வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் யவரும்
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் தம்
வயிற்றில் கொண்டு நின்ற வண்ணம் நின்ற மாலை
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் மதியாலே-
————————————————————————————————————————————————
இப்படி அவன் அங்கீகரித் ததற்கு நீர் செய்தது என் என்னில் –
அனுமதி மாத்ரம் செய்தேன் இத்தனை -என்கிறார் —
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரும் –
தாயானவள் குழந்தையை வயிற்றில் வைத்து நோக்குமாறு போலே
உலகத்தைப் பாதுகாக்கும் அரசர்கள் முதலாயினார்களையும் –
யவரும் –
இந்த அரசர்கள் தங்களையும் நோக்கிக் கொண்டு போருகிற
அந்தணர் முதலாயினார்களையும் –
வயிற்றில் கொண்டு நிற்றொரு மூவுலகும் –
அந்தணர் முதலாயினார்களையும் -அரசர் முதலாயினார்களையும் -தன்னுள்ளே கொண்டு இருந்துள்ள
மூன்று உலகங்களையும் –
தம் வயிற்றில் கொண்டு –
தம்முடைய நினைவில் ஆயிரத்தில் ஒரு கூற்றாலே நடத்திக் கொண்டு என்னுதல் –
அன்றிக்கே –
வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரையும் யாவரையும்
தம் வயிற்றில் கொண்டு
நின்ற ஒரு மூவுலகையும் தம் வயிற்றில் கொண்டு –
என்று பிரித்துச் சொல்லுதல் –
நின்ற வண்ணம் நின்ற மாலை –
இவற்றை அடைய தன் வயிற்றில் கொண்ட இடத்திலும்
ஒரு விகாரம் இன்றிக்கே நின்ற சர்வேஸ்வரனை –
வயிற்றில் கொண்டு மன்ன வைத்தேன் –
உலகத்தை உடையனான சர்வேஸ்வரனை
என்னுடைய மனத்திலே பேராதபடி வைத்தேன் –
மதியாலே –
இதற்கு -இவன் படியை அறிந்து கொண்டேன் -என்கிறார் என்று அம்மாள் பணிப்பர்
அன்றிக்கே
மதி -அனுமதி -என்று ஆக்கி
அனுமதி மாத்ரத்திலே -என்பர் பட்டர் -என்றது
அவன் புகுகிற இடத்தில் விலக்கு அற்றிலன் -என்றபடி
மதியால் இசைந்தோம் என்னும் அனுமதி இச்சைகள் இருத்துவம்
என்னாத என்னை இசைவித்த என் இசைவினது -ஆசார்ய ஹிருதயம் ஸ்ரீ சூக்தி-
அனுமதி மாதரம் வைத்தேன்
வைத்தேன் மதியாலே முக்கியமான கருத்து
அனுமதி இச்சைகளால்
பிரஜை -காக்கும் அரசர் தாய் போலே –
அவர்களை ரஷிக்கும் பிரம்மாதி தேவதைகள் தாய் போலே
அவர்களையும் வயிற்றில் வைத்து ரஷிக்கும் -இவன் போலே இல்லை தாயாயகவே ரஷிக்கிறான் –
சங்கல்ப சகஸ்ர ஏக தேசத்தில் நடத்திக் கொண்டு நின்ற வண்ணன் நின்ற மாலை –
இருக்கிற படியே இருக்கிறவன்
விகாரம் இல்லாமல்
ச விபூதிகனான சர்வேஸ்வரனை
என்னுடைய ஹிருதயத்தில் மன்ன வைத்தேன்
மதியாலே
இவன் படியை அறிந்து கொண்டேன் அம்மங்கி அம்மாள் பணிக்கும்
மதி -அனுமதி என்றாக்கி -பிரகரணம் -ஞானம் விட அனுமதி -வெறிதே கீழே சொல்ல
அதுக்கு சேர பட்டர்
மதி -உபசர்க்கம் போட்டு அர்த்தம் சொல்லும் வழக்கம் உண்டே
புகுகிற இடத்தில் விலக்க வில்லை
அதுவே பற்றாசாக கொண்டு வந்து புகுந்து ஸ்மிதம் தோற்ற வீற்று இருந்தான்
———————————————————————————————————————————————————————————–
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply