திருவாய்மொழி-10-7-செம் சொல் கவிகாள் ! உயிர் காத்து ஆள் செய்ம்மின் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

செம் சொல் கவிகாள் ! உயிர் காத்து ஆள் செய்ம்மின் திரு மால் இரும் சோலை
வஞ்சக் கள்வன் மா மாயன் மாயக் கவியாய் வந்து என்
நெஞ்சும் உயிரும் உள் கலந்து நின்றார் அறியா வண்ணம் என்
நெஞ்சும் உயிரும் அவை உண்டு தானே யாகி நிறைந்தானே –10-7-1
திரு மால் இரும் சோலையில் முதலில் சொல்ல ஆரம்பித்து
அங்கேயே முடித்து அருளுகிறார்
கவி செய்வதே கைங்கர்யம்-வாசிக அடிமை
கள் அழகர் -வஞ்ச கள்வன்
வேஷம் போட்டு அனைவரையும் பிடிக்க செய்பவன்
மாயம் செய்வதில் சமர்த்தன்
நான் -தத்வம் இல்லாத படி
மனச வாக்கு காயம் இன்றி
ஆழ்வார் சந்நிதி இல்லை அழகர் சந்நிதி என்று சொல்லும் படி
ஞானி ஆதமை மே மதம்
தானே யாகி நிறைந்து எல்லா வுலகும் உயிரும் தானேயாய்
தானே யான் என்பானாகித் தன்னைத் தானே துதித்து எனக்குத்
தேனே பாலே கன்னலே யமுதே திரு மால் இரும்சொளை
கோனே யாகி நின்று ஒழிந்தான் என்னை முற்றும் உயிர் உண்டே –10-7-2
இரும்பு -பல பல -நெருப்பு போல்
தானே ஆகி –
வியாபித்து ஜொலிகிறான்
ஜங்கமா ஜங்கம் ஜகன் நாரயனோத் பவம்
அனைத்தும் நானே அர்ஜுனா நீயும் நானே
துதிப்பவனும் தானே
எனக்கு தேன பாலே
சுந்தர ராஜன்-சொவ்ந்தர்யதுக்கு —  அழகுக்கு ராஜன்
கொஞ்சுகிறார்
என்னை முற்றும் உயிர் உண்டு என் மாய வாக்கை இதனுள் புக்கு
என்னை முற்றும் தானேயாய் நின்ற மாய அம்மான் சேர்
தென்னன் திரு மால் இரும் சோலைத் திசை கை கூப்பிச் சேர்ந்த யான்
இன்னும் போவேனே கொலோ ? என் கொல் அம்மான் திரு அருளே ?–10-7-3
முற்றிலும் தன் உடன் சேர்த்து கொண்டான்
உயிர் உடல் இரண்டிலும் ஆசை கொண்டான்
ஆக்கை இதனுள் புகுந்தான்
திசை நோக்கி கை கூப்பினாலே கிட்டுவான்
இனி பிரிவு எனபது ஒன்றுமே இல்லை
கண்டு கொண்டு இனி போக விடுவது உண்டோ -பெரி ஆழ்வார்
அருள் கொண்டு அவன் இடம் போனால் திரும்ப மாட்டோம்
என் கொல் அம்மான் திரு அருள்கள் ? உலகும் உயிரும் தானே யாய்
நன்கு என் உடலம் கை விடான் ஞாலத்தூடே நடந்து உழக்கி
தென் கொள் திசைக்குத் திலதமாய் நின்ற திரு மால் இரும் சோலை
நங்கள் குன்றம் கை விடான் நண்ணா அசுரர் நலியவே –10-7-4
எதற்கு கை விடுவான்
கிருபா சாகரம்-அருள் கடல்
உடம்பிலும் ஆசை-பாகவதா அபிமானம்
திரு மேனி-கைங்கர்யம் செய்பவர்-சலமான மூர்த்தி அர்ச்சகர்
பிரபுவுக்கும் பிரபு-தாசி- வீட்டில் துவளுவான் போல்-
வைகுண்ட பதிக்கு உடம்பில் ஆசை
பாகவத சரீரமாக பண்ணினவனும் அவன் தானே
எங்கள் குன்றம்-நில மலை குளிர் மலை கொன்றை மலை
அசுரர் -விஷ்ணு பக்தி இல்லாத –
நண்ணா வசுரர் நலிவு எய்த நல்ல வமரர் பொலிவு எய்த
எண்ணா தன்கள் எண்ணும் நன் முனிவர் இன்பம் தலை சிறப்ப
பண்ணார் பாடல் இன் கவிகள் யானாய்த் தன்னைத் தான் பாடி
தென்னா வென்னும் என்னம்மான் திரு மால் இரும் சோலையானே–10-7-5
ஆச்ரயிக்காத அசுரர்-விஷ்ணு பக்தி இன்றி
நண்ணியவர்-பகவத் பக்தர்
முனிவர்-மனசுக்கு எட்டாத பகவத் குணம் எண்ணும் படி கடாஷம் பெற்ற பூர்வர்
இன்பம் தலை சிறக்க
தன்னை தானே பாடி கொண்ட அழகர்
தென்னா தென்னா -இழுத்து பாடி பார்கிறானாம்
திரு மால் இரும் சோலை யானே யாகிச் செழு மூ வுலகும் தன்
ஒரு மா வயிற்றின் உள்ளே வைத்து ஊழி யூழி தலை அளிக்கும்
திருமால் என்னை யாளுமால் சிவனும் பிரமனும் காணாது
அருமால் எய்து அடி பரவ அருளை ஈந்த வம்மானே  –10-7-6
சர்வமும் அவனே
பிரளய காலத்தில் காத்து
பூரணன்
என்னை ஆளும் மால்
திருவுக்கும் மால்
மோகன உருவன்
அருளை ஈய என் அம்மானே !என்னும் முக் கண் அம்மானும்
தெருள் கொள் பிரமன் அம்மானும் தேவர் கோனும் தேவரும்
இருள்கள் கடியும் முனிவரும் ஏத்தும் அம்மான்  திருமலை
மருள்கள் கடியும் மணி மலை திரு மால் இரும் சோலை மலையே –10-7-7
பராத் பரன் 
அனைவரும் ஈய அருள் என்று கேட்கும் படி 
மலை நினைத்தே மோகம் தீரும் 
திருமால் இரும் சோலை மலையே திரு பாற்கடலே என் தலையே
திரு மால் வைகுந்தமே தன் திரு வேம்கடமே எனது உடலே
அரு மா மாயத்து எனது உயிரே மனமே வாக்கே கருமமே
ஒரு மா நொடியும் பிரியான் என் ஊழி முதல்வன் ஒருவனே –10-7-8
சான்னித்யம்-எங்கும்-அறியும் படி-
திரு மால் இரும் சோலை மலையே 
இவனே திரு பார் கடலிலும் என் உச்சியிலும் 
திரு வேம்கடமும் என் உடலிலும் 
பிரியாமல்-தம்பதி போல் –
ஊழி முதல்வன் ஒருவனே என்னும் ஒருவன் உலகு எல்லாம் 

ஊழி தோறும் தன்னுள்ளே படைத்துக் காத்துக் கெடுத்து உழலும் 
ஆழி வண்ணன் என்னம்மான் அம் தன் திரு மால் இரும் சோலை 
வாழி மனமே ! கை விடேல் உடலும் உயிர் ரும் மங்க வொட்டே –10-7-9
மங்க ஓட்டே -மறைந்தாலும் உன்னை வாழ்த்தி கொண்டே 
இகத்திலும் அங்கும் வாழ்த்தியே 
பிராரப்த சேஷத்தால் இங்கு இருப்பு இல்லை முன்பு 
ஆர்த்தி நிறைந்தவர் ஆழ்வார் 
பகவத் அபிப்ராயத்தால் 
திரு வாய் மொழி பூர்த்தி ஆக்க 
மங்க வொட்டு உன் மா மாயை திரு மால் இரும் சோலை மேய 
நங்கள் கோனே ! யானே நீயாகி என்னை அளித்தானே !
பொங்கு ஐம் புலனும் பொறி ஐந்தும் கருமேந்த்ரியம் ஐம்பூதம் 
இங்கு இவ் வுயிரேய் பிரகிருதி மானாங்கார மனங்களே –10-7-10
24 தத்வமும் ஒரே பாசுரம்
மாயை-யானே நீயாகி என்னை காத்து 
சைதன்யம் அவன் 
சூர்யன் இன்றி வெய்யில் இல்லை 
உடம்பில் ஜீவன் கோவிலில் ஈஸ்வரன் 
அந்தர்யாமி ஆக இருந்து 
பொங்கு விகாரம் அடையும் ஐம் புலன் 
பொறி சப்தாதி 
கர்ம இந்திரியம் கை கால் போல்வன 
ஐம் பூதம் ஆகாசம் 
பிரகிருதி மகத்த அகங்காரம் மனச 
ஆக 24 பெரிய மாயை 
நாம ரூபம் கொடுத்து ராக துவேஷம் பாபம் புண்யம் செய்ய வைத்து 
அழகர் திரு அடி விழுந்து மாயை கூட்டை பிரியலாம் 
மானாங்கார மனம் கெட ஐவர் வன்கையர் மங்க 
தானான்காரமாய்ப் புக்குத் தானே தானே யானானை 
தேனான்காரப் பொழில் குருகூர் சடகோபன் சொல்லா யிரத்துள் 
மானான்காரத்தி இவை பத்தும் திரு மால் இரும் சோலை மலைக்கே –10-7-11

மனம் அகங்காரம் போல்வன -அஹம் -ஆத்மா அறிந்து 

தான் புரிந்து 
தேன் குடித்த வண்டு ரீங்காரம் செய்து 
மகத்தான அபிமானம் வஸ்து பெருமையால் செம் சொல் பரன் தனது சீராரும் மேனி தனில் 

வஞ்சித்துச் செய்கின்ற வாஞ்சை தனின் –விஞ்சுதலைக் 
கண்டவனைக் கால் கட்டிக் கை விடுவித்துக் கொண்ட 
-திண் திறல் மாறன் நம் திரு –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –97
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் 

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading