சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன்
முடிப்பான் சொன்ன வாயிரத்து இப்பத்தும் சன்மம்
விட தேய்ந்தற நோக்கும் தன் கண்கள் சிவந்தே
——————————————————————————————————————————————-
நிகமத்தில்
இப்பத்தானது தன்னைக் கற்றவர்கள் உடைய
பிறவிக்கு திட்டி விடம் –
சன்மம் தேய்ந்து அற-கண்கள் சிவந்து நோக்கும் -விடம்
நோக்கும் விடம் -திட்டி விடம்
கண்ணில் விடமுடைய தொரு பாம்பு போலே
திட்டியின் விடமன்ன கற்பின் செல்வியை
விட்டிலையோ இது விதியின் வண்ணமே -கம்பர் கும்பகர்ண வதைப் படலம் -60
சுடர்ப் பாம்பணை நம் பரனைத் திருமாலை –
இப்பத்தும் கற்றார்க்கு
பிறவி அறுகை அன்றோ பலமாக சொல்லுகிறது
அதனால் சென்று அனுபவிக்கும் பேற்றினைச் சொல்லுகிறது –
பர்யங்க வித்தையில் சொல்லுகிறபடியே
திரு வநந்த ஆழ்வான் மடியிலே
பெரிய பிராட்டியார் உடன் எழுந்தருளி இருக்கக் கண்டு அனுபவிக்கை அன்றோ
முக்தனாலே அடையப் படுகின்ற இன்பம் தான் –
அடிச்சேர் வகை வண் குருகூர்ச் சடகோபன் –
திருவடிகளில் சேருகையே தமக்கு ஸ்வாபாவமாக உடைய ஆழ்வார் –
அன்றிக்கே –
அடிச்சேர் வகை முடிப்பான் -என்றுமாம் –
ஞான ஆநந்தங்கள் அன்று இவருக்கு நிரூபகம்
அடிமையே ஆயிற்று
முடிப்பான் சொன்ன வாயிரத்து –
சம்சார சம்பந்தத்தை அறுக்கைக்காக சொன்ன ஆயிரத்து –
இப்பத்தும் சன்மம் விட தேய்ந்தற நோக்கும் –
பிறவியானது விட்டுப் போம்படியாக நோக்கும்
அது செய்யும் இடத்தில்
தன் கண்கள் சிவந்து நோக்கும் விடம் –
அதாவது
இப்பிறவிக்கு இப்பத்தும் திட்டி விடம் -என்கை-என்றது
இப்பத்துக்கும் பிறவிக்கும் ஒரே இடத்தில் இருக்கக் கூடிய
தன்மையில் விரோதம் உண்டு -என்றபடி –
நிகமத்தில்
சம்சாரத்துக்கு -நெருப்பாக பார்த்து
சன்மம் போக்க நோக்கும்
முடிப்பான் சொன்ன -சம்சாரம் முடிக்க
கண் சிவக்க உற்று பார்த்து நோக்கும்
சன்மம் நீங்கி பர்யங்க வித்யை அருளுவது போலே
திரு அநந்த ஆழ்வான் மேலே
சுடர் பாம்பணை நம் பரனை திரு மாலை
திரு அடிகளை சேர்வதே நிரூபகம்
செஷத்வமே ஆழ்வாருக்கு அடையாளம்
முடிப்பான் -சம்சாரம் அறவே முடிக்க
அடி சேர் வகை முடிப்பான்
விட்டு போம்படியாக
கண்கள் சிவந்து நோக்கும்
திருஷ்டி விஷம் ;போலே
பார்த்தாலே போகும்
இப்பத்து உள்ள இடம் சன்மம் இல்லை
சேதன சமாதியால் சொல்கிறார்
வேதம் -வேத புருஷன் போலே
திராவிட வேத புருஷன் கடாஷிக்க சம்சாரம் வெந்து போம்
————————————————————————————————————————————————————–
இருந்தவன் தான் வந்து இங்கி வர எண்ணம் எல்லாம்
திருந்த விவர் தம் திறத்தே செய்து -பொருந்தக்
கலந்து இனியனாய் இருக்கக் கண்ட சடகோபர்
கலந்த நெறி கட்டுரைத்தார் கண்டு-
சாரம்
இருந்தவன் தான் வந்து
இவர் எண்ணம் எல்லாம் திருந்த
இவர் தம் திறத்தே
பொருந்த கலந்து
இனியனாய் இருக்க
கலந்த நெறியை
ஆழ்வார் கண்டு
கட்டு உரைத்தாய்
—————————————————————————————————————————————————-
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply