திண்ணன் வீடு முதல் முழுவதுமாய்
எண்ணின் மீதியன் எம்பெருமான்
மண்ணும் விண்ணும் எல்லாம் உடன் உண்ட நம்
கண்ணன் கண்ணல்லது இல்லையோர் கண்ணே –2-2-1
பரத்வம் அனுபவிகிறார் அர்ச்சையில்
எங்கும் பூரணன்
அது அதுதான்
ஈச்வரோபி சந்-அவனே சொல்லி கொள்கிறான் பிறந்தும் பிறக்காதவன் –
அவதரித்து பெருமை கூட்டி கொள்கிறான்
திண நல் வீடு-மோஷமும் அவனும் -நம் கண்ணன் தான்
அனைத்து சிறுவரையும் கூட்டி போனான்-ஸ்ரீ வைகுண்டம்-பாகவதம்-ஆ நம் கண்ணன் டா !
பேசவும் தொடவும் விளையாட -அங்கு முடியாமல் திரும்ப அங்கு கண்ணா நீ தான் கண் எங்களுக்கு
ஏ ! பாவம் பரமே எழ உலகும்
ஈ பாவம் செய்து அருளால் அளிப்பார் ஆர் ?
மா பாவம் விட அரற்க்குப் பிச்சை பெய்
கோபால கோளரி ஏரு அன்றியே –2-2-2
வேறு தெய்வம் இல்லை-
தலை அறுத்த அறுப்பு உண்ட தெய்வம் உண்டே -சரி பண்ணிய
பிரம்மா ருத்ரர் -ரஷித்து நின்றான்
அரற்கு பிச்சை பெய் கோபால கோளரி
கபாலம் நிரம்ப பத்ரி காச்ரமம் பிரம குண்டம் –
பிரம கத்தி பாபம் போக்கி —
ஏறனைப் பூவனை பூ மகள் தன்னை
வேறு இன்றி விண் தொழத் தன்னுள் வைத்து
மேல் தம்ன்னை மீதிட நிமிர்ந்து மண் கொண்ட
மால் தனில் மிக்குமோர் தேவும் உளதே ?–2-2-3
ரிஷபம் -சிவன் உடம்பில் /நான் முகனை நாபியில் /தாயாரை திரு மார்பில் கொண்டு
வேற தேவு உளதோ
தேவும் எப் பொருளும் படைக்க
பூவில் நான் முகனைப் படைத்த
தேவன் எம்பெருமானுக்கு அல்லால்
பூவும் பூசனையும் தகுமே ?–2-2-4
நான்முகனை நாராயணன் படைத்தான் –
பிர பஞ்ச ஸ்ருஷ்ட்டி பிரமனுக்கு தத்வ ஸ்ருஷ்ட்டி இவனே பண்ணி –
இவனுக்கே பூவும் பூசனையும் அவனுக்கே தகும்
எம்பார்-கோவிந்த -யாதவ பிரகாசர் இடம் ராமானுஜர் உடன் படிக்க -காசி யாத்ரையில் மீட்டு பின்பு
திரு மலை நம்பி திருத்தி பணி கொண்ட ஐதீகம் காசியில் சிவ லிங்கம் கிடைப்பதாக ஏறபாடி பண்ணி -உள்ளம் கை கொணர்ந்த நாயனார் பெயர் கொடுத்தார் யாதவ பிரகாசர்-காளகஸ்தி -மடத்தில் இருக்க -கோவிந்தனை திருத்தி பண்ணி செய்ய வேண்டும் -ராமானுசர் கேட்டதும்–பெரிய திரு மலை நம்பி-சொர்ண முகி நதி கரையில் காள கஸ்தி -இந்த பாசுரம் அர்த்தம் சொல்லி–பூவும் பூசனையும் தகாது —
குடலையும் கையுமாக இருந்தவர்-கீழே போட்டு திரு அடிகளில் விழுந்தார் —
தகும் சீர் தன் தனி முதலின் உள்ளே
மிகும் தேவும் எப் பொருளும் படைக்க
தகும் கோலத் தாமரைக் கண்ணன் எம்மான்
மிகும் சோதி மேல் அறிவார் யாவரே ?–2-2-5
தக்க பெருமை கொண்டவர்
மிக்கார் இல்லை
ச்வாபிகா அநவதிக ஈச்வரத்வம் கொண்டவர்
தனி முதல்-
யவரும் யாவையும் எல்லா பொருளும்
கவர்வின்றி தன்னுள் ஒடுங்க நின்ற
பவர் கொள் ஞான வெள்ளச் சுடர் மூர்த்தி
அவர் எம் ஆழி அம் பள்ளி யாரே –2-2-6
சித் அசித் -அனைத்தும்
கவரவு=சோர்வு
இன்றி -பிரளயம்- ஜீவ கோடிகளுக்கு விஸ்ராந்தி தன இடம் அடக்கி கொள்கிறான்-
பரவிய -அபரிசின்னமாக தேச கால வஸ்து எல்லை இன்றி இருக்கிறான்
பள்ளி ஆல் இலை எழ உலகும் கொள்ளும்
வள்ளல் வல் வயிற்றுப் பெருமான்
உள்ளுளார் அறிவார் ?அவன் தன்
கள்ள மாய மனக் கருத்தே –2-2-7
உலகம் அனைத்தையும் உண்டு-
ஆல் இலையில் பள்ளி கொண்டு-
தன கள்ள மாயம் -மன கருத்தே -அவனே அறிவான்
மார்க்கண்டேயரும் தன்னை உள்ளே பார்த்தார்
கருத்தில் தேவும் எல்லாப் பொருளும்
வருத்தித்த மாயப் பிரானை அன்றி ஆரே ?
திருத்தித் திண்ணிலை மூவுலகும் தம்முள்
இருத்திக் காக்கும் இயல்வினரே –2-2-8
பிரகிருதி பிரள நீரில் கரைந்து பிரளய அக்னியில் உலர்ந்து பிரளய காற்றில் அடங்கி பிரளய ஆகாசத்தில் ஒடுங்கி பிரளய பிரகிருதி குள் ஒடுங்கி அவன் மாயையில் அடங்கும் /சத் -இருக்கும் நிலை/ஆல் இல்லை-ஞானம் /சித் /கண்ணன் ஆனந்தம் –காரணம் /மார்கண்டேயர் யோக நிலையில் சாஷாத்கரித்தார் /ஆழ்ந்த நிலை சத் வித்தை உபநிஷத் விளக்கம்
ஸ்வேத குதுக்கு உபதேசம் –விதையில் அனைத்தும் இருப்பது போல்- மூலம் இவன்
இவன் சங்கல்பித்து -கருத்தில்-பகுச்யாம் -நானே ஆவேன் -ஒருவனாக இருந்தால் விளையாட முடியாதே நாம ரூபம் கொடுத்து
மாய பிரான் -அத்தை தின்னு அங்கு கிடக்கும் நம்மை திருத்தி
சதாச்சர்யர் சேர்த்து முமுஷு ஆக்கி-
காக்கும் இயல்வினன் கண்ண பெருமான்
சேர்க்கை செய்து தன் உந்தி வுள்ளே
வாய்த்த திசை முகன் இந்திரன் வானவர்
ஆக்கினான் தெய்வ வுலகுகளே –2-2-9
உள்ளது உள்ள படி சிருஷ்டித்து -கல்பம் தோறும்-
பொலிவு குறையாமல்-
அவாந்தர-நித்ய நைமித்திய மகா பிரளயம் —
கள்வா ! எம்மையும்எழ உலகும் நின்
னுள்ளேதோற்றிய இறைவ ! என்று
வெள்ளேறேன் நான்முகன் இந்திரன் வானவர்
புள்ளூர்த்தி கழல் பணிந்து எததுவரே –2-2-10
தேவர்கள் -அபிப்ராய பேதம் –
மகா பூதம் சமன் வயச படுத்தி –
கதை அமிர்தம் பருகி பேர் இன்பம் சாதனம் -உலகு படைத்து
லீலா நித்ய பக்தி மூன்று விபூதி
விஸ்ராந்தி தான் பிரளயம்
ஏத்த எழ உலகும் கொண்ட கோலக்
கூத்தனை குருகூர் சடகோபன் சொல்
வாய்த்த வாயிரத்துள் இவை பத்துடன்
ஏத்த வல்லவர்க்கு இல்லை ஓர் ஊனமே –2-2-11
கொண்டாடி துதிக்கும் படி
33
திண்ணிதா மாறன் திரு மால் பரத்துவத்தை
நண்ணிய அவதாரத்தே நன்கு உரைத்த –வண்ணம் அறிந்து
அற்றார்கள் யாவர் அவர் அடிக்கே ஆங்கு அவர் பால்
உற்றாரை மேல் இடா தூன்-திரு வாய் மொழி நூற்று அந்தாதி -12
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திரு அடிகளே சரணம்
Leave a Reply