நான்காம் பத்து
முதல் திருவாய்மொழி – ‘ஒரு நாயகம்’
முன்னுரை
ஈடு : முதற்பத்தால், 1பகவத் கைங்கர்யம் புருஷார்த்தம் என்று அறுதியிட்டார்; இரண்டாம் பத்தால், அந்தக் கைங்கர்யத்தில் களை அறுத்தார்; மூன்றாம் பத்தால், களை அறுக்கப்பட்ட அந்தக் கைங்கர்யமானது 2பாகவத சேஷத்வ பர்யந்தமான பகவத் கைங்கர்யம் என்றார்; இப்படிப்பட்ட கைங்கர்யத்திற்கு விரோதிகள் ஐஸ்வர்ய 3கைவல்யங்கள் என்கிறார் இந்த நான்காம் பத்தால்.
முதல் மூன்று பத்துகளாலும் 4துவயத்தில் பின் வாக்கியத்தின்பொருளை அருளிச்செய்தார்; இனி, 1மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே அதில் முன் வாக்கியத்தின் பொருளை அருளிச்செய்கிறார். முதல் மூன்று பத்துகளாலும் சொன்ன புருஷார்த்தத்துக்கு உரிய உபாயத்தை 2அடியிலே அறுதியிடுகிறார். 3இவ்வடி அறியாதாரே அன்றோ வேறு உபாயங்களாகிற விலக்கடிகளில் செல்லுகின்றவர்கள்? 4நிரவதிகப் பிரீதியோடேயன்றோ, மேல், திருவாய்மொழியை இவர் அருளிச்செய்தது? தாமும் குறைவற்று, பற்றினார் குறைகளையும் தீர்க்க வல்லவராம்படி இருந்தார் மேல். சமுசாரிகளைப் பார்த்து, ‘நீங்கள் பற்றின விஷயங்கள் 1தண்ணியவான பின்பு அவற்றைவிட்டுத் திருமகள் கேள்வனைப் பற்றுங்கோள்’ என்று பரோபதேசத்தில் இழிகிறார் இத்திருவாய்மொழியில்.
‘நன்று; ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்; ‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியிலும் பரோபதேசம் செய்தார்; இந்தத் திருவாய்மொழியும் பரோபதேசமாய் இருக்கின்றது; இவற்றிற்குக் கருத்து ஏன்?’ எனின், இவை எல்லாவற்றிலும் எல்லா அர்த்தங்களும் உளவேயாகிலும் ஒவ்வொன்று ஒவ்வோர் அர்த்தத்தில் நோக்காய் இருக்கும். ‘யாங்ஙனம்?’ எனில், ‘வீடுமின் முற்றவும்’ என்ற திருவாய்மொழியில் ‘இதர விஷய வைராக்கியம் முன்னாகப் பகவத் பத்தியைச் செய்யுங்கோள்’ என்றார்; ‘சொன்னால் விரோதம்’ என்ற திருவாய்மொழியில் ‘பகவானைத் துதிப்பதற்குத் தக்கனவான உறுப்புகளைக்கொண்டு பிறரைத் துதி செய்யாமல் சர்வேசுவரனைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்றார்; இத்திருவாய்மொழியில் ‘இவர்கள் தாம் பிறரைத் துதி செய்வது சில பிரயோஜனத்திற்காகவே அன்றோ?’ என்று அவற்றினுடைய சிறுமை, நிலையின்மை முதலிய தோஷங்களின் மிகுதியை அருளிச்செய்கிறார்.
செல்வம் அற்பமானது, நிலையாதது முதலிய குற்றங்களையுடையதாகையாலே தண்ணிது; ஆத்துமலாபமாகிய கைவல்யம் நிலைத்து நிற்பதாயினும், புருஷார்த்தம் அல்லாதது ஆகையாலே, தண்ணிது; இப்படி ஐஸ்வரிய கைவல்யங்களுக்கு உண்டான தண்மையைச் சொல்லி, ‘சர்வேசுவரன் ஆகிறான் மங்களம் பொருந்திய எல்லா நற்குணங்களையும் உடையவனாய் விரும்பினவை அனைத்தையும் கொடுக்கக் கூடியவனாய் இருப்பான் ஒருவன்; ஆனபின்பு அவற்றை விட்டுப் பகவானைத் துதி செய்யப் பாருங்கோள்’ என்று இங்ஙனே பகவானைப் பற்றுவதற்கு உண்டான நன்மையை விளக்கிப் பேசாநின்றுகொண்டு பரோபதேசம் செய்ய இழிகிறார்.
2இவர் தாம், மக்கள் இந்திரியங்களை வென்றவர்களாய் வந்து நின்றுகொண்டு, ‘எங்களுக்கு நலத்தை உபதேசிக்க வேண்டும்’ என்று கேட்க, உபதேசிக்கிறார் அன்றே? பிராட்டியும் ஸ்ரீ விபீஷணாழ்வானும் இராவணனை நோக்கி நலத்தைக் கூறினாற்போன்று இருப்பது ஒன்றேயன்றோ இவருடைய பரோபதேசம்? 1‘எல்லா ஆத்துமாக்களையும் கவரக்கூடியதான காலபாசத்தினால் கட்டு உண்டவனும் நாசத்தை அடைகின்றவனுமான இராவணனை – பற்றி எரிகின்ற வீட்டினைப் போன்று – உபேக்ஷை செய்யமாட்டேன்’ என்பது ஸ்ரீ விபீஷணாழ்வான் வார்த்தை. ‘என்றது, என் சொல்லியவாறோ?’ எனின், ‘வெந்து அற்ற வீட்டிலே ‘ஒரு கம்பாகிலும் கிடைக்குமோ?’ என்று அவிக்கப் பார்ப்பாரைப் போன்று, நானும் நலத்தைக் கூறுவேன்’ என்கிறார் என்பது.
ஒருநா யகமாய் ஓட உலகுஉடன் ஆண்டவர்
கருநாய் கவர்ந்த காலர் சிதைகிய பானையர்
பெருநாடு காண இம்மையிலே பிச்சைதாம் கொள்வர்2
திருநா ரணன்தாள் காலம்பெறச் சிந்தித் துய்ம்மினோ.
பொழிப்புரை : ‘ஒற்றை வெண்கொற்றக்குடையின் நிழலிலே தன் ஆணையானது தடையின்றிச் செல்லும்படி உலகத்தை எல்லாம்
ஒருசேர ஆண்ட சக்கரவர்த்திகள், கரிய நாயால் கவ்வப்பட்ட காலையுடையவர்களாய் உடைந்த பானையை உடையவர்களாய்ப் பெரிய நாட்டிலேயுள்ள மக்கள் எல்லாரும் காணும்படியாக இப்பிறவியிலேயே இரந்து உண்ணும் தொழிலைத் தாங்களே மேற்கொள்வார்கள்; ஆதலால், திருமகள் கேள்வனான நாராயணனுடைய திருவடிகளைக் காலம் நீட்டிக்காமல் (மிக விரைவில் என்றபடி) மனத்தால் நினைத்து உஜ்ஜீவிக்கப் பாருங்கோள்,’ என்கிறார்.
விசேடக்குறிப்பு : நாயகம் – முதன்மை. ‘ஆக ஓட ஆண்டவர்’ என்க. ‘ஆண்டவர் கொள்வர்’ எனக் கூட்டுக. ‘காலர், பானையர்’ என்பன, முற்றெச்சங்கள். ‘கவர்ந்த’ என்பது ஈண்டுச் செயப்பாட்டு வினையின்கண் வந்தது.
இத்திருவாய்மொழி, கலிநிலைத்துறை.
ஈடு : முதற்பாட்டில், 1‘சார்வபௌமராய்ப் போந்தஇராசாக்கள் அந்த இராச்சிய ஸ்ரீயை இழந்து இரந்து உயிர் வாழ வேண்டும்படி வறியர் ஆவார்கள்; ஆன பின்பு, 2‘ஸ்ரீவத்ஸவக்ஷா நித்யஸ்ரீ – ஸ்ரீவத்சத்தை மார்பிலேயுடையவன், நித்தியமான ஸ்ரீயையுடையவன்’ என்கிறபடியே, அழியாத செல்வமான ‘சர்வேசுவரனைப் பற்றப் பாருங்கோள்,’ என்கிறார்.
ஒரு நாயகமாய் – தனி அரசாக. 3‘உலகங்கட்கு எல்லாம் தலைவன்’ எனப்படுகின்ற சர்வேசுவரனுடைய ஐஸ்வரியத்தைப் 4பௌண்ட்ரகவாசுதேவன் பின்பற்றினாற் போலே பின் பற்றுகிறவாற்றைத் தெரிவித்தபடி. நிலை
நில்லாத ஐஸ்வரியத்தைப் பற்றி 1நீர்க்குமிழி போலே உடைந்து போகின்ற மனிதர்களாதலின், ‘நாயகம் ஆய்’ என்கிறார். ஓட – ‘இப்படி ஆளுவது எத்துணைக்காலம்?’ என்றால், நெடுங்காலம். என்றது, ‘அறுபதினாயிரம் யாண்டு’ என்கிறபடியே நெடுக என்றபடி. ‘இப்படி நெடுங்காலம் ஆள்வது எவ்வளவு?’ என்னில், உலகு – கடல் சூழ்ந்த பூமிப்பரப்பு அடங்கலும்; 2‘எங்கிருந்து சூரியன் உதிக்கின்றானோ, எங்கு மறைகின்றானோ, அதற்கு இடைப்பட்ட பூமி முழுதும் யுவநாஸ்வனுடைய புதல்வனான மாந்தாதா என்ற அரசனுடைய பூமி என்று சொல்லப்படுகிறது,’ என்கிறபடியே, 3முந்திரிகை நிலம் உடையவனைப் போலே ஆயிற்று ஆள்வது. உடன் ஆண்டவர் – இந்தப் பூமிப்பரப்பில் ஓர் இடம் குறை கிடவாதபடி ஆண்டவர் என்னுதல். அன்றிக்கே, 4‘பாப காரியங்களை நினைத்தவர் முன்பே கையும் வில்லுமாய் நின்று நோக்கிக்கொண்டு போந்த கார்த்தவீரியார்ச்சுனனைப் போன்று ஆண்டவர்கள்’ என்னுதல்.
‘இப்படிச் சக்கரவர்த்திகளாய் இருந்துகொண்டு தனி அரசாக நெடுநாள் உலகத்தை ஆண்டு போந்தவர்கள் பின்னை என் செய்வார்கள்?’ என்னில், 5‘இராச்சியம் என்பது, வைத்யம் செய்யமுடியாததும் நாசத்தை விளைவிப்பதுமான பெரியது ஒரு நோய்; அதன்பொருட்டு அரசர்கள் சகோதரனையும் பிள்ளையையும் விடுகிறார்கள் அல்லவா?’ என்கிறபடியே, அவற்றை இழந்து வருந்துவார்கள் என்கிறார் மேல்: கருநாய் கவர்ந்த காலர் – ‘இப்படி நெடுநாள் மதிப்போடே வாழ்ந்து போந்தவன் எளிமைப்பட்டு வாழ்கிறது
என்?’ ‘ஒரு பட்டினி விடுவோம்’ என்று இருக்க மாட்டானே! வாழ்க்கையில் உண்டான நசையாலே பிக்ஷை எடுப்பதற்குப் பார்ப்பான்; முன்பு குறைவற வாழ்ந்துபோந்தவன் ஆகையாலே, பலர் காண வெளியில் புறப்படமாட்டானே! நிலா நாளிலே 1இருட்டுப் புரைகளிலும் இருட்டுநாளிலும் ஆயிற்றுப் புறப்படுவது; இருள் ஓர் இடத்திலே திரண்டாற்போலே கறுத்த நாய்கள் கிடக்கும்; அதனை அறியாதே அவற்றின் வாயிலே காலை இடும்; அவை கடிக்கும். அன்றிக்கே, கருநாய் என்பதற்கு, கருமை – 2சீற்றமாய், வெட்டிய நாய் என்னுதல். அன்றிக்கே, கரு நாய் – கருவையுடைத்தான நாய் என்னுதல்; என்றது, குட்டி இட்ட நாய், என்றும் குட்டியைக் காத்துக்கொண்டு கிடக்குமாகையாலே, ‘அதற்கு ஏதேனும் தீங்கு வருகிறதோ!’ என்று கண்டாரை ஓடிக் கடிக்குமே அன்றோ? அதனைச் சொல்லுகிறது என்றபடி. காலர் – ‘வீரக் கழல் இட்ட கால்’ என்றே அன்றோ முன்னர்ச் சொல்லிப்போருவது? இப்போது, ‘நாய் கடித்த காலர்’ என்றாயிற்றுச் சொல்வது என்பார், ‘நாய் கவர்ந்த காலர்’ என்கிறார். சிதைகிய பானையர் – கண்ட இடம் எங்கும் பொளிந்து உபயோகித்தற்குத் தகுதியின்றிக்கே போகட்டுக் கிடந்தது ஒன்றனை எடுத்துக்கொள்ளும். இட்டது உண்டாகில் ஒரு மூலையிலே கீழே போம்படி ஆயிற்று இருப்பது என்பார், ‘சிதைகிய’ என்றும், ‘முன்பு பொற்கலத்திலே உண்டு வாழ்ந்தவனுக்கு இப்போது ஒரு புத்தோடு கிடையாதபடியாயிற்று’ என்பார், ‘சிதைகிய பானையர்’ என்றும் அருளிச்செய்கிறார்.
பெரு நாடு காண – 3முன்பு பச்சை கொண்டு வந்தவர்கள் ஓர் யாண்டு ஆறு மாதங்களும் உள்ளும் புகப்பெறாதே நின்று உலரும் இத்தனை அன்றோ? அதற்கும் போர
இப்போது தடை அற்று இருந்ததே குடியாகக் காணும்படியாக, அன்றிக்கே, முன்பு போர வாழ்ந்து எளிமைப்பட்டவன் ஆகையாலே எல்லாரும் காண வருவர்கள் ஆதலின், ‘பெரு நாடு காண’ என்கிறார் என்னுதல். ‘இப்படிச் செய்வது ஒரு பிறவியில் வாழ்ந்து மற்றொரு பிறவியிலேயோ?’ என்னில், இம்மையிலே – அப்படி வாழ்ந்த இந்தப் பிறவியிலே. பிச்சை – 1முன்பு அரசர்களுக்கு இராச்சியம் வழங்கினானாய் அன்றோ போந்தது? இப்போது ஒரு பிச்சை மாத்திரமேயாயிற்று இவன் விரும்புவது. 2முன்பு இராசாக்கள் கொண்டு வந்த பச்சையை, சிலர் இடத் தாம் கொண்டார் என்பது ஆகாமைக்கு ஆள் வைத்தே அன்றோ வாங்குவது? இப்போது தாமே கொள்வர். அன்றிக்கே. இடுகின்றவர்கள் பக்கல் நினைவு இன்றிக்கே, தம் விருப்பம் மாத்திரமே உள்ளது என்பார், ‘தாம்கொள்வர்’ என்கிறார் என்னுதல்.
இராச்சியத் திரு இங்ஙனேயான பின்பு, திருநாரணன் தாள் காலம் பெறச் சிந்தித்து உய்ம்மினோ – ‘ஸ்ரீமானான நாராயணன் திருவடிகளை அடைந்து உய்வு பெற்றுப் போருங்கோள்,’ 3‘இடர் கெடுத்த திருவாளன்இணை அடி’ என்றும், 1‘அங்கு ஸ்ரீமந் நாராயணனிடத்தில் நான் பிச்சையை யாசித்தேன்,’ என்றும் வருகின்ற பிரமாணங்களைக் காணல் தகும். இதனால், 2ஓடு கொண்டு இரப்பார்க்கு எல்லாம் இவனை ஒழியக்கதி இல்லை என்பது போதரும்; 3‘ஓட்டு ஊண் ஒழித்தவன்’ அன்றோ? தாள் – 4‘பிள்ளாய்! உன் உள்வெதுப்பு ஆறுவது எப்போது?’ என்ன, ‘நானும் எனக்கு வகுத்த முடி சூடி அவரும் தமக்கு வகுத்த முடி சூடின அன்றே,’ என்றான் அன்றோ ஸ்ரீ பரதாழ்வான்? அப்படித் 5தலையாகப் பிரார்த்திக்கப்பட்ட திருவடிகளை 6‘அடி சூடும் அரசு’ என்னக் கடவது அன்றோ? காலம் பெற – அரை நாழிகையாகிலும் முற்பட்டது உடலாக; 7‘வாழ்வு சாதலை முடிவாக உடையது; உருவம் யௌவனம் இவைகள் முதுமையை முடிவாக உடையன; செல்வம் நாசத்தை முடிவாக உடையது,’ என்னும் இவற்றை அறிந்த எவன்தான் தைரியத்தை அடைவான்?’ என்ப ஆதலின், நாளைச் செய்கிறோம் என்னுமது அன்று என்பார், ‘காலம் பெற’ என்கிறார். அன்றிக்கே, 8‘ஒரு முகூர்த்த காலமாவது ஒரு கணநேரமாவது வாசுதேவனை நினைக்கவில்லை என்பது யாது ஒன்று உண்டு? அதுவே, இவனுக்கு ‘அஸந்நேவபவதி – இல்லாதவன் ஆகிறான்’ என்னும்படி வருகிற கேடு ஆகிறது; கேடு வருகைக்கு
அவகாசமும் அதுவே; திரிபு உணர்ச்சி ஆகிறதும் அதுவே; விலக்கப்பட்ட ஒழுக்கம் ஆகிறதும் ஆதுவே,’ என்ப ஆதலின், ‘காலம் பெற’ என்கிறார் என்னலுமாம்.
சிந்தித்து – “இனி வழி இல்லை’ என்று கண்ணழிவு சொல்ல வேண்டா; அவன் தந்த உறுப்புகளை அவனுக்கு ஆக்க அமையும்; நெஞ்சிலே 1அடி பட நினைக்க அமையும்’ என்றபடி. உய்ம்மின் – அந்த நினைவு பலத்தோடே கூடி இருக்குமாதலின், ‘உய்ம்மின்’ என்கிறது. 2‘அந்தப் பகவானை நினைப்பதில் என்ன சிரமம் இருக்கிறது? நினைத்தால் மங்களத்தைக் கொடுக்கிறார்; இரவு பகல் எந்நேரத்திலும் அவரை நினைக்கின்றவர்களுக்குப் பாவங்களின் நாசமும் உண்டாகின்றன,’ என்றான் ஸ்ரீ பிரஹ்லாதாழ்வான். ‘பேறு எல்லார்க்கும் வேண்டும்’ என்று இருக்கையாலே எல்லார்க்குமாக ‘உய்ம்மின்’ எனப் பன்மையாக அருளிச்செய்கிறார். தாள் சிந்தித்து உய்ம்மின் – 3அடி அற்றால் வாடும் அத்தனையே அன்றோ? ஆதலால், அடியைப் பேணி நோக்கி உய்ந்து போருங்கள்.
மேல் வருகின்ற மூன்று பத்துகளாலே’ என்றது, 4-ஆம் பத்து, 5-ஆம்
பத்து, 6-ஆம் பத்துகளைக் குறித்தபடி. இம்மூன்று பத்துகளாலே ‘ஸ்ரீமந்
நாராயண சரணௌ சரணம் பிரபத்யே’ என்ற முன் வாக்கியத்தின்
பொருளை அருளிச்செய்கிறார் என்றபடி. பெரிய பிராட்டியார்
புருஷகாரமாக, வாத்சல்யம் ஸ்வாமித்வம் சௌசீல்யம் சௌலப்யம் ஞானம்
சத்திகளாகிய குணங்களையுடைய எம்பெருமானுடைய திருவடிகளை
உபாயமாகப் பற்றுகிறேன்,’ என்பது இவ்வாக்கியத்தின் பொருள்.
இப்பொருள்தன்னையே 4,5,6-ஆம் பத்துகளில் அருளிச்செய்கிறார்
என்பதனைத் தெரிவிக்கின்றார். (முதல் பத்து அவதாரிகை – ‘திருமகள்
கேள்வன் இரண்டு’ காண்க.) “இதில் (துவயத்தில்) முற்கூற்றால், பெரிய
பிராட்டியாரை முன்னிட்டு ஈசுவரன் திருவடிகளை உபாயமாகப் பற்றுகிறது;
பிற்கூற்றால், அச்சேர்த்தியிலே அடிமை இரக்கிறது,” என்பது
ஸ்ரீபிள்ளைலோகாசார்யர் ஸ்ரீசூக்தி.
2. ‘அடியிலே’ என்றது, சிலேடை : முதல் திருவாய்மொழியிலே என்பதும்,
திருவடிகளிலே என்பதும் பொருள். திருவடிகளிலே என்று பொருள்
கொள்ளும்போது ‘உபாயத்தை’ என்பதற்கு உபாயத்தின் தன்மையை என்று
பொருள் கொள்க. ‘சந்தித்துய்ம்மினோ’ என்பது போன்ற இடங்களில்
உபாயத்வம் கூறப்பட்டிருத்தல் தெளிவு. உபாயத்வம் – உபாயத்தினது
தன்மை. உபாயம் – வழி.
3. ‘அல்லாதார் கர்மம் ஞானம் பத்திகளை உபாயமாகக் கொள்ளாநிற்க, இவர்
திருவடிகளை உபாயம் என்கிறது என்?’ என்னும் வினாவிற்கு விடையாக,
‘இவ்வடி அறியாதாரேயன்றோ’ என்று தொடங்கி அருளிச்செய்கிறார். அடி –
திருவடிகள்.
4. மேல் திருவாய்மொழிக்கும் இத்திருவாய்மொழிக்கும் இயைபு
அருளிச்செய்கிறார். ‘நிரவதிகப் பிரீதியோடே’ என்று தொடங்கி, நிரவதிகம்
– தனக்குமேல் ஒன்று இல்லாதது.
பௌண்ட்ரக வாசுதேவன்:
‘செங்கதிர்க் கற்றை காலும் திகிரியஞ் செல்வன் யானே!
சங்கொடு தழல்வாய் நேமி தாங்குதல் விடுத்தால் உய்ந்தான்;
அங்கவை விடுக லானேல் ஆடமர்க் கெழுக’ என்னா
வெங்கடக் களிறட் டார்க்கு விடுத்தனன் தூது மன்னோ.’
என்பது பாகவதம். இவன் சரிதையைப் பாகவதம் பத்தாங்கந்தம் 88-ஆம்
அத்தியாயத்தால் உணரலாகும்.
பிச்சை தாம் கொள்வர்’ என்று இடர்ப்பட்டமை சொல்லுகையாலே,
‘சர்வேசுவரனை அடைந்தால் இடர் இல்லையோ?’ என்னும் வினாவிற்கு
விடையாக, ‘இல்லை’ என்பதற்கு இரண்டு பிரமாணங்கள் காட்டுகிறார்.
‘இடர் கெடுத்த திருவாளன்’ என்று தொடங்கி. இது, பெரிய திருமொழி.
6: 9 : 1.
‘பெடையடர்த்த மடவன்னம் பிரியாது மலர்க்கமலம்
மடலெடுத்து மதுநுகரும் வயலுடுத்த திருநறையூர்
முடையடர்த்த சிரமேந்தி மூவுலகும் பலிதிரிவோன்
இடர்கெடுத்த திருவாளன் இணையடியே அடைநெஞ்சே!’
என்பது அத்திருப்பாசுரமாகும்.
தான் பெற்ற அனுபவம் பேசி அருளிய பின்பு ஆழ்வார்
ஐஸ்வர்யம் கைவல்யம் அனுபவிக்கும் சம்சாரிகளைப் பார்த்து
நிலை அற்ற அத்ய அல்பம்விட்டு பகவத் விஷயம் பற்ற அருளுகிறார் இந்த திருவாய்மொழியில்
உண்டியே உடையே திரிந்து போவாரை பார்த்து
திருநாரணன் தாள் பற்றி காலம் பெற சிந்திமினோ
உத்தர வாக்கியம் அர்த்தம் -மேல் மூன்று பத்தால்
முதல் பத்தில் திருமகளார் தனிக் கேள்வன்
ஒழிவில் காலம் புருஷார்த்தம் மூலம் கைங்கர்யம்
உபாயம் அடியிலே வைத்து –
தாள் காலம் பெற சிந்தித்து இருமினோ இதில் -அருளி –
உபாயம் தெரிவித்து -அடியிலே அறுதி இடுகிறார்
ஆரம்பத்திலே அருளி -தாள் திருவடி -அறுதி இடுகிறார் –
இப்படி அறியாதார் -உபாயாந்தரங்களில் இழிந்து
பூர்வ வாக்கியம் முதலில் சொல்லாமல் உத்தர வாக்கியம் முதலில் அருளி –
விஷய வைலஷ்ண்யம் அருளி பின்பு –
சாதன தசை -புருஷார்த்தம் தசை –
அனுஷ்டான வேளை –
அநுபவம் -பலன் சொல்லி சாதனம் சொல்லுவது போலே
கைங்கர்யம் பேற்றுக்கு காரணம் அவனே உபாயம்
அர்த்த பஞ்சக ஞானம் ஏற்படுத்த வந்த திருவாய்மொழி –
பரோ உபதேசம்
வீடு முன் முற்றவும் -இதர விஷய வைராக்ய பூர்வகமாக பகவத் விஷயம் பற்ற
சொன்னால் விரோதம் -பகவத் இதர விஷய பஜனம் தவிர உபதேசித்து -மானிடம் பாட
வல்ல கவியேன் அல்லேன் –
இதில் -அல்பம் அஸ்திரம் -பலன்களுக்கு –
ஐஸ்வர்யம் கைவல்யம் விட்டு அவனைப் பற்ற –
தோஷ தர்சனம் அருளிச் செய்கிறார் –
ஐஸ்வர்யம் -அவனே கொடுத்தாலும் நிலையாய் இருக்காதே
செல்வம் செல்வோம் என்று போய் கொண்டே இருக்கும்
அல்பம் -அஸ்தரம் -இவை –
ஆத்ம அனுபவம் கைவல்யம் -அபுருஷார்த்த நிலை நிற்கும் தண்ணியது –
தாழ்ந்த புருஷார்த்தம் -என்று காட்டி –
ஐஸ்வர்யம் போலே அழிந்த பின்பு பகவத் விஷயம் இழந்தோமே என்று
இருக்க
அநந்ய பிரயோஜனர் வாழாட்பட்டு
கைவல்யம் ஆபத்து வாளேறு கண்டவன் தேளேறு கண்டவன்
அதனால் இதை சொல்லி அப்புறம் ஐஸ்வர்யம் சொல்லுகிறார் திருப்பல்லாண்டில்
பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது -திருமங்கை ஆழ்வார்
இறப்பு கைவல்யத்தில் விடுகை
பகவத் பஜனம் பண்ண அருளுகிறார்
சம்சாரிகள் கேட்காமல் உபதேசிக்க
ஹிதம் சொல்வது -துர்கதி கண்டு போருக்க மாட்டாமல்
தாய்க்கும் மகனுக்கும் தம்பிக்கும் இவருக்கும் இவர் அடி பணிந்தாருக்கும்
ராவணன் ஹிதம் கேட்க்காமல் பிராட்டிவிபீஷணன்
கம்பாவது கிடக்குமோ -என்று
கொழுந்து விட்டு எரியும் வீட்டில் -உபதேசிக்கிறார்
ஒருவராவது கிடைப்பாரா பார்க்கிறார் இதில்
சார்வ பௌமர் ராஜாக்கள் பிச்சை எடுத்து
ஸ்ரீ வஸ்த்ச நித்ய ஸ்ரீ இருக்க சர்வேஸ்வரனைப் பற்ற பாரும் கோள் என்கிறார் –
ஒரு நாயகமாய் ஏக சக்கரவர்த்தி
சிதைகிய பானையர்
பிச்சை தாம் கொள்ள –
காலம்பெற சீக்கிரமாக
நிலை நிலாத ஐஸ்வர்யம் நீர் குமிழி போலே
வாழ்ந்தார் -மொக்குளில் மாய்ந்து மாய்ந்து
மா மழை -நீர் குமிழி போலே உடைந்து
இருக்கும் நாள் அஹங்கரித்து
பதிம் விச்வச்ய ஈஸ்வர ஐஸ்வர்யம் போலே நினைத்து
தானே பதி என்கிற அஹங்காரம்
பௌண்டரீக வாசுதேவன் போலே -நினைத்து –
ஷேத்திர பாலகர் நகர பாலகராய் இருந்தும் –
கொடைக் கீழ் -உலகம் ஆண்டு
ஓட -நெடும் காலம் 60000 ஆண்டு போலே நெடுக
கொற்றம்குடை கீழே ஆண்டு –
கடல் சூழ்ந்த பூமிப் பரப்பு அளவும் ஆண்டு
கை யளவு நிலம் காப்பது போலே -காத்து -குறை இன்றி ஆண்டு
கார்த்த வீர்ய அர்ஜுனன் போலே –
கையும் வில்லுமாய் நின்று நோக்கிக் கொண்டு போனவன்
உலகு உடன் ஆண்டவன் -ஏகாதிபதியாய் ஆண்டு
அபிமான பங்கமாய் வந்து –
வாசுதேவ -கிலேசித்து -பிள்ளைகளை விட்டு –
அண்ணன் தம்பிகளையும் விரோதித்து ராஜாவாகி இழந்து கிலேசிப்பர்
கரு நாய் -கவர்ந்த காலர்
பட்டினி இருக்க முடியாமல் –
வெளியில் உட்கார்ந்து பசி எடுக்க -பிச்சை எடுத்து
எளிமை பட்டு ஜீவிப்பது என்ன –
நசையாலே பிச்சை பண்ண பார்ப்பான்
தெரியும்படி செய்ய அவமானம்
கௌரவ குறை
இருட்டில் சந்து வெளியில்
போகும் பொழுது நாய் காலைக் கடிக்க கரு நாய் கருப்பாய் தெரியாமல்
இருள் திரண்டது போலே கருமை
சீற்றமாய் உள்ள நாய்
கருவை உடைத்த நாய் குட்டியைக் காத்து இருக்கும் நாய்
நாய் கடித்த கா ல் வீரக் கழல் முன்பு
சிதைகிய பானையர்
தங்க தாம்பாளம் முன்பு
இட்டது உண்டாகில் -போட்டதும் கீழே போகும்படி பானை
முன்பு பச்சை கொண்டு வந்தவர்கள் -சமர்ப்பிக்க -காத்து இருக்க –
குறியே இருந்து இப்பொழுது
எல்லாரும் காண வருவார்கள்
பெரு நாடு காண
இவை எல்லாம் இம்மையிலே வேற ஜன்மத்தில் இல்லை
எம்பார் -வார்த்தை -பரம பதம் சூழ் விசும்பு வர்ணித்து ஒரு நாயகமாய் சத்யம் நம்புவது போலே இதையும் அருளிச்
செய்தார் பார்த்து கொண்டு இருக்கிறோமே
பிச்சை தாம் கொள்வர்
சோற்றுக்கு கை ஏந்தி நிற்கிறான்
தாம் கொள்வர் -ஆளிட்டு முன்பு வாங்கினவர் ராஜ்யத்தை
இவனே கேட்டு வாங்கி –
இடுவர் பக்கல் -கொள்வது இவர் சித்தம் -கொடுத்தால் தேவலை நினைத்து இருக்கிறான்
ராஜ்ய ஸ்ரீ இப்படி ஆனபின்பு
திரு நாரணன் தாள்
இடர் கெடுத்த திருவாளன் -பிராட்டி சேர்ந்து இணை அடி ஆஸ்ரயித்து
உஜ்ஜீவிது நாராயண ஸ்ரீ மான் -உலகு ஏழும் திரியும் பெரியோன்
உண்டியான் சாபம் தீர்த்து -துக்கம் போக்கியது எம்பெருமான் திருவடிகள்
ஓடு கொண்டு இரப்பார்க்கு இவன் தான் ரஷிப்பான் –
நக்கன் -நான்முகன் திருவந்தாதி –
தாள் பற்றி -ஸ்ரீ ராமாயணம் -ஸ்லோஹம்
பரத ஆழ்வான் வார்த்தை எடுத்துக் காட்டி
பிராது சரணவ் -சக்ரவர்த்தி ஒரு ககாலில் சங்கு உள்ளடி பொருந்தி
பிள்ளாய் உனது உள் வெதுப்பு ஆறுவது
எனக்கு வகுத்தவடி அடி சூடும் அரசு
அவனும் தமக்கு உண்டான அரசு சூடி
தலையாக பிரார்திகப்பட்ட திருவடிகளை
காலம்பெற -அரை நாளிகை முன்பு ஆவது பற்ற வேண்டுமே
-ஜீவிதம் -மரணாந்தம் -மூப்பு யவனம் -செல்வம் விநாசம்
சீக்கிரமே ஒல்லை பற்ற அருளுகிறார் –
எண்ணம் வந்த உடனே பண்ண வேண்டும்
எந்த முகூர்த்தம்
ஷணம் வீணாக்காமல்
வாசுதேவனை சிந்திக்க வேண்டும்
அநர்த்தம் வரும் முன்
நிஷித்த அனுஷ்டானம் விச்லேஷம்
யமன் தலை பிடித்து இருக்கிறான் நினைத்து -காலம் பெற சிந்தித்து மனம் உண்டே அவன் தந்த கரணங்களை
நெஞ்சிலே அடிபட அமையும்
நன்மையைக் கொடுக்கும்
சிந்திப்பதே உஜ்ஜீவனம்
தானே கொடுக்கும் –
விளக்கு ஏற்றின உடனே இருள் தானே போகுமே
சிந்தித்து உய்மினோ
அனைவருக்கும் உஜ்ஜீவனம்
அடியில் பேணி –
அடி அடிகடி
வேர் அற்றால் மரம்
அடி அற்றால்
வாழ்வு திருவாரணன் தாள் பேணும் கோள்
எம்பெருமானார் நிர்வஹிப்பார் –
சோழ உபத்ரவம்
மேலை நாட்டுக்கு எழுந்து அருளி
ஸ்ரீ வைஷ்ண சமர்த்தி நிறைந்த தேசம் அன்றே இருந்தது –
செல்வம் உற்றும் திருத்திய பின்பு அங்கு
அனந்தாழ்வான் இங்கே இருந்து -ஸ்ரீவைஷ்ண லஷணம் –
மிகுந்து -உபதேசித்து –
பிரதிஷ்டை செய்து அருளி –
திருநாரணன் தாள்
விசேஷ அர்த்தம் -திரு தாளுக்கும் நாரணன் இரண்டுக்கும் விசேஷணம்
ஸ்ரீ மந்தவ் ஹரி சரணவ்
ஹரிக்கும் சரணதுக்கும் விசேஷம்
பரம பாக்கியம் நிர்ஹெதுக கிருபையால் இங்கேயே அனுபவிக்கப் பெற்றோம்
எம்பெருமானே பற்றி கைங்கர்யம் செய்து போது போக்கி
அடைக்கலம் கொடுத்த திவ்ய தேசம்
பிரமாணம் பிரமாதா பிரமேயம் மூவருக்கும்
பிரமேயம் -திருவரங்க ஆபத்தை போக்கி ஸ்ரீ ரெங்கனுக்கும் கனுக்கும் இடம் கொடுத்து அருளி
பிரமாதா எம்பெருமானாரையும் ரஷித்து கொடுத்து பிரமாணம் ஸ்ரீ பாஷ்யம் நாலாயிர திவ்ய பிரபந்தம்
மேல் நாட்டில் இருந்து போன ஸ்ரீ வைஷ்ணவர்கள் -நாதமுனி கேட்டு
பகவத் விஷயம் ஈடு முப்பத்தாறு நம்பிள்ளை -அருளி
மணவாள மா முனி -திருவாய் மொழிப் பிள்ளை -தேவப் பெருமாள் -நாலூர் ஆச்சான் பிள்ளை சேவித்து கொண்டு இருக்க -இவர்களும் மேல தேசம் மூலம் வந்தவர் –
நாலூர் பிள்ளை -ஆச்சான் பிள்ளை குமாரர் ஈடு முப்பத்தாறு கால ஷேபம்
திரு நாராயண புரத்தில் வெளி இட திருவாய்மொழிப் பிள்ளை பெற்றார்
ஸ்ரீ பாஷ்யம் இங்கே இருந்து பிரசாரம் ஆகி
ஆக மூவரையும் காத்துக் கொடுத்த திவ்ய தேசம் -வைபவம் மிக்கது
தானே விக்ரஹம் செய்து ஆலிங்கனம் செய்து -பின்பு திருவரங்கம் எழுந்து அருளினார் எம்பெருமானார் -தான் உகந்த திருமேனி –
தானான திருமேனி தமர் உகந்த திருமேனி மூன்றும் இங்கேயே
திருநார ணன்
செல்வ நாராயணன்
வண் புகழ் நாரணன்
பேரர்களுக்கும் ஆழ்வார் திருநாமங்கள்
துழாய் முடி அரசர்
முடி கொண்டு பெரும் புகழ்
கருட ஆழ்வான் -சமர்ப்பிக்க –
அவர் தான் முதலில் வைர முடி சேவிக்க
அர்ச்சகர் கூட கண்ணை மூடி செமர்ப்பித்து –
கருட ஆழ்வான் முதலில் சேவிக்க பத்து பாட்டும் எதிராஜ சம்பத்குமாரர்
பாக்கியம் பெற்றோம் இங்கேயே சாதிக்க கேட்க பெற்றோமே
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply