திரு மால் இரும் சோலை மலை என்றேன் என்ன
Archive for October, 2011
திருவாய்மொழி-10-8-திரு மால் இரும் சோலை மலை என்றேன் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 26, 2011திரு மால் வந்து என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
குருமா மணி யுனது புனல் பொன்னித் தென் பால்
திரு மால் சென்று சேர்விடம் தென் திருப் பேரே –10-8-1
திரு பேர் நகர்
அப்பக் கூடத்தான்
கோவில் அடி- திரு அரங்கம் பக்கம் என்பதால்
திவ்ய தேச பெயரை சொன்ன உடனே
நெஞ்சையே சோலை மலை ஆக்கி கொண்டு
நெஞ்சு நிறைய -வேறு எண்ணம் இடம் கொடுக்காமல்
ஆழ்வாருக்கு வேற எண்ணம்- தேவாந்தர பரர் போல் இன்றி
வேறு யாருக்கும் இடம் இன்றி-மற்றைய அர்ச்சை பெருமாளும் காத்து இருக்க
அழகரே ஹிருதயத்தில் பேரென் என்று –
கார்ய அர்த்தமாக -மண்டக்க படி- தென் திரு பேர் சென்று -பேரென் என்று சொல்லி கொண்டு நிறைய புகுந்தான்
பேரே உறைகின்ற பிரான் இன்று வந்து
பேரென் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
கார் எழ கடல் எழ மலை ஏழு உலகு உண்டும்
ஆரா வயிற்றானை அடங்கப் பிடித்தேனே –10-8-2
அனைத்தையும் உண்டவன்
அலங்கார மகா போஜஜனம்
ஆரா வயிற்றான்
கை அடக்கமாக பிடித்து கொண்டேன்
பேரென் என்று கிடைத்தான் கட்டி கொண்டேன்
பிடித்தேன் பிறவி கெடுத்தேன் பிணி சாரேன்
மடித்தேன் மனை வாழ்க்கை யுள் நிற்பதோர் மாயையை
கொடிக் கோபுர மாடங்கள் சூழ் திருப் பேரான்
அடிச் சேர்வது எனக்கு எளிதாயின வாறே 10-8-3
திரு அடி பிடித்ததும்
பிறவி போக்கி
சம்சார பிணி உலக மாயை மக்கி போக
கோபுரமும் கொடியும் கண்ணுக்கு தெரியுமே
எளிதாயின வாறென்று என் கண்கள் களிப்ப
களிதாகிய சிந்தை யனாய்க் களிக்கின்றேன்
கிளி தாவிய சோலைகள் சூழ் திருப் பேரான்
தெளிதாகிய சேன் விசும்பு தருவானே –10-8-4
பகவத் பக்தி விட சுலபம் இல்லை
செய்யும் பொழுதே இனிமை பலனும் இனிமை
ருசியாக அலுக்காமல் சு சுகம்-சங்கல்பித்து பொழுது போக்கு கொடுத்தான்
சிந்தை பக்தி ரசத்தால் கற்பிதமாக இருக்க
கிளி தாவும் சோலைகள்
தெளிந்த ஸ்ரீ வைகுண்டம் தருவான்
வானே தருவான் எனக்கா என்னோடு ஒட்டி
ஊனே குரம்பை இதனுள் புகுந்து இன்று
தானே தடு மாற்ற வினைகள் தவிர்த்தான்
தேனேய் பொழில் தென் திரு பேர் நகரானே –10-8-5
ஸ்ரீ வைகுந்தம் தர நினைத்து
அந்தர்யாமியாக
துணைவனாக காலம் பார்த்து
அவசர பிரதீஷனாக இருந்து
இரண்டு பஷி-மரம்-போல்
மாமிசம்-குடிசை-உடம்பில் ஒட்டி கொண்டு
எனக்கு என்று இதனுள் புகுந்து இன்று
அத்தை தின்று அங்கே கிடந்தான்-என்னை பார்க்க வில்லையே
காத்து இருந்து –தடு மாற்றம் வர-
ஊர்த்த நாடி-வழியாக -அனுப்ப காத்து கொண்டு இருக்கிறான்
வினைகள் தவிர்த்து-பரம பதம் செல்ல துணைவன் –
திரு பேர் நகரான் திரு மால் இரும் சோலை
பொருப்பே யுறைகின்ற பிரான் இன்று வந்து
இருப்பேன் என்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதம் உண்டு களித்தேனே –10-8-6
அழகர் இன்று வந்து இருப்பேன் என்று
மூல ஸ்தானம் உன் நெஞ்சே
புகுந்து-நித்ய வாசம்-ஆள் கொண்டு-
பெரிய பேரு-அமுதம் உண்டு
குண அமிர்தம் தெவிட்டாத அமிர்தம் உண்டு களித்தேன்
–
உண்டு களித்தேற்க்கு உம்பர் என் குறை ? மேலைத்
தொண்டு களித்து அந்தி தொழும் சொல்லுப் பெற்றேன்
வண்டு களிக்கும் பொழில் சூழ் திருப் பேரான்
கண்டு களிப்பக் கண்ணுள் நின்று அகலானே –10-8-7
கல்யாண குணங்கள் மனசை விட்டு அகலாது
வேறு என்ன வேண்டும்
மேலும் கைங்கர்யம்-அந்தி தொழும் சொல்
சாதிக்க -கிடைத்ததே
அருள பாடு வீணையும் கையுமாக லவ கேசர் காத்து இருந்து
வண்டும் நாம சங்கீர்த்தனம் செய்யும்-
பார்க்கிறவனும் பார்க்கிற படுவனும் அவனே
கண்ணாடி சேவை போல்
பக்தி பண்ண வைத்து தானே மகிழ்ந்தான்
கண்ணுள் நின்று அகலான் கருத்தின் கண் பெரியன்
எண்ணில் நுண் பொருள் எழ இசையின் சுவை தானே
வண்ண நன் மணி மாடங்கள் சூழ் திருப் பேரான்
திண்ணம் என் மனத்துப் புகுந்தான் செறிந்து இன்றே –10-8-8
கண்ணுள் நின்று அகல மாட்டான்
சூஷ்முமான அநந்த பொருளும் அவனே
எண்ண எண்ண தித்திகிறான்
இசை சேர்த்து -ராக பாவ தாளம் ஆனந்தம் தானே ஆகி
மனசில் புகுந்தான்
இன்று என்னைப் பொருள் ஆக்கித் தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்தது என் செய்வான் ?
குன்று என்னத் திகழ மாடங்கள் சூழ் திருப் பேரான்
ஓன்று எனக்கு அருள் செய்ய உணர்த்தல் உற்றேனே –10-8-9
பொருள் அல்லாத என்னை பொருள் ஆக்கி
ஆதங்கம் –
பத்து மாசம் பிராட்டி பிறிய-சிறை இருந்தவள் ஏற்றம் சொல்ல வந்ததே ஸ்ரீ ராமாயணம்
கதற விட்டு இருக்க வேண்டுமா
இன்று மயர்வற மதி நலம் அருளின பின்பு
அன்று -அவ் விசேஷ கடாஷம் முன்பு இருந்த அநாதி காலம்
ஈஸ்வரன் சொன்ன உத்தரம் எது பட்டரை நம் ஜீயர் கேட்க
லஜ்ஜை உடன் -நின்றான்
பழி அவர் தலையில் கட்ட –முடியவில்லை விருப்பமும் இல்லை
தாம் நஷ்டம் பட்டோம்-
பூதனை வேஷம்-விஷம் கொடுத்தவளுக்கு அமிர்தம் கொடுத்தாய்
யசோதைக்கு என்ன கொடுப்பாய்-பிரமன் கேட்டதும் தலை குனிந்தானே
திணறினார்-
திணற அடிக்கணும் -ஆழ்வார் எண்ணம்-
உரிமை உடன்கேட்டேன்-திணறினதே போதும்
உற்றேன் உகந்து பணி செய்து உன பாதம்
பெற்றேன் ஈதே இன்னம் வேண்டுவது எந்தாய் !
கற்றார் மறை வாணர்கள் வாழ திரு பேராற்கு
அற்றார் அடியார் தமக்கு அல்லல் நில்லாவே –10-8-10
சரண சேவை கிடைக்க வேண்டியது பெற்ற பின்
வேற என்ன வேண்டும்
ஈதே இன்னும் வேண்டுவது
பரம வைதிகர் வாழும் திவ்ய தேசம்-
இவனுக்கே என்று இருப்பவர்
அல்லல்- பகவத் பக்திக்கு பிர பந்தம் -இன்றி கிட்டும்
நில்லா வல்லல் நீள் வயல் சூழ் திருப் பேர் மேல்
நல்லார் பலர் வாழ்குருகூர் சடகோபன்
சொல்லார் தமிழ் ஆயிரத்துள் இவை பத்தும்
வல்லார் தொண்டர் ஆள்வது சூழ் பொன் விசும்பே –10-8-11
தொண்டர் ஆவார் பலன்
திருமால் தன் பால் விருப்பம் செய்கின்ற நேர் கண்டு
அரு மாயத்தன் அன்று அகல்விப்பான் என் ? –பெருமாள் நீ
இன்று என் பால் செய்வான் என் என்ன இடர் உற்று நின்றான்
துன்னு புகழ் மாறனைத் தான் சூழ்ந்து –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –98
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
திருவாய்மொழி-10-7-செம் சொல் கவிகாள் ! உயிர் காத்து ஆள் செய்ம்மின் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 25, 2011செம் சொல் கவிகாள் ! உயிர் காத்து ஆள் செய்ம்மின் திரு மால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே –10-7-1
திரு மால் இரும் சோலையில் முதலில் சொல்ல ஆரம்பித்து
அங்கேயே முடித்து அருளுகிறார்
கவி செய்வதே கைங்கர்யம்-வாசிக அடிமை
கள் அழகர் -வஞ்ச கள்வன்
வேஷம் போட்டு அனைவரையும் பிடிக்க செய்பவன்
மாயம் செய்வதில் சமர்த்தன்
நான் -தத்வம் இல்லாத படி
மனச வாக்கு காயம் இன்றி
ஆழ்வார் சந்நிதி இல்லை அழகர் சந்நிதி என்று சொல்லும் படி
ஞானி ஆதமை மே மதம்
தானே யாகி நிறைந்து எல்லா வுலகும் உயிரும் தானேயாய்
தானே யான் என்பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே யமுதே திரு மால் இரும்சொளை
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே –10-7-2
இரும்பு -பல பல -நெருப்பு போல்
தானே ஆகி –
வியாபித்து ஜொலிகிறான்
ஜங்கமா ஜங்கம் ஜகன் நாரயனோத் பவம்
அனைத்தும் நானே அர்ஜுனா நீயும் நானே
துதிப்பவனும் தானே
எனக்கு தேன பாலே
சுந்தர ராஜன்-சொவ்ந்தர்யதுக்கு — அழகுக்கு ராஜன்
கொஞ்சுகிறார்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திரு மால் இரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனே கொலோ ? என் கொல் அம்மான் திரு அருளே ?–10-7-3
முற்றிலும் தன் உடன் சேர்த்து கொண்டான்
உயிர் உடல் இரண்டிலும் ஆசை கொண்டான்
ஆக்கை இதனுள் புகுந்தான்
திசை நோக்கி கை கூப்பினாலே கிட்டுவான்
இனி பிரிவு எனபது ஒன்றுமே இல்லை
கண்டு கொண்டு இனி போக விடுவது உண்டோ -பெரி ஆழ்வார்
அருள் கொண்டு அவன் இடம் போனால் திரும்ப மாட்டோம்
என் கொல் அம்மான் திரு அருள்கள் ? உலகும் உயிரும் தானே யாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திரு மால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே –10-7-4
எதற்கு கை விடுவான்
கிருபா சாகரம்-அருள் கடல்
உடம்பிலும் ஆசை-பாகவதா அபிமானம்
திரு மேனி-கைங்கர்யம் செய்பவர்-சலமான மூர்த்தி அர்ச்சகர்
பிரபுவுக்கும் பிரபு-தாசி- வீட்டில் துவளுவான் போல்-
வைகுண்ட பதிக்கு உடம்பில் ஆசை
பாகவத சரீரமாக பண்ணினவனும் அவன் தானே
எங்கள் குன்றம்-நில மலை குளிர் மலை கொன்றை மலை
அசுரர் -விஷ்ணு பக்தி இல்லாத –
நண்ணா வசுரர் நலிவு எய்த நல்ல வமரர் பொலிவு எய்த
எண்ணா தன்கள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா வென்னும் என்னம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5
ஆச்ரயிக்காத அசுரர்-விஷ்ணு பக்தி இன்றி
நண்ணியவர்-பகவத் பக்தர்
முனிவர்-மனசுக்கு எட்டாத பகவத் குணம் எண்ணும் படி கடாஷம் பெற்ற பூர்வர்
இன்பம் தலை சிறக்க
தன்னை தானே பாடி கொண்ட அழகர்
தென்னா தென்னா -இழுத்து பாடி பார்கிறானாம்
திரு மால் இரும் சோலை யானே யாகிச் செழு மூ வுலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி யூழி தலை அளிக்கும்
திருமால் என்னை யாளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்து அடி பரவ அருளை ஈந்த வம்மானே –10-7-6
சர்வமும் அவனே
பிரளய காலத்தில் காத்து
பூரணன்
என்னை ஆளும் மால்
திருவுக்கும் மால்
மோகன உருவன்
அருளை ஈய என் அம்மானே !என்னும் முக் கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான் திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திரு மால் இரும் சோலை மலையே –10-7-7
பராத் பரன்
அனைவரும் ஈய அருள் என்று கேட்கும் படி
மலை நினைத்தே மோகம் தீரும்
திருமால் இரும் சோலை மலையே திரு பாற்கடலே என் தலையே
திரு மால் வைகுந்தமே தன் திரு வேம்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே –10-7-8
சான்னித்யம்-எங்கும்-அறியும் படி-
திரு மால் இரும் சோலை மலையே
இவனே திரு பார் கடலிலும் என் உச்சியிலும்
திரு வேம்கடமும் என் உடலிலும்
பிரியாமல்-தம்பதி போல் –
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம்
ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும்
ஆழி வண்ணன் என்னம்மான் அம் தன் திரு மால் இரும் சோலை
வாழி மனமே ! கை விடேல் உடலும் உயிர் ரும் மங்க வொட்டே –10-7-9
மங்க ஓட்டே -மறைந்தாலும் உன்னை வாழ்த்தி கொண்டே
இகத்திலும் அங்கும் வாழ்த்தியே
பிராரப்த சேஷத்தால் இங்கு இருப்பு இல்லை முன்பு
ஆர்த்தி நிறைந்தவர் ஆழ்வார்
பகவத் அபிப்ராயத்தால்
திரு வாய் மொழி பூர்த்தி ஆக்க
மங்க வொட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய
நங்கள் கோனே ! யானே நீயாகி என்னை அளித்தானே !
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம்
இங்கு இவ் வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே –10-7-10
24 தத்வமும் ஒரே பாசுரம்
மாயை-யானே நீயாகி என்னை காத்து
சைதன்யம் அவன்
சூர்யன் இன்றி வெய்யில் இல்லை
உடம்பில் ஜீவன் கோவிலில் ஈஸ்வரன்
அந்தர்யாமி ஆக இருந்து
பொங்கு விகாரம் அடையும் ஐம் புலன்
பொறி சப்தாதி
கர்ம இந்திரியம் கை கால் போல்வன
ஐம் பூதம் ஆகாசம்
பிரகிருதி மகத்த அகங்காரம் மனச
ஆக 24 பெரிய மாயை
நாம ரூபம் கொடுத்து ராக துவேஷம் பாபம் புண்யம் செய்ய வைத்து
அழகர் திரு அடி விழுந்து மாயை கூட்டை பிரியலாம்
மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க
தானான்காரமாய்ப் புக்குத் தானே தானே யானானை
தேனான்காரப் பொழில் குருகூர் சடகோபன் சொல்லா யிரத்துள்
மானான்காரத்தி இவை பத்தும் திரு மால் இரும் சோலை மலைக்கே –10-7-11
மனம் அகங்காரம் போல்வன -அஹம் -ஆத்மா அறிந்து
தான் புரிந்து
தேன் குடித்த வண்டு ரீங்காரம் செய்து
மகத்தான அபிமானம் வஸ்து பெருமையால் செம் சொல் பரன் தனது சீராரும் மேனி தனில்
வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் –விஞ்சுதலைக்
கண்டவனைக் கால் கட்டிக் கை விடுவித்துக் கொண்ட
-திண் திறல் மாறன் நம் திரு –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –97
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
திருவாய்மொழி-10-6- அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 25, 2011அருள் பெறுவார் அடியார் தம் அடியனேற்கு ஆழியான்
அருள் தருவான் அமைகின்றான் அது நமது விதி வகையே
இருள் தரு மா ஞாலத்துள் இனிப் பிறவி யான் வேண்டேன்
மருள் ஆழி நீ மட நெஞ்சே ! வாட்டாற்றான் அடி வணங்கே –10-6-1
கிருபை செய்ய சமயம் எதிர் பார்த்து இருக்கிறான்
விதி-பிரகிருதி-மாயை-
கால விளம்பம் எதற்கு
வாய்ப்பு காகா காத்து -அபேஷை ஒன்றையே எதிர் பார்கிறான்
அனைத்தையும் மீறி கிருபை செய்வான்
அபேஷை இன்றி பல கல்பம் காத்து இருக்கிறான்
பூர்ண நிதி யோக ஷேமம்
பிரகிருதி இழுக்கிற பக்கம் போய் -பூர்ண நம்பிக்கை இன்றி
கபடமாக நம்பி–
ஹிதம் செய்தாலும் -நம்பால் இருந்தாலும் -விடாமல்-அபேஷிக்கும் படி செய்ய
சத் சங்கம் கொடுத்து அபேஷை வளர்த்து
அவன் ரஷகன் என்பதை எடுத்தி சொல்லி
அவன் இடம் சேர்க்க -கிருஷி கார்யம் செய்கிறான்
ஆப்த வசனம் நம்புகிறான்
எதையும் எதிர் பார்க்காத சாது-ஆச்சார்யர் பூர்ண கடாஷம்
பகவத் விஷய கால ஷேமம் செய்து –
பெருமாள் இடம் அகப் பட்டு நிம்மதி கிட்டும்
எங்கு இருந்தோம் எங்கு வந்தோம் நினைத்து
அவன் சம்பந்தம் கிட்டிய ஆனந்தம்
பரக்க அருளுகிறார் இத திரு வாய் மொழியில்
கர்ம யோகாதிகள் இன்றி- அவன் அடி- அருள் பெற்ற அடியவர் அடி-
அடைந்ததும் ஆழியான் அருள் தருவான்
ஆச்சர்ய ஸ்ரீ வைஷ்ணவ சம்பந்தம் ஒன்றே ஹேதுவாக அள்ளி கொடுக்கிறான்
காதா சித்தமாக கொடுத்தாலும் -அவனுக்கு வாய்ப்பு கிட்டுமாம் நமக்கு அருள் புரிய
விபீஷணன் நிவேதயமாம் சிபரம்-குரங்கு கல் கூட்டம்-அருள் பெற்றவர் இடம் வின்னப்பிகிறான்
மந்திர மலை கோவர்த்தன மலை தூகினவன் சம்சாரம் நீக்குவது பெரிய கார்யம் இல்லை
மாயை-அகங்காரம் மமகாரம் பிடிக்க வைக்க
மூடன்-திமிர் -கிருபை கிட்டாது
நடுவில் குரு வேண்டுமா
நாரதர் கடாஷம் பெற்றானே பிரகலாதன் கர்பததிலே
பிரிய ஜன -பாகவதர் கிருபை அபிமானம் ஒன்றே வேண்டும்
நாம் அவர்களை அலஷ்யம் படுத்தினாலும் அவர் நம்மை கடாஷித்தால் போதும்
சரம பர்வ நிஷ்ட்டை –ஸ்ரீ வைஷ்ணவ அபிமானம்
திரு கச்சி நம்பி-ஆல வட்ட கைங்கர்யம்
லஷ்மணன் ஒரே நாள் அடுத்து பிறந்தாலும்
நித்ய குழந்தை போல் பெருமாளுக்கும் பிராட்டிக்கும்
இளைய பெருமாள்-நமக்கு-
அந்தரங்க சேவை செய்வாரே
அது போல் திரு கச்சி நம்பியும்
வீசினதற்க்கு பேசினதர்க்கும் சரியாக போனது
ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைஷ்ணவ ஆச்சார்யர் அபிமானம் கொண்டே பெறலாம்
பெரிய நம்பி-வண்டி காரன் போல் ஒட்டி முகம் காட்டாமல்-உடுத்து களைந்த வஸ்த்ரம்-டே கூப்பிட்டு கொடுத்தும்
கண்ணில் ஒத்தி கொண்டு
இப்படி செய்யலாமா
தேவ பெருமாள் கடாஷதுக்கு பாத்ரம் ஆனேன்
சர்வேச்வரனுக்கும் இது நியதி-விதி வைத்து
அமைகின்றான்-அது நமது விதி வகையே
சத் சங்கம்
சத் சங்கம் கிடைக்க அது நமது விதி வகையே –
நம்முடைய பக்யாதி குணம் என்பர் பூர்வர் –பூர்வ புண்ய பலன் தானே பாக்கியம்
ஸ்வாமி ராமானுஜர்–நாம் விதித்த படியே செய்வான் என்று நினைத்திரா நின்றான் –
அந்த சத் சங்கம் கொடு கேட்டால் அதை ஏற்பாடு செய்வானாம் -கேட்டு கொடுப்பான் சத் சங்கம் அருமை அறிந்து
ருசி கரமாக இருகிறதே -ஆசை பட்டால் இப் பிறவியிலே கொடுப்பான்
பூர்வ கர்மா பலன் என்றால் எப்பொழுதோ தான் வரும் —
திரு வட்டாற்றான் அடி வணங்கி இதை பெறலாமே
வாட்டாற்றான் அடி வணங்கி மா ஞாலப் பிறப்பு அறுப்பான்
கேட்டாயே மட நெஞ்சே ! கேசவன் எம்பெருமானை
பாட்டாய பல பாடிப் பழ வினைகள் பற்று அறுத்து
நாட்டாரோடு இயல் ஒழிந்து நாரணனை நண்ணினமே–10-6-2
நாட்டாரோடு இயல் ஒழிந்து இதில்
முதலில் சத் சங்கம் பெருமை சொல்லி இதில்
சம்சாரிகள் இழிவு புரிந்து விட வேண்டுவதை அருளுகிறார்
இவர்கள் அர்த்த காம பரர்
நாமோ வேற லஷ்யம் -தெளிவு கொண்டு –
நிஸ் சங்கம் இவர்கள் உடன்
சத் சங்கம் வர ருசி பெருகி -திரு நாம சங்கீர்த்தனம்-திரு வாய் மொழி அனுசந்தானம்
இதுவே பொழுது போக்காய்–பகவத் குண அனுபவம் சொல்லி கேட்டு
நண்ணினம் நாராயணனை நாமங்கள் பல சொல்லி
மண்ணுலகில் வளம் மிக்க வாட்டாற்றான் வந்து இன்றி
விண்ணுலகம் தருவானாய் விரைகின்றான் விதி வகையே
எண்ணின வாறாகா இக் கருமங்கள் என்நெஞ்சே !–10-6-3
திவ்ய தேசம் எழுந்து அருளி-
நமக்கு இப் பிறவியிலே ஸ்ரீ வைகுண்டம் அருள விரைகின்றான்
பிரார்ரப்தம்-ஆகாமம்-சஞ்சிதம் அனைத்தையும் நீக்கி
விதி வகையே விரைகின்றான்
ஆர்த்தி இருவருக்கும் வந்தால் பிராரப்தம் கூட தள்ளி விடுவான்
கையில் வைத்து கொண்டு-கொடுக்க காத்து
சிந்தயந்தி-உடனே பெற்றாள்-
ராசா கிரீடை போக முடியாமல்-உச்சமான துக்கம் அனுபவித்து –
வேணு கானம் கேட்டு உச்ச ஆனந்தம் அனுபவித்து இரண்டும் நீங்க பெற்றாள்
நாத முனிகள்-பிரமாணம்
வேடுவன் வேடுவாச்சி போல்-வர -வில்லும் கையுமாக –
சக்கரவர்த்தி திரு மகன்-கங்கை கொண்ட சோழ புரம் ஓடி போய் –
உன் திரு அடி சேர்த்து கொள் என்றதும் அவன் அடி சேர்ந்தார்
இவர்க்கு ருசி பிறப்பதற்கு முன்பு தான் எதிர் சூழல் புக்கு -விரைந்து திரிந்தான்
பின்பு இவர் விரைய துடங்க
அவன் விச்வமிதர் ஆகிறார்
நடை அழகு-ருசி பிறக்க -பேசி-துளசி தீர்த்தம்-திருஅடி சேர்த்து கொள்ள -விச்வமிதர் ஆகிறார்
என் நெஞ்சத்துள் இருந்து இங்கு இருந்த தமிழ் நூல் இவை மொழிந்து
வன் நெஞ்சத்து இரணியனை மார்வு இடந்த வாட்டாற்றான்
மன் நெஞ்சத்துப் பாரதத்துப் பாண்டவர்க்கா படை தொட்டான்
நல் நெஞ்சே ! நம் பெருமான் நமக்கு அருள் தான் செய்வானே –10-6-4
தேக அவசானே -ஆர்த்தி இன்றி–பிர பன்னருக்கு
பரண்யாசம் பண்ணி- மரணம் அடைந்தாள் வைகுண்டம் கொடுக்கும் பிரான்
நிச்சயம் கிட்டும்
திரு வாய் மொழி சேவித்து-பகவத் குணம் அனுபவம்
பரம பதம் கொண்டு போகும் மூட்டை இவை
புண்ய பாப மூட்டை அங்கெ செல்லாது
பக்தி மூட்டை தானே செல்லும்
வானேற வழி தந்த வாட்டாற்றான் பணி வகையே
நான் ஏறப் பெறுகின்றேன் நரகத்தை நகு நெஞ்சே !
தேனேறு மலர்த் துளவம் திகழ பாதன் செழும் பறவை
தானேறித் திரிவான தாள் இணை என் தலை மேலே –10-6-5
அவன் பணித்தான்
நம்மை சேர்த்து கொண்டான்
பிர பன்னன் ஆன பின்பு
ஸ்ரீ சடாரி சாதித்து ஆழ்வார் சம்பந்தம் பெற்ற பின்பு
ஸ்ரீ வைகுண்டம் செல்வது திண்ணம்
கிஞ்சித் சங்கை இல்லை -நம் சொரூபம் பார்த்தால் வரலாம்
ஆச்சார்யர் அவன் சொரூபம் பார்த்து கரை ஏறுவது திண்ணம்
நகு நெஞ்சே நரகத்தை பார்த்து-சம்சாரம் பார்த்து ஏளனம் செய்து
திரிகின்ற அவன் திரு அடி ஸ்ரீ சடாரி மூலம் தலை மேல் கொண்டதும்
தலை மேல தாள் இணைகள் தாமரைக் கண் என் அம்மான்
நிலை பேரான் என் நெஞ்சத்து எப்பொழுதும் எம்பெருமான்
மலை மாடத்து அரவணை மேல் வாட்டாற்றான் மதம் மிக்க
கொலையானை மருப்பு ஒசித்தான் குரை கழல்கள் குறுகினமே-10-6-6
சாஷாத்கார அனுபவம் அடுத்து
படி படியாக அனைத்தையும் சொன்ன பின்பு-
இது வரை கிட்டும் -நாத முனிகளுக்கு கிட்டியது போல்
அழுவன் தொழுவன் பிரேமா பக்தி
கங்குலும் பகலும் கண் துயில் அறியாமல்
உண்ணும் சோறு பருகும் நீர் எல்லாம் அவன்
பகவத் குண அனுபவம்-குரை கழல்கள் குறுகினம்
பாதுகா தொனி–மணி நூபுர தொனி கலீர் கலீர் ஒலிக்க-
குரை கழல்கள் குறுகினம் நம் கோவிந்தன் குடி கொண்டான்
திரை குழுவு கடல் புடை சூழ் தென்னாட்டுத் திலதம் அன்ன
வரை குழுவு மணி மாட வாட்டாற்றான் மலர் அடி மேல்
விரை குழுவு நறும் துளவம் மெய் நின்று கமழுமே–10-6-7
நம்மை சுத்தி இருக்கிறான் சப்திகிறதே
துளசி கந்தமும் கிட்ட வீச
கண்ணுக்கு காணுமாறு வாராயா -அழுதால்
கை நின்ற சக்கரத்தன்
திரு உருவம் காட்டி-வன மாலை தரித்து
மேக சியாமளன் அஞ்சன மலை போல்
என் நன்றி- செய்தேனோ –பெரிய உடையாரை போலே என்னை அழிய பண்ணி கொண்டேனோ
சிறிய திரு அடி போல் தனியாக இருக்கும் பொழுது உதவினேனோ-
குசேலர்-கண்ணீர் விட்டாரே கிருபை கிட்டியதும்
மெய் நின்று கமழ துளவ விரை ஏறு திரு முடியன்
கை நின்ற சக்கரத்தான் கருதும் இடம் பொருது புனல்
மை நின்ற வரை போலும் திரு வுருவ வாட்டாறார்க்கு
என் நன்றி செய்தேனோ என்னெஞ்சில் திகழ்வதுவே? –10-6-8
திகழ்கின்ற திரு மார்பில் திரு மங்கை தன்னோடும்
திகழ்கின்ற திருமாலார் சேர்விடம் தன் வாட்டாறு
புகழ்கின்ற புள்ளூர்தி போர் அரக்கர் குலம் கெடுத்தான்
இகழ்வின்றி என்னெஞ்சத்து எப்பொழுதும் பிரியானே –10-6-9
மிதுனமே உத்தேசம்
ருக்மிணி கட்டி தூக்கியதும் சோபை அதிகரிக்க
திகழ்கின்ற திரு மால்
புகழும் கருட சேவை
இகழ்வு என்று எண்ணாமல் என் நெஞ்சில் குடி புகுந்தானே
தோஷம் இருகிறவர்களுக்கு தான் வேண்டும் –
பரந்த நோக்கம் வேண்டும்
மித்ரா பாவேனே -குற்றம் இருந்தாலும்-சேர்த்து கொள்வானே -தோஷம் -சதாம் ஏகம் அகதி
பிரியாது ஆள் செய் என்று பிறப்பு அறுத்து ஆள் அறக் கொண்டான்
அரியாகி இரணியனை ஆகம் கீண்டான் அன்று
பெரியார்க்கு ஆள் பட்டக்கால் பெறாத பயன் பெறுமாறு
வரி வாள் வாய் அரவணை மேல் வாட்டாற்றான் காட்டினனே –10-6-10
கைங்கர்யத்தில் சென்று பூர்த்தி
வேண்டேன் மனை வாழ்க்கை-சாஷாத் காரம் பிரார்த்திக்கிறார்
கொடுத்த இடத்தில் அர்ச்சை பிரார்த்திக்கிறார் பின்பு அது
கிடைத்ததும் கைங்கர்யம் செய்தாரே கலியன்
பெரியார்க்கு ஆள் படுத்தி
சத் சங்கம்
லோக விஷயம் நீக்கி
பகவத் குண அனுபவம் முமுஷு ஆக்கி
ஆர்த்தி பெற வைத்து
போஷித்து சங்கை நீக்கி பரி பக்குவ நிலையில் சாஷாத் காரம் பின்பு கைங்கர்யம் கொடுத்தாரே
காட்டித் தன் கனை கழல்கள் கடு நரகம் புகல் ஒழித்த
வாட்டாற்று எம்பெருமானை வளம் குருகூர் சடகோபன்
பாட்டாய தமிழ் மாலை ஆயிரத்துள் இப் பத்தும்
கேட்டு ஆரார் வானவர்கள் செவிக்கு இனிய செம் சொல்லே –10-6-11
திரு அடி காட்டி-வரத ஹஸ்தம் மூலம் காட்டி
நரகம் ஒழித்த
இப் பத்தும் சொல்ல ஆரார் வானவர் –
கோஷ்டியில் சேர்த்து –செவிக்கு இனிய செம் சொல்
திரு வாய் மொழி –
நித்தியரும் கேட்டு ஆரார்
அருளால் அடியில் எடுத்த மால் அன்பால்
இருளார்ந்த தம் உடம்பை இச்சித்து –இரு விசும்பில்
இத்துடன் கொண்டு ஏக இசைவு பார்த்தே இருந்த
சுத்தி சொல்லும் மாறன் செம் சொல்லே –திருவாய் மொழி நூற்று அந்தாதி –96
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
திருவாய்மொழி-10-5-கண்ணன் கழலினை -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 25, 2011கண்ணன் கழலினை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணம் திரு நாமம்
திண்ணம் நாரணமே –10-5-1
கண்ணன் கழலினை-ஆழ்வார் வைபவம் சொல்ல வந்த வார்த்தை
இன் இசை பாடி திரிந்த மதுர கவி அல்வார்
தாமர சத்து தாமர பரணி-பொன் சத்து -காவேரி-
ஆழ்வார் திரு மேனி/எம்பெருமானார் திரு மேனி இதை கொண்டு
மதுரை தமிழ் சங்கம்-அருள் கவி-திவ்ய கவி-மருள் கவி இல்லை
அனல் வாதம்/புனல் வாதம் உண்டே
தேவர்களுக்கு சம்மதம் என்று பரிட்ஷை
இந்த பாசுரத்தில்- இந்த வார்த்தை-பானை பதம் பார்க்க சொல் போல்
அனல் பொசுக்க வில்லை புனல் தவளை போல் ஏத்தி வர
ஈடு இல்லாத திவ்ய பிரபந்தம் காட்டி கொடுத்த சொல்
அல்ப கார்யம் செய்து பெரிய பலன்
எண்ணினாலே போதும்-ஸ்மரணம் திரு நாமம் –
விளையாட்டாகா கேலியாக சொன்னாலும் செயல் படும்
திரு மந்த்ரம் சொல்ல யோக்யதை
அதிகாரி அங்க நியதி வேண்டா
பிரஜை தாய் பேரை சொல்லுவது போல்
அங்கங்கள் உண்டே மந்திர சித்தி
என்த்ரங்களும் உண்டு சில மந்த்ரங்களுக்கு
மந்த்ரத்தில் மாங்காய் விழாது -பல மொழி
நாக்கில் பட்டாலும் போதும்
ஏளனமாக சொன்னாலும் போதும்-
அதிகாரி கால தேச நியமனம் இன்றி –
எங்கும் சொல்லலாமே நாராயணா -என்று
ரஷா கிரந்தம்-தேசிகன்-
குழந்தை அம்மா -கூப்பிடுவது போல்
ஆய் அலம்பி விட கூட கூப்பிடலாமே
பிரேமை உரிமையாக கூப்பிட லாமே
பக்த வத்சலன் –
நாரணன் எம்மான்
பார் அணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே –10-5-2
பூதேவி நாதன்
குவலையா பீடம் தொலைத்த
வாரணம் காத்த பரம் பொருள்-கஜேந்த்ரனை காத்தவன்
கற்றினம் மேய்த்த கழல்-சௌலப்யம் சொல்லி பரத்வம்
பத்து வயசிலே ஆயிரம் யானைக்கு சமானமான யானையும் பாகனனையும் முடித்து
அவதார லீலையால் பர வஸ்து காட்டி
தானே உலகு எல்லாம்
தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து
தானே யாள்வானே –10-5-3
இவனே ஸ்வாமி
தானே படைத்தது-வேறு உபாதான காரணம் இன்றி நிமித்த காரணம் இன்றி
உண்டு உமிழ்ந்து
ராம கிருஷ்ணா அவதாரம் செய்து அளித்து
சர்வம் கல்மிதம் பிரம -அசேதனம் அவன் ரூபம்
தத் துவம் அஸி– செத்தனர் அனைவரும் அவன் ரூபம்
ஆள் வான் ஆழி நீர்
கோள் வாய் அரவு அணையான்
தாள் வாய் மலர் இட்டு
நாள் வாய் நாடீரே –10-5-4
கடல் நீரில் காந்தி உள்ள வாய் கொண்ட அரவின் அணையில்
சயனித்து
நாடீர் நாள் தோறும்
வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம்
வீடே பெறலாமே –10-5-5
லஷ்யம் திரு அடி ஒன்றே
திண்ணம்-சங்கல்பம்
இந்த பிறவியே கடைசி
துளசி புஷ்பம் இட்டு அல்லும் பகலும் இல்லா விடிலும்
அவன் திரு நாமம் சொல்லி கொண்டே இருக்க
வீடே பெறுவோம்-
வீடே பெறலாமே -இரண்டு ஏகாரம்
நாம ஜபம் –எண்ண கண்ண விரலால்
நாம ஸ்மரணம் எண்ண
நாம கீர்தனமே போதும்
பாடீர் அவன் நாமம்
ஞான வைராக்கியம் எல்லாம்
அம்மா போல் அவன் அனைத்தையும் கொடுப்பான்
மேயான் வேம்கடம்
காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட
வாயான் மாதவனே –10-5-6
பூதனை கூட பெற்றால்
விஷம் அவள் கொண்டு வர
நாமம் கொண்டு மாதவனே திரு வேம்கடத்தில்
வேம்கட கிருஷ்ணன்
காயா மலர் வண்ணன்
மாதவன் என்று என்றே
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா
ஏதம் சாராவே –10-5-7
அவன் திருநாமமே
கேசவா ஹரே
மாதவா ஹரே
ராம கிருஷ்ணா ஹரே
வாசுதேவ கோவிந்தா ஹரே
கேசவா ஹரே
சொல்லி கொண்டே இருக்க
பக்திக்கு இடையூறு நீங்கும்
திரு நாம சங்கீர்த்தனம் பண்ண இடையூறுகளும் நீங்கும்
பூர்வ பாவம் போகும்
சாரா ஏதங்கள்
நீரார் முகில் வண்ணன்
பேரார் ஓதுவார்
ஆரார் அமரரே –10-5-8
ஜல தர சியாமளன்
யார் யார் ஓதுவார்
அவர் அவர் நில தேவர்
பூமியிலே நித்யர்
நிரந்தரமாக திரு நாமம் சொல்பவர் நித்யர் ஒப்பு
அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே –10-5-9
தேர்வர்களுக்கு துற லபன்
பக்தர்களுக்கு சுலபன்
அவியாஜா பக்தி –
வினைகள் பறந்து போகுமே
வினை வல் இருள் என்னும்
முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலர் இட்டு
நினைமின் நெடியானே –10-5-10
அஞாஞானம் இருட்டு முனை மழுங்கி போகும்
தானே விலகும்
நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப் பத்து
அடியார்க்கு அருள் பேறே –10-5-11
சர்வோத்தமன்-நெடியான்
அருள் சூடும் படி இருக்கும் சடகோபருக்கு ஒப்பு இல்லை
நொடி-சொன்ன
இதற்கும் ஈடு இல்லை
இது தானடியார் பெற்ற பேரு
பாக்கியம்
கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணம் உறவே சுருங்க செப்பியே –மண் அவர்க்கு
தான் உபதேசிக்கை தலை கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –95
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
திருவாய்மொழி-10-4-சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 25, 2011சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்
கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே –10-4-1
ஆச்சர்யமான பக்திக்கு பக்தி ஒன்றே பலன்
வேறு என்ன வேண்டும் -பிரேமா பக்தி சுயம் பலம் ரூபத்வாத்
அதை நினைத்து ஆழ்வார் உகந்து அருளி செய்த திரு வாய் மொழி
சார்வு-பலன்
சியாமள வர்ணன் கமல நயனன்விஸ்வ ரூபன்
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும்
திரு மெய் உறைகின்ற செம்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே –10-4-2
பெருமை மிக்கவன்
ப்ரஹ்மாதிகளும் காண முடியாதவன்
ஹிருதயம் இருப்பதே அவனை நினைபதற்கே
ஹரி நாமம் சொல்லி -சுக ஹர்ஷம் உருகி-
திரு -தாயார் மெய் வஷசதளம் உறையும்
இங்கு என்னை ஆள்கின்றான்
சம்சாரத்திலும்ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் ?
மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப் பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே –10-4-3
என்னை ஆள் கொண்டவன் சக்கரபாணி
யாரால் குறை
மீள்கின்ற்றது இல்லை -பிறவிக்கு அழ வேண்டாமே
நப்பின்னை -ஈடு இணை இல்லாத -மணவாளன் –
திரு நாம கீர்த்தனம்-நியதிகள் ஒன்றும் இல்லை
நாக்கில் பட்டால் போதும்-கேளனமாக சொன்னாலும் போதுமே
அதிகாரி பேதம் இல்லை /கால நியமனம் இல்லை/தேச நியமனம் இல்லை
ஓர் அங்க நியதி வேண்டாம்
பிரஜை தாய் பெயரை சொல்லுமா போல்
தலை மேல் புனைந்தேன்
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே –10-4-4
திரு மலையில் நின்று -என் மனசில் இருந்து –
பேராமல்–நிச்சித்து இருந்தேன்
நிச்சித்து இருந்தேன் என்நெஞ்சம் கழியாமை
கை சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5
கள்ளன் அவன்-
பட்டுஎன்று நீங்குவான்
எனக்கு நீங்க மாட்டான்
பிறர்க்கு- தேவதாந்திர பரர்களுக்கு -பட்டு என்று விலகுவான்
மெச்சினால் இவர்கள்-ஒத்து கொள்ள மாட்டார்களே
இவனே பராத் பரன் என்று உணராமல் –
சித்தாந்தம் அர்த்த வாதம் இல்லையே
மெய் போல் பொய் சொல்வான்-
அச்சத்தை கொடுத்து அனுப்பி விடுவான்
திட நிச்சயம் -என்னை விட்டு அகலான் நானும் விட மாட்டேன்
மாமேகம் சரணம் விரஜ நம்பி இருப்பேன்
நச்சப் படும்-ஆசை பட்டு கொண்டு இருப்பேன்
க்ருபா சாகரம்-ஆழம் அறிந்து –
நகத்து அணையானே -பெரிய பெருமாள் ஒருவரையே நிச்சயித்து இருப்பேன்
நாகத்து அணையானை நாள் தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே –10-4-6
ஞானம்-நச்சப் படும்-நமக்கு ஸ்வாமி சேஷ பூதன் என்று அறிவதே ஞானம்
ஹிருதயமே ஸ்ரீ ரெங்கம் ஆக்கி
பராத் பரன் -செஞ்சடை அப்பனை தன் பாகத்தில் வைத்து
சங்கரனுக்கும் திரு மேனி கொடுத்து காத்தானே
பணி நெஞ்சே ! நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே –10-4-7
பரம் பரன் பரன்-அவனையே பணிந்து
பிறவி அறுத்து
நீல ரத்னம் போல்
எம்பெருமான்-
சக்கர பாணி-
ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்
ஊழி யான் ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே ! மறவாது வாழ கண்டாய் –10-4-8
நித்ய சூரிகள்- ஊழி காலத்திலும் அழியாத
பெருமை சொல்லி- நிரை மேய்த்தான்
பரதவ சீல எல்லை
கோவர்த்தனம் எடுத்து காத்தான்
பாதங்களை வாழ்த்தி அனுகூல நெஞ்சே வாழி
கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே
விண்டே யொழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி யொழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே –10-4-9
கண்ணன் மலர் பாதம் கண்டேன்
உடனே நல் வினை தி வினை இரண்டும் தீர
-பட்டு பட்டு விண்டு கீழே விழ
என்றும் தொண்டு செய்து வாழும் படி
கைங்கர்ய ஸ்ரீ பெற்று
பண்டு கண்ணன் நியமித்த படி
மாம் ஏகம் சரணம் விரஜ -அவன் பணித்த படி
தொண்டே செய்து -ஸ்ரீ பாஞ்சராத்ரம் தொண்டுக்கு -சதசம் இத -பல சமிகிதைகள் உண்டு
சாஷாத் ஸ்ரீமன் நாராயணன் தன்னை ஆராதிக்கும் முறை அருளியது
ஐந்து இரவில் உபதேசம்
பகவத் கீதை-அவன் சொன்னது -ஸ்ரீ பகவான் உவாச –
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமரர் கட்கு ஓர் பற்றே –10-4-10
வித வித கைங்கர்ய வகை-சொல்ல படும்
தூபம் தீபம் வகை புஷ்ப வகை தீர்த்த கைங்கர்யம்
அவன் பணித்த முறை படியே
திசை தோறும் தேவர் முனிவர் தோழா
பெரும் தகை -பெருமாள்
பற்று என்று பற்றிப் பரம பரம் பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை யந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே –10-4-11
பற்றுதலை விட்டு
அவனை பற்றி-கண்ணன் கழலினை
ஆழ்வாரும்-பரம்பரை அரச குடும்பம் -வழுதி நாடு
திண் தோள் கொண்டவர்
இந்த பதிகம் கற்று-இதை பிடித்தால் கண்ணன் கழல் கிட்டும்
அவலம்பனம் இது –பிடித்து கொடுக்கும்
சார்வாகவே யடியில் தான் உரைத்த பத்தி தான்
சீரார் பலத்துடனே சேர்ந்ததனை –சோராமல்
கண்டு உரைத்த மாறன் கழல் இணையே நாள் தோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –94
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
திருவாய்மொழி-10-3-வேய் மரு தோள் இணை மெலியுமாலோ ! -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 25, 2011வேய் மரு தோள் இணை மெலியுமாலோ !
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ !
கன மயில் அவை கலந்து ஆலுமாலோ !
ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ !
தாமரை கண்கள் கொண்டீர்தியாலோ !
தகவில்லை தகவிலையே நீ கண்ணா !–10-3-1
வேணு கீதம் -விரக தாபம் உடன் –
பிரணய கீதம் -கோபிகா கீதம் பிரசித்தம்
பிரமர கீதம்-வண்டு கண்டு அருளியது கோபிகள்
பிரியம் கூட கூட விரக தாபம் மிகுந்து –
சேர்ந்தவர் பிரிய கூடாது -மீரா கண்ணன் இடம் சட்டம் போட சொல்கிறாள்
அன்பு ஆர்வம் உருக்கம்-பிரிய நிலைகள்-
இதை பகவத் விஷயத்தில்-உண்மையான பக்தி-ஞான தீபம்-ஏத்தி திரு கண்டேன் காணலாம்
காலையும் வந்தது கிளம்பி விடுவானே எப்படி இருப்போம்
மாடு மேய்க்க போக வேண்டாம் கோபி பாவம்
மூங்கில் போல் பருத்தும் சிறுத்தும் இன்றி மள மள இருக்கும் தோள்கள்
நீ தழுவா விடில் மெலியும்
தொட்டு தொட்டு பேசுவதே புஷ்ட்டி
கூவாமல் குயில் இருக்கலாமே -கா -பூங்கா -இன் நினைவு வாட்டுமே
மயிலும் அகவ
பசுக்கள் மேல் கை வைத்தது நீ போக பகல்-நொடி யுகம் போல் –
போகும் அழகை பார்க்க -கடை கண்ணால் பார்த்தது குத்த
தகவில்லை தகவிலையே நீ கண்ணா !
தடமுலை புணர் தொறும் புனர்ச்சிக்காரா
சுக வெள்ளம் விசும்பிறந் தறிவை மூழ்க்கச்
சூழ்ந்து அது கனவென நீங்கி யாங்கே
அக வுயிர் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை யந்தோ !
மிக மிக வினி யுன்னைப் பிரிவையாமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே –10-3-2
கண்ணா இது தகாது
போகிற போக்கில் ஆலிங்கனம்
சுகம் ஆகாசம் தாண்டி போக
நினைவு மூழ்கி போக
அறிவை மூழ்க கனவு போல்-
அகம் அகம் தோறும் -நீ தானே துணை
வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வெவ் வுயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து
உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த
இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3
கோபிகள் -விரகம் ஒன்றாலே
தொழுததை-அடிமை
தனிமை தானே சாவது
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா ! நின்
தொழுத் தனிற் பசுக்களையே விரும்பித்
துறந்து எம்மை இட்டவை மேய்க்கப் போதி
பழுத்த நல் லமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மணம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த
நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி
நினை தொறும் ஆவி வேமால் –10-3-4
அடிமைகள் -விரகமும் -அறியாதவன்-நீ
அறிவிக்க -நீ கோபியாகணும்
கண்ணன் வேற வேண்டும்
அவன் பிரிந்தால்
நீ மோகன அவதாரம் -கண்ணன் வேணுமே
மாதிரி இல்லையே
மதுரை கண்ணன் வேற பிருந்தாவன கண்ணன் வேற
துவாரகை கண்ணன் வேற
சர்வக்ஜன் ஆனாலும் பிரிந்தவர் துயரமறியாதவன்
தொழுவம்-மாட்டு கொட்டகை
விரும்பி போகிறாய்
எங்களை துறந்து போகிறாய் உகந்து
பழ சாறு போல் அதர அமுதில் அழுத்து முழுக விட்டு
கள்வன் போல் வார்த்தை சொல்லி போனாய்–
உன்னை விட்டு பிரிய மாட்டேன் குளிர்ந்த வார்த்தை சொல்லி போனாயே
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா !
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தின்றாலோ !
மணி மிகு மார்வின்னின் முல்லை போது
என் வன முலை கமழ வித்து உன் வாய் அமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை அந்தோ !
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் –10-3-5
பிரியே கொஞ்சி சொல்லி வார்த்தை
பிணைந்து -கட்டு விட்டு –
காற்று அளைந்து-சுகந்தம் -மாலை
முல்லை பூ மாலை சாத்தி-
அடிசியோம் சிரசில் வைத்து அனுக்ரகனம்
பிரேமையில் சுய நலம் இல்லை
எனக்கு சொல்லாமல் அடிசியோம் என்பர்
அனைவரையும் கூட்டி -சக்ய-தோழி மார் -கூடி இருந்து குளிர
கண்ணனே அமுது -திரு கண்ண அமுது- -அடிசியேன் சொல்லாமல்
எமக்கு அடிசியோம் என்கிறார்
அடிச்சியோம் தலை மீசை நீ யணியாய்
ஆழி அம் கண்ணா ! உன் கோலப் பாதம்
பிடித்தது நடுவுனக் கரிவை யருமபலர்
அது நிற்க எம் பெண்மை யாற்றோம்
வடித் தடம் கண் நினை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –10-3-6
பாத சேவை பண்ண பலர் இருக்க
பிரேமை சாகரம்-என்னுடையவன்-எண்ணம் கொடுக்கும்
வடியும் கண்ண நீர் நில்லா
மனசும் அடக்க முடிய வில்லை
பசு நிரை மேய்க்க போனால் நெருப்பில் பட்ட மெழுகு போல் உருக
வேம் எமது உயிர் அழல் மெழுகி லுக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க் கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா ! உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலை பெய்யில் எவன் கொல் ஆங்கே ?–10-3-7
உயிர் வெந்து போக
வெள்ளி வளையல் இடைச்சி-கழன்று விழ
மேகலையும் விழ
விரக தாபம் வெளுத்து
ஷணம்-ஜடமான பூக்களே கண்ணன் வந்தால் மலர்ந்து போனால் வாட
திரு அடி பிடித்து விட -கூசி பிடிக்கும் மெல் அடி -மலர் போன்ற
கல் உள்ள காட்டில் போகிறாயே
அசுரர்கள் பலர் வரும் இடம் வேற
என்ன ஆகுமோ-மாடு மேய்க்க போகாதே
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ? ஆங்கு என்று
ஆழும் என் ஆர் உயிர் ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கல்வியும் நலியும் என் கை கழி யேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண் ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே –10-3-8
அசுரர்கள் பலர் வரும் கதை கேட்டு கவலை
பிரியத்துக்கு அர்த்தம் கவலை
பிள்ளை உறங்கா வல்லி வம்சம்-கத்தி வைத்து போவார்
புறப்பாட்டில் -தாசர் போல்-எதாவாது ஆபத்து வர கூடாது
வார்த்தா மாலை- குத்துவதற்கு இல்லை-ஆபத்து வந்தால் என்னை குத்தி
அதை நினைந்து பெருமாள் யாரையும் அபசாரம் படாமல் இருக்க சங்கல்பிப்பான்
எவன் கொல் ஆங்கு -கவலையில் தான் கண்ணன் திரும்பி வருகிறான்
நினைந்து -ஹிருதயம் கசிந்து பிரிந்து வறண்டு-கலவை
கசிகையும் வேட்கையும் கலந்து
கை இலே இரு புஜங்கன்-பாம்பு-அர்த்தம்-கை விட்டு போகாதே
பெண்களுக்கு கையாள் கண்ணன்
இட்ட வேலை செய்து கொண்டு வீட்டிலே இருக்கும் கண்ணன்
தாஸ்யம் -யாக சாலை போக வெட்கி-
வீட்டு வேலைக்கு -இருவரும் சேர்ந்து கடைய வளை கை ஸ்பர்சம் விரும்பி
ஒல்லை நானும் கடைவேன் –
பிரேமை ஒன்றுக்கு தான் கிடைப்பான்
வசிய மருந்து உன் கடாஷம் மந்த ஹாசம் திரு கைகள் அழகு
பீதக ஆடை காட்டினால் -இடை ஓடியும் மேகலை கழல பார்த்து நீ உகப்பாய்
கோபாலன்-பெயருக்கு தக்க மாடு மேய்க்க போக வேண்டுமே
உகக்கு நல்லவரோடும் உழி தந்து
உன் தன் திரு வுள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க வின்புறுதும் எம் பெண்மை யாற்றோம்
எம் பெருமான் ! பசு மேய்க்கப் போகல்
மிகப் பல வசுரர்கள் வேண்டு ருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னோடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொற்கள் அந்தோ !–10-3-9
நெற்றி வியர்க்குமே வெய்யிலில்-
முள் வாங்கி உண்டே
அசுரர் பல உருவம்
வேட்டை ஆடி வருபவனை பிருந்தாவனத்தில் கண்டோமே
கம்சன் ஏவி வருபவர்
அபத்தம் என்ன வருமோ
உன்னை விட்டு பிரிய முடிய வில்லை
உனக்கு பிடித்தவர் உடன்-
என் கண் வட்டத்தில் சஞ்சரிக்க அமையும்
இடர் கெடும்-இடையூறு இன்றி -நாங்கள் அனுகூலமாக பார்த்து கொள்வோம்
வியக்க -உன் சங்கல்பம் தான் பலிக்கும்
இன்புறுத்தும்-சந்தோசம் படுவோம்-எம்பெருமான்-உன் சித்த விருத்தங்கள் ஒன்றே லஷ்யம்
பூச்சாண்டி-சொல்லி பயப் படும் குழந்தை இல்லையே
சிங்கார ரசம்-வீர ரசத்தோடு முடியும் -பிராட்டி பிரிந்து யுத்தம் பண்ணினது போல்
சமந்தக மணி பல ராமன் இடம் கொடுக்க -கோபிகள் அதை விரும்பாமல் உன் சேஷ பொருளே விரும்பி இருப்பார்
உங்கள் சந்நிதியில் சிலர் உடம் கூட பரிமாறுகை இஷ்டமோ
எங்கள் ஓட்டை சம்ச்லேஷத்தில் காட்டிலும் உன் திரு உள்ளம் உகப்பே உத்தேசம்
அவன் சுகமே நம் சுகம்
அவத்தங்கள் விளையும் என் சொற்கள் அந்தோ !
அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற என்னுடை ஆவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே !–10-3-10
என் சொல் கேள்-அவன் ஆக்ஜை ப்ரஹ்மாதிகள் கேட்க
விரல் காட்டி இவள் சொல்ல –
அசுரர்ப்பாளர் வர
தபசிகள் -பெரி ஆழ்வார் -கலங்கி -மல்லாண்ட உன் திரு தோள் பல்லாண்டு
தனியாக பல ராமன் இன்றி-வஸ்த்ர ஆபரணம்/காளியன் அண்ணன் விட்டு போய் போனாயே
நம்பி மூத்த பிரானை ஒழிய சஞ்சரிக்கும் காலம் மிக பெரியவை
ஸ்ரீ வைகுண்டமே விட்டு வந்தாயே
பர ப்ரஹ்மே மாடு மேய்க்கும் சொரூபம்
ஆனந்த வல்லி-திவத்திலும் -பசு மேய்ப்பு உகத்தி
செம் கனி வாய் காட்டி சிரித்தானாம் இதை எல்லாம் கேட்டு
ஆயர் தேவு
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வன் தென் குருகூர்
வன் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியராய் ஆய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே –10-3-11
கோமளமான அதரம்
திரு அடி-தாயாரும் -கூசி படிக்கும் மெல் அடி
யமுனை துறைவனை பொருநாள் துறைவன் அருளிய
சங்கு அணி-வெள்ளம்-சங்கு ஒதுங்கும் படி
வள்ளல் சடகோபன் -ஆய்ச்சியர் பாவம் ஆய்ந்த
பத்தும் -கோபிகள் அடைந்த லாபத்தை தரும்
வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை
தான் மருவாத் தன்மையினால் தன்னை இன்னம் பூமியில்
வைக்கும் என சங்கித்து மால் தெளிவிக்க தெளிந்து
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு -திரு வாய் மொழி நூற்று அந்தாதி –93
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
திருவாய்மொழி-10-2- கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 24, 2011கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விட முடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தட முடை வயல் அனந்த புர நகர் புகுதும் இன்றே –10-2-1
தலை யான திவ்ய தேசம் -மலை நாட்டுக்கு
இடையூறுகள் அனைத்தும் நீங்கும்
அவனை அணுகும் பாக்கியம் கிட்டும்-
28 வித நரகம் -ஸ்ரீ பாகவதம் சொல்லும்-சுகர் -போக வேண்டாம் தெரிவிக்க
கொடு வினை -யாதனா சரீரம் கொடுத்து வழியிலும் உதை–செய்யும் கூற்றின் தமர்
ஒரு ராஜா இருந்து நாட்டு கணக்கு வாசிக்க
அந்தரங்கர் – அது கிடக்கட்டும் மேலே சொல்லும் சொல்வது போல் -பட்டர் நிர்வாகம்
வேண்டியபட்டவன்-பக்த பார பஷன்
தான் நோபசி-யம தர்மனும் தமருக்கு சொல்கிறான்
யம தூதர் ஹரி தாசர் இடம் வரவே மாட்டார்கள்
அனந்தனுக்கு பிரதான்யம்-இங்கு விடமுடை அரவு
இன்றே புகுவோம்
சிஷ்டாசாரம்-ஆளவந்தார் நடந்த ஐதீகம்
ஸ்ரீ ரெங்கம் நிர்வாக கைங்கர்யம்-அத்யயன உத்சவம் முடிந்த பின் தை உத்சவம் முன் செல்ல
அரையர் சேவை பரம பாக்கியம்
புகுதும் இன்றே ஆள வந்தாரை அரையர் கடாஷிக்க உடனே புறப் பட்டார்
இன்று போய்ப் புகுதிர் ஆகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பரூரே–10-2-2
இன்றே சேவித்து -ஏழு ஜன்மமும் வினை சாரா
நறு மணம் புஷ்பம்-சோலை-
ஒரே திரு நாமம்-ஆயிர நாம பலன்-
நாராயணன்-கேசவ -ஸ்ரீ ராம -சகஸ்ர நாம சதர்சம்
ஒவ் ஒன்றும் ஆயிரத்துக்கும் சமம்
ஸ்ரீ வைகுந்தம் கொடுக்குமே
அனந்த பத்ம ஞாபம் ஆச்ரயாமி
ஆஸ்ரித சகல பக்த ஜன நிதிம்
ஊரும் புட் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தன் அனந்த புரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம்
பேரும்ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே –10-2-3
கருடத்வஜன் வாகனமும் கொடியும்
தன்னை ஆஸ்ரயிதவரை மேல் கொண்டு வைப்பானே
சர்வ லோகத்தையும் தன் வயிற்றில் கொண்டவன்
வைத்யோ நாராயண ஹரி -திண்ணம்
பத்ம நாபன் -ஒன்றையாவது பேசுமின்
பேசுமின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே !–10-2-4
கூச்சம் லஜ்ஜை இன்றி திரு நாமம் சொல்லி
நீர் நிலம் வளம் மிக்க
சுகந்தம் சோலை சூழ்ந்த
நேசம்-நம் பெருமாள் என்று –
வெறி கொண்டு-திட பக்தி -கொண்டு புஷ்ப கைங்கர்யம் செய்து
கோடி ஜன்ம புண்யம் இருந்தால் தான் பகவத் கைங்கர்யம் கிட்டும்
புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார் –10-2-5
திரு வாய் மொழி கேட்பதே புண்ணியம்
தீர்த்த புஷ்ப கைங்கர்யம் செய்து
சரணா கதி ஆன பின்பு கால ஷேமம் செய்ய வேண்டியவை பூர்வர் அருளி
அப்பால்- சரீரம் வீழ்ந்த பின்பு திண்ணம்-நிச்சயம்
கமல பாதம் அணுகி அமரர் ஆவார்
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதி சேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிகின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ ! சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6
தேவர் என்று சொல்லி திரிகிறார் -இந்த்ராதிகளுக்கு ஆதி
பாரி ஜாதம் புஷ்ப லீலை
ஆதி சேரும் திரு அனந்த புரம்
விஷ்வக் சேனர் -நித்யர் உடன் வந்து அர்சிகின்றனர்
தூபம் தீபம் கொண்டு-நமர்களே -ஆழ்வார் அபிமானித்து
அரையர் திரு கையால் தீர்த்தம் உயர்த்தி
தீர்க்கமான திரு மேனி-விராட் புருஷன்
போத்திமார்-போற்றி சொல்வார்கள்-
சிவ லிங்கம்–குமரனார் தாதை துன்பம்
பஸ்மாச்ரன்–தலையில் கை வைத்தது பஸ்மம் வரம்-
அபயம் கொடுத்து பக்கம் வைத்தது கொண்டான்
சகுனி பிள்ளையா -அப்பா நண்பர்-வரம் கதை சொல்ல
பைத்தியம் -வரம் பலிக்காதாம் –
உபவாசம் பண்ணி இதை பெற்றேனே –
என் தலையில் அடித்து கொள்கிறேன்
சிவனே இரும் என்றான்
குமரன்-மருமகன் என்று ஆசை- தாரகாசுரன் வதம் -பெருமாள் இடம் ஒட்டி கொண்டு இருப்பார்
வள்ளி தெய்வ யானை அம்மானை கொண்டு இருக்கிறார்
அப்பாவை காத்தும் குமரனுக்கு
கோவிந்தன் -தானே இது போல் பண்ணுவான் கண்ணன் தானே
அது போல் நம் இடரும் கெடுப்பான்
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் அணி அனந்த புரம்
கடைத் தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே –10-2-7
துன்பம் துடைத்த கோவிந்தனார்
எம் பரம புருஷன்
கால்வாய் -தண்ணீரில்- மடை-தடை- நீர் வளம்-மீன்கள் துள்ளும்
திவ்ய தேசம் வாசம் செய்யும் மீனுக்கும் மங்களா சாசனம்
கடைதலை-வாசல் புலக் கடை
சீயக்க -பெருக்கி சுத்தம் ஆக்குவது -நம்மால் செய்ய முடிந்த கைங்கர்யம்
மேல் சாந்தி கீழ் சாந்தி தொட்டு கைங்கர்யம்
கடு வினை களைய பெறுவோம்
அவந்தி மன்னன் மனைவி லலிதா
விஷ்ணு தர்மம் கதை -லஷ தீபம் போட்டு கொண்டு இருப்பார் கள்
எலியாக பூர்வ ஜன்மம்- விஷ்ணு ஆலய த்ரீ சாப்பிட -சுடர் பெரியதாய் -பயந்து ஓடி வர
தீபம் போட்டாள்- புண்யம் லலிதா பிறந்து பூர்வ ஜன்ம ஞானம் -யதேர்சயாய் வந்த கைங்கர்யம்
கடு வினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் ! நாமும் உமக்கு அறியச் சொன்னோம் –10-2-8
மன்மத ஜனகன்-
பிரத்யும்னன் –
வீர சயனம் உத்தான சயனம்
பள்ளி பயின்று நமக்கு பாதம் பணிய
நமர்கள்- ஆழ்வாரை சேர்ந்தவர்
நாம் உமக்கு அறிய சொன்னோம்
நாமும் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியவான
சேம நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற ஆய்ந்து கொண்டு
வாமனன் அடிக் கென்று ஏத்த மாய்ந்து அரும் வினைகள் தாமே –10-2-9
ஷேமம் வரும்
நல்ல புஷ்பம் சாத்தி-
துவள் -குற்றம் இன்றி
ஆய்ந்து கொண்டு தூபம்
திருநாமம் சொல்லி புஷ்ப கைங்கர்யம்
மாய்ந்து அரும் வினைகள் தாமே மாதவா ! என்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழி னாரே –10-2-10
கேசவா ஆரம்பித்து இதில் மாதவா என்கிறார்
சந்தனம் கைங்கர்யம்
நித்ய சந்தன காப்பு -சுகந்தம்
நெய் தீபம் தூபம் மலர்கள் கொண்டு –ஆராய்ந்து உகந்ததாய் கொண்டு –
அந்தமில் பேர் இன்பத்தோடு அடியாரோடு -வாழ கைங்கர்யம்
அந்தமில் புகல் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய அமர் உலகில்
பைம் தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே –10-2-11
பரம பதத்துக்கு ஒப்பான திவ்ய தேசம்
ஆதி -தனி முதல்
அர்ச்சிராதி மார்க்கம் சென்று அங்கு சேர்ந்து
ஸ்ரீ வைகுண்ட சுந்தரிகள் வர வேற்று சூடி களைந்த
திரு மாலைகள் கொடுத்து கூடி- மதி முக மடந்தையர் -ஏந்தினர் வந்தே
சதம் மாலா ஹஸ்தாகா –
சதம் அஞ்சன ஹஸ்தாகா
சதம் சூர்ண ஹஸ்தாகா -ஸ்ரீ சூர்ணம்
சதம் வாசோ ஹஸ்தாகா-பட்டாடை
சதம் பர்ண ஹஸ்தாகா –
அங்கு போகம் இல்லை கைங்கர்யத்துக்கு பிரேமை சுத்தம்
அற்றது பற்று எனில் உற்றது வீடு இந்த்ர்யம் நீங்கி -சுஸ் சொரூபம் ஆவிர்பாகம் –
கிருஷ்ணா ஆத்மா ஆன பின்பு –விகாரம் இல்லை ஸ்தான கெளரவம்-
பிரேமை சேவையே வடிவான பெண்கள்
குற்றம் சித்தம்- நிர்மலம் ஆன மனஸ்
கெடும் இடர் வைகுந்தத்தை கிட்டினார் போல்
தடமுடை அனந்த புரம் தன்னில் –படவரவில்
கண் துயில் மாலுக்கு ஆள் செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே -திரு வாய் மொழி நூற்று அந்தாதி –92
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
திருவாய்மொழி-10-1-தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 24, 2011தாள தாமரைத் தட மணி வயல் திரு மோகூர்
நாளும் மேவி நன்கு அமர்ந்து நின்று அசுரரைத் தகர்க்கும்
தோளும் நான்குடைச் சுரி குழல் கமலக் கண் கனி வாய்
காள மேகத்தை அன்றி மற்று ஓன்று இலம் கதியே –10-1-1
திரு மோகன அவதார ஷேத்ரம்
அமிர்த சரஸ் புஷ்கரணி
ஸ்ரீ ராமாயணம் உத்தர காண்டம்படித்தால் மோஷம் பலன் போல் இந்த திருவாய் மொழிக்கும்
காம்ய அர்த்த லாபம் இல்லை-பரமாத்மா காமமே புருஷார்த்தம்
அபேஷை -உன்னை தவிர வேறு கதி இல்லை சொல்லி பெற வேண்டும்
தனி பெருமை-பெருமாள் திவ்ய குணம் வேற கண்ணன் திரு குணம் வேற போல்
கூரத் ஆழ்வான் -கண்ணை- தேவ பெருமாள் இடம் கேட்ட சொல்ல அனுப்பினார் பெரிய பெருமாள்
கலியன்-திரு குருங்குடி அழகன் இடம் போக சொன்னார் பெரிய பெருமாள்
கைங்கர்யம் செய்த அவருக்கு இவரே கொடுக்க -அழுது கொண்டே பிரிய விடை-லீலை
ஆழ்வாருக்கு போக்கு காட்டி -பரம விரகம் -திரு வாய் மொழி பெற வைத்தான்
தாள்-நாளம் உடன் இருக்கும் தாமரை -பசுமை நீர் வளம் –
நித்ய வாசம் செய்து-சுருண்ட குழல் கமல கண் கொவ்வை பழம் போல் அதரமும்
சம்சாரத்தில் -பட்ட நோவு -பொய்யர் இடம் பேச்சு சிரிப்பு கேட்டு-
போகும் படி –இருக்கும் -கருணா கடாஷம் மந்த காசம் -கிலேசம் தீர
இலம் கதி மற்று ஓன்று எம்மைக்கும் ஈன் தன துழாயின்
அலம் கலம் கண்ணி ஆயிரம் பேர் உடைய அம்மான்
நலம் கொள் நான் மறை வாணர்கள் வாழ் திரு மோகூர்
நலம் கழல் அவன் அடி நிழல் தடம் அன்றி யாமே –10-1-2
சதுர வேத அந்தணர் நிறைந்த திவ்ய தேசம்
திரு அடி நிழலில் வசிப்பதே
ஆஸ்ரிதர் குண தோஷம் நிர்ணயம் பண்ணாத திரு அடிகள்
பூதனை சிசுபாலன் கூட உய்ந்து போனார்களே
பாசம் இன்றி விரோதிதாலும் விட மாட்டான் -நத்யஜேதம்
அன்றி யாம் ஒரு புகல் இடம் இலம் என்று என்று அலற்றி
நின்று நான் முகன் அரனொடு தேவர்கள் நாட
வென்று இம் மூ உலகு அளித்து உழல்வான் திரு மோகூர்
நன்று நாம் இனி நணுகுதும் நமது இடர் கெடவே–10-1-3
தேவர்களும் இங்கு வந்து சரண் அடைய
இதுவே பொழுது போக்காகா -மூன்று உலகும் காத்து உழன்று –
சேஷ சயனம் சந்நிதி திரு மோகூரில் உண்டு
இந்த பாசுரம் அவனை மங்களா சாசனம் என்பர் சேவார்த்திகள்
இடர் கெட எம்மைப் போந்து அளியாய் என்று என்று ஏத்தி
சுடர் கொள் சோதியை தேவரும் முனிவரும் தொடர
படர் கொள் பாம்பணைப் பள்ளி கொள்வான் திரு மோகூர்
இடர் கெட அடி பரவுதும் தொண்டீர் ! வம்மினே –10-1-4
தொண்டர்களே வாருங்கள்
கூட்டத்தை அழைகிறார்
பக்தர் சமூகம் – சேர்ந்து கைங்கர்யம் செய்து
குத்து விளக்கு சீர் படுத்தி/புல் செதுக்கி /தொண்டு செய்ய
இதனால் பலனும் நமக்கே -இடர் கெட -கோலம் போட்டு
பூ சாத்தி –திரு ஆராதனம்-சுத்தம் பாகவத அன்னம்
சோதியை தொடர்ந்து தேவரும் முனிவரும்-
பிரயோஜனாந்தர பரர்–அசுரரை ஒழிக்க -பிரார்த்தித்து
அவ்பராதம்-திருத்தி பணி கொள்ள தாயார் பிரார்த்திக்க –
சேஷ சயன பெருமாள் திரு அடி ஸ்தோத்ரம் பண்ண வாருங்கோள்
தொண்டீர் ! வம்மின் நம் சுடர் ஒளி ஒரு தனி முதல்வன்
அண்ட மூ வுலகு அளந்தவன் அணி திரு மோகூர்
எண் திசையும் ஈன் கரும்போடு பெரும் செந்நெல் விளைய
கொண்ட கோயிலை வலம் செய்து இங்கு ஆடுதும் கூத்தே –10-1-5
பாகவத உத்தமரே வாருங்கோள்
நமக்கு சொந்தமான பெருமாள்
தனி முதல்வன்-ஏகாந்த சேவை
உலகு அளந்தவன்
கரும்பும் செந்நெலும் விளைய –
பல உத்சவம் நிறைய நடக்கும்
கோவிந்தா கோபாலா பாடி கூத்து ஆட
ஆழ்வாருக்கு ஆசை -ஆடி பாடி புரள -பெரிய கூத்து
கலயாமி-கமல விலோசனம் -காள மேகம் அஹம் கலயாமி
கூத்தன் கோவலன் குதற்று வல் அசுரர்கள் கூற்றம்
ஏத்தும் நம் கட்கும் அமரர்க்கும் முனிவர்க்கும் இன்பன்
வாய்த்த தன் பணை வள வயல் சூழ் திரு மோகூர்
ஆத்தன் தாமரை அடி அன்றி மற்றிலம் அரணே–10-1-6
கூத்தன் -வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை
பார்த்த சாரதி பர்யந்தம் கூத்தன்
நடக்க புக்கால் வல்லார் ஆடினது போல் இருக்கும்
நடைஅழகு -திரு குழல் வாய் வைத்தது -கேட்டு அப்சரஸ் பாடல் தவிர்ந்தார்கள் இவன்
நடை கண்டு ஆடல் தவிர்ந்தார்கள் –மதுரம் அனைத்தும் –
ராச நாட்டியம் -தா திக்-தேவ கன்னிகைகள் திக்கிட்டு மிருதங்கம் சொல்லுமாம்
நடவர வபு-பிருந்தாரண்யம் கீத கீர்த்தி -நடவரன்-கூத்தன் கோவலன் பிடித்த பெயர்
அசுரர்களுக்கு கூற்றன் –
ஏத்தும் நமக்கு இன்பன்
காம்யார்தம் அமரர் முமுஷு முனிவர் மூவருக்கும் இனியன்
திரு மோகூர் ஆப்தன் வேண்டியவன்-ஆப்த வாக்கியம்-நம்ப தக்க –
அனுமானம் பிரத்யட்ஷம் போல் இன்றி-நம்ப தக்க -ஆச்சார்யர் வாக்கியம் போல்
பீமன் நேராக சொர்க்கம் -கிருஷ்ணன் -சொல்ல சொன்னதை சொன்னான்
தர்மம் அஸ்வத்தாமா -நம்பாததால் தர்மம் நரகம்
கொஞ்சம் பார்த்து -பார்க்கத்தான்-அனுபவிக்க இல்லை பின்பு பின் சொர்க்கம் போனான்
ஆப்த வாக்கியம்
மற்றிலம் அரண் வான் பெரும் பாழ் தனி முதலா
சுற்றும் நீர் படைத்து அதன் வழித் தொல் முனி முதலா
முற்றும் தேவரோடு உலகு செய்வான் திரு மோகூர்
சுற்றி நாம் வலம் செய்ய நம் துயர் கெடும் கடிதே –10-1-7
வேறு ரஷனை வேறு ஓன்று இல்லை
பெரிய பெரிய மூல பிரகிருதி
நிஷ்காரணன் அத்புத காரணன் -வேர் தனி முதல் வித்து
சுற்றும் நீர் பிரளய ஜலம்-காரண –
நான்முகனை படைத்து
வலை பின்னி நம்மை பிடிக்க உலகு -திவ்ய தேசம் -படைத்து
சுற்றி நாம் வலம் செய்து –
துயர் கெடும்
துயர் கெடும் கடிது அடைந்து வந்து அடியவர் ! தொழு மின்
உயர் கொள் சோலை ஒண் தட மணி ஒளி திரு மோகூர்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர் புக்கழுந்த
தயரதன் பெற்ற மரகத மணி தடத்தினையே –10-1-8
அவனை தொழுது
தடாகம்-சோலை சூழ்ந்த
தயரதன் பெற்ற மரகத மணி-
பெயர்கள் ஆயிரம் உடைய -பெருமாள்- சக்கரவர்த்தி திருமகன்
விஷ்ணு சகஸ்ரநாம பெருமை பிரதாண்யம் அருளி செயலில்
பெயர்கள் ஆயிரம் உடைய வல்லரக்கர்-ராவண சகஸ்ர நாமம்
ஹிரண்ய சகஸ்ரநாமம் உண்டாம்
ரஷனத்தாலே ஈஸ்வரனுக்கு
இவர்களுக்கு யக்ஜா சத்ரு பிரம்மா சத்ரு இந்திர சத்ரு போல்
ஸ்ரீ ராம சாகாரம்-ராகவா சாகரம்-முழுகி அரக்கர் மாள
அலை கொண்டு போன- மூல பல யுத்தம்
தடாகம்-இந்திர நீல சந்நிபம் -அவனை ஆச்ரயித்து இடர் கெட படுவோம்
மணித் தடத் தடி மலர்க் கண்கள் பவளச் செவ்வாய்
அணிக் கொள் நாள் தடம் தொல் தெய்வம் அசுரரை என்றும்
துணிக்கும் வல்லரட்டன் உறை பொழில் திரு மோகூர்
நணித்து நம் முடை நல்லரண் நாம் அடைந்தனமே –10-1-9
அடைந்தனம்-குறுக்கும் -கூப்பிட்டார் முன்பு
இதில் அடைந்தோம் என்கிறார் பத்து விரலும் பாதங்கள்-மணி தடத்து அடி
கமல மலர் திரு கண்கள்
திரு மங்கள விக்ரகம்
அரட்ட அமுக்கி-நல் வீரன்
நணுகி நாம் அடைந்தோம்
நல்ல ரஷணம்
நாம் அடைந்த நல்லரண் நமக்கு என்று நல்லமரர்
தீமை செய்யும் வல் அசுரரை அஞ்சிச் சென்று அடைந்தக்கால்
காம ரூபம் கொண்டு எழுந்து அளிப்பான் திரு மோகூர்
நாமமே நவின்று எண்ணு மின் ஏத்துமின் நமர்காள் !–10-1-10
நாம் அடைந்து
சரண்யன்-புகல் இடம்
ஆர்தர் தேவர் அடைய
இச்சா பரிகிதமாக ரூபம் கொண்டு
சங்கல்பம் மாதரம்-நரசிம்கமாக ஸ்தம்பத்தில் கூட -காம ரூபம் கொண்டு
ஏத்துமின் நமர்காள் ! என்று தான் குடமாடு
கூத்தனை குருகூர் சடகோபன் குற்றேவல்கள்
வாய்த்த ஆயிரத்துள் இவை வன் திரு மோகூர்க்கு
ஈத்த பத்து இவை ஏத்த வல்லார்க்கு இடர் கெடுமே –10-1-11
தமர் காள் -நம்மை அபிமானித்து
வெண்ணெய் தாளி உத்சவம்-குடமாடும் கூத்தன் அலங்காரம்
தனி மங்களாசாசனம் அதற்க்கு
வாசிக்க கைங்கர்யம்
குற்றேவல் எங்களை கொள்ளாமல் போகாது அருள பாடு இட்டு அழைத்து கைங்கர்யம்
ஏவி பணி கொள்ள வாய்ப்பு
திரு மோகூர்க்கு இந்த பத்து சேவித்து இடர் கெடும்
கைங்கர்யம் கிட்டும் –எல்லா திவ்ய தேச உதசவமும் அனுபவிக்க —
சரீர அவச்தானத்தில் வழித்துணை இல்லை என்று கவலை வேண்டாம் —
காள மேகமே அபய ஹஸ்தத்துடன் துணையாக வருவான்
தாள் அடைந்தோர் தம்கட்குத் தானே வழித் துணையாம்
காள மேகத்தைக் கதியாக்கி –மீளுதலாம்
ஏதம் இலா விண்ணுலகில் ஏக வெண்ணும் மாறன் என
கேதம் உள்ளது எல்லாம் கெடும் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –91
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
திருவாய்மொழி-9-10-மாலை நண்ணித் தொழுது எழுமினோ -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 24, 2011மாலை நண்ணித் தொழுது எழுமினோ வினை கெட
காலை மாலை கமல மலர் இட்டு நீர்
வேலை மோதும் மதிள் சூழ் திருக் கண்ண புரத்து
ஆலின் மேலால் அமர்ந்தான் அடி இணை களே –9-10-1
பிரம்மா நிஷ்டர் ஞானி கோபி மாறி மாறி பாவம்
கண்ணனுக்கே ஆம் அது காதல்
திரு கண்ண புரம்-பிர பத்தி பண்ணினவருக்கு – அவன் செய்யும் உபகாரம்
உபதேச பதிகம்
மால்-விஷ்ணு/மாயாவி-பர வஸ்து
அவனை சரண் அடைந்து-பக்தி பண்ணி-
வினைகள் ஒரு அஞ்சலி மாத்ரம் கெடும் படி
புஷ்ப கைங்கர்யம் செய்து
அலைகள் மதிள் மோதி –
கள் அவிழும் மலர் இட்டு நீர் இறைஞ்சுமின்
நள்ளி சேரும் வயல் சூழ் கிடங்கின் புடை
வெள்ளி ஏய்ந்த மதிள் சூழ் திரு கண்ண புரம்
உள்ளி நாளும் தொழுது எழுமினோ தொண்டரே !–9-10-2
தேன் ஒழுகும் புஷ்பம்-சுகந்தம் உள்ள மலர்
கைங்கர்யம் நிலைக்க
நள்ளி-நண்டு-நீர் வளம் ‘
வெற்றிலை கிடங்கு உண்டு
வெள்ளி சுக்ரன்-ஆகாசம் அளவு உயர்ந்த மதிள்
17உள்ளி நினைத்தாலே போதுமே
திவ்ய தேசம் பெயரை சொன்னாலே எழுச்சி
தொண்டர் ! நும் தம் துயர் போக நீர்யேகமாய்
விண்டு வாடா மலர் இட்டு நீர் இறைசுமின்
வண்டு பாடும் பொழில் சூழ் திரு கண்ண புரத்து
அண்ட வாணன் அமரர் பெருமானையே –9-10-3
எல்லாம் அவன் சங்கல்பம்
ஏக மனச ஒன்றே வேண்டும்
விண்டு -மலர்ந்த
புஷ்பம் மூக்கில் படாமல் இருக்க வேண்டும்
ஆசை பட கூடாது அவனுக்கு என்றே
வண்டும் ஹரி கதை பாடும்
மானை நோக்கி மடப் பின்னை தன கேள்வனை
தேனை வாடா மலர் இட்டு நீர் இறைசுமின்
வாளை யுந்தும் மதிள் சூழ் திரு கண்ண புரம்
தான் நயந்த பெருமான் சரண் ஆகுமே 9-10-4
மான் போன்ற திரு கண்
அகிலம் மதுரம் -தேன் போன்றவன்
ஆசை பட்டு நித்ய வாசம் செய்கிறான் இங்கே
சரணம் ஆகும் தனதாள் அடைந்தார்க்கு எல்லாம்
மரணம் ஆனால் வைகுந்தம் கொடுக்கும் பிரான்
அரண் அமைந்த மதிள் சூழ் திரு கண்ண புரத்
தரணி ஆளன் தான தன்பர்க்கு அன்பாகுமே -9-10-5
ஸ்ரீ பாதம் அடைந்தவர் அனைவருக்கும் உஜீவனம்
ஒரே பந்து இவனே -அபயம்-
ஆத்மா பந்து -அதிகாரி கால தேசம் நியமனம் இல்லையே
காலம் நோக்கி காத்து இருக்கிறான்
கருத்து கொண்டு ரஷிகிறான்
அஞ்சலி ஒன்றாலே -மித்ர பாவேன –
வேறு ஒன்றும் சாதனை இன்றி- சர்வ தர்மமும் விட்டு –
கிருபைக்கு அவன் ஒருவனே -சித்த உபாயம்
அநந்ய சரண்யன்- சத் சங்கம் கொடுத்து முமுஷ்த்வம் வர உதவுகிறான்
உயர்ந்த பரி பக்குவம்-திட விசுவாசம் –
அடைந்த அன்பர் பக்தர் -அன்பர்க்கு அன்பு
அன்பனாகும் தான தாள் அடைந்தார்க்கு எல்லாம்
செம் பொன் ஆகத்து அவுணன் உடல் கீண்டவன்
நன் பொன் ஏய்ந்த மதிள் சூழ் திரு கண்ண புரத்
தன்பன் நாளும் தன மெய்யர்க்கு மெய்யனே –9-10-6
சரண் அடைய தான் திரு அடி
நடக்க இல்லை-தாசாம் ஆவிர்பூது
திடீர் தோன்றி திடீர் மறைய
திரு மேனி எல்லாம் அன்பர் கார்யம்
சங்கல்பம் மாதரம் -திரு கரம் அபயம் ஒன்றே பலன்
சத்ய சங்கல்பன் -புகல் இடம்
சம்சார வெய்யில்-பாத சாயா -திருஅடி நிழல்
அனா சாரம் துரா சரம் நிறைந்து
வைராக்கியம் இல்லை பேராசை தானே வரும்
ந தர்ம நிஷ்டாமி -நோற்ற நோன்பு இலேன் நுண் அறிவிலேன்
காஷ்ட பாஷ்ட சன்னிதன்-பரமாம் கதி கூட்டி போவான்
மோஷம் இச்சேதி ஜனார்த்தனன்
மரணம் ஆனால் -இது தான் சாதனமா -ஸ்ரீ வைகுண்டம் கதவை திறந்து வைத்து
சர்வ சாதாரணம் மரணம் -போவது நிச்சயம்
எப்பொழுது திரு அடியில் சேர்த்து கொள்ளலாம் என்று காத்து -பிராரப்த கர்ம தொலைத்து
இகம் பரம் லாபம் -கொடுத்தது கொடுத்தது தான் -எதிர் பார்த்து கொண்டு இருக்கிறான்
சக்ருதேவ பிர பன்னாயா ஒரு தடவை பண்ணினால் போதுமே
திரு நாம சங்கீர்த்தனம் போல் ஆச்சார்யர் சொல்ல அர்த்தம் புரியாமல் திரும்பி சொன்னாலும் கொடுக்கிறான்
அந்திம ஸ்மிர்த்தி கூட வேண்டாம் என்கிறான்
அஹம் ஸ்மராமி மத் பக்தம் -என் பக்தன்-அபிமானித்து
நஜாமி பரமாம் கதிம்
இவன் தன பக்கிளில் பரந்யாசம்-பாரம் ஒப்படைத்த அன்றே
இவனை ஒழிய தனக்கே செல்லாமை -பரம ஏகாந்தி இவன் –
இவன் ருசியை அநு சந்தித்து -முமுஷ்த்வம் பூர்ணம் வர
காத்து இருந்து அவசர பிரதீஷனாய் இருந்து –மே பக்தன் பிரனச்ய
பரம பதம் கொடுக்கும் உபகாரகன் —
தரணி ஆளன் சௌரி ராஜன் கீழ கோட்டை ஸ்ரீ -ரெங்க ராஜனுக்கு
மேல் கோட்டை -திரு நாராயண புரம்
வட கோட்டை திரு மலை
தென் கோட்டை அழகன்
தனது அன்பர்க்கு அன்பு -அரசன் என்று பயப் பட வேண்டாம்
அன்பன்-சகன்
காகம் விபீஷணன் குகன் அனைவருக்கும்
சர்வே அதிகாரி பிர பத்திக்கு-
ஹிரண்யன் கோஷ்ட்டி-தான் இல்லை
நம்பி கெட்டவர் இல்லையே –
அசத் பிரமே -பொய் என்றால் நீயே பொய்
மெய்யன் ஆகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம்
பொய்யன் ஆகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
செய்யில் வாளை யுகளும் திரு கண்ண புரத்து
ஐயன் ஆகத்து அணைப்பார் கட்கு அணியனே –9-10-7
ஸ்ரத்தை விசுவாசம் நிரூபித்து கொண்டு இருப்பான்
சுக்ரீவன் மந்த விசுவாசம்-திட விசுவாசம் தானே கொடுத்தான்
துரி யோதனன் -பொய்யனாகும் புறமே தொழுவார்க்கு எல்லாம்
பாண்டவர் -மெய்யனாகும் விரும்பி தொழுவார்க்கு எல்லாம்
எண்ணமே பலிக்கும் படி செய்கிறான்
செய்-வயல் மீன் துள்ளும்
ஐயனை ஆகத்தில் அணைத்து – ஹிருதயத்தில் வைத்து
அணியனாகும் தன தாள் அடைந்தார்க்கு எல்லாம்
பிணியும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி பொன் ஏய்ந்த மதிள் சூழ் திரு கண்ண புரம்
பணிமின் நாளும் பரமேட்டி தன பாதமே –9-10-8
சுலபன்-அணியன்
பிர பன்ன கோஷ்டி தனி வர வேர்ப்பு
மதிள்-பல -அபராஜித ஸ்ரீ வைகுண்டம் காந்தி சுவர்ண ஜோதி
பரமேஷ்டி தானே இவன் –
பாதம் நாளும் பணியத் தணியும் பிணி
ஏதம் சாரா எனக்கேல் இனி என் குறை ?
வேத நாவர் விரும்பும் திரு கண்ண புரத்து
ஆதியானை அடைந்தார்க்கு அல்லல் இல்லையே–9-10-9
நித்யமும் திரு அடி சேவித்து
ஆசை ஒன்றே வேண்டும்-அவன் நடத்தி காட்டுவான்
பரம அனுகூலன்
மயா அனுகூலேன -துக்க ஹேது பாபமும் வராது
குறை ஏது-வைதிகர் வேத கோஷம் –
அவனே புகல் இடம் என்று அடைந்தால் அல்லல் இல்லையே
இல்லை அல்லல் எனக்கேல் இனி என் குறை ?
அள்ளி மாதர் அமரும் திரு மார்பினன்
கல்லில் ஏய்ந்த மதிள் சூழ் திரு கண்ண புரம்
சொல்ல நாளும் துயர் பாடு சாராவே –9-10-10
ஸ்ரீ வல்லபன்-குறை அனைத்தையும் தீர்க்க
திரு கண்ண புரம் சொல்ல -பக்தி பிர பன்னம் அனுஷ்டானம்
இல்லாதவர் -பரி பக்குவம் இல்லாதவர்-கூட சொல்லி பெறலாம்
திரு கண்ண புரம் என்ற ஒரே திரு நாமம் –
என்னை சேர்ந்தவன் என்று அபிமானித்து -தெரியாமல்
பாரிகாசம் ஏளனமாக சொன்னாலும் கரை ஏற்றி தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு இருக்கிறான்
உக்தியை சொல்லி சமஸ்த துக்கம் போக்குவர்
கல்லில் ஏய்ந்த -அரையர் ஐதீகம்
சொக்கட்டாம் திரு புகலூர்
சோழ அரசன் இடித்து கல் கொண்டு போக
கல்லில் ஏய்ந்த மதிள் -மங்களாசாசனம்
காயம் இன்றும் சேவை- சொத்தை காத்தான்
பாடு சாரா வினை பற்று அற வேண்டுவீர் !
மாடு நீடு குருகூர் சடகோபன் சொல்
பாடலான தமிழ் ஆயிரத்துள் இப் பத்தும்
பாடி ஆடி பணிமின் அவன் தாள்களே –9-10-11
வினைகள் வாசனை உடன் அற்று போகும்
இப் பத்தையும் பாடி ஆடி அவன் திரு அடி சேவித்து உஜீவனம்
மாலும் அது வாஞ்சை முற்றும் மன்னு உடம்பின் முடிவில்
சால நண்ணி செய்வன் எனத் தான் உகந்து –மேல் அவனை
சீரார் கண புரத்தே சேரும் எனும் சீர் மாறன்
தாரானோ நம் தமக்கு தாள் ?-திரு வாய் மொழி நூற்று அந்தாதி –90
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
திருவாய்மொழி-9-9-மல்லிகை கமழ தென்றலும் ஈருமாலோ !-ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..
October 24, 2011அர்ச்சையில் திரு மேனி அழகையும்
விபவத்தில் குணா அனுபவம்
ஸ்ரீ வைகுண்டத்தில் பரத்வமும் ஆழ்வார் அனுபவித்து அருளி செயல்
இது வரை அர்ச்சை அனுபவம் ஆழ்வார் இதில் கிருஷ்ண அனுபவம்
கோபி பாவத்தில் -மாலை பூசல் திரு வாய் மொழி அர்ய்ளுகிறார்
சொடுக்கு நேரம் யுகம் போல்
கொடியும் செருப்பும் கொடாதே போக்கி யசோதை பாவத்தில் பெரி ஆழ்வார் அருளியது போல்
மல்லிகை கமழ தென்றலும் ஈருமாலோ !
வன் குறிஞ்சி இசை தவருமாலோ !
செல் கதிர் மாலையும் மயக்குமாலோ !
செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ !
அல்லி அம் தாமரை கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறே அரி ஏறே எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகல் இடம் அறிகிலம் தமியமாலோ !–9-9-1
கண்ணா எப்பொழுது வருவாய் !
தென்றல் மேனி குத்த -பிரி ஆற்றாமையால்
குறிஞ்சி ராகமும் படுத்த
மாலை பொழுது மனதை மயக்க
செவ்வி சித்தம் உடைக்க
சிம்மம் போன்ற பராக்ரம் மாயாவி
ஆலிங்கனம் செய்து போனான்
அதை நினைந்து ஜீவித்து கொண்டு இருகின்றேன்
சுகர்-கோபிகள்-வீட்டில் இடம் கொள்ளாமல்-கோகுலம்
மதுரை துவாரகை -எங்கும்-வஸ்து வைலஷண்யம் –
அர்ஜுனன் முரட்டு ஆளும் -அப்ரிய தர்சனம் பார்க்க பிடிக்காமல்
புகல் இடம் அறிகிலம் தமியமாலோ !
புலம்புறு மணி தென்றல் ஆம்பலாலோ !
பகலடு மாலை வன் சாந்தமாலோ !
பஞ்சமம் முல்லை தன் வாடையாலோ !
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என் உயிர்க்கும் மாறு என் ?–9-9-2
ஆலோ-அந்தோ ஓசை
மார்பில் கட்டிய மணி ஓசை
ஆம்பல்-பரணை வாத்தியம் பீ பீ ஊதி கொண்டு போகிறானாம்
பஞ்சம ரகம் கோகிலம் கூவும் ஓசை
ஜகன்மோகன் வரவில்லையே
இனி இருந்து என் உயிர் க்கும் மாறு என் ?
இணை முலை நமுக நுண் இடை நுடங்க
நுனி இரும் கலவி செய்தாகம் தோய்ந்து
துறந்து எம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ !–9-9-3
பத்து மாதமும் காத்து இருந்த பிராட்டி போல்
கட்டி அனைத்து விளை யாடி விட்டு துறந்து போனானே
கள்ளன்
மறக்க முடியாத ஜகன் மோகன்
தாமரை கண்ணை மறப்பதா
செவ்வாயை மறப்பதா
திவ்ய மங்கள் விக்ரகம் நெஞ்சிலே இருந்து குத்தி கொண்டே இருகிறதே
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ !
வாடை தன் வாடை வெவ்வாடை யாலோ !
மேவு தன் மதியம் வெம் மதியமாலோ !
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளியாலோ !
தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மையம் பூவிதாலோ !
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ !
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ !–9-9-4
குழலும் கையுமான திரு உருவம் நெஞ்சில் அலைய
குளிர்ந்த வாடை வேக வைக்கிறதே
நிலவும் சுடுகிறதே
புஷ்ப சயனமும் நெருப்பு போல்
வண்டு குடைந்த தாமரை போல்-கரு வண்டு-
ஸ்ரீ வைகுந்தத்தில் வந்து துதைத்த பூ போல்
நெஞ்சமும் துணை இன்றி இருக்கிறேன்
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ !
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ !
யாமுடையாயன் தன் மனம் கல்லாலோ
அவனுடைத் தீம் குழல் ஈருமாலோ !
யாமுடைத் துணை என்னும் தோழி மாறும்
எம்மின் முன் அவனுக்குமாய் வராலோ !
யாமுடைய ஆர் உயிர் காக்கு மாறு என் ?
அவனுடை யருள் பெறும் போது அரிதே ?–9-9-5
உருகும் நெஞ்சு-துணை இல்லையே
மாடுகள் வந்தனவே
எங்கு போனான் -கல் நெஞ்சன்
வேணு கானம் கேட்டு-மதுரமாக
அதுவும் ஈருகிறதே
என் தோழி கூட என் உடன் அலுத்து முன் முடிவார் போல்
என் விசனம் கண்டு –எனக்கு முன்னே அவன் வேண்டும் என்று நோவு
அவன் சம்பந்தம் இவள் வழியே கிட்ட –இவளுக்கு கண்ணன் கிட்டினால் அவளுக்கும் கிட்டுமே
அவன் உடைய அருள் பெறும் போது அரிதால்
அவ் அருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வன் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம் ஆவி ஈரும்
எவன் இனி புகும் இடம் ? எவன் செய்கேனோ ?
ஆருக்கு என் சொல்லுகேன் ?அன்னைமீர்காள் !–9-9-6
அருள் பெறும் போது -வேறு எல்லாம் மருள் தானே
ஆவி நில்லாது -இன்றே வேண்டும்
பகலும் மாலையும் ஆடுகின்றன
பருவ காலத்துக்கு துணையான நெஞ்சும் இல்லை
சிவன் பிரமன் தாயார் அனைவரும் இருக்க எனக்கும் உண்டே
படுகருக்கு தமிழர் வார்த்தை சொபவர் போல்
கண்ணை பற்றி அறியாதவர் என் கஷ்டம் பாவம் அறிய மாட்டார்
ஆருக்கு என் சொல்லுகேன் ? அன்னைமீர்காள் !
ஆர் உயிர் அளவன்று இக் கூர் தன் வாடை
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்த வத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமம் தன் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தன் மல்லிகைபூ
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ !–9-9-7
கிருஷ்ண விரகம் யாருக்கு புரியும்
நெஞ்சும் அவன் இடம் -பெரிய கள்வன்
கெஞ்சினாலும் திரும்பாது
அகில் புகை குயில் பஞ்சம சுரம் மல்லிகை மணம்
எல்லாம் எறிய வைக்கும்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ !
பொங்கிள வாடை புண் செக்கராலோ !
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனின் கொடிது இனியதனிலும் உம்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வன் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதுமத் தீம் குழற்கே உய்யேன் நான் –9-9-8
கண்ணனை விட கள்வம் கொடியது
மல்லிகை மணம்-வைஜயந்தி மாலை புரள –
பஞ்சம சுரம் வைத்து
இனிய -சங்கல்பத்துடன்
கோபிகளை -ஆய்ச்சியற்கே –
க ம லா -அவள் மட்டும் அறியும்படி
என் பெயர் வர வில்லையே
ஊதும் அத தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன செய் கோல
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி
பேதுரு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சற வறப் பாடும் பாட்டை
யாதும் ஓன்று அறிகிலம் அம்ம ! அம்ம !
மாலையும் வந்தது மாயன் வாரான் –9-9-9
குழல் ஓசைக்கே உயிர் வைத்து இருக்கிறேன்
சங்கேசமாக மொழிந்து குழல் மொழி
இடை இடை-அனுராகதொடு கடாஷம்
சிறு விரல் தடவி பாட கண்கள் ஓட புருவம் குடலிப்ப -நெளிய
வாய் வைத்து கொண்டே கண் அலைந்து வருகிறாளா -பார்த்து
கடாஷம்-அனுரக்த கடாஷ மோட்ஷம்
பிரேமை அள்ளி வீச -பித்தாக போய் -தனி பாஷை பிரேம பாஷை
கண்ணாலே பேசி –தூது செய் கண்களால்
ராகத்திலே தூ மொழி கொண்டு
அதில் அகப்பட்டு -பேதுரு முகம்-பித்தாகி
பேயனாய் ஒழிந்தேன்
நொந்து நொந்து -விரக வேதனையில்-
அறப் படும் பாட்டை –அம்மா அம்மா —
தப்ப முடியாது தாபம் மிகுந்து
மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன்னாகுகளு களுமாலோ !
கொடியான குழல் களும் குழுறு மாலோ !
வாளொளி வளர் முல்லைக் கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டு ஆலுமாலோ !
வேலையும் விசும்பில் விண்டு அலறு மாலோ !
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே ?–9-9-10
மாலை பொழுது வந்ததே -மாயன் வர வில்லை
காளைகள் வந்தன -கழுத்தில் மணி -துஷ்ட மிருகம் ஓடி போகும் சப்தம் கேட்டு
கடை மாடு-எரு போட அடைத்து வைப்பார்களாம்
மங்கள வாத்யம்மணி சப்தம்-
கண்ணன் உடன் போய் அவன் உடன் திரும்பி-கோபாலன் மாட்டு கொட்டையிலே இருந்து
மடியில் பால் விறைக்க -கன்றுகளும் துள்ள ‘ல்
கன்றுகள் சப்தம் குழல் ஓசை கலந்து
கடல் பொங்கி ஓசை
என் சொல்லி உய்வேன்
கோபிகள் நிலை
விட்டு பிரிந்து ஷணம் யுகம் போல்
கண்ணன் வந்ததும் -மணி ஓசை கேட்டு ஓடி வந்து
யசோதை தோழிமார் -ஷீர சாகர அலை போல் கூட்டமான மாடுகள்
சலங்கை ஓசை குழல் ஓசை மணி ஓசை
கோலாகலம்-மயில் இறகு கண்டு கொண்டை நெத்தி கஸ்தூரி திலகம் பவள வாய் பீதாம்பரம் –
பரமானந்தம் ஆஸீத் -கோவிந்தம் தர்சனம்
அவனை விட்டு அகன்று உயர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டு அகல்வதற்கு இரங்கி
அணி குருகூர் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் !
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே –9-9-11
அலற்றிய பதிகம்-அலற்றி உய்ய அருளி இருக்கிறார்
மால் கண்ணன் நேரில் வருவான் நாம் தொழ
திரு ஆய்ப் பாடியில் கூப்பிட்ட கூப்பாடு ஆயிற்று
பஞ்ச லஷம் கன்னிகள்-
யாருக்கு இன்று பாக்கியம்-கோகுலத்தில் பழக்கம்
மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னை கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாக போகும் என் தன் மால் –திருவாய் மொழி நூற்று அந்தாதி –89
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்