அவதாரிகை –
இப் பாட்டில் ஈஸ்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு
மிகவும் ஆதரணீய விஷயமான அதிகாரியை
எழுப்புகிறார்கள்
(குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே-ஈஸ்வரனே உபாய உபேயம் என்று அத்யவசித்து இருப்பார்க்கு-தூ மணி மாடத்தில் துயிலும் மாமன் மகள்)
(பலமத உபபத்தே -(ப்ரஹ்ம ஸூத்ரம் -3-2-39)-சாதன தசையில் இனிக்கும் பக்தி -ஸாத்யம் போலவே -அதே போல் அவனும் -பொருந்தி இருப்பதால்)
(அனந்தாழ்வான் -எங்கள் குடிக்கு அரசே பட்டரைக் கொண்டாடினார் -பொற் கொடி -நம்மைப் போலவே ஆதரணீயர் -எம்பெருமானார் காட்டிக்கொடுத்தாரே)
(70 லக்ஷம் வானர முதலிகளும் -அஸ்மாத் துல்ய பவத் -விபீஷண ஆழ்வானை ஆதரித்தார்கள் அன்றோ)
கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியச் சென்று செருச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற் கொடியே
புற்றரவல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே செல்வப் பெண்டாட்டி நீ
எற்றுக் குறங்கும் பொருளேலோ ரெம்பாவாய்
பதவுரை
கன்று கறவை–கன்றாகிய பசுக்களினுடைய
பல கணங்கள்–பல திரள்களை
கறந்து–கறப்பவர்களும்
செற்றார்–சத்துருக்களினுடைய
திறல் அழிய–வலி அழியும்படி
சென்று–(தாமே படையெடுத்துச்)சென்று
செரு செய்யும்-போர் செய்யுமவர்களும்
குற்றம் ஒன்று இல்லாத-ஒருவகைக் குற்றமும் அற்றவர்களுமான-(விதி முறைகளை மீறாமல் -உபயாந்தர -ப்ரயோஜனாந்தர -ஸ்வார்த்த -குற்றங்கள் இல்லாத )
கோவலர் தம்-கோபாலர்களுடைய (குடியிற் பிறந்த)-உபாய உபேய நிஷ்டர்களின்- ப்ரபன்னர் -குலம்
பொன் கொடியே-பொன் கொடி போன்றவளே!
புற்று அரவு அல் குல் புன மயிலே–புற்றிலிருக்கிற பாம்பின் படம் போன்ற அல்குலையும் காட்டில்(முற்று உவமை -தாவி வையம் கொண்ட தடம் தாமரைகளுக்கே போல் )
(இஷ்டப்படி திரிகிற) மயில் போன்ற சாயலையுமுடையவளே!(சர்ப்ப கதி நம்பெருமாள் ஜய விஜய துவாரம் வழியே )
செல்வம் பெண்டாட்டி-செல்வமுள்ள பெண் பிள்ளாய்!
போதராய்–(எழுந்து) வருவாயாக.
சுற்றத்து தோழிமார் எல்லாரும்-பந்து வர்க்கத்திற் சேர்ந்தவர்களும் தோழிமார்களுமாகிய எல்லாரும்
வந்து-(திரண்டு) வந்து
நின் முற்றம் புகுந்து-உனது (திரு மாளிகையின்) முற்றத் தேறப் புகுந்து
முகில் வண்ணன் பேர் பாட–கார் மேக வண்ணனான கண்ணபிரானுடைய திருநாமங்களைப் பாடச் செய்தேயும்
நீ-(பேருறக்கமுடைய) நீ
சிற்றாது-சலியாமலும்
பேசாது-(ஒன்றும்) பேசாமலும்
உறங்கும் பொருள் எற்றுற்கு-உறங்குவது என்ன பிரயோஜனத்திற்காகவோ? (அறியோம்)
ஏல் ஓர் எம் பாவாய்-(எழுந்து இருந்து கடக க்ருத்யம் பண்ண வேண்டும் அன்றோ)
(கற்றுக் கறவை-கன்றுகள் போல் கட்டி அணைக்கலாம் படி இருக்கும் என்றுமாம் கன்றுகள் உடன் கூடியே இருக்கும் கறவை என்றுமாம்)
(ப்ரபன்னர் குலத்தில் உதித்தவர்களுடைய
பொற் கொடியே புனமயிலே–சமுதாய சோபையும் -லாவண்யம்
புற்றரவல்குல்-அவயவ சோபையும் -சவுந்தர்யம்)
கற்றுக் கறவைக் –
ஸ சந்தானரான சிஷ்யர்
(சிஷ்யர் ஸமூஹமாய் சேர்ந்தே இருக்கும் ஆச்சார்யர் -சிஷ்யராக இருந்தே ஆச்சார்யர் போல் -சிறு மா மானிடராய் என்னை ஆண்டார்)
கணங்கள் பல –
அவர்கள் உடைய பலவான சமூகங்களை
கறந்து –
அவர்களுடிய அபிநிவேச அனுகுணமாக-ஜ்ஞானப் பிரதானம் பண்ணி
(பத்மா சனத்தில் இருந்து -ஞான முத்திரை -புள்ளுக்கு பிள்ளை இரை தேடிக் கொடுக்குமா போல்
தத்வ த்ரயம் பதத்ரயம் ஆகார த்ரயம் ரஹஸ்ய த்ரயங்களை உபதேசித்து அருளி)
செற்றார் திறலழியச் –
செற்றார் உண்டு-உபாயாந்தர பரரும்-உபேயாந்தர பரரும்-
அவர்களுடைய திறல் உண்டு -ஸ்வார்த்த பரதை-அழிய-நசிக்கும்படி
(பக்தி யோக பரர்களையே விரோதிகள் என்கிறார் -ப்ரபந்நர் ஏற்றம் சொல்ல வந்த இடத்தில்
பகவானுக்குப் பிடிக்காத -தனது ஊணைப் பறிப்பார் போல் அன்றோ இவர்கள்-கர்த்ருத்வமும் போக்த்ருத்வமும் அவன் இடமே இருக்க வேண்டுமே )
சென்று செருச் செய்யும் –
(வாதப்போர் பண்ணி )தாங்களே விஜய யாத்ரையைப் பண்ணி-அவர்களோடு வர்த்திக்கிற –
குற்றமொன்றில்லாத –
பூர்வ உத்தர அகங்களில் ஒன்றும் இல்லாத –
(க்யாதி லாப பூஜை -இல்லாமல் மங்களா ஸாஸனம் பண்ணி அவனது தனிமையைப் போக்கவே இவர்கள் உபதேசம் )
(குற்றம் இல்லாத -பகவத் அபசாரம்
குற்றம் ஓன்று இல்லாத –பாகவத அபசாரம் இல்லாத
குற்றம் ஒன்றும் இல்லாத -ஆச்சார்ய அபசாரம் இல்லாத -தனது ஆச்சார்யனுக்கு சிஷ்யன் எண்டு எண்ணியே உபதேசம்)
கோவலர் தம் –
அவனே உபாய உபேயம் என்று-அத்யவசித்து இருப்பவர்களுக்கு
பொற் கொடியே-
ஸ்ப்ருஹணீயமான பொற்கொடி போன்ற திரு மேனியை உடையவளே(ஸர்வ ஸ்வர்ண மயம்-ருக்மம் -பொன் -ருக்மிணி -பொற் கொடி போன்றவள்)
ஜ்ஞான வைச்யத்தை உடையவளே(யாதாத்ம்ய ஞானம் விசதமாய் இருப்பதை )-என்றுமாம்-
பக்தியை சொல்லி மேலே
(ஞானம் முதிர்ந்து பக்தி ரூபா பன்னம் -பொற் கொடி –பக்திஸ் ச ஞான விசேஷம்)
(கொள் கொம்பைப் பற்ற வேண்டுமே -ஞானத்துக்கு ஆஸ்ரயம் –ஸ்ரீ ரெங்க நாத ஹரி சந்தனம் யோக த்ருஸ்யதே- அன்றோ
அஹம் ஸ்மராமி மத் பக்தம் நயாமி பரமம் பதம் -பக்தி வளர்ந்து பிரபன்னன் ஆணவனையே சொல்லிற்று
ஆர்த்தன் ஜிஞ்ஞாஸு அர்த்தார்த்தி -இத்யாதி தேஷாம் ஞானிம் -பக்தனைச் சொன்னது போல் இங்கும் பக்தன் பதத்தால் ப்ரபன்னனையே சொன்னவாறு)
புற்றரவல்குல் –
ஸ்வ விஷயத்தில் படிந்த பரம பக்தியை சொல்கிறது
(சீதா மத்யே ஸூ மத்யமா – பொய்யோ எனும் இடையாளொடும் இளையானொடும் போனான்-இடை சிறுத்து -வைராக்யம் வளர்ந்த -நமஸ் பதார்த்தம் –
ஸ்வ விஷயத்தில் படிந்த -புற்றிலே சேர்ந்த அரவு -ஞானம் பரபக்தியாக மலர்ந்து)
புன மயிலே –
அளகமென்று-ஸ்வா பதேசத்தில் வ்யாமோகத்தை சொல்லுகையாலே-
வியாமோகம் தான் இதர விஷய வைராக்ய பூர்வகமாக-
ஸ்வ விஷய விரக அசஹிஷ்ணுவான பிரேம ரூப ஞானம் ஆகையாலே-
புன மயிலே என்று பரம பக்தியை -உடையவளே என்கிறது –
(ஸம்ஸ்லேஷத்தில் சுகம் விஸ்லேஷத்தில் துக்கம் பர பக்தி
தர்சன சமானாத்காரம் -பர ஞானம்
பிரிந்தால் முடிதல் சேர்ந்தால் வாழ்வு சத்தை பரம பக்தி
ஞானம் த்ரஷ்டும் பிரவேஷ்டும் -ஞான தரிசன பிராப்தி அவஸ்தைகள்)
போதராய் –
நீ புறப்பட்டு வர வேணும் -நான் புறப்பட்டு வருகைக்கு நம்முடையவர்கள் எல்லாரும்
வந்தார்களோ -என்ன
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து –
உனக்கு பகவத் அனந்யார்ஹ சேஷ பூதரான-பாகவதர் எல்லாரும் வந்து –
நின் முற்றம் புகுந்து –
பரம பிராப்யமான நின் முற்றத்திலே புகுந்து –
(சிற்றில் கட்ட ஸங்கேதம் பேசி புகுந்த முற்றம் அன்றோ
முற்றத்தோடு புகுந்து முகம் காட்டி –சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ
முற்றம் புகுந்து முறுவல் செய்து நின்றீர் -10-8-கலியன்
சேஷிக்கு ப்ராப்யமாகும் போது சேஷ பூதருக்கு சொல்ல வேண்டுமோ)–
முகில் வண்ணன் பேர் பாடச்
பரம உதாரனும்-ஸ்ரமஹரமான வடிவையும் உடைய அவனுடைய திரு நாமத்தை
நீ புறப்பட்டு வருவுதி என்று பாட –
சிற்றாதே பேசாதே –
பரக்க ஒரு வியாபாரத்தையும் பண்ணாதே-வார்த்தையும் சொல்லாதே –
செல்வப் பெண்டாட்டி நீ-
பகவத் குணங்களை ஒரு மடை செய்து-புஜிக்கை யாகிற சம்பத்தை உடைய-
நிருபாதிக பார தந்த்ரியம் உடையவளே -நீ –
(நின் புகழில் வைகும் சிந்தையிலும் மற்று இனிதோ நீ அவர்க்கு வைகுந்தம் என்று கொடுக்கும் வான்
தண் துழாய் நமக்கு அன்றி நல்கான் -நம்மாழ்வார் திருவடி ஸேவை -திருத் துழாய் நமக்கு பெறாப் பேறு
இவரே செல்வப் பெண்டாட்டி—சொட்டைக் குலத்தில் உதித்தார் இங்கு யாரேனும் உண்டோ -)
எற்றுக் குறங்கும் பொருள் –
உறங்கும் பொருள் எற்றுக்கு-
உறங்குவதற்கு பிரயோஜனம் ஏது –
எங்களை அகற்றுகையே பிரயோஜனமா –
இன்னம் சம்சாரிகளை சேதனர் ஆக்குகையே பிரயோஜனமா-சொல்லாய் -என்கிறார்கள் –
இப்பாட்டில்
ஜாதி உசிதமான தர்மத்தை-
சாதனா புத்தி அன்றிக்கே-
கைங்கர்ய புத்யா -அனுஷ்டித்தால்-குற்றம் இல்லை என்கிறது
கற்றுக் கறவை கணங்கள் பல கறந்து குற்றம் ஓன்று இல்லாத -என்கையாலே-
———————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ சுத்த சத்வம் தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்.
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.