துன்பமும் இன்பமும் ஆகிய செய்வினை
யாய்உல கங்களுமாய்
இன்பம்இல் வெந்நர காகி இனியநல்
வான்சுவர்க் கங்களுமாய்
மன்பல் உயிர்களும் ஆகிப் பலபல
மாய மயக்குகளால்
இன்புறும் இவ்விளை யாட்டுடை யானைப்பெற்று
ஏதும்அல் லல்இலனே.
பொ-ரை : ‘துன்பத்திற்கும் இன்பத்திற்கும் காரணமாகிய நல்வினை தீவினைகளுமாகி, உலகங்களுமாகி, இன்பம் இல்லாத கொடிய நரகமாகி, இனிய பொருள்கள் தங்கியிருக்கின்ற மிகச்சிறந்த சுவர்க்கலோகம் முதலிய உலகங்களுமாகி, நிலை பெற்ற
பல உயிர்களுமாகி, மாயையால் உண்டாகும் பல விதமான மக்களுடைய மயக்கங்களால் இன்புறுகின்ற இவ்விளையாட்டுடையவனைப் பெற்றுத் துன்பம் யாதும் இல்லாதவன் ஆனேன்,’ என்கிறார்.
வி-கு : ‘ஆய் ஆய் ஆகி ஆய் ஆகி இன்புறும் விளையாட்டுடையவன்,’ என முடிக்க. ‘மன் பல் உயிர்’ என்ற இடத்து ‘மன்னுயிர் எல்லாம் தொழும்’ என்ற திருக்குறள் ஒப்பு நோக்கல் தகும்.
ஈடு : ஏழாம் பாட்டு. 1‘இறைவன் கர்மங்கட்குக் கட்டுப்பட்டவன் அல்லன் ஆகையாலே, அவனுக்கு இவ்வுலகத்தில் உள்ளது லீலா ரசமாத்திரம் ஆகையாலே, அதனை அநுசந்திக்கும் நான் கர்மங்கட்குக் கட்டுப்படவும் வேண்டா; இவ்வுலகத்தில் தோன்றவும் வேண்டா,’ என்கிறார்.
ன்பமும் இன்பமும் ஆகிய செய் வினையாய் – 2இன்ப துன்பங்களுக்குக் காரணமான புண்ணிய பாப உருவங்களான கர்மங்களை ஏவுகின்றவனாய். உலகங்களுமாய் – இவற்றை ஈட்டுதற்கு உரிய 3இவ்வுலகங்கட்கு நிர்வாஹகனாய். அன்றிக்கே, போக பூமியைச் சொல்லுதலும் ஆம். இன்பம் இல் வெம் நரகு ஆகி – இன்பம் என்பது சிறிதும் இல்லாத நரகலோகத்துக்கு நிர்வாஹகனாய். இனிய நல் வான் சுவர்க்கங்களும் ஆய் – நரகத்தைக்காட்டிலும் சிறிது சுகத்தை உடைத்தான சுவர்க்கம் முதலிய உலகங்கட்கு நிர்வாஹகனாய். ‘உலகங்களும் ஆய்’ என்ற இடம் புண்ணிய பாவங்களை ஈட்டுதற்குரிய உலகத்தைச் சொல்லிற்
றாகில் 1இவை, போக பூமிகள் ஆகின்றன; அன்றிக்கே, அங்கே, போக பூமியைச் சொல்லிற்றாகில், இங்கு, இன்ப துன்பங்களை மாத்திரமே சொல்லுகின்றன.
மன் பல் உயிர்களும் ஆகி – நல்வினை தீவினைகளைச் செய்கின்றவர்களும் அவற்றின் பலன்களை நுகர்கின்றவர்களுமாய், என்றும் உள்ளவர்களாய், பலராய் உள்ள ஆத்துமாக்களுக்கு நிர்வாஹகனாய். பல பல மாய மயக்குகளால் இன்புறும் இவ்விளையாட்டுடையானைப் பெற்று – கணக்கு இல்லாததான பிரகிருதியின் விகாரமுகத்தால் உண்டான மக்களுடைய மதிமயக்கங்களாலே பிரீதிக்கு இடமான விளையாட்டுகளை உடையவனைப் பெற்று. ‘எல்லார்க்கும் நலத்தையே செய்கின்றவனாய்ப் பேரருட் கடலான சர்வேசுவரனுக்கு, தன்னை நீங்கி மக்கள் துதிக்கப்படுகிற இது பிரீதிக்குக் காரணம் ஆகிற படி யாங்ஙனம்?’ என்னில், இவற்றைத் தன்னுடைய பேரருளால் காக்க நினைத்தால் அது இவற்றுக்கு விருப்பம் இல்லாததாய் இருக்கும் இருப்பு இறைவனுக்கு நகைக்குக் காரணமாய், அவ்வழியாலே லீலா ரசத்துக்குக் காரணமாய்விட்டது; இதற்கு நேர்கொடு நேரே கருத்து இது. கொடுத்த அறிவுதான் பொதுவாய் ருசி பேதத்தாலே வழி விலங்கிப் போய்க் கேட்டினை விளைத்துக்கொண்டு இருக்கிறபடியைக் கண்டு, ‘நாம் ஒன்றை நினைத்துச் செய்ய, இவை ஒன்றைச் சூழ்த்துக்கொண்ட படி கண்டாயே!’ என்று பிராட்டி முகத்தைப் பார்த்துப் புன்முறுவல் செய்ய, ‘அது கோல் விழுக்காட்டாலே லீலா ரசமாக முடியும்’ என்றபடி.
ஏதும் அல்லல் இலனே – ‘அவனுடைய கர்மங்கட்குக் கட்டுப்படாத தன்மையைச் சொல்லிய எனக்குக் கர்மங்கட்குக் கட்டுப்படுதலாகிய துக்கம் இல்லை,’ என்கிறார். என்றது, 2‘என்னைக் கர்மங்கள் ஒட்டுவது இல்லை; கர்மபலத்தில் எனக்கு ஆசை இல்லை; இவ்விதமாய் என்னை எவன் அறிகின்றானோ, அவன், கர்மங்களினால் கட்டுப்படுகிறது இல்லை,’ என்கிறபடியே, அவனைஅறிந்தவன் கர்மங்கட்குக் கட்டுப்படமாட்டான் ஆகையாலே, எனக்கும் கர்மங்கட்குக் கட்டுப்படுதல் இல்லை,’ என்கிறார் என்றபடி. அன்றிக்கே, ‘உலகத்தின் படைப்பு முதலானவைகளை அவனுடைய விளையாட்டாக நினைக்கின்ற எனக்கு இந்த லீலா விபூதியில் சேர்தலாகிற துக்கம் இல்லை,’ என்கிறார் என்னலுமாம். என்றது, 1‘‘நான் கட்டிய கட்டினை எவன் ஒருவன் என்னையே கால் கட்டி அவிழ்த்துக்கொள்ளப் பார்க்கிறான்? அவன் இதனைக் கடப்பான்,’ என்று அவன் சொல்லி வைத்தபடியே, அவன்றன்னையே பற்றி விடுவித்துக்கொள்ள இருக்கிற எனக்கு ஒரு துன்பமும் இல்லை,’ என்கிறார் என்றபடி.
அகர்ம வச்யன் ஆகையாலே -லீலா விபூதியிலே -இன்புறும் இவ் விளையாட்டு உடையான்
இதை அனுசந்திக்க நாமும் கர்ம வச்யர் ஆக மாட்டோம் –
எல்லாம் அவனே
ஆகி ஆகி -நிர்வாகம் கீழ் கொண்டவன்
துன்பமும் இன்பமும் ஆகி -புண்ய பாப கர்மங்களுக்கு நிர்வாஹன்
இவற்றை ஆர்ஜிக்கும் பூமி யாகும்
உலகம் போக ரூபமான பூமி
இன்பமில் வென் நரகம் -அதற்கும் நிர்வாஹன்
சம்சாரம் இன்பமில் நரகம் -ஸ்வர்க்கம் இன்பம் உள்ள நரகம் -புண்யம் கழிந்த பின்
தள்ளு
நித்தியராய் -ஆத்மவர்க நிர்வாஹன்
முக்தர் கேவலர் பக்தர் நித்யர் அனைவருக்கும்
அசந்கேயதமான பல பல -இத்யாதி -உடையானைப் பெற்று மாய மயக்குகள்
மதி விகற்பகங்கள் -மாய மயக்கு மம மாயா கீதை –
புத்தி கலக்கம் -ஏற்படுத்துவது அவனுக்கு ப்ரீதி -லீலை -உண்டாகுமா
இதுக்கு பிரயோஜனம் கேவல லீலை தத்வ த்ரயம்
ஸ்ருஷ்டிக்கே இல்லை
சிருஷ்டி என்கிற வியாபாரத்துக்கு -மணவாள மா முனிகள் வியாக்யானம்
சர்வ சுக்ருதாய் -இருப்பவன் –
இவற்றை தனது தயையால் ரஷிக்க நினைத்தால் -அது சேதனனுக்கு
நன்மை என்று புரியாமல் -அநிஷ்டமாய் இருக்கும் இருப்பு லீலா ரசத்துக்கு
கொடுத்த சைதன்யம் பொதுவாய் -இருக்க –
ஸ்வா தந்த்ர்யம் கொடுத்து -லீலா கைவல்யம் -ஸ்ரீ பாஷ்யம் –
அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது –
ஆத்மாவை சரீரம் இந்திர்யங்கள் சேர்த்து வைத்து
பிரவ்ருத்தி நிவ்ருத்தி நிர்வஹித்து
அனுமதி தானம் கொடுத்து
உதாசீனனாய் இருந்து-
கர்ம பலன் அனுபவிக்க வைத்து
சாஸ்திரம் விதிக்கு வேலை வேண்டுமே
பிராட்டி முகம் பார்த்து ஸ்மிதம் பண்ண –
ஹாஸ்யம் இதனால் தான் –
வாத்தியார் பாடம் நடத்தி பரிட்ஷை நடத்தி மதிப்பெண் தருவதுபோலே
ஸ்ருஷ்டி -லீலா –
விதி படி நடக்கும் –
பிள்ளை படிக்காவிடில் பிரயத்தனம் செய்ய –
உபதேசம் செய்யும் பொழுது ஒரு மாதிரி –
தலை எழுத்து என்று விடாமல் -முயன்று செய்வது போலே
ஸ்வா தந்த்ர்யமும் அவன் இடம் ஒப்படைப்பது தான் சரணா கதி –
இந்த அகர்ம வச்யதை அனுசந்தித்தால் நமக்கும் கர்ம வச்யதை அகலும் –
கர்மம் ஒட்டாது ஆசையும் இல்லை -அறிந்தவன் -கர்மத்தில் இருந்து விடுபடுகிறான் -கீதை
இவனைப் பற்றி குறை ஒன்றும் இல்லாமல் ஆகிறேன் -ஆழ்வார்
நம்மை அறிந்தவன் கர்மங்களால் கட்டுப்படான்
நீயே உபாயம் –
அவன் தன்னையே பற்றி விடுவித்து கொள்ள வேண்டும்
சித்தாந்த முக்கிய விஷயம் –
அவன் அருளால் ஒன்றே
குருவி பிணைத்த கூட்டை அவிழ்க்க போகாதே நம்மால்
நம்பிள்ளை திருவடிகளே சரணம்.
வடக்கு திருவீதிப் பிள்ளை திருவடிகளே சரணம்.
Leave a Reply