ஆறெனக்குநின் பாதமே சரணாகத் தந்தொழிந் தாய் உனக் கோர்கைம்
மாறு நான் ஒன்றிலேன் எனதாவியும் உனதே
சேறுகொள் கரும்பும் பெருஞ்செந்நெலும் மலிதண் சிரீவரமங்கை
நாறு பூந்தண்துழாய் முடியாய்! தெய்வ நாயகனே!
பொ-ரை :- எனக்கு உபாயம் தருமிடத்தில் உனது திருவடிகளையே உபாயமாகத் தந்தாய்; அவ்வாறு தந்த உனக்குக் கொடுப்பதற்குரிய பிரதியுபகாரம் நான் ஒன்றனையுடையேனல்லேன்; என்னுடைய உயிரும் உன்னுடையதே; சேற்றையுடைத்தான கரும்பும் பெரிய செந்நெற்பயிர்களும் மிகுந்திருக்கின்ற குளிர்ந்த ஸ்ரீ வரமங்கை என்னும் திவ்வியதேசத்தில் எழுந்தருளியிருக்கின்ற வாசனை வீசுகின்ற பூக்கள் பொருந்திய குளிர்ந்த திருத்துழாயைத் தரித்த திருமுடியையுடையவனே! தெய்வங்கட்குத் தலைவனே!
வி-கு :- துழாய் முடியாய்! தெய்வநாயகனே! எனக்கு ஆறு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் உனக்குக் கைம்மாறு ஒன்று இலேன்; எனது ஆவியும் உனதே என்க. ஆறு – வழி. சரண் – உபாயம். தந்தொழிந்தாய் – ஒருசொல்.
ஈடு :- பத்தாம் பாட்டு. 1“அருளாய் உய்யுமாறு எனக்கு” என்றார், அப்போதே வந்து அருளக் கண்டிலர்; ஏதேனும் நிலையிலும் ‘உன் திருவடிகளே சரணம்” என்றிருக்கும்படி என்னைச் செய்தருளின மகோபகாரத்துக்குப் பிரதி உபகாரம் இல்லை என்கிறார்.
ஆறு எனக்கு நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய் – உபாய உபேயங்கள் இரண்டும் உன் திருவடிகளேயாம்படிசெய்து தந்தாயே என்று பிள்ளான் பணிப்பர். ஆறு – வழி. வழி – உபாயம். 1“எவ்வாறு நடந்தனை”, “இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்” என்னக்கடவதன்றோ. 2சரண் – உபேயம். அன்றிக்கே. 3“இவை இரண்டாலும் உபாயத்தையே சொல்லுகிறது’ என்று பட்டர் அருளிச்செய்வர். 4ஆறு – உபாயம். “சரணம் என்கிற இந்தச் சொல்லானது உபாயம், வீடு, காப்பவன் என்ற இம்மூன்று பொருள்களைக் காட்டும்; இப்போது இந்தச் சரணம் என்ற சொல் உபாயத்தையே சொல்லாநின்றது” என்கையாலே ‘சரண்’ என்பதும் உபாயம். ஆக, 5எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றபடி. வேறு உபாயங்களை அநுஷ்டிக்கிறவர்களைக்காட்டிலும் தமக்கு உண்டான வேறுபாட்டினைச் சொல்லுகிறார் ‘எனக்கு’ என்ற சொல்லால். 6“நோற்ற நோன்பிலேன்”என்று தொடங்கி, வேறு உபாயம் இன்மையை முன்னிட்டுக்கொண்டு உபாயத்தை அறுதியிடுகிற திருவாய்மொழி ஆகையாலே அதனையே நிகமிக்கிறது.
‘நின்பாதமே’ என்ற ஏகாரத்தாலே 1ஏகபதத்தை நினைக்கிறது. 2ஈச்வரனைப் பற்றின ஊற்றத்தாலே வேறு உபாயங்களை நெகிழுகை ஒழிய, நாஸ்திக்யத்தாலே விடுமன்று அது வேறு விஷயங்களிலே ஈடுபாட்டிற்குக் காரணமாம். 3மருந்தினையுண்டவன் ஒரு பாம்பின் வாயிலே கையினைக் கொடுத்தால் அது தீங்கினை விளையாதாம், மருந்து இல்லாதவன் அதனைச் செய்தால் அது மரணத்திற்குக் காரணமாம். இந்தத் தெளிவினைப் பிறப்பித்த உனக்கு ஒத்ததான பிரதியுபகாரம் காணாத மாத்திரம் அன்றிக்கே, கைம்முதல் இல்லாத நான் 4போலியாயிருப்பது ஒரு பிரதியுபகாரமும் காண்கின்றிலேன். ஏன் வருந்துகிறீர், உம்முடைய ஆத்மாவைத் தந்தாலோ? என்ன, எனது ஆவியும் உனதே – அதுவும் செய்து நெஞ்சாறல் கெட்டிருப்பன் அன்றோ, நீ மயர்வற மதிநலம் அருளிற்றிலையாகில். ஆத்ம சமர்ப்பணம் செய்கையாவது, 5இராஜமகேந்திரன் படியை எடுத்து ‘என்னது’ என்று கொண்டு பெருமாளுக்குக் கொடுப்பாரைப் போன்று களவு வெளிப்படுதலே அன்றோ. “சரண்-திருவடிகளை; ஆறாக எனக்குத் தந்தொழிந்தாய்; நின் பாதமே, எனது ஆவியும் உனதே” என்று கூட்டிநின் பாதமே’ என்பதனைச் சபதமாக்கி நிர்வஹிப்பர் ஆப்பான் திருவழுந்தூர் அரையர்.
சேறுகொள் கரும்பும் பெரும்செந்நெலும் மலி தண்சிரீவர மங்கை – மிக்க சேற்றையுடைத்தான கரும்பும், அதற்கு நிழல் செய்யும்படியான செந்நெலும் மிக்குக் குளிர்ந்த சிரீவர மங்கை. நாறு பூந் தண் துழாய் முடியாய்-1இதற்கெல்லாம் முதலியாக வைத்த வளையத்தையுடையையாய். தெய்வ நாயகனே-நித்தியசூரிகளுக்கு அதிபதியானவனே! தெய்வம்-தேவர்கள். எத்தனையேனும் ஞானமுடையார்க்கும் நிர்வாஹகனாயிரா நின்றாய், ஆனபின்னர் நான் உனக்கு என்ன பிரதியுபகாரம் பண்ணுவது. 2நீயோ கனக்க உபகரித்துக்கொண்டு நின்றாய், நான் அறிவிலனாகப் பெற்றிலேன், இங்ஙனேயானாலும் நான் சில செய்து தலைக்கட்டினேனாக ஒண்ணாதபடி நீ பரிபூர்ணனானாய். 3உபகாரம் கொள்ளாதார் உண்டு உடுத்துத் திரியா நின்றார்கள், அறிவு கேடரானவர்கள் ‘சில பிரதியுபகாரம் செய்தோம்’ என்றிரா நின்றார்கள்; நீ நிறைவில்லாதவனாகில் இவை எல்லாம் சில செய்தனவாக நினைத்திருக்கலாமே அன்றோ, நீயோ நிறைந்தவனாயிரா நின்றாய்; ஆனபின்னர், ஒன்று செய்து தலைக்கட்டப் போமோ.
“ஆறு” என்பது, வழி என்ற பொருளில் வருவதற்கு மேற்கோள்
காட்டுகிறார் ‘எவ்வாறு’ என்று தொடங்கி.
“எவ்வாறு நடந்தனை? எம்மிராமாவோ! எம்பெருமான்! என்
செய்கேனே?” என்பது, பெருமாள் திருமொழி, 9 : 2. “இப்பொய்கைக்கு”
என்பது, நாய்ச்சியார் திருமொழி, 3 : 2.
2. பிள்ளான் நிர்வாஹத்தில், “சரண்” என்பது, இல்லமாய் அதனாலே,
உபேயத்தைச் சொல்லுகிறது என்று கோடல் வேண்டும்.
3. ‘இவை இரண்டாலும்’ என்றது, “ஆறு, சரண்” என்ற இந்த இரண்டு
சொற்களாலும் என்றபடி.
4. பட்டர் நிர்வாஹத்திலே சப்த நிர்வாஹம் காட்டுகிறார் ‘ஆறு உபாயம்’
என்று தொடங்கி.
“உபாயே க்ருஹ ரக்ஷித்ரோ : ஸப்த: ஸரணம் இதி அயம்
வர்த்ததே ஸாம்ப்ரதம் ச ஏஷ: உபாயார்த்தைகவாசக:”
என்பது, பாஞ்சராத்திரம்.
5. “எனக்கு உபாயம் உன் திருவடிகளேயாம்படி செய்து தந்தாய் என்றது,
எனக்கு உபாயம் தருமிடத்தில் வேறு ஒன்றனைத் தாராமல் உன்
திருவடிகளையே உபாயமாகச் செய்து தந்தாய் என்றபடி” என்று பெரிய
சீயர் அருளிச்செய்வர். ஆகையாலே, பட்டர் நிர்வாஹத்துக்கு “எனக்கு
ஆறு தருமிடத்தில், நின்பாதமே சரணாகத் தந்தொழிந்தாய்” என்று
சொற்களைக் கூட்டிக் கோடல் தகும். எனக்கு – வேறு கைம்முதல்
இல்லாத எனக்கு.
6. “ஆறு, சரண்” என்ற இரண்டனையும் உபாயபரமாகப் பட்டர்
அருளிச்செய்வதற்கு நியாமகம் யாது? என்ன, இடத்திற்குத் தகுதி
ஆகையாலே என்று அருளிச்செய்கிறார் ‘நோற்ற நோன்பு’ என்று
தொடங்கி.
‘ஏகபதத்தை நினைக்கிறது’ என்றது, பற்றுமிடத்தில் உபாய பாவத்தைக்
கழிக்கிற ஏகபதத்தில் அர்த்தத்தை நினைக்கிறது என்றபடி. ‘ஏகபதம்’
என்றது, சரமஸ்லோகத்திலுள்ள “ஏகம்” என்ற பதத்தைக் குறித்தபடி.
அங்கு “மாம் ஏகம்” என்பதற்கு ‘என்னையே’ என்பது பொருள். “ஏகம்”
என்ற சொல் ஏகாரத்தின் பொருளில் வந்துள்ளது
எல்லா நிலையிலும் நீயே பிராப்யம் பிராபகம்
உனக்கு பணி -செய்யவே நின் சாயை அழிவு கண்டாய்
கிடைக்காவிடிலும் நீயே என்ற வ்யவசாயம் உறுதி -களைவாய் களையாது ஒழிவாய் போலே
பர்த்தாவையே எதிர்பார்த்து இருக்குமா போலே
ஆறு -எனக்கு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்
மூன்று அர்த்தங்கள்
எனது ஆவியும் உனதே
கரும்பு செந்நெல் வளர்ந்த திவ்ய தேசம்
உனக்கு ஒரு கைம்மாறு ஒன்றும் இல்லையே தைவ நாயகனே
சரண்
ஆறு வழி உபாயம் -பேறு உபேயம் பிராப்யம் பலம் புருஷார்த்தம்
அவ்வாறு அந்த வழியிலே
எவ்வாறு நடந்தனை என்னக் கடவது இ றே
வழி -முறை சாதனம்
சரண் -உபேயம் -பேறு -சரணம் -த்வயம் சரணம் சப்தம்
இரண்டும் உனது திருவடிகளே பிள்ளான் பணிக்கும்
ஆறு உபாயம் நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய் -பிள்ளான்
புல் காட்டி மாட்டை வரவைத்து புல்லைக் இடுவாரைப் போலே
திருவடி காட்டி திருவடி அடைய
இவை இரண்டாலும் உபாயத்தையே குறிக்கும் பட்டர் அருளிச் செய்தார்
எனக்கு ஆறு நின் பாதமே சரணாக தந்து ஒழிந்தாய்
ஆறு சரண் இரண்டும் உபாயம்
எனக்கு என்று இவர் வ்யாவ்ருத்தி காட்டி அருளி
வேறு ஒன்றை உபாயமாக பற்றாமல்
சரண் -க்ரஹம் போல பிள்ளான் –
பட்டர் -சரண் என்றும் உபாயம்
எனக்கு உபாயம் தரும் இடத்தில் உனது திருவடியையே கொடுத்து அருளினாய்
எனக்கு உபாயாந்தர் காட்டில் இவர் பெருமை காட்ட
நோற்ற நோன்பு இலேன் உபாயாந்தர சூன்யை சொல்லி அருளி
திருவடிகளை தவிர வேறு உபாயம் இல்லை ஆரம்பதித்த படியே முடிவிலும் அருளி
அவதாரணத்தாலே -பாதமே -என்பதால் -மாம் ஏகம் -பதத்தை நினைக்கிறது
எம்பெருமானை பற்றினவன் கர்ம ஞான யோகம் விட்டாலும் தப்பு இல்லை
நாஸ்திகன் விட்டது வைதிக ஸ்ரத்தை இன்றி
ஈஸ்வரனை பற்றின ஊற்றத்தாலே -உபாயாந்தரங்கள் தானாக நெகிழ்ந்து
விடுகை
அத்தாணிச் சேவகத்தில் பொதுவானது நழுவும் ஆசார்ய ஹ்ருதய வியாக்யானம்
கைப்பண்டம் போலே தன்னடையே நழுவும் இவனையே அறியாமல்
க்ரஹணம் புண்ய காலம் -சன்னதி திறந்து வைக்க வேண்டும் ஆகமம் சொல்லி
கிரகண தர்பணம் எப்பொழுது செய்வது -இவர்கள் -கைங்கர்யம் செய்பவர்கள் –
சந்த்யா வந்தனம் புறப்பாடு முடிந்து செய்வது போலே –
ஔஷத சேவை பண்ணுவாரைப் போலே –
பகவானைப் பற்றினவன் பாதுகாப்பு உண்டே –
இந்த தெளிவை பிறப்பித்த எனக்கு -பிரத்யுபகாரம் இல்லையே
காணாத மாதரம் அன்றிக்கே போலியான ஓன்று கூட இல்லை
ஆத்மாவும் போலி தானே
அதுவும் உன்னதே
உதவிக் கைம்மாறு என் உயிர் -என்னில் -அதுவும் உன்னதே
அதுவும் உன்னதே -கொடுத்து நெஞ்சாரல் எனக்கு தான் தெரியும்
மயர்வற மதி நலம் அருளாவிடில்
அதவும் செய்து நெஞ்சாரல் -இல்லாமல் இருந்து இருப்பேன்
உன்னது என்று அறிந்த பின்
ராஜ மகேந்தரன் படியை எடுத்து -என்னது என்று கொண்டு உனக்கு சமர்ப்பித்தது போலே
காஞ்சி புரம் மகர கண்டிகை -clive arkaad போகும் பொழுது குளிர் ஜுரம் வந்து படுக்க
நடுங்க -கோயில் அருகில் கூட்டிப் பக வராத ராஜன் -கேட்பதை கொடுக்கும் boon giver
arkod யுத்தம் வென்று
துளசி தீர்த்தம் கொடுத்து அருளி அதனால் தான் brittish regime இங்கே வந்ததாம்
clive மகர கண்டிகை இன்றும் சமர்ப்பித்து கொள்கிறான்
தன்னது என்று அபிமானித்து கொடுத்தது போலே
எனது ஆவியும் உன்னதே
ஆத்தான் திருவழுந்தூர் அரையர் -இன்னும் ஒரு நிர்வாஹம்
நெறி காட்டி நீக்காமல் உனது திருவடிகளையே உபாயமாக காட்டி அருளினாய் பட்டர்
நின் பாதமே -எனது ஆவியும் உனதே -என்று அந்வயித்து -அரையர் –
உனது திருவடி மேல் ஆணை எனது ஆவி உன்னதே
இத்தனை நாள் நான் பிரமித்த படி தப்பு
சபதமாக்கி நிர்வஹித்து காட்டி
ஆறு எனக்கு சரணாக தந்து ஒழிந்தாய்
உபாயம் தரும் இடத்தில் உன்னுடைய சரண் -திருவடிகளை தந்தாய்-
சேறு கொள் கரும்பும் செந்நெலும் -மிக்க ஸ்ரீ வர மங்கை
கரும்புக்கு நிழல் தரக்கூடிய பெரிய செந்நெல்
தர்சநீயமான திருத்துழாய் –
வளையம் அணிந்து
முடியாய் -நிர்வாஹகன்
உனக்கு என்ன பிரத்யுபகாரம் செய்வேன்
அறிவைக் கொடுத்து ஆத்மா உன்னது காட்டிக் கொடுத்து
நீயோ பரி பூரணன்
எனக்கும் அறிவு கொடுத்து அருளாய்
நானோ அஞனாய் இல்லை
அறிவு கேடர் பிரத்யுபகாரம் செய்வதாக நினைக்க –
உபகாரம் கொள்ளாத சம்சாரிகள் பிரத்யுபகாரம் செய்ய நினைக்க வில்லை
உண்டு உடுத்து உகந்து போகிறார்கள்
நீ அபூர்ணன் ஆகில் -இவற்றை ஏற்றுக் கொள்வாய்
நீயோ தெய்வ நாயகன்
நித்ய சூரிகள் நாயகன்
கொள்ளக் குறை இல்லாத நீ
உள்ளபடி உணர்வில் -நமக்கு ஓன்று உண்டு என்ன விரகு இல்லை ஞான பிரேம சாரம்
என் சொல்வீர் –
அடுத்த பாட்டில் அவரே பதில் சொல்லி அருளி
இல்லை இருவருக்கும் -சொன்னால் போதும்
அவனை வெல்ல
இல்லை குறை இல்லை உடைமை
எதிர்பார்க்கும் குறை இல்லை
சமர்ப்பிக்க எனக்கு உடைமையும் இல்லை
தேசிகன் -இல்லாததை சமர்ப்பிக்க அபராதங்கள் நம்மிடம் உண்டே
நக்கி சாப்பிடும் படி lick இதனாலே வந்தது
திருப்தி அடைந்து -முடியாமல் -இன்னும் -ப்ரீதி -வாத்சல்ய குணம் காட்டி அருளி
ஓன்று செய்து தலைக்கட்ட போமோ
நஞ்சீயர் திருவடிகளே சரணம்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
பெரியவாச்சான் பிள்ளை திருவடிகளே சரணம்.
வாதி கேசரி அழகிய மணவாள ஜீயர் திருவடிகளே சரணம்.
பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.
Leave a Reply