Archive for June, 2013

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-5-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 22, 2013

அழுவன் தொழுவன் ஆடிக் காண்பான் பாடி அலற்றுவன்
தழுவல் வினையால் பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன்
செழுவொண் பழனக் குடந்தைக் கிடந்தாய்! செந்தா மரைக்கண்ணா!
தொழுவ னேனை உனதாள் சேரும் வகையே சூழ்கண்டாய்.

பொ-ரை :- கலக்கத்தாலே அழுவேன், தெளிவாலே தொழுவேன், மயக்கத்தால் ஆடுவேன், குணங்களுக்குப் பரவசப்பட்டுப் பாடுவேன், துன்பத்தால் அலற்றுவேன், என்னைத் தழுவி நிற்கின்ற காதலாகிற கொடிய பாவங்களால் நீ வருவதற்குச் சம்பாவனையுள்ள பக்கத்தை நோக்குவேன், வரக் காணாமையாலே நாணங்கொண்டு தலை குனிந்திருப்பேன், செழுமை பொருந்திய அழகிய வயல்களாற்சூழப்பட்ட திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் திருக்கண் வளர்கின்றவனே! செந்தாமரைக் கண்ணா! வேறு கதி இல்லாதவனாய்த் தொழுகின்ற என்னை உன் திருவடிகளைச் சேரும்படி ஒரு நல் விரகு பார்க்க வேண்டும்.

வி-கு :- ஆடிக் காண்பன் : ஒருசொல். ஆடுவேன் என்பது பொருளாம். தொழுவனேன்: வினையாலணையும் பெயர். கண்டாய்: முன்னிலை அசைச் சொல்

.ஈடு :- ஐந்தாம் பாட்டு. 1உன்னைக் காண வேண்டும் என்னும் ஆசையாலே இரங்குதற்குரிய செயல்கள் பலவும் செய்த இடத்திலும் காணப்பெற்றிலேன், உன் திருவடிகளை நான் பெறும்படி பார்த்தருள வேண்டும் என்கிறார்.

அழுவன் – குழந்தைகள் செய்வதனையும் செய்யாநின்றேன். 2“மற்றவள்தன் அருள் நினைந்து அழுங்குழவியதுவே போன்றிருந்தேன்” என்னக் கடவதன்றோ.

குழந்தைகள் அழுவதற்குப் பிரமாணம் காட்டுகிறார் “மற்றவள் தன்”  என்று தொடங்கி.

தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரணில்லை
விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக் கோட்டம்மானே!
அரிசினத்தால் ஈன்றதாய் அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே-என்பது, பெருமாள் திருமொழி. 5 : 1.

தொழுவன் – 3வேதாந்த ஞானமுடையார் செய்வதனையும் செய்யா நின்றேன்.“அஞ்சலி: பரமா முத்ரா” என்பது போன்றவைகளைக் கடாக்ஷித்து,
‘வேதாந்த ஞானமுடையார்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.-  கலியர்-பசியர்

ஆடிக் காண்பன் – ‘இத்தனை சோறு இடுகிறோம், ஆட வல்லையோ’ என்றால், கலியர் ஆடுமாறு போலே ஆடியும் பார்ப்பன். 4‘என்பட்டால் பெறலாம்’ என்று அறியாரே. பாடி அலற்றுவன் – காதலால் வழிந்த சொல் பாட்டாய், அதுதானும் அடைவு கெடக் கூப்பிடுகை, அலற்றுகை. தழு வல் வினையால் – இப்படிப்பட்டாலும் காண ஒண்ணாதே அன்றோ 5‘உடன் வந்தியான வல்வினை. என்னைத் தழுவி விடாதே நிற்கிற காதலாகிற பிரபலமான பாவத்தாலே. பக்தியை, பாவம் என்கிறது,வேண்டாததைக் கொடுப்பது பாபம் ஆகையாலே. பக்கம் நோக்கி – ‘துன்பமே செப்பேடாக வரும்’ என்றிருக்கையாலே, வருவதற்குச் சம்பாவனையுள்ள திக்கைப் பார்த்து. நாணிக் கவிழ்ந்திருப்பன் – அங்கு வந்து தோற்றக் காணாமையாலே, ‘ஆசைப்பட்டு 1அழகிதாக உண்டோம்’ என்று நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன். அன்றிக்கே, பக்கம் நோக்கி நாணிக் கவிழ்ந்திருப்பன் என்பதற்கு, ‘அருகுநின்றார் இவளை என் சொல்லுவர்களோ’ என்றதற்கு நாணமுற்றுக் கவிழ்தலை இட்டிருப்பன் என்னலுமாம்.

செழு ஒண் பழனம் குடந்தைக் கிடந்தாய்-பெருத்து அழகிதான நீர்நிலைகளையுடைய திருக்குடந்தையிலே திருக்கண் வளர்ந்தருளுகிறவனே! செந்தாமரைக்கண்ணா-2கையிலே நிதி உண்டாயிருக்க வறியர்க்கு இடாதாரைப் போலே. வேறு முகத்தாலே என் ஜீவனமாய்க் கிடக்கிறாய் இல்லை, என் ஜீவனம் ஒருமுகம் செய்து கிடக்கிறதன்றோ. தொழுவனேனை –3புறம்பு புகல் அற்று உன்னால் அல்லது செல்லாதபடி கிருபணனான என்னை. அன்றிக்கே, புறம்புள்ள விஷயங்களிலே ஈடுபட்டவனாய்த் தாழ்ந்தவனான என்னை என்னுதல். தொழுவன்-கிருபணன் என்னுதல். தாழ்ந்தவன் என்னுதல். உன தாள் சேரும் வகையே சூழ்கண்டாய் – உன் திருவடிகளைக் கிட்டுவது ஒரு விரகு, 4நான் அறியாதபடி நீயே பார்த்தருளவேண்டும். 1தம்முடைய ஆற்றாமை பேற்றுக்குக் காரணம் அன்றிக்கே, அது பிரகிருதியாய், ‘அவனாலே பேறு’ என்று இருக்கிறபடி. என்றது, வேறு பிரயோஜனங்களை விரும்பாதார் திறத்தில் காரியசிந்தையும் அவனதாக இருக்கிறபடியைத் தெரிவித்தபடி.

ஆர்த்தியே செப்பெடாக வருவானே
நாணிக் கவிழ்ந்து இருப்பேன்
அழகிது வேட்கத்தாலே
எம்பெருமானை எசுவார்களே என்று பக்கம் நோக்கி லஜ்ஜித்து இரூப்பன்
அழுதல்: உபாசகர், சபலர். தொழுதல்: பிரபந்நர், விரக்தர்.
நாட்டார் சொல்லும் பழிக்கு அவனுக்கு அவத்யம் என்று
செந்தாமரைக் கண்ணா முகாந்தாரத்தாலே ஜீவனம் இல்லை
உன்னிடம் இருக்க கொடுக்காமல் இருக்கிறாயே
எனது ஜீவனம் ஒரு முகம் செய்து கிடக்கிறது
தொழுவன் தீனன் புறம்பு புகல் அற்று
தாழ்வான் என்னை
உன்னுடைய திருவடிகளை கிட்டுவது விரகு நீயே காட்டி அருள வேண்டும்
தமது ஆற்றாமை பேற்றுக்கு உபாயம் இல்லை -ஸ்வரூபத்தில்
சேரும் பிரக்ருதியாய்
இருக்கும் அவனாலே பேறு
சூழ் கண்டாய் -கார்யம் அவனே செய்து அருள வேண்டும்
அழுவன் தொழுவன் சொல்லியதும் சாதனம் இல்லை

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-4-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 22, 2013

செலக்காண் கிற்பார் காணு மளவும் செல்லும் கீர்த்தியாய்!
உலப்பி லானே! எல்லா உலகு முடைய ஒருமூர்த்தி!
நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்! உன்னைக் காண்பான்நான்
அலப்பாய் ஆகா சத்தை நோக்கி அழுவன் தொழுவனே.

பொ-ரை :- மேலே போகக் காணவல்ல சக்தியையுடையவர்கள் காண வல்ல அளவுக்கும் அப்பால் போகும்படியான கீர்த்தியையுடையவனே! முடிவு இல்லாதவனே! எல்லா உலகங்களையுமுடைய ஒப்பற்ற மூர்த்தியே! பக்தியினால் மேம்பட்டவர்கள் தங்கியிருக்கிற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்திலே திருக்கண் வளர்கின்றவனே! உன்னைக் காணும்பொருட்டு நான் அலமந்து ஆகாசத்தை நோக்கி அழுவேன், தொழுவேன்.

வி-கு :- காண்கிற்பார்: வினையாலணையும் பெயர். உலப்பு-முடிவு. நலம்-பக்தி. அலத்தல் – அலமருதல்; சுழலுதல்.

ஈடு :- நாலாம் பாட்டு. 3சர்வேச்வரனாயிருந்து வைத்து அடியார்கட்காகத் திருக்குடைந்தையிலே அண்மையிலிருப்பவனாக இருக்க, நினைத்த கைங்கரியத்தைப் பெறாமையாலே நோவுபடாநின்றேன் என்கிறார்.செலக் காண்கிற்பார் காணும் அளவும் செல்லும் கீர்த்தியாய் – 1உன்னுடைய குணங்களால் வந்த பிரசித்தி அடங்கலும் அழியப்புகாநின்றது கண்டாய். 2எத்தனையேனும் அளவுடையாரும் தாங்கள் நின்ற அளவுகளைக் கழித்து அவ்வருகே காணப்புக்கால், அவ்வளவுகளையுடையனாயிருக்கும். 3“பேசுவார் எவ்வளவு பேசுவர்-இது மூன்றாம் திருவந். 21.– அவ்வளவே, வக்கரனைக்கொன்றான் வடிவு”-திவ்விய மங்கள விக்கிரஹத்தின் வைலக்ஷண்யத்தைப் பற்றிப் பேசுமவர்கள் யாதோர் அளவு சொல்லுவார்கள், அவ்வளவாயிருக்குமத்தனை. உலப்பிலானே-ஸ்வரூப குணங்கள் புருஷர்களுடைய புத்திக்கு உட்பட்டவல்லாத அளவாய், தான் ஓர் எல்லையிலே இருக்குமோ? என்னில், உலப்பிலானே-இயல்பிலே எல்லை காண ஒண்ணாதபடியாயிருக்கை. 4தனக்கும் தன்தன்மை அறிவரியானேயன்றோ. எல்லா உலகுமுடைய ஒரு மூர்த்தி- திருவாய்மொழி, 8. 4. 6.5வடிவழகைக் காட்டி எல்லா உயிர்களையும் காற்கீழே இட்டுக்கொள்ளக் கூடியவனே! அன்றிக்கே, வடிவு கண்டபோதே, ‘இவனே இவற்றிற்கெல்லாம் கடவன்’ என்று தோன்றும்படியாய் இருப்பவனே! என்னுதல். அன்றிக்கே, 1‘மூர்த்தி’ என்ற சொல்லானது, விக்கிரஹத்துக்கும் பெயராய், ஐஸ்வரியத்துக்கும் பெயராய் இருக்கும். அப்போது, எல்லா உலகங்கட்கும் நிர்வாஹகனாய் ஒப்பற்றவனான சர்வேச்வரன் என்றபடி. இதனால், இவர்க்குப் பேறு என்? என்னில், உன் பெருமையை அழிக்க அன்றோ புகுகிறாய் என்பது. 2நீர் நோவுபடுகிற இடம் என் எல்லைக்குள் அன்று என்ன ஒண்ணாதே உனக்கு.

நலத்தால் மிக்கார் குடந்தைக் கிடந்தாய்-3நீ ஸ்வரூபங்களால் வேறுபட்டவனாய்க் கொண்டு அங்கே இருந்தாயாகில் நான் ஆறி இரேனோ, உன்னால் அல்லது செல்லாதாருடைய தேசத்தை விரும்பிப் படுகாடு கிடவாநின்றாய், கிரமப் பிராப்தி பற்றாதபடி அன்பு செலுத்தியிருப்பவர்களாதலின் ‘நலத்தால் மிக்கார்’ என்கிறது. 4உன்னைக் காண்பான் நான்-‘ஸ்ரீவைகுண்டம் கலவிருக்கையாக இருக்க, அடியார்களை விடமாட்டாதே திருக்குடந்தையில் திருக்கண் வளர்ந்தருளுகிற உன்னை, மிக்க காதலையுடைய நான், அத்தலை இத்தலையாய்க் காண ஆசைப்பட்டு அலமாவாநின்றேன். உன்னைக் காண்பான் நான்-காண்கிறவன் 1நான் அன்றோ, காண்கிறது உன்னை அன்றோ; ஆன பின்னர், எங்ஙனே ஆறியிருக்கும்படி. உன்னை – 2மேலே கூறிய இனிமையையுடைய உன்னை என்றுமாம். அலப்பாய்-அலமந்து. 3காணும்போது ‘கண்டு கொள்ளுகிறோம்’ என்று, சூது சதுரங்கம் பொருது ஆறியிருக்கும் விஷயமன்றே, காணப்பெறாமையாலே வந்த துடிப்பு. ஆகாசத்தை நோக்கி-4திருவடியினுடைய சப்தம் ஒரு திக்கிலேயாயிருக்கச் செய்தே “அந்தப் பிராட்டி குறுக்கும் மேலும் அப்படியே கீழும் பார்க்கிறவளாய்க்கொண்டு வாயுபுத்திரனான அநுமானை உதயபர்வத்தில் தோன்றுகிற சூரியனைப் போலப் பார்த்தாள்” என்கிறபடியே, பிராட்டி எங்கும் ஒக்கப்பார்த்தாளே அன்றோ.

ஆகாசத்தை நோக்குகைக்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘திருவடியினுடைய’ என்று தொடங்கி.

“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந்
நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம்
வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.

‘உன்னை’ என்னா நிற்கச்செய்தே ‘ஆகாசத்தை நோக்கி’ என்பான் என்? என்னில், ‘அலப்பாய்’ என்றாரே அன்றோ, கலக்கத்தின் காரியம் இருக்கிறபடி. விஷயம் அண்மையில் இருக்கச்செய்தே ஆகாசத்தைப் பார்க்கிறது. நினைத்த பரிமாற்றம் பெறாமையாலே. ‘ஸ்ரீகஜேந்திராழ்வானுக்கு வந்து தோற்றினாற் போலே தம் தசையைப் பார்த்துத் தோற்றுகிறானோ’ என்று பார்த்து.

அன்றிக்கே, ஆகாசத்தை நோக்கி என்பதற்கு, என்னுடைய 5நிராலம்பநதையைப் பார்த்து” என்றுஆண்டான் அருளிச்செய்வர். அன்றிக்கே, 1“வயோதிகரான தசரத சக்கரவர்த்தி அப்படியே வெம்மை தோன்ற பெருமூச்சுவிட்டு ஆகாசத்தை நோக்கிய கண்களையுடையவராய்த் துக்கத்தால் பீடிக்கப்பட்டவன் போலக் கதறினார்” என்று கொண்டு, கண்கள் இலக்கில் தைக்க மாட்டாதபடியாயிற்றுச் சென்றற்றபடி என்னுதல்

“ததைவ உஷ்ணம் விநிஸ்வஸ்ய விருத்தோ தசரதோ ந்ருப:
விலலாப ஆர்த்தவத் துக்காத் ககநாஸக்தலோசந:”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 13 : 16. இது, கைகேசின் வார்த்தையைக் கேட்ட தசரதனது துக்கம்.

. 2அழுவன் தொழுவன்-உபாசகர்கள் செய்யுமதனையும் செய்யாநின்றேன், பிரபந்நர்கள் செய்யுமதனையும் செய்யா நின்றேன். சபலர் செய்யுமதனையும் செய்யாநின்றேன், விரக்தர் செய்யுமதனையும் செய்யாநின்றேன்.

“எல்லாவுலகுமுடைய ஒரு மூர்த்தி” என்பதற்கு, மூன்று வகையாகப்
பொருள் அருளிச்செய்கிறார், “மூர்த்தி” என்பது விக்கிரஹமாய்,
அதனாலே அழகினை விவக்ஷித்து, விக்கிரஹ சௌந்தர்யத்தாலே எல்லா
உலகங்களையும் சேஷமாகக்கொண்டவன் என்பது, முதற்பொருள்.
“மூர்த்தி” என்பது விக்கிரஹமாய், விக்கிரஹத்தைக் கண்டவாறே ‘இவனே
எல்லா உலகங்களுக்கும் சேஷி’ என்று தோற்றும்படியாயிருப்பவன்
என்பது, இரண்டாவது பொருள்.“மூர்த்தி” என்ற சொல்லானது, விக்கிரஹத்தைக் காட்டுமோ? என்ற
சங்கையையும் பரிஹரித்துக்கொண்டு, மூன்றாவது பொருளினை
அருளிச்செய்கிறார் ‘மூர்த்தி என்ற சொல்லானது’ என்று தொடங்கி.
‘அப்போது’ என்றது, செல்வத்திற்கு வாசகமான போது என்றபடி.

சர்வேஸ்வரன் சந்நிகிதனாய் இருந்தும் இழந்தேனே என்கிறார்
கீர்த்தி -காணும் அளவும் செல்லும்
உலப்பு = முடிவு
நலத்தால் மிக்கார் நன்மையால் மிக்க நான்மறையாளர்கள்
அனுக்ரகம் செய்யாமல் இந்த பெரிய கீர்த்தி குறையுமே
நின்ற நின்ற நிலை தாண்டி போனாலும் -அனுபவிக்கும் அளவு விஞ்சி இருக்கும் கீர்த்தி
புகழ் பழியாகும் லோகத்தில்
ஏற்கும் பெரும் புகழ் வானவர் ஈசன் கண்ணன்
பேசுவார் எவ்வளவு பேசுவார் -வடிவு பேசுபவர்கள் -பேசும் அளவும் உயர்ந்து இருக்கும்
ஸ்வரூப குணங்கள் -போலே தானும் உலப்பிலானே -அளவு பட்டு இன்றி
தனக்கும் தன் தன்மை அறிய முடியாமல்
வடிவு அழகை காட்டி கண்டவாற்றால் தனதே உலகு என்று இருக்கும்
மூர்த்தி சப்தம் விக்ரஹம் ஐஸ்வர்யம் வாசகம்
சர்வ லோகங்களுக்கும் நிர்வாஹகன்
பெருமையை அழிக்க கிடாய் –
சர்வ லோக சப்தத்தில் நானும் அடக்கம் தானே
நீர் நோவு படும் என்னுடைய எல்லையில் இல்லை சொல்ல முடியாதே

ராஜா -பண்டிதன் -கதை
நீ தான் பகவானை விட உசந்தவன்
அவனால் செய்ய முடியாததை நீ செய்ய முடியுமே
நாடு கடத்துவேன் இவன் சொல்லலாம்
பகவான் சொல்ல முடியாதே –

எனது கண் முன்னால்  சந்நிகிதனாய் -சஜாதீயனாய் –
நலத்தால் மிக்கார் உன்னால் அல்லால் செல்லாத நல்லவர்கள் உள்ள
க்ரம ப்ராப்தி பாராமல் துடிக்கும்
உன்னைக் காண்பான் நான் –
ஸ்ரீ வைகுண்டம் கலவிருக்கையாய் இருக்க
ஆஸ்ரிதர் விடாமல் இங்கே வந்து கிடந்தது இருக்க
அத்தலை இத்தலையாய்
உனைப் பெற நான் அலப்பாய் துடித்து இருக்க
காண்கிறது உன்னை அன்றோ
வஸ்து விலஷணம் ஆசையும் விஞ்சி
கண்டபோது கண்டு கொள்கிறோம் ஆறி இருக்காமல்
சூது சதுரங்கம் ஆடி பொழுது போக்குவது போலே

ஆகாசத்தை நோக்கி அழுவன் தொழுவன்
திர்யக் திருவடி வார்த்தை கேட்டு திசைகள் தோறும் பார்த்து

ஆகாசத்தை நோக்குகைக்குக் காரணம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘திருவடியினுடைய’ என்று தொடங்கி.

“ஸா திர்யக் ஊர்த்வஞ்ச ததாபி அதஸ்தாந்
நிரீக்ஷமாணா தம் அசிந்த்ய புத்திம்
ததர்ஸ பிங்காதிபதே: அமாத்யம்
வாதாத்மஜம் ஸூர்யமிவ உதயஸ்தம்”-என்பது, ஸ்ரீராமா. சுந். 31 : 19.
கண் முன்னால் பார்த்தாலும் கலங்கி ஆகாசத்தில் இருந்து வருகிறானோ பார்க்கிறார்
கஜேந்திர ஆழ்வானுக்கு வந்து போலே வருவான் என்று
என்னுடைய நிராலம்பம் -முதலியாண்டான் வார்த்தை -பிடிப்பு இல்லாத இடம் ஆகாசம்
பற்றுக் கோல் இல்லையே என்பதை குறிக்க ஆகாசம்

அழுவன் தொழுவன்
சிநேகிதர் செய்வதையும் செய்து -தீனன் செய்யும் கார்யம் தொழுதல்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-3-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 20, 2013

என்னான் செய்கேன் யாரே களைகண் என்னைஎன் செய் கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
கன்னார் மதிள்சூழ் குடந்தைக் கிடந்தாய் அடியேன் அருவாணாள்
செந்நாள் எந்நாள் அந்நாள் உனதாள் பிடித்தே செலக்காணே.

பொ – ரை :- நான் என்ன காரியத்தைச் செய்வேன், துணையாவார் வேறு யாவர், என்னை என்செய்ய இருக்கின்றாய், உன்னால் அல்லாமல் மற்றையோரால் ஒரு குறையும் விரும்பேன், வேலைப்பாடு அமைந்த மதில்களாற் சூழப்பட்ட திருக்குடந்தையில் திருக்கண் வளர்கின்றவனே!அடியேனுடைய ஆத்மா இந்தச் சரீரத்தோடு சேர்ந்து வாழ்ந்திருக்கும் நாள், தொடர்ந்து செல்லுகின்ற நாட்கள் எத்துணை உண்டோ அத்துணை நாட்கள் எல்லாம் உன் திருவடிகளைப் பிடித்துக்கொண்டே நடக்கும்படி திருவருள் புரிய வேண்டும்.

வி-கு :- கண் – தொழில்; வேலைப்பாடு. முதனிலைத் தொழிற்பெயர். அரு – ஆத்மா. வாழ்நாள் என்பது, வாணாள் என மரீயது.

ஈடு :- மூன்றாம் பாட்டு. 1இப்படி நசை அற்றாற்போலே துடித்துக் கிடந்து கூப்பிட்ட இடத்திலும், குளிர நோக்குதல் வினவுதல் செய்யாமையாலே, பேறு தம்மதானால் பெறுவார்க்கும் சில செய்ய வேணும் என்று இருந்தானாகக் கொண்டு, நான் என் காரியம் செய்கை என்று ஒன்று உண்டோ, நீ செய்து தலைக்கட்டித் தரவேணும் என்கிறார்.

என் நான் செய்கேன் யாரே களைகண் என்னை என் செய்கின்றாய் – 2என்மேலே விட்டிருக்கிறாயோ? பிறர் மேலே விட்டிருக்கிறாயோ? நீயே செய்யக்கடவதாக நினைத்திருக்கிறாயோ?

என் நான் செய்கேன்” என்று, தம்முடைய செயல் அறுதியும், “யாரே
களைகண்” என்று, பிறர் ரக்ஷகர் அல்லாமையும், “என்னை என்
செய்கின்றாய்” என்று, அவனைக் கேட்கிறதுமான இம்மூன்றாலும்
இவர்க்குண்டான மனோபாவத்தை அருளிச்செய்கிறார் ‘என்மேலே’
என்று தொடங்கி. ‘என்மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, ‘இவனே
சாதநாநுஷ்டானம் பண்ணுகிறான், நாம் என்’ என்று என் மேலேயாக்கி
முகங்காட்டாதிருக்கிறாயோ? அதற்கு நான் க்ஷமன் அல்லேன் என்கிறார்
என்றபடி.

‘பிறர்மேலே விட்டிருக்கிறாயோ’ என்றது, பிறர் இவனை
ரக்ஷிக்கின்றார்கள் என்று அவர்கள் மேலேயாக்கி
முகங்காட்டாதிருக்கிறாயோ? அவர்கள் ரக்ஷிக்க மாட்டார்கள் என்றபடி.
‘நீயே செய்யக்கடவதாக நினைத்திருக்கிறாயோ’ என்றது, இவர் நிலையும்
பிறர் நிலையும் இப்படியான பின்பு நாமே யன்றோ உளோம் என்று நீயே
ரக்ஷிக்கப் பார்க்கிறாயோ என்றபடி.

‘என் நான் செய்கேன்’ என்றதனால் 3நான் செய்வது எது’ என்று கேட்கிறார் அல்லர்,என் நான் செய்கேன்” என்றது,  அநுவாதமன்று, வினாவுமன்று;
க்ஷேபோக்தியாய், அஜ்ஞனாய் அசக்தனான நான் என்னநான் செய்து தலைக்கட்டுவதாக நினைத்திருக்கின்றவற்றுக்கும் எனக்கும் என்ன சேர்த்தி உண்டு என்கிறார். சாதநாநுஷ்டானம் செய்வேன் என்கிறார் என்றபடி. இதனைக் காட்டுகிறார்
‘நான் செய்வது எது’ என்று தொடங்கி. இங்கே, “என் நான் செய்கேன்’
என்றவிடத்தில் இம்மூன்றும் உண்டு” என்ற ஸ்ரீவசனபூஷண ஸ்ரீ சூக்தி
அநுசந்தேயம்

‘யாரே களைகண்’ என்றதனால், 1அமிழ்ந்துகிறார் அமிழ்ந்துகிறாரை எடுக்கவோ? 2ஒருவருக்கு ஒருவர் உணர்த்திக்கொள்வதற்கும் ஆள் அல்லாதவர்கள் என் காரியம் செய்யவோ? என்கிறார். 3நெறி காட்டி நீக்குதியோ,-பெரிய திருவந்தாதி, 6. “நெறி” என்பது வேறு உபாயங்களை.
நின்பால் கரு மாமுறி மேனி காட்டுதியோ, நீ நினைத்திருக்கிறது என்? என்பார் ‘என்னை என் செய்கின்றாய்’ என்கிறார். என் நான்செய்கேன் யாரே களைகண் என்னை என்செய்கின்றாய் – 4என்னை அறியாயோ! பிறரை அறியாயோ! உன்னை அறியாயோ 5என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது.

ஆக, “என் நான் செய்கேன், யாரே களைகண், என்னை என்
செய்கின்றாய்” என்ற இம்மூன்றாலும், உன் அபேக்ஷை ஒழிய,
முகங்காட்டாமைக்கு வேறு காரணம் இல்லை என்பது இவர்க்குத்
திருவுள்ளம் என்னுமிடம் தோன்ற அருளிச்செய்கிறார் ‘என்னை
அறியாயோ’ என்று தொடங்கி.

5. ‘அஜ்ஞனாய் அசக்தனான நான் என்ன சாதநாநுஷ்டானம் பண்ணுவேன்’
என்னுமதனைக் குறிப்பாக அருளிச்செய்கிறார் ‘என்னை’ என்று தொடங்கி.
‘என்னை நானாகவன்றோ புத்தி பண்ணி இருக்கிறது’ என்றது, நான்
என்னை ‘அஜ்ஞன், அசக்தன், அப்ராப்தன்’ என்று
புத்திபண்ணியிருக்கவில்லையோ, சர்வஜ்ஞனாய், சர்வ சக்தியான தேவரீரைப்
போன்று எண்ணிவிட்டதோ என்றபடி.

யாரே களைகண்-என்னளவு கிட்டாதார் எனக்கு ரக்ஷகர் ஆகவோ. என்னை என்செய்கின்றாய்-நீ செய்து தலைக்கட்டப் பார்த்தாயோ? அன்றிக்கே, ‘சாதநாநுஷ்டானம் செய்து வாரும்’ என்று நளன் தமயந்திக்கு வழி காட்டினாற்போலே கைவிடப் பார்த்தாயோ? என் நான் செய்கேன்-2தாம் கைவாங்கின படி. யாரே களைகண்-பிறர்பக்கல் நின்றும் கைவாங்கினபடி. என்னை என்செய்கின்றாய்-3“என்னை ஆராதிக்கின்றவன் ஆவாய், என்னை நமஸ்காரம் செய்வாய்” என்னப் பார்த்தாயோ? 4“துக்கப்படாதே” என்னப் பார்த்தாயோ?

5உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்-6“என்னை நமஸ்காரம் செய்வாய், என்னை அடைவாய்” என்றால் எனக்குச் சோகம் போகாது கண்டாய். ‘யாவையாலும்’ என்னாமல், ‘யாவராலும்’ என்கிறது உபாயபாவம் ஒருசேதனனாலே என்றிருக்கையாலே. அன்றிக்கே, 1பெறுவது உன்னையேயாகிலும் உன்னாலே பெறுமன்று வேண்டுவன், என்னாலும் பிறராலும் பெறும் உன்னையும் வேண்டேன். 2மற்றையவற்றிற்கும் அபிமத சித்தி உண்டேயாகிலும் காலன் கொண்டு மோதிரம் இடுமாறு போலே ஸ்வரூபவிரோதியானது எனக்கு வேண்டாம். 3கடல் கடத்தப் பெற இருத்தல், சபித்துப் பெற இருத்தல் செய்யாத பிராட்டியைப் போலே. என்றது, இரண்டு தலைகளையும் அழிக்கையே அன்றோ. ஒருவராலும் ஒருகுறை நிரம்புவதாக வேண்டி இரேன். அன்றிக்கே, 4‘உன்னால் அல்லால்’ என்கிற இதனை, உபேய விஷயமாக்கி, ‘உன்னை ஒழியமற்றென்றால் எனக்கு ஒருகுறை இல்லை’ என்று சொல்லுவாருமுளர். கன் ஆர் மதிள் சூழ் குடந்தைக் கிடந்தாய்-1இவருடைய உபாயம் அரண் செய்து கிடக்கிறபடி. ‘அவனே உபாயமும் உபேயமும்’ என்று அறுதியிட்டவர்கள் அத்தலையில் உண்டான பரிவாலே அவனைக் காக்கை பணியே அன்றோ. “செவ்வடி செவ்வி திருக்காப்பு” என்றாரே அன்றோ. கண் ஆர் மதிள்-தொழில் மிக்க மதிள் என்னுதல். செம்பாலே செய்யப்பட்ட மதில் என்னுதல். ‘கன்’ என்பது, தொழிலும், செம்பும், சிக்கெனவும் எனப் பல பொருள்படும் ஒருசொல்.

அடியேன் அரு-உனக்கு அநந்யார்ஹமாய்த் தனக்கு உரித்தல்லாத இந்த ஆத்மவஸ்து. வாழ்நாள் செல்நாள் எந்நாள்-ஜீவித்துக்கொண்டு செல்லும்நாள் யாதொருநாள். அந்நாள்-அந்த நாட்கள் முழுதும். உன தாள் பிடித்தே செலக்காணே-உன் திருவடிகளையே பெற்றுச் செல்லும்படி பார்த்தருள வேண்டும். 2காற்கூறும் விடாதபடி பார்த்தருள வேண்டும். 3‘ஒன்றும் குறை வேண்டேன்’ என்ற பின்னர், வந்து குறை நிரப்பக் கண்டிலர்; இனி அநுபவம் பெற்றபோது பெற, ‘உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்’ என்கிற இந்த உறுதி

குலையாதபடி பார்த்தருள வேண்டும் என்கிறார். 1அடிவிடில் உறுதி குலையுமே, 2அடியே பிடித்து ஜீவித்தவர் அதனை விடாரே இப்போதாக. அத்யவசாயம் இது, ருசியில் வந்தால் பரபக்தியையுடையவர், விளம்பத்துக்குக் காரணம் என்? என்னில், பக்தி விபாகத்துக்காகவும், இவருடைய பிரேமம் வழிந்த சொல்லால் நாட்டினைத் திருத்துகைக்காகவும்.

‘என்னளவு கிட்டாதார்’ என்றது, உன் திருவருளுக்கு என்னைப் போன்று
இலக்கு ஆகாதவர்கள் என்றபடி. அன்றிக்கே, என்னளவு ஞான பக்தி
இல்லாதவர் என்னுதல்.

2. “என் நான் செய்கேன், ‘யாரே களைகண், என்னை என்செய்கின்றாய்”
என்னும் இம்மூன்றாலும், ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களும், அவனே
ரக்ஷகன் என்னுமதுவும் சொல்லப்படுகின்றன என்னுமிடம் தோற்ற
அருளிச்செய்கிறார் ‘தாம்’ என்று தொடங்கி. ‘தாம் கைவாங்கினபடி’
என்றது, ஆகிஞ்சந்யத்வம்; ‘பிறர் பக்கல் நின்றும் கை வாங்கின படி’
என்றது, அநந்யகதித்வம்; ‘அவனே ரக்ஷகன்’ என்னுமிடம் கூறுவது.

3. “மந்மநா பவ மத்பக்தோ மத்யாஜீ மாம் நமஸ்குரு
மாமேவ ஏஷ்யஸி யுக்த்வா ஏவம் ஆத்மாநம் மத்பராயண:”

என்பது ஸ்ரீகீதை. 9. 34.

4. ஸர்வதர்மாந் பரித்யஜ்ய மாமேகம் ஸரணம் வ்ரஜ
அஹம் த்வா ஸர்வ பாபேப்யோ மோக்ஷயிஷ்யாமி மாஸுச:”

என்பது ஸ்ரீகீதை. 18 : 66.

5. இதுகாறும் அநப்யுபகம்யவாதத்தாலே அருளிச்செய்தார்; இனி,
அப்யுபகம்யவாதத்தாலே அருளிச்செய்கிறார் ‘உன்னால் அல்லால்’ என்று
தொடங்கி. என்றது, வேறு உபாயங்களிலே தமக்கு ஞானசக்திகளும்
உண்டாய், வேறு தெய்வங்கட்கு மோக்ஷத்தைக் கொடுக்கும்
சக்தியுமுண்டாகிலும், ஸ்வரூபத்திற்கு விரோதமாகையாலே தமக்கு வேண்டா
என்கிறார் என்றபடி. அநப்யுபகம்யவாதம் – உடன்படாமலே பேசுகின்ற
வாதம். அப்யுபகம்யவாதம் – உடன்பட்டுப் பேசுகின்ற வாதம்.

6. உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்” என்பதற்கு,
மூன்று வகையாகப் பொருள் அருளிச்செய்கிறார். அவற்றுள், முதலது, “என்
நான் செய்கேன்” என்றதனை மாத்திரம் கடாக்ஷித்து அருளிச்செய்வது.
என்றது, உன்னால் வரும் உன்னை ஒழிய,

வேறு உபாயங்களால் வரும் உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி.
இதனையே அருளிச்செய்கிறார் ‘என்னை நமஸ்காரம் செய்’ என்று
தொடங்கி. அங்ஙனமாயின், ‘யாவையாலும்’ என்னாது, “யாவராலும்” என்றது
என்னை? எனின், அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘யாவையாலும்’ என்று
தொடங்கி.

1. இரண்டாவது பொருள். “என் நான் செய்கேன், யாரே களை கண்” என்னும்
இரண்டனையும் கடாக்ஷித்து அருளிச்செய்வது. என்றது, உன்னாலே பெறும்
உன்னை ஒழிய, வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும் பெறும்
உன்னையும் வேண்டேன் என்கிறார் என்றபடி. இதனையே, ‘பெறுவது
உன்னையேயாகிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார்.

2. பெறுவது நம்மையானால், வேறு உபாயங்களாலும், வேறு தெய்வங்களாலும்
நம்மைப் பெற்றால் விரோதம் என்? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘மற்றையவற்றிற்கும்’ என்று தொடங்கி. காலன் கொண்டு
– காலபுருஷதானம் வாங்கி.

3. அப்படி வேண்டாம் என்று இருந்த பேர் உளரோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘கடல் கடத்த’ என்று தொடங்கி. ‘கடல் கடத்த’
என்றது, திருவடியினால் கடல் கடத்தப்பட்ட என்றபடி. ‘சபித்துப் பெற’
என்றது, பிராட்டியாகிய தான் சபித்து என்றபடி. அப்படிச் செய்தால்,
அவனுடைய ரக்ஷகத்வத்துக்கும் தன்னுடைய பாரதந்திரியத்திற்கும் சேராது
என்கிறார் ‘என்றது’ என்று தொடங்கி.

4. மூன்றாவது பொருள்: உம்மாலும் பிறராலும் சாத்யம் அல்லாத என்னை
விட்டு, உபயசாத்யமான ஐஸ்வர்யாதிகளைப் பெற்றுப்போம் என்ன,
‘உன்னால் அல்லால்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார்.
‘உன்னை ஒழிய மற்றொன்றால்’ என்றது, பிராப்யனான உன்னை ஒழிய
வேறோர் ஐஸ்வர்யாதிகளால் என்றபடி.அசேதனமான ஐஸ்வர்யாதிகளை “யாவராலும்” என்றது, ‘பிராப்பியம்
ஒரு பரமசேதனம்’
என்கிற வாசனையாலே என்க. ‘சொல்லுவாருமுளர்’
என்கையாலே, இப்பொருள் அத்துணைச் சிறப்புடைத்தன்று என்பது
போதரும்.

பேறு என்னதால் -நாம் ஒரு கார்யம் செய்வது உண்டோ
உனது திருவடிகளைப் பிடித்து செல்லும்படி
என் மேல் விட்டு இருக்கிறாயோ என் நான் செய்கேன் இம்மூன்றும் உண்டு
அர்த்த த்ரயம்
பிறர் ரஷிப்பாரா
நீ ரஷிக்க மாட்டாயா
நான் எது செய்வது கேட்கிறார் அல்லர் ஒன்றும் செய்ய முடியாது என்கிறார்
பிரத்யனங்கள் ஒன்றும் செய்யாமல்
யாரே களைகண் -ரஷகன் நீ இருக்க
அமிழ்ந்தாரை அமிழ்ந்தார் எழுப்பவோ
என்னை என் செய்கின்றாய்
நெறி காட்டி நீக்குதியோ
வழி காட்டி கொள்வாயா
நீ நினைத்து இருக்கிறது என்ன
என்னை அறியாயோ
பிறரை அறியாயா
உன்னை அறியாயோ சக்தன்
என்னை நான் ஆக வன்றோ புத்தி பண்ணி அசக்தன் அப்ரப்தன்
நீயே செய்து தலைக் கட்ட பார்ப்பாயோ
நளன் தமயந்தி -கதை -வழி காட்டி -நீக்க -தகப்பனார் தேசம்
வழி காட்டுவது கை விட தானே
சாதன அனுஷ்டானம் செய்து
மாம் நமஸ்குரு என்றால் சோகம்

என் நான் செய்கேன்
யாரே களை கண்
என்னை என்ன  செய்கின்றாய்
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
என் மேல் விட்டு இருக்கிறாயா பிறர் மேல் விட்டு இருக்கிறாயா நீ என்ன செய்வதாக இருக்கிறாய்
பிரபத்தி செய்யும் அதிகாரர் மூவர் -ஸ்ரீ வசன பூசான ஸ்ரீ ஸூக்தி
அஞ்ஞானத்தால் அஸ்மாத்தாதிகள்
ஞானாதிகர் -ஆச்சார்யர் –
பக்தி பரவசம் உள்ள ஆழ்வார்கள்
ஊற்றத்தைப் பற்ற -ஆசார்யர்களுக்கும் பக்தி பாரவச்யம் உண்டே –
நமக்கும் ஞானம் கொஞ்சம் உண்டு அஞ்ஞானம் அதிகம் –
அதிகமாக உள்ளவற்றை பற்றி சொல்லி
என் நான் செய்கேன் என்பதில் இம் மூன்றும் உண்டு
தன்னைப் பெரும் இடத்தில் உபாயாந்தரம் செய்ய யோக்யதை இன்றி அஞ்ஞனாய்
இருப்பதை என் நான் செய்கேன்
மயர்வற மதி நலம் அருளினேன் ஞானாதிக்யம் உண்டே
ஸ்வரூபம் பாரதந்த்ர்யம் உணர்ந்து அறிந்து அனுஷ்டிக்காமல் –
ஞானம் மாதரம் கொடுத்து இருந்தால்
மதி நலம் பக்தி ரூபாபன்ன பரிமளித்த ஞானம் கொடுத்து அருளினாய் என் நான் செய்கேன்
பக்தி பாரவச்யமும் கொடுத்து அருளினாய் என் நான் செய்கேன் –
இப்படி ஒவ் ஒன்றையும் மூன்று தடவை அந்வயித்து பொருள் கொள்ள வேண்டும்
24000 படி –
யாரே களை கண் -தங்கள் ரஷணத்துக்கு -வேத அபகார குரு பாதக
உன்னால் அல்லால் யாவராலும் ஒன்றும் குறை வேண்டேன்
நீ உன்னை தரப் பார்த்தாயோ
நான் சக்தன் ஆக இருந்தாலும் -பிறர் ரஷகர் ஆனாலும் -இல்லாததையும் சேர்த்து
உன்னால் வரும் நீ ஒழிய என்னால் வரும் நீ யும் வேண்டாம்
தவமே உபாய பூதோ மே பவ
ஏவகாரம்
மாம் ஏகம் போலே
தென்னாச்சார்யா சம்ப்ரதாயம் உயிர் நிலை அர்த்தம் இந்த ஏவகாரம்

உன்னுடைய பேறு உன் அனுக்ரகத்தாலே வேண்டும்
கன்னார் மதிள் சூழ்
செம்பாலே செய்த மதிள்
ஆஸ்ரிதர் அஞ்ச வேண்டாதபடி
அவன் சக்தியை அனுசந்தித்து அவனே மதிள் ஆக
நினைத்து அவனது சௌ குமார்யம் அனுசந்தித்து -ஆபத்து வாராமல் இருக்க மதிள்
மதிளுக்கு மதிள் இடுகிறார் மங்களா சாசனம் செய்து கன்னார் மதிள் என்கிறார்
என்னுடைய அத்ய வசாயம் குறையுமோ பயந்து ஆகாமல்
அடியேன் -உன தாள் பிடித்து செலக் காண அருளுவாய் என்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-2-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 20, 2013

எம்மானே! என் வெள்ளை மூர்த்தி! என்னை ஆள்வானே
எம்மா உருவும் வேண்டு மாற்றால் ஆவாய்! எழிலேறே!
செம்மா கமலம் செழுநீர் மிசைக்கண் மலரும் திருக்குடந்தை
அம்மா மலர்க்கண் வளர்கின்றானே! என்நான் செய் கேனே?

பொ-ரை :- எம்மானே! பரிசுத்தமான சொரூபத்தையுடையவனே! என்னை ஆள்கின்றவனே! எத்தகைய பெருமை பொருந்திய உருவங்களையும் விரும்பும் வகையிலே மேற்கொள்கின்றவனே! அழகிய ஏறே! சிவந்த பெரிய தாமரை மலர்கள் செழுமை பொருந்திய தண்ணீர் மேலே கண்கள் போன்று மலர்கின்ற திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அந்த அழகிய தாமரை போன்ற திருக்கண்களை மூடிக்கொண்டு உறங்குகின்றானே! நான் என் செய்வேன்? என்கிறார்.

வி-கு :- மூர்த்தி – ஸ்வபாவம், வடிவுமாம்; ஏறு – இடபம். மிசைக்கண் என்றவிடத்தில் ‘கண்’ இடமுமாம். ‘வளர்கின்றானே’ என்பது, கண்களைத் திறந்து என்னை வினவுதல் செய்யாது உறங்குகின்றானே, என் செய்வேன்! என்கிறார் என்றபடி.ஈடு :- இரண்டாம் பாட்டு. 1இப்படிக் கூப்பிடச் செய்தேயும் மறுமாற்றம் தாராமையாலே, ‘உம்முடைய கார்யம் நீரே செய்யுமித்தனை அன்றோ’ என்று இருந்தானாகக் கொண்டு முன்பு செய்த உபகாரங்களைக் கூப்பிடுகிறார்.

எம்மானே! என் நான் செய்கேன் – 2உடைமையோ! உடையவனோ உடைமையை நிர்வஹிப்பார். ‘நீயே உன் காரியத்தைச் செய்து தலைக்கட்டிக்கொள்’ என்கைக்கு வெறும் நானேயாய் இருந்தேனோ. என் நாதனே! எம்மானே என் வெள்ளைமூர்த்தி – 3“உலகத்திற்கெல்லாம் தலைவன்”, “அந்தச் சர்வேச்வரனுக்கு அடியவனாய் இருக்கிறேன்”

“பதிம் விஸ்வஸ்ய ஆத்மேஸ்வரம் ஸாஸ்வதம்
ஸிவம் அச்யுதம்.”
“யஸ்ய அஸ்மி தம் நாந்தரேமி.”
என்கிற பிரமாணங்கொண்டு அறிந்தேனோ.

பின்னர் எங்ஙனே செய்தபடி? என்னில், 4சுத்த ஸ்வரூபனாகையாலே தன்படிகளில் ஒன்றும் குறையாதபடி எனக்குத்தன்பேறாகத் தானே காட்டக் கண்டேன். சிறிது மயர்வு கிடக்க நீ அருளினாயாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்னை ஆள்வானே – காட்டுகிறபோது தெரியக் காட்டி, பின்னர் என்வழியேயாக்கி என்னைக் கைவிட்டாயோ. என்றது, “அஞ்சிறைமடநாராய்”, “மாசறு சோதி” தொடக்கமான திருவாய்மொழிகளிலுண்டான வியசனங்களையும் போக்கி, குணஞானத்தாலே தம்மைத் தரிப்பித்துக்கொண்டு போந்த படியைத் தெரிவித்தபடி. எம் மா உருவும் ஆவாய் – 1எனக்காகவும் அடியார்கட்காகவும் நீ படும்பாடு அறிவுதியே. அன்றிக்கே, ‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு, 2எவ்வகையாலும் விலக்ஷணமான விக்கிரஹங்களை மேற்கொள்ளுகின்றவனே! என்னுதல். என்றது, 3“என்னுடையதான ஸ்வபாவத்தை ஏற்றுக்கொண்டு” என்கிறபடியே,

அவதார விக்ரஹங்களுக்கு வைலக்ஷண்யம் உண்டோ? என்ன, அதற்கு
விடை அருளிச்செய்கிறார் ‘என்னுடையதான’ என்று தொடங்கி.

“அஜோபிஸந் அவ்யயாத்மா பூதாநாம் ஈஸ்வரோபிஸந்
ப்ரகிருதிம் ஸ்வாம் அதிஷ்டாய ஸம்பவாமி ஆத்ம மாயயா”-  என்பது, ஸ்ரீ கீதை, 4 : 6.

பிரகிருதி சம்பந்தமில்லாத தெய்வத்தன்மை பொருந்திய திருமேனியாக இருக்கை. 4வேண்டுமாற்றால் – “தனக்கு வேண்டு உருக்கொண்டு” என்கிறபடியே, இச்சையாலே என்னுதல். அடியார்கள் வேண்டுமாற்றால் என்னுதல்; “தமருகந்ததெவ்வுருவம் அவ்வுருவம் தானே” -முதல் திருவந். 44.-என்னக்கடவதன்றோ.அன்றிக்கே, ‘எ மா உருவும் ஆவாய்’ என்று கொண்டு 1“எந்நின்ற யோனியுமாய்ப் பிறந்தாய்” என்கிறபடியே, அடியார்களைக் காக்கும்பொருட்டு நீ கொள்ளாத வடிவு உண்டோ என்னுதல். எல்லா வடிவங்களும் அவன் கொண்டவையாகையாலே சிலாக்கியமாயிருக்கிறபடி; ஆதலால், “மா உரு” என்கிறது. என்றது, 2தோன்றுதல்” என்கிறபடியே,

தத : அகில ஜகத்பத்மபோதாய அச்யுதபாநுநா
தேவகீ பூர்வசந்த்யாயாம் ஆவிர்பூதம் மஹாத்மநா”-  என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 3 : 2.

பிரகிருதி சம்பந்தம் இல்லாத தெய்வத் திருமேனியை இதர சஜாதீயமாக்குமித்தனை என்றபடி. 3“பகவானுடைய மகத்தான அந்தத் திவ்ய மங்கள விக்கிரஹமானது வேறுபட்டது” என்னுமித்தனை அன்றோ.

“ஸமஸ்தா: ஸக்தய: ச ஏதா: ந்ருப யத்ர ப்ரதிஷ்டிதா:
தத் விஸ்வரூப வைரூப்யம் ரூபம் அந்யத் ஹரே: மஹத்”-என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 6. 7 : 70. இது, அவனுடைய விக்ரஹம்
அப்ராக்ருதம் என்பதற்குப் பிரமாணம். ‘வேறுபட்டது’ என்றது,
அப்ராக்ருதமாயிருக்கும் என்றபடி.

கர்மம் அடியாக இவன் பிறக்குமாறு போலே அன்றோ அநுக்கிரஹம் அடியாக அவன் பிறக்கும்படி என்பார் “வேண்டுமாற்றால் ஆவாய்” என்கிறார்.

4இருவர்க்கும் பிறவி ஒக்கும். இவனுக்குக் கர்மங்கள் அழியப் பிறவி நீங்கும், 5இவன் கர்மங்கள் அவன்காலிலே குனியப் போம்; அவனுக்கு நித்தியமாகச் செல்லாநிற்கும். 1இனி, அவனுக்குக் கர்மம் என்னப்பார்க்கிறது, அநுக்கிரஹத்தை அன்றோ, அதுதானும் நித்தியமே அன்றோ அவனுக்கு. 2இவனுக்கு இவன்தன் அளவிலே பிறக்க அமையும், அவனுக்கு எல்லார்க்குமாகப் பிறக்க வேணுமே. 3இவனுக்குக் கர்மங்காரணமாக வந்ததாகையாலே தன்பொருட்டேயாயிருக்கும், அவனுக்கு அநுக்கிரஹம் காரணமாக வந்ததாகையாலே பிறர் பொருட்டேயாயிருக்கும். 4“அருச்சுனா! உன்னுடைய பிறவிகளைப் போலவே என்னுடைய பல பிறவிகளும் கழிந்து போயின” என்றான் அன்றோ.

ஈச்வரனுடைய அவதாரங்கள் எண்ணிறந்தன என்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘அருச்சுனா!’ என்று தொடங்கி.

“பஹூநி மே வ்யதீதாநி ஜன்மாநி தவச அர்ஜு ந
தாந்யஹம் வேதஸர்வாணி நத்வம் வேத்த பரந்தப”-  என்பது, ஸ்ரீகீதை, 4 : 5.

5“தவச – உனக்கும்” என்கிறது, உன்னுடைய பிறவி மெய்யாய் இருக்குமாறு போன்று, என்னுடைய பிறவி ஐந்திர ஜாலிகம் அன்றுகாண் என்பதற்கு.

இப்படி இராத அன்று இவனுக்கு மார்விலே கையை வைத்து உறங்க ஒண்ணாதே.

இப்படி இராத அன்று’ என்று தொடங்கும் வாக்கியத்துக்குக் கருத்து,
அவதாரங்கள் உண்மையல்லவானால், அவ்வவதாரங்களில் சொல்லப்பட்ட

“ஸக்ருதேவ ப்ரபந்நாய தவாஸ்மீதி ச யாசதே
அபயம் ஸர்வபூதேப்யோ ததாமி ஏதத் வ்ரதம் மம”-  (ஸ்ரீராமா. சுந். 18:33.) என்பது போன்ற சுலோகங்களும் உண்மையல்லவாம்
ஆகையாலே, அவ்வார்த்தைகளை நம்பிப் பயம் அற்றவனாயிருக்கக்
கூடாதே என்பதாம். அன்றிக்கே, இப்படி, அவன் அனுக்ரஹத்தாலே
அவதாரங்களைச் செய்யாதபோது, இவனுக்கு ‘அவனே ரக்ஷகன்’ என்று
நம்பிப் பயமற்றவனாயிருக்க விரகு இல்லையே என்னுதல்.

எழில் ஏறே – இப்படி அடியார்கட்காகப் பிறவாநின்றால் பழைய புகரில் குறைந்து வருமோ? என்னில், பண்டு இல்லாத எழிலும் உண்டாயிருக்கை. 2கர்மத்தால் பிறக்கில் அன்றோ நிறக்கேடாவது. பல பிறப்பாய் ஒளி வரும் முழுநலமே அன்றோ. “அவதரித்த பின்பு அந்தப் பரமாத்மா மிகுந்த ஒளியையுடையவனாகிறான்” என்பது சுருதி. 3எல்லார்க்கும் பிறக்கப் பிறக்கப் புகர் அழிந்து வரும், இவன் ஒருவனுக்கும் பிறவா நின்றால் புகர் உண்டாகா நிற்கும். தேசம் அறியப் புகர் உண்டாய் நெஞ்சு வெறுத்திருக்குமோ? என்னில், 4“பட்டி மேய்ந்தோர் காரேறு” என்கிறபடியே, ‘பிறக்கப் பெற்றோம்’ என்னும் மேனாணிப்பையுடையவனாயிருக்கும். “வானிளவரசு” என்கிறபடியே, பெரியாழ்வார் திருமொழி,
3. 6 : 3. “வானிளவரசு’ என்பதற்குப் பொருள், முதியோர்களான
அமைச்சர்களின்கீழே இளவரசன் இருப்பது போன்று, நித்தியசூரிகள்
தங்கியிருக்கின்ற பரமபதத்தில் இளவரசாக உள்ளவன் என்பதாம்

அகம்படி வைத்த அரசாய் இருக்கும் அங்கு, அச்செறுப்புத் தீர, தான் விரும்பினபடி சஞ்சரிக்கப்போந்த இடமே அன்றோ இது. ஆகையாலே, அங்கு நின்றும் போந்து பிறந்த பின்பாயிற்று ‘எழில் ஏறு’ ஆயிற்று. 1அடி அறிவார், 2தேவரீர், பிராட்டியோடு கூடியவரும் சக்கரத்தைத் தரித்தவரும் எங்கும் நிறைந்திருப்பவருமான நாராயணன் என்னும் தெய்வம் ஆவீர்; தேவரீர் ஒற்றைக் கொம்புள்ள வராக அவதாரம் செய்தவர், சென்றவர்களும் வருகின்றவர்களுமான பகைவர்களை அழித்தவர்” என்றால், அது பொறாதவனாய்

“பவாந் நாராயணோ தேவ: ஸ்ரீமாந் சக்ராயுதோ விபு:
ஏகஸ்ருங்கோ வராஹ: த்வம் பூதபவ்யஸபத்நஜித்”

என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 13. ஸ்ரீராமபிரானைப் பார்த்துப் பிரமன் துதித்தது.

3“என்னை மனிதனாகவும் இராமன் என்கிற பெயரையுடையவனாகவும் தசரத சக்கரவர்த்திக்குப் புத்திரனாகவும் எண்ணுகிறேன்” என்றும்,

ஆத்மாநம் மாநுஷம் மந்யே ராமம் தசரதாத்மஜம்
யோஹம் யஸ்ய யதஸ்சாஹம் பகவாந் தத் ப்ரவீது மே”  என்பது, ஸ்ரீராமா. யுத். 120 : 11.

4“நான் தேவனும் அலன், கந்தருவனும் அலன், இயக்கனும் அலன், அசுரனும்அலன், நான் உங்களுக்கு உறவினனாகத் தோன்றி இருக்கிறேன்” என்றும் சூழ்த்துக் கொடுக்கும்படி அன்றோ அவதாரத்தில் மெய்ப்பாடு இருக்கும்படி.

செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும் திருக்குடந்தை அம் மா மலர்க்கண் வளர்கின்றானே – அவதாரகாலத்தில் உதவாதார்க்கும் இழக்க வேண்டாதபடி அன்றோ 1கோயில்களிலே வந்து திருக்கண் வளர்ந்தருளுகிறது.

கோயில்களிலே’ என்ற இவ்விடத்தில்
நாகத் தணைக்குடந்தை வெஃகா திருவெவ்வுள்
நாகத் தணையரங்கம் பேரன்பில் – நாகத்
தணைப்பாற் கடல்கிடக்கும் ஆதி நெடுமால்
அணைப்பார் கருத்தனா வான்.
(நான்முகன் திருவந்தாதி என்ற திருப்பாசுரம் அநுசந்தேயம்.

2பரிமளம் முகத்தே வந்து அலை எறிய அதுதானே துடை குத்தக் கிடந்து உறங்குகிறபடி. அன்றிக்கே, 3சிவந்த பெரிய தாமரைகளானவை, காட்சிக்கு இனியதான நீரை அமுக்கி மேலே அலருகிறபோது, கடல்நிறமான வடிவையும் அங்குத்தை அவயவங்களையும் காட்டாநின்றன ஆதலின் ‘செம் மா கமலம் செழுநீர் மிசைக் கண் மலரும்’ என்கிறார் என்னுதல். அரைக்கணத்திலே செவ்வி மாறுகிற தாமரை அங்குத்தைக்கு ஒப்பாகாதே அன்றோ, வருந்திச் சொல்லும்போதும் இத்தனை ஏறிட்டுச் சொல்ல வேணுங்காணும் என்பார் ‘செம்மா கமலம்’ என்கிறார். 4அழகிய தாமரைப்பூப் போலே இருக்கிற திருக்கண்கள் அலரக் காண்கின்றிலேன் என்பார் ‘அம் மா மலர்க்கண் வளர்கின்றானே’ என்கிறார்.

நாஹம் தேவோ ந கந்தர்வோ ந யக்ஷோ நச தாநவ:
அஹம்வோ பாந்தவோ ஜாதோ நைதச் சிந்த்ய மதோந்யதா”-
என்பது, ஸ்ரீ விஷ்ணுபுரா. 5. 13 : 12. இது கோவர்த்தந கிரியை எடுத்துக்
குடையாகப் பிடித்து நிற்கும் கோபாலன், ஆயர்களைப் பார்த்துக் கூறியது,
சூழ்த்துக் கொடுக்கும்படி – ஆணையிட்டுக் கொடுக்கும்படி.

அன்றிக்கே, அவற்றோடே ஒரே சாதியினவான இரண்டு பூக்கள் அலரக் காண்கின்றிலேன் என்கிறார் என்னுதல். என் நான் செய்கேனே – இவை இரண்டும் மலர்ந்தால் அல்லது தரியாதிருக்கிற நான் என்செய்கேன்? 1திருக்குடந்தையிலே தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக்கூடிய வண்டுகள் தேனைக் குடித்துக் களியா நின்றன, இத்தாமரைகள் அலர்ந்தால் தேனைக் குடிக்கக் கூடிய வண்டு இங்ஙனே பட்டினி கிடந்து போமித்தனையோ! 2‘இக்கூப்பீடு உருவச் செல்லும்’ என்று இருக்கிறாயோ, சென்றற்றது கண்டாய். 3‘இவை ஒழிய மதுபானம் செய்யோம்’ என்கையன்றோ இவர்க்கு இங்ஙன் படவேண்டுகிறது. 4இனி, இவை அலர்தலாவது, விசேஷ கடாக்ஷம் பண்ணுகை காணும். அவன் கண் விழியாத போது இவர் கண் விழிக்க மாட்டாரே.

இப்படி கூப்பிடச் செய்தேயும்
உம்முடைய கார்யம் நீரே செய்யும் என்ற திரு உள்ளமாக கொண்டு
அவன் செய்து அருளிய உபகார பரம்பரைகள்
என் நான் செய்கேன்
எம்மான்
என் வெள்ளை மூர்த்தி
என்னையும் ஆண்டு
மூர்த்தி பலவும் காட்டு அருளி
உடைமை உடையவன் நிர்வக்கிக்க வேண்டுமே -எம்மானே என்கிறார்
வெறும் நானே யாய் இருந்தேனோ ஸ்வாமி நீ தான் என்னுடைய நாதன்
பதிம்  விச்வச்ய -சாஸ்திரம் கொண்டு அறியாமல் வெள்ளை மூர்த்தி
நீயே  காட்டக் கண்டேன்
மயர்வு கிடக்க அருளினாய் ஆகில் ஆறி இருக்கலாம்
என்னை ஆள்வானே -கை விடாமல் ஆண்டு
அஞ்சிறைய மடநாராய் மாசுருசோதி வியசனங்கள் தீர்த்து தரிக்க செய்து அருளினாய்
தரித்து பிராணனைக்  கொடுத்து ஆண்டு
எம் மா உருவும் ஆவாய் -சங்கல்பத்தால் இச்சா கிருகீக எந்த ரூபத்தையும் கொண்டு
நீ படும் பாடு எனக்காகவும் ஆஸ்ரிதருக்கும் விலஷணமான திருமேனி
பிராப்க்ருத திருமேனி தனக்கு வேண்டிய உரு கொண்டு
வேண்டுமாற்றால் தான் வேண்டுமாற்றால் -அடியார்கள் வேண்டுமற்றால்
இச்சையால் அபிமத திருமேனி ஸு இச்சை மட்டும் இல்லை
பாகவத இச்சை
தமர் உகந்த எவ்வுருவம் அவ்வுருவம் தானே
என்நின்ற யோனியுமாய் பிறந்தாய்

ஆவிர்பூதம் -இதர சஜாதீயமாக்கிக் கொண்டு -திருக்கல்யாண குணங்கள்
அந்ய ரூபம் தரித்து
அனுக்ரஹம் அடியாக திரு அவதரித்து
இருவருக்கும் பிறவி ஒகுக் அநேகம்
இவனுக்கு கூட முடியும் அவனுக்கு அவதாரங்கள் முடியாதே
கர்மம்
முடியலாம் சம்சாரிகள் அனைவரையும் கூட்டிச் செல்ல
இவன் கர்மம் அவன் காலிலே புகுரப் போகும்
அவனுக்கு கர்மம் நித்யம் அனுக்ரஹம் தானே கர்மம் நித்யம்
அவன் எல்லாருக்குமாக பிறக்க வேண்டுமே -பரார்தமாக இருக்கும்
பஹுனி மே ஜன்மானி -உன்னுடைய பிறவி மெய் போலே என்னுடிய பிறவியும் இந்த்ரஜாலம் போலே இல்லை
அப்படி இல்லாத பொது இவனுக்கு மார்பிலே கை வைத்து உறங்குதல் இல்லையே
எழில் ஏறு -ரிஷபம் ஆஸ்ரித அர்த்தமாக புகர் மிக்கு அவதரித்து

எழில் மேலே மேலே ஏறும்
பல பிறப்பாய் ஒளி வரும் முழு நலம்
சகா யு -அவனே -ஸ்ரேயான் பவதி ஜாயமான -பிறக்க பிறக்க தேஜஸ் மிக்கு
உள்ளுக்குள் நெஞ்சு வெறுப்பு -இன்றி -பிறக்கப் பெற்றோம் மேணானிப்பு தோன்ற
பட்டி மேய்ந்தோர் -காரேறு -போலே
இட்டீர் இட்டீர் ஆனந்த சப்தம் –
அவாக்ய அநாதர அங்கு இருக்க –
வான் இளவரசு -அகம்படி
இங்கே தான் சந்தோஷம்
இட்டபடி திரிய -இங்கு தான் எழில் ஏறு -ஸு இச்சா சஞ்சாரம் செய்யலாமே
அடி அறிவார் -பவான் நாரயனோ தேவா -சொல்லும் ப்ரஹ்மாதிகள்
ஆத்மாநாம் மானுஷ்ய மன்ய -மனுஷ்யனாக நினைத்து
கோவர்த்தன் தேவோவா-அஹம் வோ பாந்தவோ ஜாத -போலே

செம்மா கமலம்
கோயிலிலே வந்து கண் வளர்கிறது பரிமளம் அலை எரிய
அதுவே தொடை தட்ட
கண் வளர்ந்து -தாமரை திருமேனி அழகைக் காட்ட மா கமலம் -செம்மா கமலம் ஒப்பு
அரை ஷணத்தில் செவ்வி மாறும் தாமரை இத்தனை ஏறிட்டு சொல்ல வேண்டுமே
கண்டேன் எம்மானே
அம்மா மலர் -அத்துடன் சஜாதீயன் ஆக்கும் திருக்கண்கள்
இரண்டும் மலர்ந்தால் தான் நான் தரிக்க
மது பானம் வண்டுகள் களியா நிற்க நான் -வண்டு பட்டினி கிடக்கும் படி
இக்கூப்பீடு சென்று கொண்டு இருக்கும் நினைத்து இருக்கிறாயா
இவை ஒழிய -வேறு எங்கும் போகாத வண்டு
மது விரதம் வண்டு
தேனை இந்த பூவில் உள்ள தேனை தவிர வேறு ஒன்றைப் பருகாத வண்டு
அலர்தல் -விசேஷ
கடாஷம் அவன் கண் விழியாத பொது இவர் கண் விழிக்க மாட்டார் இ றே

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-8-1-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 20, 2013

எட்டாம் திருவாய்மொழி – “ஆராவமுதே”

முன்னுரை

    ஈடு :- 1சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற வானமாமலை திருவடிகளிலே, வேர் அற்ற மரம் போலே வீழ்ந்து வேறு கதி இல்லாதவராய்க் கொண்டு சரணம் புக்கார்; இவர் அப்படிப் பெரிய ஆர்த்தியோடே சரணம் புகச் செய்தேயும் வந்து முகங்காட்டாதிருக்க; 2கடலில் அமிழ்ந்துவார் அங்கே ஒரு மிதப்புப் பெற்றுத் தரிக்குமாறு போலே, “இவ்வளவிலும் ‘வேறு ஒன்றாலே பேறு’ என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல் செய்தல் என்னும் மயக்கத்தைத் தவிர்த்தானே அன்றோ” என்று கொண்டு தரித்தார்; தரித்த இதுதான் திருக்குடந்தையளவும் கால்நடை தந்து போகைக்கு உடலாயிற்று. 3என்தான்? இங்கு, தம் விருப்பம் கிட்டாதொழியவும்அங்கு ஏறப்போகவேண்டுவான் என்? என்னில், 1‘ஒரு கால் சரணாகதி செய்தோம், அது பலித்தது இல்லை’ என்னா, நாஸ்திக புத்தியாலே விசுவாசம் குலைந்து ருசியும் நெகிழுமவரன்றே; “அடியார்களுக்காக எழுந்தருளியிருக்கிறவன் நம் காரியம் செய்து தலைக்கட்டாமை இல்லை, ‘இன்ன இடங்களிலே செய்யக் கடவோம்’ என்று அறுதியிடப்பட்டதாயிருக்குமே அன்றோ, ஆன பின்பு, இங்குச்செய்யப் பார்த்திலனாகில் மற்றோர் இடத்தில் செய்கிறான்; 2இனித்தான், ஸ்ரீபரதாழ்வான் ‘பெருமாளை மீட்டுக்கொண்டு வந்து திருமுடி சூட்ட வேண்டும்’ என்று பாரித்துக் கொண்டு செல்ல. ‘பதினான்கு ஆண்டும் கழித்தல்லது மீளோம்’ என்ற ஸ்வதந்திரனே அன்றோ; ஆகையாலே, நமக்கு நான்கு நாள் தாழ்த்ததேயாகிலும் நம் காரியம் செய்யாமை இல்லை” என்று பார்த்து, ‘திருக்குடந்தையிலே சென்று புகவே நாம் விரும்பினவை அனைத்தும் கிட்டும், நமக்கு ஒரு குறையும் இல்லை’ என்று திருக்குடந்தையை அடைந்தார்.

அவ்வாறு அடைய, 3ஸ்ரீபரதாழ்வான் ‘இராச்சியத்துக்கு நிமித்தமானவனானேன்’ என்றதாலே ஒருபுண்பாடும், தாயைக்கொண்டு இராச்சியத்தை வாங்கிப் பெருமாளைக் காடேறப் போகவிட்டான்’ என்று நாட்டார் சீறுபாறு என்றிருப்பார்கள்” என்றத்தாலே வந்ததொரு அச்சத்தையுமுடையவனாய்க்கொண்டு; நான் திருவடிகளிலே சென்று கிட்டினால், உடன் பிறந்தவன் அல்லனோ! சிஷ்யன் அல்லனோ! தாசன் அல்லனோ! என்பக்கல் மலர்ந்த முகத்தராய்த் திருஅருள் செய்யாதொழிவரோ! என்று பார்த்து; அம்பு எய்வார் படை திரட்டிக்கொண்டு போமாறு போல, திருவயோத்தியிலுள்ளாரில் மரங்கள் அகப்பட ஆர்த்தியில் தன்னில் குறைந்த பொருள்கள் இல்லை அன்றே, நம் ஆர்த்தி கண்டு மீண்டிலராகிலும் ஆர்த்தர் பலரையும் கண்டால் மீளாமை இல்லை என்று பார்த்து 1“இந்த மந்திரிமார்களோடுங்கூட என்னால் தலையால் வணங்கி யாசிக்கப்பட்ட தேவரீர், பின் பிறந்தவனும் சிஷ்யனும் தாசனுமான அடியேனுக்குத் திருவருள செய்ய வேண்டும்” என்கிறபடியே, இவன் செல்ல; பெருமாளும் “இராச்சிய தந்திரங்களில் குறைவுபடாமல் நடத்தாநின்றாயே? காரியங்கள் செய்யுமிடத்தில் மந்திரிகளோடு கூடிச் செய்யா நின்றாயே? என்பன போலே இவனுக்கு இடம் அற வார்த்தைகள் கேட்டாற்போலே; இவர் அடைந்த இடத்தில் 2திருக்கண்களை அலர விழித்துக் குளிர நோக்கியருளுதல், திருப்பவளத்தைத் திறந்து ஒரு வார்த்தை அருளிச்செய்தல், அணைத்தல் செய்யக்கண்டிலர். 3“அந்தக் கிருஷ்ணன், என்னை அக்ரூரனே!

என்று அருளிச்செய்வர்” என்றாற்போலே பகைவன் சோறு உண்டு வளர்ந்தவன் மனோரதம் பெற்றானே அன்றோ; அப்படியே தம்மையும் கிட்ட வந்து அணைக்கப் பெறாமையாலே மிகவும் துக்கித்தவராய், 1இனிமையாலும் ஈடுபட்டு, அழகு முதலாயினவற்றாலும் போர நொந்து, பால் குடிக்கும் குழந்தை தாய் பக்கலிலே கிட்ட முகம் பெறாவிட்டால் அலமந்து நோவு படுமாறு போலே, அவன் சந்நிதியிலே தளர்ந்து கிடந்து கூப்பிட்டு, 2இன்னம் எத்தனைத் திருவாசல் தட்டித் திரியக்கடவேன் என்னும் ஆர்த்தியோடே தலைக்கட்டுகிறார். 

520

    ஆரா அமுதே! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே
நீராய் அலைந்து கரைய உருக்கு கின்ற நெடுமாலே!
சீரார் செந்நெல் கவரி வீசும் செழுநீர்த் திருக்குடந்தை
ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் கண்டேன் எம்மானே

பொ-ரை :- எம்மானே! தெவிட்டாத அமுதே! அடியேனுடைய சரீரமானது, உன் விஷயத்தில் அன்புதானே தனக்கு உருவமாகிப் பின்பு தண்ணீராகி ஒரு நிலையில் நில்லாமல் கரையும்படி உருக்குகின்ற நெடுமாலே! சிறப்புப் பொருந்திய செந்நெற்பயிர்கள் சாமரையைப் போன்று வீசுகின்ற செழுமை பொருந்திய நீரையுடைய திருக்குடந்தை என்னும் திவ்விய தேசத்தில் அழகு பொருந்திய ஒப்பனையானது விளங்கும்படியாகச் சயனித்திருக்கின்றவனே! என் கண்களாலே கண்டு அநுபவிக்கப் பெற்றேன் என்கிறார்.

வி-கு :- உடலமானது அன்பாகி நீராகி அலைந்து கரையும்படியாக உருக்குகின்ற நெடுமாலே என்க. வீசும் திருக்குடந்தை என்க.

இத்திருவாய்மொழி, அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்.

ஈடு :- முதற்பாட்டு. 3உன் அழகாலே என்னை உருக்குகின்ற நீ கண்வளர்ந்தருளக் கண்டேன்; குளிரநோக்குதல், அணைத்தருளுதல், செய்யக் காண்கின்றிலேன் என்கிறார்.

1ஆரா அமுதே-அநுபவியாநின்றாலும் கிரமப்பிராப்தி பற்றாத விஷயத்தைப் பிரிந்தார் எங்ஙனே ஆறி இருக்கும்படி. என்றது, முற்படக் காட்சியாய், அதன் பின்னர் அணுகி, பின்னர் ஸ்பரிசமாய், இப்படியே அன்றோ அநுபவப் பிரகாரங்கள் இருக்கின்றன; அத்துணைக் கிரமங்களைப் பார்த்திருக்க ஒண்ணாதபடி இருக்கையைத் தெரிவித்தபடி. ஆரா அமுதே – 2கடலில் உப்புச்சாறு குடிப்பார்க்குத் தேவயோனியிலே பிறக்கவேணும், பிரஹ்மசரியம் அநுஷ்டிக்க வேணும், இத்தனையும் இருந்தால் ஒரு தடவை உண்ணக்கூடியதாக இருக்கும்; இது அங்ஙன் அன்றிக்கே, சர்வாதிகாரமுமாய், எப்பொழுதும் உண்ணக்கூடியதாய், பிரஹ்மசரியம் முதலானவற்றினின்றும் நழுவுதலால் வரும் குற்றங்களையும் தானே போக்கக் கூடியதாயிருக்கும். 3வடதேசத்திலே லோகசாரங்க மஹாமுனிகள் வசித்துக்கொண்டிருக்க, இங்கேயுள்ள ஒருவன் அங்கு ஏறச்செல்ல, ‘பிள்ளாய்! தென்தேசத்தில் விசேஷம் என்?’ என்று கேட்க, ‘திருவாய்மொழி என்ற ஒரு பிரபந்தம் அவதரிக்க, அதனைச் சிஷ்டர்கள் மேற்கொண்டு போரக் கொண்டாடிக் கொடு போகா நின்றார்கள்’ என்ன, ‘அதிலே உனக்குப் போவது ஒரு பாசுரத்தைச் சொல்லிக் காணாய்’ என்ன,‘“ஆராவமுதே’” என்கிற இத்துணையே எனக்கும் போம்” என்ன, ‘நாராயணன் முதலான நாமங்கள் கிடக்க, இங்ஙனேயும் ஒரு பெயர் உண்டாவதே’ என்று அதனைக் காண மிக்க ஆவலுடையவராய், ‘இச்சொல் நடையாடுகிற தேசத்து ஏறப்போவோம்’ என்று அப்பொழுதே புறப்பட்டுப் போந்தார்.

ஆராஅமுதே – 1“ஸஹபத்நியா – பத்திநியோடு கூட” 2ஆழங்காலிலே இழிவார் ஒரு கொம்பை ஒரு கொடியைப் பிடித்துக்கொண்டு இழியுமாறு போலே. கிண்ணகத்தில் இழிவார் அறிந்தவர்களைக் கைப்பிடித்துக் கொண்டு இழியுமாறு போலே, பெருமாள் பெரிய பெருமாளை அநுபவிக்கும்போது பிராட்டியைக்கூடக் கொண்டாயிற்று இழிவது. “விசாலாக்ஷ்யா – பரந்த கண்களையுடையவளோடு” இவர்க்குப் பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேமத்தின் மிகுதியைக் கண்டு, தன்னை அணைக்கும் போதையிற்காட்டிலும் உடம்பு முழுதும் கண்களானபடி. “நாராயணம் உபாகமத் – நாராயணனை அடைந்தார்” இவர் 3நியதி இருக்கிறபடி. இக்கண்களுக்கு இலக்காய் ஆழங்காற்படாதே அவ்வருகுபட்டார். இதனால் என் சொல்லியவாறோ? எனின், தான் தன்னை அநுபவிக்கும்போதும் கூட்டுத் தேடவேண்டும்படியாயிற்று ஆராமை இருக்கும்படி என்பதனைச் சொல்லியவாறாம். ஆரா அமுதே – இத்திருவாய்மொழியில் இவர்க்கு உண்டான ஆற்றாமைக்கெல்லாம் வித்து இச்சொல்லே ஆயிற்று.அடியேன் – மயர்வு அற மதிநலம் அருளப் பெற்ற ஸ்வரூபத்தால் சொல்லுகிறார் அல்லர், இனிமைக்குத் தோற்றுப் 1புற்கவ்விச் சொல்லுகிறார். 2“பரவாநஸ்மி – அடியவன் ஆகிறேன்” என்றவர் 3“அவர் குணங்களால் கைங்கர்யம் செய்துகொண்டிருக்கிறேன்” என்றாற்போலே. உடலம் நின்பால் அன்பாயே நீராய் அலைய உருக்குகின்ற நெடுமாலே – சேஷத்வம் ஆத்மாவுக்கு ஸ்வரூபமானால் சரீரம் அதற்கு விரோதியாய் நிற்கும் நிலை குலைந்தது. 4‘நான்’ என்று இருக்கக்கூடிய இவர்தாம் ‘அடியேன்’ என்கிறது, விஷயத்தினுடைய இனிமையின் மிகுதியே அன்றோ; அப்படியே சரீரமும் விஷயத்திற்கு வசப்பட்டதாய் அழிந்தபடி. 1சேஷத்வமே உருவமான ஆத்மாவைத் தன்வழியே இழுக்கை தவிர்ந்து, அதன் வழியே தான் ஒழுகும்படியாயிற்று விஷயத்தினுடைய இனிமை. அன்றிக்கே, 2ஞான ஆனந்த ஸ்வரூபனான ஆத்மாவாதல், அதற்குத் தோள் தீண்டியான ஞானம் செல்லுதற்கு வழியான மனமாதல் அன்றிக்கே, இவற்றுக்கு அவ்வருகான தோல் சதை நிணம் எலும்பு வடிவமான சரீரமும் அழியும்படியாயிற்று என்னுதல். 3சேதனம் என்றும் அசேதனம் என்றும் கூறப்படுகின்ற வேற்றுமை அற அழிக்கவல்ல உன் பக்கலிலே அன்புக்கு இருப்பிடமாகை தவிர்ந்து அன்புதான் ஒரு வடிவு கொண்டாற்போலே இராநின்றது என்பார் ‘நின்பால் அன்பாயே’ என்கிறார்.

4உடலம் அன்பாய், அன்புதான் நீராய்க் கொண்டு அலையாநின்றது என்பார் ‘உடலம் அன்பாய் நீராய் அலைந்து’ என்கிறார். 5முதல் முன்னம் கேள்வியாய், அதன் பின் மனனமாய், பின்னை பாவனையாய், அது பிரத்யக்ஷ ஸமாநாகாரமாய்க் கொண்டு அவ்வடைவிலே வருகிறதன்றே, விஷயம் அழிக்க அழிகிறதித்தனை அன்றோ.நீர் தன்பக்கலிலே அகப்பட்டதனைக் கரைத்துத் தான் கரையாதிருக்குமாயிற்று; இங்கு அங்ஙன் அன்று, நீர்தானாயிற்றுக் கரைகிறது என்பார் ‘நீராய் அலைந்து கரைய’ என்கிறார். 1அன்பு நீரானால், நீர்தான் கரையத் தட்டு இல்லையே. இத்தனை அளவு இது ஆனால், அத்தலை செய்கிறது என்? என்னில், ‘உருக்குகின்ற’ என்கிறார்; என்றது, 2அழிக்கைக்கு அடி இட்ட இத்தனையாயிற்று என்கிறார் என்றபடி. 3அழிக்கிறவன் ‘ஆபரணங்கள்’ என்று பாராதே உருக்கி அழிக்குமாறு போலே காணும் இவனும் உருக்கி அழிக்கிறபடி. 4தேசமான அணிகலனும் இவர் கைகூப்புச் செய்கையே அன்றோ.

ஆழ்வார்க்கு உள்ள உடலை உருக்கி அழிக்குமித்தனையேயோ? இவன் தனக்கு ஓர் அழிவில்லையோ? எனின், ‘நெடுமாலே’ என்கிறார். என்றது, எதிர்த்தலையில் அழிவுகண்ட பின்பே அன்றோ இத்தலையில் அழிவு என்றபடி. 5அவனுடைய வியாமோகத்தைப் பார்த்தால் இது ஒன்றும் போராதபடியாயிருக்கும். அவனுடைய அழிவு சொல்லும்போது இனி இவ்வடைவில் சொற்களைக் கொண்டு சொல்ல ஒண்ணாது. ‘நெடுமால்’ என்னில்என்னுமித்தனை. மால் – வியாமோகம். நெடுமால் – மிக்க வியாமோகத்தையுடையவனாயிருக்கை. அன்றிக்கே, மால் என்று பெரியோன் என்றபடியாய், அதுதானும் பிரமன் சிவன் முதலானவர்கள் அளவோ? என்னில், அன்று, நெடுமால் – 1மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவன் என்கிறது என்னுதல்

ஆருயி ரேயோ! அகலிட முழுதும் படைத்திடந் துண்டுமிழ்ந் தளந்த
பேருயி ரேயோ! பெரியநீர் படைத்துஅங் குறைந்தது கடைந்தடைத் துடைத்த
சீருயி ரேயோ! மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ!
ஓருயி ரேயோ! உலகங்கட் கெல்லாம் உன்னை நான் எங்குவந் துறுகோ.-என்பது, திருவாய். 8. 4 : 5.
;

சர்வேச்வரன் என்றபடி. 2அவனுடைய பெருமையும் இவரை அழிக்கைக்குக் காரணமாம் இத்தனை அன்றோ. சீர் ஆல் செந்நெல் கவரி வீசும் – மிக்க கனத்தையுடைத்தான செந்நெற் கதிர்களானவை திருக்கண் வளர்ந்தருளுகிற அழகைக் கண்டு கைங்கர்யம் செய்வாரைப்போலே அசையாநிற்கும். சீர் – கனமும், அழகும். ‘கவரி வீசும்’ என்றது, கவி போலே வீச என்றபடி. கவரி – சாமரை.

3அன்றிக்கே, ஆராவமுதாழ்வாருக்கு அமுதுபடியாகிற சீர்மையையுடையதாதலின் ‘சீரார் செந்நெல்’ என்கிறார் என்னுதல். அப்போது “நான் சர்வேச்வரனுக்கு போக்யன்” என்கிற சீர்மை. 4“மரங்கள் எல்லாம் காலம் அல்லாத காலத்திலும் பயன் அளிக்கக் கடவன” என்னுமாறு போலே, எம்பொழுதும் செந்நெற்கள் உள்ளன என்பார் ‘வீசும்’ என 5நிகழ் காலத்தாற் கூறுகிறார்.என்றது, அறுத்து நடவேண்டா போலே காணும் இருப்பது என்றபடி. 1கருத்து அறிந்து அடிமை செய்வாரைப் போலே. அன்றிக்கே, 2சேஷ வஸ்துக்களின் தொழில்கள் முழுதினையும் சேஷி தனக்கு அடிமையாக நினைத்திருக்கிறபடியால் ‘கவரி வீசும்’ என்கிறார் என்னுதல். செழு நீர்த் திருக்குடந்தை – திருக்கண் வளர்ந்தருளுகிற சௌகுமார்யத்துக்குப் போரும்படி அழகிதான தண்ணீர் நிறைந்திருக்கின்ற திருக்குடந்தையிலே. செழுநீர் – பெருநீர் என்றுமாம். ஏரார் கோலம் திகழக் கிடந்தாய் – அழகு சமைந்த ஒப்பனை நிறம் பெறும்படி திருக்கண் வளர்ந்தருளுகின்றாய்.

3நாட்டார் உலாவித் திரியும்போது அவயவங்களிலுண்டான பொல்லாங்குகள் மறைந்து ஒன்றுபோல இருக்கும், ஓர் இடத்தில் இருத்தல் கிடத்தல் செய்தவாறே அழகற்ற தன்மை தோற்றிக் கண் கொண்டு பார்க்க ஒண்ணாதபடி இருப்பர்; இங்கு அங்ஙன் அன்றிக்கே, 4பகைவர்களைத் தபிக்கச் செய்கின்ற ஸ்ரீராமனான அந்தப் பெருமாள் என்னால் உறக்கத்தினின்றும் உணர்த்தப்பட்டார்” என்கிறபடியே,

வாயஸேந தத: தேந பலவத்க்லிச்யமாநயா
ஸ மயா போதித: ஸ்ரீமாந் ஸுகஸுப்த: பரந்தப:”-
என்பது, ஸ்ரீராமா. சுந். 38 : 24. திருவடியைப் பார்த்துப் பிராட்டி கூறியது.
சுலோகத்திலுள்ள “ஸ்ரீமாந்” என்ற சொல்லுக்கு, பாவம், ‘இவன் உணரில்’
என்று தொடங்கும் வாக்கியம்.

கிடந்த கிடைக்கு ஆலத்தி வழிக்க வேண்டும்படி இருத்தலின் ‘ஏரார் கோலம் திகழ’ என்கிறார். ‘இவன் உணரில் செய்வது என்’ என்றுவயிறு பிடிக்க வேண்டி இருக்கை. கிடந்தாய் கண்டேன் – “சுகமாகத் தூங்குகிறவன்” என்கிறபடியே, கிடை அழகினைக் கண்களாலே காணப்பெற்றேன், நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன். என்றது, 1எழுந்திருத்தல், இருத்தல், உலாவுதல், ‘என் செய்தாய்’ என்று வினவுதல், அணைத்தல் செய்யப்பெற்றிலேன் என்றபடி. 2எம்மானே-இது நம்மது’ என்று இராதொழியப் பெற்றேனாகில் நான் ஆறி இருக்கலாயிற்றே. என்றது, சம்பந்தத்தைக் கொண்டு என்னை இப்படி நலியலாமோ என்கிறார் என்றபடி. அன்றிக்கே, வடிவினைப் போன்றே சம்பந்தமும் என்னை நலியாநின்றது என்கிறார் என்னுதல்.

முகங்காட்டாதிருக்க’ திருக்குடந்தைக்குச் செல்லுவதற்குத் தரிப்பு
உண்டானவாறு எங்ஙனே? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார்
‘கடலில் அமிழ்ந்துவார்’ என்று தொடங்கி. மிதப்பு – தெப்பம். “ஆறு
எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்றதனைக் கடாக்ஷித்து,
‘இவ்வளவிலும்’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். இங்கே, ‘வேறு
ஒன்றாலே பேறு என்றிருத்தல், மற்றொருவர் வாசலிலே சென்று கூப்பிடுதல்
செய்தல்’ என்றிருக்கையாலே, “ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத்
தந்தொழிந்தாய்” என்பதற்கு, மேல் அருளிச்செய்த மூன்று
யோசனைகளையும் தவிர, இன்னமும் ஒரு யோசனை உண்டு என்று
தோற்றுகிறது. அதாவது, எனக்கு உன் பாதமே உபாயமாகவும், ரக்ஷகமாகவும்
தந்தாய் என்பது. “நின் பாதமே ஆறாக” என்கையாலே வேறு ரக்ஷகங்களை
நீக்குகிறது; “நின் பாதமே சரணாக” என்கையாலே வேறு உபாயங்களை
நீக்குகிறது; ஆக, “ஆறு” என்றதனால், ஆகிஞ்சந்யமும், “சரண்”
என்கையாலே, அநந்யகதித்வமும் போதரும். இத்தால், இந்த நிலையிலும்,
ஆகிஞ்சந்ய அநந்யகதித்வங்களுக்கு ஒரு ஹாநி வராதபடி செய்தான்
என்றபடி. ஆகிஞ்சந்யமாவது, வேறு உபாயம் இன்மை. அநந்யகதித்வமாவது,
வேறு இரக்ஷகரில்லாமை.

அரசர்கள் ஆசன பேதத்தாலே
காரியம் செய்யுமாறு போலேயும், நம்பெருமாள், திருமங்கையாழ்வாருடைய
அபேக்ஷிதத்தைக் கோயிலிலே செய்யாமல் திருக்குறுங்குடியிலே செய்தது
போலேயும் தேசம் அறுதியிடப்பட்டதாயிருக்கும் என்றபடி.

காலவேற்றுமையாலும் காரியம் செய்வான் என்பதற்கு, வேறு ஒரு காரணம்
காட்டுகிறார் ‘இனித்தான்’ என்று தொடங்கி. ஆக, இதனால், ‘இன்னானை
இன்ன தேசத்திலே அங்கீகரிக்கக் கடவோம்’ என்றும், இன்ன காலத்திலே
அங்கீகரிக்கக்கடவோம்’ என்றும் அவனுக்கு இரண்டு நிலைகள் உண்டு;
ஆகையாலே அந்த இரண்டு நிலைகளையும் அறிந்திருக்கிற இவர், இங்குச்
செய்திலனாகில் இன்னம் ஒரு தேசத்திலே செய்கிறான், இப்போது
செய்திலனாகில் வேறு ஒரு காலத்திலே செய்கிறான் என்று
திருக்குடந்தையிலே புக்கார் என்றபடி.

ஏபிஸ்ச ஸசிவை: ஸார்த்தம் ஸிரஸா யாசிதோ மயா
பிராது: ஸிஷ்யஸ்ய தாஸஸ்ய ப்ரஸாதம் கர்துமர்ஹஸி”-  என்பது, ஸ்ரீராமா. அயோத். 101 : 12.

இத்திருப்பெயரின் இனிமையின் மிகுதி ஈச்வரனுக்கும் தனியே
அநுபவிக்கப் போகாது என்று, வேறும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார்
‘ஸஹபத்நியா’ என்று தொடங்கி.

“கதே புரோஹிதே ராம: ஸ்நாத: நியத்மானஸ:
ஸஹபத்நியா விஸாலாக்ஷ்யா நாராயணம் உபாகமத்”-என்பது, ஸ்ரீராமா. அயோத். 6 : 1.

‘ஸ்வரூபத்தோடு கூடியதான தாஸ்யமே உத்தேசியம்’ என்றிருக்கிறவருக்கு,
இனிமைக்குத் தோற்று “அடியேன்” என்கிற இது, பொருந்துவதாமோ?
என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘பரவாநஸ்மி’ என்று தொடங்கி.

“பரவாநஸ்மி காகுத்ஸ்த த்வயி வர்ஷஸதம் ஸ்திதே
ஸ்வயந்து ருசிரே தேஸே க்ரியதாமிதி மாம் வத”-என்பது, ஸ்ரீராமா. ஆரண். 15 : 7.

அஹம் அஸ்ய அவரோ ப்ராதா குணை: தாஸ்யம் உபாகத:
கிருதஞ்ஜஸ்ய பஹுஞ்ஜஸ்ய லக்ஷ்மணோ நாமநாமத:”-என்பது, ஸ்ரீராமா. கிஷ். 4 : 12.

இவர் திருமேனி ஆபரணம் ஆமோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தேசமான’ என்று தொடங்கி.

பூசுஞ் சாந்தென் னெஞ்சமே புனையும் கண்ணி எனதுடைய
வாச கஞ்செய் மாலையே வான்பட் டாடையு மஃதே
தேச மான அணிகலனும் என்கை கூப்புச் செய்கையே
ஈசன் ஞால முண்டு மிழ்ந்த எந்தை ஏக மூர்த்திக்கே.-என்பது, திருவாய். 4. 3 : 2.

ஆரா அமுத ஆழ்வார் தரமி ஐக்கியம்
வேரற்ற மரம் போலே வான மா மலை திருவடிகளில் விழ
துக்கம் வந்தாலும் அவனே பேறு ஆறு என்று நினைக்கும் படி உறுதி கொண்டு தரித்து
வேற பிரமத்தை தவிர்த்தான் இ றே என்று தரிக்க
திருக்குடந்தை பெருமாள் -ஆரா அமுதன் -அனுபவிக்க தரித்து
இங்கே கிடைக்க வில்லை –
விசுவாசம் குறைந்து இல்லாதவர் ஆழ்வார்
ஆஸ்ரித அர்த்தமாக எழுந்து அருளி இருக்கிறவர் -நிச்சயமாக தனது கார்யம் செய்து
தலைக் கட்டுவான்
இன்ன கார்யம் இன்ன இடத்தில் செய்ய வைத்து இருப்பான்

பரத ஆழ்வான் -பெருமாளை மீட்டு திரு அபிஷேகம் செய்ய பாரித்து வர
14 வருஷம் நாள் குறித்து-அல்லால் மீளேன் – கொடுக்கும் ஸ்வ தந்த்ரன் அவன் என்பதால்
தாமத்திதாலும் நமது கார்யம் தலைக் கட்டுவான்
பரத ஆழ்வான் -தான் தான் நிமித்தம் என்று சொல்லும்படியாக புண்பாடு ஏற்பட -வருத்தமும் –
நாட்டார் சீறும் பாயும் என்ற அச்சத்துடன் -இருக்க
ப்ராதா சிஷ்யா தாஸ்ய -என்று கிருபை பிரார்த்தித்து
படை திரட்டி போக -ஆர்த்தர் பலர் கண்டு மீளுவான் என்று பார்த்து

ராஜ்ய கார்யங்கள் நன்றாக நடக்கிறதா -கேள்விகள் கேட்டு பெருமாள்
பரதனுக்கு பேச இடம் கொடுக்காமல் வார்த்தை பேசி அருளி
எம்பெருமானும் இப்படி கேட்க ஆசைப்படுகிறார்
திருக் குடைந்தையிலும் வார்த்தை பேசாமல்
கிடந்தவாறு எழுந்து இருந்து பேசு திரு மழிசை ஆழ்வாருக்கு செய்து அருளி
அக்ரூரர் பிரார்த்தி வந்தது போலே ஆழ்வார் பாரித்து வர
துக்கம் மேலிட்டு
போக்யதையாலும் சௌந்த்ர்யத்தாலும் -ஈடுபட்டு ஆனந்ததித்து
ஸ்தனந்த்ய பிரஜை தாய் முன்னால் நோவு படுமா போலே
தளர்ந்து இன்னும் எத்தனை வாசல் தட்டுவேன்
ஆர்த்தி உடன் தலைக்கட்டுகிறார் இந்த திருவாய்மொழியை-

24000 படி ஸ்பஷ்டமாக -ஒரு கால் பிரதிபத்தி பண்ணி மேல் மேலும் சரண் அடைந்து
மஹா விசுவாசம் கொண்டு –
அரும்பதத்தில் -இவ்வளவிலும் எம்பெருமான் இடம் -வேறு ஒன்றாலும் பேறு –
மற்று ஒருவர் ரஷகர் என்ற நினைப்பை தவிர்த்து
ஆறு எனக்கு நின் பாதமே சரண் என்றதை கடாஷித்து
கீழ் மூன்று யோஜனை தவிர -ரஷகம் -என்கிற நாலாவது அர்த்தமும் அருளி –
பாதமே உபாயம் ரஷகம் -இரண்டையும் –
சரணம் -க்ருஹம் /திருவடி /உபாயம் /உபேயம் /ரஷகம் -நாலு யோஜனை
ஸ்வ தந்த்ரன் ஆகையாலே -பரத ஆழ்வான் -நாள் குறித்து -முகம் காட்ட
பெருமாள் பிரதிக்ஜை -முதலில் நிறைவேற்றி –
இங்கு ஆழ்வாருக்கு முகம் காட்டாது ஒழிந்தது
விடாய் பிறப்பித்து /பிரபந்தம் தலைக்கட்ட ஆறு காரணங்கள் ஆச்சார்ய ஹிருதயம் ஸ்ரீ ஸூக்தி
ஆயிரத்துள் இப்பத்து சங்கல்ப்பித்து –
உசாவி -வார்த்தை கேட்ப்பான் என்று நினைத்து போக செய்யாமையாலே அப்ரீதி உடன் தலைக்கட்டுகிறார் –
பரத ஆழ்வானை உசாவி அருளினார்
அக்ரூரருக்கு அருளியது போலே கிடைக்காமல்
கதறுகிறார்

அழகு உருக்க
குளிர நோக்குதல் அணைத்தல் செய்யாமல் இருக்க –
ஆரா அமுதே -ஆரவே இல்லாத -திருப்தி ஏற்படாத அமுதம் -துடிப்புடன் அருளி
அபரியார்ப்த அமர்த்தம் சஹச்ர நாமத்திலும் இல்லாத திருநாமம்
ஆரா அமுத சப்தம் நிறைய முன் வந்தாலும் இதில் தொடக்கத்திலே
ஆரா அமுதன் -சொல்ல கூடாது ஆரா அமுது
மற்று ஒன்றினை காணாதே அமுதினைக் கண்ட
அமுது -இவன் -ஆரா அமுதனே சொல்லாமல் ஆரா அமுதே அருளுகிறார்
அடியேன் உடலம் நின் பால் அன்பால் நீராய் அலைந்து உருக்குகின்ற
செந்நெல் கைங்கர்யம் செய்ய

கண்ணால் பார்த்து கிட்டே சென்று ஸ்பர்சித்து அணைத்து  க்ரம அனுபவம்
பசியன் சோற்றைக் கண்டால் போலே துடிப்பின் காரணம் மேலே விழுந்து அனுபவிக்க
சாமான்யமான அமிர்தம் உப்புச் சாறு -தேவ யோனியில் பிறந்து பிரமச்சர்யம் அனுஷ்டித்து
பிரமச்சர்யம் சாஸ்திர விகுதமாக பத்தினி மட்டும் -அனுபவித்து
அஷ்டாங்க யோகம் விஸ்தரித்து விளக்கி
அந்த உப்புச் சாரும் ஒரே தடவை
இது -அங்கன் அன்றிக்கே சர்வாதிகாரமாய் சதா சேவ்யமுமாய் பிரமச்சர்யம் இல்லாத பாபங்களையும் போக்கிக் கொடுக்கும்
லோக சாரங்க மகா முனிகள் -பிரசித்த -திருப்பாண் ஆழ்வார் -இருக்கலாம்
இங்குத்தை அங்கெ செல்ல
பிள்ளாய் தஷிண பூமியில் விசேஷம் என்ன
திவ்ய பிரபந்தம் கிடைத்ததை சொல்லி
சந்தைசொல்லிக் காணாய் என்ன
ஆரா அமுதே இத்தனை ஒன்றே போதும்

நாராயணாதி நாமங்கள் கிடக்க இப்படி ஒரு திவ்ய நாமம் கிடைக்கப் பெற்றோமே
தன்னைத் தானே அனுபவிக்க பார்த்தாலும் அவனுக்கே திருப்தி இன்றி
பெரிய பெருமாளை திருவாராதனம் செய்த பெருமாள் -சக பத்ன்யா விசாலாஷ்யா நாராயண உபாகமத்
தனியே சென்று இழிய முடியாமல் கூட்டு சேர்த்து போனார்
ஆழம் காலிலே இழிவார் கொம்பை பிடித்து போவாரைப் போலே சீதை பிராட்டி கொண்டு
கிண்ணகத்தில் இழிவார் தேசிகரை கொண்டு இழிவாரைப் போலே பிராட்டி உடன் –
தேசிகர் -ஆசார்யர் -வல்லவர்
பெருமாளை அனுபவிக்க சாமர்த்தியம் உள்ளவள் பெரிய பிராட்டியார் தானே
அவள் சக கார்யம் பெருமாளுக்கு வேண்டி இருந்தது
விசாலாட்ஷ்யா -பெரிய பெருமாள் பக்கல் உண்டான பிரேம அதிசயத்தைக் கண்டு
கண் மலர்ந்து –

தன்னை அணைக்க போதிலும் காட்டிலும் உடம்பெல்லாம் கண்ணாக –
இவர் நியதி இருக்கும் படி நாராயணன் முழுகி -ஜிதேந்த்ரியம் -இந்த்ரியங்கள் வென்று
நாராயண உபாகமத் -நியதி -நியமம் -கிதேந்த்ர்யம் –
பிராட்டி விசாலட்ஷியாக நின்று இருந்தாலும் நாராயணன் நோக்கி
அக்கண்ணில் ஆழம் கால் படாமல் நாராயணன் மேல் ஈடுபட்டு
தான் தன்னை அனுபவிக்கவும் கூட்டுத் தேடும்படி ஆரா அமுதே

பீஜம் இப்பதம் ஆயிற்று -ஆதி காரணம்
ஆராத அமுதமாய் இருந்து ஆழ்வாரை படுத்த
அடியேன் -ஸ்வரூபத்தால் சொல்லாமல் -போக்யதையில் தோற்று -சொல்லும் வார்த்தை
காகுஸ்த -தாஸ்யம் -ஸ்வரூப ப்ரயுக்த தாஸ்யம் இல்லை குணத்துக்கு தோற்று இளைய பெருமாள்
இவர் அழகுக்கு தோற்று
தேகம் விரோதியாய் இருக்கும் ஆத்மா சேஷத்வம் இருக்க ஒட்டாமல்
உடம்பே உருக விரோதி ஒழிந்தது –
அஹம் என்று இருக்கக் கடவ அடியேன் என்றது போக்யதையால்
ஆத்மா வழியில் தேகம் வந்தபடி சொல்லுகிறது -அழகு அப்படி செய்தது

சேதனம அசேதன விபாகம் அற -அனைத்தையும் உருக
குழல் ஓசை கேட்டு பசுக்கள் -மரங்களும் இரங்கி
அன்பு  வடுவு கொண்டது போலே
உடம்பு அன்பாய் நீராய் உருகி
சரவணம் ,முதலில் -மனனம் நிதித்யாசனம் -பிரதிஷ சமானாகாரம் அப்புறம் பிரத்யஷம்
நீர் தன் பக்கல் உள்ளவற்றை கரைக்கும்
இங்கே நீரே கரையே
அன்பு நீரானால்  நார் கரைய தட்டில்லை
அவன் -அப்படியே இருக்க -விக்ருதி இன்றி
உருக்க -ஆபரணம் அழித்து உருக்குவான் போலே
உருக்குகின்றான் –
தேசமான அணிகலனும் இவர் கை கூப்பிச் செய்கையே
மால் அன்பு
நெடுமாலே
எதிர் தலையில் அழிவு கண்டு வ்யமோஹம்
அவன் வ்யாமோஹம் பார்த்து நம்மது ஒன்றும் இல்லை
நீரே அலைந்து உருக்கி சொல்லலாம் என்னது
அவனது நெடுமால் ஒன்றே சொல்லாம்படி
மால் கருமை பெருமை மையல்
சர்வேஸ்வரன் பெருமையும் இவளை அழிக்க உடல்
சீரார் செந்நெல் -கண் வளர்ந்து அருளுகிற அழகைக் கண்டு
கைங்கர்யம் கவிரி வீச அசைந்து சாமரம்
சீர்மை அமுது படியாகும் சீர்மை உண்டே செந்நெல்
அஹம் அன்னம் என்கிற சீர்மை
எல்லா காலத்திலும் மரங்கள் பழுத்தால் போலே
அறுத்து நட வேண்டாம் சீரார் செந்நெல்
கருது அறிந்து அடிமை செய்வாரைப் போலே
எது செய்தாலும் தனக்கு கைங்கர்யம் என்று நினைத்து கொள்ளுவான்
செழுநீர் -செழுமை
ஏரார் கோலம் -அழகு சமைந்த ஒப்பனை தெரியும் படி சயனித்து திகழக் கிடந்தாய்
நாட்டார் அலங்காரம் பொல்லாங்கு மறைக்க
அயோக்கியம் தோன்றி கண்ணால் பார்க்க முடியாதே சயனித்தால்
இங்கு கிடந்த கிடைக்கைக்கு ஆலத்தி வழிக்கும் படி
ஸ்ரீ மான் –காகாசுரன் சுக துக்க -ஸ்ரீமான் பரந்தப
இவர் உணரச் செய்வது என் வயிறு பிடிக்கும்படி
கண்டேன் -கண்ணால் காணப் பெற்றேன் -ஆனால் நினைத்த பரிமாற்றம் பெற்றிலேன்
எம்மானே -நம்மவன் -ஆறி இருக்கமுடியாத -பிராப்தியும் இருக்க
வடிவு அழகு அனுபவித்து –
அணைத்து உசாவாமல் இருக்க ஆர்த்தி உடன் அருளிச் செய்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-11-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 17, 2013

தெய்வநாயகன் நாரணன் திரிவிக்கிரமன் அடியிணை மிசைக்
கொய்கொள் பூம்பொழில்சூழ் குருகூர்ச் சடகோபன்
செய்கஆயி ரத்துள் ளிவைதண் சிரீவர மங்கை மேய பத்துடன்
வைகல் பாடவல்லார் வானோர்க்கு ஆராவமுதே.

பொ-ரை :- நித்தியசூரிகளுக்குத் தலைவனும் நாராயணனும் திரி விக்கிரமனுமான சர்வேச்வரனுடைய திருவடிகளின்மேலே, பறித்துக் கொள்ளப்படுகின்ற பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீசடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள், குளிர்ந்த ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தைப் பற்றிய இவை பத்துப் பாசுரங்களையும் அர்த்த ஞானத்தோடு பாட வல்லவர்கள் நித்தியசூரிகளுக்கு எப்பொழுதும் தெவிட்டாத அமுதத்தைப் போன்றவராவர்.

வி-கு :- ஆயிரத்துள் தண் சிரீவரமங்கை மேய இவை பத்தையும் உடன் பாட வல்லார் வானோர்க்கு வைகல் ஆராவமுது என்க. வைகல்-நாள்.

ஈடு :- முடிவில், 1இத்திருவாய்மொழியைப் பொருள் அறிவோடு கற்குமவர்கள், நித்தியசூரிகளுக்கு என்றும் இனிய பொருளாவர் என்கிறார்.

தெய்வநாயகன் – சர்வேச்வரன். நாரணன் – தன்னுடைமை இழக்கவிடாத வத்சலன். திரிவிக்கிரமன் – தன்னை இரந்தார்க்குத் தன்னை அழிய மாறியும் காரியத்தைச் செய்து தலைக்கட்டிக் கொடுக்குமவன். அடி இணைமிசை – திருவடிகளிலே. கொய்கொள் பூம்பொழில் – நித்திய வசந்தமான சோலை என்றது, எப்போதும் கொய்கைக்குப் பக்குவமாயிருக்கை. குருகூர்ச் சடகோபன் – 2ஸ்ரீகீதையில் வேறுபாடு. செய்தஆயிரம் – 1அர்த்தம் வேதார்த்தமேயாகிலும், வேதம் போலே தான் தோன்றியன்று ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது. 2பரத்துவம் போலே வேதம், அவதாரம் போலே இதிகாச புராணங்கள், அர்ச்சாவதாரம் போலே திருவாய்மொழி. 3செய்த ஆயிரம் அன்றோ. அன்றிக்கே, 4தமப்பன் இல்லாத இழவுதீரச் சக்கரவர்த்திக்குப் பிள்ளையானாற் போன்று, வேதமும் இவர்பக்கல் வந்து பிறந்தது ஆதலின் ‘செய்த ஆயிரம்’ என்கிறது என்னுதல். உடன்பாட வல்லார் – அபிப்பிராயத்தோடு பாட வல்லார். என்றது, இவருடைய உபாயசூந்யதையை நினைத்துப் பாடவல்லார் என்றபடி. வைகலும் வானோர்க்கு ஆராவமுதே – காலம் என்னும் ஒரு பொருள் உள்ள வரையிலும் நித்தியசூரிகளுக்கு இனியபொருளாகப் பெறுவர். 5தேவசாதிகள் அமுதம்பெற்றுக் கிருதார்த்தராமாறுபோலே, நித்தியசூரிகள் ‘இவர்களைப் பெற்றோம்’ என்று கிருதார்த்தராவர் என்பார் ‘அமுதே’ என்கிறார். 1வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய அவர்கள், வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாமல் பகவத் ருசியையுடைய இவரை விரும்பி இருக்கையாலே, வேறு உபாயங்களில் விருப்பம் இல்லாதவராய் இதனை அனுபவிக்க வல்லரானவர்கள் நித்தியசூரிகளுக்கு அமுதாவர்.

 

திருவாய்மொழி நூற்றந்தாதி

    நோற்றநோன் பாதியிலேன் நுன்தனைவிட்டாற்றகிலேன்
பேற்றுக் குபாய முன்தன் பேரருளே – சாற்றுகின்றேன்
இங்கெனிலை என்னும் எழில்மாறன் சொல்வல்லார்
அங்கமரர்க்கு ஆரா வமுது.

திருவாய்மொழி வேதமாயிருக்க, “செய்த ஆயிரம்” என்னலாமோ? என்ன,
‘அர்த்தம்’ என்று தொடங்கி அதற்கு விடை அருளிச்செய்கிறார். என்றது,
ஆப்ததரமான ஆழ்வார் பக்கலிலே பிறந்தது ஆகையாலே
செய்யாமொழியாகிய வேதத்தைக்காட்டிலும் இது உயர்வுக்குக்
காரணமாயிருக்கும் என்றபடி.

2. வேதத்தைக்காட்டிலும் இதற்கு உயர்வு யாது? என்ன, ‘பரத்துவம் போலே’
என்று தொடங்கி அதற்கு விடை அருளிச் செய்கிறார்.

செய்யா மொழிக்கும் திருவள்ளுவர் மொழிந்த
பொய்யா மொழிக்கும் பொருள் ஒன்றே – செய்யா
வதற்குரியர் அந்தணரே யாராயின் ஏனை
இதற்குரியர் அல்லாதார் இல்.

என்பது, இங்கு ஒப்பு நோக்குதல் தகும். திருவள்ளுவமாலை, 23.

‘அர்ச்சாவதாரம் போலே’ என்றது, சர்வாதிகாரம் என்பது கருத்து.
ஆசாரியஹ்ருதயம் முதல் பிரகரணத்தின் பொருளை இங்கு நோக்கல் தகும்.

3. ‘அர்ச்சாவதாரம் போலே’ என்றது, எப்படி? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘செய்த ஆயிரம் அன்றோ’ என்று.

4. மேலே வேதார்த்தத்தைச் செய்த ஆயிரம் என்று அருளிச்செய்து, வேத
அவதாரம் என்றும் ஒரு கருத்து அருளிச்செய்கிறார் ‘தமப்பன் இல்லாத’
என்று தொடங்கி. என்றது, வேதமும் இவர் பக்கல் வந்து பிறந்து நிறம்பெற
வேண்டும் என்றபடி.

5. “அமுது” என்றதிலே நோக்காக, மேல்வாக்கியத்தை விவரணம் செய்கிறார்
‘தேவசாதிகள்’ என்று தொடங்கி.

நிகமத்தில் சாபிப்ரயாமாக அறிந்தவர்
வானவர் ஆரா அமுது ஆவார்
குருகூர் சடகோபன்
தெய்வ நாயகன் நாரணன் தனது வஸ்துவை விடாதவன்
திரி விக்ரமன் அழிய மாறி இரந்தாருக்கு -இரந்து அருளி கார்யம் செய்தவன்
தன்னை தாழ விட்டுக் கொண்டு
நித்ய வசந்தமான சோலை
உபாய அத்யவசாயத்தாலே
இவர் போலே
எப்பொழுதும் பூ பறித்து குலுங்கும் திவ்ய தேசம்
குருகூர் சடகொபனால் செய்யப்பட
கீதை தான் தோன்றி வார்த்தை
இது ஏற்றம் -செய்த ஆயிரம்
வேதம் போலே தான் தோன்றி இல்லை
தத்வ தர்சி வசனம் இது –
பரத்வம் போலே வேதம்
அவதாரம் போலே இதிகாச புராணங்கள்
ஆகமம் போலே
அர்ச்சை திவ்ய பிரபந்தம்
சகரவர்திக்கு பெருமாள் போலே அவதரித்து போலே வேத வேத்ய நியாயம்
வேதம் ஸ்ரீ ராமாயணம் போலே
தகப்பன் இல்லாத குறை தீர அவன் -கோதை சொன்ன மாலை
எம்பெருமான் தாழ -ஆண்டாள் இடைச்சியாக
வேதம் தன்னை தாழ விட்டுக் கொண்டது திருப்பாவையாக
ஸ்ரமஹரமான தண்
சாபிரயமாக உபாய சூன்யம் அனுசந்தித்து
நித்ய சூரிகளுக்கு போக்ய பூதராக நித்யமாக ஆவார்கள்
பிரபாகாந்தர -நிரபேஷராய் எம்பெருமானாராலே அவனை விரும்பி

நோன்பாதி இலேன்
உனக்கு ஆற்ற கிற்கிலேன்
மாறன் சொல் வல்லார் அமரர்க்கு ஆரா அமுது மா முனிகள் காட்டி அருளி

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-10-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 17, 2013

ஆறெனக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந் தாய் உனக் கோர்கைம்
மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே
சேறுகொள் கரும்பும் பெருஞ்செந்நெலும் மலிதண் சிரீவரமங்கை
நாறு பூந்தண்துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!

    பொ-ரை :- எனக்கு உபாயம் தருமிடத்தில் உனது திருவடிகளையே உபாயமாகத் தந்தாய்; அவ்வாறு தந்த உனக்குக் கொடுப்பதற்குரிய பிரதியுபகாரம் நான் ஒன்றனையுடையேனல்லேன்; என்னுடைய உயிரும் உன்னுடையதே; சேற்றையுடைத்தான கரும்பும் பெரிய செந்நெற்பயிர்களும் மிகுந்திருக்கின்ற குளிர்ந்த ஸ்ரீ வரமங்கை என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற வாசனை வீசுகின்ற பூக்கள் பொருந்திய குளிர்ந்த திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனே! தெய்வங்கட்குத் தலைவனே!

வி-கு :- துழாய் முடியாய்! தெய்வநாயகனே! எனக்கு ஆறு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்குக் கைம்மாறு ஒன்று இலேன்; எனது ஆவியும் உனதே என்க. ஆறு – வழி. சரண் – உபாயம். தந்தொழிந்தாய் – ஒருசொல்.

ஈடு :- பத்தாம் பாட்டு. 1“அருளாய் உய்யுமாறு எனக்கு” என்றார், அப்போதே வந்து அருளக் கண்டிலர்; ஏதேனும் நிலையிலும் ‘உன் திருவடிகளே சரணம்” என்றிருக்கும்படி என்னைச் செய்தருளின மகோபகாரத்துக்குப் பிரதி உபகாரம் இல்லை என்கிறார்.

ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் – உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படிசெய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர். ஆறு – வழி. வழி – உபாயம். 1“எவ்வாறு நடந்தனை”, “இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்” என்னக்கடவதன்றோ. 2சரண் – உபேயம். அன்றிக்கே. 3“இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச்செய்வர். 4ஆறு – உபாயம். “சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம்மூன்று பொருள்களைக் காட்டும்; இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம். ஆக, 5எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி. வேறு உபாயங்களை அநுஷ்டிக்கிறவர்களைக்காட்டிலும் தமக்கு உண்டான வேறுபாட்டினைச் சொல்லுகிறார் ‘எனக்கு’ என்ற சொல்லால். 6“நோற்ற நோன்பிலேன்”என்று தொடங்கி, வேறு உபாயம் இன்மையை முன்னிட்டுக்கொண்டு உபாயத்தை அறுதியிடுகிற திருவாய்மொழி ஆகையாலே அதனையே நிகமிக்கிறது.

‘நின்பாதமே’ என்ற ஏகாரத்தாலே 1ஏகபதத்தை நினைக்கிறது. 2ஈச்வரனைப் பற்றின ஊற்றத்தாலே வேறு உபாயங்களை நெகிழுகை ஒழிய, நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது வேறு விஷயங்களிலே ஈடுபாட்டிற்குக் காரணமாம். 3மருந்தினையுண்டவன் ஒரு பாம்பின் வாயிலே கையினைக் கொடுத்தால் அது தீங்கினை விளையாதாம், மருந்து இல்லாதவன் அதனைச் செய்தால் அது மரணத்திற்குக் காரணமாம். இந்தத் தெளிவினைப் பிறப்பித்த உனக்கு ஒத்ததான பிரதியுபகாரம் காணாத மாத்திரம் அன்றிக்கே, கைம்முதல் இல்லாத நான் 4போலியாயிருப்பது ஒரு பிரதியுபகாரமும் காண்கின்றிலேன். ஏன் வருந்துகிறீர், உம்முடைய ஆத்மாவைத் தந்தாலோ? என்ன, எனது ஆவியும் உனதே – அதுவும் செய்து நெஞ்சாறல் கெட்டிருப்பன் அன்றோ, நீ மயர்வற மதிநலம் அருளிற்றிலையாகில். ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, 5இராஜமகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ. “சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டிநின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.

சேறுகொள் கரும்பும் பெரும்செந்நெலும் மலி தண்சிரீவர மங்கை – மிக்க சேற்றையுடைத்தான கரும்பும், அதற்கு நிழல் செய்யும்படியான செந்நெலும் மிக்குக் குளிர்ந்த சிரீவர மங்கை. நாறு பூந் தண் துழாய் முடியாய்-1இதற்கெல்லாம் முதலியாக வைத்த  வளையத்தையுடையையாய். தெய்வ நாயகனே-நித்தியசூரிகளுக்கு அதிபதியானவனே! தெய்வம்-தேவர்கள். எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் நிர்வாஹகனாயிரா நின்றாய், ஆனபின்னர் நான் உனக்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவது. 2நீயோ கனக்க உபகரித்துக்கொண்டு நின்றாய், நான் அறிவிலனாகப் பெற்றிலேன், இங்ஙனேயானாலும் நான் சில செய்து தலைக்கட்டினேனாக ஒண்ணாதபடி நீ பரிபூர்ணனானாய். 3உபகாரம் கொள்ளாதார் உண்டு உடுத்துத் திரியா நின்றார்கள், அறிவு கேடரானவர்கள் ‘சில பிரதியுபகாரம் செய்தோம்’ என்றிரா நின்றார்கள்; நீ நிறைவில்லாதவனாகில் இவை எல்லாம் சில செய்தனவாக நினைத்திருக்கலாமே அன்றோ, நீயோ நிறைந்தவனாயிரா நின்றாய்; ஆனபின்னர், ஒன்று செய்து தலைக்கட்டப் போமோ.

“ஆறு” என்பது, வழி என்ற பொருளில் வருவதற்கு மேற்கோள்
காட்டுகிறார் ‘எவ்வாறு’ என்று தொடங்கி.

“எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என்
செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2. “இப்பொய்கைக்கு”
என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.

2. பிள்ளான் நிர்வாஹத்தில், “சரண்” என்பது, இல்லமாய் அதனாலே,
உபேயத்தைச் சொல்லுகிறது என்று கோடல் வேண்டும்.

3. ‘இவை இரண்டாலும்’ என்றது, “ஆறு, சரண்” என்ற இந்த இரண்டு
சொற்களாலும் என்றபடி.

4. பட்டர் நிர்வாஹத்திலே சப்த நிர்வாஹம் காட்டுகிறார் ‘ஆறு உபாயம்’
என்று தொடங்கி.

“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம்
வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:”

என்பது, பாஞ்சராத்திரம்.

5. “எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றது,
எனக்கு உபாயம் தருமிடத்தில் வேறு ஒன்றனைத் தாராமல் உன்
திருவடிகளையே உபாயமாகச் செய்து தந்தாய் என்றபடி” என்று பெரிய
சீயர் அருளிச்செய்வர். ஆகையாலே, பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு
ஆறு தருமிடத்தில், நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று
சொற்களைக் கூட்டிக் கோடல் தகும். எனக்கு – வேறு கைம்முதல்
இல்லாத எனக்கு.

6. “ஆறு, சரண்” என்ற இரண்டனையும் உபாயபரமாகப் பட்டர்
அருளிச்செய்வதற்கு நியாமகம் யாது? என்ன, இடத்திற்குத் தகுதி
ஆகையாலே என்று அருளிச்செய்கிறார் ‘நோற்ற நோன்பு’ என்று
தொடங்கி.

‘ஏகபதத்தை நினைக்கிறது’ என்றது, பற்றுமிடத்தில் உபாய பாவத்தைக்
கழிக்கிற ஏகபதத்தில் அர்த்தத்தை நினைக்கிறது என்றபடி. ‘ஏகபதம்’
என்றது, சரமஸ்லோகத்திலுள்ள “ஏகம்” என்ற பதத்தைக் குறித்தபடி.
அங்கு “மாம் ஏகம்” என்பதற்கு ‘என்னையே’ என்பது பொருள். “ஏகம்”
என்ற சொல் ஏகாரத்தின் பொருளில் வந்துள்ளது

எல்லா நிலையிலும் நீயே பிராப்யம் பிராபகம்
உனக்கு பணி -செய்யவே நின் சாயை அழிவு கண்டாய்
கிடைக்காவிடிலும் நீயே என்ற வ்யவசாயம் உறுதி -களைவாய் களையாது ஒழிவாய் போலே
பர்த்தாவையே எதிர்பார்த்து இருக்குமா போலே
ஆறு -எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்
மூன்று அர்த்தங்கள்
எனது ஆவியும் உனதே
கரும்பு செந்நெல் வளர்ந்த திவ்ய தேசம்
உனக்கு ஒரு கைம்மாறு ஒன்றும் இல்லையே தைவ நாயகனே
சரண்
ஆறு வழி உபாயம் -பேறு உபேயம் பிராப்யம் பலம் புருஷார்த்தம்
அவ்வாறு அந்த வழியிலே
எவ்வாறு நடந்தனை என்னக் கடவது இ றே
வழி -முறை சாதனம்
சரண் -உபேயம் -பேறு -சரணம் -த்வயம் சரணம் சப்தம்
இரண்டும் உனது திருவடிகளே பிள்ளான் பணிக்கும்
ஆறு உபாயம் நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -பிள்ளான்

புல் காட்டி மாட்டை வரவைத்து புல்லைக் இடுவாரைப் போலே
திருவடி காட்டி திருவடி அடைய
இவை இரண்டாலும் உபாயத்தையே குறிக்கும் பட்டர் அருளிச் செய்தார்
எனக்கு ஆறு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்
ஆறு சரண் இரண்டும் உபாயம்
எனக்கு என்று இவர் வ்யாவ்ருத்தி காட்டி அருளி
வேறு ஒன்றை உபாயமாக பற்றாமல்
சரண் -க்ரஹம் போல பிள்ளான் –
பட்டர் -சரண் என்றும் உபாயம்
எனக்கு உபாயம் தரும் இடத்தில் உனது திருவடியையே கொடுத்து அருளினாய்

எனக்கு உபாயாந்தர் காட்டில் இவர் பெருமை காட்ட
நோற்ற நோன்பு இலேன் உபாயாந்தர சூன்யை சொல்லி அருளி
திருவடிகளை தவிர வேறு உபாயம் இல்லை ஆரம்பதித்த படியே முடிவிலும் அருளி
அவதாரணத்தாலே -பாதமே -என்பதால் -மாம் ஏகம் -பதத்தை நினைக்கிறது
எம்பெருமானை பற்றினவன் கர்ம ஞான யோகம் விட்டாலும் தப்பு இல்லை
நாஸ்திகன் விட்டது வைதிக ஸ்ரத்தை இன்றி
ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே -உபாயாந்தரங்கள் தானாக நெகிழ்ந்து
விடுகை
அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும் ஆசார்ய ஹ்ருதய வியாக்யானம்
கைப்பண்டம் போலே தன்னடையே நழுவும் இவனையே அறியாமல்

க்ரஹணம் புண்ய காலம் -சன்னதி திறந்து வைக்க வேண்டும் ஆகமம் சொல்லி
கிரகண தர்பணம் எப்பொழுது செய்வது -இவர்கள் -கைங்கர்யம் செய்பவர்கள் –
சந்த்யா வந்தனம் புறப்பாடு முடிந்து செய்வது போலே –
ஔஷத சேவை பண்ணுவாரைப் போலே –
பகவானைப் பற்றினவன் பாதுகாப்பு உண்டே –
இந்த தெளிவை பிறப்பித்த எனக்கு -பிரத்யுபகாரம் இல்லையே
காணாத மாதரம் அன்றிக்கே போலியான ஓன்று கூட இல்லை
ஆத்மாவும் போலி தானே
அதுவும் உன்னதே
உதவிக் கைம்மாறு என் உயிர் -என்னில் -அதுவும் உன்னதே

அதுவும் உன்னதே -கொடுத்து நெஞ்சாரல் எனக்கு தான் தெரியும்
மயர்வற மதி நலம் அருளாவிடில்
அதவும் செய்து நெஞ்சாரல் -இல்லாமல் இருந்து இருப்பேன்
உன்னது என்று அறிந்த பின்
ராஜ மகேந்தரன் படியை எடுத்து -என்னது என்று கொண்டு உனக்கு சமர்ப்பித்தது போலே
காஞ்சி புரம் மகர கண்டிகை -clive arkaad போகும் பொழுது குளிர் ஜுரம் வந்து படுக்க
நடுங்க -கோயில் அருகில் கூட்டிப் பக வராத ராஜன் -கேட்பதை கொடுக்கும் boon giver
arkod யுத்தம் வென்று
துளசி தீர்த்தம் கொடுத்து அருளி அதனால் தான் brittish regime இங்கே வந்ததாம்
clive மகர கண்டிகை இன்றும் சமர்ப்பித்து கொள்கிறான்

தன்னது என்று அபிமானித்து கொடுத்தது போலே
எனது ஆவியும் உன்னதே
ஆத்தான் திருவழுந்தூர் அரையர் -இன்னும் ஒரு நிர்வாஹம்
நெறி காட்டி நீக்காமல் உனது திருவடிகளையே உபாயமாக காட்டி அருளினாய் பட்டர்
நின் பாதமே -எனது ஆவியும் உனதே -என்று அந்வயித்து -அரையர் –
உனது திருவடி மேல் ஆணை எனது ஆவி உன்னதே
இத்தனை நாள் நான் பிரமித்த படி தப்பு
சபதமாக்கி நிர்வஹித்து காட்டி
ஆறு எனக்கு சரணாக தந்து ஒழிந்தாய்
உபாயம் தரும் இடத்தில் உன்னுடைய சரண் -திருவடிகளை தந்தாய்-

சேறு கொள் கரும்பும் செந்நெலும் -மிக்க  ஸ்ரீ வர மங்கை
கரும்புக்கு நிழல் தரக்கூடிய பெரிய செந்நெல்
தர்சநீயமான திருத்துழாய் –
வளையம் அணிந்து
முடியாய் -நிர்வாஹகன்
உனக்கு என்ன பிரத்யுபகாரம் செய்வேன்
அறிவைக் கொடுத்து ஆத்மா உன்னது காட்டிக் கொடுத்து
நீயோ பரி பூரணன்
எனக்கும் அறிவு கொடுத்து அருளாய்
நானோ அஞனாய் இல்லை
அறிவு கேடர் பிரத்யுபகாரம் செய்வதாக நினைக்க –
உபகாரம் கொள்ளாத சம்சாரிகள் பிரத்யுபகாரம் செய்ய நினைக்க வில்லை
உண்டு உடுத்து உகந்து போகிறார்கள்
நீ அபூர்ணன் ஆகில் -இவற்றை ஏற்றுக் கொள்வாய்
நீயோ தெய்வ நாயகன்
நித்ய சூரிகள் நாயகன்
கொள்ளக் குறை இல்லாத நீ
உள்ளபடி உணர்வில் -நமக்கு ஓன்று உண்டு என்ன விரகு இல்லை ஞான பிரேம சாரம்
என் சொல்வீர் –
அடுத்த பாட்டில் அவரே பதில் சொல்லி அருளி
இல்லை இருவருக்கும் -சொன்னால் போதும்
அவனை வெல்ல
இல்லை குறை இல்லை உடைமை
எதிர்பார்க்கும் குறை இல்லை
சமர்ப்பிக்க எனக்கு உடைமையும் இல்லை

தேசிகன் -இல்லாததை சமர்ப்பிக்க அபராதங்கள் நம்மிடம் உண்டே
நக்கி சாப்பிடும் படி lick இதனாலே வந்தது
திருப்தி அடைந்து -முடியாமல் -இன்னும் -ப்ரீதி -வாத்சல்ய குணம் காட்டி அருளி

ஓன்று செய்து தலைக்கட்ட போமோ

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

ஸ்ரீ பெரிய திருமொழி -ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம் -தனியன் –

June 16, 2013

ஸ்ரீ கார்த்திகையில் ஸ்ரீ கார்த்திகை நக்ஷத்ரம் – நள வருஷம்-398-கலி தொடங்கி திருமங்கை ஆழ்வார் திரு அவதாரம் –
நீலன் திரு நாமம் -ஸ்ரீ திருக் குறையலூர் -கள்ளர் குலத்தில் -நாலு கவிப் பெருமாள்
கலி ஹந்தா -ஷட் பிரபந்தம் -அங்கம் -திரு சார்ங்கம் அம்சம் –
ஸ்ரீ ஹரி பாதத்தில் வாழும் ஸிம்ஹம் இவர் -பாஹ்ய குத்ருஷ்ட்டி யானைக் கூட்டங்களை
கர்ஜனையாலே போக்கி அருளியவர் -கலி விபு -விரோதி –
ஸ்ரீ திரு வெள்ளக்குளம் -ஸ்ரீ குமுத வல்லி -திரு மா மகள் இவளது பெயர்-

நான்கு சீடர்கள் -ஆடல் மா குதிரை -திரு ஸ்ரீ நறையூர் நம்பி -ஸமாச்ரயணம்
ஸ்ரீ வயலாலி மணவாளன் திரு மந்த்ரம் அருளி-நீர் மிடுக்கனோ -கலியன் -திரு மந்த்ரார்த்தம் -ஸ்ரீ கண்ணபுரத்தம்மான்
ஆலி நாட்டு அரசன்-அரச மரத்தடியில் தேவாதி அரசன் மந்த்ர அரசான திரு மந்த்ரம் ஓதி –
வேடு பறி உத்சவம் -பங்குனி உத்தரம் முந்திய நாள் -திரு மணம் கொல்லை-எட்டு எழுத்து பறித்த இடம்
அடி தோறும் அர்ச்சை-
திரு நெடும் தாண்டகம் -தேவ கானத்தில் பாடி -இராப்பத்து ஸ்ரீ நம் பெருமாளைப் பிரார்த்தித்து தொடங்கி வைத்தார்
திரு வாளன் படித்துறை -பாடிய வாளன் துறை -நித்ய சம்ஸ்காரம்
திருக் குறுங்குடியில் இருந்து தன்னுடைச் சோதி எழுந்து அருளினார்

நீலன் -கலியன் -பரகாலன் -ஆலி மாடன் -கொற்றை வேல் -திரு மங்கை நாட்டு வேந்தன்
திருக்கண்ண மங்கை -நின் தனக்கும் குறிப்பாகில் -கற்கலாம் பொருள் தானே
ஸ்ரீ நம்பிள்ளை -நம்பூர் வரதாச்சார்யர் -கலிகன்றி தாசர்–
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –1167-ஆவணி ரோகினி யாமுனாச்சார்யர் திருக்குமாரர் இவர்-
நான்கு சிம்ஹாசனங்கள் -வியாக்கியான சக்ரவர்த்தி-ஸ்ரீ அபய ப்ரத ராஜர்-1262-தன்னுடைச் சோதி-
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை இவரது சகோதரி திருக்குமாரர்-

—————

ஸ்ரீ திருக்கோளூர் நம்பி அருளிச் செய்த தனியன்-
(ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி அருளிச் செய்த தனியன் என்றும் சொல்வர் )

கலயாமி கலி த்வம்சம் கவிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி பிரகாசாபி ராவித்யம் நிஹதம் தம –

கலித்வம்சம் –
கலிகன்றி -என்று நிரூபகத்தை உடையரான பரகால கவியை –
கலயாமி -பிரணமாமி -என்கிறது –
லோக திவாகரம் –
ஆதித்யன் -பாஹ்ய அந்த காரத்தைப் போக்கும்
இவர் -நாட்டார்க்கு பாஹ்யாப்ய அந்தகாரங்கள் -புறத்திலும் அகத்திலும் உள்ள இருள் -இரண்டையும் -போக்குவார்
யஸ்ய கோபி –
யாதொருத்தர் உடைய
யத் கோ சஹச்ரம் -என்கிற மறை ஆயிரங்களினாலே
பிரகாசாபிர் –
நடை விளங்கு தமிழ் மாலையாய் –
நெஞ்சுக்கு இருள் கடி தீபமாய் இருக்கும்
இப்படி பிரகாசங்களான ஸ்ரீ ஸூக்திகளினாலே
அறிவிலா மனிசர் உடைய
ஆவித்யம் நிஹதம் தம –
ஆவித்ய தமஸ் நிஹதம் –
அவித்யையாகிற அந்தகாரம் -அஞ்ஞானத்தால் வந்த அந்தகாரம் அடிக்கப்பட்டதோ
அவரை கலயாமி -என்கிறது –

—————————————————————————–

ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –

அவதாரிகை –
எம்பெருமானுக்கு திரு மதிள் போலே அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள் செய்து அருளின ஆழ்வார் உடைய
திரு நாமங்கள் பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது –
பிரத்யஷே குரவஸ் ஸ்துத்யா -என்னக் கடவது இறே
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லார்க்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –

வாழி பரகாலன் வாழி கலி கன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்த்ரம் கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர் மான வேல் –

வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான-த்வேஷம் பண்ணும் பிரதிகூலர்களுக்கு காலனானவர் வாழி

வாழி கலிகன்றி –
கலி தோஷ நிவாரகர் வாழி

வாழி குறையலூர் வாழ் வேந்தன் –
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையவராய்
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா -என்னுதல்
அங்கே வாழுகிறவர் -என்னுதல் –

மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் –வாழியரோ –
என்று
ஆழ்வாரையும்
அவர் திருக் கையில் வேலையும் ஒருக்காலே ஆஸாசித்த படி -மங்களா சாசனம் செய்தபடி

மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை-பெருமாள் திருமொழி-1-7- இறே வாள் வலியால் மந்த்ரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே-இயல் சாத்து-
கைப்பொருள்கள் -கையில் வளை முதலியன -முன்னமே கைக்கொண்டவர் இடத்திலே இறே-நாச்சியார் திரு மொழி-
மந்தரப் பொருள் கைக் கொண்டது –
மந்த்ரத்தைப் பற்றி-வேதங்களால் சொல்லப் படும் சர்வேஸ்வரனை பற்றி -இறே மந்த்ரம் கொண்டது
(மந்த்ரம் -திருமந்த்ரத்தையும் அவனையும் குறிக்கும் -மந்திரத்தால் மந்த்ரத்தை -திரு நெடும் தாண்டகம்)

மங்கையர் கோன் –
திரு மங்கை மன்னன் இறே

தூயோன்
தூய்மை என்னும் பாஹ்யாப்யாந்தர சுத்தியை உடையவர் –
அங்கமலத்தட வயல்சூழ் ஆலி நாடன்
அருள் மாரி
அரட்ட முக்கி
அடையார் சீயம்
கொங்குமலர் குழலியர் வேள் மங்கை வேந்தன்
கொற்றவேல்
பரகாலன்
கலியன்
என்று தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே –

சுடர் மான வேல்-
தேஜோ ரூபமான -பெரிய வேல் –
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல்

வாழியரோ –
இத்தால்
ஆழ்வாரோபாதி ஆயுதமும் ஆசாச்யம் -என்றபடி
நின் கையில் வேல் போற்றி -என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல்
ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும்
அத்தாலே இதன் விஜயத்தை வேண்டுகிறது –

————————————————————-

ஸ்ரீ கூரத் ஆழ்வான் அருளிச் செய்தது –

இதில் ஆழ்வார் திவ்ய பிரபந்த வைபவம் சொல்கிறது

நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்லமுதம் தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரன சாரம் பல சமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே –

நெஞ்சுக்கு இருள் கடி தீபம் –
நெஞ்சுக்கு இருள் ஆகிறது
மநோ மாநில்யமான அஞ்ஞானம்
மனனகமலம் இறே
ஜ்ஞானக் கலை யாகையாலே அத்தை நிராகரிக்கும் –(ஞான தீபேண)
ஜ்ஞானச் சுடர் விளக்காய் இருக்கும் –( பேயாழ்வார்)

அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம்-
பிரதிக்ரியை ஒன்றாலும் அடங்காத
நெடுகிப் பெருத்து
ஜன்மம் ஆகிற நஞ்சுக்கு நல்ல அமுதம் –
அந்த விஷத்தை மாற்றுகைக்கு நிர்விஷமான அமர்தம் –
சம்சார விஷத்துக்கு அம்ருதமாம் இறே திருமால் திரு நாமம் இருப்பது –
திருமங்கை ஆழ்வார் திவ்ய பிரபந்தம்
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை பிரதி பாதிக்குமதாய் இறே இருப்பது –

தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் –
திராவிட சாஸ்திரம்- எழுத்து- சொல்- பொருள் -யாப்பு -அலங்காரம் –
என்கிற விலஷணமான பஞ்ச லஷணங்கள் உடன் கூடி இருப்பது –
அன்றிக்கே –
தமிழுக்கு -எழுத்து முதலான அஞ்சு லஷணத்தையும் அறுதி இடுவதான நன்னூல்
என்று ஒரு சாஸ்திரம் உண்டு-அத்தை சொல்லிற்றாதல்
ஏவம் விதமான திராவிட சாஸ்திர மார்க்க பஞ்சகத்துக்கு –இலக்கியம்
இலக்கண இலக்கியம் -என்று இறே அவர்கள் சொல்லுவது –
அதுக்கு லஷ்யமாய் படிமாவாய் இருக்கும் –
இத்தைப் பார்த்து லஷணம் கட்டலாய் இருக்கை-

ஆரண சாரம்
கேவலம் தமிழுக்கு லஷணமாய் இருக்கை அன்றிக்கே
ஆரண சாரமுமாயும் இருக்கும் –
வேத சாரமுமாய் இருக்கும் என்றபடி
திருமந்த்ரார்தம் இறே இதில் பிரதிபாதிப்பது

நாராயணா என்னும் நாமம் -என்று உபக்ரமித்து
பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் -என்றும்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
இமையோர் தலைவர் உடைய திருநாமம் நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயணம் -என்றும்
நர நாரணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தான் -என்றும்
நாட்டினாய் –என்னை காட்டினாய் -என்றும்
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது -என்றும்
பேராளன் பேரோதும் -என்றும்
நாராயணா ஒ மணி வண்ணா -என்றும்
திருமந்திர விசாரமே இறே முடிய நடந்து போகிறது –
ஆகையால்-ஆரண சாரம் -என்கிறது –
சகல வேத சங்கரஹதயா தத் சாரமாய் இறே திரு மந்த்ரம் தான் இருப்பது –

பல சமயப் பஞ்சுக் கனலின் பொறி-
பரசமயம் ஆகிற நூலராசிக்கு கால அநல கணமாய் இருக்கை –
வெள்ளியார்
பிண்டியார்
போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல்களை-( 9-7-)
செம்மைப் பனுவல் நூலால்-( 10-4-) இறே இவர் கழித்துத் தள்ளுவது –
பர சமயக் குறும்பு அறுத்தவர் இறே –

இது எல்லாம் ஆவது எது தான் -என்ன –
பரகாலன் பனுவல்களே –
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் பனுவல்களே இவற்றைச் செய்து முடிக்கும் –

அவரும் வேண்டா
அவர் ஸ்ரீ ஸூக்திகளே அமையும் -இந்தக் கார்யங்களை செய்கைக்கு -என்கை –
இவர் அதிகரித்த கார்யத்துக்கு கையும் வாயும் ஒத்து இருக்கிறபடி இது வாய்த்து –

———————————————————————

எம்பார் அருளிச் செய்த தனியன் –

இனி –
இவ் வாழ்வாரைப் போலே
பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து
வைதிக மார்க்கத்தை நடத்தியும்
உகந்து அருளின நிலங்களை உத்தரித்தும்
தத் பிரதிபாதகமான இவர் ஸ்ரீ ஸூக்தியை வர்த்திப்பித்தும் –
போருமவர் இறே உடையவர் –
அத்தைப் பற்ற
இவ் வாழ்வார் ஸ்ரீ ஸூக்தியான திருமொழி ஆயிரமும் என் ஹிருதயத்திலே நிலைத்து நிற்கும்படி
உபகரித்து அருள வேணும் என்று
எம்பெருமானாரை -அர்த்திக்கிறது -இதில் –

எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –

எங்கள் கதியே-
அகதிகளான எங்களுக்கு கதியாய் இருக்கிறவரே

இராமானுச முனியே
சதுர் அஷரியாய்
மோஷ ஏக ஹேதுவான திரு நாமத்தை உடையருமாய்
முனியே-
ஆத்ம ரஷணத்தில் மனனம் பண்ணுமவரே –

சங்கை கெடுத்தாண்ட –
த்வத் அந்யஸ் ஸம்சயஸ் யாஸ்யச் சேத்தா நஹ் யுபபத்யதே-என்றும்
தத்துவ நூல் கூழற்றது -என்றும்
வேதாந்த சாஸ்த்ரத்தை நிஸ் சம்சயமாகப் பண்ணி
மனசிலே சம்சயங்களைப் போக்கி
ஆண்ட-
எல்லாரையும் அடிமையாக ஆண்ட –

தவராசா —
எதிராஜா -என்றபடி
அன்றிக்கே
தவம் -என்று சரணாகதி தர்மமாய்-அத்தை வர்த்திப்பிக்கிற ராஜா என்றுமாம் –
தவ நெறி இறே –(சிந்தனையை தவ நெறியை திரு மாலை)

பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை –
அதி சமர்த்தமான யசஸ்ஸை உடைய திரு மங்கைக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் உடைய
வேத ரூபமாய்

யாயிரம் அனைத்தும் –
ஆயிரம் பாட்டாய் இருக்கிற
பெரிய திருமொழி பிரபந்தம் எல்லாவற்றையும்
அன்றிக்கே
ஆயிரம் அனைத்தும் -என்று
ஆயிரத்தையும்
மற்றும் அவர் அனைத்து பிரபந்தங்களையும் -என்றுமாம் –

தங்கு மனம் நீ எனக்குத் தா –
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் -என்கிற
திவ்ய ஸூக்தியை தரிக்கும் படியான மனஸ்சைத் தந்து அருள வேணும் –

குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் (-2-) -என்றும்
நீலன் தனக்கு உலகில் இனியான் (17)-என்றும்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து -என்றும்
எம்பெருமானாரைச் சொல்லக் கடவது இறே
அத்தாலே அவரை அபேஷிக்கிறது –

—————————————————————–

ஸ்ரீ சோமாசி ஆண்டான் அருளிச் செய்த தனியன் –

இதில் பிரபந்த – அந்வய-பிரதிபந்தகங்களை –
பிரபந்த கர்த்தாவே
சேதிக்க வேணும்
என்கிறது

மாலைத் தனியே வழி பறிக்க வேணும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே வேலை
அணைத்து அருளும் கையால் அடியேன் வினையைத்
துணித்து அருள வேணும் துணிந்து

மாலைத் தனி வழி பறிக்க வேண்டும் என்று கோலிப்-
சர்வாதிகனை
தனி வழியில் பறிக்க வேணும் என்று உத்யோகித்து
தத் அனுகுணமாக
ஸ்ரீ திருவரசின் அடியிலே

பதிவிருந்த –
மேலே கொடி வைத்து பாரிப்பித்த

கொற்றவனே –
ராஜாவே
பறி கொடுக்குமவன் -தெய்வத்துக்கு அரசு –
பறிக்குமவர் -ஆலி நாட்டு அரசு –
பறிக்கும் இடம் -மரங்களுக்கு அரசு இடம்
பறித்தது -மந்தரத்து அரசு
இப்படி யாய்த்து பறிக்கப் பதி விருந்தபடி –

வேலை அணைத்து அருளும் கையால்-
வெட்டிப் பறிக்க
எடுத்த
அணைத்த
வேலாலே

அடியேன் வினையைத் –
அடியேனான நான் -என்று
அவனுக்கு அடிமையான உமக்கு அடியேனான அடியேன் வினையை –
உமக்கு அடியோம் ஆகைக்கும்–வினைக்கும் -என்ன சேர்த்தி -உண்டு-
என் பெய் வினையைக் கிட்டிக் கிழங்கோடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த
இராமானுசன் -93–என்கிறபடியே

துணித்து அருள வேண்டும் துணிந்து –
அடியேன் வினையை -துணிந்து -துணித்து அருள வேண்டும் –
வழி பறிக்கத் துணிந்தாப் போலே
வினையைத் துணிக்கத் துணிய வேணும் –
என் வினையைப் போக்க வேணும் -என்று
நீர் துணிந்தால் யாய்த்து போவது –
பண்டை பல் வினை பாற்றி யருளினான் -என்னும்படி பண்ண வேணும்

———————————————————-

ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-9-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 16, 2013

புள்ளின்வாய் பிளந்தாய்! மருதிடை போயினாய்! எருதேழ் அடர்த்தஎன்
கள்ள மாயவனே! கருமாணிக்கச் சுடரே!
தெள்ளியார் திரு நான்மறைகள் வல்லார் மலிதண் சிரீவரமங்கை
யுள்ளிருந்த எந்தாய்! அருளாய் உய்யுமாறு எனக்கே.

பொ-ரை :- பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே! மருத மரங்களின் நடுவே போனவனே! இடபங்கள் ஏழனையும் கொன்ற என் கள்ள மாயவனே! கரிய மாணிக்கத்தின் சுடரே! திருநான்மறைகளிலும் வல்லவர்களான தெளிந்த ஞானமுடைய ஸ்ரீவைஷ்ணவர்கள் நிறைந்து வசிக்கின்ற குளிர்ந்த ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்திற்குள் எழுந்தருளியிருக்கின்ற எந்தையே! எனக்கு உஜ்ஜிவிக்கும் வகையை அருள வேண்டும்.

வி-கு :- வல்லார் : முற்றெச்சம். வல்லாராகிய தெள்ளியார் என்க. மலிதல் – மிகுதல். இருந்த: கால மயக்கம்.

ஈடு :- ஒன்பதாம் பாட்டு. 1“அருஞ்சேற்றில் வீழ்த்திகண்டாய்” என்று அஞ்சுகின்ற உமக்கு நான் செய்ய வேண்டுவது என்? என்ன, சக்தனாய் அண்மையிலிருப்பவனாயிருக்கிற நீ என் விரோதியைப் போக்கி, உன் திருவடிகளிலே கைங்கரியத்தைத் தந்தருள வேணும் என்கிறார்.

புள்ளின்வாய் பிளந்தாய் மருதிடை போயினாய் எருது ஏழ் அடர்த்த – 2கலியர் சோறு இட்ட நாட்களை எண்ணுமாறு போன்று, பண்டு உபகரித்த படிகளைச் சொல்லுகிறார். பகாசுரனை அழித்தாய், இரட்டை மருதமரங்களைப் பொடிபடுத்தினாய், இடபங்கள் ஏழனையும் ஊட்டியாக நெரித்தாய். என் கள்ள மாயவனே – ஒருவர்க்கும்தெரியாத ஆச்சரியமான செயல்களையுடையையாய், 1அவை எல்லாம் எனக்குத் தெரியும்படி செய்து, என்னை அகப்படுத்திக்கொண்டவனே! கரு மாணிக்கச் சுடரே – நப்பின்னைப் பிராட்டியுடைய தடைகளைப் போக்கி, 2அவளுக்குக் கொடுத்த உடம்பின் வாசியை எனக்கும் அறிவித்தவனே! தெள்ளியார் – 3தங்கள் தங்களுக்கும் சில உண்டேயாகிலும், அவற்றைப் பொகட்டு அவன் கைபார்த்திருக்குமவர்கள். 4இவர்கள் ஞானத்துக்கு விநியோகம் இதுவே அன்றோ. என்றது, “இராமபிரானுடையவும் அறிவிற்சிறந்தவனான இலக்ஷ்மணனுடையவும் அபிப்பிராயத்தை அறிந்த சீதை கலங்கவில்லை” என்கிறபடியே, அசோக வனத்திலே தனியிருப்பில் பிராட்டியின் தெளிவினைப் போன்ற தெளிவினையுடையவர்கள் என்றபடி. அன்றிக்கே, 5“சுக்கிரீவ மஹாராஜரையும் மற்றைய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துப் பெரிய சப்தத்தோடு சொன்னான்”என்கிறபடியே’ நலியா நின்றாலும் 1தாய்முகமே பார்த்துக் கிடக்கும் குழந்தையைப் போலே, 2“வத்யதாம் – கொல்லுதற்குரியவன்” என்கிற மஹாராஜரையும், அவரிலும் கொடிய முதலிகளையும் அழகிதாகப் பார்த்துக் கொண்டிருந்த ஸ்ரீ விபீஷணாழ்வான் தெளிவு போன்ற தெளிவினையுடையவர்கள் என்னுதல்.

திருநான்மறைகள் வல்லார் – 3நூறாயிரம் வரி எழுதியிருந்தாலும் அவற்றிற்போகாமல், தாத்பரியத்தைக் கிரகிக்குமவர்கள். என்றது, “மாதவன் பேர் சொல்லுவதே ஓத்தின் சுருக்கு” என்றிருக்குமவர்கள் என்றபடி. மலி தண் சிரீவரமங்கையுள் இருந்த எந்தாய் – அவர்கள் நெருங்கி வசிக்கின்ற சிரமஹரமான சிரீவரமங்கையிலே அவர்களைப் போன்று இருக்கின்ற என் நாதனே! எனக்கு உய்யுமாறு அருளாய் 4அறச்சென்றற்றது கண்டாய், உன் திருவடிகளில் கைங்கர்யத்தைத் தந்தருள வேணும். 5கைங்கரியம்

என்றும், உய்கை என்றும் இரண்டு இல்லை இவர்க்கு. விரைந்திலராகில் அவன் வைலக்ஷண்யத்தில் ஞானம் இல்லையாகக் கடவது, இங்கே கால் பாவிற்றாகில் சம்சாரத்தின் தண்மையில் ஞானம் இல்லையாகக் கடவது.

ஞானம் உண்டானால் சாதநாநுஷ்டானம் செய்யவேண்டாவோ? என்ன,
அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘இவர்கள் ஞானத்துக்கு’ என்று
தொடங்கி. இதற்குப் பிரமாணம் காட்டுகிறார் ‘இராமபிரானுடையவும்’
என்று தொடங்கி.

“ராமஸ்ய வ்யவஸாயஜ்ஞா லக்ஷ்மணஸ்ய ச தீமத:
ந அத்யர்த்தம் க்ஷு ப்யதே தேவீ கங்கேவ ஜலதாகமே”-என்பது, ஸ்ரீராமா. சுந். 16 : 4.

5. இரண்டாவது தாத்பரியம், அவன்தான் நலியும்போதும் அவன் கையைப்
பார்த்திருக்கும்படி தெளிந்த ஞானத்தை உடையவர்கள் என்பது.
இதனையே அருளிச்செய்கிறார் ‘சுக்கிரீவ மஹாராஜரையும்’ என்று
தொடங்கி.

“உவாச ச மஹாபிராஜ்ஞ: ஸ்வரேண மஹதா மஹாந்
ஸு க்ரீவம் தாந் ச ஸம்ப்ரேக்ஷ்ய கஸ்தஏவ விபீஷண:”-என்பது, ஸ்ரீராமா. யுத். 17 : 9.

தருதுயரம் தடாயேல் உன்சரணல்லால் சரண்இல்லை
விரைகுழுவும் மலர்ப்பொழில்சூழ் விற்றுவக்கோட் டம்மானே
அரிசினத்தால் ஈன்றதாய அகற்றிடினும் மற்றவள்தன்
அருள்நினைந்தே அழுங்குழவி யதுவேபோன் றிருந்தேனே.-என்பது, பெருமாள் திருமொழி.

“குழவி அலைப்பினும் அன்னேயென் றோடும்”-என்பது, நான்மணிக்கடிகை.

வல்லார்” என்றதற்கு, தாத்பரியத்தைக் கிரஹிக்குமவர்கள் என்று பொருள்
அருளிச்செய்கிறார் ‘நூறாயிரம்’ என்று தொடங்கி. அதனைப் பிரமாண
முகத்தாலே விவரணம் செய்கிறார் ‘மாதவன்’ என்று தொடங்கி.

ஓத்தின் பொருள்முடிவும் இத்தனையே உத்தமன்பேர்
ஏத்தும் திறமறிமின் ஏழைகாள் – ஓத்ததனை
வல்லீரேல் நன்றுஅதனை மாட்டீரேல் மாதவன்பேர்
சொல்லுவதே ஓத்தின் சுருக்கு.-என்பது, இரண்டாம் திருவந். 39.

சத்தனாய் -சந்நிஹிதனாய் இருக்கும் நீ
பசியர் சோறு இட்டதை நினைத்து சொல்லுவது போலே
விரோதி நிரசனம் செய்ததை எல்லாம் சொல்லி
கள்ள ஒருவருக்கும் தெரியாத மாய ஆச்சர்ய செஷ்டிதன்கள் நப்பின்னை -பிராட்டி போலே உனது திருமேனியைக் கொடுத்து
தெள்ளியார் –
தெளிந்தவர் அடியவர் ரஷிக்க உன்னையும் திருத்த வல்லவர்கள்
அவனுக்கு செய்யும் கைங்கர்யமாக இவர்கள் அனுஷ்டானம்
தெளிவு -விபீஷண ஆழ்வான் போலவும் பிராட்டி போலவும்
ராமனின் உறுதி அறிந்து லஷ்மணன் உறுதியும் அறிந்த பிராட்டி போலே
திருவடி தவறு செய்ய பார்க்க ராஷசிகளை -காத்து ஆஸ்ரித விஷயத்தில் வழி தப்பினால் திருத்த
சுக்ரீவன் போல்வார் விரோதித்தாலும் அவர்களைப் பார்த்து வார்த்தை சொன்ன விபீஷணன்
அரி  சினத்தால் ஈன்ற தாய் அகற்றினாலும் அவள் முகத்தையே நோக்கும்
திரு நான்மறை தாத்பர்யம் க்ரஹிக்கும்

அவனே உபாயம் உபேயம்
மாதவன் ஒத்தின் சுருக்கு அறிந்து
மலிந்து வர்த்திக்கும்
இருந்து ரஷிக்க வேண்டாமா
ஷணம் தாமத்திதால் நான் முடிவேன்
உய்யுமாறு -கைங்கர்யம்
உஜ்ஜீவனமும் கைங்கர்யமும் பர்யாய சப்தம்
அவன் வை லஷண்யம் அறிந்து துடிக்கிறார்
கால் பாய்ந்தால் ஞானம் இல்லை
உடனே அனுக்ரகம் செய்து திருவடி சேர்த்து கொள் என்கிறார்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-8-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

June 16, 2013

அகற்ற நீவைத்த மாய வல்லைம் புலன்களாமவை நன்கறிந்தனன்
அகற்றி என்னையும்நீ அரும்சேற்றில் வீழ்த்திகண்டாய்
பகர்க்கதிர் மணிமாட நீடுசிரீவர மங்கை வாண னே! என்றும்
புகற்கரிய எந்தாய்! புள்ளின்வாய் பிளந்தானே!

பொ-ரை :- உன் பக்கல் அன்பு இல்லாதாரை அகற்றுவதற்காக உன்னாலே உண்டாக்கி வைக்கப்பட்ட வஞ்சனைபொருந்திய கொடிய ஐந்து இந்திரியங்களான அவற்றை உள்ளவாறே அறிந்தேன்; அவற்றின் தன்மையை அறிந்திருக்கிற என்னையும் நீக்கி, கரை ஏற அரிதான விஷயங்களாகிற சேற்றிலே தள்ளிவிடுவாயோ என்று அஞ்சுகிறேன்; மிக்க ஒளியையுடைய மாணிக்கங்கள் பதித்த உயர்ந்த மாடங்களையுடைய ஸ்ரீவரமங்கை என்னும் திவ்விய தேசத்தில் நித்திய வாசம் செய்கின்றவனே! என்றும் பேசுதற்கு அரிய எந்தையே! பகாசுரனுடைய வாயினைப் பிளந்தவனே!

வி-கு :- வாணனே! எந்தாய்! பிளந்தானே! என்னையும் அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் என்க. வாழ்நன் என்பது, வாணன் என மரீஇயது. கண்டாய்: முன்னிலை அசைச்சொல். பகர் – சொல்லப்படுகின்ற எனலுமாம். ‘பகற்கதிர்’ என்ற பாடம் சிறக்கும். புகற்கு அரிய – அன்பில்லாதார் அடைவதற்கு அரிய என்னலுமாம்.

ஈடு :- எட்டாம் பாட்டு. 1உம்மை அகற்றுவதற்குக் காரணம் என்? இங்கு வந்து அண்மையினேனாய் நின்றது உமக்காக அன்றோ? என்ன, அடிமைக்குப் பகையாக இருக்கின்ற ஐம்புல இன்பங்கள் நடையாடுகிற சம்சாரத்திலே வைத்த போதே என்னை அகற்றினாய் அல்லையோ என்கிறார்.

அகற்ற நீ வைத்த – 2சர்வசக்தியான நீ, உன்னை உகவாதார் அகன்று போம்படிக்குத் தகுதியாக, “என்னுடைய மாயை தாண்ட முடியாதது” என்று கொண்டு வைத்த. மாயம் வல் ஐம்புலன்களாம் அவை – ஆச்சரியமான செயல்களைச் செய்யக்கூடியனவாய்த் தப்ப ஒண்ணாதபடியாய் இருக்கிற ஐந்து இந்திரியங்களாகிறவை, 3உன்னை விரும்பாதார் அகன்று போம்படிக்குத்

தகுதியாகச் சர்வேச்வரனான நீ வைத்தவை. நீர் எங்ஙனே இது அறிந்தபடி? என்ன, நன்கு அறிந்தனன் – மயர் வற மதி நலம் பெறுகையாலே நான் அழகிதாக அறிந்தனன். 1உகவாதார் அகன்று போகைக்கு வைத்தோமாகில், அதனால் உமக்கு என்? என்ன, அகற்றி என்னையும் நீ அரும் சேற்றில் வீழ்த்திகண்டாய் – உன்னால் அல்லது செல்லாதபடியாயிருக்கிற என்னையும் உன்பக்கல் நின்றும் நீ பிரித்து, கால்வாங்க ஒண்ணாதபடியான ஐம்புல இன்பங்களிலே தள்ளப் புகாநின்றாய். 2இந்த உடம்போடு எனக்கு ஒரு சம்பந்தம் அற்றிருக்க, நீ பொதுவான இதிலே வைக்கிறது கைவிடப் பார்த்தன்றோ? நன்று; அவன்பக்கல் காரியம் கொள்ள நினைக்கிறவர், அருளில்லாதவர்களைச் சொல்லுமாறு போன்று கொடிதாகச் சொல்லுவான் என்? என்ன, ‘நமக்கே பழியாய் வந்து விளையப் புகாநின்றது’ என்று நீர்மையுடையார் காரியம் செய்து தலைக்கட்டுவர்கள் என்று நினைத்துச் சொல்லுகிறார்.

பகர்க் கதிர் மணி மாடம் நீடு சிரீவரமங்கை வாணனே – மிக்க ஒளியையுடைத்தாய், மணி மயமான மாடங்களின் ஓக்கத்தையுடைத்தான சிரீவரமங்கைக்குப் பிரதானனானவனே! பகர் என்பதும், கதிர் என்பதும் ஒருபொருட்சொற்கள்; மிக்க ஒளி என்பது பொருளாம். ‘பகற்கதிர்’ என்று பாடமான போது, சூரியலோகம் வரையிலும் செல்ல உயர்ந்து ஒளியையுடைய மணி மாடங்கள் என்று பொருள் கூறுக. பகல் – சூரியன். என்றும் புகற்கு அரிய எந்தாய் – நீ, கிட்டாமல் செய்யுமதுவும் அழியச்செய்வதும் உகவாதாரை அன்றோ. உனக்கே உரியனான என் விஷயத்திலும் அதனைச் செய்யவோ என்பார் ‘எந்தாய்’ என்கிறார். புள்ளின் வாய் பிளந்தானே – உமக்குக் கிட்டுதற்குத் தட்டு என்? என்ன, பகாசுரனை அழித்தாற்போலே, என் சரீர சம்பந்தத்தைப் போக்கியருளாய் நான் வந்து கிட்டும்படி என்கிறார்.

“நீ அகற்ற வைத்த மாய வல் ஐம்புலன்களாமவை” என்று கூட்டிப்
பொருள் அருளிச்செய்கிறார் ‘சர்வ சக்தியான நீ’ என்று தொடங்கி.
‘இந்திரியங்களுக்குத் தப்ப முடியாது’ என்பதற்குப் பிரமாணம் காட்டுகிறார்
‘என்னுடைய மாயை’ என்று தொடங்கி.

“தைவீஹி ஏஷா குணமயீ மம மாயா துரத்யயா
மாமேவ யே ப்ரபத்யந்தே மாயாம் ஏதாம் தரந்தி தே”

என்பது, ஸ்ரீகீதை, 7:14. இதனைப் பிரமாணமாக எடுத்தது, இந்திரியங்களும்
பிரகிருதியின் காரியமாய் அதற்குள்ளே அந்தர்ப்பூதமாகையாலே என்க.

அகற்ற பிரசங்கம் என்ன -இங்கே சந்நிகிதன் ஆன பின்பு
இன்னும் இங்கே வைத்து இருக்கிறாய்
சேற்றிலே தள்ளி -மாய ஐம் புலன்கள்
மங்கை -ஸ்ரீ வர மங்கை யாகிற திவ்ய தேசத்துக்கு நாயகன்
மங்கள நகர் மன்கைம் ஆனதாம்
ஸ்ரீ வில்லிபுத்தூர் புதுவை ஆனது போலே
விரோதிகள் போக்கி கைக்கொள்ள வேண்டும்
அகற்ற -சர்வ சக்தியான உன்னை –
வேண்டாதாரை அகற்ற நீ வைத்த
மம மாயா துரத்தியா கடக்க தாண்ட முடியாதே
மாய வல் ஐம் புலன்கள் –
நீர் எங்கனே அறிந்தீர் மயர்வற மதி நலம் அருளப் பெருகையால் அழகியதாக அறிந்தேன்
உவகாதார் அகற்ற வைத்த
என்னையும் -உன்னால் அல்லது செல்லாத என்னையும் பிரித்து சம்சாரத்தில் தள்ளி
அவன் பிக்கள் கார்யம் கொள்ள நினைக்கிறவர் -நீயே
தள்ளினாய் -எடாமைக்கு உறுப்பு இ றே ஸ்ரீ வசன பூஷன ஸ்ரீ ஸூ க்தி

நமக்கு பழி -நீர்மை உடையவர் கார்யம் செய்வார் என்று –
சம்சாரத்தில் விழ கர்மம் தான் காரணம் எம்பெருமான் காரணம் இல்லையே
நீயே தந்த துக்கங்களை நீயே போக்கா -விட்டால்
கர்ம பலன் தானே அனுபவிக்கிறோம்
நினைத்தால் போக்கிடலாமே

ஜீவாத்மாவுக்கு அச்சித்துக்கும் வாய்த்த சம்பந்தம் நீ தானே வைத்தாய்
பகற்கதிர் தேஜஸ் பகர் தேஜஸ் உடைய மாடங்கள்
புகர் கதிர் பகர் -பர்யாப்த சப்தங்கள்
மிக்க ஒளி உள்ள மணி மாடங்கள் உடைய திவ்ய தேசம்
பகற்க்கதிர் –வல்லினம் பகல் கதிர் -சூர்யன் பகல் கண்டேன் நாராயணனைக் கண்டேன்
பாற்கடல் வண்ண -ஸ்ரீ காஞ்சி ஸ்வாமி ஸுய சரிதை
வல்லினம் ரகரம் அர்த்தம் பால் கடல் வெள்ளை நிறம் உடையவன் இல்லை
பாரை சூழ்ந்த கடல் கரிய நிறம்

உகவாதார் கிட்ட ஒண்ணாத படி
பிறர்களுக்கு அறிய வித்தகன்
கிட்டாமல் செய்வது உகவாதாரை தானே
என்னை அகற்றலாமா அனுகூலமான என்னை
புள்ளி ன் வாய் பிளந்தானே -எனது பிரதிபந்தகன்களை அழித்து உனது திருவடிகளில் சேர்த்து கொண்டு அருளுவாய்

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.