Archive for June, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 11, 2013

கோலங்கொள் சுவர்க்கமும் யானே என்னும்
கோலமில் நரகமும் யானே என்னும்
கோலம்திகழ் மோக்கமும் யானே என்னும்
கோலம்கொள் உயிர்களும் யானே என்னும்

கோலம்கொள் தனிமுதல் யானே என்னும்
கோலம்கொள் முகில்வண்ணன் ஏறக்கொலோ?
கோலம்கொள் உலகத்தீர்க்கு என்சொல்லு கேன்?
கோலம்திகழ் கோதைஎன் கூந்த லுக்கே.

பொ-ரை :- அழகினைக் கொண்டுள்ளதான சுவர்க்கமும் யானே என்பாள், அழகு இல்லாத நரகமும் யானே என்பாள், அழகோடு விளங்குகிற பரமபதமும் யானே என்பாள், அழகினைக் கொண்ட உயிர்களும் யானே என்பாள், அழகினைக் கொண்டிருக்கின்ற ஒப்பற்ற மூலப்பகுதியும் யானே என்பாள், அலங்காரத்தைக் கொண்ட மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அலங்காரத்தைச் செய்துகொண்டு வந்து நிற்கிற உலகத்தீர்க்கு, அழகோடு விளங்குகிற மாலையைத் தரித்த கூந்தலையுடைய என் மகளுக்கு உண்டான நிலைகளைப் பற்றி எதனைச் சொல்லுவேன்?

ஈடு :- பத்தாம் பாட்டு. சுவர்க்கம் முதலான பொருள்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள் என்கிறாள்.

கோலம் கொள் சுவர்க்கமும் யானே என்னும் – சுகரூபமான சுவர்க்கமும் யானே என்னும். 1நிலை நில்லாமையாலே, முகப்பில் காட்சிக்கினியதாந் தன்மையைப் பற்ற, ‘கோலம் கொள்’ என்கிறது. 2‘நரகத்தோடு ஒத்திருக்கச் செய்தே, வாசலிலே கழஞ்சு செம்மண் பூசி இருக்குமாறு போலே காண்’ என்று அருளிச்செய்வர் சீயர். கோலம் இல் நரகமும் யானே என்னும் – மேல் எழப் பார்க்கையில் அங்ஙனமும் ஒன்று இன்றியிலே இருக்கிற நரகமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். கோலம் கொள் மோக்கமும் யானே என்னும் – மீண்டு வருந்தன்மை இல்லாததாய்ச் சுகத்திற்கே இருப்பிடமானதான மோக்ஷமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். “கடல் ஞாலம் செய்தேன்” என்று, படைப்புத் தொடங்கி, “மோக்கமும் யானே”என்று மோக்ஷம் முடிவாகத் தன்னுடைய காரியம் என்கிறாள். கோலம் கொள் உயிர்களும் யானே என்னும்-நாடகம் கட்டி ஆடுவாரைப் போலே தேவனாகவும், மனிதனாகவும், இப்படிப் பல வகையான சரீரங்களை மேற்கொள்ளுகிற ஆத்மாக்களும் யானே என்னும். அன்றிக்கே, கோலம் கொள் உயிர்கள் – 1ஞான ஆனந்த லக்ஷணமான உயிர்கள் என்னுதல். கோலம் கொள் தனிமுதல் யானே என்னும் – 2இவற்றிற்கெல்லாம் காரணமான மூலப்பகுதியும் யானே என்னும். அன்றிக்கே, சங்கல்ப ரூப ஞானத்தைச் சொல்லுதல். அன்றிக்கே, விசித்திர காரிய காரிணியான மூலப்பகுதியையும் சங்கல்பரூப ஞானத்தையும் பிரகாரமாகவுடையனாய், எல்லா நற்குணங்களையுமுடையனான சர்வேச்வரன் என்னுதல். கோலம் கொள் முகில்வண்ணன் – திருமேனிக்கு மேகத்தை ஒப்பாகச் சொல்லும்போது அலங்கரித்துச் சொல்லவேணுமாதலின் ‘கோலம் கொள் முகில்’ என்கிறது. மின்னி முழங்கி வில்லிட்டு வந்து தோற்றின போதாயிற்று ஒப்பாகச் சொல்லலாவது. கோலம் கொள் உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் – ‘கேட்கவேணும்’ என்று ஒருப்பட்டிருக்கிற உலகத்தீர்க்கு நான் எதனைச் சொல்லுவது. அன்றிக்கே, மயிரும் உகிரும் பேணி, உடம்பு பேணி வந்து அலங்கரித்துக்கொண்டு நிற்கிற உங்களுக்கு என்னுதல். கோலம் திகழ் கோதை என் கூந்தலுக்கு-அழகிய மாலையையும் மயிர்முடியையுமுடைய என் மகளுக்குப் பிறந்த அவஸ்தைகளை. என்றது, இவள் மாலையையும் மயிர் முடியையும் கண்டார் படுகிற பாட்டைத் தான் பட்டு அநுகரித்துச் சொல்லுகிறவற்றை நான் எதனைச் சொல்லுவது என்றபடி.

சுவர்க்கம், பரமபதம் போன்று சுகரூபமாக இருக்குமோ? என்ன, மேலே,
“கோலம் திகழ் மோக்கம்” என்று விசேடிக்கையாலே அது இல்லை
என்கிறார் ‘நிலை நில்லாமையாலே’ என்று தொடங்கி. நிலை
நில்லாமையாலே, என்றது, நிலை நில்லாததுமாய், துக்கம் கலந்ததுமான
சுகத்தையுடையதாகையாலே என்றபடி.

ஸ்வர்க்கம் முதலான எல்லாம் என்னுடைய ஆதீனம் என்கிறாள் –
கோலம் -அழகு
அழகான ச்வர்க்கமும் நானே
கோலம் திகள் மோஷமும் நானே
எல்லாவற்றுக்கும் மூல காரணமும் நானே
சுக ரூபமான ஸ்வர்க்கம் -நிலை நில்லாமையாலே முகப்பில் -தர்சநீயம் ஆக இருக்கும்
நரகத்தோடு ஒத்து இருக்கச் செய்தே வாசலிலே களைஞ்சு செம்மண் பூசி இருக்குமே
ப்ரமம் செய்து -இருப்பதால் நரகம் விட மோசம் என்கிறார் -மேல் எழுந்து பார்த்தால் சுகம் போலே தோன்றி
கோலம் இல் நரகம் -பார்க்க கூட அழகு இன்றி
மோசமும் நான் இட்ட வழக்கு
கடல் ஞாலம் செய்தேன் சிருஷ்டி தொடங்கி மோஷம் வரை –
மூன்று கார்யம் -படைத்தல் காத்தல் ஆழித்தல் -சம்சார விமோசனம்
தனியாக உத்பாத ஸ்திதி பிரளய சம்சார விமோசன நான்கு கார்யங்கள் உண்டே அவனுக்கே
அது போல் ஆழ்வார் கோலம் திகள் மோஷமும் -அருளி –
கோலம் கொள் உயிர்கள் -நாடகம் கட்டி ஆடுவாரை போலே மன் உயிர் ஆக்கைகள்
ஒரே ஆத்மா பல சரீரம் கொண்டு –

“கோலம்” என்பதற்கு இருபொருள். இரண்டாவது பொருள், அழகு
என்பது, ஆத்மாவிற்கு அழகாவது. ஞான ஆனந்தங்களேயாதலின்,
அதனை அருளிச்செய்கிறார் ‘ஞான ஆனந்தலக்ஷ்ணமான’ என்று தொடங்கி.

2. “கோலம்கொள் தனிமுதல் யானே என்னும்” என்பதற்கு, மூன்று வகையாகப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘இவற்றிற்கெல்லாம்’ என்று தொடங்கி.
இவற்றிற்கெல்லாம் – இந்த உலகங்கட்கெல்லாம். மூலப் பகுதிக்கும்,
சங்கல்பரூப ஞானத்துக்கும் கோலமாவது யாது? எனின், விசித்திரமான
காரியத்திற்குக் காரணமாயிருத்தல் என்க.

வேஷம் போலே -ஜீவாத்மாவுக்கும் சரீரத்துக்கும் சம்பந்தம் இன்றி –
தேவ மனுஷ்ய நானாவித சரீர அலங்காரம் பண்ணிக் கொண்டு –
ஞான ஆநந்த லஷணம் கொண்ட ஆத்மா என்னவுமாம் -கோலம் கொள்
தனி முதல் -யானே முதல் தனி -வித்தேயோ மூல பிரகிருதி நானே –

அல்லது சங்கல்ப ரூப ஞானம் -கூடிய -சர்வேஸ்வரன் –
விசித்திர கார்ய காரண -சமஸ்த கல்யாண குனாத்மகனான சர்வேஸ்வரன்
முகில் -வண்ணன் கோலம் கொள் -வெறும் மேகம் உபமானம் ஆகாதே
திருவாசிரியம் -மலைக்கு விசெஷணம் -மரகத -குன்றம் பல விசெஷணங்கள் சொல்லி –
சுட்டு உரைத்த நன் பொன் உன் திருமேனி ஒளி ஒவ்வாது -போலே

மின்னி -முழங்கி -வில்லிட்டு -மேகம் இங்கே
கோலம் கொள் -உடம்பு பேணி அலங்கரித்து நிற்கும் உங்களுக்கு என்ன -சொல்வேன்

கோதை கூந்தலுக்கு கூந்தல் -உடையவள் அன் மொழித் தொகை -இங்கே
கோதை -மாலை உடையவள்
வல்லி -கொடி போன்றவள்
-சீதை பெயர் வைத்தது போலே பெரியாழ்வார் ஆண்டாள் கோதை
கலப்பை நுனி -பெயரையே வைத்தது போலே
சூடி களைந்த -மாலை –
கோதை சொன்ன மாலை -மாலை கட்டின மாலை -மாலைக் கட்டின மாலை -நாயனார் வியாக்யானம்
மாலை கூந்தல் அழகைப் பார்த்து அவன் பட வேண்டிய அவஸ்தை இவள் படுகிறாள்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

கொடிய வினை யாதும் இலனே என்னும்
கொடிய வினை ஆவேனும் யானே என்னும்
கொடிய வினை செய்வேனும் யானே என்னும்
கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்
கொடியான் இலங்கை செற்றேனே என்னும்
கொடிய புள்ளுடையவன் ஏறக் கொலோ?
கொடிய உலகத்தீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கொடியேன் கொடிஎன் மகள் கோலங்களே.

பொ-ரை :- கொடுமை பொருந்திய கர்மங்கள் ஒரு சிறிதும் எனக்கு இல்லை என்னும், கொடிய கர்மங்கள் ஆவேனும் யானே என்னும், கொடிய பாவங்களைச் செய்விப்பவனும் யானே என்னும், கொடிய பாவங்களைத் தீர்க்கின்றவனும் யானே என்னும், கொடியவனான இராவணனுடைய இலங்காபுரத்தை அழித்தேனே என்னும், பகைவர்களுக்குக் கொடுமையை விளைவிக்கின்ற கருடப்பறவையை வாகனமாகவுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? கொடுமையையுடைய உலகத்தீர்க்கு, மஹாபாவியேனான என்னுடைய கொடி போன்ற பெண்ணானவள் செய்கின்ற அழகிய காரியங்களைப் பற்றி என் சொல்லுவேன்?

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. கர்மங்களுக்குக் கட்டுப்படாமை முதலான, பகவானுடைய வார்த்தைகளைத் தன்னுடையனவாகப் பேசாநின்றாள் என்கிறாள்.

கொடிய வினை யாதும் இலனே என்னும் – கர்மங்களுக்குக் கட்டுப்பட்டவர்களை அருளின்றி நலியும் கர்மங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என்னும். 1“ஜீவாத்மாவுக்கு வேறுபட்ட சர்வேச்வரன் கர்மபலத்தை அநுபவியாமல் மிகவும் பிரகாசிக்கிறான்” என்றும், 2“என்னைக் கர்மங்கள் ஒட்டுவன இல்லை, கர்ம பலத்தில் எனக்கு ஆசைஇல்லை” என்றும் சொல்லப்படுகிற அவன் படிகளைத் தான் சொல்லாநின்றாள். 1“நாட்டிற் பிறந்து படாதன பட்டு” என்கிற இடம், இச்சையால் வருவனவே அன்றோ. கொடிய வினை ஆவேனும் யானே என்னும் – நான் இவற்றால் தொடப்படாத மாத்திரமேயாய், அவைதாம் எனக்குப் புறம்பாய் இருக்கின்றனவோ; அந்தப் பாவங்கள் தாம் என்னுடைய நிக்கிரஹமேயன்றோ என்னும். கொடிய வினை செய்வேனும் யானே என்னும் – 2அடியார்களுடைய பகைவர்களுக்குக் கொடியதான பாவத்தை விளைப்பேனும் யானே என்னும். ஈண்டுச் ‘செய்வேன்’ என்றது அடியார்களுடைய பகைவர்களைப் பாவங்களிலே மூட்டுகையைக் குறித்தபடி. “என்னைப் பகைக்கின்ற அத்தகையரும் கொடுந்தன்மையரும் இழிந்தவருமான பாவிகளை எப்பொழுதும் பிறப்பு இறப்பு பரம்பரைகளில் அவற்றிலும் அசுரப்பிறவிகளில் தள்ளுகிறேன்” என்பது ஸ்ரீ கீதை.

கொடிய வினை தீர்ப்பேனும் யானே என்னும்-என்னை வந்து அடைந்தவர்கட்கு அவை வந்து கிட்டாதபடி 3“எல்லாப் பாவங்களில் நின்றும் விடுவிக்கிறேன்” என்பேனும் யானே என்னும். கொடியான் இலங்கை செற்றேனே என்னும்-4சுரிகுழல் கனிவாய்த் திருவினைப் பிரித்த கொடுமையுடையவனாதலின் ‘கொடியான்’ என்கிறது. இவ்விடத்தில் 1‘கொடியான்’ என்றது, திருத் தாயார் வார்த்தை காண்’ என்று அருளிச்செய்வர் சீயர், எதிரிகளை இவன் ஒன்றாக மதித்திருந்தானாகாமைக்கு; அவனாலே ஆவேசிக்கப்பட்டவள் அன்றோ இவள். கொடிய புள்ளுடையவன் ஏறக்கொலோ – அடியார்களுடைய பகைவர்களுக்கு யமனை ஒத்தவனான பெரிய திருவடியை வாஹனமாகவுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? 2கொடிய உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் – ‘கேட்க வேணும்’ என்று திரண்டு கிடக்கிற உலகத்தீர்க்கு என்னுதல். ‘இது கூடும்; கூடாது’ என்று பாராமல் ‘சொல்லு சொல்லு’ என்று நிர்ப்பந்தித்து 3ஸ்வகாரியத்தில் நோக்குள்ளவர்களாயிருக்கிற உங்களுக்கு எதனைச் சொல்லுவது என்னுதல். கொடியேன் கொடி என்மகள் கோலங்களே – இவள் அநுகரித்துச் சொல்லுகிற பாசுரங்களைக் கேட்க வேண்டும்படியான பாவத்தைச் செய்த என்னுடைய மகள் செய்கிற 4காணத்தக்க இனியவான செயல்களை. அன்றிக்கே, ஒருப்பாடுகளை என்னுதல்.

அகர்ம வச்யன் -பகவான் -கர்மத்தால் -பாதிக்கப்படாதவன் அவன் வார்த்தை சொல்லி –

“தயோ: அந்ய: பிப்பலம் ஸ்வாது அத்தி அநஸ்நந் அந்ய:
அபிசாக ஸுதி”-என்பது, உருக்கு வேதம்.

“ந மாம் கர்மாணி லிம்பந்தி ந மே கர்மபலே ஸ்ப்ருஹா”-என்பது. ஸ்ரீ கீதை. 4.14.

கர்மம் ஒன்றுமே இல்லையே
கண்ணற்று நலியும் நம்மை கர்மங்கள் –
ஒரே மரத்தில் இரண்டு பறவைகள்

நாட்டில் பிறந்து படாதன பட்டு -என்ற இடம் இச்சையால் சங்கல்ப்பத்தால் வந்தது

அகர்மவஸ்யன்” என்று சொல்லி வைத்து, “கொடிய வினை செய்வேன்”
என்னுமிது முரண் அன்றோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அடியார்களுடைய’ என்று தொடங்கி.

“தாநஹம் த்விஷத: க்ரூராந் ஸம்ஸாரேஷு நராதமாந்
க்ஷிபாமி அஜஸ்ரம் அஸுபாந் ஆஸுரீஷ்வேவ யோநிஷு”-  என்பது, ஸ்ரீ கீதை. 16. 19.

3. “ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாசுச:”-என்பது, ஸ்ரீ கீதை. 18. 66.

4. “சுரிகுழல்கனிவாய்த் திருவினைப்பிரித்த கொடுமையிற்கடுவிசை
அரக்கன்”-என்பது, பெரிய திருமொழி, 5. 7 : 7.

கர்மங்கள் அவன் -கட்டுப்பாட்டில் நிக்ரகம் அடியாக
செய்ய சொல்வதை செய்யாமல் -செய்ய கூடாததை செய்து -நிக்ரகம் –
ஆஸ்ரித விரோதிகளை பாபத்தில் மூட்டி –
இலங்கை செற்றேனும் யானே -என்னும்
கொடியான் -வார்த்தை மட்டும் தாயார் வார்த்தை
தனது வாயால் கொடியான் சொல்ல -மாட்டான் -நஞ்சீயர் -அருளுவார்
எம்பெருமானுக்கு யாருமே கொடியவன் இல்லையே
திருவினை பிரித்த கொடுமையில் கடு விசை அரக்கன் -ஆழ்வார் ஸ்ரீ சூக்தி

கொடியது -உடையவன் ஆஸ்ரித விரோதிகளுக்கு கொடியவன் பெரிய திருவடி
கொடிய உலகத்தீருக்கு -என்ன சொல்வேன்
சொல்லு சொல்லு நிர்பந்தித்து -எத்தை சொல்வது
பெண் அனுகரித்து சொல்லும் பாசுரங்களை கேட்கும் படி கொடியேன் நான் -திருத் தாயார்
கோலம் -தர்சநீயமான

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும்
உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும்
உரைக்கின்ற அமரரும் யானே என்னும்
உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்
உரைக்கின்ற முனிவரும் யானே என்னும்
உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக்கொலோ?
உரைக்கின்ற உலகத்தீர்க்கு என்சொல் லுகேன்?
உரைக்கின்ற என்கோமள ஒண் கொடிக்கே.

பொ-ரை :- தாமத புராணங்களிலே சொல்லப்படுகின்ற சிவபிரானும் யானே என்பாள், அவனுக்கும் தமப்பனாகச் சொல்லப்படுகின்ற பிரமனும் யானே என்பாள், சொல்லப்படுகின்ற தேவர்களும் யானே என்பாள், சொல்லப்படுகின்ற தேவர்கள் தலைவனான இந்திரனும் யானே என்பாள், உரைக்கின்ற முனிவர்களும் யானே என்பாள், வேதங்களிலே பிரசித்தமாகச் சொல்லப்படுகின்ற மேகம் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? சொல்லு சொல்லு என்று பேசுகின்ற உங்களுக்கு, உலக விஷயத்தைக் கடந்து பேசுகின்ற அழகிய கொடி போன்ற என் பெண் விஷயத்தில் எதனைச் சொல்லுகேன்?

ஈடு :- எட்டாம் பாட்டு. உலகத்திற்குப் பிரதாநரான பிரமன் முதலான தேவர்கள் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்கிறாள்.

உரைக்கின்ற முக்கட்பிரான் யானே என்னும் – 2வேதத்திலே பகவானுடைய செல்வங்கள் பரக்கச்சொல்லப்படுகின்ற இடங்களிலேயாதல், புனைந்துரையாகப் பேசப்படுகின்ற இடங்களிலேயாதல் சொல்லப்படுமவனாய், தன்னுடைய கோஷ்டிக்கு உபகாரகனான சிவன் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள். அன்றிக்கே, 1“பதினோர் உருத்திரர்களுக்குள்ளே சங்கரன் நான் ஆகின்றேன்” என்கிறபடியே, சர்வேச்வரனுக்குப் பிரகாரமாகச் சொல்லப்பட்டவனாதலின் ‘உரைக்கின்ற’ என்கிறார் என்னுதல். உரைக்கின்ற திசைமுகன் யானே என்னும் – 2“விரூபாக்ஷனும் பிரமனுக்கு ஜ்யேஷ்ட புத்திரனுமான சிவன்” என்கிறபடியே, அந்தச் சிவனுக்கும் தமப்பனாகப் பிரமாணப் பிரசித்தனாயிருக்கின்ற பிரமனும் நான் இட்ட வழக்கு என்கிறாள். உரைக்கின்ற அமரரும் யானே என்னும் – பிரமனாலே படைக்கப்பட்டவர்களாய், நித்திய சிருஷ்டிக்கு உரியவர்களாகச் சாஸ்திரங்களிலே சொல்லப்படுகின்ற பிரமர்கள் பதின்மர்களும் நான் இட்ட வழக்கு என்னும். 3அன்றிக்கே, “பிரமன் என்ன, தக்ஷர் முதலான பிரஜாபதிகள் என்ன, இவர்கள் முதலானவர்கள் சர்வேச்வரனால் நியமிக்கப்படுகின்ற பொருள்கள்; உலகத்தைப் படைப்பதற்குக் காரணர்களாக இருக்கிறார்கள்” என்கிறபடியே, பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவர்களாதலின் ‘உரைக்கின்ற அமரர்’ என்கிறாள் என்னுதல்.

உரைக்கின்ற அமரர்கோன் யானே என்னும்-4“இந்திரனே! உன்னைக்காட்டிலும் உயர்ந்தவர் ஒருவருமிலர்” என்று சொல்லப்படுகின்ற இந்திரனும் யானேஎன்னும். அன்றிக்கே, 1“வேதங்களில் சாமவேதம் நானாக இருக்கிறேன், தேவர்களில் இந்திரன் நானாக இருக்கிறேன்” என்கிறபடியே, பகவானுக்குப் பிரகாரமாகச் சொல்லப்படுகின்றவன் ஆதலின், ‘உரைக்கின்ற’ என்கிறாள் என்னுதல். உரைக்கின்ற முனிவரும் யானே என்னும் – வேதத்தின் அர்த்தங்களை நினைத்து, உலகத்திற்குச் செய்ய வேண்டியனவற்றைச் சொல்லும் மனு முதலான முனிவர்களும் நான் இட்ட வழக்கு என்னும். உரைக்கின்ற முகில்வண்ணன் ஏறக் கொலோ – வார்த்தை சொல்லுவதாய், கழுத்தே கட்டளையாக நீரை முகந்து, மின்னி, முழங்கி, வில்லிட்டு வருவதொருமேகம் போலே வடிவழகையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அன்றிக்கே, உரைக்கின்ற 2“கருமை நிறத்தையுடைய மேகத்தின் நடுவில் இருப்பதான மின்னல் போலே” என்கிறபடியே, நீருண்ட மேகம் போலே என்று சொல்லப்படுகிற என்னுதல். உரைக்கின்ற உலகத்தீர்க்கு இவை என் சொல்லுகேன் – சிலவற்றைச் சொல்லுமித்தனையேயாய், ‘சொல்லலாம், சொல்ல ஒண்ணாது’ என்று பாராதே, சொல்லு சொல்லு என்று வருத்துகின்ற உலகத்தீரான உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது? உரைக்கின்ற என்கோமள ஒண்கொடிக்கே – அதுவும் சொல்லி ஒழிவேனே அன்றோ 3வார்த்தை சொல்லிற்றிலள் ஆகில். ‘கோமளம்’ என்கையாலே, சௌகுமார்யத்தைச் சொல்லிற்று. ‘கொடி’ என்கையாலே, 4“கணவனை அடைதற்குரிய வயதினையுடையவள்” என்கிறபடியே, ஒருகொள்கொம்போடே சேராத போது தறைப்படும் பருவம் என்பதனைச் சொல்லிற்று.

ப்ரஹ்மாதிகள் தானே
உரைக்கின்ற –வேதத்தில்
உரைக்கின்ற முக்கண் -பிரான் அந்தர்யாமியாக இருந்து
வேதத்தால் உரைக்கப் -பற்ற விபூதி சொல்லும் வேதம்

“உரைக்கின்ற” என்பதற்கு, பரம்பொருளாக உரைக்கப்படுகின்ற என்றும்,
பகவானுக்குச் சரீரமாக உரைக்கப்படுகின்ற என்றும் இரண்டுவிதமாகப்
பொருள் அருளிச்செய்யத் திருவுள்ளம்பற்றி, அவ்விரண்டு
பொருள்களையும் முறையே அருளிச்செய்கிறார் ‘வேதத்திலே’ என்று
தொடங்கியும், ‘அன்றிக்கே’ என்று தொடங்கியும்.

“ருத்ராணாம் ஸங்கர: ச அஸ்மி வித்தேஸ: யக்ஷரக்ஷஸாம்
வஸூநாம் பாவக: ச அஸ்மி மேரு: ஸிகரிணாம் அஹம்”-  என்பது, ஸ்ரீ கீதை. 10 : 23.

2. “விரூபாக்ஷாய பிரஹ்மண: புத்ராய ஜ்யேஷ்டாய ச்ரேஷ்டாய”-  என்பது, சாமவேதம்.

பிரமர்கள் பதின்மர் :- மரீசி, அத்திரி, அங்கிரசு, புலஸ்தியர், புலகர்,
கிரது, வசிஷ்டர், தக்ஷர், பிருகு, நாரதர் என்பவர்கள்.

3. “ப்ரஹ்மா தக்ஷாதய: கால: ததைவ அகில ஜந்தவ:
விபூதய: ஹரே: ஏதா ஜகத: ஸ்ருஷ்டி ஹேதவ:”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 1. 22 : 31.

4. “நகிரிந்த்ர த்வத் உத்தர:” என்பது, ருக்வேதம்.

அர்த்தவாதம் பிரகரணம்
உண்டே தாமச புராணம் உண்டே
முக்கண் பிரான் –உபகாரகன் அவனுக்கும் கோஷ்டி உண்டே என்பதால் பிரான்

திசை முகன் -ப்ரஹ்மாவும் நானே

“வேதாநாம் ஸாமவேத: அஸ்மி தேவாநாமஸ்மி வாஸவ:” என்பது, ஸ்ரீ கீதை.  10 : 22.

2. “நீலதோயத மத்யஸ்த்தா” என்பது, தைத்திரீய நாராயண உப. 11.

3. ‘வார்த்தை சொல்லிற்றிலளாகில்’ என்றது, பகவானுடைய விபூதியைப்
பரக்கச் சொல்லிற்றிலளாகில் என்றபடி. ஆதலால், இப்படிப்பட்டவளுடைய
வைபவம் என்னால் சொல்லப்போகாது என்பது கருத்து.

4. “பதி ஸம்யோக ஸு லபம் வய: த்ருஷ்டவா ச மே பிதா” என்பது, ஸ்ரீராமா.
அயோத். 118 : 36. அநசூயைப் பார்த்துப் பிராட்டி கூறியது.

பத்து பிரஜாபதிகளை உண்டாக்கி -கார்யம் கொடுத்து பிரித்து -அமரர் –சப்தம் இவர்களைக் குறிக்கும்
உரைக்கின்ற அமரர் கோனும் நானே இந்த்ரனும் -நானே என்கிறாள்
வேதார்த்தை ஸ்மர்த்திது மனு போல்வாரும் நானே -நான் இட்ட வழக்கு
தர்ம சாஸ்திரம் கர்த்தவ்யம் செய்தவர்களும் நானே
முகில் வண்ணன் -நீல தோயாத -மழை
மின்னி முழங்கி கழுத்தே கட்டளையாக நீரை முகர்ந்து
சார்ங்கம் உத்தித சாரா மழை போலே
உரைக்கின்ற உலகத்தீருக்கு என்ன சொல்வேன்
வார்த்தை சொல்லி -கோமள -சௌகுமார்யம்
கொடி பருவத்தால்
கொள் கொம்பால் சேராமல் தரைப்பட்டு போகுமே
சீதை பிராட்டி வார்த்தை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

உற்றார்கள் எனக்குஇல்லை யாரும் என்னும்
உற்றார்கள் எனக்குஇங்கு எல்லாரும் என்னும்
உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்
உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்
உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும்
உற்றாரிலி மாயன் வந்து ஏறக்கொலோ?
உற்றீர்கட்கு என்சொல்லிச் சொல்லு கேன்யான்?
உற்று என்னுடைப் பேதை உரைக்கின்றவே.

பொ-ரை :- எனக்கு உறவினர்கள் யாரும் இல்லை என்பாள், இங்கு எல்லாரும் எனக்கு உறவினர்களே என்பாள், உறவினர்களை உண்டாக்குகின்றவனும் யானே என்பாள், உறவினர்களை அழிக்கின்றவனும் யானே என்பாள், உறவினர்களுக்குப் பொருந்தியவனும் யானே என்பாள், உறவினர்கள் ஒருவரும் இல்லாத மாயனாகிய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? இங்கு வந்து சேர்ந்திருக்கின்ற உங்களுக்கு, என்னுடைய பேதைப்பருவத்தையுடைய மகள் பொருந்தி உரைக்கின்ற வார்த்தைகளை எதனைச் சொல்லுவேன்?

ஈடு :- ஏழாம் பாட்டு. எம்பெருமான் அடியார்கள் விஷயத்தில் இருக்கிற இருப்பைத் தன் படியாகப் பேசா நின்றாள் என்கிறாள்.

எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை என்னும்-1எனக்கு ஒருகாரணம் பற்றி வந்த பந்துக்கள் ஒருவரும் இலர் என்னும். அன்றிக்கே, என்னுடைய சம்பந்தம் அறிந்து என்னோடு சிநேகிக்கக்கூடியவர் ஒருவரும் இலர் என்னும் என்னுதல். 2“உலகங்கட்கு எல்லாம் தலைவன்” என்று இதனை ஓதிவைத்தே வேறு தெய்வங்களை வணங்குதல் அன்றோ செய்வது. எனக்கு உற்றார்கள் இங்கு எல்லாரும்என்னும்-எனக்கு, காரணம் இல்லாமல் வந்த பந்துக்கள் அல்லாதார் இலர் என்னும். அவர்கள் இப்படி இருக்கச் செய்தே காரணமில்லாமல் வந்து பந்துவாய் எல்லாரிடத்திலும் அன்புடையனாயிருப்பன் என்னுதல். உற்றார்களைச் செய்வேனும் யானே என்னும்-அவர்களிலே சிலர் வந்து என்னை அடையும்படி செய்கின்றேனும் யானே என்னும். உற்றார்களை அழிப்பேனும் யானே என்னும்-அவர்களுக்கு வேறு பிரயோஜனங்களிலே ருசி உண்டானால், அந்தப் பிரயோஜனங்களைக் கொடுத்து என்பக்கல் நின்றும் அகற்றுவேனும் யானே என்னும். அன்றிக்கே, அவர்களை அழகு முதலியவைகளாலே அழிப்பேனும் யானே என்னாநின்றாள் என்று ஆண்டான் பணித்தானாக 1இளையபெருமாள் பணிப்பர்.

உற்றார்களுக்கு உற்றேனும் யானே என்னும் – என் பக்கல் வேறு பிரயோஜனங்களை விரும்பாதவர்களாய் என்னை அடைகின்றவர்கட்கு, என்னளவு வேறு பிரயோஜனங்களை விரும்பாதவர் இலர் என்னுதல். அன்றிக்கே, என்னையே எல்லா உறவு முறையுமாகப் பற்றினவர்கட்கு, நானும் அவர்களையே எல்லா உறவு முறையுமாக இருப்பேன் என்னுதல். உற்றார் இலி மாயன் வந்து ஏறக்கொலோ – இற்றைக்கு முன்பு தம் முயற்சியால் கிட்டினவர்கள் ஒருவரும் இல்லாதபடி இருக்கிற ஆச்சரியத்தையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? உற்றீர்கட்கு என் சொல்லிச் சொல்லுகேன் யான்-இங்ஙனம் சந்தேகிக்கலாமோ, உறவினர்களுக்கு அறுதியிட்டுச் சொல்லவேணுங்காண் என்ன, உறவு முறையராமித்தனையோ வேண்டுவது, சொல்ல வேண்டுவன இருந்து சொல்ல வேண்டாவோ, என்ன பாசுரத்தைச் சொல்லிச் சொல்லுவேன்? ஏன்தான், சொல்ல ஒண்ணாமைக்கு வந்தது என்? என்னில், என்னுடைப் பேதை உற்று உரைக்கின்றவே-பருவம் நிரம்பாத என் பெண், மறுபாடுருவத் தைத்துச் சொல்லுகிறவற்றை, கரையிலே நிற்கிற நான் எதனைச் சொல்லுவது? 2திருத்தாயாரானநிலையும் இவர்க்கே உள்ளது ஒன்றாகில் இங்குச் சொல்ல ஒண்ணாதபடி கலங்குகையாவது என்? என்னில், 1“தனக்கும் தன்தன்மை அறிவரியான்” என்கிறபடியே, சர்வேச்வரனை, தன்படி தானும் அறியான் என்று சொல்லுமாறு போலே, தம்நிலை தமக்குங்கூடப் பேச்சுக்கு நிலம் அன்று என்கிறது.

ஆஸ்ரிதர் விஷயத்தில் எம்பெருமான் இருக்கும் நிலை தானே என்கிறாள்
நிர்பாதிக பந்து அனைவருக்கும் அவனே

எனக்கு உற்றார்கள் யாரும் இல்லை” என்பதற்கு, இரு வகையாகப்
பொருள் அருளிச்செய்கிறார். இரண்டாவது வகையில் உற்றார் –
உற்றிருப்பார் என்றாய், சிநேகம் செய்வார் என்பது பொருளாகக் கொள்க.

2. சம்பந்தம் அறிந்து சிநேகம் செய்யார்களோ? என்ன, ‘உலகங்கட்கெல்லாம்’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.

“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம் ஸவம் அச்யுதம்” என்பது,-தைத்திரீய நாரா.

நமக்கு உற்றார் கர்மம் அடியாக உபாதி
அவனுக்கு உபாதி இல்லையே
என்னோட்டை சம்பந்தம் அறிந்து -வெறுப்பில் சொல்கிறான் என்னை ஒருவரும் புரிந்து கொள்ள வில்லை
பதிம் விச்வச்ய அறிந்து வைத்தே தேவதாந்தர பஜனம் செய்கிறார்கள் –
உற்றார்கள் யாரும் இல்லை
ஆனால் எல்லாரும் பந்து தானே -பந்து  இல்லாதாவார் இல்லை -நிருபாதிக பந்து
சிலர் ஆஸ்ரயிக்க பண்ணுபவனும் யானே
பிரயோஜனாந்தர ருசி உண்டாக்கி போக்குபவனும் நானே

தனக்கு ஆகாதவரை தானே விலக்கி வைத்து
திருத் தாயார் தசையும் இவளே
தம்மாலே சொல்லி கொள்ள முடியாதா
சொல்ல ஒண்ணாத படி கலங்குவது
தனக்கும் தன் படி அறியான் போலே -தனது நிலை தன்னாலும் சொல்ல முடியாதபடி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-6-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

இனவேய்மலை ஏந்தினேன் யானே என்னும்
இனஏறுகள் செற்றேனும் யானே என்னும்
இனஆன்கன்று மேய்த்தெனும் யானே என்னும்
இனஆநிரை காத்தேனும் யானே என்னும்
இனஆயர் தலைவனும் யானே என்னும்
இனத்தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ?
இனவேற்கண் நல்லீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
இனவேற் கண்ணி என்மகள் உற்றனவே.

    பொ-ரை :- கூட்டம் கூட்டமான மூங்கில்களையுடைய கோவர்த்தனம் என்னும் மலையைத் தூக்கினவனும் நானே என்னும், ஒத்த இடபங்களைக் கொன்றவனும் யானே என்னும், ஒத்த பசுவின் கன்றுகளை மேய்த்தேனும் யானே என்னும், ஒத்த ஆயர்களுக்குத் தலைவனும் யானே என்னும், கூட்டம் கூட்டமான நித்தியசூரிகளுக்குத் தலைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? வேலை ஒத்த கண்களையுடைய நல்லவர்களான உங்களுக்கு, வேலை ஒத்த கண்களையுடையவளான என் மகள் அடைந்தனவற்றை என்சொல்லுவேன்?

ஈடு :- ஆறாம் பாட்டு. கோவர்த்தன மலையைத் தூக்கித் தரித்திருத்தல் முதலான, கிருஷ்ணனுடைய செயல்களை எல்லாம் செய்தேன் நான் என்னா நின்றாள்.

இன வேய் மலை ஏந்தினேன் யானே என்னும்-2அணுக்கனைக் கவிழ்த்துப் பிடித்தாற்போலே, திரள்திரளான மூங்கிலையுடைத்தான மலையை வருத்தம் இன்றியே தரித்தேன் நான் என்னாநின்றாள். இனம் ஏறுகள் செற்றேனும் யானே என்னும் – ஒன்று இரண்டு அன்றிக்கே 3யமனுக்கு ஒத்தனவாக இருக்கிற இடபங்கள் ஏழனையும் ஒருகாலே ஊட்டியாக நெரித்துப் போகட்டேன் நான் என்னும். இனஆன்கன்று மேய்த்தேனும் யானே என்னும் – 1“கன்றுகளின் நடுவில் உள்ளவனும் இளமைப்பருவமுடையவனும்” என்கிறபடியே, என்னோடு ஒத்த பருவமுள்ள கன்றுகளை மேய்த்தேனும் நான் என்னும். இன ஆநிரை காத்தேனும் யானே என்னும் – முன்பு பிரஹ்மசர்யம் அநுஷ்டித்துப் பின்பு இல்லற தர்மம் அநுஷ்டிப்பாரைப் போலே, இளமைப் பருவத்தில் கன்றுகளை மேய்த்து, பருவம் நிரம்பின பின்பு பசுக்களை மேய்த்தேனும் நான் என்னும். இன ஆயர் தலைவனும் யானே என்னும் – 2“தன்னேராயிரம் பிள்ளைகள்” என்கிறபடியே என்னோடு ஒத்த பருவத்தில் பிள்ளைகளும் நானுமாகத் தீம்பு செய்து திரிகிற இடத்தில் அவர்களில் என்னளவு தீம்பு செய்கின்றவர்கள் இலர் என்னும். இனத்தேவர் தலைவன் வந்து ஏறக்கொலோ-வேறு ஒன்றிலும் விருப்பம் இல்லாதிருத்தலுக்குத் தன்னோடு ஒத்திருக்கிற நித்தியசூரிகளுக்கு நிர்வாஹகனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அன்றிக்கே, இனத்தேவர் என்பதற்கு, தனியே அநுபவிக்க ஒண்ணாமையாலே திரள்திரளாக இருக்கிற நித்தியசூரிகள் என்னுதல். 3“அடியார்கள் குழாங்கள்” என்னக்கடவதன்றோ. இனம் வேல் கண் நல்லீர்க்கு இவை என் சொல்லுகேன் – இவள் நிலை எவ்வளவாய்த் தலைக்கட்டுகிறது என்று, வேல் ஒழுங்கு போலே கூர்க்கப் பார்த்துக்கொண்டிருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்? ஏன் தான், சொல்ல அருமை என்? என்ன, இனம் வேல் கண்ணி என்மகள் உற்றன-தன் கண்களுக்கு இலக்கானார் படுமதனைத் தான் படுகிறபடியைச் சொல்லப் போமோ? 4“உயிர்காமின்கள் ஞாலத்துள்ளே” என்பதே அன்றோ இவள் கண்களுக்கு இலக்கானார் படுவது.

கிருஷ்ண செஷ்டிதங்கள் செய்தேனும் யானே
வேய் மூங்கில் உள்ள மலையை ஏந்தினேன்
ஏறுகள் இனம் நப்பின்னை பிராட்டுக்கு கன்று மேய்தவனும் நானே பசுக்களை ரஷித்து
இடையவர் தலைவனும் நானே
அணுக்கன் -குடை கவிந்து பிடித்தால் போலே கோவர்த்தன மலையை ஏந்தி
இனம் ஏறுகள் -செற்றேனும் யானே -யமன் போல -ஊட்டியாக கழுத்து உடன் சேர்த்து
என்னோடு ஒத்த கன்றுகளை மேய்தவனும் யானே
ஆநிரை காத்தவனும்
கன்று மேய்த்து பிரமச்சர்யம் பின்பு கிரகஸ்தன் பசுக்களை மேய்த்து

வத்ஸ மத்யகதம் பாலம் நீலோத்பல தளச்சவிம்” என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா.-  5. 17 : 19.

2. “தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர்நடை இட்டு வருவான்” என்பது,  பெரியாழ்வார் திருமொழி.

ஆயர் தலைவனும் நானே
தீம்புகள் செய்வதில் -மிக்கு -அனைவர் செய்யும் தீம்புகளையும் செய்து
நித்ய சூரிகள்  இனத்தே வர் -அபேஷையே இல்லாதவர் -தன்னைப் போலே –
இனத்தேவர் -கூட்டம் -தனியாக அனுபவிக்க முடியாமல் -இனம் இனமாய் இமையோர்கள் ஏத்த
திரளாய் இருந்து அடியார்கள் குழாம் கலை உடன் கூடுவது என்று கொலோ

“கடாவிய வேகப் பறவையின் பாகன் மதனசெங்கோல்”
நடாவிய கூற்றம் கண்டீர் உயிர் காமின்கள் ஞாலத்துள்ளே”-  என்பது, திருவிருத்தம் 6.

கூர்ந்து பார்த்து கொண்டு இருக்கும் உங்களுக்கு எத்தை சொல்வேன்
அழகான கண்ணை உடைய எனது மகளை அடைய அவன் துக்கப் பட இருக்க
இவள் துக்கம் படுகிறாளே -சொல்லப்போமோ
உயிர் காத்து கொள்ளும் -போலே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

 திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்
திறம்பாமல் மலைஎடுத் தேனே என்னும்
திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும்
திறங்காட்டி அன்றைவரைக் காத்தேனே என்னும்
திறம்பாமல் கடல்கடைந் தேனே என்னும்
திறம்பாத கடல்வண்ணன் ஏறக் கொலோ?
திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல் லுகேன்?
திறம்பாது என்திரு மகள் எய்தினவே.

 

    பொ-ரை :- நன்னெறியினின்றும் ஒருவரும் பிறழாதவாறு உலகத்தை எல்லாம் காக்கின்றவன் யானே என்னும், தளர்ச்சி இல்லாமலே கோவர்த்தனம் என்னும் மலையை எடுத்தேன் என்னும், தப்பாதபடி அசுரர்களைக் கொன்றேன் என்னும், திறமைகளைக் காட்டி அக்காலத்தில் பாண்டவர்களைக் காப்பாற்றினேன் என்னும், தப்பாமல் சமுத்திரத்தைக் கடைந்தேன் என்னும், தன்விதிகளை ஒருவரும் தப்ப ஒண்ணாதவாறு இருக்கின்ற கடல்வண்ணனாகிய சர்வேச்வரன் ஆவேசித்தானோ? பகவானுடைய குணங்களில் நின்றும் மீளாதவாறு என்மகள் எய்தியவற்றை, கேட்டு அல்லது மீளாத உலகத்தார்க்கு எதனைச் சொல்வேன்?

ஈடு :- ஐந்தாம் பாட்டு. உலகத்தைப் பாதுகாத்தல் தொடக்கமான செயல்களை எல்லாம் செய்தேன் நான் என்னாநின்றாள் என்கிறாள்.

திறம்பாமல் மண்காக்கின்றேன் யானே என்னும்-1ஒருவர் கூறை எழுவர் உடாதபடி, “இந்தப் பரமாத்மாவினிடமிருந்து பயந்து காற்று வீசுகிறது” என்கிறபடியே, பூமியை நோக்குகிறேன் நான் என்னும். திறம்பாமல் மலை எடுத்தேனே என்னும் – ஒரு பசுவின் மேலாதல், ஓர் ஆயன் மேலாதல் ஒரு துளிபடாதபடி கோவர்த்தனகிரியைத்தரித்துப் பாதுகாத்தேனும் நான் என்னாநின்றாள். திறம்பாமல் அசுரரைக் கொன்றேனே என்னும் – அசுரர்களுடைய கூட்டத்தைத் தப்பாதபடி அறுத்துப் போகட்டேன் என்னும். திறம் காட்டி அன்று ஐவரைக் காத்தேனே என்னும் – 1உலகத்தில் என்படிகளைக் காட்டி, பகலை இரவாக்கியும், ‘ஆயுதம் எடேன்’ என்று ஆயுதம் எடுத்தும், பகைவர்களுடைய உயிர்நிலையைக் காட்டியும் இப்படி அன்று பாண்டவர்கள்மேல் அன்பு வைத்து அவர்களைக் காப்பாற்றினேனும் நான் என்னாநின்றாள். “கிருஷ்ணா! வெற்றியையாவது இராச்சியத்தையாவது நான் விரும்பவில்லை” என்ற அருச்சுனனை, “இப்போதே போரைச் செய்ய வேணும் என்கிற உன்னுடைய வார்த்தையை நிறைவேற்றி விடுகிறேன்” என்னச் செய்தானே அன்றோ. திறம்பாமல் கடல் கடைந்தேனே என்னும்-ஒருதாழிக்கு உட்பட்ட தயிரை ஒன்றும் பிரிகதிர்ப்படாதபடி கடைவாரைப் போலே, சமுத்திரம் என்கிற மஹாதத்துவத்தின் நடுவே மந்தரத்தை நட்டுக் கடைகிற இடத்துக் கீே்ழ விழுதல் மேலே கொந்தளித்தல் செய்யாதபடி கடலைக் கடைந்தேனும் நான் என்னும். திறம்பாத கடல்வண்ணன் ஏறக்கொலோ – தன் சாசனத்தை ஒருவரால் தப்ப ஒண்ணாதபடியாயிருக்கிற, அளவிட்டு அறிய ஒண்ணாத தன்மையனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? திறம்பாத உலகத்தீர்க்கு என்சொல்லுகேன் – கேட்டு அல்லது கால்வாங்கோம் என்று இருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது. திறம்பாது என் திருமகள் எய்தின – திருமகளை ஒத்த என் மகள், ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாதபடி அடைந்தவற்றை நான் எதனைச் சொல்லுவது? 1ஆழங்காலிலே இழிந்தார்படியைக் கரையிலே நின்றாராலே சொல்லப்போமோ.

“திறம்பாமல்” என்பதற்கு, ஒருவர் நிமித்தமான அச்சத்தாலே ஒருவர்
அஞ்சாதபடி என்று பொருள்கூறத் திருவுள்ளம்பற்றி
அதனைஅருளிச்செய்கிறார் ‘ஒருவர்’ என்று தொடங்கி. ஒருவர் கூறை
எழுவர் உடுக்கையாவது, ஒருவன் கையில் உள்ள புடைவையை ஒருவன்,
அவன் கையிலுள்ள அதனை வேறு ஒருவன் பறிக்க, இப்படியே ஏழு
பேராகப் பறித்து உடுத்தல். இது, எளியாரை வலியார் வருத்துவதற்குத்
திருஷ்டாந்தம். இப்படி, எளியாரை வலியார் வருத்தாதபடி அவர் அவர்கள்
மரியாதைகளிலே நிறுத்திப் பூமியைக் காக்கிறேன் என்றபடி.

திறம்பாமல் -தப்பாமல் மண் காத்து
திறலை காட்டி –

றம் காட்டி-பக்ஷபாத பிரகாரங்களைக் காட்டி என்னுதல். திறம் என்று
சமூகமாய், தத்துவ விவேகம் தொடங்கிப் பிரபத்தி முடிவாகவுள்ள அர்த்த
சமூகங்களைக் காட்டி என்னுதல். இந்த இரண்டு பொருள்களையும் முறையே
அருளிச்செய்கிறார் ‘உலகத்தில்’ என்று தொடங்கியும், ‘கிருஷ்ணா!’ என்று
தொடங்கியும்.

“நகாங்க்ஷே விஜயம் க்ருஷ்ண நச ராஜ்யம் ஸுகாநிச
கிம்நோ ராஜ்யேந கோவிந்த கிம் போகை: ஜீவிதேநவா”

“நஷ்டோ மோஹ: ஸ்மிருதி: லப்தா த்வத் ப்ரசாதாத் மயாஅச்யுத
ஸ்திதிஸ்மி கதஸந்தேஹ: கரிஷ்யே வசனம் தவ”-என்பன, ஸ்ரீகீதை. 1 : 32, 18 : 73.

ஒருவர் கூறை எழுவர் -உடுக்காமல் அனைவருக்கும் உடுக்கை
இது எளியாரை வலியார் பாதிக்க திருஷ்டாந்தம்
சிறியதை பெரியார் வலியாதபடி -அராஜாகம் -இல்லாதபடி திறம்பாமல் மண் காத்து
பீஷாத்மா -பயத்தால் -காற்று வீச -கட்டளை இட்டு –
சூரியன் சரியாக -உதித்து -ஸ்ரீ ரெங்க பஞ்சாங்கம் பார்த்து செய்கிறான் -காஞ்சி ஸ்வாமி அருளி
திறம்பாமல் -கோவர்த்தன கிரியை -தரித்து பசு இடையர் மேல் விழாமல் -விசேஷ ரஷணம்
அசுரரை -கொன்றேன் திறம்பாமல்
திறம் காட்டி ஐவரை ரஷித்து
லோகத்தில் எனது படியைக் காட்டி –
பகலை -இரவாக்கி -அஸ்தமிக்கும் முன்பே
ஆயுதம் எடேன் என்று ஆயுதம் எடுத்து
கிர்த்ரிமம்
சத்ருக்கள் உயிர் நிலை காட்டி -அஸ்வத்தாமா ஹதா சொல்ல சொல்லி
கர்ணன் மார்பில்
ஜெயதரன் தலை ரிஷி மடியில் விழ வைக்க -தகப்பனார் -தலை விழுந்தால் தலை வெடிக்கும் –
ஐவரை காக்க பலவும் காட்டி –
பஷ பதித்து ரஷித்து
அர்ஜுனன் -யுத்தத்தில் ஓட -செய்ய வைத்தானே
ஜெயமே வேண்டாம் போனவனை கீதை உபதேசித்து கரிஷ்யே வசனம் தவ சொல்ல வைத்தான்

கடல் கடைந்து -தாளிக்கு உட்பட்ட தயிரை கடைவது போலே சிந்தாமல் கடைந்து
மந்த்ரத்தை நட்டு கடைந்து –
திறம்பாத கடல் வண்ணன் -சாசனம் யாராலும் தப்ப ஒண்ணாத
திறம்பாத உலகத்தீர் -கேட்டு அல்லது போக மாட்டாத உங்களுக்கு
என் திரு மகள் -ஹிதம் சொல்லி மீட்க ஒண்ணாத படி
உள்ளே இறங்கினவள் கடல் கரையில் இருந்து பேச முடியுமா
அனந்தாழ்வான் என் திருமகள் பெயர் வைத்து

 

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

செய்கின்ற கிதிஎல்லாம் யானே என்னும்
செய்வான்நின் றனகளும் யானே என்னும்
செய்துமுன் இறந்தவும் யானே என்னும்
செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்
செய்வார்களைச் செய்வேனும் யானே என்னும்
செய்ய கமலக்கண்ணன் ஏறக் கொலோ?
செய்ய உலகத்தீர்க் கிவைஎன் சொல்லுகேன்?
செய்ய கனிவாய் இளமான் திறத்தே.

பொ-ரை :- செய்துகொண்டிருக்கின்ற காரியங்கள் எல்லாம் யானே என்னும், இனிமேல் செய்யப்படுவனவாக நிற்கின்ற காரியங்களும் யானே என்னும், முன் செய்து கழிந்துபோன காரியங்களும் யானே என்னும், காரியங்களின் பயன்களை அனுபவிக்கின்றவனும் யானே என்னும், அந்தக் காரியங்களைச் செய்கின்றவர்களைப் படைக்கின்றவனும் யானே என்னும், செந்நிறம் பொருந்திய தாமரை போன்ற திருக்கண்களையுடைய சர்வேச்வரன் ஆவேசித்தானோ? நன்மை அல்லது அறியாத இந்த உலகத்தார்க்கு, சிவந்த கோவைக்கனி போன்ற இளமை பொருந்திய மான் போன்ற இப்பெண் விஷயத்தில் எதனைச் சொல்லுவேன்?

ஈடு :- நான்காம் பாட்டு. முக்காலத்திலும் உண்டான காரியங்களின் கூட்டம் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள்.

செய்கின்ற 1கிதி எல்லாம் யானே என்னும், செய்வான் நின்றனகளும் யானே என்னும், செய்து முன் இறந்தவும் யானே என்னும் – நிகழ்காலத்தில் நடக்கும் காரியக்கூட்டம், செய்யக்கடவதாய் நிற்கிற காரியக்கூட்டம், முன்பு செய்துபோன காரியக்கூட்டம் இவை அடைய நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். செய்கைப் பயன் உண்பேனும் யானே என்னும் – 2“நானே பஞ்ச மஹா யஜ்ஞம் முதலிய எல்லா நித்திய கர்மங்களின் பயனைப் புசிப்பவனும்” என்னாநின்றாள். அன்றிக்கே, கிரியைகளின் பலன்களை அநுபவிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு என்னா நின்றாள் என்னுதல். அன்றிக்கே, செய்கையாகிற கிரியையும், பலத்தை அநுபவிக்கின்றவனும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள் என்னுதல். செய்வார்களைச்செய்வேனும் யானே என்னும் – 1கிரியைகளின் கர்த்தாக்களை இடுவித்து அவற்றைச் செய்விக்கின்றவனும் யானே என்னும். அன்றிக்கே, அவர்கள் இவற்றைக்கொண்டு என்னை அடையும்படி செய்வேனும் யானே என்னும் என்னுதல். செய்ய கமலக்கண்ணன் ஏறக்கொலோ – கரிய கண்ணையுடையவளான தன்மை நீங்கி, புண்டரீகாக்ஷன் படியாய் விட்டது. என்றது, மையக்கண்ணாளான தன்மை போய், 2செய்யகோலத் தடங்கண்ணன்படியாய் விட்டது என்றபடி. செய்ய உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் – சொல்ல முடியும், முடியாது என்று அறியாதே, சொல்லு, சொல்லு என்று என்னை அலைக்கிற 3படுபாடரான உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது? செய்ய கனிவாய் இளமான் திறத்தே-4அநுகாரத்தாலே புணர்ச்சி சமயத்திற் போலே இருக்கிற இவள், உதடு செவ்விபெற்று வரும்படி வேறுபட்டவளாய், மிக இளையளாய் இருக்கிறபடி நான் எதனைச் சொல்லுவது. 5பிரிவில் வெளுத்திருக்கை தக்கதாக இருக்க, இவள் உதடு செவ்விபெற்று வருகின்றதே அன்றோ அநுகாரத்தால் வந்த தரிப்பாலே. சிவந்த கனி போலே இருக்கிற உதட்டினையுடையளாய், இளையமான் போலே பேதையான இவள் இடையாட்டத்தே.

செயல்கள் எல்லாம் நான் இட்ட வழக்கு என்கிறாள்
கிறி -கிரியை
செய்கின்ற-நிகழ காலம்  -செய்வான் எதிர்காலம் -இறந்த காலம் –
செய்ய கமலக் கண்ணன் ஆவேசித்தானோ

செய்கைப்பயன் உண்பேனும் யானே என்னும்” என்பதற்கு, மூன்று
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். அவற்றில், முதற் பொருளை
‘நானே’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

“அஹம் ஹி ஸர்வயஜ்ஞானாம் போக்தாச ப்ரபுவே ச
நது மாம் அபிஜாநந்தி தத்வேந அத: ச்யவந்தி தே”-என்பது, ஸ்ரீகீதை. 10 : 25.

உண்பேனும்  யானே என்னும் -போக்தாவும் அவனே
செய்கையாகிய கிரியையும் பலனும் நானே என்கிறாள்
பிரயோஜனமும் நானே -அவன் தான் நிர்ணயம்
ஜ்யோதிஷ்ட யாகம் பண்ணினால் ஸ்வர்க்கம் கிடைக்கும் என்று நிர்ணயித்ததால்
செய்வர்களை செய்வேனும் யானே –
இவற்றை கொண்டு என்னை ஆஸ்ரயிக்க
பன்னினவனும் இவள் மையார் கரும் கண்ணி -புண்டரீகாட்ஷன் படி ஆனாள்
செய்ய கோல தடம் கண்ணன் படியாக ஆனாஎன்று -செய்ய -உலகத்தீர்
விஷயம் அறிய -சுமந்த்ரன் வார்த்தை -கைகேயி -தாயார் எறும்பு பேச கேட்டு –
சொல்லு -சொன்னால் தலை -வெடிக்கும் –கேட்கலாம்
தெரியாமல் இருந்தால் எனது தலை வெடிக்கும் -அவளுக்கு பிறந்த பெண் நீ என்கிறான் சுமந்த்ரன்
படுத்தும் உங்களுக்கு எத்தை சொல்வது
செய்ய கனி வாய் இள மான் -சம்ச்லேஷத்தில் இருப்பது போலே
விரகத்தில் வெளுக்காமல் -அனுகாரத்தால் கூடி இருக்கும் -பாவம் அடைந்து
செவ்வி -பெற்று
இள மான் படியை என்ன சொல்வது

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

காண்கின்ற நிலமெல்லாம் யானே என்னும்
காண்கின்ற விசும்பெல்லாம் யானே என்னும்
காண்கின்ற வெம் தீஎல்லாம் யானே என்னும்
காண்கின்றஇக் காற்றெல்லாம் யானே என்னும்

காண்கின்ற கடலெல்லாம் யானே என்னும்
காண்கின்ற கடல்வண்ணன் ஏறக் கொலோ?
காண்கின்ற உலகத்தீர்க் கென்சொல் லுகேன்?
காண்கின்ற என்காரிகை செய் கின்றவே.

பொ-ரை :- பார்க்கப்படுகின்ற பூமி முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற ஆகாய முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற கொடிய நெருப்பு முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற இந்தக் காற்று முழுதும் யானே என்பாள், பார்க்கப்படுகின்ற கடல் எல்லாம் யானே என்பாள், காட்சிக்கு இனியதான கடல் போன்ற நிறத்தையுடைய சர்வேச்வரன் ஆவேசித்தானோ? எல்லாவற்றையும் காணவல்ல என்மகள் செய்கின்றவற்றை, காண்கின்ற உலகத்தை ஒழிய வேறு ஒன்றனையும் அறியாத உங்களுக்கு எதைச் சொல்லுவேன்?

ஈடு :- மூன்றாம் பாட்டு. 1காரணமான மண் முதலான பூதங்கள் ஐந்தும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

காண்கின்ற நிலம் எல்லாம் யானே என்னும்-2காணப்புக்கால் கண்டதாய்த் தலைக்கட்ட முடியாதபடியான பரப்பையுடைத்தான பூமி எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். இப்படி இருக்கிற இதுதான் காரிய உருவமாக இருக்கின்ற மண்ணே அன்றோ, கண்களுக்குத் தோற்றுகிற இது இவ்வளவானால், இதற்குங்கூடக் காரணமாய்த் தான் சாஸ்திரம் கொண்டு அறிய வேண்டும்படி இருக்குமது இவ்வளவு அல்லவே அன்றோ. காண்கின்ற விசும்பு எல்லாம் யானே என்னும்-காணப்புக்கால் கண்டதாய்த் தலைக்கட்ட முடிய ஒண்ணாதபடியாய், இது தனக்குங் கூட இடத்தைக் கொடுக்கிற ஆகாயமும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். காண்கின்ற வெம் தீ எல்லாம் யானே என்னும் – அப்படிப்பட்ட ஒளியுள்ள பொருளும் நான்

இட்ட வழக்கு என்னாநின்றாள். காண்கின்ற 1இக்காற்று எல்லாம் யானே என்னும் – பரிசம்கொண்டு அறியும்படி இருக்கிற காற்றும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள். காண்கின்ற கடல் எல்லாம் யானே என்னும்-காண்பார்க்குக் கண்டதாகத் தலைக்கட்ட முடியாதபடியான கடல் எல்லாம் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள்.

காண்கின்ற கடல்வண்ணன் ஏறக்கொலோ-காணப்புக்கால் கண்டதாக மீள ஒண்ணாதபடியான கடல் போலே சிரமஹரமான வடிவையுடைய சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? காண்கின்ற உலகத்தீர்க்கு என் சொல்லுகேன் – நீங்களும் என்னைப் போன்று காணாநின்றீர் கோளாகில், உங்களுக்கு நான் என்ன பாசுரமிட்டுச் சொல்லுவது; 2சொல்ல ஒண்ணாமைக்கு உங்களோடு என்னோடு வாசி உண்டோ? 3காண்கின்ற என் காரிகை செய்கின்றவே – “வேத வாக்குகள் மனத்தாலுங்கூட நினைக்க முடியாதபடி எந்தப் பரம்பொருளிடமிருந்து திரும்புகின்றனவோ” என்கின்ற அளவிட்டு அறிய முடியாத விஷயத்தை உட்புக்குப் பேசுகின்ற என் பெண்பிள்ளை செய்கிற இதனை நான் சொல்லுவது என்?

பஞ்ச -பூதங்கள் ஜகத்துக்கும் காரணம் நானே என்கிறாள் பூத பஞ்சகங்கள் -என்பர் நம் சம்ப்ரதாயத்தில்

ஜகத் முதல் பாசுரத்தில் -அருளி அவற்றுக்கு காரணமான பூத பஞ்சகங்கள் இதில் அருளி
காண்கின்ற -நிலம் விசும்பு வெந்தீ காற்று கடல் ஜல -தத்வம்
காண்கின்ற -கண்டு கொண்டே இருக்கின்ற -கண்டு தலைக்கட்ட முடியா விஸ்தீரணம்
500 கோடி சதுர mile பரப்பு -நிலம் எல்லாம் நான் -என்னுடைய அதீனம்
கார்ய ரூபேண பிர்த்வி -கண்ணால் காண முடியுமே
இதுக்கும் கூட காரணம் ஆக இருக்கும் -பஞ்சீ கரணம் முன்பு சாஸ்த்ரத்தால் தானே அறிய முடியும்
அது இத்தை விட விஸ்தீரணம்
விசும்பு -காண புக்கால் -பிரித்விக்கும் இடம் கொடுக்கும் விஸ்தீரணம் -இதுவும் நான் இட்ட வழக்கு
தேஜஸ் தத்வமும் அப்படி
ஸ்பர்சம் கொண்டு அறிய -காண்கின்ற காற்று -காற்றும் –
பிரத்யட்ஷம் ஐந்து இந்த்ரியங்கள் கொண்டு அறிவது
வாயுவும் பிரத்யட்ஷம் தானே இதனால்

கடல் எல்லாம் -இதுவும் கண்டு தலைக்கட்ட முடியாத –
ஸ்ரமஹரமான கடல் -வண்ணன் -சர்வேஸ்வரன்
காண்கின்ற உலகோருக்கு என்ன சொல்வேன்
நீங்களும் என்னோடு ஒக்க காண்கிறீர்கள்
சொல்ல முடியவில்லை இருவருக்கும்
காண்கின்ற -இக்காரிகை உள் புக்கு -பேசுகிற உள்ளபடி அறிந்த
வேதங்களும் காண முடியாமல் திரும்பிய பகவத் விஷயத்தை உள்ளபடி அறிந்த பெண்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

கற்குங் கல்விக்கும்எல்லை இலனே என்னும்
கற்கும் கல்விஆவேனும் யானே என்னும்
கற்கும் கல்விசெய்வேனும் யானே என்னும்
கற்கும் கல்விதீர்ப்பேனும் யானே என்னும்
கற்கும் கல்விச்சாரமும் யானே என்னும்
கற்கும் கல்வி நாதன்வந்து ஏறக்கொலோ?
கற்கும் கல்வியீர்க்கு இவைஎன் சொல்லுகேன்?
கற்கும் கல்வி என்மகள் காண்கின்றவே.

பொ-ரை :- கற்கப்படுகின்ற கல்விக்கு எல்லையை உடையேனல்லேன் என்னா நின்றாள், கற்கும் கல்வியாக இருப்பேனும் யானே என்பாள், கற்கும் கல்வியை உண்டாக்குகின்றவனும் யானே என்பாள், கற்கும் கல்வியினுடைய தாத்பர்ய அர்த்தத்தை அறுதியிடுகின்றவனும் யானே என்பாள், கற்கும் கல்வியினுடைய சாரமாகிய மந்திரங்களும் யானே என்பாள், கற்கும் கல்வியினாலே சொல்லப்படுகின்ற சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? பகவத்விஷயம் என்றால் இன்று கற்க வேண்டியிருக்கிற உங்களுக்கு, இன்று வார்த்தை கற்கும்படியான பருவத்தையுடைய என்மகள் கண்டு சொல்லுகின்றவற்றை என் சொல்லுவேன்?

ஈடு :- இரண்டாம் பாட்டு. எல்லாக் கல்விகளால் அறியப்படுதலும் அக்கல்விகளைப் பரப்புதல் முதலான செயல்களும் நான் இட்ட வழக்கு என்கிறாள்.

கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும் – அல்ப காலத்துக்குள்ளே சாந்தீபனியோடே நான் கற்ற பரப்புக்கு ஓர் எல்லை இல்லை என்னா நின்றாள். அன்றிக்கே, 1“ஆனந்த குணத்தைக் கூறமுடியாமல் அவனிடமிருந்து வேத வாக்குக்கள் மீண்டன” என்கிற சுருதிக்கு நிலம் அன்றிக்கே இருக்கிறேன் நான் என்னாநின்றாள் என்னுதல். என்றது, கற்கும் கல்வியினுடைய எல்லைக்குள்ளே நிற்கிறேன் அல்லேன் நான் என்கிறாள் என்றபடி. அன்றிக்கே, 2“வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கை” என்கிறபடியே, வேதாந்தங்களாலே அறியப்படுமவன் நான் என்கிறாள் என்னுதல். கற்கும் கல்வி ஆவேனும் யானே என்னும் – 3அவற்றால் அறியப்படாமல் இருக்கிற அளவேயோ, 4“நீரே கல்வி” என்கிறபடியே, அவை தாம் என் அதீநம் அலவோ என்னாநின்றாள். கற்கும் கல்வி செய்வேனும் யானே என்னும்-அந்தக் கல்விகளை 5அவ்வக்காலங்களில் உண்டாக்குவேனும் நான் என்னாநின்றாள். கற்கும் கல்வி தீர்ப்பேனும் யானே என்னும் – அவற்றின் சந்தேகங்களைத் தீர்த்துத் தாத்பர்ய நிர்ணயம் செய்வேனும் நான் என்னாநின்றாள். 1பரக்கக் கற்றுவைத்தே “சூந்யமே தத்துவம்” என்கிறார் உளரே அன்றோ. அன்றிக்கே, கற்கின்றவர்களும் கற்பிக்கின்றவர்களும் நான் இட்ட வழக்கு என்னாநின்றாள் என்னுதல். ‘தீர்ப்பேன்’ என்ற சொல், 2இப்பொருளைக் காட்டுமோ? என்னில், தீர்க்கையாவது, அவற்றினுடைய எல்லைகாண்கை அன்றோ. கற்கும் கல்விச் சாரமும் யானே என்னும் – அக்கல்வியினுடைய 3சாரமான பிரயோஜனமும் நான் என்னாநின்றாள். கற்கும் கல்விநாதன் வந்து ஏறக்கொலோ – எல்லாக் கல்விகளாலும் அறியப்படுகின்ற சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? கற்கும் கல்வி உலகத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் – இப்போது கற்று அறியவேண்டும்படி, பகவத் விஷயத்தில் 4ஒவ்வோக் குழியிடாதே இருக்கிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவது? 5கற்கும் கல்வி என்மகள் காண்கின்றவே – சொன்ன வார்த்தையைச் சொல்லுமித்தனைபோக்கி, தானாக ஒரு வார்த்தை சொல்லமாட்டாத அளவாயிருக்கிற இவள், இவ்விஷயத்திலே இறங்குகிற எல்லையை, நான் எதனைச் சொல்லுவது?

“யதோ வாசோ நிவர்த்தந்தே அப்ராப்ய மனஸா ஸஹ”-என்பது, தைத்திரீய, ஆனந். 9 : 1.

2. “கற்கும் கல்விக்கு எல்லை இலனே என்னும்” என்பதற்கு, மூன்று
வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். மூன்றாவது பொருளில் எல்லை
என்பது, வேதாந்தமாய், இல் என்று இருப்பிடமாய், வேதாந்தத்தை
இருப்பிடமாக உடையவன் என்பது, சொற்பொருள். வேதாந்த வேத்யன்
என்றபடி.

மாலிருஞ் சோலையென்னும் மலையையுடைய மலையை
நாலிரு மூர்த்திதன்னை நால்வேதக் கடலமுதை
மேலிருங் கற்பகத்தை வேதாந்த விழுப்பொருளின்கற்கும் கல்வி ஆகிறவன் இவனே என்னுமதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘நீரே கல்வி’ என்று.

“த்வமேவ மாதாச பிதா த்வமேவ த்வமேவ பந்துஸ்ச குரு: த்வமேவ
த்வமேவ வித்யா த்ரவிணம் த்வமேவ த்வமேவ ஸர்வம் மம தேவதேவ”-என்பது, சுலோகம்.

சகல வித்யை நானே என்கிறாள் இதில்
கற்கும் கல்விக்கு எல்லை இல்லாதவன் எம்பெருமான் –
சகல வித்யா வேதனமும் -அறிதல் பிரவர்தகம் பரப்புதல் நானே என்கிறாள்
சாந்தீபன் இடம் 64 நாள் கற்றவர் -அனைத்தையும் -கற்று
கற்கும் கல்விக்கு எல்லை இல்லை
அன்றிக்கே
கற்கும் கல்வி விஷயத்துக்கு இவன் நிலம் அன்றிக்கே இருக்கிறான்
வேதத்தாலும் முழுவதாக அறிய முடியாத எம்பெருமான்
வேதாந்த விழுப் பொருளின் மேல் இருக்கிறவன் -வேதாந்த்ய வேத்யன்
இலன் -அகத்தில் இருக்கிறவன் அகத்திலன்
மூன்று அர்த்தங்கள்

அவைகள் என்னிடம் அகப்பட்டு எனது ஆதீனம்
அவனே வித்யை
கல்வி -செய்வேனும் உண்டாக்கி அந்த காலத்தில் –
cycle உண்டாகி ஓட்ட கற்றுக் -கொடுத்து
car உண்டாக்கி ஓட்ட கற்றுக் கொடுத்து –
சேதனன் மூலம் -அறிவித்து -அந்த காலத்தில் -அறிவித்து
சம்சயங்களை தீர்த்து -யானே
பரக்க கற்று வைத்து சூன்யம் என்பாரும் உண்டே
தீர்ப்பேன் -கற்றவரும் கற்ப்பிப்பவரும் எனது ஆதீனம்
தீர எல்லை காண்பேனும் நானே ஓலை சுவடி எழுதுவார் இல்லையே இப்பொழுது
ஞானக் கலைகள் அழிப்பவனும் அவனே –
வித்யைகள் சாராம்சமும் நானே
நாதன் -அறியப்படுவவன் சர்வேஸ்வரன்
அறிய வேண்டும் படி -கற்க ஆரம்பிக்கிறவர்கள் -உங்கள் இடம் என்ன சொல்வேன்
பகவத் விஷயம் அறியாத -இனி மேல் கற்று அறிய வேண்டும்படி
அஷராப்யாசம் -பிரணவம் -குழியாக எழுதுவது

அஷாராப்யாசம் கூட செய்யாத உங்களுக்கு எத்தை சொல்வது
கற்கும் கல்வி என் -மகள் சந்தை சொல்லிக் கொண்டு -இருக்கிறாள் அவன் சொல்வதை திரும்பி சொல்லிக் கொண்டு
எல்லையை எத்தை சொல்லுவேன்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-6-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 8, 2013

ஆறாந்திருவாய்மொழி – “கடல்ஞாலம்”

முன்னுரை

    ஈடு :- 1மேல் திருவாய்மொழியிலே பிரீதியும் பிரீதி இன்மையும் சமமாக அன்றோ சென்றன; இரண்டுமாய்க் கலந்து சென்றால் பிரீதியாலே தலை எடுக்கவும் ஆம் அன்றோ, அது செய்யாதே, புண்ணியத்தின் குறைவால் பிரீதி இன்மை ஒன்றே தலை எடுத்தது; ஆகையாலே, மேல் உருவெளிப்பாட்டாலே அவனை நினைத்துத் தரித்தது ஒரு நிலையும் போய், அலாபத்தால் வரும் துவட்சியே ஆயிற்று; இப்படித் துவண்ட இவள், பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கப் பார்க்கிறாள் இத்திருவாய் மொழியில்.

ஒவ்வோர் அர்த்தத்தைப்பற்றி உபந்யாசங்கள் செய்ய இருப்பாரைப் போலே ஞான முத்திரையும் தானுமாய்க் கீதோபநிடத ஆசாரியனைப் போலே இருந்தாள்; இதனைக் கண்ட திருத்தாயார், ‘இது ஏதேனும் மணிமந்திர ஒளஷதம் முதலியவைகளாலே வந்த விகாரமோ’ என்று ஐயங்கொண்டு, அத்தன்மைகள் காணாமையாலே ‘அவை அல்ல’ என்று அறிந்தாள். இனி, 2‘அவனைப் பிரிகையாலே வந்த ஆற்றாமையாலே அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று தெளிய மாட்டுகின்றிலள் தன் கலக்கத்தாலே. இவ்வளவிலே புகுந்து ‘இதுதான் என்?’ என்று வினவப் புகுந்த 3உறவினவர்களைப் பார்த்துத் திருத்தாயார், அவனுடைய வார்த்தைகளைப் பேசுகையால் வந்த ஒற்றுமையாலும், ஞானமுத்திரை பார்வை முதலியவைகள் இருந்தபடியாலும், சர்வேச்வரன் இவள்பக்கல் ஆவேசித்தானாக வேணும் என்று சொல்லுகிறாள், ‘அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறியமாட்டாமையாலே.பிரிவாற்றாமை உண்டானால் அநுகரித்துத் தரிக்கக்கடவதன்றோ. ஸ்ரீகிருஷ்ணனை அநுகரித்தார்களே அன்றோ திருவாய்ப்பாடியில் பெண்கள்; “கிருஷ்ணோஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்ய தாம்கதி: – நான் கிருஷ்ணன், நடைச்சக்ரவத்துப் பிடிக்க வேண்டும்படியாக இங்ஙனம் நடக்கப் புகுகின்றேன்; கண் படைத்தார் முழுதும் கண்டு கொள்ளுங்கோள் என்றாளே அன்றோ. துஷ்ட காளீய திஷ்ட அத்ர – ஒருத்தி காளியனாய்க் கிடக்க, ஒருத்தி கிருஷ்ணனாய் ஏறி ஆடினாளே அன்றோ;” 2பிரதிகூலனான காளியன் ஆனால் ஆகாதோ கிருஷ்ணனாகத் தன்னை அநுகரிக்கிற பெண்ணின் பொடிபடப்பெறில் என்று இருந்தாள்; கிருஷ்ணனானவள் தானும் இவளைக் ‘காளியன்’ என்றே நினைத்துக் கண்ணறத் துகைத்தாளே அன்றோ அநுகாரத்தின் மெய்ப்பட்டாலே. 3அவர்கள் ஓர் அவதாரத்திலே அநுபவிக்கையாலே அங்குள்ள செயல்களை அநுகரித்தார்கள்; இவள் மயர்வறமதிநலம் அருளப்பெற்றவள் ஆகையாலே உபயவிபூதிகளையுமுடையவனை அநுகரிக்கிறாள்.இங்கு, கால், நடைதாராமையாலே அங்குப்போலே சரீரத்தால் செய்யப்படுகின்ற அநுகாரம் அன்று, வாசிக மாத்திரத்தாலே ஆயிற்று அநுகரிக்கிறது.

ஆக, 2‘பிறப்பே பரதந்திர ஜன்மத்திலே பிறந்தவள், பிறப்பே ஸ்வதந்திரனானவன் வார்த்தையும் சொல்லா நின்றாள், பெண்தன்மைக்கு எல்லையான இவள், புருஷோத்தமன் சொல்லும் வார்த்தைகளையும் சொல்லா நின்றாள், அறிவிற்கு 3விஷயம் வியவஸ்திதமாக இருக்க, சர்வஜ்ஞன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லா நின்றாள்’ என்று கொண்டு, இவள் செய்கிறபடிகளைத் திருத்தாயார், வினவப் புகுந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

4மேல் திருவாய்மொழியிலே, உருவெளிப்பாட்டாலே அநுபவித்தது விக்கிரஹ வைலக்ஷண்யத்தை அன்றோ, அந்த விக்கரஹமே அன்றோ பற்றத் தகுந்தது; இதில், அங்ஙனம் பற்றத் தகுந்த விக்கிரஹத்துக்கும் உள்ளான ஸ்வரூப வைலக்ஷண்யத்தைச் சொல்லுகிறது; அதனை அன்றோ பாவித்தது. 5பாவனையின்  மிகுதியாலே,“சர்வேச்வரனுடைய குணங்களைப் போன்ற குணங்களை அடைந்த ஒருசேதனன் முக்திதசையில் பரமாத்மாவோடு பேதம் அற்றவனாகிறான்” என்றும், 2“பிரஹ்மத்தைச் சாக்ஷாத்கரித்த வாமதேவ ருஷியானவர், நான் மநுவாக ஆனேன், சூரியனாகவும் ஆனேன் என்று எண்ணினார்” என்றும், “என்னிடத்திலிருந்து எல்லாப் பொருள்களும் உண்டாயின, அநாதியான என்னிடத்திலேயே எல்லாம் லயம் அடைகின்றன” என்றும், அவனாகப் பாவித்தால் பின்னை அவன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்லலாய் இருக்குமே அன்றோ. அப்படியே, 3விபூதி அத்தியாயத்தில் அவன் சொன்னபடிகளைப் பெரும்பாலும் அநுகரிக்கிறாள். 4அதர்வ சிரஸ்ஸிலே, சிவன் தன் வைபவத்தைப் பரக்க நின்று பேசினான், தனக்கு அடங்காத ஐஸ்வர்யமாயிருந்தது, இவன் இப்படிப் பேசுகைக்கு அடி என்? என்று சுருதி தானே சங்கித்து, “ஸோந்தராத் அந்தரம் பிராவிசத்” என்று, பரமாத்ம பிரவேசத்தாலே சொன்னான் என்னா நின்றதே அன்றோ. அந்தப் பாவம் வந்தால் அப்படியே சொல்லலாய் இருக்குமே.

ஆக, ‘இப்படிப் பிரிவாற்றாமையாலே அவனை அநுகரித்துத் தரிக்கிறாள்’ என்று அறியமாட்டாமல், ‘சர்வேச்வரன் ஆவேசித்தாற்போலே இராநின்றது’ என்று, திருத்தாயார் வினவ வந்தவர்களுக்குச் சொல்லுகிறாள்.

498

        கடல்ஞாலம் செய்தேனும் யானே என்னும்
கடல்ஞாலம் ஆவேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கொண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலம் உண்டேனும் யானே என்னும்
கடல்ஞாலத் தீசன் வந்து ஏறக்கொலோ?
கடல்ஞாலத் தீர்க்கிவை என்சொல்லுகேன்?
கடல்ஞா லத்து என்மகள் கற்கின்றவே.

    பொ-ரை :- கடலோடு கூடின உலகத்தைப் படைத்தவனும் யானே என்பாள், இந்த உலகமாக இருப்பவனும் யானே என்பாள், இந்த உலகத்தை அளந்துகொண்டவனும் யானே என்பாள், இந்த உலகத்தைப் பிரளயத்தினின்றும் ஒட்டு விடுவித்து மேலே கொண்டு வந்தவனும் யானே என்பாள், இந்த உலகத்தை எல்லாம் பிரளய காலத்தில் புசித்தவனும் யானே என்பாள், உலகத்திற்கெல்லாம் தலைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? இந்த உலகத்திலே என்மகள் சொல்லுகின்றவற்றை, இந்த உலகத்தீரான உங்களுக்கு எதனைச் சொல்லுவேன்? என்கிறாள்.

    வி-கு :- ‘கடல்ஞாலம் செய்தேன்’ என்பதில், ஞாலம் என்பது, ஆகுபெயர். ஏறுதல்-ஆவேசித்தல். கொலோ என்பது, ஐயப்பொருள். ‘கொலோ’ என்பது, ‘சம்சய உக்தி அன்று, காணுங்கோள் என்று நிர்ணயித்துச் சொல்லுகிறாள்’ என்பர் வியாக்யாதா. “கொல்லே ஐயம்” என்பது, தொல்காப்பியம்.

    இத்திருவாய்மொழி, எண்சீர்க்கழி நெடிலடி ஆசிரிய விருத்தம்.

    ஈடு :- முதற்பாட்டு. 1என்மகள், உலகத்தைப் படைத்தல் முதலான செயல்களை எல்லாம் செய்தேன் நானே என்னா நின்றாள்; எம்பெருமான் தன்பக்கல் ஆவேசித்துச் சொல்லுகிறாள் போலே இராநின்றது என்கிறாள்கடல் ஞாலம் செய்தேனும் யானே என்னும் – 1“நான் உலகம் அனைத்துக்கும் காரணபூதன்” என்னாநின்றாள். 2கடலோடுகூடின உலகத்திலே எல்லாப்பொருள்களும், கண்களுக்கு இட ஒரு துரும்பு இல்லாதபடி அழிந்து, “சதேவ – சத்து ஒன்றே இருந்தது” என்கிறபடியே, தனக்கு என்ன ஒருபெயரும் உருவமும் இல்லாதபடி அழிந்த அன்று, இதனை உண்டாக்கினேன் நான் என்னாநின்றாள். 3சூக்ஷ்மமான சித்து அசித்துக்களோடுகூடின பிரஹ்மமே காரணமாய், அதுதானே ஸ்தூல அவஸ்தையை அடைதலே அன்றோ காரியமாகிறது. 4சித்து அசித்துக்களோடு கூடிய பொருளே காரணமுமாய் இருக்கையாலே, புறம்பு ஒரு காரணம் இல்லாமையாலே, தானே முதற்காரணமும் நிமித்தகாரணமும் துணைக்காரணமுமாய் அன்றோ இருப்பது. இப்படி மூன்றுவித காரணங்களும் தானேயாய் இதனை உண்டாக்கினேன் நான் என்னாநின்றாள். ‘யானே’ என்ற பிரிநிலை ஏகாரத்தால், வேறு காரணம் இல்லை என்பதனைத் தெரிவித்தபடி.

கடல் ஞாலம் ஆவேனும் யானே என்னும் – 5“அவற்றைப் படைத்து அவற்றுள் பிரவேசித்து நின்றான், அவற்றுள் பிரவேசித்து உயிர்ப்பொருளும் உயிரல்பொருளும் ஆனான்” என்கிறபடியே, இவற்றை உண்டாக்கி, இவை பொருளாதல் பெயரடைதல் முதலியவைகளுக்காக அநுப்பிரவேசித்து, இவற்றைச் சொல்லும் சொற்கள் தன்னளவும் வரும்படி இவையாகி நிற்கிறேன் நான் என்னாநின்றாள். 1வாசகமாயாதல் போதகமாயாதல் அவனைக் காட்டக்கடவன அன்றோ; 2தோற்றுகிற இதனைச் சொல்லிக் கொண்டு அபர்யவசான விருத்தியாலே அவனளவும் வருதல், இக்கூட்டத்துக்கே வாசகமாயாதல் இருக்குமேயன்றோ. “ஸச்சத்யச்சாபவத் – 3சேதனமும் அசேதனமும் ஆனார்” என்கிற இது, ஸ்வரூப ஐக்யம் அன்று, “தத்அநுப்ர விஸ்ய-அவற்றுள் அநுப்பிரவேசித்து” என்றதனால், அநுப்பிரவேசத்தின் காரியம் என்னுமிடத்தைச் சொல்லுகிறது. கடல் ஞாலம் கொண்டேனும் யானே என்னும்-மஹாபலி போல்வார், பருந்து இறாஞ்சினாற்போன்று இதனை அபஹரித்து ‘என்னது’ என்னும் அன்று, இதனை எல்லை நடந்து மீட்டுக்கொண்டேன் நான் என்னாநின்றாள். என்றது, இவற்றைப் படைத்து, ‘மேல் உள்ளன தாமே நடக்கின்றன’ என்று விடுகை அன்றிக்கே, இவற்றை அடி ஒற்றிக்கொண்டு சென்று காத்தலைத் தெரிவித்தபடி. 4‘அசுரத்தன்மை வாய்ந்தவர்கள் இவன் முன்பு நில்லார்களேயன்றோ’ என்னுமதனாலே, ‘இராச்சியத்தை வாங்கித்தரவேணும்’ என்று விரும்பிக் கேட்ட அளவே அன்றோ இந்திரன்பக்கல் உள்ளது; அவனுடைய ஒளதார்யத்துக்குத் தகுதியாகத் தன்னை இரப்பாளனாக்கி, அவன் தரும் விரகு அறிந்து வாங்கினான் தானேயாதலின் ‘யானே’ என்கிறது.

கடல்ஞாலம் கீண்டேனும் யானே என்னும் – அசுரத்தன்மை வாய்ந்தவர்களாயிருப்பார் இதனை அழித்தல் அன்றிக்கே, பூமிக்குக் காவலாக வைத்த கடல்தானே இதனை அழிக்க, அண்டபித்தியிலே புக்குச் சேர்ந்த இதனை இடந்து எடுத்தேனும் யானே என்னாநின்றாள். 1அமிழ்ந்து கிடக்கிற பூமி, ‘என்னை எடுக்கவேணும்’ என்று விரும்பியது இல்லையே அன்றோ; தானே செய்தானாதலின் ‘யானே’ என்கிறது. கடல் ஞாலம் 2உண்டேனும் யானே என்னும் – சிலர் இருத்தல் சிலர் அழிதல் அன்றிக்கே, படைக்கின்றவர்களோடு அழிக்கின்றவர்களோடு வேற்றுமை அற எல்லாரையும் ஒக்கப் பிரளயம் கொள்ளப் புக, இவ்வுலகம் முழுதினையும் வயிற்றிலே வைத்துக் காப்பாற்றினேன் நான் என்னாநின்றாள். 3‘அப்போது வேறு சிலர் காத்தார்கள்’ என்பதற்கு, மற்று ஒருவர் உண்டாகைக்குச் சம்பாவனையும் இல்லையாதலின் ‘யானே’ என்கிறது.

கடல் ஞாலத்து ஈசன் வந்து ஏறக் கொலோ – எல்லாப் பொருள்களையும் படைத்தவனாய் எல்லாப் பொருள்களுக்கும் அந்தர்யாமியாய் எல்லாருக்கும் வந்த ஆபத்துகளுக்குத் துணைவனான சர்வேச்வரன் வந்து ஆவேசித்தானோ? அறிகின்றிலேன். ‘கொலோ’ என்பது, ஐயத்தின்கண் வந்தது அன்று, காணுங்கோள் என்று அறுதியிட்டுச் சொல்லுகிற வார்த்தை. ‘உன்னைக் கேட்டு அறுதியிட வந்தோம், நீயும் எங்களைப் போன்று ஆராயாநின்றாயே!நாங்கள் பின்னர் நிர்ணயிக்கும்படி என்? நாங்கள் தெளியும்படி நீயே சொல்லாய்’ என்ன, கடல் ஞாலத்தீர்க்கு இவை என்சொல்லுகேன் – 1“வைகுந்தத்து அமரர்” என்னுமாறு போன்று, நித்திய சம்சாரிகளாய், பகவத்விஷயம் புதியது உண்டறியாதே போருகிற உங்களுக்கு நான் எதனைச் சொல்லுவேன்? கடல் ஞாலத்து என்மகள் கற்கின்றவே-நித்தியசூரிகள் சொல்லக்கூடிய வார்த்தைகளை என் மகள் சம்சாரத்திலே இருந்து சொல்லுகிற இதற்கு நான் எதனைச் சொல்லுவது? இவைதாம், நித்தியசூரிகள் சொல்லக்கூடிய வார்த்தைகள் ஆதலின், ‘ஞாலத்து என்மகள் கற்கின்றவே’ என்கிறாள்.

அநுகரித்துத் தரிக்க வேணுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘பிரிவாற்றாமை’ என்று தொடங்கி. அதற்கு உதாரணம் காட்டுகிறார்
‘ஸ்ரீகிருஷ்ணனை’ என்று தொடங்கி.

“கிருஷ்ணே நிபத்த ஹ்ருதயா இதமூசு: பரஸ்பரம்
க்ருஷ்ண: அஹம் ஏஷ லலிதம் வ்ரஜாமி ஆலோக்யதாம்கதி:”

  “அந்யா ப்ரவீதி க்ருஷ்ணஸ்ய மம கீதி: நிஸம்யதாம்
துஷ்டகாளீய திஷ்ட அத்ர க்ருஷ்ண: அஹம் இதி ச அபரா”-என்பன, ஸ்ரீவிஷ்ணுபுரா. 5. 13 : 26, 27.

ஆனால், அவர்களைப் போன்று ஓர் அவதாரத்தை அநுகரியாமல்
பரத்துவத்தை அநுகரித்தது என்? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘அவர்கள் ஓர் அவதாரத்திலே’ என்று தொடங்கி. இத்திருவாய் மொழியில்
வருகின்ற “கூந்தல் மலர்மங்கைக்கும்” என்ற பாசுரத்தைத் திருவுள்ளம்பற்றி
‘உபயவிபூதிகளையுமுடையவனை’ என்கிறார்.

‘விஷயம் வியவஸ்திதமாக இருக்க’ என்றது, சர்வேச்வரனே சர்வ
நிர்வாஹகன்’
என்று அறிவிற்கு விஷயம் முடிவு செய்யப்பட்டதாக இருக்க
என்றபடி. வியவஸ்திதம் – முடிவு செய்யப்பட்டது. ‘சர்வஜ்ஞன் சொல்லும்
வார்த்தைகளை’ என்றது, “அஹம் க்ருத்ஸ்நஸ் ஜகத: பிரபவ:” என்பது
போன்ற வார்த்தைகளைத் திருவுள்ளம்பற்றி.

அதனைப் பாவித்தால் அவன் சொல்லும் வார்த்தைகளைச் சொல்ல
வேணுமோ? என்ன, தேஹாத்ம அபிமானிக்கு, தேஹாத்ம அபிமானம்
முற்றினால், வேறு ஒன்று தோற்றாதது போன்று சரீரி அளவும் செல்லத்
தன்னை அநுசந்திக்கும்படி பாவனை முற்றினால் அவன் சொல்லும்
வார்த்தைகளையும் சொல்லலாம் என்கிறார் ‘பாவனையின் மிகுதியாலே’-என்று தொடங்கி.

“தத்பாவ பாவம் ஆபந்ந: ததாஸௌ பரமாத்மநா
பவத்யபேதீ பேதஸ்ச தஸ்யா ஜ்ஞாந க்ருதோபவேத்”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 6. 7:95.

அவனாகப் பாவித்தால் அவன் சொல்லும் வார்த்தைகளைச்
சொல்லலாயிருக்கும் என்பதற்கு, வேறு பிரமாணங்களையும்
அருளிச்செய்கிறார் ‘பிரஹ்மத்தை’ என்று தொடங்கியும்,
‘என்னிடத்திலிருந்து’ என்று தொடங்கியும்.

“தத் ஹிதத் பஸ்யந் ருஷி: வாமதேவ: ப்ரதிபேதே அஹம்
மநுரபவம் ஸூர்ய: ச”-என்பது, பிரு. உபநிட. 3 : 4.

“மத்தஸ் ஸர்வம் அஹம்ஸர்வம் மயி ஸர்வம் ஸநாதநே
அஹமேவ அவ்யய; அநந்த: பரமாத்ம ஆத்ம ஸம்ஸ்ரய:”-என்பது, ஸ்ரீவிஷ்ணுபுரா. 1, 19 : 85.

கடல் ஞாலம் –திருவாய்மொழி
அநுகரித்து தரிக்கிறார் ஆழ்வார்
அறியாமல் தாய்மார்கள் -ஆவேசித்தான் என்று பயப்பட –

 அலாபத்தால் வரும் துக்கமே நிற்க அனுகரித்து தரிக்க பார்க்கிறாள்
அஹம் சர்வம் -வார்த்தை சொல்லி -சர்வேஸ்வரன் போலே யானே என்கிறாள்
ஞான முத்ரையும் தானுமாக -உபதேச முத்தரை -சூஷ்ம அர்த்தை தெரிவிக்க
மூன்று தத்வம் என்பதால் மூன்று விரல்கள் நீட்டி
கண்ணன் போலே ஆதித்யானாம் அஹம் விஷ்ணு கண்ணன் சொல்லியது போலே
ரசமாக இருப்பவனும் நான்
அறியாதவர்கள் முட்டாள் 7 அத்யாயம்
ஆஸுரம் -பாவம்
பர நிந்தையும் ஆத்மா பிரசனமும்
எம்பெருமானார் -எல்லாம் -அவன் அப்பொழுதே நண்ணறு  ஞானம் தலை கட்ட
மணி ஔஷதம் தாயார் நினைக்க
கலங்கி அனுகரித்தாள் என்று -தெரியாமல் அவனே -ஆவேசம் உள்ளே வந்து பேச வைக்கிறான்
-சாரம் ஈசனை முன் காணாமல் -நொந்து –
அனுகரித்தல் உற்று
அவனே தான் பேசும் -மாறன்
ஆவேசம் -இல்லை -அநுகாரம்

பந்துக்கள் புகுந்து இது தான் என் வினவ -சர்வேஸ்வரன் இவள் பக்கல் ஆவேசம்
அவன் வார்த்தை -சொல்லியதால் –
ஞான முத்தரை
கண்ணால் கடாஷிக்க
-இத்தால் ஆவேசம் -என்று எண்ணி
அனுகரித்து தரிக்கிறாள் அறிய மாட்டாமையாலே
பிரிவாற்றாமை உண்டானால் அனுகரிப்பது
சிஷ்டாசார்யம் ராச கிரீடை -கோபி கண்ணன் -இரண்டு -பக்கமும்
ஆனந்தம் மிக்கு -எல்லை மீறி சென்று -அதுவே ஹிருதய -பாதிப்பு
கண்ணன் தன்னை மறைக்க -பிரிந்த வருத்தம் ஆற்ற கிருஷ்ணன் போலே அனுகரித்து

நான் கிருஷ்ணன் -நடை சக்க்ரவர்த்தி பிடிக்கும்படி விருது  -பிடிக்கும்படி
ஆடல் பாடல் -மாறின கானகம் படி உலாவி உலாவி -பெரியாழ்வார்
துஷ்ட காளியனாய் கிடக்க ஒருத்தி கண்ணனாய் ஏறி ஆட
பிரதி கூலமான காளியனும் ஆகாதோ கண்ணன் திருவடி பட
அனுகாரத்தில் மெய்ப்பாட்டால்
அங்கு ஓர் அவதாரம் மட்டும் –
இவளோ மயர்வற மதிநலம் அருளப் பெற்றவள் உபய விபூதி நாதன் உக்தம்
காளியன் போலே அங்கு காயிக அநுகாரம்
இங்கே வாசிகமான அநுகாரம் மட்டும்
பரதந்த்ரம் -ஸ்திரீ ஜன்மம் ஜீவாத்மா -ஸ்வ தந்த்ரன் எம்பெருமான் வார்த்தை சொல்லி
ச்த்ரீத்வம் எல்லை சர்வேஸ்வரன் புருஷோத்தமன் வார்த்தை சொல்லி
சர்வஞ்ஞன் வார்த்தை சொல்லா நின்றாள்
கீழில் விக்ரஹ வைலஷண்யம் -உரு வெளிப்பாட்டால் அனுபவிக்க
அது முதி அநுகாரம் –
தேக ஆத்மா அபிமானம் முற்றி வேறு ஓன்று தோன்றாமல் இருப்பது போலே
பிரகாரி அவன் தானாக
பேசுகிறாள் பாவனா பிரகர்ஷம் முதிர்ந்த -நிலை

கீதாசார்யன் மனு நான் சூர்யன் நான் எல்லாம் நான் தான்
என்னிடம் இருந்து எல்லாம் உண்டானது அருளியது போலே
விபூதி அத்யாயம் சொன்ன வார்த்தையை பெரும்பாலும் சொல்லி
உள்ளே உள்ள எம்பெருமான் வைபவம்
ருத்ரன் தனது வைபவம் பேசி -ஸ்ருதி சங்கித்து -சகா அந்தரா -அந்தரம் –
தனக்கு உள்ளே உள்ள பரமாத்மா ப்ரேவசத்தால் சொன்னான்

சர்வேஸ்வரன் ஆவேசித்து விட்டான் சங்கை இன்றி திருத் தாயார் சொல்லுகிறாள்
ஜகத் சிருஷ்டி யாதி வ்யாபாரங்கள் செய்தேன் யான் என்கிறாள் –
இவை -கடல் ஞாலத்தீர் -உங்களுக்கு என்ன சொல்வேன் –
ஈசன் வந்து ஏறக் கொலோ -ஏறி விட்ட படியால் -சங்கை இன்றி -நிர்ணயமாக -அர்த்தம்
செய்தேனும் யானே –
-என்னும் தாயார் வார்த்தை
ஆவேனும் யானே -என்னும்
கொண்டேனும் நானே மகா பலி இடம் இருந்து
கீண்டேனும் நானே
உண்டேனும் நானே
கடலால் சூழப்பட்ட -உலகம்
ஈடுபட்டு அநுகாரம்
ஆண்டாள் கோபிகள் போலே அனுகரித்து -கோபி பாவனையில்
நோன்பு திரு மங்கை -ஆழ்வார் -ஒரே -பாசுரம் வட வரை நின்று கண புரம் வந்தது யானே
8-2 தெள்ளியீர் அர்ச்சாவதாரத்தில் அநுகாரம் அங்கு
இவள் கிரிஷ்ணனாக -அனுபவித்து உபய விபூதி உக்தன்
கோபிகள் கிருஷ்ணன் செஷ்டிதங்கள் -கண்ணால் கண்டதை
இவள் கிருஷ்ணன் கீதையில் -சொன்னதை அனுகரிக்கிறாள்
இந்த திருவாய் மொழியிலும் கண்ணன் செஷ்டிதங்கள்
ஒரே பாசுரம் இலங்கை -செற்றான் ஸ்ரீ ராம அவதார செஷ்டிதங்கள் உண்டு –

“அஹம் க்ருத்ஸ்நஸ்ய ஜகத: பிரபவ: பிரளய ஸ்ததா”  என்பது, ஸ்ரீ கீதை. 7 : 6.

முழுவதும் என்னிடம் இருந்து -உண்டாகி -கடல் உடன் கூடின ஜகத்தில் சகல பதார்த்தங்களும்
கண்ணில் துரும்பு இன்றி அனைத்தும் பிரளயம் –அனைத்தையும்
நாம ரூபங்கள் இன்றி அழிந்து -ஒன்றும் -தேவும் யாதும் இல்லா அன்று உண்டாக்கினவன் நானே
கார்யம் காரணம் –
சூஷ்ம நிலை -பிரளயம்
ஸ்தூல நிலை சிருஷ்டி
அசித் மட்டும்
சித் எப்போதும் சூஷ்ம நிலை
அசித் உடன் கூடின சித் சிருஷ்டி
கடம் -மண் பொடி -காற்றில் அடங்கி –
ஏக காலத்தில் சகல வஸ்துக்களும் சூஷ்ம நிலை
ஒன்றிக் கிடக்கும்
சூஷ்ம சிதசித் ப்ரஹ்மம் –
மயில் தோகை போலே –
விசிஷ்ட ப்ரஹ்மம் -விசிஷ்ட அத்வைதம் விசேஷணம் உடன் கூடிய அத்வைதம்

தானே உபாதான நிமித்த சஹ கார்யம் மூன்றும் ப்ரஹ்மமே
சக்தி விசிஷ்ட சக்காரி
சங்கல்ப விசிஷ்ட ப்ரஹ்மம்
திரிவித காரணமும் தானே என்கிறாள்
-அவதாரணம் ஏகாரம் -வேற காரணம் இல்லை
ஆவேனும் யானே -அனுப்ரேவிசித்து
சிருஷ்டித பின்பு உள்ளே புகுந்து சது -யது -வஸ்துத்வ நாம பாவம் கொடுக்க

தத் ஸ்ருஷ்ட்வா ததேவ அநுப்ராவிஸத் தத் அநுப்ரவிஸ்ய
ஸச்சத்யச்ச அபவத்”-
என்பது, தைத்திரீய ஆன. 6.

உண்டாக்கி -உள்ளே புகுந்து இவற்றை சொல்லும் சப்தங்கள் தனது அளவில் -வரும்படி
கடம் -ஜீவன் -பரமாத்மா -குறிக்கும்
வாசகமாகவும் -காட்டும்
தோற்றுகிற இத்தை சொல்லி  கொண்டு -முடியும் வரை –
-சரீரம் ஆத்மா -பரமாத்மாவை காட்ட -வேண்டும்
தனக்கே வாசகம் சேதன அசேதன விசிஷ்டன் –
வேதாந்த விஷயம்
இந்த்ரன் சரீரம் ஆத்மா பரமாத்மா
ஜைமினி பரம ஐஸ்வர்யனையே குறிக்கும்
அக்னி முன்னே கூட்டிப் போகிறவன்
படிப்படியாக அவனை குறிக்கும் -நேராகவே குறிக்கும்
ஸ்வரூப ஐக்கியம் இல்லை விசேஷண விசேஷ ஐக்கியம்

கொண்டேனும் யானே -வாமன அவதாரம் -கண்ணன் –
உம்பர் கோமானே ஆண்டாள் சொல்லியது போலே
சிருஷ்டித்து அது அது கார்யம் செய்யட்டும் விடுகை இன்றி அடி ஒற்றி கொண்டு வந்து
அபஹரித்து என்னது என்க -மகாபலி போல்வார் -பருந்து போலே
எல்லை நடந்து மீட்டுக் கொண்டேன் நானே
ராஜ்யத்தை மட்டும் வாங்கி கொடுக்க கேட்டான் இந்த்ரன்
ஆசுர பிரக்ருதிகள் இவன் முன்னே நிற்க மாட்டார்கள்
அர்த்தியாகி -ஒவ்தார்யம் ஈடாக -விரகு அறிந்து -கொண்டேனும் யானே என்கிறாள்
யானே -ஏக -வசனம்
கீண்டேனும் யானே
பூமிக்கு ரஷகமான கடலே அழிக்க -ஆசுர பிரக்ர்திகள் இல்லாமல்
அந்தர்பித்தியில் புக்கு -இடந்து எடுத்து
அபேஷிக்காமல் இருக்க செய்தே தானே -செய்தான்
யானே ஏவ -காரம் கேட்க்காமல் தானே செய்தான்
உண்டேனும் யானே -அனைவரையும் பிரளயம் கொள்ள
வயிற்றில் வைத்து ரஷித்து
ஏவகாரம் -யாரும் -இல்லையே முகுவதும் அகப்பட ஒருவரும் புறப்பாடு இன்றி
கிராமத்து வாசி நகரத்தில் வர-வஸ்துகளை கரைக்க -அதை கண்டு பிடித்து எதில் வைப்பீர்
nitric acid தங்கம் கரிக்காது அதை வைத்து clean செய்வார்கள்

ஈசன் –
நியமனம் சர்வ ஸ்ரஷ்டாவாய் -சர்வ -அந்தர்யாமி சர்வ ஆபத் -சகன் ஆவேசித்தானோ
உன்னைக் கேட்டு அறிந்து கொள்ள -வந்தோம் வந்தவர்கள் கேட்க
நிர்ணயம் பண்ணி சொல்லி என்றார்களாம்
உலகத்தவருக்கு என்ன சொல்வேன்
பகவத் விஷயம் அறியாத நித்ய -சம்சாரிகள்
மாதவ சம்ப்ரதாயம் ஜீவாத்மா இரண்டு வகை மோட்ஷம் போவார் ஒன்று வகை
போக முடியாதவர் ஒரு வகை –
மோட்ஷம் அடைய உரிமை அனைவருக்கும் உண்டே நமது சம்ப்ரதாயம்
ஜீவாத்மாக்கள் அநாதி
நித்ய சம்சாரியாய் போந்தார் ஒருவர் -நிறைய நாள்கள் இருந்ததால் சொல்கிறோம்
அநாதி =ஆதி இல்லை எனபது இல்லை -ஆதி தெரியாது
நித்ய சூரிகள் -எப்பொழுதும் பரம -பதத்தில்
வைகுந்தத்து அமரர் போலே நித்ய சம்சாரிகள் பகவத் விஷயம் அறியாதவர்கள்
உங்களுக்கு எத்தை சொல்வென்
ஆவேசித்து விட்டான் நிர்ணயித்து சொல்கிறாள்
இவை என் சொல்கேன் -ஆவேசித்து விட்டான் என்கிறாள் –
பன்னீராயிரப்படி சம்சயம் என்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.