அர்ச்சையில் திரு மேனி அழகையும்
விபவத்தில் குணா அனுபவம்
ஸ்ரீ வைகுண்டத்தில் பரத்வமும் ஆழ்வார் அனுபவித்து அருளி செயல்
இது வரை அர்ச்சை அனுபவம் ஆழ்வார் இதில் கிருஷ்ண அனுபவம்
கோபி பாவத்தில் -மாலை பூசல் திரு வாய் மொழி அர்ய்ளுகிறார்
சொடுக்கு நேரம் யுகம் போல்
கொடியும் செருப்பும் கொடாதே போக்கி யசோதை பாவத்தில் பெரி ஆழ்வார் அருளியது போல்
மல்லிகை கமழ தென்றலும் ஈருமாலோ !
வன் குறிஞ்சி இசை தவருமாலோ !
செல் கதிர் மாலையும் மயக்குமாலோ !
செக்கர் நன் மேகங்கள் சிதைக்குமாலோ !
அல்லி அம் தாமரை கண்ணன் எம்மான்
ஆயர்கள் ஏறே அரி ஏறே எம் மாயோன்
புல்லிய முலைகளும் தோளும் கொண்டு
புகல் இடம் அறிகிலம் தமியமாலோ !–9-9-1
கண்ணா எப்பொழுது வருவாய் !
தென்றல் மேனி குத்த -பிரி ஆற்றாமையால்
குறிஞ்சி ராகமும் படுத்த
மாலை பொழுது மனதை மயக்க
செவ்வி சித்தம் உடைக்க
சிம்மம் போன்ற பராக்ரம் மாயாவி
ஆலிங்கனம் செய்து போனான்
அதை நினைந்து ஜீவித்து கொண்டு இருகின்றேன்
சுகர்-கோபிகள்-வீட்டில் இடம் கொள்ளாமல்-கோகுலம்
மதுரை துவாரகை -எங்கும்-வஸ்து வைலஷண்யம் –
அர்ஜுனன் முரட்டு ஆளும் -அப்ரிய தர்சனம் பார்க்க பிடிக்காமல்
புகல் இடம் அறிகிலம் தமியமாலோ !
புலம்புறு மணி தென்றல் ஆம்பலாலோ !
பகலடு மாலை வன் சாந்தமாலோ !
பஞ்சமம் முல்லை தன் வாடையாலோ !
அகலிடம் படைத்து இடந்து உண்டு உமிழ்ந்து அளந்து
எங்கும் அளிக்கின்ற வாயன் மாயோன்
இகலிடத்து அசுரர்கள் கூற்றம் வாரான்
இனி இருந்து என் உயிர்க்கும் மாறு என் ?–9-9-2
ஆலோ-அந்தோ ஓசை
மார்பில் கட்டிய மணி ஓசை
ஆம்பல்-பரணை வாத்தியம் பீ பீ ஊதி கொண்டு போகிறானாம்
பஞ்சம ரகம் கோகிலம் கூவும் ஓசை
ஜகன்மோகன் வரவில்லையே
இனி இருந்து என் உயிர் க்கும் மாறு என் ?
இணை முலை நமுக நுண் இடை நுடங்க
நுனி இரும் கலவி செய்தாகம் தோய்ந்து
துறந்து எம்மை யிட்டகல் கண்ணன் கள்வன்
தனி இளம் சிங்கம் எம் மாயன் வாரான்
தாமரைக் கண்ணும் செவ்வாயும் நீலப்
பனி இரும் குழல்களும் நான்கு தோளும்
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ !–9-9-3
பத்து மாதமும் காத்து இருந்த பிராட்டி போல்
கட்டி அனைத்து விளை யாடி விட்டு துறந்து போனானே
கள்ளன்
மறக்க முடியாத ஜகன் மோகன்
தாமரை கண்ணை மறப்பதா
செவ்வாயை மறப்பதா
திவ்ய மங்கள் விக்ரகம் நெஞ்சிலே இருந்து குத்தி கொண்டே இருகிறதே
பாவியேன் மனத்தே நின்று ஈருமாலோ !
வாடை தன் வாடை வெவ்வாடை யாலோ !
மேவு தன் மதியம் வெம் மதியமாலோ !
மென் மலர்ப் பள்ளி வெம் பள்ளியாலோ !
தூவி அம் புள்ளுடைத் தெய்வ வண்டு
துதைந்த எம் பெண்மையம் பூவிதாலோ !
ஆவியின் பரம் அல்ல வகைகள் ஆலோ !
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ !–9-9-4
குழலும் கையுமான திரு உருவம் நெஞ்சில் அலைய
குளிர்ந்த வாடை வேக வைக்கிறதே
நிலவும் சுடுகிறதே
புஷ்ப சயனமும் நெருப்பு போல்
வண்டு குடைந்த தாமரை போல்-கரு வண்டு-
ஸ்ரீ வைகுந்தத்தில் வந்து துதைத்த பூ போல்
நெஞ்சமும் துணை இன்றி இருக்கிறேன்
யாமுடை நெஞ்சமும் துணை அன்று ஆலோ !
ஆ புகு மாலையும் ஆகின்றாலோ !
யாமுடையாயன் தன் மனம் கல்லாலோ
அவனுடைத் தீம் குழல் ஈருமாலோ !
யாமுடைத் துணை என்னும் தோழி மாறும்
எம்மின் முன் அவனுக்குமாய் வராலோ !
யாமுடைய ஆர் உயிர் காக்கு மாறு என் ?
அவனுடை யருள் பெறும் போது அரிதே ?–9-9-5
உருகும் நெஞ்சு-துணை இல்லையே
மாடுகள் வந்தனவே
எங்கு போனான் -கல் நெஞ்சன்
வேணு கானம் கேட்டு-மதுரமாக
அதுவும் ஈருகிறதே
என் தோழி கூட என் உடன் அலுத்து முன் முடிவார் போல்
என் விசனம் கண்டு –எனக்கு முன்னே அவன் வேண்டும் என்று நோவு
அவன் சம்பந்தம் இவள் வழியே கிட்ட –இவளுக்கு கண்ணன் கிட்டினால் அவளுக்கும் கிட்டுமே
அவன் உடைய அருள் பெறும் போது அரிதால்
அவ் அருள் அல்லன அருளும் அல்ல
அவன் அருள் பெறும் அளவு ஆவி நில்லாது
அடு பகல் மாலையும் நெஞ்சும் காணேன்
சிவனோடு பிரமன் வன் திரு மடந்தை
சேர் திரு வாகம் எம் ஆவி ஈரும்
எவன் இனி புகும் இடம் ? எவன் செய்கேனோ ?
ஆருக்கு என் சொல்லுகேன் ?அன்னைமீர்காள் !–9-9-6
அருள் பெறும் போது -வேறு எல்லாம் மருள் தானே
ஆவி நில்லாது -இன்றே வேண்டும்
பகலும் மாலையும் ஆடுகின்றன
பருவ காலத்துக்கு துணையான நெஞ்சும் இல்லை
சிவன் பிரமன் தாயார் அனைவரும் இருக்க எனக்கும் உண்டே
படுகருக்கு தமிழர் வார்த்தை சொபவர் போல்
கண்ணை பற்றி அறியாதவர் என் கஷ்டம் பாவம் அறிய மாட்டார்
ஆருக்கு என் சொல்லுகேன் ? அன்னைமீர்காள் !
ஆர் உயிர் அளவன்று இக் கூர் தன் வாடை
கார் ஒக்கும் மேனி நம் கண்ணன் கள்வம்
கவர்ந்த வத் தனி நெஞ்சம் அவன் கண் அக்தே
சீர் உற்ற அகில் புகை யாழ் நரம்பு
பஞ்சமம் தன் பசும் சாந்து அணைந்து
போர் உற்ற வாடை தன் மல்லிகைபூ
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ !–9-9-7
கிருஷ்ண விரகம் யாருக்கு புரியும்
நெஞ்சும் அவன் இடம் -பெரிய கள்வன்
கெஞ்சினாலும் திரும்பாது
அகில் புகை குயில் பஞ்சம சுரம் மல்லிகை மணம்
எல்லாம் எறிய வைக்கும்
புது மணம் முகந்து கொண்டு எறியுமாலோ !
பொங்கிள வாடை புண் செக்கராலோ !
அது மணந்து அகன்ற நம் கண்ணன் கள்வம்
கண்ணனின் கொடிது இனியதனிலும் உம்பர்
மது மண மல்லிகை மந்தக் கோவை
வன் பசும் சாந்தினில் பஞ்சமம் வைத்து
அது மணந்து இன் அருள் ஆய்ச்சியர்க்கே
ஊதுமத் தீம் குழற்கே உய்யேன் நான் –9-9-8
கண்ணனை விட கள்வம் கொடியது
மல்லிகை மணம்-வைஜயந்தி மாலை புரள –
பஞ்சம சுரம் வைத்து
இனிய -சங்கல்பத்துடன்
கோபிகளை -ஆய்ச்சியற்கே –
க ம லா -அவள் மட்டும் அறியும்படி
என் பெயர் வர வில்லையே
ஊதும் அத தீம் குழற்கே உய்யேன் நான்
அது மொழிந்து இடை இடைத் தன செய் கோல
தூது செய் கண்கள் கொண்டு ஓன்று பேசித்
தூ மொழி இசைகள் கொண்டு ஓன்று நோக்கி
பேதுரு முகம் செய்து நொந்து நொந்து
பேதை நெஞ்சற வறப் பாடும் பாட்டை
யாதும் ஓன்று அறிகிலம் அம்ம ! அம்ம !
மாலையும் வந்தது மாயன் வாரான் –9-9-9
குழல் ஓசைக்கே உயிர் வைத்து இருக்கிறேன்
சங்கேசமாக மொழிந்து குழல் மொழி
இடை இடை-அனுராகதொடு கடாஷம்
சிறு விரல் தடவி பாட கண்கள் ஓட புருவம் குடலிப்ப -நெளிய
வாய் வைத்து கொண்டே கண் அலைந்து வருகிறாளா -பார்த்து
கடாஷம்-அனுரக்த கடாஷ மோட்ஷம்
பிரேமை அள்ளி வீச -பித்தாக போய் -தனி பாஷை பிரேம பாஷை
கண்ணாலே பேசி –தூது செய் கண்களால்
ராகத்திலே தூ மொழி கொண்டு
அதில் அகப்பட்டு -பேதுரு முகம்-பித்தாகி
பேயனாய் ஒழிந்தேன்
நொந்து நொந்து -விரக வேதனையில்-
அறப் படும் பாட்டை –அம்மா அம்மா —
தப்ப முடியாது தாபம் மிகுந்து
மாலையும் வந்தது மாயன் வாரான்
மா மணி புலம்ப வல்லேறு அணைந்த
கோல நன்னாகுகளு களுமாலோ !
கொடியான குழல் களும் குழுறு மாலோ !
வாளொளி வளர் முல்லைக் கரு முகைகள்
மல்லிகை யலம்பி வண்டு ஆலுமாலோ !
வேலையும் விசும்பில் விண்டு அலறு மாலோ !
என் சொல்லி உய்வன் இங்கு அவனை விட்டே ?–9-9-10
மாலை பொழுது வந்ததே -மாயன் வர வில்லை
காளைகள் வந்தன -கழுத்தில் மணி -துஷ்ட மிருகம் ஓடி போகும் சப்தம் கேட்டு
கடை மாடு-எரு போட அடைத்து வைப்பார்களாம்
மங்கள வாத்யம்மணி சப்தம்-
கண்ணன் உடன் போய் அவன் உடன் திரும்பி-கோபாலன் மாட்டு கொட்டையிலே இருந்து
மடியில் பால் விறைக்க -கன்றுகளும் துள்ள ‘ல்
கன்றுகள் சப்தம் குழல் ஓசை கலந்து
கடல் பொங்கி ஓசை
என் சொல்லி உய்வேன்
கோபிகள் நிலை
விட்டு பிரிந்து ஷணம் யுகம் போல்
கண்ணன் வந்ததும் -மணி ஓசை கேட்டு ஓடி வந்து
யசோதை தோழிமார் -ஷீர சாகர அலை போல் கூட்டமான மாடுகள்
சலங்கை ஓசை குழல் ஓசை மணி ஓசை
கோலாகலம்-மயில் இறகு கண்டு கொண்டை நெத்தி கஸ்தூரி திலகம் பவள வாய் பீதாம்பரம் –
பரமானந்தம் ஆஸீத் -கோவிந்தம் தர்சனம்
அவனை விட்டு அகன்று உயர் ஆற்றகில்லா
அணி இழை ஆய்ச்சியர் மாலைப் பூசல்
அவனை விட்டு அகல்வதற்கு இரங்கி
அணி குருகூர் சடகோபன் மாறன்
அவனியுண்டு உமிழ்ந்தவன் மேல் உரைத்த
ஆயிரத்துள் இவை பத்தும் கொண்டு
அவனியுள் அலற்றி நின்று உய்ம்மின் தொண்டீர் !
அச் சொன்ன மாலை நண்ணித் தொழுதே –9-9-11
அலற்றிய பதிகம்-அலற்றி உய்ய அருளி இருக்கிறார்
மால் கண்ணன் நேரில் வருவான் நாம் தொழ
திரு ஆய்ப் பாடியில் கூப்பிட்ட கூப்பாடு ஆயிற்று
பஞ்ச லஷம் கன்னிகள்-
யாருக்கு இன்று பாக்கியம்-கோகுலத்தில் பழக்கம்
மல்லடிமை செய்யும் நாள் மால் தன்னை கேட்க அவன்
சொல்லும் அளவும் பற்றாத் தொன்னலத்தால் செல்கின்ற
ஆற்றாமை பேசி அலமந்த மாறன் அருள்
மாற்றாக போகும் என் தன் மால் –திருவாய் மொழி நூற்று அந்தாதி –89
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply