்தானத்துக்கும்
பகவத் குணாநுபவம் பண்ணுவிக்கவில்லை என்று-வியசனப் பட்டு –

(ஸ்வ ஆச்சார்யன் நித்ய வாசம் பண்ணும் இடத்தில் இல்லாமலும் -அவர் திரு நாட்டை அலங்கரிக்கப் பெறலாமே -இந்த வியஸனம்)

இளம் கற்று எருமை –
பால சந்தானமுடைய சிஷ்யர் –

(அஸ்மத் குருப்யோ நம அஸ்மத் பரம குருப்யோ நம -அஸ்மத் ஸர்வ குருப்யோ நம -மூவரையும் சொல்கிறோமே)

கன்றுக்கிரங்கி-
ஸ்வ சந்தானத்திலே தயை பண்ணி –

நினைத்து –
ஸ்வா சார்யன் தன்னை அதிஷ்டித்துக் கொண்டு
ஸ்வ சந்தானத்துக்கு பகவத் குணாநுபவம்
பண்ணுவித்து அருளுகிறான் -என்று நினைத்து –

(என் வாய் முதல் அப்பன் தானாகாத் தன்னைப் பாடி போல் ஸ்வ ஆச்சார்யனை அதிஷ்டானம் பண்ணி உபதேசிக்க வேண்டுமே)

முலை வழியே நின்று பால் சோர-
பாவன பிரகர்ஷத்தாலே
ஸ்வா சாரய அபிமானம் ஈடாக
பகவத் குணங்கள் சுரக்க –

(நினைவு –பாவனை இருந்தால் தானே உபதேசம்
முலை வழியே -ஆச்சார்ய அபிமானம் தான் ஊற்று வாய்
பால் -பகவத் கல்யாண குணங்கள்
நின்று சோர -குழந்தை முட்ட தாய் பால் தருவதற்கும் மேல் அன்றோ இது – -நான்குக்கும் வியாக்யானம்
த்வயார்த்த உபதேசம் உனது ஸ்வரூப லாபத்துக்கும் தனது ஸ்வரூப லாபத்துக்கும்
பிரதியுபகாரம் -உபய விபூதி கொடுத்தாலும் ஸத்ருசம் அல்லவே)

நனைத்தில்லம் சேறாக்கும்-
ஸ்ரோத்தாக்கள் உடைய ஹிருதயத்தை
சம்சாரிக தாபம் எல்லாம் ஆறும்படியாக குளிரப் பண்ணி –
குணானுபத்தாலே களிக்கும்படி பண்ணுகிற –

நற் செல்வன் –
ஸ்லாக்கியமான சம்பத்தை உடைய பாகவதன் உடைய

தங்காய்-
சோதரியானவளே –

பனித் தலை வீழ –
பனியானது தலை மேல் சொரிய-
அதாவது-
மயர்வற மதிநலம் அருளப் பெற்ற
ஆழ்வார்கள் உடைய ஸ்ரீ ஸூக்திகளாலே வரும் பகவத் குணாநுபவம் –

நின் வாசற் கடை பற்றிச்-
கீழ் ஆசார்ய உபதேசம் அடியாக வரும்-
பகவத் குணானுபவ (ஞான பாவம் )பிரவாஹம் என்ன –
மேலே மயர்வற மதிநலம் அருளப் பெற்ற ஆழ்வார்கள் உடைய
அருளிச் செயலால் வரும் குணானுபவ (ப்ரேம பாவம் )பிரவாஹம் என்ன –
நடுவே பாகவத குணானுபவ (போதயந்த பரஸ்பரம் )பிரவாஹம் என்ன –

இப்படி பிரவாஹ த்ரயத்தில் அகப்பட்டு அலைகிற நாம்
உனக்கு பிரதிபாதகமான நமஸிலே
த்வார வர்த்தியான நகாரமாகிற அவலம்பத்தைப் பற்றி
கீழ் சொன்ன குண அனுபவங்களில் போக்ருத புத்தி வாராதபடி தடுக்கிற
நகாரத்தைப் பற்றி என்றபடி –

(அல்லேன் எனக்கு -முன் நகாரம் இருக்க வேண்டுமே -கண்டேன் ஸீதையை போல்)

சினத்தினால் தென்னிலங்கை கோமானைச் செற்ற மனத்துக் கினியானைப் –
கோபத்தினாலே
யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான
அஹங்காரத்தை நசிப்பித்து
அத ஏவ மனத்துக்கு இனியானை –
சக்கரவர்த்தி திருமகனை –

(கோபத்தினாலே யமவஸ்யதா மூலமான சம்சாரத்துக்கு நிர்வாஹகமான-தெற்கு இலங்கை –
அஹங்காரத்தை நசிப்பித்து-கோமானை -ராவணனை -அநாத்மனி ஆத்ம புத்தி -என்னது அல்லாததை என்னது என்பது மமகாராம்)

பாடவும் நீ வாய் திறவாய்-இனித் தான் எழுந்திராய் –
எங்கள் ஆற்றாமை காண வேண்டும் என்று இருந்தாயாகில்
கண்ட பின்பும் உறங்கும் இத்தனையோ –
எழுந்து இராய் –

யீதென்ன பேருறக்கம்-
காலம் உணர்த்த உணரும் சம்சாரிகள் நித்தரை போலும் அன்றிக்கே
ஆஸ்ரிதர்கள் ஆர்த்தி உணர உணரும் ஈஸ்வரன் உடைய உறக்கம் போல் அன்றிக்கே
உபய விலஷணமான இம் மகா நித்தரை ஏது –
சம்சாரிகள் நித்தரை தமோபிபூதியால் உண்டானதாகையாலே
சத்த்வதோரமான காலத்தில் தீருபடியாய் இருக்கும் –
ஈஸ்வரன் உடைய நித்தரை ஜகத் ரஷணசிந்தா ரூபம்
ஆகையாலே
பரார்த்தி காண தீரும்
இவளுடைய நித்தரை சரம பர்வ நிஷ்டர் உடைய ஆற்றாமை காணத் தீரும்
ஆகையால் அதுக்கு அதிகாரி கிடையாமையாலே பேர் உறக்கமாய் இருக்கும் –

அனைத்தில்லத்தாரும் அறிந்து –
நாங்கள் உன்னை எழுப்பு கிறது எல்லாரும் அறிய வேண்டும்
என்று இருந்தாய் ஆகில்
அது எல்லாரும் அறிந்தார்கள் -எழுந்திராய் என்கிறார்கள்
பகவத் விஷயம் ரகஸ்யம் என்று இருந்தாய் ஆகில்
அது எங்கும் பிரசித்தமாய்த்து -எழுந்திராய் -என்கிறார்கள் –

(அநு வர்த்தன ப்ரஸன்னாச்சார்யார் முன்புள்ள முதலிகள் -க்ருபா மாத்ர ப்ரஸன்னாச்சார்யார் ராமானுஜருக்கு பின்புள்ளார் அன்றோ)

கீழ் பாட்டில் -கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து -என்று
ஸ்வ வர்ண உசித தர்ம அனுஷ்டானத்தைச் சொல்லி
இப் பாட்டில் சொல்லாமையாலே
அனுஜ்ஞா கைங்கர்ய நிஷ்டனுக்கு ஆஞ்ஞா கைங்கர்ய ஹானி
ஸ்வரூப விரோதம் அன்று என்கிறது

இவன் எருமை கறவாமைக்கு
இளைய பெருமாளை திருஷ்டாந்தமாக அருளிச் செய்து
உபாயாந்தர த்யாகத்துக்கு பிரமாணமாக
ஐஸ்வர்ய கைவல்ய லாபங்களில் அபேஷை இல்லாதார்க்கு
தத் சாதன அனுஷ்டானத்தில்
அபேஷை பிறவாது என்னும் அபிப்ராயத்தாலே-

ந தேவ லோகம் -ந அமரத்வம் -வேண்டேன் என்றான் இளையபெருமாள்
த்வனி ப்ராப்யாந்தர பரித்யாகம் இருந்தாலும் உபாயாந்தர பரித்யாகத்துக்குப் பிரமாணமாக காட்டுவதற்கு ஹேது சாதிக்கிறார்

(இங்கு சரம பரகத ஸ்வீ காரம் -ஆச்சார்ய அபிமானமே உத்தாரகம் -என்றதாயிற்று)

————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading