திருவாய்மொழி-10-3-வேய் மரு தோள் இணை மெலியுமாலோ ! -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

வேய் மரு தோள் இணை மெலியுமாலோ !
மெலிவும் என் தனிமையும் யாதும் நோக்கா
காமரு குயில்களும் கூவுமாலோ !
கன மயில் அவை கலந்து ஆலுமாலோ !
ஆ மருவின நிரை மேய்க்க நீ போக்கு
ஒரு பகல் ஆயிரம் ஊழி யாலோ !
தாமரை கண்கள் கொண்டீர்தியாலோ !
தகவில்லை தகவிலையே நீ கண்ணா !–10-3-1
வேணு கீதம் -விரக தாபம் உடன் –
பிரணய கீதம் -கோபிகா கீதம் பிரசித்தம்
பிரமர கீதம்-வண்டு கண்டு அருளியது கோபிகள்
பிரியம் கூட கூட விரக தாபம் மிகுந்து –
சேர்ந்தவர் பிரிய கூடாது -மீரா கண்ணன் இடம் சட்டம் போட சொல்கிறாள்
அன்பு ஆர்வம் உருக்கம்-பிரிய நிலைகள்-
இதை பகவத் விஷயத்தில்-உண்மையான பக்தி-ஞான தீபம்-ஏத்தி திரு கண்டேன் காணலாம்
காலையும் வந்தது கிளம்பி விடுவானே எப்படி இருப்போம்
மாடு மேய்க்க போக வேண்டாம் கோபி பாவம்

மூங்கில் போல் பருத்தும் சிறுத்தும் இன்றி மள மள இருக்கும் தோள்கள்
நீ தழுவா விடில் மெலியும்
தொட்டு தொட்டு பேசுவதே புஷ்ட்டி
கூவாமல் குயில் இருக்கலாமே -கா -பூங்கா -இன் நினைவு வாட்டுமே
மயிலும் அகவ
பசுக்கள் மேல் கை வைத்தது நீ போக பகல்-நொடி யுகம் போல் –
போகும் அழகை பார்க்க -கடை கண்ணால் பார்த்தது குத்த
தகவில்லை தகவிலையே நீ கண்ணா !
தடமுலை புணர் தொறும் புனர்ச்சிக்காரா
சுக வெள்ளம் விசும்பிறந்  தறிவை மூழ்க்கச்
சூழ்ந்து  அது கனவென நீங்கி யாங்கே
அக வுயிர் அகம் தோறும் உள் புக்கு
ஆவியின் பரம் அல்ல வேட்கை யந்தோ !
மிக மிக வினி யுன்னைப் பிரிவையாமால்
வீவ நின் பசு நிரை மேய்க்கப் போக்கே –10-3-2
கண்ணா இது தகாது
போகிற போக்கில் ஆலிங்கனம்
சுகம் ஆகாசம் தாண்டி போக
நினைவு மூழ்கி போக
அறிவை மூழ்க கனவு போல்-
அகம் அகம் தோறும் -நீ தானே துணை
வீவன் நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வெவ் வுயிர் கொண்டு எனது ஆவி வேமால்
யாவரும் துணை இல்லை யான் இருந்து
உன் அஞ்சன மேனியை ஆட்டம் காணேன்
போவது அன்று ஒரு பகல் நீ அகன்றால்
பொரு கயல் கண் இணை நீரும் நில்லா
சாவது இவ் ஆய்க் குலத்து ஆய்ச்சியோமாய்ப் பிறந்த
இத் தொழுத்தையோம் தனிமை தானே–10-3-3
கோபிகள் -விரகம் ஒன்றாலே
தொழுததை-அடிமை
தனிமை தானே சாவது
தொழுத்தையோம் தனிமையும் துணை பிரிந்தார்
துயரமும் நினைகிலை கோவிந்தா ! நின்
தொழுத் தனிற் பசுக்களையே விரும்பித்
துறந்து எம்மை இட்டவை மேய்க்கப் போதி
பழுத்த நல் லமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மணம் அகம் தோறும் உள் புக்கு அழுத்த
நின் செங்கனி வாயின் கள்வப் பணி மொழி
நினை தொறும் ஆவி வேமால் –10-3-4
அடிமைகள் -விரகமும் -அறியாதவன்-நீ
அறிவிக்க -நீ கோபியாகணும்
கண்ணன் வேற வேண்டும்
அவன் பிரிந்தால்
நீ மோகன அவதாரம் -கண்ணன் வேணுமே
மாதிரி இல்லையே
மதுரை கண்ணன் வேற பிருந்தாவன கண்ணன் வேற
துவாரகை கண்ணன் வேற
சர்வக்ஜன் ஆனாலும் பிரிந்தவர் துயரமறியாதவன்
தொழுவம்-மாட்டு கொட்டகை
விரும்பி போகிறாய்
எங்களை துறந்து போகிறாய் உகந்து
பழ சாறு போல் அதர அமுதில் அழுத்து முழுக விட்டு
கள்வன் போல் வார்த்தை சொல்லி போனாய்–
உன்னை விட்டு பிரிய மாட்டேன் குளிர்ந்த வார்த்தை சொல்லி போனாயே
பணி மொழி நினைதொறும் ஆவி வேமால்
பகல் நிரை மேய்க்கிய போய கண்ணா !
பிணி அவிழ் மல்லிகை வாடை தூவப்
பெரு மத மாலையும் வந்தின்றாலோ !
மணி மிகு மார்வின்னின் முல்லை போது
என் வன முலை கமழ வித்து உன்  வாய் அமுதம் தந்து
அணி மிகு தாமரைக் கையை அந்தோ !
அடிச்சியோம் தலை மிசை நீ யணியாய் –10-3-5
பிரியே கொஞ்சி சொல்லி வார்த்தை

பிணைந்து -கட்டு விட்டு –
காற்று அளைந்து-சுகந்தம் -மாலை
முல்லை பூ மாலை சாத்தி-
அடிசியோம் சிரசில் வைத்து அனுக்ரகனம்
பிரேமையில் சுய நலம் இல்லை
எனக்கு சொல்லாமல் அடிசியோம் என்பர்
அனைவரையும் கூட்டி -சக்ய-தோழி மார் -கூடி இருந்து குளிர
கண்ணனே அமுது -திரு கண்ண அமுது- -அடிசியேன் சொல்லாமல்
எமக்கு அடிசியோம் என்கிறார்
அடிச்சியோம் தலை மீசை நீ யணியாய்
ஆழி அம் கண்ணா ! உன் கோலப் பாதம்
பிடித்தது நடுவுனக் கரிவை யருமபலர்
அது நிற்க எம் பெண்மை யாற்றோம்
வடித் தடம் கண் நினை நீரும் நில்லா
மனமும் நில்லா எமக்கது தன்னாலே
வெடிப்பு நின் பசு நிரை மேய்க்கப் போக்கு
வேம் எமது உயிர் அழல் மெழுகில் உக்கே –10-3-6
பாத சேவை பண்ண பலர் இருக்க

பிரேமை சாகரம்-என்னுடையவன்-எண்ணம் கொடுக்கும்
வடியும் கண்ண நீர் நில்லா
மனசும் அடக்க முடிய வில்லை
பசு நிரை மேய்க்க போனால் நெருப்பில் பட்ட மெழுகு போல் உருக
வேம் எமது உயிர் அழல் மெழுகி லுக்கு
வெள் வளை மேகலை கழன்று வீழ
தூ மலர்க் கண் இணை முத்தம் சோரத்
துணை முலை பயந்து என தோள்கள் வாட
மா மணி வண்ணா ! உன் செங்கமல வண்ண
மென் மலரடி நோவ நீ போய்
ஆ மகிழ்ந்து உகந்து அவை மேய்க்கின்று உன்னோடு
அசுரர்கள் தலை பெய்யில் எவன் கொல் ஆங்கே ?–10-3-7
உயிர் வெந்து போக

வெள்ளி வளையல் இடைச்சி-கழன்று விழ
மேகலையும் விழ
விரக தாபம் வெளுத்து
ஷணம்-ஜடமான பூக்களே கண்ணன் வந்தால் மலர்ந்து போனால் வாட
திரு அடி பிடித்து விட -கூசி பிடிக்கும் மெல் அடி -மலர் போன்ற
கல் உள்ள காட்டில் போகிறாயே
அசுரர்கள் பலர் வரும் இடம் வேற
என்ன ஆகுமோ-மாடு மேய்க்க போகாதே
அசுரர்கள் தலைப் பெய்யில் எவன் கொல் ? ஆங்கு என்று
ஆழும் என் ஆர் உயிர்  ஆன் பின் போகல்
கசிகையும் வேட்கையும் உள் கலந்து
கல்வியும் நலியும் என் கை கழி யேல்
வசி செய் உன் தாமரைக் கண்ணும் வாயும்
கைகளும் பீதக வுடையும் காட்டி
ஓசி செய் நுண் ணிடை இள வாய்ச்சியர்
நீ யுகக்கும் நல்லவரோடும் உழி தராயே –10-3-8
அசுரர்கள் பலர் வரும் கதை கேட்டு கவலை
பிரியத்துக்கு அர்த்தம் கவலை
பிள்ளை உறங்கா வல்லி வம்சம்-கத்தி வைத்து போவார்
புறப்பாட்டில் -தாசர் போல்-எதாவாது ஆபத்து வர கூடாது
வார்த்தா மாலை- குத்துவதற்கு இல்லை-ஆபத்து வந்தால் என்னை குத்தி
அதை நினைந்து பெருமாள் யாரையும் அபசாரம் படாமல் இருக்க சங்கல்பிப்பான்
எவன் கொல் ஆங்கு -கவலையில் தான் கண்ணன் திரும்பி வருகிறான்
நினைந்து -ஹிருதயம் கசிந்து பிரிந்து வறண்டு-கலவை
கசிகையும் வேட்கையும் கலந்து
கை இலே இரு புஜங்கன்-பாம்பு-அர்த்தம்-கை விட்டு போகாதே
பெண்களுக்கு கையாள் கண்ணன்
இட்ட வேலை செய்து கொண்டு வீட்டிலே இருக்கும் கண்ணன்
தாஸ்யம் -யாக சாலை போக வெட்கி-
வீட்டு வேலைக்கு -இருவரும் சேர்ந்து கடைய வளை கை ஸ்பர்சம் விரும்பி
ஒல்லை நானும் கடைவேன் –
பிரேமை ஒன்றுக்கு தான் கிடைப்பான்
வசிய மருந்து உன் கடாஷம் மந்த ஹாசம் திரு கைகள் அழகு
பீதக ஆடை காட்டினால் -இடை ஓடியும் மேகலை கழல பார்த்து நீ உகப்பாய்
கோபாலன்-பெயருக்கு தக்க மாடு மேய்க்க போக வேண்டுமே
உகக்கு நல்லவரோடும் உழி தந்து
உன் தன் திரு வுள்ளம் இடர் கெடும் தோறும் நாங்கள்
வியக்க வின்புறுதும் எம் பெண்மை யாற்றோம்
எம் பெருமான் ! பசு மேய்க்கப் போகல்
மிகப் பல வசுரர்கள் வேண்டு ருவம் கொண்டு
நின்று உழி தருவர் கஞ்சன் ஏவ
அகப்படில் அவரோடும் நின்னோடு ஆங்கே
அவத்தங்கள் விளையும் என் சொற்கள் அந்தோ !–10-3-9
நெற்றி வியர்க்குமே வெய்யிலில்-
முள் வாங்கி உண்டே
அசுரர் பல உருவம்
வேட்டை ஆடி வருபவனை பிருந்தாவனத்தில் கண்டோமே
கம்சன் ஏவி வருபவர்
அபத்தம் என்ன வருமோ
உன்னை விட்டு பிரிய முடிய வில்லை

உனக்கு பிடித்தவர் உடன்-
என் கண் வட்டத்தில் சஞ்சரிக்க அமையும்
இடர் கெடும்-இடையூறு இன்றி -நாங்கள் அனுகூலமாக பார்த்து கொள்வோம்
வியக்க -உன் சங்கல்பம் தான் பலிக்கும்
இன்புறுத்தும்-சந்தோசம் படுவோம்-எம்பெருமான்-உன் சித்த விருத்தங்கள் ஒன்றே லஷ்யம்
பூச்சாண்டி-சொல்லி பயப் படும் குழந்தை இல்லையே
சிங்கார ரசம்-வீர ரசத்தோடு முடியும் -பிராட்டி பிரிந்து யுத்தம் பண்ணினது போல்
சமந்தக மணி பல ராமன் இடம் கொடுக்க -கோபிகள் அதை விரும்பாமல் உன் சேஷ பொருளே விரும்பி இருப்பார்
உங்கள் சந்நிதியில் சிலர் உடம் கூட பரிமாறுகை இஷ்டமோ
எங்கள் ஓட்டை சம்ச்லேஷத்தில் காட்டிலும் உன் திரு உள்ளம் உகப்பே உத்தேசம்
அவன் சுகமே நம் சுகம்
அவத்தங்கள் விளையும் என் சொற்கள் அந்தோ !
அசுரர்கள் வன் கையர் கஞ்சன் ஏவ
தவத்தவர் மறுக நின்று உழி தருவர்
தனிமையும் பெரிது உனக்கு இராமனையும்
உவர்த்தலை உடன் திரிகிலையும் என்று என்று
ஊடுற என்னுடை ஆவி வேமால்
திவத்திலும் பசு நிரை மேய்ப்பு உவத்தி
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவே !–10-3-10
என் சொல் கேள்-அவன் ஆக்ஜை ப்ரஹ்மாதிகள் கேட்க

விரல் காட்டி இவள் சொல்ல –
அசுரர்ப்பாளர் வர
தபசிகள் -பெரி ஆழ்வார் -கலங்கி -மல்லாண்ட உன் திரு தோள் பல்லாண்டு
தனியாக பல ராமன் இன்றி-வஸ்த்ர ஆபரணம்/காளியன் அண்ணன் விட்டு போய் போனாயே
நம்பி மூத்த பிரானை ஒழிய சஞ்சரிக்கும் காலம் மிக பெரியவை
ஸ்ரீ வைகுண்டமே விட்டு வந்தாயே
பர ப்ரஹ்மே மாடு மேய்க்கும் சொரூபம்
ஆனந்த வல்லி-திவத்திலும் -பசு மேய்ப்பு உகத்தி
செம் கனி வாய் காட்டி சிரித்தானாம் இதை எல்லாம் கேட்டு
ஆயர் தேவு
செங்கனி வாய் எங்கள் ஆயர் தேவு
அத திருவடி திருவடி மேல் பொருநல்
சங்கணி துறைவன் வன் தென் குருகூர்
வன் சடகோபன் சொல் ஆயிரத்துள்
மங்கையர் ஆய்ச்சியராய் ஆய்ந்த மாலை
அவனோடும் பிரிவதற்கு இரங்கி தையல்
அங்கு அவன் பசு நிரை மேய்ப்பு ஒழிப்பான்
உரைத்தன இவையும் பத்து அவற்றின் சார்வே –10-3-11
கோமளமான அதரம்

திரு அடி-தாயாரும் -கூசி படிக்கும் மெல் அடி
யமுனை துறைவனை பொருநாள் துறைவன் அருளிய
சங்கு அணி-வெள்ளம்-சங்கு ஒதுங்கும் படி
வள்ளல் சடகோபன் -ஆய்ச்சியர் பாவம் ஆய்ந்த
பத்தும் -கோபிகள் அடைந்த லாபத்தை தரும்
வேய் மரு தோள் இந்திரை கோன் மேவுகின்ற தேசத்தை

தான் மருவாத் தன்மையினால் தன்னை இன்னம் பூமியில்
வைக்கும் என சங்கித்து மால் தெளிவிக்க தெளிந்து
தக்க புகழ் மாறன் எங்கள் சார்வு -திரு வாய் மொழி நூற்று அந்தாதி –93
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading