எய்தக்கூவுதல் ஆவ தேஎனக்கு? எவ்வ தெவ்வத்து ளாயு மாய்நின்று
கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே!
செய்த வேள்வியர் வையத் தேவர் அறாச் சிரீவர மங்கலநகர்
கைதொழ இருந்தாய் அதுநானும் கண்டேனே!
பொ-ரை :- பேற்றினைப் பெறுதற்கு நான் உன்னை அழைத்தல் எனக்குத் தகுதியாகுமோ? எவ்வகைப்பட்ட பகைவர் கூட்டத்துள் நீயும் ஒருவனாகச் சேர்ந்து புத்தமுனியாய் நின்று வஞ்சகமாகக் காரியங்களைச் செய்த கரிய மேனியையுடைய அம்மானே! ஐவகையான யாகங்களைச் செய்தவர்களும் பூதேவர்களுமான ஸ்ரீ வைஷ்ணவர்கள் நீங்காமல் எழுந்தருளியிருக்கின்ற ஸ்ரீ வரமங்கல நகரிலே எல்லாரும் கைகூப்பி வணங்கும்படியாக எழுந்தருளியிருக்கின்றாய்; அதனை அடியேனும் கண்டேன்.
வி-கு :- எய்தக் கூவுதல் எனக்கு ஆவதே என்க. தெவ்வத்துள்: தெவ் – பகை. அத்து: சாரியை. உள்: ஏழாம் வேற்றுமை உருபு. நின்று செய்யும் அம்மான் என்க. வையத்தேவர் – நிலத்தேவர்; ஸ்ரீ வைஷ்ணவர்கள்.
ஈடு :- ஐந்தாம் பாட்டு. 1அடியார்கள் பக்கலிலே நாம் வைத்திருக்கும் பக்ஷபாதத்தையும் சிரீவரமங்கல நகரில் இருப்பையும் உமக்குக் காட்டினோமே, “எங்கு எய்தக் கூவுவன்” என்று ஒன்றும் பெறாதாரைப் போன்று, கூப்பிடாநின்றீரே? என்ன, செய்த அம்சத்தை அறிந்தேன், அதனாலே நிறைவுபெற்றவன் ஆகின்றிலேன் என்கிறார்.
எய்தக் கூவுதல் ஆவதே எனக்கு – 2பொகடு, அதுகிடக்கிடாய், 1இந்தத் திருமகள்கேள்வனைக் கண்ட உனக்கு ‘இவன் சாதன அநுஷ்டானம் பண்ணுவான்’ என்று தோற்றி இராதோ. 2உன்னிலும் என்னை நான் அறிவேனே அன்றோ! என்னால் செய்யலாவது உண்டோ என்று கேட்கிறார், 3‘அவனாலே பேறு என்றிருக்குமவர் ஆகையாலே’; நீ கைவிட்ட அன்று நான் அநுஷ்டிக்கும்படி, திருமகள் கேள்வனான உன்னோடு ஒக்க விகல்பிக்கலாம்படி இருந்தேனோ என்கிறார். எய்தக் கூவுதல் ஆவதே – நீ எனக்குக் கைப்படும்படியாக விரும்புதல் ஆவதே. எனக்கு-வலி இல்லாதான் ஒருவன் தலையிலே ஒரு மலையை வைத்தாற்போலே இருக்கிறது காணும் இவர்க்கு. 4“என்னை வணங்குவாய்” என்றால், பின்னர் இல்லை யாவரே அன்றோதான்.இனி, பிரபலனாயிருப்பான் ஒருவன் அதனைத் தள்ளி ‘அஞ்சாதே கொள்’ என்ன வேண்டுமே அன்றோ, ஆகையாலே, அவன், பகைவர்களை அழித்த தன்மையை அருளிச்செய்கிறார் மேல்: எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே – 2அடியர் அல்லாதார்பக்கல் செய்வதனை, வேறு கதியற்ற வற்றவர்களாயிருக்கின்ற அடியார் பக்கலிலும் செய்யப்புக்கதோ இப்போது. எவ்வ தெவ்வத்துளாயும் ஆய் நின்று – எவ்வகைப்பட்ட பகைவர்கள் கூட்டங்களினுள்ளே புக்கு. தெவ்வர் – பகைவர். தெவ்வம்-பகைவர் கூட்டம். 3“தெவ்வர் அஞ்சு” என்னக்கடவதன்றோ. கைதவங்கள் செய்யும்-வஞ்சகங்களைச் செய்கின்ற. என்றது, புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு நின்று அவர்களுக்குண்டான வைதிக சிரத்தையைப் போக்கினமையைத் தெரிவித்தபடி. கைதவங்கள் செய்யும் கருமேனி அம்மானே – வசனங்களாலும் யுக்திகளாலும் வஞ்சகங்களைச் செய்து வைதிக சிரத்தையைப் போக்கி, அவ்வளவிலும் கேளாதார்க்கு வடிவைக்காட்டி வாய்மாளப் பண்ணினபடி.என்றது, 1தன்னுடைய வார்த்தைகளாலே அவர்களைச் சவப்பிராயராக்கி, ஒருவன் அம்புக்கு இலக்காம்படி செய்து வைத்தமையைத் தெரிவித்தபடி. அம்மானே-சம்பந்தம் ஒருத்திருக்கச் செய்தே, நீ அவர்களை அழியச்செய்தது 2அடியார்களுக்காக அன்றோ? 3ஒரு தெய்வம் உண்டு’ என்று இருக்கின்றவர்களை அழித்ததைப் போன்றதே அன்றோ. ‘ஒரு தெய்வம் இல்லை’ என்றிருக்கிற என்னை ஒன்று செய்யச் சொல்லுகையாவது. “ஒரு மா தெய்வம் மற்றுடையமோ யாமே” என்றாரே அன்றோ இவர். அவர்களுடைய வைதிக சிரத்தையை அழித்தாற்போலே இருக்கிறதாயிற்று, சித்த சாதனத்தைப் பற்றி இருக்கின்ற தன்மையினின்றும் நெகிழ்த்துச் சாதனத்திலே மூட்டுகிற இது.
செய்த வேள்வியர் – சித்தோபாய நிஷ்டர்கள். 4“அரசனே! எந்தப் பிராஹ்மணர்கள், கிருஷ்ணனை உள்ளபடிஅறிகின்றார்களோ அந்தப் பிராஹ்மணர்களுக்கு எல்லா யாகங்களும் முடிந்தவைகள் ஆகின்றன” என்றாரே அன்றோ. 1வேறு ஒன்று செய்யுமவனுக்குக் குறை கிடப்பதும் ஓர் அம்சம் உண்டே அன்றோ. சித்தோபாய நிஷ்டர்கள் செய்ய வேண்டுமவற்றை எல்லாம் செய்து முடித்தவர்கள் அலரோ. வையத் தேவர் – பூசுரர். அறாச் சிரீவரமங்கல நகர் கைதொழ இருந்தாய் – அவர்கள் நித்தியவாசம் செய்கிற ஸ்ரீ வரமங்கல நகரிலே அங்குள்ளவர்கள் அடிமை செய்ய, அதுவே தாரகமாக இருந்தாய். அது நானும் கண்டேன் – 2ஸ்ரீவைகுண்டத்தைக் கல விருக்கையாகவுடைய நாம் இங்கே வந்து உமக்காக இருக்க, ஒன்றும் செய்திலோமாகச் சொன்னீரே? என்ன, இருந்தாய், அதில் தடை இல்லை, நான் அநுபவித்த அம்சத்தை இல்லை செய்கிறேன் அல்லேன்; அநுபவித்த அம்சம் போராமல் படுகிறேன். என்றது, தேவர் செய்தருளின அம்சம் இவ்வளவு உண்டு, அதில் குறை இல்லை, எனக்கு அவ்வளவால் போராது என்கிறார் என்றபடி. திருவடிகளில் கைங்கரியமே யாத்திரையாகப் பெற வேண்டும் என்பது அவாய்நிலை.
அப்படி, மலையை வைத்தாற்போலே இருக்குமோ? என்ன, வியாக்யாதாவின்
ஈடுபாடு, ‘என்னை வணங்குவாய்’ என்று தொடங்கும் வாக்கியம்.
“மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்தா ஏவம் ஆத்மானம் மத் பராயண:”
என்பது, ஸ்ரீ கீதை, 9: 34. ‘இல்லையாவரே அன்றோதான்’ என்றது, சத்தை
இல்லையாய் விடுவார் என்றபடி.
அடியார்களுக்காக அன்றோ’ என்றதற்குக் கருத்து, அம்மானாய் வைத்தும்,
ஆஸ்ரித பக்ஷபாதத்தாலே அவர்களை அழித்த நீ, அடியனான
என்னையும் அழிக்கலாமோ? என்பது.
3. உம்மை நாம் அழித்தேமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘ஒரு தெய்வம்’ என்று தொடங்கி. ‘ஒரு தெய்வம் இல்லை’ என்றவிடத்தில்,
‘உன்னைத் தவிர’ என்பது எஞ்சி நின்றது. சர்வேச்வரனைத் தவிர, வேறு
தெய்வம் இல்லை என்று இருப்பவர் இவர் என்பதற்கு மேற்கொள்
காட்டுகிறார் ‘ஒரு மா தெய்வம்’ என்று தொடங்கி. இது, திருவாசிரியம், 7.
4. “செய்த வேள்வியர்” என்றால், சித்தோபாய நிஷ்டரைச் சொல்லுமோ?
என்ன, அர்த்த ஒளசித்தியத்தாலே சொல்லும் என்று அதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘அரசனே’ என்று தொடங்கி.
“ஸர்வே வேதா: ஸர்வ வித்யா: ஸசாஸ்த்ரா:
ஸர்வே யஜ்ஞா: ஸர்வ இஜ்யஸ்ச கிருஷ்ண:
விது: க்ருஷ்ணம் ப்ராஹ்மணா: தத்த்வத: யே
தேஷாம் ராஜன் ஸர்வயஜ்ஞா: ஸமாப்தர்:”-என்பது, பாரதம்.
ஆஸ்ரித பஷ பாதத்தையும்
இருப்பையும் காட்டிக்
கொடுக்க எங்கு எய்த -என்ன வேண்டுமோ
இன்னும் பல செய்ய வேண்டும் என்கிறார்
எய்தும் படியாகவும் கூவுதல் ஆகுமோ எனக்கு
கை தவங்கள் -அசுரர்களை வசப் படுத்த -நேர்மைக்கு எதிர்பதம்
செய்த வேள்வியர் வையத்து தேவர்
கண்டேன் அது போதாது -வாக்ய சேஷம்
உன்னை எய்தும்படியாக கூவ முடியுமா
இந்த ஸ்ரீ ய பதியை
இவன் சாதன அனுஷ்டானம் செய்வான் என்னும் படியாகவா நான் இருக்கிறேன்
உன்னிலும் என்னை நன்றாக அறிந்து -ஒன்றும் செய்ய யோக்யதை இல்லை –
அவனாலே பேறு என்று இருக்கிறவர் ஆகையாலே
நீ கை விட்ட அன்று -சாதனம் செய்து அடையும் படி நான் ஸ்ரீ ய பதியா
எனக்கு -குருவி தலையில் மலையை வைத்தால் போலே
சாதனம் ஒன்றையும் அனுஷ்டிக்க வல்லவன் இல்லை
கறவைகள் பாசுரத்தில் ஆண்டாள் அருளியது போலே
மாம் நமஸ்குரு 1கீதை 5-65–பக்தி யோகம் விதித்தான் அர்ஜுனனுக்கு
அப்படி சொன்னால் அநந்தரம் ஆழ்வார் இல்லையாவாரே
இனி -அஞ்சாதே போகும் -பிரதி பந்தகங்கள் போக்கி- மாசுச சொல்லி அருளுவாய் –
பிரதமன் –
எப்பேர்பட்ட அசுரர் ராஷசர்களை அழித்து
விரோதிகள் இடம் செய்வதை ஆஸ்ரிதர் பக்கம் செய்யலாமா
-ஆண்டாளும் முப்பத்து மூவர் -பாசுரம் -இது போலே அருளி
எங்களுக்கும் நடுக்கம் உண்டாக்கிக் கொண்டு இருக்கலாமா
செப்பம் நேர்மை
திறல் பராக்கிரமம்
அடியவர் இடம் திறல் காட்ட வேண்டுமா
கைதவம் ஏன் இடம் காட்ட வேண்டுமா
அநந்ய கதியாய் இருப்பார் –
விரோதி கூட்டம் -எவ்வம் தெவ்வர் -அஞ்ச -தெவ்வர் அஞ்ச -பெருமாள் திருமொழி
உள்ளே புகுந்து கைதவங்கள் செய்து –
எவ்வ எவ்வகைப்பட்ட
தெவ்வர் சத்ரு சமூகம்
கிருத்ருவங்கள் செய்யும்
வைதிக ஸ்ரத்தை புத்தராக போக்கின படி -திருஷ்டாந்தம் காட்டி
கெட்ட பலங்களுக்கு யாகம் செய்து -இருப்பவர்களை –
வைதிக ஸ்ரத்தை குறைத்து நாஸ்திக வாதம் செய்து
புத்த முனியாய் அவர்கள் நடுவே புக்கு
வசனங்களாலும் யுக்திகளாலும் -சாருவாக மதம் -அழகான வார்த்தை சொல்லி
கருமேனி அம்மானே
இவ்வளவும் போதாதே தனது வடிவைக் காட்டி மயக்கி –
புத்த அவதார சஹாச்ர நாம வ்யாக்யானத்திலும் இவற்றை அருளி
வரம்புக்கு இலக்காக்கி வைத்தான்
வனம் புக்கும் படி செய்தான்
அம்மானே -சம்பந்தம் ஒத்து இருக்க செய்தே இப்படி செய்தது அடியவர்களுக்கு
செய் என்று சொல்வதும் என்னை அழித்து விடும்
சித்த சாதனம் மீட்டு சாதனம் செய்ய சொல்வது அவர்கள் ஸ்ரத்தை அழித்தது போலே
வேதார்த்தம் சொல்லிய உயர்ந்த சாதனத்தில் உறுதியாக இருக்கும் என்னை அழிக்கப் பார்க்கிறாயே
ஒரு தெய்வம் உண்டு என்றாரை அழிப்பாரை போலே ஒரு தெய்வம் இல்லை என்று இருக்கும் என்னையும் அழிக்கப் பார்க்கிறாயே
செய்த வேள்வியர் -சித்த சாதனம் எம்பெருமானைப் பற்றியவர்
சர்வ யஞ்ஞா சமாப்த -உள்ளபடி உணர்ந்தவர் –
கிருத க்ருத்யர் –
யாக சப்தத்தால் சொல்லும் எம்பெருமானைப் பற்றி
வையத்தேவர் நிலத்தேவர்
அங்கு உள்ளவர் அடிமை செய்ய
கலவிருக்கை யாக இருக்கும் -உமக்காக இங்கு வந்து இருக்க –
அதை நான் கண்டோமே
இது போதாது -அனுபூத அம்சம் இல்லை சொல்வேன் இல்லை
இது போதாது
என்னை அனுக்ரகித்து அடிமை செய்ய கைக் கொள்ள வேணும் நம்பிள்ளை -காட்டி
வாக்ய சேஷமாக கொள்ள வேண்டும் இத்தை
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply