Archive for October, 2011

திருவாய்மொழி-9-8- அறுக்கும் வினையாயின ஆகத்தவனை -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 23, 2011
அறுக்கும் வினையாயின ஆகத்தவனை
நிறுத்தும் மனத்து ஒன்றிய சிந்தை யினார்க்கு
வெறித் தன் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
குறுக்கும் வகை யுண்டு கொலோ ? கொடியேற்கே–9-8-1
தூது விட்டாள்
ஆறுதலுக்கு திரு நாவாய் பெருமாள் சேவை
வினைகள்- அனைத்தும் நீக்கி
அவனையே மனசில் தியானம் செய்து —
திரு நாவாய் ஷேத்ரம் -கிட்டுமா -சேவை
நைச்ய அனுசந்தானம் -கொடியேற்கு
கிட்டும் வகை கிட்டுமா -திவ்ய தேசம் அருகில் போக
குறுக்கும் -எம்பெருமானார் எத்தனை தூரம் திரு நாவாய்  -எதிரில் வருவாரை கேட்டதும் குறுக்கும்
இப் பாஷையாலே அருளி செய்தாரே ஆனந்தம்- கிட்டே உள்ளது என்ற அர்த்தம்
ஐதீகம்-
கொடியர் இடைக் கோகனத்தவள் கேள்வன்
வடிவேல் தடம் கண் மடப் பின்னை மணாளன்
நெடியான் உறை சோலைகள் சூழ் திரு நாவாய்
அடியேன் அணுகப் பெறு நாள் எவை கொலோ ?–9-8-2
கொடி போன்ற இடை
கோககனத்வம் –அபூர்வ சொல் பங்கஜம் போல் –
நெடியான்-மிக பெரியவன்
எவை கொல் அணுகப் பெறு நாள் ? என்று எப்போதும்
கவையில் மனம் இன்றிக் கண்ணீர்கள் கலுழ்வன்
நவையில் திரு நாரணன் சேர் திரு நாவாய்
அவையுள் புகலாவது ஓர் நாள் அறியேனே –9-8-3
என்று கிட்டும் இந்த பாக்கியம்
கவையில் மனம்-திடமான மனஸ்
உறுதி உடன் இருந்தால் அவனும் அனுகூலமாக வருவான்
அவன் அழைத்து போக -கண்ணீர் விட்டு கொண்டு-கூவுமாறு
நவை-குற்றம் -அகில ஹேய பிரத்யநீகன்
அவன் திரு வோலக்கம்-அவை
கோப்புடைய சீரிய சிங்காசனம்
நாளேல் அறியேன் எனக்கு உள்ளன நானும்
மீளா வடிமைப் பணி செய்யப் புகுந்தேன்
நீளார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
வாளேய்  தடம் கண் மடப் பின்னை மணாளா !–9-8-4
குறித்த நாளும் அறியேன்
இருப்பதே ஆச்சர்யம்-
நீ தான் அறிவாய்
கைங்கர்யமே செய்யும் படி சரண் அடைந்தேன்
வாள் போல் அலையும் விசாலமான திரு கண் கள் கொண்ட நப்பின்னை

மணாளன் மலர் மங்கைக்கும் மண் மடந்தைக்கும்
கண்ணாளன் உலகத்து உலகத்து உயிர் தேவர்க்கு எல்லாம்
வின்ணாளன் விரும்பி யுறையும் திரு நாவாய்
கண்ணாரக் களிக்கின்றது இங்கு என்று கொல் கண்டே ?–9-8-5
மணாளன் -நப்பின்னைக்கு முதலில் சொல்லி பிரேமையால் பிராதானம்
ஆயர் மட மகள் பிராதானம்- நிலம்- அதை அனுபவிக்கும் தலை  மகள்-மண் மகள் மலர் மகள்
கண்ணாளன்-வழி காட்டி லஷ்மி நாதன் -குரு பரம்பரை முதல் ஸ்தானம்
ஸ்ரீ வைகுண்ட வாசி விரும்பி -விரக்தாய -இங்கு உறைகின்றான்
கண்டே  களிக்கின்றது இங்கு என்று கொல் ? கண்கள்
தொண்டே யுனக்காய் ஒழிந்தேன் துரிசின்றி
வண்டார் மலர்ச் சோலைகள் சூழ் திரு நாவாய்
கொண்டே உறைகின்ற எம் கோவலர் கோவே !–9-8-6
ராஜ கோபாலா ! கோவலர் கோவே !
தொண்டர்-இங்கு உள்ள பெருமாள் போக சொல்லி அங்கு உள்ளவன் கூப்பிடணுமே
எல்லா திவ்ய தேசமும் திரு மலை தான் கைங்கர்ய பரர
அனுபவ பரர்களுக்கு வேற
எம்பெருமானார் பெரிய பெருமாள் கூப்பிட
தீர்த்த கைங்கர்யம் செய்வதை வீட்டு போக பேர் அருளாளன் உத்தரவு-
 தொண்டை விடுவதே தோஷம்-துரிசில்
கொண்டே -கோவில் கொண்டு
கோவாகிய மாவலியை நிலம் கொண்டாய் !
தேவாசுரம் செற்றவனே ! திரு மாலே!
நாவாய் யுறைகின்ற நாரண நம்பி !
ஆவா ! அடியான் இவன் என்று அருளாயே –9-8-7
லோகானாம் ஏக ஈஸ்வராம் – மார்பு தட்டி கொண்டானே மா வலி
சத்ய சந்தன் பாகவத  அபிமானம் கொண்டவன்  அள்ளி கொடுப்பவன்  –
கர்வம் பிடித்தவன்-ஐஸ்வர்யம் மீட்டு கிருபை கொடுத்து உணர்ந்தான்
தெயவாசுரம்-தேவர் அசுரர் -வேற்றுமை கலக்கம்- விரோதம் நீக்கி
ஆ ஆ  சொல்லி அடியேனை மகிழ்ந்து அருள வேண்டும்
அருளாது ஒழிவாய் அருள் செய்து அடியேனைப்
பொருளாக்கி உன் பொன்னடிக் கீழ்ப் புக வைப்பாய்
மருளே இன்றி உன்னை எந்நெஞ்சத்து இருத்தும்
தெருளே தரு தென் திரு நாவாய் என் தேவே !–9-8-8
அருளா விடிலும்-உன்னையே என் நெஞ்சத்தில் இருத்தும் –
கிருபை என்றும் உண்டே /சோதிக்கிறான்-உலகத்தோர் வார்த்தை
நம் உடைய லாப நஷ்டம் கொண்டு அளக்க முடியாத கிருபை
குசேலர்-வழி செலவு கூட கொடுக்காமல் அனுப்ப
தாபம் இன்றி -கொடுத்தால் அதை எண்ணி தன்னை எண்ண மாட்டான் அதுவும் கிருபை என்று நினைத்தாரே
ஆராய்ந்து அருளுவான் –சுகமா நாசமா என்று எல்லாம் ஆராய்ந்து அனுக்ரகம் செய்வான் –இவன் இடம்
வரம் வாங்கி திமிர் பிடித்தவன் இல்லை -இவர் தான் தீர்த்து வைத்தார் மற்றவர் வர பலநாள் வந்த விளைவுகளை
மண்ணை வாங்கி தானே வீட்டு வாசலில் நின்றானே மகா பலிக்கு
சரண்யனை நம்ப வேண்டும்-பிராண நாதன்-உனக்கு ஆள் படுத்தி கொண்டு சம்பந்தம் ஒன்றே வேண்டும்
கல்யாண குணத்துக்கு அடிமை-
பொருள் ஆக்கி -அவஸ்து ஆக இருந்தேன்-திரு அடியில் சேர்த்து கொண்டானே
சங்கை இன்றி-திட விசுவாச ஞானம் தர வேண்டும் -இது ஒன்றே வேண்டும்
தேவர் முனிவர்க்கு என்றும் காண்டதற்க்கு அரியன்
மூவர் முதல்வன் ஒரு மூ வுலகாளி
தேவன் விரும்பி உறையும் திரு நாவாய்
யாவர் அணுகப் பெறுவார் ? இனி யந்தோ !–9-8-9
தேவர் முனிவர் அனைவருக்கும் காண அரியதாய்
ந்தே மனுஷ்ய – தேவ சுப குண்டலம் தசரதன் -மனுஷ்யர்களுக்கு
14 நிமிஷம் கூட பிரிய முடியாது –14 வருஷம் காத்து மீண்டும் பெருமாளை தரிசிப்பவர் தெய்வ பிறவி
அவர்கள் திரு அடி தலை மேல் தரிப்பேன் -சக்கரவர்த்தி வார்த்தை போல்
அது போல் திரு நாவாய் அணுக பெரும் அடியவர்கள் என் தெய்வம்
அந்தோ ! அணுகப் பெறுநாள் என்று எப்போதும்
சிந்தை கலங்கித் திருமால் என்று அழைப்பன்
கொந்தார் மலர் சோலைகள் சூழ் திரு நாவாய்
வந்தே யுறைகின்ற எம் மா மணி வண்ணா !–9-8-10
உன் திரு அடி அணுக பெறுவது என்றோ
திரு மால்-ஜகன் மோகனா கூப்பிடுகிறார்
ஏங்கி கூக்குரல்
வண்ணம் மணி மாட நல நாவாய் உள்ளானை
திண்ணம் மதிள் தென் குருகூர் சடகோபன்
பண்ணார் தமிழ் ஆயிரத்து இப் பத்தும் வல்லார்
மண்ணாண்டு மணம் கமழ்வர் மல்லிகையே  –9-8-11
மாடம் நிறைந்த திவ்ய தேசம்
அதற்க்கு ஏற்ற திரு குருகூர்
பத்தையும் பாட வல்லவர் பூ மண்டலம் ஆண்டு -சமர்த்தி மனம் நிறைவு
இக லோகத்தில் வைவச்ய ஸ்ரியால் சம்பனராய் இருப்பார்
அறுக்கும் இடர் என்று அவன் பால் அங்கு விட்ட தூதர்
மறித்து வரப் பற்றா மனத்தால் –அறப் பதறி
செய்ய திரு நாவாயில் செல்ல நினைந்தான் மாறன்
மையலினால் செய்வது அறியாமல் -திருவாய் மொழி நூற்று அந்தாதி –88
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-9-7-எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 23, 2011
எம் கானல் அகம் கழிவாய் இரை தேர்ந்து இங்கு இனிது அமரும்
செம் கால மட நாராய் ! திரு  மூழிக் களத்து உறையும்
கொங்கார் பூம் துழாய் முடி எம் குடக் கூத்தர்க்கு என் தூதாய்
நும் கால்கள் என் தலை மேல் கெழுமீரோ நுமரோடே –9-7-1
சிவந்த கால் கொண்ட நாரை
கழி வாய்க்கால் -இவள் தோட்டத்தில் இருக்கும்
தூது -தேன் ஒழுகும் புஷ்பம் துளசி மாலை சூடிய திரு முடி
நும் திரு அடி சூட்டி-நுமரோடும்-
ஆச்சர்யர் ச புத்திர ச பத்னி குடும்பம் ஆச்சார்யர் இடம் சேவை பண்ணும் அனைவர் உடன் ஈடு பாடு
மணக்கால் நம்பி-உய்யக் கொண்டார் கன்னிகைகள் தீர்த்தம் ஆட -கால்வாய் -சேறாக இருக்க
குப்புற படுத்து முதுகு காட்டி தாண்ட சொல்ல –ஐதீகம்-உத்தம சிஷ்யர் லஷணம்
அரு கால சிறு வண்டே-சீக்கிரம் போக முதலில்/பறந்து போகுமே /காள் என் சொன்னார்
தொழுதேன் உன்னை அடுத்த வாக்கியம்-அனைத்து காலையும் தொழ –
நுமரோடும் பிரியாதே நீரும்  நும் சேவலுமாய்
அமர் காதல் குருகினம் காள் ! அணி மூழிக் களத்து உறையும்
எமராலும் பழிப் புண்டு இங்கு என் ? தம்மால் இழிப்புண்டு
தமரோடு அங்கு உறைவார்க்குத் தக்கிலமே ? கேளீரே –9-7-2
விரக வேதனை அறியாத உங்கள்-
என் கூட்டத்துக்கு – பிடிக்காமல் போனேன் காதா சித்தமாக சம்ச்லேஷம் -விச்லேஷம்-
அறிந்து கை விட்டார்-அன்குற்றேன் இல்லை இங்குற்றேன் இல்லை
பந்துகள் கை விட்டதே ஹேதுவாக கை கொள்ள வேண்டும் என்கிறாள்
பகவத் விஷயத்தில் உள் புக உள் புக சம்சாரிகள் விலகுவார் -தாத்பர்யம்
தக்கிலமே ? கேளீர்கள் தடம் புனல் வாய் இரை தேறும்
கொக்கினம் காள் ! குருகினம் காள் ! குளிர் மூழிக் களத்து உறையும்
செக்கமலத்து அலர் போலும் கண் கை கால் செம்கனிவாய்
அக் கமலத்தின் இலை போலும் திரு மேனி யடிகளுக்கே –9-7-3
அடிகள்-பகவானை-ஸ்வாமி
திரு மேனி -கமல இலை போல் பசுமை
கை கால் முகம் எல்லாம் கமலம்
அடையாளம் சொல்லி தூது
இது தகுமோ என்றுகேட்டு வாரீர்
திரு மேனி யடிகளுக்குத் தீ வினையேன் விடு தூதாய்
திரு மூழிக் களம் என்னும் செழு நகர் வாய் அணி முகில் காள் !
திரு மேனி அவட்கு அருளீர் என்றக்கால் உம்மைத் தன
திரு மேனி ஒளி அகற்றித் தெளி விசும்புகடியுமே ?–9-7-4
என் ஸ்வாமிக்கு விட்ட தூது
முகில்கள்-
எனக்கு உன் திரு மேனி கொடும்
அவருக்கு கோபம் வந்து வெள்ளை விசும்பு ஆக்கி ஆகாசத்தில் பறக்க விடுவாரா
பயமா
தெளி விசும்பு கடிதோடித் தீ வளைத்து மின்னிலகும்
ஒளி முகில்காள் ! திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடர்க்கு
தெளி விசும்பு திரு நாடாத் தீ வினையேன் மனத்து உறையும்
துளிவார் கட் குழலார்க்கு என் தூது உரைத்தல் செப்புமினே –9-7-5
வேகமாக ஓடி -தெளிந்த ஆகாசத்தில்
தூது உரைத்தல் செப்புமின்கள் தூ மொழிவாய் வண்டு இனங்காள்  !
போது இரைத்து மது நுகரும் பொழில் மூழிக் களத்து உறையும்
மாதரைத் தம் மார்வகத்தே வைத்தார்க்கு என் வாய் மாற்றம்
தூது உரைத்தல் செப்புதிரேல் சுடர் வளையும் கலையுமே –9-7-6
வண்டுகள்-ரீங்காரம் செய்து
மலர் இருந்து தேன் உண்டு-
பிராட்டி உண்டே புருஷ காரம் செய்ய
பதில் கேட்டு வாரும்
வளையும் மேகலையும் கொண்டு போனாரே மீண்டு வாங்கி வாங்கோ
சுடர் வளையும் கலையும் கொண்டு அரு வினையேன் தோள் துறந்த
படர் புகழான் திரு மூழிக் களத்து உறையும் பங்கயக் கண்
சுடர் பவள வாயனைக் கண்டு ஒரு நாள் ஓர் தூய மாற்றம்
படர் பொழில் வாய் குருகினன்கால் ! எனக்கு ஓன்று பணியீரே-9-7-7
காந்தி ஒழுகும் வளை/மேகலை
தன்னாலே கழன்று போக கொண்டு போக /தோளை விட்டு விட்டு போனாரே
என்னையும் கொண்டு போய் இருக்கலாமே
சார சோர சிகாமணி-உலகம் எல்லாம் அறிந்த கள்வன்
பங்கய கண் /பவள வாய் கொண்டவன்
எனக்கு ஓன்று பணியீர்கள் இரும் பொழில் வாய் இரை தேர்ந்து
மனக்கு இன்பம் பட மேவும் வண்டினங்காள் ! தும்பிகாள் !
கனக் கொள் திண் மதிள் புடை சூழ் திரு மூழிக் களத்து உறையும்
புனக் கொள் காயா மேனிப் பூம் துழாய் முடியார்க்கே –9-7-8
விசாலமான தோட்டம்-இரை தேடி போகும்
மனம் இன்பம் படும் ரீங்காரம் செய்து
வயலில் அடர்ந்து காயம் பூ போல் மேனி
பூம் துழாய் முடியார்க்கு பொன் ஆழி கையாருக்கு
ஏந்து நீர் இளம் குருகே ! திரு மூழிக் களத்தாருக்கு
ஏந்து பூண் முலை பயந்து என் இணை மலர்க் கண் நீர் ததும்ப
தாம் தம்மை கொண்டு அகல்தல் தகவு அன்று உரையீரே–9-7-9
கொக்கு இனம்-தண்ணீரில் நீந்தி-
அவருக்கு என்று பூஷணம் தரித்து இருக்கும்
பிரிந்தது தகவு இல்லை
அனைத்தையும் காத்து –
ஸ்திரீ வதம் அஞ்சாதவன்
தகவு அன்று என்று உரையீர்கள் தடம் புனல் வாய் இரை தேர்ந்து
மிக வின்பம் பட மேவும் மென்னடைய அன்னங்காள் !
மிக மேனி மெலிவு எய்தி மேகலையும் ஈடு அழிந்து என்
அக மேனி ஒழியாமே திரு மூழிக் களத்தார்க்கே –9-7-10
அன்னம்-நடையில் அழகு-
மேனி மெலிந்து மணி மேகலை கழன்று
ஒழிவின்றி திரு மூழிக் களத்து உறையும் ஒண் சுடரை
ஒழிவில்லா வணி மழலைக் கிளி மொழியாள் அலற்றிய சொல்
வழு வில்லா வன் குருகூர் சடகோபன் வாய்ந்து உரைத்த
அழிவில்லா வாயிரத்து இப் பத்தும் நோய் அறுக்குமே –9-7-11
நித்ய வாசம் செய்யும்
நித்ய அலற்றுதல் பராங்குச நாயகி
கிளி போல் மொழி
பத்தும் -சம்சாரம் அறுக்கும்
சாஸ்வதம் –
பகவத் விச்லேஷம் ஆகிய விரக வியாதி நீக்கும்

எம் காதலுக்கு அடி  மால் ஏய்ந்த வடி வழகு என்று
அங்குஆது பற்றாசா ஆங்கு அவன் பால்-எங்கும் உள்ள
புள்ளினத்தை தூதாக போக விடும் மாறன் தாள்
உள்ளினார்க்குத் தீங்கை அறுக்கும் –திரு வாய் மொழி நோற்று அந்தாதி –87
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-9-6-உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 23, 2011

உருகுமால் நெஞ்சம் உயிரின் பரம் அன்றி

பெருமாள் வேட்கையும் என் செய்கேன் தொண்டனேன் ?
தெரு வெல்லாம் காவி கமல் திரு காட் கரை
மருவிய மாயன் தன மாயம் நினைதொறே–9-6-1
அவன் ஆழ்வார் இடம் கலந்த விதம் ஆனந்தமாக அருளுகிறார் இதில்
கீத கோவிந்தம்-அஷ்ட பதி ராதை சங்கோசம் இன்றி அருளுகிறாள் தன சகிக்கு .
வேட்கை-தனிய சம்பந்தம்
ஆனால் அதுவே பெருக வழி வகுக்க
செம் கழுநீர்-சொவ்கந்திக புஷ்பம் பூத்து கமழும் திவ்ய தேசம்
நினை தோறும் சொல்லும் தோறும் நெஞ்சு இடிந்து உகும்
வினை கொள் சீர் பாடிலும் வேம் எனது ஆர் உயிர்
சுனை கொள் பூம் சோலை தென் காட்கரை என்னப்பா !
நினைகிலேன் நான் உனக்கு  ஆள் செய்யும் சீர்மையே–9-6-2
உன் கலவி நினைக்கசொல்ல -ஆசை பெருக
சீலம்-தாபம்நீக்கும் ஆனால் எனக்கு தாபம் கொடுத்து
பூம் சோலை சூழ்ந்த
கைங்கர்யம் செய்யும் பிரகாரம் அறிய முடியவில்லை
ஆத்மா வஸ்துவையும் தகியா நின்றது
ஆத்ம தர்மம் பிரேமை -கிருஷ்ணா விரகம்
பனி தாமரை ஒன்றையும் கருக பண்ணுவது போல்
உதடு வெடித்து பனி பண்ணுவது போல் கிருஷ்ண பக்தி
நீர்மையால் நெஞ்சம்  வஞ்சித்து புகுந்து என்னை
ஈர்மை செய்து என் உயிராயஎன் உயிர் உண்டான்
சீர் மல்கு சோலை தென் காட்கரை என்னப்பன்
கார் முகில் வண்ணன் தன  கள்வம் அறிகிலேன் –9-6-3
ஈர்மை-கவர்ந்து
எனக்கு உயிர் நினைத்தேன் என் உயிர் உண்டான்
தன்னை தானே உண்டான்
இருவரும் கூட புஜிக்க புகுந்து தானே புஜித்தான்
கபடக் காரன்
அறிகிலேன் தன்னுள் அனைத்து உலகும் நிற்க
நெறிமையால் தானும் அவற்றுள் நிற்கும் பிரான்
வெறி கமழ சோலை தென் காட் கரை என்னப்பன்
சிறிய வென் ஆர் உயிர் உண்ட திரு வருளே 9-6-4
அகண்ட பொருள் அவன்
அனைத்தும் அவன் உள் இருப்பவன்
அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகன்
விராட் புருஷன் மயிர் கால் தூசி போல் அண்டம்
விபூத்வம் புரிவது கஷ்டம்
அணுவுக்கு அணுவாகா மகத்துக்கு மகமாய உள்ளும் புகுந்து வேற இருக்கிறான்
சிறிய என் உயிர் -உன் பிரபுத்வம் என் சிறுமை
சொரூப ஞானம் -பிரேமை பெரிதா சொரூபம் பெரிதா
பிரேமையில் விபு நான் சொரூபில் நீ விபு
இருவருக்கும் போட்டி
திரு வருள் செய்பவன் போல் என்னுள் புகுந்து
உருவமும் ஆர் உயிரும் உடனே உண்டான்
திரு வளர் சோலை தென் காட்கரை என்னப்பன்
கரு வளர் மேனி நம் கண்ணன் கள்வன்களே –9-6-5
நான் மட்டும் அவனுக்கு பலி
வந்த அன்றே கடாஷம் செய்து
கூசி கொண்டு வர -பெருமாள் அழுக்கு உடம்பு
விரும்பா நின்றான் -பரம பாகவதன்
இவர் த்யாஜ்யம் என்பதை உத்தேசயம்
அவன் பிரியமே லஷ்யம் ஆன பின்பு பிரேம தசையில் சரீரம் அவனுக்கு போக்கியம்
இவன் அபிமானம் பட்டு அழுக்கு நீங்கி
இவருக்கு அவர் உடன் சகவாசம் சொரூப ஞானத்துக்கு உடல் ஆனது
அவனுக்கு இவரோடு சக வாசம் தேக ஆத்மா அபிமானத்துக்கு உடல் ஆனது
ஆழ்வார் சறேரத்தில் ஆசை
ஞானி பக்தன் சரீரம் ஆசை கொண்டான்
நாய் பாண்டு ரெங்கன்-நாம தேவன்-உட்காரும் இடம் கண்டு தவித்தான்
பிரேமையால் அவனுக்கு அஞாக்னம் வந்தது
குரு பிரீதியால் உமக்கு
என் கண்ணன் கள்வம் எனக்கு செம்மாய் நிற்கும்

அம கண்ணன் உண்ட என் ஆர் உயிர் க்கோ திது
புன் கண்மை எய்திப் புலம்பி இராப் பகல்
என் கண்ணன் என்று அவன் காட்கரை யேத்துமே –9-6-6
கள்வன் சொல்ல சொல்ல -பிடிக்கும்
கிருஷ்ணா பரமாத்மா சொல்வது -விட
யோகிகளுக்கு பரமாத்மா -கோபிகளுக்கு சார சோர சிகாமணி
செம்மை ருசிகரம் கண்ணன் கள்வன் சொல்வது
கண்ணன் கட்டி கொண்ட சரீரம் என்றதால் ஆழ்வாருக்கும் உடம்பில் ஆசை வந்ததாம்
பக்தி சிங்காரம்-நானேகண்ணனின் எச்சில்- முழுங்கி துப்பின கோது !
காட்கரை ஏத்தும் அதனுள் கண்ணா ! என்னும்
வேட்கை நோய் கூர நினைந்து கரைந்து உகும்
ஆள் கொள் வான் ஒத்து என் உயிர் உண்ட மாயனால்
கோள் குறை பட்டது என் ஆர் உயிர் கோள் உண்டே–9-6-7
திவ்ய தேசம் பெயரை சொல்லி
அதுவே உத்தேசம்
விரக நோய் தாளாமல் உருகி
கட்டி கொண்டு பருகினான்-
திருப்தி கொள்ளாமல்  மீண்டும் வருவான்
நிசேதமாக–  உண்டும் சாபெஷமாக் போவதால்
 இத் தலைக்கு –இன்னும் வருவான்-என்பதால் ஜீவித்து இருக்கிறார்
கோள் உண்டான் அன்றி வந்து என் உயிர் தான் உண்டான்
நாளு நாள் வந்து என்னை முற்றவும் தான் உண்டான்
காள நீர் மேகத் தென் காட்கரை என் அப்பற்கு
ஆள் என்றே பட்டது என் ஆர் உயிர் பட்டதே –9-6-8
பூரணமாக அனுபவம் இன்றி சாத்மிக சாத்மிக
கொஞ்சம்கொஞ்சமாக அனுபவித்து
வெண்ணெய் தொட்டு உண்ட பழக்கம்
வகுளா பரண நாயகியை தொட்டு நாளும் நாளும் வந்து
ஒரு நாள் போதும் என்று கை வாங்கி இருக்காமல்
நாள் தோறும் நாள்   தோறும்  ஆழ்வார் இவனுக்கு ஆரா அமுதம் போல் அனுபவிக்கிறான்

ஆர் உயிர் பட்டது எனது உயிர் பட்டது ?

பேர் இதழ் தாமரை கண் கனி வாயது ஓர்
கார் எழில் மேகத்து என் காட்கரை கோயில் கோள்
சீர் எழில் நால் தடம் தோள் தெய்வ வாரிக்கே –9-6-9
அவன் அனுபவிக்கும் பொழுது நான் பட்டபாடு யாரும் பட வில்லை
நித்ய விபூதியில் உள்ளவர் கூட பட வில்லை
அங்கு ஆர் உயிர் பட்டது  இவர் போல் -எம்பெருமானார் நிர்வாகம் –
வாரிக் கொண்டு உன்னை விழுங்குவன் காணில் என்று
ஆர்வுற்ற என்னை யொழிய என்னின் முன்னம்
பாரித்து தான் என்னை முற்ற பருகினான்
கார் ஒக்கும் காட்கரை யப்பன் கடியனே –9-6-10
வாரிக் கொண்டு–இன்று அவன் வந்தால் முழுங்க நினைத்த ஆழ்வாரை
தான் விழுங்கி விட்டான்
முற்ற பருகினான்
நானும் அவனுமாக விளையாட -முடியாமல்-
எதிர் தலைக்கு இடம் இன்றி போக தசையில் அனுபவம் அவனுக்கே
கடியனே கஞ்சனை கொன்ற பிரான் தன்னை
கொடி மதிள் தென் குருகூர் சடகோபன் சொல்
வடிவமை யாயிரத்து இப் பத்தினால் சன்மம்
முடி வெய்தி நாசம் கண்டீர்கள் எம் கானலே –9-6-11
கடியன்-சீக்கிரமாக
அழகான பாசுரம்-ஒன்றை சேவித்தாலும் பிறவி அரும்
சம்சாரம் ஆகிய வெப்பம் நாசம் அடையும்
அனுபவித்து பார்த்து உணரலாம்
உருகுமால் என் நெஞ்சம் உன் செயல்கள் எண்ணி
பெருகுமால் வேட்கை என பேசி மருவுகின்ற
இன்னாப்புடன் அவன் சீர் ஏய்ந்து உரைத்த மாறன் சொல்
உள்ளினருக்கு தீங்கை அறுக்கும் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –86
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-9-5-இன் உயிர் சேவலும் நீரும் கூவிக் கொண்டு -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 23, 2011
இன் உயிர் சேவலும் நீரும் கூவிக் கொண்டு இங்கு எத்தனை
என் உயிர் நோவ மிழ ற்றேன்மின் குயில் பேடை காள்
என் உயிர் கண்ண பிரானை நீர் வரக் கூவுகிலீர்
என் உயிர் கூவிக் கொடுப்பார்க்கும் இத்தனை வேண்டுமோ ?–9-5-1
அவனை நினைக்கவே பிர பஞ்சம்
உலக பொருள் எல்லாம் அவனை நினைவு படுத்துமே

மிருதங்கம் மண் எடுக்கும் இடம்-அவன் நினைவு வர அங்கே உருண்ட
பகவத் சம்பந்தம்

மிதுனத்தில் கூவி கொண்டு -மிழற்றி
விச்லேஷம் அதிக படுத்தி-
அவனை வர கூவுங்களே
என் உயிர் போன்றவனே
திர்யக் புல்/மனிசர் அன்னம்-தேவர் அமுதம்-இவளுக்கு உயிர்
கூவிஎன் உயிர் அவனுக்கு கொடுக்க வேண்டுமே
உங்களை கூவ சொல்ல இதனை பாடு பட வேண்டுமா
இத்தனை வேண்டுவது அது அன்றோ ! அன்றில் பேடைகாள்
எத்தனை நீரும் நும் சேவலும் கரைந்து எங்குதிர்
வித்தகன் கோவிந்தன் மெய்யன் அல்லன் ஒருவர்க்கும்
அத்தனையாம் இனி என் உயிர் அவன் கையதே–9-5-2
அன்றில்- மிதுனம் இங்கும்
கரைந்து பிரேமை உடம் ஏங்க
அவன் ஒருவன் இடமும் மெய்யன் இல்லை
ஏலா பொய்கை உரைப்பான் -ஆண்டாள் இடம் பட்டம்
கன்று இருக்கா உறி பார்த்தான்
யமுனை கரையில்-தாயார் வஸ்த்ரம்-உடுத்தி கொண்டு-
ஸ்ரீ ரெங்க நாயகி-உறையூர் நாச்சியார்-மோதிரம் எங்கே -தேட போனேன்
உறையூரை கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை தேவர்கள் சாஷி-
பாம்பு குடத்தில் கை விட்டுசபதம்-பாம்பு அணை பள்ளி
காய்சின இரும்பை பிடித்து சத்யம்
ஆழி கொண்டு இருக்கிறீரே
அவன் கையதே எனது ஆர் உயிர் அன்றில் பேடைகாள்
எவன் சொல்லி நீர் குடைந்தாடுதிர்  புடை சூழவே
தவம் செய்தில்லா வினை யாட்டியேன் உயிர் இங்கு உண்டோ ?
எவன் சொல்லி நிற்றும் ? நும்  ஏங்கு கூக்குரல் கேட்டுமே  –9-5-3
பிராண வல்லபன்
எவம்-பாட பேதம் ஏதாவது சொல்லி கொண்டு இருகிறீர்
ஆசை மட்டும் உண்டு- உயிர் தானே உயிர் காவலன் இடம் போனதே
யார் சொல்லி நிறுத்த முடியும்

கூக்குரல் கேட்டும் நம் கண்ணன் மாயன் வெளிப்படான்
மேற் கிளை கொள்ளேன்மின் நீரும் சேவலும் கோழி காள் !
வாக்கும் மனமும் கருமமும் நமக்கு ஆங்கு அதே
ஆக்கையும் ஆவியும் அந்தரம் நின்று உழலுமே –9-5-4
கூவல் கேட்டும் வெளி பட விலை
வெளிப் பட்டால் திரு வாய் மொழி முடிந்து விடுமே
விரக தாபத்தால் பாசுரம் கக்கி விடுவாள்
மேல் சுரம் கொண்டு கூவ  மயிலை சொல்கிறார்
வாக்கு கண்ணா சொல்ல கை கால் தொண்டு செய்ய -உயிரும் உடலும் அந்தரத்தில் இருக்க
மற்றவை அவன் இடம் போய் சேர்ந்தன
அந்தரம் நின்று உழல்கின்ற யானுடைப் பூவைகாள் !
நும் திறத்து ஏதும் இடை இல்லை குழறேன்மினோ
இந்திர ஞாலங்கள் காட்டி இவ் ஏழு உலகும் கொண்ட
நம் திரு மார்பன் நம் ஆவி யுண்ண நன்கு எண்ணினான் –9-5-5
பூவை பார்த்து அடுத்து
இந்திர ஜாலம் போல் அனைத்தையும் படைத்து
நம் திரு மார்பன்-ஆழ்வார் அபிமானம் உண்டு
நம் ஆவி உண்ண சங்கல்பித்தான்
என் தோழி என்பதால் உனக்கும் பேரு கிட்டும்
நன்கு எண்ணி நான் வளர்த்த சிறு கிளிப் பைதலே !
இன் குரல் நீ மிழற்றேல் என் ஆர் உயிர்க் காகுத்தன்
நின் செய்ய வாய் ஒக்கும் வாயன் கண்ணன் கை காலினன்
நின் பசும் சாம நிறத்தன் கூட்டு உண்டு நீங்கினான் –9-5-6
கிளி பிள்ளாய்-அடுத்து
இனிமை குரல்
காகுத்தன் உயிர் ஆனவன் -பெருமாள்-
உன் வாய் போல் சிவந்து
கண்ணும் கையும் காலும் சிவந்து
அவனை சேர்ந்தவள் நீயும் என்னை சேர்ந்தவள் இல்லை
கூடி விட்டு நீங்கி நான் என்னை மறந்து
கூட்டுண்டு நீங்கிய கோலத் தாமரை கண் செவ்வாய்
வாட்டமில் என் கரு மாணிக்கம் கண்ணன் மாயன் போல்
கோட்டிய வில்லொடு மின்னு மேகக் குழாம் காள் !
காட்டேன் மின் நும்  உரு என்  உயிர்க்கு  அது காலனே –9-5-7
அடுத்து மேகங்கள் –கண்ணன் போல்
வில்- சார்ங்கம் /மின்னல் கொடி போல் பிராட்டி /கருணை வர்ஷிகிறான்
மின்னும் உருவை காட்டாதே
மின் நும் -பன்மையில்
உயிர்க்கு அது காலன் என்று உம்மை யான் இரந்தே ற்கு   நீர்
குயில் பைதல்காள் !கண்ணன் நாமமே குழறிக் கொன்றீர்
தயிர் பழம் சோற்றோடு பால் அடிசிலும் தந்து சொல்
பயிற்றிய நல் வளம் ஊட்டி னீர்பண்புடை யீரே !–9-5-8
வண்ணம் கொல்கிறது உயிர் காலன்
நொந்து சொல்கிறேன்-
குயில்பிள்ளைகள்
கண்ணா நாமமே சொல்லி
சுகம் -அவன் இருக்கும் பொழுது- விரகத்தில் இதை சொல்லி கொல்கிறீர்
வர வில்லையே நெஞ்சு வெடிக்கும்
பண்புடை வண்டோடு தும்பிகாள் ! பண மிழற்றேன்மின்
புண் புரை வேல் கொடு குத்தால் ஒக்கும் நும் இன் குரல்
தன் பெரு நீர்த் தடம் தாமரை மலர்ந்தால் ஒக்கும்
கண் பெரும் கண்ணன் நம் ஆவி யுண்டு எழ நண்ணினான் –9-5-9
பண்புடை வண்டு-தும்பி வண்டு இனம்
புண்ணில் வேல் கொண்டு குத்துவது போல் ரீங்காரம்
விசாலமான கண்
எழ எண்ணி நாமும் நம் வான நாடனோடு ஒன்றினோம்
பழன நன் நாரைக் குழாம் காள் ! பயின்று என் இனி !
இழை நல்ல வாக்கையும் பையவே புயக் கற்றது –
தழை நல்ல வின்பம் தலைப் பெய்து எங்கும் தழைக்கவே –9-5-10
எழுந்து பறந்து போவது போல் பரம பதம் போக போகிறேன்-
நாரை- கொக்கு ஜாதி
சரீரம் புகுவது அற்றது
விரகத்தில் இருக்கிறது
பெருமாள்-கௌசல்யை பட்ட கஷ்டம் யாரும் பட கூடாது
புத்திர சோகம்
கிருஷ்ண விரகம்
தான் தான் முடிய நினைப்பார் நாடு வாழ்க என்று சொல்கிறார்-ஆழ வந்தார் நிர்வாகம்
நான் பட்ட பாடு நாடு பட வேண்டாம்-எம்பெருமானார்
என் விரகத்தால் லோகம் கஷ்டம் பட கூடாது என்பதால் உயிர் வைத்து கொண்டு இருக்கிறேன்-பட்டர்
ரசிக பேதம்
இன்பம் தலைப் பெய்து எங்கும் தழைத்த பல்  ஊழிக்கு
தன் புகழ் ஏத்தத் தனக்கு அருள் செய்த மாயனை
தென் குருகூர் சடகோபன் சொல் ஆயிரத்துள் இவை
ஒன்பதோடு ஒன்றுக்கும் மூவுலகும் உருகுமே –9-5-11
சேவிப்பவர்-பலன் பாசுரம்- -பிரேமை பக்தியால் மூன்று உலகும் உருகும்
இன் உயிர் மால் தோற்றினது இங்கு என் நெஞ்சில் என்று கண்ணால்
அன்று அவனைக் காண வெண்ணி யாண் பெண்ணாய் பின்னை யவன்
தன்னை நினைவிப்ப வற்றால் தான் தளர்ந்த மாறன் அருள்
உன்னும் அவர்க்கு உள்ளம் உருகும் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –85
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-9-4- மையார் கரும் கண்ணி கமல மலர் மேல் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 23, 2011
மையார் கரும் கண்ணி கமல மலர் மேல்
செய்யாள் திரு மார்வினில் சேர் திருமாலே !
வெய்யார் சுடர் ஆழி சுரி சங்கம் ஏந்தும்
கையா ! உன்னைக் காணக் கருதும் என் கண்ணா –9-4-1
ஹிரண்ய வர்ணாம் ஹரிணீம்-
மை தீட்டி கொண்டு
சுமங்கலி லட்சணம்
இயற்கையிலே கரும் கண்ணி
செய்யாள்-
அவள் சேர்ந்த திரு மார்பு கொண்டவனே
பெரும் தேவி பேர் அருளாளன்-மகா தேவி-வேதம் சொல்லும் சொல்
கண்ணே ! உன்னைக் காணக் கருதி என்நெஞ்சம்
என்னே கொண்ட சிந்தையதாய் நின்றி இயம்பும்
விண்ணோர் முனிவர்க்கு என்றும் காண்ப பரியாயை
நண்ணாது ஒழியேன் என்று நான் அழைப்பனே –9-4-2
கண்ணால் பார்க்க படும் கண்ணே -கொஞ்சுகிறார்
எண்ணிக்கை-எண்ணே கொண்ட –
என்று உன்னை காண்பேன்-நாளை -எண்ணி-இதே சிந்தை
அனைவரும் கூட்டமாக நிற்க-
துருவன்-நரி -இந்த பழம் புள்ளிக்கும் -இல்லை – ஹரி அவன்
அழைக்கின்ற அடி நாயேன் நாய் கூழை வாலால்
குழைக் கின்றது போல என்னுள்ளம் குழையும்
மழைக்கு அன்று குன்றம் எடுத்து ஆநிரை காத்தாய் !
பிழைக் கின்றது அருள் என்று பேதுருவேனே–9-4-3
அடியேன் நாயேன்-நாயாகிய அடியேன்
சந்தோசம் ஆசை பட முடியாத கூழை வாள் கொண்ட நாய்- திட பக்தி இல்லாதவன்
அபிமதம் ருசியை தெரிவிக்க வால்
மனசானது நோவு பட நின்றது ஆசை சொல்ல தெரியாமல் இருக்கிறேன்
உறுவது இது என்று உனக்கு ஆள் பட்டு நின் கண்
பெறுவது எது கொல் என்று பேதையேன் நெஞ்சம்
மறுகல் செய்யும் வானவர் தானவர்க்கு என்றும்
அறிவது அரிய அரியாய அம்மானே ! –9-4-4
மலை கூட தூக்கி காப்பாயே
கைங்கர்யம் செய்து பெறுவது என்ன-
சொரூபத்தையும் உணர்ந்து -கைங்கர்யம் செய்வதே சொரூபம்
கைங்கர்யமே சீரியது என்று அறிந்து
ஈஸ்வரன் அநந்ய பிரயோஜனருக்கு வேறு ஒன்றும் கொடுக்க மாட்டான் என்று அறிந்து
இப்படி கேட்பதற்கு
ஹேது என் ?
கிரமத்தில் செய்கிறேன் என்று சம்சாரத்தில் இருப்பே போருக்க முடியாமல்
-முசுகுந்தன்-யோகேஸ்வரன் படுத்து இருக்க -இவனே நாரில் சென்றதும்
கால நேமி-அம்சம் கண்ணன் அறிந்து -ஆச்சார்யர் வார்த்தை சத்யம் –
வரம்-தவ பாத சேவை ஒன்றுமே வேண்டும் -மடியில் வைக்காமல்
பத்ரி காஸ்ரமத்தில் யோகம் பண்ணி அடுத்த ஜன்மாவில் வந்து சேர அருளினான்
அது போல் உன் மனத்தால் என்ன நினைந்து இருகிறாய் என்று பேதையேன் நெஞ்சு மறுகல் செய்யும்

நரசிம்கன்-சொல்வது
பிரகலாதனுக்கு -வானவர் தானவர் இருக்க
தூக்கி மடியில் வைத்து கொள்வார்
பிர பன்னனுக்கு கிட்டுமே
அது யோகேச்வரனுக்கு என்று உணர்ந்தார்
அரியாய அம்மானை அமரர் பிரானை
பெரியானைப் பிரமனை முன் படைத்தானை
வரி வாள் அரவின் அணைப் பள்ளி கொள்கின்ற
கரியான் கழல் காணக் கருதும் கருத்தே –9-4-5
பிரகலாதனை ரட்ஷிதது போல்
தானே கவசமாக இருந்து
அவன் நண்பன் அனைவரையும்-மடியில்
துர் லபன்-சுலபன்
வந்தாய் போல் வாராதே வாராதே போல் வருவான்
ஆழ்வார் பாசுரம் சொல்லி சம்பந்தம் பெற்று என்ன கவலை
கருத்தே !உன்னைக் காணக் கருதி என்னெஞ்சத்து
இருத்தாக இருத்தினேன் தேவர்கட்கு எல்லாம்
விருத்தா ! விளங்கும் சுடர் சோதி உயரத்
தொருத்தா ! உன்னை வுள்ளும் என்னுள்ளம் உகந்தே–9-4-6
கருத்தே லஷியம்
அப்படியே கூப்பிடுகிறார்
ஆசையே சாதனை உன்னை நெஞ்சில் வைத்து
தேவர்களுக்கு விருத்தா முற் பட்ட பரம் ஜோதி
உகந்தே உன்னை நினைக்கும்
உகந்தே யுன்னை உள்ளும் என்னுள்ளத்து அகம் பால்
அகந்தான் அமர்ந்தே இடம் கொண்ட அமலா !
மிகுந்தானவன் மார்வகலம் இரு கூறா
நகந்தாய் ! நரசிங்க மதாய வுருவே !–9-4-7
உன்னை தியானம் செய்வதே உகப்பு
சதா ஆத்மா பிரசாதம்
உருவாகிய ஆறு சமயம் கட்கு எல்லாம்
பொருவாகி நின்றானவன் எல்லாப் பொருட்கும்
அருவாகிய ஆதியை தேவர்கட்கு எல்லாம்
கருவாகிய கண்ணனைக் கண்டு கொண்டேனே –9-4-8
வேறு ஊன்றி பலசமயம்
சர்வ தேவ நமஸ்காரம் கேசவம் பிரதி கச்சதி
வைதிக /அவைதிக சமயம் பல
சாணக்கியம்-பிரகிருதி / யோகம் -/மீமாம்சை -கர்மா –சைவர்
இஷ்ட தெய்வ பலன் கொடுக்கும் பரனும் அவனே அவர் ரூபமாக
சாஷி போல் இருந்து பலன்
அங்க பூஜை போல் -அங்கி-பரமாத்மா -பொதுவாகி நிற்கிறான்
காரண வஸ்து அவன்தானே கருவாகி
கண்டு கொண்டு என் கண்ணினை யாரக் களித்து
பண்டை வினையாயின பற்றோடு அறுத்து
தொண்டர்க்கு அமுது உண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்
அண்டத்து அமரர் பெருமான் அடியேனே –9-4-9
பார்த்து விட்டேன்-திடமாக ஆழ்வார்
சாஷாத் கார அனுபவம்
கர்ம வினைகள் வாசனை உடன் -போயின
பிராயச்சித்தம் வாசனை போக்காது
யானை குளிப்பாட்டுவது போல்
பாப்பம் பண்ணும் புத்தியும் போகணும்-பாப்பம் மட்டும் போனால் போதாது
கிருஷ்ண பக்தி அருளால் தான் சுத்த சித்தி வரும்
திரு வாய் மொழி-இதை எல்லாம் பண்ணி அமுது போலவும் இருக்கும்
நித்யர் தலைவர்-ஆழ்வார்
அடியான் இவன் என்று எனக்கு ஆர அருள் செய்யும்
நெடியானை நிறை புகழ் அம் சிறை புள்ளின்
கொடியானை குன்றாமல் உலகம் அளந்த
அடியானை அடைந்து அடியேன் உய்ந்தவாறே ! -9-4-10
நான் பெற்ற பேரு அனைவரும் பெற வேண்டும்
உலகம் அளந்த கருட கொடி கொண்டவன் அடைந்த அடியேன்
உய்ந்தது போல் -நமக்கு புருஷ காரமாக நடுவில் நிற்கிறார்
எனக்கு அருள் செய்தே ஆவான்- எனக்கு அடியார் ஆக இருந்தீர்கள் என்றால்
உண்ணும் சோறு கண்ணன் தானே எனக்கு
திரு வாய் மொழி சேவிப்பதே நீ எனக்கு செய்யும் கைங்கர்யம்
நாமும் பேரு பெற வழி காட்டுகிறார்
ஆறா மத யானை அடர்த்தவன் தன்னை
சேறார் வயல் தென் குருகூர் சடகோபன்
நூறே சொன்ன ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
ஏறே தரும் வானவர் தம் இன் உயிர்க்கே –9-4-11
குவலயா பீடம் அடக்கி
தென் திசை கை கூப்பி தொழ
நூறே -பிரித்து அருளியதை சொல்லி காட்டுகிறார்
மையார் கண் மா மார்பில் மன்னும் திருமாலை
கை ஆழி சங்குடனே காண வெண்ணி –மெய்யான
காதலுடன் கூப்பிட்டு கண்டு உகந்த மாறன் பேர்
ஓத உய்யுமே இன் உயிர் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –84
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-9-3-ஓர் ஆயிரமாய் உலகு எழ அளிக்கும் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 23, 2011
ஓர் ஆயிரமாய் உலகு எழ அளிக்கும்
பேர் ஆயிரம் கொண்டது ஓர் பீடு உடையன்
காராயின காள நன் மேனியன்
நாராயணன் நாங்கள் பிரான் அவனே –9-3-1
அவனுக்கும் நமக்கும் சம்பந்தம் நெடும் காலம்
உணர்ந்ததுமே நம்மை கண்டு மகிழ்வோம்
உகப்பில் அருளும் திரு வாய் மொழி
சகஸ்ர நாமனே புருஷாய –
ஒவ் ஒன்றும் ஆயிரம் நாமங்களுக்கு ஒப்பு
நாராயணன்-சர்வ பிரகராணம் இது
ஒன்றே போதும்
நாங்கள் பிரான் -இஷ்ட தெய்வம்
அவனே அகல் ஞாலம் படைத்து இடந்தான்
அவனே அஃது உண்டு உமிழ்ந்தான் அளந்தான்
அவனே அவனும் அவனும் அவனும்
அவனே மற்று எல்லாமும் அறிந்தனமே –9-3-2
அவனே சிருஷ்டித்து
சொத்தை ஆள்பவன்
அளந்தவன்
முழுங்கியவன்
அனைத்தையும் கை ஆண்டவனே ஏக நாதன்
விஷ்ணுவே விஷ்ணு
ச பிரம–பரம்ஸ் வராட்
சர்வம் கல்மித பிரமம்
அறிந்தன வேத வரும் பொருள் நூல்கள்
அறிந்தன கொள்க அரும் பொருள் ஆதல்
அறிந்தனர் எல்லாம் அரியை வணங்கி
அறிந்தனர் நோய்கள் அறுக்கும் மருந்தே -9-3-3
வேதம்/சர்வ சாஸ்திரம் அவனையே சொல்லும்
ஆதி அந்தம் மத்யம்ஹரி சர்வம்
அவனே பரம் பொருள்
சம்சார தீர்க்கும் மருந்து அவனே
கரு நாகம்-தீண்டியவர்க்கு ஸ்ரீ கிருஷ்ண நாமமே -மருந்து
மருந்தே நாங்கள் போக மகிழ்ச்சிக்கு என்று
பெரும் தேவர் குழாங்கள் பிதற்றும் பிரான்
கரும் தேவன் எம்மான் கண்ணன் விண்ணுலகம்
தரும் தேவனைச் சோரேல் கண்டாய் மனமே !–9-3-4
மருந்தும் விருந்தும் அவனே
பெரும் தேவர்-நித்யர்
சிறும தேவர்-ப்ரஹ்மாதிகள்
கரும் தேவர்-கண்ணன் என்னும் கரும் தெய்வம்
சோரேல்- விடவே விடாது
மனமே ! உன்னை வல் வினையேன் இரந்து
கனமே சொல்லினேன் இது சொரேல் கண்டாய்
புன மேவிய பூம் தன் துழாய் அலங்கல்
இனமேது மிலானை அடைவதுமே —9-3-5
மனமே உன்னை கெஞ்சி கொஞ்சி மிரட்டி சொல்கிறேன்
அவனை விடாமல் கொள்
மாலை சாத்தி-ஈடு இல்லாத
சஜாதிய விஜாதிய ஒன்றும் இன்றி
அடைவதும் அணியார் மலர் மங்கை தோள்
மிடைவதும் அசுரர்க்கு வெம் போர்களே
கடைவதும் கடலுள் அமுதம் ஏன் மனம்
உடைவதும் அவற்கே ஒருங்காகவே–9-3-6
அனைத்தும் கிருஷ்ணா அர்பணம்
தாயார் நித்ய வாசம்  செய்யும் மார்பன்
திரு வுக்கும் திரு வாகிய செல்வன்
கடைவதும் அமுதம்-பெரிய கார்யம் செய்த பெருமாள்
மனஸ் உடைந்து கண்ணீர்  அவனுக்கே -கல் நெஞ்சன்-
ஆகம் சேர் நரசிங்கமதாகி  ஓர்
ஆகம் வள்ளுகிரால் பிளந்தானுறை
மாக வைகுந்தம் காண்பதற்கு ஏன் மனம்
ஏகம் எண்ணும் இராப் பகல் இன்றியே  –9-3-7
மாகம்-பரம பதம்
ஒரே ஆசை சிங்க பெருமாளை காண
பிரகலாத கம்பீர வரதனை
இன்றிப் போக இரு வினையும் கெடுத்து
ஒன்றி யாக்கை புகாமை உய்யக் கொள்வான்
நின்ற வேம்கடம்  நீள் நிலத்துள்ளது
சென்று தேவர்கள் கை தொழுவார்களே–9-3-8
இரு வினைகளும் அற்று போகும் படி –
உய்ய கொள்வான்
அதற்கே திரு வேம்கடம் நின்றான்
இங்கே உள்ளதே -நிலத்து உள்ளதே
பிருந்தாவனம் மதுரா பரி யமுனை நதி இருக்கே
கோவர்த்தனம் கிரி இருக்கே -இன்றும் பாக்யவானுக்கு காண
கூரத் ஆழ்வான் -அது போல் நீள் நிலத்து உள்ளது
தேவர்களும் வந்து கை தொழ
தொழுது மா மலர் நீர் சுடர் தூபம் கொண்டு
எழுதும் எண்ணும் இது மிகை யாதலில்
பழுதில் தொல் புகழ்ப் பாம்பணைப் பள்ளியாய் !
தழுவுமாறு அறியேன் உன தாள்கள்  –9-3-9
கைங்கர்யம் பண்ணி -உஜ்ஜீவிக்க -எழ
இது மிகை-எனக்காக ஒன்றும் பண்ண வேண்டாம் என்கிறான்
நிஜ லாப பூரணன்-அவாப்த சமஸ்த காமன் —
அவல் தானே  பிடுங்கி  உண்டு -பரம ப்ரீதிகரம் சொல்வான்
மிகை என்பான் சீலன்-வந்ததே என் அத்ர்ஷ்டம் என்று நினைத்து இருக்கிறானே
விதுரன் காஞ்சி/சபரி கிழங்கு-கிடைக்காத வஸ்து கிடைத்தது போல்
என்ன என்று புகழ்வது இந்த சீல குணத்தை
தாள தாமரையான் உனது உந்தியான்
வாள் கொள் நீள் மழு வாளி உன்னாகத்தான்
ஆனராய்த் தொழு வாரும்  அமரர்கள்
நாளும் என் புகழ் கோ உன சீலமே  –9-3-10
சீலம் எல்லை யிலான் அடி மேல் அணி
கோல நீள் குருகூர் சடகோபன் சொல்
மாலை யாயிரத்துள் இவை பத்தினின்
பாலர் வைகுந்தம் ஏறுதல் பான்மையே  –9-3-11
எல்லை இல்லா சீலம் உடையவன் அவன்
திரு அடியில் சேர்க்க கட்டிய சொல் மாலை
சொல்பவர் ஸ்ரீ வைகுந்தம் செல்வது பொருத்தம்
ஓரா நீர் வேண்டினவை உள்ளது எல்லாம் செய்கின்றேன்
நாராயணன் அன்றோ நான் என்று –பேர் உறவைக்
காட்ட அவன் சீலத்தில் கால் தாழ்ந்த மாறன் அருள்
மாட்டி விடும் நம் மனத்து மை –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –83
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-9-2-பண்டை நாளாலே நின் திரு வருளும் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 22, 2011
பண்டை நாளாலே நின் திரு வருளும்
பங்கயத்தாள் திரு வருளும்
கொண்டு நின் கோயில் சீய்த்துப் பல்படி கால்
குடி குடி வழி வந்து ஆள் செய்யும்
தொண்டரோர்க்கு அருளி சோதி வாய் திறந்து
உன் தாமரை கண்களால் நோக்காய்
தென் திரைப் பொருநல் தன் பணை சூழ்ந்த
திரு புளிங்குடிக் கிடந்தானே –9-2-1
திரு பள்ளி எழுச்சி-யோக நித்ரையில் பெருமாள்-
சுருதி கீதை வேதம் எழுப்பியது போல்
தொண்டை குலம்-மிதுனத்தில் கைங்கர்யம்-
நாச்சியாருக்கும் எல்லா உத்சவம் பெருமாளுக்கு போல்
திவ்ய தம்பதி-முக உகப்பே குறிக் கோள்
சீய்த்து-பெருக்கி- தொடக்கி அனைத்தும்-முதல் கைங்கர்யம் இது தானே
அம்பரிஷர் சக்கரவர்த்தி-ராணி உடன் கூட்டி கைங்கர்யம்
ஸ்ரீமத் பாகவதம் -ஸ்ரீ ரெங்க நாத தாசர் அனைவரும்-
நிர் குணம் ஹரி மந்த்ரம்-கோவிலிலே இருந்தால்-பரம பதம் போல்
திரி குண மாயை அங்கு இல்லை என்பதால்-
அருள பாடு இட்டு- நாமும் நாயந்தே சொல்லி -சோதி வாய்-திறந்து அர்ச்சக முகேன கூவி பணி கொள்வார்
அர்ச்சகரே ஹரி சொரூபம்-சாஸ்திரம்

பவள ஜோதி வாய் திறந்து திரு கண்களால் கடாஷித்து அருளுவான்
குடிக் கிடந்தாக்கம் செய்து நின் தீர்த்த
அடிமைக் குற்றேவல் செய்து உன் பொன்
அடிகடவாதே வழி வருகின்ற
அடியரோர்க்கு அருளி நீ ஒரு நாள்
படிக்கு அளவாக நிமிர்த்த நின் பாத
பங்கயமே தலைக்கு அணியாய்
கொடிக் கொள் பொன் மதிள் சூழ் குளிர் வயல் சோலைத்
திரு புளிங்குடிக் கிடந்தானே !–9-2-2
ஆக்கம்-சமுர்த்தி செய்து ரஷித்து

தீர்த்த -இந்தகைங்கர்யம் என்று தீர்மானம்
ராமானுஜரை ஏடு-தீர்த்த பாத்ரம்- சாலை கிணறு-வலி காட்டி
புஷ்ப கைங்கர்யம் பெரி ஆழ்வார்
பவித்ரமான கைங்கர்யம் எது செய்தாலும்
தானம் கொடுப்பதை–படிக்கு அளவாக -அவன் வார்த்தை சத்யம் ஆக்க -நிமிர்த்த
கைங்கர்யம் செய்ய-முன்னே ஆக்கம் செய்து -பின்னும் தன பாத பங்கயமே தனக்கு அணி
ஸ்ரீ சடாரி சாதித்து -சம்மானம்
கருட கொடி-
கிடந்த நாள் கிடந்தாய் எத்தனை காலம்
கிடத்தி உன் திரு வுடம்பு அசைய
தொடர்ந்து குற்றேவல் செய்து தொல் அடிமை
வழி வரும் தொண்டரோர்க்கு அருளி
தடம் கொள் தாமரைக் கண் விழித்து
நீ எழுந்து உன் தாமரை மங்கையும் நீயும்
இடம் கொள் மூ வுலகும் தொழ விருந்து அருளாய்
திரு புளிங்குடிக் கிடந்தானே !–9-2-3
பிரளய காலம் தொடங்கி கிடகிறாயே–யோக நித்தரை

அன்று தொடங்கி திரு பள்ளி எழுச்சி
பிரம்மா தேவன் -ஸ்ரீ பாகவதம் -புராண புருஷன் எழுப்பி
கேட்டு முக விகாசம் அடைகிறான்
முறுவல் -பிரேம ஸ்மிதம் –மந்தகாசம்
கமல நயனம் -விளித்து –
விஸ்வ விஜாயா–மூ உலகும் தொழ–
ஒரே சொல் அவனுக்கு -அபயம்-மா சுச –
நமக்கு தொழிலே இது
சுந்தர வந்தனா சுப்ரபந்தோ பவ –
மூன்று வியாக்ருதியும் மூன்று வாசல்-பூ புவ சுவ –
மூன்று திவ்ய தேசம் ஆழ்வார் பார்கிறார்
புளிங்குடிக் கிடந்து வரகுண மங்கை இருந்து
வைகுந்ததுள் நின்று
தெளிந்த வென் சிந்தை அகம் கழியாதே
என்னை யாள்வாய் ! எனக்கு அருளி
நளிர்ந்த சீர் உலகம் மூன்றுடன் வியப்ப
நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப
பளிங்கு நீர் முகிலின் பவளம் போல்
கனி வாய் சிவப்ப நீ காண வாராயே –9-2-4
விஷ்ணு சர்வ வியாபகன்

ஆராய்ந்து அருள -கோஷ்ட்டி திரு நாம சங்கீர்த்தனம் பண்ண
கிடந்தவர் நத்தம் இருந்து ஸ்ரீ வைகுண்டம் நின்ற திரு கோலம்
உட கார்ந்து -வர குண மங்கை பெயர்
நடந்து வர வேண்டுமே -அதற்க்கு-
ஆழ்வார் ஹிருதயம் சித்தம் -புகுந்தார்
தெளிந்த -திவ்ய தேசம் இது தானே
ஆள் கொண்டு-எனக்கு அருளி- கோஷ்டிக்கு
எனக்கே இருந்தால் போதாது -மூன்று உலகும்
வியந்து உன்னை பார்க்க -நாங்கள் கூத்தாடி நின்று ஆர்ப்ப -வெறி பிடித்தது போல் ஆடியும் பாடியும்
திரு நாம கீர்தனமுமே போதும் -ஆர்ப்ப -கர்ஜனை
பூஜா சங்கல்பம் பிரார்த்தனை இல்லை-ஜன்மம் தோறும் பஜனையே செய்து பூர்ணம்
-உன் திரு நாம சங்கீர்த்தனமே நிறைவு
நீ காண வரவேண்டும்

ஆவிர்பூதித்து கோபிகள் மத்தில் வந்தது போல்
கனி வாய் சிவப்ப-முகில் ஸ்பர்சம்-சுத்தம் குளிர்ச்சி ருசி
பவள மழை-அபூத உவமானம் –எதற்கும் எட்டாதவன் அவன்-காட்ட
பளிங்கு நீர் முகில் -சிவந்த உதடு
பவளம் கடினம்-இதுவோ மெலியதாக
ருசிகரமாக இருக்குமே கனி வாய் சிவப்ப-பஜனை பார்த்து ரசித்து சிகப்பு ஆகுமாம்

காணும் படி வர வேண்டும்
ஹிருதயத்தில் இருந்தால் மட்டும் போறாது
என்னை ஆண்டு கொண்டு இருந்தால் மட்டும் போதாது
நீ காண வாராய் –உனக்கு வேண்டுமானால் வா-எஙகளுக்கு பஜனையே போதும்
பவளம் போல் கனி வாய் சிவப்ப
நீ காண வந்து நின் பல் நிலா முத்தம்
தவழ கதிர் முறுவல் செய்து
நின் திருக் கண் தாமரை தயங்க நின்று அருளாய்
பவள நன் படர்க் கீழ்ச் சன்குறை பொருநல்
தன் திருப் புளிங்குடிக் கிடந்தாய் !
கவள மா களிற்றின் இடர் கெடத் தடத்துக்
காய்சினப் பறவை யூர்ந்தானே !–9-2-5
நீ காண வந்து -கொஞ்சம் தெரிகிற பல்லே நிலா ஒளி போலும்

-முத்து உதிர்வது போல் இருக்கிறதே
பஜனை முடியும் வரை நின்று அருள வேண்டும்
திரு கண் மூடாமல் இருந்து பார்த்து அருள-தயங்கும் படி நிற்க வேண்டும்
பவள கோடி முளைத்து படர
சங்குகள் ஒதுங்க
கரைகள் முது பதித்து
குளிர்ந்த தேசம்
கஜேந்த்திரன் இடர் கெட தடாகம்-கருட வாகனம்
காய் சின பறவை-கம்பீர கருதி சேவை –அனுக்ரக விளம்பனம்
பிருது மக ராஜர் இடம் இருந்து அனுக்ரகம் செய்தது போல்
காய் சினப் பறவை யூர்ந்து பொன் மலையின்
மீமிசைக் கார் முகில் போல்
மாசின மாலி மாலி  மான் என்று
அங்கு அவர் படக் கனன்று முன் நின்ற
காய்சின வேந்தே ! கதிர் முடியானே !
கலி வயல் திரு புளிங்குடியாய் !
காய்சின வாழி சங்கு வாள் வில்
தண்டு ஏந்தி எம் இடர் கடிவானே !–9-2-6
வேகமாகவும் ஊர்ந்தும் போகும் கருட வாகனம் –

பொன் மலை போல்
மகா கோபம் கொண்டு-மாலி-
காய்சின வேந்தே
கலி-செழிப்பு உள்ள வயல்
காய் சின ஆழி- கோபம் கொண்ட
பஞ்ச ஆயுதம் கொண்டு இடர் கடிய நிற்கிறான்
எம் இடர் கடிந்து இங்கு என்னை ஆள்வானே !
இமையவர் தமக்கும் ஆங்கு அனையாய் !
செம்மடல் மலரும் தாமரை பழனத்
தன் திருப் புளிங்குடிக் கிடந்தாய் !
நம்முடை யடியார் கவ்வை கண்டு உகந்து
நாம் களித்து உள நலம் கூர
இம் மட வுலகர் காண நீ ஒரு நாள்
இருந்திடாய் எங்கள் கண் முகப்பே –9-2-7
இடையஈர்கள் நீக்கி
இமையோருக்கும் கிடைக்காதவன்
எங்களுக்குகைங்கர்யம் பாக்கியம் கொடுத்து
அடியவர்-தே அதிய ப்ரீதி-பிராண வல்லபன்-கவ்வை-குதுகூலம்
கோலாகலம் கண்டு-உகந்து -நாமும் கழித்து –
அரையர் -உத்தர வீதி முழுவதும் முன்பு அரையர் மட்டும் இருக்க –
தாள சப்தம் ஸ்ரீ வைகுண்டம் வரை -தாளமே பிரம சொரூபம்
பெரிய மணி தயார் பண்ணி திரு ஆராதனம் பின்பு வைத்தார்களாம் பெரிய பெருமாளுக்கு
நம் உடைய அடியார்-பெருமாள் ஆழ்வார் நம்மையும் சேர்த்து கொண்டு இருவரும் உகந்து நாமும் கழித்து
மட உலகர் காண- உண்டியே உடையே உகந்து போகும்
கண் முகப்பே வந்து காட்டு
எங்கள் கண் முகப்பே வுலகர்கள் எல்லாம்
இணை யடி தொழுது எழுது இறைஞ்சி
தங்கள் அன்பாரத் தமது சொல் வலத்தால்
தலைத் தலைச் சிறந்து பூசிப்ப
திங்கள் சேர் மாடத் திரு புளிங்குடியாய் !
திரு வைகுந்ததுள்ளாய் ! தேவா !
இம்கண் மா ஞாலத்து இதனுள் ஒரு நாள்
இருந்திடாய் வீற்று இடம் கொண்டே –9-2-8
அனைவரும் சேவிக்கும் படி-
உத்சவம்-மண்டக்க படி-எல்லை கரை அனைத்திலும் முகாம்
அனைவரும் இணை அடி தொழுதும் எழுந்து இறைஞ்சும் படியும்
பூஜித்து –சூடி களைந்த மாலை பிரசாதம் கொடுத்து
திரு வைகுண்டம் -இரண்டு திவ்ய தேச பெருமாளும்
பல மண்டபங்கள் நிர்மாணித்து வீற்று இருந்து
வீற்று இடம் கொண்டு வியன் கோள் மா ஞாலத்து
இதனுளும் இருந்திடாய் அடியோம்
போற்றி யோவாதே கண் இணை குளிரப்
புது மல ராகத்தைப் பருக
சேற்றில வாளை செந்நெலூடு களும்
செழும் பணைத் திரு புளிங்குடியாய் !
கூற்ற மாய அசுரர் குலம் முதலறிந்த
கொடு வினைப் படைகள் வல்லானே !–9-2-9
விசாலமான உலகத்தில் திவ்ய தேசம் ஏற்படுத்தி -எழுந்து அருளி
ஓயாமல் போற்றி-கொண்டு-
புது மலர் ஆகத்தை-திரு மார்பை- பருகுவதை கண்டு–அழகு குடிக்க –
குளிர பருக-பருக புதிசாக இருந்து
செழுமையான வயல்கள் சூழ்ந்த
அசுரர் ஒழித்து -சர்வ சக்தன்
கொடு வினைப் படைகள் வல்லையாய்
அமரர்க்கு இடர் கெட அசுரர் கடக்கு இடர் செய்
கடு வினை நஞ்சே !என்னுடை யமுதே !
கலி வயல் திருபுளிங்குடியாய் !
வடிவு இணை இல்லா மலர் மகள் மற்றை
நில மகள் பிடிக்கும் மெல்லடியை
கொடு வினையேனும் பிடிக்க நீ ஒரு நாள்
கூவுதல் வருதல் செய்யாயே –9-2-10
கொடுமை படுத்தும் அசுரரை-கோதண்ட பாணி/ நகம் கொண்டு கிழித்தும்
அவர்களுக்கு நஞ்சு/எனக்கு அமுது
பெரிய பிராட்டி ஸ்ரீ பாத சேவை- ஸ்ரீ பூமி பிராட்டி உடன்
இன்றும் அமர்ந்து ஸ்ரீ பாத சேவை பண்ணுவதை சேவிகிறோம்
கேசவ நம்பியை கால் பிடிக்கும் பேர் அருள் கேட்டு பெற்றாள் ஆண்டாள்
அது போல் பராங்குச நாயகியும் கேட்கிறாள்
கொடு வினையேனும் பிடிக்க -மேல் அடியை
அவர்களும் திரு அடியை பிடிக்க புக்கால் பூ தொடுப்பாரை போல்
கன்றி விடுமோ என்று கூசும் படி இருக்கும் மெல் அடிகள்
கோமள வல்லி திரு கரம்-கோமளம்-அமுதன் திரு அடி-உள்ளம் கால் போல்
புறம் காலும் சிவந்து இருக்குமாம் –கன்னி போய் விடுமே கூசி தொடும் படி சொவ்குமார்யம்
முரட்டு கையால்-கொடு வினையேனும்-இளைய பெருமாள்-
திரு அடி சேர்ந்து பெருமாள் திரு அடி பிடித்தது போல்
ஒரு நாள் சேவைக்கு விண்ணப்பம் –
அருள பாடு இட்டு-கூவுதல்
கூவுதல் வருதல் செய்திடாய் என்று
குரை கடல் கடைந்தவன் தன்னை
மேவி நன்கு அமர்ந்த வியன் புனல் பொருநல்
வழுதி நாடன் சடகோபன்
நாவியல் பாடல் ஆயிரத்துள்ளும்
இவையும் ஓர் பத்தும் வல்லார்கள்
ஓவுதல் இன்றி வுலகம் மூன்று அளந்தான்
அடி இணை வுள்ளத்து ஒர்வாரே –9-2-11
விண்ணப்பம் செய்து
செழிப்பு மிக்க நாடு
ஓவுதல் இன்றி ஓயாமல் கைங்கர்யம் செய்ய பிராப்தி
சரண சேவை பண்ணி கொண்டு இருக்க பெறுவோம்
பண்டை யுறவான பரனைப் புளிங்குடிக்கே
கண்டு எனக்கு எல்லா வுறவின் காரியமும் தண்டற  நீ
செய்து அருள் என்றே இரந்த சீர் மாறன் தாள் இணையே
உய் துணை என்று உள்ளமே ! ஓர் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –82
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-9-1-கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 22, 2011
கொண்ட பெண்டிர் மக்கள் உற்றார் சுற்றத்தவர் பிறரும்
கண்டதோடு பட்ட தல்லால் காதல் மற்று யாதும் இல்லை
எண் திசையும் கீழும் மேலும் முற்றவும் உண்ட பிரான்
தொண்டரோமாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் துணையே –9-1-1
கைங்கர்யம் பண்ணாமல் குடும்பமே என்று ஆகி விட கூடாது
கண்ணனுக்கு தான் குடும்பம்
பர உபதேசம் பண்ணுகிறார் ஆழ்வார் உடனே
உற்றார் -உறவினர்
சுற்றத்தவர்-அக்கம் பக்கம் இருப்பவர்
பிரயோஜனம் கருதி ஓட்டுவார் -இவர்களை விட்டு விட்டு நித்ய பந்து-
அவன் தொண்டராக இருந்து தான் உய்ய முடியும்
தாயே தந்தை என்றும்–தாரமே -நோயே பட்டு ஒழிந்தேன் –
இங்கு கொண்ட பெண்டிர்- முதலில்-
ஏற்பட்ட பந்துகள் தாய் தந்தை-
மாதா பிதா பந்துவத்தை கால் கடை கொண்டு இவளையே எல்லாமாக கொண்ட –
161
துணையும் சார்வும் ஆகுவார் போல் சுற்றத்தவர் பிறரும்
அணையை வந்த ஆக்கம் உண்டேல் அட்டைகள் போற சுவைப்பர்
கணை ஒன்றாலே எழ மரமும் எய்த எம் கார் முகிலை
புணை என்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் பொருளே –9-1-2
பொருள் கை யுன்டாய்ச் செல்லக் காணில் போற்றி என்று ஏற்றி எழுவர்

இருள் கொள் துன்பதின்மை காணில் என்னே !என்பாரும் இல்லை
மருள் கொள் செய்கை அசுரர் மங்க வட மதுரை பிறந்தார்க்கு
அருள் கொளா ளாய்  உய்யல் அல்லால் இல்லை கண்டீர் அரணே–9-1-3
அரணாம் அவர் அற்ற காலைக்குஎன்று என்று அமைக்கப் பட்டார்
இரணம் கொண்ட தெப்பர் ஆவர் இன்றி யிட்டாலும் அக்தே
வருணித்து என்னே ? வட மதுரைப் பிறந்தவன் வன் புகழே
சரண் என்று உய்யப் போகல அல்லால் இல்லை கண்டீர் சதிரே   –9-1-4
சதுரம் என்று தம்மை தாமே சம்மதித்து இன் மொழியார்
மதுர போகம் துற்றவரே வைகி மற்று ஓன்று உறுவர்
அதிர் கொள் செய்கை அசுரர் மங்க வட மதுரைப் பிறந்தார்க்கு
எதிர் கொளா ளாய் உய்யல் அல்லால் இல்லை கண்டீர் இன்பமே –9-1-5

இல்லை கண்டீர் இன்பம் அந்தோ ! உள்ளது நினையாதே

தொல்லையார்கள் எத்தனைவர் ? தோன்றிக் கழிந்து ஒழிந்தார்
மல்லை மூதூர் வட மதுரை பிறந்தவன் வன் புகழே
சொல்லி உய்யப் போகல அல்லால் மற்று ஓன்று இல்லை சுருக்கே –9-1-6
மற்று ஓன்று இல்லை சுருங்கச் சொன்னோம் மா நிலத்து எவ் உயிர் க்கும்
சிற்ற  வேண்டா சிந்திப்பே யமையும் கண்டீர்கள் அந்தோ !
குற்றம் அன்று எங்கள் பெற்றத் தாயன் வட மதுரைப் பிறந்தான்
குற்றமில் சீர் கற்று வைகல் வாழ்தல் கண்டீர் குணமே –9-1-7
வாழ்தல் கண்டீர் குணம் இது அந்தோ ! மாயவன் அடி பரவி
போழ்து போக வுள்ள கிற்கும் புன்மை இலாதவர்க்கு
வாழ் துணையா வட மதுரைப் பிறந்தவன் வன் புகழே
வீழ் துணையாப் போம் இதினில் யாதும் இல்லை மிக்கதே –9-1-8
சம்சாரத்தில் வீழ்ந்தவர் -அவனை தவிர வேறு துணை இல்லை

யாதும் இல்லை மிக்கு அதனில் என்று என்று அது கருதி

காது செய்வான் கூத்தை செய்து கடை முறை வாழ்க்கையும் போம்
மாதுகிலின் கொடிக் கொள் மாட வட மதுரைப் பிறந்த
தாது சேர் தோள் கண்ணல் அல்லால் இல்லை கண்டீர் சரணே –9-1-9
பழ மொழி-
காது செய்வான் கூதை செய்து-
பேராசை-கொண்டு-முதலுக்கே நாசம்-தோடு போட்டுக்க வழி இல்லை
இதை நம்பாதே- தன்னை தானே நம்பாதே
வைஜயந்தி மாலை சூடி கொண்ட அவனே சரண்
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் அது நிற்க வந்து
மண்ணின் பாரம் நீக்குதற்கே வட மதுரைப் பிறந்தான்
திண்ணமா நும் முடைமை யுண்டேல் அவன் அடி சேர்ந்து உய்ம்மினோ
எண்ண வேண்டா நும்மதாதும் அவன் அன்றி மற்று இல்லையே–9-1-10
தர்மம் நிலை நாட்ட
மாம் ஏகம் சரணம் விரஜ -பிர பத்தி தர்மம் நிலை நாட்ட
அஷய பாத்ரம் கொடுத்து காத்தான்-பாண்டவர்களை
கண்ணன் அல்லால் இல்லை கண்டீர் சரண் காட்டினான்
காத்த பின் சரண் அடைய சொல்கிறான் கண்ணன் அர்ஜுனனை !
பார்த்த சாரதி பெருமை நிலை நாட்ட அவதரித்தான்
மண்ணின் பாரம் நீக்க -பூ தேவி பசு ரூபம் கொண்டு பிரார்த்தித்து
மமதை தொலைத்து அவன் அடி சேர்ந்து உஜ்ஜீவிக்க உபதேசிக்கிறார்
எண்ணம் ஒன்றே வேண்டும்-நான் -நீக்கி-எல்லாம் அவன் செயல்
கிருஷ்ண அர்பணம்
ஆதும் இல்லை மற்று அவனில் என்றதுவே துணிந்து
தாது சேர் தோள் கண்ணனை குருகூர் சடகோபன் சொன்ன
தீது இலாத ஒண் தமிழ்கள் இவை யாயிரத்துள் இப் பத்தும்
ஓத வல்ல பிராக்கள் நம்மை யாளுடை யார்கள் பண்டே  –9-1-11
நிச்சய புத்தி-அவனே சரண்-
ஈடு இல்லா தமிழ் மாலை
பத்து பத்தாக கொடுக்கிறார் நமக்கு
ஓத வல்லவர்-நம்மை ஆழ்வார்
தமக்கு பிரபு என்கிறார் ஆழ்வார்
கொண்ட பெண்டிர் தாம் முதலா கூறும் உற்றார் கன்மத்தால்
அண்டினவர் என்றே யவரை விட்டு –தொண்டர் உடன்
சேர்க்கும் திரு மாலைச் சேரும் என்றான் ஆர்க்கும் இதம்
பார்க்கும் புகழ் மாறன் பண்டு –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –81
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-8-10-நெடுமாற்கு அடிமை செய்வேன் போல் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 22, 2011
நெடுமாற்கு அடிமை செய்வேன் போல் அவனைக் கருத வஞ்சித்து
தடுமாற்ற தீக் கதிகள் முற்றும் தவிர்ந்த சதிர் நினைந்தால்
கொடு மா வினையேன் அவன் அடியார் அடியே கூடும் இது வல்லால்
விடுமாறு எனபது என் ? அந்தோ ! வியன் மூ வுலகு பெறினுமே–8-10-1
கோள் சொல்லும் இடத்தில்-
அரசன் யார்- கோள் சொன்னான் கேட்டால் சொல்ல மாட்டான்
வஞ்சித்து போவாரை போல் தோஷம் போகும்
கும்ம்ணாதே கை விட்டு ஓடி-சொத்து என்று வைத்து இருந்தது எல்லாம் போகுமே –
எம்மனா என் குல தெய்வமே என்று சொன்னதும்
 பாகவத அபசாரம் வேண்டாம்-தோஷம் நினைக்க மாட்டார்-
அனுக்ரகம் செய்து கொண்டே இருப்பார் பாகவதரை ஆச்ரயித்து இருப்பவரை
கோவிந்தா -நாவால் சொன்னாலே -நாவினால் நவின்று-இன்பம் எய்தினேன்
அவரை வஞ்சித்து-அடிமை செய்வன் போல் அவனை வஞ்சித்து கருத –
அவன் பாபம் போக்கினான்
கொடு மா வினையேன்-அஜாமலன் நாராயண ஒரே சொல்லாலே போக்கினான்-
இலவசமாக பரம பதம் கொண்ட இந்த பாபத்துக்கு என்ன பரிகாரம்
வாலி -உம்மை திட்டி- இந்த பாபத்துக்கு என்ன பிராயசித்தம் என்று கேட்டால் போல்
அபயம் சொல்லும்-சரணம் சொல்ல வில்லை
கிட்ட வந்து வஞ்சித்து -கருணையால் பாரா முகம்-ஏமாற்றியாவது பக்தி  செய்கிறானே
என்று மகிழ்வானாம்
அசத்தையா தேயம்-
ஸ்ரத்தையா தேயம்-அச்ரதையாவது  தானம் கொடு-போல்

கொடு மா வினையேன்-வஞ்சித்த பாவம்
ஒரே வழி அடியார் அடியை கூடுவதே
சத் சங்கத்துக்கு ஈடு இல்லை
ஸ்ரீ வைகுண்டம் கொடுத்தாலும் இதற்க்கு ஈடு இல்லை
வியன் மூ வுலகு பெறினும் போய்த் தானே தானே யானாலும்
புயல் மேகம் போல் திரு மேனி யம்மான் புனை பூம் கழல் அடிக் கீழ்
சயமே யடிமை தலை நின்றார் திருத் தாள் வணங்கி இம்மையே
பயனே இன்பம் யான் பெற்றது உறுமோ  பாவியேனுக்கே ? –8-10-2
மூன்று உலகம் ஆளும் ஐஸ்வர்யம்-ராவணன் ஹிரண்ய கசிபு-போல் -ஐஸ்வர்யம்
தான் தானான நிலை-கைவல்யம்
சயமே-சுயமே-கைங்கர்யமே லஷ்யம் என்று இருப்பவரின் திரு அடி -பற்றி-இதற்க்கு ஒப்பு இல்லை
உறுமோ பாவியேனுக்கு ? இவ் உலக மூன்றும் உடன் நிறைய
சிறு மா மேனி நிமிர்த்த என் சென் தாமரை கண் திரு குறளன்
நறுமா விரை நாள் மலர் அடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
சிறு மா மனிசராய் என்னை யாண்டார் இங்கே திரியவே -8-10-3
பாகவத கைங்கர்யம் பெற பெறுவேனோ ?

உலகு அளந்த வாமனன்-திரு குறள் அப்பன்-பிராட்டி விடாமல் இங்கும்-
அவன் திரு அடி ஒன்றே புகுந்த அடியவர்
சிறு மா மனிசர் -பட்டர் ஐதீகம் -ஸிருமைபெருமைஆகிர
விருத்த தர்ம த்வயம்-ஏக தரமி-இடம் சேர்வது-
பகவத் விஷயத்தில் நித்யர் உடன் ஒக்க எம்பார் பிள்ளான் ஆண்டான் போல்வார்-
நம் போல் அன்ன பானாதிகள் தாரக போஷகமாக கொண்டாலும்
பரி பக்குவம்- கூரத் ஆழ்வான் கொண்டாடும்-என்னை போல் சொல்ல வில்லை

பெருமாளும் மனிசர் தன்மை ஈஸ்வர பரதவ தன்மை பீரிட்டு காட்டியது போல்
ஆழ்வான்-கண்ணன் போல்-உரிமை வேண்டியவர்-ஏக வசனம்-கூரத் ஆழ்வான்  என்றான்
இங்கே திரிந்தேற்கு இழுகுற்று என் ?இரு மா நிலம் முன் உண்டு உமிழ்ந்த
சென்கோலத்த பவள வாய்ச் செந்தாமரைக் கண் என் அம்மான்
பொன் கேழ்  புகழ்கள் வாய வாய்ப் புலன் கொள் வடிவு என் மனத்த தாய்
அங்கேய்  மலர்கள்; கையவாய் வழி பாட்டோட அருளிலே –8-10-4
உண்டு உமிழ்ந்த -அழகிய வாயன்
குணம் சொல்ல ஆசை பட்டால் அவனே சொல்லி கொடுப்பான்
வாய்க்கு அழகு அவன் புகழ் சொல்வதே-திரு நாம சங்கீர்த்தனம்
மனசுக்கு அவன் திரு உருவம் -பூஷணம்
கை நிறைய புஷ்பம் கொண்டு கைங்கர்யம்
ஓட-கால ஷேமம்-முக் கரணன்களால் கைங்கர்யம் –
வழி பாட்டோட அருள் பெறறு மாயன் கோல மலர் அடிக் கீழ்
சுழி பட்டோடும் சுடர் சோதி வெள்ளத்து இன்புற்று இருந்தாலும்
இழி பட்டோடும் உடலினில் பிறந்து தன் சீர் யான் கற்று
மொழி பட்டோடும் கவி யமுதம் நுகர்ச்சி யுறுமோ ? முழுதுமே –8-10-5
அந்த பகவத் அனுபவம் அங்கே கொடுத்தாலும் –அத்துடன் -கீழ் சொன்ன ஐஸ் வர்யாதி அருளினாலும்
அது இங்கே தொண்டர்க்கு அமுது உண்ண/ அடியார்க்கு இன்ப மாரி /கேட்டார் ஆரார வானவர்-
திரு வாய் மொழி பாடும் ரசத்தோடு ஒக்குமோ என்கிறார் –பாகவத ஜீவனம் -அதற்க்கு அருள் தான் சாதனம்
ஜோதி சுழி பட்டு ஓடும்-பேர் இன்ப வெள்ளம் கிட்டினாலும்-
ஆளுக்கு உடம்பு ஜீவனம் அறிந்து செய்தாலும் –
திரு வாய் மொழி பாடி கேட்கும் இன்பம் ஒக்காது –இதை
முகரும் ஆனந்தம் அதை முழுங்கினாலும் ஒக்காது என்கிறார்

நுகர்ச்சி யுறுமோ ? மூ வுலகின் வீடு பேறு தன கேழில்
புகர்ச் செம் முகத்த களிறு அட்ட பொன் ஆழிக் கை ஏன் அம்மான்
நிகரச் செம்பங்கி எரி விழிகள் நீண்ட அசுரர் உயிர் எல்லாம்
தகர்த்து உண்டு உழலும் புட் பாகன் பெரிய தனி மா புகழே–8-10-6
சர்வ லோக ஐஸ்வர்யம் பெற்றாலும்
ஒளி வீசும் கண்ணன்-
குவலையா பீடம் ஒழித்த -என் அம்மான் புகழ்
அசுரர்  முடித்த -புள் பாகன்-கருட கொடி ஏற்றி-
புகழை சொல்வதற்கு ஒப்பு இல்லை
தனி மா புகழே எஞ்சான்றும் நிற்கும் படியாத் தான் தோன்றி
முனி மாப் பிரம முதல் வித்தாய் உலகம் மூன்றும் முளைப்பித்த
தனிமா தெய்வத் தளிர் அடிக் கீழ் புகுதல் அன்றி அவன் அடியார்
நனி மா கலவி இன்பமே நாளும் வாய்க்க நங்கட்கே  –8-10-7
எப்பொழுதும் புகழ் நிற்கும் படி
முனி-சங்கல்பித்து
கதா சரவணம் பண்ணினால்- சம்சாரமே ஸ்ரீ வைகுண்டம்
வியாசர் வால்மீகி போல்வாரை எழுத வைத்து
ஆழ்வார் பிரபந்தம்
ஆச்சார்யர் வியாக்யானம்
அனைத்தையும் சங்கல்பித்து
முதல் வித்து-மூல காரணம்
பல்லவம் போன்ற திரு அடி-விட
அடியார் உடன் சேர்ந்து இருப்பதே வேண்டும்
உருக்கம் பக்தி தான் வேண்டும்
கல்யாண குண அனுபவம் –
அவர்கள் ஹிருதயத்தில் இருந்து கேட்டு ஆனந்தம் அவனும் படுகிறானாம்
தன்னால் அப்படி இருக்க முடிய வில்லை என்ற வருத்ததுடன்
திரு அடி-ஸ்ரீ வைகுண்டம் வேண்டாம்-ராகவா உன் குணம் அனுபவிக்கும் படி இருகிறதே கூரத் ஆழ்வான்
சத் சங்க ஆனந்தமே வேண்டும்
நாளும் வாய்க்க நங்கட்கு நளிர் நீர் கடலைப் படைத்து தன
தாளும் தோளும் முடிகளும் சமனிலாத பல பரப்பி
நீளும் படர் பூம் கற்பகக் காவும் நிறை பன்னாயிற்றின்
கோளும் உடைய மணி மலை போல் கிடந்தான் தமர்கள் கூட்டமே –8-10-8
குளிர்ந்த  நீண்ட கடலை படைத்து
திவ்ய மங்கள விக்ரகம்-ஒப்பிலாத
பரம் ஜோதி-
பச்சை மா மலை போல் -அடியார் கூட்டமே திரு பாற்கடல் ஸ்ரீ வைகுண்டம்
தமர்கள் கூட்ட வல் வினையை நாசம் செய்யும் சது மூர்த்தி
அமர் கொள் ஆழி சங்கு வாள் வில் தண்டு ஆதி பல் படையன்
குமரன் கோல வைங்கனை வேல் தாதை கோதில் அடியார் தம்
தமர்கள் தமர்கள் தமர் களாம் சதிரே வாய்க்க தமியேற்கே  –8-10-9
வல்வினை அனைத்தையும் நாசம்செய்யும்

கருணை உண்டே சர்வ சக்தன்-வேற-

சாதுர்யம்-சது
பஞ்ச ஆயுதம் தரிப்பதே அடியாரை ரஷிக்க தான்
குமரன்-யுவாகுமரன் -இரண்டு அழகும் கலந்த ரூபம்
மன்மதன்  தாதை- -ஜனகன் -கோபி ஜன பிரியன் –
கோதில் -அந்ய சமாச்ரண்யம் தோஷம் இன்றி-
அவன் அபிமானித்து இருக்கும் பாகவதர் அடியார் ஆக
வாய்க்க தமியேற்கு ஊழி தொரூழி யூழி  மாகாயாம்
பூக் கொள் மேனி நான்கு தோள் பொன் ஆழிக் கை என் அம்மான்
நீக்க மில்லா வடியார் தம் அடியார் அடியார் அடியார் எம்
கோக்கள் அவர்க்கே குடிகளாய் செல்லும் நல்ல கோட்பாடே –8-10-10
வாய்ப்பு -தமியேற்கு-ஏகாந்தம் முக்கியம்
சத் சங்கம் அனுபவம் மட்டும் –
கோ =தலைவன்
குல பத்தி-அடியார் அடியார்-ஆழ்வார் திரு அடி சம்பந்தமே நல்ல கொள்கை
இது ஒன்றே யோக்யதை -அடியேன் ராமானுஜ தாசன் -அவர் அபிமானித்து ஆள் கொண்டு இருக்கிறார்
நல்ல கோட் பாட்டு உலகங்கள் மூன்றின் உள்ளும் தான் நிறைந்த
அல்லிக் கமலக் கண்ணனை அம் தன் குருகூர் சடகோபன்
சொல்லப் பட்ட ஆயிரத்துள் இவையும் பத்தும் வல்லார்கள்
நல்ல பதத்தால் மனை வாழ்வார் கொண்ட பெண்டிர் மக்களே –8-10-11
நல்ல கொள்கை உடன் சேவிப்பார்கள்- நல்ல மனை வாழ்வு பெறுவார்
பலன்-பிறர் சொல்லும் படி
பாகவத கைங்கர்யம் ஆகிய நல்ல பதத்தால் —
கைங்கரத்தில் துணை போக அனுகூலரான மனைவி மக்கள் பெறுவார்
அனுகூலம் இல்லை யானால் இல்லறம் தியாகம்-எதி ராஜர்-உதாரணம்
நெடுமால் அழகு தனில் நீள் குணத்தில் ஈடு
படுமா நிலை யுடைய பத்தர் –அடிமை தனில்
எல்லை நிலம் தானாக எண்ணினான் மாறானது
கொள்ளை நிலமான நிலை கொண்டு –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –80
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-8-9-கருமாணிக்க மலை மேல் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 21, 2011

கருமாணிக்க மலை மேல் மணித் தடம் தாமரைக் காடுகள் போல்

திரு மார்வு வாய் கண் கை உந்தி கால் உடை யாடைகள் செய்ய பிரான்
திருமால் எம்மான் செழு நீர் வயல் குட்ட நாட்டுத் திரு புலியூர்
அரு மாயன் பேர் அன்றிப் பேச்சு இலள் அன்னைமீர் ! இதற்க்கு என் செய்கேனோ ?–8-9-1
காதல் நிலையை மீண்டும் பேசுகிறார் ஆழ்வார்
அன்னை -திரு கல்யாணம்
தோழி- அரும் மாயன் அன்று பேச்சு இல்லை-மனிடவர்க்கு என்று பேச்சு படில்
நீல மாணிக்க மலை போல்-தாமரை பூத்து இருக்க-
சர்வமும் அழகன்-
குட்ட நாட்டு திரு புலியூர்
அன்னைமீர் ! இதற்க்கு என் செய்கேன் ? அணி மேருவின் மீது உலவும்
துன்னு சூழ் சுடர் ஞாயிறும் அன்றியும் பல் சுடர்களும் போல்
மின்னு நீள் முடி யாரம் பல்கலன் தான் உடை எம்பெருமான்
புன்னை அம் பொழில் சூழ் திரு புலியூர் புகழும் இவளே –8-9-2
ஸ்வர்ண திரு மேனி-
பூஷணம் திரு மேனியே
மின்னும் நீள் முடி-திரு ஆபரணம்-புன்னை மரம் சூழ்ந்த திவ்ய தேசம்
புகழும் இவள் நின்று இராப் பகல் பொரு நீர்க் கடல் தீப் பட்டு எங்கும்

திகழும் எரி யொடு செல்வது ஒப்பச் செழும் கதிர் ஆழி முதல்
புகழும் பொரு படை ஏந்திப் போர் புக்கு அசுரரைப் பொன்று வித்தான்
திகழும் அணி நெடு மாட நீடு திருப் புலியூர் வளமே –8-9-3
திவ்ய தேச வளமே இவள் புகழ்கிறாள்
தூங்காமல் –
கடல் நெருப்பு பிடித்து -ஜோதி போல்-அபூத கல்பனை-இருக்கிறான்
சங்கு சக்கரம் ஏந்தி-அசுரரை கொன்றவன்

ஊர் வளம் கிளர் சோலையும் கரும்பும் பெரும் செந்நெலும் சூழ்ந்து
ஏர் வளம் கிளர் தன் பனைக் குட்ட நாட்டுத் திரு புலியூர்
சீர் வளம் கிளர் மூ வுலகு உண்டு உமிழ் தேவ பிரான்
பேர் வளம் கிளர்ந்தது அன்றி பேச்சு இலள் இன்று இப் புனை இழையே–8-9-4
வளம் மிக்க  பனை =வயல்-

சீர் வளம்–
பேரே வளம்-திரு நாம சங்கீர்த்தனமே வளம்
இது ஒன்றே பண்ணி கொண்டு இருக்கிறாள்-
புனை இழைகள் அணிவும் ஆடை யுடையும் புதுக் கணிப்பும்
நினையும் நீர்மை யதன்று இவட்கு இது நின்று நினைக்க புக்கால்
சுனை யினுள் தடம் தாமரை மலரும் தன் திரு புலியூர்
முனைவன் மூவுலகாளி அப்பன் திருவருள் மூழ் கினளே   –8-9-5
முன் போல் இல்லை

ஆபரணம் சூடி கொண்டு
அவனுக்கு அலங்காரம் படுத்தி கொண்டு-
ஆடை உடுத்திபுது கணிப்பு-பாவம் தெரிகிறதே
இது என் நினைத்து -பார்த்தல் அறிவீர்
மாதவன் பற்றி கேட்டதும் இனிமை உணர்ந்து ராதை போல்

அவன் திரு அருளில் மூழ்கி இருக்கிறாள்

திருவருள் மூழ்கி வைகலும் செழு நீர் நிறக் கண்ண பிரான்
திரு வருள்களும் சேர்ந்தமைக்கு அடையாளம் திருந்த வுள
திரு வருள் அருளாலவன் சென்று சேர் தன் திரு புலியூர்
திரு வருள் கமுகு ஒண் பழத் தது மெல்லியல் செவ்விதழ்  –8-9-6
எப்பொழுதும் அவன் திரு அருளில் மூழ்கி இருக்கிறாள்-
செழுமையான நீர்-நீல வர்ணன்-சேர்ந்து பேசி இருக்கிறாள்
அடையாளம் திருந்த இருகிறதே
தாயார் பார்த்த திரு கல்யாணம் விளக்க
இவள் இங்கு வர அவனும் திரு பரம பதம் இருந்து வர
கமுகு பொழு உதடு சிவந்து -கண்ணன் உடன் சேர்ந்ததை காட்டுமே
மெல் இலை செல்வ வன் கொடி புல்க வீங்கு இளம் தாள் கமுகின்
மல்லிலை மடல் வாழை ஈன் கனி சூழ்ந்து மணம் கமழ்ந்து
புல்லிலைத் தென்கினூடு கால் உலவும் தன் திரு புலியூர்
மல் லலம் செல்வக் கண்ணன் தாள் அடைந்தாள் இம் மட வரலே–8-9-7
அழகியமெல்லிய இலை உடைய வெத்தலை கொடி-வன் கொடி
கட்டி கொண்ட கமுகு மரம்–வனப்பு –
விசாலமான இலை -வாழை மடல்- இனிமையான கனி-நேந்தரம் பழம்
மணம் வீச
ஓலை அடிக்க தென்னை மரம்-மட்டை ஓசை
மிகுந்த செல்வம் உடைய திரு வுக்கும் திரு வாக்கிய செல்வன்-செல்வ பிள்ளை -ஸ்ரிய பதி
மடவரல் அன்னைமீர் கட்கு என் சொல்லி சொல்லுகேன் ? மல்லை செல்வ
வட மொழி மறை வாணர் வேள்வியுள் நெய் அழல் வான் புகை போய்
திட விசும்பில் அமரர் நாட்டை மறைக்கும் தன் திருப்புலியூர்
பட வரனை யான் தன் நாமம் அல்லால் பரவாள் இவளே –8-9-8
பாசம் கொண்ட அன்னைமீர் !
என் சொல்லி தெரிவிப்பேன்
வைதிகர் -அனைவரும்-செல்வம்-வட மொழி மறை-வாணர்
தென் மொழி மறை உண்டு என்பதை ஆழ்வாரே நிர்ணயம் செய்கிறார்
வேதமே செல்வம் அந்தணர் மாடு –
158
பரவாள் இவள் நின்று இராப் பகல் பனி நீர் நிறக் கண்ண பிரான்
விரவா ரிசை மறை வேதியர் ஒலி வேலையின்  நின்று ஒலிப்ப
கரவார் தடம் தொறும் தாமரை கயம் தீ விகை நின்று அலரும்
புரவார் கழனிகள் சூழ் திரு புலியூர் புகழ் அன்றி மற்றே –8-9-9
அன்றி மற்று ஓர் உபாயம் என் ? இவள் அம் தன் துழாய் கமழ்தல்
குன்ற மா மணி மாட மாளிகைக் கோலக் குழாங்கள் மல்கி
தென் திசைத் திலதம் புரை குட்ட நாட்டுத் திரு புலியூர்
நின்ற மாயப் பிரான் திரு வருளாம் இவள் நேர் பட்டதே –8-9-10
நேர் பட்ட நிறை மூ வுலகுக்கும் நாயகன் தன்னடிமை
நேர் பட்ட தொண்டர் தொண்டர் தொண்டர் தொண்டன் சடகோபன் சொல்
நேர் பட்ட தமிழ் மாலை ஆயிரத்துள் இவை பத்தும்
நேர் பட்டர் அவர் நேர் பட்டார் நெடு மாற்கு அடிமை செய்யவே –8-9-11
கருமால் திறத்தில் ஒரு கன்னிகையாம் மாறன்
ஒரு மா கலவி யுரைப்பால் –திரமாக
அன்னியருக்காகா தவன் றனக்கே யாகும் உயிர்
இந் நிலையை யோரு நெடிதா –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –79
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்