திருவாய்மொழி-10-2- கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

கெடும் இடராய வெல்லாம் கேசவா வென்ன நாளும்
கொடு  வினை செய்யும் கூற்றின் தமர்களும் குறுக கில்லார்
விட முடை யரவில் பள்ளி விரும்பினான் சுரும்பு அலற்றும்
தட முடை வயல் அனந்த புர நகர் புகுதும் இன்றே –10-2-1
தலை யான திவ்ய தேசம் -மலை நாட்டுக்கு
இடையூறுகள் அனைத்தும் நீங்கும்
அவனை அணுகும் பாக்கியம் கிட்டும்-
28 வித நரகம் -ஸ்ரீ பாகவதம் சொல்லும்-சுகர் -போக வேண்டாம் தெரிவிக்க
கொடு வினை -யாதனா சரீரம் கொடுத்து வழியிலும் உதை–செய்யும் கூற்றின் தமர்
ஒரு ராஜா இருந்து நாட்டு கணக்கு வாசிக்க
அந்தரங்கர் – அது கிடக்கட்டும்  மேலே சொல்லும் சொல்வது போல் -பட்டர் நிர்வாகம்
வேண்டியபட்டவன்-பக்த பார பஷன்
தான் நோபசி-யம தர்மனும் தமருக்கு சொல்கிறான்
யம தூதர் ஹரி தாசர் இடம் வரவே மாட்டார்கள்
அனந்தனுக்கு பிரதான்யம்-இங்கு  விடமுடை அரவு
இன்றே புகுவோம்
சிஷ்டாசாரம்-ஆளவந்தார் நடந்த ஐதீகம்
ஸ்ரீ ரெங்கம் நிர்வாக கைங்கர்யம்-அத்யயன உத்சவம் முடிந்த பின் தை உத்சவம் முன் செல்ல
அரையர் சேவை பரம பாக்கியம்
புகுதும் இன்றே ஆள வந்தாரை அரையர்  கடாஷிக்க உடனே புறப் பட்டார்
இன்று போய்ப் புகுதிர் ஆகில் எழுமையும் ஏதம் சாரா
குன்று நேர் மாட மாடே குருந்து சேர் செருந்தி புன்னை
மன்றலர் பொழில் அனந்த புர நகர் மாயன் நாமம்
ஒன்றும் ஓர் ஆயிரமாம் உள்ளுவார்க்கு உம்பரூரே–10-2-2
இன்றே சேவித்து -ஏழு ஜன்மமும் வினை சாரா
நறு மணம் புஷ்பம்-சோலை-
ஒரே திரு நாமம்-ஆயிர நாம பலன்-
நாராயணன்-கேசவ -ஸ்ரீ ராம -சகஸ்ர நாம சதர்சம்
ஒவ் ஒன்றும் ஆயிரத்துக்கும் சமம்
ஸ்ரீ வைகுந்தம் கொடுக்குமே
அனந்த பத்ம ஞாபம் ஆச்ரயாமி
ஆஸ்ரித சகல பக்த ஜன நிதிம்
ஊரும் புட் கொடியும் அக்தே உலகு எல்லாம் உண்டு உமிழ்ந்தான்
சேரும் தன் அனந்த புரம் சிக்கெனப் புகுதிராகில்
தீரும் நோய் வினைகள் எல்லாம் திண்ணம் நாம் அறிய சொன்னோம்
பேரும்ஓர் ஆயிரத்துள் ஓன்று நீர் பேசுமினே –10-2-3
கருடத்வஜன் வாகனமும் கொடியும்
தன்னை ஆஸ்ரயிதவரை மேல் கொண்டு வைப்பானே
சர்வ லோகத்தையும் தன் வயிற்றில் கொண்டவன்
வைத்யோ நாராயண ஹரி -திண்ணம்
பத்ம நாபன் -ஒன்றையாவது பேசுமின்
பேசுமின் கூசம் இன்றி பெரிய நீர் வேலை சூழ்ந்து
வாசமே கமழும் சோலை வயல் அணி அனந்த புரம்
நேசம் செய்து உறைகின்றானை நெறிமையால் மலர்கள் தூவி
பூசனை செய்கின்றார்கள் புண்ணியம் செய்தவாறே !–10-2-4
கூச்சம் லஜ்ஜை இன்றி திரு நாமம் சொல்லி
நீர் நிலம் வளம் மிக்க
சுகந்தம் சோலை சூழ்ந்த
நேசம்-நம் பெருமாள் என்று –
வெறி கொண்டு-திட பக்தி -கொண்டு புஷ்ப கைங்கர்யம் செய்து
கோடி ஜன்ம  புண்யம் இருந்தால் தான் பகவத் கைங்கர்யம் கிட்டும்
புண்ணியம் செய்து நல்ல புனலோடு மலர்கள் தூவி
எண்ணுமின் எந்தை நாமம் இப் பிறப்பு அறுக்கும் அப்பால்
திண்ணம் நாம் அறியச் சொன்னோம் செறி பொழில் அனந்த புரத்து
அண்ணலார் கமல பாதம் அணுகுவார் அமரர் ஆவார்  –10-2-5
திரு வாய் மொழி கேட்பதே புண்ணியம்
தீர்த்த புஷ்ப கைங்கர்யம் செய்து
சரணா கதி ஆன பின்பு கால ஷேமம் செய்ய வேண்டியவை பூர்வர் அருளி
அப்பால்- சரீரம் வீழ்ந்த பின்பு திண்ணம்-நிச்சயம்
கமல பாதம் அணுகி அமரர் ஆவார்
அமரராய்த் திரிகின்றார் கட்கு ஆதி சேர் அனந்த புரத்து
அமரர் கோன் அர்ச்சிகின்று அங்கு அகப் பணி செய்வர் விண்ணோர்
நமர்களோ ! சொல்லக் கேண்மின் நாமும் போய் நணுக வேண்டும்
குமரனார் தாதை துன்பம் துடைத்த கோவிந்தனாரே–10-2-6
தேவர் என்று சொல்லி திரிகிறார் -இந்த்ராதிகளுக்கு ஆதி
பாரி ஜாதம் புஷ்ப லீலை
ஆதி சேரும் திரு அனந்த புரம்
விஷ்வக் சேனர் -நித்யர் உடன் வந்து அர்சிகின்றனர்
தூபம் தீபம் கொண்டு-நமர்களே -ஆழ்வார் அபிமானித்து
அரையர் திரு கையால் தீர்த்தம் உயர்த்தி
தீர்க்கமான திரு மேனி-விராட் புருஷன்
போத்திமார்-போற்றி சொல்வார்கள்-
சிவ லிங்கம்–குமரனார் தாதை துன்பம்
பஸ்மாச்ரன்–தலையில் கை வைத்தது பஸ்மம் வரம்-
அபயம் கொடுத்து பக்கம் வைத்தது கொண்டான்
சகுனி பிள்ளையா -அப்பா நண்பர்-வரம் கதை சொல்ல
பைத்தியம் -வரம் பலிக்காதாம் –
உபவாசம் பண்ணி இதை பெற்றேனே –
என் தலையில் அடித்து கொள்கிறேன்
சிவனே இரும் என்றான்
குமரன்-மருமகன் என்று ஆசை- தாரகாசுரன் வதம் -பெருமாள் இடம் ஒட்டி கொண்டு இருப்பார்
வள்ளி தெய்வ யானை அம்மானை கொண்டு இருக்கிறார்
அப்பாவை காத்தும் குமரனுக்கு
கோவிந்தன் -தானே இது போல் பண்ணுவான் கண்ணன் தானே
அது போல் நம் இடரும் கெடுப்பான்
துடைத்த கோவிந்தனாரே உலகு உயிர் தேவும் மற்றும்
படைத்த எம் பரம மூர்த்தி பாம்பணைப் பள்ளி கொண்டான்
மடைத் தலை வாளை பாயும் வயல் அணி அனந்த புரம்
கடைத் தலை சீய்க்கப் பெற்றால் கடு வினை களையலாமே –10-2-7
துன்பம் துடைத்த கோவிந்தனார்
எம் பரம புருஷன்
கால்வாய் -தண்ணீரில்- மடை-தடை- நீர் வளம்-மீன்கள் துள்ளும்
திவ்ய தேசம் வாசம் செய்யும் மீனுக்கும் மங்களா சாசனம்
கடைதலை-வாசல் புலக் கடை
சீயக்க -பெருக்கி சுத்தம் ஆக்குவது -நம்மால் செய்ய முடிந்த கைங்கர்யம்
மேல் சாந்தி கீழ் சாந்தி தொட்டு கைங்கர்யம்
கடு வினை களைய பெறுவோம்
அவந்தி மன்னன் மனைவி லலிதா
விஷ்ணு தர்மம் கதை -லஷ தீபம் போட்டு கொண்டு இருப்பார் கள்
எலியாக பூர்வ ஜன்மம்- விஷ்ணு ஆலய த்ரீ சாப்பிட -சுடர் பெரியதாய் -பயந்து ஓடி வர
தீபம் போட்டாள்- புண்யம் லலிதா பிறந்து பூர்வ ஜன்ம ஞானம் -யதேர்சயாய் வந்த கைங்கர்யம்
கடு வினை களையலாகும் காமனைப் பயந்த காளை
இடவகை கொண்டது என்பர் எழில் அணி அனந்த புரம்
படமுடை யரவில் பள்ளி பயின்றவன் பாதம் காண
நடமினோ நமர்கள் உள்ளீர் ! நாமும் உமக்கு அறியச் சொன்னோம் –10-2-8
மன்மத ஜனகன்-
பிரத்யும்னன் –
வீர சயனம் உத்தான சயனம்
பள்ளி பயின்று நமக்கு பாதம் பணிய
நமர்கள்- ஆழ்வாரை சேர்ந்தவர்
நாம் உமக்கு அறிய சொன்னோம்
நாமும் உமக்கு அறியச் சொன்ன நாள்களும் நணியவான
சேம நன்குடைத்துக் கண்டீர் செறி பொழில் அனந்த புரம்
தூம நல் விரை மலர்கள் துவளற ஆய்ந்து கொண்டு
வாமனன் அடிக் கென்று ஏத்த மாய்ந்து அரும் வினைகள் தாமே –10-2-9
ஷேமம் வரும்
நல்ல புஷ்பம் சாத்தி-
துவள் -குற்றம் இன்றி
ஆய்ந்து கொண்டு தூபம்
திருநாமம் சொல்லி புஷ்ப கைங்கர்யம்
மாய்ந்து அரும் வினைகள் தாமே மாதவா ! என்ன நாளும்
ஏய்ந்த பொன் மதிள் அனந்த புர நகர் எந்தைக்கு என்று
சாந்தொடு விளக்கம் தூபம் தாமரை மலர்கள் நல்ல
ஆய்ந்து கொண்டு ஏத்த வல்லார் அந்தமில் புகழி னாரே –10-2-10
கேசவா ஆரம்பித்து இதில் மாதவா என்கிறார்
சந்தனம் கைங்கர்யம்
நித்ய சந்தன காப்பு -சுகந்தம்
நெய் தீபம் தூபம் மலர்கள் கொண்டு –ஆராய்ந்து உகந்ததாய் கொண்டு –
அந்தமில் பேர் இன்பத்தோடு அடியாரோடு -வாழ கைங்கர்யம்
அந்தமில் புகல் அனந்த புர நகராதி தன்னை
கொந்தலர் பொழில் குருகூர் மாறன் சொல் ஆயிரத்துள்
ஐந்தினோடு ஐந்தும் வல்லார் அணைவர் போய அமர் உலகில்
பைம் தொடி மடந்தையர் தம் வேய் மரு தோள் இணையே –10-2-11
பரம பதத்துக்கு ஒப்பான திவ்ய தேசம்
ஆதி -தனி முதல்
அர்ச்சிராதி மார்க்கம் சென்று அங்கு சேர்ந்து
ஸ்ரீ வைகுண்ட சுந்தரிகள் வர வேற்று சூடி களைந்த
திரு மாலைகள் கொடுத்து கூடி- மதி முக மடந்தையர் -ஏந்தினர் வந்தே
சதம் மாலா ஹஸ்தாகா –
சதம் அஞ்சன ஹஸ்தாகா
 சதம்  சூர்ண  ஹஸ்தாகா -ஸ்ரீ சூர்ணம்
சதம் வாசோ  ஹஸ்தாகா-பட்டாடை
 சதம் பர்ண ஹஸ்தாகா –
அங்கு போகம் இல்லை கைங்கர்யத்துக்கு பிரேமை சுத்தம்
அற்றது பற்று எனில் உற்றது வீடு இந்த்ர்யம் நீங்கி -சுஸ் சொரூபம் ஆவிர்பாகம் –
கிருஷ்ணா ஆத்மா ஆன பின்பு –விகாரம் இல்லை ஸ்தான கெளரவம்-

பிரேமை சேவையே வடிவான பெண்கள்
குற்றம் சித்தம்- நிர்மலம் ஆன மனஸ்
கெடும் இடர் வைகுந்தத்தை கிட்டினார் போல்
தடமுடை அனந்த புரம் தன்னில் –படவரவில்
கண் துயில் மாலுக்கு ஆள் செய்யக் காதலித்தான் மாறன் உயர்
விண் தனில் உள்ளோர் வியப்பவே -திரு வாய் மொழி நூற்று அந்தாதி –92
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading