விருப்பமான க்ரீடாசலம்–பிராட்டி உடன் -ரம்யா ராம மானாயா -ஸ்ரீ வைகுண்டம் விரக்தாயா -நிற்பு என்று நித்ய வாசம் பண்ணி கொண்டு இருக்கிறான்–மேல் கோட்டை கீழ் கோட்டை போல் புஷ்ப கிரி சிந்து வேம்கடம்–திரு மால் மதிப்பதால் திருமலை ஆனது..–அது போல் என் உள்ளமும் திவ்ய தேசம்-உகந்த நிலம் எல்லாம் திவ்ய தேசம்–உகப்பு காரணம் ஆழ்வார் மங்களா சாசனம்–உகந்து வாசம் பண்ணுவான்..-அது போல் புகுந்து பெறேன் என்று நிறைந்து இருக்க -திரு மலை திரு மால் இரும் சோலை என் உள்ளம் மூன்றும்–பழைய பால் கடலை விட்டு விட்டு வந்து விடாதீரும்–அங்கும் வருவார்களே –கை விடேல்–இளம் கோயில்-பாலாலயம்-கை விடாதே –திரு பணி நடக்கும் பொழுது–திரு வெள்ளியம்குடி–பாலாலயம்–ஆவாகனம் பண்ணி –சில வியாஜத்தால் சம்ப்ரோஷனம் தள்ளி போக –ஸ்தபதி சொன்ன வார்த்தை ஸ்ரீ கிருஷ்ண பிரேமை சுவாமி மனனம் வருத்தம்..-பெருமாள் போய் விட்டார் இல்லை-ஆபரேஷன்-உணர்வு மரத்து போகும் படி மருந்து கொடுப்பது போல் உயிர் போக வில்லை–நமக்காகா கட்டு பட்டு இருக்கிறார் தள்ளி போக கூடாது ஆபரேஷன் பொறுப்பாக நடப்பது போல் பாலாலயம் பண்ண வேண்டும்.தன உள்ளம் பெரிய கோயில் திரு பாற் கடல் இளம் கோவில்-அங்கு தபம் இருந்து இங்கு வந்தான்..–விடாதீர்–.
ஜன்ம ஜன்ம மாக மறக்கவில்லை–உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆள் செய்வோம்–ஆனந்த சாகரத்தில் எனை முழிக்காட்டி நீ சந்தோஷ படு-
கழிய மிக்கதோர் காதல்-கண்ணார கண்டு கழியதோர் காதல்-நசிக்காது பார்த்த பின்பு-ஆறுதல் கொஞ்சம்-தாபத்துக்கு கொஞ்சம் தண்ணீர் போல்–பார்த்த பின்பு மிக்கதோர் காதல்-ருசி தெரியாது முன்பு பார்த்த பின்பு பிரிய முடியாது பூர்வ ராகம் முன்பு விரகதாபம் பின்பு..வஸ்துவின் அருமை–அறிந்து..கை மிக்கு கை கூடும் ஆகில்–பிரேமை ஆழம்–தசரதன் இடம் ஆழம்–பெருமாள் காட்டுக்கு போனதும் உயிர் போனதே ..–60000 வருஷம் இருந்தவர் மூப்பினால் போக வில்லை..–ஸ்ரீ ராம விரகத்தினால் போனதே–பொறுத்து இரு என்று சொன்னால் பொறுக்குமா நாணி-ஆறி போ –ஆறாது–கரு மாலை பொன் மேனி-அருமையான திரு மேனி சியாமள வர்ணன்-பேணி ஈடு பட்டு வந்த காதல்–காட்டும் திரு மாலை நாங்கள் திரு-தாயார் புருஷ காரம் பண்ணுவாள் என்று -அழுத்தமாக அருளுகிறார்-தாயார் தத்வம் சேர்ப்பிபதே நம்மை–ராசா லீலை-கோபிகள் கோபிகா கீதம்-ராதை மட்டும் கூட்டி போக -கொஞ்ச கொஞ்ச ராதைக்கு வேதனை தோழிகள் துடிப்பார்கள்–என்கிற எண்ணம்- திரு உள்ளம் அறிந்து மறைய –கோபிகள் வர பின்பு அனைவர் உடன் கூடினான்..-கருணா மயம் கொண்டவள் அபசாரம் பன்னுபவனுக்கும் புத்தி சொல்லும் -ராவணனுக்கும் பிராட்டி அருளினாள்-மித்ர பாவேன—அவன் வாரான் ஆகிலும் இழுத்து -காட்டாது போனாலும் காட்ட வைப்பாள் திரு
கிருபை/கர்ம பல பிரதன் இரண்டு தன்மை–அவனுக்கு..சத்ருவின் பிள்ளைக்கும் அருளுவான்-மம துரோகி-ஸ்ருதி ஸ்மிர்த்தி மம வாகயா -மீரயால் தண்டனை…தாயார்-கட்டி அணைப்பாள்.ஜகன் மாதா -ராஷச ஸ்திரீகள் -சரண் அடையாமலே ரட்ஷித்து–தனி கோவில் நாச்சியார் உபய நாச்சியார் திரு மார்பு நாச்சியார் மூவரும் சேர்ந்து ரட்ஷிக்ககோவிந்தா பெயரினால் நான்கு திசையும் கேட்க்கும் படி ஏத்து கின்றோம்..-எந்தை பெயர்–கோவிந்த நாம சங்கீர்த்தனம்-கேட்டீரே —
நாம் பெற்ற நன்மையையும் நா மங்கை நல் நெஞ்சத்து
ஓம்பி இருந்து எம்மை யோதுவித்து வேம்பின்
பொருள் நீர்மை யாயினும் பொன் னாழி பாடென்று
அருள் நீர்மை தந்த அருள் –58
திரு நாம சங்கீர்த்தனம் நாம் பெற்ற நன்மை என்று தெரியாமல்–வேம்பு போல் முதலில் –நீர்மை-கைமை கசப்பு-ஸ்வாபம்–பித்த ஜுரம் –ஒ ராம நீ நாமம் எந்த ருசி-ராம தாசர் –அருள் நீர்மை தந்த அருள்- நீர்மை-இனிமை–சுகம் கண்ட பின் இதை போல் இனிமை வேற இல்லை-நா மங்கை –சரஸ்வதி- அறிந்து திரு நாமங்கள் வரும்படி செய்த அருள்.எம்பெருமானே சரஸ்வதி தேவியை கூட்டு பிரம தேவனின் வாக்கில் இருக்க செய்தான் எம்பெருமான்-
அருள்புரிந்த சிந்தை அடியார் மேல் வைத்து
பொருள் தெரிந்து காண் குற்ற வப்போது -இருள் திரிந்து
நோக்கினேன் நோக்கி நினைந்தேன் அது ஒண் கமலம்
ஓக்கினேன் என்னையும் அங்கு ஓர்ந்து–59
பொருள் இல்லாத எங்களை பொருள் ஆக்கி–அஞ்ஞானம் விலக்கி–உன் திரு அடி கண்டு–நன்றிக்கு கைம்மாறு-என்னையே தாமரை போல் சமர்பித்த –உன் கருணையால் உயர்வு பெற்று- அறிந்து -ஓர்ந்து–அவன்பொருளை அவனுக்கு அர்பிக்கிறோம்..–நான் யார் சமர்ப்பிக்க
ஓர் உருவன் அல்லை ஒளி உருவம் நின் உருவம்
ஈர் உருவன் என்பர் இரு நிலத்தோர் –ஓர் உருவம்
ஆதியாம் வண்ணம் அறிந்தார் அவர் கண்டீர்
நீதியால் மண் காப்பார் நின்று –60
வடிவம் இல்லை அவனுக்கு -ஜிதந்தே ஸ்தோத்ரம் –ந தி ரூபம் -பக்தாநாம் தும் பிரகாசா சி – திவ்ய ஆயுதம் திவ்ய ஆபரணம் எல்லாம் பக்தர் களுக்கு -ஆதி மூலமே- இத்தம் விசேஷணம் அற்றபர பிரமம்-கூப்பிட சக்ராயுதன் வந்தான் –நிரா காரம்-வியாபித்து உலகுக்கு காரணம்–பக்தர் கூப்பிட்ட உடன் திவ்ய ரூபம் உடன் வருவான் ஒளி உருவம் ஞான ரூபம்..ஈர் உருவம் தியானம் பண்ண ஈர்க்கும் உருவம்..-இரு நிலம்=விஸ்தாரமான உலகம்..-நரசிம்கன் -ராமன் கண்ணன் -தாற் கால உருவமா–ஆதி ஆம் வண்ணம் -நிரந்தரம்-வெளி காட்டி மறைத்து வைக்கிறார்..-நித்ய மான திவ்ய மங்கள விக்ரகம்–தீர்தகரர்கள்-மண் காப்பார் ஞானிகள் அகண்ட தன்மை புரிந்தவர்கள் ஞானம் கலந்த பக்தர்–இரண்டு தன்மை உடையவன் என்று அறிந்தவர்
நின்றதோர் பாதம் நிலம் புதைப நீண்ட தோள்
சென்று அளந்தது என்பர் திசை எல்லாம் –அன்று
கரு மாணியாய் இரந்த கள்வனே ! உன்னைப்
பிரமாணித்தார் பெற்ற பேறு !–61
உலகு அளந்தார் என்பர்–அன்று கரு மாணியாய்-கருப்பு குள்ளன்-கள்வனே-காட்டுவது ஒரு அடி அளந்தது ஒரு அடி-அவன் உடையதை நம் உடையது என்பதே பெரிய குற்றம்–தன சொத்தை மீட்க்க பண்ணிய திரு விளையாடல்–திரு உள்ளத்தை பிரமாணித்தவர் யார் -திரு உருவம் பிரமாணிப்பது அப்புறம்–பலி புரிந்து கொண்டான்–அவன் பாக்கியம்-பெற்ற பேறு–
பேறு ஓன்று முன் அறியேன் பெற்று அறியேன் பேதைமையால்
மாறென்று சொல்லி வணங்கினேன் –ஏறின
பெருத்து எருத்தம் கோடு ஒசியப் பெண் நசையின் பின் போய்
எருது இறுத்த நல் ஆயர் ஏறு –62
முன்பு ஒன்றும் அறியேன்–பேறு பாக்கியம் எது என்று தெரியாது–பெற்றும் அறியேன்-தீர்த்தம் சடாரி பெற்றும் அறியேன்..மார் என்று பரிகாரம்-அர்த்தார்த்தி யாக ஆர்தனாக –ஏறினேன்–மேலே வைக்க –பிராணன் அவன் கல்யாண குணங்கள் ..கும்பகன் பெண் நப்பின்னை நீளா தேவி–நசையின் பின்-எருது இருத்த நல் ஆயர் ஏறு –திமில் உடைய ஏறு-எருத்தம்–பக்தி பிரேமை என்ன என்று புரிகிறது இப் பொழுது தான்–லீலைகளை கேட்டு சௌலப்யம் புரிந்து கொண்டேன்
ஏறு ஏழும் வென்று அடர்த்த எந்தை எரி வுருவத்து
ஏறு ஏறி பட்ட விடு சாபம் –பாறேறி
வுண்ட தலை வாய் நிறையக் கோட்டம் கை ஒண் குருதி
கண்ட பொருள் சொல்லின் கதை -63
மாதுர்யம் எளிமை–கபால சாபம் போக்கி–ஒண் குருதி -அர்த்த வாதம்–உள் கருத்து–ஞான சொரூபன் மார்பின் வியர்வை ரத்தம் எது -அப்க்ராக்ருத சரீரம் வேத சொரூபன் பிரம்மா கழுகு பறக்கும் சிரஸ் ஏது..-பொருள் புரிந்த கொள்ள வேண்டும்–
கதையின் பெரும் பொருளும் கண்ணா ! நின் பேரே
இதயம் இருந்தவையே ஏத்தில் –கதையும்
திரு மொழியாய் நின்ற திரு மாலே !உன்னைப்
பரு மொழியால் காணப் பணி –64
சாரம் கொண்டு அசாரம் தள்ள வேண்டும்…கோடி பிரம்மா கத்தி சாபம் போக்கும் -திரு நாம சங்கீர்த்தன மகிமையால்..–ஏத்தில் -செய்தால்-திரு மொழியாய் அர்த்த வாதமும் வேதம் போல் ஆகும்..
பணிந்தேன் திரு மேனி பைம் கமலம் கையால்
அணிந்தேன் வின் சேவடி மெல் அன்பாய் –துணிந்தேன்
புரிந்து ஏத்தி உன்னைப் புகல் இடம் பார்த்து ஆங்கே
இருந்து ஏத்தி வாழும் இது –65
சேவித்து -அடி பணிந்து -நீயே புகல் இடம் –ஸ்ரீ வைகுண்டம்-அவதாரம் பண்ணி பின்பு புகுந்த இடம்-திவ்ய தேசங்களும் புகல் இடம்..துணிந்து அங்கேயே இருக்க நிச்சயம் பண்ணினேன்..திவ்ய தேச வாசம்- புக்கு நீர் புக்கு உன்னை கண்டு கொண்டேன்..இருந்து ஏத்தி வாழும் இது
இது கண்டாய் நல் நெஞ்சே ! இப் பிறவி யாவது
இது கண்டாய் எல்லாம் நாம் உற்றது –இது கண்டாய்
நாரணன் பேர் ஓதி நரகத் தரு கணையா
காரணமும் வல்லையேல் காண் -66
இது என்ன உலகு இயற்க்கை–ஞானிகள் இங்கு வந்து ஒட்டாமல் இருப்பார்கள்–இது கண்டாய்–சாரம் என்பதே நாராயணன் பேர் ஓதுவது–
கண்டேன் திருமேனி யான்கனவில் ஆங்கு அவன் கைக்
கண்டேன் கனலும் சுடர் ஆழி –கண்டேன்
உரு நோய் வினை இரண்டும் ஒட்டு வித்து பின்னும்
மறு நோய் செறுவான் வலி -67
அவன் திரு மேனி கண்டேன்..கனவில்-அனுபவம் இருப்பதால் இதுவும் மெய் தானே-மானச அனுபவம் சத்யம் -ஸ்ரீ பாஷ்யத்தில் சித்தாந்தம்..–ஹிருதயத்தில் தானே இருக்கிறான் மனசு பிராணன் சரீரம் உலகு -வெளியில் சுற்றி வந்து கண் எதிரில் காண்பதை விட கனவில் காண்பது -சுலபம்-போல் தோன்றினாலும் பாக்கியம் பண்ணிணவனே கனவில் காட்சி கொடுக்கிறான் ..-கை தளம் பற்ற கனா கண்டேன் தோழி நான்..சங்கு சக்கரமும் கண்டேன்-அவனை காண்பதே பிரயோஜனம்–பரி பக்குவம் கர்ம வாசனை போக்கி -வினைகள் இரண்டையும் போக்கி-சர்வ தர்மான் பரித்யஜ்ய -தியானத்தையே கொடுத்து ஆள் படுத்தி நேரில் காட்ஷி கொடுப்பான் -இது அவன் வலி -வலிமை பழம்.
வலி மிக்க வாள் எயிற்று வாள் அவுணர் மாள
வலி மிக்க வாள் வரை மத்தாக வலி மிக்க
வாள் நாகம் சுற்றி மறுகக் கடல் கடைந்தான்
கோள் நாகம் கொம்பு ஒசித்தகோ -69
கடல் கடைந்த அவனுக்கு இவை போக்குவது எளிது தானே
கோவாகி மா நிலம் காத்து நம் கண் முகப்பே
மா வேகிச் செல்கின்ற மன்னவரும் –பூ மேயும்
செம் கமல நாபியான் சேவடிக்கே எழ பிறப்பும்
தன கமலம் யேய்ந்தார் தமர் -69
அரசன் -நம் கண் முகப்பே குதிரை மேல் செல்கின்ற மன்னவரும்–பத்ம நாபன் திரு அடியில் பூ சமர்ப்பித்த பலன்..அவள் கடாஷத்தாலே பாலை வனத்திலும் கல்பக விருட்ஷம் —
தமர் உள்ளம் தஞ்சை தலை அரங்கம் தன் கால
தமர் உள்ளும் தன் பொருப்பு வேலை –தமர் உள்ளும்
மா மல்லை கோவல் மதிள் குடந்தை என்பரே
ஏ வல்ல வேந்தைக்கு இடம் -70
கோதண்ட பாணிக்கு உகந்த இடம்-தஞ்சை மணி குன்று சிங்க பெருமாள்–திரு தண் கால ஊரான் -பிரசித்தம்–பொருப்பு திரு வேம்கடம்/-திரு அரங்கம் கடல் மலை போன்ற இவை எல்லாம் தமர் உள்ளம்-அடியார்களின் உள்ளம் அவன் உகந்த திவ்ய தேசங்கள் எல்லாம் –
இடம் கை வலம் புரி நின்று ஆர்ப்ப எரி கான்று
அடங்கார் ஒடுங்கு வித்த தாழி –விடம் காலும்
தீ வாய் அரவு அணை மேல் தோன்றல் திசை அளப்பான்
பூவார் அடி நிமிர்த்த போது -71
விஷம்கக்கும் ஆதி சேஷன் மேல் சயனித்து — விடம் காலும் தீ வாய் அரவு ஆணை—கூர் வேல் கொடும் தொழிலன் நந்த கோபன் போல்–அசுரர்களை விரட்ட -அதை விட்டு உலகம் அளக்க -பிராட்டிமாரும் கூசி பிடிக்கும் மெல் அடி கொண்டு -பூவார் அடி நிமிர்த்த போது ..
போது அறிந்து வான் அரங்கன் பூம் சுனை புக்கு ஆங்கு அலர்ந்த
போது அரிந்து கொண்டுஏத்தும் போது –உள்ளம் ! போது
மணி வேம்கடவன் மலர் அடிக்கே செல்ல
அணி வேம்கடவன் பேர் ஆய்ந்து -72
ஆய்ந்து உரைப்பன் ஆயிரம் பேர் ஆதி நாடு வந்தி வாய்
வாய்ந்த மலர் தூவி வைகலும் –ஏய்ந்த
பிறைக் கோட்டுச் செம் கண் கரி விடுத்த பெம்மான்
இறைக்கு ஆள் பட துணிந்த யான் -73
முறைப் படி கற்று மூன்று வேளைகளிலும் சகஸ்ர நாமம் சொல்வேன்–பூ தூவி-வைகலும்-சதா காலமும்..-கரி-யானை-கஜேந்த்ரனை காத்த -அவனுக்கு ஆள் பட்டு ..பாகவதனாக ஆனேன் என்ன பாக்கியம்..-ஆள் பட்ட பிறகு
யானே தவம் செய்தேன் எழ பிறப்பும் எப் பொழுதும்
யானே தவம் உடையேன் எம்பெருமான் !–யானே
இரும் தமிழ் நல் மாலை இணை அடிக்கே சொன்னேன்
பெரும் தமிழன் நல்லேன் பெரிது -74
நானே தவம் செய்தேன்-இரும் தமிழ் நல் மாலை-வாயால் -இணை அடிக்கே -ஏற்ற திரு அடி-ஏற்ற பாசுரம்-சொன்னேன்-பெரும் தமிழன் அல்லேன் -பெரிது -தமிழன் என்ற சொல்வதில் பெருமை–பெரிய கவி இல்லை-அவை அடக்கம்-விநயம்–முதல் அர்த்தம்–வியாக்யானம்- நான் பெரும் தமிழன்–நல்லேன் பெரிது- பிரித்து -அவனை பாடினதால் –கவி சொல்லி காணும் என்ன பாடுகிறார்
பெருகு மத வேழம் மாப் பிடிக்கு முன் நின்று
இரு கண் இள மூங்கில் வாங்கி –அற்கு இருந்த
தேன் கலந்து நீட்டும் திரு வேம்கடம் கண்டீர்
வான் கலந்த வண்ணன் வரை –75
வான் ஆகாசம்-முகில் வண்ணன்-திரு மலை-திரு வேம்கடம்-நீல வண்ணன் நித்ய வாசம் கண்டீர் -மலை போல் யானை ஓன்று சஞ்சரிக்க -மா பிடிக்கு முன் சென்று-மிதுனமாக சஞ்சரிக்க -மூங்கில்-இள மூங்கில்-தேன் தோய்த்து கொடுக்குமாம் -ஊட்டி விடுமாம் -நாயகன் நாயகி-திர்யக் தம் உடைய ரட்ஷிக்க பட வேண்டிய கார்யமே -அபிமானம் இதற்கே- ஸ்ரீனிவாசனுக்கும் ரட்ஷகம் ச்வாபமாக உண்டு கேட்க்கனுமா