திருவாய்மொழி-10-5-கண்ணன் கழலினை -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

கண்ணன் கழலினை
நண்ணும் மனம் உடையீர்
எண்ணம் திரு நாமம்
திண்ணம் நாரணமே –10-5-1
கண்ணன் கழலினை-ஆழ்வார் வைபவம் சொல்ல வந்த வார்த்தை
இன் இசை பாடி திரிந்த மதுர கவி அல்வார்
தாமர  சத்து தாமர பரணி-பொன் சத்து -காவேரி-
ஆழ்வார் திரு மேனி/எம்பெருமானார் திரு மேனி  இதை கொண்டு
மதுரை தமிழ் சங்கம்-அருள் கவி-திவ்ய கவி-மருள் கவி இல்லை
அனல் வாதம்/புனல் வாதம் உண்டே
தேவர்களுக்கு சம்மதம் என்று பரிட்ஷை
இந்த பாசுரத்தில்- இந்த வார்த்தை-பானை பதம் பார்க்க சொல் போல்
அனல் பொசுக்க வில்லை புனல் தவளை போல் ஏத்தி வர
ஈடு இல்லாத திவ்ய பிரபந்தம் காட்டி கொடுத்த சொல்
அல்ப கார்யம் செய்து பெரிய பலன்
எண்ணினாலே போதும்-ஸ்மரணம் திரு நாமம் –
விளையாட்டாகா கேலியாக சொன்னாலும் செயல் படும்
திரு மந்த்ரம் சொல்ல யோக்யதை
அதிகாரி அங்க நியதி வேண்டா
பிரஜை தாய் பேரை சொல்லுவது போல்

அங்கங்கள் உண்டே மந்திர சித்தி
என்த்ரங்களும்  உண்டு சில மந்த்ரங்களுக்கு
மந்த்ரத்தில் மாங்காய் விழாது -பல மொழி
நாக்கில் பட்டாலும் போதும்
ஏளனமாக சொன்னாலும் போதும்-
அதிகாரி கால தேச நியமனம் இன்றி –
எங்கும் சொல்லலாமே நாராயணா -என்று
ரஷா கிரந்தம்-தேசிகன்-
குழந்தை அம்மா -கூப்பிடுவது போல்
ஆய் அலம்பி விட கூட கூப்பிடலாமே
பிரேமை உரிமையாக கூப்பிட லாமே
பக்த வத்சலன் –
நாரணன் எம்மான்
பார் அணங்கு ஆளன்
வாரணம் தொலைத்த
காரணன் தானே –10-5-2
பூதேவி நாதன்
குவலையா பீடம் தொலைத்த
வாரணம் காத்த பரம் பொருள்-கஜேந்த்ரனை காத்தவன்
கற்றினம் மேய்த்த கழல்-சௌலப்யம் சொல்லி பரத்வம்
பத்து வயசிலே ஆயிரம் யானைக்கு சமானமான யானையும் பாகனனையும் முடித்து
அவதார லீலையால் பர வஸ்து காட்டி
தானே உலகு எல்லாம்
தானே படைத்து இடந்து
தானே உண்டு உமிழ்ந்து
தானே யாள்வானே –10-5-3
இவனே ஸ்வாமி
தானே படைத்தது-வேறு உபாதான காரணம் இன்றி நிமித்த காரணம் இன்றி
உண்டு உமிழ்ந்து
ராம கிருஷ்ணா அவதாரம் செய்து அளித்து
சர்வம் கல்மிதம் பிரம -அசேதனம் அவன் ரூபம்
தத் துவம் அஸி– செத்தனர் அனைவரும் அவன் ரூபம்
ஆள் வான் ஆழி நீர்
கோள் வாய் அரவு அணையான்
தாள் வாய் மலர் இட்டு
நாள் வாய் நாடீரே –10-5-4
கடல் நீரில் காந்தி உள்ள வாய் கொண்ட அரவின் அணையில்
சயனித்து
நாடீர் நாள் தோறும்
வாடா மலர் கொண்டு
பாடீர் அவன் நாமம்
வீடே பெறலாமே –10-5-5
லஷ்யம் திரு அடி ஒன்றே
திண்ணம்-சங்கல்பம்
இந்த பிறவியே கடைசி
துளசி புஷ்பம் இட்டு அல்லும் பகலும் இல்லா விடிலும்
அவன் திரு நாமம் சொல்லி கொண்டே இருக்க
வீடே பெறுவோம்-
வீடே பெறலாமே -இரண்டு ஏகாரம்

நாம ஜபம் –எண்ண கண்ண விரலால்
நாம ஸ்மரணம் எண்ண
நாம கீர்தனமே போதும்
பாடீர் அவன் நாமம்
ஞான வைராக்கியம் எல்லாம்
அம்மா போல் அவன் அனைத்தையும் கொடுப்பான்
மேயான் வேம்கடம்
காயா மலர் வண்ணன்
பேயார் முலை உண்ட
வாயான் மாதவனே –10-5-6
பூதனை கூட பெற்றால்
விஷம் அவள் கொண்டு வர
நாமம் கொண்டு மாதவனே திரு வேம்கடத்தில்
வேம்கட கிருஷ்ணன்
காயா மலர் வண்ணன்
மாதவன் என்று என்றே
ஓத வல்லீரேல்
தீது ஒன்றும் அடையா
ஏதம் சாராவே –10-5-7
அவன் திருநாமமே
கேசவா ஹரே
மாதவா ஹரே
ராம கிருஷ்ணா ஹரே
வாசுதேவ கோவிந்தா ஹரே
கேசவா ஹரே
சொல்லி கொண்டே இருக்க
பக்திக்கு இடையூறு நீங்கும்
திரு நாம சங்கீர்த்தனம் பண்ண இடையூறுகளும் நீங்கும்
பூர்வ பாவம் போகும்
சாரா ஏதங்கள்
நீரார் முகில் வண்ணன்
பேரார் ஓதுவார்
ஆரார் அமரரே –10-5-8
ஜல தர சியாமளன்
யார் யார் ஓதுவார்
அவர் அவர் நில தேவர்
பூமியிலே நித்யர்
நிரந்தரமாக திரு நாமம் சொல்பவர் நித்யர் ஒப்பு
அமரர்க்கு அரியானை
தமர்கட்கு எளியானை
அமரத் தொழுவார்கட்கு
அமரா வினைகளே –10-5-9
தேர்வர்களுக்கு துற லபன்
பக்தர்களுக்கு சுலபன்
அவியாஜா பக்தி –
வினைகள் பறந்து போகுமே
வினை வல் இருள் என்னும்
முனைகள் வெருவிப்போம்
சுனை நன் மலர் இட்டு
நினைமின் நெடியானே –10-5-10
அஞாஞானம் இருட்டு முனை மழுங்கி போகும்
தானே விலகும்
நெடியான் அருள் சூடும்
படியான் சடகோபன்
நொடி ஆயிரத்து இப் பத்து
அடியார்க்கு அருள் பேறே –10-5-11
சர்வோத்தமன்-நெடியான்
அருள் சூடும் படி இருக்கும் சடகோபருக்கு ஒப்பு இல்லை
நொடி-சொன்ன
இதற்கும் ஈடு இல்லை
இது தானடியார் பெற்ற பேரு
பாக்கியம்
கண்ணன் அடி இணையில் காதல் உறுவார் செயலை
திண்ணம் உறவே சுருங்க செப்பியே –மண் அவர்க்கு
தான் உபதேசிக்கை தலை கட்டினான் மாறன்
ஆன புகழ் சேர் தன்னருள் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –95
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading