அல்லல்இல் இன்பம் அளவுஇறந்து எங்கும்
அழகுஅமர் சூழ்ஒளியன்
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
ஆகியும் நிற்கும்அம்மான்
எல்லைஇல் ஞானத்தன் ஞானம்அஃ தேகொண்டு
எல்லாக்கரு மங்களும்செய்
எல்லைஇல் மாயனைக் கண்ணனைத் தாள்பற்றி
யான்ஓர்துக் கம்இலனே.
பொ-ரை : ‘துன்பம் இல்லாத இன்பத்திற்கு அளவு இல்லாமல் எல்லா இடங்களிலும் பொருந்திய அழகும் எல்லா இடங்களிலும் சூழ்ந்த ஒளியும் உடையவனும், அக இதழ்களையுடைய தாமரைப்பூவில் வீற்றிருக்கின்ற பெரிய பிராட்டியின் சேர்க்கையால் உண்டான ஆனந்தங்களையுடையனாய் நிற்கின்ற தலைவனும், முடிவு இல்லாத ஞானத்தை உடையவனும், அந்த ஞானத்தினால் படைத்தல் முதலான எல்லாக் காரியங்களையும் செய்கின்ற, எல்லை இல்லாத ஆச்சரியமான குணங்களையும் செயல்களையுமுடையவனும், கண்ணபிரானாய் வந்து அவதரித்தவனும் ஆன எம்பெருமானுடைய திருவடிகளைப் பற்றி, யான் ஒரு துக்கமும் இலேன்,’ என்கிறார்.
வி-கு : ‘இறந்து அமர் ஒளியன்’ எனக் கூட்டுக. ‘செய் மாய்’ என்க.ஈடு : எட்டாம் பாட்டு. 1நித்திய விபூதியை அனுபவித்துக் கொண்டிருக்கிற மேன்மையையுடையவன் உலகினைக் காக்கும் நீர்மையினை நினைக்கப் பெற்ற எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.
அல்லல் இல் இன்பம் அளவு இறந்து – சுவர்க்கம் முதலான உலகங்களிற்போன்று துக்கம் கலந்ததாய் அளவுக்கு உட்பட்ட தாய் இராமல், துக்கத்தின் வாசனை சிறிதும் இல்லததாய் இன்பத்திற்கே நிலைக்களனாய் அளவிடப்படாததான ஆனந்தத்தை உடையவன். 2எங்கும் அமர் அழகன் – மோக்ஷ உலகம் முழுவதும் வெள்ளமிடும் காந்தியையுடையவன். எங்கும் சூழ் ஒளியன் – திருமேனி எங்கும் ஒக்கப் பரந்து நிறைந்து அலை எறியும்படியான இலாவண்யத்தையுடையவன். அன்றிக்கே, ‘அழகு என்று அவயவ சோபையாய், சூழ் ஒளி என்பது சமுதாய சோபையைச் சொல்லுகிறது,’ என்னலுமாம். அன்றிக்கே, ‘எங்கும் அழகு அமர் – பாதம் முதல் முடி வரையில் அவயவங்களைத் தனித்துப் பார்த்தால் ‘இங்கே அழகு குடி கொண்டது, இங்கு அழகு குடி கொண்டது,’ என்னும்படி பாதாதிகேசம் பழிப்பு அன்று, சூழ் ஒளியன் – மோக்ஷ உலகம் அடங்கலும் காநதியின் நிறைவினாலே வெள்ளமிடாநிற்பவன்,’ என்னுதல்.
அல்லி மலர் மகள் போக மயக்குகள் – 3இதனால், இவ்வழகு காட்டில் எறித்த நிலவு ஆகாதபடி நெஞ்சோடே அனுபவ்விப்பாரைச் சொல்லுகிறது. மலரில் வாசனை வடிவு கொண்டு இருப்பதைப் போன்று தனக்குமேல் ஓர் இனிய பொருள் இல்லாதவளான பெரிய பிராட்டியுடைய சேர்க்கையாலே பிறந்த ஆச்சரியமான ஆனந்தத்தையுடையனான சர்வேசுவரன் மயக்குகள் – ஆனந்தங்கள். மயங்கள் – கூடல், கலத்தல்.
ஆகியும் நிற்கும் – 1தன்னுடைய ஆனந்தத்துக்கு மேலே திருமகள் கேள்வனாய் இருக்கும் தன்மையால் வந்த ஆனந்தத்தையுடையனாய் இருக்கும். அம்மான் – 2ஆனந்தமயனாய் திருமகள் கேள்வனாய் இருக்குமவன் அன்றோ சர்வேசுவரன்?
எல்லை இல் ஞானத்தன் – 3‘மநஸ்வீ – அவளிடத்தில் சென்ற மனத்தை உடையவன்’ என்னுமாறு போன்று, பிரணய தாரையில் அவளுக்கும் 4யானைக்குக் குதிரை வைக்க வல்ல ஞானத்தின் மேம்பாட்டை உடையவன். ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய் – 5தானும் அவளுமான சேர்த்தியிற்பிறந்த வெளிச்சிறப்பையே வேறு துணையை வேண்டியிராதே கருவியாகக் கொண்டு, இக்காரியங்களின் கூட்டத்தை எல்லாம் உண்டாக்குகிறவன். 6‘யாதொரு பிராட்டியினுடைய முகத்தை நோக்கிக் கொண்டு அம்முகக் குறிப்பில் பரவசப்பட்டவனாய், படைத்தல் முதலான எல்லாத் தொழில்களையும் செய்கிறானோ, அவன்’ என்றார் அன்றோ பட்டரும்? இம்முகத்தாலே அன்றோ 7பஹூஸ்
யாம் – பல பொருள்கள் ஆகக்கடவேன்’ என்பது? மற்றை எல்லார்க்கும், விஷயங்களினுடைய சேர்க்கை ஞானக் கேட்டினையும் வலிமைக் குறைவினையும் உருவத்தில் அழகு இன்மையினையும் செய்விக்கும்; பிராட்டியினுடைய சம்பந்தம் அவற்றுக்கு எதிர்த்தட்டாய் இருக்குமாதலின், ‘ஞானம் அஃதே கொண்டு எல்லாக் கருமங்களும் செய்’ என்கிறார்.
எல்லை இல் மாயனை – நினைவின் உருவமான ஞானத்தாலே படைத்தல் முதலிய காரியங்களைச் செய்ய வல்ல ஆச்சரியமான சத்திகளோடு கூடியவனை. ‘இப்படிப்பட்டவன் யார்?’ என்னில், கண்ணனை – கிருஷ்ணனை. ‘ஆயின், கிருஷ்ணனுக்குப் படைத்தல் முதலான தொழில்கள் உண்டோ?’ எனின், 1‘உலகங்களினுடைய உற்பத்தியும் கிருஷ்ணனேயாவன்; உலகங்கள் பிரளயத்தால் அழிவதும் கிருஷ்ணனேயாவன்,’ என்பது பாரதம். கண்ணனைத் தாள் பற்றி யான் ஓர் துக்கம் இலனே-பிராட்டி சந்நிதியும் உண்டாய், அவள் புருஷகாரமாக வேறு துணைக்காரணம் வேண்டாமலே நம் காரியம் செய்யுமவனுமாய், 2‘இந்தப் பரமாத்துமா தானே சந்தோஷிப்பிக்கிறான்’ என்கிறபடியே, ‘ஆனந்தத்தை உடையவனைப் பற்றின எனக்கு ஒரு துக்கம் இல்லை,’ என்கிறார்.
நித்ய விபூதியை அனுபவிக்கும் மேன்மை உடையவன்
ஜகத் ரஷணம் செய்யும் நீர்மையை அனுபவிக்க பெற்ற எனக்கு துன்பம் ஒன்றும் இல்லை
அல்லலில் இன்பம் -துக்கமே கலக்காத இன்பம்
துக்க கந்த ரஹீதமாய் –
ஸ்வர்க்காதி போலே அன்றிக்கே –
பரிச்சினம் அளவு பட்டவை இவை –
எங்கும் அழகன் -காந்தி எங்கும் பரவி
அழகு அவயவ சோபை -சௌந்தர்யம்
எழில் லாவண்யம் மொத்த அழகு –
சமமாக ஒரே மாதிரி அழகு அனைத்தும்
சூழ் ஒளி -சமுதாய சோபை
எங்கும் அழகன் சூழ் ஒளி -பாதாதி கேசம் ஒவ் ஒன்றும் அழகு
த்ரிபாத் விபூதி முழுவதும் காந்தி வெள்ளம்
அல்லி மலர்மகள் போக மயக்குகள்
அழகு காட்டில் எரித்த நிலா போலே இன்றிக்கே
நெஞ்சோடு அனுபவிப்பாரை சொல்கிறது
மயக்குகள் ஆனந்தம்
ஸ்ரீ ய பதித்தவ ஆனந்தம்
அம்மான்
நிற்கும்
எல்லையில் ஞானந்தன் –
சீதா பிராட்டி உடன் கூடி இருந்த பெருமாள் -மஹந்தி -தஸ்ய -அவளை விட –
யானைக்கு குதிரை வைத்தால் போலே
போக மயக்கில் இருந்தாலும் எல்லையில் ஞானம் கொண்டவன்
சஹாயாந்தர நிரபெஷமான ஞானம்
பிராட்டி முகம் -தஸ் இங்கித பராதீனக -குறிப்பை அறிந்து
சிருஷ்டித்து இம்முகத்தாலே பஹுசயாம் –
கர்மம் அடியாக ஸ்ருஷ்டி -அதற்க்கு மேல் இவள் புருவ நெறிப்பு காரணம்
ஈச ஈசிதவ்ய உயர்வும் தாழ்வும் பிறவி அடைகிறார்கள்
ஈசனும் இத்தாலே
ஈசிதவ்யரும் இத்தாலே –
எப்படி பொருந்த விடுவது -கர்மம் அடி தான் ஸ்ருஷ்டித்து –
புண்யம் செய்பவன் -கண்டு ஆச்சர்யம் கொண்டு புருவம் தூக்க
அடுத்தவன் -பாபமே செய்ததால் புருவம் சுருங்கி -தாழ்ந்த பிறவி
இத்தால் இரண்டும் பொருந்தும்
சம தீர்த்தம் அண்ணன்கார் பட்டர் ஸ்ரீ ரெங்கத்தில் -கோயில் அண்ணன் வம்சம்
பட்டர் வம்சம் இருவரும் ஒருவர் கை பார்த்து கொடுப்பது போலே
விஷயம் -ஞான ஹானி தன ஹானி சரீர ஹானி
பகவத் விஷயம் பிராட்டி கலவி ஞானம் வ்ருத் தியாகுமே
ஆத்ம மாயயா -ஆசார்யம் செப்பிடு வித்தை சங்கரர் வியாக்யானம்
எம்பெருமானார் ஆத்மா ஞானேன சங்கல்பத்தால்
இது கொண்டு சூத்ரம் ஒருங்க விட்டார் எல்லையில் மாயன்
கிருஷ்ணன் -இப்படிப் பட்டவன் -தாள் பற்றி
பிராட்டி சந்நிதியும் உண்டாய்
புருஷகாரம் செய்து நமது கார்யம் செய்விக்கும்
தானும் ஆனந்தித்து நம்மையும் ஆனந்தப்படுத்தி
குறை இல்லையே இத்தால்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply