ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
வார்த்தை -337-
ஸ்வ ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி ததீய சேஷத்வம் –
பர ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி அர்ச்சாவதாரம் –
விரோதி ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி அஹங்கார மமகாரங்கள் –
உபாய ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவத் கிருபை –
உபேய ஸ்வரூபத்துக்கு ஸீமா பூமி பகவந் முகோல்லாசம் –
என்று நம்பிள்ளை வார்த்தை –
(பெரும் புறக் கடலும் ஸ்ருதி சாகரமும் அலைத்து ஆழ்ந்தோடும் இடங்களில்
அயோக்யர்க்கு சமைத்த மடுவும் சாய்கரமும் மாநமேயசரமம் ..சூரணை–74-)
——————————————————————————
வார்த்தை -338-
கைகேயி பகவத் அபசாரம் பண்ணினாளே யாகிலும் -தன் மகன் என்றாகிலும் –
பாகவத ஸ்நேகம் உண்டாகையாலே முக்தை யானாள் –
சக்ரவர்த்தி பகவத் ஸ்நேகம் பண்ணினானே யாகிலும் முக்தன் ஆகிறிலன் –
———————————————————————————–
வார்த்தை -339-
அம்மணி ஆழ்வான் இரு நூற்று காதம் ஆறு வந்து பட்டர் ஸ்ரீ பாதத்திலே தெண்டனிட்டு –
நெடுமாற்கு அடிமை அர்த்தம் அருளிச் செய்ய வேணும் -என்று அபேஷிக்க –
பட்டரும் -எம்பெருமானை அறிகை யாவது -அவனுக்கு அரை வயிற்றுப் படி –
ததீயரை அறிகை யாவது -அவனை முழுக்க அறிகை -என்று அருளிச் செய்ய –
இனி பலவகையாக அருளிச் செய்யில் அடியில் மறப்பேன் -என்று அவர்
அது தன்னையே தாரகமாக கொண்டு போனார் –
(பக்த வைபவம் கேட்டால் அல்லிக் கமலக் கண்ணனாக இருப்பானோ அன்றோ_
————————————————————————————
வார்த்தை -340-
பாகவத சேஷத்வ விதுரமான பகவத் சேஷத்வமும் -தேகாத்ம அபிமானம் போலே
பொல்லாது என்று முதலி யாண்டான் –
திருமங்கை ஆழ்வாருக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றம் சொல்லுகிறது –
இது இவரின் மடிபிடி ரகஸ்யம் என்பார்கள் –
நம்பி தன் நல்ல மா மலர் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்தாடியும் -பெரிய திருமொழி -7-3-10-
(தோடு விண்டலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திருவாலி
நாடன் நன்னறையூர் நின்ற நம்பி தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னிச்
சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்க்கு அவன் சொன்ன சொல் மாலை
பாடல் பத்திவை படுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாதே –7-3-10—நறையூர் நம்பிக்கை நூறு பாசுரங்கள் இறுதி பாசுரம் -அடுத்தது திருச்சேறை பாசுரம்-நல்ல மா மலர் சேவடி -என்பதே பாகவதர்களைக் காட்டும்-கால் வாசி –திருவடி பெருமை முழுவதும் அறிய நம்பிக்கு ஆசை)
பாசுரத்தை கேட்டு இவர் கால்வாசி அறிந்தவராய் இருந்தார் என்று -ஆழ்வீர்
திருச்சேறையிலே வாரீர் -உம்முடைய அபேஷிதத்தை தலைக்கட்டித் தருகிறோம் -என்ன –
இவர் திருச்சேறையிலே எழுந்து அருள –
இவ் வாழ்வார் உடைய அசைந்த வளையத்திலே புனுகை வழிய வார்த்தால் போலே –
மா மதலைப் பிரான் -தம்முடைய திருவடிகளை கொண்டு வந்து வைக்கப் புக –
அத்தை புறம்கையாலே தட்டி –
உன் பொது நின்ற பொன்னம் கழலோ -மூன்றாம் திருவந்தாதி -88-என் தலை மேல் இருப்பது
உன் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலார் -பெரிய திருமொழி -7-4-1–என்ன
அது நன்று இது தீது என்று ஐயப்படாதே
மது நின்ற தண் துழாய் மார்வன் -பொது நின்ற
பொன்னங்கழலே தொழுமின் முழுவினைகள்
முன்னம் கழலும் முடிந்து ——–88-
கண் சோர வெங்குருதி வந்திழிய வெந்தழல் போல் கூந்தலாளை
மண் சேர முலை உண்ட மா மதலாய் வானவர் தம் கோவே என்று
விண் சேரும் இளம் திங்கள் அகடு உரிஞ்சு மணி மாட மல்கு செல்வத்
தண் சேறை எம்பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலை மேலாரே -7-4-1-
அத்தைக் கேட்டு லஜ்ஜா விஷ்டனாய் -உமக்கு அந்தர்யாமியாய் இருந்தோமே -என்ன –
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே -பெரிய திருமொழி -7-4-2-என்ன –
(அம்புருவ வரி நெடுங்கண் அலர்மகளை வரையகலத்து அமர்ந்து மல்லல்
கொம்பு உருவ விளங்கனி மேல் இளங்கன்று கொண்டு எறிந்த கூத்தர் போலாம்
வம்பலரும் தண்சோலை வண்சேறை வான் உந்து கோயில் மேய
எம்பெருமான் தாள் தொழுவார் எப்பொழுதும் என் மனத்தே இருக்கின்றாரே–7-4-2-)
ஆகிலும் அர்ச்சாவதாரமாய் ஸு லபனாய் இருந்தோமே என்ன –
கடல் மல்லைத் தல சயநத்து உறைவாரை கொண்டாடும் நெஞ்சுடையார் அவர்
எங்கள் குல தெய்வமே -பெரிய திருமொழி -2-6-4-என்ன –
(விண்டாரை வென்றாவி விலங்குண்ண மெல்லியிலார்
கொண்டாடு மல்லகலம் அழலேற வெஞ்சமத்து
கண்டாரைக் கடல் மல்லைத் தல சயனத்து உறைவாரை
கொண்டாடும் நெஞ்சுடையார் அவர் எங்கள் குல தெய்வமே –2-6-4-)
அவர்கள் எங்கே உளர் என்ன –
போதோடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -பெரிய திருமொழி-7-4-3- என்று
அவர்கள் ஸ்வரூபத்தை சொல்ல –
(மீதோடி வாள் எயிறு மின்னிலக முன் விலகும் உருவினாளைக்
காதோடு கொடி மூக்கு அன்று உடன் அறுத்த கைத்தலத்தா என்று நின்று
தாதோடு வண்டலம்பும் தண் சேறை எம்பெருமான் தாளை ஏத்திப்
போதொடு புனல் தூவும் புண்ணியரே விண்ணவரில் பொலிகின்றாரே -7-4-3-)
கண்கள் ஆரளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே -பெரிய திருமொழி -7-10-9-என்கிறபடியே
கண்ணுக்கு இரை இடுகைக்கும் நெஞ்சுக்கு அனுசந்தானமாக இரை இடுகைக்கும் நாம் வேணுமே -என்ன –
(பண்ணினைப் பண்ணில் நின்றதோர் பான்மையைப் பாலுள் நெய்யினை மாலுருவாய் நின்ற
விண்ணினை விளங்கும் சுடர்ச் சோதியை வேள்வியை விளக்கின் ஒளி தன்னை
மண்ணினை மலையை யலைநீரினை மாலை மா மதியை மறையோர் தங்கள்
கண்ணினைக் கண்கள் ஆர அளவும் நின்று கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே –7-10-9-)
வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக் கண்டேனுக்கு இது
காணீர் என்னெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே -பெரிய திருமொழி -7-4-6-என்ன
(பண்டு ஏனமாய் யுலகை யன்று இடந்த பண்பாளா என்று நின்று
தொண்டானேன் திருவடியே துணை அல்லால் துணை இலேன் சொல்லுகின்றேன்
வண்டு ஏந்து மலர்ப் புறவில் வண் சேறை எம்பெருமான் அடியார் தம்மைக்
கண்டேனுக்கு இது காணீர் என் நெஞ்சும் கண் இணையும் களிக்குமாறே-7-4-6–திரிதந்தாகிலும் –கரிய கோலத்திரு உரு காண்பன்-ஆழ்வார் உகந்த விஷயம் என்று காண்பன்)
ஆகில் சர்வ கந்தஸ் சர்வ ரச -என்கிறபடியே உமக்கு ரசாயன சேவைக்கு நாம் வேண்டுமே -என்ன –
எம்பெருமான் தாளை நாளும் சிந்திப்பாருக்கு என்னுள்ளம்
தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே -பெரிய திருமொழி -7-4-5-என்ன –
(வந்திக்கும் மற்றவர்க்கும் மாசுடம்பில் வல்லமணர் தமக்கும் அல்லேன்
முந்திச் சென்று அரி யுருவாய் இரணியனை முரண் அழித்த முதல்வருக்கு அல்லால்
சந்தப்பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம்பெருமான் தாளை நாளும்
சிந்திப்பார்க்கு என்னுள்ளம் தேனூறி எப்பொழுதும் தித்திக்குமே –7-4-5-)
ஆகில் உமக்கு உபாய உபேயத்துக்கு நாம் வேணுமே என்ன –
உபாயத்துக்கு முற்பாடர் ஆகையாலும் –
உபேயத்துக்கு எல்லை நிலம் ஆகையாலும் –
இருந்த நாளுக்கு உசாத் துணை யாகையாலும் –
பேராளன் பேரோதும் பெரியோரை ஒருகாலும் பிரிகிலேனே -பெரிய திருமொழி -7-4-4- என்ன –
(ஒருகாலும்-உபாயத்துக்கு புருஷகாரத்துக்காகவும் உபேயத்துக்கு ஸீமா பூமி யாகையாலும் -போதயந்த பரஸ்பரம் ஆகையாலும்)
(தேராளும் வாளரக்கன் தென்னிலங்கை வெஞ்சமத்துப் பொன்றி வீழப்
போராளும் சிலையதனால் பொரு கணைகள் போக்குவித்தாய் என்று நாளும்
தாராளும் வரை மார்பன் தண் சேறை எம்பெருமான் உம்பராளும்
பேராளன் பேரோதும் பெரியோரை யொருகாலும் பிரிகிலேனே–7-4-4-)
(இவர் முன்னிடுமவரை அவன் முன்னிடுவது இருவரும் தம் தாம் குற்றங்களை ஷமிப்பைக்காக -பெருமாளும் மஹாராஜாரை இட்டே விபீஷணன் அங்கீகாரம் அருளினார்)
ஆகில் அடியிலே நமக்கு தாசர் என்று புகுந்தீரே -என்ன –
மற்று எல்லாம் பேசிலும் நின் திரு எட்டு எழுத்தும் கற்று நான்
உற்றதும் உன் அடியாருக்கு அடிமை -பெரிய திருமொழி -8-10-3-என்ன –
(மற்றுமோர் தெய்வம் உளதென்று இருப்பாரோடு
உற்றிலேன் உற்றதும் உன் அடியார்க்கு அடிமை
மற்றெல்லாம் பேசிலும் நின் திரு வெட்டெழுத்தும்
கற்று நான் கண்ண புரத் துறை யம்மானே -8-10-3-)
இவர் நின்ற நிலையிலே தமக்கு பிறந்த ப்ரீதி அதிசயத்தாலே -பின்னையும் அவ் வாழ்வார் திரு உள்ளத்தை
சோதிகைக்காக –
அடியிலே நம்மைக் கவி பாட (வாடினேன் வாடி தொடங்கி திவ்யதேச மங்களாசாசனமாக உபக்ரமித்து)என்று இழிந்து
நம் அடியார் திறத்திலே மண்டிற்று என் -என்ன –
ராஜ புருஷ என்னுமா போலே -ஒருவனைக் கவிபாடுமவன் ஊரும் பேரும் தாரும்
குடியும் வைத்துக் கவிபாடுமா போலே சொன்னேன் இத்தனை –
ததீய விஷயமே உத்தேச்யம் என்ன –
ஆகிலும் பிரித்துச் சொன்னீரே என்ன –
(என்னிலும் மேலாக ததீயரைச் சொன்னீரே என்ன -பிராட்டியை உத்க்ருஷ்டமாக பட்டர் பாட பெரிய பெருமாளுடைய கவசம் ஒவ்வொரு ஸ்லோகத்துக்கும் பூரித்து வெடிக்குமா போலே உகப்பான் அன்றோ)
பர்த்தாவின் தேகத்தை விரும்பின பதி வ்ரதைக்கு குற்றம் உண்டாகில் இறே -திவ்ய மங்கள விக்ரஹத்தை விரும்பின எனக்கு குற்றம் உண்டாவது -என்ன –
என்று தமக்கு ததீய விஷயத்தில் உண்டான ஊற்றத்தைச் சொல்ல
ஈஸ்வரன் திரு உள்ளமும் களித்து –
இவ் வாழ்வாருக்கு தோற்றோம் -என்று-
இவர் திறத்தில் மடல் எடுக்கும்படி யாயிற்று ஈஸ்வரன் திரு உள்ளம் –
(நடையாடும் ஜங்கம விமானம் -பகவானை உள்ளத்துக் கொண்டு உலாவும் பெருமாள் தானே ததீயர்)
———————————————————
வார்த்தை -341-
1-ஒரு தேச விசேஷத்து ஏறப் போய் அனுபவிக்கும் அநுபவம் சாத்மிக்கைக்காகாவும் –
2-உபகார ஸ்ம்ருதிக்காகவும் –
3பிரபத்தி பண்ணின போதே -பரம பதத்து ஏறப் போக்கில் –நச்சுப் பொய்கை என்று சம்சாரிகள் இத் துறையில் இழிவார் இல்லாமையாலும் –
4-இவன் சம்சாரிகளைத் திருத்த வேண்டுகையாலும் –
5-பிரபன்னனுடைய சரீரம் சரம சரீரம் ஆகையாலும் –
6-சர்வேஸ்வரனுக்கு அபிமதம் ஆகையாலும் -(சரம விமல திருமேனி -த்யாஜ்ய தேஹ வ்யாமோஹம் -மங்க ஒட்டி மா மாயை என்று பிரார்த்திக்க வேண்டுமே)
7-இத் தேசத்தில் பகவத் அனுபவம் தான் இவனுக்கு அபூர்வம் ஆகையாலும் -(அச்சுவை பெறினும் வேண்டேன் -திருவாறன்விளை உத்தேச்யம் அவன் உபாயம் என்றும் இருப்பார்கள் அன்றோ)
8-ஆசை கிளரவும் – 9-இவன் தன் இசைவாலும்(மன்னவராய் உலகாண்டு மீண்டும் வானவர் உலகம் எய்வாரே) இவ் வர்தங்களைப் பற்ற வாய்த்து சரீர அவசாநத்திலே மோஷம் ஆகைக்கு அடி -)மரணமால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்)
————————————————————-
வார்த்தை -342-
கழிந்த நாளைக்கு அநுதபிக்கையும்
வருகிற காலத்தை பழுது போக்காமையும் -காண்
வைஷ்ணத்வம் ஆகிறது -என்று நம்பிள்ளை –
பழுதே பலகாலும் போயின என்று அஞ்சி அழுதேன் -முதல் திருவந்தாதி -16
அன்று நான் பிறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-
பிறந்த பின் மறந்திலேன் -திருச்சந்த விருத்தம் -64-.
அரவணை மேல் கண்டு தொழுதேன் -முதல் திருவந்தாதி -16
———————————————————
வார்த்தை -343-
நம்பிள்ளை நஞ்சீயரை -தான் தனக்கு வைஷ்ணத்வம் உண்டு என்று அறியலாவது எவ் வவஸ்தை பிறந்தால் -என்ன –
அர்ச்சாவதாரதுக்கு உயிர் உண்டு என்று நெஞ்சில் பட்ட வன்றும் –
ஒரு வைஷ்ணவன் பக்கல் புத்ராதிகள் பக்கல் ஸ்நேஹத்தளவாகிலும் ஸ்நேஹம் பிறந்த வன்றும் –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் கடுத்து வார்த்தை சொன்னால் தன் நெஞ்சில் சிவிட்குத் தட்டாமல் –(கோபம் கொள்ளாமல்) -போக ரூபமான வன்றும் –
பர தார பர த்ரவ்யங்களில் நசை யற்ற வன்றும் –
ஏகாந்தி என்று அறியலாம் –
ஸ்வ தார ஸ்வ த்ரவ்யங்களில் நசை யற்ற வன்று பரமை காந்தி என்று
அறியலாம் என்று அருளிச் செய்தார் -(நாராயணாய பதார்த்தம் அநந்ய போக்யத்வம் வேண்டுமே )
————————————————————-
வார்த்தை -344-
பொன்னாய்ச்சியார் வார்த்தை –
பாண்டிய மண்டலத்திலே ஒரு வைஷ்ணவனுடைய வைஷ்ணவத்தைக் கொண்டாட
எழுதி அணிந்த வைஷ்ணவத்வமோ -எல்லை நிலத்தில் வைஷ்ணவத்வமோ -என்று –
(நாம ரூப மாத்திரமே இல்லாமல் ததீயர் வரை செல்ல வேண்டுமே)
———————————————————-
வார்த்தை -345-
பட்டர் தம்முடைய ஸ்ரீ பாதத்தில் சேவிப்பார் ஒரு வைஷ்ணவரை –
நீர் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்திலே சென்று ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி
என் -என்று கேட்டு வாரும் என்ன –
அவரும் அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் செல்ல –
அன்று பல ஸ்ரீ வைஷ்ணவர்கள் அங்கே அமுது செய்து அருள –
அவரும் இடம் பெறாமையாலே ஸ்ரீ வைஷ்ணவர்கள் அமுது செய்யும் அளவும் பேசாதே இருக்க –
அனந்தாழ்வானும் அவரைப் பார்த்து –
அமுது செய்து அருளிற்று இல்லையே -நெடும் போதுண்டே இளைப்போடே நிற்கிறது
என்று -அனந்தாழ்வான் தாமும் அவருமாக உள்ளே அமுது செய்து அருளி -பின்னை
எங்கு நின்றும் எழுந்து அருளுகிறது -என்ன –
பட்டர் -அனந்தாழ்வான் ஸ்ரீ பாதத்தில் சென்று
ஸ்ரீ வைஷ்ணவ லஷணம் இருக்கும்படி என்னென்று கேட்டு வா என்று அருளிச் செய்து விட்டார் -என்ன –
ஆகில் –
கொக்குப் போலே இருக்கும் -கோழி போலே இருக்கும்–உப்பு போலே இருக்கும் – உம்மைப் போலே இருக்கும் என்றும் விண்ணப்பம் செய்யும் என்றும் அருளிச் செய்தருளினார்
(ஓடு மீன் ஓடி உறு மீன் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கு -அதே போல் நீர் வண்ணனிடம் அசார அல்ப சார சார சார தரங்களை உபேக்ஷித்து சார தமமான பாகவதர்கள் உகந்த கைங்கர்யமே பரம புருஷார்த்தம் என்று இருப்பார்கள் -கோழி குப்பையைக் கிளறிக் கிளறி நெல் மணியைக் கொள்ளுமா போலே ஸாஸ்த்ரார்த்தங்களை ஆராய்ந்து ஆச்சார்ய அபிமான நிஷ்டையில் ஒதுங்குவார்கள் -உப்பு மறைந்து இருந்து பதார்த்தங்களை போக்யமாக்குவது போல் –பாண்டித்யம் நிர்வித்ய பால்யே ந திஷ்டாஸேத்-பாண்டித்யத்தை மறைந்து குழந்தை போல் கூட்டத்துக்கு போக்யமாக இருப்பார்கள் –இம் மூன்று லக்ஷணங்களும் பரிபூர்ணமாக நிறைந்த உம்மைப் போலே இருப்பர்)
—————————————————————
வார்த்தை -346-
பர ஸம்ருத்தி அஸஹத்வம் –
பர ஸம்ருத்தி ஸஹத்வம்-
பர ஸம்ருத்தி ஸ்வ ஸம்ருத்தி ப்ரயோஜநத்வம்-
பர ஸம்ருத்தி ஏக ப்ரயோஜநத்வம்-
(நான்கு வித அதிகாரிகள் -மேல் மேல் உயர்ந்தவர்கள் -1–பிறர் மினுக்கும் பொறாமை-பிறர் பெருமை பெறாதவர்கள் -2-பிறர் பெருமை பொறுப்பவர்கள் -3 பிறர் பெருமை தங்களுக்கு பயனாக கொள்பவர்கள் -4- பிறர் பெருமையையும் தம் பெருமையையும் பயனாக கொள்ளாமல் பிறர் பெருமையையே பயனாகக் கொள்பவர்கள்)
(தென்னரங்கர் சீர் அருளுக்கு இலக்காகப் பெற்றோம்
திருவரங்கம் திருப்பதியே இருப்பாகப் பெற்றோம்
மன்னிய சீர் மாறன் கலை உணவாகப் பெற்றோம்
மதுரகவி சொற்படியே நிலையாகப் பெற்றோம்
முன்னவராம் நம் குரவர் மொழிகள் உள்ளப் பெற்றோம்
முழுதும் நமக்கு அவை பொழுது போக்காகப் பெற்றோம்
பின்னை ஒன்று தனில் நெஞ்சு பேராமல் பெற்றோம்
பிறர் மினுக்கம் பொறாமை இல்லாப் பெருமையும் பெற்றோமே–55-)
————————————————————–
வார்த்தை -347-
ஸ்ரீ வைஷ்ணவன் ஆகிறான் சம்சாரத்தில் நசை யற்று -பரம பதத்திலே
ஆசை பிறந்தவன் -இவனுக்கு பரிஹரிக்க வேண்டுவது என் என்னில் –
உடம்பில் ருசி விளையாது ஒழிகையும்
உறவு முறையார் பக்கல் ஆசை வளராது ஒழிகையும் –
உடம்படியாக உகக்கும் அவர்களோடு உறவு கொண்டாடாது ஒழிகையும் –
லோகம் சிலுகிடாமல் ஒதுங்கி வர்த்திக்கையும் –
உடம்புக்கு இரை தேடி ஒருவனுக்கு ஏவல் தொழிலை ஒருபடியாலும் செய்யாது ஒழிகையும் –
உள்ளத்துக்கு உள்ளே நிற்கும் ஒருவன் பக்கல் ஒருபடிப்பட்ட ருசி உண்டாய்ப் போரவும்-(உண்டியே உடையே என்று உகந்து இருக்கும் இம்மண்டலத்தோடே கூடாமையும் -புலன்களை அவன் பால் திருப்பியும்)
தலை அறுப்புண்டவனையும் தலை அறுத்து அத்தாலே சந்நிதியிலே தலையோடு ஏந்தினவனையும் -இவர்களுக்கு கீழான சந்திர ஆதித்யர்களையும் சரணம் என்று புகாது ஒழிகையும் –
இவர்களை சரீரம் ஆகவும் அடிமையாகவும் உடைய எம்பெருமான் பக்கல் ஆன அடிமை செய்து போரவும் –
எம்பெருமானே தஞ்சம் என்று சரணம் புக்கவர்களைத் தனக்குத் துணையாகவும்
உயிராகவும் நினைத்துப் போரவும் –
இவர்களோடு விளையாடியும் பொல்லாங்கு சொல்லாது ஒழியவும் –
இவர்களைப் பொல்லாங்கு சொல்லுவார் உடனே கூடினர் ஆகில் அவர்களை
வாயைக் கிழித்தல் -தான் செவியைப் புதைத்துக் கொண்டு கடக்கப் போதல் செய்யவும் –
வெறுப்பொடு சமணர் முண்டர் விதியில் சாக் கியர்கள் நின் பால்
பொறுப்பரி யனகள் பேசில் போவதே நோய தாகி
குறிப்பெனக் கடையு மாகில் கூடுமேல் தலையை ஆங்கே
அறுப்பதே கருமங் கண்டாய் அரங்கமா நகரு ளானே.-8-இது பகவத் விஷயத்தில் இங்கு பகவத் பக்தரான அடியவர்கள் விஷயத்தில்
எம்பெருமான் திரு வாசலுக்கு உள்ளேயே மயிர் விரித்தல் -உமிழ்தல்- கால் நீட்டுதல்
தொடக்கமானவை வருந்தியும் தவிரவும் –
ஆபத்துகளாலே புகுந்து ஒதுங்க வேண்டிற்று ஆகில் -அனர்த்தப் படா நின்றோமே -என்று அஞ்சிப் போரவும் –
இப்படிப்பட்ட போது போக்கு சம்சாரத்தில் இருக்கும் ஸ்ரீ வைஷ்ணவனுக்கு –
——————————————————————–
வார்த்தை -348-
பட்டரை ஒருவன் -தேவதாந்தரங்களை வைஷ்ணவர்கள் அனுவர்த்தியாது
ஒழிவான் என் -என்ன –
பிரமாண விரோதம் உள்ள இடத்தில் அன்றோ சந்தேஹம் உள்ளது -இங்கு சந்தேஹம் இல்லை காண் -என்று அருளிச் செய்தார் –
ஆவதென் என்ன –
சத்வ ப்ரசுரரை -ரஜஸ் தம பிரசுரர் அனுவர்த்திக்குமது ஒழிய
சத்வ ப்ரசுரர்- ரஜஸ் தம ப்ரசுரரை அனுவர்த்திக்கக் கடவதோ -என்று அருளிச் செய்தார் –
தேஷாமபி நமோ நம -என்கிறபடியாலே –
(யஸ் த்வைவம் ப்ரஹ்மணோ வித்யாத் தஸ்ய தேவா அஸந் வஸே -புருஷ ஸூக்தம்-2-5- எவன் பரம புருஷனான உன்னையே ப்ராப்யமாகவும் ப்ராபகமாகவும் அறிகிறானோ அவனுக்கு எல்லாமே தேவர்களுக்கும் வசப்பட்டு இருப்பார்கள் –
ஸர்வே அஸ்மை தேவா பலிமா வஹந்தி -சீஷா -5-எல்லா தேவர்களுக்கும் பகவத் பக்தனுக்கு கப்பம் கட்டுகிறார்கள்
தஸ்ய யஞ்ஞ வராஹஸ்ய விஷ்ணோர் அமித தேஜச பிரணாமாம் யே அபி குர்வந்தி தேஷாமபி நமோ நம -சாந்தி -46-130-அளவற்ற தேஜஸ்ஸை யுடையவனாய் யஞ்ஞ வராஹ ரூபியாய் அவதரித்த விஷ்ணுவுக்கு ஒரு நமஸ்காரம் செய்பவர்களுக்கு இடைவிடாமல் நமஸ்காரம் செய்து கொண்டே இருக்க வேண்டும் -என்று யமன் கூறினான் -)
(ஆழி மழைக் கண்ணா –இவர்களை வர்ஷ தேவதை-அடியேனுக்கு ஒரு கிஞ்சித் காரம் நியமித்து அருள வேணும்-என்று பிரார்த்திக்க- இவர்கள் அவனுக்கு கைங்கர்யம் நியமித்த படியைச் சொல்லுகிறது –-ஆழ்வானை ஒரு பட்டன் -தேவதாந்த்ரங்களை நீங்கள் கண்டால் பண்ணும் ஆசாரம் என் -என்று கேட்க சாஸ்த்ர விரோதமாகக் கேளாதே கொள்ளாய் – தேவதாந்த்ரங்கள் உங்களைக் கண்டால் பண்ணும் ஆசாரம் என் என்று கேளாய் -என்றார்-தேவதாந்தர ஸ்பர்ச ரஹிதராய்-இப்படி அநந்ய பிரயோஜனராய்-பகவத் ஏக பிரவணராய்- பகவத் அனுபவ உபகரணமானவற்றிலே இழிந்தவர்களுக்கு அந்த தேவதாந்தரங்களும் ஏவல் செய்யும் என்னும் இடம் சொல்லிற்று-)
————————————————————————–
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .