Archive for June, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 16, 2013

வந்தருளிஎன் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத்தாய் தந்தையே! முழுஏழுலகும் உண்டாய்!
செந்தொ ழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.

பொ-ரை :- பரமபதத்தில் நின்றும் வந்து என் நெஞ்சினை இடமாகக் கொண்ட வானவர் கொழுந்தே! இந்த உலகங்கட்கு ஒப்பற்ற பழைமையான தாயும் தந்தையுமானவனே! எல்லா உலகங்களையும் பிரளயகாலத்தில் உண்டவனே! பயன் கருதாத கைங்கர்யத்தையுடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கிற சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற எல்லை இல்லாத புகழையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டுள்ள அடியேனை நீக்காமல் இருக்க வேண்டும்.

வி-கு :- வந்தருளி: ஒருசொல், வந்தருளி கொண்ட கொழுந்தே! என்க. அகற்றேல்: எதிர்மறை.

ஈடு :- ஏழாம் பாட்டு. 1“அடியேன் தொழ வந்தருளே” என்கிற சொல்லோடே வரக் காணாமையாலே ‘உபேக்ஷித்தானோ’ என்று அஞ்சி, என்னை அகற்றாது ஒழிய வேண்டும் என்கிறார்.

‘வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, 2“பட்டர், ஸ்ரீ புஷ்பயாகம்அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்; ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப்பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச்செய்து, தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல்சொல்லி, 1‘இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்து அநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார் இவை சில ஈரச்சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச்செய்தார்; நஞ்சீயர், இவ்வார்த்தையை உருத்தோறும் அருளிச்செய்வர்” என்று அருளிச்செய்வர்.

வந்தருளி – நான் விரும்பாதிருக்க வந்தருளி. வெவ்வேறு தீவுகளிலுள்ள வஸ்துக்கள் இரண்டே அன்றோ சேர்கின்றன. 2பரமபத நிலையனானவனும், சம்சாரத்தை இருப்பிடமாகவுடையவரும். இந்த இருவருமே அன்றோகூடுகின்றார்கள். உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன்தான் போக வேண்டியவனாக இருக்க, அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ. ‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. 1ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே படுவராம். என் நெஞ்சு-அவனை ஒழிந்த வேறு விஷயங்களை உகந்து போந்த நெஞ்சு அன்றோ. இடம் கொண்ட – 2வந்தாலும் ‘நெஞ்சுக்கு விஷயம் வேறு உண்டு’ என்பரே. 3“தேவரீரால் காண்பிக்கப்பட்ட வாசத்தையே நான் விரும்புகிறேன்” என்னாநின்றான்.

ஆக ‘நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி. 4திரவியமாக இருக்கச்செய்தேயும் குணங்களைப் போன்று சிலபொருள்கள் சேரக் காணாநின்றோமேயன்றோ. என் நெஞ்சு இடம்கொண்ட வானவர் கொழுந்தே-ரீ வைகுண்டம் கலவிருக்கையாகவுடையவன் என் நெஞ்சு பெறுகைக்குக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன் ஆவதே! என்றது, நித்திய சூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான் என்றபடி. உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தையே – உலகத்துக்கு 2அத்விதீயனாய்ப் பழையனான தாயும் தமப்பனுமானவன். 3அங்கு இரண்டு தலையும் கூடி வருமே அன்றோ, இங்கு வெறும் ஒரு தலையேயாயிருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. 4“உயிர்களுக்கு எவன் அழியாத தந்தையோ” என்கிறபடியே, நாலு நாட்கள் மணற்கொட்டகம் இட்டு விளையாடுமாறு போலே அழியும் தாயும் தமப்பனும் அன்றோ அவர்கள், ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள். 5“மனிதர்களில் சிறந்தவர்களே! உலகங்களில்இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானாவர் தாயும் தந்தையுமாக இருக்கிறார்; காப்பாற்றுகின்றவரான இவரை உபாயமாக அடைமின்” என்றார் மார்க்கண்டேயரும். “கச்சத்வம் – ஒருதலையாகாமே நீங்களும் அவனைப் பற்றப் பாருங்கோள்.”

முழு ஏழு உலகம் உண்டாய் – 1மாதாவானவள் பத்து மாதங்கள் வயிற்றிலே வைத்துத் தரிப்பது, ‘பிறந்து வளர்ந்தால் பின்னை நம்மைப் பாதுகாப்பவனாவான்’ என்னும் பிரயோஜனத்தைப் பற்றவே அன்றோ; இவன் அங்ஙன் அன்றிக்கே, ‘இவைதாம் நோவுபடாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான். செந்தொழிலவர் – 2வேறு பிரயோஜனத்தைக் கருதாத நேர்மையையுடைய தொழில் விசேடத்தையுடையவர்களுடைய. என்றது, “எனக்கு ஒன்று கொடு, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாதவர்கள் என்றபடி. அன்றிக்கே, அவன் ரக்ஷணம் செய்வதைப் போலே இவர்களும் கைங்கரியம் செய்கின்றவர்கள் ஆதலின் ‘செந்தொழிலவர்’ என்கிறார் என்னுதல். இங்ஙன் அன்றாகில், வியர்த்தம் ஆமே. வேத வேள்வி அறா – வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை. 3பிராப்பிய விரோதியாதல் பிராபகவிரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லாநிற்கும். 1காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக்கட்டுவது. சிரீவர மங்கலநகர் அந்தம் இல் புகழாய் – ஸ்ரீவைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும். அடியேனை அகற்றேலே – 2ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ படைத்த புகழை, ‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கைவிட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக்கட்டுவித்துக் கொள்ளப் பாராதே கொள்ளாய். 3’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப் பொறுக்கமாட்டாமை சொல்லுகிற வார்த்தை. விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே காணும். இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த்தான் அகற்றுகிறாயோ என்பார் ‘அடியேனை’ என்கிறார்.

அருளிச்செய்வர்’ என்றது, நம்பிள்ளையை.
“வானவர் கொழுந்து வந்தருளி” என்கையாலே, அதிதூரத்திலிருக்கின்றவன்
சம்சாரியான தான் இருந்தவிடத்தே வந்தான் என்று ஈடுபட்டமையும்,
“கொழுந்து” என்கையாலே, அவர்களுக்கும் ஆதரணீயன் ஆகையாலே,
சேஷியானவன் சேஷபூதன் இருந்தவிடத்தே வந்தான் என்று
ஈடுபட்டமையும் தோற்றுகையாலே அவ்விரண்டனையும் உட்கொண்டு
அருளிச்செய்கிறார் ‘வெவ்வேறு தீவுகளில்’ என்று தொடங்கி.

வந்தருளி” என்று ஈடுபாடு தோன்ற அருளிச்செய்தற்குச் சம்வாதம்
காட்டுகிறார் ‘பட்டர்’ என்று தொடங்கி. புஷ்பயாகம் என்பது, ஒரு யாக
விசேடம். பிரஹ்மோத்சவத்தின் முடிவில் (பத்தாவது உத்சவம்)
பெருமாளுக்கு எதிரில் மண்டலங்கள் போட்டு, அதில், மற்றைப்
பொருள்களையும் நெருப்பையும் கலவாமல், புஷ்பங்களையே கொண்டு
அர்ச்சனை செய்வது போன்று யாகம் செய்வது என்பர். இது,
திருவரங்கத்தில் பிரஹ்மோத்சவத்தில் இன்றும் செய்யப்பட்டு வருகின்றது.

அவன் அப்படிப் பிரார்த்தித்த இடம் உண்டோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தேவரீரால்’ என்று தொடங்கி.

“அஹம் ஏவ ஆஹரிஷ்யாமி ஸ்வயம் லோகாந் மஹாமுநே
ஆவாஸம்து அஹம் இச்சாமி ப்ரதிஷ்டம் இஹ காநநே”

என்பது, ஸ்ரீராமா. ஆரண். 5. 32, 33. சரபங்கமுனிவரைப் பார்த்து
ஸ்ரீராமபிரான் கூறியது.

4. இருவரும் திரவியமாயிருக்கச் செய்தே, திரவிய குணங்கள் போலே சேரக்
கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘திரவியமாக’ என்று
தொடங்கி. என்றது, விளக்கு விளக்கின் ஒளி இவற்றினிடத்திலே
காணாநின்றோமே என்றபடி. ‘சில பொருள்’ என்றது, ஒளியினை. மேலும்,
ஆத்மாவைக் குறிக்க, சரீரமும் ஞானமும், பரமாத்மாவைக் குறிக்க,
ஜீவாத்மாவும், திரவியமாக இருக்கச்செய்தே, குணங்களைப் போன்று
சேர்ந்திருத்தலையும் ஈண்டுக் கோடல் தகும்.

ஈச்வரன், முந்தையான தாயும் தந்தையுமாக இருப்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘உயிர்களுக்கு’ என்று தொடங்கி.

“பூதாநாம் ய : அவ்யய: பிதா” என்பது, மஹாபாரதம் ஸஹஸ்ர நாமம்.
இதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘நாலு நாட்கள்’ என்று தொடங்கி.
‘இவர்கள்’ என்றது, ஈச்வரனையும் பிராட்டியையும்.

5. சர்வேச்வரனே உலகங்கட்கெல்லாம் தாய் தந்தையர்கள் என்னுமதற்கு,
வேறும் ஒரு பிரமாணங்காட்டுகிறார் ‘மனிதர்களில்’ என்று தொடங்கி.

“சர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ:
கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:”

என்பது, மஹாபாரதம் ஆரண்ய பர்வம். பாண்டவர்களைப் பார்த்து
மார்க்கண்டேயர் கூறியது. இச்சுலோகத்தின் இரண்டாம் அடிக்குப் பொருள்
‘ஒருதலையாகாமே’ என்று தொடங்குவது.

வாராமல் இருக்கவே உபேஷியாமல் அடிமை கொள்ள வேண்டும்
வந்தருளி -சப்தம்
வானவர் கொழுந்தாய் இருந்து எனது நெஞ்சில் இடம் கொண்டாயே ஆழ்வார் உருகி
உறுத்தொரும் நஞ்சீயர்
நூறு தடவை பகவத் விஷய கால ஷேபம்
புஷ்ப யாகம் -த்வாதச ஆராதனம் போலே ப்ரஹ்ம உத்சவம் தீர்த்தவாரி ஆன பின்பு
இயல் நஞ்சீயர் அருள பட்டர் கேட்டு அருளி –

கங்குலும் -பகலும் என் திருமகள் சேர் மார்பனே ஐதீகம் -உபன்யாசம் சொல்ல விஷயம் இயல் கேட்டு அருளி
திரு வீதியிலே ஒரு கோடையிலே நீரை விட்டு -இப்பாட்டை இயல் சொல்லும் –
தாம் இத்தை அனுசந்தித்து -இயல் சொல்லி –
வந்தருளி என்நெஞ்சிடம் கொடுந்த வானவர் கொழுந்தே வாய் விட்டு சொல்லி
யம நியமாதி க்ரமத்தாலெ -தார்மிகர் ஈரச் சொல்லை விட்டு போவதே
த்யானம் செய்ய சாஸ்திரம் விதிக்க
அஷ்டாங்க யோக நிலைகள் உண்டே
சமாதி வரைக்கும் மனனம்
பண்ணி புறம்புள்ள பராக்கை அறுத்து
அனுசந்தித்தாலும் நெஞ்சு இளகாமல்
சுக்காம் பரல் போலே இருக்கும் நெஞ்சு

ஆழ்வார் பாசுரம் கேட்டு உருகுமே -வந்தருளி
நாம் இருக்கும் இடம் வந்து -அருளி –
தார்மிகர் தங்கள் அனுபவம் நமக்கு கிட்டும் படி ஈரச் சொல்லை பொகட்டுப் போனார்களே
நினைத்தவாறே பட்டர் உருகி -நஞ்சீயர் உறுத்தொரும் அருளிச் செய்வர் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
அபேஷியாது இருக்க தானே வந்து சேர்ந்து
தீபாந்திர வஸ்துக்கள் சந்திக்குமா போலே –சம்சாரத்தில் அவன் வந்து -கூடி
என்ன ஆச்சர்யம்
பரமாத்மா உள்ள இடம் நாம் தேடித் போக இருக்க
பாரிப்புடன் தான் ஓடி வந்து -ஆழ்வார் நெஞ்சு சிதிலமாக போகும்படி
சீலம் கிருபை –
நித்ய சூரிகள் சதா தர்சனம் பண்ணா நிற்க விமுகரான எனது பக்கல் வந்து அருளி

ச ராம -அயோத்யா வாசி ஜனங்கள் -சுக்ரீவன் காலில் விழ
நித்ய சம்சாரி இடம் புகுவதே
பர்ண சாலை கட்ட ரிஷிகள் இடம் அனுமதி கேட்டு -ஆயாசம் அஹம் இச்சாமி என்றானே பெருமாள்
ஆத்தான் திருவழுந்தூர் அரையர் வந்தருளி வந்தருளி -மீண்டும் மீண்டும் -தாளம் கொண்டு
மேலே போக மாட்டாதே
த்ரவ்ய குணங்கள் சேரா இருந்தாலும் இங்கு சேர்ந்து –
ஆத்மா-த்ரவ்யம் சரீரம்
பரமாத்மா ஜீவாத்மா சேருவது போலே
குணம் ஞானம் ஆனந்தம்
ஒன்றை விட்டு பிரியாமல் குணங்கள்
வஸ்த்ரம் வெண்மை போலே
சேர்ந்த பின்பு பிரிக்க முடியாதபடி அப்க்ருத் சித்த விசேஷமாய்

என் நெஞ்சு -புறத்தே சென்றே
வானவர் கொழுந்து கலவிருக்கை -நெஞ்சு பெற அவசர ப்ரேதீஷணன்
இடம் கொண்ட -நெஞ்சுக்கு வேற விஷயம் உண்டு சொல்லி
அகற்றினாலும் புகுவதருக்கு கெஞ்சி இருந்து
நித்ய சம்சாரிகளுக்கு -தலைவன் எனது நெஞ்சில் புக -நித்ய சூரிகள் தலைவன் –
நித்ய சூரிகளுக்கு சத்தா ஹேது கொழுந்து -தனது சத்தை என்னாலே என்று
அகற்றப் பார்த்தால் -உன்னால் அல்லால் இல்லை –
அகற்ற திரு உள்ளம் இருந்தால் நெஞ்சில் எத்ருக்கு இடம் கொண்டாய்
உலக்குகொர் முந்தை தாய்
தந்தை இரண்டு தலையும் அங்கு ஆசை
இங்கு ஒரு தலையாய் இருக்கிறபடி
ஈஸ்வரன் தானே அறிந்து ரஷிக்கிறான்
முந்தை தாய் தந்தை அழியாத தந்தை – “பூதாநாம் ய : அவ்யய: பிதா” என்பது, மஹாபாரதம் ஸஹஸ்ர நாமம்.
இதற்குப் பொருள் அருளிச்செய்கிறா

சர்வேச்வரனே உலகங்கட்கெல்லாம் தாய் தந்தையர்கள் என்னுமதற்கு,
வேறும் ஒரு பிரமாணங்காட்டுகிறார் ‘மனிதர்களில்’ என்று தொடங்கி.

“சர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ:
கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:”

என்பது, மஹாபாரதம் ஆரண்ய பர்வம். பாண்டவர்களைப் பார்த்து
மார்க்கண்டேயர் கூறியது. இச்சுலோகத்தின் இரண்டாம் அடிக்குப் பொருள்
‘ஒருதலையாகாமே’ என்று தொடங்குவது.

மாதவன் -சரண் அடையும் என்று -அவனே அழியாத முந்தை தாய் தந்தை
ஆபிமுக்யம் பண்ண வேண்டும் -ஒரு தலை ஆகாமல்
அத்வதீயன் ஓர் சப்தம்
முந்தை பழைய
உலகும் உண்டாய் -மாதா பத்து மாசம் தரிப்பது -பின்பு தன்னை காப்பான் என்பதால் –
துக்க நிவர்தகன்
எம்பெருமான் அங்கன் அன்றிக்கே
இவற்றுக்கு நோவு படாமல்
பிராத-பிதா -சக்ரவர்த்தி திருமகனை இளைய பெருமாள் போல்வாருக்கும் மட்டும் இல்லை
அடியேனுக்கு ஆகி நின்ற –அம்மானும் திருமங்கை ஆழ்வார் பாசுரம் –
இன்று அகற்ற நினைத்தால் அன்று சத்தை நோக்கி ரஷித்தது எதற்க்காகா

அவனுக்கு ரஷணம் போலே இவர்களுக்கு கைங்கர்யம் -தரிக்க –
அநந்ய பிரயோஜனர்
தொழிலுக்கு செம்மை பிரயோஜனாந்தர -சாதன புத்தி இன்றி -24000 படி

செம்மை உடைய கைங்கர்யம் -பிரயோஜனாந்தர புத்தி இன்றி -சாதனா புத்தியும் இன்றி
சுயம் பிரயோசனமான கைங்கர்யம்
வேத கோஷம் அறாமல் –
இடைவிடாமல் -நாய்ச்சிமார் அணைப்பது போலே அவனுக்கு சந்தோஷம் கொடுக்குமே
இவர்களுக்கும் அபிமத விஷயத்தை அணைப்பதுக்கு வேறு பிரயோஜனம் வேண்டாமே
வேத வேள்வி செய்வதே பிரயோஜனம்

ஸ்ரீ வைகுண்டத்தில் புகழுக்கு அந்தம் இருக்கும் காணும் இங்கே கிடையாது
கல்யாண குணங்கள் சக்ரவர்த்தி திரு மகனுக்கு அந்தமில் புகழ் கொண்டவன்
அனுக்ரகம் செய்யாமல் இத்தை இழக்காதே
அடியேனை அகற்றாதே
தேசாந்த்ரத்தில் வந்து அடைந்த அந்தமில் புகழ் அடைந்து
பழியாக்கி கெடுத்துக் கொள்ளாதே
அடியேனை அகற்றேலே அரை ஷணம் தாழ்ந்தாலும் போருக்க முடியாமல் சொல்லுகிறார்
அடியேனை -உன்னை விட்டு வேறு பிராப்தி இன்றி
அகற்றாதே -பிராப்தி உனக்கு தானே
அனுபவம் கொடுக்காமல் விடலாமா

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 16, 2013

ஏனமாய் நிலம் கீண்டஎன் அப்பனே! கண்ணா! என்றும்எனை ஆளுடை
வான நாயகனே! மணிமாணிக்கச் சுடரே!
தேன மாம்பொழில் தண்சிரீவர மங்க லத்தவர் கைதொழ உறை
வானமா மலையே! அடியேன்தொழ வந்தருளே.

பொ-ரை :- பிரளயம் கொண்ட நிலத்தை வராகமாகி எடுத்த என் அப்பனே! கண்ணபிரானே! எப்பொழுதும் என்னை அடிமையாக ஆளுகின்ற தெய்வ நாயகனே! அழகிய மாணிக்கத்தினது சுடரே! தேனையுடைய மாமரச் சோலைகள் சூழ்ந்த குளிர்ந்த ஸ்ரீவரமங்கலத்திலிருப்பவர்கள் கைகூப்பி வணங்கும்படியாக எழுந்தருளியிருக்கின்ற வானமாமலையே! அடியேன் வணங்கும்படி வந்தருள்வாயாக என்கிறார். வி-கு :- ஏனம் – பன்றி, தேன – தேனையுடைய, அ: ஆறாம் வேற்றுமையுருபு. மாம்பொழில் – மாமரச் சோலை. உறை – வசிக்கின்ற.

ஈடு :- ஆறாம் பாட்டு 1மேற்பாசுரத்தில் அவாய் நிலையாற்போந்த கைங்கரியத்தை விரும்புகிறார் இப்பாசுரத்தில்.

ஏனமாய் நிலம் கீண்ட – ஆபத்தை அடைந்தவர்கள் அறிவிக்கையும் மிகையாம்படி அன்றோ உன்படி இருப்பது. காத்தல் ஒருதலையானால் உன்னைப் பேணாதவன் அன்றோ என்றபடி. ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே கண்ணா-பிரளயம் கொண்ட பூமியை மஹா வராஹமாகி எடுத்தாய், சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிருஷ்ணனாய் எடுத்தாய். ஏனமாய் நிலம் கீண்ட என் அப்பனே-பிரளயத்தாற்கொள்ளப்பட்ட பூமிக்கு உதவி செய்தது தமக்கு உதவி செய்ததாயிருக்கிறபடி. என் அப்பனே கண்ணா – 2என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் முகம் பண்ண வேண்டுமோ? என்னைக் காப்பாற்றுவதற்கு ஏதேனும் ஒரு கோலம் கொள்ள வேண்டுமோ? 3கண்ணன் கோள் இழை வான்முகமே அன்றோ இவர்க்கு இரக்ஷகம். என்றும் என்னை ஆளுடை வான நாயகனே – 4தனக்குத் தகுதியானவரோடு இருக்கும்போதும் இவர் இடையாட்டமாயிற்று ஆராய்ந்துபோருவது. இவர் சத்தையே தொடங்கிக் கை தொட்டு நோக்கிக் கொண்டாயிற்றுப் போந்தது. மணி மாணிக்கச் சுடரே – 1உளரான பின்பு ஓர் ஏற்றம் செய்து கொடுத்தலன்றிக்கே, அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து, இச்சை பிறந்தவாறே, அவ்வளவிலே நித்தியசூரிகளுக்கு விடும் படியையும் இவர்க்கு விட்டான். மணி மாணிக்கச் சுடர் – 2இரத்தினங்களுக்குள்ளே சிரேஷ்டமான இரத்தினம் என்னுதல். மணியினுடையவும் மாணிக்கத்தினுடையவும் ஒளியையுடைத்தாயிருப்பவன் என்னுதல்.

தேன மாம் பொழில் தண் சிரீவரமங்கலத்தவர் கைதொழ உறை – தேனையுடைத்தான மாம்பொழிலையுடைத்தாகையாலே சிரமஹரமான சிரீவரமங்கல நகரத்திலுள்ளார், ஸ்வரூபத்திற்குத் தகுதியான கைங்கரியத்தைச் செய்யும்படி இருக்கிற. வானமாமலையே-3நித்தியசூரிகளை அடிமை கொண்டிருக்கும் வேண்டற்பாடு போலே காணும் இங்குள்ளார் அடிமை செய்ய இருக்கிற இருப்பும். அடியேன் தொழ வந்தருளே – நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக வந்து தோற்றவேண்டும். நான் அடிமை செய்து வாழும்படிக்குத் தகுதியாக என் முன்னே நடந்து வரவேணும் என்பார் ‘வந்தருளே’ என்கிறார். என் கண் வட்டத்திலே உலாவி நின்று நீ அடிமை கொள்ள வேண்டும் என்றபடி. 4அடிமை

செய்கையாவது, “அன்று இவ்வுலகம் அளந்தாய் அடிபோற்றி” என்னுமாறு போலே, அந்த நடை அழகுக்கு மங்களாசாசனம் செய்தல்.

என்னப்பனே கண்ணா” என்பதற்கு, வெறுப்பிலே நோக்காகச் சிலேடையில்
வைத்து, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘என்னை’ என்று
தொடங்கி. முகம் – வேறொரு பிரகாரமும், வராகத்தினது முகமும். கோலம்
– வராகமும், அலங்காரமும்.

3. வேறு ஒரு முகம்கொள்ளாமல் ஸ்வாபாவிகமான கிருஷ்ணனுடைய முகமே
போருமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் “கண்ணன்” என்று
தொடங்கி. இது, திருவாய்மொழி, 7. 7 : 8.

4. “வானநாயகனாய் வைத்து என்னையாளுடைய” என்று பிரித்துக் கூட்டிக்
கருத்து அருளிச்செய்கிறார் ‘தனக்குத் தகுதியான’ என்று தொடங்கி.
இடையாட்டம் – காரியம். “என்றும்” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார்
‘இவர் சத்தையே’ என்று தொடங்கி.

என்றும் என்னை யாளுடைய” என்றதற்கு, அருளிச்செய்த பொருளையும்
அநுவதித்துக்கொண்டு, “மணி மாணிக்கச் சுடரே” என்றதற்கு, பாவம்
அருளிச்செய்கிறார் ‘உளரான பின்பு’ என்று தொடங்கி.

2. இரத்தினங்களுக்குள்ளே சிரேஷ்டமான இரத்தினம் – இந்திர நீலமணி.
‘மணியினுடையவும், மாணிக்கத்தினுடையவும்’ என்ற இடத்தில், மணி –
நீலமணி. மாணிக்கம் – பத்மராகம். இருவகைப் பொருளிலும் சுடர்
என்பதற்கு, விக்கிரஹம் என்பதுவே பொருள்.

3. வானத்திலே – பரமபதத்திலே, பெரிய மலை போலே, அளவிடற்கு
அரியனாய்க்கொண்டு வீற்றிருந்தாற்போலே, இங்கும் எழுந்தருளியிருக்கிறான்
என்று பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி அருளிச்செய்கிறார் ‘நித்தியசூரிகளை’
என்று தொடங்கி. வேண்டற்பாடு – பெருமை.

4. நடக்கிறபோது செய்கின்ற அடிமை யாது? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘அடிமை செய்கையாவது’ என்று தொடங்கி.
‘அன்றிவ்வுலகம்’ என்பது, திருப்பாவை, 24-ஆம் பாசுரம்.

கைங்கர்யம் எது என்று வ்யக்தமாக அருளுகிறார் இதில்-

வான மா மலையே எம்பெருமானே என்று நேராக கூப்பிடுகிறார்
ரஷணம் -ஒரு தலை -பூமி பிரார்த்திக்காமல் இவனே வந்து ரஷித்து -ஸ்ரீ வராஹ -செஷ்டிதங்கள்
உன்னைப் பேணாமல் -மானமிலா பன்றியாம் தேசுடைய தேவர்
குழந்தை சேற்றில் விழுந்தால் தாயார்
நீருக்கும் சேற்றுக்கும் இறாயாத வடிவு கொண்டு
நிலம் கீண்ட என் அப்பனே -கண்ணா –
சம்சார பிரளயம் கொண்ட என்னை ஸ்ரீ கிரிஷ்ணனாய் ரஷித்தாய்
வராஹ கோபாலராய் மக்னரை தாழ இழிந்து –
இவருக மகனாரை உயர்த்த தாழ கீழ் குலத்தில் -புக்கு ஆசார்ய -ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி
பூமிக்கு செய்த உபகாரம் தனக்கு செய்த உபகாரம் என் அப்பனே
என்னுடைய ரஷணத்துக்கு வேறு முகம் கொள்ள வேண்டாத படி -கண்ணனாய்
முகம் பண்ணுதல் -வராக நரசிம்ஹ
கோலம் வேற கொள்ள வேண்டாமே -கண்ணனே போதுமே
என்றைக்கு என்னை ஆளுடை வான நாடன்
பரம பதத்தில் தனக்கு ஈடான நித்ய முக்தர் -பரம சாம்யம் -உபாயதி
இருக்கும் பொழுதும் கூட
இவரை தேடி  ஆராய்ந்து
இவர் சத்தியே தொடங்கி கை தொட்டு போந்து
மணி மாணிக்க சுடரே -ரஷித்த படியால் வந்த புகர்
அடியே பிடித்து நோக்கிக் கொண்டு போந்து -உளனான பின்பு மட்டும் ஏற்றம் கொடுக்காமல்

மணி மாணிக்கம் ரத்னாஸ்ரேஷ்டம்
நீல மணி
சிவந்த மாணிக்கம் இரண்டும் தேஜஸ்
தேனை உடைத்தான -ஸ்ரமஹரமான
கை தொழ இருந்தாய் ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யம் செய்ய
நித்ய விபூதி போலே  இருந்தாய்
வான நாடன் போலேவே இங்கே எழுந்து அருளி –
வானம் முட்டும் படி இருந்த பெரிய மலை -வான மா மலை திருநாமம் -தோத்தாரி
திருநீர்மலை -தோயாத்ரி
அடியேன் தொழ வந்து அருளே -கண் முன்னாள் வர வேண்டும்
அன்று இவ் உலகம் அளந்தாய் அடி போற்றி மங்களா சாசனம் செய்ய வர வேண்டுமே
என் கண் வட்டத்தில் உலாவி நின்று அடிமை கொள்ள வேண்டும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

 

ஸ்ரீ திருப்பாவை வியாக்யான அவதாரிகை-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை – –

June 15, 2013

தேகாத்ம அபிமானிகளுக்கும் ஆத்ம ஸ்வரூபம் கை வந்து இருக்கும் ரிஷிகளுக்கும்
பர்வத பரமாணு வோட்டை வாசி போரும் –
ஆழ்வார்களுக்கும் பெரியாழ்வாருக்கும் அத்தனை வாசி போரும் –
பெரியாழ்வாருக்கும் ஆண்டாளுக்கும் அத்தனை வாசி போரும்
அவர்களில் இவளுக்கு வாசி என் என்னில்

அநாதி மாயயா- சம்சாரத்தில் உறங்கு கிறவர்களை எழுப்பி
எம்பெருமான் தானே தன்னைக் காட்ட கண்டார்கள் ஆழ்வார்கள் –

இவள் தானே சென்று எம்பெருமானை எழுப்பி தன் குறையை அறிவித்தாள்-
ஆகையால் அவர்களிலும் இவள் விலக்ஷணை-

1-பால்யாத் என்றால் போலே –
தொடக்கமே பிடித்து பகவத் குணங்களில் அவஹாகித்துப் போகும்

2-புருஷன் புருஷனைக் கண்டு ஸ்நேஹிப்பதில் காட்டில்-
ஸ்திரீ புருஷனைக் கண்டு ஸ்நேஹிக்கை பள்ளமடை –

ஆழ்வார்களைக் காட்டிலும் எம்பெருமான் பக்கல் பரம பக்தி உடையாளான ஆண்டாள்
அருளிச் செய்த திருப்பாவைக்கு கருத்து –

3-மார்கழி நீராட -நோன்பு வியாஜ்யமாக கொண்டு –
நோன்பு என்ற ஒரு வியாஜ்யத்தாலே எம்பெருமான் பக்கலிலே சென்று
உனக்கு சேஷமாய் இருக்கிற ஆத்மா அனர்த்தப் படாதபடி பண்ணி
இதுக்கு ஸ்வரூப அனுரூபமான கைங்கர்யங்களையும் கொடுத்து
அது தானும் யவதாத்மபாவியாம் படி பண்ணி அருள வேணும் -என்று அபேஷிக்கிறது-–

இந் நோன்புக்கு மூலம் என் என்னில் –
மீமாம்ஸையிலே -ஹோளாதிகரண நியாயத்தாலே சிஷ்டாசார சித்தம்

-மேலையார் செய்வனகள் -என்று ஆண்டாள் தானும் அருளிச் செய்தாள்-
பொய்யே நோற்கிறோம் -என்று சொல்லலாமோ என்னில் –
விவாஹங்களிலும் மரண பர்யந்தமான தசைகளிலும் வந்தால் பொய் சொல்லலாம் –

ஆண்டாள் இப்படி திருவவதரித்து வளர்ந்து அருளுகிற காலத்தில்
பெரியாழ்வார் வயிற்றிலே பிறக்கையாலும் தானான தன்மையாலும்
ஞான பக்திகள் க்ஷணம் தோறும் இட்டு மாறினால் போலே
வடிவிலே காணலாம் படி பெறுகிச் செல்லா நிற்க
பத்தி சம்யோக சுலபம் -என்கிறபடியே
ஒரு கொள் கொம்பிலே சேர்க்க வேண்டிய பருவமாய்
மானிடர்வர்க்கு என்று பேச்சு படில் வாழாத தன்மையளாய் –
கோல் தேடி ஓடும் கொழுந்தே போன்றதே மால் தேடி ஓடும்மனம் -என்னும் படியே
அபி நிவேசத்தைப் பண்ணிக்க கொண்டு

வட பெரும் கோயில் உடையான் உடன் தழுவி முழுசிப்  பரிமாற வேணும் என்னும் அபிநிவேசத்தால்-செல்ல
இவள் நினைத்த படிகளுக்கு அவன் முகம் காட்டாமையாலே
மிகவும் அவசந்தனையாய் –
இவனோடு கலந்து பரிமாறப் பெற்றார் உண்டோ இல்லையோ என்று ஆராய்ந்து பார்த்து

திருவாய்ப்பாடியில் பெண் பிள்ளைகள் யதா மநோ ரதம் இவனோடு
அனுபவிக்கப் பெற்றார்கள் என்று அனுசந்தித்து –

அது காலாந்தரத்திலே யாகையாலே அதுக்கு உதவப் பெற்றிலோம்
என்று இன்னாதாய்

இனி அவன் உலாவிப் போன அடிச் சுவடும் –
அவனும் பெண்களுமாய் திளைத்த யமுனையும் அவன் எடுத்த கோவர்த்தனமும் கிடந்ததாகில்
அவற்றைக் கண்டாகிலும் தரிப்போம் என்று பார்க்க –

அதுக்கு தனக்குப் போக பலம் இல்லாமையால் அவற்றை அனுசந்தித்து
மிகவும் அவசந்தனையாய்
ஸ்ரீ ஜனக ராஜன் திரு மகளைப் போலே –
வில் -என்று ஒரு அவதி பெறுதல் –
நப்பின்னைப் பிராட்டியைப் போலே -ரிஷபங்கள் -என்று ஒரு அவதி பெறுதல் -செய்யப் பெறாமையாலே
மிகவும் தளர்ந்து நமக்கு தரிக்கைக்கு விரகு என் என்று ஆராய –

சில தார்மிகர் அவ்வளவில் சொல்லுகிறார்கள் –
திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனும் பெண்களுமாய் திருக் குரவை கோத்து
அதி ரசம் செல்லா நிற்க ப்ரீதியாலே குமிழ் நீர் உண்டு
இனி நல் கேடு கெட ஒண்ணாது -என்று
இந்த ரசம் மாறுகைக்காக பெண்களை பிரிந்து கிருஷ்ணன் ஒளிக்க

பெண் பிள்ளைகள் தங்கள் ஆற்றாமையால் –
துஷ்ட காளிய-என்கிறபடியே
அவர்கள் அநு கரித்து தரித்தார்கள் –

என்று கேட்டு தானும் அவர்களை போலே அநு கரித்து தரிக்கப் பார்க்கிறாள் –

இவள் தான் ப்ராஹ்மணியாய் இருந்து வைத்து
அவர்களை போலே அநு கரிக்கும் படி எங்கனே என்னில் –

யாகத்தில் தீஷித்தவர்கள் தேவதத்தாதி நாமங்களை தவிர்ந்து யாகம் முடியும் அளவும்
எஜமான் என்றும் –
அத்வாயு -என்றும் –
ஹோதா -என்றும் -இத்யாதி நாமங்களே யாகிறது போலே

இவளும் ஸ்ரீ வில்லி புத்தூரே திருவாய் படியாகவும்-
அங்குள்ள பெண்கள் இடைப் பெண்கள் போலே அவர்களில் தானும் ஒருத்தி யாகவும்
வட பெரும் கோயிலே ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகையாகவும்
உள்ளே நிற்கிறவன் கிருஷ்ணனாகவும் அனுசந்தித்து

-தன்னுடைய திரு உள்ளம் திருவாய்ப் பாடியிலே குடி போய்-
பாவன பிரகரக்ஷத்தாலே அநு காரம் முற்றி -அவை தானேயாய்

-இடை நடையும்
இடை முடியும்
இடைப் பேச்சும்
முடை நாற்றமுமாய் விட்டது-

ஸ்ரீ யபதியாய் அவாப்த ஸமஸ்த காமனாய் ஸ்ரீ வைகுண்ட நிகேதனனாய் இருக்கிற சர்வேஸ்வரன் –
நஷ்டமாய் கிடக்கிற ஜகத்தை கிருபையால் ஸ்ருஷ்டித்து –
ஆத்மாக்களுக்கு கரண களேபரங்களைக் கொடுத்து –
சாஸனாத் சாஸ்திரம் -என்கிறபடியே
வேத சாஸ்திரங்களை தன்னைப் பெறுகைக்காக-உபாயமாகக் காட்டிக் கொடுக்க –

அவற்றைக் கால் கடைக் கொண்டு -விஷயாந்தரங்களிலே மண்டி
அநர்த்தப் பட்டு போகிற தசையில்
தான் வந்து பிறந்து அருளி
தன்னுடைய ஸுந்தர்யத்தாலும் சீலாதி குணங்களாலும் இந்த ஜகத்துக்களை ஈடுபடுத்தி
வாரிப்பிடியாகப் பிடித்துக் கொண்டு போவான் ஒருவானாகையாலே
தாதார்த்தமாக திருவாய்ப்பாடியிலே கிருஷ்ணனாய் வந்து திருவவதாரம் பண்ணி
தன்னுடைய ஸுந்தர்யத்தாலும் குண சேஷ்டிதங்களுமாக
பஞ்ச லக்ஷம் குடியில் உள்ள பெண்களைத் தோற்பித்திக் கொண்டு
ஒத்த பருவத்தில் பெண்களும் தாணுமாய் வளர்ந்த காலத்தில் –

தானும் ப்ராப்த யவ்வனனாய் –
அவர்களுக்கும் யவ்வனம் வந்து தலைக் கட்டின வாறே
கோப வ்ருத்தர் எல்லாரும் கூடி
கிருஷ்ணன் தூர்த்தனாய் -காமுகனாய் -இரா நின்றான் –
இவன் முகத்தில் பெண்கள் விழிக்கல் ஆகாது -என்று பார்த்து இவர்களைக் கொண்டு போய்
நிலவறைகளிலே யடைக்க

பெண்களும் கிருஷ்ணனும் பண்ணின பாக்யத்தாலே வர்ஷம் இன்றிக்கே ஒழிய
பெண்கள் இருந்து மநோ ரதிக்கிறார்கள்
கோ தனராய் இருக்கிற இடையர் வர்ஷார்த்தமாக நம்மை நோற்கச் சொல்லக் கடவர்கள்-
கிருஷ்ணன் இதுக்கு கடைக் கூட்டாகவும்-நிர்வாஹமாகவும் கடவன்
நமக்கு ஒரு துக்கம் இல்லை என்று பெண்கள் ப்ரீதைகளாய் தரித்து இருக்கிற தசையில்

வர்ஷமும் இன்றிக்கே இருக்கிற படியைக் கண்டு
கோப வ்ருத்தர் எல்லாம் திரண்டு -பசுக்களும் மனுஷ்யரும் பிழைக்கும் விரகு ஏதோ என்று பார்த்து
வருஷார்த்தமாக நோற்க வர்ஷம் உண்டாம் என்று –
இவ்வூரில் பெண்கள் அடைய நோற்கக் கடவர்கள் –
இந்நோன்புக்கு இங்குத்தைக்கு அதிபனான ஸ்ரீ நந்தகோபர் மகன் கிருஷ்ணன் கடகனாவான் என்று
அத்யவசித்து

பெண்பிள்ளைகளை அடைய அழைத்து –கிருஷ்ணனையும் அழைத்து –
பெண்களை நோற்கச் சொல்லி

இவர்கள் நோன்புக்கு நீ கடகனாக வேணும் -என்று கிருஷ்ணனை அபேக்ஷிக்க –
அவன் எனக்கு ஷமம் அன்று -என்ன
இத்தனையும் செய்ய வேணும் -என்று மறுக்க ஒண்ணாத படி நிர்பந்திக்க

அவனும் இசைந்த பின்பு எல்லாரும் திரள இருந்து
பெண்கள் நோற்பார் -இதுக்கு வேண்டுவது கிருஷ்ணன் சஹகரித்து கொடுப்பான் -என்று
ஓம் அறைந்து
கிருஷ்ணன் கையிலே பெண்களைக் காட்டிக் கொடுத்து

கோப வ்ருத்தர் எல்லாரும் போன பின்பு -பெண்களும் கிருஷ்ணனும் கூட இருந்து –
திருக் குரவை கோத்த ராத்திரி போலே
பெண்காள் இதுவும் நமக்கு ஒரு ராத்திரியே -என்று கிருஷ்ணன் கொண்டாடி

இனி அசிர்ப்பு -ஆயாசம் -பிறக்க இருப்போம் அல்லோம் –
இப்போது எல்லாரும் போய் அபர ராத்ராத்திரியிலே வந்து –
இரவின் பின் பாகம் – எழுப்புங்கோள் -நோன்புக்கு குளிக்கலாம் படி -என்று அருளிச் செய்து –

கிருஷ்ணனும் பெண்களை பிரிந்து போய் தரிக்க மாட்டாமே
நப்பின்னை பிராட்டி திரு மாளிகையில் புக்கான் –

பெண்களும் பரஸ்பர சம்ச்லேஷத்தாலே கால் நடை தந்து போய்
தம் தாம் மாளிகையில் புக்கு உறங்கப் புக்க இடத்தில் கண் உறங்காமையாலே
முற்பட உணர்ந்தவர்கள் கிருஷ்ண குண சேஷ்டிதங்களை நினைத்து எழுந்திருக்க மாட்டாதே
கிடக்கிறவர்களை தனித்த தனியே சென்று எழுப்பி

எல்லாரும் கூடி உத்தேசியமான ஸ்ரீ நந்த கோபர் திரு மாளிகையில் சென்று
கிருஷ்ணனை எழுப்பி தங்கள் அபேக்ஷிதத்தை அறிவித்து

யாவதா வர்த்தே சக்ரம் -என்று
ஸ்ரீ பரத ஆழ்வான் பெருமாள் திருவடிகளில் விழுந்து வேண்டிக் கொண்டால் போலேயும்
அர்ஜுனன் ஷத்கத்ரயத்திலும் கூட எடுப்பும் சாய்ப்புமாய்ச் சென்று சரம ஸ்லோகம் கேட்டு தரித்தால் போலேயும்
அபேக்ஷிதம் பெற்று முடிக்கிறது –

இவள் மடலூராதே நோன்பில் கை வைப்பான் என் என்னில்
ராஜ மகிஷி உஞ்ச விருத்தி பண்ணி ஜீவித்தல் ராஜாவுக்கு அவத்ய அவஹமாம் போலே –
மடலிலும் காட்டிலும் இது அவத்ய அவஹமாகையாலும்
சக்ரவர்த்தி திருமகனைப் போலே குண வியசநியன் -குணத்துக்கு ஹானி வருமோ என்று
வியசனிப்பவன் அன்றியே தானும் ஒக்க மடல் எடுப்பான் ஒரு
சுணைக் கேடன் -லஜ்ஜா ஹீனன் -ஆகையாலும்
மடல் இவ்விஷயத்தில் பலியாது என்று நோன்பு நோற்கிறார்கள் –

உத்தேச்யம் வேறு ஒன்றாய் நோன்பு வியாஜ்ய மாத்திரம் ஆகில்
இவர்களுக்கு தேவதை வர்ஷிக்குமோ என்னில்
வ்ரத உபவாச கர்சிதமான வடிவைக் கண்டால்
சேதனம் அன்றோ வர்ஷியாதோ -என்று பார்த்தார்கள் –

திருப் பல்லாண்டுக்கு ஆள் கிடைக்கிலும் திருப்பாவைக்கு ஆள் கிடையாது
மோவாய் எழுந்த முருடர் கேட்கைக்கு அதிகாரிகள் அல்லர்
முலை எழுந்தார் கேட்க வேணும் –
அவர்களிலும் எம்பெருமானை தானே அனுபவிக்க வேணும் என்று இருக்கும்
பரிவாணிச்சிகளான பிராட்டிமார்க்கும் கேட்க நிலம் இல்லை

பல சொல்லி என்
பத்து ஆழ்வார்கள் உடைய சார பூதையான தானே சொல்லி
தானே கேட்கும் இத்தனை –

எம்பெருமானார் அருளிச் செய்வர்

இவள் தான் எம்பெருமானுக்கு மதி நலம் அருளினாள்
பதின்மரின் ஞானமும் ஸ்திரீ தனமாக இவள் பக்கலிலே இறே குடி கொண்டது
இளைய பெருமாள் படி ஆழ்வார்களது -பகவத் அனுபவத்தை ஆசைப்பட்டார்கள்
ஸ்ரீ பரதாழ்வான் படி பெரியாழ்வாரது -பகவத் சம்ருத்தியை ஆசைப்பட்டார்கள்
ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான் படி பெரியாழ்வார் திருமகளராது -ஸ்ரீ மதுரகவி களோடு ஒப்பர்
நாய்ச்சியார் பெரியாழ்வாரையே உபாயமாக விஸ்வசித்து இருப்பர்

முதல் பாட்டிலே
நாராயணனே நமக்கே பறை தருவான் -உபாயத்தை அறுதி இட்டு
சிற்றம் சிறு -காலையில்
உபேயத்தை அறுதி இட்டு
நடுவில்
தேக யாத்ரைக்கு உடலாக்கி விடுகிறாள்

அன்று எனக்கு அவை பட்டினி நாள் என்னுமவர் திருமகள் இறே
ஒழிவில் காலம் எல்லாம் என்றும் உண்டு இறே
மாலாகரர் மகள் இறே
குண வித்தர் உறங்க கைங்கர்ய பரர் எழுப்ப –
அமரரும் முனிவரும் போலே -முனிவர் உறங்க அமரர் எழுப்ப

அநாதி காலம் உறங்கி இனி அநந்த காலம் உணர்ந்தே இருக்கிறபடி
எம்பெருமானை செறிய செறிய உணர்த்தி மிகும்
பகல் கண்டேன் நாரணனைக் கண்டேன் –
உறங்காத என்னையும் கண்டேன் –
அஸ்தமிதியாத-ஆதித்யனையும் கண்டேன் –

திருக்கண்டேன் -பின்பு பொன் மேனி கண்டேன்
பிரபை முந்துற கண்டு பின்பு ஆதித்யனை காணுமா போலே

கும்பகர்ணனுக்கு உறக்கம் தேட்டம்
விபீஷண ஆழ்வானுக்கு உணர்த்தி தேட்டம்
ஆதித்யன் உண்டானாலும் கண் உள்ளாருக்கு தானே விடிவு

அவனை பருத்தி பட்ட பன்னிரண்டும் படுத்த வல்ல ஸ்த்ரீத்வம் உள்ளவள் –
ஆற்றாமை தன்னேற்றம்

தேகாத்ம அபிமானம் கூனி கைகேயி போல்வார்
தார்மிகத்வதுக்கு சக்கரவர்த்தி
ஆத்ம ஞானத்துக்கு வசிஷ்டாதிகள்
கைங்கர்யத்துக்கு இளைய பெருமாள்
பாரதந்த்ர்யத்துக்கு ஸ்ரீ பரத ஆழ்வான்
பகவத பாரதந்த்ர்யத்துக்கு ஸ்ரீ சத்ருக்ன ஆழ்வான்

முந்துறவே பல்லாண்டு என்றார் பெரியாழ்வார் பகவத் சம்ருதியை
இவளோ நீராடப் போதுவீர் -என்றாள்
உபாயத்திலும் இவர்க்கு மெய்ம்மை பெரு வார்த்தை விஷ்ணு சித்தர் கேட்டிருப்பர்
இவளுக்கு உபாயம் -விட்டு சித்தர் தங்கள் தேவரை வல்ல பரிசு வருவிப்பரேல் அது காண்டும் –
பெரியாழ்வார் தம்மை அழித்து இவனைப் பெற இருக்க

இவள் தன்னை அழித்து அவர்களைப் பெற பார்க்கிறாள்
நம் ஆழ்வார் நெடுமாற்கு அடிமையிலும்
வேய் மரு தோளிணையிலும் கடைகோடி நிலை இட்ட
அர்த்தம் இவளுக்கு முற்பட்டது

ஸ்ரீ ஜனக ராஜன் மகள் உடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள்
சக்ரவர்த்தி திருமகனைப் பெற உடல் ஆம் போலே

ஆண்டாள் உடைய ஆற்றாமை பிறந்த பாசுரங்கள்
பெரிய பெருமாள் திருவடிகளைப் பிராபிக்க உடலாம்

ஸுவ உபதேசிகளால்
பகவத் தானத்துக்கு எல்லை பெரியாழ்வார் படி

அந்ய உபதேசத்துக்கு எல்லை இவள் படி

————————————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்-
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம் .
ஸ்ரீ அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திரு நாராயணபுரத்து ஆய் ஜகன்னாதாச்சார்யர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

ஸ்ரீ திருப்பாவை தனியன் –ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் அருளிச் செய்த வியாக்யானம் –

June 15, 2013

அவதாரிகை
பர தசையில் மற்றைப் பிராட்டிமாருக்கு பெரிய பிராட்டியார் முன்னிலையாக வேண்டினால் போலே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் பெரிய பிராட்டியாருக்கும் ஆண்டாளுக்கும் அகப்பட
நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக வேணும் –
அங்குத்தை ஐஸ்வர்யத்துக்கு பிராட்டி சத்ருஸை ஆனால் போலே
இங்குத்தைக்கு இவனுடைய எல்லாப் படிகளுக்கும் குல சீலாதிகளில் சத்ருஸை யாயிருக்குமவள்

இந்த ஸ்லோகம் பட்டர் தென்னாட்டிலே எழுந்து அருளி இருக்க பெருமாளை பிரிந்த வ்யசனத்தாலே
திரு உள்ளம் கலங்கி இருக்கிற தசையில் திரு உள்ளம் ப்ரசன்னமாகைக்காக
நஞ்சீயர் ஆண்டாளை ஒரு ஸ்லோகமும் ஆழ்வார்களை ஒரு ஸ்லோகமும் அருளிச் செய்யலாகாதோ என்ன
அதி ப்ரீதராய்த் திருப்பாவைக்கு வாக்யார்த்தமாக அருளிச் செய்து
ஆண்டாளை சரணம் புகுகிற ஸ்லோகம் –

சேதனர் அடைய நஞ்சுண்டாரைப் போலே அநாதி மாயையாலே மயங்கிக் கிடந்து உறங்க
இப்படி இருக்கிற சம்சாரத்துக்குள்ளே
திருவாய்ப்பாடி பெண் பிள்ளைகள் பரஸ்பரம் உணர்வாரும் உணர்த்துவாருமாக
பரம பதத்தில் யாத்திரை போலே செல்லா நிற்பதே -என்று
ஆண்டாள் தானும் அநுகாரத்தாலே இவர்களை உணர்த்தினவோ பாதி
அவன் தன்னையும் உணர்த்தினாள்-

——–

நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–

————

நீளா –ஸ்ரீ நப்பின்னை பிராட்டியினுடைய
துங்க –ஓங்கிப் பணைத்து இருந்துள்ள
ஸ்தன கிரி தடீ –திரு முலைத் தடங்கள் ஆகிற மலைத் தாழ்வரையிலே
ஸூப்தம் -மயங்கிக் கிடந்து உறங்கினவனாய்
ஸ்வ உச்சிஷ்டாயாம் -தன்னால் சாத்திக் கழிக்கப் பட்ட
ஸ்ரஜி -மாலையால்
நிகளிதம்-விலங்கிடப்பட்டவனாய் இருக்கிற
உத்போத்ய கிருஷ்ணம் -ஸ்ரீ கிருஷ்ணனாகிய யாதவ ஸிம்ஹத்தை உணர்த்தி
ஸ்ருதி சத சிரஸ் சித்தம் -பல உபநிஷத்துக்களாலும் தேறின
ஸ்வம் பாரார்த்யம் -தன்னுடைய பாரதந்தர்யத்தை
அத்யாபயந்தீ -அறிவித்து
பலாத் க்ருத்ய -பலாத்கரித்து
யா கோதா புங்க்தே -யாதொரு கோதா என்னும் திரு நாமத்தை யுடைய ஆண்டாள் புஜிக்கிறாளோ
தஸ்யை — அப்படிப்பட்ட வைபவத்தை உடையவள் பொருட்டு –
நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய –நம நம என்னும் வணக்கம் மீண்டு மீண்டும் –
கால தத்வம் உள்ளதனையும் இந்த அடிமையாக வேண்டும்

ஸ்யாலோ அத நந்த கோபஸ்யமிதி லேஷுகாவாம்பதி ப்ரவ்ருத்த கோத நோ தக்ஷஸ் கும்பகோநாமநா மத
தாதா துக் தஸ்ய ஸர்வேஷாம் தக்ர சய சக்ரு தஸ்யச ஜ நஸ்ய பிரியவாக் நித்யம் யசோ தாயா ஜகன்யஜ
தர்மதா தஸ்ய பார்யா சீத்தர்மததை வதநா மத சா ஸூதாஸ் பத்ய யுகளம் சோபநம் கோப பூஷணம்
தயோஸ் தத்ர புமான் ஜக்ஜே ஸ்ரீ தாமா நா மவிஸ்ருத சர்வைஸ் ச்சா ஸீத் குணைர் யுக்த சர்வ பிராணி மநோ சம
நீளா நாநா மாச கன்யா சாரூ பவ்தார்ய குணான்வித –
நீளா குலேந சத்ருஸீ யாகையாலே -நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் என்றதும்

நீளா –
அவன் -நந்தகோபன் தன் இன் உயிர்ச் சிறுவனே –
யசோதைக் கடுத்த பேரின்பக் குல விளங் களிறே –
நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் -போலே
இவள் ஸ்ரீ கும்பர் குமாரத்தியாக அவதரித்த படி –
ஆகையாலே நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் -என்றதும் –

அவன் ஆயர் கொழுந்து –
இவள் குல வாயர் கொழுந்து –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் –
தோளி சேர் பின்னை –
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்
மற்றைப் பிராட்டிமாரில் ஆபி ஜாத்யத்தாலும் உகக்கைப் பாடி யாகையாலும் உள்ள வாசி
கோவலர் பட்டம் கவித்தது இவளுக்கே ஆகையாலே
சூட்டு நன் மாலைகள் -ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து
இமிலேற்று வன்கூன் கோட்டிடை யாடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே-என்னக் கடவது இறே

துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம் –
நப்பின்னைப் பிராட்டியுடைய ஓங்கிப் பணைத்து இருந்துள்ள திரு முலைத் தடங்கள் ஆகிற மலைத் தாழ்வரையிலே
நஞ்சுண்டாரைப் போலே மயங்கிக் கிடந்து உறங்குகின்ற ஸிம்ஹத்தை யுணர்த்தினாள்-
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா என்றும் –
யசோதை இளம் சிங்கம்-என்றும் சொல்லக் கடவது இறே

இஷ்வாகு சிம்ஹமான பெருமாள் பிராட்டியைப் பிரிந்து மால்யவான் ஆகிற மலையிலே
மன்னிக் கிடந்தது உறங்கப் பெறாமல் -அநித்ரராய் -இருந்தார்

இங்கு அங்கன் அன்றிக்கே -யாதவ சிம்ஹமோ-
பிரிவாற்ற கில்லாமையை அறிந்து -தானே மேல் விழுந்து அனுபவித்த படி –
பஹூ குடும்பியார் இருப்பார் சிலர் ஒரு மலை அடியைப் பற்றி ஜீவிப்பாரைப் போலே
சர்வ லோக குடும்பியான சர்வேஸ்வரன் இவள் முலை யடியைப் பற்றிக் கிடக்கிறான்

துங்கம் –
என்கையாலே அளவிறந்த போக்யதா அதிசயம் சொல்லுகிறது –

தடீ ஸூப்தம் –
என்கையாலே -அவயவ ஏக தேசத்தில் மக்நனான படி
மலராள் தனத்துள்ளான் -என்னுமா போலே –

ஸ்தந கிரி தடீ ஸூப்தம் –
என்கையாலே -அவயவாந்தரத்தில் செல்லாதே அஸ்தமி தாந்ய பாவமாய் இருந்தபடி
இத்தால் எம்பெருமானுடைய போக்த்ருத்வம் சொல்லுகிறது

நீளா துங்க ஸ்தந கிரி தடீ ஸூப்தம் –
நிறைவினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொறு விடை ஏழ் அடர்த்து -உகந்த -என்னக் கடவது இறே
பிராப்த்திக்கு உகப்பானும் அவனே இறே

உத் போத்ய –
என்று உணர்த்த வேண்டும்படி போக பரவசன் ஆனான் –
இப்படி அந்ய பரனானவன் யார் என்னில்
நிரதிசய ஸூக ரூபனான கிருஷ்ணன் என்கிறாள்

கிருஷ்ணம்
என்று
க்ருஷிர் பூ வாசகஸ் சப்தோணச் ச நிர்வ்ருத்தி வாசக -என்னக் கடவது இறே
ரஸோ வை ச –
ஆனந்தோ ப்ரஹ்ம
ஆனந்தயாதி -நந்தகோபன் குமரன் -கண்ணன்

ஸ்தந கிரி தடீ ஸூப்தம் -கிருஷ்ணம்
என்கையாலே –
பொற் குப்பியின் நுனியில் கரு மாணிக்கத்தை அழுத்தி வைத்தாப் போலேயும்
விகாச உந்முகமான பத்ம கோசத்தில் ஷட் பதம் படிந்தால் போலேயும் -இருக்கை

மஞ்ஜரி ஸூப்த ப்ருங்கா –
போதில் பொறி வண்டு கண் படுப்ப-
தெய்வ வண்டு –
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்கம் -என்றும் சொல்லக் கடவது இறே
மலராள் தனத்துள்ளான் -என்று ஸ்ரீ ஸ்தனத்திலும்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னும் இவையே முலையா வடிவமைந்த –
அன்ன நடைய அணங்கு -என்று பூ ஸ்தநத்திலும் மக்னனாய் –
நிலையார நின்றாப் போல
நீளா ஸ்தநத்திலும் ஸூப்தனான படி
வட மா மலை உச்சியை –
மாலிரும் சோலை என்னும் மலையை உடைய மலையை-என்னக் கடவது இறே

உத் போத்ய –
துயில் எழப் பாடி –
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் –
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் -என்று
எழுப்பும் படி சொல்லுகிறது

இத் தசையில் இவர்கள் உணர்த்த உணர்வானாகில் பிரணயித்வத்துக்கு நமஸ்காரம் அன்றோ என்னில்
நெருப்புப் பட்டு வேவா நின்றால் பிரணயிநிகள் என்னும் காட்டில் உறங்கப் போமோ
இவர்களுடைய ஆர்த்த நாதம் அக்னி ஜ்வாலை கதுவினால் போலே கதுவதாய்
தாய் வேறு கன்று வேறாய்த் துடித்துக் கொண்டு எழுந்து இருந்தார்கள்
இப்படி உணர்த்தியதற்கு பிரயோஜனம் -சொல்லுகிறது மேல்

பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் ஸித்தம் –
தன்னுடையதாய் இருந்துள்ள உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தினை
மந்தரப் ப்ரஹ்மணி மத்யமேந நமஸா பும்சஸ் ஸ்வரூபம் -என்கிறபடியே
ஆத்மாவுக்கு நிலை நின்றதாய்
ஸ்வமாய் இறே பாரதந்த்ர்யம் தான் இருப்பது

(தன்னுடையதாய்-ஜீவாத்மாவுக்கு உள்ள ஒரே சொத்து பாரதந்தர்யம் தானே -அவனுக்காகவே இருப்பவன் –
பரர்-பிறர் -பரமாத்மா -இரண்டும் உண்டே-
பிறருக்கு தொண்டு -நடுப்படி
தனக்குத் தொண்டு -முதல் படி
பகவானுக்குத் தொண்டு -மேல் படி
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று புரிந்து செய்ய வேண்டுமே
ஈஸ்வராய-ஸ்வார்த்தயை – அசித் பரார்த்தய -சித் சேதனன் -தனக்கும் பிறருக்குமாக தவிர்ந்து
அவனுக்காகவே அசித் போலே இருக்க வேண்டும்
அடிமை -என்று சொல்லத் தெரிந்த அறிவுடைமை வேண்டுமே –
பகவத் அனுபவ ஜெனித பகவத் பிரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
இரண்டு இடத்திலும் ஓன்று -பிறருக்குக்காகவே இருக்கும் தன்மையும் ஞானமுடையமையும் சேர்ந்ததாக இருக்க வேண்டும் )

யஸ்யாஸ்மி
பரவா நஸ்மி
தனக்கே யாக
உனக்கே நாம் ஆட் செய்வோம்-என்னக் கடவது இறே
ஸ்வத்வம் உண்டானால் ஸ்வாமித்வம் தன்னடையே வரக் கடவது இறே
ஸ்வத்வ மாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் –
இதுக்கு பிரமாணம் காட்டுகிறார்

ஸ்ருதி சதஸிரஸ் சித்தம்
என்று -மஹா நிதி பர்வத குஹரங்களிலே சஞ்சிதமாய்க் கிடக்குமா போலே
உபநிஷத்துக்களிலே ஸூ ரஷிதமாய் இருக்கிறபடி
ஸ்ருதி சதஸிரஸ் சித்தம்
என்கையாலே -இது தான் ஓரோர் பிரதேசங்களில் அன்றிக்கே எங்கும் உண்டாய் இருக்கை –
சர்வே வேதா –
வேதைஸ் ச சர்வை -என்னும்படி எங்கும் உண்டாய் இருக்கை –
சேஷியைச் சொன்ன இடம் எங்கும் சேஷ பூதரும் உண்டாய் இறே இருப்பது –
இந்த சேஷ சேஷி பாவமாகிற பரிமாற்றம் பரமபதத்தில் பரிமாறக் கடவதாய் இருக்கும்
இப்படி பரம பதத்தில் பரிமாறக் கடவதான இந்த பாரதந்த்ர்யத்தை
அதுக்கு எதிர்தட்டான ஸ்வாதந்த்ர்யமே பரிமாறும் வழி பறிக்கும் தேசத்திலே இந்த
மஹா நிதியை வெளியிட்டு அருளுகிறாள்

அத்யா பயந்தீ-
பதிம் விஸ்வஸ்ய
யஸ்யாஸ்மி -என்று ஓதிக் கிடக்கிற
சேஷ சேஷி பாவம் அனுஷ்டிப்பார் இல்லாமையாலே அவனும் மறந்து கை விட்டு இருக்க
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்-
என்று அவனை மறித்து வைத்து
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –
என்று ஒதுவித்தாள்

(கையில் பிரம்பு வைத்து இருந்ததாக உபன்யாசகர் அனுபவிப்பர் –
சொல்ல வந்த விஷயம் பாரார்த்யம் -அத்யா பயந்தி -இவளுக்கு அடங்கி -சேராச் சேர்த்தி
ஞானம் உள்ள சேதனம் -பரார்த்தம் -அவனுக்கு பிரீதி காரித கைங்கர்யமே தனக்கு சொத்து என்று உணர வேண்டுமே –
இவர் உண்டால் துர்வாசருக்கும் கூட வந்த ரிஷிகளும் உண்டது போலே இவன் உணர்ந்தால் உலகமும் உணரும் )

யோவை வேதாஸ் ச ப்ரஹினோதி தஸ்மை
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்தது -என்கிற நிலை குலைந்தது
பரதந்த்ரைகளாய் இருக்கிற இவர்கள் நியமிக்கப் பெறுவார்களா -என்னில்
ஸ்வதந்த்ரரோபாதி ஆற்றாமை யுடையோரும் நியமிக்கப் பெறுவார்கள்
ஆர்த்தர் பாடும் ஸ்வாதந்தர்யம் ஏறிப் பாய்வது –
நான் என்னது என்று அவனை ஒழியவும் சொல்லுவார் பாடேயும் ஸ்வாதந்தர்யம் ஏறிப் பாய்வது –
தம் திரு உள்ளம் தன்னை நியமிக்கும் காட்டில் ஸ்வாதந்தர்யம் ஆக மாட்டாது இறே
பண்டும் இப்படி நியமித்தாரும் உண்டு –
ஸ்த்ரீ சாபலா தேததும் தாஹ்ருதம் மேதர் மஞ்ச வக்தும் த்வத் ச ஸ்ம்ர்த்தஸ் விசார்ய புத்யாது சஹாநுஜேந
யத்ரோ சதே தத் குருமா ஸிரேண-என்றாள்
அப்படியே -இவளும் அவனை நியமித்து –
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே -என்கிறாள்
இப்படி சர்வஞ்ஞனுக்கும் கூட அத்யயனம் பண்ணு விக்கிறவளுடைய
வைலக்ஷண்யம் சொல்லுகிறது மேல்

ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே –
தான் சாத்திக் கழித்த  மாலையாகிற விலங்காலே இவனைப் பேராதபடி -விலங்கிட்டு
யாவாள் ஒருத்தி -அவனை பலாத்கரித்து புஜித்தாள்

கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய –
இப்படி வேண்டற்பாட்டை யுடையவளாய் -எம்பெருமானுக்கு
மார்வத்து மாலை என்கிறபடியே நிரதிசய போக்யையாய் இருக்கையாலே –
கோதை -என்னும் திரு நாமத்தை யுடைய ஆண்டாள் -திருவடிகளில்
கால தத்வம் உள்ளதனையும் அடிமை என்கிறார் –

(நமஸ் அர்த்தம் இவன் உணர்ந்தால் அனைவரும் அறிவார்கள் –
திரௌபதி பாத்திரத்தில் -மிச்சம் உள்ள பருக்கை உண்டு அனைவருக்கும் வயிறு நிறையும் படி பண்ணினவன் அன்றோ
ஆண்டாள் பள்ளி எழுப்பி இந்த அர்த்தம் இவனுக்கு உணர்த்துகிறாள் )

ஸ்வ உச்சிஷ்டமாவது –
சூடிக் களைந்தது –
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் –
க்வயோபா புக்தஸ் ரக் கந்த –உச்சிஷ்ட பஷினோ தாஸாஸ் –
என்னுமது பிரணயித்வத்தால் மாறாடிக் கிடக்கிறது
இப்படி ஈஸ்வரன் யதேஷ்ட விநியோர்ஹ அர்ஹனாம் படி தன்னை ஒக்கி வைக்கையாலே-
அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமே தோற்றுகிறது –
பார் வண்ண மடமங்கை பத்தர் இறே
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் இறே
வாசம் செய் பூம் குழலிலே வாசிதமாக்கிக் கொடுத்தபடி

ஸ்ரஸி நிகளிதம் –
மாலை-
மாலையாலே விலங்கு இட்டாள்
கால் விலங்காகில் இறே கழற்றுவது –
தந்தை காலில் விலங்கு அற –
தந்தை தளை கழல-என்னக் கடவது இறே
எல்லாரையும் கர்ம அனுகுணமாகக் கட்டுமவன்
காமிநி கழித்த கண்ணியாலே கட்டுண்டான்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்டுண்டபடி யாயத்து –
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும்-
மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு அனுபவித்தாள் –
தறியார்ந்த கரும் களிறு இறே

ஸ்வ இச்சா விஹாரம் பண்ணித் திரிகிற கிருஷ்ண மஹா மதங்கஜத்தைத் தன்னுடைய
குசகுட்மளம்-ஸ்தனமாகிற மொட்டு- ஆகிற
ஆளா நத்தோடே-யானை காட்டும் தறி யோடே-
அணைத்து அனுபவித்தாள்

யா பலாத் க்ருத்ய புங்க்தே
யாதொருத்தி பலாத்கரித்து புஜித்தாள்-என்கையாலே அதுவும் அவன் உகப்புக்கு உறுப்பாய் இருக்கும்
அஹம் அன்னம் அன்னம் அதந்த மத்மி அல்லாத போது அவனுக்கு அனுபவம் குலையும் –
கோதா
என்றது -கோதை -என்றபடி –
குழல் கோதை என்றார் இறே –
கோதை -மாலை போலே போக்யையாய் இருக்கை
ஸ்ரீ மாலாகாரர் மகள் ஆகையாலே மாலை என்னலாம்படி ஆனாள்
மாலையான தான் தலையான மாலையை வழங்கினாள்
திருமாலை வழங்கினாள் இறே
ரங்கீ நேத்ர சரேண தாடி தத் அநுஸ் ஸேதே ஸ்வயம் ஸூந்தரோ பத்தஸ் வம்ப கதா மபி குவதடே மக்நோ –
ஞானாத்ரீஸ்வர
போகா பாட வலஜ்ஜயா வட மஹா தாமா பணீந்த்ரே பதத்ரமயேச ஸ்வத விஸ்மிதேந மநசா கோதே
பரம் திஷ்டதி -என்று இறே ஆண்டாள் வீறுடைமை இருப்பது

அத்யாபயந்தீ என்கையாலே பாமாலை பாடிக் கொடுத்தபடி சொல்லிற்று
ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே – என்கையாலே பூ மாலை சூடிக் கொடுத்தபடி சொல்லுகிறது
எல்லாப் படியாலும் இவளுக்கு எம்பெருமானை வசீகரித்து ஆத்மாக்களை ரஷிப்பிக்க வல்ல புருஷகாரத்வமும்
இருவருமாக சேர்த்தியாலே ப்ராப்யத்வமும் சொல்லுகிறது

ஆகையால் இறே
எம்பெருமானார் நாறு நாறும் பொழிலிலே இவள் பிராத்தித்த படியே நடத்தியும்
திருப்பாவையை நாடொறும் நடத்தியும் -அத்தாலே
சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் ராமானுஜன் ஆனதும்
அவளுக்கும்
ஆழ்வார் திருமகளார் ஆனதுக்கு மேலே ராமானுசனை அண்ணராக அபிமானித்த ஏற்றமும் உண்டு இறே
இப்படி எல்லாவற்றாலும் நிரவதிக வைபவத்தை யுடைய அந்த ஆண்டாள் பொருட்டு
அடிமையாய் அற்றுத் தீர்ந்து ஓர் ஒன்றுகளிலே தம்மை எழுதிக் கொடுத்து ஆழங்கால் படுகிறார்

பூய ஏவாஸ்து பூய
அவள் தான் எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றத்தை
தத் விஷயத்தியலே தாம் பிரார்த்திக்கிறார்
நாராயணாய நமயிதி ப்ரணம் யோக்தா யோக்தாயபுஸ் புந ப்ரணம்ய-என்று இறே எம்பெருமானார் பரிமாற்றம் இருப்பது
இது தான் அத்ர பரத்ர சாபி நித்யம் -என்னக் கடவது இறே
அங்கும் ஸ்ரீ பூமி நீளா நாயக என்றும்
உபாப்யாம் பூமி நீளாப்யம் சேவித ப்ரமேஸ்வர -என்றும் சொல்லக் கடவது இறே

இத்தால்
திருப் பாவையின் அர்த்தத்தை அனுசந்தித்து
ஆனந்த மக்நராய்
அத்தாலே தாம் ஆண்டாளை சரணம் புக்க படியை அனைவரும் அநுஸந்திக்கும் படி
அருளிச் செய்தார் ஆய்த்து

———————————————

ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்த தனியன் –

அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம்–இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பா மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு –

அன்ன வயல் -புதுவை
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் இறே
அன்ன நடைத் திங்கள் முக வல்லியான ஆண்டாள் போல இறே அவை இருப்பது
அன்னங்கள் சஞ்சரிக்கும் வயலை யுடைய புதுவை
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவைப் பட்டர் பிரான்
தண் புதுவைப் பட்டன் –என்று இறே திருத் தகப்பனாருக்கு நிரூபகம்
இவளுக்கும் அப்படியேயாய் இருக்கை

புதுவை ஆண்டாள்
ஸ்ரீ பூமி நீளை களுடைய ப்ராதான்யமாய் இறே
திரு வெள்ளறை ஸ்ரீ வில்லி புத்தூர் திரு நறையூர் என்கிற த்ரி திவ்ய ஸ்தானங்கள் இருப்பது
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரான ஆண்டாள் -சிஷ்யா தாசீ பக்தைகளாய் –

பாடி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று அடிமை செய்ய ஆழ்வார் திரு மகளாய் திரு வவதரித்த படி
ஆகிலும் அடியில் திரு நாமமே ஆண்டாள் என்று அனுவர்த்திக்கிறது –

ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல் பதியம்-இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்
இவள் கிருஷ்ணனை அன்றோ திருப்பாவை பாடிற்று –
பெரிய பெருமாளுக்கு பாடிக் கொடுக்கை யாவது –

அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கம் -என்றும்
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை-என்றும் –
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாய் தேசுடைய தேவர் திருவரங்கர்-என்றும் –
நிலமகள் கேள்வன்-என்றும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியான இவள் ஆதரித்துப் போருகிற ஸ்ரீ வராஹ நாயனார் படியும் —
அநுகாரத்தாலே ஆதரித்துப் போருகிற கோபாலர் படியும் –
தர்மி ஐக் யத்தாலும்
ஆஸ்ரித வ்யாமோஹ குணத்தாலும் பெரிய பெருமாள் இடத்திலே காணலாய் இருக்கும்

இனித் தான் -பள்ளி கொள்ளும் இடத்தே துயில் எழப் பாடி திருப்பள்ளி உணர்த்துவதும் இங்கே இறே
வட பெரும் கோயில் உடையானை கிருஷ்ணனாக அனுகரித்தால் போலே
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயோடே கண் வளர்ந்து அருளுகிறதாக அனுசந்திக்கலாம் இறே –
பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிட என்று பிரார்த்தித்த படியே-
பண வாளரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளோரோடு மணம் புணர்ந்து கூடினாள் இறே
ஆகையால் பாடின விஷயமும் அவரே இறே

விசேஷித்துப்
பாட்டினால் கண்டு வாழும் பாணர் பாட்டுக் கேட்க்கும் இடம் ஆகையாலும்
இவள் அவள் மகள் ஆகையாலும்
பாடவல்ல நாச்சியாராய் அவ்விஷயத்தையே அவ்விஷயத்தையே பாடினாள் ஆய்த்து –

அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல் பதியம் –
அர்த்தத்தின் சீர்மையாலே எல்லாராலும் ஆராய்ந்து அனுசந்திப்பதான திருப்பாவை என்னுதல் –
ஆராய்ந்து அருளிச் செய்த திருப்பாவை என்னுதல்
நிரூபித்தால் –

பல் பதியம் –
பல் பத்தியம் -என்றபடி
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல் இறே அருளிச் செய்தது
அது தானே

இன்னிசையாலே
யாய்த்து பாடிக் கொடுத்தது –
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம்-
செவிக்கு இனிய செஞ்சொல் -என்னுமா போலே

நற் பா மாலை
விலக்ஷணமாய் சந்தஸ் ரூபமயமாய் இருப்பதான மாலையைப் பாடிக் கொடுத்தாள்
அதாவது சூட்டினேன் சொன் மாலை என்னும்படி சிரஸா தரிக்கும் படி பண்ணுகை –

பூ மாலை சூடிக் கொடுக்கையாவது
செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சியாலும் இடையிட்டுத் தொடுத்த திருத் துழாய் மாலையை
சூடிக் கொடுத்தாள்
தன் வாசம் செய் பூம் குழலிலே வாஸிதமாக்கிச் சூடிக் கொடுத்தாள் ஆய்த்து

ஆகையால் திருப்பாவை அனுசந்தானத்துக்கு முன்னே
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
என்று அவளை அனுசந்திக்கச் சொல்கிறது –

இத்தால் அவள் திவ்ய ப்ரபந்தத்திலும் அவள் திரு நாமமே பிரதமம் அனுசந்தேயம் -என்றதாயிற்று –

———————————————————-

அவதாரிகை

இதில் சூடிக் கொடுத்த படியையும்
பாடிக் கொடுத்த படியையும் சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணி
திருவேங்கடமுடையான் அடியாகச் சொன்ன இதன் அர்த்தங்களை நாம் அதிக்ரமியாத படி
அனுக்ரஹிக்க வேணும் என்று ஆண்டாளை அர்த்திக்கிறது
கீழே -அரங்கற்கு என்றது
இதில் வேங்கடவற்கு என்றது –
கோயில் திருமலைகளில் ஆய்த்து
கோதை சூடிக் கொண்டு இருப்பது

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய்–நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு

சூடிக் கொடுத்த -பூ மாலையைத் திருக் குழலிலே சூடி பெரிய பெருமாளுக்கு சமர்ப்பித்து அருளின
சுடர்க் கொடியே -பொற் கொடி போன்ற வடிவு அழகை யுடையவளே
தொல் பாவை -பழையதான நோன்பை
பாடி -திருப்பாவை என்னும் திவ்ய பிரபந்தத்தால் பாடி
அருள வல்ல -உபகரிக்க வல்லவளாய்
பல் வளையாய்–பலவகைப்பட்ட வளையல்களை அணிந்தவளே
நாடி நீ -மன்மதனான நீ ஆராய்ந்து
வேங்கடவற்கு -திருமலையில் எழுந்து அருளி இருக்கிறவனுக்கு
என்னை -திருக்கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகைக் காண வேணும் என்று ஆசைப்படுகிற என்னை
விதி என்ற -அந்தரங்க கைங்கர்யம் பண்ணும்படி விதிக்க வேண்டும் என்று அருளிச் செய்த
இம்மாற்றம் – இப்பாசுரத்தை
நாம் -உனக்கு அடிமையாய் இருக்கிற நாங்கள்
கடவா வண்ணமே நல்கு -அதிக்ரமியாதபடி உபகரித்து அருள வேணும்

சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே
குழற் கோதை யாகையாலே அளகத்திலே–முன் நெற்றி மயிர் – வளையமாக
சூடிக் கொடுத்தாள் ஆய்த்து

சுடர்க் கொடியே
ரூப சமஸ்தானம் பொற் கொடி என்னலாம்படி இருக்கை –
ஹேம லேகாம் –
மங்கள தீப லேகாம்

கொடி
அவனைக் கட்டலாம் கொடி
பெண்ணாக்கை ஆப்புண்டு என்னக் கடவது இறே
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே
நிரூபகம்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே நிரூபகம் –

தொல் பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய்-
தொல்
பழையதான
பாவை
நோன்பை
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் குடி நோற்ற நோன்பை
ஹேம மந்தே ப்ரதமே மாசி நந்த வ்ரஜ குமாரிகா -என்று எல்லாரும் கூடிக்
கிருஷ்ணனைப் பெறுகைக்கு மார்கழி நீராடி நோற்ற நோன்பை

அன்றிக்கே
பழையதாய்ப் போருகிற திருப்பாவை என்கிற சந்தஸ் ரூபமான திவ்ய பிரபந்தத்தை என்னுதல்
பிற்பாடார்க்கும் அனுசந்தேயமாம் படி திவ்ய ப்ரபந்தமாக
பாடி அருள வல்ல
பாடி உபகரிக்க வல்லவள் என்னுதல்

பல் வளையாய்–
பல் வளையாள்-என்னுமா போலே வளையே நிரூபகமாய இருக்கை –

நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற–
நீ திரு வேங்கடத்தானை -நான் சென்று நாடி -என்கிறபடியே அபி நிவேசத்தைப் பண்ணி
காம தேவா என்று உன்னுடைய காமத் தீயாலே-வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே என்ற–
இம் மாற்றம் –
இந்தச் சொல்லை என்னுதல் –
இந்தப் பிரகாரம் -என்னுதல்
பகவத் காமத்தால் சொன்ன பாசுரம் என்னுதல்
அர்த்தத்தை என்னுதல்

நாம் கடவா வண்ணமே நல்கு –
உனக்கு அடிமையாய் இருக்கிற நாங்கள் அதிக்ரமியாத பிரகாரம் உபகரிக்க வேணும்
நல்குதல் -கொடுத்தல்

இத்தால் –
ஆண்டாள் உடைய பகவத் ப்ரேமம் உண்டாக வேணும் என்று
அவளை வேண்டுகிறது-

——————————————————–

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 15, 2013

எய்தக்கூவுதல் ஆவ தேஎனக்கு? எவ்வ தெவ்வத்து ளாயு மாய்நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே!

பொ-ரை :- பேற்றினைப் பெறுதற்கு நான் உன்னை அழைத்தல் எனக்குத் தகுதியாகுமோ? எவ்வகைப்பட்ட பகைவர் கூட்டத்துள் நீயும் ஒருவனாகச் சேர்ந்து புத்தமுனியாய் நின்று வஞ்சகமாகக் காரியங்களைச் செய்த கரிய மேனியையுடைய அம்மானே! ஐவகையான யாகங்களைச் செய்தவர்களும் பூதேவர்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நீங்காமல் எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீ வரமங்கல நகரிலே எல்லாரும் கைகூப்பி வணங்கும்படியாக எழுந்தருளியிருக்கின்றாய்; அதனை அடியேனும் கண்டேன்.

வி-கு :- எய்தக் கூவுதல் எனக்கு ஆவதே என்க. தெவ்வத்துள்: தெவ் – பகை. அத்து: சாரியை. உள்: ஏழாம் வேற்றுமை உருபு. நின்று செய்யும் அம்மான் என்க. வையத்தேவர் – நிலத்தேவர்; ஸ்ரீ வைஷ்ணவர்கள்.

ஈடு :- ஐந்தாம் பாட்டு. 1அடியார்கள் பக்கலிலே நாம் வைத்திருக்கும் பக்ஷபாதத்தையும் சிரீவரமங்கல நகரில் இருப்பையும் உமக்குக் காட்டினோமே, “எங்கு எய்தக் கூவுவன்” என்று ஒன்றும் பெறாதாரைப் போன்று, கூப்பிடாநின்றீரே? என்ன, செய்த அம்சத்தை அறிந்தேன், அதனாலே நிறைவுபெற்றவன் ஆகின்றிலேன் என்கிறார்.

எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு – 2பொகடு, அதுகிடக்கிடாய், 1இந்தத் திருமகள்கேள்வனைக் கண்ட உனக்கு ‘இவன் சாதன அநுஷ்டானம் பண்ணுவான்’ என்று தோற்றி இராதோ. 2உன்னிலும் என்னை நான் அறிவேனே அன்றோ! என்னால் செய்யலாவது உண்டோ என்று கேட்கிறார், 3‘அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி, திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார். எய்தக் கூவுதல் ஆவதே – நீ  எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே. எனக்கு-வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு. 4“என்னை வணங்குவாய்” என்றால், பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ, ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச்செய்கிறார் மேல்: எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே – 2அடியர் அல்லாதார்பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப்புக்கதோ இப்போது. எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று – எவ்வகைப்பட்ட பகைவர்கள் கூட்டங்களினுள்ளே புக்கு. தெவ்வர் – பகைவர். தெவ்வம்-பகைவர் கூட்டம். 3“தெவ்வர் அஞ்சு” என்னக்கடவதன்றோ. கைதவங்கள் செய்யும்-வஞ்சகங்களைச் செய்கின்ற. என்றது, புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான வைதிக சிரத்தையைப் போக்கினமையைத் தெரிவித்தபடி. கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே – வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து வைதிக சிரத்தையைப் போக்கி, அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக்காட்டி வாய்மாளப் பண்ணினபடி.என்றது, 1தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி, ஒருவன் அம்புக்கு இலக்காம்படி செய்து வைத்தமையைத் தெரிவித்தபடி. அம்மானே-சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச்செய்தது 2அடியார்களுக்காக அன்றோ? 3ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ. ‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது. “ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” என்றாரே அன்றோ இவர். அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று, சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.

செய்த வேள்வியர் – சித்தோபாய நிஷ்டர்கள். 4“அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடிஅறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு எல்லா யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ. 1வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ. சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ. வையத் தேவர் – பூசுரர். அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் – அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய, அதுவே தாரகமாக இருந்தாய். அது நானும் கண்டேன் – 2ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன, இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்; அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு, அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி. திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய்நிலை.

அப்படி, மலையை வைத்தாற்போலே இருக்குமோ? என்ன, வியாக்யாதாவின்
ஈடுபாடு, ‘என்னை வணங்குவாய்’ என்று தொடங்கும் வாக்கியம்.

“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா ஏவம் ஆத்மானம் மத் பராயண:”

  என்பது, ஸ்ரீ கீதை, 9: 34. ‘இல்லையாவரே அன்றோதான்’ என்றது, சத்தை
இல்லையாய் விடுவார் என்றபடி.

அடியார்களுக்காக அன்றோ’ என்றதற்குக் கருத்து, அம்மானாய் வைத்தும்,
ஆஸ்ரித பக்ஷபாதத்தாலே அவர்களை அழித்த நீ, அடியனான
என்னையும் அழிக்கலாமோ? என்பது.

3. உம்மை நாம் அழித்தேமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஒரு தெய்வம்’ என்று தொடங்கி. ‘ஒரு தெய்வம் இல்லை’ என்றவிடத்தில்,
  ‘உன்னைத் தவிர’ என்பது எஞ்சி நின்றது. சர்வேச்வரனைத் தவிர, வேறு
தெய்வம் இல்லை என்று இருப்பவர் இவர் என்பதற்கு மேற்கொள்
காட்டுகிறார் ‘ஒரு மா தெய்வம்’ என்று தொடங்கி. இது, திருவாசிரியம், 7.

4. “செய்த வேள்வியர்” என்றால், சித்தோபாய நிஷ்டரைச் சொல்லுமோ?
என்ன, அர்த்த ஒளசித்தியத்தாலே சொல்லும் என்று அதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘அரசனே’ என்று தொடங்கி.

“ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா:
ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே
தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”-என்பது, பாரதம்.

ஆஸ்ரித பஷ பாதத்தையும்
இருப்பையும் காட்டிக்
கொடுக்க எங்கு எய்த -என்ன வேண்டுமோ
இன்னும் பல செய்ய வேண்டும் என்கிறார்
எய்தும் படியாகவும் கூவுதல் ஆகுமோ எனக்கு
கை தவங்கள் -அசுரர்களை வசப் படுத்த -நேர்மைக்கு எதிர்பதம்
செய்த வேள்வியர் வையத்து தேவர்
கண்டேன் அது போதாது -வாக்ய சேஷம்
உன்னை எய்தும்படியாக கூவ முடியுமா

இந்த ஸ்ரீ ய பதியை
இவன் சாதன அனுஷ்டானம் செய்வான் என்னும் படியாகவா நான் இருக்கிறேன்
உன்னிலும் என்னை நன்றாக அறிந்து -ஒன்றும் செய்ய யோக்யதை இல்லை –
அவனாலே பேறு என்று இருக்கிறவர் ஆகையாலே
நீ கை விட்ட அன்று -சாதனம் செய்து அடையும் படி நான் ஸ்ரீ ய பதியா
எனக்கு -குருவி தலையில் மலையை வைத்தால் போலே
சாதனம் ஒன்றையும் அனுஷ்டிக்க வல்லவன் இல்லை
கறவைகள் பாசுரத்தில் ஆண்டாள் அருளியது போலே
மாம் நமஸ்குரு 1கீதை 5-65–பக்தி யோகம் விதித்தான் அர்ஜுனனுக்கு
அப்படி சொன்னால் அநந்தரம் ஆழ்வார் இல்லையாவாரே
இனி -அஞ்சாதே போகும் -பிரதி பந்தகங்கள் போக்கி- மாசுச சொல்லி அருளுவாய் –
பிரதமன் –
எப்பேர்பட்ட அசுரர் ராஷசர்களை அழித்து
விரோதிகள் இடம் செய்வதை ஆஸ்ரிதர் பக்கம் செய்யலாமா
-ஆண்டாளும் முப்பத்து மூவர் -பாசுரம் -இது போலே அருளி

எங்களுக்கும் நடுக்கம் உண்டாக்கிக் கொண்டு இருக்கலாமா
செப்பம் நேர்மை
திறல் பராக்கிரமம்
அடியவர் இடம் திறல் காட்ட வேண்டுமா
கைதவம் ஏன் இடம் காட்ட வேண்டுமா
அநந்ய கதியாய் இருப்பார் –
விரோதி கூட்டம் -எவ்வம் தெவ்வர் -அஞ்ச -தெவ்வர் அஞ்ச -பெருமாள் திருமொழி
உள்ளே புகுந்து கைதவங்கள் செய்து –
எவ்வ எவ்வகைப்பட்ட
தெவ்வர் சத்ரு சமூகம்
கிருத்ருவங்கள் செய்யும்
வைதிக ஸ்ரத்தை புத்தராக போக்கின படி -திருஷ்டாந்தம் காட்டி
கெட்ட பலங்களுக்கு யாகம் செய்து -இருப்பவர்களை –
வைதிக ஸ்ரத்தை குறைத்து நாஸ்திக வாதம் செய்து
புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு
வசனங்களாலும் யுக்திகளாலும் -சாருவாக மதம் -அழகான வார்த்தை சொல்லி

கருமேனி அம்மானே
இவ்வளவும் போதாதே தனது வடிவைக் காட்டி மயக்கி –
புத்த அவதார சஹாச்ர  நாம வ்யாக்யானத்திலும் இவற்றை அருளி
வரம்புக்கு இலக்காக்கி வைத்தான்
வனம் புக்கும் படி செய்தான்
அம்மானே -சம்பந்தம் ஒத்து இருக்க செய்தே இப்படி செய்தது அடியவர்களுக்கு
செய் என்று சொல்வதும் என்னை அழித்து விடும்
சித்த சாதனம் மீட்டு சாதனம் செய்ய சொல்வது அவர்கள் ஸ்ரத்தை அழித்தது போலே
வேதார்த்தம் சொல்லிய உயர்ந்த சாதனத்தில் உறுதியாக இருக்கும் என்னை அழிக்கப் பார்க்கிறாயே
ஒரு தெய்வம் உண்டு என்றாரை அழிப்பாரை போலே ஒரு தெய்வம் இல்லை என்று இருக்கும் என்னையும் அழிக்கப் பார்க்கிறாயே
செய்த வேள்வியர் -சித்த சாதனம் எம்பெருமானைப் பற்றியவர்
சர்வ யஞ்ஞா சமாப்த -உள்ளபடி உணர்ந்தவர் –
கிருத க்ருத்யர் –
யாக சப்தத்தால் சொல்லும் எம்பெருமானைப் பற்றி
வையத்தேவர் நிலத்தேவர்
அங்கு உள்ளவர் அடிமை செய்ய
கலவிருக்கை யாக இருக்கும் -உமக்காக இங்கு வந்து இருக்க –
அதை நான் கண்டோமே
இது போதாது -அனுபூத அம்சம் இல்லை சொல்வேன் இல்லை
இது போதாது
என்னை அனுக்ரகித்து அடிமை செய்ய கைக் கொள்ள வேணும் நம்பிள்ளை -காட்டி

வாக்ய சேஷமாக கொள்ள வேண்டும் இத்தை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 15, 2013

மாறுசேர்படை நூற்றுவர்மங்க ஓர்ஐவக் காயன்று மாயப் போர்பண்ணி
நீறுசெய்த எந்தாய்! நிலம்கீண்ட அம்மானே!
தேறுஞானத்தர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கல நகர்
ஏறி வீற்றிருந்தாய்! உனைஎங்கு எய்தக் கூவுவனே?

பொ-ரை :- பகைவர்களாகச் சேர்ந்த சேனையையுடைய துரியோதனன் முதலிய நூறு பேர்களும் அழியும்படி, தனியரான பஞ்சபாண்டவர்களுக்காக வஞ்சனையையுடைய போரைச் செய்து சாம்பலாகச் செய்த என் தந்தையே! பிரளயம் கொண்ட பூமியை எடுத்து வந்த அம்மானே! தெளிந்த ஞானத்தையுடையவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கின்ற ஸ்ரீவரமங்கல நகரிலே சூடி ஏறி வீற்றிருந்தவனே! உன்னை அடைவதற்கு எந்த விதமான முயற்சியைச் செய்வேன்?

வி-கு :- மாயப் போர் பண்ணி நூற்றுவர் மங்க நீறுசெய்த எந்தாய் என்க. ஞானத்தாருடைய வேதமும் வேள்வியும் என்க. உன்னை எய்த எங்குக் கூவுவன்? ஓர் என்பது, வேறு துணை இன்மையைக் காட்ட வந்தது.

ஈடு :-
நான்காம் பாட்டு. 1‘வெறும் உன் கிருபையாலே காத்தருள வேண்டும்’ என்னாநின்றீர், நாம் இதற்கு முன்னர் அங்ஙனம் செய்த இடம் உண்டோ? என்ன, ஒன்று இரண்டு உதாஹரணங்களை எடுத்துக்காட்டி. இங்ஙனே செய்தது இல்லையோ, எனக்கும் செய்தருள வேண்டும் என்கிறார்.

மாறு சேர் படை நூற்றுவர் – 2பகைவர்களாய்க் கொண்டு வந்து சேர்ந்த படையையுடைய நூற்றுவர். 3துரியோதனாதியர்கட்குத் துணையாளராய் வருகை அன்றிக்கே, தனித்தனியே பகைவர்களாய் வந்து கிட்டினார்களாதலின், ‘மாறுசேர்’ என்கிறது. 4அன்றிக்கே, படையோடு கூடிப் பகைவர்களாய்ச் சேர்ந்தநூற்றுவர் என்றுமாம். “பகைவனுடைய சோற்றைப் 1புசிக்கலாகாது” என்கிறபடியே, தனக்குப் பகைவர்களாக நினைத்திருக்கிறபடி. மங்க – மாள. 2விளக்குப்பிணம் போலே காண ஒண்ணாதவாறு செய்தபடி. ஓர் ஐவர்க்காய் – இரண்டு பக்கங்களும் ஒத்திருக்க, 3ஒரு தலையிலே நின்றாயத்தனை அன்றோ. 4உளனான ஒரு சாரதியும்கூட முதன்மையற்றவனாம்படி தனியரான ஐவர் ஆதலின் ‘ஓர் ஐவர்’ என்கிறது. ஐவர்க்காய் – 5அவர்களுக்குத் தன்னை வேண்டியவாறு உபயோகப்படுத்திக் கொள்ளவைத்தபடி. அன்று – போரிலே நோக்குள்ளவர்களாய் வந்த அன்று. மாயம் போர் பண்ணி – ஆச்சரியமான போரைச் செய்து. அன்றிக்கே, வஞ்சகமான போரைச் செய்து என்னுதல். என்றது, பகலை இரவாக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகைவர்களுடைய உயிர்நிலையைக் காட்டிக் கொடுத்தும் செய்தமையைத் தெரிவித்தபடி. நீறு செய்த – 6“கூறாய் நீறாய் நிலனாகி” என்கிறபடியே, சாம்பல் ஆக்கின.எந்தாய் – எந்தையே! பாண்டவர்களுக்காகத் துரியோதனாதியர்களை அழித்ததும் தம் பேறாக இருக்கிறபடி. நீர் சொல்லுகிறவை எல்லாம் செய்தமை உண்டு ஆனாலும், அவர்கள் எனக்குப் பவ்யர் அலரோ? என்ன, ஆயின், 1அதுவும் பாராதே அன்றோ நீ பூமியைக் காப்பாற்றியது என்கிறார் மேல்:

நிலம் கீண்ட அம்மானே-2அது கிடக்கிடு வேணுமாகில், அதற்கு ஒன்று சொல்லுகிறாய்; பிரளயம் கொண்ட இப்பூமிக்கு என்ன தக்கோர்மை இருந்தது நீ செய்வதற்கு? 3‘எடுக்க வேணும்’ என்ற விருப்பமும் இல்லாமல், செய்ந்நன்றி யறிதலும் இல்லாமல் இருக்கிற இந்தப் பூமிக்கு உதவி செய்தாயில்லையோ? இங்கு ஒருதலையே அன்றோ உள்ளது. அம்மானே – ‘உடைமை இழக்க ஒண்ணாது’ என்று, வெறும் உன் கிருபையாலே செய்த இத்தனை அன்றோ. தேறு ஞானத்தர் வேத வேள்வி அறா – 4அநுஷ்டானத்தையும் அநநுஷ்டானத்தையும் விகல்பிக்கலாம்படி தெளிந்திருக்குமவர்கள். அநநுஷ்டானம் சாதனம் ஆகாதே அன்றோ. ‘விலக்கிய ஒழுக்கங்கள் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமாறு போன்று, ‘விதித்த ஒழுக்கங்களும் நமக்கு இரக்ஷகம் ஆகா’ என்றிருக்குமவர்கள். ஆனால், இவற்றைச் செய்வது என்?என்னில், 1சர்வேச்வரனுடைய ஆணையைச் செய்தவன் ஆகிறான். அன்றியும், விலக்கிய ஒழுக்கங்கள் இராசத தாமத குணங்களை வளர்ப்பிக்குமாறு போலே, விதித்த ஒழுக்கங்களும் சத்துவ குணத்தை வளர்ப்பிக்கக்கூடியனவாய் இருப்பனவே அன்றோ. அன்றியும், 2சேதனன் ஆகையாலே ஒருதொழிலைச் செய்தன்றி நில்லானே. 3“சத்துவ குணத்தினின்றும் ஞானம் உண்டாகின்றது” என்கிறபடியே, ஞானத்துக்கும் காரணமாக இருக்குமே அன்றோ, ஆகையாலே, அநுஷ்டிக்கத் தக்கனவாகக் கடவனவேயாம். சிரீவரமங்கல நகர் ஏறி வீற்றிருந்தாய்-4இவனும் அவர்களிலே ஒருவனாய் ஒரு சேரக் குடி ஏறி இருக்கிறபடி. ‘இவர்கள் நடுவே இருக்கப் பெற்றோமே’ என்று பெறாப்பேறு பெற்றனாய் இருக்கிறபடி. உன்னை-வேறு உபாயங்களாலே அடைய முடியாதவனான உன்னை. 5எங்கு எய்தக் கூவுவன் – நீ இவ்விருப்பு இருக்கைக்கு நான் செய்தது ஏதேனும் சாதனம் உண்டாகில் அன்றோ என்பேற்றுக்கு நான் ஏதேனும் செய்வது. என்றது, இவ்வளவாகச் செய்த நீ இனியும் உன் கிருபையாலே செய்தருள வேணும் என்றபடி.

த்விஷதந்நம் ந போக்தவ்யம் த்விஷந்தம் நைவ போஜயேத்
பாண்டவாந் த்விஷஸே ராஜந் மம பிராணாஹி பாண்டவா:”

என்பது, பாரதம். இது, துரியோதனனைப் பார்த்துக் கிருஷ்ணன் கூறியது.

“கூறாய் நீறாய் நிலனாகி” என்றது, திருவாய். 6. 10 : 2.

‘கூறாய் நீறாய் நிலனாகி – முற்பட இரு துண்டமாக்கி, பின்பு நீறாக்கி,
பின்னைத் தறையாக்கும். இப்பொருள்தன்னையே ‘சாம்பலாக்கின’ என்கிறார்.

வேத வேள்வி அறாமல் செய்துகொண்டு போவதற்குக்குரிய காரணத்தை
மூன்று வகையாக அருளிச்செய்கிறார் ‘சர்வேச்வரனுடைய’ என்று
தொடங்கி. இம்மூன்றுள், ஈச்வரனுடைய ஆணையைச் செய்தவனாகிறான்
என்றது ஒன்றும் பிரதாநமாய், மற்றைய இரண்டும் ஞானயோக நிஷ்டனுக்குச்
சொன்னவையாகையாலே, அவ்விரண்டனையும் திருஷ்டாந்தமாக் கோடல்
தகும்.

2. காரியங்களைச் செய்வதற்குரிய உறுப்புக்களையுடையவனாகையாலே
யாதாயினும் ஒருதொழிலைச் செய்தன்றி நில்லானே என்றபடி.

3. கூறிய மூன்று காரணங்களுள் இரண்டாவது காரணத்தால் பயன் யாது?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘சத்துவ குணத்தினின்றும்’
என்று தொடங்கி.

“ஸத்வாத் ஸஞ்ஜாயதே ஜ்ஞாநம் ரஜஸோ லோபஏவச
ப்ரமாத மோஹௌ தமஸோ பவத: அஜ்ஞாநமேவச”-என்பது, ஸ்ரீ கீதை, 14 : 17.

கிருபையால் ரஷிக்க வேண்டும் என்றீர்
அது போலே செய்த இடம் உண்டோ என்ன
பாண்டவர்களுக்கு செய்து அருளினாயே
நிலம் கீண்ட வாமனன்
நூற்றுவர் மங்கும் படி ஐவர்க்காய்
உன்னை எங்கு எய்த கூவுவேன்
எதிரிகள் -துரி யோதனாதிகள் -கௌரவர்கள் -குரு வம்சம் வந்தவர்
பாண்டு புத்ரர் பாண்டவர்கள்
நூற்றுவர் தனித் தனியே சத்ருக்களாக வந்தவர்கள்
மாற்றாராய் சேர்ந்து படை ஆயுதம் கொண்டு -மாறு சேர் படை நூற்றுவர்
பாண்டவர் விரோதி தனக்கு சத்ரு
மம பிராணாதி பாண்டவ என்பவன்
மங்க மாள
விளக்கு புரம் விட்டில் பூச்சி -பஸ்மம் ஆனால் இருந்ததே தெரியாமல் போகுமே
கண் கொண்டு காண முடியாதபடி
உளனான சாரதியும் அப்ரதானமாகஆகும் படி ஐவர் பாண்டவர்களுக்கு
இஷ்ட விநியோக அர்க்யம் ஆக்கிக் கொண்டு
மாயப்போர் ஆச்சார்யர்
வஞ்சனை பகலை இரவாக்கியும் போல்வன செய்து அருளி

கூராய் நீராய் நிலமாகி தரை போலே ஆக்கி அருளினாயே அவர்களை
அது போலே ஒன்றுமே இல்லாத எனக்கும் அருள வேண்டுமே
எந்தாய் இந்த செயலும் தனது பேறாக ஆழ்வார்
அவர்கள் எனக்கு பவ்யர் அன்றோ -கிருஷ்ண ஆஸ்ரய கிருஷ்ண பல -என்று இருந்தவர்கள்
எல்லாம் என்னையே ஆகக் கொண்டு
அதுவும் இல்லாத பூமியை ரஷித்தாயே
பிரளயம் கொண்ட பூமிக்கு அனுக்ரகம் செய்ய –
எடுக்க அபேஷிகாமலும் -எடுத்த பின்பு உபகார ச்ம்ர்தியும் இல்லாமல் இருக்கும் அதுக்கு உதவிற்றாயே
அம்மானே -உடைமை இழக்க ஒண்ணாத காரணம் அடியாக ரஷித்தாய்
அநுஷ்டான செய்ய வேண்டியதையும் அ அநுஷ்டானம்-செய்ய கூடாததையும் பகுத்து  அறிந்த ஞானத்தர்
அனுஷ்டானமும் சாதனம் இல்லை என்று அறிந்து இருப்பவர்கள்
நிஷித்த காரணங்களும் சாதனம் இல்லை என்று அறிந்து இருப்பவர்கள்
விஹித ஆச்சார்யமும் சாதனம் இல்லை –
ஈஸ்வர ஆஞ்ஞை -அனுவர்தனம் செய்ய பண்ணுமவர்கள்
ரஜஸ் தமஸ் வளர்க்கும் கார்யங்கள்
சத்வ குணம் வளரும்
பற்றினவன் ஒன்றுமே செய்ய வேண்டாமே என்றால் –
உடம்பையும் சொரிந்து கொள்ளாமல்
சேதனன் ஆகையால் ஆஞ்ஞை படி செய்ய வேண்டுமே
கைங்கர்ய ரூபமாக –
தெளிந்த ஞானம் உடையவர்கள் இந்த திவ்ய தேச வாசிகள்
இவர்கள் நடுவில் இருக்கப் பெற்றோமே என்று நினைத்து இருக்கும் இருப்பு அவனது
சாதனம் ஒன்றும் செய்ய வில்லையே
கிருபையாலே அருள வேண்டும்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 15, 2013

கருளப் புட்கொடி சக்க ரப்படை வான நாட!எம் கார்முகில் வண்ணா!
பொருளல்லாத என்னைப் பொருளாக்கி அடிமை கொண்டாய்!
தெருள்கொள் நான்மறை வல்லவர் பலர்வாழ் சிரீவர மங்கல நகர்க்கு
அருள்செய் தங்கிருந்தாய் அறியேன் ஒரு கைம்மாறே.

பொ-ரை :- கருடக் கொடியினையும் சக்கரப்படையினையுமுடைய வைகுந்த நாடனே! எம் கார்முகில் வண்ணனே! பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அடிமைகொண்டாய்; நான்மறைகளிலும் வல்லவர்களான தத்துவ ஞானத்தையுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் பலர் வாழ்கின்ற ஸ்ரீவரமங்கலநகரத்திற்குத் திருவருளைச்செய்து அங்கே தங்கியிருக்கின்றவனே! ஒரு பிரதியுபகாரத்தை யான் அறியேன் என்கிறார்.

வி-கு :- வானநாட! கார்முகில்வண்ணா! அங்கு இருந்தாய்! என்னை அடிமைகொண்டாய்; அதற்கு ஒரு கைம்மாறு அறியேன் என்க. வெம் கார்முகில் வண்ணா! என்றுகொண்டு விரும்பப்படுகின்ற கரிய மேகம் போன்ற நிறத்தையுடையவனே! என்னலுமாம். வெம்மை-விருப்பம். “வெம்மை வேண்டல்” என்பது தொல்காப்பியம். தெருள்-ஞானம். வல்லவர்: முற்றெச்சம்.

ஈடு :- மூன்றாம் பாட்டு. 1“அருளாய்” என்றீர், அருளக்கடவோம், அதில் ஒருதட்டு இல்லை; ஆனாலும், 2“ஆன்மாகருத்தாவானால் சாஸ்திரம் பயனுடைத்தாம்.” “சாஸ்திரம் பயனுடைத்தாம்போது ஆன்மா கருத்தாவாகவேணும்” என்றபடி அருள் பெறுவார் பக்கலிலும் சிறிது உண்டாக வேணும் காணும் என்ன, இது மேலுற்றைக் கிட்ட மரியாதையோ! கீழுற்றைக்கும் ஏதேனும் உண்டோ; ஆன பின்னர், இத்தலையில் கிஞ்சித்காரத்தை விட்டு உன் கிருபையாலே செய்தருளாய் என்கிறார். இவ்வளவும் வர இதற்கு முன்பு நீ நிர்ஹேதுகமாக ஏற்றுக்கொண்ட பின்பு, மேலும் செய்தருளவேணும் என்கிறார்.

கருளப்புட்கொடி . . . . . . . . . . அடிமைகொண்டாய் – 1நீ முன்பு அருளிற்று உன்னை அறிந்தோ, என்னை அறிந்தோ! கருளப்புட்கொடி – பெரிய திருவடியைக் கொடியாகவுடையவனே! 2இன்னமும் ஒன்று வேண்டும்படியோ உன்னுயர்த்தி. 3“அருளாழிப்புள்” அன்றோ. சக்கரப்படை – அதுவும் வரவேண்டும்படியோ இது இருக்கிறது. 4“அருளார் திருச்சக்கரம்” அன்றோ. வான நாட – 5ஒன்று எடுக்கவும் ஒன்று பிடிக்கவும் வேணுமோ, இருப்பிடமே அமையாதோ. 6ஆக, பெரிய திருவடியைக் கொடியாகவும், திருவாழியை ஆயுதமாகவும், பரமபதத்தை வசிக்குமிடமாகவும் உடையையாய் வைத்து என்றபடி. பெரிய திருவடியை மேற்கொள்ளுதல்,திருவாழியைச் சலியாமல் பிடித்தல், பரமபதத்தை இருப்பிடமாகவுடையனாதல் இவை அறப் பெரியவனுக்கு இலக்கணம்; 1இவை ஓரொன்றே அமைந்திருக்க எல்லாவகையாலும் நிறைந்தவனாயிருக்கிறபடி.

“புள்” என்பது, பொதுப்பெயர்; 2“கருப்புள்” என்பது, கருடனாகிய பறவை என்று சிறப்பித்தபடி. “ஈடே” என்றதனை, “ஈளே” என்னுமாறு போலே, கருடன் என்பது ‘கருளன்’ என வந்தது. அன்றிக்கே, ‘கருள்’ என்று கறுப்பாய், அது சீற்றமாய், பகைவர்கள் மேலே சீற்றத்தையுடையவன் என்னுதல். 3“கருளுடைய பொழில் மருதும்” என்னக்கடவதன்றோ. எம் கார்முகில் வண்ணா-என்பக்கலிலே ஒளதார்யத்தைச் செய்தவனே! 4பெரிய உன் உயர்த்தி பாராவிட்டால் ஒளதார்யம் செய்கிற இடத்தைத்தான் பார்த்தாயோ. என்னளவு பாராதே பிரயோஜனத்தில் விருப்பமில்லாமல் செய்தபடி. செய்த ஒளதார்யம் ஏது? என்ன,

பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி-வஸ்து முன்பே உண்டாய், அதற்கு ஓர் உயர்வினைச் செய்துவிட்டாயோ; 5“இறைவனைப் பற்றிய ஞானமில்லாதவன் இல்லாதவனாக ஆகிறான்” என்று அன்றோ அங்கீகாரத்திற்கு முன்பு இருந்தது, இப்போது ஒரு வஸ்துவாக்கி, “இறைவனைப் பற்றிய ஞானமுள்ளவனை உள்ளவன் என்று அறிகிறார்கள்” என்று உஜ்ஜீவிக்கும்படி செய்தாய்.அடிமை கொண்டாய் – 1“பெருமக்கள் உள்ளவர்” என்கிறபடியே, நித்தியசித்தர் செய்யக்கூடிய கைங்கர்யத்தை அன்றோ என்னைக் கொண்டது. 2உண்டாக்கின அளவேயோ, ஜீவனமும் இட்டிலையோ என்கிறார். “கார்முகில்” என்றது, பலித்தபடி. ‘அடிமை கொண்டாய்’ என்கிறது, “அடிதொழுது எழு” என்னச் செய்த அவ்வளவை அன்றோ. மயர்வற மதிநலம் அருளப்பெற்றவர் இப்படிச் சொல்லுகையாலே, தம்மைத் தாழ்த்திக் கூறல் ஞானகார்யம்; “ஈஸ்வரரோகம் – நான் பெரியவன்” என்றிருக்கை அஜ்ஞான கார்யம் என்பது பெறப்படும்.

தெருள்கொள் நான்மறை வல்லவர் – சிறந்த ஞானத்தையுடையராய்க் கொண்டு, நாலு வகைப்பட்ட வேதங்களையும் தாங்கள் நினைத்தபடி நிர்வஹிக்க வல்லவர்கள். என்றது, தெரியும்படி வேத தாத்பர்யம் கைவந்தவர்கள் என்றபடி. பலர் – ஒருவர் இருவர் அன்றிக்கே ஸ்ரீ வைகுண்டம் போலே திரள் திரளாயிருக்கை. வாழ் – வேதப்பொருளாய் விளங்குமவனைக் கண்டு அநுபவிக்கிறவர்கள். 3புண்ணிய தீர்த்தங்களிலே வசிக்கிற பிராணிகளுக்குப் பாவம் போகிறது இல்லை அன்றோ, ஞானம் இல்லாமையாலே; அங்ஙன் அன்றிக்கே, ஞானமும் அதனோடு சேர்ந்த செயலும் உடையராயிருக்கை. சிரீவரமங்கல நகர்க்கு அருள்செய்து அங்கு இருந்தாய் – சிரீவரமங்கல நகரிலுள்ளார்விரும்பாமல் இருக்கவே, அவர்கள் பக்கல் தண்ணளியாலே வந்திருந்தவனே! இதனால், 1அங்குள்ளார்க்குத் தன்னைக் கொடுத்துக்கொண்டிருக்கிற இருப்பு, தன்பேறாக இருக்கிறபடி. அன்றிக்கே, 2என்னை அடிமை கொள்ளுகைக்காக அங்கே வந்திருந்தாய் என்றுமாம். 3‘கைங்கர்யத்தளவும் வர நிறுத்தினோம், இனி அதற்குப் பிரிவு வர ஒண்ணாது’ என்று அங்கே வந்திருந்தாய். ஒரு கைம்மாறு அறியேன் – நீ இவ்வளவாக உபகரித்து நின்ற இதற்கு, நான் ஒன்று செய்தேனாக அறிகின்றிலேன். 4இதற்கு முன்னர் உதவி செய்வதற்கு ஒரு காரணம் என் பக்கலிலே உண்டு என்று சொன்னாயாதல், இனியும் நீயே நிர்வஹித்தாயாதல் செய்ய வேணும். 5‘நீர் உள்ளீராகையாலே செய்தோம்’ என்றும் சொல்லலாவதில்லை உன்னால். பொருள் அல்லாத என்னைப் பொருளாக்கி அன்றோ அடிமை கொண்டது.

தம் உபாய சூந்யதையைச் சொல்லி, ‘நீயே காப்பாற்ற வேண்டும்’ என்று
பிரார்த்திக்கின்ற இவ்விடத்திற்கு, “அடிமை கொண்டாய்”, “அறியேன்
ஒருகைம்மாறே” என்கிறது சேராது என்கிற சங்கையிலே, இது, முன்பு
செய்ததற்கு ஒரு பிரதியுபகாரம் அறியேன் என்கிறதைச் சொல்லுகிறது
என்னுமிடம் தோன்ற அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘அருளாய் என்றீர்’
என்று தொடங்கி.

2. “சாஸ்த்ரபலம் ப்ரயோக்தரி”-என்பது, பூர்வமீமாம்சை.

“கர்த்தா ஸாஸ்த்ரார்த்தவத்த்வாத்”-  என்பது, உத்தரமீமாம்சை.

‘மேலுற்றைக்கிட்ட மரியாதையோ’ என்றது, “அருள்செய் தங்கிருந்தாய்”
என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘கீழுற்றைக்கும்’ என்றது, “பொருளல்லாத
என்னைப் பொருளாக்கி” என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘ஆன பின்னர்’
என்றது, முன்பு இன்றியே இப்போது உண்டான பின்பு என்றபடி.

“அடிமைகொண்டாய்” என்பது முடிய, பாவம் அருளிச்செய்கிறார் ‘நீ
முன்பு’ என்று தொடங்கி. ‘அறிந்தோ’ என்ற ஓகாரத்திற்குக் கருத்து,
உன்பெருமையையும் என்சிறுமையையும் பாராதே முன்பு நீர்ஹேதுகமாக
அடிமை கொண்டாற்போலே, பேற்றினையும் உன்கிருபையாலே செய்தருள
வேண்டும் என்கிறார் என்பது.

2. “கருளப்புட்கொடி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘இன்னமும்’
என்று தொடங்கி என்றது, கருடக்கொடியே உன் பெருமைக்கு நிரபேக்ஷ
சாதகம், சக்கரத்தைத் தரித்தலும் பரமபதத்தில் இருத்தலும் மிகை என்றபடி.

3. மேலே, மேன்மைக்குக் காரணமாக அருளிச்செய்து, இங்கே நீர்மைக்குக்
காரணமாக அருளிச்செய்கிறார் “அருளாழிப்புள்” என்று தொடங்கி. இது,
திருவாய். 1. 4 : 6.

4. “அருளார் திருச்சக்கரம்” என்பது, திருவிருத்தம்.

ஆனால், இவர் வஸ்து அலரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘இறைவனைப் பற்றிய’ என்று தொடங்கி.

“அஸந்நேவஸபவதி அஸத்ப்ரஹ்மேதி வேதசேத்
“அஸ்திபிரஹ்மேதி சேத்வேத ஸந்தமேநம் ததோவிது:”-என்பது, தைத்திரீய. ஆனந். 6.

தெருள்கொள் நான்மறை வல்லவர்” என்று ஞானத்தைச் சொல்லி,
“வாழ்” என்று அநுபவத்தைச் சொல்லுவது என்? திவ்யதேச வாசம் தானே
உஜ்ஜீவனத்திற்குக் காரணம் அன்றோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘புண்ணிய தீர்த்தங்களிலே’ என்று தொடங்கி.

“கங்காதி தீர்த்தேஷு வஸந்தி மத்ஸ்யா:
தேவாலயே பக்ஷிஸங்கா; சநித்யம்
பாவோஜ்ஜிதா: தே ந பலம் ல பந்தே
தீர்த்தாநி புண்யாயதநா: ச முக்யா:”-என்பது, இங்கு நினைத்தல் தகும்.

கைம்முதல் எதுவும் இல்லை தம்மிடம் என்றார் முதலில்
உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்த  தமிஎனுக்கு அருளாய் என்றார் அடுத்து
-அருளுவேன் -திரு உள்ளம் பரிச்சேதிக்க -சாஸ்திர பலத்தை அனுபவிக்க கர்த்தா ஓன்று செய்து இருக்க வேண்டுமே
சேதனன் பிரயத்னம் செய்து சாஸ்திர பலன் அனுபவிக்க -ப்ரஹ்ம ஸூத்ரம் –
கர்த்த்ரத்வ அதிகரணம்
சாசநாத் கட்டளை இடும் சாஸ்திரம் விதி நிஷேத -வாக்கியம்
விஷய பூதன் சேதனன் -கர்த்தாவாக இருக்க வேண்டுமே –
அருள் பெறுவார் பக்கலிலும் சிறிது உண்டாக வேணும்
இத்தையும் உனது கிருபையால் -செய்து அருளுவாய்
நிர்ஹேதுகமாக கீழே மயர்வற மதி ந்சலம் அருளி -இப்பொழுது ஒன்றை எதிர் பார்க்கலாமா

அவஸ்துவாய் கிடந்த என்னை -பொருள் அல்லாத என்னை
கருடனை கொடியாக கொண்டவனே சக்கரப்படை கொண்டு வான நாடாஎன்  கார் முகில் வண்ணா
அசந்நேவ என்று கிடந்த என்னை பொருளாக்கி அடிமை கொண்டாயே
கைம்மாறு அறியேன்
நீ முன்னம் அருளியது உன்னை அறிந்தோ என்னை அறிந்தோ –
உனது மேன்மையும் எனது தாழ்மையும் பாராமல் அனுக்ரகித்தாய்
கருடப் புள் கொடி -இன்னும் ஒன்றும் வேண்டும்படியாயோ உன்னுடைய மேன்மை
பெரிய திருவடியை த்வஜமாக கொண்ட -அருளாழி புள் -கடவீர் -அருளே வடிவு எடுத்த கருடன்
சக்கரப்படை -அதுவும் வர வேண்டும்படியாய் -தானே சென்று விரோதி அழிக்கும்
வான நாட -இருப்பிடமே அமையாதே எடுக்கவும் பிடிக்கவும் வேண்டாமே
கொடி பிடிக்கவும் ஆயுதம் எடுக்கவும் வேண்டாமே
பரம பதம் வாஸ ஸ்தானமாக உடைத்து -சர்வாதிக லஷணம் -இவை
பெரிய திருவடியை மேற் கொள்ளுதல் வாகனமாகவும் கொடியாகவும்
திரு ஆழி சலியாமல் பிடித்து
பரம பதம் -இருப்பாக
ஒன்றே -அமையும் சர்வாதிகம்
புள் பஷி சாமான்யம் -கருட குறிப்பாக
கள்ள புள் -கருடன் -ரிக் அக்நி ஈடே ஈளே போலே டகாரம் ளகாரம்
அன்றிக்கே கருள் –
கருப்பாய் சீற்றமாய் -பிரதி பஷம் மேலே சீற்றம் உடையவன்
கருள் உடைய –மருது பெரியாழ்வார்
என் கார் முகில் வண்ணா -உனது உயர்த்தி பார்க்காமல் –
என் -என்னையும் பாராதே பிரயோஜன நிரபேஷமாக எதிர்பார்க்காமல் அருளி –
பொருள் அல்லாத என்னை பொருளாக்கி அடிமையும் கொண்டாய்
இல்லாத வஸ்துவை -உண்டாக்கி
விஷயீ காரம் முன்பு அசந்நேவ பவதி
உயர்வற உயர் அடி தொழுது ஏழு -என் மனனே -அருளிய பின்பு தான் வஸ்து வானார்
சத் ப்ரஹ்மத்தை உள்ளபடி அறிந்தவன்
அறியாதவன் அசத் -இல்லாத வஸ்து
சந்தம் ஏனம் உஜ்ஜீவிக்கும் படி அருளினாய்
மேலே அடிமை கொண்டாய்
நித்யர் செய்யும் கைங்கர்யம் செய்யும் படி அருளி ஆக்கிக் கொண்டாய்
உண்டாக்கி பின்பு ஜீவனமும் அருளி –
கார் முகில் பலித்த படி -பூமியை சத்தாக்கி பயிர் விளையும்படி
அடி தொழுது எழு -அடிமை கொண்ட க்ரமம்
தனக்கு ஒன்றுமே தெரியாது
ஈச்வரோஹம் எனபது அஞ்ஞான கார்யம்
அஹம் ஏவ பண்டித சொல்லுவான் அஞ்ஞன்
அஹம் பண்டிதன்
அஹம் அபி பண்டிதன் நான் கூட பண்டிதன்
நாஹம் பண்டித ஒன்றும் அறியாதவன் என்பான்
நெல் கதிர் முத்த முத்த வளையும்
மரம் பழுக்க பழுக்க தணியும்
வித்யை ஏற்ப்பட்டால் விநயம் உண்டாகுமே

அருளிய பின்பும் அவஸ்து என்கிறார்
ஸு நிகர்ஷம் சொல்லுகை ஞான கார்யம்
ஸ்ரீ வர மங்கல -நகர் வாசிகள்
தெருள் -இருள் பதத்துக்கு எதிர்பதம் -தருள் கொள் ஞான
நான்மறை கற்றவர்கள் -பலர் -திரள் திரளாக இருக்கை
வாழ்கை -வேதார்த்த பூதனுக்கு கைங்கர்யம்
தீர்த்தங்களில் வர்த்திக்கிற மிருகங்கள்-கங்கையில் இருக்கும் மீன்கள்  ஞானம் இன்றி
பாபம் போகிறது இல்லை
ஞானமும் அத்துடன் சேர்ந்த வ்ருத்தியும் -வாழ் -சப்தம் சொல்லுமே
அங்கு உள்ளாருக்கு இருக்கும் இருப்பு தனது பேறாக
ஸ்வயம் வ்யக்த ஷேத்ரங்கள் எட்டும்
ஸ்வயமேவ வ்யக்த்யமாக்கிக் கொண்டு
சுமதி ராஜ ரிஷி பிரார்த்திக் கொண்ட படி பார்த்தசாரதி

அர்த்திக்காத அன்றே தானே வந்து
இருந்தவன் என்னை அடிமை கொள்ளுகைகாக அங்கெ வந்து இருந்தவன் என்றுமாம்
உபகரித்த இவற்றுக்கு கைம்மாறு ஒன்றும் இல்லையே
நீயே இன்னும் செய்து அருள்
நீர் உள்ளீராகில் -அதனால் பண்ணினேன் சொல்ல முடியாதபடி அவஸ்துவாக இருந்தேனே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 14, 2013

அங்குற் றேனலேன் இங்குற் றேனலேன் உன்னைக்காணும்
அவாவில் வீழ்ந்துநான்
எங்குற் றேனுமலேன் இலங்கைசெற்ற அம்மானே!
திங்கள் சேர்மணி மாடநீடு சிரீவர மங்கல நகருறை
சங்கு சக்கரத்தாய்! தமியேனுக்கு அருளாயே.

பொ-ரை :- ஒரு சாதனத்தைச் செய்து முக்தியை அடைந்தவனாயிருக்கிறேன் அல்லேன், சாதனத்தைச் செய்கின்றவர்களில் ஒருவனாயிருக்கிறேன் அல்லேன், உன்னைக் காண வேண்டும் என்கிற ஆசையிலே அகப்பட்டு நான் உபாயங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையேனும் அல்லேன்; இலங்கையை அழித்த அம்மானே! சந்திரமண்டலம் வரையிலும் பொருந்தும்படி மாணிக்கங்கள் பதித்த மாடங்கள் உயர்ந்திருக்கின்ற ஸ்ரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற சங்கினையும் சக்கரத்தினையுமுடையவனே! வேறு துணை இல்லாத எனக்குக் கிருபை செய்தருள வேண்டும்.

வி-கு :- அம்மானே! சங்குசக்கரத்தாய்! அங்குற்றேனல்லேன், இங்குற்றேனல்லேன், ஆசையில் வீழ்ந்து எங்குற்றேனுமல்லேன், தமியேனுக்கு அருளாய் என்கிறார். திங்கள்சேர் என்பதற்கு, சந்திரன் வந்து தங்கியிருக்கும்படியாக என்று பொருள் கூறலுமாம். மணி – அழகுமாம்.

ஈடு :- இரண்டாம் பாட்டு. 1“ஆற்றேன்” என்றால் பெற்றது என், தடைகள் இன்னம் உண்டே? என்ன, பிராட்டிக்கு வந்த தடைகளைப் போக்கியது போன்று, அடியேனுடைய விரோதியையும் போக்கியருள வேண்டும் என்கிறார்.

அங்குற்றேன் அல்லேன் – 2முக்தர் இந்தச் சம்சாரத்திலே உலாவினாற்போன்று சித்தசாதனனாய்த் திரிகிறேன்அல்லேன். இங்குற்றேன் அல்லேன் – 1இங்கே இருந்து சாதனங்களைச் செய்கின்றவர்களிலே ஒருவனாய் இருக்கிறேன் அல்லேன். 2அன்றிக்கே, “சனங்களுடன் இந்தச் சரீரத்தை நினையாதவனாகிறான்” என்கிறபடியே, உன்னை அநுபவித்துச் சம்சாரத்தை நினையாதிருக்கிறேன் அல்லேன். இங்குற்றேன் அல்லேன் – 3“மறந்தேன் உன்னை முன்னம்” என்கிறபடியே, உன்னை மறந்து, “அவர் தரும் கலவியே கருதி” என்கிறபடியே, அதுவே பேறாக இருக்கிறேன் அல்லேன் என்னுதல். 4யாதானும் பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடு செய்கையாலே அப்படி இருக்கமாட்டாரே. உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து யான் எங்குற்றேனும் அல்லேன்-5ஆனால், ஒரு காலத்திலாகிலும் சில செய்ய வல்லீரோ? என்னில், அது, முன்பே தானேஉன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்” என்று சொன்னேனே அன்றோ. 1ஒரு காரியத்தைச் செய்ய வேண்டியவர்கள் அதற்கு ஆற்றல் உள்ளவராய் இருக்க வேண்டும் அன்றோ. ‘உன்னைக் காண வேணும்’ என்னும் ஆசையாலே வலிமை குன்றினவனாய்த் தளர்ந்தேன். ஆதலால் சாதனங்களைச் செய்வதற்கு ஆற்றலுடையவன் அல்லேன். இது, பூர்வர்கள் நிர்வாஹம். அங்குற்றேன் அல்லேன் – 2நித்தியசூரிகளோடுகூட அங்கே இருக்கிறேன் அல்லேன். இங்குற்றேன் அல்லேன்-சம்சாரிகளைப் போன்று இங்கே உண்டு உடுத்துப் போருகிறேன் அல்லேன். 3இங்ஙனே ஆனால், நீ வந்து முகங்காட்டுமளவும் நடு ஓர் இடத்தில் நிற்கப் பொறாதவனாக இருக்கிறேன். உன்னைக் காணும் அவாவில் வீழ்ந்து யான் எங்குற்றேனுமல்லேன் – 4“ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்” என்கிறபடியே, அந்த ஆசையிலே வீழ்ந்து கரையேறமாட்டாதே தடுமாறாநின்றேன்.இலங்கை செற்ற அம்மானே – 1தம் தலையில் ஒன்றும் இல்லாமையைக் கண்டார், ஒன்றும் இல்லாதார் பெற்ற இடத்தைப் பார்க்கிறார்; கைம்முதல் அற்றவன் முன்பு ஈட்டி வைத்த செல்வத்தை வாங்கிப் பார்க்குமாறு போலே. 2தன்பேறாகக் கொள்ளுமவன் என்பார் ‘அம்மானே!’ என்கிறார். 3அன்றிக்கே, ஸ்வரூபம் பிரகாசித்தால், அவன் தலையிலே தள்ளிவைக்கவுங்கடவதாய், அவனும் பிராட்டிமாரைப் போன்று மேல் விழுந்து விரோதிகளையும் போக்கி அணைக்கைக்கு வேண்டும் சம்பந்தம் உண்டாய்க் காணும் இருப்பது என்னுதல். நன்று; அவை எல்லாம் செய்தமை உண்டு, ஆனாலும், 4அதற்குப் பிற்பட்டதே? என்ன, அக்கண்ணழிவு அறுத்துவைத்தாய் அன்றோ என்கிறார் மேல்:

திங்கள் சேர் மணி மாட நீடு சிரீவரமங்கலநகர் உறை-சந்திரமண்டலம்வரை செல்ல உயர்ந்து இரத்தினமயமான மாடங்களையுடைய சிரீவரமங்கல நகரிலே, அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்தியவாசம் செய்கின்றாயில்லையோ? நீடுகை – நீட்சியையுடைத்தாயிருக்கை. அன்றிக்கே, திங்கள் சேர் மணிமாடம் நீடு என்பதற்கு, சந்திரனோடே சேரும்படி மாணிக்க மயமான மாடங்கள் வளர்கின்ற என்னுதல். அது அப்படியேயானாலும் பரிகரம் இல்லையே? என்ன, சங்கு சக்கரத்தாய் – அங்ஙன் கண்ணழிவு சொல்லலாமோ? ஒரோ 5கைக்குப் படைஅன்றோ கூட நிற்கிறது என்கிறார். 1இங்கு, “இலக்குமணனே! வில்லைக் கொண்டு வா” என்னவேண்டும் குறை உண்டோ. பிறர் கை பார்த்திருக்கவேண்டும் குறை உண்டோ இங்கு. பரிகரங்களை அழைத்துக் காரியம் கொள்ளவேண்டும்படியோ உனக்கு இருக்கிறது. 2நீ அண்மையிலிருப்பவன் அல்லாமையோ, நீ ஆற்றலுடையவன் அல்லாமையோ, உனக்குப் பரிகரம் இல்லாமையோ, பரிகரம்தான் கைகழிய நின்றோ, எதனாலேதான் இழக்கிறது? என்ன, அவை எல்லாம் அப்படியே, இத்தலை இப்படிக் குறைவற்றிருந்தாலும் பிரயோஜனம் இல்லையே, 3அத்தலையும் குறைவற்றிருக்க வேணுமே? என்ன,

தமியேனுக்கு – இத்தலையும் குறைவற்றது என்கிறார். 4அங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன், இங்கே பிரியாதிருக்கிறார் படி அல்லேன். 5இங்குள்ளார்க்கு இவ்விஷயத்தை அறியாமையாலே பிரிவு இல்லையே. தமியேனுக்கு-உன்னை ஒழியத் துணை இல்லாத எனக்கு. 6ஸ்வரூபத்தைச்‘சாதனம்’ என்று செலவு எழுதிக் கழிக்கில் கழிக்குமித்தனை. 1நீ உபாயம் ஆனாலும் உபாயத்தைப் பிரதிபத்தி பண்ணுவார் வேண்டாவோ. தமியேன்-2பிராட்டியில் வேறுபாடு அங்காகில் ஒரு திரிசடையாகிலும் உண்டே அன்றோ, இங்கு “ஆவார் ஆர் துணை” என்னும்படி அன்றோ தனிமை. ஆயின், செய்யவேண்டுவது என்? என்ன, அருளாயே – 3என் வெறுமையும் உன்நிறைவும் அறிகைக்கு, நீ அடியில் தந்த அருள் இன்று குடி போயிற்றோ, 4அன்று நான் விரும்பாதிருக்க அருளின நீ, விரும்புவதற்குத் தகுதியைப் பிறப்பித்துப் பொகடவோ. 5ருசியை உண்டாக்குவார் ஒருவரும், உபாயத்தை அநுஷ்டிக்கிறவர் ஒருவருமாயோ இருப்பது. 6நின்னருளே புரிந்திருக்கிற எனக்கு அருளாயாகில் பின்னை யார்க்கு வேறு அருள இருக்கிறாய்.

ஆற்ற -பிரதிபந்தகங்கள் பல உண்டே
பிராட்டி பிரதிபந்தகங்கள் போக்கி அருளினது போலே என்னுடைய விரோதிகளையும் போக்கி கைக்கொள்ள வேண்டும்
தமியேன் -தனிப்பட்டவன்
அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்
மயர்வற மதி நலம் அருளி இங்கு பொருந்தாமல் -அங்கும் கூட்டிப் போகாமல் தமியேன்
முக்தர் சம்சாரத்தில் திரி வது  போலே -எம்பெருமான் நியமனம்படி -தமது இச்சைப்படி
ஸ்தாவரங்கள் -நித்ய -முக்தர்கள் பட்டர் அருளி –
இங்கு இருந்து சாதன அனுஷ்டானம் செய்வாரில் ஒருவர் அல்லேன் -பூர்வர் நிர்வாகம்

உபாசகர், ஆரப்தயோகர் என்றும், ஆரூடயோகர் என்றும் இரு வகையர்.
அவர்களில் ஆரூடயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘முக்தர்’ என்று தொடங்கி.
‘சித்தசாதனனாய்’ என்றது, சாதனங்கள் எல்லாம் அநுஷ்டித்துப் பலத்தினை
அநுபவிப்பதற்காக அங்கே செல்ல இருக்கிற ஆரூடயோகனாய் என்றபடி.

ஆரப்தயோகர் படி தமக்கு இல்லை என்கிறார் என்று கூறத்
திருவுள்ளம்பற்றி அதனை அருளிச்செய்கிறார் ‘இங்கே இருந்து’ என்று
தொடங்கி. ‘சாதனங்களைச் செய்கின்றவர்களிலே’ என்றது, சாதன
அநுஷ்டானம் செய்ய ஆரம்பித்த ஆரப்தயோகரிலே என்றபடி. ஆக, மேல்
திருப்பாசுரத்தில் “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று
சொன்ன உபாயம் இன்மையை, இத்திருப்பாசுரத்தில் “அங்குற்றேன்
அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்று வேறு வகையாக
அநுபாஷிக்கிறார் என்பதாம்.

2. “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்பதற்கு, மற்றும்
ஒரு பொருள் அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி.

“ஸஉத்தம : புருஷ : ஸதத்ர பர்யேதி ஜக்ஷத்கிரீடந் ரமமாண:

ஸ்திரீபிர்வா யாநைர்வா ஜ்ஞாதிபிர்வா ந உபஜநம் ஸ்மரந் இதம் சரீரம்”
என்பது, சாந்தோக்யம், 8. 12 : 3.

சாதனா அனுஷ்டானம்  ஒருவர் இல்லை
நோ பஜனம் -உன்னை அனுபவித்து சம்சாரம் மறந்தவர்களில் ஒருவர் இல்லை
சம்சாரம் தாழ்ந்தது ஞானம் உண்டான -பின்பு –

மறந்தேன் உன்னை முன்னம்” என்பது, பெரிய திருமொழி, 6. 2 : 2. “அவர்
தரும் கலவியே” என்பது, மேற்படி 1. 1 : 1.

4. இதர விஷயமே அடையத் தகுந்தது என்று இருந்தாலோ? எனின் அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘யாதானும் பற்றி’ என்று தொடங்கி. என்றது,
இவ்வுலக இன்பங்களில் ஏதேனும் ஒன்றனைப் பற்றிப் பகவத் விஷயத்தை
விட்டே போம்படியான இந்தச் சம்சாரி சேதனனுடைய நினைவானது
மீண்டும் தொடராதபடி அதனை நன்றாக விடுவிக்கையாலே என்றபடி.
இது, திருவிருத்தம், 95-ஆம் பாசுரம்.

5. “அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன்” என்பதற்கு
அருளிச்செய்த இருவகைப் பொருள்களுள், முதற் பொருளுக்குத் தகுதியாக அவதாரிகை அருளிச்செய்கிறார் ‘ஆனால்’
என்று தொடங்கி. ‘ஆனால்’ என்றது, ஆருடயோகரும் ஆரப்தயோகரும்
அல்லீராகில் என்றபடி. ‘செய்ய வல்லீரோ’ என்றது, சாதனங்களை
அநுஷ்டிப்பதற்கு யோக்கியதைதான் உமக்கு உண்டோ? என்றபடி.

“நம்மை விட்டுத் தரிக்க மாட்டீர்” என்றால், “யோக்கியதை இல்லை”
என்னுமதற்கு, அது ஒரு காரணமாமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘ஒரு காரியத்தை’ என்று தொடங்கி. என்றது, “காலாழும்”
(பெரிய திருவந்.) என்றபடியே, பக்திபாரவஸ்யத்தாலே அசக்தனான நான்,
மேலும் சாதந அநுஷ்டானத்துக்குத் தக்கவனல்லேன் என்றபடி.

2. பிரபந்நர் ஆர்த்தப் பிரபந்நர் என்றும், திருப்தப் பிரபந்நர் என்றும் இரு
வகையர்; அவர்களுள், திருப்தப் பிரபந்நனல்லேன் என்கிறார் என்று
பொருள் கூறத் திருவுள்ளம்பற்றி, அதனை அருளிச்செய்கிறார்
‘நித்தியசூரிகளோடுகூட’ என்றது முதல், ‘பொறாதவனாக இருக்கிறேன்’
என்றது முடிய.

3. நித்தியசூரிகளிலும் சம்சாரிகளிலும் கூட்டு அன்றிக்கே, வேறுபட்டவரானால்
ஸ்வரூப ஞானத்தாலே தரித்திருந்தாலோ? என்ன, அதற்கு, விடை
அருளிச்செய்கிறார் ‘இங்ஙனேயானால்’ என்று தொடங்கி. என்றது,
பக்திபாரவஸ்யத்தாலே, “சேஷிசெய்தபடி கண்டிருக்கிறோம்” என்று
ஆறியிருக்கப் பொறுமையுடையவனல்லேன் என்றபடி. இதனால், திருப்தப்
பிரபந்நன் அல்லேன் என்றபடி.

ஆசை என்னும் கடலில் வீழ்ந்து இங்கு அயர்த்தோம்” –பெரிய திருமொழி, 4 : 9 : 3.என்கிறபடியே, அந்த ஆசையிலே வீழ்ந்து

கரையேறமாட்டாதே தடுமாறாநின்றேன்.

உன்னைக் காணும் ஆசையினால் பல ஹீநன் ஆனபின்பு -உபாயாந்தரம் செய்ய வல்லேன் அல்லேன்
உலகை திருத்த இங்கே வைத்து இருந்து –
chocolate காட்டி பின்பு குழந்தைக்கு கொடுக்காமல் இருப்பது போலே
உன்னை –இத்யாதி
நீ வந்து முகம் காட்டும் அளவும் நடுவில் நிற்க சக்தி இன்றி ஆசையில் வீழ்ந்து
அவா -சமுத்ரம் அபிநிவேசம் -கரை ஏற மாட்டாமல்
விரோதி போனால் தானே அங்கே போக
முடியும் கர்மங்களையும்நீயே போக்கி தர வேண்டுமே
பிராட்டி ஸு சக்தி விட்டாள் -தனது தலையில் ஒன்றும் -இல்லாமல்
சஞ்சிதமான தனம் வாங்கிப் பார்க்கும் போலே
கை முதல் அற்றவன் –

இலங்கை செற்ற அம்மானே -இவருக்கு உபகரித்து போலே
ஸ்வரூபம் அறிந்த பின்பு கடி மா மலர் பாவைக்கு ஒக்கும் ஷட் பாவம்
அனன்யார்க சரண்யத்வம் போக்யத்வம் போல்வன
பிராட்டி போலே மேல் விழுந்து ரஷிப்பான்
அது எல்லாம் அவதாரம் என்றானாம்
பிற்பட்டவரே
அந்த -குறையும் நீயா தீர -வீற்று இருந்த எந்தாய் -திவ்ய தேசம் வந்தபின் சொல்ல முடியாதே
திங்கள் சேர் மணி மாட -ஓங்கி இருக்கும் மாடங்கள் ரத்னா மயமாய்
ஸ்ரீ வர மங்கல நகர் அவதாரம் போலே தீர்த்தம் பிரசாதியாதே நித்ய வாசம் செய்யும் திவ்ய தேசம்
சந்தரன் போலே கடாஷிக்கும் மணி மாடங்கள்
விரோதி போக்க ஆயுதங்கள் -சங்கு சக்கரங்கள் உண்டே
இங்கு சாபமானே சமுத்ரம் குறை இல்லையே -வில்லை கொண்டுவா அம்பை கொண்டு வா

சொல்ல வேண்டி இருந்ததே அங்கு

சந்நிகிதன் இல்லாமையால் இழக்கிறேனோ
சத்தை இல்லாமல் இழக்கிறேனோ
பரிகரம் இல்லாமல் இழக்கிறேனோ
எத்தால் இழப்பேன்
அத்தலையிலும் குறை இல்லாமல் இருக்க வேண்டுமே என்றானாம்
தமியேனுக்கு -தனிப்பட்டவன் -என்கிறார்
அங்கு பிரியாது இருக்கும் படி அல்லேன்
சம்சாரிகள் சப்தாதி விஷயங்களை பிரியாது இருக்கும்படி அல்லேன்
பகவத் விஷயம் அறியாமல் இருக்கும் சம்சாரிகள்
நீ ஒருவனே துணைவன்
ஸ்வரூபத்தையும் சாதனம் என்று நினைத்து தான் கழிக்க வேண்டும்
நீ உபாயம் ஆனாலும் -பற்றுவதும் உபாயம் அல்லை -ஸ்வரூபத்தில் சேர்ந்தது
சர்வ முக்தி பிரசங்க ஆகுமே

இன்னார் இணையார் பார்க்காமல் தானம் கொடுப்பவர் -நிர்ஹேதுகமாக
கை நீட்டினால் தானே கொடுக்கிறார் இது சாதனம் இல்லை –
உபாய பிரதிபத்தி சாதனத்தில் சேராமல்
பிராட்டி விட வ்யாவிருத்தி -திரிஜடை அங்கு உண்டே இங்கு ஆழ்வார் தனிமை
செய்ய வேண்டியது என்ன
அருள் -அடியில் -தந்த அன்று அபேஷிக்காமல் அருளிய நீ
இன்று பிரார்த்தித்த பின்பு அருள் -செய்ய வேண்டாமா
உன்னைக் கொடுக்க வேண்டும் -அருளாயே என்கிறார்
எனது வெறுமையும் உனது பூர்த்தியையும்
ருசி உண்டாக்கிய பின்பு -நீயே உபாயமாக இருந்து பலம் கொடுக்க வேண்டும்
நின்னையே குறித்து இருந்தேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 14, 2013

ஏழாம் திருவாய்மொழி – “நோற்ற நோன்பு”

முன்னுரை

    1மேல் திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப்பார்த்தார்; ‘அநுகரித்துத் தரிக்க வேண்டும்படியான கலக்கம் பிறந்த இடத்திலும் வந்து முகங்காட்டிற்றிலன்; இதற்குக் காரணம் என்? தன்பக்கல் ஆசை சிறிதுடையார்க்குத் தானே வந்து முகங்காட்டிக் காப்பாற்றக்கூடிய சர்வேச்வரன் நம்பக்கல் ஆறி இருக்கைக்கு நிபந்தனம் என்?’ என்று பார்த்தார்; ‘இனி இங்ஙனேயாமித்தனை; நம் பிரகிருதி ஸ்வபாவத்தாலே தன்னால் அல்லது செல்லாதபடியாயிருப்பதோர் ஆற்றாமை உண்டாயிருந்தது; ‘அது நமக்கு ஸ்வரூபம்’ என்று அறியாதே ‘உபாயம்’ என்றிருந்தானாக வேணும் என்று பார்த்து, தம் கையில் ஒன்று இல்லாமையை அறிவித்து அவன் திருவடிகளிலே சரணம் புகுகிறார். 2கடற்கரையின் வெளியில் மஹாராஜரை உள்ளிட்ட முதலிகளோடும், 3“புண்ணியத்தையே இலக்ஷணமாகவுடைய இளையபெருமாள்” என்கிற தம்பியோடுங்கூட எழுந்தருளியிருக்க, ஸ்ரீவிபீஷணாழ்வான் 4“கெட்ட ஒழுக்கத்தையுடையவன், இராவணன் என்று பிரசித்தி பெற்றவன், அரக்கர்களுக்கெல்லாம் அரசனான அரக்கன் இருக்கிறான்; நான் அவனுக்குப் பின் பிறந்த தம்பி; விபீஷணன் என்று

பிரசித்தி பெற்றவன்” என்று தன்னுடைய தாழ்ச்சியை முன்னிட்டுக்கொண்டு பெருமாள் திருவடிகளிலே விழுந்தாற்போலே, இவரும், அவன் கடற்கரையிலே தனி இருந்த இழவு தீர, பிராட்டிமாரோடும் 1நித்திய பரிகரத்தோடுங் கூடச் சிரீவரமங்கல நகரிலே திருவனந்தாழ்வான்மேலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே புகல் அற்று விழுந்து சரணம் புகுகிறார். இவர்தாம் 2என்கொண்டு அவனை வடிம்பிடப் பார்க்கிறது என்னில், அவன் காத்தற்குரிய பொருள்களை விரும்பியுள்ளான், காவலனை விரும்புதல் தமக்கு உண்டாயிருந்தது; ஆன பின்னர், இதற்கு மேற்பட சம்பந்தம் உண்டோ? என்று.

509

        நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன் ஆகிலும்
இனிஉன்னைவிட் டொன்று
ஆற்றகிற் கின்றிலேன் அரவின் அணை அம்மானே!
சேற்றுத் தாமரை செந்நெலூடுமலர் சிரீவர மங்கலநகர்
வீற்றிருந்த எந்தாய்! உனக்குமிகை அல்லேன் அங்கே.


    பொ-ரை :- செய்த கர்மயோகத்தையுடையேனல்லேன், ஞான யோகத்தையுடையேனல்லேன், அப்படியானாலும், இனி உன்னைப் பிரியச் சிறிதுபொழுதும் பொறுக்கமாட்டுகின்றிலேன்; ஆதிசேஷசயனத்தையுடைய அம்மானே! சேற்று நிலங்களிலே தாமரைகள் செந்நெற்பயிர்களுக்கு மத்தியில் மலர்கின்ற ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தில் வீற்றிருக்கின்ற எந்தையே! காப்பாற்றுகின்ற உனக்கு அங்கே புறம்பு அல்லேன்.

வி-கு :- அம்மானே! எந்தாய்! நோன்பிலேன், நுண்ணறிவிலேன், ஆகிலும் உன்னை விட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன், உனக்கு அங்குமிகை அல்லேன் என்க. ஒன்றும் – சிறிதும். கில்: ஆற்றலையுணர்த்தும் இடைச்சொல். கிற்கின்றிலேன் – ஆற்றலையுடையேனல்லேன். வீற்றிருந்த : காலமயக்கம்.

இத்திருவாய்மொழி ஆசிரியத்துறை.

ஈடு :- முதற்பாட்டு. 1என்னுடைய பேற்றுக்குக் காரணமாயிருப்பதொரு கைம்முதல் என்னிடத்தில் இல்லை, இல்லாமையாலே ரக்ஷகன் வேண்டும் என்ற விருப்பம் உண்டு; பரிபூர்ணரான தேவர், காத்தற்குரிய பொருள்களை விரும்புகின்றவராய் இருந்தீர்; ஆகையாலே, தேவரே என் விருப்பத்தை முடித்தருள வேண்டும் என்கிறார்.

நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவு இலேன் – 2கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேன் அல்லேன், ஞானயோகத்தையுடையேன் அல்லேன், உன்னுடைய திருவடிகளில் பக்தியுடையேன் அல்லேன்” என்கிறார். 3“ந தர்ம நிஷ்டோஸ்மி – கர்ம யோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்றது, நாட்டார் ‘இவன் சில செய்யா நின்றான்’ என்றிருக்கைக்கும், அது கண்டு நான் ‘நமக்குச் சில உண்டு ஆகாதே’ என்று மயங்குவதற்கும், நீ கைவிடுகைக்கும் வேண்டுவது உண்டு; ஆனால் பலத்தோடேகூடியிருப்பது ஒன்று இல்லை என்றபடி. “ந ச ஆத்மவேதீ-ஞானயோகமுடையேனல்லேன்” என்றது, 1தாச்சீல் யந் தோன்ற இருப்பன், எனக்கு அதுதானும் இல்லை. 2“அந்தப் பரமனைப் பற்றிய ஞானம்தான் ஞானம் என்ற சொல்லால் சொல்லக்கூடியது; ஆகையால், மேற்சொல்லிய ஞானத்திற்கு வேறானது அஜ்ஞானமாகச் சொல்லப்பட்டது” என்கிறபடியே, ஆத்மாவைப் பற்றிய உண்மையான ஞானத்தை முன்னாகக் கொண்ட ஈச்வர ஞானம் எனக்கு இல்லை என்றபடி. “ந பக்திமான்-பக்தியுடையேனல்லேன்”பக்தி இல்லை என்று சொல்ல வேண்டாவே அன்றோ, மேற்சொல்லிய அவை இரண்டும் உண்டானால் வருமதுவே அன்றோ அது. அவை இரண்டும் இல்லாமையாலே, பக்தியும் இல்லை என்கிறார் என்றபடி. ‘நோன்பிலேன்’ என்ன அமையாதோ? ‘நோற்ற நோன்பிலேன்’ என்ன வேண்டுமோ? என்ன, சாதனங்களைச் சமைய அநுஷ்டித்து, பலத்தோடே கூடியிருப்பதாகப் பார்த்திருக்கலாவது ஒன்று இல்லை என்கைக்காகச் சொல்லுகிறார். என்றது, 3சக்கர்வர்த்தி, ஸ்ரீ வசுதேவரைப் போலே பேற்றுக்கு அடியாக நினைத்திருக்கலாவது ஒன்றில்லை என்றபடி. “ந தர்மநிஷ்டோஸ்மி – கர்மயோகத்தில் நிஷ்டையுடையேனல்லேன்” என்கிற இடத்தில், ‘தர்மம் இல்லை’ என்னாமல், தர்மநிஷ்டனாகப் பெறுகின்றிலேன் என்றாற்போலே, ‘அறிவிலேன்’ என்னாமல், ‘நுண்ணறிவிலேன்’ என்கிறார். என்றது, 1ஆத்ம ஞானம் முன்னாகப் பரம்பொருளின் சொரூபத்தைக் காணும் அளவாக அறியும் அறிவையுடையேனல்லேன் என்றபடி.

“ந பக்திமான்” என்றும், 2“நின்கணும் பக்தன் அல்லேன்” என்றும் எடுத்துக் கழித்த அளவு 3இங்கும் எடுத்துக்கழியாது ஒழிவான் என்? என்னில், 4“கரும ஞானங்களால் அலங்காரம் பண்ணப்பட்ட மனத்தையுடையவனுக்கு” என்கிறபடியே, அவை இரண்டும் உண்டானால் வருமதுவேயன்றோ பக்தி; அவை இல்லாமையாலே எடுத்துக்கழிக்கவும் வேண்டாவே அன்றோ. ஆனால், இதைப் போன்று, ‘கர்மம் இல்லை’ என்ற போதே, ‘ஞானம் இல்லை’ என்பது போதருமே அன்றோ, அதனை எடுத்துக் கழிக்க வேண்டுவது என்? என்னில், முற்பிறவியில் கர்மங்கள் முடிந்த அளவிலே மரணம் உண்டானால் அடுத்த பிறவியிலே ஞானம் உண்டாகக் கடவது. 5ஆயின், பக்தியும் அப்படி ஆனாலோ? என்னில், ஞானகர்மங்கள் இரண்டும் உண்டானால் 1பக்தி கூடி அல்லது நில்லாது, ஆன பின்பு, இங்கு அப்படி ஆக ஒண்ணாது. 2‘உன்னைவிட்டு ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன்’ என்று இவர் சொல்லுகிற இது, பக்தி அன்றோ, 3“சிநேகத்தை முன்னிட்ட தியானமானது பக்தி” அன்றோ; ஆனபின்பு, இது உபாயம் ஆனாலோ? என்ன, அங்ஙனம் ஒண்ணாது அன்றோ, கரும ஞானங்களோடு கூடியுள்ள மனத்தையுடையவனுக்கு உண்டாகும் பரபக்தி அன்றோ சாஸ்திரங்களில் சாதனமாகச் சொல்லிப் போருகிறது; இது, அங்ஙன் அன்றிக்கே, அவனுடைய திருவருள் காரணமாக வந்தது ஆகையாலே இது ஸ்வரூபமாமித்தனை. 4அங்ஙன் அன்றிக்கே, புராணங்களிலே தனித்தனியே கர்ம ஞானங்களைச் சாதனமாகச் சொல்லுகையாலே சொல்லிற்றாகவுமாம்.

5அவை இல்லையாகில், முதல் இல்லாதார் பலிசை இழக்குமத்தனை அன்றோ? என்ன, ஆகிலும் – இங்ஙனம்இருந்தேயாகிலும். 1‘ஆற்றகிற்கின்றிலேன்’ என்னுமிதனை, ‘உபாயம்’ என்றிருந்தாராகில், ‘ஆகிலும்’ என்கைக்கு இடம் இல்லை. ஆனால், நீர் இந்நாள்வரை ஆறி இருந்தீரே? என்ன, இனி-2உன்னையும் அறியாதே என்னையும் அறியாதே இருந்த அன்று இழக்க அமையாதோ, உன் நிறைவும் என்குறைவும் அறிந்த இன்றும் இழக்க வேண்டுமோ? 3ஒருவன் கையிலே சோறும் உண்டாய் அவன் இடுவானுமானால், ஒருவனுக்குச் சோறும் இன்றிக்கே பசியனும் ஆனால் இழக்க வேணுமோ? இனி – 4என் கையிலேயும் ஒன்று உண்டாய் அது சமையும் தனையும் ஆறி இருக்கிறேனோ. 5ஸ்வரூபத்தை உபாயத்திலே செலவு எழுதிக் கைவிடப் பார்க்கில் பார்க்குமித்தனை. 6அநாதி காலம் மெய்மறந்து இழந்த காலம் போராதோ, நான் மெய்யாக இசைந்த இன்றும் இழக்க வேண்டுமோ?உன்னைவிட்டு – 1நீயும் என்னைப் போலே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ, நானும் சிறிது செய்து வரவேண்டும்படியோ நீ இருக்கிறது. அன்றிக்கே, 2உயிரை விட்டு உடல் தரிக்கவற்றோ என்னலுமாம். ஒன்றும் ஆற்றகிற்கின்றிலேன் – 3உன்னுடைய ஸ்வரூபஞானம் என்னுடைய தாரணத்துக்குக் காரணமாய் இருக்கிறதில்லை. 4“அங்ஙனம் அழைத்துக்கொண்டு செல்லும் செயல் அவருக்குத் தக்கதாகும்” என்று ஆறி இருக்கைக்கும் ஒருவழி உண்டே அன்றோ அவளுக்கு. கடலை அணை செய்யவும் இராவணனை அழியச் செய்யவும் வேண்டாவே அன்றோ இவளுக்கு. இதுகாறும் தம்முடைய நிறைவின்மையைச் சொன்னார்; இனி, அவனுடைய பூர்த்தியைச் சொல்லுகிறார்: அரவின் அணைஅம்மானே – அரவினை அணையாகவுடைய சர்வேச்வரனே! 1பாம்பினைப் படுக்கையாகவுடைமை, அறப்பெரியவனாந்தன்மைக்கு இலக்கணமே அன்றோ. 2உன்னுடைய போகப் பிராவண்யம் என்னால் ஆறி இருக்கலாயிருக்கிறதோ? நீ பரமபோகியாயிருக்க, என்னால் ஆறியிருக்கப்போமோ?

சேற்றுத் தாமரை செந்நெலூடு வளர் சிரீவரமங்கல நகர் – சேறுகளிலே தாமரைகளானவை செந்நெலூடே அவற்றுக்கு அணுக்கன் இட்டாற்போலே அலராநிற்கின்ற தேசம். 3“நித்தியஸூரிகளுடைய நகரம் அயோத்தி என்னும் பரமபதம்” என்னும்படியான பரமபதத்திற் காட்டில் தனக்கு நகரமாக விரும்பி வாழ்கின்ற தேசம். சம்சாரிகளுடைய இரக்ஷணத்துக்காக நித்தியவாசம் செய்யும் தேசம். பரமபதத்தையும் மறக்கச் செய்யும் தேசம் என்பார் ‘சேற்றுத்தாமரை செந்நெலூடு மலர் சிரீவர மங்கல நகர்’ என்கிறார். 4அன்றிக்கே, அரசர்கள் எடுத்துவிட்ட இடத்தே பரிகரமும் புகுமித்தனையன்றோ என்னுதல்.

வீற்றிருந்த-‘அங்கே இருக்கக்கூடிய நமக்கு, இவ்விருப்பு இருக்க வேண்டாநின்றதே!’ என்னும் வெறுப்போடு அன்றிக்கே, 5தட்டியிலிருந்தவன் முடி சூடினாற்போலே தன் வேறுபாடு தோற்ற இருக்கை. எந்தாய் – அங்குத்தை இருப்பு நித்தியசூரிகளுக்கு ஆனாற்போலே, இவ்விருப்பு எனக்காக அன்றோ இருக்கிறது. சிரீவரமங்கல நகரானஅங்கே வீற்றிருந்த எந்தாய்! என்க. உனக்கு மிகை அல்லேன் – பரமபதத்திலே நெடுங்கைநீட்டாக இருந்தாயாகில் நான் தரித்திருக்கலாயிற்றே, எனக்காக வந்த இடத்தை நான் இழக்கவோ. அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன் – 1காக்கும் பொருள்களைத் தேடிக்கொண்டிருக்கின்ற உனக்குப் புறம்பு அல்லேன். அன்றிக்கே, உனக்கு மிகை அல்லேன் – 2“என்னை அடியவனாகக் கொள்வதில் சேவ்ய சேவக பாவம் மாறாடிக் கிடக்கிறது இல்லை” என்று, மற்றைப் போதைக்கு நான் இரேன். என்றது, உனக்கு மிகையானபோது அல்லேனாய் விடுவேன் என்றவாறு. 3இத்தால் தமக்கு இலாபம் என்? என்ன, அங்கே 4“தேவரீருக்கே பிரயோஜனம் கிடைக்கப் போகிறது” என்கிறபடியே, இத்தால் வரும் பிரயோஜனமும் தேவரீருடையதே. 5பால்குடிக்கும் குழந்தையை, பால்குடித்து வயிறு நிறையக்கண்டு உகக்கும் தாயைப் போலே, அடிமையாக இருப்பவன் ஸ்வரூபம் பெற்று அடிமைசெய்கை சேஷிக்குப் பேறே அன்றோ.

மேல்திருவாய்மொழியில் அநுகரித்துத் தரிக்கப் பார்த்தவர்,
இத்திருவாய்மொழியில் “நோற்ற நோன்பிலேன்” என்று கூறுவதற்கு அடி
யாது? என்ன, அதற்கு விடை அருளிச்செய்யுமுகத்தால், மேல்
திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு அருளிச்செய்கிறார்
‘மேல்திருவாய்மொழியில்’ என்று தொடங்கி. ‘ஆற்றாமையுண்டாயிருந்தது’
என்றது, இத்திருவாய்மொழியில் வருகின்ற “ஆற்றகிற்கின்றிலேன்”
என்றதனைத் திருவுள்ளம்பற்றி. ‘உபாயம் என்றிருந்தானாக வேணும்’
என்றது, ஆற்றாமையாவது சிநேகமாய், சிநேகத்தை முன்னாகக் கொண்ட
தியானம் பக்தியாகையாலே, இது உபாயமாகவேணும்
என்றிருந்தானாகவேணும் என்றபடி.

நோற்ற -நாலும் உபாய ஸ்வரூபம் காட்ட
உபாய சூன்யம் வெளி இட்டுக் கொண்டு வேர் அற்ற மரம் போலே விழுந்து சரண் அடைகிறார்
ஆசாலேசம் உள்ளாருக்கும் முகம் காட்டுபவன்
அனுகரித்தும் ஆறி இருப்பதருக்கு கரணம் என்ன
ஆற்றாமை ஸ்வரூபம் என்று உணராமல் உபாயமாக எண்ணி
சர்வ தரமான் பரித்யஜ்ய -தடவி பார்த்து -லவலேசம் நான் பண்ணினேன் என்றட எண்ணம் இருந்தால் தள்ளி வைப்பான்
metal detector -வைத்து எங்கேயோ குண்டூசி இருந்தாலும் தள்ளி வைப்பது போலே
தமது கையில் ஒன்றும் இல்லாமையை சொல்லிக் கொண்டு சரண் அடைகிறார்
விபீஷணன் -கடல்கரை வெளியில்

“லக்ஷ்மணம் புண்ய லக்ஷ்மணம்” என்பது, ஸ்ரீராமா. யுத். 18:7.

புண்யங்கள் எல்லாவற்றுக்கும் லஷ்ணம் ஸ்ரீ லஷ்மணன்

ராவணோ நாம துர்வ்ருத்தோ ராக்ஷஸோ ராக்ஷஸேஸ்வர:
தஸ்ய அஹம் அநுஜோ ப்ராதா விபீஷண இதி ச்ருத:” 
என்பது, ஸ்ரீராமா. யுத். 17:10.

அவனுடைய பின் பிறந்த தம்பி -பிராதா மட்டும் -சொல்லாமல்
பின்னால் பிறந்தால் குடி இருந்த கர்ப்பத்தில் இருந்து வந்ததால் அந்த குணம் வருமே
பிராட்டி இல்லாமல் துக்கித்து இருந்தார் பெருமாள்
இங்கே பிராட்டி உடன் கூடி -ஸ்ரீ வர மங்கை -நித்ய பரிகரதுடனும்
திருவந்தாழ்வான் மேல் சயனித்து –
வானமாமலை எம்பெருமான் -திருநாமம்
எத்தை கொண்டு -சரண் -அடைகிறார் -ரஷ்ய விஷய அபேஷை
இவரும் ரஷ்கரை தேடி போக
நீ என்னை அன்றி இலேன்
நின் அருள் அன்றி புகல்  ஒன்றும் இல்லை பயன் இருவருக்கும் ஆனபின்பு -அமுதனார்

நிகர் அன்றி நின்ற நீசதை -என்னிடம் -உன் அருள் அன்றி வேறு புகல் இல்லை
உம்முடைய அருளுக்கும் அதுவே புகல் –
உனக்கு என்னை விட்டால் வர வழி இல்லை
ராமானுசா இனி நான் பழுதே அகலும் பொருள் என்ன –
எனைப்போல குறை செய்வார் உண்டோ
உனைப் போல் குறை பொறுப்பார் உண்டோ மணவாள மா  ஆர்த்தி -பிரபந்தம்

கைம்முதல் இல்லை -ஆசை மட்டும் உண்டு

“நோற்ற நோன்பிலேன்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி ‘என்னுடைய’
என்று தொடங்கியும், “ஆற்றகிற்கின்றிலேன்” என்றதனைத்
திருவுள்ளம்பற்றி ‘ரக்ஷகன் வேண்டும்’ என்று தொடங்கியும்,
“சிரீவரமங்கலநகர் வீற்றிருந்த” என்றதனைத் திருவுள்ளம்பற்றிக்
‘காத்தற்குரிய பொருள்களை’ என்று தொடங்கியும் அருளிச்செய்கிறார்.
மேல் திருப்பாசுரத்திலே “அருளாய்” என்றதனைத் திருவுள்ளம்பற்றி
‘என் விருப்பத்தை முடித்தருள வேண்டும்’ என்கிறார்.

2. “நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவிலேன்” என்று இப்படிச் சொன்ன பேர்
உளரோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘கர்ம யோகத்தில்’
என்று தொடங்கி. ‘என்கிறார்’ என்றது, ஸ்ரீஆளவந்தாரை.

“ந தர்மநிஷ்டோஸ்மி நச ஆத்மவேதீ ந பக்திமான் த்வத் சரணாரவிந்தே
அகிஞ்சந : அநந்யகதி : ஸரண்ய த்வத் பாதமூலம் ஸரணம் ப்ரபத்யே”.

என்பது, ஸ்தோத்திர ரத்நம். இது, ஸ்ரீ ஆளவந்தார் அருளிச்செய்தது.

3. மேலே காட்டிய சுலோகத்திற்கு விரிவுரை அருளிச்செய்கிறார் ‘ந
தர்மநிஷ்டோஸ்மி’ என்று தொடங்கி. “தர்மவாந்நாஸ்மி” என்னாது, “ந
தர்மநிஷ்டோஸ்மி” என்றதற்கு, பாவம் அருளிச்செய்கிறார் ‘நாட்டார்’
என்று தொடங்கி. என்றது, பல சாதனத்தைத் தொடங்கிய மாத்திரமே
ஒழிய, சாதனத்தை அநுஷ்டித்து, ‘பலம் கைவரும்’ என்று நிச்சயிக்கத்
தக்கது இல்லை என்றபடி.

ஸ்ரீ வர மங்கள நகர் -உயர்ந்த கிராமம்
ஸ்ரீவர -பாண்டியன் ஏற்படுத்தி
நத்தம் -வர குண மங்கை வர குண பாண்டியன் ஏற்படுத்தியது
நோற்ற நோன்பு இலேன் கர்ம யோகம் இல்லை
ந தர்ம நோஷ்டோமி -ஆளவந்தார் -ந ச ஆத்மவேதி ஞானமும் இல்லை –
தர்மவான் ந அஸ்மி சொல்லி -இருக்கலாம் தர்ம நிஷ்டையே இல்லையே நிலைநின்றவனாக இல்லை –
நாட்டார் இவன் செய்யா நின்றான் என்று இருக்கச் செய்தேயும் -அஹங்காரம் வர காரணமாகி
அதுவே நீ கை விட காரனமாகுமே பலத்துடன் ப்ராப்தம் இல்லாமல் போகுமே
ந ச ஆத்மவேதி -ஆத்மாவை பற்றிய ஞானம் -முதல்படி அப்புறம் சேஷம் அறிந்து –
அடிமைப்பட்டது யாதாத்மா ஞான பூர்வகமான உள்ளறிவு இன்றி –

“தத் ஞானம்; அஜ்ஞானம் அத: அந்யத்உக்தம்”-  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 5 : 57.

ந பக்திமான் -கர்ம ஞான யோகம் இல்லை சொன்னதன் பின்பு இத்தை சொல்ல வேண்டுமா
நின் கண் பக்தன் அல்லேன்
நோன்பிலேன் சொல்லாமல் நோற்ற -சாதனங்கள் பூர்த்தியாக அனுஷ்டித்து பலன் கிட்டும்வரை
ஆரம்பித்து விட்டேன் -சக்ரவர்த்தி வாசு தேவர் போலே இல்லை
தொடங்க கூட வில்லை –
நுண் அறிவு இலேன் -நிஷ்டனாய் இல்லை சொன்னது போலே
நிஷ்டை இல்லை -ஊன்றி இல்லை –
அறிவு ஞானம்
நுண் அறிவு யாதாத்மா ஞானம்
ஸ்வ ஸ்வரூப ஞானம் யாதாம்ய ஞானம் பர ஸ்வரூபம் பர்யந்தம் வரை

குளித்து மூன்றனலை யோம்பும் குறிகொள்அந் தணமைதன்னை
ஒளித்திட்டேன் என்க ணில்லை; நின்கணும் பத்தனல்லேன்;
களிப்பதென் கொண்டு? நம்பி! கடல்வண்ணா! கதறு கின்றேன்;
அளித்தெனக் கருள்செய் கண்டாய் அரங்கமா நகருளானே.-  என்பது, திருமாலை, 25.

நின் கண் பக்தன் அல்லேன் -மூன்றையும் சொல்லி இங்கே
ஆளவந்தாரும் மூன்றையும் சொல்லி
ஆழ்வார் இரண்டையும் சொல்லி
உபயம் இருந்தால் தான் பக்தி வரும்
“உபய பரிகர்மித ஸ்வஅந்தஸ்ய ஏகாந்தி காத்யந்திக
பக்தியோகைகலப்ய:”-என்பது, ஆத்மசித்தி

கர்ம ஞானங்களால் அளந்க்ரதமான மனசை உடையவனே பக்திமான் ஆகலாம்
எடுத்துக் கழிக்க வேண்டாமே
ஞானம் யோகம் எத்ருக்கு சொன்னார் -அப்படி -ஆனால்
பூர்வ ஜன்மம் -கர்மம் தொடங்கி -விட்ட இடத்தில் -தொடரும்

பக்தியும் அப்படியே -ஆகாதோ என்றால் –
ஞான கர்மங்கள் இரண்டும் இருந்தால் பக்தியாக வராமல் போகாதே
உன்னை விட்டு ஒன்றும் ஆற்ற -விட்டு இருக்க முடியாது இதுவே தானே பக்தி தானே
சிநேக பூர்வம் -அநு த்யானம் பக்தி -பிரமாணம்

‘பக்தி கூடியல்லது நில்லாது’ என்றது, “பக்திஸ்ச ஞான விஸேஷ:” என்றும்,
“ஞானம் கனிந்த நலம்”  என்றும் சொல்லுகிறபடியே, ஞானத்தின் பரிபாகம்
பக்தியாகையாலே, ஞானம் பக்தியோடும் கூடியதாகவே இருக்கும் என்றபடி.

2. ஜிஜ்ஞாஸு பிரச்நத்தை அநுவதிக்கிறார் ‘உன்னை விட்டு’ என்று தொடங்கி.

3. “ஸ்நேஹபூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே
பஜஇதிஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித:
தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”

4. “பக்தியானது, கர்ம ஞானங்களை அங்கமாகக் கொண்டு தான்
அங்கியாயிருக்கும்” என்கிற வேதாந்தப் பிரக்கிரியையை மேற்கொண்டு
அருளிச்செய்தார் இதுகாறும். இனி, கர்மம் ஞானம் முதலானவற்றைத்
தனித்தனியே சாதனமாகச் சொல்லுகிற புராணப் பிரக்கிரியையை
மேற்கொண்டு அருளிச்செய்கிறார் ‘அங்ஙன் அன்றிக்கே’ என்று தொடங்கி.
இந்தப் பக்ஷத்தில், இத்திருப்பாசுரத்தில், கர்ம ஞானங்கள் இல்லாமையைச்
சொன்னது, பக்தி இல்லாமைக்கும் உபலக்ஷணம்:

“ஜ்ஞான பக்தி அந்விதம் கர்ம ஜனகாதிஷு த்ருஸ்யதே
கர்ம பக்தி அந்விதம் ஜ்ஞானம் ப்ராயேண பரதாதிஷு
கர்ம ஜ்ஞாநாந் விதா பக்தி: ப்ரஹ்லாத ப்ரமுகாஸ்ரயா”-என்ற சுலோகம் இங்கே நோக்கல் தகும்.

சாதன பக்தி -கர்ம ஞான பக்தி பர பக்தி பர ஞானம் பரம பக்தி பர்யந்தம்
சாத்திய பக்தி அவனே -அருளிமயர்வற மதிநலம் அருளி –
அவன் அனுக்ரகம் அடியாக வந்ததால் இதுவே ஸ்வரூபம் ஆகும் இத்தனை

ஆற்றகிற்கின்றிலேன்” என்கிற பகவத் பிரசாதம் அடியாக வந்த பக்தி
தானே சாதனம் ஆனாலோ? என்னில், அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஆற்றகிற்கின்றிலேன் என்னுமிதனை’ என்று தொடங்கி. என்றது, “ஆகிலும்”
என்ற பதம் பயன் அற்றதாய்விடும் என்றபடி. அதாவது, “வேறு உபாயங்கள்
தமக்கு இல்லை” என்று அருளிச்செய்யக்கூடாது என்றபடி.

துடிப்பு தானே பக்தி -அவனே அருளி -மதி நலம் -ஞானம் முதிர்ந்து பக்தி -ஞான பக்திகள் கொடுத்து அருளி –
சாதனமாக கொடுக்க வில்லை –
அனுபவம் ரசிக்க பக்தி வேண்டுமே ப்ரீதி -அத்யந்தமான –
இதுவும் கொடுத்து தன்னையும் -கொடுத்தான் இந்த பக்தி இருந்தால் தான் அனுபவம் ரசிக்கும்
பக்தி தேக யாத்ரா விசேஷம் -போஜனத்துக்கு சூத்து போலே பசி வேண்டுமே –
துடிப்பு கொடுத்து -தன்னை அனுபவிக்க -கொடுக்கிறான்
உபாசகர்கள் பக்தியை சாதனமாக  கொண்டு
இந்த தானே கொடுத்த பக்தியை சாதனமாக அவனே நினைத்து இருக்கிறானோ -ஆழ்வார் சங்கித்து
24000 படி உபயாந்தர நிஷ்டர் -சாதனம் அனுஷ்டித்து துக்கிக்கும் படி -பலம் கிடைத்ததும்
துக்கம் மறந்து -அனுஷ்டிக்கும் பொழுது துடித்து -அஷ்டாங்க யோகம் -செய்து –
ஆழ்வாரும் துடிக்கிறார் -அவனை பெறாத -வருத்தத்தால்
அவன் தப்பாக நினைத்து இருக்கிறானோ -ஆழ்வார் சங்கை

நன்மைகள்ஏதும் இல்லை  குளித்து தொடங்கி ஐந்து பாசுரங்கள்
அடுத்து தீமைகள் எல்லாம் உண்டு ஐந்து -பாசுரங்களில் சொல்லி
கறவைகள் ஒரே பாசுரத்தில் ஆண்டாள் சொல்லி
நீசனேன் நிறை ஒன்றுமிலேன் ஆழ்வார் அருளி –

“ஸ்நேஹபூர்வம் அநுத்யானம் பக்தி: இதி அபிதீயதே
பஜஇதிஏஷதாது: வை ஸேவாயாம் பரிகீர்தித:

தஸ்மாத் ஸேவாபுதை: ப்ரோக்தா பக்தி ஸப்தேந பூயஸீ”

இதுதானே பக்தி என்றால் –
கர்மம் ஞானம் -பக்தி -பர பக்தி படிப்படி-சாதனம்
இது ஸ்வரூபம் -அவன் அருளியதால்
ஆழ்வாரைத் துடீக்க விட்டு நம்மை பக்தியில் தூண்ட -விட்டான்
சாத்திய பக்தி சாதன பக்தி வாசி -அறிந்து கொண்டு
புராணங்கள் கர்மமே சாதனம் ஜனகர் -போல்வார்
ஒன்றும் இல்லை -என்கிறார் ஆகவுமாம்
முதலே இல்லையானால் வட்டி வருமா
ஆகிலும் ஆற்ற கிற்கின்றிலேன் -உபாயமாக கொண்டால் ஆகிலும் சப்தம் வேண்டாமே
இந்நாள் வரை ஆறி இருந்தீரே –
இனி -இருபது கால் இனி
உன்னையும் என்னையும் அறியாத காலம்
சோறும் உண்டாய்
நீயும் இடுவானாய் எனக்கும் பசியாய்
சாதனம் இருந்து ஆறி இருக்கிறேனோ
சத்தை -துடிப்பு ஸ்வரூபம் -உபாயத்தில் சேர்க்காதே
அநாதி காலம் மெய் மறந்து இழந்த காலம் போதாதே
மெய்யையே நினைந்து
மெய்யை அறிந்த பின்பு இழப்பேனோ
உன்னை விட்டு –
உன்னை கண்ணாடியில் பார்த்து  கொள்ள வில்லையே –
நீயும் என்னைப் போலே இருந்தாகில் நான் ஆறி –
நானும் சிறிது செய்ய வேண்டும்படி இருக்கிறாயா
ஆத்மா சரீரம் போலே
உன்னுடைய ஸ்வரூப ஞானம் தன்மை அறிந்து
சேய் தலை நாற்று போலே
பிராட்டி ஆறி இருந்தாள்
கடலை அணை கட்ட வேண்டாமே நேராக வந்து அனுக்ரகம்
கீழ் தன்னுடைய அபூர்த்தி சொல்லி மேல் அவன் பூர்த்தி சொல்லி
-துடிக்கிறேன் உயர்ந்த வஸ்து கொடுக்கிற நீ இத்தையும் நீயே கொடுத்து அருள் –
அருள் செய் கண்டாய் -தொண்டர் அடி பொடி
ஒன்றுமே கொண்டு போகாதவனுக்கு தங்க காசு எதிலே கொடுப்பேன் என்னுமா போலே

நித்ய சூரிகளும் செந்நெலுமாக வந்து -இவன் வானமா மலையாய் வந்து
கா பூர்வாக -எவ்ஊர் -காஞ்சி பூரணன் -கப்பூர்வாக கேட்காமல் –
வீற்று இருந்த -பரம பதத்தில் போலே
சந்தோஷமாக இங்கே -இப்படி இருக்க வேண்டி இருந்ததே
சிறையில் இருப்பு பரம பதத்தில்
எந்தாய் -அன்குற்றை இருப்பு நித்யர் இங்கு எனக்கு
மிகை அல்லேன் -நித்ய விபூதியில் நெடும்கை நீட்டியது போலே
ரஷிக்க வந்த இடத்தில் இங்கு நான் புறம்பு அல்லேன்
அடியார் காப்பது உனது கடன்
புள்ளி அதிகம் இல்லை

தாமரையையும் செந்நெல்லையும் வர்ணிப்பதற்கு வேறு ஒரு பாவம்
அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று தொடங்கி. என்றது, சர்வேச்வரன்
வந்து அவதரிக்கையாலே நித்தியசூரிகளும் அவற்றின் உருவமாக வந்து
அவதரித்திருக்கின்றார்களாகையாலே, அவனைப் போன்றே உத்தேஸ்யமாய்
வருணிக்கிறார் என்றபடி.

“அங்கே வீற்றிருந்த உனக்கு மிகை அல்லேன்” என்பதற்கு, இரண்டு
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். ஒன்று, எந்தையாய்
அண்மையிலிருப்பவனான உனக்கு மிகையல்லேன் என்பது. என்றது, உன்
ரக்ஷணத்துக்குப் புறம்பு அல்லேன் என்றபடி. இதனையே
அருளிச்செய்கிறார் ‘காக்கும் பொருள்களை’ என்று தொடங்கி.
இரண்டாவது பொருளை அருளிச்செய்கிறார் ‘அன்றிக்கே’ என்று
தொடங்கி. இரண்டாவது பொருளுக்குக் கருத்து, உனக்குப் புறம்பாய்த்
தோற்றிற்றாகில் தரியேன் என்பது. அல்லேன் – தரியேன்.

2. மிகையானால் தரியேன் என்னுமதனைத் திருஷ்டாந்த மூலமாகக்
காட்டுகிறார் ‘என்னை அடியவனாக’ என்று தொடங்கி.

“குருஷ்வ மாம் அநுசரம் வைதர்மம் நேஹ வித்யதே
க்ருதார்த்த : அஹம் பவிஷ்யாமி தவச அர்த்த: ப்ரகல்பதே”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 31 : 32. பெருமாளைப் பார்த்து
இளையபெருமாள் கூறியது.

ரஷித்தே தீர -உனக்கு மிகையானால் அல்லேன் ஆவேன்

“தவச அர்த்த: ப்ரகல்பதே” என்பதன்
பொருள், ‘தேவரீருக்கே’ என்றது முதல் ‘கிடைக்கப் போகிறது’ என்றது
முடிய.

பிரயோஜனமும் உன்னுடையது
தாயார் மகிழ்வது குழந்தை பால் உண்டால்
சேஷிக்கு ஸ்வரூபம் காப்பது
உம்முடைய அனுக்ரகம் ஒன்றையே எதிர்பார்த்து இருக்கிறேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 11, 2013

கூந்தல் மலர்மங்கைக்கும் மண்மடந் தைக்கும்
குலஆயர் கொழுந்துக்கும் கேள்வன் தன்னை
வாய்ந்த வழுதி வளநாடன் மன்னு
குருகூர்ச் சடகோபன் குற்றேவல் செய்து
ஆய்ந்த தமிழ்மாலை ஆயி ரத்துள்
இவையும்ஓர் பத்தும் வல்லார் உலகில்
ஏந்து பெருஞ்செல்வத் தராய்த் திருமால்
அடியார் களைப் பூசிக்க நோற்றார்களே.

பொ-ரை :- மயிர் முடியையுடைய பெரிய பிராட்டியார்க்கும் பூமிப்பிராட்டிக்கும் ஆயர்குலத்துக்குக் கொழுந்து போன்ற நப்பின்னைப் பிராட்டிக்கும் கணவனான சர்வேச்வரனை, பொருந்திய வளப்பத்தையுடைய வழுதி நாடரும், நிலைபெற்ற திருக்குருகூரில் அவதரித்த சடகோபருமான நம்மாழ்வாரால் குற்றேவல் செய்து ஆராய்ந்து சொல்லப்பட்ட தமிழ்ப் பாசுரங்கள் ஆயிரத்துள் இப்பத்துப் பாசுரங்களையும் வல்லவர்கள், தரித்த பெரிய செல்வத்தையுடையவர்களாகிச் சர்வேச்வரனுடைய அடியார்களைப் பூசிப்பதற்குப் புண்ணியம் செய்தவர்கள் ஆவார்கள்.

ஈடு :- முடிவில், 1இத்திருவாய்மொழியைக் கற்க வல்லவர்கள் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்கு அடிமை செய்யப்பெறுவர்கள் என்கிறார்.

கூந்தல் மலர்மங்கைக்கும் – சர்வேச்வரனுடைய ஐச்வரியத்துக்கும் காரணமாயிருக்கிற பெரிய பிராட்டியார். அன்றிக்கே, 2“சர்வேச்வரனுடைய செல்வமாக இருப்பவள்” என்கிறபடியே, சர்வேச்வரனுடைய செல்வமாயிருக்கிற பெரிய பிராட்டியார் என்னுதல். மண் மடந்தைக்கும் – அந்தச் செல்வத்திற்கு விளைபூமியாயிருக்கிற ஸ்ரீ பூமிப்பிராட்டி. குல ஆயர் கொழுந்துக்கும் – அதனுடைய 3பல உருவமாயிருக்கும் நப்பின்னைப் பிராட்டி. கேள்வன்தன்னை – 1“உலகங்கட்குத் தலைவனாகிய இறைவன் இலக்குமியோடு கூடி எழுந்தருளியுள்ளான்” என்கிறபடியே, இவர்களுக்குப் பதியாயுள்ளவனை. இதனால், ஓர் அவதாரமாத்திரமன்றிக்கே, உபய விபூதிநாதனான பூர்ண விஷயத்திலே அநுகரிக்கிறார் என்று தோற்றி இருக்கிறபடி. வாய்ந்த – வாய்க்கையாவது, கிட்டுகை. 2அநுகாரத்தாலே கிட்டின படியை நினைக்கிறது. குற்றேவல் செய்து-ஆழ்வார், திருவடிகளில் அந்தரங்க அடிமைகள் செய்தபடியாயிற்று இவைதாம். என்றது, 3வாசிகமாக அடிமை செய்தபடியாயிற்று என்றபடி.

நன்று; அநுகாரம் அடிமையானபடி எங்ஙனே? என்னில், அப்படியாகத் தட்டு என்? கொள்ளுகிறவன் கருத்தாலே. 4அவன் உகப்பே அன்றோ அடிமையாலும் புருஷார்த்தம். ‘நம்முடைய பிரிவில் அநுகரித்துத் தரிக்க வேண்டும்படி சம்சாரத்திலே இப்படி உண்டாவதே!’ என்று திருவுள்ளம் போர உகக்கும், அது அடிமையாய்த் தலைக்கட்டுமித்தனை. ஆய்ந்த தமிழ்மாலை ஆயிரத்துள் இவையும் ஓர்பத்தும் வல்லார் – ஆராய்ந்து சொன்ன தமிழ்த் தொடை ஆயிரத்திலும் இப்பத்தைக் கற்க வல்லவர்கள். உலகில் ஏந்து பெரும் செல்வத்தராய் – 5இந்த உலகத்தில் எல்லாரும் கொண்டாடும்படி ஸ்ரீ

வைஷ்ணவ ஸ்ரீயையுடையராய். அன்றிக்கே. 1“நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான் தன்னையே தான் வேண்டும் செல்வம்” என்கிறபடியே, உலகத்திலே முகந்தெழுபானையான எல்லையில்லாத செல்வத்தையுடையராய்க் கொண்டு என்னுதல். திருமால் அடியார்களைப் பூசிக்க நோற்றார்களே – ஸ்ரீமத் புத்திரர்களை ஆராதிக்கப் பெறுவர்கள். திருமால் அடியாரை ஆராதிக்கையாவது, இவர் அநுகாரத்தாலே ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியமுள்ளவராக ஆனாற்போலே, இது கற்றார்களும் ஸ்ரீ வைஷ்ணவர்களுக்குப் பிரியத்தைக் கொடுக்கக் கூடிய கைங்கரியத்தைச் செய்யப்பெறுவர் என்கை. என்றது, இவர் அநுகரித்த இப்பாசுரங்களைச் சொல்லுகை. 2“தொண்டர்க்கு அமுது உண்ணச் சொன் மாலைகள் சொன்னேன்” என்னக் கடவதன்றோ.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி 

        கடல்ஞாலத் தீசனைமுன் காணாமல் நொந்தே
உடனா அநுகரிக்க லுற்றுத் – திடமாக
வாய்ந்தவனாய்த் தான்பேசும் மாற னுரையதனை
ஆய்ந்துரைப்பார் ஆட்செய நோற்றார்.

ஸ்ரீ வைஷ்ணவர் கைங்கர்யம் கிட்டும் பலன் சொல்லி தலைக் கட்டுகிறார்
கூந்தல் மலர் மங்கை -சர்வேஸ்வரன் சம்பத்தாய் இருக்கும் பெரிய பிராட்டியார்

“நித்யைவ ஏஷா ஜகந்மாதா விஷ்ணோ : ஸ்ரீ : அநபாயிநீ
யதா ஸர்வகதோ விஷ்ணு : ததைவ இயம் த்விஜோத்தம”-  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுராணம், 1. 8 : 17.

பூமி -பிராட்டி மண் மடந்தை -விளையும் பூமி
ஆயர் கொழுந்து -நப்பின்னை -களம்
கேள்வன் -வாய்ந்த வழுதி வள நாடன் வாசிக்க கைங்கர்யம் செய்து
அவதாரம் மாதரம் இன்றி பூர்ண உபய விபூதி நாதனை அனுகரிக்கிரார்கள்
ஏய்ந்த பெரும் செல்வத்தால்
திருமால் அடியாரைப் பூசிக்க பெறுவார்கள்
ருக்மிணி சத்தியபாமை நப்பின்னை கேள்வன் கண்ணன் தான் சொல்லலாம்
ஜகத் காரணம் சொல்லியதால் உபய விபூதி நாதணனை அனுகரிக்கிறாள்
வாய்கை கிட்டுகை -அநுகாரம் செய்து கிட்டி
அந்தரங்க வருத்தி வாசிக்க கைங்கர்யம் செய்து
கொள்ளுகிறவன் கருத்தாலே -அவன் உகப்பே அடிமையாகும் புருஷார்த்தம்
பிரிந்து அநுகாரம் செய்து தரிக்க வேண்டும் படி சம்சாரத்தில் இருதே என்னும் உகப்பு வருமே அவனுக்கே
ஆய்ந்த ஆராய்ந்து சொல்லி
உலகில் ஏந்து பெரும் செல்வத்தார் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
நீள் செல்வம் வேண்டாதார செல்வம் தான் வேண்டாத நிரவதிக சம்பத் கிட்டும்

செல்வம் தானே வந்து கிட்டுமே

“ஏந்து” என்றதற்கு, இரண்டு பொருள் அருளிச்செய்கின்றார். ஒன்று,
எல்லாராலும் கொண்டாடப்படுதல். மற்றொன்று, முகந்து எழுபானை
போன்று மேலும் மேலும் பெருகிவருதல் என்பது. இந்த இரண்டு
பொருளையும் முறையே அருளிச்செய்கிறார் ‘இந்த உலகத்தில் என்று
தொடங்கி.

நின்னையே தான்வேண்டி நீள்செல்வம் வேண்டாதான்
தன்னையே தான்வேண்டும் செல்வம்போல் மாயத்தால்
மின்னையே சேர்திகிரி வித்துவக் கோட்டம்மா!
நின்னையே தான்வேண்டி நிற்பன் அடியேனே.-என்பது, பெருமாள் திருமொழி.

முகந்தெழுபானை – தண்ணீரை முகந்துகொண்டு மேலே எழுகின்ற
ஏற்றப்பானை.

. இப்பாசுரங்களைச் சொன்னால் அவர்கட்கு உகப்பு ஆகுமோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘தொண்டர்க்கு’ என்று தொடங்கி. இது,-திருவாய்மொழி, 9. 4 : 9.

யேத்தச் சால்போலே -நீர் இறைத்து –
செல்வம் -முகந்து -வரும் போதே -செல்லும் –
நிரவதிக சம்பத்து கிட்டும் -தண்ணீர் போலே செலவழிக்க
பெருவர் திருமால் அடியார்கள் -பூசிக்க பெறுவார்கள்
அனுகாரத்தால் ஸ்ரீ வைஷ்ணவர்கள் ப்ரீதி அடைந்தது போலே
தொண்டர்க்கு அமுது உண்ண  சொல் மாலை -சந்தோஷம்  -உண்டாக்கும்
பெரும்செல்வம் நெருப்பாக சொல்லி பலன் சொலலாமா
கைங்கர்யத்துக்கு உபயோகம் என்றால் ஐஸ்வர்யமும் உத்தேச்யம் த்யாஜ்யம் இல்லை
திருமங்கை ஆழ்வார் திருவவதாரதுக்கு பின்பு இப்படி ஆனதே

சாரம் –
ஈசனை முன் காணாமல் நொந்து
உரு -வெளிப்பாட்டில் சேவித்து –
சாஷாத் காரம் அடையாமல்
உளனாய்
அனுகரித்து அவனே தான்
பேசும் திடமாக வாய்ந்து -ஆராய்ந்து -அவனாய் தான் [ஏசும் மாறன் உரை
ஆள் செய்ய நோற்பார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.