திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

அறியேன் மற்றருள் என்னை யாளும் பிரானார்
வெறிதே யருள் செய்வர் செய்வார்கட்குகந்து
சிறியேனுடைச் சிந்தையுள் மூவுலகும் தன
நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே

————————————————————————————————————————

அவன் தம்மோடு வந்து கலக்கைக்கு அடி
அவனுடைய திருவருள் காரணம்
என்கிறார்

அறியேன் மற்றருள் –
மற்று அருள் அறியேன்
வேறு ஒரு அருளும் அறியேன் –

என்னை யாளும் பிரானார் –
என்னை அடிமை கொள்ளுகிற உபகாரகர் ஆனவர் –

வெறிதே யருள் செய்வர் –
நிர்ஹேதுகமாக திருவருள் செய்வர் –

யாருக்கு என்னில் –
செய்வார்கட்குகந்து –
செய்வார்கட்கு –
எவனைப் பரம்பொருள் விரும்புகிறானோ –
யமே வைஷ வ்ருணுதே -கடவல்லி உபநிஷத் -2-என்கிறபடியே
தான் அங்கீகரிக்க நினைத்தார்க்கு
தாம் தாம் ஓன்று செய்வார்க்கு -என்னில்
வெறிதே -என்னக் கூடாதே அன்றோ –
ஆயினும் ஒரு காரணம் வேண்டாவோ அருள் செய்வதற்கு -என்னில் –
ஈஸ்வரனுடைய உகப்பே ஆயிற்றுக் காரணம் –
விரும்பப் படுவான் அன்றோ பற்றப் படுவான் -ஆகிறான் என்னக் கடவது அன்றோ –
பிரியதம ஏவ ஹி வரணீயோ பவதி -ஸ்ரீ பாஷ்யம்
ருசி உண்டானாலும் இவன் சேதனனான வாசிக்கு அறிவின் காரணமான
தன்மை என்று அதனைக் கொள்ளலாம் அத்தனை அல்லது
பேற்றுக்கு சாதனமாக சொல்ல ஒண்ணாதே அன்றோ –

காரணம் இல்லாமலே செய்யப்படும் அருளை -நிர்ஹெதுக கிருபையை –
இப்படி வேறு எங்கு கண்டீர் -என்ன
புறம்பு தேடித் போக வேணுமோ –

சிறியேனுடைச் சிந்தையுள் –
மிகச் சிறியேனான என்னுடைய மனத்துக்குள்ளே –

மூவுலகும் தன நெறியா வயிற்றில் கொண்டு நின்று ஒழிந்தாரே
மூன்று உலகும் தம் வயிற்றில்
நெறியாகக் கொண்டு
நின்று ஒழிந்தார்
உடையவன் உடைமையை நோக்குவது முறையாலேயாய்
இருக்கும் அன்றோ –
தம்மாலே பாது காக்கப் படுகின்ற பொருளை முறையாலே நோக்குகிறவர்
என்னுடைய மனத்திலே பொருந்தி முறை கெட பரிமாறா நின்றார்
தம்மை சிறுமைக்கு எல்லையாக நினைத்த படியாலே
முறை கேடாக தோற்றா நின்றதாயிற்று இது
அவன் இதுவரை மூவுலகுக்கும் அவ்வருகாகா நினைத்திரா நின்றான்
இவர் தம்மை மூவுலகுக்கும் இவ்வருகாக நினைத்திரா நின்றார்-

அவன் நிர் ஹேதுக கிருபை அடியாக வந்து கலந்தான்
காரணம் விசேஷம் இன்னது என்று அறிய முடியாத காரண விசேஷம் நிர்ஹெதுகம் -தேசிகன்
என்னை ஆளும் பிரானார் -அடிமை கொள்ளும் உபகாரகர்
வெறிதே -வெறுமனே -அருள் செய்வார்
செய்வார்கட்கு -அருள் செய்ய நினைப்பார்க்கு –
தாம் விஷயீ கரிக்க நினைப்பார்க்கு
ஏஷகா வ்ருண்தே வரிப்பவர்க்கு
ப்ரீதி உடன் செய்வார்
சி றியேனுடை சிந்தையுள்
மூ வுலகும் –
செய்வார்கட்கு -சாதனம் செய்வாருக்கு என்று கொண்டால்
நிற்ஹெதுக கிருபை ஒத்து கொள்வார் சொல்லும் அர்த்தம் கூடாதே
வெறிதே சொல்ல முடியாதே –
பொருந்தாதே
தாம் தாம் ஓன்று செய்வர்கட்கு -கூடாதே
ஆனாலும் ஹேது வேண்டாவோ என்னில் –
உகப்பாயிற்று ஹேது
அவன் சந்தோஷமே ஹேது என்கிறார்
ஸ்ரீ பாஷ்யம் எம்பெருமானார்
எம் ஏஷ ஏவ வ்ரு n தே -அவனே விரும்புகிறானோ
ப்ரீதிக்கு யார் இலக்காவான்
துஷ்டனும் சிஷ்டனும்
துஷ்டனாக இலக்கு ஆவது கஷ்டம்
ருசி உண்டானாலும்
பேற்றுக்கு சாதனம் இல்லை
ராக பிராப்தம் –ஸ்வரூப பிரயுக்தம் -விலக்காமை காட்ட சர்வ முக்தி பிரசங்க -வாராமல் இருக்க
உத்தியோகம் -யோக்யதை -வைக்க –
சாதனம் -படிப்பா -ஒருவரை எடுத்துக் கொள்ள -காரணம் –
இவன் இடம் அவர்கள் கொண்ட திருப்தி -இதுவே சாதனம் –
நியமிக்கும் அதிகாரி திரு உள்ளம் எண்ணமே காரணம்
ஏரி வெட்ட மழை சாதனம் இல்லை
கிருபை தக்க வைக்க இவை உபயோகம் போலே
நிர் ஹேதுக கிருபா பிரபாவம் வெறிதே -அருள் செய்வார்
சைதன்யம் -ருசி இருக்க வேண்டும் ஸ்வரூப நிஷ்டம் -சாதனம் இல்லை
அத்யல்பனாய் இருக்கிற என்னுடைய ஹிருதயம்
இங்கு தான் எம்பெருமானுக்கு ஜுரம்
நைச்ச்ய அனுசந்தானம்
பயந்து ஆழ்வாருக்கு ஆத்மா கௌஸ்துபம் போலே என்று மேலே உபதேசிக்க போகிறான் அடுத்த திருவாய் மொழி
உடையவன் உடைமையே நோக்குவது முறையாலே
முறை கெட பரிமாறுகிறான்
என்னை வயிற்றில் கொள்ளாமல் -அவன் நெஞ்சில் புகுந்தானே
அவன் இவரை மூ வுலகுக்கும் அவ்வருகாய் நினைக்க
தம்மை சிறுமைக்கு எல்லையாய் நினைத்து இருக்க
வஸ்துவான எனக்குள் வந்து இருக்கிறான்
முறை கெட பரிமாறா நின்றான்

 

—————————————————————————————————————————————————————-

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading