Archive for the ‘Tamizl’ Category

ஸ்ரீ திரு விருத்தம் -34-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

October 26, 2011

(ஒற்றைப்படை வந்தால் சேர மாட்டாள்
இரட்டைப்படை வந்தால் பெறுவாள்
கூடல் இளைத்தல் என்றும்
முத்துக்குறி என்றும் சொல்வர்
ஒற்றைப்படையே வரும் என்று அஞ்சி கூடல் இளைக்கவில்லை என்றும்
கடல் அலை அளித்ததாகவும் சொல்வர்
மின்னிடை மடவார் திருவாய் -அழிதற்கே நோற்றோம் யாம் -ப்ரணய ரோஷம் –
இப்பெண்ணும் கூடலை காலால் உதைத்து -ஆழியைச் சீறி
ஆழி -மண்டல ஆகாரம் -கூடல் என்றபடி –
அங்கு கண்ணன் அருகில் வர போ என்றாள்
பரிகாரம் தேடும் பிராப்தியும் சக்தியும் இல்லையே –
உன் மனத்தால் என் நினைந்து இருந்தாய் என்னுமவள் தானே
நம்பிள்ளை நிர்வாகத்தில் இரண்டாவது ஆழி கடல் -என்று கொண்டு
கடல் இடத்து கோபித்தாள் என்பர் )

அவதாரிகை-
அவன் வரும் அளவும் ஆறி இருக்க ஒண்ணாமை யாலே
கூடல் இழைக்க தொடங்கினாள்–
அது தப்பின படியை கண்டு ,
நாயகன் தன்னைக் கண்டால் கோபிக்குமோ பாதி  கூடலோடே கோபிகிறாள்-
(இப்படி தலைமகனுக்கு தோழி கூறுகிறாள் )

சிதைக்கின்ற தாழி என்று ஆழியை சீறி தன் சீர் அடியால்
உதைக்கின்ற நாயகம் தன்னொடு மாலே உனது தண்டார்
ததைக்கின்ற தண் அம் துழாய் அணிவான் அதுவே மனமாய்
பதைக்கின்ற மாதின் திறத்து அறியேன் செயற் பால் அதுவே -34-

பாசுரம் 34-சிதைக்கின்றது ஆழி என்று ஆழியைச் சீறி –
கூடல் இழைத்து  வருந்தும் தலைவி நிலையை தோழி தலைவனுக்கு உரைத்தல் –
மின்னிடை மடவார்கள் -6-2-

பதவுரை

மாலே–எம்பெருமானே
ஆழி–கூடல் வட்டமானது-கடலை என்று நம்பிள்ளை நிர்வாகம் –
சிதைக்கின்றது–காரியத்தைக் கெடுக்கின்றது
என்று–என்ற காரணத்தினால்
ஆழியை–அக்கூடல் வட்டத்தை
சீறி–கோபித்து
தன் சிறுஅடியால்–தனது சிறிய கால்களால்
உதைக்கின்ற–உதைக்கும் படியான மேம்பாடுடனே
உனது–உன்னுடையதான
தண் தார் ததைக்கின்ற–வாடாத மலர்கள் நிறைந்த
தண் அம் துழாய்–குளிர்ந்த அழகிய திருத்துழாயை
அணிவான் அதுவே மனம் ஆய் பதைக்கின்ற–சூடும் பொருட்டு அதிலேயே கருத்தாய் வருந்துகிற
மாதின் திறத்து–இம்மங்கை விஷயத்தில்
செயல் பாலது–செய்யத்தக்கவை
அறியேன்–யான் அறிகின்றிலேன்.

வியாக்யானம்-

சிதைகின்ற தாழி என்று ஆழியை சீறி —
முன்புள்ளார் கூடல் இழைக்க புக்கவாறே-
அது சிதறி வருகிற படியை கண்டு-
அத்தோடு சீறி அழியா நின்றாள் என்பார்கள்

பட்டர்–
இது கூடுகைக்கு ஏகாந்தம் இன்றியே-
பிரிகைக்கும் ஒரு புடை உண்டாய் இருக்கையாலே ,-
சீறி உதையா நின்றாள் -என்று நிர்வாகம்

(மூன்றாவதாக நம்பிள்ளை நிர்வாகம் )
கூடல் இழைக்க புக்கவாறே
கடல் ஆனது திரை ஆகிய கையால் அழிக்கப் புக்க வாறே
அத்தோடு சீறா நின்றாள்-

நாயகனும் வரவு தாழ்ந்தவாறே ,கடலோடு சீரும் அத்தனை இறே–
சாபமானாய
ரக்தாந்த லோசன -என்ன-
கண் சிகப்பாய் வில்லை கொடு வா என்னும் இத்தனை இறே-

(வில்லை மட்டும் முதலில் கொடுத்து
மேலே சின்ன அம்புகளைக் கொடுத்து
சஜாதீயமான படுக்கை தானே கடல் )

சீர் அடி இத்யாதி-
ஆர் செவி சீ பாய்ந்து ,கிடக்கும் அது ஆருக்கு பலிகிறது தான்
பிறரை  இழப்பிக்கும் அளவு அன்றியிலே தம் தாம் பேற்றையும் இழப்பர்களோ ?
பெறுதற்கு அரிதான திரு அடிகளாலே ,கிடீர் அசேதனமான கூடலை உதைகின்றது

(சீர் அடி –
சீற்றம் உள்ள அடி
அழகை யுடைய அடி
மென்மையான அடி )

இங்கனே என்னும் இடம் அறிந்தான் ஆகில்-
தூணிலே ஒதிங்கினோ பாதி  
இம் மண்ணிலே ஒதுங்கிக் கிடக்கும் கிடீர்

கடல் ஆன போது இவை சில கிடைக்கும் என்று அன்றோ
நீர் தோறும் பரந்து நிற்கிறது
அப்போதைக்கு தானே பெற்றான் ஆகிறான்

(மின்னிடை மடவார் -ப்ரணய ரோஷம்
என் சினம் தீர்வன் நானே குலசேகரப்பெருமாள்
அரையர் -காலால் உதைக்கப்பதைக் காட்ட
இரண்டாம் சுற்றில் முகத்தைத் திருப்பி -அது தானே இவனுக்கு தண்டனை
உதைப்பது பெரிய பாக்யம் என்று நினைப்பான் )

துவத் பாத பங்கஜ பரிக்ரக தனய ஜன்மா பூயாசம்-(பட்டர் -குணரத்னகோசம் )என்று
அவன் சர்வேஸ்வரன் ஆவது  இவள் காலுக்கு இலக்கான வாறே

(வேதாந்தம் தத்வ சிந்தனை பண்ண
திருமார்பில் மட்டும் தழும்பு கண்டு நிச்சிதம் )

அஸ்தி வஸ்து இதம் இத்தம் லஷ்மி பதி லாசஷைக லஷணம்–
ஈஸ்வரன் ஆவான் தலையில் அல்லது திரு அடிகள் தான் ஏறாது இறே

தன் சீர் அடியால் உதைக்கின்ற நாயகம்-
தரம் பாராதே உதைக்கின்ற படி
மதித்தும் மதியாது (அறிந்தும் அறியாதே )இருக்கிற  வேண்டப் பாடு உடைய நாயகம்

மாலே-
இவளை இப்படி பிச்சேற்றி
இவள் பிச்சை கண்டு பிச்சேறி இருகிறவன்-

உனது தண்டார் இத்யாதி–
உன் பக்கல் உண்டாய்
குளிர்த்தியை உடையதாய் ,
தாரையும் உடைத்தாய்
கொம்பிலே நின்ற போதை காட்டில் ,
திரு மேனியில் ஸ்பர்சத்தால் தழையா நின்றுள்ள திரு துழாய் மாலையை
தனக்கு ஆபரணமாக விடுகையாலே  ,
மனசு பிரவணமாய் பதையா நின்ற இவள் இடை ஆட்டத்து

பட்ட போது எழு போது அறியாள் வரை மட்டலர் தண் துழாய் என்னும் –திரு வாய் மொழி -2-4-9-
திரு துழாய் என்றே பதையா நின்றாள்

பரதஸ்ய வதே தோஷம் நாஹம் பஸ்யாமி  –என்றும்
வத்யதாம்-என்றும்-
இளைய பெருமாளை போலே
(இளைய பெருமாளையும்
சுக்ரீவன் போல்வார் விபீஷணன் பார்த்து கோபித்தார்களே )

(கடல் தானே ஜனனி
தாயை உதைக்கலாமோ என்னில்
இன்னார் என்று பார்க்காமல்
பெருமாளுக்கு விரோதி என்று எண்ணி கோபித்தார்கள் உண்டே )

அறியேன் செயல் பால் அதுவே-
க்ரம பிராப்தியும்
இவள் உடைய த்வரையும்
சாதனம் இல்லை-
அப்ரயோகம்  –
பலம் அவன் தன்னாலே இருந்த படி-

(க்ரம பிராப்தி -ஸ்வரூபம் பார்த்து வரும்
விஷய வைபவம் -வை லக்ஷண்யம் -பார்த்து த்வரை வரும்
இரண்டுமே சாதனம் ஆகாதே
பேறு தப்பாது என்று இருக்கையும்
பேற்றுக்குத் த்வரிக்கையும் வேணுமே
அவன் நினைவே இரக்கமே உபாயம் )

தாத்பர்யம்

கீழே மோஹித்துக் கிடந்த நாயகி
அருளார் திருச்சக்கரம் என்று தாயார் சொல்ல
அதனால் மோஹம் தெளிந்து எழுந்து இருந்து
விரஹ தாபம் போக்க கடல் கரைக்குச் சென்று
அங்கு சகுனம் பார்க்கத் தொடங்கிய இவள்
அவன் வரவில்லை -அதுக்கும் மேலே அவன் வரவைப் பார்க்க முடியாமல் கடலும் கூட வஞ்சிக்க வேண்டுமோ
ஸ்வப்னம் கூட வஞ்சித்ததே -என்று சீதாபிராட்டி ஆற்றாமை சொல்லிக் கொண்டது போல்
சர்வஸ்வரனைக் குறித்து திருத்தாயார் பாசுரம்
ஓ ஸ்வாமி நீர் எப்போது வருவாய் என்று இவள் கூடல் அழைக்க ப்ரவர்த்திக்க
இந்த சமுத்திரம் நாயகன் வரவை அறிய ஒட்டுகிறது இல்லை
ஆகையால் இவள் செருக்கு கொண்டு அத்தை உதைத்து
பின்னும்
நீ அணிந்த திருத்துழாய்க்கு ஆசைப்பட்டுத் துடிக்கிறாள்
நீர் எப்பொழுது ரக்ஷிப்பாய் என்று தெரியவில்லை என்கிறாள்

————————————————————————-

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

திருவாய்மொழி-2-3-ஊனில் வாழ் உயிரே – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 7, 2011

இறை இன்பம் நுகர்ந்து உசாத் துணையான வான் அடியார்கள் உடன் எப்பொழுது கூடப் போகிறோம் என்கிற

ஆர்த்தி உடன் அருளும் திரு வாய் மொழி
ஊனில் வாழ் உயிரே ! நல்லை போ உன்னைப் பெற்று
வானுளார் பெருமான் மது சூதன் என் அம்மான்
தானும் யானும் எல்லாம் தன்னுள்ளே கலந்து ஒழிந்தோம்
தேனும் பாலும் நெய்யும் கன்னலும் அமுதும் ஒத்தே -2-3-1
ஒத்தார் மிக்காரை இலையாய மா மாயா !
ஒத்தே எப் பொருள்க்குமுயிராய் என்னைப் பெற்ற
அத் தாயாய் தந்தையாய் அறியாதன அறிவித்த
அத்தா ! நீ செய்தன அடியேன் அறியேனே –2-3-2
அறியா காலத்துள்ளே அடிமைக் கண் அன்பு செய்வித்து
அறியா மா மாயத்து அடியேனை வைத்தாயால்
அறியாமைக் குறளாய் நிலம் மா வலி ! மூவடி என்று
அறியாமை வஞ்சித்தாய் என தாவி யுள் கலந்தே –2-3-3
அறியா காலம்-பிள்ளை பருவம்
சத் சங்கம் -ஹரி சங்கீர்த்தனம்- கிருபை கொண்டு குழந்தை இடம் பலகை -பாக்கியம்
முப்பது வருஷம் வீண்-புரந்தர தாசர் –வாசு தேவனுக்கு தாசன் ஆகாமல்-பாண்டு ரெங்கன் அருள் பின்பே கிட்டியது
சக்குபாய்-பண்டரி நாதன் -ஆண்டாள் போல் சிறு குழந்தை- சிறு வீடு கட்டி விளையாட –விட்டல் பஜனை–ஆனந்த நடனம் ஆடி
சிறு வீடு களைத்த தாத்தா -சாக்கு பாய் பின் சென்று கையில் உள்ள தம்புரா தாளம் கேட்டாள்-பஜனை உபதேசம் கேட்டு -அழுது உடன் போக
கட்டி அனைத்து உச்சி முகந்து -காதில் விட்டல -உபதேசம்-பாண்டு ரெங்கன் தர்சனம்-ஆள் கொள்ள பட்டாள் —
ஆழ்வாரும் முலைப் பால் சாப்பிடாமல்-அறியா காலத்தில் அடிமை கண் அன்பு செய்து
உனது சேஷ பூதன் என்று அறியா காலத்தில்- உண்மையான ஆத்மா ஞானம் வேண்டும் -சோஹம் நிலை ஆத்மா தேக விவாகம் அறிந்து மேலும்  தாசோஹம்-தாசன் என்று உணரும் நிலை

அறிவு இல்லாத தசையிலே -அறியா மா மாயம்-ஞானம் கொடுத்த பின்பு-வாழ்வில் வைத்தது என்ன காரணம்
திரு மாலை ஆண்டான்-வருத்ததுடன்-அன்பு செய்வித்தும் –பின்பு வைப்பாயா -ராமா நுஜர்-பிரித்து -அறியா மா மாயத்து அறியா காலத்துள்ளே -சேர்த்து அறிய முடியாமல் இருக்கும் மா மாயம்-அடிமை கண் -அன்பு செய்வித்து -கருணை உகப்புடன் அருளுகிறார் என்று –முதல் தாபத்துடன் வருத்தம் -இவற் நன்று -சம்பந்த ஞானம் பிறப்பித்து -தேக சம்பந்தம் இழவு –முன் பாட்டு பின் பாட்டு பிரிதி உடன் அருள -நடுவில் இது மட்டும் அப்ரீதி பாட்டு ஆக இருக்க முடியாது–உபகாரமாக அருளி செய்தார் இத்தையும்
எனது ஆவியுள் கலந்த பெரு நல லுதவிக் கைம்மாறு

எனதாவி தந்து ஒழிந்தேன் இனி மீள்வது எனபது உண்டே ?
எனதாவி யாவியும் நீ பொழில் ஏழும் உண்ட வெந்தாய் !
எனதாவி யார் ? யான் ஆர் ? தந்த நீ கொண்டாக்கினையே –2-3-4
ஆத்மா வுடன் கலந்தாய்–நாடி வந்து -என்னை-கொண்ட பின் -ஆவி கொடுக்கலாமா என்றால்-
அவன் தன்னையே கொடுத்த பின் என்னை கொடுக்கவா -தன்னை கொடுத்த பின் என்னது ஒன்றும் இல்லையே
யான் யார் எனது ஆவி யார் -தந்த நீ கொண்டு ஆக்கினையே -நீ தந்தாய் எடுத்து கொண்டாய்
மகா பலி பத்னி கூட இதை சொன்னாள்-எல்லாம் உன் உடமை –இந்த்யாவளி -பெரிய ஞானத்துடன்-
ஆகையால் உனக்கு சேஷம் –கர்த்ருத்வம் ஒன்றும் இல்லை-அவர் சொத்து-அகந்தை மமதை இன்றி
இனி யார் ஞானங்களால் எடுக்கல் ; எழாத எந்தாய்!
கனிவார் வீட்டு இன்பமே ! என் கடல் படா வமுதே !
தனியேன் வாழ் முதலே !பொழில் எழும் ஏனம் ஒன்றாய்
நுனியார் கோட்டில் வைத்தாய் ! உன பாதம் சேர்ந்தேனே –2-3-5
ஞானவான் கூட எடுக்க அறிய முடியாத வைபவம் –
பக்தன் -அழுதால் பெறலாமே-கனிந்த உள்ளமே வேண்டுமே -வீட்டு இன்பம்
உண்மையான ஆரா அமுதம்-கடல் படாத அமுதம்-உப்பு சாறு இல்லை
என் அமுதம்-பிரத்யேக அமுதம்
வாழ் முதல்- ஹிருதயத்தில் வைத்து இருக்கிறேன்
தனியேன்- நித்ய சம்சாரியோ நித்ய கோஷ்டியும் இல்லை
ஆஸ்ரிதர் -ஞானம் அகோசரன்– பரம சுலபன்-பக்தனுக்கு -கோவிந்தா கூப்பிட்டதும் வருகிறான்
சேர்ந்தார் தீ வினைகட்கு அரு நஞ்சைத் திண் மதியை
தீர்ந்தார் தம் மனத்துப் பிரியாத அரு உயிரை
சோர்ந்தே போகல கொடாச் சுடரை அரக்கியை மூக்கு
ஈர்ந்தாயை அடியேன் அடைந்தேன் முதல் முன்னமே –2-3-6
முதலிலே அடைந்தேன்
தீ வினைகளுக்கு நஞ்சு நீ தானே
பிரியாத உயிர் போன்றவன்
தன்னை விட்டு போக விடாமல் காத்து
சூர்பணகை மூக்கு அரிந்து போக விட்டான் -பிராட்டி கடாஷம் இல்லை என்பதால்-பொறாமை அசூயை கொண்டதால்
பிராட்டி மூலம் உன்னை அடைந்தேன்
முன் நல யாழ் பயில் நூல் நரம்பின் முதிர் சுவையே !
பன்னலார் பயிலும் பரனே ! பவித்திரனே !
கன்னலே ! அமுதே ! கார்முகிலே ! என் கண்ணா !
நின் அலால் இலேன் காண் என்னை நீ குறிக் கொள்ளே –2-3-7
சுரம் தான் நாத பிரமம்-இசைந்து பாடும் பொழுது பிரம ஞானம் வெறுமே –யாழ் வீணை நரம்பு தான் அவன்
பல நல்லார் தியானம் பண்ணும் பரன்/பவித்ரன்
அமுதன் -கார் முகில்- தாபம் தீர்க்கும்-என் கண்ணா -சொல்லி தான் ஆசை தீருகிறார் ஆழ்வார்
இதை சொன்ன பின்பு வேறு எதுவும் சொல்ல வேண்டாமே
வேறு எதுவும் வேண்டாம்-
உன்னை தவிர வண்டாம் என்று -என்னை நீ குறிக் கொள் –
குறிக் கொள் ஞானங்களால் எனை ஊழி செய் தவமும்
கிறிக் கொண்டிப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்
உறிக் கொண்ட வெண்ணெய் பால் ஒளித்து உண்ணும் அம்மான் பின்
நெறிக் கொண்ட நெஞ்சனாய்ப் பிறவி துயர் கடிந்தே –2-3-8
பரம் பொருளே லஷ்யம் -ஞானவான் -சாதனம்-கிறிகள்–
நாராயணா இதம் சமர்ப்பயாமி- அஹம் புத்தி இன்றி-நெறி கொண்ட -பக்தி வழி-
மற்றவை பக்திக்கு சாதனம்-
பல ஜன்மம் பின்பு இந்த நிலை அடைகிறான்-
பரமாம் கதிம் அவனே தருகிறான் இந்த ஜன்மாவில்- பிர பன்னனுக்கு
சத்திர பந்து அஜாமலன் சரித்ரம்
இப் பிறப்பே சில நாளில் எய்தினன் யான்-
வெண்ணெய் எடுப்பது போல் என்னை எடுத்து கொண்டான்
யானை தாமரை பறிப்பது போல் நம்மை சம்சாரத்தில் இருந்து பறித்து போகிறான்-புராணம்
பிறவி துயர் கடிந்தேன்
கடிவார் தன் அம் துழாய்க் கண்ணன் விண்ணவர் பெருமான்
படிவான இறந்த பரமன் பவித்ரன் சீர்
செடியார் நோய்கள் கெடப் படிந்து குடைந்து ஆடி
அடியேன் வாய் மடுத்துப் பருகிக் களித்தேனே –2-3-9
பரிமளம் வீசும் திரு துழாய்-சூடி
அவன் சீர்-கீர்த்தி-
பஜனை கேட்க போனாலே அனைத்து வியாதி போகும் -நோய் சாத்தி கொண்டு-மாலை சாத்தி கொள்வது போல் –
வாயால் பாடி உடம்பால் ஆடி-நோய்கள் கெட -ஓடி போகும்
களிப்பும் கவர்வும் அற்றுப் பிறப்பு பிணி மூப்பு இறப்பு அற்று
ஒளிக் கொண்ட சோதி யமாய் உடன் கூடுவது என்று கொலோ ?
துளிக் கின்ற வான் இந் நிலம் சுடர் ஆழி சங்கு ஏந்தி
அளிக்கின்ற மாயப் பிரான் அடியார்கள் குழாம் களையே –2-3-10
ராக துவேஷம் இன்றி -விருப்பு வெறுப்பு இன்று -உண்மையான பக்தி-அன்பு பெற்று -மனோ விகாரம்
சரீர விகாரமும் அற்று
பிராக்ருத சரீரம் பெற்று -சோதி உடம்பு பெற்று-சங்கு சக்கர தாரி மாய பிரான்-உபய விபூதியை காக்கும் -அடியார் குழாம் உடன் கூடுவது என் கொலோ
நித்ய சூரிகள் உடன் சேர -அந்தமில் பேர் இன்பத்து அடியார் உட கூட ஆசை –
குழாம் கொள் பேர் அரக்கன் குலம் வீய முனிந்தவனை
குழாம் கொள் தென் குருகூர் சடகோபன் தெரிந்து உரைத்த
குழாம் கொள் ஆயிரத்துள் இவை பத்தும் உடன் பாடி
குழாம் களாய் அடியீர் உடன் கூடி நின்று ஆடுமினே –2-3-11
அரக்கர் கூட்டம்
திரளான ஸ்ரீ வைஷ்ணவர் கூட்டம் ஆழ்வார் குழாம்
பிர பந்த கூட்டம்
அடியார் கூட்டமாக உடன் கூடி
நின்று ஆடி-கீர்த்தனம் பாடி-
ஆடி ஆடி பாடி-
பாகவத விச்லேஷம் பகவத் விச்லேஷம் விட பெரியது
கோதாவரி தீர்த்தம் பெருமாள்- உனொடும் பரதன் உடனும் சத்ருகன இடன் கூடுவது என்றோ -லஷ்மணன் அருகில் இருந்தும் அறிய வில்லை -குகன் பார்த்ததும் லஷ்மணன் சீதை இருந்தது அறிந்தான்  —
ஊனம் அறவே  வந்து உள் கலந்த மால் இனிமை
யானது அனுபவித்தற்கு ஆம் துணையா –வானில்
அடியார் குழாம் கூட ஆசை உற்ற மாறன்
அடியார் உடன் நெஞ்சே! ஆடு –திரு வாய் மொழி நூற்று அந்தாதி –13
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-2-2-திண்ணன் வீடு – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 7, 2011
திண்ணன் வீடு முதல் முழுவதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே –2-2-1
பரத்வம் அனுபவிகிறார் அர்ச்சையில்

எங்கும் பூரணன்
அது அதுதான்
ஈச்வரோபி சந்-அவனே சொல்லி கொள்கிறான் பிறந்தும் பிறக்காதவன் –
அவதரித்து பெருமை கூட்டி கொள்கிறான்
திண நல் வீடு-மோஷமும் அவனும்  -நம் கண்ணன் தான்
அனைத்து சிறுவரையும் கூட்டி போனான்-ஸ்ரீ வைகுண்டம்-பாகவதம்-ஆ நம் கண்ணன் டா !
பேசவும் தொடவும் விளையாட -அங்கு முடியாமல் திரும்ப அங்கு கண்ணா நீ தான் கண் எங்களுக்கு
ஏ ! பாவம் பரமே எழ உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் ?
மா பாவம் விட அரற்க்குப் பிச்சை பெய்
கோபால கோளரி ஏரு அன்றியே –2-2-2
வேறு தெய்வம் இல்லை-

தலை அறுத்த அறுப்பு உண்ட தெய்வம் உண்டே -சரி பண்ணிய
பிரம்மா ருத்ரர் -ரஷித்து நின்றான்
அரற்கு பிச்சை பெய் கோபால கோளரி
கபாலம் நிரம்ப பத்ரி காச்ரமம் பிரம குண்டம் –
பிரம கத்தி பாபம் போக்கி —
ஏறனைப் பூவனை பூ மகள் தன்னை
வேறு இன்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தம்ன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனில் மிக்குமோர் தேவும் உளதே ?–2-2-3
ரிஷபம் -சிவன்  உடம்பில் /நான் முகனை நாபியில் /தாயாரை திரு மார்பில் கொண்டு

வேற தேவு உளதோ
தேவும் எப் பொருளும் படைக்க
பூவில் நான் முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே ?–2-2-4
நான்முகனை நாராயணன் படைத்தான் –

பிர பஞ்ச ஸ்ருஷ்ட்டி பிரமனுக்கு தத்வ ஸ்ருஷ்ட்டி இவனே பண்ணி –
இவனுக்கே பூவும் பூசனையும் அவனுக்கே தகும்
எம்பார்-கோவிந்த -யாதவ பிரகாசர் இடம் ராமானுஜர் உடன் படிக்க -காசி யாத்ரையில் மீட்டு பின்பு
திரு மலை நம்பி திருத்தி பணி கொண்ட ஐதீகம் காசியில் சிவ லிங்கம் கிடைப்பதாக  ஏறபாடி பண்ணி -உள்ளம் கை கொணர்ந்த நாயனார் பெயர் கொடுத்தார் யாதவ பிரகாசர்-காளகஸ்தி -மடத்தில் இருக்க -கோவிந்தனை திருத்தி பண்ணி செய்ய வேண்டும் -ராமானுசர் கேட்டதும்–பெரிய திரு மலை நம்பி-சொர்ண முகி நதி கரையில்  காள கஸ்தி -இந்த பாசுரம் அர்த்தம் சொல்லி–பூவும் பூசனையும் தகாது —
குடலையும் கையுமாக  இருந்தவர்-கீழே போட்டு திரு அடிகளில் விழுந்தார் —
தகும் சீர் தன் தனி முதலின் உள்ளே
மிகும் தேவும் எப் பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் யாவரே ?–2-2-5
தக்க பெருமை கொண்டவர்

மிக்கார் இல்லை
ச்வாபிகா அநவதிக ஈச்வரத்வம் கொண்டவர்
தனி முதல்-
யவரும் யாவையும் எல்லா பொருளும்
கவர்வின்றி தன்னுள் ஒடுங்க நின்ற
பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழி அம் பள்ளி யாரே –2-2-6
சித் அசித் -அனைத்தும்

கவரவு=சோர்வு
இன்றி -பிரளயம்- ஜீவ கோடிகளுக்கு விஸ்ராந்தி தன இடம் அடக்கி கொள்கிறான்-
பரவிய -அபரிசின்னமாக தேச கால வஸ்து எல்லை இன்றி இருக்கிறான்
பள்ளி ஆல் இலை எழ உலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுளார் அறிவார் ?அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7
உலகம் அனைத்தையும் உண்டு-

ஆல் இலையில் பள்ளி கொண்டு-
தன கள்ள மாயம் -மன கருத்தே -அவனே அறிவான்
மார்க்கண்டேயரும் தன்னை உள்ளே பார்த்தார்
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் பிரானை அன்றி ஆரே ?
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8
பிரகிருதி பிரள நீரில் கரைந்து பிரளய அக்னியில் உலர்ந்து பிரளய காற்றில் அடங்கி பிரளய ஆகாசத்தில் ஒடுங்கி பிரளய பிரகிருதி குள் ஒடுங்கி அவன் மாயையில் அடங்கும் /சத் -இருக்கும் நிலை/ஆல் இல்லை-ஞானம் /சித் /கண்ணன் ஆனந்தம் –காரணம் /மார்கண்டேயர் யோக நிலையில் சாஷாத்கரித்தார் /ஆழ்ந்த நிலை சத் வித்தை உபநிஷத் விளக்கம்

ஸ்வேத குதுக்கு உபதேசம் –விதையில் அனைத்தும் இருப்பது போல்- மூலம் இவன்
இவன் சங்கல்பித்து -கருத்தில்-பகுச்யாம் -நானே ஆவேன் -ஒருவனாக இருந்தால் விளையாட முடியாதே நாம ரூபம் கொடுத்து
மாய பிரான் -அத்தை தின்னு அங்கு கிடக்கும் நம்மை திருத்தி
சதாச்சர்யர் சேர்த்து முமுஷு ஆக்கி-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தி வுள்ளே
வாய்த்த திசை முகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9
உள்ளது உள்ள படி சிருஷ்டித்து -கல்பம் தோறும்-
பொலிவு குறையாமல்-
அவாந்தர-நித்ய நைமித்திய மகா பிரளயம் —
கள்வா  ! எம்மையும்எழ  உலகும்  நின்
னுள்ளேதோற்றிய  இறைவ  ! என்று
வெள்ளேறேன்  நான்முகன்  இந்திரன்  வானவர்
புள்ளூர்த்தி   கழல்  பணிந்து  எததுவரே –2-2-10
தேவர்கள் -அபிப்ராய பேதம் –
மகா பூதம் சமன் வயச படுத்தி –
கதை அமிர்தம் பருகி பேர் இன்பம் சாதனம் -உலகு படைத்து
லீலா நித்ய பக்தி மூன்று விபூதி
விஸ்ராந்தி தான் பிரளயம்
ஏத்த  எழ  உலகும்  கொண்ட  கோலக்
கூத்தனை  குருகூர்  சடகோபன்  சொல்
வாய்த்த  வாயிரத்துள்  இவை  பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு  இல்லை  ஓர்  ஊனமே –2-2-11
கொண்டாடி துதிக்கும் படி
33
திண்ணிதா மாறன் திரு மால் பரத்துவத்தை
நண்ணிய அவதாரத்தே நன்கு உரைத்த –வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவர் அவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேல் இடா தூன்-திரு வாய் மொழி நூற்று அந்தாதி -12
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி-2-1-வாயும் திரை உகளும் – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 7, 2011
எம்பெருமான் மறைய நிற்க
ஆழ்வார் ஒரு பிராட்டி நிலையை அடைந்து
பறவைகளும் வாடை போன்றவற்றையும் தம்மோடு
இணைந்து துன்புறுவதாக எண்ணி வருந்தி அருளும் திரு வாய் மொழி
திரு குரும் குடி நம்பியை இழந்த பெரும் இழப்பால்
வாயும் திரை உகளும் கானல் மட நாராய் !
ஆயும் அமர் உலகும் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
நோயும் பயலைமையும் மீதூர எம்மே போல்
நீயும் திரு மாலால் நெஞ்சம் கொள் பட்டாயே ?-2-1-1
29
கோள் பட்ட சிந்தையாய்க் கூர் வாய வன்றிலே !
சேட் பட்ட யாமங்கள் சேராது இரன்குதியால்
ஆட் பட்ட எம்மே போல் நீயும் அரவணையான்
தாள் பட்ட தன் துழாய் தாமம் காமுற்றாயே ?-2-1-2
கண்ணனால் கொள்ள பட்ட சிந்தை -அன்றிலும்-
யாமம் நீண்டு போக -விரகத்தால்
சேராமல் வருந்தி
அவனுக்கே ஆள பட்டு -சூடி களைந்த துழாயும் கிடைக்காமல்
தீன சுரம் -தாச்யத்தில் ஆழ்ந்து அச்சுத பாத கிம்வா தாமம் -ஸ்லோஹம் போல்

காமுற்ற கையறவோடு எல்லே ! இராப்பகல்
நீ முற்ற கண் துயிலே நெஞ்சு உருகி  யேங்குதியால்
தீ முற்றத் தென் இலங்கை ஊட்டினான் தாள் நயந்த
யாம் உற்றது உற்றாயோ வாழி கனை கடலே  !–2-1-3
கனைக்கின்ற கடலே -இரவும் பகலும்
ஆசை பட்டது கிடைக்க இல்லை என்று
அலை சப்தம் ஒழித்து கொண்டே-அலை பாயுதே
ஏங்கி அழுகிறாயா
அக்னி அஸ்தரம் கொண்டும் திரு அடி மூலம் ஒரு பெண்ணை கொள்ள –
தன்னை ஆஸ்ரித்த ஒருவனை கொள்ளும் பாரிப்பால் –
கடலே கடலே –நாச்சியார் திரு மொழி உன்னை கடைந்து உடல் உள் புகுந்து -போல்

துவாரகை பட்ட மகிஷி-பாகவதத்தில் தூக்கம் வராத தனால் கடலே -உன் சாயலை கண்ணன் கொண்டுபோய் விட்டானா
என் லாஞ்சனம் நெற்றி கும்குமம் கண் மை ஒத்தி கொண்டு போனது போல்
கடலும் மலையும் விசும்பும் துழாய் எம் போல்
சுடர் கொள் இராப் பகல் துஞ்சாயால் தன் வாடை !
அடல் கொள் படை ஆழி அம்மானைக் காண்பான் நீ
உடலம் நோய் உற்றாயோ? ஊழி தோறு ஊழியே –2-1-4
காற்றை பார்த்து அடுத்து
ஆகாசம் கடல் மலை அலைந்து
இரா பகல் -சூர்யன் சந்தரன் -சுடர் இருப்பதால் தூங்க வில்லையா -அவன் பார்க்காமல் விரக நோய் –
முடிவு தெரியாமல்-
காற்று வியாபக தத்வமாய் –அபிமத விரக விசனம் -மடல் இடுவாரை போல் உடம்பில் புழுதி ஏற் இட்டு கொண்டு -நீயும் நான் பட்டது பட்டாயா
அலைகிறது எங்கும்-குளிர்ந்து சன்னி கொண்டது போல் –கிருஷ்ண விரகம் மிகுந்து காற்றை கட்டி அழுகிறார் -கொண்ட காதலுக்கு பத்திமை நூல் வரம்பு இல்லையே

ஊழி தோறு ஊழி உலகுக்கு நீர் கொண்டு
தோழியரும் யாமும் போல் நீராய் நெகிழ்கின்ற
வாழிய வானமே ! நீயும் மது சூதன்
பாழிமையில் பட்டு அவன் கண் பாசத்தால் நைவாயே -2-1-5
திரண்டு வரும் மேகத்தை -வானம் -உப லஷனம்-
மழை பொழிவது இயற்க்கை
நினைத்து நினைத்து  கண்ணீர் விடுவது போல்-அடை மழை –ஐப்பசி மாசம்-மேகம் அடைத்து கொட்டுமே
விரகத்தால்-குழந்தை நினைத்து நினைத்து அழுவது போல் –அழுதும் ஆறுதல் அடைந்தும் மீண்டும் அழுதும்
நீராய் நெகிழ -கண்ணனின் மிடுக்கை இழந்து –அவன் கண் பாசத்தால்
பாகவதத்திலும்-இதே -வரி
விண்ணீல மேலாப்பு விரித்தால் போல் மேகங்காள்-ஆண்டாள்-
நைவாய வெம்மே போல்  நாள் மதியே ! நீ இந் நாள்
மைவான் இருள் அகற்றாய் மாழாந்து யேம்புதியால்
ஐவாய் அரவணை மேல் ஆழிப் பெருமானார்
மெய் வாசகம் கேட்டு உன் மெய் நீர்மை தோற்றாயே ?–2-1-6
அடுத்து சந்தரன் தேவதை பார்த்து-போர்த்தி ஆகாமல் தே பிறை-நாளை கொண்டு சொல்ல சந்தரன்
இருள் மூடிய வானை போக்கும் ஒளி இன்றி நிற்கிறாயே
சேஷ சயனம் -கண்ணன் வார்த்தை மெய் நினைப்பது உன் தப்பு தானே
ஏலா பொய்கள் உரைப்பான்-
அவளுக்கும் மெய்யனில்லை
தோற்றோம் மட நெஞ்சம் எம்பெருமான் நாரணர்க்கு எம்
ஆற்றாமை சொல்லி அழுவோமை நீ நடுவே
வேற்றோர் வகையில் கொடிதாய் எனை ஊழி
மாற்றாண்மை நிற்றியோ? வாழி கனை இருளே ! 2-1-7
அடுத்து இரவை பார்த்து –
பெருமாள் விரகத்தால் தசரதன் புலம்பியது போல்
நெஞ்சை அவன் பறித்து போக
அழுவதை அவன் இடம் சொல்லலாமே
மாற்றி விட பார்கிறாயே-அவனுடன் சேர்த்து விட வேண்டுமே

இருளின் திணி  வண்ணம்  மா நீர் கழியே போய்
மருள் உற்று இராப் பகல் துஞ்சிலும் நீ துஞ்சாயால்
உருளும் சகடம் உதைத்த பெருமானார்
அருளின் பெரு நசையால் ஆழ்ந்து நொந்தாயே ?-2-1-8
இருள் போல் ஒரு நீர் ஓடையும் -நீலமாக –ஓடி கொண்டே இருக்க -துஞ்சாமல்-
ஓடுவதால் ஓடை-தேங்கி இருந்தால் குளம்
இருள் செறிந்தால் போல்-மடல் எடுப்பது போல்-தாபம் பித்து –
ஓடுவதை பார்த்தல் அது போல்
சகடாசுரனை முடித்த கண்ணன் கிடைக்க நப்பாசை கொண்டு
ஆழம் கால் பட்டு– நோவு தான் மிச்சம் -அவன் கிடைக்க வில்லை–
வறண்டு -விரகத்தால்-தாமரை போக்க வில்லை-அழகு படுத்தி கொள்ளாத பெண் போல் -இஷ்ட பர்த்து இல்லை என்பதால்-பாகவதம்
கடாஷம் கூட கிடக்க வில்லையே -பார்த்தால் நெஞ்சை பறித்து போனானே குற்றம் சொல்வார்–
நொந்தாராக் காதல் நோய் மெல்லாவி யுள் உலர்த்த
நந்தா விளக்கமே ! நீயும் அளியத்தாய்
செம் தாமரைக் தடம் கண் செம் கனி வாய் எம்பெருமான்
அம் தாமத் தன் துழாய் ஆசையால் வேவாயே ?-2-1-9
நந்தா விளக்கு–ஆரா காதல்-கிருஷ்ண விரகம் தணியாமல்-
பிரேமைக்கு முடிவு இல்லை-ஆரி போகாது
எண்ணெய் முடிந்து திரி மட்டும் இருப்பது போல் ஆவி உலர்ந்து  –
அதனால் வேவி இருக்கிறாயே
வேவாரா வேட்கை நோய் மெல்லாவி உள் உலர்த்த
ஓவாது இராப் பகல் உன் பாலே வீழ்த்து ஒளிந்தாய்
மாவாய் பிளந்து மருதிடைபொய் மண் அளந்த

மூவா முதல்வா ! இனி எம்மை சோ ரேலே –2-1-10
இனி அவனை பார்த்து-
நோய் நீங்க வேண்டாம்-ஆரா நோய் விரகம்
உள்ளம் உலர்ந்து -இரவும் பகலும் விழுந்து இருக்கும்
மருதிடை சென்று சாய்ப்பது போல்
பூமிபிராட்டி திரு அடி வைத்து விரக தாபம் நீக்கினையே உலகு அளந்த யுவா குமாரா
இனி வாட்டாமல் வந்து கலந்து விடு-சோர விடாதே
சோராத எப் பொருட்கும் ஆதியாம் சோதிக்கே
ஆராத காதல் குருகூர் சடகோபன்
ஓர் ஆயிரம் சொன்ன அவற்றுள் இவை பத்தும்
சோரார் விடார் கண்டீர் வைகுந்தம் திண் எனவே  2-1-11
ஆழ்வார் அனுபவம் -ஆராத காதல் –
ஆரா வேட்கை நோய்
பக்திக்கு முடிவு இல்லை ஷணம் ஷணம் வளரணுமே
பூர்த்தி இல்லை அவன் கிடைத்தாலும்
ராதா  கண்ணன் மடியில் உட்கார்ந்தாலும் அழுகிறாள்-வர போகிற விரகம் நினைத்து
கிருஷ்ண த்ருஷ்ண காதலுக்கு கேட்க வேண்டுமா
கண்ணன் திரு அடி-ஸ்ரீ வைகுந்தம் அடைந்து நழுவாமல் இருப்பார்
வாயும் திருமால் மறைய நிற்க ஆற்றாமை
போய் விஞ்சி மிக்க புலம்புதலாய் ஆய
அறியாத அவற்றோடு அணைந்து அழுத மாறன்
செறிவாரை நோக்கும் திணிந்து –திரு வாய்மொழி நூற்று அந்தாதி -11
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

திருவாய்மொழி- 1-9-இவையும் அவையும் உவையும் – ஸ்ரீ கிருஷ்ண பிரேமை ஸ்வாமிகள் ..

October 6, 2011
எம்பெருமான் தன்னோடு கலந்து களித்த கலவியை
ஆழ்வார் அருளி செய்கிறார்
இவையும் அவையும் உவையும் இவரும் அவரும் உவையும்
யவையும் யவரும் தன்னுள்ளே ஆகியும் ஆக்கியும் காக்கும்
அவையுள் தனி முதல் எம்மான் கண்ண பிரான் என் அமுதம்
சுவையன் திரு வின் மணாளன் என் உடை சூழல் உளானே  1-9-1
கிட்டி எட்டி இடையில் உள்ளவை உள்ளவர் எவையும் –எல்லாரும் -தானே ஆகி-ஆக்கி–நிலை நிறுத்தி ஆதாரம் போல் சித்ரதுக்கு சுவர் போல் நிர்வகித்து தாங்கி–தாரக போஷகன் இவனே–அண்டத்துக்கும் –காற்று வீச கடல் அலை வீச –சர்வ ஆதாரம்

தனி முதல்-விளையாட்டாக செய்கிறான் அனைத்தையும் –தான் அகப்படாமல்-நம் கண்ணன் தான் என் அமுதம்
சுவையன் -லீலை திவ்ய மங்கள விக்ரகம் -திரு நாமம் சொல்வதே அமுதம்-மதுரம்-16108 பட்ட மகிஷிகளும் வேண்டுமே இவனை அனுபவிக்க அந்த கண்ணன் -பிராட்டிமார்கள் விடாய் தீர்க்க பல் உரு கொண்டது போல் தானே பல ரூபம் கொண்டு
என்னை சூழ்ந்து  இருக்கிறான் -விஸ்வ ரூபம் காட்டியது போல்- எங்கும் கண்ணன் -திவ்ய சஷு தந்து விடாய் தீர்த்து தன்னை அனுபவிக்க வைக்கிறான்
சூழல் பல பல வல்லான் தொல்லை அம் காலத்து உலகை
கேழல் ஒன்றாகி இடந்த கேசவன் என்னுடைய அம்மான்
வேழா மருப்பை ஒசித்தான் விண்ணவர்க்கு எண்ணல் அரியான்
ஆழ நெடும் கடல் சேர்ந்தான் அவன் என் அருகல்  இலானே -1-9-2
பல சூழ்ச்சிகள்–கபடம் பண்ணி ஷேமம் செய்கிறான்–தன் இடம் வராதவரையும் -காம்யார்த்த புத்தி மாற்றி தன்னை
கேட்க்கும் படி –குவலையா பீடம் முடித்தான் பத்து வயசில்-விண்ணவர்க்கு எண்ணல் அரியவன்–
பிரளய காலத்தில் ஆல் இலை பாலகனாய் தனியாக சயனித்து -அருகல்-அகலாமல் இருக்கிறான்
அருகல்  இலாய பெரும் சீர் அமரர்கள் ஆதி முதல்வன்
கருகிய நீல நல மேனி வண்ணன் செம் தாமரைக் கண்ணன்
பொரு சிறைப் புள் உவந்து ஏறும் பூ மகளார் தனிக் கேள்வன்
ஒரு கதியின் சுவை தந்திட்டு ஒழிவிலன் என்னோடு உடனே 1-9-3
பிராக்ருதம் பரிமாணம் உடையது –
நித்ய அமுதம் ஸ்ரீ வைகுண்டம் ஒன்றே
விகாரம் இன்றி திவ்ய மங்கள விக்ரகம் கொண்ட நித்யர்
கரிய நீல மேனி வண்ணன்
செம்தாமரை கண்ணன்-
பாலா ராமன் வெள்ளை-
வெண்ணெய் திருட ஏற்ற உருவம் கண்ணனுக்கு
கருட வாகனம் உகந்து ஏறும்
ஏகாந்த வல்லபன்-பெரிய பிராட்டியாருக்கு
எல்லாம் எனக்கு கொடுத்தான்-
வீற்று இருக்கும் /திருவடி திரு தோள்களில் /பிராட்டி மார்கள் விஷயத்தில் திரு அடி திரு மார்பு
ஒவ் ஒரு அவயவம் ஏக தேசம்-ஆழ்வாருக்கு எல்லா வகையிலும் பரிமாறி-விடாமல் பூர்ணம்
பூரணமாக பூரணத்தை அனுபவிகிறார் இவர் ஒருவரே
உடன் அமர் காதல் மகளிர் திரு மகள் மண் மகள் ஆயர்
மடமகள் என்று இவர் மூவர் ஆளும் உலகமும் மூன்றே
உடன் அவை ஒக்க விழுங்கி ஆல் இலை சேர்ந்தவன் எம்மான்
கடல் மலி மாயப் பெருமான் கண்ணன் என் ஒக்கலை யானே 1-9-4
மூன்று தேவிமார்-கும்பகன்-நீளா தேவி–சத்ய பாமி -பூமி பிராட்டி/ ருக்மிணி ஸ்ரீ தேவி-
பூமி பாரம்நீக்க வந்ததால் பூமியே இவன் மகிஷி-
கருணை வடிவாம பெரிய பிராட்டி /சீதை ராஷசிகளை சரண் அடையாமலே ரஷித்து-பாபானாம் வா –தப்பு பண்ணாதவர் இல்லை
ராவணனுக்கே  மித்ர பாவத்துடன் -சரணாக வத்சலன்-

பூ தேவி பொறுமையே வடிவாக கொண்டு–சகித்து கொண்டு-அகிர்தம் அனைத்தையும்
இருவரும் அருகில் -நீளா தேவி-அன்பே வடிவமாக -பிரேமை –தான் பெற்ற பிள்ளையை தாய் அடிக்கலாமே-பொறுமை இன்றி–கருணை பொறுமைக்கு ஆதீனம்–நம்மது பாசம் இருந்தால் தான் அன்பு இருந்தால் தான் பொறுமை- அன்புக்கு கருணை பொறுமை இரண்டுக்கும் ஆதீனம்- பிராட்டி ஐஸ்வர்யம் /அது விளையும் பூமி மண் மகள்- அதை புஜிகிற போக்தா –வடிவாலே துவக்கி அவன் திரு உள்ளத்தில் குற்றம் பார்க்காமல் இருக்க பண்ணுவாள்- பெரிய பிராட்டி கொஞ்ச வேண்டும் –மூவரும் இருக்க -ஆளும் உலகமும் மூன்றே -லீலா நித்ய விபூதி-லீலா விபூதி பூமி பிராட்டிக்கு/நித்ய விபூதி பெரிய பிராட்டியார் /மூன்றாவது உலகம் பக்தி பிரேமை-சம்சாரமும் வேண்டாம் ஸ்ரீ வைகுண்டமும் வேண்டாம்-நீளா தேவி-களங்கம் இல்லா அன்பு கொடுக்க -மூன்று சக்தியும் முக்கியம்-சந்தினிபெரிய பிராட்டி -கிரியா ஞான சக்தி பூமி  இச்சா சக்தி -நீளா தேவி
அனைத்தையும் சேர்த்து ஆல் இலை சேர்ந்தான் -கண்ணன்-கடல் போல் ஆஸ்ரித சேஷ்டிதம்-ஒக்கலையில் இருக்கிறான்–அம்மா ஆனார் ஆழ்வார் இடுப்பில் கொண்டார் இவனை
ஒக்கலை வைத்து முலைப் பால் உண்  என்று தந்திட வாங்கி
செக்கஞ்செக அன்று அவள் பால் உயிர் செக உண்ட பெருமான்
நக்க பிரானோடு அயனும் இந்திரனும் முதலாக
ஓக்கவும் தோற்றிய ஈசன் மாயன் என் நெஞ்சினுள் உளானே 1-9-5
ஒக்கலை கொண்டு முலை பால் கொடுத்த பூதனை–முழு முதல் கடவுள்-மாயன்-நெஞ்சில் உளானே
மாயன் என் நெஞ்சினுள் உள்ளான் மற்றும் யாவர்க்கும் அக்தே
காயமும் சீவனும் தானே காலும் எரியும் அவனே
சேயன் அணியன் யவர்க்கும் சிந்தைக்கும் கோசரம் அல்லன்
தூயன் துயக்கன் மயக்கன் என்னுடை தோளின் இணையானே 1-9-6
அனைவருக்கும் மனசில் இருக்கிறான்-சரீரமும் அவன் தான்
ஆத்மாவும் அவனே பஞ்ச பூதங்களும் அவனே
தூரச்தனும் கிட்டே இருப்பவனும் அவனே
தெரிந்த பின்பு கிட்டே -அறியாமல் தூரச்தன்
ஆச்சார்யர் காட்டிய பின்பு கிட்டே வருகிறான்
சிந்தித்து அறிய முடியாது-
இரண்டு தன்மை-துயக்கன் மயக்கன்
பவித்ரன் தூயன்
அதாதோ பிரம விசார -புரிந்து கொண்டேன்-முட்டாள்
புரியவில்லை என்று புரிந்து கொண்டால் புரிந்தவன் ஆகிறான்
அறிவுக்கு அப்பால் பட்டவன்
அனைத்தைக்கும் ஆதாரமான உணர்வு என்று புரிந்தால் ஞான சொரூபன் அறிந்தால் துயக்கன்
புத்தியால் அறிய முயன்றால் மயக்கன்
ஸ்ரீ பாதம் தூக்கி -சந்தோஷம்-ஆழ்வார் தோளில் உளானே

சுமந்த்ரனே தேர் ஒட்டி பெருமிதம் அடைந்தது போல்–
திக் விஜயம் நம் பெருமாள் பல வருஷம்-தோளில் கருட சேவை போல்
சர்வ அங்கங்களாலும் அனுபவிகிறார்
தோளிணை மேலும் நன் மார்பின் மேலும் சுடர் முடி மேலும்
தாளிணை மேலும் புனைந்த தன் அம் துழாய் உடை அம்மான்
கேள் இணை ஒன்றும் இலாதான் கிளரும் சுடர் ஒளி மூர்த்தி
நாள் அணைந்து ஒன்றும் அகலான் என்னுடைய நாவினுளானே 1-9-7
துளசியில் ஆசை போல் ஆழ்வார் இடமும்
தோள்/மார்பு /கிரீடம் /திரு அடி எல்லாம் சூடி கொண்டது போல்
கோடி பாக்கியம் புண்யம் ஒரு துளசி கொண்டு அர்ச்சித்தால்-
பச்சை துளசி மலை நிற்கிறான்
சர்வ அங்கங்களிளாலும் சர்வ அங்கங்களிலும் பொருந்தி
தன்னாகவே என்னை ஆக்கி கொண்டு நாவில் உளானே
நம் பெருமாளே திரு வாய் மொழி -அகலாமல் சான்னித்யம்
நாவினுள் நின்று மலரும் ஞானக் கலைகளுக்கு எல்லாம்
ஆவியும் ஆக்கையும் தானே அழிப்போடு அளிப்பவன் தானே
பூவியல் நால் தடம் தோளன் பொரு படை ஆழி சங்கு ஏந்தும்
காவி நன் மேனிக் கமலக் கண்ணன் என் கண்ணின் உள் உளனே  1-9-8
ஞான கலைகள் எல்லா வற்றுக்கும் சரீரம் ஆவி ஆகியும் ஆக்கியும் –
நீல மேக சியாமளன்
கண்ணிலே உள்ளான்-நீங்காமல்
கமலக் கண்ணன் என் கண்ணினுள் உள்ளான் காண்பன் அவன் கண்களாலே
அமலங்களாக விழிக்கும் ஐம்புலனும் அவன் மூர்த்தி
கமலத்து அயன் நம்பி தன்னைக் கண் நுதல னொடும் தோற்றி
அமலத் தெய்வத்தோடு உலகமாக்கி என் நெற்றி உளானே –1-9-9
அவன் கண்ணால் ஆழ்வார் கடாஷிகிறார்
அஷ்ணி புருஷன் உபநிஷத்
ஆத்மா தான் கண்ணால் பார்க்கிறது இது ஜன்னல் தான்
அந்தர்யாமி-தியானம் பண்ண வேண்டும்
பஸ்யதாம் அஷிணி -இவ
கபடம் இன்றி-அமலங்களாக

நெற்றியுள் நின்று என்னை ஆளும் நிரை மலர்ப் பாதங்கள் சூடி
கற்றைத் துழாய் முடிக் கோலக் கண்ண பிரானைத் தொழுவார்
ஒற்றைப் பிறை அணிந்தானும் நான்முகனும் இந்திரனும்
மற்றை யமரரும் எல்லாம் வந்து எனது உச்சியுளானே 1-9-10
யோக தசை சாஷாத் கறித்து நெற்றில் உச்சியில் உள்ளான் என்கிறார்
உச்சி உள்ளே நிற்கும் தேவ தேவற்க்குக் கண்ண பிராற்கு
இச்சை யுள் செல்ல வுணர்த்தி வன் குருகூர் சடகோபன்
இச் சொன்ன வாயிரத்துள் இவையும் ஓர் பத்து எம்பிராற்கு
நிச்சலும் விண்ணப்பம் செய்ய நீள் கழல் சென்னி பொருமே  –1-9-11
விண்ணப்பம் செய்வார்-அருள பாடு-
கருணை பண்ணி-காரணம் இன்றி செய்த உபகாரம்
தானே வலிய வந்து ஆழ்வாரை ஆக்கி திரு வாய் மொழி அருள வைத்தான்
இவை அறிந்தோர் தம் அளவில் ஈசன் உவந்து வந்து ஆற்ற
அவயவங்கள் தோறும் அணையும் -சுவை யதனைப்
பெற்று ஆர்வத்தால் மாறன் பேசின சொல் பேச மால்
பொன் தாள் நம் சென்னி பொரும் -திரு வாய் மொழி நூற்று அந்தாதி -9
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்

ஸ்ரீ திரு விருத்தம் -29-ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள்-வியாக்யானம் –

September 29, 2011

(முதல் நான்கு தூது பாசுரங்கள்
அன்னமோடு அழுதல் துறை
தூது போகாத அன்னம்
பரத்வ அந்தர்யாமி வ்யூஹ விபவ அர்ச்சை -இவையே தூது நாலுக்கும் விஷயம்
இது பரத்வ த்வயம் பொன்னுலகு ஆளீரோ
இதிலும் ஸ்ரீ வைகுந்தத்துக்கு தூது

பொன்னுல காளீரோ? புவனி முழு தாளீரோ?
நன்னலப் புள்ளினங்காள்! வினையாட்டியேன் நான் இரந்தேன்
முன்னுலகங்களெல்லாம் படைத்த முகில் வண்ணன் கண்ணன்
என்னலங் கொண்ட பிரான் தனக்கு என் நிலைமை உரைத்தே.-6-8-1-

குடியாலே வந்த சீர்மை யுடைய அன்னங்கள் என்றும் -இல்லாத -அன்னங்கள் என்றும்
வேறே ஆள் இல்லாமல் இவற்றை இரந்தாலும்
பெருமாள் உலகம் -ஸ்ரீ வைகுண்டம் –
நீல தோயதம் -மின்னன்ன மேனி
பெண் தூது போக மாட்டார் போல்
வினையாட்டியேன் நான் இரந்தேன் -பொன்னுலகு ஆளீரிலும்
வந்து இருந்து உம்முடைய பெடையோடும் -அலர்மேல் அசையும் அன்னங்கள் -அங்கும் உண்டே
என் நலம் கொண்ட பிரானுக்கு உரையீர் -அங்கும் உண்டே –
சேர்ப்பார்களை பக்ஷிகள் -ஞான அனுஷ்டானம் சிறகு )

(நம்பிள்ளை ஈட்டில்
அசோகா மரம் -உனது பேரைப் போல் என்ன ஆக்கு
ஒரு மரத்துடன் சாம்யா பத்தி அபேக்ஷிக்கிறார் பெருமாள்
சோக உபஹத சேத்னன் நான்
நீயோ சோகம் இல்லா மரம் )

அவதாரிகை-

பொரு நீர் திரு அரங்கா வருவாய் என்ற இடத்தில் ,
அருளுகிறேன் என்னுதல் –
அருளேன் என்னுதல் சொல்லாதே
பேசாதே இருந்த படியால் –
வார்த்தை சொல்லும் இடத்தில் சில அன்னங்களைத் தூது விடுகிறாள் –

இன்னன்ன தூதெம்மை ஆள் அற்ற பட்டு இரந்தாள் இவள் என்று
அன்னன்ன சொல்லாப் பெடையொடும் போய் வரும் நீலம் உண்ட
மின்னன்ன மேனி பெருமான் உலகில் பெண் தூது செல்லா
அன்னன்ன நீர்மை கொலோ? குடிச் சீர்மையில் அன்னங்களே –29-

பாசுரம் -29-இன்னன்ன தூது எம்மை ஆள் அற்றப்பட்டு –
தலைமகள் அன்னப் பறைவையை வெறுத்து உரைத்தல் –
பொன்னுலகு ஆளீரோ -6-8-

பதவுரை

குடிசீர்மை இல்–உயர்குடிப் பிறப்பால் வரும் சிறப்பு இல்லாத
அன்னங்கள்–இவ்வண்ணப் பறவைகள்
(எனன் செய்கின்றனவென்றால்)
இவள்–‘இப்பராங்குச நாயகியானவள்
ஆள் அற்றம் பட்டு–(வேறு தனக்கு) ஆளில்லாமையால்
இன்னன்ன தூது–இப்படிப்பட்ட தூதராக
எம்மை–நம்மை
இரந்தாள் என்று–குறை கூறி வணக்கத்தோடு வேண்டிக் கொண்டாள்’ என்றெண்ணி
அன்னன்ன சொல்லா–அப்படிப்பட்ட தூதுமொழிகளை (த் தலைவனிடஞ் சென்று) சொல்லாமல்
பேடையொடும் போய்வரும்–(தமக்கு இனிய) பெண் பறவைகளுடனே (மந்தகதியாக மகிழ்ச்சியோடு) உலாவித் திரிகின்றன;
(இதற்குக் காரணம்)
நீலம் உண்ட–நீல நிறத்தை யுட் கொண்ட
மின் அன்ன–மின்னல் போன்ற
மேனி–திருமேனியை யுடைய
பெருமான்–எம்பெருமானுடையதான
உலகில்–உலகத்தில்
பெண் தூது செல்லா–பெண்களுக்காகத் தூது செல்வதில்லாத
அன்னன்ன நீர்மை கொலோ–அப்படிப்பட்ட தன்மையை யுடைமையோ?

வியாக்யானம்-

இன்னன்ன தூது-
இப்படி பட்ட தூது ,
தரித்து இருந்து விடுகிறது அன்று —
போகத்துக்கு விடுகிறது அன்று ..
சத்தா தாரகமாக விடுகின்ற தூது –

(இளைய பெருமாள் சுக்ரீவன் கூட இருக்க தரித்து இருந்து தூது விட்ட பெருமாள் போல் அல்ல
கிம் கார்யம் சீதயா மம போல் அல்லவே
அஞ்சிறைய மட நாராய் -தழுவ தூது -போகத்துக்குத் தூது -அலற்றுவன் தழுவுவன் என்றாரே அங்கு )

கதேஹி  ஹரிசார்தூல புனராகமநாயது பிராணா நாமபி-சந்தேஹோ மாமாச்யாநாத்ரா சம்சய  -சுந்தர காண்டம் 39-22—என்று
பிராட்டி திரு அடிக்கு தன் தசையை அருளி செய்தது போலே

எம்மை-
நான் இருக்கிற படியே அமைந்து கிடீர் இருக்கிறது
தூது போவார்க்கு
ஒரு ஐந்தர வியாகரண பண்டிதனை-தூது போக விடும் இடத்தை
உங்களைப் போக விடும்படியான தசை கிடீர்

ஆள் அற்ற பட்டு-
ஆள் அறுதி பட்டு ..
உபய விபூதி நாதனும் கூட ஆள் விட இருக்கும் அவள் இறே-

மிதிலா மண்டலும்
ஸ்ரீ கோசல வள நாடும் குறை வறுத்தாலும்
பின்னையும் குறை கிடந்ததற்கு ஒரு மூலையிலே பத்து கோடி பேர் பிணை உண்ணும் படிக்கு ஈடாக
பரிகரம் உடையவள் இறே
இப்போது ஆள் அறுதி பட்டேன் என்கிறாள்

இரந்தாள்-
அவன் தான் செய்யக் கடவத்தை இவள் செய்த படி ..
அத்தலை இட்டு விடக் கடவது  இது இறே இவள் தான் விடுகிறது-

இவள்-
அப்ரேமேயம் ஹி தத் தேஜ -ஆரண்ய காண்டம் -37-18-என்னும்
இவள் கிடீர்

அன்னன்ன சொல்லா –
அப்படி பட்டவை சொல்லா
நான் சொல்ல விட்ட வற்றை சொல்லி ,
தானும் வேண்டும் வார்த்தை இட்டுக் கொண்டு சொல்லுகிறதும் இல்லை-
ஓலை பாதி தூது பாதி என்று சொல்லும் அது பொய்யாய் இருந்தபடி
நிரபேஷராய் இருப்பவர் சாபேஷர் கார்யம் செய்து-
தாங்கள் நிரபேஷராய் இருக்க வேண்டாவோ

பெடையோடும் போய் வரும் –
போம் போது -அனுபாவ்ய குணங்களை அனுசந்தித்து கொடு போம்
வரும் போது-அனுபூத குணங்களை அனுசந்தித்து கொடு போம் —
அடிமை செய்வார் மிதுனமாய் இருந்து இறே அடிமை செய்வது-
ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே
பெரிய திரு அடி ஸ்ரீ கீர்த்தியோடே
அத்ரி பகவான் அனுசூயையோடே-
பாதேயம் புண்டரீகாஷம் நாம சங்கீர்த்தன அமிர்தம்

(ஸ்ரீ சேனாதி பதி ஆழ்வார் ஸ்ரீ ஸூத்ரவதி யாரோடே திருமால் இருஞ்சோலை சேவை உண்டே )

நீலம் உண்ட இத்யாதி —
அங்கு உள்ளார்க்கு சர்வ ஸ்வகாகம் பண்ணும் வடிவு –
நீலதோ யத் மத்யஸ்தா வித்யுல்லே கேவ பாஸ்கரா  –நீளா ஸூக்தம்
பிரிந்த போது மின் இலங்கு திரு உருவு -திருநெடும் தாண்டகம் -25-என்னும் படியாய்-
கலந்த போது கரு முகில் ஒப்பார் -திருநெடும் தாண்டகம் -24-என்னும்படியாய்  இறே இருப்பது

(நீலம் உண்ட மேனி – ஒளி படைத்த மேனி -மின்னல் கறுப்பை விழுங்கி –
கறுமைக்கு முக்யத்வம் -மின்னலுக்கு முக்யத்வம் இரண்டும் உண்டே
இரண்டுக்கும் பிரமாணம் )

பெண் தூது செல்லா -அங்கு ஆண் தூதோ செல்லுவது —
அபலைகள் தூது செல்லாதோ ?–
அபலைகள் தூது அங்கு செல்லாது என்று இருந்தீர்களோ ?–
அபலையாய் இருந்து வைத்து தூது விடுவாள் என்று இருந்தீர்களோ ?–
உங்கள் பாடும் அவன் பாடும் குற்றம் என் ?
என் குற்றத்தாலே இறே
(மத் பாபமே -நானே தான் ஆயிடுக )

அன்னன்ன நீர்மை கொலோ –
அப்படி பட்ட ஸ்வபாவங்களோ ?

குடி சீர்மை இல் அன்னங்களே —
உங்கள் பாடு குற்றம் உண்டோ ?
அவன் ஒரு குடியில் பிறவாதவன் ஆகையாலே கேட்டிலன்-

நீலம் உண்ட மின்னன்ன மேனி பெருமான் –
பிறர்க்காக உடம்பு படைத்தவன் அன்றோ —
நீங்கள் குடி பிறவாதவர் ஆகையாலே சொல்லிற்று இலி  கோள் என்றும்-

ஸ்வாபதேசம்-
பகவத் விஸ்லேஷத்தில் இவர் உடைய ஆற்றாமை இருந்தபடி
பிராப்திக்கு ஸஹ காரிகளாய் இருந்தவர்களையும் கூட இன்னாதாக வேண்டும் படியான
தசையைச் சொல்லுகிறது –

தாத்பர்யம்
கீழ் நாயகியின் தசையை
திருத்தாயார்
திருவரங்கன் பதில் கிடைக்காமல்
அர்ச்சையில் பேசாரே
பரமபத நாதனுக்கு அங்கு கண்ட பக்ஷிகளைத் தூது விட
அவைகள் சொல்லாமல் தங்கள் கார்யமே பார்த்து இருக்க
ஓ ஹம்ஸங்களே
உங்களை விட வேறு ஒருவரும் இல்லாமல் தூது விட
அவன் இருதயத்தில் படும்படி
நீங்கள் முன்னமே அவன் சேவையைப் பெறுவீர்
எனது காரியமும் பார்க்காமல்
சொன்ன பின்பும் கூடப் போகாமல்
கூட சென்று அறிவியாமையால் ஸ்த்ரீகள் உடன் திரிகின்றிர்களே
திரு ஆபாரணங்கள் -அத் உஜ்ஜவலமான
நீல மேக ஸ்யாமளன்
ஸ்வயம் பிரயோஜனமாக போக வேண்டி இருக்க
போகாமைக்கு -வெறுத்து
ஒரு பென்னுக்குத் தூது போக்கத் தகாது
பெரும் குலத்தில் பிறக்காமல் இது செய்தீர்

—————————————————————

ஸ்ரீ கோயில் கந்தாடை அப்பன் ஸ்வாமிகள் திருவடிகளே சரணம்
ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை ஸ்வாமிகள் திருவடிகளே சரணம் .
ஸ்ரீ பெரிய பெருமாள் பெரிய பிராட்டியார் ஆண்டாள் ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

உபநிஷத்தில் கதைகள்-கேனோ உபநிஷத் – ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

September 8, 2011
இதம் பூர்ணம்-பொலிக பொலிக பொலிக –மாறன் சொல் மருந்தாக போகும் -ஷாந்தி ஷாந்தி ஷாந்தி -ஆதி ஆத்மிக ஆதி தைவிகம் ஆதி பௌதிகம் மூன்றிலும் ஷாந்தி   –தேக  சுத்தி–ஆத்மாசுத்தி-கர்ம கழிய – மோஷம் பெற மூன்று தடவை தீர்த்தம் பிரசாதிகிரார்கள்
அப்யாயந்து  –சர்வம் -அனிரா கிரா-ஓம் ஷாந்தி ஷாந்தி ஷாந்தி-சாம வேத ஷாந்தி பாடம் –வாக்கு பிராணன் இந்த்ரியங்கள் வளரட்டும் புஷ்டியாக இருந்தால் தான் ஆத்மா பர மாதமா இடம் சேர -அதனால் பிரார்திகிறது -உடலும் உள்ளமும் ஆரோக்கியம்-சர்வ சக்தன்  உள்ளே இருக்கிறான் என்று நினைக்க நினைக்க
சர்வம் பிரம சரீரம் -நேராய் நிலனாய் ..சிவனாய் அயனாய்–ஆஸ்ரித வாத்சல்யனாய் கண்ணுக்கு புலப் பட அர்ச்சை ரூபம் -பூர்ணம் இங்கும் –நாம் பார்க்கிற படி இருந்தாலும் –மா அஹம்  பிரமம் நிராகுர்யாம் என்னை பிரமம் நிராகரிக்காமல் இருக்கட்டும்–பிரமத்தை இல்லை என்று நமக்குள் இருக்கும் அரக்கன் சொல்ல பார்க்கும்- ந அஸ்தி இல்லை நாஸ்திகன்-நம்பிக்கை கெடும் படி நடக்கும் போதும் –வாளால் அறுத்து சுடுனிம் மருத்துவன் பால் மாளா காதல்–அனிகிரானம் இரண்டு பேர் இடம்–கர்மங்கள் நிலை பெறட்டும் –இது முதல் ஸ்லோஹம்
ஜைமினி இடம் சிஷ்யர் -கேள்வி கேட்க ஆரம்பித்தார் அடுத்து –கேன இஷிதம் பிரதி –தான் ஆசை பட்ட இடத்தில் யாரால் தூண்ட பட்டு போகிறது -மயங்கி தூங்கும் பொழுதும் பண்ணுகிறோம்-யாரோ தூண்டனும்–செய்ய கூடாது என்று நினைகிரத்தை தவிர்க்காமல் செய்கிறோம்..என்னை தூண்டுவது யார்- முந்நீர் ஞாலம் படைத்த என் முகில் வண்ணா அந நாள் நீ தந்த யாக்கையின் வழி உழல்வேன்

பிரேஷிப்பது யார்-
அடுத்து -பஞ்ச பிராணன் தாங்குகிறது யாரால்-பிராணஅபான வியான உதான சமான –ஐந்தும் -யாம ஆயாமம் பிரணாயாமம் — உச்வாசம் நிச்வாசம்-பூரகம்-உள்ளே இழுப்பது   ரேசகம்-வெளியே விடுவது கும்பகம் உள்ளே இருப்பது 16 தடவை நிமிஷம்-பயிற்சி பண்ணி 12 தடவை குறைத்தால் ஆரோக்கியம்–அபான -ஆசனம் -வியான வியாபித்து— சமான -நாபி –உதான -கண்டம் –எனக்கு தெரியாமல் இவை தருகிறதே யாரால்-சீதா சுவாதீனம் இல்லாதவனும் இதை பண்ணுவதால்
அடுத்து -பேசும் வார்த்தை  யாரால் தூண்ட பட்டு பண்ணுகிறோம்.என் வாய் முதல் அப்பன் என் நாவின்  இன் கவி யார் ஒருவருக்கும் கொடுத்திலேன்-ஆழ்வார் கேள்வி கேட்டு பதில் சொல்லாமல் பதிலை அருளுவார் –
சஷுஸ் -கண் காது செயல் தூண்டுவது யார்
ரிஷிகேசன் இருடி கேசா மூக்கு உறிஞ்சி முலை உணாயே -தன் இந்த்ரியம் வசம் வைப்பவன் அர்த்தம் இல்லை தம் அடியார் இந்தரியங்களை வசம் வைப்பவன்-குடா கேசன் தூக்கம் வென்றவன் காதுக்கு காதா-பார்வை அளிப்பவன் – வாக்குக்கு வாக்கு பிராணனுக்கு பிராணன் -உடல் தரிப்பை அளிப்பவன் தாரகன்-ஆக இருகிறவன் பிரமம் தான் செலுத்து கிறான் அறிந்தால் அது முச்ய தீரர் ஞானி ஆவான் -ஸ்ரீ வைகுண்ட அனுபவம் அடைகிறான் –சஷுஸ் த்ருஷ்டம் -கண்ணாகவும் பார்வையாகவும் காதாகவும் கேள்வி உணர்வாகவும் -நாக்கு ஆகவும் ருசியாகவு-மூக்கு ஆகவும் மோப்ப உணர்வு ஆகவும் -தோல் ஆகவும் தோடு உணர்வாகவும் – ஆக இப்படி பத்தாக இருப்பவன்-நாராயணன்

அஸ்மான் லோகன் அமிர்தம் –போவான்
ஜைமினி உபதேசம்-கண்ணால் பார்த்து அறிய முடியாதவன் -வாக்காலும் மனசாலும் முடியாது -இப்படி உபதேசம் பண்ணு —
சிஷ்யன் வருவானா இப் படி சொன்னால்–வஸ்து தெரிந்து கொள்ள முடித்தவன் -புரிதலுக்கு அப்பால் பட்டவன் என்று அறிந்தால் அறிந்தவன் ஆகிறான் –
பூர்வர் சொல்ல இப்படி அறிந்தேன் –அசித் =அந்ய தேவ தத் விதித -கண்ணால் அறிய படும் அசித்தும் மனசால் உணர்ந்த சித் விட -என் மனம் என் கை கை வேற நான் வேற தானே நான் =ஆத்மா அனைவரும் உணர்ந்து தான் இருக்கிறோம்–சொபனம்-உடம்பில் யார் -அதற்குள் போய் இருந்தால் தட்டினால் எழுந்து இருக்க கூடாது அதற்குள் தர்ம பூத ஞானம் இருக்கும் –மனன் அகம் ..பொறி உணர்வு அவை இலன் மனன் உணர் இலன் –இல்லதும்  உள்ளதும்  அல்லது அவன் உரு–இந்த்ரியன்களால் மனசால் அறிய முடியாதவன் அப்பால் உள்ளவன்
அது இது அல்ல -இது இது என்று அறிவது போல் -அனுமானித்து அறிய முடியாது குடம் இருந்தால் குயவன் இருக்க வேண்டும்-உலகம் இருப்பதால் அவன் இருக்க வேண்டும்..-வர அறைக்கு உள் படுத்த முடியாதவன் சர்வ சக்தன் சர்வக்ஜன் -தாங்கி செலுத்துபவன் நினைவுக்கு அப்பால் பட்டவன் -பரத்வம் –

கண்ணை பார்க்க வைக்கிறவன் பிரமம் -கண்ணால் பார்க்க முடியாது அவனை–அறிவுக்கு அப்பால் பட்டவன்- காதால் கேட்க முடியாதவன் கேட்கும் படி செய்கிறான் முதல் கண்டம் இது
அடுத்து –மன்யசே– இப்படி நம்பினால்-நன்றாக அறிந்து கொண்டேன் -ராமன் கண்ணன் -கூட அறிய முடியாது அர்ச்சையும் அறிய முடியாது பூர்ணம் எல்லாம் –யஸ்ய மதம் தஸ்ய மதம் மதம் யஸ்ய ந வேதச்ய –அறிய முடிய வில்லை என்று அறிந்தவன் அறிந்தவன் ஆகிறான் அறிந்தேன் என்று சொல்பவன் அறியாதவன் ஆகிறான் –விக்ஜாதம் அவிக்க்ஜாதம் -ஒன்றை அறிந்தால் அனைத்தையும் அறிந்தவன் ஆகிறான் இதை அறியாமல் வேற எல்லாம் அறிந்தவன் ஒன்றும் அறியாதவன் ஆகிறான் -பொன்னார் சார்ங்கம் உடைய அடிகளை இன்னார் என்று அறியேன் திரு மங்கை ஆழ்வார் ராமன் -இன்னார் என்று அறியேன்-குணா நலன்கள் பிரபாவம் அறியேன் -மண்டோதரி-தாரை -அப்ரேமயம்-புத்திக்கு அப்பால் –வஸ்து இல்லை எனபது இல்லை ஆகாச தாமரை முயல் கொம்பு போல் இல்லாத வஸ்து இல்லை –இதை போல் எதையும் சொல்ல முடியாது என்று முன்பே சொன்னார்– உளன் எனில் உளன் அவன் உருவம் இவ் உருவுகள் உளன் அலன் எனில் உளன் — -இல்லை சொன்னாலும் உளன்-குடம் இருந்தது எடுத்து போனதும் இல்லை- இங்கு இல்லை அங்கு இருக்கிறது–குடம் இல்லை சொமபு இருக்கிறது–இன்று இல்லை நேற்று இருந்தது

அருவங்கள் -உளன் இரு தகமையுடன் –காரணம் அறிந்தால் காரியம் அறியலாம்-தங்கம் அறிந்து மோதிரம் போல் அனைத்தையும் அறிவோம் -என்பதே இரண்டாம் கண்டத்தின் சுருக்கம்
மூன்றாம் கண்டம்-யக்ஜன்-கௌசிக முனிவர் வருவார் என்று -சாமான் வாங்கி வர போகசிஷ்யர்  இருவரும் சிந்தனை பண்ணி அசை போட்டு போக
ஜைமினி ஆஸ்ரமம் சரஸ்வதி நதி கரை அருகில் வர -சப்தம் தேவர்கள் வென்றோம் -அஸ்மாகம் விஜயக -கூத்தாடி வர -எங்களுக்காகா ஜெயம் கூத்தாடி வர -கர்த்துத்வ்ப புத்தி -பலத்துக்கு பண்ணி தான் திருப்தி-அசுரரை வென்று பல தியாகம் -அஸ்மாகம் என் உடைய தியாகம் பண்ண வில்லை–உயர்ந்த கர்மா -இல்லை தேவர்களையும் விடுவது இல்லை -விடுவது கஷ்டம் -விண்ணுளார் பெருமானுக்கு அடிமை செய்வாரையும் செறும்–சுமுகன் கருடன்-கதை-ஐம்புலன் இவரையே விட வில்லையே –கர்வ பங்கம் நடக்க போகிறது -சிஷ்யர் பார்த்து இருக்க யக்ஜன் தோன்றி-பிரமம் இந்த ரூபம் கொண்டு- யார் என்று தேவர்கள் அறிந்து கொள்ள வில்லை–கண் முன் வந்து நின்றாலும் அறிந்து கொள்ள வில்லை-அவன் அருளால் தான் அறிய முடியும் ந தபஸ் -மனாஸ்து விசுத்தான– சுத்தமான மனசால் முடியும்-தெரிந்து கொள்ள முடியாது என்று தான் தெரிந்து கொள்ள முடியும்–எதோ வாசந்தே நிவர்த்த யந்தே –பன்னலார் பயிலும் பரனே பவித்ரனே -பன்னலார் =வேத வல்லுநர் பயில்வார் இருந்தாலும் அறிய முடியாத பரன் -ஆனைக்கு குதிரை வைப்பது போல் அங்கும் நம் அறிவுக்கு எட்டாமல் இருப்பவன் –அக்நி பகவான் யார் என்று பார்த்து வா அனுப்ப-ஜாத வேதன்–பிறந்தது அனைவரையும் அறிந்தவன் அக்நி–பேர் மட்டும் ஜாத வேதன் அவனாலும் அறிய முடியாதவன் –நீ யார் கேட்டதாம் யக்ஜன்-ஆகுதி கொடுப்பதை தேவதை இடம் கொடுக்கும் அக்நி–எனக்கு இல்லை தேவனுக்கு தியாகம் செய்வது யாகம் –எதையும் எரிக்க முடியும் -புல் போட்டான் -பனி உடன் சேர்ந்த புல்-சக்தி எல்லாம் உபயோகித்தும் முடிய வில்லை-பயந்து குறுகி போய் -திரும்ப -வாயு பகவானை அனுப்ப- நீ யார் -மீண்டும் கேட்டான்- அனைத்தும் எடுத்து வகிக்க வேண்டிய வாயு-மணம் இழுத்து சர்வம் ஆயாதி கச்சதி வாயு- -மாதரிச்வா -ஆகாசத்தில் ஓடுபவன் -பெயர் சொல்ல -சக்தி -எதையும் எங்கும் தள்ளிவி விடுவேன் வாயவ்ய யாகம்-மூலையில் உள்ள செல்வம் கொண்டு சேர்க்கும்–தஸ்மை தருணம் -அதே புல் போட்டு வீசி பார்- ந சாக -முடிய வில்லை–கேள்வி கேட்க்கும் வாயும் அவன் தான் தூண்ட வேண்டும் இவர்கள் சக்தியும் அவன் தான் கொடுக்க வேண்டும் -இந்த்ரன் வர- தன்னை மறைத்து கொண்டான் யக்ஜன் –உன்னை கண்டதும் பயந்து போனான் அக்நி வாயு சொல்ல -உமா தேவி -வந்து ஆஜகாம -யக்ஜன் யார் எங்கே கேட்டான் இந்த்ரன்-பிரமத்தால் தூண்ட உமா தேவி -ஞானம் கொடுக்க ஆசை பட்டதும் –நடக்கும் கதை மேல்–தெரிவித்தால் அறியலாம் –ச பிரமம் அந்த யக்ஜம் தான் பிரமம் –இந்த ஜெயம் அவனுடையது -சரீரத்துக்கு வெற்றி ஆத்மாவுக்கு -மறைந்ததால் வெற்றி -அதனால் அவனுக்கு வெற்றி -கூத்தாடும் உங்கள் அந்தர் ஆத்மா அறிந்து கொள் –இதனால் தான் பெருமை கொண்டனவாம் இந்த மூன்றும் அக்நி வாயு தேவேந்தரன் -பிரமத்துக்கு அருகில் போன பெருமை -பார்த்த பாக்கியம் அறியா விடிலும்-தொடுகிற அளவு கிட்டே போனதால் வந்த பெருமை -இப்படி பிரமம் அறிந்து கொண்டால் தமேவ வித்வான் -மிருத்யு சம்சார பந்தம் தொலைந்து அவனை அடைந்து பிரதி திஷ்டிதி பிரதி திஷ்டதி மீளா -நச புன ஆவர்ததே –தெளி விசும்பு திரு நாடு -நலம் அந்தமில் திரு நாடு-கேனோ உபநிஷத் சாரம் பார்த்தோம்
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

Kena Upanishad

Kena Upanishad 
Translated by Vidyavachaspati V. Panoli

Om ! May my limbs, speech, vital air, eyes, ears, strength,
And all the senses be fully developed.
All that is revealed by the Upanishads is Brahman.
May I never deny Brahman:
May Brahman never disown me.
Let there be no repudiation (from Brahman);
Let there be no infidelity from my side.
May all the Dharmas extolled by the Upanishads shine in me
Who am intent on knowing the Self.
May they shine in me !
Om ! Peace ! Peace ! Peace !

I-1. Wished by whom is the mind directed to fall (on its objects)? Directed by whom does the foremost vital air move? By whom is wished this speech which the people utter? Who is the radiant being that unites the eye and the ear (with their objects)?
I-2. Because He is the ear of the ear, the mind of the mind, the speech of speech, the vital air of the vital air, and the eye of the eye, the wise, freeing themselves (from the identity with the senses) and renouncing the world, become immortal.
I-3. The eye does not reach there, nor speech, nor mind, nor do we know (Its mature). Therefore we don’t know how to impart instruction (about It). Distinct indeed is That from the known and distinct from the unknown. Thus have we heard from the ancients who expounded It to us.
I-4. That which is not uttered by speech, that by which the word is expressed, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.
I-5. That which one does not think with the mind, that by which, they say, the mind is thought, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.
I-6. That which man does not see with the eye, that by which man sees the activities of the eye, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.
I-7. That which man does not hear with the ear, that by which man hears the ear’s hearing, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.
I-8. That which man does not smell with the organ of smell, that by which the organ of smell is attracted towards its objects, know That alone to be Brahman, and not this (non-Brahman) which is being worshipped.

II-1. If you think, ‘I know Brahman rightly’, you have known but little of Brahman’s (true) nature. What you know of His form and what form you know among the gods (too is but little). Therefore Brahman is still to be inquired into by you. I think Brahman is known to me.
II-2. I think not I know Brahman rightly, nor do I think It is unknown. I know (and I do not know also). He among us who knows that knows It (Brahman); not that It is not known nor that It is known.
II-3. It is known to him to whom It is unknown; he to whom It is known does not know It. It is unknown to those who know, and known to those who know not.
II-4. When Brahman is known as the inner Self (of cognition) in every state of consciousness, It is known in reality, because one thus attains immortality. Through one’s own Self is attained strength and through knowledge is attained immortality.
II-5. Here if one has realised, then there is accomplishment. Here if one has not realised, then there is utter ruin. Having realised Brahman in all beings, and having withdrawn from this world, the wise become immortal.

III-1. It is well-known that Brahman indeed achieved victory for the gods. But in that victory which was Brahman’s the gods revelled in joy.
III-2. They thought, “Ours alone is this victory, ours alone is this glory”. Brahman knew this their pride and appeared before them, but they knew not who this Yaksha (worshipful Being) was.
III-3. They said to Agni: “O Jataveda, know thou this as to who this Yaksha is”. (He said:) “So be it.”
III-4. Agni approached It. It asked him, “Who art thou?” He replied, “I am Agni or I am Jataveda”.
III-5. (It said:) “What is the power in thee, such as thou art?” (Agni said:) “I can burn all this that is upon the earth.”
III-6. For him (It) placed there a blade of grass and said: “Burn this”. (Agni) went near it in all haste, but he could not burn it. He returned from there (and said:) “I am unable to understand who that Yaksha is”.
III-7. Then (the gods) said to Vayu: “O Vayu, know thou this as to who this Yaksha is”. (He said:) “So be it”.
III-8. Vayu approached It. It said to him, “Who art thou?” He replied, “I am Vayu or I am Matarsiva”.
III-9. (It said:) “What is the power in thee, such as thou art?” (Vayu said:) “I can take hold of all this that is upon the earth”.
III-10. For him (It) placed there a blade of grass and said: “Take this up”. (Vayu) went near it in all haste, but he could not take it up. He returned from there (and said:) “I am unable to understand who that Yaksha is”.
III-11. Then (the gods) said to Indra: “O Maghava, know thou this as to who this Yaksha is”. (He said:) “So be it”. He approached It, but It disappeared from him.
III-12. In that space itself (where the Yaksha had disappeared) Indra approached an exceedingly charming woman. To that Uma decked in gold (or to the daughter of the Himalayas), he said: “Who is this Yaksha?”

IV-1. She said: “It was Brahman. In the victory that was Brahman’s you were revelling in joy”. Then alone did Indra know for certain that It was Brahman.
IV-2. Therefore, these gods viz. Agni, Vayu and Indra excelled other gods, for they touched Brahman who stood very close and indeed knew first that It was Brahman.
IV-3. Therefore is Indra more excellent than the other gods, for he touched Brahman who stood very close and indeed knew first that It was Brahman.
IV-4. Its instruction (regarding meditation) is this. It is similar to that which is like a flash of lightning or like the winkling of the eye. This is (the analogy of Brahman) in the divine aspect.
IV-5. Then (follows) the instruction through analogy on the aspect of the individual self. (It is well-known that) the mind seems to attain to It, that It is continually remembered by the mind, and that the mind possesses the thought (regarding It).
IV-6. That Brahman is known indeed as Tadvana (worshipful or adorable to all beings); That is to be worshipped as Tadvana. To him who knows It thus verily all beings pray.
IV-7. (Disciple:) “Revered sir, speak Upanishad to me.” (Teacher:) “I have spoken Upanishad to thee. Of Brahman verily is the Upanishad that I have spoken.”
IV-8. Of this knowledge austerity, self-restraint and action are the feet, the Vedas are all limbs and truth is the abode.
IV-9. He who knows this thus, with his sins destroyed, becomes firmly seated in the infinite, blissful and supreme Brahman. He becomes firmly seated (in Brahman).

Om ! May my limbs, speech, vital air, eyes, ears, strength,
And all the senses be fully developed.
All that is revealed by the Upanishads is Brahman.
May I never deny Brahman:
May Brahman never disown me.
Let there be no repudiation (from Brahman);
Let there be no infidelity from my side.
May all the Dharmas extolled by the Upanishads shine in me
Who am intent on knowing the Self.
May they shine in me !
Om ! Peace ! Peace ! Peace !

Here ends the Kenopanishad, as contained in the Sama-Veda.
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் .

அச்சுவையும் இச்சுவையும் ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள்

August 27, 2011

திரு நாமங்கள் சேஷிடிதம் கல்யாண குணங்கள்  -சொரூபம் விபூதி சொல்ல வந்தவை

தேவோ நாம சகஸ்ரவான் பேர் ஆயிரம் கொண்ட பேரு உடையவன் ஈறிலா வன் புகழ்
தெரிந்த தர்மங்களில் உயரந்தது திரு நாம சங்கீர்த்தனம்-பீஷமாச்சர்யர் -உயர்ந்த உபாயம்
கேசவா என்ன கெடும் இடர் ஆயின எல்லாம் -அதனையும் கேட்டு போகும்
கேனோ லகுனா -பார்வதி கேட்டதும் ஸ்ரீ ராம ராம ராமேதி ரமே ராம ..ஆயிர நாமங்களுக்கும் சமம் ஸ்ரீ ராமன் திரு நாமம்
ஒவ் ஒரு திரு நாமமும் ஒப்பார் மிக்கார் இல்லாத பெருமை
ஸ்ரீ ராமன் ரஷகத்வம்போக்யத்வம் –இரண்டும் காட்டி-சுக்ரீவாதிகள்-துன்பத்தினை துடைத்து -ரஷகத்வம்-ஹனுமான் செவித்ததும் கொம் அர்த்தம் நபி பூஷணம்-ஆபரணங்களால் மறைக்காமல்- திரு தோள்களை காட்டி கொண்டு ஆபரணங்களுக்கு அழகு கொடுக்கும் பெருமாள்..கண் எச்சில் வராமல் மறைக்க ..அடியார்களை ஈர்க்க அழகை காட்டி வசப் படுத்துவாய் -ஆபரணம் மூடிய அழகே போதுமே இப் படி எல்லாம் காட்டி வரணுமா போக்யத்வம்..

காவலில் புலனை வைத்து -திரு மாலை முதல் பாசுரம்-நாவல் இட்டு- ஜெயித்தேன்-காவல் இல்லாமல் புலன்கள் வைத்து இருந்தாலும் -நின் திரு நாமம் கற்ற பலன்-வாலி இருக்கும் இடம் போக அஞ்சிய சுக்ரீவன் வாலி யுத்தம் அழைக்கிறான் ராமன் அண்டிய பலம் அங்கு நாமி பலம் இங்கு நாம பலம்..
அடுத்த பாசுரம் மோஷம் வேண்டாம்-அச்சுவை பெறினும் வேண்டேன்..-அச்சுதா அமரர் ஏறே ஆயர் தம் கொழுந்தே என்று சொல்லி கொண்டு இருக்கும் இச்சுவையே வேண்டும்..போக்யத்வம் இதில் கண்டார் -அவன் கல்யாணகுணங்கள் எல்லாம் அவன் திரு நாமத்தில் உண்டு
ஓங்கி உலகு அளந்தான் உத்தமன் பேர் பாடி-உத்தமனை பாடி சொல்ல வில்லை பேர் பாடுவதில் தான் நோக்கு ஆண்டாளுக்கு ..
கட்டி பொன் போல் அவன் பணி பொன் போல் திரு நாமம்

அவன் தன்னை இல்லை செய்கின்றவரும் அவன் திரு நாமம் கொண்டு காரியம் கொள்ளா நிற்பர் கண்ணன் திருடன் சிசுபாலன் –வியாதி பரிகாரமாக திரு நாம சங்கீர்த்தனம் செய்ய சொன்னால் பண்ணுவார்-மாத்ருவை அடித்து கை வலிக்க – அம்மே என்று சொல்வது போல் சர்வருக்கும் திரு நாமம் சொல்வது பிராப்தி உண்டே-யோக்யதை சம்பாதிக்க வேண்டாம் திரு நாம சந்கீர்தனதுக்கு இதுவே யோக்யதை பண்ணி கொடுக்கும்.அவன் தூரச்தன் ஆனாலும் இது கிட்டு நின்று உதவும் வாசிக்க பிரபாவம் போல் இல்லை வாசக பிரபாவம் த்ரவ்பதிக்கு ஆபத்தில் புடவை சுரந்தது திரு நாமம் இறே
மொய்ம்பம் பூம் பொழில் பொய்கை -எம்மானை சொல்லி பாடி ஆடி-கும்பிடு நட்டம் இட்டு ஆடி தலை யினோடு ஆசனம் தட்ட–உலோகர் சிரிக்க -அதையே தாளமாக கொண்டு –ஆர்வம்  உள்ளவரை அமரர் தொழுவர்–இச்சுவை-
ஹனுமான் பாவோ  நான் யத்ர கச்சதி –பரம பதம் வேண்டாம்
அரங்கனை கண்ட கண்கள் மற்று ஒன்றினை காணாவே

திரு நாமம் நினைத்தாலே போதும் -ஊமை கூட உய்ந்து போகலாம் –எல்லா பலனும் கிட்டும்- செம்படவன் மீன்-ரத்னம்-வைர வியாபாரி-அரசன்-கதை–சூட்டி மகிழ்ந்தான் பட்டமகிஷிக்கு–மூவரும் கை ஆண்டார்கள்–திரு நாமம் ரத்னம் போல்–வியாதி பணம் ஐஸ்வர்யம்-செம்படவன்–அவனை அடைய நாம சங்கீர்த்தனம் வியாபாரி போல்–மதிப்பு தெரிந்து வித்தவன்-தானே அணிந்து ஆனந்த படும் அரசன் போல் நாம சங்கீர்த்தனம் பண்ணுவதே புருஷார்த்தம் உபாயமும் உபேயமும் இது ஒன்றே –திரு நாமங்களுக்கு பல்லாண்டு பாடுவோம்..

கலி யுகம் திருநாம சங்கீர்த்தனம்- தியானம் யாக யக்ஜம் அர்ச்சனை மார்க்கம் முன்பு –தத்வ ஞானம் ஒன்றாலே மோஷம் கிட்டும்-இஷ்ட பிராப்தி அநிஷ்ட நிவ்ருத்தி-அஞானம்சம்சாரத்தில் அழுத்தும் –தத்வம் =உண்மை பொருள்கள் –தத்வ த்ரயம்..-அசித் -ஜடம் சித் அஜடம்-ஈஸ்வரன்..நியந்தா சேஷி –கண்ணால் பார்ப்பது அசித் ஒன்றே சாமான்யன் இதுஒன்றே என்பர் –புருஷார்த்தம் பத்னி புத்ராதிகள் அன்ன பானாதிகளே ..அடைய வழி-ஹிதம் உபாயம் ஓடி ஆடி பணம் சம்பாதிப்பது–அநித்திய அனுபவம்..
சித் அனுபவித்து அடுத்த நிலை ஆத்மா அனுபவம் கைவல்யம்  –
ஈஸ்வரன்-உபாயம்-கர்ம பக்தி ஞான மார்க்கம்-ஜனகன் ஜட பரதர் பிரகலாதன் போல்வார் இவற்றில் இழிய்ந்து பெற்றார்கள்..
வேதம் சாஸ்திரம் அறிந்து-அனுஷ்டித்து செய்ய வேண்டும்–ஜன்மம் பல பல யுக கோடி சகஸ்ரம் ஆகும் -வேத நூல் பிராயம் நூறு –மனிசர் தாம் புகுவர் ஏலும் பாதியும் உறங்கி போகும்..-
-சுகரவழி–சூகரம் அருளியது -திரு நாம சங்கீர்த்தனம் -வாயினால் பாடி மனத்தினால் சிந்தித்து தூ மலர் தூவி தொழுது — உண்ணா நாள் பசி ஆவது ஓன்று இல்லை ஓவாது -அன்று எனக்கு பட்டினி நாளே  -நா வாயில் உண்டே ஓவாது உரைக்கும்  பொழுது உண்டே பேர் ஆயிரம் உண்டே -ஆசை ஒன்றே வேண்டும்..திரு நாம சங்கீர்த்தனமே உபாயம்
வியாசர் அருளி ஸ்ரீ விஷ்ணு சகஸ்ர நாமம் –சுகர்  வசிஷ்டர் பராசரர் சக்தி -சம்பந்தம் பராசர பட்டார் அருளிய ஆரு சிறப்புகள்–மகா பாரதத்தில் சாரம் ஆனது-ரிஷிகளால் ஆதரிக்க பட்டவை–தமர் உகந்த எவ் உருவம் அவ் உருவம் தானே தமர் உகந்த பேர் அப் பேர் தானே ..நஞ்சீயர் வெண்ணெய்க்கு ஆடும் பிள்ளை விக்ரகம்-சலங்கை அழகியார் -சாத்திய ஐதீகம் –சொபனத்தில் இந்த பெயரை சொல்லி காட்டினானே –வேதாச்சர்யர் வியாசராலே கொடுக்க பட்டது//பீஷ்மரால் தொடுக்க பட்டவை –அனைவாலும் ஆதரிக பட்டவை கீதை அருளிய அர்த்தம்- சொல்லும் இவை –அவனே வழி அவனே புருஷார்த்தம் -பாரயணமே வழி பாராயனமே புருஷார்த்தம் –ஏழாவது ஸ்ரீ கண்ணனே தானே அமர்ந்து கேட்டானே –கீதை அவன் சொல்லி அருள அவன் இதை கேட்டானே –..
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு வடிகளே சரணம்

ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும் ஸ்ரீ வேளுக்குடி வரதாச்சா ர்யர் ஸ்வாமிகள் ..

August 26, 2011
ஸ்ரீ ராமாயணமும் திரு வாய் மொழியும்  இருக்கும் வரை ஸ்ரீ வைஷ்ணவம் அழிக்க முடியாது –கிருமி கண்ட சோழன் பிள்ளையே சொன்னது..உத்தேசம்-லஷணம்-பிரமத்தை விசாரிக்க உத்தேசம்-ஜென்மாதி காரணத்வம் லஷணம்-பிரத்யட்ஷம்  அனுமானம் இன்றி சாச்த்ரத்தாலே அறிய முடியும் மூன்றாவது சூத்திரம்—அது போல் உயர்ந்த பிரமாணம் இவை இரண்டும்..–விசிஷ்ட அத்வைதம் இவை இரண்டும் விளக்கும் 
சாம்யம் இரண்டுக்கும்.–வாசியும் உண்டு –இரண்டும் விஷயம் –பூர்வர் விளக்கிய விதமும் பார்ப்போம்..
வியாசம் வசிஷ்ட -வந்தே –சகஸ்ர நாம அத்யாயம்-மக பாரதம்  சாரம்–அது பிரமாணமா -வேத வியாசர்- அவர் பராசர பிள்ளை சுகர் தகப்பனார் சக்தி வசிஷ்டர்–அனைவரையும் சொல்லி–கொள்ளு பேரன்- வசிஷ்டருக்கு ஏற்றம்-சொல்லி -வால்மீகி -நம் ஆழ்வாருக்கு ஏற்றம் பார்ப்போம்–
வியாசருக்கு உபதேசம் நாரதர்-வால்மீகிக்கு உபதேசம்-பிரம்மா–கண்ணன் சரித்ரம் சொல்ல வந்த மகா பாரதம் -எச்சில் வாய்–வருத்தம் தீர பாகவதம்-நரதர்க்கு தகப்பனார் பிரம்மா அவரால் கொண்டாட பட்டவர் வால்மீகி–அவரால் காட்ட பட்ட சிங்காசனத்தில் அமர பட்டார் வால்மீகி..–ஸ்ரீ ராம பிரேமை தலை எடுத்து வால்மீகி ஸ்ரீ ராமாயணம் அருள –ஸ்ரீ கிருஷ்ண பிரேமை தலை எடுத்து நம் ஆழ்வார் திருவாய் மொழி அருள –ஏற்கும் பெரும் புகழ் கண்ணனுக்கு ஏற்கும் புகழ்..

இரண்டும் பகவான் கேட்டவை –திரு வாய் மொழி திரு நாள்-இன்றும் நடக்கும் திரு மங்கை ஆழ்வார் தொடங்கி-அத்யயன உத்சவம்-சசாபி ராம -அந்த ராமனும் சத்தை பெறுவதற்கு கேட்டான்–மிதிலை செல்வி உலகு உய்ய –தன் சரிதை கேட்டாள்–
இரண்டிலும் பகவத் பிரபாவம் சொல்ல பட்டது -ஜகத் சர்வம் -சரீரம் தே -தேவர்கள் ஸ்ரீ ராமனை பார்த்து இறுதியில் சொன்னதை உடல் மிசை உயிர் என எங்கும் கரந்து பரந்துளன்.. என்கிறார் நம் ஆழ்வார் ..

சரீர ஆத்ம-பாவம் -பிரதான – அசேஷ விசேஷ பிரத்யநீக -சஜாதி விஜாதி சுகத பேத சூன்ய 
-நலம் உடையவன்-குண விசிஷ்டன்  துயர் அடி திவ்ய விக்ரக யுக்தன் 
–இதி சர்வம் சமஞ்சதம்–அந்தர்யாமி-யத் ஆத்மா சரீரம்-நம்முடைய வஸ்து நாம் உசந்தது சரீரம் விட –அவன் 
 நம்மை சரீரம் கொண்டதால் உயிர் என கரந்து எங்கும் பரந்துளன் 
சரீரம் ஆத்மாவை எதிர் பார்க்கும் ரட்ஷனதுக்கு -அகம் புறம் மேனி அசித் சித் இரண்டையும் சரீரமாக கொண்டவன் 

உபாயம் அவனே—ஆத்மா தன் உடைய சரீரம் என்று அபிமானித்து இருக்கும் 
பரா  பிரகிருதி-ஜீவாத்மா அபரா பிரகிருதி -அசித் இரண்டும் சொத்து அவனுக்கு – பொய் நின்ற ஞானமும் பொல்லா ஒழுக்கும் அழுக்கு உடம்பும்-
அவன் தானே அழுக்கு அறுக்க வேண்டும் 
சரீரம் தானே கைங்கர்யம் பண்ணும் சர்வ கால சர்வ தேச சர்வ அவஸ்தையில்-அது போல் ஆத்மாவும் பண்ண வேண்டும் புருஷார்த்தம்-அர்ஜுனன்-அஞானத்தாலே சோகம் முன்பு ஞானத்தாலே பின்பு சோகம்–பண்ணவா -ஆத்மா என்பதால் நீ தானே பண்ண வேண்டும்–பக்தி மார்க்கம் முடியாதவை துஷ்கரம்–சூகரம் ஆனாலும் கூடாது ஆத்மா சரீரம் என்பதால்- பிராப்தி இல்லாதது சரீரம் -அவன் ஆத்மா பிராப்தம்–ஆகையால் எல்லாம் விட்டு விடு -நானே ரஷிப்பேன்-உயிர் நாடி அர்த்தம் இரண்டும் சொல்லுகிறது —
இரண்டும் துவயத்துக்கு -சரணா கதி கத்யம் ஸ்ரீ வசன பூஷணம்–சாம்யம்–
நான்கும் துவய வாக்ய வியாக்யானம் தானே 
விளக்கம் வேறு பட்டவை
பூர்வ வாக்கியம் உத்தர வாக்கியம்-
நம் ஆழ்வாரும் ஸ்ரீ ராமாயணமும் உத்தரவாக்கியம் முன் சொல்லி பூர்வ வாக்கியம் பின் அருளினார்கள் 
ஸ்ரீ பாஷ்யமும் ஸ்ரீ வசன பூஷணமும் க்ரம படி பூர்வ வாக்கியம் முதலில் உத்தரவாக்கியம்  பின் அருளினார்கள் 
பால காண்டம் ஸ்ரீ மதே– நாராயண நாம -அயோத்ய காண்டம்– ஆய -ஆரண்ய காண்டம் மாய மான் வரும் வரை –

மீதி உள்ள  ஆரண்ய காண்டம்-ஸ்ரீமத்  சப்த அர்த்தம் 
கிஷ்கிந்தா   காண்டம் –நாராயண  சப்த அர்த்தம் 
சுந்தர காண்டம்-சரணவ் சப்த அர்த்தம் 
யுத்த காண்டம் -சரணம் பிர பதயே 
நம் ஆழ்வாரும் ஸ்ரீமதே முதல் பத்து நாராயண இரண்டாம் பத்து நம மூன்றாம் பத்து 
ஆறாம் பத்தில் பூர்வ வாக்ய அர்த்தம்-
ஆச்சார்யர் உபதேசம் வித்பத்தி பண்ண போகும் பொழுது புருஷார்த்த உயர்வு சொல்லி பின்பு வழி -பிராப்தி முன்னே பிராபகம் முன்பு 
அனுஷ்டிக்கும் பொழுது உபாயம் பண்ணி பின்பு புருஷார்த்தம் 
திரு பாவை நாராயணனே நமக்கே பறை தருவான்- பறை -புருஷார்த்தம்  முதலில் சொல்லி 
தருவான் -பறை தருவான் பறை விவரிக்க சிற்றம்  சிறுகாலை 
தருவான் கறைவைகள் வைத்தாள்

தர்ம வீர்ய ஞானத்தாலே –வால்மீகி பிரம்மா –திரு மாலால் அருள பட்ட சடகோபன்–தெளிந்து சந்தோஷித்து வால்மீகி பாட 
அருளின பக்தியால்–உள் கலங்கி இவருக்கு கிடைத்தது பக்தி சோகித்து மூவாறு காலம்மோகித்து —
உயர்வற பரத்வம் பாடி வீடு முன் முற்றவும்-ஆஸ்ரயிக்க சொன்னதும் –தாப த்ரயம் போக்குவான்-மோஷ பிரதன்-மற்றவர் ஓட்டை மாடம் ஒழுகல் மாடம் -சர்வேஸ்வரன்- பெரியவனை பற்ற முடியுமா -கேட்டதும்-கை இல்லா அதிகாரி யானையால் ஏற முடியுமா யானை தூக்கி வைத்து கொள்ளும்- பத்துடை அடியவர்க்கு எளியவன்–மத்துறு கடை -உரலினோடு இருந்து ஏங்கி இருந்த எளிவே-கட்டு பட்டு அடி பட்டு-உரத்தினில் கரம் வைத்தான் உரம் மார்பு-மரு மகளையும் சேர்த்து கட்டினாள்–

தப்பை சொன்னேன் தப்பை  செய்தேன்-
எளிவரும் இயல்பினான்-அனைவருக்கும் எளியவன்-தப்பை சொன்னேன் –
-உபன்யாசம் பண்ண வந்து மோகித்து இருந்தேன்—தப்பை செய்தேன்..
இது தான் வாசி-வால்மீகி பிரம்மாவால் -நம் ஆழ்வார் திரு மாலால் மதி நலம் அருள பட்டவர் 
அது தனி கேள்வி இது துணை கேள்வி-தன் சரிதை கேட்டான் இன்பம் பயக்க -மிதுனத்தில் சேர்ந்து கேட்டான் —
மாரீசன் -அப்ரேமேயம்-மைய கண்ணாள் மலர் மேல் உறைவாள் உறை மார்பினான் ஸ்ரீ மத்வம்–திரு நாரணன் அருள் புரிந்தான் –
கண் பார்வையால் இருவரும் திவ்ய தம்பதிகள் -செய்ய கோல தடம் கண்ணன்-மைய கண்ணாள்–பார்த்து கொண்டே பாசுரம் விடாதீர் என்கிறாள் 

 
லஷ்மணனை தூக்க முடியாமல்-பாரதானுஜன்-தூக்க முடிய வில்லை என்கிறான் இராவணன்–குரங்கு தூக்கினதே -பத்துடை அடியவர்க்கு எளியவன்-துவேஷ மனப் பான்மை ராவணன்- -சுந்தரி ரகுநாத -பரகால நாயகி – அருள் பெறுவார் அடியார் தம் அடிய னேனுக்கு  அருள் புரிய அமைகின்றான் அது நம் விதி வகையே –ஏக வசனம் –விபீஷணன் நால்வர் உடன் வர–எங்கள் உடன் விபீஷணன் துல்ய லாபம் அடையட்டும்-எங்கள் அனைவர் மேலில் -70வெள்ளம் சைன்யம்-காட்டிய கருணை இவன் ஒருவன் இடமே காட்டு -ராவணனை கொல்ல சாமர்த்தியம் உண்டா என்று பரிட்சை வைக்காமல்-மகா பிராக்யன் என்கிறான் சுக்ரீவன் 
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம் 

பாடிய வாளன்– ஸ்ரீ வேளுக்குடி ஸ்வாமிகள் ..

August 26, 2011

திரு அரங்கம்-பூ லோக வைகுண்டம்–ஸ்ரீ ரெங்க நாத அஷ்டகம் ஆதி சங்கரர்- இங்கு சரீரம் விட்டவனுக்கு மறு பிறவி இல்லை -சமன் கொள் வீடு தரும் தடம் குன்றம் போல்-சாம்யா பத்தி மோஷம் ..-புஷ்பம் பறிப்பது போல் ஆத்மாவை தன திரு அடியில் சேர்த்து கொள்கிறான்–கருவிலே திரு உடையவர்கள் தான் இங்கே வாசம் செய்யும் பாக்கியம் ..வரும் பக்தர்களும் போகும் பக்தர்களும் மனசு திக் திக்- -பாலம் கடக்கும் பொழுதும் டக் டக் சப்தம் ஒலித்து கொண்டே -காவேரி கரை புரண்டு தெளிவிலா கலங்கல் நீர் -தெண்ணீர் பொன்னி கரு மணியை கோமளத்தை–இருக்கும் பொழுது தெளிவு –பெண்ணையும் மாப்பிள்ளையும் பார்க்க போகும் பொழுதும் பார்த்து பிரியும் பொழுதும் கலங்கி போகிறாள் காவேரி தாயாரும்/–பாரிப்பு திரு வேம்கட யாத்ரை–அர்ச்சிராதி கதி சிந்தனம்-அக்ரூரர் ஞானம் –காவேரி விரஜை- சேயம் வைகுண்டம் ரெங்க மந்த்ரம் வாசு தேவன் ரென்கேசன் பிரணவாரா விமானம் –மூன்றாவது விபூதி–அச் சுவை பெறினும் வேண்டேன் –பிறவி வேண்டேன்–அனுபவம் பார்த்தால் சம்சாரத்தில் சேர்க்க முடியாது அர்ச்சிராதி மார்க்கம் போகாததால் அங்கும் இல்லை-அங்குற்றேன் அல்லேன் இங்குற்றேன் அல்லேன் –பட்டர் பெரிய பெருமாள் நம்பெருமாள் சேவை அங்கு இருந்தால் இருப்பேன் என்றார்– பட்டர்-அனந்தாழ்வான்-இரண்டு தோள் கள் என்றால் பெரிய பெருமாள் நான்கு தோள்கள் என்றால் நம்பெருமாள் —தோள்கள் ஆரத்தழுவி என் உயிர் ரை அரவிலை செய்தனன் தோழி தாள்களை எனக்கே தந்த பேர் உதவி கைமாறா -ஜோதி பிரகாசம் ஆழ்வாரை பெற்றதால் தோள்கள் ஆயிரத்தாய் -முடிகள் ஆயிரத்தாய் -துணை மலர் கண்கள் ஆயிரத்தாய் எதிர் சூழல் கொண்டு ஒருவரை பிடிக்க ஊரை வழிகிறான் கிருஷி பலம் –இரண்டு சரடாய் 16 இளையாய் திரு மாங்கல்ய –பாலும் அமுதுமாய் -திரு மால் திரு நாமங்களே கூவி பாவை -ஆச்சார்யர் நம்மை சேர்ப்பிகிறார் புருஷோத்தமன் இடம் –மூன்று சரடாய் எட்டு இளையாய் இருக்கும் திரு மந்த்ரம் கொண்டுநித்ய கல்யாண பெருமாள் இடம் சேர்ப்பிகிறார்..தெளி விசும்பு  திரு நாடு நலம் அந்தமில் நாடு-அந்தமில் பேர் இன்பம்–நடுவாக வீற்று இருக்கும் நாராயணன் .தாயார் நித்யர் புடை சூழ -கோசி-ப்ரகுமாசி அஹம் அன்னம்  அஹம் அன்னம் அஹம் அன்னம்-உண்டிட்டாய் இனி உண்டு ஒழியாய்—நித்ய கைங்கர்ய அனுபவம் ..-கூவி கொள்ளும் காலம் குறுகாதோ-போதரே என்று புந்தியில் புகுந்து நின் பால் ஆதாரம் பெருக வைத்த அழகன் -சம்சாரம் பிறந்தகம்-ஸ்ரீ வைகுண்டம் புக்ககம்-அழகிய மணவாளன்-பாடியவாளன்-திரு மந்த்ரம் வைபவம் -எடுத்து உரைத்தார்-

படி துறை-பாடியவாளன் முதலில் ஆளவந்தார் படி துறை தவராசன் படி துறை–எதிராசர் படி துறை பன்றி ஆழ்வான் சந்நிதி -எதிரில் மா முனிகள் திரு அரசு உண்டு–ஆளவந்தார் படி துறை -திரு மேனி சம்பந்தம் பட்டு காவேரி வரும் -உடுத்து களைந்த நின் -பாதக வாடை –கலத்தது உண்டு வைகாசி விசாகம் மாசி விசாகம் அர்ச்சை திரு அவதாரம்-ஆழ்வாரே இரங்கி தீர்த்தவாரி-திரு வெள்ள குளத்து அண்ணா அடியேன் இடரை களராயே–சரண் அடைந்தார் திரு மங்கை ஆழ்வார் -ஸ்வேதா புஷ் கரணி- திரு வெள்ள குளம் -குமத வல்லி-தாயார்–ஆச்சார்யர் -திரு நறையூர் நம்பி வந்சுளா வல்லி தாயார் நம்பிக்கை நாச்சியார்-சமாச்ரண்யம்  பண்ணிய திரு கோலம் -உபதேசம் பெற்று  கொண்டு -தாதி ஆராதனம் 1000 பேருக்கு நித்யம் -ஒரு வருஷம் ஆலி நாட்டு மங்கை நாட்டு மன்னன் -தேவ பெருமாள் சொப்பனம் -சொத்து கொடுத்து அரசன் ஆச்சர்யம்-வயலாலி மணவாளன் -திரு மணம் கொல்லை வேடு பரி உத்சவம் நீர் மேல் நடப்பான் நிழலில் ஒதுங்குவான் தாள் ஊதுவான் தோலா வழக்கன் –நீலன் இயல் பெயர்–கலியனோ-மிடுக்கு -மந்த்ரம் கொடுக்க தான் வந்தேன் -மந்திர அரசு தெய்வ அரசன் ஆலி நாட்டு அரசன் அரச மரம்-மனிசர்க்கு தேவர் போல் தேவர்க்கும் தேவன்-வேத சார -தம-மடி ஒதுக்கி மணம் அடக்கி ஆழ்வார் திரு மங்கை ஆழ்வார் ஆகிறார்–வேதம் முன்பு  அறிந்தவர் விவேகம் இன்று அறிந்தார் வாடினேன் வாடினேன்–நாடினான் நாடி நான் கொண்டுகொண்டேன் நாராயணா என்ற நாமம் –ஆரு அங்கம் கூற அவதரித்தவர்–குலம் தரும் –நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் -மந்திரத்திலும்–மந்திரத்தில் உள் ஈடான வஸ்துவிலும் மந்திர பிரதான னான ஆச்சார்யர் இடமும் பிரேமம் கனக்க உண்டாகில் காரியம் கரம் ஆகும்..திரு பிரிதி மந்த்ரத்தில் சொல்ல பட்ட விஷயம் அடுத்து நர நாரணனே சிங்காமை விரித்த ஆச்சர்யருக்கு இரண்டு பதிகம்–சாளக்ராமம்-அடை நெஞ்சே–நைமிசாரண்யம்-செம்பினால் பாவையை தழுவு -அஞ்சி நம்பனே சரண் அடைந்தேன் -அஹோபிலம் -சிங்க வேள் குன்றம் -திரு வேங்கடம் உடையான் இடம் சரண்/ திரு வெள்ளூர் -தாகம் தீர்க்க திரு குறும் தண்டகம்–பிண்டியார் மண்டினார்க்கு உய்யல் அல்லால் மற்று யாருக்கு உய்யலாமே அர்ச்சை பிராவண்யம்–திரு எழு கூற்று இருக்கை ஆரா அமுதன் இடம்சரண்–கோபம் வந்து திரு மடல் சீரார் திரு வேம்கடமே ஆராமம் , சூழ்ந்த அரங்கம்-திரு நெடும் தாண்டகம் ஆச்ரயித்து வாழ்ந்தார்-திரு அரங்கம் வந்து –திவ்ய பிர பந்தம் முடிந்ததும்–கைங்கர்யம் பல பண்ணி மூன்றாவது குல சேகரர்–அடுத்து பெரிய திரு நாள் உத்சவம் -ஆழ்வார் பாசுரங்கள் கேட்க இரா பத்து தொடங்கி வைக்க -மண்டபம் கட்ட சொல்ல – ஆலி நாடன் வீதி அடுத்து -தசாவதாரம் -பாடியவன்- வாள் உடன் போய் பாடினவர்–வாள் வழியால் மந்த்ரம் கொண்டவர் –105 சம்வச்த்ரம் இருந்தவர் -மைத்துனன் வைத்து திரு மங்கை ஆழ்வார் உத்சவர் கொண்டு-கலி கோலாகலம் குறைக்க சம்பந்தம் உடையவர்க்கு முக்தி வாள் தூக்கி எறிய வாள் கடை தூரம்-படி துறை குற்றி நின்றது சம்ஸ்காரம் பண்ணியவர்க்கு முக்தி பாடிய வாளன் படி துறை தீட்டு கூட கிடையாதாம் அங்கு–படி துறை முக்கியம் –மரணம் திரு கல்யாணம் போல் தான் -துர் நிகழ்வு இல்லை–நின் திரு எட்டு எழுத்தும் கற்று உற்றதும் உன் அடியார்க்கு அடிமை —
வாசிக காகிக கைங்கர்யம் பண்ணினவர் -தொண்டர் அடி பொடி ஆழ்வார் -விட்டு மதிள் கட்ட கூடை -அருள் மாரி-களை கொத்து பெயர்–இதற்க்கு கொடுத்தார்கள் ..வாளை காட்டி பாடி- திரு மந்த்ரம் அர்த்தம் உணர்ந்து சம்ஸ்காரம் பண்ணுவது -மரணம் திரு கல்யாணம் என்று உணர்ந்து..-

சோம்பல் வைதிக கர்மா விடுகிறோம்.-பகவத் சொரூப விரோதி-சரீரம் அசத்யம் சத்யம்  என்று மாற்றி காட்டும்– மின் உருவாய் மின்னல் போல் அஸ்திரம்-மின்னின் நிலையில மன் உயிர் ஆக்கைகள் –மரம் சுவர் –மருமைக்கே வெறுமை பூண்டு புறம் சுவர் ஓட்டை மாடம்-சரீரம்-புரளும் போது அறிய மாட்டீர் –சுருதி ஸ்மிர்த்தி இதிகாச புரானங்களாலே வேதார்தம் அறிதி செய்ய படும் – ஸ்ருது ஸ்மிர்த்தி -மம வாக்யை-என் ஆணை -பக்தன் இது படி நடக்க வேண்டும் -உடைத்தவன் பக்தன் ஆனாலும் துரோகி ஆகிறான்-அவன் திரு உள்ளம் மலர இதன் படி நடக்க வேண்டும்..விஷ்ணு புராணம் பராசரர் -அவனை வர்ணாஸ்ரம தர்மம் – படி நடந்தால் வர்ண தர்மம் ஆஸ்ரம தர்மம் -ஆனந்த பட வைக்கும் பாப புண்ய ரூபமான கர்மங்கள் ஓன்று/ வர்ண ஆஸ்ரம கர்மங்கள்-நித்ய நைமித்திய கர்ம –விதிக்க பட்ட கர்மம் செய்தால் பாப புண்யம் தொலைக்க –லோகோ பின்ன ருசி-அனைவரும் வேறு பட்டவர்கள்–உச்ச நீச பாவம் பிராட்டி திரு கண் கடாஷம் பொறுத்து பட்டர்–பிரமாணம் வேதம் பிரம்மாவுக்கு ஸ்ரீமன் நாராயணனுக்கு பிராட்டி புருவ நெறிப்பு

–ஈச்வரோஹம்-தேகமே ஆத்மா எதற்கு கர்மா – .விதண்டா .வாதம்-காரணம் இருந்தால் தானே காரியம் –பிறந்துடன் அழுந்து -வாசனையால்-கார்யம் -பதிவுகள்–விட்ட இடத்தில் தொடர்கிறது பால் குடிக்க தூங்க அறிந்து கொள்கிறது நாய் குட்டி குரைகிறது சிங்கம் கர்ஜிக்கிறது மயில் அகவுகிறது யானை குட்டி பிளிறுகிறது..–நான் குழந்தையாக இருக்கும் பொழுது இதை செய்தேன் உடல் மாறு பட்டாலும் -ஆத்மா மாறாமல் நினைவு கொண்டு சொல்கிறதே -ஆத்மா மரணம் இல்லை-சரீரம் தொலைத்து வேறு சரீரம் கொள்ளும்-கொண்டாட வேண்டாமா புதுசு பெற்றால்-தீரன் சோக பட மாட்டான் -கீதை..–பாப புண்யம் அடியாக கொண்ட பிறவி-சம்சாரத்தில் அழுத்தி வைக்கும் இந்த கர்மங்கள் .புழு ஒரு இலை இல் இருந்து அடுத்த இலை போவது போல்-அங்கு போகும் பொழுது இதை விட்டு போகும்–சரீரம் எடுப்பது ஜனனம் விடுவது மரணம்–சாஸ்திரம் என்ன செய்யலாம்-செய்தால் புண்ணியம் சேரும்– செய்யா விடில் பாபம்— செய்ய கூடாததை செய்தால் பாபம் செய்யா விடில் புண்ணியம்..-அவன் திரு உள்ளத்தில் பதிவு செய்ய பட்டு இருக்கும்..

திரி கால சந்த்யா வந்தனம் -நித்யம் செய்ய வேண்டும்..பிறவி எடுத்ததற்கு  கடமை —  அகரனே பாபம் செய்யா விடில் பாபம் சேரும்.. சரீரம் தூங்கி-சந்த்யா வந்தனம் பண்ண வில்லை-பாபம் புண்ணியம் சரீரம் தானே சேர வேண்டும்–கர்மா வாசனை கொண்டு அடுத்த சரீரம் எடுக்கிறான்-சஞ்சித கர்மா–

 -நித்ய கர்மா நைமித்திக கர்மா-காரணம் நிமித்தம் அடியாக -காம்ய கர்மா -ஒன்றை ஆசை பட்டு அதை நிறைவேற்ற செய்யும் கர்மா புத்திர காமோஷ்ட்டி யாகம் போல்வன —
சம்ஸ்காரங்கள்- அருகம் ஆக்குவது அனார்க பொருளை யோக்யதை உடையதாக பண்ணுவது– இறுதி பண்ணுவது பார்ப்போம்-சுழல்- மீற பக்தி பிரபத்தியால் அடையலாம் —
-பூர்வம் அவரம்-பிரேதம் -ஆத்யந்திக பிரளயம் அர்ச்சிராதி மார்க்கம்-நித்ய பிரளயம் நைமித்திக பிரளயம் மூன்று லோகம்-பிராக்ருத பிரளயம் சத்ய லோகமும் அழியும்–கருட புராணம் –புலன்கள்-மனசில் -பஞ்ச பூதம் -மந்திர பர்வதம் போல் கடைந்து -ஆத்மா உடன் சேர்த்து–திரு மார்பில் அனைத்து கொண்டு-பிரம ரந்த்ரம் -சிறு துவாரம் திறந்து தான் இருக்கும்..ஞானிகளுக்கு -கண் மூக்கு வாய் வழியாகவும் போகும்..–நசி கேதஸ்-பிள்ளை-கர்மா பண்ணுவது நல் வழி போவதற்கு -விடாமல் பண்ண வேண்டும்

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்