அவதாரிகை
பர தசையில் மற்றைப் பிராட்டிமாருக்கு பெரிய பிராட்டியார் முன்னிலையாக வேண்டினால் போலே
ஸ்ரீ கிருஷ்ண அவதாரத்தில் பெரிய பிராட்டியாருக்கும் ஆண்டாளுக்கும் அகப்பட
நப்பின்னைப் பிராட்டி புருஷகாரமாக வேணும் –
அங்குத்தை ஐஸ்வர்யத்துக்கு பிராட்டி சத்ருஸை ஆனால் போலே
இங்குத்தைக்கு இவனுடைய எல்லாப் படிகளுக்கும் குல சீலாதிகளில் சத்ருஸை யாயிருக்குமவள்
இந்த ஸ்லோகம் பட்டர் தென்னாட்டிலே எழுந்து அருளி இருக்க பெருமாளை பிரிந்த வ்யசனத்தாலே
திரு உள்ளம் கலங்கி இருக்கிற தசையில் திரு உள்ளம் ப்ரசன்னமாகைக்காக
நஞ்சீயர் ஆண்டாளை ஒரு ஸ்லோகமும் ஆழ்வார்களை ஒரு ஸ்லோகமும் அருளிச் செய்யலாகாதோ என்ன
அதி ப்ரீதராய்த் திருப்பாவைக்கு வாக்யார்த்தமாக அருளிச் செய்து
ஆண்டாளை சரணம் புகுகிற ஸ்லோகம் –
சேதனர் அடைய நஞ்சுண்டாரைப் போலே அநாதி மாயையாலே மயங்கிக் கிடந்து உறங்க
இப்படி இருக்கிற சம்சாரத்துக்குள்ளே
திருவாய்ப்பாடி பெண் பிள்ளைகள் பரஸ்பரம் உணர்வாரும் உணர்த்துவாருமாக
பரம பதத்தில் யாத்திரை போலே செல்லா நிற்பதே -என்று
ஆண்டாள் தானும் அநுகாரத்தாலே இவர்களை உணர்த்தினவோ பாதி
அவன் தன்னையும் உணர்த்தினாள்-
——–
நீளா துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் சித்தம் அத்யாபயந்தீ
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய–
————
நீளா –ஸ்ரீ நப்பின்னை பிராட்டியினுடைய
துங்க –ஓங்கிப் பணைத்து இருந்துள்ள
ஸ்தன கிரி தடீ –திரு முலைத் தடங்கள் ஆகிற மலைத் தாழ்வரையிலே
ஸூப்தம் -மயங்கிக் கிடந்து உறங்கினவனாய்
ஸ்வ உச்சிஷ்டாயாம் -தன்னால் சாத்திக் கழிக்கப் பட்ட
ஸ்ரஜி -மாலையால்
நிகளிதம்-விலங்கிடப்பட்டவனாய் இருக்கிற
உத்போத்ய கிருஷ்ணம் -ஸ்ரீ கிருஷ்ணனாகிய யாதவ ஸிம்ஹத்தை உணர்த்தி
ஸ்ருதி சத சிரஸ் சித்தம் -பல உபநிஷத்துக்களாலும் தேறின
ஸ்வம் பாரார்த்யம் -தன்னுடைய பாரதந்தர்யத்தை
அத்யாபயந்தீ -அறிவித்து
பலாத் க்ருத்ய -பலாத்கரித்து
யா கோதா புங்க்தே -யாதொரு கோதா என்னும் திரு நாமத்தை யுடைய ஆண்டாள் புஜிக்கிறாளோ
தஸ்யை — அப்படிப்பட்ட வைபவத்தை உடையவள் பொருட்டு –
நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய –நம நம என்னும் வணக்கம் மீண்டு மீண்டும் –
கால தத்வம் உள்ளதனையும் இந்த அடிமையாக வேண்டும்
ஸ்யாலோ அத நந்த கோபஸ்யமிதி லேஷுகாவாம்பதி ப்ரவ்ருத்த கோத நோ தக்ஷஸ் கும்பகோநாமநா மத
தாதா துக் தஸ்ய ஸர்வேஷாம் தக்ர சய சக்ரு தஸ்யச ஜ நஸ்ய பிரியவாக் நித்யம் யசோ தாயா ஜகன்யஜ
தர்மதா தஸ்ய பார்யா சீத்தர்மததை வதநா மத சா ஸூதாஸ் பத்ய யுகளம் சோபநம் கோப பூஷணம்
தயோஸ் தத்ர புமான் ஜக்ஜே ஸ்ரீ தாமா நா மவிஸ்ருத சர்வைஸ் ச்சா ஸீத் குணைர் யுக்த சர்வ பிராணி மநோ சம
நீளா நாநா மாச கன்யா சாரூ பவ்தார்ய குணான்வித –
நீளா குலேந சத்ருஸீ யாகையாலே -நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் என்றதும்
நீளா –
அவன் -நந்தகோபன் தன் இன் உயிர்ச் சிறுவனே –
யசோதைக் கடுத்த பேரின்பக் குல விளங் களிறே –
நந்தகோபன் குமரன் ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம் -போலே
இவள் ஸ்ரீ கும்பர் குமாரத்தியாக அவதரித்த படி –
ஆகையாலே நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய் -என்றதும் –
அவன் ஆயர் கொழுந்து –
இவள் குல வாயர் கொழுந்து –
துல்ய சீல வயோ வ்ருத்தாம் –
தோளி சேர் பின்னை –
ஆயனாகி ஆயர் மங்கை வேய தோள் விரும்பினாய்
மற்றைப் பிராட்டிமாரில் ஆபி ஜாத்யத்தாலும் உகக்கைப் பாடி யாகையாலும் உள்ள வாசி
கோவலர் பட்டம் கவித்தது இவளுக்கே ஆகையாலே
சூட்டு நன் மாலைகள் -ஓர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடு உண்ணப் போந்து
இமிலேற்று வன்கூன் கோட்டிடை யாடினை கூத்து அடலாயர் தம் கொம்பினுக்கே-என்னக் கடவது இறே
துங்க ஸ்தன கிரி தடீ ஸூப்தம் உத்போத்ய கிருஷ்ணம் –
நப்பின்னைப் பிராட்டியுடைய ஓங்கிப் பணைத்து இருந்துள்ள திரு முலைத் தடங்கள் ஆகிற மலைத் தாழ்வரையிலே
நஞ்சுண்டாரைப் போலே மயங்கிக் கிடந்து உறங்குகின்ற ஸிம்ஹத்தை யுணர்த்தினாள்-
நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா என்றும் –
யசோதை இளம் சிங்கம்-என்றும் சொல்லக் கடவது இறே
இஷ்வாகு சிம்ஹமான பெருமாள் பிராட்டியைப் பிரிந்து மால்யவான் ஆகிற மலையிலே
மன்னிக் கிடந்தது உறங்கப் பெறாமல் -அநித்ரராய் -இருந்தார்
இங்கு அங்கன் அன்றிக்கே -யாதவ சிம்ஹமோ-
பிரிவாற்ற கில்லாமையை அறிந்து -தானே மேல் விழுந்து அனுபவித்த படி –
பஹூ குடும்பியார் இருப்பார் சிலர் ஒரு மலை அடியைப் பற்றி ஜீவிப்பாரைப் போலே
சர்வ லோக குடும்பியான சர்வேஸ்வரன் இவள் முலை யடியைப் பற்றிக் கிடக்கிறான்
துங்கம் –
என்கையாலே அளவிறந்த போக்யதா அதிசயம் சொல்லுகிறது –
தடீ ஸூப்தம் –
என்கையாலே -அவயவ ஏக தேசத்தில் மக்நனான படி
மலராள் தனத்துள்ளான் -என்னுமா போலே –
ஸ்தந கிரி தடீ ஸூப்தம் –
என்கையாலே -அவயவாந்தரத்தில் செல்லாதே அஸ்தமி தாந்ய பாவமாய் இருந்தபடி
இத்தால் எம்பெருமானுடைய போக்த்ருத்வம் சொல்லுகிறது
நீளா துங்க ஸ்தந கிரி தடீ ஸூப்தம் –
நிறைவினால் குறைவில்லா நெடும் பணைத் தோள் மடப்பின்னை
பொறையினால் முலை யணைவான் பொறு விடை ஏழ் அடர்த்து -உகந்த -என்னக் கடவது இறே
பிராப்த்திக்கு உகப்பானும் அவனே இறே
உத் போத்ய –
என்று உணர்த்த வேண்டும்படி போக பரவசன் ஆனான் –
இப்படி அந்ய பரனானவன் யார் என்னில்
நிரதிசய ஸூக ரூபனான கிருஷ்ணன் என்கிறாள்
கிருஷ்ணம்
என்று
க்ருஷிர் பூ வாசகஸ் சப்தோணச் ச நிர்வ்ருத்தி வாசக -என்னக் கடவது இறே
ரஸோ வை ச –
ஆனந்தோ ப்ரஹ்ம
ஆனந்தயாதி -நந்தகோபன் குமரன் -கண்ணன்
ஸ்தந கிரி தடீ ஸூப்தம் -கிருஷ்ணம்
என்கையாலே –
பொற் குப்பியின் நுனியில் கரு மாணிக்கத்தை அழுத்தி வைத்தாப் போலேயும்
விகாச உந்முகமான பத்ம கோசத்தில் ஷட் பதம் படிந்தால் போலேயும் -இருக்கை
மஞ்ஜரி ஸூப்த ப்ருங்கா –
போதில் பொறி வண்டு கண் படுப்ப-
தெய்வ வண்டு –
ஸ்ரீ ரெங்கராஜ ப்ருங்கம் -என்றும் சொல்லக் கடவது இறே
மலராள் தனத்துள்ளான் -என்று ஸ்ரீ ஸ்தனத்திலும்
தென்னன் உயர் பொருப்பும் தெய்வ வட மலையும் என்னும் இவையே முலையா வடிவமைந்த –
அன்ன நடைய அணங்கு -என்று பூ ஸ்தநத்திலும் மக்னனாய் –
நிலையார நின்றாப் போல
நீளா ஸ்தநத்திலும் ஸூப்தனான படி
வட மா மலை உச்சியை –
மாலிரும் சோலை என்னும் மலையை உடைய மலையை-என்னக் கடவது இறே
உத் போத்ய –
துயில் எழப் பாடி –
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய் –
செற்றார்க்கு வெப்பம் கொடுக்கும் விமலா துயில் எழாய் -என்று
எழுப்பும் படி சொல்லுகிறது
இத் தசையில் இவர்கள் உணர்த்த உணர்வானாகில் பிரணயித்வத்துக்கு நமஸ்காரம் அன்றோ என்னில்
நெருப்புப் பட்டு வேவா நின்றால் பிரணயிநிகள் என்னும் காட்டில் உறங்கப் போமோ
இவர்களுடைய ஆர்த்த நாதம் அக்னி ஜ்வாலை கதுவினால் போலே கதுவதாய்
தாய் வேறு கன்று வேறாய்த் துடித்துக் கொண்டு எழுந்து இருந்தார்கள்
இப்படி உணர்த்தியதற்கு பிரயோஜனம் -சொல்லுகிறது மேல்
பாரார்த்யம் ஸ்வம் ஸ்ருதி சத சிரஸ் ஸித்தம் –
தன்னுடையதாய் இருந்துள்ள உபநிஷத் குஹ்யமான பாரதந்தர்யத்தினை
மந்தரப் ப்ரஹ்மணி மத்யமேந நமஸா பும்சஸ் ஸ்வரூபம் -என்கிறபடியே
ஆத்மாவுக்கு நிலை நின்றதாய்
ஸ்வமாய் இறே பாரதந்த்ர்யம் தான் இருப்பது
(தன்னுடையதாய்-ஜீவாத்மாவுக்கு உள்ள ஒரே சொத்து பாரதந்தர்யம் தானே -அவனுக்காகவே இருப்பவன் –
பரர்-பிறர் -பரமாத்மா -இரண்டும் உண்டே-
பிறருக்கு தொண்டு -நடுப்படி
தனக்குத் தொண்டு -முதல் படி
பகவானுக்குத் தொண்டு -மேல் படி
மக்கள் தொண்டு மகேசன் தொண்டு என்று புரிந்து செய்ய வேண்டுமே
ஈஸ்வராய-ஸ்வார்த்தயை – அசித் பரார்த்தய -சித் சேதனன் -தனக்கும் பிறருக்குமாக தவிர்ந்து
அவனுக்காகவே அசித் போலே இருக்க வேண்டும்
அடிமை -என்று சொல்லத் தெரிந்த அறிவுடைமை வேண்டுமே –
பகவத் அனுபவ ஜெனித பகவத் பிரீதி காரித கைங்கர்யமே பரம புருஷார்த்தம்
இரண்டு இடத்திலும் ஓன்று -பிறருக்குக்காகவே இருக்கும் தன்மையும் ஞானமுடையமையும் சேர்ந்ததாக இருக்க வேண்டும் )
யஸ்யாஸ்மி
பரவா நஸ்மி
தனக்கே யாக
உனக்கே நாம் ஆட் செய்வோம்-என்னக் கடவது இறே
ஸ்வத்வம் உண்டானால் ஸ்வாமித்வம் தன்னடையே வரக் கடவது இறே
ஸ்வத்வ மாத்மநி சஞ்ஜாதம் ஸ்வாமித்வம் ப்ரஹ்மணி ஸ்திதம் –
இதுக்கு பிரமாணம் காட்டுகிறார்
ஸ்ருதி சதஸிரஸ் சித்தம்
என்று -மஹா நிதி பர்வத குஹரங்களிலே சஞ்சிதமாய்க் கிடக்குமா போலே
உபநிஷத்துக்களிலே ஸூ ரஷிதமாய் இருக்கிறபடி
ஸ்ருதி சதஸிரஸ் சித்தம்
என்கையாலே -இது தான் ஓரோர் பிரதேசங்களில் அன்றிக்கே எங்கும் உண்டாய் இருக்கை –
சர்வே வேதா –
வேதைஸ் ச சர்வை -என்னும்படி எங்கும் உண்டாய் இருக்கை –
சேஷியைச் சொன்ன இடம் எங்கும் சேஷ பூதரும் உண்டாய் இறே இருப்பது –
இந்த சேஷ சேஷி பாவமாகிற பரிமாற்றம் பரமபதத்தில் பரிமாறக் கடவதாய் இருக்கும்
இப்படி பரம பதத்தில் பரிமாறக் கடவதான இந்த பாரதந்த்ர்யத்தை
அதுக்கு எதிர்தட்டான ஸ்வாதந்த்ர்யமே பரிமாறும் வழி பறிக்கும் தேசத்திலே இந்த
மஹா நிதியை வெளியிட்டு அருளுகிறாள்
அத்யா பயந்தீ-
பதிம் விஸ்வஸ்ய
யஸ்யாஸ்மி -என்று ஓதிக் கிடக்கிற
சேஷ சேஷி பாவம் அனுஷ்டிப்பார் இல்லாமையாலே அவனும் மறந்து கை விட்டு இருக்க
பொற்றாமரை யடியே போற்றும் பொருள் கேளாய்-
என்று அவனை மறித்து வைத்து
உன் தன்னோடு உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட் செய்வோம் –
என்று ஒதுவித்தாள்
(கையில் பிரம்பு வைத்து இருந்ததாக உபன்யாசகர் அனுபவிப்பர் –
சொல்ல வந்த விஷயம் பாரார்த்யம் -அத்யா பயந்தி -இவளுக்கு அடங்கி -சேராச் சேர்த்தி
ஞானம் உள்ள சேதனம் -பரார்த்தம் -அவனுக்கு பிரீதி காரித கைங்கர்யமே தனக்கு சொத்து என்று உணர வேண்டுமே –
இவர் உண்டால் துர்வாசருக்கும் கூட வந்த ரிஷிகளும் உண்டது போலே இவன் உணர்ந்தால் உலகமும் உணரும் )
யோவை வேதாஸ் ச ப்ரஹினோதி தஸ்மை
எயிற்றிடை மண் கொண்ட எந்தை இராப்பகல் ஓதுவித்தது -என்கிற நிலை குலைந்தது
பரதந்த்ரைகளாய் இருக்கிற இவர்கள் நியமிக்கப் பெறுவார்களா -என்னில்
ஸ்வதந்த்ரரோபாதி ஆற்றாமை யுடையோரும் நியமிக்கப் பெறுவார்கள்
ஆர்த்தர் பாடும் ஸ்வாதந்தர்யம் ஏறிப் பாய்வது –
நான் என்னது என்று அவனை ஒழியவும் சொல்லுவார் பாடேயும் ஸ்வாதந்தர்யம் ஏறிப் பாய்வது –
தம் திரு உள்ளம் தன்னை நியமிக்கும் காட்டில் ஸ்வாதந்தர்யம் ஆக மாட்டாது இறே
பண்டும் இப்படி நியமித்தாரும் உண்டு –
ஸ்த்ரீ சாபலா தேததும் தாஹ்ருதம் மேதர் மஞ்ச வக்தும் த்வத் ச ஸ்ம்ர்த்தஸ் விசார்ய புத்யாது சஹாநுஜேந
யத்ரோ சதே தத் குருமா ஸிரேண-என்றாள்
அப்படியே -இவளும் அவனை நியமித்து –
சிறு பேர் அழைத்தனவும் சீறி அருளாதே -என்கிறாள்
இப்படி சர்வஞ்ஞனுக்கும் கூட அத்யயனம் பண்ணு விக்கிறவளுடைய
வைலக்ஷண்யம் சொல்லுகிறது மேல்
ஸ்வ உச்சிஷ்டாயாம் ஸ்ரஜி நிகளிதம் யா பலாத் க்ருத்ய புங்க்தே –
தான் சாத்திக் கழித்த மாலையாகிற விலங்காலே இவனைப் பேராதபடி -விலங்கிட்டு
யாவாள் ஒருத்தி -அவனை பலாத்கரித்து புஜித்தாள்
கோதா தஸ்யை நம இதமிதம் பூய ஏவாஸ்து பூய –
இப்படி வேண்டற்பாட்டை யுடையவளாய் -எம்பெருமானுக்கு
மார்வத்து மாலை என்கிறபடியே நிரதிசய போக்யையாய் இருக்கையாலே –
கோதை -என்னும் திரு நாமத்தை யுடைய ஆண்டாள் -திருவடிகளில்
கால தத்வம் உள்ளதனையும் அடிமை என்கிறார் –
(நமஸ் அர்த்தம் இவன் உணர்ந்தால் அனைவரும் அறிவார்கள் –
திரௌபதி பாத்திரத்தில் -மிச்சம் உள்ள பருக்கை உண்டு அனைவருக்கும் வயிறு நிறையும் படி பண்ணினவன் அன்றோ
ஆண்டாள் பள்ளி எழுப்பி இந்த அர்த்தம் இவனுக்கு உணர்த்துகிறாள் )
ஸ்வ உச்சிஷ்டமாவது –
சூடிக் களைந்தது –
தொடுத்த துழாய் மலர் சூடிக் களைந்தன சூடும் இத் தொண்டர்களோம் –
க்வயோபா புக்தஸ் ரக் கந்த –உச்சிஷ்ட பஷினோ தாஸாஸ் –
என்னுமது பிரணயித்வத்தால் மாறாடிக் கிடக்கிறது
இப்படி ஈஸ்வரன் யதேஷ்ட விநியோர்ஹ அர்ஹனாம் படி தன்னை ஒக்கி வைக்கையாலே-
அவனுடைய ஆஸ்ரித பாரதந்தர்யமே தோற்றுகிறது –
பார் வண்ண மடமங்கை பத்தர் இறே
அரங்கர் மௌலி சூழ்கின்ற மாலையைச் சூடிக் கொடுத்தவள் இறே
வாசம் செய் பூம் குழலிலே வாசிதமாக்கிக் கொடுத்தபடி
ஸ்ரஸி நிகளிதம் –
மாலை-
மாலையாலே விலங்கு இட்டாள்
கால் விலங்காகில் இறே கழற்றுவது –
தந்தை காலில் விலங்கு அற –
தந்தை தளை கழல-என்னக் கடவது இறே
எல்லாரையும் கர்ம அனுகுணமாகக் கட்டுமவன்
காமிநி கழித்த கண்ணியாலே கட்டுண்டான்
கண்ணியார் குறும் கயிற்றால் கட்டுண்டபடி யாயத்து –
மல்லிகை மா மாலை கொண்டு அங்கு ஆர்த்ததும்-
மன்னிலங்கு பாரதத்தை மாள ஊர்ந்த வரை உருவின் மா களிற்றை
பொன்னிலங்கு முலைக்குவட்டில் பூட்டிக் கொண்டு அனுபவித்தாள் –
தறியார்ந்த கரும் களிறு இறே
ஸ்வ இச்சா விஹாரம் பண்ணித் திரிகிற கிருஷ்ண மஹா மதங்கஜத்தைத் தன்னுடைய
குசகுட்மளம்-ஸ்தனமாகிற மொட்டு- ஆகிற
ஆளா நத்தோடே-யானை காட்டும் தறி யோடே-
அணைத்து அனுபவித்தாள்
யா பலாத் க்ருத்ய புங்க்தே
யாதொருத்தி பலாத்கரித்து புஜித்தாள்-என்கையாலே அதுவும் அவன் உகப்புக்கு உறுப்பாய் இருக்கும்
அஹம் அன்னம் அன்னம் அதந்த மத்மி அல்லாத போது அவனுக்கு அனுபவம் குலையும் –
கோதா
என்றது -கோதை -என்றபடி –
குழல் கோதை என்றார் இறே –
கோதை -மாலை போலே போக்யையாய் இருக்கை
ஸ்ரீ மாலாகாரர் மகள் ஆகையாலே மாலை என்னலாம்படி ஆனாள்
மாலையான தான் தலையான மாலையை வழங்கினாள்
திருமாலை வழங்கினாள் இறே
ரங்கீ நேத்ர சரேண தாடி தத் அநுஸ் ஸேதே ஸ்வயம் ஸூந்தரோ பத்தஸ் வம்ப கதா மபி குவதடே மக்நோ –
ஞானாத்ரீஸ்வர
போகா பாட வலஜ்ஜயா வட மஹா தாமா பணீந்த்ரே பதத்ரமயேச ஸ்வத விஸ்மிதேந மநசா கோதே
பரம் திஷ்டதி -என்று இறே ஆண்டாள் வீறுடைமை இருப்பது
அத்யாபயந்தீ என்கையாலே பாமாலை பாடிக் கொடுத்தபடி சொல்லிற்று
ஸ்ரஜி நிகளிதம் யா பலாத்க்ருத்ய புங்க்தே – என்கையாலே பூ மாலை சூடிக் கொடுத்தபடி சொல்லுகிறது
எல்லாப் படியாலும் இவளுக்கு எம்பெருமானை வசீகரித்து ஆத்மாக்களை ரஷிப்பிக்க வல்ல புருஷகாரத்வமும்
இருவருமாக சேர்த்தியாலே ப்ராப்யத்வமும் சொல்லுகிறது
ஆகையால் இறே
எம்பெருமானார் நாறு நாறும் பொழிலிலே இவள் பிராத்தித்த படியே நடத்தியும்
திருப்பாவையை நாடொறும் நடத்தியும் -அத்தாலே
சூடிக் கொடுத்தவள் தொல் அருளால் வாழ்கின்ற வள்ளல் ராமானுஜன் ஆனதும்
அவளுக்கும்
ஆழ்வார் திருமகளார் ஆனதுக்கு மேலே ராமானுசனை அண்ணராக அபிமானித்த ஏற்றமும் உண்டு இறே
இப்படி எல்லாவற்றாலும் நிரவதிக வைபவத்தை யுடைய அந்த ஆண்டாள் பொருட்டு
அடிமையாய் அற்றுத் தீர்ந்து ஓர் ஒன்றுகளிலே தம்மை எழுதிக் கொடுத்து ஆழங்கால் படுகிறார்
பூய ஏவாஸ்து பூய
அவள் தான் எற்றைக்கும் ஏழு ஏழு பிறவிக்கும் உன் தன்னோடு உற்றோமே யாவோம்
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்றத்தை
தத் விஷயத்தியலே தாம் பிரார்த்திக்கிறார்
நாராயணாய நமயிதி ப்ரணம் யோக்தா யோக்தாயபுஸ் புந ப்ரணம்ய-என்று இறே எம்பெருமானார் பரிமாற்றம் இருப்பது
இது தான் அத்ர பரத்ர சாபி நித்யம் -என்னக் கடவது இறே
அங்கும் ஸ்ரீ பூமி நீளா நாயக என்றும்
உபாப்யாம் பூமி நீளாப்யம் சேவித ப்ரமேஸ்வர -என்றும் சொல்லக் கடவது இறே
இத்தால்
திருப் பாவையின் அர்த்தத்தை அனுசந்தித்து
ஆனந்த மக்நராய்
அத்தாலே தாம் ஆண்டாளை சரணம் புக்க படியை அனைவரும் அநுஸந்திக்கும் படி
அருளிச் செய்தார் ஆய்த்து
———————————————
ஸ்ரீ உய்யக் கொண்டார் அருளிச் செய்த தனியன் –
அன்ன வயல் புதுவை ஆண்டாள் அரங்கற்குப்
பன்னு திருப்பாவைப் பல் பதியம்–இன்னிசையால்
பாடிக் கொடுத்தாள் நற் பா மாலை பூ மாலை
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு –
அன்ன வயல் -புதுவை
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லி புத்தூர் இறே
அன்ன நடைத் திங்கள் முக வல்லியான ஆண்டாள் போல இறே அவை இருப்பது
அன்னங்கள் சஞ்சரிக்கும் வயலை யுடைய புதுவை
புரவி முகம் செய்து செந்நெல் ஓங்கி விளை கழனி புதுவைப் பட்டர் பிரான்
தண் புதுவைப் பட்டன் –என்று இறே திருத் தகப்பனாருக்கு நிரூபகம்
இவளுக்கும் அப்படியேயாய் இருக்கை
புதுவை ஆண்டாள்
ஸ்ரீ பூமி நீளை களுடைய ப்ராதான்யமாய் இறே
திரு வெள்ளறை ஸ்ரீ வில்லி புத்தூர் திரு நறையூர் என்கிற த்ரி திவ்ய ஸ்தானங்கள் இருப்பது
ஸ்ரீ பூமிப் பிராட்டியாரான ஆண்டாள் -சிஷ்யா தாசீ பக்தைகளாய் –
பாடி –
உனக்கே நாம் ஆட் செய்வோம் -என்று அடிமை செய்ய ஆழ்வார் திரு மகளாய் திரு வவதரித்த படி
ஆகிலும் அடியில் திரு நாமமே ஆண்டாள் என்று அனுவர்த்திக்கிறது –
ஆண்டாள் அரங்கற்குப் பன்னு திருப்பாவைப் பல் பதியம்-இன்னிசையால் பாடிக் கொடுத்தாள்
இவள் கிருஷ்ணனை அன்றோ திருப்பாவை பாடிற்று –
பெரிய பெருமாளுக்கு பாடிக் கொடுக்கை யாவது –
அண்ணாந்து இருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளன் பேணுமூர் பேரும் அரங்கம் -என்றும்
செம்மை உடைய திருவரங்கர் தாம் பணித்த மெய்ம்மைப் பெரு வார்த்தை-என்றும் –
பாசி தூரத்துக் கிடந்த பார் மகட்குப் பண்டு ஒரு நாள்
மாசுடம்பில் நீர் வாரா மானமிலாப் பன்றியாய் தேசுடைய தேவர் திருவரங்கர்-என்றும் –
நிலமகள் கேள்வன்-என்றும்
ஸ்ரீ பூமிப் பிராட்டியான இவள் ஆதரித்துப் போருகிற ஸ்ரீ வராஹ நாயனார் படியும் —
அநுகாரத்தாலே ஆதரித்துப் போருகிற கோபாலர் படியும் –
தர்மி ஐக் யத்தாலும்
ஆஸ்ரித வ்யாமோஹ குணத்தாலும் பெரிய பெருமாள் இடத்திலே காணலாய் இருக்கும்
இனித் தான் -பள்ளி கொள்ளும் இடத்தே துயில் எழப் பாடி திருப்பள்ளி உணர்த்துவதும் இங்கே இறே
வட பெரும் கோயில் உடையானை கிருஷ்ணனாக அனுகரித்தால் போலே
கோவலனாய் வெண்ணெய் உண்ட வாயோடே கண் வளர்ந்து அருளுகிறதாக அனுசந்திக்கலாம் இறே –
பள்ளி கொள்ளும் இடத்தடி கொட்டிட என்று பிரார்த்தித்த படியே-
பண வாளரவணைப் பற்பல காலமும் பள்ளி கொள் மணவாளோரோடு மணம் புணர்ந்து கூடினாள் இறே
ஆகையால் பாடின விஷயமும் அவரே இறே
விசேஷித்துப்
பாட்டினால் கண்டு வாழும் பாணர் பாட்டுக் கேட்க்கும் இடம் ஆகையாலும்
இவள் அவள் மகள் ஆகையாலும்
பாடவல்ல நாச்சியாராய் அவ்விஷயத்தையே அவ்விஷயத்தையே பாடினாள் ஆய்த்து –
அரங்கற்குப் பன்னு திருப்பாவை பல் பதியம் –
அர்த்தத்தின் சீர்மையாலே எல்லாராலும் ஆராய்ந்து அனுசந்திப்பதான திருப்பாவை என்னுதல் –
ஆராய்ந்து அருளிச் செய்த திருப்பாவை என்னுதல்
நிரூபித்தால் –
பல் பதியம் –
பல் பத்தியம் -என்றபடி
சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமல் இறே அருளிச் செய்தது
அது தானே
இன்னிசையாலே
யாய்த்து பாடிக் கொடுத்தது –
ஸம்ஸ்ரவே மதுரம் வாக்யம்-
செவிக்கு இனிய செஞ்சொல் -என்னுமா போலே
நற் பா மாலை
விலக்ஷணமாய் சந்தஸ் ரூபமயமாய் இருப்பதான மாலையைப் பாடிக் கொடுத்தாள்
அதாவது சூட்டினேன் சொன் மாலை என்னும்படி சிரஸா தரிக்கும் படி பண்ணுகை –
பூ மாலை சூடிக் கொடுக்கையாவது
செண்பக மல்லிகையோடு செங்கழு நீர் இருவாட்சியாலும் இடையிட்டுத் தொடுத்த திருத் துழாய் மாலையை
சூடிக் கொடுத்தாள்
தன் வாசம் செய் பூம் குழலிலே வாஸிதமாக்கிச் சூடிக் கொடுத்தாள் ஆய்த்து
ஆகையால் திருப்பாவை அனுசந்தானத்துக்கு முன்னே
சூடிக் கொடுத்தாளைச் சொல்லு
என்று அவளை அனுசந்திக்கச் சொல்கிறது –
இத்தால் அவள் திவ்ய ப்ரபந்தத்திலும் அவள் திரு நாமமே பிரதமம் அனுசந்தேயம் -என்றதாயிற்று –
———————————————————-
அவதாரிகை
இதில் சூடிக் கொடுத்த படியையும்
பாடிக் கொடுத்த படியையும் சொல்லி
ஸ்தோத்ரம் பண்ணி
திருவேங்கடமுடையான் அடியாகச் சொன்ன இதன் அர்த்தங்களை நாம் அதிக்ரமியாத படி
அனுக்ரஹிக்க வேணும் என்று ஆண்டாளை அர்த்திக்கிறது
கீழே -அரங்கற்கு என்றது
இதில் வேங்கடவற்கு என்றது –
கோயில் திருமலைகளில் ஆய்த்து
கோதை சூடிக் கொண்டு இருப்பது
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே தொல் பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய்–நாடி நீ
வேங்கடவற்கு என்னை விதி என்ற இம்மாற்றம்
நாம் கடவா வண்ணமே நல்கு
சூடிக் கொடுத்த -பூ மாலையைத் திருக் குழலிலே சூடி பெரிய பெருமாளுக்கு சமர்ப்பித்து அருளின
சுடர்க் கொடியே -பொற் கொடி போன்ற வடிவு அழகை யுடையவளே
தொல் பாவை -பழையதான நோன்பை
பாடி -திருப்பாவை என்னும் திவ்ய பிரபந்தத்தால் பாடி
அருள வல்ல -உபகரிக்க வல்லவளாய்
பல் வளையாய்–பலவகைப்பட்ட வளையல்களை அணிந்தவளே
நாடி நீ -மன்மதனான நீ ஆராய்ந்து
வேங்கடவற்கு -திருமலையில் எழுந்து அருளி இருக்கிறவனுக்கு
என்னை -திருக்கையும் திரு வாழியுமான சேர்த்தி அழகைக் காண வேணும் என்று ஆசைப்படுகிற என்னை
விதி என்ற -அந்தரங்க கைங்கர்யம் பண்ணும்படி விதிக்க வேண்டும் என்று அருளிச் செய்த
இம்மாற்றம் – இப்பாசுரத்தை
நாம் -உனக்கு அடிமையாய் இருக்கிற நாங்கள்
கடவா வண்ணமே நல்கு -அதிக்ரமியாதபடி உபகரித்து அருள வேணும்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே
குழற் கோதை யாகையாலே அளகத்திலே–முன் நெற்றி மயிர் – வளையமாக
சூடிக் கொடுத்தாள் ஆய்த்து
சுடர்க் கொடியே
ரூப சமஸ்தானம் பொற் கொடி என்னலாம்படி இருக்கை –
ஹேம லேகாம் –
மங்கள தீப லேகாம்
கொடி
அவனைக் கட்டலாம் கொடி
பெண்ணாக்கை ஆப்புண்டு என்னக் கடவது இறே
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே
நிரூபகம்
சூடிக் கொடுத்த சுடர்க் கொடியே நிரூபகம் –
தொல் பாவை
பாடி அருள வல்ல பல் வளையாய்-
தொல்
பழையதான
பாவை
நோன்பை
பஞ்ச லக்ஷம் குடியில் பெண்களும் குடி நோற்ற நோன்பை
ஹேம மந்தே ப்ரதமே மாசி நந்த வ்ரஜ குமாரிகா -என்று எல்லாரும் கூடிக்
கிருஷ்ணனைப் பெறுகைக்கு மார்கழி நீராடி நோற்ற நோன்பை
அன்றிக்கே
பழையதாய்ப் போருகிற திருப்பாவை என்கிற சந்தஸ் ரூபமான திவ்ய பிரபந்தத்தை என்னுதல்
பிற்பாடார்க்கும் அனுசந்தேயமாம் படி திவ்ய ப்ரபந்தமாக
பாடி அருள வல்ல
பாடி உபகரிக்க வல்லவள் என்னுதல்
பல் வளையாய்–
பல் வளையாள்-என்னுமா போலே வளையே நிரூபகமாய இருக்கை –
நாடி நீ வேங்கடவற்கு என்னை விதி என்ற–
நீ திரு வேங்கடத்தானை -நான் சென்று நாடி -என்கிறபடியே அபி நிவேசத்தைப் பண்ணி
காம தேவா என்று உன்னுடைய காமத் தீயாலே-வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே என்ற–
இம் மாற்றம் –
இந்தச் சொல்லை என்னுதல் –
இந்தப் பிரகாரம் -என்னுதல்
பகவத் காமத்தால் சொன்ன பாசுரம் என்னுதல்
அர்த்தத்தை என்னுதல்
நாம் கடவா வண்ணமே நல்கு –
உனக்கு அடிமையாய் இருக்கிற நாங்கள் அதிக்ரமியாத பிரகாரம் உபகரிக்க வேணும்
நல்குதல் -கொடுத்தல்
இத்தால் –
ஆண்டாள் உடைய பகவத் ப்ரேமம் உண்டாக வேணும் என்று
அவளை வேண்டுகிறது-
——————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ தொட்டாசார்யர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஒண்ணான வான மா மலை ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ ஆயி சுவாமிகள் திருவடிகளே சரணம் சரணம்
ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் நாயனார் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பூர்வாசார்யர்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ ஆழ்வார்கள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் –
Leave a Reply