திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -8-7-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள்–

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் பின்னை யார்க்கவன் தன்னைக் கொடுக்கும்
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல்
திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே

——————————————————————————————————————————————

எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றனைத் தந்து விட்டால்
புறம்பு தன்னை வேறு ஒருவர் கொள்வார் இல்லாமை எனக்குத் தந்தானோ
என் பக்கலிலே காதலால் தந்து அருளினான் -என்கிறார்

பொருள் மற்று எனக்கும் ஓர் பொருள் தன்னில் சீர்க்கத்
தருமேல் –
பேறுகளில் வேறே கனத்தது ஒரு பேற்றினை
எனக்கு தந்து விட்டால்

பின்னை யார்க்கு அவன் தன்னைக் கொடுக்கும் –
பின்னை இப்பொருள் கடிதாக கை கொள்வார் உளரோ
என் -கைக் கொள்வார் இலரோ -என்னில் –
கரு மாணிக்கக் குன்றத்துத் தாமரை போல் திரு மார்வு கால் கண் கை செவ்வாய் யுந்தியானே –
என்றது
இவ் வேப்பங்குடி நீரை புறம்பு பருகுவார் உளரோ -என்றபடி
கரு மாணிக்க குன்றம் -திரு மேனிக்கு திருஷ்டாந்தம்
தாமரை போல் -அவயவ சோபைக்கு திருஷ்டாந்தம்
திரு மார்வு -புருஷகாரமான பிராட்டி எழுந்து அருளி இருக்க்கிற திரு மார்வு
கால் -அச் சேர்த்திக்கு தோற்று விழும் திருவடிகள்
கண் -திருவடிகளில் விழுந்தாரை குளிர நோக்கும் கண்
கை -அவர்களை எடுத்து அணைக்கும் கை
செவ்வாய் -இன்சொற்களைச் சொல்லும் திரு அதரம்
உந்தி -அனுபவிக்கத் தக்க திரு உந்தி –
உந்தி மேலதன்றோ –அமலனாதி -3-என்னக் கடவது அன்றோ

எனக்கு தன்னை ஒழிய வேறு ஒன்றைக் கொடுத்து அகலாமல்
அபிநிவேசத்தால் தன்னையே தந்து அருளினான்
வேறு பிரயோஜனம் கொடுத்து இருந்தான் ஆனால்
பின்னை யாருக்கு கொடுக்கும்
நாடாக அமரர்கள் இருக்க
கொடுத்தவன் ஆள் இல்லாதவன் இல்லை
அயர்வறும் அமரர்கள் அதிபதி தானே இவருக்கு மயர்வற மதி நலம் அருளி
அதே அர்த்தம் இங்கும்
அவன் அருளை பெற பலர் இருக்க
என்னுடன் ஈடுபட்டு அபிநிவேசத்தால் வந்து புகுந்தான்
கரு மாணிக்க குன்றத்து தாமரை போலே அவயவங்கள்
அவன் பெருமை அறிந்து அவனை அடைய ஆசைப் படுகிறேன்
எனக்கு தரா விடில் யாருக்கு கொடுப்பான்
இப்படி சொன்னால் ஆழ்வார் பெருமை சொல்வதாகும்
பிரகரணம் அப்படி இல்லை
அவனுக்குஎல்லாரும் இருக்கச் செய்தேயும் கிடீர்
என்னுள் புகுந்தான் –
வேப்பங்குடி நீரை பின்னை கொள்வார் உண்டோ
எதிர்மறை அர்த்தம்
கொள்ள அனைவரும் மேல் விழுவார்
கரு மாணிக்க குன்றம் -திரு மேனி
ஆஸ்ரயத்துக்கு திருஷ்டாந்தம்
மேலே ஆறு அவயவங்கள் தாமரை -திருஷ்டாந்தம்
திரு மார்பு -புருஷகாரம் செய்ய பிராட்டி வாசஸ் ஸ்தானம்
கால் -தோற்று விழ
கண் -விழுந்தாரை கடாஷிக்க
கை -அணைத்து கொள்ள
செவ்வாய் -ஸ்மிதம் சொல்ல
உந்தி -அனுபாவ்யம் வஸ்து –

————————————————————————————————————————————————————————————————

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading