ஸ்ரீ கார்த்திகையில் ஸ்ரீ கார்த்திகை நக்ஷத்ரம் – நள வருஷம்-398-கலி தொடங்கி திருமங்கை ஆழ்வார் திரு அவதாரம் –
நீலன் திரு நாமம் -ஸ்ரீ திருக் குறையலூர் -கள்ளர் குலத்தில் -நாலு கவிப் பெருமாள்
கலி ஹந்தா -ஷட் பிரபந்தம் -அங்கம் -திரு சார்ங்கம் அம்சம் –
ஸ்ரீ ஹரி பாதத்தில் வாழும் ஸிம்ஹம் இவர் -பாஹ்ய குத்ருஷ்ட்டி யானைக் கூட்டங்களை
கர்ஜனையாலே போக்கி அருளியவர் -கலி விபு -விரோதி –
ஸ்ரீ திரு வெள்ளக்குளம் -ஸ்ரீ குமுத வல்லி -திரு மா மகள் இவளது பெயர்-
நான்கு சீடர்கள் -ஆடல் மா குதிரை -திரு ஸ்ரீ நறையூர் நம்பி -ஸமாச்ரயணம்
ஸ்ரீ வயலாலி மணவாளன் திரு மந்த்ரம் அருளி-நீர் மிடுக்கனோ -கலியன் -திரு மந்த்ரார்த்தம் -ஸ்ரீ கண்ணபுரத்தம்மான்
ஆலி நாட்டு அரசன்-அரச மரத்தடியில் தேவாதி அரசன் மந்த்ர அரசான திரு மந்த்ரம் ஓதி –
வேடு பறி உத்சவம் -பங்குனி உத்தரம் முந்திய நாள் -திரு மணம் கொல்லை-எட்டு எழுத்து பறித்த இடம்
அடி தோறும் அர்ச்சை-
திரு நெடும் தாண்டகம் -தேவ கானத்தில் பாடி -இராப்பத்து ஸ்ரீ நம் பெருமாளைப் பிரார்த்தித்து தொடங்கி வைத்தார்
திரு வாளன் படித்துறை -பாடிய வாளன் துறை -நித்ய சம்ஸ்காரம்
திருக் குறுங்குடியில் இருந்து தன்னுடைச் சோதி எழுந்து அருளினார்
நீலன் -கலியன் -பரகாலன் -ஆலி மாடன் -கொற்றை வேல் -திரு மங்கை நாட்டு வேந்தன்
திருக்கண்ண மங்கை -நின் தனக்கும் குறிப்பாகில் -கற்கலாம் பொருள் தானே
ஸ்ரீ நம்பிள்ளை -நம்பூர் வரதாச்சார்யர் -கலிகன்றி தாசர்–
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை –1167-ஆவணி ரோகினி யாமுனாச்சார்யர் திருக்குமாரர் இவர்-
நான்கு சிம்ஹாசனங்கள் -வியாக்கியான சக்ரவர்த்தி-ஸ்ரீ அபய ப்ரத ராஜர்-1262-தன்னுடைச் சோதி-
ஸ்ரீ நாயனார் ஆச்சான் பிள்ளை இவரது சகோதரி திருக்குமாரர்-
—————
ஸ்ரீ திருக்கோளூர் நம்பி அருளிச் செய்த தனியன்-
(ஸ்ரீ திருக் கோஷ்ட்டியூர் நம்பி அருளிச் செய்த தனியன் என்றும் சொல்வர் )
கலயாமி கலி த்வம்சம் கவிம் லோக திவாகரம்
யஸ்ய கோபி பிரகாசாபி ராவித்யம் நிஹதம் தம –
கலித்வம்சம் –
கலிகன்றி -என்று நிரூபகத்தை உடையரான பரகால கவியை –
கலயாமி -பிரணமாமி -என்கிறது –
லோக திவாகரம் –
ஆதித்யன் -பாஹ்ய அந்த காரத்தைப் போக்கும்
இவர் -நாட்டார்க்கு பாஹ்யாப்ய அந்தகாரங்கள் -புறத்திலும் அகத்திலும் உள்ள இருள் -இரண்டையும் -போக்குவார்
யஸ்ய கோபி –
யாதொருத்தர் உடைய
யத் கோ சஹச்ரம் -என்கிற மறை ஆயிரங்களினாலே
பிரகாசாபிர் –
நடை விளங்கு தமிழ் மாலையாய் –
நெஞ்சுக்கு இருள் கடி தீபமாய் இருக்கும்
இப்படி பிரகாசங்களான ஸ்ரீ ஸூக்திகளினாலே
அறிவிலா மனிசர் உடைய
ஆவித்யம் நிஹதம் தம –
ஆவித்ய தமஸ் நிஹதம் –
அவித்யையாகிற அந்தகாரம் -அஞ்ஞானத்தால் வந்த அந்தகாரம் அடிக்கப்பட்டதோ
அவரை கலயாமி -என்கிறது –
—————————————————————————–
ஸ்ரீ எம்பெருமானார் அருளிச் செய்த தனியன் –
அவதாரிகை –
எம்பெருமானுக்கு திரு மதிள் போலே அரணாய் இருப்பதான ஆறு பிரபந்தங்கள் செய்து அருளின ஆழ்வார் உடைய
திரு நாமங்கள் பலவற்றையும் சொல்லி அவரை வாழ்த்துகிறது –
பிரத்யஷே குரவஸ் ஸ்துத்யா -என்னக் கடவது இறே
ஆழ்வார்கள் அர்ச்சாவதாரமாய் எப்போதும் எல்லார்க்கும் பிரத்யஷராய் இறே இருப்பது –
வாழி பரகாலன் வாழி கலி கன்றி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் வாழியரோ
மாயோனை வாள் வலியால் மந்த்ரம் கொள் மங்கையர்கோன்
தூயோன் சுடர் மான வேல் –
வாழி பரகாலன் –
பகவத் த்விட்டுக்களான-த்வேஷம் பண்ணும் பிரதிகூலர்களுக்கு காலனானவர் வாழி
வாழி கலிகன்றி –
கலி தோஷ நிவாரகர் வாழி
வாழி குறையலூர் வாழ் வேந்தன் –
திருக் குறையலூரை அவதார ஸ்தலமாக உடையவராய்
அது வாழும்படிக்கு அத்தை நோக்குகிற ராஜா -என்னுதல்
அங்கே வாழுகிறவர் -என்னுதல் –
மாயோனை வாள் வலியால் மந்திரம் கொள் மங்கையர் கோன் தூயோன் சுடர் மான வேல் –வாழியரோ –
என்று
ஆழ்வாரையும்
அவர் திருக் கையில் வேலையும் ஒருக்காலே ஆஸாசித்த படி -மங்களா சாசனம் செய்தபடி
மாயோனை –
அரங்கத்து அரவணைப் பள்ளி கொள்ளும் மாயோனை-பெருமாள் திருமொழி-1-7- இறே வாள் வலியால் மந்த்ரம் கொண்டது –
தென்னரங்கன் தன்னை வழி பறித்த வாளன் இறே-இயல் சாத்து-
கைப்பொருள்கள் -கையில் வளை முதலியன -முன்னமே கைக்கொண்டவர் இடத்திலே இறே-நாச்சியார் திரு மொழி-
மந்தரப் பொருள் கைக் கொண்டது –
மந்த்ரத்தைப் பற்றி-வேதங்களால் சொல்லப் படும் சர்வேஸ்வரனை பற்றி -இறே மந்த்ரம் கொண்டது
(மந்த்ரம் -திருமந்த்ரத்தையும் அவனையும் குறிக்கும் -மந்திரத்தால் மந்த்ரத்தை -திரு நெடும் தாண்டகம்)
மங்கையர் கோன் –
திரு மங்கை மன்னன் இறே
தூயோன்
தூய்மை என்னும் பாஹ்யாப்யாந்தர சுத்தியை உடையவர் –
அங்கமலத்தட வயல்சூழ் ஆலி நாடன்
அருள் மாரி
அரட்ட முக்கி
அடையார் சீயம்
கொங்குமலர் குழலியர் வேள் மங்கை வேந்தன்
கொற்றவேல்
பரகாலன்
கலியன்
என்று தாமே தம் திரு நாமங்களைக் கூறினார் இறே –
சுடர் மான வேல்-
தேஜோ ரூபமான -பெரிய வேல் –
திருமங்கை மன்னன் எடுக்கும்படியான வேல்
வாழியரோ –
இத்தால்
ஆழ்வாரோபாதி ஆயுதமும் ஆசாச்யம் -என்றபடி
நின் கையில் வேல் போற்றி -என்னக் கடவது இறே
இது தான் கொற்ற வேல்
ஆகையாலே வெற்றி வேலாய் இருக்கும்
அத்தாலே இதன் விஜயத்தை வேண்டுகிறது –
————————————————————-
ஸ்ரீ கூரத் ஆழ்வான் அருளிச் செய்தது –
இதில் ஆழ்வார் திவ்ய பிரபந்த வைபவம் சொல்கிறது
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் அடங்கா நெடும் பிறவி
நஞ்சுக்கு நல்லமுதம் தமிழ் நன்னூல் துறைகள்
அஞ்சுக்கு இலக்கியம் ஆரன சாரம் பல சமயப்
பஞ்சுக் கனலின் பொறி பரகாலன் பனுவல்களே –
நெஞ்சுக்கு இருள் கடி தீபம் –
நெஞ்சுக்கு இருள் ஆகிறது
மநோ மாநில்யமான அஞ்ஞானம்
மனனகமலம் இறே
ஜ்ஞானக் கலை யாகையாலே அத்தை நிராகரிக்கும் –(ஞான தீபேண)
ஜ்ஞானச் சுடர் விளக்காய் இருக்கும் –( பேயாழ்வார்)
அடங்கா நெடும் பிறவி நஞ்சுக்கு நல்ல அமுதம்-
பிரதிக்ரியை ஒன்றாலும் அடங்காத
நெடுகிப் பெருத்து
ஜன்மம் ஆகிற நஞ்சுக்கு நல்ல அமுதம் –
அந்த விஷத்தை மாற்றுகைக்கு நிர்விஷமான அமர்தம் –
சம்சார விஷத்துக்கு அம்ருதமாம் இறே திருமால் திரு நாமம் இருப்பது –
திருமங்கை ஆழ்வார் திவ்ய பிரபந்தம்
சம்சார நிவர்த்தகமான திரு மந்த்ரத்தை பிரதி பாதிக்குமதாய் இறே இருப்பது –
தமிழ் நன்னூல் துறைகள் அஞ்சுக்கு இலக்கியம் –
திராவிட சாஸ்திரம்- எழுத்து- சொல்- பொருள் -யாப்பு -அலங்காரம் –
என்கிற விலஷணமான பஞ்ச லஷணங்கள் உடன் கூடி இருப்பது –
அன்றிக்கே –
தமிழுக்கு -எழுத்து முதலான அஞ்சு லஷணத்தையும் அறுதி இடுவதான நன்னூல்
என்று ஒரு சாஸ்திரம் உண்டு-அத்தை சொல்லிற்றாதல்
ஏவம் விதமான திராவிட சாஸ்திர மார்க்க பஞ்சகத்துக்கு –இலக்கியம்
இலக்கண இலக்கியம் -என்று இறே அவர்கள் சொல்லுவது –
அதுக்கு லஷ்யமாய் படிமாவாய் இருக்கும் –
இத்தைப் பார்த்து லஷணம் கட்டலாய் இருக்கை-
ஆரண சாரம்
கேவலம் தமிழுக்கு லஷணமாய் இருக்கை அன்றிக்கே
ஆரண சாரமுமாயும் இருக்கும் –
வேத சாரமுமாய் இருக்கும் என்றபடி
திருமந்த்ரார்தம் இறே இதில் பிரதிபாதிப்பது
நாராயணா என்னும் நாமம் -என்று உபக்ரமித்து
பேசுமின் திருநாமம் எட்டு எழுத்தும் -என்றும்
நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான் உற்றது உன் அடியார்க்கு அடிமை -என்றும் –
இமையோர் தலைவர் உடைய திருநாமம் நங்கள் வினைகள் தவிர உரைமின் நமோ நாராயணம் -என்றும்
நர நாரணனாய் உலகத்து அற நூல் சிங்காமை விரித்தான் -என்றும்
நாட்டினாய் –என்னை காட்டினாய் -என்றும்
மந்த்ரத்தை மந்தரத்தால் மறவாது -என்றும்
பேராளன் பேரோதும் -என்றும்
நாராயணா ஒ மணி வண்ணா -என்றும்
திருமந்திர விசாரமே இறே முடிய நடந்து போகிறது –
ஆகையால்-ஆரண சாரம் -என்கிறது –
சகல வேத சங்கரஹதயா தத் சாரமாய் இறே திரு மந்த்ரம் தான் இருப்பது –
பல சமயப் பஞ்சுக் கனலின் பொறி-
பரசமயம் ஆகிற நூலராசிக்கு கால அநல கணமாய் இருக்கை –
வெள்ளியார்
பிண்டியார்
போதியார் என்று இவர் ஓதுகின்ற கள்ள நூல்களை-( 9-7-)
செம்மைப் பனுவல் நூலால்-( 10-4-) இறே இவர் கழித்துத் தள்ளுவது –
பர சமயக் குறும்பு அறுத்தவர் இறே –
இது எல்லாம் ஆவது எது தான் -என்ன –
பரகாலன் பனுவல்களே –
மருவலர் தம் உடல் துணிய வாள் வீசும் பரகாலன் பனுவல்களே இவற்றைச் செய்து முடிக்கும் –
அவரும் வேண்டா
அவர் ஸ்ரீ ஸூக்திகளே அமையும் -இந்தக் கார்யங்களை செய்கைக்கு -என்கை –
இவர் அதிகரித்த கார்யத்துக்கு கையும் வாயும் ஒத்து இருக்கிறபடி இது வாய்த்து –
———————————————————————
எம்பார் அருளிச் செய்த தனியன் –
இனி –
இவ் வாழ்வாரைப் போலே
பாஹ்ய குத்ருஷ்டிகளை நிரசித்து
வைதிக மார்க்கத்தை நடத்தியும்
உகந்து அருளின நிலங்களை உத்தரித்தும்
தத் பிரதிபாதகமான இவர் ஸ்ரீ ஸூக்தியை வர்த்திப்பித்தும் –
போருமவர் இறே உடையவர் –
அத்தைப் பற்ற
இவ் வாழ்வார் ஸ்ரீ ஸூக்தியான திருமொழி ஆயிரமும் என் ஹிருதயத்திலே நிலைத்து நிற்கும்படி
உபகரித்து அருள வேணும் என்று
எம்பெருமானாரை -அர்த்திக்கிறது -இதில் –
எங்கள் கதியே இராமானுச முனியே
சங்கை கெடுத்தாண்ட தவராசா பொங்கு புகழ்
மங்கையர் கோன் ஈந்த மறை யாயிரம் அனைத்தும்
தங்கு மனம் நீ எனக்குத் தா –
எங்கள் கதியே-
அகதிகளான எங்களுக்கு கதியாய் இருக்கிறவரே
இராமானுச முனியே
சதுர் அஷரியாய்
மோஷ ஏக ஹேதுவான திரு நாமத்தை உடையருமாய்
முனியே-
ஆத்ம ரஷணத்தில் மனனம் பண்ணுமவரே –
சங்கை கெடுத்தாண்ட –
த்வத் அந்யஸ் ஸம்சயஸ் யாஸ்யச் சேத்தா நஹ் யுபபத்யதே-என்றும்
தத்துவ நூல் கூழற்றது -என்றும்
வேதாந்த சாஸ்த்ரத்தை நிஸ் சம்சயமாகப் பண்ணி
மனசிலே சம்சயங்களைப் போக்கி
ஆண்ட-
எல்லாரையும் அடிமையாக ஆண்ட –
தவராசா —
எதிராஜா -என்றபடி
அன்றிக்கே
தவம் -என்று சரணாகதி தர்மமாய்-அத்தை வர்த்திப்பிக்கிற ராஜா என்றுமாம் –
தவ நெறி இறே –(சிந்தனையை தவ நெறியை திரு மாலை)
பொங்கு புகழ் மங்கையர் கோன் ஈந்த மறை –
அதி சமர்த்தமான யசஸ்ஸை உடைய திரு மங்கைக்கு
நிர்வாஹகரான ஆழ்வார் உடைய
வேத ரூபமாய்
யாயிரம் அனைத்தும் –
ஆயிரம் பாட்டாய் இருக்கிற
பெரிய திருமொழி பிரபந்தம் எல்லாவற்றையும்
அன்றிக்கே
ஆயிரம் அனைத்தும் -என்று
ஆயிரத்தையும்
மற்றும் அவர் அனைத்து பிரபந்தங்களையும் -என்றுமாம் –
தங்கு மனம் நீ எனக்குத் தா –
கண்ண நின் தனக்கும் குறிப்பாகில் கற்கலாம் -என்கிற
திவ்ய ஸூக்தியை தரிக்கும் படியான மனஸ்சைத் தந்து அருள வேணும் –
குறையல் பிரான் அடிக் கீழ் விள்ளாத அன்பன் இராமானுசன் (-2-) -என்றும்
நீலன் தனக்கு உலகில் இனியான் (17)-என்றும்
கலி மிக்க செந்நெல் கழனிக் குறையல் கலைப் பெருமான்
ஒலி மிக்க பாடலை உண்டு தன் உள்ளம் தடித்து -என்றும்
எம்பெருமானாரைச் சொல்லக் கடவது இறே
அத்தாலே அவரை அபேஷிக்கிறது –
—————————————————————–
ஸ்ரீ சோமாசி ஆண்டான் அருளிச் செய்த தனியன் –
இதில் பிரபந்த – அந்வய-பிரதிபந்தகங்களை –
பிரபந்த கர்த்தாவே
சேதிக்க வேணும்
என்கிறது
மாலைத் தனியே வழி பறிக்க வேணும் என்று
கோலிப் பதிவிருந்த கொற்றவனே வேலை
அணைத்து அருளும் கையால் அடியேன் வினையைத்
துணித்து அருள வேணும் துணிந்து
மாலைத் தனி வழி பறிக்க வேண்டும் என்று கோலிப்-
சர்வாதிகனை
தனி வழியில் பறிக்க வேணும் என்று உத்யோகித்து
தத் அனுகுணமாக
ஸ்ரீ திருவரசின் அடியிலே
பதிவிருந்த –
மேலே கொடி வைத்து பாரிப்பித்த
கொற்றவனே –
ராஜாவே
பறி கொடுக்குமவன் -தெய்வத்துக்கு அரசு –
பறிக்குமவர் -ஆலி நாட்டு அரசு –
பறிக்கும் இடம் -மரங்களுக்கு அரசு இடம்
பறித்தது -மந்தரத்து அரசு
இப்படி யாய்த்து பறிக்கப் பதி விருந்தபடி –
வேலை அணைத்து அருளும் கையால்-
வெட்டிப் பறிக்க
எடுத்த
அணைத்த
வேலாலே
அடியேன் வினையைத் –
அடியேனான நான் -என்று
அவனுக்கு அடிமையான உமக்கு அடியேனான அடியேன் வினையை –
உமக்கு அடியோம் ஆகைக்கும்–வினைக்கும் -என்ன சேர்த்தி -உண்டு-
என் பெய் வினையைக் கிட்டிக் கிழங்கோடு தன் அருள் என்னும் ஒள் வாள் உருவி வெட்டிக் களைந்த
இராமானுசன் -93–என்கிறபடியே
துணித்து அருள வேண்டும் துணிந்து –
அடியேன் வினையை -துணிந்து -துணித்து அருள வேண்டும் –
வழி பறிக்கத் துணிந்தாப் போலே
வினையைத் துணிக்கத் துணிய வேணும் –
என் வினையைப் போக்க வேணும் -என்று
நீர் துணிந்தால் யாய்த்து போவது –
பண்டை பல் வினை பாற்றி யருளினான் -என்னும்படி பண்ண வேணும்
———————————————————-
ஸ்ரீ கோவில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் –
ஸ்ரீ பிள்ளை லோகம் ஜீயர் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .
Leave a Reply