திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான்
தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே-

—————————————————————————————————————————-

அவன் என்னை மயங்கச் செய்தான் அல்லன்
என் உள்ளே கலந்து அருளினானே
இதிலே ஓர் ஐயம் இல்லை -என்கிறார்

மாய மயக்கு மயக்கான்என்னை வஞ்சித்து –
என்னை வஞ்சித்து-மாய மயக்கு மயக்கான்-
அடியார் அல்லாதாரான துரியோதனாதியர்களைக் குறித்து
ஆயுதம் எடேன் -என்று ஆயுதம் எடுத்தும் –
பகலை இரவாக்கியும்
வஞ்சித்தான் இத்தனை அல்லது
பாண்டவர்கள் விஷயத்தில் அதனைச் செய்தானோ
ஆகையாலே தனக்கே பரமான என்னை வஞ்சித்து
ஆச்சர்யமான மயக்கத்துக்கு உரிய சாதனங்களாலே
மயங்கச் செய்யான் –
காரணம் -என் -என்ன –
ஆயன் அமரரர்க்கு அரி ஏறு எனதம்மான் –
நித்ய சூரிகளுக்கு அவ்வருகான ஏற்றத்தை உடையனாய் வைத்து
கிருஷ்ணனாய் வந்து அவதரித்து
என்னுடைய அடிமையை நிர்வகித்த
பரம ஆப்தன் -என்னை வஞ்சித்து மாய மயக்கு மயக்கான் –
ஆனால் இப் பேறு வந்தபடி தான் என் என்ன –

தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான் தேசந்திகழும் தன் திருவருள் செய்தே
தேசந்திகழும் தன் திருவருள் செய்தே தூய சுடர்ச் சோதி தனதென்னுள் வைத்தான்-
உலகு எல்லாம் அறியும்படி
என் பக்கலிலே காரணம் இல்லாமலே திருவருள் செய்து
குற்றங்கட்கு எல்லாம் எதிர்தட்டாய்
வேறுபட்ட சிறப்பினை உடைய ஒளி உருவமாய்
சுத்த சத்வ மயமாய்
தனக்கே உரியதான வடிவை என்னுள் வைத்தான்
புறம்பு ஒருவருக்கு இன்றிக்கே
தனக்கே உரியதான அருள் ஆதலின்
தன் திரு வருள் -என்கிறார் –
தான் வேறு ஒரு சாதனத்தைக் கொண்டு சாதித்துக் கொள்ளப் படாதவன் –
என்னும்படியைக் கொண்டு என் உள்ளே பிரகாசிப்பித்தான்
ஆதலின் -என்னுள் வைத்தான் -என்கிறார்
யமைவேஷ வ்ருணுதே தேன லப்ய
தஸ்ய ஏஷ ஆத்மா விவ்ருணதே தநூம் ஸ்வாம்-கட உபநிஷத் -2-என்கிறபடியே
பரமாத்மா எவனை விரும்புகிறானோ அவனாலேயே அடையத் தக்கவன்
அவனுக்கு இந்த பரமாத்மா தன் ஸ்வரூபத்தைக் காட்டுகிறான் -என்றபடி-

அவன் பிரமித்தான் அல்லன்
கலந்து அருளினானே
மாய மயக்கு மாக்கான் -என்னை வஞ்சித்து
ஆயன்
அமரர்க்கு அரி ஏறு
பிராப்தியும் உண்டே
தேசம் திகழும் -தேஜஸ் -உலகம் பிரசித்தமான அருள்
அநாஸ்ரிதர் துரியோதனாதிகள் விஷயம் -ஆயுதம் எடேன் -பகலை இரவாக்கி
பாண்டவர்களுக்கு செய்ய வில்லையே

ஆயனாக்கி வந்ததே
அடியார்களுக்கு இட்ட வழக்காகி இருக்க
அது மட்டும் இல்லை
அம்மான்-சேஷத்த்வம் உணர்த்திய உபகாரகன் –
பிராப்தன் -சுவாமி சொத்தை மயக்க மாட்டானே
பேறு வந்த படி என் என்ன
தேசம் திகழும்
தேசம் அறியும்படி
தன் திரு வருள் – பண்ணி
தூய சுடர் சோதி -ஹேய பிரத்ய நீக்க -விளஷன சுத்த சத்வமயம்
திவ்ய மங்கள விப்ரகம் என்னுள் வைத்தான்
தூய சுடர் சோதி -பிராப்யம்
தேசம் திழல் தன் அருள் செய்து -பிராபகம் –
நாயமாத்மா சுருதி வாக்கியம் –
தஸ்ய ஏவ எவன் ஒருவனை அவன் விரும்புகிறானோ அவனுக்கு காட்டிக் கொடுப்பான்
அநந்ய சாத்யன் -என்னும் நிலையைக் காட்டிக் கொடுத்தான் –
கேவலம் சுயாச்சை –அஹம் -வேத புருஷன் மட்டும் இல்லை -அவனே அருளி
கிருபையால் ஆழ்வாரை கடாஷித்தான்

————————————————————————————————————————————————————————–

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading