ஜ்ஞான வைராக்ய ஸம்பூர்ணம் பச்சாத் ஸூந்தர தேசிகம் |
த்ரவிடோபநிஷத் பாஷ்யதாயிநம் மத குரும் பஜே ||
முன்னிலும் பின் அழகிய பெருமாள் நம் பெருமாள் திரு நாமம் இவருக்கு சாத்தப்பட்டது –
வடதிசை முரட்டு சமஸ்க்ருதம் ஆர்யா பூமி -ஆகவே பின் அழகைக் காட்டி எழுந்து அருளி உள்ளார் -ஆறாயிரப்படி குரு பரம்பரையா பிரபாவம் -அருளியவர் உடையவர் பிரபாவம் பூர்ணமாகவும் —நம்பிள்ளை சரித்திரம் வரை – அதில் உண்டு-நம்பிள்ளையை விட மூத்தவர்
எம்பெருமானார் காலத்திலேயே இருந்து இருக்கலாம் -நேரே சாஷாத்காரித்தும்
இருந்தவர்கள் இடம் கேட்டும் அருளிச் செய்தவை –
கலி த்வம்ஸி தயா பாத்ரம் பஸ்ஸாத் ஸூந்தர ஸம்ஜ்ஜிகம்
அஞ்ஞாத ஞாபகம் பும்ஸாம் அஸ்மத் தேஸிகம் ஆஸ்ரயே
திருக்கலிகன்றி தாஸராம் நம்பிள்ளையின் கருணைக்குப் பாத்திரமாய் இருப்பவராய்
மனிதர்களுக்கு அறியாதன அறிவிப்பவராய்
எம் ஆச்சார்யரான-பஸ்ஸாத் ஸூந்தர –பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன்
ஸடாரி முக நிஸ் ஸ்ருத த்ரவிட வேத நிர்வாஹகம்
ஸ்வ பக்த ஜன ரக்ஷண க்ஷண க்ருபாத்த ஸத் வீக்ஷணம்
ஸ்வ ஸூக்தி ரஸந உஜ்ஜ்வலத் குரு பரம்பரா வைபவம்
யதீந்த்ர பத சேகரம் தம் அபாரங்க ரம்யம் பஜே–(க்ருபாலஸத் வீக்ஷணம் -பாட பேதம்)
நம்மாழ்வாரின் திருவாலி இருந்து தோன்றிய தமிழ் வேதத்துக்கு நிர்வாஹகராய்
தம் பக்தி ஜனங்களை ரக்ஷிக்கும் வல்லமையுள்ள கருணா கடாக்ஷம் உள்ளவராய்
தம் திருவாக்காலே விளங்கா நிற்கும் குரு பரம்பரா வைபவத்தை யுடையவராய்
யதிராஜரின் திருவடிகளைத் தலையிலே சூடியவரான
அபாரங்க ரம்யம் பஜே-பின்பழகிய பெருமாள் ஜீயரை ஆஸ்ரயிக்கிறேன் –
துலா சதபிஷக் ஜாதம் ஸ்ரீ லோகார்ய பத ஆஸ்ரிதம்
ஞானாதி பூஷணம் வந்தே பஸ்ஸாத் ஸூந்தர தேசிகம்
பஸ்ஸாத் ஸூந்தர தேசிகர் -பின்பு அழகராம் பெருமாள் ஜீயர்
துலா -ஐப்பசி சதயம் நக்ஷத்ரம் திரு அவதாரம்-(பேயாழ்வார் திருவவதார திரு நக்ஷத்ரம்)
நம்பிள்ளை -லோகாச்சார்யார் திருவடி பற்றி -பதாஸ்ரியம்
ஞானாதி பூஷணம் வந்தே
பாவோ நான்யாத்ர கச்சதி -கண்ட கண்கள் மற்று ஒன்றைக் காணாவே போல் நிஷ்டை இவருக்கும்-நம்பிள்ளை திருமேனியில் ஒன்றிலே ஆழ்ந்து பரிவுடன் இருந்தவர் )
——
வார்த்தை -361-
ஸ்வரூப ஜ்ஞானம் பிறந்தவனுக்கு சரீர விஸ்லேஷத்து அளவும் மஹா பயமும் மஹா விஸ்வாசமும் அநு வர்திக்கைக்கு காரணம் –
தன்னைப் பார்த்த போது எல்லாம் மஹா பயமும் –
எம்பெருமானை பார்த்த போது எல்லாம் மஹா விஸ்வாசமும் —
இரண்டுக்கும் மஹத்தை யாவது -தன்னை அனுசந்தித்த போது சம்சாரத்திலே இருந்தானாகவும் –
இங்கே இருந்தானே யாகிலும் –
எம்பெருமானை அனுசந்தித்த போது பரம பதத்தில் இருந்தானாகவும் நினைத்து இருக்கை –
————————————————–
வார்த்தை -362-
ஸ்வரூபத்தில் தெளிவும் –
உபாயத்தில் துணிவும் –
உபேயத்தில் த்வரையும்-அதிகாரி க்ருத்யம் என்று நம்பிள்ளை –
(ஸம்பந்த உபாய பலன்களில் உணர்த்தியும் -(தெளிவும் )-துணிவும் பதற்றமும்-(த்வரையும் ) ஆகிய பிரஞ்ஞா அவஸ்தை களுக்குத் தோழி தாயார் மகள் என்றும் பெயர் -பேறு தப்பாது என்று துணிந்து இருக்கையும் பேற்றுக்குத் த்வரையும் வேண்டும்-)
————————————————–
வார்த்தை -363-
சம்பாஷண சம்பந்தம் -போஜன சம்பந்தம் -அத்ருஷ்ட சம்பந்தம்(ஆச்சார்யர் தானே அத்ருஷ்டத்துக்கு அபிமானிக்க வேண்டும்) -த்ருஷ்ட சம்பந்தம் –
இவை பார்த்து செய்ய வேண்டும் –
தானிடும் தண்டனுக்கு உகந்திடவும்
தன்னை யிடும் தண்டனுக்கு குழைந்து போரவும் –
தன் சத்தையை அழிய மாறியாகிலும் தண்டன் கைக் கொள்ள வல்லனாகையும் அதிகாரி க்ருத்யம் –
(அடியேன் சிறிய ஞானத்தன் நீசனேன் குறை ஒன்றுமிலேன் -என்று இருக்க வேண்டும் -வளர்த்ததனால் பயம் பெற்றேன் மடக்கிளியைக் கைகூப்பி வணங்கினாளே -போகத்தில் தடுமாறும் சீலம் காட்கரையில் கரை அழிக்கும் -ஆட்க்கொள்வான் ஒத்து என்னுயிர் உண்ட மாயன் -எதிர்விழி கொடுக்கும் பாரதந்தர்யம் வேண்டுமே-இது பகவத் விஷயத்தில் இங்கு பாகவத விஷயத்தில் -பெரியநம்பி ராமானுஜர் கோஷ்ட்டியை வணங்கிய விருத்தாந்தம்)
—————————————————–
வார்த்தை -364-
மலை நாட்டிலே ஒருவனுடன் மூவரும் ஸ்ரீ ராமாயணம் வாசித்தார்கள் –
அவர்களில் முதலில் அதிகரித்தவனை அழைத்து உனக்கு இதில் பிரதிபன்ன அர்த்தம் ஏது என்று கேட்க –
சக்கரவர்த்தி திருமகன் பித்ரு வசன பரிபாலனம் பண்ணுகையாலே
மாத்ரு பித்ரு ஸூ ஸ்ருஷை தர்மம் என்று தோற்றிற்று -என்ன
நீ அத்தைச் செய் -என்றான்
இருவர் ஆனவனைக் கேட்க -சக்கரவர்த்தி திருமகனாய் சரீர பரிக்ரஹம் பண்ணினாலும்
உடம்பு எடுக்கை பொல்லாதாய் இருந்தது –
ஆகையால் இவ்வுடம்பை அகற்றும் வகை விசாரிக்க வேண்டும் -என்றான் –
ஆகில் நீ தத் விமோசன உபாயத்தை பண்ணு என்றான் –
மூவர் ஆனவனைக் கேட்க -நம்முடைய புண் மருந்துகளால் ஒரு பசை இல்லை –
ராவணன் தானே யாகிலும் அவனை விடில் தரியேன் -என்ற சக்கரவர்த்தி திருமகன் கிருபை உண்டாகில் பிழைக்கலாம் அல்லது பிழைக்க விரகு இல்லை -என்றான் –
ஆகில் நீ உள்ளதனையும் ஸ்ரீ ராமாயணத்தை பரிசயி -என்றான் –
(கீழ் சாமான்ய தர்மம் -அடுத்து கொஞ்சம் தேவலை -மூன்றாமவன் யாதாதத்ம்யம் அறிந்தவன்-ராம நாமம் செய்தால் என்ன புண்ணியம் செய்ய வேண்டும் என்றவனுக்கு பதிலாக -புண்ணியம் செய்தால் தான் ராம நாமம் சொல்வோம்)
—————————————————————
வார்த்தை -365-
வீர ஸு ந்தரனுக்கு பயப்பட்டு எம்பார் அடிமையான ஜகந்நாத ப்ரஹ்ம ராயருடைய வேச்யை மடத்திலே வந்து இருக்க –
இவளை அவன் சொன்ன வார்த்தையைக் கேட்டு பயத்தாலே உடையவர் –
எம்பார் இவளை இங்கு நின்றும் போக விட வேண்டும் -என்ன –
எம்பாரும் பயார்தையான இவளை ரஷிக்கவே தர்மம் தானே (மடத்தை)ரஷிக்கும் –
எம்பெருமான் ரஷகன் என்னும் இடமும் – ஆஸ்த்ரீ பாலமும் அறியுமே –
அவனே ரஷகன் என்கிற அவதாரணம் அறிகைக்கு அன்றோ ஆசார்ய சேவை பண்ணுகிறது -என்று விண்ணப்பம் செய்தார் –
(அனைத்தில்லாரும் அறிந்து -உயிரை உடையவன் நாராயணன் என்றும் அறிவித்த எம்பெருமானார் போல் இந்த ஆய்ப்பெண்)
—————————————————————-
வார்த்தை -366-
வீர சிகாமணிப் பல்லவ ராயர் பட்டரை -ராஜ கார்யம் செய்கையாலே
ஸ்ரீ வைஷ்ணவர்களை அநுவர்த்தித்து நல் வார்த்தை கேட்கப் போகிறதில்லை –
அடியேனுக்கு தஞ்சமாய் இருப்பதொரு வார்த்தை அருளிச் செய்ய வேண்டும் -என்ன –
கடற்கரை வெளியை நினைத்து இரும் -என்று அருளினார் –
பல்லவ ராயரும் தெரியாமையாலே கையைப் பிசைந்து நிற்க –
கடற்கரை வெளியிலே ஓர் அமிர்த கடல் போலே விட்டுக் கொண்டு இருக்க –
எதிர்கரையிலே பிணம் தின்னிப் பையல் ராவணன் விட்டு இருக்க
எழுபது வெள்ளம் சேனை உணர்ந்து கொண்டு பெருமாளைக் குறிக் கொண்டு நோக்கா நிற்க –
பிரக்ருதிமான்கள் ஆகையாலே கண் தூங்கி கால் ஓய்ந்து கை சோர்ந்த அளவிலே –
பெருமாள் தாமும் தம்பியருமாக முதுகிலே ஆனவனாழிகையைக் (அம்புறாத் துணியைக்)கட்டிக் கையிலே தெரிந்து பெருக்கிப்-பிடித்த அம்பும் தாமுமாக -சில அண்டஜங்கள் முட்டை இட்டு நோக்குமா போலே எழுபது வெள்ளம் சேனையும் சூழ நடையாடும் மதிள் போலே சாரிகையாக வந்த சக்கரவர்த்தி திருமகனுடைய கையும் வில்லும் தஞ்சம் என்று ஸுகமே இரும் -என்று அருளினார் –
————————————————————————
வார்த்தை -367-
தர்சந ரஹஸ்யம் இருக்கும்படி –
உறங்குகிற போது நம்மை நோக்குகிறவன்
உணர்ந்தாலும் நம்மை நோக்கும் என்று கந்தாடை யாண்டான் –
(ஞானம் அற்ற போதும் -பழுதே பல பகலும் போயின என்று அஞ்சி அழுதேன் -அப்போதே ரஷித்தவன் ஸ்வரூப ஞானம் பிறந்த பின்பு ரக்ஷிக்கச் சொல்ல வேண்டுமோ)
——————————————————–
வார்த்தை -368-
கடக்கத்தப் பிள்ளையைக் கடக்கத்தனொரு பிராமணன் –
உமக்கு தேக யாத்ரை நடக்கிறபடி என் -என்று கேட்க –
ஸ்வ ரஷண விஷயமாக சித்திரை மாசத்திலே மூக்கு நீர் முன்னடியிலே விழ
ஏற்றம் இறைக்கிற உனக்கு இடுகிற எம்பெருமான்
ந்யஸ்த பரனாய் அணையிலே சாய்ந்து -சார்ந்து -கிடக்கிற எனக்கு இடச் சொல்ல வேண்டுனோ -என்றார் –
(உழவன் கிருஷி பாதி -பக்தி உழவன் பாதியாக -ந்யஸ்த பரனாய் இருக்க உதவச் சொல்ல வேண்டுமோ -ராதா கிருஷ்ணன் ஆய்ப்பாடியில் இன்றும் போர்வையும் உணவு வந்தவர்களுக்கு தந்து அருளுகிறான்-என்றே நம்புகிறார்கள் அங்கு)
————————————————————
வார்த்தை -369-
ஒரு பிராமணன் இறப்பில் நின்றும் விழ -அவ்வளவிலே சிறியாச்சான் அங்கேற எழுந்தருள
பிராமணன் -ஆச்சான் -பெருமான் என்னைத் தள்ளினபடி கண்டீரே -என்ன –
அங்கன் அன்று காண் –கர்மத்தாலே நாம் விழுந்தோம் -பெருமாள் எடுத்தார் -என்று நினைத்து இராய் -என்று அருளினார் –
———————————————————-
வார்த்தை -370-
ஒருநாள் திரு வீதியிலே பட்டரும் ஸ்ரீ வைஷ்ணவர்களும் திரளாக எழுந்து அருளி இருந்து
பகவத் குண அநுசந்தானம் நடவா நிற்க –
ஒரு ஸ்ரீ வைஷ்ணவர் -நாம் பண்ணின ஸுக்ருதம் கண்டதே – இப்படி இருக்கப் பெற்றோமே -என்ன
சிறியாச்சான் எழுந்து இருந்து -இது நெடுநாள் பெருமாள் ரஷகர் என்று சிஷித்தோம் –
இப்போது ஒரு ஸுக்ருத தேவர் உண்டாவதே என்றார் –
எம்பெருமான் ரஷகர் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று –
எம்பெருமான் ரஷ்யம் என்று இருக்கையும் ஸ்வரூபம் அன்று-எங்கனே என்னில்
ரஷகன் என்று இருந்தானாகில் அனந்யார்ஹ சேஷத்வத்துக்கு சேராது –
ரஷ்யம் என்று இருந்தானாகில் ஸ்வ ஸ்வாமி சம்பந்தத்துக்கு சேராது –
(கோபிக்கும் போதும் தண்டிக்கும் போதும் ஹிதம் என்றே எண்ணில் அவனை வெறுக்காமல் இருப்பது தான் அநந்யார்ஹ சேஷத்வத்த்க்கு பொருத்தமாய் இருக்கும்—சீறி அருளாய் -சீற்றமும் அருள் என்றும் இருக்க வேண்டுமே-மங்களாசாசனமும் நடக்க வேண்டும் -ஞான தசையையும் பிரேம தசையையும் மாறி மாறி வர வேண்டும் -)
(உன் தன்னை பிறவிப் பெரும் தனை புண்ணியம் யாமுடையோம் -அவனே புண்ணியம் -அவனது புண்ணியம் அல்ல)
————————————————————–
வார்த்தை -371-
எம்பெருமான் சாபேஷன்–
பிராட்டியும் ஆசார்யனும் பிரபன்னர்களும் சாபேஷ நிரபேஷர்கள் –
(உபாயாந்தர நிரபேஷன் பிரசித்தமாக இருந்தாலும் புருஷனையும் புருஷார்த்ததையும் எதிர்பார்ப்பதால் ஸாபேஷன் -பிராட்டியும் ஆச்சார்யர்களும் புருஷனை எதிர்பார்ப்பதால் ஸா பேஷமாயும் -வேறே புருஷார்த்தம் எதிர்பார்க்காமல் இருப்பதால் நிரபேஷமாயும் இருப்பார்கள்-ப்ரபன்னர் தம்முடைய யத்னத்தையும் பிறர் உதவியையும் உபாயாந்தரங்களையும் எதிர்பார்க்காமல் புருஷகாரம் சாபேஷாராய் இருப்பார்கள் -)
————————————————————
வார்த்தை -372-
ஆழ்வான் காலத்திலே சந்த்யாவந்தனம் பண்ண எழுந்து அருளா நிற்க –
இரண்டு ஸ்ரீ வைஷ்ணவர்கள் அருளிச் செயல் த்வநியைக் கேட்டுக் கொண்டு நிற்க –
கூட எழுந்து அருளினவர்கள் அனுஷ்டானத்துக்கு காலம் தப்புகிறதே -என்ன
சந்த்யா வந்தன வைகல்யம் பிறந்தால் பிராயச்சித்தம் பண்ணிக் கொள்ளலாம் –
பகவத் அனுபவ வைகல்யம் பிறந்தால் பிராயச்சித்த சாத்யமன்று -என்று அருளினார் –
(ஆஞ்ஞா கைங்கர்யம்-விதித்தவை செய்யாவிடில் பிராயச்சித்தம் உண்டு -அநஞ்ஞா கைங்கர்யம் -பிரியத்துக்காக செய்பபை விடாமல் செய்ய வேண்டுமே -செய்யாவிட்டால் பிராயச்சித்தம் இல்லை –ஈஸ்வர அபிமானம் குறையாமல் பார்க்கக் வேண்டுமே)
——–
வார்த்தை -373-
முதலியாண்டான் திருவாய்மொழி ஓதுகிற போது –
உடையவர் எழுந்து அருளி இருந்து
ஒரு பாட்டு சந்தை இட்ட அளவிலே
இதினுடைய அர்த்த அநுசந்தானத்திலே பரவசரானார் –
(ஓதுவிக்கும் பொழுது காலும் எழா கண்ண நீரும் நில்லா உடல் சோர்ந்து நடுங்கிக் குரல் மேலும் எழா மயிர்க் கூச்சம் அறா என் தோள்களும் வீழ் யொழியா மாலுகளா நிற்கும் என் மனனே -பெரியாழ்வார் -5-3-5 ரீதியில் பரவஸமானத்தைக் காட்டுகிறது)
——————————————————
வரத்தை -374-
ஆழ்வார்கள் மடலூர்ந்தும் நோன்பு நூற்றும் தூது விட்டும் ஸ்வாமிக்கு
அசஹ்யமாம்படி செய்கை ஸ்வரூப வ்ருத்தமன்றோ -என்று எம்பாரை முதலிகள் கேட்க –
எம்பாரும் –
இவர்கள் செய்வது என் -ஜ்ஞானம் தலை மண்டி யிடும்படி அவனுடைய
சௌந்தர்யம் இப்படி செய்யுமாகில் அது அவன் சௌந்தர்யத்தின் குற்றம் அன்றோ –
(உன்னைக் கண்ணாடிப் புறத்தில் நீ கண்டது இல்லையே இப்படி விஸ்லேஷம் நடந்தது)
எங்கனே என்னில் –
சக்கரவர்த்தி வாய் திறப்பதற்கு முன்னே நீங்கள் எல்லாரும்
பெருமாளை திருவபிஷேகம் செய்ய வேண்டும் என்பான் என் –
என் பக்கலில் குறை உண்டோ என்ன –
நாங்கள் செய்வது என் -பஹவோ ந்ருப கல்யாண குண
புத்ரஸ்ய சந்தி தே -குணான் குணவதோ தேவ -தேவ கல்பஸ்ய தீமத -என்று
பிள்ளையைப் பெற்ற உன் குறை யன்றோ என்றார்கள் -என்று அருளி செய்தார் –
———————————————————————–
வார்த்தை -375-
சோமாசியாண்டான் -அகளங்க நாட்டாழ்வான் காலத்திலே
ஒரு இடையன் பால் களவு கண்டான் என்று கட்டி யடிக்க –
பிள்ளை அத்தைக் கேட்டு மோஹித்து விழுந்தாராம் –
————————————————————————
வார்த்தை -376-
முலைகள் இலையான யுவதியைப் போலே காணும்
ஊமை அல்லாத வைஷ்ணவன் அருளிச் செயலில் அந்வயியாது ஒழிகை -என்று ஆச்சான் பிள்ளை –
————————————————————————
வார்த்தை -377-
எம்பெருமான் கிருஷ்ணனாய் வந்து அவதரித்தாப் போலே
வேதங்களும் திருவாய்மொழியாய் வந்து அவதரித்தன –
(வேத வேத்ய ந்யாயத்தாலே பரத்வபரமுது வேதம் வ்யூஹ வ்யாப்த் யவதரணங்களில் ஓதின நீதி கேட்ட மநு படுகதைகளாய் ஆக மூர்த்தியில் பண்ணிய தமிழானவாறே வேதத்தை த்ராவிடமாகச் செய்தாரென்னும்.-70–அப்படி அவதார முகேன நின்று ரஷித்து அருளுமவன் ,அவதாரத்தில் பிற்பட்டாரும் இழவாத படி –ஆகமூர்த்தியாய வண்ணம்”” (திருச்ச, 17) என்கிறபடியே ஸர்வேஸ்வரன் ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக “’தமருகந்ததெவ்வுருவம்”'(மூ.திரூவ. 45) என்கிறபடியே த்ரவ்ய-நாம-ரூப-ஆஸந-ஸயந-தேஸ – கால-அதிகாயு-போஜநாதீ ஸகல வ்யாபாரங்களையும் ஆஸ்ரித ஹ்ருதயாநுகுணமாக்கிக் கொண்டு ஸர்வ ஸுலபமான அர்ச்சாவதாரமான விடத்தில் ப்ரமாணமும் அப்படியே ப்ரமேயம் போலே ஸர்வ ஸுலபமாய் ஸர்வாகதிகாரமாம்படி த்ரவிட ஸம்ஹிதையாக ப்ராப்த மாகையாலே **பண்ணிய தமிழ் மாலை”” (திருவா. 2 – 7 – 13) என்கிறபடியே வேதத்தைத் திருவாய்மொழியாகச் செய்தருளினார்)-எய்தற்கு அறிய மறைகளை ஆயிரம் இன் தமிழால்
செய்தற்கு உலகில் வரும் சடகோபனை –இராமானுச நூற்றந்தாதி -18-என்னக் கடவதிறே..
————————————————————————
வார்த்தை -378-
பெரிய நம்பியும் -திருக்கோட்டியூர் நம்பியும் -திருமாலை யாண்டானும் கூடி
ஸ்ரீ சந்திர புஷ்கரணிக் கரையிலே திருப்புன்னைக் கீழே எழுந்தருளி இருந்து
தங்கள் ஆசார்யரான ஆளவந்தார் எழுந்தருளி இருக்கும்படியையும்
அவர் அருளிச் செய்த நல் வார்த்தைகளையும் நினைத்து அனுபவித்துக் கொண்டு
மிகவும் ஹ்ருஷ்டராய் -ஆநந்த மக்னராய்க் கொண்டு எழுந்து அருளி இருக்கிற அளவிலே –
திருவரங்க செல்வர் பலி பிரசாதிப்பதாக எழுந்தருளி புறப்பட –
இவர்களுடைய சமாதி பங்கம் பிறந்து எழுந்து இருந்து தண்டன் இட வேண்டுகையாலே –
கூட்டம் கலக்கியார் வந்தார் –
இற்றைக்கு மேல்பட ஸ்ரீ பலி எம்பெருமான் எழுந்தருளாத கோயிலிலே இருக்கக் கடவோம் -என்று பிரதிக்ஜை பண்ணிக் கொண்டார்கள் –
—————————————————————————-
வார்த்தை -379-
(வார்த்தை–466)
அந்தர்யாமி அறியாதே அர்ச்சாவதாரத்தில் ஈடுபாடன் ஆகையாவது
ஏகாந்தத்தில் பர்த்தாவைப் பருஷித்துப் பரிஹரிப்பதாய்
ஓலக்கத்தே கொண்டாடும் பதி வ்ரதையைப் போலேயும்
திருப்பள்ளியறை இருட்டிக் கிடக்க திரு வீதியிலே அணி விளக்கு ஏற்றுமா போலேயும்
திருப்பள்ளியறை புல் எழுந்து இருக்க திரு வீதி சோதித்து அலங்கரிக்குமா போலேயும்
இருப்பதொன்று –
————————————————————————-
வார்த்தை -380-
ஸாஸ்த்ர விருத்தங்களான துர் விஷயங்களிலே சக்தனாகையும்
ஸாஸ்த்ரங்களுக்கு அவிருத்தங்களான ஸதா சாராதிகளில் விரக்தனாகையும்
ஸாஸ்த்ர விஹிதமாய் ஸ்வரூப அனுகூலமான அர்ச்சாவதாரங்களிலே அசக்தனாகையும்
இம்மூன்றும்
ஸ்வரூப யாதாத்ம்ய ஞான அனுகூலமான நித்ய ப்ரவ்ருத்தங்களுக்கு விருத்தங்களாய் இருக்கும் –
————————————————————————-
வார்த்தை -381–
வைஷ்ணவனுக்கு வஸ்தவ்யம் ஞான அர்த்தமாக ஓர் ஆச்சார்யன் ஸந்நிதியிலே ஒதுங்கி வர்த்தித்தல்
அதுவும் மாட்டானாகில்
விலக்ஷணமாய் இருப்பான் ஒரு ஸ்ரீ வைஷ்ணவன் திரு மாளிகையிலே ஒதுங்கி வர்த்தித்தல்
அதுவும் மாட்டானாகில்
மௌனியாய்க் கொண்டு ஒரு திரு முற்றத்திலே ஆனவளவு கைங்கர்யம் பண்ணி ஒதுங்கி வர்த்தித்தல் –
(ஒதுங்கி வர்த்தித்தல்-ஆஸ்ரயித்து கைங்கர்யம் பண்ணுவதே வாழ்வு வர்த்தித்தல்)
———————————————————————-
வார்த்தை -382-
நம்பி திருவழுதி நாடு தாஸர்க்கும்-பிள்ளை திரு நறையூர் அரையருக்கும்
பட்டர் அருளிச் செய்த வார்த்தை
உகந்து அருளின நிலங்களில் பொய்யே யாகிலும் புக்குப் புறப்பட்டது திரிய அமையும்
அந்திம தசையில் கார்யகரமாம் –
(பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே யாடி மெய்யே பெற்றொழிந்தேன்-5-1-1- கடைசி காலத்தில் பரம புருஷார்த்தத்தைப் பெற்றுத் தரும்)
கையார் சக்கரத்து என் கரு மாணிக்கமே! என்றென்று
பொய்யே கைம்மை சொல்லிப் புறமே புறமே ஆடி
மெய்யே பெற்றொழிந்தேன் விதி வாய்க்கின்று காப்பார் ஆர்?
ஐயோ! கண்ண பிராஅன்! அறையோ! இனிப் போனாலே.–5-1-1-
———————————————————————-
வார்த்தை -383-
எம்பெருமானுக்கு இல்லாதது ஒன்றாய் –
அவனைப் பெறுகைக்கு பெரு விலையாய் இருக்குமது அஞ்சலியே -இறே –
கருட முத்ரைக்கு விஷம் தீருமா போலே அஞ்சலி பரமா முத்ரா -என்கிறபடியே
இம் முத்ரையாலே அநாத் யபராதமும் நசித்து எல்லாம் அகப்படும் என்று –
(அஞ்சலி பரமா முத்ரா க்ஷிப்ரம் தேவ ப்ரஸாதாநீ –விஷ்ணு தர்மோத்தரம் -3-33-115-எம்பெருமானை உகப்பிக்கும் மேலான முத்திரை அஞ்சலி யாகும்-எலுமிச்சம் பழம் கொடுத்து ராஜ்ஜியம் பெறுமா போல்-அம் ஜலயதி –அகார வாஸ்யனை இருக்கும் –வேங்கடத்துறைவாருக்கு நம –கடமை அது சுமந்தார்கட்கே –வேங்கடத்துறைவார் முதலில் உத்சவராக இருந்தவர் -மலையப்ப ஸ்வாமி ராமானுஜர் பிரதிஷ்டை செய்தருளினார்)
——————————————————————
வார்த்தை -384-
அனந்தாழ்வான் போசல ராஜ்யத்துக்கு எழுந்து அருளுகிற போது கட்டுப் பிரசாதம்
கட்டிக் கொண்டு போய் ஒரு இடத்திலே அவிழ்த்தவாறே அடைய எறும்பாய் இருந்தது –
இத்தைக் கண்டு அனந்தாழ்வான் பயப்பட்டு –
எம்பெருமான் பொன் மலை மேல் ஏதேனும் ஆவேனே -என்று அருளிச் செய்தவரிலே சிலராய் வர்த்திப்பர்கள் –இப்படியே கொண்டு போய்த் திருமலையிலே வைத்து வாரும்கோள் -என்று அருளிச் செய்தார் –
————————————————————————————————————-
ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பின்பழகிய பெருமாள் ஜீயர் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பூர்வாச்சார்யர்கள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம் .