கேடுஇல் விழுப்புகழ்க் கேசவ னைக்குரு
கூர்ச்சட கோபன்சொன்ன
பாடல்ஓர் ஆயிரத்துள் இவையும் ஒருபத்தும்
பயிற்றவல் லார்க்குஅவன்
நாடும் நகரமும் நன்குடன் காண
நலனிடை ஊர்திபண்ணி
வீடும் பெறுத்தித்தன் மூவுல குக்கும்
தரும்ஒரு நாயகமே.
பொ-ரை : ‘அழிவில்லாத விழுமிய புகழையுடைய கேசவனைப்பற்றி, திருக்குருகூரில் அவதரித்த ஸ்ரீ சடகோபர் அருளிச்செய்த ஆயிரம் திருப்பாசுரங்களுள் இப்பத்துத் திருப்பாசுரங்களையும் கற்கவல்லவர்கட்கு, அவ்விறைவன், நாடும் நகரமும் நன்மையோடே கூடக் காணும்படி ஸ்ரீவைஷ்ணவ சம்பத்தோடு நடக்கச் செய்து, மோக்ஷத்தையும் பெறச்செய்து, தன்னுடைய மூன்று உலகங்கட்கும் ஒப்பற்ற தலைமையையும் தருவான்,’ என்றபடி.-கு : ‘கேடுஇல் விழுப்புகழ்’ என்கிறார். ‘தாவா விழுப்புகழ்’ என்றார் ஆசிரியர் தொல்காப்பியனார். ‘பொருள் சேர் புகழ்’ என்றார் தெய்வப்புலமைத் திருவுள்ளுவனார், ‘பயிற்ற’ என்பது, ஈண்டுத் தன்வினையின்கண் வந்தது. ‘வல்லார்கட்கு நாயகத்தைத் தரும்,’ என முடிக்க. நாடு, நகரம், உலகு என்பன இடவாகு பெயர்கள். ‘காணப் பண்ணிப் பெறுத்தித் தரும்,’ என்க.
ஈடு : முடிவில், ‘இத்திருவாய்மொழியைக் கற்றவர்களை எல்லா உலகங்களிலும் பிரசித்தமாம்படி ஸ்ரீ வைஷ்ணவ செல்வத்திலே நடத்தி, மேலே பரமபதத்திலே சென்றால் தன் செல்வத்தை இவர்கள் இட்ட வழக்கு ஆக்கும்,’ என்கிறார்.
கேடு இல் விழுப்புகழ் கேசவனை – கேடு இல்லாமல் விழுப்பத்தையுடைத்தான நித்தியமாய் இருக்கிற மங்களம் பொருந்திய நற்குணங்களையுடைய, கேசியைக் கொன்ற கிருஷ்ணனை. குரு கூர்ச்சடகோபன் சொன்ன – 2‘முனிவரான வால்மீகி பகவானால் சொல்லப்பட்ட ஸ்ரீராகவனுடைய சரிதம்’ என்கிறபடியே, அவதாரத்துக்கு அவ்வருகு போகமாட்டாத ஆழ்வாரால் அருளிச்செய்யப்பட்ட. பாடல் ஓர் ஆயிரம் – 3‘பாடத்திலும் கானத்திலும் கேட்பதற்கு மதுரமாய் இருக்கிற’ என்கிறபடியே, இசையோடே சேர்ந்த ஆயிரத்துள். இவையும் ஒரு பத்தும் – முத்துகளை முகம் அறிந்து கோத்துச் சேர்வை பார்க்குமாறு போன்று, ‘இவையும் ஒரு பத்து’ என்கிறார். பயிற்ற வல்லார்கட்கு – கற்க வல்லவர்கட்கு. ‘பயிற்ற’ என்னும் பிறவினை, ஈண்டுத் தன்வினையின் கண் வந்தது. ‘அவன் தரும்’ என்று கூட்டுக.
நாடு – பொருளின் விசேடத்தை அறியாத சாதாரண மக்கள். நகரம் – பொருளின் விசேடம் அறிந்திருக்கும் பெரியோர்கள். நன்கு உடன் காண – நன்மையோடே காண. ‘இவனும் ஒருவனே!’ என்று கொண்டாட என்றபடி. நலன் இடை ஊர்தி பண்ணி – நன்மைக்கு நடுவே நடக்கும்படி செய்து. நன்மையா
வது, ஸ்ரீ வைஷ்ணவஸ்ரீ. வீடும் பெறுத்தி – பரமபுருஷார்த்த மோக்ஷத்தையும் கொடுத்து. மூவுலகுக்கும் தரும் ஒரு நாயகம் – தன்னதான மூன்று விதமான உயிர்களின் கூட்டத்துக்கும் இவன்தான் ஒப்பு அற்ற தலைவன் ஆம்படி பண்ணிக்கொடுக்கும். ‘ஆயின், சர்வேசுவரனைப் போன்றவனோ இவனும்?’ எனின், அவன் தன்னதான ஐஸ்வர்யத்தை இவன் ‘என்னது?’ என்னும்படி செய்யும். என்றது, ‘இவனுக்கு ஐஸ்வர்யம் கொடாநிற்கச் செய்தே, இது தனக்குப் புறம்பாம்படி இருக்கை அன்றித் தன் ஐஸ்வர்யத்திலே அடங்கியதாகும்படி செய்து கொடுப்பான்,’ என்றபடி.
(
திருவாய்மொழி நூற்றந்தாதி
‘சன்மம் பலசெய்து தான்இவ் வுலகுஅளிக்கும்
நன்மையுடை மால்குணத்தை நாடோறும் – இம்மையிலே
ஏத்தும்இன்பம் பெற்றேன்!’ எனும்மா றனைஉலகீர்!
தாத்தழும்ப ஏத்தும்ஒரு நாள்.
நிகமத்தில் –
சர்வ லோக பிரசித ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ
பரம பதம் இவனிட்ட வழக்காய் ஆகும்
அவதாரத்துக்கு அவ்வருகு போக மாட்டாத
பாட்டும் இனிமை
இசை உடன் பிறந்ததே –
இவையும் ஒரு பத்தும்
முத்து முகம் வைக்கும் -கோத்து அழகு பார்ப்பது போலே ஆழ்வார் பார்க்க
சொல்ல வல்லார் பைத்த பயில கற்றுக் கொடுப்பாருக்கு
நாடு நகரம் -கிராமம் நகரம் அனைவரும்
நலன் இடை ஊர்தி பண்ணி கொண்டாட்டம்
ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ தான் நன்மை
வீடும் கொடுத்து
த்ரிவித -மூவுலகும் -ஆத்மாக்களுக்கும் நிர்வாஹன் பக்த முக்த நித்யர்
தன்னைப் போலே ஆக்கி அருளி
அத்வதீய நாயகன் பண்ணிக் கொடுக்கும்
தன்னைதான ஐஸ்வர்யம் இவனுக்கும் கொடுத்து என்னது எண்ணும்படி
புறம்பாய் எண்ணாமல் -அந்தபூதராய்
ஈசன் அடங்கு எழில் அடங்கி –
சாரம்
சன்மம் பல செய்து ரஷிக்கும் மாலின் குணத்தை
நாள் தோறும் ஏத்து வதை இம்மையிலே பெற்று
உலகீர் நா தளும்ப ஏற்றும்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply