திருவாய்மொழி-10-4-சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள் -ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

சார்வே தவ நெறிக்குத் தாமோதரன் தாள்கள்

கார் மேக வண்ணன் கமல நயனத்தன்
நீர் வானம் மண் எரி காலாய் நின்ற நேமியான்
பேர் வானவர்கள் பிதற்றும் பெருமையனே –10-4-1
ஆச்சர்யமான பக்திக்கு பக்தி ஒன்றே பலன்

வேறு என்ன வேண்டும் -பிரேமா பக்தி சுயம் பலம் ரூபத்வாத்
அதை நினைத்து ஆழ்வார் உகந்து அருளி செய்த திரு வாய் மொழி
சார்வு-பலன்
சியாமள வர்ணன் கமல நயனன்விஸ்வ ரூபன்
பெருமையனே வானத்து இமையோர்க்கும் காண்டற்கு
அருமையனே ஆகத்து அணையாதார்க்கு என்றும்
திரு மெய் உறைகின்ற செம்கண் மால் நாளும்
இருமை வினை கடிந்து இங்கு என்னை ஆள்கின்றானே –10-4-2
பெருமை மிக்கவன்
ப்ரஹ்மாதிகளும் காண முடியாதவன்
ஹிருதயம் இருப்பதே அவனை நினைபதற்கே
ஹரி நாமம் சொல்லி -சுக ஹர்ஷம் உருகி-
திரு -தாயார் மெய் வஷசதளம் உறையும்
இங்கு என்னை ஆள்கின்றான்
சம்சாரத்திலும்ஆள்கின்றான் ஆழியான் ஆரால் குறைவுடையம் ?

மீள்கின்ற தில்லைப் பிறவித் துயர் கடிந்தோம்
வாள் கெண்டை ஒண் கண் மடப் பின்னை தன் கேள்வன்
தாள் கண்டு கொண்டு என் தலை மேல் புனைந்தேனே –10-4-3
என்னை ஆள் கொண்டவன் சக்கரபாணி
யாரால் குறை
மீள்கின்ற்றது இல்லை -பிறவிக்கு அழ வேண்டாமே
நப்பின்னை -ஈடு இணை இல்லாத -மணவாளன் –
திரு நாம கீர்த்தனம்-நியதிகள் ஒன்றும் இல்லை
நாக்கில் பட்டால் போதும்-கேளனமாக சொன்னாலும் போதுமே
அதிகாரி பேதம் இல்லை /கால நியமனம் இல்லை/தேச நியமனம் இல்லை
ஓர் அங்க நியதி வேண்டாம்
பிரஜை தாய் பெயரை சொல்லுமா போல்
தலை மேல் புனைந்தேன்
தலை மேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்

இலை மேல் துயின்றான் இமையோர் வணங்க
மலை மேல் தான் நின்று என் மனத்துள் இருந்தானை
நிலை பேர்க்கல் ஆகாமை நிச்சித்து இருந்தேனே –10-4-4
திரு மலையில் நின்று -என் மனசில் இருந்து –
பேராமல்–நிச்சித்து இருந்தேன்
நிச்சித்து இருந்தேன் என்நெஞ்சம் கழியாமை
கை சக்கரத்து அண்ணல் கள்வம் பெரிது உடையன்
மெச்சப் படான் பிறர்க்கு மெய் போலும் பொய் வல்லன்
நச்சப் படும் நமக்கு நாகத்து அணையானே–10-4-5
கள்ளன் அவன்-
பட்டுஎன்று நீங்குவான்
எனக்கு நீங்க மாட்டான்
பிறர்க்கு- தேவதாந்திர பரர்களுக்கு -பட்டு என்று விலகுவான்
மெச்சினால் இவர்கள்-ஒத்து கொள்ள மாட்டார்களே
இவனே பராத் பரன் என்று உணராமல் –
சித்தாந்தம் அர்த்த வாதம் இல்லையே
மெய் போல் பொய் சொல்வான்-
அச்சத்தை கொடுத்து அனுப்பி விடுவான்
திட நிச்சயம் -என்னை விட்டு அகலான் நானும் விட மாட்டேன்
மாமேகம் சரணம் விரஜ நம்பி இருப்பேன்
நச்சப் படும்-ஆசை பட்டு கொண்டு இருப்பேன்
க்ருபா சாகரம்-ஆழம் அறிந்து –
நகத்து அணையானே -பெரிய பெருமாள் ஒருவரையே நிச்சயித்து இருப்பேன்
நாகத்து அணையானை நாள் தோறும் ஞானத்தால்
ஆகத்து அணைப்பார்க்கு அருள் செய்யும் அம்மானை
மாகத்து இளம் மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே  –10-4-6
ஞானம்-நச்சப் படும்-நமக்கு ஸ்வாமி சேஷ பூதன் என்று அறிவதே ஞானம்
ஹிருதயமே ஸ்ரீ ரெங்கம் ஆக்கி
பராத் பரன் -செஞ்சடை அப்பனை தன் பாகத்தில் வைத்து
சங்கரனுக்கும் திரு மேனி கொடுத்து காத்தானே
பணி நெஞ்சே ! நாளும் பரம பரம்பரனை
பிணி ஒன்றும் சாரா பிறவி கெடுத்து ஆளும்
மணி நின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
அணி நின்ற செம்பொன் அடல் ஆழியானே –10-4-7
பரம் பரன் பரன்-அவனையே பணிந்து
பிறவி அறுத்து
நீல ரத்னம் போல்
எம்பெருமான்-
சக்கர பாணி-

ஆழியான் ஆழி யமரர்க்கும் அப்பாலான்

ஊழி யான்   ஊழி படைத்தான் நிரை மேய்த்தான்
பாழி யம் தோளால் வரை எடுத்தான் பாதங்கள்
வாழி என் நெஞ்சே ! மறவாது வாழ கண்டாய் –10-4-8
நித்ய சூரிகள்- ஊழி காலத்திலும் அழியாத
பெருமை சொல்லி- நிரை மேய்த்தான்
பரதவ சீல எல்லை
கோவர்த்தனம் எடுத்து காத்தான்
பாதங்களை வாழ்த்தி அனுகூல நெஞ்சே வாழி
கண்டேன் கமல மலர்ப் பாதம் காண்டலுமே
விண்டே யொழிந்த வினையாயின வெல்லாம்
தொண்டே செய்து என்றும் தொழுது வழி யொழுக
பண்டே பரமன் பணித்த பணி வகையே –10-4-9
கண்ணன் மலர் பாதம் கண்டேன்
உடனே நல் வினை தி வினை இரண்டும் தீர
-பட்டு பட்டு விண்டு கீழே விழ
என்றும் தொண்டு செய்து வாழும் படி
கைங்கர்ய ஸ்ரீ பெற்று
பண்டு கண்ணன் நியமித்த படி
மாம் ஏகம் சரணம் விரஜ -அவன் பணித்த படி
தொண்டே செய்து -ஸ்ரீ பாஞ்சராத்ரம் தொண்டுக்கு -சதசம் இத -பல சமிகிதைகள் உண்டு
சாஷாத் ஸ்ரீமன் நாராயணன் தன்னை ஆராதிக்கும் முறை அருளியது
ஐந்து இரவில் உபதேசம்
பகவத் கீதை-அவன் சொன்னது -ஸ்ரீ பகவான் உவாச –
வகையால் மனம் ஒன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புது மலரால் நீரால்
திசை தோறு அமரர்கள் சென்று இறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமரர் கட்கு ஓர் பற்றே –10-4-10
வித வித கைங்கர்ய வகை-சொல்ல படும்
தூபம் தீபம் வகை புஷ்ப வகை தீர்த்த கைங்கர்யம்
அவன் பணித்த முறை படியே
திசை தோறும் தேவர் முனிவர் தோழா
பெரும் தகை -பெருமாள்
பற்று என்று பற்றிப் பரம பரம் பரனை
மல் திண் தோள் மாலை வழுதி வள நாடன்
சொல் தொடை யந்தாதி ஓர் ஆயிரத்துள் இப் பத்தும்
கற்றார்க்கு ஓர் பற்றாகும் கண்ணன் கழல் இணையே –10-4-11
பற்றுதலை விட்டு
அவனை பற்றி-கண்ணன் கழலினை
ஆழ்வாரும்-பரம்பரை அரச குடும்பம் -வழுதி நாடு
திண் தோள் கொண்டவர்
இந்த பதிகம் கற்று-இதை பிடித்தால் கண்ணன் கழல் கிட்டும்
அவலம்பனம் இது –பிடித்து கொடுக்கும்

சார்வாகவே யடியில் தான் உரைத்த பத்தி தான்

சீரார் பலத்துடனே சேர்ந்ததனை –சோராமல்
கண்டு உரைத்த மாறன் கழல் இணையே நாள் தோறும்
கண்டு உகக்கும் என்னுடைய கண் –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –94
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

Leave a Reply


Discover more from Thiruvonum's Weblog

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading