திருவாய்மொழி வியாக்யானம் -ஈடு -5-7-7-ஸ்ரீ M.A V .சுவாமிகள் –

வந்தருளிஎன் னெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே! உலகுக்கோர்
முந்தைத்தாய் தந்தையே! முழுஏழுலகும் உண்டாய்!
செந்தொ ழிலவர் வேத வேள்வி அறாச் சிரீவர மங்கலநகர்
அந்தமில் புகழாய்! அடியேனை அகற்றேலே.

பொ-ரை :- பரமபதத்தில் நின்றும் வந்து என் நெஞ்சினை இடமாகக் கொண்ட வானவர் கொழுந்தே! இந்த உலகங்கட்கு ஒப்பற்ற பழைமையான தாயும் தந்தையுமானவனே! எல்லா உலகங்களையும் பிரளயகாலத்தில் உண்டவனே! பயன் கருதாத கைங்கர்யத்தையுடைய ஸ்ரீ வைஷ்ணவர்களுடைய வேத ஒலியும் யாகங்களும் நீங்காமல் இருக்கிற சிரீவரமங்கல நகரிலே எழுந்தருளியிருக்கின்ற எல்லை இல்லாத புகழையுடையவனே! உனக்கு அடிமைப்பட்டுள்ள அடியேனை நீக்காமல் இருக்க வேண்டும்.

வி-கு :- வந்தருளி: ஒருசொல், வந்தருளி கொண்ட கொழுந்தே! என்க. அகற்றேல்: எதிர்மறை.

ஈடு :- ஏழாம் பாட்டு. 1“அடியேன் தொழ வந்தருளே” என்கிற சொல்லோடே வரக் காணாமையாலே ‘உபேக்ஷித்தானோ’ என்று அஞ்சி, என்னை அகற்றாது ஒழிய வேண்டும் என்கிறார்.

‘வந்தருளி என் நெஞ்சிடம் கொண்ட வானவர் கொழுந்தே’ என்பதற்கு, 2“பட்டர், ஸ்ரீ புஷ்பயாகம்அணித்தானவாறே, நஞ்சீயரைப் பலகாலும் இயல் கேட்டருளுவர்; ஒரு கோடையிலே திருவீதியிலே நீரை விட்டு எழுந்தருளியிருந்து இப்பாட்டை இயல் சொல்லும் என்று சீயரை அருளிச்செய்து, தாம் இதனை அநுசந்தித்திருந்து பின்பு தாமும் இப்பாசுரத்தை இயல்சொல்லி, 1‘இயமம் நியமம் முதலிய கிரமத்தாலே தியானம் செய்யத்தக்க சர்வேச்வரனை மனனம் செய்து புறம்புள்ள பராக்கை அறுத்து அநுசந்திக்கப் புக்காலும் சுக்கான் பரல் போன்று இருக்கக்கூடிய நெஞ்சுகளைப் பதம் செய்யும்படி, தார்மிகராயிருப்பார் இவை சில ஈரச்சொற்களைப் பொகட்டுப் போவதே!’ என்று அருளிச்செய்தார்; நஞ்சீயர், இவ்வார்த்தையை உருத்தோறும் அருளிச்செய்வர்” என்று அருளிச்செய்வர்.

வந்தருளி – நான் விரும்பாதிருக்க வந்தருளி. வெவ்வேறு தீவுகளிலுள்ள வஸ்துக்கள் இரண்டே அன்றோ சேர்கின்றன. 2பரமபத நிலையனானவனும், சம்சாரத்தை இருப்பிடமாகவுடையவரும். இந்த இருவருமே அன்றோகூடுகின்றார்கள். உத்தேஸ்ய வஸ்து இருந்த இடத்து ஏற இவன்தான் போக வேண்டியவனாக இருக்க, அது பெறாவிட்டால் இருவரும் பாதிப்பாதி வழிதான் வரப்பெற்றார்களோ. ‘வந்தருளி’ என்று நெஞ்சுளுக்கிச் சொல்லுகிறாரன்றோ. 1ஆப்பான் திருவழுந்தூர் அரையர் கையிலே தாளத்தை வாங்கி ‘வந்தருளி, வந்தருளி’ என்று மேல் போகமாட்டாதே படுவராம். என் நெஞ்சு-அவனை ஒழிந்த வேறு விஷயங்களை உகந்து போந்த நெஞ்சு அன்றோ. இடம் கொண்ட – 2வந்தாலும் ‘நெஞ்சுக்கு விஷயம் வேறு உண்டு’ என்பரே. 3“தேவரீரால் காண்பிக்கப்பட்ட வாசத்தையே நான் விரும்புகிறேன்” என்னாநின்றான்.

ஆக ‘நெஞ்சிடம் கொண்ட’ என்றதனால் திரவிய குணங்கள் போலே சேர்ந்தான் என்பதனைத் தெரிவித்தபடி. 4திரவியமாக இருக்கச்செய்தேயும் குணங்களைப் போன்று சிலபொருள்கள் சேரக் காணாநின்றோமேயன்றோ. என் நெஞ்சு இடம்கொண்ட வானவர் கொழுந்தே-ரீ வைகுண்டம் கலவிருக்கையாகவுடையவன் என் நெஞ்சு பெறுகைக்குக் காலத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவன் ஆவதே! என்றது, நித்திய சூரிகளுக்குத் தலையானவன் அன்றோ நித்திய சம்சாரிகளுக்குத் தலையான என் நெஞ்சு பெறுகைக்குப் பிரார்த்திக்கிறான் என்றபடி. உலகுக்கு ஓர் முந்தைத் தாய் தந்தையே – உலகத்துக்கு 2அத்விதீயனாய்ப் பழையனான தாயும் தமப்பனுமானவன். 3அங்கு இரண்டு தலையும் கூடி வருமே அன்றோ, இங்கு வெறும் ஒரு தலையேயாயிருக்கிறபடியைத் தெரிவித்தவாறு. 4“உயிர்களுக்கு எவன் அழியாத தந்தையோ” என்கிறபடியே, நாலு நாட்கள் மணற்கொட்டகம் இட்டு விளையாடுமாறு போலே அழியும் தாயும் தமப்பனும் அன்றோ அவர்கள், ஒருநாளும் அழியாத மாதா பிதாக்கள் அன்றோ இவர்கள். 5“மனிதர்களில் சிறந்தவர்களே! உலகங்களில்இருக்கிற எல்லாப் பிராணிகளுக்கும் திருமாலானாவர் தாயும் தந்தையுமாக இருக்கிறார்; காப்பாற்றுகின்றவரான இவரை உபாயமாக அடைமின்” என்றார் மார்க்கண்டேயரும். “கச்சத்வம் – ஒருதலையாகாமே நீங்களும் அவனைப் பற்றப் பாருங்கோள்.”

முழு ஏழு உலகம் உண்டாய் – 1மாதாவானவள் பத்து மாதங்கள் வயிற்றிலே வைத்துத் தரிப்பது, ‘பிறந்து வளர்ந்தால் பின்னை நம்மைப் பாதுகாப்பவனாவான்’ என்னும் பிரயோஜனத்தைப் பற்றவே அன்றோ; இவன் அங்ஙன் அன்றிக்கே, ‘இவைதாம் நோவுபடாதொழியப் பெற்றோமே’ என்று இதனைத் தன் பேறாக நினைத்திருப்பான். செந்தொழிலவர் – 2வேறு பிரயோஜனத்தைக் கருதாத நேர்மையையுடைய தொழில் விசேடத்தையுடையவர்களுடைய. என்றது, “எனக்கு ஒன்று கொடு, உனக்கு ஒன்று தருகிறேன்” என்னாதவர்கள் என்றபடி. அன்றிக்கே, அவன் ரக்ஷணம் செய்வதைப் போலே இவர்களும் கைங்கரியம் செய்கின்றவர்கள் ஆதலின் ‘செந்தொழிலவர்’ என்கிறார் என்னுதல். இங்ஙன் அன்றாகில், வியர்த்தம் ஆமே. வேத வேள்வி அறா – வேத ஒலியும் வைதிக கார்யங்களின் கோலாகலமும் மாறாதே செல்லுகை. 3பிராப்பிய விரோதியாதல் பிராபகவிரோதியாதல் இல்லாமையாலே, நாய்ச்சிமாருடைய கலவியைப் போன்று நித்தியமாய்ச் செல்லாநிற்கும். 1காதலியை அணைக்கிறதற்கு வேறு ஒரு பலம் உண்டாகில் அன்றோ இதற்கு வேறு ஒரு பலம் உண்டாய் அவ்வளவிலே தலைக்கட்டுவது. சிரீவர மங்கலநகர் அந்தம் இல் புகழாய் – ஸ்ரீவைகுண்டத்திலே இருந்தானாகில் புகழுக்கு முடிவு உண்டு போலே காணும். அடியேனை அகற்றேலே – 2ஒரு தேசத்திலிருந்து மற்றொரு தேசத்திற்குச் சென்று நீ படைத்த புகழை, ‘வேறு ஒரு கதியும் இல்லாதவனைக் கைவிட்டான்’ என்ற பழி ஆக்கித் தலைக்கட்டுவித்துக் கொள்ளப் பாராதே கொள்ளாய். 3’அகற்றேல்’ என்பது, அரைக்கணம் தாழ்க்கப் பொறுக்கமாட்டாமை சொல்லுகிற வார்த்தை. விளம்பம் பொறாதார் சொல்லப் பெறுவர் போலே காணும். இதனுடைய இரக்ஷணத்தில் உன்னை ஒழிய வேறு ஒரு சம்பந்தம் உண்டாய்த்தான் அகற்றுகிறாயோ என்பார் ‘அடியேனை’ என்கிறார்.

அருளிச்செய்வர்’ என்றது, நம்பிள்ளையை.
“வானவர் கொழுந்து வந்தருளி” என்கையாலே, அதிதூரத்திலிருக்கின்றவன்
சம்சாரியான தான் இருந்தவிடத்தே வந்தான் என்று ஈடுபட்டமையும்,
“கொழுந்து” என்கையாலே, அவர்களுக்கும் ஆதரணீயன் ஆகையாலே,
சேஷியானவன் சேஷபூதன் இருந்தவிடத்தே வந்தான் என்று
ஈடுபட்டமையும் தோற்றுகையாலே அவ்விரண்டனையும் உட்கொண்டு
அருளிச்செய்கிறார் ‘வெவ்வேறு தீவுகளில்’ என்று தொடங்கி.

வந்தருளி” என்று ஈடுபாடு தோன்ற அருளிச்செய்தற்குச் சம்வாதம்
காட்டுகிறார் ‘பட்டர்’ என்று தொடங்கி. புஷ்பயாகம் என்பது, ஒரு யாக
விசேடம். பிரஹ்மோத்சவத்தின் முடிவில் (பத்தாவது உத்சவம்)
பெருமாளுக்கு எதிரில் மண்டலங்கள் போட்டு, அதில், மற்றைப்
பொருள்களையும் நெருப்பையும் கலவாமல், புஷ்பங்களையே கொண்டு
அர்ச்சனை செய்வது போன்று யாகம் செய்வது என்பர். இது,
திருவரங்கத்தில் பிரஹ்மோத்சவத்தில் இன்றும் செய்யப்பட்டு வருகின்றது.

அவன் அப்படிப் பிரார்த்தித்த இடம் உண்டோ? என்ன, அதற்கு விடை
அருளிச்செய்கிறார் ‘தேவரீரால்’ என்று தொடங்கி.

“அஹம் ஏவ ஆஹரிஷ்யாமி ஸ்வயம் லோகாந் மஹாமுநே
ஆவாஸம்து அஹம் இச்சாமி ப்ரதிஷ்டம் இஹ காநநே”

என்பது, ஸ்ரீராமா. ஆரண். 5. 32, 33. சரபங்கமுனிவரைப் பார்த்து
ஸ்ரீராமபிரான் கூறியது.

4. இருவரும் திரவியமாயிருக்கச் செய்தே, திரவிய குணங்கள் போலே சேரக்
கூடுமோ? என்ன, அதற்கு விடை அருளிச்செய்கிறார் ‘திரவியமாக’ என்று
தொடங்கி. என்றது, விளக்கு விளக்கின் ஒளி இவற்றினிடத்திலே
காணாநின்றோமே என்றபடி. ‘சில பொருள்’ என்றது, ஒளியினை. மேலும்,
ஆத்மாவைக் குறிக்க, சரீரமும் ஞானமும், பரமாத்மாவைக் குறிக்க,
ஜீவாத்மாவும், திரவியமாக இருக்கச்செய்தே, குணங்களைப் போன்று
சேர்ந்திருத்தலையும் ஈண்டுக் கோடல் தகும்.

ஈச்வரன், முந்தையான தாயும் தந்தையுமாக இருப்பதற்குப் பிரமாணம்
காட்டுகிறார் ‘உயிர்களுக்கு’ என்று தொடங்கி.

“பூதாநாம் ய : அவ்யய: பிதா” என்பது, மஹாபாரதம் ஸஹஸ்ர நாமம்.
இதற்குப் பொருள் அருளிச்செய்கிறார் ‘நாலு நாட்கள்’ என்று தொடங்கி.
‘இவர்கள்’ என்றது, ஈச்வரனையும் பிராட்டியையும்.

5. சர்வேச்வரனே உலகங்கட்கெல்லாம் தாய் தந்தையர்கள் என்னுமதற்கு,
வேறும் ஒரு பிரமாணங்காட்டுகிறார் ‘மனிதர்களில்’ என்று தொடங்கி.

“சர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ:
கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:”

என்பது, மஹாபாரதம் ஆரண்ய பர்வம். பாண்டவர்களைப் பார்த்து
மார்க்கண்டேயர் கூறியது. இச்சுலோகத்தின் இரண்டாம் அடிக்குப் பொருள்
‘ஒருதலையாகாமே’ என்று தொடங்குவது.

வாராமல் இருக்கவே உபேஷியாமல் அடிமை கொள்ள வேண்டும்
வந்தருளி -சப்தம்
வானவர் கொழுந்தாய் இருந்து எனது நெஞ்சில் இடம் கொண்டாயே ஆழ்வார் உருகி
உறுத்தொரும் நஞ்சீயர்
நூறு தடவை பகவத் விஷய கால ஷேபம்
புஷ்ப யாகம் -த்வாதச ஆராதனம் போலே ப்ரஹ்ம உத்சவம் தீர்த்தவாரி ஆன பின்பு
இயல் நஞ்சீயர் அருள பட்டர் கேட்டு அருளி –

கங்குலும் -பகலும் என் திருமகள் சேர் மார்பனே ஐதீகம் -உபன்யாசம் சொல்ல விஷயம் இயல் கேட்டு அருளி
திரு வீதியிலே ஒரு கோடையிலே நீரை விட்டு -இப்பாட்டை இயல் சொல்லும் –
தாம் இத்தை அனுசந்தித்து -இயல் சொல்லி –
வந்தருளி என்நெஞ்சிடம் கொடுந்த வானவர் கொழுந்தே வாய் விட்டு சொல்லி
யம நியமாதி க்ரமத்தாலெ -தார்மிகர் ஈரச் சொல்லை விட்டு போவதே
த்யானம் செய்ய சாஸ்திரம் விதிக்க
அஷ்டாங்க யோக நிலைகள் உண்டே
சமாதி வரைக்கும் மனனம்
பண்ணி புறம்புள்ள பராக்கை அறுத்து
அனுசந்தித்தாலும் நெஞ்சு இளகாமல்
சுக்காம் பரல் போலே இருக்கும் நெஞ்சு

ஆழ்வார் பாசுரம் கேட்டு உருகுமே -வந்தருளி
நாம் இருக்கும் இடம் வந்து -அருளி –
தார்மிகர் தங்கள் அனுபவம் நமக்கு கிட்டும் படி ஈரச் சொல்லை பொகட்டுப் போனார்களே
நினைத்தவாறே பட்டர் உருகி -நஞ்சீயர் உறுத்தொரும் அருளிச் செய்வர் என்று நம்பிள்ளை அருளிச் செய்வர்
அபேஷியாது இருக்க தானே வந்து சேர்ந்து
தீபாந்திர வஸ்துக்கள் சந்திக்குமா போலே –சம்சாரத்தில் அவன் வந்து -கூடி
என்ன ஆச்சர்யம்
பரமாத்மா உள்ள இடம் நாம் தேடித் போக இருக்க
பாரிப்புடன் தான் ஓடி வந்து -ஆழ்வார் நெஞ்சு சிதிலமாக போகும்படி
சீலம் கிருபை –
நித்ய சூரிகள் சதா தர்சனம் பண்ணா நிற்க விமுகரான எனது பக்கல் வந்து அருளி

ச ராம -அயோத்யா வாசி ஜனங்கள் -சுக்ரீவன் காலில் விழ
நித்ய சம்சாரி இடம் புகுவதே
பர்ண சாலை கட்ட ரிஷிகள் இடம் அனுமதி கேட்டு -ஆயாசம் அஹம் இச்சாமி என்றானே பெருமாள்
ஆத்தான் திருவழுந்தூர் அரையர் வந்தருளி வந்தருளி -மீண்டும் மீண்டும் -தாளம் கொண்டு
மேலே போக மாட்டாதே
த்ரவ்ய குணங்கள் சேரா இருந்தாலும் இங்கு சேர்ந்து –
ஆத்மா-த்ரவ்யம் சரீரம்
பரமாத்மா ஜீவாத்மா சேருவது போலே
குணம் ஞானம் ஆனந்தம்
ஒன்றை விட்டு பிரியாமல் குணங்கள்
வஸ்த்ரம் வெண்மை போலே
சேர்ந்த பின்பு பிரிக்க முடியாதபடி அப்க்ருத் சித்த விசேஷமாய்

என் நெஞ்சு -புறத்தே சென்றே
வானவர் கொழுந்து கலவிருக்கை -நெஞ்சு பெற அவசர ப்ரேதீஷணன்
இடம் கொண்ட -நெஞ்சுக்கு வேற விஷயம் உண்டு சொல்லி
அகற்றினாலும் புகுவதருக்கு கெஞ்சி இருந்து
நித்ய சம்சாரிகளுக்கு -தலைவன் எனது நெஞ்சில் புக -நித்ய சூரிகள் தலைவன் –
நித்ய சூரிகளுக்கு சத்தா ஹேது கொழுந்து -தனது சத்தை என்னாலே என்று
அகற்றப் பார்த்தால் -உன்னால் அல்லால் இல்லை –
அகற்ற திரு உள்ளம் இருந்தால் நெஞ்சில் எத்ருக்கு இடம் கொண்டாய்
உலக்குகொர் முந்தை தாய்
தந்தை இரண்டு தலையும் அங்கு ஆசை
இங்கு ஒரு தலையாய் இருக்கிறபடி
ஈஸ்வரன் தானே அறிந்து ரஷிக்கிறான்
முந்தை தாய் தந்தை அழியாத தந்தை – “பூதாநாம் ய : அவ்யய: பிதா” என்பது, மஹாபாரதம் ஸஹஸ்ர நாமம்.
இதற்குப் பொருள் அருளிச்செய்கிறா

சர்வேச்வரனே உலகங்கட்கெல்லாம் தாய் தந்தையர்கள் என்னுமதற்கு,
வேறும் ஒரு பிரமாணங்காட்டுகிறார் ‘மனிதர்களில்’ என்று தொடங்கி.

“சர்வேஷாம் ஏவ லோகாநாம் பிதா மாதா ச மாதவ:
கச்சத்வமேநம் ஸரணம் ஸரண்யம் புருஷர்ஷபா:”

என்பது, மஹாபாரதம் ஆரண்ய பர்வம். பாண்டவர்களைப் பார்த்து
மார்க்கண்டேயர் கூறியது. இச்சுலோகத்தின் இரண்டாம் அடிக்குப் பொருள்
‘ஒருதலையாகாமே’ என்று தொடங்குவது.

மாதவன் -சரண் அடையும் என்று -அவனே அழியாத முந்தை தாய் தந்தை
ஆபிமுக்யம் பண்ண வேண்டும் -ஒரு தலை ஆகாமல்
அத்வதீயன் ஓர் சப்தம்
முந்தை பழைய
உலகும் உண்டாய் -மாதா பத்து மாசம் தரிப்பது -பின்பு தன்னை காப்பான் என்பதால் –
துக்க நிவர்தகன்
எம்பெருமான் அங்கன் அன்றிக்கே
இவற்றுக்கு நோவு படாமல்
பிராத-பிதா -சக்ரவர்த்தி திருமகனை இளைய பெருமாள் போல்வாருக்கும் மட்டும் இல்லை
அடியேனுக்கு ஆகி நின்ற –அம்மானும் திருமங்கை ஆழ்வார் பாசுரம் –
இன்று அகற்ற நினைத்தால் அன்று சத்தை நோக்கி ரஷித்தது எதற்க்காகா

அவனுக்கு ரஷணம் போலே இவர்களுக்கு கைங்கர்யம் -தரிக்க –
அநந்ய பிரயோஜனர்
தொழிலுக்கு செம்மை பிரயோஜனாந்தர -சாதன புத்தி இன்றி -24000 படி

செம்மை உடைய கைங்கர்யம் -பிரயோஜனாந்தர புத்தி இன்றி -சாதனா புத்தியும் இன்றி
சுயம் பிரயோசனமான கைங்கர்யம்
வேத கோஷம் அறாமல் –
இடைவிடாமல் -நாய்ச்சிமார் அணைப்பது போலே அவனுக்கு சந்தோஷம் கொடுக்குமே
இவர்களுக்கும் அபிமத விஷயத்தை அணைப்பதுக்கு வேறு பிரயோஜனம் வேண்டாமே
வேத வேள்வி செய்வதே பிரயோஜனம்

ஸ்ரீ வைகுண்டத்தில் புகழுக்கு அந்தம் இருக்கும் காணும் இங்கே கிடையாது
கல்யாண குணங்கள் சக்ரவர்த்தி திரு மகனுக்கு அந்தமில் புகழ் கொண்டவன்
அனுக்ரகம் செய்யாமல் இத்தை இழக்காதே
அடியேனை அகற்றாதே
தேசாந்த்ரத்தில் வந்து அடைந்த அந்தமில் புகழ் அடைந்து
பழியாக்கி கெடுத்துக் கொள்ளாதே
அடியேனை அகற்றேலே அரை ஷணம் தாழ்ந்தாலும் போருக்க முடியாமல் சொல்லுகிறார்
அடியேனை -உன்னை விட்டு வேறு பிராப்தி இன்றி
அகற்றாதே -பிராப்தி உனக்கு தானே
அனுபவம் கொடுக்காமல் விடலாமா

நஞ்சீயர் திருவடிகளே சரணம்

 நம்பிள்ளை திருவடிகளே சரணம்.

வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.

 பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.

 வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.

 பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.

Leave a Reply